திங்கள், 26 பிப்ரவரி, 2018

"திங்க"க்கிழமை : கமலா ஆரஞ்சு தோல் பச்சடி- பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி




கமலா ஆரஞ்சு தோல் பச்சடி  

தேவையான பொருட்கள்:

கமலா ஆரஞ்சு பழத் தோல்(பழம் சற்று பெரிதாக இருந்ததால் நான் ஒரு பழத்தின் தோலை மட்டும் எடுத்துக் கொண்டேன். சிறியதாக இருந்தால் இரண்டு பழங்களின் தோலை எடுத்துக் கொள்ளலாம்)

பச்சை மிளகாய்   -  இரண்டு

புளி                        -  சிறிதளவு

வெல்லம்.           -  ஒரு சிறு கட்டி

உப்பு          - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கமலா ஆரஞ்சு தோலின் உள் புறத்தை நார்கள் இல்லாமல் சுத்தம் செய்து கொண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  




பச்சை மிளகாயை நீள வாக்கில் கீறி வைத்துக் கொள்ளவும். 




ஊற வைத்த புளியை கெட்டி கரைசலாக கரைத்துக் கொள்ளவும். 




ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு போட்டு அது வெடித்ததும் பொடியாக நறுக்கப்பட்ட கமலா ஆரஞ்சு தோலில் மற்றும் ப.மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் புளி கரைசலை விட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். புளி பச்சை வாசனை போக கொதித்ததும் வெல்லத்தை சேர்த்து அது கரையும் வரை கொதிக்க விடவும். இப்போது வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம். 



எல்லாம் சேர்ந்து கொதித்து ஒத்தார் போல் வந்ததும் இறக்கி விடவும். 




புளிப்பு, இனிப்பு, காரம் எல்லாம் சேர்ந்து ஒரு அலாதி சுவை கொண்ட பச்சடி இது.  






புளி சேர்க்காத பொரித்த குழம்பு, மிளகூட்டல் போன்றவைகளுக்கு நன்றாக இருக்கும்.

43 கருத்துகள்:

  1. ஆஜர் காலை வணக்கம் ஸ்ரீராம்.... துரை அண்ணா...கீதாக்கா
    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  4. இன்று வழக்கம் போல் டைம்..போல இருக்கே..ஹை பானுக்கா..ரெசிப்பி...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  6. அக்கா கீதா தான் வெளியூருக்குப் போய்ட்டாங்களாமே!...

    சொல்லலையா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ கீதாக்கா வெளியூரா.....நேற்று நான் வலப்பக்கம் வரலையே அப்புறம் அதான் தெரிலை போல..துரை அண்ணா....

      நீக்கு
  7. இந்த ஆரஞ்சு பழத்தோல் பச்சடி எங்கோ சாப்பிட்டிருக்கிறேன்..

    இருந்தாலும் விடக்கூடாது...

    பதிலளிநீக்கு
  8. வழக்கம்போல் டைம் இருப்பதெல்லாம் சட்டென கண்டுபிடிக்க முடிகிறதா...? அட!

    பதிலளிநீக்கு
  9. கீதா அக்கா வெளியூரா? சொல்லவே இல்லையே? முன்னாடி எல்லாம் எங்கிட்ட சொல்வாங்க...!

    பதிலளிநீக்கு
  10. பானுக்கா...சூப்பர்.....ரெசிப்பி...

    என் திருமணத்திற்கு முன் சென்னையில் உறவினர் வீட்டில் இதைச் சாப்பிட்டுவிட்டு வந்த என் கசின்....என்ன8டம் ஆரஞ்சு தோல் வைச்சு பெரிம்மா ஏதோ பண்ணிருந்தா..கிட்டத்தட்ட மாங்கா பச்சடி போலனு சொன்னான்..என்ன8டம் செய்யச் சொன்னான்..எங்கள் வீட்டில் எக்ஸ்பிரிமெண்ட் செய்யும் ஆள் நான் எனவதால்......அப்போ எனக்கு ஆச்சரியம்...ஆரஞ்சு தோலானு....கசக்காதோனு...ரெண்டாவது ஆரஞ்சு தோலுக்கு எங்க போக....அப்பல்லாம் வீட்டுல யாராவது விருந்து வந்தால் தான் பழங்கள்...அப்புறம் இந்திராகாந்தி பாட்டியின் கண்ணில் படாமல்....செய்யணும்.....கூட்டுக குடும்பம்...செய்ய முடியலை...சென்னை வந்தபின் அதே பெரிமாவிடம் கற்று கொண்டேன்.....

    அவங்க இன்னொன்னும் செய்வாங்க ஆரஞ்சு தோல் வைத்து...தொக்குன்னு சொல்வாங்க...வரேன்...சொல்றேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொக்கு செய்வதற்கு புளி சேர்க்க கூடாது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  11. இதுவரை கேள்விப்ப்டாத சமையல் குறிப்பாக இருக்கிறது நேரம் கிடைத்தால் செய்து பார்க்க வேண்டும் குறிப்பை பகிர்ந்த பானுமதி அவர்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை மதுரை சகோ வாங்க..வாங்க....பார்த்து கொஞ்ச நாளாச்சு.....உங்க வீட்டுலயும் அப்பத்தான் தலை காட்டறீங்க.... ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    2. @மதுரை தமிழன்: நன்றாக இருக்கும் முயற்சிக்கவும்.

      நீக்கு
  12. அட... இது வித்தியாசமாக இருக்குதே.... மாங்காய் பச்சடிபோல இதுவும் நல்லா இருக்கும்னு தோணுது. பார்க்கலாம் எப்போ இது செய்துபார்க்க நேரம் கிடைக்குதுன்னு.... இங்கு கசக்காத பெரிய எலுமிச்சை தோல் உண்டு, நல்ல ஆரஞ்சு தோலும் உண்டு. அதிலும் நல்லாத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை நெ.த. எலுமிச்சை தோல் கசக்கும். இது மர்மலேட் சுவை கொடுக்கும்.

      நீக்கு
  13. அட... இது வித்தியாசமாக இருக்குதே.... மாங்காய் பச்சடிபோல இதுவும் நல்லா இருக்கும்னு தோணுது. பார்க்கலாம் எப்போ இது செய்துபார்க்க நேரம் கிடைக்குதுன்னு.... இங்கு கசக்காத பெரிய எலுமிச்சை தோல் உண்டு, நல்ல ஆரஞ்சு தோலும் உண்டு. அதிலும் நல்லாத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  14. முன்பு செய்து இருக்கிறேன். இப்போது தோல்கள் குப்பை கூடைக்கு போய் கொண்டு இருக்கிறது.
    உங்கள் பதிவு படித்தவுடன் மீண்டும் செய்ய ஆசை வந்து விட்டது. நன்றி.
    படங்கள் அருமையாக இருக்கிறது.

    முன்பு தலைக்கு தேய்த்து குளிக்க வீட்டில் தயார் செய்வேன்..
    சீகைக்காயுடன், ஆரஞ்சு தோல், எலுமிச்சை தோல் எல்லாம் வீணாக்காமல் சின்ன சின்னதாய் ந்றுக்கி காயவைத்து பொடிசெய்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா! நாங்களும் ஒரு காலத்தில் சிகைக்காய் பொடி அரைக்கும் பொழுது, எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல் எல்லாம் சேர்ப்போம். ஷாம்பூவுக்கு மாறிய பிறகு எல்லாம் போயாச்சு. முடியும் கொட்டியாச்சு.

      நீக்கு
  15. பதில்கள்
    1. பழசுதான். அம்மாவிடம் சொல்லுங்கள், செய்து தருவார்கள்.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    கமலா பழத்தோல் பச்சடி படங்களுடன் செய்முறை விளக்கங்களுடன் நன்றாக இருந்தது. அருமை. நானும் இதை செய்திருக்கிறேன்.(எப்போதாவது) அழகான படங்களுடன் பார்த்ததும், அடுத்தமுறை பழம் வாங்கும் போது செய்ய வேண்டும் என எண்ணம் வருகிறது.இந்த செய்முறையை பகிர்ந்தளித்த பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு நன்றிகள்.

    இரண்டு நாட்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை.இன்றைய திங்கள் பதிவுக்கு "நான்" இல்லாது எப்படி?

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. ஆவ்வ்வ்வ்வ் புது விதமாக இருக்கே... எனக்கு ஒரேஞ் இன் தோல் மணத்தாலே பிடிக்காது.. ஆனா ஒரேஞ் பிடிக்கும்.

    செய்ய விருப்பமாக இருக்கு.. எப்பவுமே புளிப்பு இனிப்பு சேர்ந்த சுவைதான் எனக்கு மிகவும் பிடிக்கும். ஈசியான குறிப்பாகவும் இருக்கே. அது சரி அதென்ன கமலா ஆரஞ்சு?:).. இனி யூக்கே ஒரேஞ் க்கு அதிரா ஒரேஞ் :) எனப் பெயர் வைக்கச் சொல்லி எங்கட குயின் அம்மம்மாவைக் கேட்கப் போகிறேன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்ன கமலா ஆரஞ்சு?இதே கேள்வி எனக்கும் எழுந்தது. யாராவது பதில் சொல்கிறார்களா என்று பார்க்கலாம்.

      நீக்கு
  18. marmalade னு இங்கே ஸ்வீட் சேர்த்து செய்வாங்க ஆனா அது கொஞ்சம் கசக்கும் .இந்த பச்சடி ட்ரை பண்ணனும்

    பதிலளிநீக்கு
  19. ஹலோவ்வ்வ் மியாவ் :) கமலா என்பவர் மண்ணு கொத்தி விதை போட்டு ஆரஞ்சு செடி நட்டு வளர்ந்து அந்த பழத்தை ம்,மார்க்கெட்டில் கூவிக்கூவி விற்றார் அதனால் அந்த பெயர் ஆரஞ்சுக்கு வந்தது :) நீங்களும் அப்படி செய்திட்டு சொல்லுங்க இங்க பேரை பரிந்துரைக்கிறேன் :)
    சும்மா உக்காந்த இடத்தில இருந்து கேட்டா உங்க நேமை சூட்ட முடியாது

    பதிலளிநீக்கு
  20. Angel said...
    ///சும்மா உக்காந்த இடத்தில இருந்து கேட்டா உங்க நேமை சூட்ட முடியாது///

    ஹா ஹா ஹா கர்:) நான் எங்கெ ச்ச்ச்ச்சும்மா உட்காந்தேன்ன்:) நான் ஒரேஞ் சாப்பிடுறேனெல்லோ:) அந்த சேவைக்காகவே நேம் யூட்டலாமே:))..

    மாமலேட்:) எனக்கு பிடிப்பதில்லை அஞ்சு.. ஒரு வித தோல் மணம் வரும்:)..

    பதிலளிநீக்கு
  21. ஆரஞ்சு பழத் தோலில் பச்சடி. இங்கே நிறைய கிடைக்கும். கின்னு என்ற பழம் கூடக் கிடைக்கும். அதிலும் செய்ய முடியுமா எனப் பார்க்கிறேன்.

    புதியதோர் குறிப்பு - நன்றி.

    பதிலளிநீக்கு
  22. ரொம்ப லேட்டா வரேன். புளிப்பு,கார,இனிப்புடன் ஆரஞ்சுத்தோலின் சிறுகசப்பும் சேர்ந்து, வாஸனையுடன் கூடிய பச்சடி. வத்தக்குழம்பில் கூட சிறிது பழத்தோல் வதக்கிச் சேர்க்கலாம். வாஸனையாக இருக்கும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  23. பச்சடி என்றில்லாவிட்டாலும் கமலா ஆரஞ்சு வாங்குகிற தருணங்களில் தோலை வேஸ்ட் ஆக்காமல் அவசர அடிக்கு
    ஊறுகாய மாதிரி நறுக்கிப் போட்டு உபயோகிக்கலாம். பிரிட்ஜில் வைத்து விட்டால் நாலைந்து நாட்களுக்குக் கூட வரும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!