Saturday, February 3, 2018

மயானத்தை பூந்தோட்டமாக மாற்றிய ப்ரவீணா


1)  நிறைய நிறைய சம்பளம் வாங்கும் இந்த கிரிக்கெட் வீரர்கள் மறைவில் நல்லவை என்ன செய்கிறார்கள் என்பவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டுமே...  சொல்லப் பட்டிருப்பவற்றில் காம்பிர் கார்கில் உட்பட்ட போர்களில் மரணமடைந்த வீரர்களின் குழந்தைகளை மேற்படிப்பு, எதிர்காலத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் செய்திகளையும் படித்திருக்கிறேன்.

2)  குப்பை மேடாக இருந்த மின் மயானத்தைப் பூந்தோட்டமாக இவர் மாற்றியிருக்கிறார். “எங்கள் தொண்டு நிறுவனத்தின் முயற்சியால்தான் இது சாத்தியமானது. சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது பலர் இறந்து போனார்கள். அப்போது சில மின் மயானங்களில் வெள்ள நீர் புகுந்துவிட்டது.

இதனால் எங்கள் மயானத்தைக் காலை ஏழு மணியில் இருந்து இரவு எட்டு மணி வரை சிறப்பு அனுமதி பெற்று திறந்துவைத்திருந்தோம். அப்போது ஒரு நாளைக்கு சுமார் 7, 8 உடல்களைத் தகனம் செய்யக் கொண்டுவந்தார்கள். சில அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களுடைய செல்வாக்கை மயானத்தில் பயன்படுத்த நினைத்து என்னிடம் வாதம் செய்வார்கள். அவர்களை எல்லாம் சமாளித்து அன்றைய நாளை கடப்பது கடினமாக இருந்தது” என்கிறார் பிரவீனா.தன் மீது ஏவப்பட்ட கேள்விகளையும் சமூகம் கட்டமைத்து வைத்துள்ள கட்டுப்பாடுகளையும் தகர்த்துத் தற்போது தேசிய விருது பெற்றிருப்பதைப் பெரிய அங்கீகாரமாகவே அவர் பார்க்கிறார். “எந்தச் சூழ்நிலையிலும் வேலையை விட வேண்டும் என நினைத்ததில்லை. மற்ற வேலைக்குச் சென்றிருந்தால் நான் இந்த அளவுக்குச் சமூகத்தால் கவனிக்கப்பட்டிருப்பேனா எனத் தெரியாது. இந்த உயர்வுக்குக் காரணம் மயான பூமிதான். தேசிய விருதைப் பெறுவதற்காக டெல்லி சென்றது உற்சாகமான அனுபவமாக இருந்தது. என்னைப் போல வெவ்வேறு துறையில் முதல் பெண்ணாகச் சாதித்த சுமார் 112 பெண்கள் அங்கு ஒன்றுகூடியிருந்தார்கள். என் மகனின் பாடப் புத்தகத்தில் படித்த பச்சேந்தரி பால் நான் தங்கியிருந்த அறைக்கு எதிரில் தங்கியிருந்தார்.

3)  "அப்போதான் ஆவின் நிறுவனத்துக்குப் பால் விநியோகம் செய்யலாம்னு தோணுச்சு” என்று சொல்லும் தேவி.  விஸ்வரூபம் எடுக்கும் பெண் சக்தியும் தன்னம்பிக்கையும்.  

4)  திருவண்ணாமலை மணிமாறன்.

5)  வழக்கம்போல அடிபட்டவரை ஊர் ஜனங்கள் மொத்தமும் வேடிக்கை பார்த்து, போட்டோ எடுத்துக் கொண்டிருக்க, மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டது ரஞ்சனி மட்டுமே...  (பதிவு உதவிக்கு நன்றி துளஸிஜி)
6)  

21 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க...

Thulasidharan V Thillaiakathu said...

காலை வணக்கம் அனைவருக்கும், துரை செல்வராஜு அண்ணா, ஸ்ரீராம்...

கீதா

துரை செல்வராஜூ said...

ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

துரை செல்வராஜூ said...

அன்பின் நல்வரவு..

Thulasidharan V Thillaiakathu said...

வரும்...வராது என்று இருந்த இணையம் இப்ப சுத்தமாக இல்லை...இன்னும் சரியாகவில்லை ...,,😢

கீதா

Geetha Sambasivam said...

ஹெஹெஹெஹெ, மறந்தே போயிட்டேன். கணினியைத் திறக்கும்போதே ஆறு மணி ஆயிடுச்சு. நெ.த.வோட கருத்தைப் பார்த்துட்டு இங்கே வந்தேனா, நினைப்பு வந்தது. எப்படியும் தாமதம் தான். பதிவை அப்புறமா வந்து படிச்சுக்கறேன். :) ஶ்ரீராம் எந்த ஊருக்குப் போயிருக்கார்?

துரை செல்வராஜூ said...

ஸ்ரீராம் தங்கள் பயணம் எப்படி?...

இங்கே கோலப்போட்டி, கும்மி, கோலாட்டம் முதற்கொண்டு உரியடி வரை நடத்தப்பட்டது...

விரைவில் அழகிய படங்களையும் இனிய கட்டுரைகளையும் வெளியிட்டு எல்லாரையும் பரவசப்படுத்தவும்...

KILLERGEE Devakottai said...

பிரவீணா பிரமிக்க வைத்த பெண்மணி.
அனைவருக்கும் வாழ்த்துகள்

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்

Anuradha Premkumar said...

அனைத்தும் உயரிய பணிகள்...

திருமதி பிரவீனா அவர்களின் பேட்டியை இந்த வாரம் ஹிலோ fm இல் கேட்டு வியந்தேன்....

புலவர் இராமாநுசம் said...

வாழ்க அனைவரும் பல்லாண்டு

கோமதி அரசு said...

அனைவரும் தன்ன்ம்பிக்கையும் மனித நேயம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்!

Geetha Sambasivam said...

கிரிக்கெட் வீரர்களும் சேவை செய்வது (நிஜமாக இருந்தால்) மகிழ்ச்சியே! ஆவின் பால் விநியோகம் செய்யும் பெண்மணியும், திருவண்ணாமலை மணிமாறனும் போற்றுதலுக்கு உரியவர்கள்! ரஞ்சனி ஏற்கெனவே படிச்சாச்சு.

ப்ரவீணாவின் தொண்டு ஒப்பற்றது! ஈடு இணையில்லாதது!

Geetha Sambasivam said...

ஆனால் குஜராத் ஜாம்நகரின் மயானம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். நாங்க பார்த்தது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் என்றாலும் அதற்கும் முன்பிருந்தே அது மிக அழகாகப் பராமரிக்கப்பட்டிருக்கும்.வழியில் இருபக்கமும் பகவத்கீதை, மஹாபாரதம், ராமாயணம் ஆகியவற்றின் முக்கிய ஸ்லோகங்களும், அவற்றை ஒட்டிய சித்திரங்கள், சிற்பங்களுடன் (புடைப்புச் சிற்பமாக இருந்த நினைவு) காணப்படும். வழியெல்லாம் சுத்தமாக இருக்கும். பொதுவாக குஜராத்திலேயே குப்பைகள், சாக்கடைகள் எனக் காண முடியாது. ஜாம்நகர் குடிநீர்ப் பற்றாக்குறை உள்ள மாவட்டம். ஆனாலும் நம் தமிழகம் போல் அங்கே தண்ணீருக்கு அடிச்சுக்கறதில்லை! சண்டை எல்லாம் போட்டுக்க மாட்டாங்க! :))))

வெங்கட் நாகராஜ் said...

நல்ல மனம் கொண்ட மனிதர்கள்.... அனைவருக்கும் பாராட்டுகள்.

saamaaniyan saam said...

வணக்கம் நண்பரே, நலமா ?

இன்றைய சுயநல உலகத்தை " மனிதநேய பூந்தோட்டமாக " மாற்றும் இவர்களின் பணி போற்றுதலுக்குறியது.

நன்றி
சாமானியன்

Angel said...

அனைத்தும் அருமையான தகவல்கள் .பகிர்வுக்கு நன்றி

Ilangovan Rangarajan said...

உங்கள் இந்த பணி, பாசிட்டிவ் செய்திகள் , மனதுக்கு இதமானதுடன் ,
மற்றவரையும் நற்செயல் புரிய தூண்டும் களமாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் .
இளங்கோவன்

நெல்லைத் தமிழன் said...

சிலவற்றை முன்னமே படித்திருக்கிறேன். அனைவரும் பாராட்டுக்குறியவர்கள்.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

பிரவீணா போன்ற பெண்மணிகள் தான்
பெண்ணினத்தின் வழிகாட்டிகள்
எல்லா வழிகாட்டிகளையும் பாராட்டுவோம்!

Thulasidharan V Thillaiakathu said...

கிரிக்கெட் வீரர்களும் நல்லது செய்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும் தான்....ஏனென்றால் எப்போதும் அவர்களைத் திட்டத்தானே செய்கிறோம்..பொதுவாக..

ஆவினுக்கே ஆவின் பால்!! வாவ்! பெண் சக்தி பெரிதுதான்..தேவிக்கு குறிப்பாக அவர் பிற பெண்களையும் ஊக்குவிப்பதற்குப் பாராட்டுகள்!

மணிமாறனுக்கும் பொக்கே!

இங்கு துளசியின் பதிவையும் சேர்த்தமைக்கு மிக்க நன்றி சொல்லச் சொன்னார்...

கீதா

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!