வெள்ளி, 11 மே, 2018

வெள்ளி வீடியோ 180511 : தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்



     'ஒரு பாடலைப் பல ராகத்தில் உனைப்பார்த்துப் பாடினேன்' என்றொரு எஸ் பி பி பாடல் உண்டு.  அதையும் ஒருநாள் பகிர்கிறேன்!  ஆனால் இப்போது ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு பாடலை வெவ்வேறு ராகங்களில் கேட்கப் போகிறோம்!  வெவ்வேறு திரைப்படங்களில் அதே பாடல்!





     இந்தப் பாடல் பற்றி ஒரு வருடத்துக்கு முன் முக நூலில் சர்வபௌமான் எனும் நண்பர் ஒரே பாடல் இத்தனை முறை திரையில் பயன்படுத்தப்படுவது இதைப்போல வேறு உண்டா என்று கேட்டிருந்தார்.  சமீபத்தில் அதில் ஒரு கமெண்ட் வந்து நினைவுபடுத்த, அந்தப் பாடலையே இந்த வாரம் வெளியிட்டுவிட்டேன்.  


     மஹாகவி பாரதியாரின் "மங்கியதோர் நிலவினிலே" பாடலைத்தான் குறிப்பிடுகிறேன்.  முதலில் டி எம் சௌந்தரராஜன் குரலில்.


​     திருமணம் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்.  ஜெமினி கணேசன் சாவித்ரி நடித்த படம்.  இசை எஸ் எம் சுப்பையா நாயுடு.    1958 இல் வெளிவந்த படம்.

     காட்சி எல்லாம் கிடையாது.  பயப்படாமல் தைரியமாகப் பார்க்கலாம் சே...  கேட்கலாம்!  சிவாஜி படம் வந்திருக்கிறதே தவிர படத்துக்கும் சிவாஜிக்கும் சம்பந்தம் கிடையாது.




     

     அடுத்து சி எஸ் ஜெயராமன் .  பாவை விளக்கு திரைப்படம்.   





     1960 இல் வெளி வந்த படம்.  சிவாஜி கணேசன் - சௌகார் ஜானகி நடித்த படம்.  அகிலனின் கதைக்கு திரைக் கதை வசனம் ஏ பி நாகராஜன்.  இயக்கம் மட்டும் சோமு.   கே வி மகாதேவன் இசை.  கூடுதல் தகவல், என் அப்பாவுக்கு சி எஸ் ஜெயராமன் வெர்ஷன்தான் பிடிக்கும்!




     https://www.youtube.com/watch?v=6CZMVN9MLpo  தேவநாராயணன் என்பவர் பாடி இருக்கும் இந்த டியூனில் எஸ் பி பி பாடி இருக்கும் இந்தப் பாடல் என் ஃபேவரைட்.  திரு தேவநாராயணன் சொந்தமாக இசை அமைத்துப் பாடி இருக்கிறார் போலும்.  அந்தப் பக்கத்தில் அவரைப் பற்றிய கருத்துகள் சுவாரஸ்யம்.  இவர் குரல் டி ஏ மோதி குரல் போலவும், ஏ எம் ராஜ குரல் போலவும் ஒலிக்கிறது.


      

      இனி எஸ் பி பி :  இனிமையான ஆரம்ப இசையுடன் இந்தப் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  மனிதனின் கதை சீரியலில் வந்த பாடல் என்று நினைவு.    ஊடாடும் ஒரு பெண் குரலுடன் நெகிழ்ந்து வரும் எஸ் பி பியின் குரல் வசீகரம்.  பாடல் மெதுவாகச் செல்வதை பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.  

     ஒரு நல்ல செய்தி.  பகிர்ந்திருக்கும் எந்தப் பாடலிலும் காட்சி கிடையாது!




​ மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் கண்டேன்

வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
புன்னகையின் புது நிலவு போற்ற வரும் தோற்றம்
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும்
தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
துங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து
அங்கதனிற் கண்விழித்தே அடடா .. ஓ... அடடா
காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
அழகெனும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
[ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்] ​




     இதில் சௌந்தர்ராஜனை ரசித்தவர்கள் யார்?  சி எஸ் ஜெயராமனை ரசித்தவர்கள் யார்?  எஸ் பி பாலசுப்ரமணியத்தை ரசித்தவர்கள் யார்?!

91 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, பானுக்கா எல்லோருக்கும்…

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஹப்பா மூச்சு வாங்குது....!!

    ஸ்ரீராம் இப்பத்தான் வெங்கட்ஜியோடு சேர்ந்து ஜிப்ஸியில் தொற்றிக் கொண்டு கிட் ஃபாரஸ்டை கிர் என்று சுற்றி வந்தேன் நீங்களும் சுவர் ஏறி வந்து குதிச்சு ஜிப்ஸியில் தொற்றிக் கொண்டீர்களே!! நான் நேராக ஓடி முட்டி மோதி தொற்றிக் கொண்டேன்…..ரகசியம் நாம ரெண்டு பேரும் ஜிப்ஸில இருந்தது வெங்கட்ஜிக்குத் தெரியாதாக்கும்…ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  4. துரை அண்ணா நேரா வந்துட்டீங்களா சுவர் ஏறிக் குதிக்க வேண்டி வந்ததா இன்று!!? ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    // நாம ரெண்டு பேரும் ஜிப்ஸில இருந்தது வெங்கட்ஜிக்குத் தெரியாதாக்கும்…//

    ஆமாமாம்... ஆனா ரெண்டு வாட்டி சிங்கம் நம்மைப் பார்த்து நட்புடன் புன்னகைத்ததும் வெங்கட் சந்தேகமா திரும்பிப் பார்த்தார். அப்பவும் அவருக்குத் தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
  6. இனிய இசை எல்லாம் பிடிக்கும்...
    அப்புறமாக வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  7. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  8. அப்புறமா வந்து எல்லாப் பாட்டையும் கேளுங்க துரை ஸார்.

    பதிலளிநீக்கு
  9. இதில் அண்ணன் சி.எஸ்.ஜெயராமன் பாடியதை மிகவும் இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  10. அருமையான பாடல். மனதையும் நிலவையும் மங்கையையும் இணைத்தால் இப்படித்தான். டி எம் எஸ்,. முதல்,
    சி.எஸ் ஜயராமன் ரொம்பப் பிடிக்கும்.
    அருமை அருமை.
    இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. எல்லாப் பாடல்களும் அருமை...

    SPB பாடியுள்ளதை இப்போது தான் கேட்கிறேன்..

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் வல்லிம்மா.. நன்றி ரசித்ததற்கு.

    பதிலளிநீக்கு
  13. துரை செல்வராஜூ ஸார்..

    எஸ் பி பி இதைத்தவிர வேறு சில பாரதியார் பாடல்களும் அதே சீரியலில் பாடி இருப்பார். "வானம் எங்கும் பரிதியின் சோதி" "என்ன உறவுகள் என்னென்ன பெருமைகள் எத்தனை மேன்மைகளோ" , "விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக் குருவியைப் போலே" இப்படி.. . அத்தனையும் குட்டி குட்டிப் பாடல்கள். அவை எல்லாம் கிடைக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  14. ஆமாமாம்... ஆனா ரெண்டு வாட்டி சிங்கம் நம்மைப் பார்த்து நட்புடன் புன்னகைத்ததும் வெங்கட் சந்தேகமா திரும்பிப் பார்த்தார். அப்பவும் அவருக்குத் தெரியவில்லை!//

    ஹா ஹா ஹா ஹா ஹா....ஆமாம் ஆமாம் ஸ்ரீராம்...அப்புறம் கொஞ்ச தூரம் போனதும் அவை நமக்கு ஷேக் ஹேன்ட் கொடுக்க முன் கையை நீட்டியதே அதையும் இங்கு சொல்லணுமே! அதைப் பார்த்து வெங்கட்ஜி வியந்து பார்த்தாராக்கும். அப்பவும் தெரியலை அவருக்கு..ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  15. ஆனால் இப்போது ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு பாடலை வெவ்வேறு ராகங்களில் கேட்கப் போகிறோம்! வெவ்வேறு திரைப்படங்களில் அதே பாடல்!//

    ஆஹா ஆஹா!! ஹையோ ஆவல் அதிகரிக்குதே..வெரி இன்ட்ரெஸ்டிங்க்.இதோ கேட்டுட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  16. முதல் பாடல் ஆரம்பம் தேஷ் ராகத்தில். என்ன அருமையாக இருக்கு...அந்த ஃப்ளூட்!! டி எம் எஸ் வாவ்!! யார் இசை ஸ்ரீராம்...இந்தப் பாடலுக்கு ஏற்ற மெட்டு...மேலே போகும் போது அந்த தேஷின் எஸன்ஸ்..அருமை ரசித்தேன் ரசித்தேன்...அப்புறம் கடைசியில் மான்ட் வருவது போல் உள்ளது...

    கீதா

    பதிலளிநீக்கு
  17. அன்பின் ஸ்ரீராம்..

    உங்களுக்கு மட்டும் ரகசியமாய்....

    அன்னம் கூட அவளிடத்தில்
    வந்து நடை பயிலும்....

    என்ற வரிகளுடன் ஒரு பாடல்...

    உங்களுக்குத் தெரிந்திருக்கும் என
    நினைக்கிறேன்....

    சி.ஜெ. அவர்கள் பாடியது...

    அந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்...

    ஏனென்றால்...

    யாருங்க.. அது!...
    மலரும் நினைவுகளைப் பேசறப்போ
    குறுக்கால வர்றது?...

    என்னது ஸ்வீட் 61 ஆ!?...

    பதிலளிநீக்கு
  18. மங்கியதோர் நிலவினிலே எனக்கு மிகவும் பிடித்த பாடல். எனக்கு டி.எம்.எஸ். பாடியது மிகவும் பிடித்தது. பாரதியார் பாடியிருந்தால் இப்படித்தான் பாடியிருப்பார் என்று தோன்றியது. மிகவும் பாவபூர்வமாக இருந்தது. அடடா! ஓ அடடா என்பதை அவர் பாடியிருக்கும் விதம் அடடா!

    இதை பாடியிருப்பது எஸ்.பி.பி.யா என்று தோன்றியது. அவருடைய குரலில் கொப்பளிக்கும் குழுவும் குறும்பும் மிஸ்ஸிங். பாடல் நன்றாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. முதல் பாடலில் கடைசியில் மான்ட் வருவது போல் தோன்றியது ஆனால் தேஷ் தான் ..

    இரண்டாவது பாடலும் சூப்பராக இருக்கு சிவரஞ்சனி சிஎஸ்ஜே சூப்பர் ரசித்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  20. துரை ஸார்...

    //அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்..../

    ஆடல்கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்...! சிவாஜியும் இந்தப் பாடலில் கரகரப்பான தகரக்குரல் கொடுத்திருப்பார். சி எஸ் ஜெ பாடல்களில் எனக்கு காவியமா நெஞ்சின் ஓவியமா, அன்பாலே தேடிய என், விண்ணோடு முகிலோடும் போன்ற பாடல்கள் மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  21. வாங்க பானு அக்கா.. டி எம் எஸ் அந்த நேரத்து மிகப் பிரபல பாடகர். நன்றாயிருக்கிறதுதான். ஆனால் நிலவில் பாடுவது போல இல்லாமல் வெயிலில் பாடுவது போல இருக்கு!

    :)))

    பதிலளிநீக்கு
  22. வாங்க கீதா...

    முதல் பாடல் தேஷா? பேஷ்... பேஷ்.. அதுக்குதான் நீங்க வரணும்ங்கிறது! யார் இசையா? நான் எழுதி இருந்ததைப் படிக்கவே இல்லையா? எல்லா விவரமும் கொடுத்திருக்கேனே...

    இரண்டாவது சிவரஞ்சனியா? ஸூப்பர்.

    மூன்றாவது?

    பதிலளிநீக்கு
  23. எனக்கு மிகவும் பிடித்த பாடலுக்கு முதலில் நன்றி.
    மூவர் பாடிய பாடலும் அருமை.
    பாலசுப்பிரமணியம் இடை இடையே சிரிப்பதும், குரலை குழைவாய் வைத்து பாடுவது நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  24. மூன்றாவது மோகனத்தில்....ஸ்லோ டெம்போவில் வித்தியாசமாய் இருக்கு...இப்பத்தான் கேட்கிறேன்...ஸ்ரீராம்..

    முதல் இரண்டு பாடல்களும் கேட்டதுண்டு ஆனால் அடிக்கடி அல்ல.

    மூன்றுமே வேறு வேறு ராகம் மெட்டு....பாட்டின் மூட் கூட இல்லையா ஸ்ரீராம். முதல் பாடல் ஜாலியாகக் காதல்?...அந்தக்காலத்துக் காதல்...இரண்டாவது சோகம்....மூன்றாவது இரண்டிற்கும் நடுவாந்தரமான தாய்....ஸ்லோ டெம்போவில்....கொஞ்சம் வித்தியாசமாய் எஸ்பிபி வாய்ஸ் நன்றாக இருக்கிறது.

    முதல் பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போல் மெட்டும் இசையும் இருப்பது போல் எனக்குத் தோன்றியது...அந்த பாட்டிற்கான மூட் என்று சொல்லலாமா?..

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ஸ்ரீராம்...

    இன்னொரு பாடலும் உண்டு..

    ஆயிரங்கண் போதாது -
    வண்ணக்கிளியே....

    இந்தப் பாடல் தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாகஸ்வரத்தில் தேனாக வழியும்...

    ஆகா!...

    பதிலளிநீக்கு
  26. வாங்க கோமதி அக்கா... ரசித்தமைக்கு நன்றி. எஸ் பி பி குரலில் நீங்கள் குறும்பு இருக்குங்கறீங்க... பானு அக்கா இல்லைங்கறாங்க... என்னவோ போங்க...!!!!

    :)))

    பதிலளிநீக்கு
  27. //இன்னொரு பாடலும் உண்டு.. ஆயிரங்கண் போதாது - வண்ணக்கிளியே....//

    ஆமாம்... ஆமாம்.. சுகமான பாடல் துரை செல்வராஜூ ஸார்..

    பதிலளிநீக்கு
  28. மோதி குரல் போலும், ராஜா குரல் போலவும் தான் உள்ளது.
    அருமையான பாடல் பகிர்வு.
    நான் கேட்டு இருக்கிறேன், மோதி என்றே நினைத்தேன்.மோதிக்கு இன்னொரு பேர் புருஷோத்தமன் .

    பதிலளிநீக்கு
  29. முகநூல் வழியாக வந்தேன். உங்கள் தளத்திற்கு.

    பதிலளிநீக்கு
  30. கீதா... மூன்றாவது மோகனமா? நல்லது. அதன் ஓரினினல் கேட்டீர்களா? அவர் யார்? உங்களுக்குத் தெரியுமா?

    பதிலளிநீக்கு
  31. கோமதி அக்கா.. ஆனால் இவர் மோதியும் இல்லை, ராஜாவும் இல்லை. படித்தீர்கள்தானே? மோதியின் பெயர் புருஷோத்தமன் என்பது நான் அறியாத தகவல்.

    பதிலளிநீக்கு
  32. ஆ... அப்போ உங்களுக்கும் தளம் திறக்கவில்லையா? முகநூல் சுவர் ஏறித்தான் வந்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  33. திருமணம் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல். ஜெமினி கணேசன் சாவித்ரி நடித்த படம். இசை எஸ் எம் சுப்பையா நாயுடு. 1958 இல் வெளிவந்த படம்.//

    ஸ்ரீராம் பார்த்துட்டேன்....அது வேற ஒன்னுமில்லை ஸ்க்ரீன் ஓடிக் கொண்டே ஜம்ப் அடித்துக் கொண்டே இருந்தது அதில் விட்டிருக்கேன் இப்ப வாசித்துவிட்டேன்...சுப்பையா நாயுடு இசை என்பதை...

    கீதா

    பதிலளிநீக்கு
  34. எஸ்பிபி மீண்டும் கேட்டேன். வாய்ஸ் முதலில் மிக மிக வால்யூம் லோவாக இருந்தது போல் ...அதுவும் பக்கத்திலேயே டிடிடி சானல் மந்திரம் ஓடிக் கொண்டிருக்கு...நமக்குத்தான் காது ...ஹா ஹா ஹா..ஸோ டிவி வால்யூம் குறைத்து விட்டுக் கேட்டேன்...இப்பத்தான் எஸ்பிபி அவரது ஸ்பெஷாலிட்டி ஸ்டைல் கேட்க முடிந்தது. அதுவும் நன்றாகவே இருக்கிறது...ஒவ்வொன்றும் ஒரு விதம்...
    கீதா

    பதிலளிநீக்கு
  35. ஸ்ரீராம் தேவநாராயணன் தானே இசையமைத்துப் பாடியதுதான் ஒரிஜினலா? ஓ அதைத்தான் எஸ்பிபி அந்த சீரியலில் பாடியிருக்காரா? தேவநாராயணன் செமையா ம்யூஸிக் போட்டு பாடியிருக்கார் ஸ்ரீராம். எனக்கு அவர் குரல் ஏ எம் ராஜா குரல் போலத் தோன்றியது. கொஞ்சம் கண்டசாலா சாயல்....மோதி யார் என்பது தெரியாது எனக்கு. அதனால் சொல்லத் தெரியலை...ஆனால் ரொம்ப செமையா இருக்கு இவர் குரலும் இசையும் பாடலும்...இதைக் கேட்டுவிட்டு எஸ்பிபி கேட்ட போது வாய்ஸ் நன்றாக இருந்தாலும் கொஞ்சம் டல்லடித்துவிட்டதோ என்று தோன்றியது. ஸ்லோனால எஸ்பிபி அப்படித் தோன்றியதோ என்னவோ...?

    கீதா

    பதிலளிநீக்கு
  36. அன்பின் ஸ்ரீராம்..

    உங்களுக்கு மட்டும் ரகசியமாய்....//

    துரை அண்ணா நோ நோ நோ இது டூஊஊஊஊஊஊஊஊஊஊஉமச்...அது என்ன ஸ்ரீராமிடம் மட்டும் ரகசியம் இங்கு இத்தனை பேர் உங்கள் மலரும் நினைவுகளைக் கேட்க ஆசையுடன் இருக்கும் போது?!1

    ஹை இப்ப ரகசியம் புட்டுகிச்செ!!! ஹா ஹா ஹா ஹா..

    "ஏனென்றால்"// இப்படிச் சொல்லும் போது குறுக்க வந்தது யாருன்னு தெரியாதா எல்லாம் அந்த தேம்ஸ் ஜல் ஜல் ஜல் மோகினிதான்!!! ஸ்வீட்61 ? ஹையோ அண்ணா அது அப்படித்தான் சொல்லிக்கும் அதுக்கு வயசு 81...

    இதுக்கெ இன்னிக்கு இருக்கு ஒரு ஆட்டம்...அதுவும் வெள்ளி வேறு...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  37. தேவநாராயாணனும் கேட்டதில்லை ஸ்ரீராம் இதுவரை...

    கீதா

    பதிலளிநீக்கு
  38. ஹையா, நான் நேரடியா வாசல் வழியா வந்துட்டேனே! முன்னாடி நான் சொல்லிட்டு இருக்கும்போது எல்லோரும் சிரிச்சீங்க இல்ல! நல்லா வேணும், வேணுங்கட்டிக்கு வேணும்.

    பதிலளிநீக்கு
  39. என்னாது பாட்டா? இது என்ன புது மொழியிலே பேசிட்டு இருக்கீங்க எல்லோரும்! எல்லாத்திலேயும் ஜிவாஜி தானா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பாவை விளக்கு ஜிவாஜி படம் தானே! நான்கு கதாநாயகிகள் இல்லையோ! முதல் கதாநாயகி பண்டரிபாய்னு நினைக்கிறேன். அடுத்து செங்கமலம் குமாரி கமலா என்னும் கமலா லட்சுமணன், சோபிக்கலை. சௌகார் தான் ஜிவாஜியைக் கல்யாணம் பண்ணிப்பார். உமாவாக வருவது எம்.என்.ராஜமோ? தெரியலை! ராஜசுலோசனா? யாரா இருந்தாலும் உமா பாத்திரத்துக்குப் பொருந்தாமல் தான் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  40. பாட்டெல்லாம் கேட்டுட்டு மறுபடி வரேன். இன்னிக்கு ரங்க்ஸோட ஐபாட் காலங்கார்த்தாலே அப்டேட் பண்ணும்போது திடீர்னு பாஸ்வர்ட் கேட்க அவர் தப்பாய்ச் சொல்ல அது மூடிக் கொண்டு விட, அதைத் திறக்க அரைமணி நேரம் கஷ்டப்பட்டேன். ஒரு வழியாத் திறந்தது மடிக்கணினி வழியா! :(

    பதிலளிநீக்கு
  41. எஸ்பிபியும், தேவநாராயணனும் தூக்கம் வர வைச்சுட்டாங்க. சாப்பிட்டுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
  42. இன்று காலையிலிருந்தே பழையபாடல்களைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் (காலை எழுந்தவுடன் காப்பி..பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு.. மாலைமுழுதும் கிரிக்கெட்டு..என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா!). எபி-யில் மூன்று வர்ஷனையும் கேட்டேன்.

    நீங்கள் கொடுத்திருக்கும் பாடல் வரிகள் முன்னும் பின்னுமாக சில இடத்தில் அச்சேறியிருக்கிறது! (சிவாஜி ஸ்லைடுகளைத் தவிர்க்கப் பிரயத்தனப்பட்டு பாடல் வரிகளைக் கவனித்ததால் இந்த கமெண்ட்டு.)

    ஜெயராமன், பாலசுப்ரமணியம் இருவரும் கடைசி பாராவைப் பாடவில்லை -நீங்கள் போட்டிருக்கும் வீடியோவில். என்ன அவசரமோ!

    மூன்றையும் நிதானமாகக் கேட்டதில் என் தரவரிசை இப்படி:
    1. சி.எஸ்.ஜெ. 2. எஸ்.பி.பி 3.டி.எம்.எஸ்.

    பாரதியின் பாடலின் ஆன்மாவை சரியாக ஸ்பரிஸித்தவர் சி.எஸ்.ஜெயராமனே என்பேன்.

    பதிலளிநீக்கு
  43. வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
    கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள் ..

    -என்கிற விஷயத்தை துரை, ஸ்ரீராமுக்கு மட்டும் கோடிட்டுக் காட்ட விரும்பியதின் மர்மப் பின்னணி என்னவோ!

    பதிலளிநீக்கு
  44. அனைத்துப் பாடல்களுமே அருமை. ஒன்றையொன்று ஒப்பிட முடியாத அளவு சிறப்பு வாய்ந்தவை.

    பதிலளிநீக்கு
  45. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் இண்டைக்குச் ஸ்ரீராம் ஆதி காலத்துக்கே போயிட்டார்ர்ர்...குறை நினைச்சிடாதீங்கோ.. இப்படி இழுத்தூஊஊஊஊஊ இழுத்தூஊஊஊஊஊப் பாடும் பாடல் எனில் பய்ந்து ஓஃப் பண்ணிடுவேன்.. :).. இங்கு மூன்று பாடல்களும் ஸ்லோவோ....ஸ்லோ... மற்றும்படி வரிகள் அழகு...

    வண்ணவிழி மலராதோ.. வாய் திறந்து பேசாதோ.. என்னுயிரே எழுந்தென்னைப் பாஆஆஆஆர்ர்ர்ர்ர்..பார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நினைவுபடுத்தியது தலைப்பூஊஊ.

    பதிலளிநீக்கு
  46. ///வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை///

    இன்று வெள்ளிக்கிழமையும் அதுவுமா.. நேக்கு ஒரே ஷை ஷையா வருதேஏஏஏஏஏஏஏ....:) ஹா ஹா ஹா.
    ----------------

    ///எஸ் பி பாலசுப்ரமணியத்தை ரசித்தவர்கள் யார்?!
    //
    இதில் எஸ் பி பால... ஐக் கேக்கிறீங்களோ? எஸ் ஆர் பால... ஐக் கேட்கிறீங்களோ?:)

    பதிலளிநீக்கு
  47. @ Thulasidharan V Thillaiakathu said...

    உங்களுக்கு மட்டும் ரகசியமாய்....//

    "ஏனென்றால்"// இப்படிச் சொல்லும் போது குறுக்க வந்தது யாருன்னு தெரியாதா எல்லாம் அந்த தேம்ஸ் ஜல் ஜல் ஜல் மோகினிதான்!...

    இதுக்கெ இன்னிக்கு இருக்கு ஒரு ஆட்டம்...அதுவும் வெள்ளி வேறு...ஹா ஹா ஹா ஹா..//

    இன்றைக்கு வெள்ளிக்கிழமையும் அதுவுமாய்!...

    ஆகா... சாம்பிராணி போட்டாயிற்றா!...

    பதிலளிநீக்கு
  48. @ ஏகாந்தன் Aekaanthan ! said...

    >>> வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
    கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள் ..

    -என்கிற விஷயத்தை துரை, ஸ்ரீராமுக்கு மட்டும் கோடிட்டுக் காட்ட விரும்பியதின் மர்மப் பின்னணி என்னவோ!..<<<

    அது ஒரு கனாக் காலம்!...
    என் நண்பன் ராஜேந்திரனுடையது...

    பதிலளிநீக்கு
  49. @ துரை செல்வராஜூ :

    ..அது ஒரு கனாக் காலம்!...என் நண்பன் ராஜேந்திரனுடையது...//

    ஓ !

    பதிலளிநீக்கு
  50. கீதாக்கா... பாவை விளக்கு பற்றி ஒரு விக்கிபீடியா அளவுக்கு விஷயம் சொல்றீங்க... அடேங்கப்பா... தூள்!

    பதிலளிநீக்கு
  51. வாங்க ஏகாந்தன் ஸார்..

    வரிகளை வேறு இடத்திலிருந்து எடுத்துக் போட்டேன். கடைசி பாராவை அடைப்புக்குறிக்குள் அதனால்தான் போட்டேன்! பாடல்களை வரிசைப்படுத்தி தீர்ப்பும் சொல்லி விட்டீர்கள். நன்று.

    பதிலளிநீக்கு
  52. ஏகாந்தன் ஸார்.. அதை துரை செல்வராஜூ ஸாரிடம்தான் கேட்கவேண்டும்!

    பதிலளிநீக்கு
  53. வாங்க அதிரா.. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடலில் எஸ் பி பியின் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நீங்கள் சொல்லி இருக்கும் வரிகள் உலக்கை நாயகன் குரலில் வரும்! சரியா?

    எஸ் ஆர் பாலசுப்ரமணியாம அது யார்? நான் ஏதாவது தப்பா டைப் பண்ணியிருக்கேனா?

    பதிலளிநீக்கு
  54. துரை ஸார்..

    // அது ஒரு கனாக் காலம்!...
    என் நண்பன் ராஜேந்திரனுடையது... //

    புதிருக்கு மேல் புதிராக போடுகிறீர்கள்.. எப்போது விடுவிப்பீர்கள்? அது என்ன கதை?

    பதிலளிநீக்கு
  55. கீதா.. பின்னூட்ட மழைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  56. எல்லாமே உங்க வயசுக்கு தகுந்த பாட்டாவே இருக்கே! என் வயசுக்கு தகுந்த மாதிரி ஒரு பாடலையும் காணோமே!

    பதிலளிநீக்கு
  57. @ ராஜி said...

    >>> எல்லாமே உங்க வயசுக்கு தகுந்த பாட்டாவே இருக்கே!
    என் வயசுக்கு தகுந்த மாதிரி ஒரு பாடலையும் காணோமே!... <<<

    ( வயசை சொல்லக் காணோம்!..)

    இருந்தாலும் அடுத்த வாரம் -

    பூப்பூவா பறந்து போகும் பட்டுப் பூச்சி அக்கா -நீ
    பளபள..ன்னு போட்டுருப்பது யாரு கொடுத்த சொக்கா!..

    இந்தப் பாடலை எதிர்பார்க்கிறோம்!..

    பதிலளிநீக்கு
  58. கடந்த காலத்தை நினைவு படுத்தி விட்டீர்கள் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  59. இந்த "அடடா! ஓ, அடடா!வை டி.எம்.எஸ்ஸால் மட்டுமே இப்படிப் பாட முடியும்! சி.எஸ்.ஜெயராமன் ஓகே! உணர்வு பூர்வமாகப் பார்த்தால் டி.எம்.எஸ்ஸுக்கே ஓட்டு! அனுபவிச்சுப் பாடி இருக்கார்.

    பதிலளிநீக்கு
  60. // ஓகே! உணர்வு பூர்வமாகப் பார்த்தால் டி.எம்.எஸ்ஸுக்கே ஓட்டு! அனுபவிச்சுப் பாடி இருக்கார். //

    சபாஷ்... சரியான போட்டி!

    பதிலளிநீக்கு
  61. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  62. சி.எஸ்.ஜெயராமன் குரல் வெத்திலை, பாக்குப் போட்டுக் கொண்டு பாடுவது போல எனக்குத் தெரியும்! ஆனாலும் விண்ணோடும் முகிலோடும் பாட்டை ரசிக்கலாம். டி.எம்.எஸ்ஸின் இந்தப் பாடலை நிறைய ரசிச்சிருந்தாலும் இது ஜெமினிக்கு அவர் கொடுத்த குரல்னு தெரியாது.

    பதிலளிநீக்கு
  63. ஆனால் கீதா அக்கா ஜெமினிக்கு பி பி ஸ்ரீனிவாஸ் குரல்தான் ரொம்பப் பொருத்தம். அப்புறம் ஏ எம் ராஜா!

    பதிலளிநீக்கு
  64. ஆமாம், மோகனுக்குப் பாடகர் சுரேந்தர் குரல் பொருந்தினாப்போல் ஜெமினிக்கு ஏ.எம்.ராஜாவும், பி.பி.எஸ்ஸும்! மோகன் நடிப்பது நின்னதும் சுரேந்தர் தான் பாவம் இப்போ வாய்ப்பே இல்லாமல் கஷ்டப்படுகிறார்! :(

    பதிலளிநீக்கு
  65. @ ஸ்ரீராம்
    //எஸ் ஆர் பாலசுப்ரமணியாம அது யார்? நான் ஏதாவது தப்பா டைப் பண்ணியிருக்கேனா?//

    ஹையோ டெய்லி எனக்கும் ஸ்ரீராமுக்கும் திண்டாட்டமாகவே இருக்கே:)).. என் செக் இன்னும் கோயில் கட்டி முடிக்கல்லயாம் கர்ர்ர்ர்ர்ர்:)) இல்லை எனில் வியகம் ஜொள்ளியிருப்பாவே:)..

    அது எஸ் எனில் ஸ்ரீ.... ஆர் எனில் ராம்:)) ஹையோ ஹையோ:).. கேள்வியும் நானே பதிலும் நானே நிலைமைக்கு என்னை ஆளாக்கினமே.. 7.5 சனி பகவானே:))

    பதிலளிநீக்கு
  66. // மோகனுக்குப் பாடகர் சுரேந்தர் குரல் பொருந்தினாப்போல் //

    கீதாக்கா... முதலில் இதைக் கேட்கிறோமோ அது! ஆனால் மோகனுக்குப் பேசும்போது எஸ் என் எஸ் குரல் நல்லாயிருக்கும் தவிர அவர் பாடும் பாடல்கள் எனக்குப் பிடிக்காது! ஒரே ஒரு பாடல் ஓகே ரகம்... "தனிமையிலே... ஒரு ராகம், ஒரு தாளம்..."

    பதிலளிநீக்கு
  67. அதிரா...

    // எஸ் எனில் ஸ்ரீ.... ஆர் எனில் ராம்:)) //

    அச்சச்சோ... நாந்தான் டியூப் லைட்டாகிக் கொண்டு வருகிறேன். சின்ன வயசுலயே எனக்கு இப்படி ஆகக் கூடாது! ச்சே....

    பதிலளிநீக்கு
  68. -என்கிற விஷயத்தை துரை, ஸ்ரீராமுக்கு மட்டும் கோடிட்டுக் காட்ட விரும்பியதின் மர்மப் பின்னணி என்னவோ!//

    அப்படிப் போடுங்க ஸாரி கேளுங்க ஏகாந்தன் அண்ணா...இதை இதைத்தான் நான் காலைலருந்து துரை அண்ணாட்ட கேட்டுக்க்ட்டே இருக்கேன்...இப்போ அவர் இன்னும் புதிர் போடறார்...ஸ்ரீராமும் சொல்லிட்டார்....என்ன கதையோ அது தெரியலை...ஹும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  69. துரை அண்ணா நான் சாம்பிராணி எல்லாம் போட்டாச்சு/. போட்டுத்தான் வெயிட் பண்ணினேன் வந்துருச்சே ஜல் ஜல் ஜல்...ஆனா பாருங்க இன்னிக்கு மோகினிய ஓட்டறா மாதிரி வெள்ளிகிழமை பாட்டு போட்டுட்டார் ஸ்ரீராம்!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...அதான் இங்கு இன்று சதிராட்டம் ஆடலை பாருங்க...ஹா ஹா ஹா ஹா துரை அண்ணா நம்ம ரகசியம் இன்னும் மோகினிக்கு எட்டலை..புரியலை..ஹா ஹா ஹாஅ ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  70. // என்ன கதையோ அது தெரியலை...ஹும்..//

    என்னை கதை சொல்லக் சொன்னா... என்ன கத சொல்லறது... சொந்தக் கத சோகக் கத.. கண்ணுக்குள்ள நிக்கிறது...

    பதிலளிநீக்கு
  71. @ அதிரா: 7.5 சனி பகவானே:))//

    இப்படி ஸெவன் பாய்ண்ட் ஃபைவ், ஸெவன் பாய்ண்ட் ஃபைவ் என்று போர்டு தொங்கவிட்டுக்கொண்டிருந்தால், பொதுவாகப் பார்த்துக்கொண்டிருக்கும் சனி பகவான் உற்றுப்பார்க்க ஆரம்பித்துவிடுவார் உங்களை.. ஜாக்ரதை ! பிறகு மிச்சமுள்ள எட்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும்..

    பதிலளிநீக்கு
  72. ஸ்ரீராம் ஜெமினிக்கு பி பி ஸ்ரீநிவாஸ் குரல் சரியாக இருக்கும் என்றாலும் அதற்கு முன்னால் ஏ எம் ராஜா குரல் கூடப் பொருந்தும் போலத் தோன்றும். இல்லையோ?!!

    ஸ்ரீராம் கமென்ட் மழைக்கு நன்றி சொன்னதற்கு நந்நியோ நந்நி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  73. அதிரா நீங்க ரொம்ப மோசம் உங்க செக் கை கேள்வியே கேட்க மாட்டீங்களா. இப்பூடி வகுப்புக்கு அதிகமா லீவ் எல்லாம் போடக் கூடாதுனு வார்னிங்க் கொடுக்க மாட்டீங்களோ?! நாங்க கொடுக்கறோம் ஹா ஹா ஹா ஹா...இன்னும் அதிகம் லீவ் எடுத்தால் பெஞ்ச் மேல நிக்கணும்னு சொல்லிடுவாங்கனு...சொல்லுங்க...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  74. // அதற்கு முன்னால் ஏ எம் ராஜா குரல் கூடப் பொருந்தும் போலத் தோன்றும். இல்லையோ?!!//

    அதையும்தானே சொல்லி இருக்கேன் கீதா?!!!!

    பதிலளிநீக்கு
  75. பாரதிக்கும் சங்கீத ஞானமுண்டு அவர் எந்த ராகத்தில் மெட்டமைத்தாரோ எனக்கு துள்ளி குதிக்கும் டி எம் எஸ் பாடலே அதிகம்பிடித்தது

    பதிலளிநீக்கு
  76. வணக்கம் சகோதரரே

    மூன்றுமே அழகான குரலில் அமைந்தவை. 1ம் 2ம் அடிக்கடி கேட்டுள்ளேன்.
    3 கேட்டதில்லை ஆனால் இப்போது கேட்கும் போது மிகவும் நன்றாக இருந்தது. எஸ். பி யின் குரல் அல்லவா?

    டி. எம் எஸ் குரலில் பாடல் வார்த்தைகளின் சரியான உச்சரிப்போடு நன்றாக இருக்கும். சிவாஜிக்கு அவர் குரல் எப்போதுமே ஒத்துழைக்கும்.

    ஜெமினிக்கு நீங்கள் சொல்வது போல் ஏ. எம். ராஜா இல்லையேல், பி. பி. ஸ்ரீ நிவாஸ்தான் அருமையாக இருக்கும். ஏ. எல. ராகவன் கூட அவருக்கு பாடியிருக்கிறார் என நினைக்கிறேன். சாந்தி நிலையம் படத்தில் 'இயற்கை என்னும்' என்ற பாடலில் எஸ். பி. பி குரல் கூட அவருக்கு ஒத்துழைத்தது என நினைக்கிறேன்.

    ஆனால் சிவாஜிக்கு டி எம் எஸ் மாதிரி வேறு குரல் சரி வராது என்று எனக்கு தோன்றுகிறது.
    டி எம் எஸ் ன் மங்கியதோர் நிலவினிலே அடிக்கடி கேட்டுள்ளேன். 'மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள்' அதுவும் 'அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்ததோ ' அதுவும் டி. எம். எஸ் குரலில் நன்றாக இருக்கும். ஜெயராமின் நீங்கள் சொன்ன பாட்டுகள் அத்தனையும் கேட்க இனியதாக இருக்கும்.

    பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றிகள்

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  77. //ஸ்ரீராம். said...
    அதிரா...

    // எஸ் எனில் ஸ்ரீ.... ஆர் எனில் ராம்:)) //

    அச்சச்சோ... நாந்தான் டியூப் லைட்டாகிக் கொண்டு வருகிறேன். சின்ன வயசுலயே எனக்கு இப்படி ஆகக் கூடாது! ச்சே....//

    ஹா ஹா ஹா ஹா சின்ன வயசெனில் ஒன்றைக் குறைச்சு:) ஒரு 68 இருக்குமோ?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))..

    எனக்கு செவின் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊ:)).. ஹையோ இப்பூடிச் சொல்லிட்டால் சனிபகவானின் கடைக்கண்கூட என்மீது விழாது:)) அவருக்குத்தான் இங்கிலீசு தெரியாதே:)) ஹையோ ஹையோ.. நல்லவேளை என்னை ஆரம்பமே உசார்ப்படுத்திட்டார் ஏகாந்தன் அண்ணன்:)).. இதுக்குத்தான் மச் பார்க்காதீங்கொ எனச் சொன்னேன்:).. பார்த்தீங்களோ மச் பார்ப்பதையும் காப்பி..கோப்பி குடிப்பதையும் நிறுத்தியமையாலதானே இப்பூடி நல்ல ஐடியாவெல்லாம் சொல்லித்தாறீங்க:))..

    ஆண்டவா எனக்கென்னமோ ஆச்சூஊஊஊஊஊஉதுபோல இண்டைக்கு:)) ஏகாதசியாமே இன்று துர்க்கையை வழிபட்டால் நினைச்சது நடகுமென.. கண்ணை மேலேயே செருகி வச்சிருக்கும் சாத்திரியார் சொல்லிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... அதனால நான் நினைச்சதெல்லாம் நடக்கப்போகுதூஊஊஊஉ ஊஊஊஊஊஉ லலலாஆஆஆஆஆ:))

    பதிலளிநீக்கு
  78. ///Thulasidharan V Thillaiakathu said...
    அதிரா நீங்க ரொம்ப மோசம் உங்க செக் கை கேள்வியே கேட்க மாட்டீங்களா. இப்பூடி வகுப்புக்கு அதிகமா லீவ் எல்லாம் போடக் கூடாதுனு///

    அதெல்லாம் மிரட்டிட்டேன்ன் கீதா.. இன்னும் ரெண்டு நாள்தான் அவோக்கு லீவு குடுத்திருக்கிறேன்ன் அதன் பின்பு இங்கினதான் நிற்பா:).. கோயில் கட்டுவதால் ஓவரா மிரட்டாமல் விட்டிருக்கிறென் முடியட்டும் என...:).. ஆனா சமோசா சாப்பிடப்போறேன் என இன்று முழுக்க என்னை மிரட்டுறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சமோசா சாப்பிட்டாவோ இன்னும் ஒரு கிழமைக்கு லீவு போட வேண்டி வரும்ம்ம்:))...

    எனக்கு வேற செவின் பொயிண்ட் ஃபைவ் நடக்குதா[ஹையோ இலக்கத்தில போட்டால் சனி பகவான் க்குத் தெரிஞ்சிடுமாமே.. அதனால ஒவ்வொரு தடவையும் டைப்ப வேண்டிக்கிடக்கே முருகா:)] அதனால மீ கொஞ்சம் சாக்கிரதையா:) இருக்கிறேன்:))..

    பதிலளிநீக்கு
  79. மூன்று வெர்ஷன்களையும் கேட்டேன். எனக்கு டி.எம்.எஸ்., சி.எஸ்.ஜெயராமன், எஸ்.பி.பி. என்ற வரிசையில்தான் பாடல்கள் நன்றாக இருக்கு. டி.எம்.எஸ் குரல் மிகவும் இனிமை. சில பாரதியார் பாடல்கள் சி.எஸ்.ஜெயராமன் குரலில்தான் எடுபடும்.

    பதிலளிநீக்கு
  80. உங்களுக்கு மகர ராசியா அதிரா?

    பதிலளிநீக்கு
  81. வாங்க நெல்லைத்தமிழன். உங்கள் வரிசையைச் சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  82. நன்றி கமலா ஹரிஹரன் சகோ... ஜெமினிக்கு எஸ் பி பி வேறு சில பாடல்களும் பாடியுள்ளார் (ஆயிரம் நிலவு ஆயிரம் கனவு பாடுது மனது)

    இங்கு டி எம் எஸ் குரல் கொடுத்திருப்பது ஜெமினிக்கு.. சிவாஜிக்கு அல்ல. 'மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள்' அதுவும் 'அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்ததோ எல்லாம் செம பாட்டுகள்.

    பதிலளிநீக்கு
  83. ஆமாம். அந்த பாட்டும் கேட்டிருக்கிறேன்
    (ஆயிரம் நிலவு ஆயரம்கனவு) அதுவும் சூப்பர். இப்பத்தான் புதிது புதிதாக பாடகர்கள். புதிதாக மனதில் அமராத பாடல்கள். பழைய பாடல்கள் என்றுமே மனதில் ஒலித்துக் கொண்டேயிருப்பவை.

    பதிலளிநீக்கு
  84. //ஸ்ரீராம். said...
    உங்களுக்கு மகர ராசியா அதிரா?//

    அது எங்கட அம்மாவின் ராசி.. அவவுக்கு கிட்டடியிலதானே ஆரம்பிச்சிருக்கு ஹா ஹா ஹா.. நேக்கு ஆரம்பமாகி கன நாளாகுது... அவரின் பெயரைச் சொன்னாலே[மிஸ்டர் சனி:)] திரும்பிப் பார்த்திடுவாரோ எனப் பயம்ம்ம்ம்மாக்கிடகு ஏகாந்தன் அண்ணன் மிரட்டியதிலிருந்து:)) ஹையோ ஹையோ..

    பதிலளிநீக்கு
  85. சி.எஸ் ஜெ அவர்கள் பாடக்கேட்க அந்தக் காட்சியும் கண்முன் விரிவதாலோ என்னவோ அதுவே கூடுதலாய்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!