Wednesday, March 14, 2018

புதன் புதிர் : என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ.......

சும்மா ஒரு வித்தியாசமான முயற்சி!  


  1)   ஒரு வாரம் பற்றிச் சொல்லும் படத்தின் நாயகியின் இளைய சகோதரி கதாநாயகியாக அறிமுகமான படத்தில் ஹிந்தோள ராகத்தில் தனித்தனியாக இளையராஜாவும், ஜென்சியும் பாடும் ஒரு பாடலின் ஆரம்ப வார்த்தை கொண்ட படத்தில் தேவர் பக்திப் படங்களின் ஆஸ்தான நாயகனும் அவர் மனைவியும் நடித்திருக்கிறார்கள்.  அந்தப் படத்துக்கு இசை அமைத்தவர் பக்திப்பாடல்கள்  பிரபலம்.  அந்தப் படத்தில் வரும் பாடல் ஒன்றின் ஆரம்ப வரி இந்தக் கதையின் தலைப்பு.  

அதை எழுதியவர் முதலில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு வாரம் பட இயக்குனரின் இன்னொரு படத்தை இயக்கி இருக்கிறார்.  பெயரும் ஒரு சமீபத்து படத்தில் வந்துள்ளது.  அதில் விஜயசேதுபதி நடித்துள்ளார்.
2)  M G R என்றால் யாரென்று தெரியும் இல்லையா?  அது போல இரண்டு அல்லது மூன்று எழுத்துகளால் மட்டுமே அறியப்பட்ட பிரபல எழுத்தாளர்களில் எத்தனை பேர் தெரியும் உங்களுக்கு?

91 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க...

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

துரை செல்வராஜூ said...

1) தலை சுற்றுது...

ஸ்ரீராம். said...

// 1) தலை சுற்றுது... //

ஹா... ஹா... ஹா... வெற்றி... வெற்றி...!!!!!

துரை செல்வராஜூ said...

2) பிறகு வருகிறேன்...

துரை செல்வராஜூ said...

அன்பின் Kgg அவர்களுக்கு வணக்கம்...

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்...

துரை செல்வராஜூ said...

ஸ்ரீராம்...

கருத்துரை கட்டப்படிருந்த்தே...
அவிழ்த்து விட்டாயிற்றா!...

துரை செல்வராஜூ said...

இன்றைய கைவண்ணம் தங்களுடையதா ஸ்ரீராம்!...

ஸ்ரீராம். said...

காலை வணக்கங்களையும், சாதா பின்னூட்டங்களையும் உடனடியாக மட்டறுத்தேன் துரை ஸார்!

ஸ்ரீராம். said...

ஆமாம்... என் கைவண்ணம்தான். அதுதான் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கோ?!!!

பாரதி said...

ஏவி. எம். ராஜன்-புஷ்பலதா.

ஜேகே, தி.ஜா.,கு.ப.ரா.

ஸ்ரீராம். said...

பாரதி.. நான் கேள்வி சரியா புரியும்படி கேட்கலையோ?

Geetha Sambasivam said...

அந்த ஏழு நாட்கள், அம்பிகா, ராதா! துணைவன் படத்தில் நடித்தவர் ஏ.வி.எம்.ராஜன் அவர் மனைவி புஷ்பலதா! ராதா அறிமுகம் ஆனது அலைகள் ஓய்வதில்லை.

Geetha Sambasivam said...

அடுத்ததுக்கு மெதுவா வரேன்.

ஸ்ரீராம். said...

வாங்க கீதா அக்கா.. ஒவ்வொரு வார்த்த்தையும் புதிர் இல்லை. அது ஒரே புதிர்தான். புத்தகத்தின் பெயரைக் கண்டு பிடிக்கும் புதிர்! அப்புறம் அதை எழுதியவரை!

KILLERGEE Devakottai said...

ஜே.கே. ஜெயகாந்தன்

KILLERGEE Devakottai said...

ஆர்.கே. ராஜேஸ்குமார்

ஸ்ரீராம். said...

வாங்க கில்லர்ஜி... கீதாக்காவுக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும். முதல் பாரா முழுவதும் படித்து, அலசி சொல்ல வேண்டிய பதில் அந்தப் புத்தகத்தின் தலைப்பு.

//அந்தப் படத்தில் வரும் பாடல் ஒன்றின் ஆரம்ப வரி இந்தக் கதையின் தலைப்பு. //

இந்த கடைசி வரியைக் கவனிக்கவும்!

இரண்டாவது பாரா படித்து விட்டு சொல்ல வேண்டியது மேற்படி கதையை எழுதிய எழுத்தாளரின் பெயர்.

Geetha Sambasivam said...

பாட்டுத் தான் குழப்பமா இருக்கு. காதல் ஓவியம் பாட்டுத்தானே? அந்தப் பெயரில் தான் திரைப்படம் வந்திருக்கு! அதில் ஏவிஎம் ராஜன் நடிச்சதாத் தெரியலையே? அவர் நடிச்ச துணைவன் படத்தின் இசை அமைப்பாளரைக் கேட்கறீங்களா? ம்ம்ம்ம்?

Geetha Sambasivam said...

இன்னிக்கு நீங்க தான் புதிர் என்று தெரிஞ்சிருந்தால் முன்னாடியே வந்திருப்பேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Geetha Sambasivam said...

துணைவன் என்றால் இசை அமைப்பு கே.வி.மஹாதேவன். பாடல் யோசிக்கிறேன்.

2. எழுத்தாளர்களில் முதலில் நினைவுக்கு வந்தவர்கள் பி.வி.ஆர். எஸ்.ஏ.பி. ரா.கி.ர. ஜ.ரா.சு. ஆகியோர்

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம்ம்ம்

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே

Bhanumathy Venkateswaran said...

ஒரு வாரம் பட கதாநாயகி அம்பிகா
அவர் தங்கை ராதா
இளையராஜா,ஜென்ஸி பாடிய பாடல் காதல் ஓவியம் பாடலா புத்தம் புது காலை.
இதற்கு பிறகு யோசிக்கிறேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பிவிஆர்

Bhanumathy Venkateswaran said...

ஒரு வாரம் பட கதாநாயகி அம்பிகா
அவர் தங்கை ராதா
இளையராஜா,ஜென்ஸி பாடிய பாடல் காதல் ஓவியம் பாடலா புத்தம் புது காலை.
இதற்கு பிறகு யோசிக்கிறேன்.

Bhanumathy Venkateswaran said...

என் பதிலின் தொடர்ச்சி
விழியில் விழுந்து
பாலகுமாரன்(அந்த ஏழு நாட்கள் பட இயக்குனர் பாக்யராஜ். அவர் ஷோபனாவோடு நடித்த படத்தை பா.கு இயக்கி இருக்கிறார்.

2.

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
Madhavan Srinivasagopalan said...

// 2) M G R என்றால் யாரென்று தெரியும் இல்லையா? அது போல இரண்டு அல்லது மூன்று எழுத்துகளால் மட்டுமே அறியப்பட்ட பிரபல எழுத்தாளர்களில் எத்தனை பேர் தெரியும் உங்களுக்கு? //

2 is my answer to this question.

"அவர்(கள்) யா(ரா)ர் / பெயர்(கள் ) என்(னென்)ன?" எனக் கேட்கவில்லை.
--- கேட்ட கேள்விக்கு மாத்திரமே பதில் சொல்வோர் சங்க உறுப்பினர் .

Thulasidharan V Thillaiakathu said...

ஹா ஹா ஹா இன்று பு பு வைப் பார்த்ததுமே இது நம்ம ஸ்ரீராமின் வேலைனு புரிஞ்சு போச்சு! கௌ அண்ணா ஈசியா கேப்பார்...தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டு...அதனால தலை சுத்தோ சுத்துனு சுத்துது....ஹா ஹா ஹா ஹா

இருந்தாலும் விட மாட்டோம்ல!!! கண்டுபிடிச்சு பதில் தர முயற்சி....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

துரை அண்ணா உங்களுக்கும் தலை சுத்திச்சா ஹா ஹா ஹா...

கீதா

Bhanumathy Venkateswaran said...

2. N.T.R.
O.P.S.
E.P.S
K.S.G.
C.N.A(C.N.Annadirai)
M.L.V.
M.K.T.
N.S.K.
இன்னும் யோசிக்கிறேன்...

Bhanumathy Venkateswaran said...

M.S.V.
T.M.S.
D.K.P(D.K.Pattammal)
G.M.B.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

புதிரென்றால் எனக்கு தூரமே.

Bhanumathy Venkateswaran said...

2. ஓ...எழுத்தாளர்கள் மட்டும்தானா? நான் சரியாக படிக்காமல் செலிபிரிடீடிஸ் என்று நினைத்தேன்.

Bhanumathy Venkateswaran said...

எஸ்.ஏ.பி
லா.ச.ரா
பி.வி.ஆர்

கோமதி அரசு said...

அந்த ஏழு நாட்கள் ஒரு வாரம் பற்றி சொல்லும் படம்.
படத்தின் கதாநாயகி அம்பிகா
அவரின் தங்கை ராதா
ராதா நடித்த முதல் படம் அலைகள் ஓயவதில்லை
அதில் இளையராஜாவும் ஜென்சியும் பாடும் பாடல்
காதல் ஓவியம் பாடும் காவியம்
ஜெமினி கணேஷ், சாவித்திரி ஆஸ்தான நடிகர்கள்.
இசை குன்னகுடி

கோமதி அரசு said...

பி.வி. ஆர்
லா.சா.ரா
ஜி.கே


திண்டுக்கல் தனபாலன் said...

ரைட்டு...

கோமதி அரசு said...

ஜென்சியும் பாடும் ஒரு பாடலின் ஆரம்ப வார்த்தை கொண்ட படத்தில் தேவர் இயக்கிய பக்திப் படங்களின் ஆஸ்தான நாயகனும் அவர் மனைவியும் நடித்திருக்கிறார்கள்.
பாடலின் முதல் வரி தரிசனம்

தரிசனம் படத்தின் பெயர் ஏ.வி.எம் ராஜன்,
ஆஸ்தான ந்டிகர் புஷ்பலதா மனைவி

அந்தப் படத்துக்கு இசை
சூலமங்கல ராஜலட்சுமி.

Bhanumathy Venkateswaran said...

எஸ்.வி.
வ.ரா

Bhanumathy Venkateswaran said...

ஆர்.வி.

Bhanumathy Venkateswaran said...

ஆர்.வி.

Bhanumathy Venkateswaran said...

எஸ்.ஏ.பி
லா.ச.ரா
பி.வி.ஆர்
எஸ்.வி
ஆர்.வி

கோமதி அரசு said...

பாடலில் வரும் கதையின் பெயர் 'மாலை நேரத்து மயக்கம்'

கோமதி அரசு said...

பாக்கியராஜின் இன்னொரு படத்தி இயக்கியவர் பட்டு கோட்டை பிரபாகர்

Thulasidharan V Thillaiakathu said...

எஸ் ரா, நா பா, லாசரா, ஜெ மோ, ஜெகே, ரா கி, முவ, தி ஜ, கி வ, தி க சி, கோவி,

இவ்வளவுதான் என் மண்டைக்கு எட்டியது...

கீதா

கோமதி அரசு said...

புரியாத புதிர் படத்தின் பெயர்.

Madhumitha said...

ஒரு வாரம் - அந்த ஏழு நாட்கள்
ராதா - அலைகள் ஓய்வதில்லை - தரிசனம் கிடைக்காதா
தரிசனம் - AVM Rajan, Pushpalatha -மாலை நேரத்து மயக்கம் written by Balakumaran. He has directed K. Bagyaraj’s movie இது நம்ம ஆளு
இதற்க்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா
கோமதி அரசு said...

அந்த ஏழு நாட்கள் கதாநாயகி அம்பிகா, அவர் தங்கை ராதா நடித்த முதல் படம் அலைகள் ஓய்வது இல்லை, அதில் வரும் ஹிந்தோள ராக பாடல் தரிசனம் கிடைக்காதா?
தேவர் பட ஆஸ்தான பட நாயகர் ஏவி,எம் ராஜன், அவர் மனைவி புஷ்பாலதா ந்டித்த படம். அதில் வரும் பாடல் ஒரு மாலை நேர மயக்கம் இசை அமைத்த பக்தி பாடகர் சூலமங்க்கல ராஜலட்சுமி. பாடலில் வரும் முதலவரியில் வரும் மாலை நேரமயக்கம் கதையை எழுதியவர் பட்டுக் கோட்டை பிரபாகர்.
இவர் பாக்கியராஜின் புரியாதபுதிர் படத்தை இயக்கி இருக்கிறார்.
மீண்டும் அதே தலைப்பில் வந்த பிரியதபுதிர் பட கதாநாயகன் விஜய்சேதுபதி.

அப்பா! கோர்வையாக எழுதி விட்டேன்.

கோமதி அரசு said...

பி,வி.ஆர்
லா.சா.ரா
எஸ்.ரா
ஜே.கே
ஞாநி
பா.ரா
சாவி

Bhanumathy Venkateswaran said...

ஜீ.வி.

Bhanumathy Venkateswaran said...

ஜீ.வி.
கு.ப.ரா

நெ.த. said...

காதல். ஓவியம் பாடும் காவியம் வரை வந்தேன்.

பிஶ்ரீ, க நா சு, தி ஜ ர, பி வி ஆர், ப கோ பி, லா ச ரா,

நெ.த. said...

பி எஸ் ஆர் (கடுகு)

நெ.த. said...

ஜெ கே (ஜெயகாந்தன்). ஆமா இது மாதிரி எழுதி என்ன புண்ணியம். பல புதன் புதிர்களுக்கு பதில் வந்தமாதிரி தெரியலையே. சரி.. சிலருக்கு ஐஸ் வைக்க இதை உபயோகப்படுத்திப்போம்.

வைகோ (கோபு சார்). அ அ- அதிரடி அதிரா

ஸ்ரீராம். said...

முதல் கேலிக்கு சரியான விடை ஒன்று வந்து விட்டது. பாதி சரியான விடை ஒன்று வந்திருக்கிறது!​

ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகளால் மட்டும் அறியப்படும் எழுத்தாளர்கள் பெயர்கள் வரிசை கட்டி வந்து கொண்டிருக்கின்றன. பானு அக்கா... :))) யாரும் சொல்லாத ஒரு எழுத்தாளரை நீங்கள்தான் சொல்லி இருக்கிறீர்கள்.

ஸ்ரீராம். said...// முதல் கேலிக்கு//

* ஓ கடவுளே... டங்கு ஸ்லிப்பு.... கேள்விக்கு என்று படிக்கவும்.

Geetha Sambasivam said...

மோக முள் நாவலா? தி.ஜா? அல்லது தி.ஜ.ர. லா.ச.ரா. அவர் கதைகள் ஏதும் படமாக வரவில்லை.

ஸ்ரீராம். said...

இல்லை கீதா அக்கா...

Geetha Sambasivam said...

அலைகள் ஓய்வதில்லை என்னும் பெயரில் லா.ச.ரா.ஒரு புத்தகம் எழுதி இருப்பதாய்க் கேள்வி!

Geetha Sambasivam said...

சரி, விடுங்க, சினிமா விஷயத்திலே நான் பூஜ்யம்னு தான் எல்லோருக்கும் தெரியுமே! போனால் போகட்டும் போடி!

Thulasidharan V Thillaiakathu said...

2. எழுத்தாளர்கள் ..முன்பு கொடுத்தவையோடு.... எம் வி வி, கடுகு (சொல்லலாமா தெரியவில்லை..)

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

1. மாலை நேரத்து மயக்கம், பாலகுமாரன் ...இவர் பாக்யராஜைவைத்து இயக்கிய ஒரே படம் இதுநம்ம ஆளு என்று நினைக்கிறேன்...

கீதா

Asokan Kuppusamy said...

சுபா சரியா

athira MBBS, MRC...., Consultant. :) said...

ஆவ்வ்வ்வ்வ் இன்று புயன்கியமைப் புயிர்:) பஞ்சவர்ணக் கிளியா மின்னுதே கலர்கலரா..

//என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ.......
/// சமீபத்தில்தானே படம் பார்த்தேன் அபூர்வ ராகங்கள்:))

athira MBBS, MRC...., Consultant. :) said...

வெரி சோரி...:) இந்தப் புதிர் எனக்கு கொஞ்சம் கூட தெரியாது என்பதனால கிட்னிக்கு வேலை இல்லாமல் விடை பெறுகிறேன்:)..

நெ.த. said...

வ.ரா

வல்லிசிம்ஹன் said...

எழுத்தாளர்கள் சுலபம். ஜெகே,முக,எல்லார்வி, ஆர்வி,ஏஎஸ்பி

வல்லிசிம்ஹன் said...

முதல் கேள்விக்கு ரொம்ப யோசிக்கணும்.
வம்பெல்லாம் படிக்க தினமலர் பார்க்கப் போகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

முதல் கேள்விக்கு ரொம்ப யோசிக்கணும்.
வம்பெல்லாம் படிக்க தினமலர் பார்க்கப் போகிறேன்.

மாடிப்படி மாது said...

கேள்வி 1
கதை தலைப்பு - மாலை நேரத்து மயக்கம்
எழுதியவர் - பாலகுமாரன்

விளக்கம் வேண்டுமானால் தனியாக பதி(லி)விடுகிறேன்

கேள்வி 2
லா ச ரா
எஸ் ரா
கல்கி
PKP

மாடிப்படி மாது said...

கேள்வி 2க்கு இன்னும் சில பதில்கள

கிவாஜ
முவ
காநாசு
சுபா
திஜா
ராகிர
கோவி
சோ

பால கணேஷ் said...

தேவர் என்றைக்கையா படம் இயக்கினார்? கேக்றார் பாரு கேள்வி.

பால கணேஷ் said...

ஒரு வாரப் படம் - அந்த 7 நாட்கள், நாயகி அம்பிகாவின் தங்கை ராதா அறிமுகமான படம் அலைகள் ஓய்வதில்லை. வாரப்பட இயக்குனரை இயக்கிய எழுத்தாளர் பா(ஜா)லகுமாரன். படம் இது நம்ம ஆளு (வி.சே.நடித்த சமீப தலைப்பு) எனவே பாலகுமாரன் நாவல்.

பால கணேஷ் said...

பிவிஆர். தான் இன்சியல் ரைட்டர்னா மனசுக்கு வராரு.

Asokan Kuppusamy said...

சுபா என்று பதிவிட்டேன் காணவில்லையே

கோமதி அரசு said...

வா. ரா
ஏ எஸ் . பி
வ. வே. சு
மு. வா
டி. கே. சி
டி. கே. எஸ்
நா. பா

Geetha Sambasivam said...

ஹெஹெஹெஹெ பாலகணேஷ், விடை சொல்லாமல் தப்பிக்க இப்படியும் ஒரு வழி இருக்கா? செரி! சேரி! தேவர் தயாரித்த என்று வந்திருக்கணும். இயக்கிய என்று போட்டுட்டார்.

(ம.சா.இப்படி எல்லாம் ஶ்ரீராமுக்கு சப்போர்ட் பண்ணினால் மட்டும்? பொற்கிழி கிடைச்சுடுமா?) க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஸ்ரீராம். said...

கதையின் பெயர் மாலை நேரத்து மயக்கம் என்பதும், எழுதியவர் பாலகுமாரன் என்பதும் விடைகள். இரண்டாவது கேள்விக்கு தனியாய் பதில் என்று ஏதும் இல்லை. எத்தனை பெயர்கள் சொல்ல முடிந்ததோ, அத்தனைக்கத்தனை ஓகே! முதல் கேள்விக்கான விடையை முதலில் மதுமிதாவும், பின்னர் பாதி மட்டும் சரியாய் கோமதி அக்காவும், பின்னர் கீதா ரெங்கனும் சரியாய்ச் சொல்லி இருந்தார்கள்.

ஸ்ரீராம். said...

கணேஷ் பாலா... "இயக்கிய" என்கிற வார்த்த்தையை நீக்கி விட்டேன்!

ஸ்ரீராம். said...

மாடிப்படி மாதுவும் சரியான பதில் கொடுத்திருந்தார்.

பால கணேஷ் said...

கீதா மாமி.... கேக்கறதை தெளிவா கேக்கணும். தேவர் இயக்கியன்னா யோசிக்கும்போது கொழப்பாதோ பின்ன... தவிர, அலைகள் ஓய்வதில்லை படத்தில் இளையராஜாவும் ஜென்சியும் தனித்தனியா பாடிய பாடல்னு ஒரு வரி வேற குடுத்து மேலும் கொழப்பிருக்கார். அது டூயட் பாடல்தானே..? ஐ க்விட் திஸ் புதிர் செஷன். வெரி வெரி பேட்.

ஸ்ரீராம். said...

// தவிர, அலைகள் ஓய்வதில்லை படத்தில் இளையராஜாவும் ஜென்சியும் தனித்தனியா பாடிய பாடல்னு ஒரு வரி வேற குடுத்து மேலும் கொழப்பிருக்கார். அது டூயட் பாடல்தானே//

தம்பி பால கணேஷ் எப்பவுமே படபடா... தேவர் பற்றி சொன்னது சரி, மாற்றி விட்டேன் என்று பணிவுடன் சொல்லியும் விட்டேன்.

புதிரின் வரி வரும் பாடல் இளையராஜாவும் பெண்குரலும் தனித்தனியாகப் பாடுவதுதான். "தரிசனம் கிடைக்காதா?'

அது ஜென்சி என்று நினைத்து விட்டேன். கேட்டுப்பார்த்தால் ஜானகி என்று தெரிகிறது. ஆனாலும் தனித்தனியாக என்று சொல்லி இருப்பதால் பாடலை அனைவராலும் கெஸ் செய்ய முடிந்தது. பாதிக்காத தவறு என்றாலும் தவறுதான்.

ஸ்ரீராம். said...

// ஐ க்விட் திஸ் புதிர் செஷன். வெரி வெரி பேட்.//

இதற்கெல்லாம் கோச்சுக்கலாமா தம்பி... .. கோச்சுக்காம வாங்க... இனி 100 சதவிகித பெர்பெக்ஷன் கொடுக்க முயற்சி செய்கிறேன்.. முயற்சிதான்.. தவறுவது மனித இயல்பு. பொறுத்துக்குங்க...!

:)))

Bhanumathy Venkateswaran said...

பால குமாரன் என்று நானும் சொல்லியிருப்பதை மறுத்தது என்ன நியாயம்? இதற்கு பனிஷ்மெண்ட் அடுத்த வார புதிரை நான் போடுவேன்.

Thulasidharan V Thillaiakathu said...

புதிரின் வரி வரும் பாடல் இளையராஜாவும் பெண்குரலும் தனித்தனியாகப் பாடுவதுதான். "தரிசனம் கிடைக்காதா?' //

ஆமாம் ஸ்ரீராம் தனித்தனியயகத்தான் வரும்..

எனக்குப் முதல் புதிருக்கான விடை எப்படிக் கண்டுபிடிக்க முடிந்தது என்றால்...ஒரே ஒரு கேள்வி மட்டும் கூகுளை வேண்டினேன் .பாக்கியராஜை வைத்து இயக்கியவர் சமீபத்திய படம் விசே என்பதை வைத்து பாலகுமாரன் என்று தெரிந்தது...எழுதியதன் தலைப்பு ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள அந்த ஒரே ஒரு க்ளூவுக்காக கூகுளை வேண்டினென் அதுதான் தர்சனம் படமும் அதில் இடம் பெற்ற பாடல்களும் அதில் இது மாலை நேரத்து மயக்கம்...என்றதும் அட பாலகுமாரனின் நாவல் ஆயிற்றே என்று மாலைநேரத்து மயக்கம் என்று உறுதிப் படுத்திக்கொண்டு விடை கொடுத்தேன்...

பாலகுமாரன் என்பதால் பானுக்கா சரியாகச் சொல்லிருப்பாங்கனு நல்லாவே தெரியும்...மட்டுமல்ல அவங்க நிறைய படம், எழுத்தாளர்கள் கதைகள் என்று தெரிந்து வைத்திருப்பவர்...

ஸ்ரீராம் ஏன் விட்டுட்டீங்க பானுக்காவை....அடுத்த வாரம் புதிர் போடுவாங்களாம்...ப்ளீஸ் பானுக்காவும் சரியா சொல்லிருக்காங்க சொல்லிடுங்க....ஹா ஹா ஹா ஹா (பானுக்கா புதிர் ஈசியா வே கொடுங்க சரியா ஹிஹிஹி...)

கீதா

ஸ்ரீராம். said...//பால குமாரன் என்று நானும் சொல்லியிருப்பதை மறுத்தது என்ன நியாயம்?//

மறுக்கவில்லையே அக்கா...!

//ப்ளீஸ் பானுக்காவும் சரியா சொல்லிருக்காங்க சொல்லிடுங்க....//

ஆமாம்... பானு அக்கா பாலகுமாரன்னு சொல்லி இருந்தார். ஆனால் சந்தேகத்தோடு! கதை பெயர் சொல்லவில்லை. ஹா.... ஹா... ஹா...!

//இதற்கு பனிஷ்மெண்ட் //

:)))))))

//அடுத்த வார புதிரை //

ஓகே... ஆனால் எந்த வாரம் என்பது பின்னர் தெரியும்!

Bhanumathy Venkateswaran said...

//பானுக்கா புதிர் ஈசியா வே கொடுங்க சரியா ஹிஹிஹி...)//
நான் என்னிக்கு கஷ்டமான புதிர் கொடுத்திருக்கிறேன்?
புதிரை அட்டென்ட் பண்ணுகிறவர்களுக்கு sense of achievement தர வேண்டும் என்று நினைப்பேன்.

Madhavan Srinivasagopalan said...

Please re-read the question number 2. The answer must be in 'numeric' not 'alphabatic or 'alphanumeric'.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!