Friday, May 18, 2018

வெள்ளி வீடியோ 180518 : உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம்பழைய பாடல்களையே போடுகிறேன் என்று ஏஞ்சல் குற்றம் சாட்டியுள்ள காரணத்தால் இன்றைய பாடல் இன்னும் ரிலீஸ் ஆகாத ஒரு படத்திலிருந்து...


ஆனாலும் நீங்கள் எல்லோருமே இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள்.  சித் ஸ்ரீராம் குரலில் அத்புதமான பாடல்..  (கீதா..  "மறுவார்த்தை பேசாதே" என்ன ராகம் சொன்னீங்க?)  

சமீப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்.  இந்தப் படத்துக்கான இசை தர்புகா சிவா - புதுமுகம்.  ஆனால் இந்தப் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்.  அவரவர்கள் இந்தப் பாடலுக்கான காட்சியை விருப்பம்போல காட்சியாக்கி யூ டியூபில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  இப்போது இந்தப் படத்தின் இயக்குனர் கெளதம் மேனனுக்கு சவால்...  எல்லோரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வண்ணம் காட்சி அமைக்கப்பட வேண்டும்.  என்ன செய்திருக்கிறாரோ!

பாடல்கள் தாமரை.

இதே படத்தில் இன்னொரு பாட்டும் நன்றாயிருக்கிறது.  'எதுவரை போகலாம்'  இரண்டு பாடல்களையும் தருகிறேன் இங்கு.  முழுசும் கேட்டு விட்டுச் சொல்லுங்கள்.  சித் ஸ்ரீராம் பாடிய அந்த இரண்டாவது பாடலைப் பாடுவது கடினம் என்று எனக்குத் தோன்றியது.   முதலில் விசிறி பாடல்.

எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் என்றுதான்
விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள் மட்டுமே போதுமென்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்

யார் யாரோ கனாக்களில்
நாளும் நீ சென்று உலாவுகின்றவள்
நீ காணும் கனாக்களில் வரும்
ஓர் ஆணென்றால் நான்தான் எந்நாளிலும்

பூங்காற்றே நீ வீசாதே ஒஹோஓஒ
பூங்காற்றே நீ வீசாதே நான் தான் இங்கே விசிறி

என் வீட்டில் நீ நிற்கின்றாய்
அதை நம்பாமல் என்னை கிள்ளிக் கொண்டேன்
தோட்டத்தில் நீ நிற்கின்றாய்
உன்னை பூவென்று எண்ணி கொய்ய சென்றேன்

புகழ் பூமாலைகள் தேன் சோலைகள்
நான் கண்டேன் ஏன் உன் பின் வந்தேன்
பெரும் காசோலைகள் பொன் ஆலைகள்
வேண்டாமே நீ வேண்டும் என்றேன் உயிரே…

நேற்றோடு என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்க கண்டேன்
காற்றோடு என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போக கண்டேன்

உன்னை பார்க்காத நாள் பேசாத நாள்
என் வாழ்வில் வீண் ஆகின்ற நாள்
தினம் நீ வந்ததால் தோள் தந்ததால்
ஆனேன் நான் ஆனந்தப் பெண் பால், உயிரே…

எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் என்றுதான் நான் 
விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள் மட்டுமே போதுமென்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்

உன் போன்ற இளைஞனை
மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை
கண்டேன் உன் அலாதி தூய்மையை
என் கண் பார்த்து பேசும் பேராண்மையை

பூங்காற்றே நீ வீசாதே ஒஹோஓஒ

ஆனாலும் மறுவார்த்தை பேசாதே பாடல் மிகவும் பிடித்திருந்தது.


மறுவார்த்தை பேசாதே

மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமை தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே

விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்

மணி காட்டும் கடிகாரம்
தரும் வாடை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்

மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்

முதல் நீ
முடிவும் நீ
அலர் நீ
அகிலம் நீ

தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும், நீ
விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் எனும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தருமுன்பே
கனவாகி கலைந்தாய்

பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்

மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமை தாண்டக் கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே


மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
72 comments:

Geetha Sambasivam said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சமயத்துக்குத் திறக்கலை

Geetha Sambasivam said...

போட்டி இல்லையோ! ரசிக்காதே!

ஸ்ரீராம். said...

வாங்க கீதா அக்கா... காலை வணக்கம். ஆமாம்.. யாரையும் காணோம்! துரை செல்வராஜூ ஸார், கீதா ரெங்கன்... எங்கே அவர்கள்? என்று பாடப்போகிறேன்!

துரை செல்வராஜூ said...

வாழ்க..

துரை செல்வராஜூ said...

இதோ வந்துட்டேன்...

ஸ்ரீராம். said...

வாங்க துரை செல்வராஜூ ஸார்... காலை வணக்கம்.. சுவர் ஏறிக் குதிக்க நேரமாகி விட்டதோ!

துரை செல்வராஜூ said...

மாற்றம்... ஏமாற்றம்!...

ஏதோ ஒரு பழைய பாடலை நாடி வந்தேன்...

அந்த நினைவு
இல்லையேல் இந்த நினைவு என்று
ஓடி வந்தேன்...

தேவதைகளை நினைவு கூர்வதற்கும்
இடையூறா!...

தெய்வமே.. தெய்வமே!...
(ஜிவாஜி ஸ்டைலில்...)

ஸ்ரீராம். said...

ஸார்.. ஸார்... அப்படி எல்லாம் சொல்லாதீங்க... இந்தப் பாடலை, குறிப்பாக 'மறுவார்த்தை பேசாதே' பாடலை கேளுங்கள். ரசிப்பீர்கள்.

துரை செல்வராஜூ said...

வெள்ளி வீடியோவை மலரும் நினைவுகளுக்காக ஒதுக்கி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...

சரி.. என்பவர்கள் கை தூக்கலாம்..
( சும்மா தமாசுக்குத் தான்)..

Bhanumathy Venkateswaran said...

காலை வணக்கம்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

இன்று என்ன பாடல் என வந்தேன். இந்தக் கால பாடல்களை கேட்கும் வாய்புகள் வந்ததில்லை. ஆர்வமும் இல்லையோ எனவும் தோன்றும். பிறகு நிதானமாக கேட்டு விட்டு சொல்கிறேன். உறவினர் வரவால் நேற்று வலை உலா வர இயலவில்லை. அதனால் இன்று காலையில் கண் விழித்ததும் அவர்களும் கண் விழிபதற்குள், வருகை. இடைப்பட்ட நேரத்தில் பாடலை ரசித்துப் பின வருகிறேன். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

//வெள்ளி வீடியோவை மலரும் நினைவுகளுக்காக ஒதுக்கி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...//

துரை ஸார்... கவலை வேண்டாம்.. அஞ்சேல்... அப்படித்தான் வரும். இது எப்பவாவது!

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் பானு அக்கா.

ஸ்ரீராம். said...

வாங்க கமலா ஹரிஹரன் சகோதரி... ரசித்ததற்கு நன்றி. உடல்நிலை முற்றிலும் குணமாகி விட்டதா?

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம்...

இன்று சுவர் ஏறியெல்லாம் குதிக்கவில்லை... இங்கே ரமலான் நோன்பு ஆரம்பமாகி விட்டது...

விடியற்காலை 3.20/3.30 பாதுகாப்பு வளையம் கடந்து உள்ளே நுழையும் நேரம்...

எனவே தான் சற்று தாமதமாகிறது...

தங்கள் அன்பினுக்கு நன்றி...

ஸ்ரீராம். said...

// இன்று சுவர் ஏறியெல்லாம் குதிக்கவில்லை... இங்கே ரமலான் நோன்பு ஆரம்பமாகி விட்டது...

விடியற்காலை 3.20/3.30 பாதுகாப்பு வளையம் கடந்து உள்ளே நுழையும் நேரம்...

எனவே தான் சற்று தாமதமாகிறது...//

அதெல்லாம் சரி துரை ஸார்... பாட்டு கேட்டீங்களா? இரண்டு பாடல்களும்?

:))

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

குணமாகி விட்டது. அன்புடன் நலம் விசாரித்தமைக்கு மிகவும் நன்றி. மதியத்திற்கு மேல் பாடல்களை நிதானமாக கேட்டு ரசிக்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

மெதுவாக, ஒய்வு நேரத்தில் வாருங்கள் சகோதரி.

துரை செல்வராஜூ said...

/// பாட்டு கேட்டீங்களா?..///

இல்லை...
இன்னும் கொஞ்சம் நேரமாகும்..

Bhanumathy Venkateswaran said...

தாமரையின் வரிகளை சித் ஶ்ரீராம் பாடியிருக்கும் அருமையான பாடல்.பகிர்ந்தமைக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

ஓகே ஓகே மெதுவா வந்து கேளுங்க துரை ஸார்.

ஸ்ரீராம். said...

பானு அக்கா.. ரெண்டு பாட்டும் கேட்டீங்களா? எது முதல் சாய்ஸ்?!!

Bhanumathy Venkateswaran said...

எனக்கு தாமரையின் கவிதைகள் மிகவும் பிடிக்கும். இந்த பாடல் அவருடைய சொந்த வாழ்க்கையை பிரதிபலிப்பது போல் இருக்கிறது.

Bhanumathy Venkateswaran said...

விசிறி பாடல் இப்போதுதான் முதல் முறையாக கேட்கிறேன். எனக்கு தாமரை, தனுஷ், கௌதம் மேனன், சித் ஶ்ரீராம் எல்லோரையும் பிடிக்கும். அதனால் இரண்டு பாடல்களுமே பிடித்திருக்கிறது. ஃபர்ஸ்ட் சாய்ஸ் 'மறு வார்த்தை பேசாதேதான்'

ஸ்ரீராம். said...

நன்றி பானு அக்கா... எனக்கும் அப்படியே.

சித் ஸ்ரீராமுடன் சேர்ந்து பாடும் (இந்தப் பாடல்களில் அல்ல) ஒரு சின்ன பையனைக் கேட்டிருக்கிறீர்களா? இல்லா விட்டால் வாட்ஸாப்பில் அனுப்புகிறேன்.

தாமரையின் கணவர் தோழர் தியாகு இல்லையா? அவர் சிரமங்கள் படித்திருக்கிறேன்.

நெ.த. said...

மறுவார்த்தை பாடல் ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் சில வருடங்கள் கல்லூரி விழாக்களில் கண்டிப்பாக ஒலிக்கும்.

இங்கு போட்டிருக்க வில்லைனா கேட்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஒருவேளை பெண்பாடினால் (மகள்) கேட்க வாய்ப்பிருக்கிறது.

கவிஞர் தாமரை திறமைசாலி, ஆபாசப் பாடல்கள் எழுதாதவர்.

KILLERGEE Devakottai said...

இரண்டுமே கேட்டு இருக்கிறேன்.

இன்றைய இசையமைப்பாளர்களுக்கு பாடலை பாடச்சொல்லி விட்டு இசையை நகர்த்துவதில் பல இடங்களிலும் திணறுகின்றனர் பிறகு ஏதோ வழியில் வந்து சேர்வார்கள்.

ஆனால் அது இதில் இல்லை. மேலும் செவி சேதமாகவில்லை.

ஸ்ரீராம்ஜி எம்.கே தியாகராஜபாகவதர் ரசிகர் திடீரென்று இன்னைய ஸ்டூடண்ட் போலவும் ரசிக்கிறார்.

நல்ல பாடல்களை ரசிப்பதே ரசிப்புதன்மை, இருப்பினும் இன்று பல பாடல்களுக்கு சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது.

ஸ்ரீராம். said...

நன்றி நெல்லைத்தமிழன்.

'மறுவார்த்தை' பாடல் என்ன ராகத்தின் அடிப்படை என்று சொல்ல கீதா ரெங்கன் வருவார். விசிறி பாடலும் அப்படியே சொல்வார்.

அப்படி மிஸ் ஆகும் என்று நினைத்தே இந்தப் பாடல்களையும் ஷேர் செய்தேன். முக்கியமாக ஏஞ்சல் முத்துராமன் தாத்தா, ஜெய்சங்கர் தாத்தா பாடல்களாகப் போடுகிறேன் என்று சொன்னதால் இந்த வாரம் புதிய பாடல்!

ஸ்ரீராம். said...

வாங்க கில்லர்ஜி. உங்கள் கருத்தை 94 சதவிகிதம் ஒத்துக்க கொள்கிறேன். மிச்ச ஆறு சதவிகிதத்தை இப்போது வரும் சில நல்ல பாடல்களுக்கு ஒதுக்கி விடுகிறேன். எம் கே டியையும் ரசிப்பேன். எஸ் பி பையையும் ரசிப்பேன். கிஷோர், ரபியையும் ரசிப்பேன்! மனசுக்குப் பிடிச்சா நல்ல இசைதானே?

// இசையை நகர்த்துவதில் பல இடங்களிலும் திணறுகின்றனர் பிறகு ஏதோ வழியில் வந்து சேர்வார்கள்//

ஆம். இதில் சில புதிய இசை அமைப்பாளர்கள் பழகி வருகின்றனர்.

நன்றி ஜி.

திண்டுக்கல் தனபாலன் said...

பாடல் வரிகள் அருமை...

KILLERGEE Devakottai said...

இந்த திணறலுக்கு காரணம் கம்போஸிங் செய்யாமல் பாடல் ரெக்கார்டிங்கில் இறங்கி விடுவார்களோ என்று நான் நினைப்பதுண்டு.

இளையராஜாவிடம் இந்த கோணங்கித்தனம் என்றுமே கிடையாது.

Thulasidharan V Thillaiakathu said...

வந்துவிட்டேன் வந்துவிட்டேன். என் தோழி எழுந்திருக்க இத்தனை நேரம் ஆகிவிட்டது. ஹா ஹா ஹா..

வணக்கம் வனக்கம்!! எல்லோருக்கும்...

ஆமாம் கீதாக்கா நீங்க இல்லதப்பவும் போட்டிக்கு ஆள் இல்லாம துரை அண்ணாவும் நானும் மட்டும் எட்டிப் பார்த்து...நடுல வெங்கட்ஜி வந்தார் அப்புறம் இப்போ அவர் பயணுத்துல...ஸோ போட்டி இப்ப குறைஞ்சுருச்சு...என் தோழி ஒழுங்கா இருந்த வரை பிரச்சனை இல்லை. இப்ப அவளுக்கு வயசானதால் பிரச்சனைகள் மருத்துவரிடம் போகணும்..

ஆஹா ஸ்ரீராம் நம்ம ஸித் ஸ்ரீராம்...விசிறி பாட்டு இப்பத்தான் பார்க்கறேன் கேட்டுவிட்டு வரேன். மறு வார்த்தையும் கேட்டுட்டு வரேன் ராகம் கண்டுபிடிக்கனூம்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

முதல் பாடல் எங்கேயோ முன்பு கௌதம் படத்தில் கேட்டது போல ஒரு ஃபீல் வருது. டிப்பிக்கல் கௌதம் ம்யூசிக் அண்ட் படம்....காட்சி அப்படித்தான் இருக்கிறது. பாடல் பிலஹரி டச்....ஹான் ஹான் ஹான் நினைவு வந்துருச்சு ஓமனப் பெண்ணே....பாடல் நினைவு வருது...ஷூட்டிங்க் கூட கேரளத்தில் எடுத்திருக்கார் போலத் தெரியுது...கிச்சன் ஸ்டைல் தோட்டம்.....

கீதா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

முதல் பாடல் பிலஹரி டச் இன் வெஸ்டர்ன் ஸ்டைல் கொஞ்சம்....சங்கராபரணம் வெஸ்டர்ன் ம்யூசிக்கில் சி மேஜர் ஸ்கேல்....மோஹனம், பிலஹரி சங்கராபரணத்தின் குட்டிகள். எனவே இரண்டு ராகமும் வெஸ்டர்ன் ஸ்கேலில் நன்றாகவே வரும்.

கீதா

கோமதி அரசு said...

தாமரையின் பாடல்கள் பிடிக்கும் எனக்கு.
மெல்லிய சோகம் இழையோடும். இரண்டு பாடல்களும் நன்றாக இருக்கிறது.
மறுவார்த்தை பாடல் நன்றாக இருக்கிறது. பாடல் வரிகள் அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

தாமரையின் வரிகள் எனக்குப் பிடிக்கும் ஆனால் என்ன எனக்கு எதுவுமே பை ஹார்ட் ஆகாது ஹா ஹா ஹா ஹா....கேட்கும் போது ரசிப்பேன்...

கொசுறு: தாமரை என் மாமா + அத்தை பையனுடன் கோயம்புத்தூர் ஜிஸிடி (GCT) யில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங்க் படித்தவர். அப்போதே கவிதைகள் நன்றாக எழுதுவார் என்று என் கஸின் சொன்னான். தாமரை திரைப்படத் துறைக்கு வந்தது அவனுக்கு முதலில் தெரியது. நான் தாமரையின் என்ட்ரியைச் சொன்னதும் அவன் வியந்தான். அவன் இருப்பது அம்பேரிக்காவில். அப்புறம் அவரைப் பற்றிய அப்டேட்ஸ் கொடுத்துக் கொண்டே இருந்தேன்.

அப்போது ஃப்ரென்ட் அப்புறம் தொடர்பு அவனுக்கு விட்டுப் போய்விட்டது.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் விசிறியும் நன்றாகத்தான் இருக்கு என்றாலும் மறு வார்த்தை தான் எனது ஓட்டு.

தேஷ் ராகம் ......இதற்கு விசிறிப் பாடலை விட அருமையான ம்யூஸிக்...தர்புகா சிவா போட்டிருப்பது....செமையா ஃபுல் ஸாங்கும் செம .....

ஸித் ஸ்ரீயின் குரல் மிக மிக வித்தியாசமான குரல் திரையுலகில். என் மகனின் வயதுதான். ஆனால் செம நாலெட்ஜ். வெஸ்டர்னும் தெரியும். இசையும் அமைப்பார். பாடவும் செய்கிறார். அமெரிக்காவில் வளர்ந்தாலும் தமிழ் நன்றாக உச்சரிக்கிறார்.

சமீபகாலமாக இவரது குரலைத்தான்/பாடலைத்தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கேட்கிறேன். கர்நாடக இசையும் நன்றாகப் பாடுகிறார்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மெல்லிய சோகம் இழையோடும்.//

கோமதிக்கா ஆமாம் எனக்குத் தோன்றுவது அவரது வாழ்க்கயின் பிரதிபலிப்போ என்று. அதையேதான் பானுக்காவும் சொல்லிருக்காங்க...

கீதா

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

பாடல்கள் மிக அருமை..முதல் பாடலை விட இரண்டாவது இசையோடு குரலும் இணைந்து, இரண்டு தடவை கேட்க வைத்தது. தாமரை எழுதிய பாடல் வரிகளும் மிக நன்றாக இருக்கிறது. புது பாடல்கள் இது வரை அவ்வளவாக கேட்டதில்லை. ஆனால் இந்த பாடலின் இசை மிகவும் நன்றாக உள்ளது. கேட்க வைத்ததற்கு நன்றி..

Thulasidharan V Thillaiakathu said...

கில்லர்ஜி உங்கள் கருத்து மிகவும் சரியே. ஆனா இப்பவும் சில நல்ல பாடல்கள் நல்ல இசையில் வருகின்றன. உதாரணம் அழகே அழகு...எதிலும் அழகு, போகும் பாதை தூரம் இல்லை, போன்ற பாடல்கள் நன்றாக இருக்கின்றன. மலையாளத்திலும் நிறைய நல்ல பாடல்கள் இருக்கின்றன. ஷேர் செய்யலாம் என்ற விருப்பம் உள்ளது. அங்கும் சமீபத்திய பாடல்கள் கொஞ்சம் ட்ராக் மாறித்தான் வருகின்றன என்றாலும் முழுவதும் என்று சொல்வதற்கில்லை. ரவீந்திரன் மாஸ்டர், ஜோன்ஸன் மாஸ்டர், ஷரத் இசை நன்றாக இருக்கும்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மறுவார்த்தை மெயினாக தேஷ் என்றாலும் கொஞ்சம் காபியையும் ருசிக்கிறது இடையில் என்று தோன்றுகிறது.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆனால் பாடலின் முடிவில் எண்டிங்க் நோட்ஸ்..ஆஹா ஆஹா ஸித் கலக்கல் அப்படியே தேஷில் வந்து லேன்ட் ஆகி எஸன்ஸ!!!

கீதா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சமீபத்தில் என்ன பாடல் கவர்ந்தது என்று கேட்டால், நான் மறுவார்த்தை பேசாமல் "மறுவார்த்தை பேசாதே" தான் என்று சொல்லும் அளவிற்கு மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல்!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கமலா சகோதரி உடல்நலம் தேவலாமா? கொஞ்சம் பெட்டராகி இருப்பது போல இருக்கே...ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மறுவார்த்தை பேசாதே முதலில் எனக்கு அனுப்பியது ஸ்ரீராம் தான்.

ஸ்ரீராம் ஆஷா போன்ஸ்லே நு ஒரு பெரிய இசை அரசி இங்கு இருக்கும் போது அவங்ககிட்டயும் நான் ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்...இந்தப் பாடல்களின் ராகம் நான் சொன்னது சரியானு...!!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மீண்டும் என் தோழி சோர்ந்துவிட்டாள் டைப் பண்ணினால் எழுத்துகள் பதிந்து பப்லிஷ் பண்ண டைம் எடுக்கறிறது. ஸோ மூடிவிட்டு பின்னர் வரேன்....

கீதா

G.M Balasubramaniam said...

my browsar is google chrome this blog does not open withchrome only in chrome iCAN WRITE IN TAMIL this was accessed in firefox tamil writings do not come

Geetha Sambasivam said...

ஏனோ தெரியலை, ஆடியோ சரியா வரலை. இரண்டுமே கேட்க முடியலை! ஆனால் தாமரையின் வேறே பாடல்கள் கேட்டிருப்பேன். தாமரைனு தெரிஞ்சிருக்காது! சித், ஶ்ரீதரின் வேறே பாடல்கள் சாஸ்த்ரிய கீதம் கேட்டிருக்கேன்.

G.M Balasubramaniam said...

இப்போதெல்லாம் பாடலுக்கு காட்சி அமைப்பது மிக எளிதுகாதலர்கள் ஓடி வரல் அருகே வந்ததும் கட்டிஅணைத்தல் பச்சை பசேலென்னும் வெளியில் கூந்தலைக் கோதிக்கொண்டு நடத்தல் இப்படியாகத்தானேஇருக்கிறது அவ்வப்போது லாங் ஷாட்ஸ் க்லோஸப் ஷாட்ஸ் என்ன சரிதானே

வல்லிசிம்ஹன் said...

இரு பாடல்களும் சூப்பர்.
சிட் ஸ்ரீராம் குரல் மிக மென்மை.
தாமரை வரிகள் எப்பொழுதும் போல் அருமை.
இசை ரசிக்கத் தெரியும் ஆராயத் தெரியாது.

காலை வேளையில் ரீங்காரம் இடும் ட்யூன்.
மிக நன்றி. ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

சித் ஸ்ரீராமின் குரல் இழைகிறது. தாமரையின் வரிகளில்
ஏக்கம் வழிகிறது.

கண்மூடிக் கேட்கும் வகை இந்தப் பாடல்கள்.
மறு வார்த்தை உணர்ச்சி மயம்.

Kamala Hariharan said...

வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி.

தங்கள் தோழியின் உடல்நல குறைபாடு நடுவிலும், என் உடல் நலம் குறித்து விசாரித்ததற்கு மிக்க நன்றி சகோதரி கீதா ரெங்கன்... தற்சமயம் தங்கள் தோழி எப்படி இருக்கிறார்கள்? கவனித்துக் கொள்ளவும்.. தோழி இல்லாமல் நீங்கள் இல்லை.. நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை... எனவேதான் தோழியை ஸ்பெஷலாக கவனிக்கச் சொல்கிறேன். சரியா? நான் நலமாகி வருகிறேன். விசாரித்தமைக்கு மிகுந்த நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Asokan Kuppusamy said...

இனிய பாடல் பதிவுக்கு மகிழ்ச்சியும் நன்றியும்

ஸ்ரீராம். said...

நன்றி DD.

ஸ்ரீராம். said...

இல்லை கில்லர்ஜி.. இதுதான் நவீன பாணி என்றே அவர்கள் நினைக்கிறார்கள். இரைச்சல்தான் இசை என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்தப் பாடல்களில் இசை இரைச்சல் இல்லாமல் குரல் கேட்பது ஆறுதல்.

ஸ்ரீராம். said...

வாங்க கீதா... உங்கள் தோழியை ஒரு நல்ல மருத்துவரிடம் காட்டாக கூடாதா? பாவம் மூச்சு தினரிக் கொண்டிருக்கிறாளே...!!!!

ஸ்ரீராம். said...

ஆமாம் கீதா இந்த ரெண்டு பாட்டுகளை உங்களுக்கு வாட்ஸாப்பில் அனுப்பி இருந்தேன்.

அடடே... தாமரையை உங்களுக்கு பெர்சனலாகவே தெரியுமா? பலே..

ராகங்கள் பற்றிச் சொன்னதற்கு நன்றிகள்!

ஸ்ரீராம். said...

கீதா... கமலா ஹரிஹரன் சகோதரி கணினியைப்பற்றி நீங்கள் சொல்லி இருப்பதை மாற்றி புரிந்து கொண்டிருக்கிறார் போல!

ஸ்ரீராம். said...

வாங்க கோமதி அக்கா... தாமரையின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை"

ஸ்ரீராம். said...

மீள் வருகையில் வந்து பாடல்களைக் கேட்டு, ரசித்து, பின்னூட்டமும் இட்டு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கமலா ஹரிஹரன் சகோ...

ஸ்ரீராம். said...

வாங்க ஜி எம் பி சார்.. ஏற்கெனவே நானே பற்பல முறை சொல்லி இருப்பது போல காட்சிகள் 99% வீண். பாடல்கள் கேட்டீர்களா என்று சொல்லவில்லை!

ஸ்ரீராம். said...

கீதா அக்கா.. சித் ஸ்ரீதர் இல்லை சித் ஸ்ரீராம்.


:))

ஸ்ரீராம். said...

வாங்க வல்லிம்மா... ஆமாம்.. சி.ஸ்ரீ திறமைசாலி. அவரின் வேறு சில பாடல்களும் நன்றாயிருக்கின்றன. ஆனால் ஒரே மாதிரி இருக்கிறதோ என்கிற எண்ணமும் இருக்கிறது. சாஸ்திரிய சங்கீதத்தில் அவரை இன்னும் ரசிக்க முடிகிறது.

ஸ்ரீராம். said...

கமலா ஹரிஹரன் சகோ... கீதா ரெங்கன் தோழி என்று சொல்வது அவர் கணினியை!

ஸ்ரீராம். said...

நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

ஏகாந்தன் Aekaanthan ! said...

நேற்று இரவுவரை எபி திறக்கவில்லை. இன்று காலையில் நான் கர்னாடகா மூடில் இருக்கிறேன் இருந்தும் திறந்தது எபி! அதற்கும் ஒரு மூடு வந்திருக்கும்.

சித் ஸ்ரீராம் - இந்தப் பெயரில் ஒரு பாடகரா? தமிழரா? இப்படிக் கேட்பதே தமிழ்நாட்டில் அபத்தம். In a way, its not very relevant for music and other arts. ஆனால் பாடல் என்று வரும்போது சரியாக உச்சரிக்கவேண்டுமே..தமிழை உதித் நாராயண் பாடியதுபோல் பாடிவிடக்கூடாதல்லவா! (குற்றம் அவருடையதல்ல).

மறுவார்த்தை பேசாதே -ஐ ஒரு தயக்கத்துடன் கேட்டேன். கவர்ந்தது மியூஸிக். தர்புகா சிவா ! புதுசா! நன்றாக இசைத்துள்ளார். சித் ஸ்ரீராம் ஹிந்துஸ்தானி பின்னணி உள்ளவர் என்றிருக்கிறீர்கள். அது தெரிகிறது. லயித்துப் பாடியுள்ளார்.

Lyrics? Not impressed.

ஸ்ரீராம். said...

நன்றி ஏகாந்தன் ஸார். அப்படி எபி இங்கு திறக்காத சமயங்களில் முகநூல் வழியாக வரமுடியும்.

சித் ஸ்ரீராமுடன் ஒரு சின்னப்பையன் பாடுகிறான்.ராகுல் என்று பெயர். அபார திறமைசாலி அவனும்.

Geetha Sambasivam said...

//கமலா ஹரிஹரன் சகோதரி கணினியைப்பற்றி நீங்கள் சொல்லி இருப்பதை மாற்றி புரிந்து கொண்டிருக்கிறார் போல!// இல்லை, கமலா ஹரிஹரன் சரியாத் தான் சொல்லி இருக்கார். தோழி கணினிக்கு உடல்நலமில்லா சமயத்திலும் தன்னைக் குறித்தும் விசாரித்ததைச் சொல்லி இருக்கார்.

Geetha Sambasivam said...

//சித் ஸ்ரீராமுடன் ஒரு சின்னப்பையன் பாடுகிறான்.ராகுல் என்று பெயர். அபார திறமைசாலி //

ராகுல் வெள்ளால்? குட்டிக்குஞ்சுலுவுக்குப் பிடிச்ச பாடகர்! ராகுல் வெள்ளால், சூரியா காயத்திரி இருவரும்! :))))

ராஜி said...

ஒன்னு அதர பழசான பாட்டு இல்லன்னா அதர புதுசான பாட்டு. நடுத்தரமே இல்லியா?! இந்த கார்த்திக், பிரபுலாம் கண்ணுக்கே தென்படமாட்டாங்களா?!

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...


அருமையான பாடல்கள்
தொடருவோம்

Thulasidharan V Thillaiakathu said...

இந்தப் பாடல்கள் கேட்டதில்லை. நன்றாகவே இருக்கின்றன. கேட்பதற்கு இனிமையாக.

துளசிதரன்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!