Wednesday, April 4, 2018

180404 :: புதன் கேள்வி பதில். யார் அழகு ? அனுஷ்கா / தமன்னா?கேள்வி பதில் பகுதி, நகைச்சுவைக்கு முன்னுரிமை கொடுத்து எழுதப்படும் பகுதி. 

யாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல.  வாட்ஸப் : 

கே ஜீ : 


Idhu budhan kelviyaa? 


ப : இல்லை.

கீதா ரெங்கன்: 
சிறந்த கேள்விக்கு பொற்கிழி உண்டா😜 

ப : ஓ ! உண்டே! (கேள்விக்குதான்; கேள்வி கேட்டவருக்குக் கிடையாது!)எங்கள் கேள்விகளுக்கு ஆசிரியர்கள் கிழி.............நிரப்புக. 

ப: 'ச்சுகிட்டு ஓடிடுவாங்க!'
                                   Image result for two frightened men running images   Image result for two frightened men running images

அப்பாதுரை: 

Question 26
நெல்லைக்கு  225 பிடிக்கும் ஆனா 224 பிடிக்காது; ; 900 பிடிக்கும் ஆனா 800னா அலர்ஜி; 144 இஷ்டம்  145 கஷ்டம். அப்ப நெல்லைக்கு எது பஸந்து? 1600ஆ 1700ஆ?


மிச்ச 25 கேள்வி என்னாச்சு!  


ப: நாங்க என்ன டிடெக்டிவ் எஜென்சியா நடத்துறோம் ! 

800 பிடிக்காதுனா 1600 பசந்து???

ப : பசந்து என்றால் என்ன ? பசை + கோந்து?  கலிலூர் ரஹ்மான்: 

கேள்விக்கு என்ன பதில்

1. 🙏🏽இதற்கும்🤝🏻இதற்கும் என்ன வித்தியாசம்?


ப: விடை பெறுகி
றார்;  கை குலுக்கி விடை பெறுகிறார்! 


2 . பால் சாதம் , தயிர் சாதம் ஒற்றுமை / வேற்றுமை என்ன?

ப: ஒற்றுமை : வெண்மை.

      வேற்றுமை: தன்மை.

3 . கூட்டாஞ்சோறு Vs வெஜிடபிள் பிரியாணி ?


ப: கூட்டாஞ்சோறு நாட்டுக்காய்கறிகளையும், கீரையையும் சேர்த்து சமைப்பது என்றும், வெஜிடபிள் பிரியாணி இங்கிலீஷ் காய்கறிவகைகளைப் பயன்படுத்தி செய்வது என்றும் நினைக்கிறேன். நம் வாசக நள, தமயந்திகள் இதுபற்றிக் கூறலாமே! 


4. வெப்ப தாக்கம் என்றால் என்ன?


ப: Sun Stroke ஆ! 

அப்பாதுரை: 

இட்லி, தோசை எது மேலான டிபன்?


ப: இட்லி = அனுஷ்கா; தோசை = தமன்னா . 
(ரெண்டுமே ஃபீமேல்தான். )          
ஸ்ரீராம்: 

இவ்வளவு முருங்கைப்பூ தேறுகிறது.  என்ன செய்யலாம்?


ஓ! சாரி ஸ்ரீராம்! கேள்விக்குறி இருந்த போஸ்ட் எல்லாம் காபி பண்ணும்போது, இதுவும் வந்திடுச்சு! ஆனாலும் பாக்கியராஜை ஒருவார்த்தை கேட்டுப் பாருங்க!

யாரு? 

அப்பள பஜ்ஜிக்கு, பஜ்ஜி மாவுல தோய்ப்பதற்கு முன், அப்பளத்தைப் பொறி(ரி?)க்க வேண்டுமா?

அடுத்த கேள்வி: அப்பள பஜ்ஜி அப்பளம் இரட்டையாக மடிக்கப்பட வேண்டுமா அல்லது ஒற்றைதானா?

இவைகளும் அப்படிதான் ! (வாட்ஸ் அப்பில் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொன்ன ஆதி வெங்கட் அவர்களுக்கு நன்றி!) இனி பதிவில் கேட்கப்பட்ட கேள்விகள்:  

அவர்கள் உண்மைகள் 

1.கல்யாணத்திற்கு முன்பு ஸ்ரீராம் யாரையாவது காதலித்து இருக்கிறாரா? உடனே ஏதாவது நடிகை பெயரை சொல்லக்கூடாது. 


ப: உஷ் ! கொஞ்சம் இருங்க .....  "அந்தக் காதலிதான், மனைவி என்று கூறடா கண்ணா..... "  என்று யாரோ பாடுவது கேட்கிறது! 2. காவிரி பிரச்சனையில் மத்திய அரசு செய்வது சரியா?

ப: செய்வதா! ஒன்றுமே செய்யவில்லை என்று அல்லவா எல்லோரும் லாவணி பாடிக்கொண்டிருக்கிறார்கள்! 

3 அதிரா தேம்ஸ் நதிக்குள் குதித்தால் பாதிப்பு அதிராவிற்கா அல்லது நதிக்கா?  

ப:  நாங்க ஓடிடறோம். இதுக்கு ஏதாவது பதில் சொன்னா. அதிரா எங்களை தேம்சுல தள்ளிடுவார்! 


4.உங்களுக்கு பிடிக்காத பதிவர் யார்? (அப்படி எல்லாம் யாரும் இல்லை என்று சொல்லக்கூடாது)

ப:  காசு சோபனா . 

5.. பதிவர்களுக்கு பட்டபெயர் சூட்டி கூப்பிடுவதுண்டா? ஆமாம் என்றால் பதிவர்கள் பெயரையும் அவர்களின் பட்டப் பெயரையும் சொல்லுங்கள்?

ப: இல்லை. 

வல்லி சிம்ஹன்: 

காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டியது நீரா...காப்பியா.

                                   Image result for coffee cup images    Image result for hot water cup images


ப: காலையில் எழுந்ததும், திருமதியிடம், "வாய் கொப்பளிக்க வெந்நீரும், குடிக்க காபியும் கொடு. எது, எது எந்த டம்ப்ளரில் இருக்கு என்று சொல்லிக்கொடு" என்று கேட்டேன். வாய் கொப்புளிச்சுப் போயிடுச்சு!


கடைசி கேள்விய கேட்டவர், தன் பெயரைக் குறிப்பிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்! 

கே: யார் அழகு? அனுஷ்கா / தமன்னா ? 

                 Image result for anushka images  Image result for thamanna images

ப: ஆசிரியர் குழுவினரின் பதில் சமமாக இருந்ததால், (ஒருவர் செல்லாத ஓட்டு) டை பிரேக்கர் ஆக, திருமதியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். அவர் என்னை முறைத்துவிட்டு, இதெல்லாம் என்ன கேள்வி? உப்புமரவை அழகா / உரல் அழகா ? என்று எதிர்க்  கேள்வி கேட்டுவிட்டார்.  

(எல்லோரும் ஓடிவாங்கோ ! ஸ்ரீராம் / நெல்லைத் தமிழன் இருவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுங்கள்! )  

    
வாசகர்கள் வழக்கம்போல், வாட்ஸ் அப் (வாட்ஸ் அப் எண் 9902281582 NO VOICE CALLS Please)   மற்றும் பின்னூட்டங்கள் மூலமாக கேள்வி கேளுங்க. 

மீண்டும் அடுத்த புதன் சந்திப்போம்! 

95 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க...

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம், KGg மற்றும் கீதா அனைவருக்கும் வணக்கம்...

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா. இனியா காலை வணக்கம்...ஸ்ரீராம்.. துரை செல்வராஜு அண்ணா..

கீதா..

Thulasidharan V Thillaiakathu said...

கௌ அண்ணா வணக்கம் ...

வெவகாரமான பதிலா கீதே....மாலை விரிவாக...மொபைலில் இருந்து

கீதா

துரை செல்வராஜூ said...

கூட்டாஞ்சோறும் வெஜிடபிள் பிரியாணியும் ஏறக்குறைய ஒன்று தான்..

ஆனால்,

இட்லியும் தோசையும் ஒன்றா?..

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

ஸ்ரீராம். said...

படுக்கையிலிருந்து எழுப்பினால் எழுப்பினால் மறுபடி மறுபடி போய்ப் படுத்துக் கொள்ளும் குழந்தைகள் போல கணினி அணைந்து அணைந்து படுத்த்த்த்த்த்த்த்தல்ஸ்...

துரை செல்வராஜூ said...

இன்னைக்கு எபிக்கு திருஷ்டி தான் சுற்றிப் போடோணும்...

எதுக்கு!....

பதிவு ஆறு மணிக்கெல்லாம் வந்ததுக்கா?..

சுப்ரமணி... சுப்ரமணி... இன்னமும் பச்சப்புள்ள மாதிரியே இருக்கியே... சுப்ரமணி!....

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம். நான் கேட்டது
பச்சைத்தண்ணி. பதிலைப் பார்த்து சிரித்து விட்டேன்.

ஸ்ரீராம். said...

// சுப்ரமணி... சுப்ரமணி... இன்னமும் பச்சப்புள்ள மாதிரியே இருக்கியே... சுப்ரமணி!.... //

ஹா.... ஹா.... ஹா.....!

ஸ்ரீராம். said...

// கூட்டாஞ்சோறும் வெஜிடபிள் பிரியாணியும் ஏறக்குறைய ஒன்று தான்..//

கூட்டாஞ்சோறு ஒரு வலைத்தளம் என்று சொல்லியிருக்கலாமோ!

ஸ்ரீராம். said...

அதாவது கூட்டாஞ்சோறு என்கிற பெயரில் வலைத்தளம் இருக்கிறது. ஆனால் வெஜிடேபிள் பிரியாணி என்கிற பெயரில் வலைத்தளம் இல்லை!

ஸ்ரீராம். said...

ஹா... ஹா... ஹா... வல்லிம்மா... எங்கள் வீட்டு ரெகுலர் ஜோக் அது!

வெங்கட் நாகராஜ் said...

காலை வணக்கம்.

ஸ்வாரஸ்யம்!

கோமதி அரசு said...

அனைத்தும் அருமை.
கேள்வி, பதில்கள் நகைச்சுவை.

ப: உஷ் ! கொஞ்சம் இருங்க ..... "அந்தக் காதலிதான், மனைவி என்று கூறடா கண்ணா..... " என்று யாரோ பாடுவது கேட்கிறது!//

பதில் அருமை.

வெயில்கால டிபஸ் பயனுள்ளது.
நன்றி.

KILLERGEE Devakottai said...

"அந்த காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா"

என்னவொரு சமாளிப்பு ?

Bhanumathy Venkateswaran said...

ஶ்ரீராமின் காதலிதான் மனைவி என்பது ஊரறிந்த ரகசியமாயிற்றே?

கூட்டாஞ்சோறு என்பது நாட்டு கறிகாய்கள் கொண்டு செய்யப்படுவது என்பது அடிப்படை. இப்போதெல்லாம் காரட், பீன்ஸ், பட்டாணி போன்றவையும் சேர்க்கிறார்கள். இவற்றை புளி ஜலத்தில் வேகவைத்து, வெந்த து.பருப்பும் சேர்க்க வேண்டும். இதை பிஸிபேளாஹூளியோடு குழப்பிக் கொள்ள வேண்டாம். பிஸிபேளாஹூளியில் காய்கறிகள் சேர்க்கக் கூடாது. அரிசியும், பருப்பும் 1:3 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.
பிரியாணி totally different, புளிக்கும், பருப்புக்கும் அதில் வேலை கிடையாது.

Bhanumathy Venkateswaran said...

கேள்வி பதில் ஆரம்பம் அமர்க்களம்! தொடரட்டும்👍👏

Bhanumathy Venkateswaran said...

எந்த தைரியத்தில் எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஓப்புக் கொண்டீர்கள்?

ராஜி said...

கேள்வி பதில்கள் அருமை. இனி, தினத்தந்தில குருவியார் பதில்கள் மாதிரி கிசுகிசுலாம் வருமா?!

நெ.த. said...

நடிகைகளில் யார் அழகு என்று திருமதியிடம் கேட்ட நவீன அரசுவே.... உமக்கு இந்த பேசிக் விஷயமே தெரியலையே. எந்தப் பெண்ணாவது தன்னைத் தவிர வேறு பெண்கள் அழகு என்று ஒத்துக்கொள்வார்களா? அதிலும் நிஜமான அழகுப் பெண்களை நிச்சயம் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். எந்தப் பெண்ணும் அழகி என்று ஒத்துக்கொள்ளும் ஒரே பெண், கண்ணாடியில் தெரியும் அவரது பிம்பம்தான். ஐயோ ஐயோ....

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுகள்.

athira said...

இன்று என்னாச்சு கெள அண்ணனுக்கு?:) தலையும் புரியுதில்ல வாலும் புரியுதில்ல:))) குழைசாதம் போல இருக்கு பதிவு:)..

இதில் கிளவியைக் கேட்டவர் ஆரூ? ஹையோ கேள்வியைக் கேட்டவர் ஆரூ? பதில் ஜென்னவர் ஆரூஊஊ?:)..

////யாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. ///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்படி ஆரம்பமே சொல்லிட்டால் நாங்க விட்டிடுவமோ:)) அங்கே பாருங்கோ ஸ்ரீராமும் நெல்லைத்தமிழனும்.. கண்பட்டதோ மனம் புண்பட்டதோ.. ஆரு அழகு எனும் கேள்வியைக் கேட்டவுடன்... அவர்கள் மனம் பட்ட பாட்டை ஆரறிவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?:))

athira said...

///கே: யார் அழகு? அனுஷ்கா / தமன்னா ? ///

ஏற்கனவே நெல்லைத்தமிழன் உடல் நலமில்லாமல் இருக்கிறேன் எனச் சொல்லிட்டார்ர்:) இப்போ இப்படி ஒரு கேள்வி கேட்டு அவரை இன்னும் டென்சன் ஆக்கலாமோ:).. பருங்கோ ஆராவது மாறிக்கீறி அனுக்காதான் அழகு எனச் சொல்லிட்டாலும் என.. ஆரம்பமே பொயிங்கிட்டார்ர் எல்லாருமே அழகுதான் அது இது என என்னமோ சொல்லிட்டார்ர்:)).. இதை விட கேள்வியைக் கொஞ்சம் மாத்திக் கேட்டிருக்கலாம்..

அனுக்கா ரசிகரோ இல்ல தமனா ரசிகரோ ... என:)).. ஹா ஹா ஹா இதுக்கு நம்மில் பலருக்குப் பதில் தெரியவே தெரியாதே:).

இருந்தாலும் அனுக்கா அழுவதுபோலவும் அதை ஒரு நக்கல் லுக்கோடு பார்த்து தமனா சிரிப்பதுபோலவும் தேடிப் படம் போட்டிருக்கிறீங்களே கெள அண்ணன்.. இதை எப்பூடி ஸ்ரீராம் மன்னிச்சு காக்கா போயிட்டார்ர்:)).. ஒருவேளை எதிர்க் கேள்வி கேட்டால் அந்தக் காதல் மட்டரை வெளியே சொல்லிப்போடுவேன் என அவரை மிரட்டி வச்சிருக்கிறீங்களோ என்னமோ:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))..

athira said...

எங்கள் புளொக்கில் புதன் அழகா? விசாளன்:) அழகா?:)

கெள அண்ணனின் முன்னாள் காதலி என்ன ஆனா?:)

நீங்க அதிகம் விரும்புவது வதனப்புத்தகமோ? Blogs ஓ?

திண்டுக்கல் தனபாலன் said...

கூட்டாஞ்சோறு - நல்லதொரு வலைத்தளம்...!

Angel said...

எங்கள் பிளாகின் வயது ?

Angel said...

சித்தப்பா இப்போ எங்கே இருக்கிறார் ?

Angel said...

இன்ஸ்டன்ட் காப்பி சுவையா இல்லை டிக்காஷன் காப்பி சுவையா ?

athira said...

///AngelApril 4, 2018 at 5:06 PM
எங்கள் பிளாகின் வயது ?///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... எதுக்கு இந்த சுத்தி வளைப்பு?:) நேரடியாகவே கேட்டிருக்கலாமே ஸ்ரீராமின் வயதை:) ஹையோ ஹையோ.. விளக்கம் குடுத்தே பொசுக்கெனப் போயிடுவேன் போல இருக்கே வள்ளிமலை முருகா:)...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

வித்தியாசமான கேள்விகள்.. அதற்கேற்ற ஸ்வாரஸ்யமான பதில்கள்.. புதியதொரு முயற்சியை பாராட்டி ரசிக்கிறேன். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Asokan Kuppusamy said...

இருவரில் ஒருவருடன் கதாநாயகனாக நடிக்க ஆசைப்படுகிறாரோ ஸ்ரீராம்

வல்லிசிம்ஹன் said...

தமன்னா ஐபிஎல்லில் ஆடப் போகிறாராமே.. எத்தனை சம்பளம்.

Avargal Unmaigal said...

@Bhanumathy Venkateswaran said...

ஸ்ரீராமின் காதலிதான் மனைவி என்பது ஊரறிந்த ரகசியமாயிற்றே

அது எனக்கு தெரியாதும்மா


ஒருவேளை ஊரறிந்த ரகசியம் உலகவில் பரவி இருந்தால் ஒரு வேளை என் காதில் வந்து விழுந்து இருக்குமோ என்னவோ

Avargal Unmaigal said...

சரி இந்த வார கேள்வி: மனைவி ஆகாத காதலிகள் ஸ்ரீராமிற்கு உண்டோ? விடமட்டோம்ல ஹீஹீ

Avargal Unmaigal said...

நல்ல எண்ணத்துடன் கனவுகள் கண்டால் அது பலிக்குமாமே? அப்படியென்றால் நல்ல எண்ணத்துடந்தான் நான் நயந்தாராவை பற்றி கணவுகள் காண்கிறேன் அது மட்டும் ஏன் நடக்க மாட்டேங்கிறது?

Avargal Unmaigal said...

பார்த்து பார்த்து ஹெல்த்தியா சாப்பிடும் பெண்கள் மிக குண்டாகவும்( ஏஞ்சல் & அதிரா பற்றி சொல்லவில்லை..அப்பாடி தப்பித்தோம்) அப்படி இல்லாமல் சோற்றை விட்டால் மூன்று வேளை சாப்பிடும் ஆண்கள் ஒல்லியாக இருப்பது ஏன்?

Avargal Unmaigal said...

நாம் அழுக்கு போக குளிக்கிறோம் அதன் பின் சுத்தமான துண்டால் உடம்பை துடைத்துவிட்டு பின் அதை அழுக்கு துண்டு என்று சொல்லுவது ஏன்? ஒரு வேளை குளித்தால் உடல் அழுக்குதான் போகும் ஆனால் மன அழுக்கு போகாது அதனால் அப்படி சொல்லி இருப்பார்களோ? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Avargal Unmaigal said...

உங்கள் தலையால் நீங்கள் பூரிக்கட்டையை தாக்கிய அனுபவம் உண்டா?

athira said...

///Asokan KuppusamyApril 4, 2018 at 7:11 PM
இருவரில் ஒருவருடன் கதாநாயகனாக நடிக்க ஆசைப்படுகிறாரோ ஸ்ரீராம்////

ஹையோ ஹையோ ஏற்கனவே பத்தி எரியுது:) நீங்க வேற எண்ணெயை ஊத்துறீங்க:)... இந்த இருவரில் ஒருவரை மட்டும்தேன் ஸ்ரீராமால டச்சூ பண்ண முடியும்:).. மற்றவரை கடைக்கண்ணால பார்த்தாலே வெட்டு குத்தாகிடுமே:) பிக்கோஸ்ஸ்ஸ் மற்றவர் நெல்லைத் தமிழனின் ஆள் எல்லோ:)...

இருப்பினும் உங்கட கொமெண்ட் பார்த்து இப்போ ஸ்றீராம் கிழுகிழுப்பாகியிருப்பார்ர்ர்:) ஹையோ மீ தேம்ஸ்க்கு ஓடிடுறேன்ன்ன்ன்ன்:)...

athira said...

ஹா ஹா ஹா நினைச்சேன் சிரிச்சேன்:).. அவரவர் பிரச்சனை அவரவருக்கு கேள்வியா வருது:)... நான் ட்றுத்தையோ பூரிக்கட்டையையோ சொல்லல்லேஏஏஏஏ ல்லே:)..

Thulasidharan V Thillaiakathu said...

ப : ஓ ! உண்டே! (கேள்விக்குதான்; கேள்வி கேட்டவருக்குக் கிடையாது!)//

கேள்விக்குத்தான் என்றால் கேள்வி கேட்டவரைத்தானே போய்ச் சேரும்!!! ஹா ஹா

பதில்கள் அனைத்தும் செம...நிறைய சிரிக்க வைச்சுருச்சு...சிரிச்சு சிரிச்சு...

தமன்னா அழகா அனுஷ் அழகா? இந்த நாரதர் யார் நு யோசிச்சு யோசிச்சு யோசிச்சு யோசித்து..புரிபடல எப்படியோ நாரதர் கலகம் நன்மையில் முடியட்டும்...ஹா ஹா ஹா ஹா...

கூட்டாஞ்சோறு // ஒரு தளம்னு ஸ்ரீராம் பதில் செம...

சரி இருந்தாலும் திங்க இல்லையா ஸோ பதில் கூட்டாஞ்சோறு, ப்ரியாணி இரண்டும் மிகவுமே வெவ்வேறு....பக்கத்தில் கூட வராது...

கீதா

ஸ்ரீராம். said...

​நன்றி வெங்கட் நாகராஜ்.

ஸ்ரீராம். said...

நன்றி கோமதி அக்கா.

ஸ்ரீராம். said...

நன்றி கில்லர்ஜி... சமாளிப்பா....ஆ.....

ஸ்ரீராம். said...

நன்றி பானு அக்கா... விளக்கம் சூப்பர். குழந்தைகள் கூட்டாஞ்சோறு செய்து சாப்பிடுவார்களே அதாவது விளையாடுவார்கள் இல்லையா!

இங்கிருக்கும் கேள்விகளுக்கு நான் இப்போது பதில் சொல்வதாயில்லை. அதெல்லாம் கௌ அங்கிள் வேலை!

Thulasidharan V Thillaiakathu said...

சென்னையில் இம்முறை பருவ மழை வருமா?

அக்னிநட்சத்திரம் என்றால் என்ன (படம் சொல்லக் கூடாது!!!) அதனை ஏன் கத்தரி வெயில் என்று சொல்லுகிறார்கள்? கத்தரி/கத்திரிக்காய்க்கும் அதற்கும் என்ன சம்பந்தம்

கத்தரி, கத்திரி எது சரி?

கீதா

ஸ்ரீராம். said...

நன்றி ராஜி.

ஸ்ரீராம். said...

நன்றி நெல்லை... முக நூலில் தீர்ப்பு உங்களுக்கு எதிராக வந்திருக்கிறது!!!!

ஸ்ரீராம். said...

நன்றி முனைவர் ஐயா...

ஸ்ரீராம். said...

வாங்க அதிரா... என்மனம் புலப்படவில்லை தெரிஞ்சுக்கோங்க... மஞ்சுபாஷிணி சம்பத்குமார் பதிவரை நினைவிருக்கிறதா? அவர் என் பாஸையே அனுஷ்கா என்றுதான் சொல்வாராக்கும்!!!

:))))

ஸ்ரீராம். said...

நெல்லைத்தமிழன் உடல் நலமில்லாமல் இருப்பதால்தான் அழகான தமன்னாவோ! அவருக்கு இந்நேரம் உற்சாகத்தில் உடல்நிலை சரியாகி இருக்கும்.

ஸ்ரீராம். said...

அதிரா... உங்கள் கேள்விகளுக்கு பதில் இப்போதில்லை!

ஸ்ரீராம். said...

"என் மனம் புலப்படவில்லை" இல்லை... 'புண்படவில்லை' என்று வாசிக்கவும்... கூகிள் நறநற...

ஸ்ரீராம். said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்.

ஸ்ரீராம். said...

ஏஞ்சல்... எங்கள் ப்ளாக் வயது கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டமா! (பாருங்கள்.. நான் கேள்விக்குறி இடவில்லை. ஆச்சர்யக்குறிதான். இல்லாவிட்டால் இதுவும் கேள்விகளில் இடம்பெற்றுவிடக்கூடிய ஆபத்தான சாத்தியக்கூறு இருக்கிறது)

கேள்விகளை எல்லாம் படிக்கும்போது கை பரபரக்கிறது. மனம் துறுதுறு ஏந்துகிறது.. ஆனால்... ஆனால்.. என் கைகள் கட்டப்பட்டிருக்கிடற... அடுத்த வாரம் வரை பொறுமை காக்கவும்.

ஸ்ரீராம். said...

அதிரா..

//நேரடியாகவே கேட்டிருக்கலாமே ஸ்ரீராமின் வயதை:) //

ஹையோ.... ஹையோ... இந்த கலாட்டா வேற...

இலங்கை வானொலியில் சொல் வார்த்தை விளையாட்டு ஒன்று வரும். ஒரே சொல்லை மூன்று முறை சொல்லக் கூடாது.. இன்னும் என்னென்னவோ விதிகள்... அதுபோல நான் கேள்வி வாக்கியமாக அமைக்காமல் என் வார்த்தைகளை அமைக்க முயற்சிக்கிறேன்!

ஸ்ரீராம். said...

நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.. உங்கள் வாக்கிய முடிவில் கேள்விக்குறி இல்லை. எனவே அடுத்த வார கேள்விகளில் உங்கள் கேள்வி (தானே அது) இடம்பெறும் வாய்ப்பு குறைவோ என்னவோ போங்கள்...

ஸ்ரீராம். said...

நன்றி வல்லிம்மா..

ஸ்ரீராம். said...

மதுரைத்தமிழன்.. உங்கள் ஆர்வம் கண்டு நான் வியக்கிறேன். பொது அறிவை வளர்த்துக்கொள்ள நீங்கள் பாடுபடுவது புரிகிறது. .. ம்ம்ம்ம்... என்னவோ போங்க...

ஸ்ரீராம். said...

மதுரைத்தமிழன் கேள்விகளுக்கே இரண்டு வாரம் பதிவு ஓடும் என்று தோன்றுகிறது!!

ஸ்ரீராம். said...

அதிரா....

//ஸ்றீராம் கிழுகிழுப்பாகியிருப்பார்ர்ர்:) //

கர்ர்ர்ர்ர்ர்...... ஸ்ரீராம்... பெயரும் தப்பு... கிழுகிழு இல்லை... கிளுகிளு!

//அவரவர் பிரச்சனை அவரவருக்கு கேள்வியா வருது:)...//

ஹா.... ஹா.... ஹா...

ஸ்ரீராம். said...

வாங்க கீதா... ரமணன் சார் எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவில் இல்லையே... அய்யய்யோ... இப்பவே பதில் சொல்லிட்டேனே.... இப்பவே பதில் சொல்லிட்டேனே... இதைப் படிக்காதீங்க... ப்ளீஸ் படிக்காதீங்க....

Thulasidharan V Thillaiakathu said...

ஓ! புதன் புதிர் போய் இப்போது கேள்வி பதிலாகிவிட்டதா? முதலில் புரியவில்லை. அப்புறம்தான் புரிந்தது. கீதாவும் சொன்னார்.

ஸ்வாரஸ்யமான சிரிக்க வைத்த பதில்கள். ஸ்ரீராம் ஜி பற்றியது தெரிந்திருந்தாலும் இங்கு அதற்கும் வந்த கமென்ட்ஸ் சிரிக்க வைத்தது.

இதுவும் ஸ்வாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

மூளைச் சலவை என்றால் என்ன? அப்படி என்றால் மூளை வெளுத்துவிடுமா?!

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

நெல்லைக்கு சென்னையில் ஐஸ் மழை!!!! தமனா!!!

செம வெல்கம் நெல்லைக்கு!! என்னாது உடல்நலமா? ஆரு சொன்னா எனக்கு நலமில்லை என்று...இன்று ஓடோடி வந்தேன் தமனாவைக் காண!! என்று பாடுவது கேட்கவில்லையா ஸ்ரீராம்!!! ஹா ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வாங்க கீதா... ரமணன் சார் எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவில் இல்லையே... அய்யய்யோ... இப்பவே பதில் சொல்லிட்டேனே.... இப்பவே பதில் சொல்லிட்டேனே... இதைப் படிக்காதீங்க... ப்ளீஸ் படிக்காதீங்க//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா..படிச்சுட்டேன் படிச்சுட்டேன்...கண்ணுல பட்டுருச்சே...அதற்கு எதற்கு ரமணன் சார் வேண்டும்!!! நம்ம மதன்பாபு போல இருந்தா போதாதா ஹிஹிஹிஹி...

கீதா

athira said...

நான் சொன்னேனே.... நான் சொன்னேனே ... ஸ்ரீராம் கிளு கிளுப்பாவே இருக்கிறார் இன்று:).... ஹா ஹா ஹா இப்போ ரெண்டும் கரெக்ட்டா?:)...

அதுசரி அனுக்காவுக்கு இதெல்லாம் தெரியுமோ என்னமோ:)...(கவனிக்கவும் இங்கின கேள்விக்குறி இல்லை:).. இது என் புலம்பல்:))))))

ஸ்ரீராம். said...

அனுஷ்காவுக்கு இதெல்லாம் தெரியாது அதிரா.... சொல்லிடாதீங்க..

Angel said...

//Avargal Unmaigal said...
சரி இந்த வார கேள்வி: மனைவி ஆகாத காதலிகள் ஸ்ரீராமிற்கு உண்டோ? விடமட்டோம்ல ஹீஹீ//
ஹாஆஅஹா :)
இதைத்தான் சொல்வாங்க தனக்கு ஒரு கண் போனாலும் பிறருக்கு ரெண்டு கண் காது எல்லாம்
போகிறது பார்ப்பது சந்தோஷமாம் :)

Angel said...

இப்போ வில்லங்கமா ஒரு கேள்வி :)
ஸ்ரீராமுக்கு மிகவும் பிடித்த பதிவர் யார் : ?
ஒருவர் பெயர் மட்டும் சொல்லணும் :)

Thulasidharan V Thillaiakathu said...

அனுஷ்காவுக்கு இதெல்லாம் தெரியாது அதிரா.... சொல்லிடாதீங்க..//

அது சரி இது எந்த அனுஷ்!!! ஸ்ரீராம்!! அதிரா, ஏஞ்சல் கொஞ்சம் இங்கிட்டுப் பாருங்க!!! என் கேள்வி புயிந்திச்சா?!! ஹா ஹா ஹா ஹா...(ஒரு அனுஷ் க்கு இதெல்லாம் ரீச் ஆவாது...இன்னுரு அனுஷ் தெரிஞ்சாலும் கண்டுக்கமாட்டாங்க...சப்பை மேட்டர் அவங்களுக்கு...)

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இதைத்தான் சொல்வாங்க தனக்கு ஒரு கண் போனாலும் பிறருக்கு ரெண்டு கண் காது எல்லாம்
போகிறது பார்ப்பது சந்தோஷமாம் :)//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா செம ஏஞ்சல்!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

//அவரவர் பிரச்சனை அவரவருக்கு கேள்வியா வருது:)//

ஹா ஹா ஹா ஹா ஆமாம் அதிரா! உண்மைதான்! துளசியின் கேள்வி பாருங்க அவர் பிரச்சனை...ஹிஹிஹிஹி....அவர் தன் மூளையை ரொம்பவே அலசி அலசி செய்து கேட்டாராம் இந்தக் கேள்வியை.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஶ்ரீராமின் காதலிதான் மனைவி என்பது ஊரறிந்த ரகசியமாயிற்றே? //

பானுக்கா இதுல கேள்விக்குறி போட்டுட்டீங்க!!! கேள்வியாகிடுச்சு! ஹா ஹா ஹா கேள்விக் குறி போட்டா கேள்வியா கணக்கில் எடுக்கப்படுமாமே!! ஹிஹிஹிஹி

கீதா

ஏகாந்தன் Aekaanthan ! said...

உம்மை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்லவேண்டும்
என்னைக் கேட்கச் சொன்னால்
என்ன கேட்கத் தோன்றும்..
என்ன கேட்கத் தோன்றும் ?

Angel said...


@ Truth /madurai tamilan
https://i.pinimg.com/originals/10/4a/ee/104aeed744287d0fdfa411adf3f3d5b6.jpg

Angel said...

@ கீதா

/ அதிரா, ஏஞ்சல் கொஞ்சம் இங்கிட்டுப் பாருங்க!!! என் கேள்வி புயிந்திச்சா?!! ஹா ஹா ஹா ஹா...(ஒரு அனுஷ் க்கு இதெல்லாம் ரீச் ஆவாது...இன்னுரு அனுஷ் தெரிஞ்சாலும் கண்டுக்கமாட்டாங்க //

அப்போ எத்தினி அனுஷ்க்காக்கள் இருக்காங்க ???

athira said...

////AngelApril 4, 2018 at 9:45 PM
இப்போ வில்லங்கமா ஒரு கேள்வி :)
ஸ்ரீராமுக்கு மிகவும் பிடித்த பதிவர் யார் : ?
ஒருவர் பெயர் மட்டும் சொல்லணும் :)///

கர்ர்ர்ர்ர்ர்ர்:) கேட்கிறதை தெளிவாக் கேட்கோணும்:).. மிகவும் பிடித்த பெண் பதிவர்? ஆண் பதிவர் என ஒண்ணு ஒண்ணா இருவரைச் சொல்லோணும்:)....

இப்பூடிக் கேட்கோணும் அஞ்சு:)

athira said...

கீதா நான் பார்த்திட்டும் பார்க்காதமாதிரி காக்கா போனேன் இருந்தாலும் என் வாயை அடக்க முடியல்ல:)...

தன் பொஸ் ஐயே அனுக்காவாக்கிட்டார்ர்:) ஹை யோ என் கால்ல கல்லைக்கட்டிப்போட்டு தேம்ஸ்ல போடுங்கோ பிளீஸ்:).. என்னால முடியல்ல:)

Angel said...

//கர்ர்ர்ர்ர்ர்ர்:) கேட்கிறதை தெளிவாக் கேட்கோணும்:).. மிகவும் பிடித்த பெண் பதிவர்? ஆண் பதிவர் என ஒண்ணு ஒண்ணா இருவரைச் சொல்லோணும்:)....

இப்பூடிக் கேட்கோணும் அஞ்சு:)//

ஹையோ ஹையையோ :) பார்த்திங்களா மக்கள்ஸ் :) ஒரு அப்பாவியான என்னை இப்படிலாம் கேள்வி கேக்க சொல்றார் பூசானந்தா

athira said...

இன்னொன்று அஞ்சு.. காமாட்ஷி அம்மாவையும், ஜி எம்பி ஐயாவையும் சொல்லிடப்போறார் கர்ர்ர்ர்ர்:))

Angel said...

ஹையோஹய்யாயோ :) ஸ்ரீராம் உங்களை மாட்டி விடறதிலே எத்தினி பேர் ஷார்ப்பா இருக்காங்க ?

Angel said...

ஆமாம் இப்பவே சொல்லிட்டேன் .காசு .சோபனா நேம் அந்த லிஸ்டில் வரக்கூடாது :)

Angel said...

அறம் அறம் ...செய்ய விரும்புபவர் யார் ?

Angel said...

இன்னும் என்னெல்லாம் தோணுதோ அதையெல்லாம் கேட்பேன் :)

Angel said...

@அவர்கள் ட்ரூத் மதுரை தோழா :)

இருங்க என் குரலில் பாட்டு பாடி ரெக்கார்ட் செஞ்சி வச்சிருக்கேன் உங்களுக்காகவே அடுத்த பதிவில் ஏத்தி விடறேன் :)

ஸ்ரீராம். said...

/புதன் புதிர் போய் இப்போது கேள்வி பதிலாகிவிட்டதா? முதலில் புரியவில்லை. அப்புறம்தான் புரிந்தது. கீதாவும் சொன்னார்.//

இல்லை துளஸிஜி... அப்படியும் உறுதியாய்ச் சொல்ல முடியாது. அதுவும் வந்தாலும் வரும்!

ஸ்ரீராம். said...

//ஸ்ரீராமுக்கு மிகவும் பிடித்த பதிவர் யார் : ? ஒருவர் பெயர் மட்டும் சொல்லணும் :)//

@ஏஞ்சல்..... இதற்கு என்ன பதில் வருகிறது என்று பார்க்க நானும் ஆவலாய் இருக்கிறேன்!

ஸ்ரீராம். said...

கீதா..

//இன்னுரு அனுஷ் தெரிஞ்சாலும் கண்டுக்கமாட்டாங்க...சப்பை மேட்டர் அவங்களுக்கு...)//

தட் "இந்த மூஞ்சிக்கு நானே அதிகம்" மொமண்ட்!

//பானுக்கா இதுல கேள்விக்குறி போட்டுட்டீங்க!!! கேள்வியாகிடுச்சு! //

ஹா... ஹா... ஹா... அதானே... என்ன பானுக்கா இது....(பாருங்க நான் இங்கேயே கேள்விக்குறி போடலை!) ஆனாலும் கீதா உங்களுக்கு ரொம்ப கேலியாயிடுச்சு!

ஸ்ரீராம். said...

ஏகாந்தன் சார்.... பதில் ரிஸர்வ் செய்து வைக்கப்படுகிறது!

ஸ்ரீராம். said...

அதிரா...

//என் கால்ல கல்லைக்கட்டிப்போட்டு தேம்ஸ்ல போடுங்கோ பிளீஸ்:).. என்னால முடியல்ல:)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ விபரீத முடிவு வேண்டாம் அதிரா...

// இன்னொன்று அஞ்சு.. காமாட்ஷி அம்மாவையும், ஜி எம்பி ஐயாவையும் சொல்லிடப்போறார் கர்ர்ர்ர்ர்:))//

ஆன்ஸர் லீக் ஆயிடுச்சு... ஆன்ஸர் லீக் ஆயிடுச்சு.. ஆ... இந்தக் கேள்வி இனி செல்லாது!... செல்லாது.... ல்லாது... லாது......து...

ஸ்ரீராம். said...

ஏஞ்சல்...

//இருங்க என் குரலில் பாட்டு பாடி ரெக்கார்ட் செஞ்சி வச்சிருக்கேன் உங்களுக்காகவே அடுத்த பதிவில் ஏத்தி விடறேன் :)//

ஆ... அது! இதற்கு மதுரை பயப்படுவார் என்று நம்புகிறேன்.

Geetha Sambasivam said...

வித்தியாசமான புதிர்! கடைசியில் யாருங்க ஜெயிச்சது? அனுஷ்காவா, தமன்னாவா?

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!