Saturday, April 14, 2018

அமானுல்லாவின் அழகிய சேவையும், அய்யாத்துரையின் விடாமுயற்சியும்.

1)  அமானுல்லா செய்யும் அழகிய சேவை.

"........   அத்திமுகம் பகுதியில், 2,500க்கும் மேற்பட்டோரை, பெங்களூரு அழைத்து சென்று, இலவச அறுவை சிகிச்சை செய்ய வைத்துள்ளோம். உத்தனப்பள்ளியில் நாங்கள் ஆரம்பித்த இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலம், 600க்கும் மேற்பட்ட மக்கள், உயிர் பிழைத்துள்ளனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அதிகளவு மக்கள், வாரந்தோறும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதை, என் சொந்த செலவில் தான் செய்து வருகிறேன்......"


2)   விடாமுயற்சிக்கு ஒரு அய்யாத்துரை.  இத்துறையில் தனது ஆரம்ப தோல்விகளை அனுபவப் பாடங்களாக்கிக் கொண்டு வெற்றிப் படிக்கட்டில் ஏறும் சிவகாசி இளைஞர்.


"இந்த புராஜெக்டை வங்கியில் கொடுத்து, கடன் வாங்கி, சீனாவிலிருந்து பென்சில் தயாரிக்கும் மிஷினை வாங்கினேன்; ஆனால், மிஷின் சரியாக ஓடவில்லை. ஏமாற்றப்பட்டது தெரிந்து, நானே வேறொரு மிஷினை உருவாக்கி பென்சில் தயாரித்தேன்....

பின், நான் உபயோகப்படுத்தும், பசையில் தவறு இருப்பதை அறிந்து, அதை சரி செய்து, நல்ல தரமான பென்சிலை உற்பத்தி செய்ய ஆரம்பித்தேன்...."21 comments:

Bhanumathy Venkateswaran said...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

போற்றத்தக்கவர்கள்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்ல அறிமுகங்கள். தன் செலவில் பிற உயிர்களை காக்கும் ஒப்பற்ற சேவை செய்யும் அமானுல்லாவும், விடாமுயற்சியில் சிறந்து விளங்கும் அய்யாத்துரையும் பாராட்டுதலுக்குரியவர்கள். பகிர்வுக்கு நன்றி.

அனைவருக்கும் சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்களை.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

KILLERGEE Devakottai said...

முயற்சி திருவினையாக்கும் நல்ல உள்ளங்கள் வாழ்க!

நெ.த. said...

நல்ல அறிமுகம். வாழ்த்துகள்.

துரை செல்வராஜூ said...

நெடுந்தூரத்தில் இருந்து - தங்களுடன்..

இன்றுதான் இணையம் கிட்டியது...

மலைகளும் வனங்களும் அரவணைத்துக் கொண்டிருக்கின்றன...

அது எந்த வனமாக இருக்கும்!?...

துரை செல்வராஜூ said...

அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்...

வெங்கட் நாகராஜ் said...

மாலை வணக்கம்.

இந்த வாரத்தில் நற்செய்திகள் - நல்ல மனிதர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu said...

அமானுல்லாவுக்கு பொக்கே!

சிவகாசி இளைஞருக்கு வாழ்த்துகள்.

--இருவரின் கருத்தும்

Geetha Sambasivam said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu said...

மலைகளும் வனங்களும் அரவணைத்துக் கொண்டிருக்கின்றன...

அது எந்த வனமாக இருக்கும்!?...//

துரை அண்ணா களக்காடு/அகஸ்தியர் வனம்? அல்லது கேரளத்து வனம் செங்கோட்டை அருகில் இருக்கிறதே.தென்மலா (மிக அருமையான இடம்)..மேற்குத்தொடர்ச்சி மலையில்..அலல்து அச்சன் கோயில்?.. நீங்கள் நெல்லையில் அன்று இருந்ததாகச் சொன்னதால் அப்புறம் கடற்கரையில் துயில் கொண்டதாகச் சொன்னதால் இப்படி ஒரு ஊகம்...

சரியா துரை அண்ணா?

கீதா

middleclassmadhavi said...

Thanks for sharing good news!!
Ellorukkum thamizh puthaandu vaazhthukkal

காமாட்சி said...

ஸொந்த சிலவில் இலவச ஆம்புலன்ஸ் சேவை. எவ்வளவு உதவும் தன்மை. அதுவும் சிகிச்சை பெற.மனதில் தெய்வமாகவே உதவி பெற்றவர்கள் நினைத்துப் போற்றியிருப்பார்கள். வாழ்க அமானுல்லா. முயற்சி திருவினையாக்கும் அப்பாதுரையும் போற்றத் தக்கவர்.
யாவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
சினிமா,அதன் பாடல்கள் இவைகள் எனக்குப் போதாது. அதனால் பங்கு கொள்ள முடிவதில்லை. எங்கள் பிளாக் எல்லோருக்கும் வாழ்த்துகள். அன்புடன்

athira said...

https://www.youtube.com/watch?v=ibAcbQqDX5Y&feature=share

கோமதி அரசு said...

நல்ல உள்ளங்கள் வாழ்க!
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஏகாந்தன் Aekaanthan ! said...

அமானுல்லா ஒரு கர்மவீரர். அறப்பணிக்காக அரசு விருது கொடுக்கப்படவேண்டும். உண்மையில் அப்படி ஒரு விருது தமிழ்நாட்டில் இருக்கிறதா ? நடிக, நடிகைகளை தேவதைகளாகக் கருதும் தமிழ்நாட்டில் அமானுல்லா போன்றவர்களைப்பற்றி தெரியவந்ததே அதிசயம்.

Asokan Kuppusamy said...

அனைவரும் போற்றப்பட வேண்டியவர்கள்

வல்லிசிம்ஹன் said...

அமானுல்லா பற்றிய செய்தி மிக மிக மகிழ்ச்சி தருகிறது. தன் செலவில்
இத்தனை சேவை செய்கிறார் என்று அறிய நெகிழ்ச்சியாக இருக்கிறது.
அனைவருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!


Geetha Sambasivam said...

எபி கணினியில் இப்போ என்ன மணி?

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!