Saturday, May 19, 2018

வயிற்றில் எரியும் நெருப்புக்கு...


1)  கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், ''லாவண்யா, முழுமையாக குணமடைந்து, பணிக்கு திரும்பி உள்ளார். அவர், வீரமான பெண்மணி; தைரியமாக அந்த சூழ்நிலையை சந்தித்து, வெளியே வந்துள்ளார். ''அவருக்கு, காவல் துறை சார்பில் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்,'' என்றார்.


போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், லாவண்யா அளித்த பேட்டி:எனக்கு நேர்ந்த துயர சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து, நான் வெளியே வர முக்கிய காரணம், சென்னை போலீசார் அளித்த தைரியம் தான். மருத்துவமனையில் கண்விழித்த போது, 'நான் சம்பாதித்து வாங்கிய, விலை உயர்ந்த மொபைல் போன், எனக்கு வேண்டும்' என, அப்பாவிடம் கேட்டேன். அவர், புது போன் வாங்கி கொடுப்பதாக கூறினார்.

ஆனால், அடுத்த சில நாட்களில், குற்றவாளிகளை பிடித்து, என் போனையே, போலீசார் என்னிடம் கொடுத்துவிட்டனர். 

'பீனிக்ஸ்' பறவை போல மீண்டெழுந்த லாவண்யா
2)  வயிற்றில் எரியும் நெருப்புக்கு மழையாய் இருப்பவர்.  விஜி - பசிப்பிணி மருத்துவர். (தினமலர் வாரமலர்)

3)  மனிதம்.  (விகடன்)
4)  மதம் தாண்டிய மனிதங்கள்.

5)  உலகத்தைப் பார்க்க உதவுபவர் - முடிந்தவரை இலவசமாக.  (ஆனந்த விகடன்)


6)  தாகம் தணிப்பவர்.  

24 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க..

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்..

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்..

துரை செல்வராஜூ said...

நல்ல உள்ளங்கள் என்றென்றும் வாழ்க..

ஸ்ரீராம். said...

வாழ்க... இன்னும் இது போன்ற மனிதர்கள் பெருகட்டும்.

Geetha Sambasivam said...

எல்லாச் செய்திகளும் புதியன. எங்குமே கேட்கவில்லை, படிக்கவில்லை! :) அப்பாடா, கௌதமன் சார், இதுக்கு என்ன சொல்றீங்க?

Geetha Sambasivam said...

போட்டி இல்லையேனு வரலை, பார்த்தால் துரை சார் வந்திருக்கார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஸ்ரீராம். said...

// போட்டி இல்லையேனு வரலை, பார்த்தால் துரை சார் வந்திருக்கார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் //

கிர்ர்ர்ர்ர்ர்ர்... அக்கா... பதிவு வெளியாகி அரைமணிநேரம் ஆகப்போகுது!

வல்லிசிம்ஹன் said...

அனைத்து செய்திகளும் அருமை.
பிணத்தை அடைக்கலம் செய்பவருக்கே முதலிடம்.
அடுத்து பசிக்கு உணவளிக்கும் அந்தத் தாய்.


தைரியமாக வெளியே வந்த லாவண்யா வாழ்க வளமுடன்.
நீட் தேர்வுக்கு உதவி செய்தவர்களுக்கு வணக்கங்கள்.

இந்தக் கோடையில் இப்படி ஒரு நல் அமைப்பாகத் தண்ணீர்ப்பந்தல் வைத்திருப்பவர்
என்னாளும் வளமுடன் இருக்க வேண்டும்.
மிக மிக நன்றி ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

ஸ்ரீராம். said...

குட்மார்னிங் / குட் ஈவினிங் வல்லிம்மா...

நல்லோர்கள் பெருகட்டும் உலகில்.

"எல்லோரும் இனிதாக வாழவேண்டும்"

:))

Geetha Sambasivam said...

//கிர்ர்ர்ர்ர்ர்ர்... அக்கா... பதிவு வெளியாகி அரைமணிநேரம் ஆகப்போகுது!// அதான் சொன்னேன், தாமதமா வந்தேன்னு!

நெ.த. said...

இந்தத் தடவை நிறைய நல்ல நல்ல பாசிடிவ் செய்திகளோடு வந்துள்ளீர்கள். அனைவருக்கும் பாராட்டுகள்

KILLERGEE Devakottai said...

நல்ல மனங்கள் வாழ்க வளமுடன்.

ஏகாந்தன் Aekaanthan ! said...

வல்லி சிம்ஹன் மேலே சொன்னதையே நானும் மொழிகிறேன்.
வயிற்றிலெரியும் நெருப்பை அணைக்க முயற்சிக்கும் தாயான விஜி, அதற்கடுத்தாற்போல் நெருப்பூட்டி மேலே முறையாக அனுப்பிவைக்கப்படாதவரை, தன்னால் முடிந்தபடி வழியனுப்பிவைக்கும் ஜெய்சங்கர். Toppers.

ஏகாந்தன் Aekaanthan ! said...

வெள்ளிவீடியோவுக்கும் சற்றுமுன் ‘மறுவார்த்தை’ பேசியிருக்கிறேன்..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

போற்றத்தக்க அரிய மனிதர்கள். அரிய சேவை. தேடி எடுத்து பகிரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

Bhanumathy Venkateswaran said...

அனாதை பிரேத சம்ஸ்காரம் அஸ்வமேத யாகம் செய்வதற்கு ஒப்பானது என்பார்கள். தினம் தினம் அஸ்வமேத யாகம் செய்யும் ஜெய்சங்கரையும், பசிப்பிணி போக்கும் விஜியையும் காய் கூப்பி வணங்குகிறேன்.

லாவண்யா தைரியமான பெண்ணாக இருக்கலாம், அதற்காக நள்ளிரவில் தனியாக அலுவலகத்தை விட்டு கிளம்பியிருக்க வேண்டாம். முன்பு ஒரு ஐ.டி. கம்பெனியில் இதைப் போல நேரம் கழித்து கிளம்பிய ஒரு பெண்ணுக்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்ததால் பெண் ஊழியர்கள் இரவில் ஒன்பது மணிக்கு மேல் அலுவலகத்தில் தங்கக் கூடாது என்ற முறையை கடை பிடித்தார்கள் என்று கேள்வி பட்டேனே...?

கோமதி அரசு said...

அனைத்து செய்திகளும் நல்ல செய்திகள்.
காவல்துறையை பாராட்ட வேண்டும் தைரியமான பெண் லாவண்யா வாழ்க வளமுடன்.
நீட் தேர்வுக்கு உதவிய அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்கள்.
பசிபிணித்தீர்த்த மணிமேகலை போல் வயிற்றிலெரியும் நெருப்பை ஆற்றிய விஜி வாழ்க!
சவங்க்ளை சிவாமாய் நினைத்து அடக்கும் செய்யும் சங்கர் வாழ்க!
கண்கொடுத்த பாரி வாழ்க! பேர் பொருத்தம் அருமை.
காலத்துக்கு ஏற்ற உதவி தவிச்ச வாய்க்கு தண்ணீர் தருவது, தண்ணீர் பந்தல் மகேந்திரன் வாழ்க!

Ramani S said...

அற்புதமான மனிதர்களை பகிர்ந்த அற்புதமான பதிவு தொடர வாழ்த்துக்கள்

ராஜி said...

நல்ல உள்ளங்கள் வாழ்க.

Asokan Kuppusamy said...

அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள் பாராட்டுகள்

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...


உயர்ந்த மனிதர்கள்
என்றும் உயர்வோடு வாழ
வாழ்த்துகிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

மனிதம் இன்னும் புதையவில்லை வாழ்கிறது என்ற செய்தி மனதை மிகவும் நெகிழ்த்தியது என்றால் வயிற்றிற்கு உணவளிக்கும் செய்தியும், தாகம் தீர்க்கும் தண்ணீர்ப்பந்தலும், மதம் தாண்டி அதே சமயம் தமிழர் என்ற பாகுபாடின்றி நீட் தேர்விற்கு வந்து தவித்தவர்களுக்குத் தங்க இடம் கொடுத்த அந்த நல்லுள்ளங்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்...

துளசிதரன், கீதா

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!