Saturday, March 24, 2018

அன்புக்கு விலையில்லை

1)  ".....  இதில் குறிப்பிடத்தக்கது என்ன என்றால் யாரிடமும் இவ்வளவு வேண்டும் என்று எந்தத் தொகையும் வானதி வாங்குவதில்லை...."  சிறப்புக் குழந்தைகளை சிறப்பாகக் கவனிக்கும் வானதி.


2)  இப்படியும் ஒரு கவுன்ஸிலர்....  வாக்குறுதிகளை நிறைவேற்ற தனது சொத்துகளை விற்று நிறைவேற்றி இருக்கிறார்.  ஷைலஜா.3)  ஒய்வு பெற்றவர்கள் தனக்கு வரும் ஓய்வூதியத்தை தனது பாதுகாப்புக்காகத்தான் வைத்துக் கொள்வார்கள்.  ஓய்வு பெற்ற என்.சி.சி.,அதிகாரி சுபுசிங் ஒரு பள்ளிக்கு தடுப்புச்சுவர், கேட் அமைக்க பணம் கொடுத்திருக்கிறார்.

4)  ஓடந்துறை கிராமப் பஞ்சாயத்துத் தலைவியின் சாதனை.  [ தினமணி இணையப் பக்கத்துக்குச் செல்வது போல் கொடுமை வேறெதுவும் இல்லை ]
5)  

29 comments:

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா...(நானும் காபி குடிச்சுட்டுருக்கேனே!!) பானுக்கா ஏஞ்சல் ...

கீதா

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் கீதா ரெங்கன்.

Thulasidharan V Thillaiakathu said...

விரிவாகப் படிச்சுட்டு வாரேன் அப்பால..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

என்னாச்சு ஸ்ரீராம்....துரை அண்ணாவைக் காணலை...நான் நேத்தும் அப்புறம் வந்து பார்க்கலை...அவர் வரலையோ...ஏன் கல்லா கட்டலை?!! எபி...

கீதா

Geetha Sambasivam said...

வந்தேன், பார்த்தேன், பின்னர் வரேன். எங்கே துரை?????????

Bhanumathy Venkateswaran said...

காலை வணக்கம்

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் கீதா அக்கா... அவர் வருட முடிவு பிஸி என்று சொன்னார்.

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் பானு அக்கா..

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

கோமதி அரசு said...

சிறப்பு குழந்தைகளை சிறப்பாய் கவனிக்கும் வானதி அற்புதமான பெண். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
ஓடந்துறை கிராம பஞ்சாயத்து தலைவிக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
அருமையான செய்திகள்.
வாழ்த்துக்கள் நல்ல செய்திகளுக்கு.

கோமதி அரசு said...

தன் சொத்துக்களை விற்று, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள, சைலஜா ரெட்டி முடிவு செய்துள்ளார்//
சைலஜா போல் தன்னலம் கருதாமல் இருந்தால் நாடு சொர்க்கம் தான்.
ஓய்வு பெற்ற என்.சி.சி.,அதிகாரி சுபுசிங் சுயந்லம் இல்லாமல், பிறர்நலம் பேணும் பண்பு வாழ்க!

KILLERGEE Devakottai said...

நல்ல மனங்கள் வாழ்க!

ராமலக்ஷ்மி said...

பாராட்டுக்குரியவர்கள். பகிர்வுக்கு நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

காலையில் நல்ல செய்திகள் படித்ததில் மகிழ்ச்சி

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம் வாழ்த்துவோம்
நன்றி நண்பரே

Thulasidharan V Thillaiakathu said...

வானதி!!!! பெயருக்கேற்றார் போல் விண்ணைவிட உயர்ந்து நிற்கிறார்! ஹேட்ஸ் ஆஃப் டு வானதி! வாழ்த்துகள்! வாழ்த்துகள்! மனமார்ந்த வாழ்த்துகள்!
(எங்கள் வீட்டிலும் எனது மிக நெருங்கிய உறவில் சிறப்புக் குழந்தைகள் இருக்கின்றனர். என் மாமியின் குடும்பத்தில் சிறப்புக் குழந்தைகள் யாரும் இல்லை என்றாலும் சிறப்புக் குழந்தைகள் பயிற்சி எடுத்துக் கொண்டவர். வாலண்டியர் செர்வீஸ் செய்து வருகிறார். வயது 70+.)

கீதா

துரை செல்வராஜூ said...

வாழ்க வளமுடன்...

Thulasidharan V Thillaiakathu said...

ஷைலஜா!! கவுன்சிலர்...அட இப்படியும் ஒரு கவுன்சிலர் என்று வியபப்டைய வைக்கிறார்.

சுபசிங்க் அவர்களுக்கும் வாழ்த்துகள்! பள்ளிக்கு உதவியதற்கு

லிங்கம்மாள்!!! லிங்கம் போன்று பிரகாசிக்கிறார்! அந்தப் படமே மனதைக் கவர்கிறது. பேசாமல் அந்தப் பஞ்சாயத்தில் போய் செட்டிலாகிடலாமா என்றும் தோன்றுகிறது அதுவும் பவானி ஆற்றின் கரை என்றால்!!! கோத்தகிரி அடிவாரம் வேறு!! மனதை ஈர்க்கிறது...பிரமிக்க வைக்கிறார்!! இப்படி ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் இருந்துவிட்டால் வாவ் இதுதான் காந்தியன் பொருளாதரத்தின் அடிப்படை! ஓடந்துறை மனதில் பதிந்துவிட்டது! ஹேட்ஸ் ஆஃப் அண்ட் பூங்கொத்து லிங்கம்மாளுக்கும் அவரது கணவருக்கும்!!!

கீதா

துரை செல்வராஜூ said...

எனது தளத்தில் பதிவினை ஆயத்தப்படுத்தி விட்டு

மதியம் 12 மணியளவில் புறப்பட்டு ஷார்ஜா வழியே தற்போது இட்லி தேசத்தில்...

விரிவான பதில்களும் நெற்களஞ்சியப் பதிவும் திங்கள் முதல் தொடரும் என நினைக்கிறேன்....

நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி...

ஏகாந்தன் Aekaanthan ! said...

நமது தமிழினப்போராளிகளும் இன்ன பிற ஜால்ராக்களும், வாயை மூடியவாறு நடந்துவந்து வானதி, லிங்கம்மாள் போன்றோரின் காலைத்தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்வது நல்லது. ஏதோ அடுத்த ஜென்மத்திலாவது நல்புத்தி வாய்க்க வாய்ப்புக்கிடைக்கும்.

Bhanumathy Venkateswaran said...

பெண்கள் ஸ்பெஷலா? எல்லோருமே வியக்க வைக்கிறார்கள்.

Asokan Kuppusamy said...

பல ஆண்டுகளாக பெருமைப்பட வைக்கிறது ஓடந்துறை ஊராட்சி.. கணவனும் மனைவியும் அந்த ஊரை முன்னேற்றுவதில் நிகர்அவர்கள்தான் பாராட்டுகள்

Geetha Sambasivam said...

சாதனைப் பெண்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.

Geetha Sambasivam said...

@துரை செல்வராஜு! இட்லி தேசம்? இத்தாலி?

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்...

நெ.த. said...

அனைவருக்கும் பாராட்டுகள், அதுவும் ஓடந்துரை லிங்கம்மாளிடம் நம் அரசியல்வாதிகள் பாடம் கற்றுக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அருமையான செய்திகள்.
வாழ்த்துக்கள் நல்ல செய்திகளுக்கு.சுபசிங்க் செய்த தொண்டு முன்னிற்கிறது.
திருமதி வானதியையும், திருமதி லிங்கம்மளையும், ஷைலஜாவையும் மனப்பூர்பவமாக
வண்ங்குகிறேன்.
நற்செய்திகளை இங்கே கொண்டு சேர்த்ததுக்கு மிக நன்றி ஸ்ரீராம்.

G.M Balasubramaniam said...

நல்ல மனம்வாழ்க நாடு போற்ற வாழ்க

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்லெண்ணங்கள் கொண்ட அனைவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள். அனைவருக்கும், அனைவரையும் அறிமுகப்படுத்திய தங்களுக்கும் மிக்க நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!