திங்கள், 19 பிப்ரவரி, 2018

"திங்க"கிழமை :: பேபி பொட்டேடோ புதினா குருமா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி







பேபி பொட்டேட்டோ  -  1/2 Kg  

புதினா                           -  1 கட்டு   


பச்சை மிளகாய்        -   4 or 5

பூண்டு                           -   5 பல் 

இஞ்சி                  -   சிறு துண்டு   

லவங்க பட்டை  -    சிறு துண்டு 

தேங்காய் துருவல்     -    4 tb.sp  

தயிர்                                 -   1 tb.sp 

உ ப்பு        - தேவையான அளவு    

பெரிய வெங்காய     - 2 or 3

தாளிக்க ஒரு மேஜைக் கரண்டி எண்ணையும், சிறிது சீரகமும்.             

செய்முறை: 

பேபி பொட்டேட்டோ எனப்படும்  சிறு உருளைக் கிழங்கை வேக வைத்து தோலுரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். புதினா கீரையை ஆய்ந்து நன்கு அலம்பி, வெங்காயம் தவிர மேலே சொல்லப் பட்டிருக்கும் மற்ற பொருள்களோடு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 






ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.  







பின்னர் வேக வைத்து தோல் உரிக்கப்பட்ட உருளைக் கிழங்குகளை அதில் சேர்த்து, அரைத்து வைக்கப்பட்டிருக்கும் புதினா மசாலா கலவையோடு உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். உ.கிழங்கும், புதினா கலவையும் சேர்ந்து கொதித்ததும் தயிர் சேர்த்து கிளறி,ரெண்டு நிமிடம் அடுப்பில் வைத்திருந்து பின்னர் இறக்கி விடலாம். சப்பாத்தி,பூரி போன்றவைகளுக்கு சரியான சைட் டிஷ் இது. 




குறிப்பு: சிறு உருளை கிழங்கில்தான்  இதை செய்ய வேண்டும் என்பதில்லை. பெரிய உ.கிழங்கிலும் செய்யலாம். வேக வைத்த கிழங்குகளை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.  புதினாவுக்கு பதிலாக கொத்துமல்லியும் உபயோகிக்கலாம், அல்லது இரண்டும் சேர்த்தும் செய்யலாம். 


[ கண்டிப்பாக ஒருமுறை செய்து பார்க்கிறேன்.  என் ஆவல் பெருகுதே...!  - ஸ்ரீராம். ]




73 கருத்துகள்:

  1. ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா முதலாக வந்துள்ள அதிரடி அதிரா அனைவருக்கும் அன்பின் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  2. ஆ......ஆ.....அதிரா.... இனிய காலை வணக்கம் அதிரா....

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  4. புதினா குருமா என்றதும் பூஸார் தூங்கலையோ...

    பதிலளிநீக்கு
  5. // புதினா குருமா என்றதும் பூஸார் தூங்கலையோ... //

    பேபி என்றதும் பேத்தியைப் பார்க்கும் ஆவலோ.... எனெக்கெதுக்கு ஊர் வம்ஸ்... ஹா.. ஹா.. ஹா...

    பதிலளிநீக்கு
  6. குட் மோனிங் துரை அண்ணன், ஸ்ரீராம்...

    கீதாவைக் காணம்:) கீசாக்காவின் துலா ராசி இன்று துலாவிலிருந்து தள்ளி விழுத்திட்டுதோ..

    பதிலளிநீக்கு
  7. காலை மலர்ந்தது என்று வரியை போஸ்ட் செய்துவிட்டு தூங்கி விழுந்துட்டாங்க போல அதிரான்னு நினைச்சா... அடுத்த கமெண்ட் வந்துடுச்சே... கீஸாக்காவைத் தேடறாங்க!

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீராம் ..
    எதற்கும் ஒருதரம் Spam ஐ கவனிக்கவும்..
    பிளாக்கருக்கு சாளேஸ்வரம் போல..

    கருத்துரைகளை இடம் மாற்றி அனுப்புகின்றது!...

    நன்றி..

    பதிலளிநீக்கு
  9. அதிரா... கீதாக்கா கஞ்சியையும் கடமையையும் மாத்திக்கிட்டு இருக்காங்க.. கீதா ரெங்கன் நெட்டோடு போராட்டம் நடத்திக்கிட்டு இருப்பாங்க....!

    பதிலளிநீக்கு
  10. //
    பேபி என்றதும் பேத்தியைப் பார்க்கும் ஆவலோ.... எனெக்கெதுக்கு ஊர் வம்ஸ்... ஹா.. ஹா.. ஹா...//
    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  11. // ஸ்ரீராம் ..
    எதற்கும் ஒருதரம் Spam ஐ கவனிக்கவும்..//

    ஆமாம் ஸார்... ஸ்பாமில் போய் ஒளிந்து கொண்டிருந்த 2 கமெண்ட்ஸை இங்கு அனுப்பி விட்டேன்... வந்துடுச்சா பாருங்க...

    பதிலளிநீக்கு
  12. நான் கீசாக்காவைப் பார்த்துக் குட்மோனிங் ஜொள்ளாமல் இண்டைக்கு நித்திரை கொள்ள மாட்டேன்ன்ன்ன்:)).. இண்டைக்கு ராசிப்பலன் ஏமாத்திப் போட்டுதே கீசாக்காவை:) ஹையோ ஹையோ:)

    பதிலளிநீக்கு
  13. 'ஆத்திகிட்டு இருக்காங்க' என்பது 'மாத்திக்கிட்டு இருக்காங்க' என்று வந்துவிட்டது என்பதை மன்னிப்பு கேட்டு தெரிவித்துக் கொ'ல்'கிறேன்!

    பதிலளிநீக்கு
  14. //துரை செல்வராஜூ said...
    ஸ்ரீராம் ..
    எதற்கும் ஒருதரம் Spam ஐ கவனிக்கவும்..
    பிளாக்கருக்கு சாளேஸ்வரம் போல..

    கருத்துரைகளை இடம் மாற்றி அனுப்புகின்றது!...//

    ஹா ஹா ஹா துரை அண்ணனுக்கு ஒரு நப்பாசை:) ஸ்பாம் ஐ செக் பண்ணினால் துரை அண்ணன் 1ச்ட்டாக வரக்கூடும் என:) இன்று அது நடகாதூஊஊஊஊஊ.. கீசாக்காஆஆஆஆஆஆ மேடைக்கு வரவும்:).. கஞ்சி காய்ச்சினது போதும்:))

    பதிலளிநீக்கு
  15. அதிரா... வேலைக்குப் போக வேண்டாமா? கீசாக்கா இன்னும் கஞ்சிக்கு அடுப்பே பத்தவைக்கவில்லையாம்...

    // ஹா ஹா ஹா துரை அண்ணனுக்கு ஒரு நப்பாசை:) ஸ்பாம் ஐ செக் பண்ணினால் துரை அண்ணன் 1ச்ட்டாக வரக்கூடும் என:)//

    ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  16. பானுமதி அக்காவின் புதினா குருமா.. கல்ர்ஃபுல்லா சூப்பரா இருக்கு.. உருளைக்கிழங்கைப் பார்க்க அவிச்ச முட்டைபோல தெரியுதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    பானுமதி அக்கா எப்பவும் ஈசியா டக்குப் பக்கெனத்தான் சமைப்பாவோ:).. போன தடவை இஞ்சி முறைப்பா:) குட்டியா ஈசியா ரெசிப்பி போட்டாவே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உருளை கிழங்கை பார்க்க அவிச்ச முட்டை போல் தெரிகிறதா? அபசாரம்!அபசாரம்! வாயை மவுத் வாஷர் போட்டு கழுவுங்கள்.. (ஹா ஹா)

      நீக்கு
  17. ///அதிரா... வேலைக்குப் போக வேண்டாமா? கீசாக்கா இன்னும் கஞ்சிக்கு அடுப்பே பத்தவைக்கவில்லையாம்...//

    ஹா ஹா ஹா சே..சே..சே.. அவவுக்கு காலம் இன்று இப்பூடிச் ஜதீஈஈ பண்ணிப் போட்டுதே:).. இனி நான் போன பிறகுதான் வந்து அதிரடியைக் காணோம் என பலமா சவுண்டு விடப்போறா:)).. கீதாவையும் இன்னும் காணம்:))

    பதிலளிநீக்கு
  18. காலை வணக்கம்....அதிரா இங்கு நெட் வருது ஆனா ரொம்ப தொல்லை கொடுக்குது!! ஓடோடி வந்தேன் எபி கதவு இன்றும் அடம் பிடிச்சுருச்சு...எங்க பூஸாரைக் காணாமல்...

    காலைவணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, பூஸார்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. சரி சரி கீசாக்கா வந்தா அதிரா வந்து ரீ குடிச்சு கப் ஐயும் கழுவி வச்சிட்டு. பலமா சிரிச்சிட்டுப் போறா எனச் சொல்லிடுங்கோ ஸ்ரீராம்:)).. நாளைக்கு பார்ப்போம் என்ன நடந்திருக்கென:)..

    பதிலளிநீக்கு
  20. தளத்துக்கு முதலாவதா வந்த அதிரடிக்கு ஒரு வணக்கம் போட்டேன்..

    அது ஓடி ஒளிந்து கொண்டது..

    அதைக் கண்டு பிடிக்கத்தான் ஸ்ரீராம் Spam ஐ பாருங்கள் என்றேன்..

    பேபி பேத்தியை வரவேற்கும் தங்கள் வருகை வாழ்க...

    பதிலளிநீக்கு
  21. பூஸாருக்கு இன்று மணம் அங்கு எட்டிப் போயிருச்சு போல!!! மோப்பம் பிடிச்சு வந்துருச்சு பாருங்க!!

    கீதாவையும் இன்னும் காணம்:))//

    ஆ ஆதிரா நான் இங்கு அல்லாடிக் கொண்டிருக்கேன்...ஒரு கருத்து போடறதுக்குள்ள காவு போயுடுது....நேத்து காலைலருந்து ராத்திரி வரை ஒரு பதிவு படம் அப்லோட் ஆகி ஆகி ஆகி அகி ஆகி ஆகி.......இன்று காலைதான் அனுப்பவே முடிந்தது அது எபிக்கு....அதுவும் ரொம்பப் போராடி....நெட் வருது ஆனா தொல்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
  22. // சரி சரி கீசாக்கா வந்தா அதிரா வந்து ரீ குடிச்சு கப் ஐயும் கழுவி வச்சிட்டு. பலமா சிரிச்சிட்டுப் போறா எனச் சொல்லிடுங்கோ ஸ்ரீராம்:))..//

    ஓகே ஓகே சொல்லிடறேன்... சொல்லிடறேன்... போய்த்தூங்குங்க அதிரா...

    பதிலளிநீக்கு
  23. காலை வணக்கம் கீதா ரெங்கன்... நீங்க வர்றதுக்குள்ள அதிரா வந்து அமர்க்களம் பண்ணிட்டுப் போயிட்டாங்க!!!

    பதிலளிநீக்கு
  24. பூஸாரை இங்குப் பார்த்ததும் ஓடோடி வந்தேன் என் பூஸாரைக் காண!!! ஆனால் இந்த எபி சதீயீயீயீயீயீயீயீயீயீ செய்துடுச்சு!!!!

    பானுக்காவின் புதினா பேபி மணக்கிறாள் இங்கு!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. இங்கு என்ன அக்கிரமம்...இந்தப் பூனை - அது நான் தான் - கொஞ்சம் அசந்துட்டா உலகமே இப்படிய் இயங்குதே...ஆ அதிராவுக்கு மட்டும் ரீ யா....எபியில்? எனக்குக் காபி ப்ளீஸ்!!!! நோ கஞ்சி!!!! அது கீதாக்காவுக்கு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  26. அதிரா நீங்க வரும் போது நான் வர முடியாம போகுது....ஹைட் அண்ட் சீக்!!!!! ஹும்...

    சரி சரி நெல்லை வந்து பதிவ பத்திப் பேசாமா டாப்பிக் வேற எங்கோ போகுதுனு ரெண்டு தடவை தலைல குட்டுவார்!!!!

    நெல்லை இன்று திங்க பதிவு ஸோ திங்கற சாமான் எதுவா இருந்தாலும் பேசப்படும் ஹிஹிஹிஹி...அது கீதாக்காவின் கஞ்சியா இருந்தாலும் !!!!ஹா ஹா ஹா

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸவுன்ட் வரதுக்குள்ள நான் ஓடிடறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  27. இன்னைக்கு அதிரடி தான் ஃபர்ஷ்டு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நான் எழுந்ததே லேட்டு! ஆறுமணிக்குக் காஃபியும் ஆத்தலை, கடமையும் ஆத்தலை! அதான் பேசாம இருந்துட்டேன்! :)

    பதிலளிநீக்கு
  28. //கீசாக்காவின் துலா ராசி இன்று துலாவிலிருந்து தள்ளி விழுத்திட்டுதோ..// ஹையோ, ஒரு நாள் கடக ராசி, ஒரு நாள் தனுர் ராசி, இன்னிக்குத் துலாவா? நறநறநறாநற!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கீசாக்காவின் துலா ராசி இன்று துலாவிலிருந்து தள்ளி விழுத்திட்டுதோ// ஹாஹா எனக்கும் இதேதான் தோன்றியது.

      நீக்கு
  29. //நான் கீசாக்காவைப் பார்த்துக் குட்மோனிங் ஜொள்ளாமல் இண்டைக்கு நித்திரை கொள்ள மாட்டேன்ன்ன்ன்:))..// ஹாஹாஹாஹா, தூங்காமல் முழிச்சுட்டு இருக்கணும், ஆமா ஜொள்ளிட்டேன்! தூங்கினா! அம்புடுதேன்!

    பதிலளிநீக்கு
  30. என்னோட ராசிபலன் ஒண்ணும் ஏமாத்தலை அதிரடி, நானாத் தான் இன்னிக்கு வரலை! :)

    பதிலளிநீக்கு
  31. காலை வணக்கம். அட இன்று என்னோட ரெசிப்பியா..??

    பதிலளிநீக்கு
  32. பானுமதியின் குட்டி உ.கி. சப்ஜி கிட்டத்தட்ட ஆலு தம் செய்முறை மாதிரித் தான். அதிலே தக்காளி, வெங்காயம் சேர்த்து அரைப்போம். மி.பொ.த.பொ. சேர்ப்போம். க.ம.வும் சேர்ப்போம். இதிலே அதெல்லாம் இல்லை. தயிர் சேர்த்து இதே மாதிரி வெண்டைக்காயிலும் செய்யலாம். வெண்டைக்காயை ஒரு இஞ்ச் அளவுக்குக் கொஞ்சம் பெரிசா நறுக்கிக் கொண்டு உப்பு, மபொ தடவி எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துட்டு கிரேவியைச் செய்துக் கடைசியில் வெண்டைக்காயைச் சேர்ப்பார்கள். இங்கே தமிழ்நாட்டில் அந்த சப்ஜி ஓட்டல்களில் கேட்டோம் எனில் அதில் ஒரே ஒரு வெண்டைக்காய்த் துண்டு தான் இருக்கும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏமாத்துவாங்க! :)

    பதிலளிநீக்கு
  33. குட்டி உ.கியை நாலாக வெட்டாமல் முழுசாப் போட்டுடுவோம். போடுவதற்கு முன்னால் ஓர் ஊசியால் அல்லது சமையலறைக்கு எனத் தனியா வைச்சிருக்கும் குச்சியால் உ.கியைச் சுற்றிக் குத்தி விடணும். அப்போத் தான் கொதிக்கும் மசாலாவில் போட்டதும் எல்லாம் நன்கு உள்ளே புகுந்து உ.கி. சாப்பிடும்போது நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை செய்யும் பொழுது உ.கிக்கு ஊசி போட்டு விடுகிறேன்.

      நீக்கு
  34. பானுக்கா சூப்பர் ரெசிப்பி...மணக்குது...நான் உ கியை துண்டாக்காமல் முழுதாகப் பொரித்து சேர்ப்பேன் சில சமயம் அதில் ஃபோர்க்கால் தட்டைக்குக் குத்துவது போல் குத்திப் போட்டு..... அப்புறம் புதினா முழுவதும் அரைத்துச் செய்ததில்லை. கொத்தமல்லி புதினா ரெண்டும் கலந்து...க்ரேவி...ப்ரௌன் க்ரேவி, வொயிட் க்ரேவி, ரெட் க்ரேவி, க்ரீன் க்ரேவி என்று மகனின் பெயர் சூடலுக்கு ஏற்ப ஏதாவது ஒரு க்ரேவியில் பே உ கி யைப் பொரித்துப் போட்டு.செய்வதுண்டு....தம் ஆலுக்கும் பே உ கி. நீங்களும் செஞ்சுருப்பீங்களே பானுக்கா...

    ஸ்ரீராம் கூட முன்பு பே உ கி சப்ஜி ஒன்னு போட்டிருந்தார்...சூப்பரா இருந்துச்சு...உங்கள் ரெசிப்பி போல முழுவதும் புதினா போட்டுச் செய்துவிடுகிறேன்....

    "அம்மா ஒரு 1/2 கிலோ அந்தச் சின்னக் குழந்தை உருளைக் கிழங்கு பாக்கெட் போடுங்கம்மா...என்ன விலை?"...திருவான்மியூர் சந்தையில்...கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  35. பானுக்கா பே உ கி யை தயிரில் மேரினேட் பண்ணிச் செய்துருப்பீங்களே!!

    சேம்பு பிடித்தால் குட்டி குட்டி யா அழகா இருகுமே சேம்பு பொருக்கி எடுத்து அதையும் க்ரேவி செய்வதுண்டு. தயிரில் மசலா பொருள் எல்லாம் சேர்த்து மரினேட் பண்ணி வைத்துப் பொரித்து க்ரேவி...சூப்பரா இருக்கும்
    ஆர்பி க்ரேவி...

    கீதா

    பதிலளிநீக்கு
  36. மாரினேட் பண்ணி சேம்பு, காலிஃப்ளவர், வெண்டை, சேனையிலும் பொரித்துச் செய்யலாம்....நல்லாருக்கும்...

    உங்கள் ரெசிப்பியையும் இதெல்லாத்துக்கும் வெண்டை தவிர அப்ளை பண்ணி பார்த்துடறேன்....

    ஃபைனல் பார்க்க ரொம்ப அழ்கா இருக்க் பானுக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பாகற்காயைத்தான் தயிரில் மேரினேட் செய்து ரோஸ்ட் செய்வேன்.

      நீக்கு
  37. கீதாக்கா காப்பி ஆத்தியாச்சா??!!! கடமை ஆத்த வாங்க..

    ஆ இப்பத்தான் உங்க கமென்டே என் கம்ப்யூட்டர்ல வருது தெரியுது....

    // இங்கே தமிழ்நாட்டில் அந்த சப்ஜி ஓட்டல்களில் கேட்டோம் எனில் அதில் ஒரே ஒரு வெண்டைக்காய்த் துண்டு தான் இருக்கும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏமாத்துவாங்க! :)//

    ஆமாம் கீதாக்கா பெரிய மோசடி!! வெண்டை மட்டுமா பனீர் கூட சில ஹோட்டல்களில் மசாலா நிறைய இருக்கும் பனீரைத் தேடனும்...அது போல பனீர் வெஜ் க்ரேவிலயும் பனீர் ரெண்டே ரெண்டு துண்டு கூடக் கிடைக்காது அதுவும் சின்னதா இருக்கும்.....6, 7 பேரி சாப்பிடும் போது பனீர் கிடைப்பவர் அதிர்க்ஷ்டக்காரர்னு சொல்லிப்போம்....அதனால வீட்டுல நாம் செய்யறதுதான் நல்லாருக்கும்..வீட்டுல நான் செய்யும் போது எத்த்னை பேர் இருக்காங்கனு கௌன்ட் பண்ணிட்ரு எல்லாருக்கும் வரா மாதிரி போட்டுடறது....ஹா ஹா ஹா அப்பத்தான் எனக்கு இல்லை உனக்கு இல்லைனு வராது...

    கீதா

    பதிலளிநீக்கு
  38. படங்கள் மிகவும் தெளிவு செய்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  39. பேபி பொடடோ புதினா குருமா - பார்க்க நல்லாருக்கு. எனக்கு புதினா பிடிக்காத்துனால கொத்தமல்லி போட்டு செய்துதரச் சொல்கிறேன். இங்கு நான் குருமா பண்ணுவதில்லை. ரொம்ப அபூர்வமா ஹோட்டல்லேர்ந்து வாங்கிவருவேன்.

    பதிலளிநீக்கு
  40. பேபி பொடடோ புதினா குருமா - பார்க்க நல்லாருக்கு. எனக்கு புதினா பிடிக்காத்துனால கொத்தமல்லி போட்டு செய்துதரச் சொல்கிறேன். இங்கு நான் குருமா பண்ணுவதில்லை. ரொம்ப அபூர்வமா ஹோட்டல்லேர்ந்து வாங்கிவருவேன்.

    பதிலளிநீக்கு
  41. வெந்த கிழங்கை பொரித்துச் சேர்ப்பதுதான் என் வழக்கமும். பொதினா பச்சென்று கலர் அழகாக இருக்கிறது. மணமும் நிறைந்தது. அதிகம் கொதிக்க விட்டால் இந்த அழகான நிறம் போய்விடும். அதிக ஸாமான்கள் சேர்க்காமல், ஸிம்பிளாக,ருசியான,அழகான குறிப்பு. படங்களும் அழகு. இன்னும் சற்று எண்ணெய் சேர்த்து,வெந்தஉருளைக்கிழங்கைச் சிறிது வதக்கியும்,பிறகு புதினா விழுதைச் சேர்த்தாலும் நன்றாக இருக்கும். உங்கள் குருமாரெடி. சாப்பிட வருகிறோம். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா! கீதா ரங்கன் சொன்னதைத்தான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்.நானும் முயற்ச்சிக்கிறேன்.

      நீக்கு
  42. பொட்டேடோ புதினா குருமா, படங்கள் அழகு.
    செய்முறை குறிப்பு அருமை செய்து பார்க்கிறேன் .

    பதிலளிநீக்கு
  43. ஆஹா நெல்லைத்தமிழன் கொமெண்ட் பார்த்து எனக்கும் ஐடியா வந்திட்டுது.. கொத்தமல்லி + பன்னீர் இருக்கு.. நாளைக்கு செய்திடலாமே... கொத்தமல்லி சட்னி வீட்டில் சாப்பிடுவினம்.. ஆனா கறி என்னாகுமொ எனப் பயம்:).. இருபினும் ட்ரை பண்ணிடலாம்.. புதினா சிக்கின் சாப்பிட்டிருக்கிறோம் நண்பர்கள் வீட்டில் சூப்பரா இருந்தது..

    பதிலளிநீக்கு
  44. //Thulasidharan V Thillaiakathu said...
    பூஸாரை இங்குப் பார்த்ததும் ஓடோடி வந்தேன் என் பூஸாரைக் காண!!! ஆனால் இந்த எபி சதீயீயீயீயீயீயீயீயீயீ செய்துடுச்சு!!!! //

    ஐ மிஸ்ட்ட் யூஊஊஊஊஊஊஊஉ கீதா.. ஜாமத்தில ஒரு கும்மி போடலாமே நீண்ட நாளாச்சே என எட்டிப் பார்த்தேன்... ஹா ஹா ஹா லேடீஸ் ஆரும் இல்லாததால் ரொம்ம்ம்ம்ம்ம்ப ஷையாகிட்டேன்ன்ன் ஹா ஹா ஹா அட அதிராவுக்கும் ஷை வருமா என நினைப்பது புரியுது கர்ர்ர்ர்ர்ர்:))..

    பதிலளிநீக்கு
  45. ///Geetha Sambasivam said...
    என்னோட ராசிபலன் ஒண்ணும் ஏமாத்தலை அதிரடி, நானாத் தான் இன்னிக்கு வரலை! :)///
    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)) கீழே விழுந்தாலும் மூக்கில மண் படாத கதையாக் கிடக்கே இக்கதை:)).. சரி சரி இன்னொரு நாள் பார்த்திடலாம்:).. நீங்க கஞ்சி வைக்காமல் ஓடி வந்திடோணும்:))

    பதிலளிநீக்கு
  46. ஆஹா !! பானுக்கா சூப்பரா இருக்கே பா .உ .கி .கிரேவி :)
    நான் என்னிக்கும் பாப்பாக்கு தோல் உரிக்க மாட்டேன் வலிக்கும்ல :)
    அப்டியே தோலோட போட்டு செய்வேன் இங்கே .இந்த புதினா காம்பொ செஞ்சதில்லை ராயல் ஜெர்சில செய்யலாம்னு நினைக்கிறன் .


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் என்னிக்கும் பாப்பாக்கு தோல் உரிக்க மாட்டேன் வலிக்கும்ல// ஹா ஹா.
      Try and let me know.

      நீக்கு
  47. ஷையாகிட்டேன்ன்ன் ஹா ஹா ஹா அட அதிராவுக்கும் ஷை வருமா என நினைப்பது புரியுது கர்ர்ர்ர்ர்ர்:))..//

    என்னாது அதிராவுக்கு ஷையா!!! பூசார் என் கட்சினல்லோனு நினைச்சேன்... சைய்ய சைய்ய சையய்யா சைய்யா நு பாடி ஆடும் நமக்கா ஷைய்யு!!?!? நோ நோ அதிரா..நோ!!! உங்க ஜாமத்துல வந்தா ஸ்ரீராம் சொன்னார் அப்பத்தான் நீங்க அதகளம் பண்ணிட்டுப் போனீங்கனு..நானும் பார்த்தென்..சரி விடுங்கோ..கும்மிப்பாட்டு பாடுவோம்...ஆஆஆஆஆஆஆ இஞ்சபாருங்கோவேன் அதிராஉங்களுக்குக் கும்மி அடிக்க பாட்டு பாடினா என் நெட்டுக்குப் பொறாமை...போயிந்தி!!! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!

    இனி அது வரும் போதுதான் இது வெளியாகும்....ஹா ஹா ஹா ஹா

    அதிரா பனீர் கொத்தமல்லி க்ரேவி சூப்பரா இருக்கும் அது போல உருளையும் கொத்தமல்லி அரைச்சு செஞ்சா சூப்பரா இருக்கும்...பானுக்கா கொடுத்திருப்பது போல்...

    கீதா

    பதிலளிநீக்கு
  48. வயசான காலத்துல வாயக் கட்டலாம் பார்த்தா விதவிதமா ரெசிபி. உடம்பு தாங்காதுப்பா இருந்தாலும் நன்று

    பதிலளிநீக்கு
  49. நல்ல குறிப்பு. இங்கே வடக்கில் எல்லாவற்றிலும் ஆலு தான். புதினா/கொத்தமல்லியுடன் இப்படி உருளை சேர்த்து செய்ததுண்டு.

    பதிலளிநீக்கு
  50. ///Bhanumathy Venkateswaran said...
    உருளை கிழங்கை பார்க்க அவிச்ச முட்டை போல் தெரிகிறதா? அபசாரம்!அபசாரம்! வாயை மவுத் வாஷர் போட்டு கழுவுங்கள்.. (ஹா ஹா)///

    ஹா ஹா ஹா பெரி ஃபுரூட் ரீ போட்டுக் கழுவிட்டேன்ன்ன்ன் ஸ்ஸ்ஸ ஊஊஊஊஊஉ வாசம் வருதோ பானுமதி அக்கா?:)...

    ஆங்ங்ங்ங்ங் கீதாவுக்கு திரும்படியும் நெட்டு போயிந்தி?:).. நம்மை விட ஷை ஆகுதே கீதா வீட்டு நெட்:))

    ///Angel said...
    ஹ .மி .க .4 யூ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வர வர எல்லோரும் கெட்ட வார்த்தையிலேயே பேசுறாங்கோ:) எல்லாத்துக்கும் காரணம் ஸ்ரீராம் தேன்ன்ன்ன்:) ஹையோ அவர் இப்போ புதினா பேபிக் கனவோடு ஸ்லீப் பண்ணுவார் எனும் தெகிறியத்தில எழுதிட்டேன்ன் மீ ரன்ன்னிங்யா:))

    பதிலளிநீக்கு
  51. ///Angel said...
    ஹ .மி .க .4 யூ///

    ஹலோ மியாவ் கர்ர் 4 யூ :)

    பதிலளிநீக்கு
  52. அருமையா வந்திருக்கு பானுமதி.
    பேபி பொடேட்டோ ஆல்வேய்ஸ் வெல்கம்.
    நன்றி மா.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!