Saturday, April 7, 2018

போதிலெட்சுமி இல்லை, புரட்சிலட்சுமி!
1)  கருணை மிகுந்த கரூர் கலெக்டர்.


2)  பார்வை போனாலும் பதறாமல் தனது கைகளையே கண்களாக்கிக் கொண்டு முழு மூச்சாக வியாபாரத்தில் இறங்கிவிட்டார்.பார்வை இல்லாதவர் என்ற பரிதாபம் காட்டுவது இவருக்கு சுத்தமாக பிடிக்காது. உடல் வேகும் வரை மத்தவங்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது அதற்காக சாகும் வரை உழைக்கணும் என்று சொல்லும் இவர் கடந்த பல வருடமாக இதே இடத்தில்தான் இளநீர் கடை வைத்துள்ளார்.   இளநீர் வியாபாரி ராஜா.


3)  பாவம் புலி...   அதன் சாப்பாடு போச்!  முறத்தால் அல்ல, கம்பால் புலியை அடித்து விரட்டிய மகாராஷ்டிரப்பெண்!


4)   போதிலெட்சுமி இல்லை, புரட்சிலட்சுமி!   திருமணம் குழந்தை குடும்பம் என்று சராசரியாக வாழ்வதற்கா நான் பிறந்தேன்? என்று தன்னையே கேட்டுக்கொண்டவர் நாட்டிற்கு வீட்டிற்கும் பலன்தரும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணினார்.5)  பலனை எதிர்பாராது மரங்களை வளர்க்கும் மாமனிதர்.  தனக்கு மட்டுமல்லாது ஊருக்கே உதவுமே...29 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க...

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா அனைவருக்கும் வணக்கம்....

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் கீதா ரெங்கன்.

துரை செல்வராஜூ said...

புலியைப் போட்டுப் புரட்டி எடுத்த புரட்சிக் கனல்.... ஆகா!....

சொல்லியாச்சு...

ஆனாலும் புலின்னு பேரைக் கேட்டதும் நமக்கெல்லாம் கிலி தானே...

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா., எல்லோருக்கும்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இன்னிகுத் தெரியாம ப்ளாகர் வழியா நுழையப் பார்த்தேன் அதான் லேட்டு அப்புறம் தான் அட தப்பான வழினு டைரக்டா ப்ளாக் ஹிஹிஹி லேட்டு

கீதா

துரை செல்வராஜூ said...

புலி கனவிலயும் நெனைச்சிருக்காது...

இப்படி ஒரு சாத்துப்படி கிடைக்கும்...ந்னு!..

Bhanumathy Venkateswaran said...

காலை வணக்கம். பின்னர் வருகிறேன்.

ஸ்ரீராம். said...

புலி கனவிலயும் நெனைச்சிருக்காது...

இப்படி ஒரு சாத்துப்படி கிடைக்கும்...ந்னு!..

ஹா... ஹா... அன்றைக்கு சாத்துமுறை போலிருக்கு துரை ஸார்.

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் பானு அக்கா.

நெ.த. said...

அனைத்தும அருமை. ஆட்சியாளர் எளிமையான அம்மாவுடன் அமர்ந்து உண்ணும் உணவு மனதை நெகிழ்த்தியது. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

துரை சார் - சாத்துப்படி - இந்த வார்த்தையைக் கேட்டு எவ்வளவு காலமாகிவிட்டது.

KILLERGEE Devakottai said...

தன்னம்பிக்கைவாதிகள் வாழ்க வளமுடன்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சாதிக்க நினைப்போரை அறிமுகப்படுத்திய விதம் அருமை.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் பாராட்டப்பட வேண்டியவர்கள். புலியை விரட்டிய வீராங்கனை, பார்வை குறைபாடு இருந்தும் தன்னம்பிக்கையுடன் பாடுபடுபவர், பிளாஸ்டிக் பைகள் ஒழிப்புச் செயலை கொண்டு வந்தவர், மரங்களின் பயனுணர்ந்து மற்றவர்களுக்கும் பயனாக நிழலாக மரங்களை வளர்த்து வருபவரும் அனைவருமே மனதை நிறைத்து விட்டனர். போற்றப்பட வேண்டியவர்கள்.
பகிர்வுக்கு நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

ராஜா ராஜா தான்...

Asokan Kuppusamy said...

அனைவரும் பாராட்டத்தக்கவர்கள்

Bhanumathy Venkateswaran said...

எல்லோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்தான் என்றாலும் நல்லது செய்ய கஷ்டப்படு ஜோதிலக்ஷ்மி கவனிக்க வைக்கிறார். அவர் லட்சியம் விரைவில் நிறைவேரட்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

கலெக்டர் ஆஹா போட வைத்தார்...இப்படி எளிமையான அதிகாரிகள் இருந்துவிட்டால் நன்மை பல பயக்கும்...அந்தக் கலெக்டரைப் பார்த்ததும் நம் நண்பர் குடந்தை சரவணன் போலவே இருக்கிறார் என்று தோன்றியது...(அதே ஒல்லி முக ஜாடை சைடில் கை நீட்டி இருக்கும் அந்த மேனரிஸ்ம்)

இருவரின் கருத்தும்


கோமதி அரசு said...

கரூர் கலெக்டர் வாழ்க! பாராட்டபட வேண்டியவர்.
இளநீர் வியாபாரி கண் தெரியவில்லை என்றாலும்தன் உழைப்பால் வாழ்கிறார், அவரை ஒருவர் ஏமாற்றுகிறார் என்ன சொல்வது?

புலியை அடித்து விரட்டிய பெண்புலி வாழ்க!

புரட்சி லட்சுமியின் உழைப்பு வீண் போகாமல் இவரது பேராட்டம் வெற்றி பெற்று பிளாஸ்டிக் மூலப்பொருள் கலந்த ரோடுதான் போடவேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும்.

நிழல் தரும் மரம் நட்டு மக்கள் அதில் இளைப்பாற செய்த ந்ல்ல உள்ளம் வாழ்க!
அனைத்து நல்ல உள்ளங்கள் வாழ்க!
நற்செய்தியை அளித்த எங்க்ள் ப்ளாக் வாழ்க!

Thulasidharan V Thillaiakathu said...

இளநீர் வியபாரி வியக்க வைக்கிறாஅர். தன்னம்பிக்கை!!

நாமெல்லாம் புலியைத் தூரத்தில் பார்த்தாலே மெதுவாக பதற்றத்துடன் எங்கேனும் ஒளிந்துகொள்ளப் பார்ப்போம்...மஹாராஷ்டிரப் பெண்ணும் அம்மாவும் புலியுடன் போராடி ஆட்டைக் காப்பாற்றியது என்ன தைரியம் என்று வியக்க வைக்கிறது.

பலன் எதிர்பாரா மனிதரும், புரட்சி லட்சுமியும் இருவருக்கும் பாராட்டுகள்...வாழ்த்துகள்..

இருவரின் கருத்தும்...

ஏகாந்தன் Aekaanthan ! said...

பார்த்து பார்த்துத்தான் அன்பழகன் என்று வைத்தார்களோ பெயரை, உமது அன்னையும் தந்தையும்..
கண்போனாலும் உழைத்துச்சாப்பிடுகிறார். ஏழையாயிற்றே என அரசும் இலவசப் பட்டா கொடுத்திருக்கிறது. ஆனால், கண் தெரியாதவனுக்கு வீடுஒருகேடா என நினைத்துவிட்டான் ஒரு கேடி..
போதிலட்சுமிக்கு வியாபாரச் சமூகம் கைதட்டும். கைகொடுக்காது. ப்ளாஸ்டிக் மனங்கள்..
எதுவந்தாலும் போனாலும், மரங்கள் நடுவதை விடுவதில்லை இந்த ஏழுமலை..

மனிதனென்னும் போர்வையில்.. மிருகம் வாழும் நாட்டிலே..
புலியைக்கூட கம்பெடுத்து துரத்திடுவார் பெண்களே..

தி.தமிழ் இளங்கோ said...

சிறப்பான தொகுப்பு.

ராஜி said...

புரட்சிலட்சுமி மட்டுமே புதியவர்...

இளநீர் வியாபாரியை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை...

நல்லவர்கள் வாழ்க வளமுடன்

துரை செல்வராஜூ said...

அன்பின் நெ.த.,

பெருமாளுக்கென்றால் -
சாற்றுப்படி...

ஆசாமிகளுக்கென்றால் -
சாத்துப்படி!...

ஆகா!....

ராமலக்ஷ்மி said...

பாராட்டுக்குரியவர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

தன்னம்பிக்கை தரும் மனிதர்கள்... தொடரட்டும் பாசிட்டிவ் மனிதர்கள் பற்றிய தகவல்கள்.

வாழ்த்துகள் ஸ்ரீராம்.

Geetha Sambasivam said...

arrived!

Geetha Sambasivam said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!