செவ்வாய், 1 மே, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : ஜ்வாலை - ரிஷபன்



ஜ்வாலை
ரிஷபன்  


கல்யாண ஓடை ஸ்டாப்பில் பஸ் நின்றது.  இறங்கி அரை மணி நடக்க வேண்டும்.

வயலுக்கு நடுவில் பாதை. கார் போகும் அளவுக்கு. மண் ரோடுதான்.  பெரிய அளவில் ஒரு பாம்புப் புற்று வரும்.

நடந்தான்.  ' முடிஞ்சா வந்துட்டு போ'  நேற்றிரவு அனு சொன்னது. காலையில் எழுந்ததும் முதல் பஸ்ஸைப் பிடித்து வந்தாச்சு. 

நெருங்க நெருங்க கோவில் கோபுரம் தெரிந்தது.  இன்னும் கிட்டே போனால் மதில் தெரியும். 

' கட்டாயம் போகணுமா' 

வசந்திக்கு விருப்பமில்லை. கிளம்பியவனிடம் தன் எதிர்ப்பை மெலிதாகப் பதிவு செய்யக் கேள்வி.

'அண்ணனா பொறந்துட்டேன்'

வசந்தி அடுத்த கேள்வி கேட்காமல் நகர்ந்தாள்.  இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை.. அனு ஃபோன் செய்வதும், இவன் ஓடுவதும் வழக்கமாகி விட்டது.

முதலில் மௌனமாயிருந்தவள், மனைவி ஸ்தானத்தை உறுதிப் படுத்த கேட்க ஆரம்பித்திருக்கிறாள். 

இத்தனைக்கும் வசந்திக்கு எல்லாம் தெரியும். ' அதான் மாசா மாசம் பணம் அனுப்பிச்சாகறதே' என்கிற சமாதானம்.

'போகணும்'

அதிகம் பதில் சொல்வதில்லை. சொன்னால் இன்னும் அதிக கேள்விகள். அதுவும் இப்போதைய நிலையில் இன்னும் மோசம்.

ஒரு பெரிய கம்பெனியை நம்பி ஆரம்பித்த சிறு முதலீடு. வேலைக்குப் போவதை விட சொந்தத் தொழில் செய்வது மேலென்று. பெரிய கம்பெனி அடி வாங்க ஆரம்பித்ததும் ஆர்டர் குறைந்தன.  வைத்திருந்த ஆட்களும் விலக ஆரம்பித்தனர்.

வட்டி கட்டத் தவறியதும்.. முதலில் அலைபேசியில் கேட்டவர்கள் இப்போது நேரில். ' சீக்கிரமா ஏற்பாடு பண்ணிக் கட்டிருங்க. இல்லாட்டி நல்லாருக்காது'

வசந்தியைக் கை பிடித்தபோது கெத்தாய்ப் போட்ட பத்து பவுன் செயின். இப்போது மளிகைக் கடைக் கணக்கில் தான் சாப்பாடு.

நெருங்கிய நண்பன்.. இந்தத் தொழிலிலும் இணைந்தவன் இப்போது கல்யாண காண்ட்ராக்ட்டில். 'நீயும் வந்துரு..'  என்று தினம் ஒரு தடவை சொல்கிறான். 

எல்லாவற்றையும் கலைத்து விட்டு ஆட்டத்தை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இந்த நாற்பது வயதில். பத்து வயசுப் பெண் கண்ணெதிரில்.

யோசித்தபடி நடந்ததில் வீடு வந்து விட்டது. அனுவின் குரல் வெளியில் கேட்டது. 

' ஆ காட்டும்மா.. காபி கொண்டு வந்துருக்கேன்'

உள்ளே நுழைந்தான். செருப்பை வாசலில் விட்டு. இவன் காலடிச் சத்தம் கேட்டதும் அம்மாவின் முனகல். ' அவன் வந்தாச்சுடி'

அனு அரைக் காப்பியை இவனிடம் நீட்டினாள். அம்மாவின் அடுத்த கட்டளை அதுவாகத்தான் இருக்கும்.

சூடாக இறங்கியதில் ஒரு தெம்பு.

' வசந்தி எப்படி இருக்கா.. ராஜியைப் பார்த்து ரொம்ப நாளாச்சு'

' பரிட்சைம்மா'

' எப்படிரா இருக்கே'

' இருக்கேம்மா'

ஒற்றை வார்த்தை குறுகத் தெறித்தது அவனிடமிருந்து.

' கோவிலுக்குப் போய்ட்டு வா.. உச்சி காலம்'

போனான்.  குருக்கள் தெரிந்தவர். விசாரித்தார்.  அம்மா இப்போதெல்லாம் கண்ணுல படல. நடமாட்டம் இல்ல.. என்றார்.

சுற்றி வந்தபோது சின்ன வயசு நினைவுகள். அம்மாவின் கை பிடித்துக் கொண்டு. சுட்டுக்காதே.. நகர்ந்துக்கோ.. விளக்கின் அருகில் நெருங்க விடாமல் பாதுகாப்பின் குரல். 

வாழ்க்கை பின்னர் பெரிதாய் ஒரு தீப்பந்தத்துடன் நிற்கப் போவது தெரியாமல். உடலெங்கும் தீக்காயம் இப்போது.

மீண்டும் வீட்டிற்கு வந்தபோது சமையல் முடிந்திருந்தது. மணத்தது. இப்படி திருப்தியாய் சாப்பிட்டு எத்தனை நாளாச்சு. மளிகைக் கடை கடன் பாக்கியில் சாமான் வாங்கப் போவதே நின்றுவிட்டது.

' உனக்கு இருக்கா' என்றான் அனுவிடம்.

திரும்பத் திரும்ப அவன் தட்டிலேயே போட்டுக்கொண்டிருந்தாள். 

' சாப்பிடுடா.. அலட்டாதே' என்றாள் அந்த இன்னொரு அம்மா.

ஆறு மணி டவுன் பஸ்ஸில் கிளம்பிய போது ' உடம்பைப் பார்த்துக்கோடா' என்றனர் இருவரும். 

கொண்டு வந்த ..  மிச்சம் இருந்த ஆயிரம் ரூபாயை அம்மாவின் பக்கம் கண்ணில் படுவது போல் வைத்து விட்டு வந்திருந்தான். அனு ஃபோன் பேசும்போது சொல்லி விடக் கூடாது. 

' இளைச்சிட்டாண்டி.. '

' இன்னிக்கு ஒரு நாளாவது வயிறு ரொம்ப சாப்பிட்டான்.. ஹூம்'

' அந்த ரெண்டு குழந்தையும் என்ன பண்றதோ'

இவன் பின்பக்கம் போனபோது அவர்கள் கிசுகிசுவென்று பேசியது துல்லியமாய்க் கேட்டிருந்தது.

பஸ்ஸில் ஏறியதும் நண்பனை அழைத்தான்.

' நானும் வரேன்.. உங்கூட கேட்டரிங் வேலைக்கு..'



அம்மாவின் குரல் கேட்டது மானசீகமாய். ' சுட்டுக்காதேடா.. பார்த்து.. '

67 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்,,,,துரை செல்வராஜு அண்ணா எல்லோருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஆ!!! இன்று வெங்கட்ஜி அண்ட் கீதா குழந்தை முந்திக்கிட்டாங்க

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஆஹா ரிஷபன் ஜி கதையா... வாவ். வந்து படிக்கறேன்.

    பதிலளிநீக்கு
  4. கீதாக்கா இனிய காலை வணக்கம்
    காபி ஆத்தியாச்சா...மணக்குது
    கீதா

    பதிலளிநீக்கு
  5. அன்பின் ஸ்ரீராம் மற்றும்
    அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  6. ௐ க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மைக்ரோ செகன்டில் வெங்கட் முதலா? ஆப்பீச்சுக்கெல்லாம் போகவேண்டாமோ? :)))))))))))

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் வெங்கட்... உங்க ஊர்க்காரர்!!

    பதிலளிநீக்கு
  8. அப்பாடி.... மனதைத் தொட்ட கதை. பாராட்டுகள் ரிஷபன் ஜி.

    பதிலளிநீக்கு
  9. ?/இன்று வெங்கட்ஜி அண்ட் கீதா குழந்தை முந்திக்கிட்டாங்க// எங்கே! போட்டி டெல்லியிலேருந்தெல்லாம் வருது! :)))))

    பதிலளிநீக்கு
  10. வாங்க கீதாக்கா... காலை வணக்கம்! உங்கள் ஊர்க்காரர் எழுதி இருக்கும் கதை!

    பதிலளிநீக்கு
  11. சுருக், பட்டுனு யதார்த்தத்தைச் சொன்ன கதை!

    பதிலளிநீக்கு
  12. வாங்க கீதா ரெங்கன்... உங்க நெட் இன்னிக்கி ஸ்லோ!!!

    பதிலளிநீக்கு
  13. வாங்க துரை செல்வராஜூ ஸார்... காலை வணக்கம்..

    பதிலளிநீக்கு
  14. கொசுக்கடி...
    4.50 க்குப் பிறகு தூக்கம் இல்லை...

    ஆள் நடமாட்டம் இல்லாதவேளை...

    5.40 க்கு வெங்கட்...

    5.58
    5.59
    6.00 - வழக்கம் போல எபிக்கு விக்கல்..

    பதிலளிநீக்கு
  15. வேகமா படிச்சும் முடிச்சுட்டீங்களா வெங்கட்... சபாஷ்...

    பதிலளிநீக்கு
  16. கீதாக்கா... நீங்களும் அதற்குள் படிச்சுட்டீங்க... உங்க ஊர்க்காரர் ஆச்சே... இல்லையா!

    பதிலளிநீக்கு
  17. துரை செல்வராஜூ ஸார்... சோழ தேசமா? அரபு தேசமா?

    :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே தான்...

      ஸ்ட்ராங்கா காஃபி குடிச்சாலும்
      வேலைக்கு ஆகவில்லை...

      நீக்கு
  18. முட்டி மோதி 6.00 மணிக்கெல்லாம் ஆஜர்...

    இதுல சந்தேகம் வேற!...
    நாம தான் முதல் ஆளா?...ந்னு..

    எல்லாம் விடியற்காலை காஃபி செய்யிற வேலை!....

    பதிலளிநீக்கு
  19. ?/5.40 க்கு வெங்கட்...// அது எப்படி வெங்கட் இருப்பது தெரிஞ்சது. ஙே!!!!!!!!!!!!!!!!!!! எனக்கு நீங்க ரெண்டு பேரும் இருந்ததே தெரியலையே!

    பதிலளிநீக்கு
  20. ஒரு வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்கள்... அருமை...!!

    பதிலளிநீக்கு
  21. ஹை ரிஷபன் அண்ணா கதை அருமை! மனம் நெகிழ்ந்தது! தொட்டது. யதார்த்தம்...வாழ்த்துகள் பாராட்டுகள் ரிஷபன் அண்ணா!

    நானும் வாசிச்சுட்டேன் ஸ்ரீராம்...சுத்து சுத்து சுத்து.......கருத்து போட

    கீதா

    பதிலளிநீக்கு
  22. துரை செல்வராஜூ ஸார்... சோழ தேசமா? அரபு தேசமா?//

    ஸ்ரீராம் துரை அண்ணா இன்னும் சோழ தேசம் தான்

    கீதா

    பதிலளிநீக்கு
  23. எங்கே! போட்டி டெல்லியிலேருந்தெல்லாம் வருது! :)))))//

    ஹா ஹா ஹா ஹா கீதாக்கா தில்லி தலைநகராக்கும்!! முந்திக்கலைனா!!

    கீதா

    பதிலளிநீக்கு
  24. // இங்கே தான்...//

    ஆஹா... லீவ் எக்ஸ்டென்ட் பண்ணியாச்சா?

    பதிலளிநீக்கு
  25. முட்டி மோதி 6.00 மணிக்கெல்லாம் ஆஜர்...

    இதுல சந்தேகம் வேற!...
    நாம தான் முதல் ஆளா?...ந்னு..//

    ஹா ஹா ஹா ஹா அண்னா நானும் அப்படித்தான் நெனைச்சு வந்தேன் பார்த்தா தலைநகர் முன்னாடி நிக்குது!!! ஹா ஹா ஹா

    அடுத்தாப்புல திருச்சி....

    கீதா

    பதிலளிநீக்கு
  26. / ஸ்ரீராம் துரை அண்ணா இன்னும் சோழ தேசம் தான் //

    ஹை... நீங்கள் எப்படி அறிவீர்கள் கீதா?

    பதிலளிநீக்கு
  27. ?/5.40 க்கு வெங்கட்...// அது எப்படி வெங்கட் இருப்பது தெரிஞ்சது. ஙே!!!!!!!!!!!!!!!!!!! எனக்கு நீங்க ரெண்டு பேரும் இருந்ததே தெரியலையே!//

    அக்கா துரை அண்னா வெங்கட்ஜி தளத்தைப் பார்த்தேன்னு சொல்லிருக்கார்னு நினைக்கிறேன்...அப்படித்தானே அண்ணா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேத்து வைத்த சுண்டு மாங்காயின் பக்கம் பார்த்தேன்....

      நீக்கு
  28. ஸ்ரீராம் துரை அண்ணா இன்னும் சோழ தேசம் தான் //

    ஹை... நீங்கள் எப்படி அறிவீர்கள் கீதா?//

    ஹை அது ரகசியம்!! ஹிஹிஹிஹி....

    கீதா

    பதிலளிநீக்கு
  29. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  30. //அம்மாவின் குரல் கேட்டது மானசீகமாய். ' சுட்டுக்காதேடா.. பார்த்து.. '//

    இரண்டு அர்த்தம்..... இரண்டுதானா?

    பதிலளிநீக்கு
  31. //' சாப்பிடுடா.. அலட்டாதே' என்றாள் அந்த இன்னொரு அம்மா.//

    கலங்கட்டுமா என்கிறது கண்கள்.

    //' அந்த ரெண்டு குழந்தையும் என்ன பண்றதோ'//

    இந்த இடத்தில் வரும் உறவின் மேன்மையை என்ன சொல்லிப் பாராட்ட...


    ரிஷபன் ஜி....

    பதிலளிநீக்கு
  32. சுட்டுக்காதேடா!...
    அம்மா அகல் விளக்கின் அருகில்...

    நடப்பு வாழ்க்கையோ
    கோட்டை அடுப்பின் ஜூவாலையில்...

    பல பேருடைய வாழ்க்கையும்
    இப்படித்தான் ஆகிப்போனது...

    ரிஷபன் அவர்களுடைய கைவண்ணம்
    பல நினைவுகளைத் தூண்டி விட்டது...

    பதிலளிநீக்கு
  33. ரிஷபன் ஜி கதையா. ஆஹா.
    இந்த அண்ணா தங்கை பாசத்துக்கு ஈடேது.

    அம்மாவின் பார்வைகளும் வார்த்தைகளும், தங்கையின் பரிவும்
    கண்ணில் நீர் கோக்க வைத்தன.

    இவ்வளவு வறுமை துரத்தும் போது, அம்மாவுக்கு ஆயிரம் எடுத்து வைத்த அந்தக் கைகளுக்கு நமஸ்காரம்.

    வெளியே சித்திரையின் முழுனிலா. மன்சில் இந்தக் கதை கொண்டுவந்த குளிர்ச்சி.
    இதுதான் காவியம். நன்றி ரிஷபன் ஜி.

    பதிலளிநீக்கு
  34. கதையின் நகர்வு மனம் சஞ்சலமானது...

    பதிலளிநீக்கு
  35. Ivar avargalukku udhava pogirar enru ninaithaal....ithan Rishaban sir!!

    பதிலளிநீக்கு
  36. 'அண்ணனா பொறந்துட்டேன்'//

    ஆஹா இந்த இரு வார்த்தைகள் சொல்லுவது பல...

    கீதா

    பதிலளிநீக்கு
  37. சுட்டுக்காதே.. நகர்ந்துக்கோ.. //

    இதிலும் பல அர்த்தங்கள்!!! அதற்குப் பதில் அடுத்த வரிகளில் வந்து விழுந்துவிட்டது!

    //வாழ்க்கை பின்னர் பெரிதாய் ஒரு தீப்பந்தத்துடன் நிற்கப் போவது தெரியாமல். உடலெங்கும் தீக்காயம் இப்போது.//

    அம்மாக்களின் வார்த்தைகள் பல இயல்பாய் வருகிறதோ இல்லை எச்ச்ரிக்கையாய் எதிர்கால ப்ரஸ்னமாய் வருகிறதோ தெரியலை...ஆனால் பின்னாளில் இபப்டி நினைக்கும்படி ஆகிறது....

    கீதா

    பதிலளிநீக்கு
  38. //' சாப்பிடுடா.. அலட்டாதே' என்றாள் அந்த இன்னொரு அம்மா.//
    //

    கண்கள் கலங்கியது. நான் அடிக்கடி நினைப்பது எனக்கொரு அண்ணா இருந்திருக்கமாட்டாரா என்று. அண்ணன் தங்கை என்பது தனிப்பாசம்...எனக்கு மிகவும் பிடித்த உறவு...

    கீதா

    பதிலளிநீக்கு
  39. ' இளைச்சிட்டாண்டி.. '

    ' இன்னிக்கு ஒரு நாளாவது வயிறு ரொம்ப சாப்பிட்டான்.. ஹூம்'

    ' அந்த ரெண்டு குழந்தையும் என்ன பண்றதோ'//

    மனம் நெகிழ்ச்சி...எனக்கு பல எண்ண அலைகள்...

    கீதா

    பதிலளிநீக்கு
  40. இத்தனைக் கஷ்டத்தின் நடுவிலும் தன் அம்மாவுக்கு 1000 ரூபாய் கொடுக்கிறானே....எனக்குக் கண்களில் நீர்.

    இதுவும் எனக்குப் பல எண்ணங்கள் மனதில்....

    கீதா

    பதிலளிநீக்கு
  41. ரிஷபன் சார் அவர்களின் கதை அருமை. பல வரிகள் வாசிக்கும் போது கண்கள் பனித்தது. அண்ணனா பொறந்துட்டேன் என்ற வரியை வாசித்த போதும் மனைவி எதிர்க்கும் வரிகளை வாசித்த போதும் முதலில் தோன்றியது வேறு. அதாவது மாமியார், நாத்தனார் அண்ணன் என்ற பொறுப்பு....அதனால்....எதிர்ப்போ என்று....இறுதியில் பார்த்தால் அண்ணன் தான் கஷ்டத்தில் அவர்களின் பரிவு என்று மனம் நெகிழ்ந்துவிட்டது. அருமை சார். வாழ்த்துகள் பாராட்டுகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  42. மற்றொரு வரியையும் ரசித்தேன்....//' அந்த ரெண்டு குழந்தையும் என்ன பண்றதோ'// அட!!! இவர்கள் எத்தனை பாசத்துடன், கருணையுடன் சொல்கிறார்கள். மருமகளையும் குழந்தை என்று வாவ்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  43. கதை, உரையாடல்கள் மனதை மிகவும் நெகிழ்த்தியது. என்ன ஒண்ணு, ஏற்கனவே மனக் கஷ்டம். இதுல இந்த மாதிரி சோகக் கதையையும் படிக்கும்படி ஆனதே என்றுதான்.

    'கொண்டுவந்தால்தான் மனைவி, கொண்டு வராவிட்டாலும் தாய்' - கணவன் பொருளீட்டினால்தான் மனைவியிடம் மரியாதை ஆனால் தாய் என்பவள், பையன் ஒன்றும் கொண்டுவரவில்லை என்றாலும் அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டாள்.

    பாராட்டுக்கள் ரிஷபன் சார். மனதை வருடிய கதை. உரையாடல்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  44. நெகிழ்ச்சியான கதை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  45. ஒரு எளிய சம்பவத்தைக் கதையாக்கும் ரிஷ்பன் சாருக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  46. கணவன் பொருளீட்டினால்தான் மனைவியிடம் மரியாதை//

    ஆம் இப்படிச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் எல்லாருக்கும் இது பொருந்தாது. எக்ஸ்ப்ஷனல்ஸ் இருக்காங்க

    //தாய் என்பவள், பையன் ஒன்றும் கொண்டுவரவில்லை என்றாலும் அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டாள்.// இதுவும் பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் இதற்கு எதிரான தாய்களும் உண்டு. தன் குழந்தைகளிடையே வேறுபாடு காணும் தாய்களையும் அறிவேன்.

    எல்லோரும் மனிதர்கள் தானே.

    கீதா

    பதிலளிநீக்கு
  47. //சுற்றி வந்தபோது சின்ன வயசு நினைவுகள். அம்மாவின் கை பிடித்துக் கொண்டு. சுட்டுக்காதே.. நகர்ந்துக்கோ.. விளக்கின் அருகில் நெருங்க விடாமல் பாதுகாப்பின் குரல்.

    அன்பின் பமொழிகளை கேட்கும் போது மனம் கரைகிரது, கண்கள் ஓரம் கண்ணீர் துளிர்க்கிறது.

    //வாழ்க்கை பின்னர் பெரிதாய் ஒரு தீப்பந்தத்துடன் நிற்கப் போவது தெரியாமல். உடலெங்கும் தீக்காயம் இப்போது.//

    மனம் கனத்து போனது.
    குடும்பத்தை காப்பாற்ற உழைக்கும் அன்பு நெஞ்சம்.
    உழைப்பாளர் தினத்தில் இப்படி குடும்பத்திற்கும் உழைக்கும் எத்தனை எத்தனை உழைப்பாளர்கள்!

    வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  48. //ஆனால் இதற்கு எதிரான தாய்களும் உண்டு. தன் குழந்தைகளிடையே வேறுபாடு காணும் தாய்களையும் அறிவேன். //
    பூனை முதல் குட்டியைத் தின்னுமாமே! அதே போல் தான் பெற்ற மற்றக் குழந்தைகளின் நலனுக்காக மூத்த பிள்ளை/பெண்ணைக் காவு கொடுக்கும் அம்மாக்கள் உண்டு! :(

    பதிலளிநீக்கு
  49. இயல்பான சம்பவங்கள், உரையாடல்களோடு மனதை நெகிழ வைத்த கதை. ரிஷபன் சாருக்கும், எங்கள் ப்ளாகிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  50. என்னாச்சு தேம்ஸ் பீப்பிள்!!! ஏஞ்சல் சர்ச் செர்வீஸ் பிஸி என்று சொல்லியிருந்தார். அதிரடிக்கு என்னாச்சு? அவங்க அம்மா வந்திருப்பதாகச் சொல்லியிருந்தாங்க...அம்மாவோடு கதைத்து மடியில் படுத்து கொஞ்சி உறங்கிட்டுருக்காங்க போல....ஹா ஹா ஹா

    ஏகாந்தன் அண்ணா கிரிக்கெட்டில் மூழ்கிவிட்டார் போல...இல்லை சீயர் கேர்ல்ஸா ஹா ஹா ஹா ஹா....

    ஸ்ரீராம் என்ன சொல்லறீங்க!!

    கீதா

    பதிலளிநீக்கு
  51. வாங்க கீதா ரெங்கன்... உங்க நெட் இன்னிக்கி ஸ்லோ!!!//

    நாளைக்கு திருஷ்டி கழிச்சுடனும் ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  52. சின்ன அகல் விளக்கின் ஒளிபோன்ற மிகச்சிறியதோர் நிகழ்வு, என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் அவர்களின் எழுத்துக்களில், மிகப்பெரிய தீவட்டி ‘ஜ்வாலை’யாக கொழுந்து விட்டு எரிய வைக்கப்பட்டு, படிப்போர் மனதைத் தொடுவதாக உள்ளது.

    வாழ்க்கை என்னும் சூறாவளிக்காற்றினில், கோபுரத்தின் உச்சியில் உள்ள கலசமே பெயர்ந்து தெருவினில் விழுவதும், தெருவினில் சுழலும் குப்பைக் காகிதம் + தூசிகள் முதலியனகூட கோபுரத்தின் உச்சியில் ஏறி அமரும் சந்தர்ப்பம் வாய்ப்பதும், மிகவும் சகஜமே என்பதை விளக்குவதாக உள்ளது இந்த நிகழ்வு.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    வீ...........ஜீ

    பதிலளிநீக்கு
  53. பாராட்டிய அனைவருக்கும் என் அன்பின் நன்றி.

    பதிலளிநீக்கு
  54. என்னுடைய நெட்டும் வேலை செய்யலே. ஜ்வாலை ஒவ்வொரு விஷயத்திலும் எப்படி இருக்கிறது. மிதம்,அபரிமிதம், கனல் இப்படிப்போய் தாக்காது இருந்தால் ஸரி. அருமையான படப்பிடிப்பு.மனோதத்துவம்.அன்பு. உறவு. அருமையானதிற்கும் அதிகமானது. அன்புடன் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  55. இன்னிக்கு புதிரா கேள்வி பதிலா?

    பதிலளிநீக்கு
  56. வணக்கம் சகோதரரே

    அருமையான கதை. இயல்பான நடையுடன் சுருக்கமாக வார்த்தைகளை பிரயோகித்து சுவாரஷ்யமாக சென்றது. இரண்டு வார்த்தைகளில் சுலபமாக புரிந்து கொள்ளும் விதத்தில் அர்த்தங்கள். குடும்ப பாசத்தை, ஒற்றுமையை சொன்ன விதம் மனதை கலங்க வைத்தது. மிகவும் நன்றாக இருந்தது. ரிஷபன் சகோதரருக்கு மிகுந்த நன்றிகள். நேற்று என்னால் வலைப்பக்கம் வர இயலவில்லை. அதனால் இன்று வந்து கருத்திடுகிறேன். தாமத வருகைக்கு வருந்துகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!