வியாழன், 22 மார்ச், 2018

ஒற்றை யானையும் ஓராயிரம் கொசுவும்



கொசு - ஒரு புலம்பல்.  

தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையில் இந்தக் கொசுக்களுக்கு - நிஜமான கொசுக்கள்தாங்க - ஒரு நிரந்தர ஒழிப்பு வழியைக் கண்டு பிடிக்கிறவர்களுக்குத்தான் எங்கள் வோட்டு என்று சொல்லலாமா என்று பார்க்கிறேன்.

பின்ன என்னங்க...

குட்நைட்டாவது, மார்ட்டினாவது... இது போன்ற 'விரட்டி'களுக்கு கொசுக்கள் பயந்த காலம் மலையேறி விட்டது. எந்தக் கொசுவிரட்டிக்கும் அவை இப்போது பயப்படுவதே இல்லை. அவற்றைத் தடுத்து நிறுத்தும் சக்தியும் இந்த விரட்டிகளுக்கு இப்போது இல்லை.

கொசுமருந்து தெளிக்கிறேன் என்று புகைபோடும் கார்ப்பரேஷன் வண்டிகள் தெருவிலிருக்கும் கொசுக்களைக் கூட்டம் கூட்டமாக வீட்டுக்குள் விரட்டி விட்டுச் செல்கின்றன.

இதற்குப் பயந்து ஜன்னல்களில் நெட்லான் அடித்திருந்தாலும் இருட்டத் தொடங்குமுன் கதவுகளை அடைத்துக் கொண்டு புழுங்க வேண்டியதாயிருக்கிறது.அப்படியும் எங்கிருந்துதான் கிளம்புகின்றன என்று தெரியாமல் கும்பல் கும்பலாக வந்து கொண்டேயிருக்கின்றன...

கொசுக்களைச் சமாளிக்க இப்போதைக்கு எலெக்ட்ரானிக் பேட் ஒன்றுதான் ஆயுதம். அதுவும் 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை தந்து வாங்கினாலும் சீக்கிரமே அந்த 'பேட்'டுகள் உயிரை விட்டு விடுகின்றன.

என்னதான் செய்வது?  இது நான்கு வருடங்களுக்கு முன் முகநூலில் பகிர்ந்தது..

​இந்த நான்கு வருடங்களில் கொசுவின் சைஸே பெரிதாகி இருக்கிறதோ என்கிற சந்தேகம் வருகிறது!  அது கடித்த இடம் அலர்ஜியாகி காயம் போல ஆகிவிடுகிறது!  இப்போது எலெக்ட்ரானிக் பேட் வைத்துக் கொள்ளவில்லை.  மாலை ஐந்தரை மணிக்கு கதவை எல்லாம் அடைத்துவிட்டு, மறுநாள் காலை ஆறரை மணிக்குதான் திறக்கிறோம்.  ஏலக்காய், திறந்து வைத்த எலுமிச்சம்பழ அரைமூடி, கிராம்பு சொருகி, வேப்பிலை எரித்து...   ஊஹூம்...  கொசு..  நுளம்பு!!   கடவுளுக்கே சவால் விடும் உயிரினம்!  இன்னும் கொஞ்சம் வெயில் அதிகமானதும் பொரிந்து காணாமல் போகும்!  

"ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட்ட எங்களுக்குத்தான் கஷ்டம்..  இதுக்கு என்ன வழி பண்ணலாம் நெல்லை?"


==============================================================================================================





"இது சொல்லுதுன்னு சாப்பிட்டு நாம குண்டாக முடியுமா?"

====================================================================================================================


சமீபத்தில் வாட்ஸாப்பில் ஒரு தகவல் வந்தது.  

சென்ற மாதம் ஒரு தேதியைக் குறிப்பிட்டு, சென்னை, தி நகர், நாகேஷ் திரை அரங்கம் அருகில் ஒரு கட்டிடம் பெயர் சொல்லி, அங்கு வந்தால் ஜாதக மேளா நடக்கும் என்றும், கூட்டத்தைத் சமாளிக்க முன்னதாக வரும்படியும்,  பேப்பர், பேனாவுடன் வந்தால் பெயர், நட்சத்திர, மற்றும் ஜாதக விவரங்கள் சொல்லக் சொல்ல வேகமாகக் குறித்துக் கொள்ள வசதியாய் இருக்கும் என்றும் சொல்லப் பட்டது.  முப்பது வயது அதிகம் ஆன மணமகன்களுக்கு வரன்கள் அதிகம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது. 

'அடடே' என்று தேவையுள்ள குடும்ப உறவுகளுக்கும் நட்புகளுக்கும் தகவல் அனுப்பினோம். 

பெரும் எதிர்பார்ப்புடன் அன்று பெரிய கூட்டம் கூடியது.  அங்கு சென்றிருந்த என் நண்பர் சொன்னது, ஸ்ரீலங்காவிலிருந்து இந்நிகழ்வுக்காக விமானம் பிடித்து ஒரு தாய் வந்திருந்தார் என்றால் எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்திருக்கும் என்று பாருங்கள்.  கடைசியில் ஒரே ஒரு ஜாதகத்தை வந்திருந்த அனைவருக்கும் ஒரு நகல் கொடுத்து, கூட்டத்தைக் கலைப்பதிலேயே குறியாக இருந்திருக்கின்றனர் அங்கிருந்த இருவர்.

என்ன சொல்ல?

"ஒரு காலத்துல மாப்பிள்ளை பிடிக்க பொண்ணுங்க நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம்?  என்ன, நெல்லை?  நான் சொல்றது சரிதானே?"



===========================================================================================================

     நேற்று நான் படித்த யானையைப் பழக்குவது பற்றிய உஷா ஸ்ரீகுமாரின் இந்தப் பதிவு ரொம்பவே சுவாரஸ்யம்.  கீதா அக்கா ரசிப்பார்கள்தான்.  ஆனால் பயணத்தில் இருப்பதால் படிக்க முடியாது.   


     யதேச்சையாக இதுவும் கிடைத்தது!  2014 இல் முகநூலில் நான் பகிர்ந்தது!





"யானையா?  என்னைக் கண்டால் அது பூனையாகி விடும்.  சந்தேகம்னா நெல்லைத்தமிழனைக் கேட்டுப்பாருங்கள்!"

============================================================================================================


இம்முறை புத்தகத்திருவிழாவில் வாங்கிய புத்தகங்களில் நான்கு புத்தகங்கள் இதுவரை முடித்துவிட்டேன் என்று மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

"நம்பிட்டோம்...   யார் வந்து செக் செய்யப்போறாங்க?!"

===========================================================================================================


நோ...   நோ....   இது பழசு!



"ஹையோ.....  ஹையோ....."

==================================================================================================================





"திருப்திதானே?  அடுத்த வாரம் பார்ப்போமா?"

84 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, பானு அக்கா எல்லோருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  4. கொசு புராணம் இன்னும் முடியலையோ!!!

    அட அனுஷ் இடத்தை இந்த வியாழன் தமன்னா பிடித்துக் கொண்டார்!! ஏதோ செய்தி சொல்லுதே!! ஹா ஹா ஹா ஹா ஹா.....

    முழுவதும் வாசிச்சுட்டு வாரேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கொசுவையும் தமன்னாவையும் இணைச்சுப் பேசறது தப்பு கீதா!!

    பதிலளிநீக்கு
  6. ஆகா....

    இன்றைய பொழுதுக்கு ஈராயிரம் கொசு இருந்து கடித்தாலும் ஏதும் தெரியாதே!...

    பதிலளிநீக்கு
  7. // இன்றைய பொழுதுக்கு ஈராயிரம் கொசு இருந்து கடித்தாலும் ஏதும் தெரியாதே!... //

    ஏன் ஸார் அபுரியாப் பேசறீங்க? ஏன்? ஏன்? இன்று என்ன அப்படி?!

    பதிலளிநீக்கு
  8. தமன்னா படங்கள் ஹிஹிஹிஹிஹி!!!!! இருங்க இப்படி இத்தனை போட்டா முதல்ல அதுதான் கண்ணுல படுது....மேட்டருக்கு இன்னும் போகலை ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  9. கொசுவையும் தமன்னாவையும் இணைச்சுப் பேசறது தப்பு கீதா!!//

    ஹா ஹா ஹா ஹா.... அடப் பாவி மக்கா!!! இப்படியா போட்டு வாங்கறது!!! நெல்லை இது நான் இல்லையாக்கும்! நான் இல்லையாக்கும்....!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ஓ!! நெல்லையைக் காணலியேனு வர வைக்கத்தானே!!! தமன்னா!!!!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  11. கொசுவைப் பற்றிய புலம்பலுக்கு டிட்டோ!!!

    //தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையில் இந்தக் கொசுக்களுக்கு - நிஜமான கொசுக்கள்தாங்க - ஒரு நிரந்தர ஒழிப்பு வழியைக் கண்டு பிடிக்கிறவர்களுக்குத்தான் எங்கள் வோட்டு என்று சொல்லலாமா என்று பார்க்கிறேன்.//

    யெஸ் யெஸ் மீ டூ...

    ஸ்ரீராம் எந்த விரட்டிகளும் ஒழிக்காது கொசுவை. அவை ஒவ்வொரு புதியதாய் கண்டுபிடடிக்கப்படும் விரட்டிக்கும் அடாப்ட் ஆகி சர்வைவவல் ஆஃப் தெ ஃபிட்டஸ்ட் என்று இனப்பெருக்கம் செய்து சவால் விடுபவை...

    இதற்கு ஒரே வழி பொதுச் சுகாதாரம் ஓம்பப்பட வேண்டும்...சிட்டியை ரவுன்ட் வந்தால் தெரியும் எத்தனைக் குப்பைக் கூளங்கள் என்று...பொதுச் சுகாதாரம் மற்றும் கூவம் அடையார் நதிகள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்றால் கொசுவை எந்தக் கொம்பனாலும் ஒழிக்க முடியாது...

    கீதா

    பதிலளிநீக்கு
  12. இரண்டு பேரில் யாரைக் கொம்பன் என்று சொல்கிறீர்கள் கீதா?!!

    பதிலளிநீக்கு
  13. தாருகா வனத்து ரிஷிகளையே கொசு கடிச்சிருக்கு...

    அப்படின்னு பதிவு போட்டுட்டு
    இங்கே வந்தா இங்கேயும் கொசுக்கடி...

    ஆகா!...

    பதிலளிநீக்கு
  14. ரிஷிகளைக் கடித்தது கொசுவா? ஓ... அகம்பாவக் கொசு!

    பதிலளிநீக்கு
  15. ஆனால் அவர்கள் அதிருஷ்டம் கொசுவை விரட்ட ஹரிஹரனே வருகிறார்கள்!

    பதிலளிநீக்கு
  16. காலை வணக்கம். காஞ்சிபுரம் சென்று கொண்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  17. காலை வணக்கம் பானு அக்கா.. என்ன விஷயம் காஞ்சீபுரம்? கோவில் சுற்று?

    பதிலளிநீக்கு
  18. விரட்டியும் வேண்டாம்...
    துரட்டியும் வேண்டாம்...

    தட்டானும் தவளையும் மற்ற சிறு பறவைகளும் பெருகினாலே கொசுக்கள் ஒழிந்து போகும்....

    Fly Catcher என்று ஒரு பறவையினமே உண்டு....

    தண்ணீர் தேங்கக் கூடாது.. ஆனால்
    மழை பெய்தால் சாக்கடைக் கழிவுகள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளும் தொழில் நுட்பம் சென்னையினுடையது...

    மேலும் -
    சென்னைவாசிகளுக்குத்தான் தெருவோர மரங்களைப் பிடிப்பதில்லையே...

    காற்றோடு காற்றாக
    மழையோடு மழையாக
    தங்கள் கைவரிசையைக் காட்டியதைத் தான் பார்த்தோமே!...

    பதிலளிநீக்கு
  19. தலைப்பைப் பார்த்து பயந்தே போனேன்...!! ஓராயிரம் கொசுக்கள் சேர்ந்து எங்கே ஒற்றை யானையைத் தூக்கிச் சென்று விட்டனவோ என்று.....!!!

    பதிலளிநீக்கு
  20. திரு. நெல்லையாரிடம் அந்தப்புள்ள இப்படி கேட்டது மனசுக்கு வருத்தமாக இருக்கு...

    பதிலளிநீக்கு
  21. ஏழரை நாட்டு சனியும், கொசுத் தொல்லையும் ஒன்றுதான். நாம் எவ்வளவு முஸ்தீபுகள் செய்தாலும், என்னதான் பரிகாரங்கள் செய்தாலும் அதன் வேலையை காட்டாமல் விடாது.
    என்ன அனுஷ்காவை கழற்றி விட்டு விட்டீர்களா?
    செய்திகள் பழசானால் என்ன? சுவை.

    பதிலளிநீக்கு
  22. இரண்டு பேரில் யாரைக் கொம்பன் என்று சொல்கிறீர்கள் கீதா?!!//

    ஹா ஹ் ஆ ஹா ஹா ஹா ஹா ஹா !! ஹையோ சிரித்து முடிலைப்பா....இன்னைக்கு நீங்கள் ஏன்னை ஓட்டுகிறீர்கள்...நானும் கீதாக்காவின் வீட்டுக் காவேயியிலோ, பூஸாரின் தேம்ஸிலோ இடம் பிடித்து ஒளியணும் போல ஹா ஹா ஹா....கூவம் வேண்டாம் வேண்டவே வேண்டாம்...ஏற்கனவே கொசு விரட்டுது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  23. பானுக்கா ஸ்ரீராம் அனுஷை கழற்றிவிட்டு கட்சி மாறிட்டார்..அதிரா வரட்டும் ஒரு போராட்டம் போட்டுருவோம்னு
    .எல்லாம் இந்த நெல்லையினால்...ஹா ஹா ஹா ஹா....

    கீதா

    பதிலளிநீக்கு
  24. "ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட்ட எங்களுக்குத்தான் கஷ்டம்.. இதுக்கு என்ன வழி பண்ணலாம் நெல்லை?"//

    ஹையோ ஹையோ ஹையோ!!!! எனக்குக் ஹேன்ட்ஸும் ஓடலை....லெக்ஸும் ஆடலை...அதிரா உங்க வரிகள் தான்....வாங்க சீக்கிரம் அதிரா அண்ட் ஏஞ்சல்... இங்க பாருங்க என்னென்னமோ பேசிக்கறாய்ங்கப்பா இந்த ஸ்ரீராமும் நெல்லையும்....ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  25. அது சரி தமனாவை கொசு கடிக்காதோ?!!! (முதல் படத்தைத்தான் சொன்னேன்!! ஹா ஹா ஹா) கொசுவைப் பற்றிச் சொல்லிட்டு அதற்கு ஏற்ற படம் போட்டு...ம்ம்ம்ம்ம்ம் ஸ்ரீராம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  26. உங்க கவிதையை படிக்சுட்டு ரசித்து சிரித்து முடிலைப்பா......"சரியா சாப்பிடுடா முண்டம்" ஹையோப் ஹையோ ஸ்ரீராம் உங்க மூளையை சத்தியமா ப்ரிஸர்வ் செய்யணும்....ரசித்து முடிலைப்பா....சிரிச்சு சிரிச்சு ஓ மை காட்!!!!

    படத்தின் கமென்ட் செம....ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  27. ஜாதக மேளா ஃப்ராட் ஸ்ரீராம்...என் அண்ணி சொன்னார் அவர் கஸின் சொன்னதாக...இப்படி ஜாதக மேளா அல்லது சில ஜாதகம் கொடுக்கறேன் பேர்வழி என்ற அமைப்புகள் கல்யாணம் நிச்சயமானால் அதில் செலவில் 10 % (இது என்ன கணக்கோ தெரியலை) கொடுக்கணுமாம்...அப்புறம் பட்டுப் புடவை, பட்டு வேஷ்டி அந்த அமைப்பாளர்களுக்கு வாங்கிக் கொடுக்கணுமாம் இல்லைனா கல்யாணம் நிறுத்தப்படுமாம்...இது எப்படி இருக்கு...அவர் இப்படி மூன்று வகைகளில் ஏமாந்திருக்கிறாராம்...என்ன சொல்ல? ஹும்..பாவம் அந்த ஸ்ரீலங்காவிலிருந்து வந்தவர்...

    என்னாது மாப்பிள்ளை பிடிக்கக் கஷ்டப்பட்டாங்களாமா தமனா....ஹை இது கதையால்ல இருக்கு!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  28. //அது கடித்த இடம் அலர்ஜியாகி காயம் போல ஆகிவிடுகிறது!//

    கொசு கடித்த இடத்தில் விபூதி தடவி விட்டால் தடிப்பு ஆகாது.

    சிட்டுக்குருவி உள்ள இடத்தில் கொசு இருக்காது.
    எங்கள் பகுதியில் சிட்டுக்குருவி இருப்பதால் கொசு இல்லை.
    வெளியில், கோவில் பார்க் போன்ற பகுதிகளுக்கு போகும் போது
    வெகு காலமாய் odomos தடவி வருகிறோம். கொசுகடியிலிருந்து விடுதலை.



    பதிலளிநீக்கு
  29. பிறகு வருகிறேன். ஜலதோஷத்தால் உடம்பு சுகமில்லை. தமன்னா கூட ஈர்க்கமாட்டேன் என்கிறது. இரண்டு நாளா என் ரொடீன் வேலைகள் சரியாக நடத்தமுடியலை.

    பதிலளிநீக்கு
  30. யானைக் கவிதை அருமை ஸ்ரீராம்!! அப்புறம் யானையைப் பழக்குதல் அந்தச் சுட்டியும் வாசித்தேன்....ஏற்கனவே அறிந்திருந்தாலும்...பாவம் யானைகள். எதற்காக இப்படிச் சித்திரவதை செஞ்சுப் பழக்கணும்? நம்மள மனுஷனுக்கு நல்ல பழக்க வழக்கம் வரணும்னு அடிச்சு உதைச்சு சில குழந்தைகளைப் பழக்கும் போது அவை வளர்ந்து வரும் போது திசைமாறி, பெற்றோரிடம் கோபம் கொண்டு அவர்களிடம் கோபத்தோடு பழகுவதில்லையா... கெட்டவனாகக் கூடப் போகுதில்லையா?...அப்படித்தானே இருக்கும் யானைகளுக்கும் என்று எனக்குத் தோன்றும். யானைகள் என்றில்லை எல்லா காட்டு விலங்குகளுமே.....

    கீதாக்கா வந்தாச்சு...காபியும் ஆத்தியாச்சு.,...வருவாங்க...யானையை ரசிப்பாங்க...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  31. கொசுக்கு இரத்த தானம் செய்ய நன்றாக சாப்பிட சொல்கிறது கவிதை.
    யானை கவிதை பயத்தில் பட பட என்று துடிக்காமல்
    மூச்சே நின்று விட்டது ஒருகணம் என்பது போல்
    நெஞ்சு துடிப்பை ஒருகணம் நிறுத்தி விட்டதே!

    பதிலளிநீக்கு
  32. இன்று நெல்லை மாட்டிக் கொண்டார் ஹா ஹா ஹா ஹா ஹா...

    யானையா அது பூனையாகிடுமாமே!!!தமனாவை பார்த்தால் ஹா ஹா ஹா அப்படினு தமனா சொல்லிட்டு நெல்லையைச் சப்போர்ட்டுக்கு வேற...ஹா ஹா ஹா அப்ப பூஸார் தமனாவைப் பார்த்தால் யானையாகி பிளிறுவாரோ!!!??? ஏஞ்சல் அண்ட் பூஸார் என்ன சொல்றீங்க இதுக்கு......!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  33. இம்முறை புத்தகத்திருவிழாவில் வாங்கிய புத்தகங்களில் நான்கு புத்தகங்கள் இதுவரை முடித்துவிட்டேன் என்று மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!//

    சூப்பர்!!! அப்ப இங்க அடைப் பத்தி வியாழனில் எதிர்ப்பார்க்கலாம்னு சொல்லுங்க..!!

    பழசும் சுவைத்தது!!!! அதன் கமென்ட் படம் எலலமே...அதற்கான தமனா படம் கமென்ட் சூப்பர்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  34. நடிகைகளைக் கடித்துவிட்டால் நாலு தடவை தலைமுழுகுமாம் சிலவகைக் கொசுக்கள். அவ்வளவு நாஸூக்கு! எங்கோ படித்த நினைவு. அதனால் ஜஜா தமன்னா அலட்டிக்கொள்ளத் தேவையில்லை!

    மன்மோகன் சிங்கைப் பாத்தாலே தமன்னாவுக்கு தாங்கமுடியலயே சிரிப்பு.. ஒரு வேளை ராகுல் அந்த இடத்துக்கு வந்தால்.. !

    பதிலளிநீக்கு
  35. ஆஆவ்வ்வ்வ்வ்வ் இன்று கொசு வாரமோ? தமனாக்கா வாரமோ?:)... நெல்லைத் தமிழன் ரொம்ப ஷை ஆகிட்டார்:)...

    எதுக்கும் ரெண்டு பனை உயரத்தில வீடு கட்டிக் குடி ஏறுங்கோ... அப்போ பார்த்திடலாம் கொசுவோ ஸ்ரீராமோ என:).. அவைகளால் ஒரு குறிப்பிட்ட உயரத்து மேல் பறக்க முடியாதெல்லோ...

    பதிலளிநீக்கு
  36. /// கொசு.. நுளம்பு!! கடவுளுக்கே சவால் விடும் உயிரினம்! ///
    ஓ நுளம்பு எனும் சொல் அங்கும் இருக்கோ?.. இவை கோபமில்லாத மனிசரையும் கோபப்பட வைக்கும்:)... பப்பி பூஸ்கூட தாங்க முடியாமல் அவ் அவ் என எட்டி எட்டிக் கடிப்பார்கள்...

    ///
    "ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட்ட எங்களுக்குத்தான் கஷ்டம்.. இதுக்கு என்ன வழி பண்ணலாம் நெல்லை?"///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னா தெகிறியம் நெ.தமிழனைப் பார்த்து இப்பூடி ஒரு கொஸ்ஸன்:)...

    பதிலளிநீக்கு
  37. // ஸ்ரீராம் அனுஷை கழற்றிவிட்டு கட்சி மாறிட்டார்..அதிரா வரட்டும் ஒரு போராட்டம் போட்டுருவோம்னு
    .எல்லாம் இந்த நெல்லையினால்...ஹா ஹா ஹா ஹா....

    கீதா///
    இல்ல கீதா:) இது போன விசாளனே போட்டிருக்கோணும்:).. போடாததினால் நெ. தமிழன் முறைச்சார்:).. அதுதான் இம்முறை தமனாக்கா:)..

    ஆரும் டென்ஷனாகிடாதீங்க:), ஸ்ரீராம் அப்பூடி டக்குப் பக்கெனக் கழட்டி விட்டிட மாட்டார்:) தெகிறியமா இருங்கோ அடுத்த கிழமை அனுக்காவுடன் வருவார்:).

    பதிலளிநீக்கு
  38. ஆனைக்:) கவிதை ரொம்ப அழகு இருப்பினும் சொற்பிழை இருக்கிறது கவிஞரே:)...

    ஆரம்பம் ...
    நின்று துடிக்கும் இதயம்..
    எனப் போட்டிட்டு முடிவில் ,
    ஒரு கணம் நின்று துடித்தது ...
    எனப் போட்டது பொருந்தவில்லையே:)..

    அதனால இம்முறை பரிசு இல்லையாக்கும்:).

    பதிலளிநீக்கு
  39. வணக்கம் சகோதரரே

    "கொசு பத்தி" செய்திகள்,கொசு கவிதை, யானை கவிதை அனைத்தும் அருமை. ஜாதக மேளா இப்படி கூட ஏமாத்துவார்களா என்ன! தமனாவின் பொருத்தமான படங்களும் அழகு.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  40. ///
    இம்முறை புத்தகத்திருவிழாவில் வாங்கிய புத்தகங்களில் நான்கு புத்தகங்கள் இதுவரை முடித்துவிட்டேன் என்று மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!///

    வீடு வாசல்ல எந்த வேலையும் செய்ய மாட்டார் போல இருக்கே:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)..

    பொன்னியின் செல்வன் முதல் பாகமே மூன்று வருசமா பாதியிலயே நிக்குது:)... எனக்கு:)..

    பதிலளிநீக்கு
  41. "திருப்திதானே? அடுத்த வாரம் பார்ப்போமா!" "ஹான் ஒன்னு போனா போகுது ஸ்ரீராம் அடுத்த வாரம் அனுஷ் ஃபோட்டோ ஷூட் பண்ணி படம் போடுங்க...பாவம் அவங்க இப்ப கால்ஷ்ட்ட் இல்லாம சும்மாத்தான் இருக்காங்களாம்!!! "

    ம்ம் ம்ம் எல்லாம் பார்க்கலாம்...பூனை, பைரவச் செல்லாங்கள் படங்கள்!! போடுங்க ஸ்ரீராம்...இந்த தமன்னா சொல்றதெல்லாம் கேக்கக் கூடாதாக்கும்.... ஆமா...சொல்லிப்புட்டேன்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  42. கடசிப்படம் அனுக்காவோ தமனாக்காவோ:) என டவுட்டு டவுட்டா வருதெனக்கு:)... ஸ்ரீராம் ரொம்பத்தான் ரசிக்கிறார் :) , நெ. தமிழன்கூட இப்பூடி ரசித்திருக்க மாட்டார் தமனாக்காவை:)...

    சர் சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:) என் வாய்தேன் நேக்கு எடிரி;)

    பதிலளிநீக்கு
  43. எங்களைத் தாக்கினால் நாங்கள் சர்ஜிகல் ஸ்ட்ரைக் செய்வோம் ---- மோடி

    பதிலளிநீக்கு
  44. ஜன்னல் வச்ச ஜாக்கெட்டா? கதவு வைத்த ஜாக்கெட்னா?

    ஜாதகமேளா - நிறைய ஜாதகர்கள் வந்தால்தானே இவையெல்லாம் வெற்றிகரமா நடக்கும். இப்போ பெண்கள் ஜாதகமே ரொம்ப கம்மியா இருக்கே

    'ஒற்றை யானையின் கண்கள்' - கவிதை அருமை. ஆனால் ஒற்றை யானை மிகவும் ஆபத்தானது.

    பதிலளிநீக்கு
  45. அதிரா - பொன்னியின் செல்வன் முதல் பாகமே மூன்று வருசமா பாதியிலயே நிக்குது:)... எனக்கு:).. - ஒரு ரூல் உண்டு. ஒரு வருடமா ஒரு பொருளை நாம உபயோகப்படுத்தாம அது வீட்டுலயே இருந்தால் அதைத் தூக்கி எறிந்துவிடலாம். பொ.செ. முதல் பாகமே முடிக்கலைனா, நீங்க ஒரு நாவலையும் படிக்கும் மனதோ நேரமில்லாதவர்னோ அர்த்தம்.

    பதிலளிநீக்கு
  46. இல்ல கீதா:) இது போன விசாளனே போட்டிருக்கோணும்:).. போடாததினால் நெ. தமிழன் முறைச்சார்:).. அதுதான் இம்முறை தமனாக்கா:)..//

    ஓ! ஆமால்ல...அதுவும் தமனா என்று சொல்ல முடியாத ஒரு தமனா படம் வேற போட்டு...அதான் இப்பூடி சமாதானமோனு தோணிச்சு!!! ஹா ஹா ஹா..

    கீதா

    பதிலளிநீக்கு
  47. பொன்னியின் செல்வன் முதல் பாகமே மூன்று வருசமா பாதியிலயே நிக்குது:)... எனக்கு:)..//

    ஆ ஆ ஆ ஆ!!! அதிரா மெய்யாலுமா!!? முடிச்சுருங்க நல்ல ஸ்வாரஸ்யமா இருக்குமே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  48. /
    கொசு - ஒரு புலம்பல். //


    இப்போ புலம்பறது கொசுவா இல்லை ஸ்ரீராமா ???
    டவுட் நம்பர் 101

    ஹாஹாஆ ஜோக்ஸ் அபார்ட் ..
    இப்போ நிறைய பில்டிங்ஸ் வானை முட்டுமளவு வந்துருச்சி சென்னையில் ஆனா குப்பை :( அதுக்கும் மேலிருக்கே
    சுகாதார விஷயத்தில் இன்னும் நாம் ரிவர்ஸில் போறோம் அந்த நேரத்தில் கொசுக்கள் நல்லா வளர்ந்திட்டாங்க :)
    முந்தி தோசை இட்லி பொங்கல் ரத்தம் சாப்பிட்ட கொசுங்க இப்போ pizza burger துரித உணவில் எக்ஸ்ட்ரா ஆர்டினரி சைஸ் ஆகிறாங்களோ .

    வீட்டில் பால்கனியில் அப்புறம் வாசல் முன் பின் எல்லா இடத்திலும் தொட்டியில் லெமன் க்ராஸ் ,மாரிகோல்ட் ,basil
    ரோஸ்மரி ( Rosemary) இதெல்லாம் வளர்த்துவிடுங்க அங்கேதான் நர்சரிஸ் இருக்குமே கிடைக்கும் பாருங்க .

    லெமன் கிராஸும் ரோஸ்மாரியும் பெஸ்ட் ..

    கோழி வாத்துகள் வளர்கிறவங்க வீட்டில் கொசு தொல்லை இருக்காது முந்தி அப்படிதான் எங்க வீட்டில் கொசு என்ட்ரியே குடுக்காதுங்க

    பதிலளிநீக்கு
  49. ஜாதக மேளா ?? புரியலை
    எல்லார் ஜாதகத்துக்கு அவங்களே வரன் சொல்வார்களா ??
    யானை பதிவு ..ஹ்ம்ம் மனுஷபிள்ளைங்களையே மிரட்டி அதட்டுவதை வன்மையா கண்டிப்பேன் ..ஸோ அப்படியே அடுத்த டாப்பிக்குக்கு ஜம்பறேன் :)

    பதிலளிநீக்கு
  50. ஹாஹா இன்னிக்கு நெ .த ...நெல்லை தமனா ஸ்பெஷலா :)
    நெல்லை தமிழன் .பெயரை சுருக்கி நெல்லைதமன்னா ஆக்கியிருக்கார் இதை யாரும் கவனிக்கலை :)

    பதிலளிநீக்கு
  51. வழக்கம் போல் இல்லாமல் வித்தியாசமான பதிவு - கொசுவை தவிர...!

    பதிலளிநீக்கு
  52. Interesting! Kosu puranam rasithen.
    @Athira - try audio version of Ponniyin selvan:-))

    பதிலளிநீக்கு
  53. ///பொ.செ. முதல் பாகமே முடிக்கலைனா, நீங்க ஒரு நாவலையும் படிக்கும் மனதோ நேரமில்லாதவர்னோ அர்த்தம்.///

    ஹா ஹா ஹா நெல்லைத் தமிழன்... அதுக்குப் பின் எத்தனையோ புத்தகங்கள் படிச்சிட்டேன், ஆனா அது என்னமோ அரச கதைபோல போவதால் என்னால படிக்க மனம் விரும்புதில்லை:)..

    மனம் விரும்பாட்டில் கையை விட வேண்டியதுதானே எனச் சொல்லுவீங்க:)... இல்ல எனக்குள் ஒரு மிருகம் வெறியோட இருக்குது:) அது ஜொள்ளுது நான் சாவதற்குள் பொன்னியின் செல்வன் படிச்சே தீரோணும் என:)...

    இந்த வெறி எப்போ ஆரம்பிச்சது தெரியுமோ? நான் சின்னக் கொயந்தையா:) இருந்தபோது அம்மா வாசிச்டு முடிச்சா ... அப்போதேநானும் படிக்கோணும் எனும் வெறி வந்துதே:)...

    கீதா... நல்லா இருக்கு என்பதாலதான் படிச்சு முடிக்கோணும் என இருக்கிறேன் ஆனா மனம் அதில் லயிக்குதில்லையே:)... சில புத்தகம் ஆரம்பிச்சால் முடிக்கும்வரை நித்திரைகூட வராது .. இது எனக்கு அப்படி இல்லாமல் இருக்கே:) எனக்காக எல்லோரும் பிரே பண்ணுங்கோ பீஸ்ஸ்ஸ்:)..

    பதிலளிநீக்கு
  54. middleclassmadhavi
    @Athira - try audio version of Ponniyin selvan:-))///

    ஓ ஓடியோவாகவும் இருக்கோ? ஆனா எனக்கு புத்தகத்தை கையில் வச்சுப் படிப்பதே பிடிக்கும்:) ஓன் லைனில் படிப்பதும் பிடிக்குதில்ல:).. நன்றி.

    பதிலளிநீக்கு
  55. //மேலும் - சென்னைவாசிகளுக்குத்தான் தெருவோர மரங்களைப் பிடிப்பதில்லையே...//

    துரை ஸார்... மக்கள்மேல் தப்பில்லை. ஆள்பவர்களைத்தான் சொல்ல வேண்டும்!

    பதிலளிநீக்கு
  56. பாரதி... ஆனாலும் ஓவரான கற்பனை!

    பதிலளிநீக்கு
  57. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  58. வருத்தப் படாதீங்க கில்லர்ஜி... நெல்லை வருத்தப்படமாட்டார்.

    பதிலளிநீக்கு
  59. வாங்க பானு அக்கா... நெல்லைக்காக தமன்னா வந்து சென்றார்! அனுஷ் அப்புறம் வருவார்!

    //ஏழரை நாட்டு சனியும், கொசுத் தொல்லையும் ஒன்றுதான்//

    ஹா... ஹா... ஹா.. சரிதான்!

    //செய்திகள் பழசானால் என்ன? சுவை.//

    நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  60. கீதா...

    //இன்னைக்கு நீங்கள் ஏன்னை ஓட்டுகிறீர்கள்...//

    இரண்டு பேர்கள் என்று நான் சொன்னது கமல் ரஜினியை!

    அனுஷ்ஷை கழற்றி விடவில்லை. இந்த வாரம் நெல்லைக்கு சமர்ப்பணம்!

    ஒவ்வொன்றாகப் படித்து ரசித்து, சிரித்திருப்பதற்கு நன்றி கீதா.

    //அதில் செலவில் 10 % (இது என்ன கணக்கோ தெரியலை) கொடுக்கணுமாம்...அப்புறம் பட்டுப் புடவை, பட்டு வேஷ்டி //

    இது வேறயா? அநியாயம்தான்!

    பதிலளிநீக்கு
  61. ///AngelMarch 22, 2018 at 5:24 PM
    ஹாஹா இன்னிக்கு நெ .த ...நெல்லை தமனா ஸ்பெஷலா :)
    நெல்லை தமிழன் .பெயரை சுருக்கி நெல்லைதமன்னா ஆக்கியிருக்கார் இதை யாரும் கவனிக்கலை :///

    ஓஓஓஒ இந்த அசம்பாவிதம் எங்கின நடந்துது?....

    இதனாலதான் அவர் பெயரை மறைமுகமா நெ. த:) என மாத்திட்டார் போல:)... ஹையோ இப்போதானே உண்மை எல்லாம் புரியுது.... நேக்கு எக்ஸ்சும் ஆடல்ல காண்ட்ஸ்சும் ஓடல்ல:)... ஊருக்குப் போகப்போகிறோம் என்றதுமே பெயரை மாத்திட்டாரே நெ. த என:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று முழுவதும் மொபைல் கொமெண்ட்ஸ் தான் போடுறேன் அதனால கண்ணில பல விசயம் ஒழுங்கா படுகிதில்லை:)..

      நீக்கு
  62. வாங்க கோமதி அக்கா.. இதற்கும் விபூதி போடலாமா? செய்து பார்க்கிறேன்! சிட்டுக்குருவி எங்கள் ஏரியாவில் மிஸ்ஸிங்! ஒவ்வொன்றாய் ரசித்திருப்பதற்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  63. வாங்க நெல்லைத்தமன்னா (நன்றி ஏஞ்சல்) ... ஸாரி.. நெல்லைத்தமிழன்... ஜலதோஷம் வந்தால் உடம்பு தளர்ச்சியாகி விடும்!

    //ஜன்னல் வச்ச ஜாக்கெட்டா? கதவு வைத்த ஜாக்கெட்னா?//

    ஃபிரென்ச் விண்டோ! ஜாதக மேளா... விளம்பரம் பார்த்து வரும் கூட்டத்தில் பெண் ஜாதகங்கள் கிடைக்கும் என்றா கூட்டியிருப்பார்கள்? கையில் ரெடியாக வைத்துக்கொண்டல்லவா கூட்டியிருக்க வேண்டும்?

    //ஆனால் ஒற்றை யானை மிகவும் ஆபத்தானது.//

    அதனால்தான் இதயம் நின்று துடிக்கிறது!

    பதிலளிநீக்கு
  64. வாங்க ஏகாந்தன் ஸார்... கொசு தலைமுழுகுவதாகச் சொல்லுவது நடிப்பு. ரசித்துக் கடிக்குமாக்கும்!

    பதிலளிநீக்கு
  65. ஓடி வாங்கோ எல்லோரும் ஓடிக் கமோன்:) ஸ்ரீராம் இப்போ கம்பி மேலே:)... மெதுவா வாங்கோ சத்தம் கேட்டு விழுந்திடப்போறார்ர்:)..

    பதிலளிநீக்கு
  66. வாங்க அதிரா... இப்போதைக்கு முக்கால் பனை மர உயரத்தில் இருக்கிறேன். பார்ப்போம். கொசுக்கள் டி எம் எஸ் பாட்டு கேட்டு விட்டு "நான் உயர உயர பார்க்கிறேன்" என்று எல்லா உயரமும் எட்டுகின்றன! "நுளம்பு" நீங்கள் சொல்லியிருந்ததைத்தான் சொன்னேன்!

    //அதுதான் இம்முறை தமனாக்கா:)..//

    சரியா கெஸ் பண்ணினீங்க.. ஆனைக் கவிதையில் தவறொன்றுமில்லை. முதலில் இருப்பது தலைப்பு!

    //அதனால இம்முறை பரிசு இல்லையாக்கும்:).//

    நல்லவேளை.. இதுவரை வந்த பரிசுகளால் ரூம் ரொம்பி வழிகிறது.. அடுத்தது வைக்க இடமில்லை! பொன்னியின் செல்வன் படித்ததில்லையா? அச்சச்சோ...

    பதிலளிநீக்கு
  67. வாங்க ஜி எம் பி ஸார்.. அவரவர்களுக்குப் பிடித்த்த விஷயத்தில் அவரவர்கள் ரெஸ்பாண்ட் செய்கிறார்கள்!!!

    பதிலளிநீக்கு
  68. வாங்க ஏஞ்சல்...

    புலம்புவது ஸ்ரீராமேதான்! கொஞ்ச நாட்களில் கொசு காணாமல் போகும்! வெய்யில் வாட்டும்! இப்பவே பொரியுது! செடி வளர்த்துப் பாதுகாக்கும் பொறுமை இல்லையே... ஜாதக மேளாவில் நிறைய பெண்களின் ஜாதகங்களைக் கூட்டி உதவி செய்வார்கள். நெல்லைத்தமன்னா... ஹா.. ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  69. வாங்க தனபாலன்... வித்தியாசம் இதில்? நன்றி டிடி.

    பதிலளிநீக்கு
  70. வாங்க மிகிமா, அதிரா ... ஆடியோ வெர்ஷன் பொன்னியின் செல்வன் என்னிடம் உள்ளது. ஒன்று தெரியுமோ? அதைத் தயாரித்திருக்கும் திரு பாம்பே கண்ணன் கௌதமன் மாமாவின் அண்ணனின் க்ளாஸ்மேட். நாகைக்காரர்.

    பதிலளிநீக்கு
  71. ஜன்னல் வச்ச ஜாக்கெட்டா? கதவு வைத்த ஜாக்கெட்னா? ADHUUUUUU.யானை, கொசு எல்லாம் பெரிய சப்ஜெக்ட்.
    கவிதைதான் சூப்பர். ஓடோமாஸ் எப்பவும் கைகொடுக்கும். 50 வருஷமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  72. நன்றி வல்லிம்மா... ஓடோமாஸ் இப்போ உதவுமான்னு தெரியவில்லை. சில பேருக்கு அது ஸ்கின் அலர்ஜி ஆகும்!

    பதிலளிநீக்கு
  73. ஆனை இருக்குனு தெரிஞ்சிருந்தா நேத்தே வந்திருப்பேன். போகட்டும். மன்மோகன் சிங் சொல்லறது தான் ரொம்பப் பிடிச்சது. அவர் அப்படித் தானே சொல்லுவார். ஹிஹிஹிஹி. ஜன்னலா? அங்கே முழுக்க முழுக்கத் திறந்து இருக்கு! கொசு என்ன ஆனையே உள்ளே போகும் போல!

    இவங்க தான் தமன்னாவா? அப்போ அனுஷ்கா? அவங்களை ஓரம் கட்டியாச்சா? பாவம் இல்ல! :)

    பதிலளிநீக்கு
  74. அதிரடி, பொன்னியின் செல்வன் முதல் பாகம் படிக்காமல் ஒரு வருஷத்துக்கும் மேலே வைச்சிருக்கீங்களா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் ஒரு வருஷத்திலே ஐந்து பாகங்களையும் ஐம்பது முறை படிக்கும் ரகம்! :)

    பதிலளிநீக்கு
  75. கீசா மேடம்... அதிராவுக்கும் எங்களுக்கும் ஒரு தடவை படித்தாலே போதும். நல்லா புரிந்துவிடும். -அப்டீன்னு எழுத ஆசை. எனக்கு எதுக்கு தேவையில்லாத வம்பு.

    பதிலளிநீக்கு
  76. பயனுள்ள பகிர்வுகள் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!