வியாழன், 1 பிப்ரவரி, 2018

பிணந்தின்னிக் கழுகுகள்



படிக்கவேண்டிய கட்டுரை.   [தி இந்து] - 2014

எங்கே போயின பிணந்தின்னிக் கழுகுகள்?



சுழல் காற்றில் சருகுகள் பறக்கிறதோ எனக் கவனித்துப் பார்த்தால் அத்தனையும் பட்டாம்பூச்சிகள், வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் நாளில், கிழக்கு தொடர்ச்சி மலை ஆசனூர் பகுதிகளிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை ஆனைகட்டி வரை பட்டாம்பூச்சிகள் வலசை போய்க் கொண்டிருந்தன. எங்கள் கலைப் பிரச்சார வாகனம் மிதமான வேகத்தில் தளமலையை அடைந்தது. தமிழகத்தில் அருகி வரும் ‘பாறு’ வகையைச் சேர்ந்த வெண்முதுகுப் பாறு (White-backed Vulture), நீண்ட அலகுப் பாறு (Long billed Vulture ), செந்தலைப் பாறு (Red headed Vulture), மஞ்சள் திருடிக் கழுகு (Egyptian Vulture) ஆகிய ஊனுண்ணிக் கழுகுகளின் வாழ்க்கையை, அவை வாழ வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்தப் பயணித்துக்கொண்டிருந்தோம்.

பாறுகள் வாழும் பகுதியில் வசிக்கும் மக்களைச் சந்தித்துக் கழுகுகள் சந்தித்து வரும் அழிவை இயல், இசை, நாடக வடிவில் விளக்கினோம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரமாயிரமாய் வனங்களில் வட்டமடித்த பாறுகள், இன்றைக்கு நூற்றி ஐம்பதுக்குள் எண்ணிக்கை சரிந்து போனதைக் குறிப்பிட்டபோது மக்களின் கவலை தோய்ந்த முகங்களைக் காண முடிந்தது. கிராமங்கள்தோறும் ஆயிரக்கணக்கில் கால்நடைகளை வளர்க்கிறோம். அவற்றுக்குக் காய்ச்சல், மடிவீக்கம், மேயாமை போன்ற நோய்கள் வரும்போது கால்நடை மருத்துவரைக் கூட்டிவந்து ஊசி போடுகிறோம். அவரும் வலிக்கொல்லி மருந்தான டைகுளோஃபினாக்கை ஊசியில் நிரப்பி மாட்டின் உடலில் செலுத்திவிட்டுப் போவார், பிறகு அந்த மாடு இறந்துபோகும். நாம் அருகிலுள்ள வனப்பகுதியில் சடலத்தைக் கிடத்திவிட்டு வருவோம். மாட்டுக்குச் செலுத்திய மருந்தின் வீரியம் அதன் உடலில் தங்கியிருக்கும். அதைச் சாப்பிடும் பாறுகளின் சிறுநீரகம் செயலிழந்து போய், தலை தொங்கி, கிறுகிறுத்து, மரத்திலிருந்து கொத்துக்கொத்தாகச் செத்து விழுந்த சம்பவத்தை மக்களோடு பகிர்ந்துகொண்டோம்.

தமிழகத்திலுள்ள திருக்கழுக்குன்றத்தில் கழுகுகள் தினசரி உணவுக்கு வருவதை, அந்த ஊரில் வாழும் மக்கள் கதைகதையாய்ச் சொல்வார்கள். கோவில் நிர்வாகம் கழுகுகளுக்கு உணவளிப்பதற்காகவே தனி மானியம் வழங்கிவந்தது. பல்வேறு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களால் 1994ஆம் ஆண்டிலிருந்து அங்குக் கழுகுகள் வருவதில்லை. கோவில் கோபுரத்தில் கழுகுகள் வரும் வழியில் கூடு போன்ற அமைப்பை 1994ஆம் ஆண்டு நடந்த குடமுழுக்கின்போது அடைத்துவிட்டதே, கழுகுகள் வராததற்குக் காரணம் என்று பலரும் சொன்னாலும் சூழலியல் காரணங்களை யாரும் முன்னிறுத்துவதில்லை. கோவில் தூணில் கழுகுக்கு உணவளிப்பதைப் போன்ற சிற்பம் மட்டுமே அங்கு எஞ்சி உள்ளது.

காடுகளிலுள்ள கழுகுகளைப் பற்றி நாம் பேசுகிறோம். காட்டைத் துப்புரவு செய்து தூய்மையாக வைத்திருக்கும் உயிரினம்தான் கழுகுகள். நமது வீடுகளில் ஒரு சுண்டெலி சந்து, பொந்துகளில் சிக்கி இறந்து போனால் வீடெங்கும் வீசும் கெட்ட வாடையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அதைத் தேடி எடுத்துத் தூக்கி எறிந்து, வீட்டைச் சுத்தப்படுத்திய பிறகுதானே நிம்மதியடைகிறோம்.

ஆட்கள் நுழைய முடியாத ஒரு அடர்ந்த காட்டில் யானை இறந்து போனால் அதைச் சுத்தப்படுத்துவது யார்? கழுகுகள்தான்! காட்டில் கழுகுகள் அற்றுப்போனால் யானையின் உடல் மக்கி மறைய வெகு நாட்கள் ஆகும். அதன் உடலில் இருந்து வெளியேறும் நோய்க் கிருமிகள் காட்டில் வாழும் மற்ற உயிரினங்களுக்கும் தொற்றும், காட்டுக்குள் மேய்ந்து வரும் நமது கால்நடைகளையும் பாதிக்கும்.

நதிகள் மலைகளில்தான் உற்பத்தியாகின்றன, ஒரு சின்ன ஓடையில் நோய்க் கிருமி சேர்ந்தாலும் அது ஒட்டுமொத்த நீரிலும் கலக்கும். லட்சக்கணக்கான மனிதர்களின் உடலிலும் வந்து சேரும். கழுகுகளை நாம் காப்பாற்றினால் அவை நம்மைக் காப்பாற்றும் என்பதை உணர வேண்டும்.

எங்களது கலைப் பயணத்தினூடே கால்நடை மருத்துவர்களைச் சந்தித்துக் கழுகுகளுக்குக் கேடு பயக்கும் டைகுளோஃபினாக், அசிக்குளோஃபினாக், கீட்டோ புரோஃபென் மருந்துகளைப் புறக்கணித்து மாற்று மருந்துகளைப் பயன்படுத்த வலியுறுத்தினோம். எஞ்சிய கழுகுகள் வாழும் ஈரோடு, நீலகிரி பகுதிகளிலுள்ள மருந்து விற்பனையாளர்கள், கால்நடைத் துறையினர், பால் உற்பத்தியாளர்கள், வேளாண் மக்களிடம் இந்தச் செய்தியைக் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த கரிசனத்தோடு சி.இ.பி.எப்.அமைப்பும், மலபார் இயற்கை வரலாற்றுக் கழகமும், சாலிம் அலி பறவை மற்றும் இயற்கை ஆராய்ச்சி மையமும், மும்பை இயற்கை வரலாற்று கழகமும் வழிகாட்டி துணை நின்றன.

கழுகுகள் வாழும் பகுதியைச் சுற்றிலும் 100 கி.மீ. சுற்றளவுக்கு டைகுளோஃபினாக் மருந்தின் பயன்பாடு அறவே கூடாது எனச் சுற்றுச்சூழல் அமைச்சகம் நெறிமுறை வகுத்துள்ளது. மத்திய அரசின் மருந்து கட்டுப்பாடு ஆளுநர் அம்மருந்தைக் கால்நடைகளுக்குத் தருவதற்குத் தடை விதித்து 2006ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இவை எளிய மக்களின் செவிகளுக்கு எட்டாத சேதியாய் இருப்பதை, இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின்போது புரிந்துகொள்ள முடிந்தது.

இந்தப் பயணம் மூலம் நாற்பதுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரமாயிரம் மக்களுக்கு அருளகம் இயற்கைப் பாதுகாப்பு அமைவனமும் விதைகள் கலைக் குழுவும் பரிச்சயமடைந்தன. கடந்த காலத்தில் இம்மக்களால்தான் கழுகுகள் வாழ்ந்தன. இனியும் இம்மக்களால்தான் கழுகுகளைக் காப்பாற்றமுடியும். இயற்கையோடும், இயற்கை படைத்தளித்த உயிர்களோடும் வாழ்வதுதான் வாழ்க்கை என்பதை ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களுக்கு அறியச் செய்வதின் மூலம்தான் எதையும் காப்பாற்ற முடியும்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணில் வாழ்ந்த சிவிங்கிப்புலி (சீட்டா) முற்றிலும் மறைந்ததைப் போல் பாறுக் கழுகுகள் அழிந்துபோக விட்டுவிடக் கூடாது. சுரங்கத் தொழில், காட்டுத்தீ, ஆற்றோரமுள்ள பெருமரங்களின் அழிப்பு போன்ற செயல்பாடுகளாலும் கழுகுகள் அழிந்தன. புலி, சிறுத்தைகளான வேட்டையாடும் விலங்குகளின் மீது கொண்ட வன்மத்தில் அவை கொன்ற மாட்டின் உடலில் இனி நஞ்சு தடவ மாட்டோம், காட்டில் இயற்கையாக இறக்கும் விலங்குகளைக் கழுகுகளுக்கு விருந்தாக்க வனத்துறையிடம் வேண்டுவோம் என்று கிராம மக்கள் உறுதியளித்து, தேநீரும் நம்பிக்கை தரும் வார்த்தைகளையும் கொடுத்துக் கலைப் பயணத்துக்கு விடை கொடுத்தனர்.


"மனுஷங்கள்லயும் நிறைய கழுகுகள் இருக்குப்பா..."

===================================================================================





தனிமையால் நிரப்பப்பட்ட 
இரவுகளின்
வெப்பத்தைக் 
இமைகளின் கண்ணீர் 
நனைக்க முயற்சிக்கின்றன...


"என்னைக் காணோம்னு டாம் வருத்தப்படறாரோ..."

============================================================================================



சந்திராஷ்டம விளக்கம்.


 திரு ரவி சாரங்கன், முக நூலில்...

சந்திராஷ்டமம் 

இதை கண்டால் சிலருக்கு பயம் வரும். 

பொதுவாக சந்திரன் அஷ்டம ராசியில் வரும்போது கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தும். சிலருக்கு வயறு சம்பந்தப்பட்ட உபாதையை மட்டும் கொடுத்துவிட்டு போகும்.

புதிய செயல்களை தொடங்கும் முன் அன்று சந்திராஷ்டமமா என்று பார்த்து துவங்குவது நல்லது.

சந்திராஷ்டம நாளா என்று கண்டறிய சுலபமான வழி. அஷ்டம ராசியில் இருக்கும் 2-1/4 நாளும் உங்களுக்கு சந்திராஷ்டமம் இல்லை உங்கள் நக்ஷத்திரத்துக்கு உண்டான நாள் மட்டுமே உங்களுக்கு சந்திராஷ்டம நாள்.

உங்கள் நக்ஷத்திரத்துக்கு 17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டம தினம்.

உங்கள் நக்ஷத்திரத்துக்கு எதிரில் கொடுக்கப்பட்ட நக்ஷத்திர தினத்தன்று உங்களுக்கு சந்திராஷ்டம நாள்.

கேள்வி :  8 ம் இடம் போல 6 ம் இடத்தில் சந்திரன் ராசியில் நிற்க குழப்பங்கள் உண்டா?

பதில் : உண்டு ஆனால் அளவில் அது குறைவு. மேலும் 6ம் இடம் சந்திரன் மன கலக்கத்தை ஏற்படுத்தினாலும் அது இருக்கும் இடம் சரியில்லை என்றால் அந்த மன கலக்கம் குழப்பம் இல்லாமல் போய்விடலாம். எட்டாம் இடம் அப்படி இல்லை ரொம்பவே குழப்பி விட்டுவிடும்.

அஸ்வினி - அனுஷம்
  பரணி - கேட்டை
   க்ருத்திகை - மூலம்
     ரோஹிணி -- பூராடம்
      மிருகசீரிடம் - உத்திராடம்
       திருவாதிரை - திருவோணம்
        புனர்பூசம் -- அவிட்டம்
          பூசம் --- சதயம்
           ஆயில்யம் -- பூரட்டாதி
             மகம் - உத்திரட்டாதி
               பூரம் - ரேவதி
                 உத்திரம் - அஸ்வினி
                   அஸ்தம் - பரணி
                      சித்திரை -- க்ருத்திகை
                        ஸ்வாதி -- ரோஹிணி
                            விசாகம் -- மிருகசீரிடம்
                               அனுஷம் -- திருவாதிரை
                                     கேட்டை -- புனர்பூசம்
                                           மூலம் -- பூசம்
                                               பூராடம் -- ஆயில்யம்
                                                  உத்திராடம் -- மகம்
                                                      திருவோணம் - பூரம்
                                                          அவிட்டம் - உத்திரம்
                                                               சதயம் - ஹஸ்தம்
                                                                        பூரட்டாதி -- சித்திரை
                                                                             உத்திரட்டாதி - ஸ்வாதி
                                                                                    ரேவதி - விசாகம்



"நல்லவேளை...  இன்னிக்கு இவனுக்கு சந்திராஷ்டமம் போலிருக்கு..  சாப்பிட மறந்து பார்த்துகிட்டே இருக்கான்..."
=========================================================================


மாமியார் மனம் கோணல் சகியா மருமகள்.



மோதிரத்தை எடுத்துக் கொண்ட சோனியா :

இந்திராவின் மூத்த மருமகள் சோனியா; இளைய மருமகள் மேனகா. வீடு, சமையல் உள்ளிட்ட குடும்பப் பொறுப்புகளை, சோனியா கவனித்துக் கொள்வார். இந்திராவின் உரைகளுக்கு, மேற்கோள் தயாரித்துக் கொடுப்பது, மேனகாவின் வேலை. அதை, அவர் மகிழ்ச்சியோடு செய்து வந்தார்.

1977-ல், இந்திரா ஆட்சி அதிகாரத்தை இழந்தார். ஜனதா அரசு, அவர் மீது, தாக்குதலை மேற்கொண்டிருந்தது. இந்திராவின் குடும்பத்தில், எப்போதாவது, பெரிய சண்டை நடப்பது உண்டு. பெரும்பாலும், சஞ்சய் - மேனகா இடையே தான், சண்டை வரும். 

ஒருமுறை மேனகா, தன் திருமண மோதிரத்தைக் கழற்றி வீசியெறிந்து விட்டார். இந்திரா அதைக் கண்டு வேதனைப்பட்டார். அவருடைய தாய் கமலா நேருவின் மோதிரம் அது. இந்திரா, தன் தாயின் மீது கொண்டிருந்த அன்பின் அடையாளமாக, அந்த மோதிரத்தை பாதுகாத்திருந்தார். வீட்டுக்கு வந்த மருமகள், அதைக் கழற்றி எறிவதென்றால்...


மாமியாரின் மனநிலையை உணர்ந்த சோனியா, அந்த மோதிரத்தை எடுத்து பத்திரப்படுத்தியதோடு, தாம், அதைப் பிரியங்காவிற்காக வைத்துக் கொண்டதாக, இந்திராவிடம் தெரிவித்தார். அந்த மோதிரம், இன்று பிரியங்காவின் கை விரலை, அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.


— சி.எஸ்.தேவநாதன் எழுதிய, 'சோனியா காந்தி' நூலிலிருந்து.


"மருமகளுக்குத் தெரியும் மாமியாரின் கஷ்டம்...  நானும் நாளைய மாமியார்தானே?"

==============================================================================================


சண்டிகேஸ்வரரை எப்படி வழிபடவேண்டும்?




"உஷ்....   கை தட்டக் கூடாதாம்...  சத்தப்படுத்தக்கூடாதாம்..."

=================================================================================



"ஓகே....  கிளம்பலாமா....."


"எங்கே?"


"அடுத்த வாரத்துக்கு ஓடலாம்... வா..."



75 கருத்துகள்:

  1. காலை வணக்கம் ஸ்ரீராம், துரைசெல்வராஜு அண்ணா

    ஆ! அதுக்குள்ள அண்ணா ஆஜர்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்.. நல்வரவு..

    பதிலளிநீக்கு
  3. இதுங்க ஓடற வேகத்துக்கு அடுத்த வாரத்துக்கு இப்பவே ஓடத் துவங்கணுமோ!!!! லூட்டிதான்... ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. டாம் அண்ட் ஜெட்டி சூப்பர்!! எவ்வளவு நாளாச்சு பார்த்து!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  6. நானும் இதுவரை டாம் ஜெர்ரி கட்சிதான்...அதுங்க சொல்றாப்புலதான் சண்டிகேஸ்வரரைக் கும்பிடறேனாக்கும்...ஹே ஹே ஹே

    கீதா

    பதிலளிநீக்கு
  7. மேனகா மேட்டர் எனக்கு புதிய செய்தி...!!!

    பதிலளிநீக்கு
  8. சந்திராஷ்டமம் புரியலை!!!!

    டாம் அண்ட் ஜெர்ரி கமென்ட் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  9. வல்லூறு இயற்கையின் தோழன்..
    படித்தவன் அதனைக் கெடுத்தான்...

    நிஜமான வல்லூறுகளும்
    வையகத்தில் வாழட்டும்..

    பதிலளிநீக்கு
  10. கவிதை அருமை...

    வெப்பத்தை அணைக்க அல்லது தணிக்க?!!! ஆனா கண்ணீரும் சூடா இருக்கும்ல?!!! ஆமாம் டாமுக்கு ஜெரி இல்லைனா ரொம்ப போர்தான்...ஜெரிக்கும் அப்படித்தானே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. இந்திராகாந்தி குடும்பச் செய்தி புதுசு....வேற என்னவோ சொல்லத் தோணுது...வேண்டாம் வம்பு...ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கழுகுச் செய்தி அருமை!! மகனுக்கும் இதைப் பகிர்ந்துள்ளேன்.

    டாம் ரொம்பச் சரியா சொல்றார்...இயற்கையில் கழுகுகள் வேண்டும் என்கிறோம்...ஆனா அழியுதுங்க...மக்கள்ல இருக்க கழுகுக் கூட்டத்தை அழிக்க நினைச்சாலும்... என்ன செய்ய? அழிக்க முடியுமா? வளர்ந்துட்டே போகுதே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஹையோ ஸார் ஸ்ரீராம்...இப்பத்தான் இந்த டைப்போவைக் கவனித்தேன்...ரொம்ப சாரி....

    //டாம் அண்ட் ஜெட்டி சூப்பர்!! எவ்வளவு நாளாச்சு பார்த்து!!!//

    ஜெர்ரி என்று வந்திருக்க வேண்டும்...தெரியாமல் ஜெட்டி என்று வந்துவிட்டது....ஹையோ யார்கிட்டல்லாம் மாட்டிக்கப் போறேனோ...குறிப்பா அதிரடிக்கிட்ட, நெல்லைகிட்ட, ஏகாந்தன் சகோ கிட்ட!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  14. கழுகு இதன் பின்னே எவ்வளவு விடயங்கள் இருக்கின்றது.

    இறைவனின் அனைத்து படைப்புகளுக்கும் காரணம் உண்டு.

    மோதிரம் நெகிழ்ச்சியை கொடுத்தது.

    பதிலளிநீக்கு
  15. கழுகு செய்திகள் அறிந்தேன்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  16. காலை வணக்கம்! பின்னர் வருகிறேன். சற்று நீண்ட பதிவாக தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  17. தொகுப்பு அருமை! சண்டிகேஸ்வரர் துதி! எத்தனை அழகாய்ச் சொல்லியிருக்கிறார்கள்!! இது எந்தக் கோவில்?

    பதிலளிநீக்கு
  18. ஒவ்வொரு உயிரும் காரண காரியத்தோடுதான் இறைவனால் படைக்கபட்டு இருக்கிறது.
    கழுகுகள் இறப்பை தடுக்க ந்டவடிக்கை எடுப்பது மகிழ்ச்சி.
    கவிதை, மற்றும் செய்திகள் அருமை.

    பதிலளிநீக்கு
  19. தொகுப்பு மிக நன்று இயற்கையின் படைப்பு சமன் செய்து காணப்படும் சில அறியாத தகவல்கள்

    பதிலளிநீக்கு
  20. கழுகுகளைப் பற்றிப் படித்ததும் திருவானைக்கோயில் நினைவிற்கு வந்தது. ஆரம்பத்தில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலின் கருவறையில் உள்ள மூலவருக்குக் கீழே நீர் சுரந்து வந்தது. இப்போது செயற்கையாக அமைப்பு உண்டாக்கிவைத்துள்ளதாக அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  21. ஐ ஒப்ஜக்‌ஷன் யுவ ஆனர்ர்ர்ர்:)).. கனியிருப்பக் காய் கவர்ந்திட்டார் ஸ்ரீராம்... கவர்ச்சியாகத் தலைப்புப் போடுறேன் என வெளிக்கிட்டிருக்கிறார் போலும்:).. அது ஒரு மாதிரி இருக்கு... சரி சரி, எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:).

    கழுகுகள் பற்றிய கட்டுரை சுவாரஷ்யம்.

    ///"மனுஷங்கள்லயும் நிறைய கழுகுகள் இருக்குப்பா..."//
    இவுக யாரைச் சொல்றாக ஹா ஹா ஹா:))..

    பதிலளிநீக்கு
  22. //தனிமையால் நிரப்பப்பட்ட
    இரவுகளின்
    வெப்பத்தைக்
    இமைகளின் கண்ணீர்
    நனைக்க முயற்சிக்கின்றன...
    //

    ஆஹா ஆஹா அருமையா இருக்கு.. ஆனா கண்ணீர் பட்டா வெப்பம் இன்னும் கூடுமே:) கண்ணீர் சுடுமெல்லோ:)) எப்பூடி என் கண்டு பிடிப்பூஊஊஊ[இது வேற கண்டு பிடிக்கிறது.. மாட்டுக் கண்டல்ல}.. இப்போ நெல்லைத்தமிழன்/செக் ஆஜர் ஆவாங்க:)).. அது கண்டு அல்ல அதிரா கன்று:)) ஹா ஹா ஹா:)).. ஆசைக்கு ஒரு வசனம் எழுத முடியுதா இங்கின:) கர்ர்ர்:))..

    ///"என்னைக் காணோம்னு டாம் வருத்தப்படறாரோ..."//
    இது வேற ஆசையா ஜெரிக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  23. ///திரு ரவி சாரங்கன், முக நூலில்...//

    இவர்தான் ஸ்ரீரங்கம் ரவி எனும் பெயரில் பலன்கள் சொல்பவரோ யூ ரியூப்பில்..

    இந்த சந்திராஸ்டமம் பற்றிய கவலை எனக்கு இருந்ததில்லை:) ஏனெனில் நம் குடும்பத்தில் இதுக்கு முக்கியத்துவம் குடுத்ததாக நான் அறியவில்லை, அதனால அதுபற்றி தெரியாதிருந்தது.. கடந்த 2 வருடங்கள் முன் வரை:).. அதன் பின் தெரிந்து கொண்டென்.. வம்பை வாங்கித் தந்திடுமாமே:).. நான் இப்போ எல்லாம் சந்திராஸ்டம காலங்களில் வாயே திறக்க்க மாட்டேன் ஜாமீஈஈஈஈஈஈஈஈஈஈ[ஒன்லி ரைப்பிங்ங்ங்ங்ங்:)) ஹா ஹா ஹா]..

    அது சரி நட்சத்திரங்கள் எதுக்கு சென்னையில் ஆரம்பிச்சு அபுதாபிக் கடலை நெருங்கிக்கொண்டு இருக்குது?:).. சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))..

    ///"நல்லவேளை... இன்னிக்கு இவனுக்கு சந்திராஷ்டமம் போலிருக்கு.. சாப்பிட மறந்து பார்த்துகிட்டே இருக்கான்..."//

    ஹா ஹா ஹா படமும் குறிப்பும் அருமை..:)

    பதிலளிநீக்கு
  24. சோனியா - மேனகா கதை நல்லாயிருக்கு...

    //மாமியார் மனம் கோணல் சகியா மருமகள்.//

    இது ஆருக்கோ நேரடியாகச் சொல்ல பயத்தில, புளொக் மூலம் தகவல் கொடுப்பது போல இருக்குமோ?:) .. சரி சரி மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் சிக்ஸ் இயேர்ஸ்ஸ்ஸ்:))

    ///"உஷ்.... கை தட்டக் கூடாதாம்... சத்தப்படுத்தக்கூடாதாம்..."///
    ஹா ஹா ஹா கோயிலைச் சுற்றி வரும்போது மூலஸ்தானத்தின் வலது பக்கமாக ஒருவர் இருப்பரே... அவரைக் கைதட்டிக் கூப்பிட்டுத்தான் கும்பிட்டு வருவோமே.. அவரா இவர்?.. புது உடையிலிருந்து ஒரு நூலை இழுத்துப் போட்டும் கும்பிடுவினம்.. பெயர் மறந்திட்டேன்..

    பதிலளிநீக்கு
  25. கழுகுக்கு எல்லா இடங்களிலும் பிரச்சனைதான். மும்பையிலும் பார்சிக்கள், உடலை கழுகுக்கு இறையாக்கும் பாறை இருக்கிறது. அங்கு பல வருடங்களாக கழுகுகளே வருவதில்லை. அதனால் அவங்க, 'உடலை கழுகுக்கு இரையாக்கும் வழக்கத்தையே' செய்யமுடியாம தவிக்கறாங்க.

    தொகுப்பு எல்லாவற்றையும் ரசித்தேன் (சந்திராஷ்டமத்தைத் தவிர). டாம் & ஜெர்ரி - நல்லா எழுதியிருக்கீங்க கமென்ட்ஸ்லாம்.

    பதிலளிநீக்கு
  26. //"அடுத்த வாரத்துக்கு ஓடலாம்... வா..."//

    ஹா ஹா ஹா ஒர் கிழமையா அடக்கி வச்சு ஒரு நாளில் கொட்ட வேண்டிய நிலைமையாச்சே ஸ்ரீராமின் நிலைமை:)).. சரி சரி ரைம் ஆச்சு மீயும் ரன்னிங்:))...

    அதுசரி கீசாக்காவுக்கு இன்னும் கதவு திறக்கவே இல்லையாமா?:)).. ஹா ஹா ஹா.. திருவாசகம் பாடச் சொல்லுங்கோ திறக்கக்கூடும்:))..கிக் கிக் கீஈஈஈஈஈஈ அதிரா சிரிச்சிட்டுப் போறேன் எனவும் சொல்லிடுங்கோ பீஸ்ஸ்ஸ்:))..

    பதிலளிநீக்கு
  27. அனைவருக்கும் இனிய வணக்கம்!

    கழுகுகள் பற்றி இவ்வளவு விரிவாக இன்றுதான் அறிந்தேன். அரிய தகவல்கள்!
    சந்திராஷ்டம் பற்றிய தகவலும் சுவாரஸ்யம்..:)

    சண்டிகேஸ்வரர் வழிபாட்டு முறை அறிந்துள்ளேன். தரப்பட்ட பதிகமும் சிறப்பு.
    ரொம் அண்ட் ஜெரி கார்ட்டூன் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள் சகோ!...:)

    நல்ல தகவற் பகிர்வுகள். நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  28. நன்றி கீதா.. டாம் அண்ட் ஜெர்ரியையும் சேர்த்தே ரசித்ததற்கு.

    பதிலளிநீக்கு
  29. நன்றி பாரதி.. எனக்கும் புது செய்திதான்.

    பதிலளிநீக்கு
  30. கீதா.. சந்திராஷ்டமத்துல என்ன புரியவில்லை? நாளை புரியுமோ? இன்று உங்களுக்கு சந்திராஷ்டமமோ!

    பதிலளிநீக்கு
  31. நன்றி துரை செல்வராஜூ ஸார்.. வல்லூறு மட்டுமா... ஒவ்வொரு உயிரினத்துக்கும் உலகில் தனிக் கடமையுண்டே....

    பதிலளிநீக்கு
  32. கண்ணீரும் அந்த வெப்பத்தில் சூடாகும் என்பதுதான் கவிதையின் ஸ்பெஷல். நன்றி கீதா. இந்திரா காந்தி குடும்பச் செய்தியில் வேறு என்ன சொல்லத் தோன்றியது என்று சொல்லி இருக்கலாம்!

    பதிலளிநீக்கு
  33. இயற்கையில் படைக்கப்பட்ட ஒரு உயிரினத்தைத் தொலைக்கும்போது இயற்கையின் கண்ணியில் ஒன்றை அறுக்கிறோம். நன்றி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  34. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  35. வாங்க பானு அக்கா.. நீண்ட பதிவா? சிறு சிறு தகவல்களாக குறும்பதிவுகள்!

    பதிலளிநீக்கு
  36. வாங்க மனோ சாமிநாதன் மேடம். அது குன்றத்தூர் முருகன் கோவில்.

    பதிலளிநீக்கு
  37. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.. மேலதிகத் தகவலுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  38. வாங்க அதிரா...

    // கனியிருப்பக் காய் கவர்ந்திட்டார் ஸ்ரீராம்..//

    இது ஒரு பாடம்! தலைப்பை (மட்டும்) பார்த்து ஒரு முடிவுக்கு வரக்கூடாது என்று!
    கண்ணீரும் சுடும் வேதனை! சரிதானே? ஹா... ஹா... ஹா...

    ஸ்ரீரங்கம் ரவி இவரா என்று தெரியவில்லை. நான் பார்த்ததில்லை. இவர் சென்னை.

    மாமியார் மருமகள் மறைமுகத்தகவல் யாருக்கு சொல்வேனாய் இருக்கும்? எங்கே சின் சிண்டு? பிய்த்துக்கொள்ளவேண்டும்!

    பதிலளிநீக்கு
  39. வாங்க அதிரா...



    // பெயர் மறந்திட்டேன்..//

    அங்கேயே சொல்லி இருக்கிறேனே... சண்டிகேஸ்வரர்.

    பதிலளிநீக்கு
  40. வாங்க நெல்லைத்தமிழன். சந்திராஷ்டமத்தில் என்ன அலர்ஜி? ஏன் பிடிக்கவில்லை? உபயோகமில்லாத தகவல்?

    பதிலளிநீக்கு
  41. வாங்க அதிரா...

    // ஹா ஹா ஹா ஒர் கிழமையா அடக்கி வச்சு ஒரு நாளில் கொட்ட வேண்டிய நிலைமையாச்சே ஸ்ரீராமின் நிலைமை//

    அதெல்லம் வேறு திட்டங்கள் இருக்கின்றன - இரண்டு வருடங்களாய்... சீக்கிரம் செயல் படுத்தி விடுவோம்!

    பதிலளிநீக்கு
  42. / அதிரா சிரிச்சிட்டுப் போறேன் எனவும் சொல்லிடுங்கோ பீஸ்ஸ்ஸ்://

    கீதா அக்காவை வம்புக்கு இழுக்கலைன்னா உங்களுக்கு பொழுது போகாதே.. கீதா அக்கா.. கவனியுங்க இந்த வரிகளை

    பதிலளிநீக்கு
  43. நன்றி சகோதரி இளமதி. சண்டிகேஸ்வரர் பகிர்வையும், டாம் அண்ட் ஜெர்ரியையும் ரசித்தமைக்கு.

    பதிலளிநீக்கு
  44. வணக்கம் சகோதரரே

    தொகுப்பு பதிவு அருமை. தங்கள் பதிவால் கழுகுகள் பற்றி நிறைய அறிந்து கொள்ள முடிந்தது.இங்கு நாங்கள் இருக்கும் இடத்நில் நிறைய கழுகுகளை காண முடிகிறது. ஆனால் அது தாங்கள் குறிப்பிடும் வகையை சார்ந்ததாவென தெரியவில்லை.

    கவிதை மிகவும் ரசித்தேன்.
    மாமியார் மருமகள், சந்திராஷ்டமம், சண்டிகேஸ்வரர் வழிபாடு என அனைத்து செய்திகளும் அருமை.
    டாம் அண்ட் செர்ரி முன்பு அடிக்கடி ரசித்து பார்ப்பது இப்போ நேரமேயில்லை. நாமே வீட்டிலிருக்கும் உறவுகளுடன் அப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம். கார்ட்டுனை நினைவுபடுத்தி மலரும் நினைவுகளை நினைவூட்டியதற்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  45. நேக்குப் பொழுது போகுதில்லைலைலை :) கீசாக்காஆஆஆ ஐந்து கரத்தனை பாடியாவது திறந்து கொண்டு உள்ளே வாங்கோவன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

    பதிலளிநீக்கு
  46. இல்ல ஸ்ரீராம் ஊரில் நாம் சண்டிகேஸ்வரர் என்பதில்லை வேறு ஒரு பெயர் சொல்லுவோம்.. அம்மாவிடம் கேட்டுப்பார்க்கோணும்:)...

    தலைப்புக்கு நான் சொன்னது... ஒரு மாதிரி இருக்கு வார்த்தை:) அதைத்தான் ஜொன்னேன் மற்றும்படி எந்த வீட்டில தலைப்பைப்போல உள்ளேயும் இருக்கும்?:)...

    அஞ்டு வீட்டில மட்டும்தான் அப்பூடியே வைபா தலைப்பூ:)... அந்த தெக்கினிக்கி இன்னும் வரல்ல அவவுக்கு:)... சமையலைப்போலவே தேன்ன்ன்ன்ன்ன்:)... சர் சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ச்:)

    பதிலளிநீக்கு
  47. இயற்கை எல்லாவற்றையும் ஒரு அர்த்தத்தோடுதான் படைத்திருக்கிறது. நாம்தான் அதை மாற்றி சூழலை மாசு படுத்துகிறோம்.

    சந்திராஷ்டமம் எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் என்று தெரியவில்லை. டாம் அண்ட் ஜெர்ரி கமெண்டுகள் பிரமாதம்!

    பதிலளிநீக்கு
  48. வாங்க பானு அக்கா.. நீண்ட பதிவா? சிறு சிறு தகவல்களாக குறும்பதிவுகள்!

    வேறு ஒன்றுமில்லை செல் போனில் பார்க்கும் பொழுது நீண்ட பதிவாக தோன்றி விட்டது. ஹி!ஹி!

    பதிலளிநீக்கு
  49. இந்த ஊரில் Turkey Buzzard வெகுவாகப் பேணப்படுகிறது.
    பெரிய நிலப்பகுதியில் எங்கும் ஏதும் நிகழ வாய்ப்பிருந்த நாட்களில்
    இந்த வல்லூறுகள் வந்து எலும்பு மட்டும் மிஞ்சும் வரை சாப்பிட்டுவிட்டுப் போகுமாம்.
    நம் ஊரில் இந்த விழிப்புணர்வு இருப்பது மகிழ்ச்சி.
    2014க்கு அப்புறம் நடவடிக்கைகள் பலித்ததா என்று தெரிய ஆவல்.

    எனக்குச் சந்த்ராஷ்டமத்தில் நம்பிக்கை உண்டு. மாமியார் சொல்லிச் சொல்லி
    பேசவே பயமாக இருக்கும்.
    டாம் அண்ட் ஜெர்ரி சூப்பர். மிகப் பிடித்த கேரக்டர்கள்.
    ஹ்ம்ம். அந்த நாட்கள்.

    மும்பை நாட்களில் பார்சிப் பாறைக்குச் சிங்கம் அழைத்துச் சென்றிருக்கிறார்.
    1999 என்று நினைக்கிறேன். இகோ சிஸ்டம் பழுதுபட்டால் பாதிக்கப் படுவது நாம்தான் என்றே பலருக்குப் புரிவதில்லை.
    அனைத்துச் செய்திகளுக்கும் நன்றி. சுவையான பகுதி..
    கண்டிப்பாகத் தொடர வேண்டும். வாழ்த்துகள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  50. சஞ்சய் காந்தியின் மரணத்திற்குப் பிறகும் மேனகா காந்தி சிறிது நாட்கள் இந்திராகாந்தியோடுதான் தங்கி இருந்தார். பின்னர்தான் பிரிந்து சென்றார். அந்த சமயத்தில் ஒரு முறை ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களை இந்திராகாந்தி இரவு உணவருந்த அழைத்திருந்தாராம். அந்த அழைப்பை ஏற்று அங்கு சென்ற ஜே.கே. "இந்த வீட்டில் வன்முறை இருக்கிறது, நான் இங்கு உணவருந்த மாட்டேன்" என்று கூறி அந்த விருந்தை ஏற்றுக் கொள்ளோம் மறுத்து விட்டாராம்.

    பதிலளிநீக்கு
  51. பாவம் கழுகுகள் ..இன்று அவை நாளை காகம் குருவி இன்னபிறபறவைகள் அப்புறம் விரைவில் மானிடன் .
    மனுஷங்கதான் எல்லாத்தையும் அனுப்பிட்டு கடைசியில் போகப்போறாங்க :(
    இந்த Diclofenac தடை செய்யப்படவேண்டிய ஒன்று கழுகுகள் மட்டுமில்லை மனுஷங்க செய்ற வேலையால் புலி போன்றவையும் சாகுதே
    food web செயின் என்பதை அனைவருக்கும் கற்றுக்கொடுக்கணும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் .
    Diclofenac மட்டும் கழுகுகளின் அழிவுக்கு காரணமில்லை DDT யும் அதிக பரவலாக தோல் பதனிடும் மற்றும் கொசு அழிப்பில் நீர்நிலைகளில் கலந்து இந்த கழுகு போன்ற பறவைகளின் உணவு சங்கிலியில் சென்று அவற்றுக்கு அழிவையேற்படுத்துது .

    பதிலளிநீக்கு
  52. டாம் அண்ட் ஜெரி கியூட்டா ஓடி ஓடி விளையாடறாங்க :)

    பதிலளிநீக்கு
  53. நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.

    // நாமே வீட்டிலிருக்கும் உறவுகளுடன் அப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம். //

    ஹா.... ஹா.... ஹா... உண்மை.

    பதிலளிநீக்கு
  54. ஆமாம் அதிரா... ஏன் இன்னும் கீதா அக்காவைக் காணோம்?

    // ஸ்ரீராம் ஊரில் நாம் சண்டிகேஸ்வரர் என்பதில்லை வேறு ஒரு பெயர் சொல்லுவோம்.. அம்மாவிடம் கேட்டுப்பார்க்கோணும்:)...//

    கேட்டு என்ன பெயர் என்று சொல்லுங்கள்!

    பதிலளிநீக்கு
  55. வாங்க பானு அக்கா..

    // சந்திராஷ்டமம் எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் என்று தெரியவில்லை. //

    ஆமாம்... சிலருக்குத்தான் புரிந்தது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  56. வாங்க வல்லிம்மா...

    // நம் ஊரில் இந்த விழிப்புணர்வு இருப்பது மகிழ்ச்சி.
    2014க்கு அப்புறம் நடவடிக்கைகள் பலித்ததா என்று தெரிய ஆவல். //


    அந்த கணக்கெடுப்பு எப்போது எடுப்பார்களோ!

    // கண்டிப்பாகத் தொடர வேண்டும். வாழ்த்துகள் ஸ்ரீராம்.//

    நன்றிம்மா.. நிச்சயம்!

    பதிலளிநீக்கு
  57. வாங்க பானு அக்கா...

    //இநத வீட்டில் வன்முறை இருக்கிறது//

    ஓ.. இது சுவாரஸ்யம். நிச்சயம் நான் கேள்விப்படாத செய்தி.

    பதிலளிநீக்கு
  58. வாங்க ஏஞ்சல்... மேலும் சில தகவல்கள் சொல்லியிருப்பதற்கு நன்றி.

    // டாம் அண்ட் ஜெரி கியூட்டா ஓடி ஓடி விளையாடறாங்க :)//

    ரசிக்காதவர் யார்?!!

    பதிலளிநீக்கு
  59. நேரிடையாக பயன்படாத எந்த உயிரினத்தையும் பற்றி மனிதன் அக்கறை கொள்வதில்லை. சொற்ப என்ன்க்கையிலான உயிர்ன ஆர்வலர்களால்தான் சில உயிரினங்களின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படுகிறது

    பதிலளிநீக்கு
  60. பொதுவாக மனிதன் மற்ற உயிரினங்களுக்கும் சேர்த்துதான் இந்தப் பூவுலகு என்பதை மறந்து விடுவதே வழக்கம். சுயநலம். நன்றி டி என் எம்.

    பதிலளிநீக்கு
  61. ஹாஹாஹாஹா, தேடினீங்களா எல்லோரும்! நல்லாத் தேடுங்க, தேடுங்க, தேடிக்கிட்டே இருங்க! :)))))

    அதிரா, ஹையா ஜாலியா இருக்கே! நல்லாத் தேடுங்க, தேடுங்க! :)))))

    பதிலளிநீக்கு
  62. ராஜஸ்தானில் பெரிய பெரிய பிணம் தின்னிக் கழுகுகளைப் பார்க்கலாம். ஒரு கழுகு வானில் வட்டமிட்டால் சூரிய ஒளியையே மறைக்கும்! போன புதுசில் அதைக் கண்டு பயம்மா இருந்தது. அப்புறமா சரியாப் போச்சு! :)))) இறைவன் படைப்பில் எதற்கும் காரண, காரியம் உள்ளது. அர்த்தமுள்ளதும் கூட! எந்தப் படைப்பையும் வீணாய்ப் படைப்பதில்லை. இதை நாம் தான் புரிஞ்சுக்கலை! :)

    பதிலளிநீக்கு
  63. நேற்று பயணத்தில் இருந்ததால் பார்க்க, கொஞ்சம் பார்த்தாலும் படிக்க, படித்தாலும் ஏதாவது எழுத - முடியவில்லை. நாளையிலிருந்து மீண்டும் பயணம்..

    Interesting assortments. பிணந்தின்னிக்கழுகள்பற்றி பொதுஅறிவைப் பெருக்கியது நல்லதுதான்.
    நம்மோடு வாழும் உயிரினங்கள்பற்றி நாம் அவ்வப்போது பேசவேண்டும், கவலைப்படவேண்டும், எங்கே காணோம் என்றாவது தேடவேண்டும். ஆனால் மனித வாழ்க்கை போகிறபோக்கில் இவன் தன்னையே எங்கே போனான் என்று தேடும்படி ஆகிவிடப்போகிறது.

    இந்திரா-சோனியா-மோதிரம் என்றெல்லாம் செண்ட்டிமெண்ட்டலாக எழுதியது வழக்கம்போல் ஒரு நேரு-இந்திரா குடும்ப பக்தர் எனத் தெரிகிறது. பாத்திரம்-பண்டங்கள் எல்லாம் தெருவில் வந்து விழுந்து தெறித்தோடிய, இந்திரா-மேனகா சூப்பர் மாமியார்-மருமகள் சண்டையின்போது நான் டெல்லியில்தான் வசித்தேன். அந்தக் குடும்ப துர்நாற்றம் பற்றி இங்கே மேற்கொண்டு எழுதினால், எல்லோருக்கும் இன்ஃபெக்ஷன் ஆகிவிடுமாதலால் விட்டுவிடுகிறேன்..

    பதிலளிநீக்கு
  64. //இந்திரா-சோனியா-மோதிரம் என்றெல்லாம் செண்ட்டிமெண்ட்டலாக எழுதியது வழக்கம்போல் ஒரு நேரு-இந்திரா குடும்ப பக்தர் எனத் தெரிகிறது. பாத்திரம்-பண்டங்கள் எல்லாம் தெருவில் வந்து விழுந்து தெறித்தோடிய, இந்திரா-மேனகா சூப்பர் மாமியார்-மருமகள் சண்டையின்போது நான் டெல்லியில்தான் வசித்தேன். //

    மேனகாவை வீட்டை விட்டுத் துரத்தினார் மாமியார்! :)))) எழுத வேண்டாம்னு நினைச்சேன். அப்புறமா ஏகாந்தன் பின்னூட்டத்தைப் பார்த்துட்டு எழுதி இருக்கேன். என்றாலும் முழு விபரம் எழுதவில்லை! வேணாம்! :(

    பதிலளிநீக்கு
  65. //பாத்திரம்-பண்டங்கள் எல்லாம் தெருவில் வந்து விழுந்து தெறித்தோடிய, இந்திரா-மேனகா சூப்பர் மாமியார்-மருமகள் சண்டையின்போது நான் டெல்லியில்தான் வசித்தேன். அந்தக் குடும்ப துர்நாற்றம் பற்றி இங்கே மேற்கொண்டு எழுதினால், எல்லோருக்கும் இன்ஃபெக்ஷன் ஆகிவிடுமாதலால் விட்டுவிடுகிறேன்..///

    ஹையோ எனக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது.. ஏகாந்தன் அண்ணன் உங்கள் பக்கம் விளக்கமா எழுதலாமே இதுபற்றி.. படிக்க ஆவல்.. மாமி மருமகள் சண்டை எல்லோ?:) ஆவல் இருக்காதா?:) ஹா ஹா ஹா..

    விருப்பமிருப்பின்:)..

    பதிலளிநீக்கு
  66. ஏகாந்தன் சார்.. கீதா சாம்பசிவன் மேடம் -- இப்போ உயிர்களிடத்தில் அன்பு வேணும்னு விலங்குகளுக்காகப் போராடற மேனகா காந்தியா அப்போ இந்திரா காந்திக்கு மரியாதை கொடுக்க மறந்தது?

    பதிலளிநீக்கு
  67. ஏகாந்தன் சார்.. கீதா சாம்பசிவன் மேடம் -- இப்போ உயிர்களிடத்தில் அன்பு வேணும்னு விலங்குகளுக்காகப் போராடற மேனகா காந்தியா அப்போ இந்திரா காந்திக்கு மரியாதை கொடுக்க மறந்தது?

    பதிலளிநீக்கு
  68. //மேனகா காந்தியா அப்போ இந்திரா காந்திக்கு மரியாதை கொடுக்க மறந்தது?// மேனகா காந்தியை நான் எதுவுமே சொல்லவில்லையே? அந்தத் திருமணமே கட்டாயத் திருமணம். வேறு வழியின்றி நடந்தது! அதுக்கப்புறமும் மேனகா காந்தி சந்தோஷமாய் இல்லை! இவ்வளவு தான் வெளிப்படையாகச் சொல்ல முடியும்! :(((((

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!