Sunday, February 4, 2018

பாம்புப் பாதையில் பரவசப் பயணம்


ஹர்பஜன் மந்திரிலிருந்து கேங்டாக் வரும் வழியில் கடந்து வந்த பாதை.  சுத்தமான மாநிலம் என்று விருது வென்ற சிக்கிம் மாநிலம்.  பிரித்து வேறு இடத்தில கட்டி விடக்கூடிய கட்டிடங்கள்..."அடடே...  நாம வர்றதுக்கு தோரணம் எல்லாம் கட்டியிருக்காங்க போல...!""கூடாரம் கட்டியது போன்ற குடியிருப்புகள்...   குடியிருப்புகள்தானா?" பின்னணியில் புகை மூட்டமாய் மேகங்கள்....


"வரும் வழியில் மலை வளைவில் ஒரு குடிசை அருகில் வரும்...."  


இங்கிருக்கும் கட்டிடங்கள் எல்லாம் வித்தியாசமாய் இல்லை?மின் கோடுகள்!மலைக்காட்சி...   மாலைக்காட்சி அல்ல!நீரால் அரிக்கப்பட்ட மலை சிறு பாறைகளாய்..  மனிதன் தவறு செய்தால் கட்டிடங்கள் தலையில் கு(கொ)ட்டுமோ!பிரியும் சாலையில் உயரும் பாதை...  ("அங்கன ஏதோ குப்பையை எரிக்கறாங்க போலவே....")தனித்தனியாய்ப் பார்த்தவை மொத்தமாய்...'அவை' தரையில் விரிக்கப்பட்ட ராட்சஸப் போர்வைகள் அல்ல....
ஹி....  ஹி...   ஹி...  சுவர்கள்!


ஆறு...  கரைகள்...  பின்னணியில் தெரிந்தும் தெரியாமலும் மலை...  எங்கே என் தூரிகை?


பக்கத்திலேயே பாம்பாய் வளைந்து செல்லும் பாதையில் பரவசமாய்ப் பயணிக்கலாம்...

20 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க..

துரை செல்வராஜூ said...

ஸ்ரீராம் மற்றும் கீதா / கீதா அனைவருக்கும் வணக்கம்..

துரை செல்வராஜூ said...

குளுகுளு.. என அழகிய படங்கள்..

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் துரை செல்வராஜு ஸார்.

துரை செல்வராஜூ said...

6.00 மணிக்கு எழுதியதைக் காணவில்லையே...

துரை செல்வராஜூ said...

என்ன இன்னும் கோழி கூவவில்லையா?.. தூக்கம் கலையவில்லையா!...

Bhanumathy Venkateswaran said...

காலை வணக்கம்!

Bhanumathy Venkateswaran said...

மின்சார கம்பிகளை மின் கோடுகள் என வர்ணித்திருப்பது👌👌

KILLERGEE Devakottai said...

படங்களோடு வர்ணனைகளும் அருமை ஜி

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள். பெருமாலும் பனிபொழியும் இந்திய நகரங்களில் இப்படியான வீடுகள் தான்.

அனைத்து படங்களையும் ரசித்தேன்.

நெல்லைத் தமிழன் said...

படங்கள் எப்போதும்போல் நல்லா இருக்கு. எனக்குத்தான் பார்த்த படங்களே மீண்டும் மீண்டும் வருதோன்னு சந்தேகம் வருது.

கரந்தை ஜெயக்குமார் said...

இங்கு வாழும் மக்களின் நிலையினை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது
படங்கள் அருமை

இளமதி said...

அனைவருக்கும் அன்பு வணக்கம்!

மலையோரம் வீசும் காற்று
மனதோடு பேசும் பாட்டுக் கேட்குதா? கேட்குதா?
என்ற பாடல் இப்போது சட்டென்று என் நினைவுக்கு வருகிறது சகோ!..

அழகான காட்சிகள்! மலைக்காட்சிகள் எனக்குள் ஏதோ இனம்புரியா மகிழ்ச்சியை உண்டாக்குகிறது!
அழகு!.. படங்களும் துல்லியம்....
மலைச் சரிவில் அந்த வீடுகள் உடைந்த பாறைக்களுக்குக் கீழே... பயத்தை உண்டாக்கியது.

சுவிற்சலாந்தில் மலைகள் அதிகம். மலைச்சரிவோடு போக்குவரத்து வீதிகள் போட்டிருப்பார்கள்.
அங்கும் இப்படித்தான் சிறு சிறு பாறைக்குன்றுகள் இடைக்கிடை மலைச்சரிவிலேயே இருக்கும்.
ஆனாலும் அவை வீதியிலோ அருகில் இருக்கும் குடிமனைகளிலோ வீழ்ந்திடாதவாறு ராட்சத நெற் அந்த மலைச்சரிவில் ஓரளவிற்கு அவற்றை மூடிப் போட்டுப் பாதுகாப்புச் செய்திருப்பார்கள்.

ரசனைக்குரிய நல்ல படப்பகிர்வு சகோ!
நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்!

athiraமியாவ் said...

என்னைத் தேம்ஸ்ல தள்ளினாலும் பறவாயில்லை:)) ஜொள்ள வந்ததை ஜொள்ளியே தீருவேன்ன்ன்ன்ன்:)).. இனிமேல் இந்த ஆசிரியரை தயவு செஞ்சு எங்குமே ரூர் போயிட வேண்டாம் என:)) மிக மிக தாழ்மையாக:) வேண்டுகோள் விடுக்கிறேன்ன்ன்ன்:))..

ஹையோ எதுக்கு இப்போ கலைக்கிறீங்க:)) அப்பூடி என்ன டப்பா ஜொள்ளிட்டேன்ன்ன்ன்:))..

ஆனாலும் இன்றைய படங்கள் அழகு..

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

பல நூறு கவிதைக்கு ஈடாக
ஒரு சில படங்கள்
அருமை
இற்கை அழகு என்னை ஈர்த்தது.

Geetha Sambasivam said...

இன்னைக்குக் காலம்பர வரவே முடியலை! நாளைக்கு எப்படியோ! படங்கள் எல்லாம் அருமை. இம்மாதிரிக் கட்டிடங்களில் தான் திருக்கயிலை யாத்திரை போனப்போ தங்க வைப்பார்கள்! மானசரோவரில் மட்டும் நல்ல கட்டிடம். நம்ம ரிஷிகேஷ் துறவி அதான் கங்கைக்கு ஆரத்தி எடுப்பாரே! பெயர் மறந்துட்டேன்! அவங்க ஆசிரமம் சார்பில் கட்டினது!

Geetha Sambasivam said...

அதிரடி, என்ன நேத்தைய பதிவில் ஆளையே காணோம்? :)))))

காமாட்சி said...

அழகிய படங்கள்,தலைப்பு வர்ணனையாக இருக்கிறது. அன்புடன்

கோமதி அரசு said...

அடிக்கடி மலைச்சரிவு ஏற்பட்டு பாதையில் விழும், குடியிருப்புகள் மேலும் விழும் தான்.
அங்குள்ளவர்கள் கஷ்டத்தோடு தான் வாழ்கிறார்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

படங்கள் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கின்றன. செல்ல முடியாத இடங்கள் எல்லாம் படங்களாய் காணக் கிடைக்கின்றது.

கீதா: படங்கள் எல்லாம் அழகாய் இருக்கின்றன. பாதைகள் என்ன அழகு வளைந்து வளைந்து...வீடுகளும் மிகவும் வித்தியாசம் தான் ஆம் அங்கெல்லாம் பனி பொழியும் என்பதால் வீடுகள் பொதுவாக இப்படித்தான் இருக்கின்றன....கமென்ட்ஸும் நல்லாருக்கு. இங்கு வாழ்பவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? அங்கு அருகில் எதுவும் இருப்பது போல் இல்லை...எப்படி வாழ்கிறார்கள் என்றும் தோன்றுகிறது...

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!