Friday, February 2, 2018

வெள்ளி வீடியோ 18022018 : விரியும் பூக்கள் பாணங்கள் ; விசிறி ஆகும் நாணல்கள்


​     பாடலுக்கேற்ற சூழலை இசையிலேயே கொண்டு வர முடியுமா?  முடியும் என்று பலமுறை நிரூபித்தவர் இளையராஜா.  இந்தப் பாடலும் அதில் ஒன்று.   இசையிலேயே காட்சிகளை உணர வைக்கிறார் இசைஞானி.


     நண்டு.  பெயரிலேயே தெரியும், கேன்ஸர் பற்றிய படம்.   மகேந்திரன் இயக்கத்தில் 1981 இல் வெளிவந்த படம்.  ​ அதனுடைய சோக முடிவால் படம் ஓடவில்லை என்று நினைக்கிறேன்.  தோற்ற படத்தில் இரண்டு நல்ல பாடல்கள்.  ஒன்று இந்தப் பாடல்.


     படம் (நல்லவேளையாய்ப்) பார்த்ததில்லை.  இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்.  எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து அரைக்கிழவன் ஆன நிலையிலோ, அதற்கும் பின்னோ இளமையில் வாழ்ந்த இடத்துக்கு வந்தால் மனதில் உணர்வுகள் எப்படி இருக்கும்?  அவற்றை மீட்டெடுக்கும் பாடல்.  


     மதுக்கூர் கண்ணன் எழுதிய பாடல்.  பல வரிகள் நம் இளமையை மீட்டெடுக்கும். வரிகளில்  இன்னும் கொஞ்சம் ஆழம் இருந்திருக்கலாம்.  நமக்குத்தான் திருப்தியே இருக்காதே!


     ஆரம்ப ஹம்மிங் முதலே இளையாராஜா மனதில் தவழத் தொடங்கி விடுகிறார்.  மலேஷியா வாசுதேவனின் பெருமைப்பாலான இனிமையான பாடல்கள் இளையாராவின் இசையிலேயே அமைந்திருக்கின்றன.  ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம்!  இதுவும் அதில் ஒன்று.  குரலில் தெரிவது பரவசமா, சோகமா, இரண்டும் கலந்தா?


     உங்கள் வசதிக்காக படக்காட்சி இல்லாத காணொளி இணைத்திருக்கிறேன்.  பாடலை (மட்டும்) ரசிக்கலாம்!


     ஒவ்வொரு சரணத்துக்கும் இடையிலான இசை..   குறிப்பாக இரண்டாம் சரணத்துக்கு முன்... இசையிலேயே ஒரு பயணத்தை உணரலாம் 


அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

அள்ளித் தந்த பூமி ....

சேவை செய்த காற்றே பேசாயோ ?
ஷேமங்கள் லாபங்கள் யாதோ? ?
பள்ளி சென்ற காலப் பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆஹா
புரண்டு ஓடும் நதிமகள்
இரண்டு கரையும் கவிதைகள் 
கனித்த காலம் வளைத்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்

அள்ளித் தந்த பூமி ....

காவல் செய்த கோட்டை காணாயோ ?
கண்களின் சீதனம் தானோ ?
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே 
காரணம் ஆதனும் தேனோ ?
விரியும் பூக்கள் பாணங்கள்
விசிறி ஆகும் நாணல்கள்
மரத்தின் வேரும் மகிழ்ச்சிப் படுக்கையே 
பழைய சோகம் இனியும் இல்லை 

அள்ளித் தந்த பூமி .... 


50 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க..

Thulasidharan V Thillaiakathu said...

காலை வணக்கம் ஸ்ரீராம் (பிரயாணத்தில் பார்ப்பீர்கள் என்று...) துரை செல்வராஜு அண்ணா..

கீதா

துரை செல்வராஜூ said...

ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

Thulasidharan V Thillaiakathu said...

ப்ளஸில் போஸ்ட் பண்ணிவிட்டேன் ஸ்ரீராம்...

கீதா

துரை செல்வராஜூ said...

அனைவருக்கும் நல்வரவு...

Thulasidharan V Thillaiakathu said...

துரை அண்ணா ஸ்ரீராம் பயணத்தில் இருப்பார் இப்போது!! தமிழ்மணப் பெட்டி தெரிகிறதா உங்களுக்கு? தெரிந்தால் இணைக்கும் லிங்க்..

கீதா

துரை செல்வராஜூ said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்..

துரை செல்வராஜூ said...

எனக்கு த.ம . பற்றி எதுவும் தெரியாது.. நான் அதில் இணைப்பதும் இல்லை...

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் கீதா ரெங்கன். தமிழ்மண லிங்க் யாருக்குமே தெரிவதில்லை. நன்றி. பஸ் ஆறரைக்கு புறப்படுகிறது!

பாரதி said...

ஆ...ஹா.....!! அதிகாலை அருமை..!! இழையும் மலேஷியா வாசுதேவனின் குரல்வளம், இசைராஜா கைவண்ணத்தில்....!!!! நன்றி, காலைப் பொழுதில் இனிய இசை கேட்க வாய்ப்பளித்தமைக்கு...!!!

Geetha Sambasivam said...

//பெருமைப்பாலான // திருத்துங்க, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பெரும்பாலான! இம்பொசிஷன், ஆயிரம் முறை.

Geetha Sambasivam said...

பயணம்???????? சென்று, வென்று வாருங்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான பாடல்
நன்றி நண்பரே

KILLERGEE Devakottai said...

நான் பலமுறை இரசித்து கேட்ட பாடல் பகிர்வுக்கு நன்றி

Bhanumathy Venkateswaran said...

காலை வணக்கம்!

துரை செல்வராஜூ said...

உருவம் கிழடு ஆனாலும்
உள்ளம் கிழடு ஆவதில்லை..

இந்தப் பாடல் வெளியான அப்போதே
இதனுள் ஆழ்ந்து போனேன்...

இப்போது மீண்டும் மூழ்கி எழுந்தேன்..
மனம் குளிரவில்லை.. வலிக்கின்றது..

நெல்லைத் தமிழன் said...

படம் பார்க்கலாம். பாடல் வரிகள் படிக்கும்போதே மனதில் பாடல் ஓடியது. காணொலி-MP3 கொடுத்திருக்கலாமேன்னு நினைத்தேன். அதன்பின்தான் நீங்கள் கொடுத்திருப்பதைப் பார்த்தேன். பழைய நினைவுகளை ராஜாவின் பாட்டு மீட்டெடுக்கிறது.

நெல்லைத் தமிழன் said...

படம் பார்க்கலாம். பாடல் வரிகள் படிக்கும்போதே மனதில் பாடல் ஓடியது. காணொலி-MP3 கொடுத்திருக்கலாமேன்னு நினைத்தேன். அதன்பின்தான் நீங்கள் கொடுத்திருப்பதைப் பார்த்தேன். பழைய நினைவுகளை ராஜாவின் பாட்டு மீட்டெடுக்கிறது.

நெல்லைத் தமிழன் said...

இரண்டு நாட்கள் முன்பு நான் கடவுள் படம் கொஞ்சம் பார்த்தேன். வாலியைக் குறைத்து மதிப்பிட்டோமோ என்று தோன்றியது. கண்ணதாசன் இல்லாத குறையை, ஓம் சிவோஹம், பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்னில் போக்கிவிட்டார். இளையராஜா.... அந்த இரண்டு பாடல்களே போதும், அவர் என்ன திறமைக்கார்ர் என்று புரிந்துகொள்ள. முடித்தால் ஒரு வெள்ளியில் பகிருங்கள்.

நெல்லைத் தமிழன் said...

கீதா ரங்கன்.... ஶ்ரீராம் பயணக்கட்டுரை எழுதுவதற்காக பயணம் சென்றுள்ளாரா? கல்யாண டிபன், சாப்பாடு விமர்சனம், குட்டிப் பதிவர் சந்திப்புலாம் வருமா?

ஏகாந்தன் Aekaanthan ! said...

நான் படம் பார்க்கவில்லை. காட்சி எப்படியோ? இருந்தும் வீடியோ காட்டாது, ஆடியோ மட்டும் போட்டு இசையில் நனைத்ததற்கான புண்ணியம் ஸ்ரீராமிற்கு விரைவாகப் போய்ச்சேரட்டும். மலேஷியா இவ்வளவு இனிமையாகப் பாடியிருக்கிறார். படம் ஃப்ளாப்பானால், பாடலும் காணாமல் போய்விடுகிறது. ஸ்ரீராம் இன்றி, இந்தப்பாடலை நான் கேட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை எனலாம்.

இளையராஜாவை, சினிமாப் பாடல்களைத் தாண்டியும் இசை ரசிகர்கள் கவனிக்க வேண்டும்; அவர் வெறும் திரைஇசைக்காரர் எனப் பத்தோடு பதினொன்னாகப் பார்த்துக் கைதட்டிவிட்டுப் போய்விடக்கூடாது என்று தோன்றுகிறது.

பயணத்தில் இருந்ததால், நேற்றைய எபி- கதம்பப்பதிவிற்கும் சற்றுமுன் தான் பின்னூட்டம் தந்தேன்.

G.M Balasubramaniam said...

பயணநிரல்களுக்குஒரு சிலரே பாக்கியம்பெறுகின்றனர் யாரும் பயணம் எங்கு என்றுகூறவில்லையே பாடல் ரசனை ஆளாளுக்கு வேறு படும் எனக்கு ஏனோ அத்தனை ரசிப்பு இல்லை

Thulasidharan V Thillaiakathu said...

பிச்சைப்பாத்திரம்...ஓம் சிவோகம்... இரண்டுமே பிரமாதமான பாட்டுகள் நெல்லை..பி பா..வில் வார்த்தைகள்.தத்துவ..முத்துக்கள்...ரொம்பப் பிடித்த பாடல்கள்..வாலியும் நல்ல பாடல்கள் எழுதியுள்ளார் தான்..நன்றி இங்கு சொன்னமைக்கு நெல்லை

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நெல்லை...ஹாஹாஹா..ஸ்ரீராம் பயணக்கட்டுரைக்காக...!!!!!!..நல்லா கேட்டேங்க...யாரைப் பார்த்து...ஹிஹிஹி..அப்படியா ஸ்ரீராம்..அடுத்தது இன்னும் ஹாஹாஹா குட்டி பதிவர் சந்திப்பு....ஸ்ரீராம்.இதை எல்லாம் பார்த்து..கமுக்கமா...மூக்கை உஉரிந்து கொண்டே (நீங்க வேற எதுவும் நினைக்க கூடாது..ஜல்பு தான்..) சிரிச்சுட்டிருப்பார்....நெல்லை...

நெட் நஹின்....மொபைலில் இருந்து...ரொம்ப அடிக்க முடில....எங்க வீட்டுல நெட் விடியும் வேளையிலும், உறங்கும் வேளையிலும் தான் இப்பல்லாம் வேலை செய்யுது...ஹாஹாஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் தம இப்ப யாருக்கும் இல்லை.. அதிரடிக்கும்....கில்லர்ஜிக்குமே இல்ல. அப்புரம்ல நாமெல்லாம்..ஹாஹாஹா....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பாட்டு செம....கேட்டதுண்டு....எஸ் இன்டெர்லூட் அசாத்தியம்...ஸ்ரீராம்...பல பாடல்களில் அதை உணரலாம்....ராஜா ராஜாதான்....

கீதா

KILLERGEE Devakottai said...

//அதிரடிக்கும், கில்லர்ஜிக்குமே இல்லை//

இதற்கு ஏதும் பிரத்யேக காரணங்கள் உண்டா ?

இதோ ஊரணிக்கு போன் செய்றேன்.

KILLERGEE Devakottai said...

த.ம.26

Thulasidharan V Thillaiakathu said...

நெல்லை...சொல்ல முடியாது ஒருவேளை...ஸ்ரீராம் பயணக்கட்டுரை எழுதுவாராக இருக்கும்...பார்ப்போம்..
பஸ்ல ஜன்னல் வழியா போட்டோ எல்லாம் எடுத்துட்டே போவாரோ..முன்பு ரயில் பயணம்..எழுதிருக்கார்..அது போல...கண்டிப்பா சாப்பாட்டு அனுபவமும் வரும் போட்டோவோடு....

ஸ்ரீராம் நினைக்கிறார்....பாரு நாம அந்தாண்டை போனதும்...இதுங்க என்னென்னவோ பேசிக்குது...வந்து பாத்துடலாம் ஒரு கை..அப்படினு.....

Thulasidharan V Thillaiakathu said...

கில்லர்ஜி..ஹாஹாஹாஹா..இது ஓவரா இல்ல...!!!!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கில்லர்ஜி காரணம் என்னன்னா....கில்லர்ஜி கோடரியோட அலையுறார்....அதிரடி தேம்ஸ்ல குதிச்சுறுவேன்னு அதிரடி ஸீன் போட்டு...பயமுறுத்தும்...அதான்...ஹாஹாஹா....மீ எஸ்கேப்.....

கீதா

இளமதி said...

அனைவருக்கும் இனிய வணக்கம்!

அருமையான பாடலுடன் இனிய பதிவு சகோ ஸ்ரீராம்!
அனைத்து வழியிலும் இசை, குரல், பாடல்வரிகள் என்று என்னையும் கவர்ந்த பாடல்!

மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்தேன்!
தங்கள் பயணம் இனிதாக இருக்க நல் வாழ்த்துக்கள்!
நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்!

Asokan Kuppusamy said...

மிகவும் அருமையான பாடல்

Srikanth said...

அருமையான பாடல். படத்தின் பெயர் தான் தெரியவில்லை. இப்போது தெரிந்தது

athiraமியாவ் said...

// நண்டு. பெயரிலேயே தெரியும், கேன்ஸர் பற்றிய படம். மகேந்திரன் இயக்கத்தில் 1981 இல் வெளிவந்த படம். ​ அதனுடைய சோக முடிவால் படம் ஓடவில்லை என்று நினைக்கிறேன். தோற்ற படத்தில் இரண்டு நல்ல பாடல்கள். ஒன்று இந்தப் பாடல்.//

ஓ.... சோகப்படத்தில் இடம்பெற்ற சந்தோசமான பாடலோ இது.. பாடல் முதல் வரிகள் மட்டும் நன்கு பாடல்.. பலதடவைகள் காதில் விழுந்திருக்கு... படம் பற்றித் தெரியாது.. நீங்க சொல்லிட்டீங்க.. இப்போ தேடிப் பார்க்கச் சொல்லி மனம் சொல்லுது:)... ஆனா அழவேண்டி வந்திடுமே எனப் பயமா இருக்கு.. இருப்பினும் சோகப்படத்திலதான் கதை நன்றாக இருக்கும்:)..

athiraமியாவ் said...

/// எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து அரைக்கிழவன் ஆன நிலையிலோ, அதற்கும் பின்னோ இளமையில் வாழ்ந்த இடத்துக்கு வந்தால் மனதில் உணர்வுகள் எப்படி இருக்கும்? அவற்றை மீட்டெடுக்கும் பாடல். //

ஓ... இதனால்தான் எனக்கு சின்ன வயதில் ஓடி விளையாடிய இடங்கள்.. படிச்ச ஸ்கூல் இவற்றுக்கு தீரும்பிப் போனதே கிடையாது.. நினைக்கும்போதே அழுகையா வரும்.. இதில் நேரில் போய்ப் பர்த்தால் எவ்ளோ கஸ்டமாக இருக்கும்... எனக்கும் இப்படியானவற்றைத்தாங்கும் மனநிலை இல்லவே இல்லை:)..

இப்போகூட ஊருக்குப் போகாமல் இருக்கிறேன் அடம் பிடிச்சு:) அம்மா பாவம் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறா ஒரு தடவை போய்ப் பார்த்து விட்டு வாங்கோ எல்லோரும் என.. போக வேண்டும்... ஒரு தடவை போயிட்டால் நோர்மல் ஆகிடும்.. முதல்தடவைதானே கஸ்டம்:)..

athiraமியாவ் said...

எனக்கு கண்ணதாசன் அங்கிளைப்போல ஜேசுதாஸ் அங்கிள்:) பாடல்கள்தான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்... ஆனா குரலை வச்சு அடையாளம் கண்டு பிடிக்க மாட்டேன் கஸ்டம்:)).. அவரின் பாடல்களில் அர்த்தம் இருக்கும்.. வரிகளை ரசிக்கலாம்.. இது ம.வசுதேவன் அவர்களுடையதோ? எனக்கு குரல் பிடிக்கும் ஆனா ஏனோ தெரியவில்லை அவரைப் பிடிக்கவே பிடிக்காது:)[நம்பர் பொருத்தம் இல்லையோ என்னமோ:)]... சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)...

இன்று கீசாக்காஅவுக்கு கதவு திறந்துதா எனக் கேய்க்கவே மாட்டேன்ன் பிக்கோஸ்ஸ்ஸ்ஸ் இன்று நேக்குப் பொழுது நன்றாகப் போகிறது:) ஹா ஹா ஹா:)..

athiraமியாவ் said...

என்னாதூஊஉ ஸ்ரீராம் பயணம் போகிறாரோ?:) அப்போ பிறந்தூஊஊஊஊஊ வளர்ந்த ஊருக்குத்தான் போல...:) அதுதான் இப்பாடலைப் போட்டிருக்கிறார்:)... இல்ல காசிக்கு ஏதும்?:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:) எனக்கு ஊர் வம்பு பேசுவது பிடிக்காது பாருங்கோ:)..

///Geetha Sambasivam said...
பயணம்???????? சென்று, வென்று வாருங்கள்!///

ஹையோ அவரென்ன பாகிஸ்தான் எல்லைச் சண்டைக்கோ போகிறார் கர்ர்ர்ர்:))

athiraமியாவ் said...

///Thulasidharan V Thillaiakathu said...
ப்ளஸில் போஸ்ட் பண்ணிவிட்டேன் ஸ்ரீராம்...

கீதா//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஓவரா துள்ளப்பிடாது:) எனக்கொண்ணும் புகையேல்லை ஆக்கும்:)..

//////KILLERGEE Devakottai said...
//அதிரடிக்கும், கில்லர்ஜிக்குமே இல்லை//

இதற்கு ஏதும் பிரத்யேக காரணங்கள் உண்டா ?

இதோ ஊரணிக்கு போன் செய்றேன்.///

ஹா ஹா ஹா கில்லர்ஜி... இப்பூடியான நேரம் பேசாமல் அமைதியாகிடோணும்:)) இதை தமிழ்மண ஓனேர்ஸ் பார்க்காமல் இருந்தால் சரி:)).. நானும் ரெளடிதான் நினைப்பு வருது எனக்கு:)) ஹா ஹா ஹா இதிலாவது நாங்க பெரிய இடத்தில இருப்பதுபோல ஒரு நினைப்பை நினைச்சுக் கொண்டிருக்கிறேன் ஹா ஹா ஹா:))..

அதுசரி அந்த “ஊரணி” என்பதுதான் எங்கினமோ இடிக்குது:)).. கர்ர்ர்ர்:)) அது மிகப்பெரிய நதீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ கேய்க்குதாஆஆஆஆஆஆஅ:).. ஹையோ வாய் உளையுது:).. ஹா ஹா ஹா:)..

athiraமியாவ் said...

ஹையோ ஸ்ரீராம் ஊரில இல்லயாம்.. இப்பூடிச் சான்ஸ் வாழ்க்கையில கிடைக்குமோ நமக்கு:) ஓடி வாங்கோ எல்லோரும் கும்மி கோலாட்டம் எல்லாம் நடத்திட்டு ஓடிடலாம்:)).. சே..சே.. என் செக் ஐயும் காணல்ல:)..

///துரை செல்வராஜூ said...
உருவம் கிழடு ஆனாலும்
உள்ளம் கிழடு ஆவதில்லை..///

ஹா ஹா ஹா துரை அண்ணன்.. வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை மேடை நாடகம் பார்க்கும் வாய்ப்புக் கிடைச்சது எனக்கு.. நாடகத் தலைப்பு.. வள்ளி திருமணம்..

அதில் முருகன் வயதான வேசம் போட்டு வள்ளியிடம் போவார்ர்.. வள்ளி சொல்லுவா வயசாச்சே உங்களுக்கு என... அதுக்கு கனேஸாஸ் பிரதர்.. அதாங்க முருகன்:) பாடுவார்ர்.... “தாடீஈஈஈஈஈஈ நரைச்சாஆஆஆஆஆஅலென்ன?... மீஈஈசை நரைச்சாஆஆஆஆஆலென்ன... ஆஆசை ந....ரைக்கவில்லையடீஈஈஈஈஈஈஈஈஈ வள்ளீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ..” இப்படி.. அந்த நினைப்பு வந்திட்டுது:) ஹா ஹா ஹா..

athiraமியாவ் said...

//நெல்லைத் தமிழன் said...
படம் பார்க்கலாம்.//

ஓ அப்போ துணிஞ்சு பார்க்கப்போறேன்:).. பார்த்திட்டு பார்த்றூம் கதவை லொக் பண்ணிட்டு அழும் தேவை வராது எனில் பார்த்திடுவேன் ஹா ஹா ஹா:))..

ஓகே.. இந்த சமூகம் இத்தோடு புறப்படுது:)) நேக்கு கடமை முக்கியம்:))

athiraமியாவ் said...

/// எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து அரைக்கிழவன்//

ஸ்ரீராம் எனக்கொரு டவுட்டூஊஊஊ:) அரைக்கிழவன் என்றால் எத்தனை வயசூஊஊஊஊஊ:)?.. ஏனெனில் இங்கின கணக்கெடுப்பு நடத்தப் போகிறேன் ஹா ஹா ஹா:) ஹையோ எல்லோரும் கல்லெடுக்கினம் மீ ஸ்பீட்டா ரன்னிங் யா:) நாம் ஆரு:) 1500 மீட்டரில 2ண்ட் பிளேஸ் ஆக்கும்.. க்கும்..க்கும்(இது எக்கோ - மலையில பட்டு எதிரொலிக்குது:))):)..

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமையான இசையுடன் கூடிய நல்ல பாட்டு. பாட்டு அடிக்கடி கேட்டிருக்கறேன். அந்த பாடல் இந்தப்படந்தான் என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும். படத்தின் பெயரும் கேள்விபட்டிருக்கிறேன்.படம் பார்க்கும் வாய்ப்பு வரவில்லை. பாடலை இப்போது கேட்டவுடன் படமும் பார்க்கலாம் எனத்தோன்றுகிறது.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான பாடல். நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்க முடிந்தது - அதற்காகவே ஒரு பூங்கொத்து - பதிவிட்ட எங்கள் பிளாக் நண்பர்களுக்கு.

பயணம் எங்கே ஸ்ரீராம்?

கோமதி அரசு said...

அருமையான பாடல் பகிர்வு.
கேட்டு வெகு காலம் ஆகிவிட்டது.
பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

நெல்லைத் தமிழன் said...

அதிரா.... படம் பார்க்கலாம்னு நான் எழுதினது, காணொலியில் பாடல் பார்க்கலாம் என்ற அர்த்தத்தில். படத்தைப் பார்த்து, சிவசங்கரி கதையைப் படித்து அழுததெல்லாம் பதின்ம வயதில். இப்போல்லாம் பொதுவா சீரியஸ் படம் பார்க்கப் பிடிப்பதில்லை. சிவசங்கரி நாவல்கள் கொஞ்சம் அழுகாச்சி டைப்.

நேற்று WONDER என்ற படம் பார்த்தேன். அழகில்லாத முகம் விகாரமான சிறுவன் பற்றியது. ரொம்ப நெகிழ்ச்சியா இருந்த படம். Western countries schoolபற்றி நாம புரிஞ்சுக்கலாம். கண்டிப்பா பாருங்க. குழந்தைகளோடவே பார்க்கலாம்.

நெல்லைத் தமிழன் said...

அதிரா.... படம் பார்க்கலாம்னு நான் எழுதினது, காணொலியில் பாடல் பார்க்கலாம் என்ற அர்த்தத்தில். படத்தைப் பார்த்து, சிவசங்கரி கதையைப் படித்து அழுததெல்லாம் பதின்ம வயதில். இப்போல்லாம் பொதுவா சீரியஸ் படம் பார்க்கப் பிடிப்பதில்லை. சிவசங்கரி நாவல்கள் கொஞ்சம் அழுகாச்சி டைப்.

நேற்று WONDER என்ற படம் பார்த்தேன். அழகில்லாத முகம் விகாரமான சிறுவன் பற்றியது. ரொம்ப நெகிழ்ச்சியா இருந்த படம். Western countries schoolபற்றி நாம புரிஞ்சுக்கலாம். கண்டிப்பா பாருங்க. குழந்தைகளோடவே பார்க்கலாம்.

athiraமியாவ் said...

//நெல்லைத் தமிழன் said...//

ஓ அப்போ நீங்க படம் பார்க்கேல்லையோ கர்:)).. சீரியல் இப்போ பெரும்பாலும் பலர் பார்ப்பதில்லை.. பார்த்தவர்களும் நிறுத்திக் கொண்டு வருகின்றனர்...

ஓ வொண்டர் பார்க்கிறோம்... மிக்க நன்றி.

வல்லிசிம்ஹன் said...

மிகப் பிடித்த பாடல், இசை, வாசுதேவன் குரல்
அனைத்தும் அள்ளிச் செல்கின்றன.
மனம் போகும் இடம் எல்லாம் நினைவுகள்
முளைக்கின்றன.
பழைய சோகம் இனியும் இல்லை வரி ,
பாசிடிவ் செய்தி.நன்றி ஸ்ரீராம்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!