வியாழன், 3 மே, 2018

பூவின் தற்கொலை



பிரேக்கிங் நியூஸ் : யாரும் தன்னைப் பறிக்காத சோகத்தில் பூ ஒன்று செடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது.  





சென்னை,  மே 1 :  யாரும் தன்னைப் பறிக்காததால் தான் அழகாயில்லை என்று நினைத்து பூ ஒன்று செடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டது.  குதித்துப் பலமணிநேரம் ஆகியும் அந்தப் பூ வாடாமல் இருந்தது சிறப்பு மட்டுமல்லாமல் காண்போர் கவனத்தைக் கவர்ந்து, நெஞ்சத்தை உருக்குவதாக இருநதது.




அதே செடியில் மலர்ந்திருந்த இன்னொரு மலர் அங்கேயே இருந்தது.  அதனிடம் இது பற்றி விசாரித்தபோது "எனக்கும் புரியவில்லை.  இதில் என்ன இருக்கிறது?  செடியிலிருந்து பறித்தால் சில மலர்கள் தெய்வத்திடம் சேர்கின்றன.  சில மலர்கள் பெண்கள் கூந்தலை அலங்கரிக்கின்றன.  ஏன் இந்த மலர் அவசரப்பட்டது என்று தெரியவில்லை.  ஒரே கொடியில் பூத்த நான், இதோ இங்கேயேதான் இருக்கிறேன்.  ஏன் எனக்கு அந்த எண்ணம் வரவில்லை?  இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.  மரணம் இயற்கையாக வரட்டுமே..  நாளை நானும் வாடத்தான் போகிறேன்" என்றது.






அருகிலிருந்த எருக்கம் மலர்கள் எங்களை பார்த்து சோகமாகப் புன்னகைத்து விட்டுப் பேசியதாவது :  



"ஒரு நாள் பறிக்கா விட்டாலே இவைகளுக்கு மன பலவீனம் வந்து விடுகிறது.  மனிதன் பறித்தால்தான் உசத்தியா?  இவைகளுக்கு சுய கௌரவமே இல்லை.  நாம் பிறந்த இடத்திலேயே இருந்தால் இளப்பமா?  விலை போகவில்லை என்று அர்த்தமா?   எங்களைப் பாருங்கள்..  வருடத்தில் ஒருநாள்தான் எங்களுக்கு மவுசு.  விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் வந்து பறித்துப் போவார்கள்.  மற்ற நாட்களில் செடியிலேயே இருந்துதான் வாடுகிறோம். காயாகிறோம்.  யார் எங்களை மதிக்கிறார்கள்?  எங்களை மதிக்காத அவர்களை நாங்கள் ஏன் மதிக்க வேண்டும்?  இதற்கு ஏன் தற்கொலை?" என்று கேள்வி கேட்டன.

முதலில் பேசிய இந்த மலர் மெல்லிய குரலில் சொன்னது " எருக்கம் மலர்களுக்கு காயாகும் வாய்ப்பு இருக்கிறது.  எங்களுக்கு அந்த வாய்ப்பில்லை.  என்றாலும் அதன் கருத்தையும் மதிக்கிறேன்"


பின் குறிப்பு : படங்கள் என்னால் எடுக்கப்பட்டவை.



========================================================================================


எங்கிருந்தோ பணமோ, நகையோ, செல்வமோ கிடைப்பதாகக் கனவு கண்டால் மறுநாளிலோ, வரும் காலங்களிலோ நிஜத்திலும் நமக்கு அப்படி நடக்கும் என்கிற நம்பிக்கை வருவதில்லை.  ஆனால் கெட்ட கனவு ஏதாவது கண்டால் மட்டும் 'நடந்து விடுமோ?' என்கிற அச்சமும் குறுகுறுப்பும் வருவதேன்?


===================================================================================================



இந்தப் புகைப்படம் நான்கு வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்டது.  சென்ற வாரம் இந்தப் பக்கம் சென்றபோது அய்யனார் எதிரே ஒரு குதிரையும் காணப்பட்டது.  வண்டியில் வந்ததாலும், வேகமாகத் தாண்டி விட்டதாலும், அலைபேசியை எடுத்துப் படமெடுக்க நேரமில்லாததாலும் அதை எடுக்கவில்லை!







======================================================================================================

நேற்றைய புதிரின் விடைகள் :






  1)  கை கொடுக்கும் கை என்பது மிகப் பொருத்தம்.  இணைந்த கைகளும் ஓகே.  2)  'தீ' என்பது பொருத்தம்.  நெருப்பு என்றொரு படம் இருக்கிறதா என்று நினைவில்லை.  'நெருப்புடா' என்றொரு புதிய படம் வருகிறதாம்.   3)  நீலமலர்கள்.  4)  ரயில் பயணங்களில் (நான் நினைத்தது)  'பயணங்கள் முடிவதில்லை'யும் பரவாயில்லை என்றே தோன்றுகிறது!  5) சூரியகாந்தி  6)  நீலவானம்  7)  கன்னத்தில் முத்தமிட்டால்   8)  'அலைகள்' என்பது நான் நினைத்தது.  அலைகள் ஓய்வதில்லை, கரையைத் தொடாத அலைகள் (யாரும் சொல்லவில்லை) பானு அக்கா மட்டுமே இதற்கான சரியான விடை சொல்லி இருந்தார். கடலோரக்கவிதைகள், கடல் ஆகிய பதில்களும் சரியானவையே.  9)  "மேகத்துக்கும் தாகமுண்டு" என்கிற படத்தைச் சொல்ல முயன்றிருக்கிறேன்.  விடை தெரிந்தபின் மறுபடி அந்தப் படத்தைப் பாருங்கள்.  ஓகேயா என்று சொல்லுங்கள்.  (இதை நான் எழுதி வைத்து இரண்டு மணி நேரம் கழித்து கோமதி அக்கா சரியான விடை சொல்லியிருந்தார்கள்.  ஆச்சர்யம்) 10) அச்சாணி என்பது மிகச் சரியான விடை.  அதற்காகவே படத்தை ஜும் செய்திருக்கிறேன்.  வண்டிச்சக்கரமும் ஓகே.  சக்கரம் என்னும் பதிலும் ஓகே!



=============================================================================================================

நாய் பெற்ற தெங்கம்பழம்!







======================================================================================================================================


வரவேண்டும் மகாராணி.....




=======================================================================================================================












மீண்டும் அடுத்த வியாழன்....

68 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீரா, துரை அண்ணா, எல்லோருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் 🙏. பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  4. பூக்கள் அழகா இருக்கே இதோ வரேன் தில்லியில் என் ஃப்ளைட் லேன்ட் ஆக சுற்றி சுற்றி இப்பத்தான் லேன்ட் ஆச்சு..ஹா ஹா.பார்த்துட்டு வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா ஸ்ரீரா..... ரா ரா என்பது போல் ஆகிவிட்டது!!! ம் விடுபட்டதால்....ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  8. புதிர் ஏமாத்தி விட்டது! :(

    பதிலளிநீக்கு
  9. குட் மார்னிங் கீதாக்கா.. புதிர் எப்படி ஏமாற்றியது?

    பதிலளிநீக்கு
  10. ஆஹா! நிலவுக் காதலியின் வருகைக்காகக் காத்திருந்த அதுவும் வானவில்லின் வர்ண ஜாலத்தொடு!! வானத்திற்குக் காதலி அன்று வந்தாளா இல்லையோ?!!! இல்லை ஹைட் அண்ட் சீக் செய்தாளோ?!! வரிகளை ரசித்தேன் ஸ்ரீராம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. வானம் பெருக்கி, வண்ணம் கூட்டிக் காத்திருந்த வானம் ஏமாந்திருக்காது என்று நம்புவோம் கீதா!!!

    :))

    பதிலளிநீக்கு
  12. இப்பத்தான் தலைவரின் படம் கண்ணில் பட்டது....முதலில் உங்கள் லாஸ்ட் கவிதை பட்டது ஓ அதுதான் கடைசி என்று பார்த்தால் தலைவர் படம்...

    இன்று பிறந்தநாளா!! ம்ம்ம் சுவாரஸ்யமான எழுத்தின் சொந்தக்காரர் அவர் இல்லையே என்ற ஒரு வருத்தம் வரத்தான் செய்தது...

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ப்ரேக்கிங்க் ந்யூஸ்! இல்லை அது தற்கொலை அல்ல...இயற்கை மரணம் தான்..

    உன்னை நாங்கள் பறித்து கசக்கி குப்பைத்தொட்டியில், காலில் மிதிபட்டு எறிவதை விட நீ செடியிலேயே சுய மரியாதையுடன் மிக அழகாய் இருந்து உன்னை நாங்கள் வித விதமாய்ப் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து, நாள் முழுவதும் எங்களை ரசிக்க வைத்து உன் நேரம் முடியும் போது உன் தாய் மடியிலேயே இவ்வுலக உயிர்கள் பிரிவது போல் பிரிகிறாய்! மலரே!!! இதுவே உனக்கு அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. வானம் பெருக்கி, வண்ணம் கூட்டிக் காத்திருந்த வானம் ஏமாந்திருக்காது என்று நம்புவோம் கீதா!!!

    :))//

    நிச்சயமாக வந்திருக்கும்!! விளையாட்டும் காட்டியிருக்கும்!!! காதலனிடம் விளையாடுவதுதானே காதலியின் வழக்கம்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. ​இனிய மாலை வணக்கம் வல்லிம்மா..

    பதிலளிநீக்கு
  16. பூவின் தற்கொலை நல்ல கற்பனை வளம் உள்ள எழுத்து. நடை! எல்லாமும். இப்படி எல்லாம் எப்படி யோசிக்கிறீங்க?

    பதிலளிநீக்கு
  17. ​// உன் தாய் மடியிலேயே இவ்வுலக உயிர்கள் பிரிவது போல் பிரிகிறாய்! //

    கீதா... மலர்ந்து கொஞ்ச நேரத்திலேயே உதிர்ந்ததே... மறுநாள் உதிர்ந்தால் பரவாயில்லை. கூடவே மலர்ந்த இன்னொரு மலரைப் பாருங்கள்.. விழாமல் நிற்கிறது!

    :))

    பதிலளிநீக்கு
  18. இன்னிக்கு சுஜாதா பிறந்த நாளா? அது சரி, நிலவு எத்தனை பேருக்குக் காதலியா இருக்கும்? :)

    பதிலளிநீக்கு
  19. // பூவின் தற்கொலை நல்ல கற்பனை வளம் உள்ள எழுத்து. நடை! //

    நன்றி கீதா அக்கா... இப்படி உங்கள் பாராட்டுதல்கள் மனதை நிறைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  20. // நிலவு எத்தனை பேருக்குக் காதலியா இருக்கும்//

    மாத்தி யோசிச்சுப் பாருங்க கீதா அக்கா.. ஒவ்வொருத்தர் காதலியும் ஒரு நிலவு. நிலவு மாதிரி அழகு! நிலாப்பெண் காதலின் உருவகம்!

    பதிலளிநீக்கு
  21. மலரின் மென்மையான பேச்சு மனதைத் தொட்டது.
    சுஜாதா சாருக்கு என்றும் வணக்கங்கள். அவர் எழுபதைத் தொட்டதும்
    அவரது எண்ணங்களை எழுதியதும் நினைவுக்கு வருகிறது.
    ஜெட்டா கிழவி பாவம்.
    உங்கள் வானவில் நாயகி அழகு.
    நான் பத்துக்கு 7 ஆவது வாங்கி இருப்பேன் என்று நினைக்கிறேன்
    புதிர் விடைகளைச் சொன்னேன்.

    பதிலளிநீக்கு
  22. கூகிள் பிளஸ்சில் பட்டாபிராமன் ஸார் கமெண்ட்...


    மலர்கள் மலர்கின்றன .மணம் வீசுகின்றன. மண்ணோடு கலந்துவிடுகின்றன மீண்டும் மலர. மனம் இல்லா அவைகள் மனம் உள்ள மனிதர்களை போல் விபரீதமாக கொலை, தற்கொலை, மரணம் என்று சிந்தித்து வாழ்வை கூறு போடுவதில்லை

    பதிலளிநீக்கு
  23. பட்டாபிராமன் ஸார்..

    உண்மைதான். சிந்திக்கவே தெரியாத உயிரினங்கள் அவை. இப்படிச் சிந்தித்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனை இது. மட்டுமில்லாமல், மலர் என்பதை ஒரு உருவகமாக எடுத்துக் கொண்டால் வேறு மாதிரியும் அர்த்தம் வரும்!

    பதிலளிநீக்கு
  24. நன்றி வல்லிம்மா.. புதிருக்கு படங்கள் சரியாகக் கொடுக்காமல் இருந்தால் அது என் தவறும் கூட! இன்றைய பதிவின் பாராட்டுகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. பூவின் தற்கொலை - நல்ல கற்பனை.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  26. பூக்களின் தற்கொலை
    சிந்தனை புதிது நண்பரே

    பதிலளிநீக்கு
  27. பூக்களின் சிந்தனையை ரசித்தேன் ஜி

    தீ படத்தை தொடர்ந்து வந்தது நெருப்பு

    சமீபத்தில் வந்தது நெருப்புடா

    விரைவில் வருகிறது நெருப்புடி

    பதிலளிநீக்கு
  28. கீதா... மலர்ந்து கொஞ்ச நேரத்திலேயே உதிர்ந்ததே... மறுநாள் உதிர்ந்தால் பரவாயில்லை. //

    ஓ!! ஹையோ பாவம்!!! பார்க்கப் போனால் உங்கள் கற்பனை அபாரம் ஆனால் தற்கொலை என்றதும் கொஞ்சம் மனசு அடடா என்று சொல்லிவிட்டதா அதான்...ஸ்ரீராம் நீங்கள் அந்தப் பூ கீழே விழுந்ததில் அடிதான் பட்டிருக்கும் பாவம்...ஸ்ரீராம் நீங்கள் இருக்கும் போது அதற்கு என்ன வந்தது சொல்லுங்கள் அதனிடம்..."நான் தான் உன்னை ரசிக்கின்றேனே...உன்னை ஃபோட்டோ எடுத்து எல்லோருக்கும் காட்டுகிறேன்...இனி வேண்டாம் தற்கொலை உன் தாயுடன் இருக்கும் வரை இருந்து என்னை மகிழ்வித்துவிடு அந்த மகிழ்வை எல்லோருக்கும் பரப்புகிறேன்" என்று சொல்லிவிடுங்கள் பாவம் அந்தப் பூ!!!

    இப்பத்தான் நல்லா பார்த்தேன்...ஃப்ரெஷ்ஷாகவெ இருக்கு...விழுந்த பூ...ம்ம்ம் என்ன சோகமோ அதுக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
  29. மலர் என்பதை ஒரு உருவகமாக எடுத்துக் கொண்டால் வேறு மாதிரியும் அர்த்தம் வரும்!//

    யெஸ் யெஸ் ஸ்ரீராம்....மலரைப் பெண்ணுக்குத்தானே ஒப்பிடுவது வழக்கம்...எனக்குச் சட்டென்று காலையில் அதுவும் தோன்றிவிட்டது !!!

    கீதா

    பதிலளிநீக்கு
  30. ஆஹா ஸ்ரீராம் நான் ப்ரெஷ்ஷாக இருக்கு என்று சொல்லிவிட்டு உங்கள் கமென்டை பார்த்தால்...

    ஆஹா ஆஹா ஆஹா என்று போட வைத்துவிட்டது!!! செம ஸ்ரீராம்...ரொம்பவே ரசித்தேன்....எல்லோர் மனதையும் உருக வைத்தது....செய்தியாளர் போல் வர்ணித்த விதம் மிக மிக ரசனை ரசித்தேன்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  31. எனக்கும் புரியவில்லை. இதில் என்ன இருக்கிறது? செடியிலிருந்து பறித்தால் சில மலர்கள் தெய்வத்திடம் சேர்கின்றன. சில மலர்கள் பெண்கள் கூந்தலை அலங்கரிக்கின்றன. ஏன் இந்த மலர் அவசரப்பட்டது என்று தெரியவில்லை. ஒரே கொடியில் பூத்த நான், இதோ இங்கேயேதான் இருக்கிறேன். ஏன் எனக்கு அந்த எண்ணம் வரவில்லை? இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. மரணம் இயற்கையாக வரட்டுமே.. நாளை நானும் வாடத்தான் போகிறேன்" என்றது.//

    அட அட அட!!! செம செம ஸ்ரீராம்!! ரொம்பவே ரசித்தேன்....அதானே அது சொல்லுவது எவ்வளவு அழகு....நான் முதலில் சொன்ன ஒரு சின்ன கருத்து உங்களிடம் இருந்து இங்கு வந்துவிட்டது!! ஹைஃபைவ்!!! ரசித்தேன் பூக்கள் பேசினால் என்று தோன்றும்...விலங்குகள் பேசினால் என்று தோன்றும்...உங்கள் கமெண்டுகளின் வழி நிஜமாகவே அவை தலையை ஆட்டி ஆட்டி உணர்வுகளுடன் உங்கள் மொழியைப் பேசினால் எப்படி இருக்கும் என்று இந்த நித்யகல்யாணியை கற்பனையில் பார்த்து ரசித்தேன்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  32. ஹையோ எருக்கம் பூ டயலாக் வாவ் ஸ்ரீராம்!!! ஹையோ! இதற்கும் ஹைஃபைவ்!!! ஸ்ரீராம்.....அதானே எதற்கு தற்கொலை மனுஷன் பறிக்காட்டி என்ன? என்னன்றேன்....பறிச்சு கசக்குவதை விட.சுய கௌரவம்...ஆஹா இதற்கும் ஹைஃபைவ்!!! ..இப்படி அழகாய் ஸ்ரீராம் எல்லாம் ஃபோட்டோ எடுக்க போஸ் கொடுத்து சந்தோஷமாக இருங்கள் பூக்களே!!! ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம் எருக்கம் பூ டயலாக்!! பூக்களே ஸ்ரீராமுடன் பேசுங்கள் இங்கு என்ன கமென்ட்ஸ் வந்தது என்று கேளுங்கள் அவர் சொல்லுவார்...இங்கு அனைவருமே உங்கள் ரசிகர்கள் என்று சொல்லுவார்!!

    படங்கள் அத்தனையும் அழகோ அழகு ஸ்ரீராம்...ரொம்ப அழகா எடுத்துருக்கீங்க!!!! ரசித்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  33. ஹையோ எருக்கம் பூ டயலாக் வாவ் ஸ்ரீராம்!!! ஹையோ! இதற்கும் ஹைஃபைவ்!!! ஸ்ரீராம்.....அதானே எதற்கு தற்கொலை மனுஷன் பறிக்காட்டி என்ன? என்னன்றேன்....பறிச்சு கசக்குவதை விட.சுய கௌரவம்...ஆஹா இதற்கும் ஹைஃபைவ்!!! ..இப்படி அழகாய் ஸ்ரீராம் எல்லாம் ஃபோட்டோ எடுக்க போஸ் கொடுத்து சந்தோஷமாக இருங்கள் பூக்களே!!! ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம் எருக்கம் பூ டயலாக்!! பூக்களே ஸ்ரீராமுடன் பேசுங்கள் இங்கு என்ன கமென்ட்ஸ் வந்தது என்று கேளுங்கள் அவர் சொல்லுவார்...இங்கு அனைவருமே உங்கள் ரசிகர்கள் என்று சொல்லுவார்!!

    படங்கள் அத்தனையும் அழகோ அழகு ஸ்ரீராம்...ரொம்ப அழகா எடுத்துருக்கீங்க!!!! ரசித்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  34. ஐயனார் சூப்பர் அதுவும் போகும் வழியில் எடுத்தது அழகா வந்திருக்கு. எப்படி டக்கென்று எடுத்தீர்கள்..சூப்பர்..

    எந்த இடம் என்று அந்தத் தண்ணீர்த் தொட்டியின் மேல் எழுதியிருக்கும் எழுத்துகளை வாசிக்க முயற்சி செய்தேன்....முடியலை...ண்டு/ண்டி என்று முடிவது போல் உள்ளது...

    கீதா

    பதிலளிநீக்கு
  35. ஹையோ பெரும்பாலும் விடைகள் சரி....கன்னத்தில் முத்தமிட்டால் தவிர...

    மற்றொன்று '"மேகத்துக்கும் தாகமுண்டு"// ஸ்ரீராம் நான் இதை நினைத்துச் சரியான பெயரைத் தேடினேன் எனக்குக் கிடைக்கவில்லை..டக்கென்று மனதில் அப்பெயர் சரியாக வரவில்லை...(எங்கள் வீட்டில் விளையாடும் டம்ஷரஸ் மூலம் நிறைஅய் சினிமா பெயர்கள் அறிந்தது ...)..பொருத்தாம்தான்....

    கீதா

    பதிலளிநீக்கு
  36. @ கீதா:..ஃப்ரெஷ்ஷாகவெ இருக்கு, விழுந்த பூ...ம்ம்ம் என்ன சோகமோ அதுக்கு..//
    & ஸ்ரீராம்:

    விழுந்த பூ தமிழ்ப்பூவாக, அதிலும் ஆண்பூவாக இருந்திருக்கும். அதான் ஓவரா உணர்ச்சிவசப்பட்டிருச்சு.. இருந்தாலும் இப்படி நிச்சயமா சொல்லியிருக்காது: குப்புறத்தான் விழுந்தேன்..ஆனாலும், மீசைல மண்ணு ஒட்டல்லே..!

    பதிலளிநீக்கு
  37. ஏகாந்தன் அண்ணா ...ஹா ஹா ஹா ஹா ஹா..
    ரொம்ப நாளாச்சு உங்களை இங்க பார்த்து....கிரிக்கெட் ஓடுதே அதான்...இந்தக் கேள்வி..

    கீதா

    பதிலளிநீக்கு
  38. புதிர் ஏமாத்தி விட்டது! :(//

    கீதாக்கா ஏன் எப்படி எதற்கு அது உங்களை ஏமாத்திச்சு!!?? கண்டுபிடிக்க முடியலையா? சினிமா பெயர்ன்றதுனால?!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  39. கனவு......ஆமாம் மனிதர்களாகிய நமக்கு நாம் என்னதான் பாசிட்டிவாக இருந்தாலும், சில சமயங்களில் எதிர்மறை சட்டென பதிந்துவிடுவதால் இருக்கலாமோ ஸ்ரீராம்?!!

    ஜெட்டா கிழவி பணக்காரியாக இருந்தும் ஏன்பிச்சை எடுத்தார்? ஒரு வேளை பிச்சை எடுத்துச் சேர்த்ததா இல்லை...துரத்தப்பட்டிருந்தால் துரத்தியவர்கள் அவரது சொத்தைக் க்ளெய்ம் பண்ணிருக்கணுமே....ஆச்சரியமாக இருக்கிறது...என்ன காரணமாக இருக்கும் என்றும் யோசிக்க வைக்கிறது. திடீரென்று நம்மூர் நினைவு....நம்மூர்ல பணக்காரர் கூட ஏதேனும் சோசியர் சொன்னார் என்று இப்படிப் பிச்சைஎடுக்கப் போவதுண்டு...அது போலயோ என்றும் தோன்றியது

    கீதா

    பதிலளிநீக்கு
  40. //கீதாக்கா ஏன் எப்படி எதற்கு அது உங்களை ஏமாத்திச்சு!!?? கண்டுபிடிக்க முடியலையா? சினிமா பெயர்ன்றதுனால?!!!! // yesssssssssssssssu!

    பதிலளிநீக்கு
  41. //நம்மூர்ல பணக்காரர் கூட ஏதேனும் சோசியர் சொன்னார் என்று இப்படிப் பிச்சைஎடுக்கப் போவதுண்டு.// பிரார்த்தனை செய்துப்பாங்க. மடிப்பிச்சை எடுக்கிறதாகப் பெண்கள், பிச்சை எடுத்து இந்த விசேஷம் செய்யறேன் எனவும் வேண்டுதல்கள் உண்டு. என் அண்ணாவின் உபநயனம் பிச்சை எடுத்துத் தான் போடப்பட்டது திருமலையில்!

    பதிலளிநீக்கு
  42. கதம்பம் நல்லாத்தான் இருக்கு. நான் எப்போதும் நினைப்பேன். யானைகள் சில காட்டில் வளர்கின்றன, சில கோவில்களில். அதுபோல பூ, கனிகள் போன்றவையும். அரிசிச் சாதமும், சில பசித்தவன் வயிறை நிறைக்கின்றன. பல, வீணே கொட்டப்பட்டு உயிரினங்களுக்கு உணவாகின்றன. எல்லாவற்றிர்க்கும் விதி என்று ஒன்று உண்டோ?

    பதிலளிநீக்கு
  43. பூக்கள் பேசுவது போன்று நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் மிகவும் ரசித்தேன் ஸ்ரீராம் ஜி. எப்படி ஒரு கற்பனை. பூக்களின் அழகை ரசிப்பேன் ஆனால் எனக்கு இப்படி எல்லாம் கற்பனை எழுவதில்லையே என்றும் தோன்றியது.

    அதே போன்றுதான் உங்கள் கவிதையும் வழக்கம் போல் அருமை. காதலன் காதலிக்கு கலர் கலராய் பூங்கொத்து, வளையல் உடை வாங்தித்தருவது போல் வானம் வானவில்லுடன் நிலவுக் காதலிக்காகக் காத்திருத்தல் என்பது அழகான ரசனை. அன்று அமாவாசை இல்லையே! இருக்காது என்று வைத்துக் கொள்வோம்.

    கனவு என்பதைப் பொறுத்தவரை அப்படித்தான் கெட்டது மனதை ஆக்ரமிப்பதாலும், நமக்கு நம் வாழ்க்கையைப் பற்றியே இன்செக்யூர்ட் ஃபீலிங்க் இருப்பதாலும் இருக்குமோ?

    ஜெட்டா பாட்டி ஆச்சரியம். ஏன் பிச்சை எடுத்தாரோ?

    சுஜாதா அவர்களுக்குப் பிறந்த நாளா இன்று?! அதிகம் வாசித்ததில்லை. ஒரு சில தொடர்கள் அப்போது வாசித்த நினைவு ஆனால் முழுமையாக இல்லை.

    விடைகள் ஒன்று தவறு என்று நினைக்கிறேன். பாசமலர்கள் என்று சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். கன்னத்தில் முத்தமிட்டால் நினைவுக்கு வரவில்லை.

    துளசிதரன்

    (கீதா: ஹிஹிஹி இதற்கு துளசி அந்த ஒரு படத்திற்குமட்டும் (குட்டிப்பசங்க) என்னிடம் க்ளூ கேட்டார்....எனக்குத் தெரிஞ்சதை சொன்னேன் அவரும் அதையே போட்டுவிட்டார் மூளையைக் கசக்காம....ஹா ஹா ஹா)

    பதிலளிநீக்கு
  44. மலர்களைப் பற்றிய அழகான மேற்கோள்கள் ரசிக்கும்படி இருந்தது.

    பதிலளிநீக்கு
  45. பிரார்த்தனை செய்துப்பாங்க. மடிப்பிச்சை எடுக்கிறதாகப் பெண்கள், பிச்சை எடுத்து இந்த விசேஷம் செய்யறேன் எனவும் வேண்டுதல்கள் உண்டு./

    ஆமாம் அக்கா! இப்படி நிறையப் பேர் வாசலில் வருவார்கள் தான் ஆனால் எனக்கு மிகவும் தெரிந்தவர்கள் என்றால் மட்டும் உதவுவதுண்டு. இல்லையேல் செய்வதில்லை. இப்போதெல்லாம் யாரையும் நம்ப முடிவதில்லை. சிலர் சொல்லும் போது இரக்கமாகத்தான் இருக்கும். என்றாலும் மறுபக்கம் இப்படியும் தோன்றும் அக்கா.

    //என் அண்ணாவின் உபநயனம் பிச்சை எடுத்துத் தான் போடப்பட்டது //

    ஓ! அப்படியும் செய்வதுண்டா. பொதுவாக அந்தக் காலத்தில் உபநயனம் முடிந்ததும் யாசித்துச் சாப்பிடுவது என்பது இருந்ததால் தான் இப்போதும் உபநயனத்தில் பையனுக்கு முதலில் அம்மாவும் அப்புறம் நெருங்கிய உறவினர் மடியில் அரிசி போட்டு அதை அவனுக்குச் சமைத்துப் போடுவது உண்டு...நீங்கள் சொல்லியிருப்பது இப்பத்தான் கேள்விப்படறேன். அப்படிப் போகும் போது தெரிந்தவர்கள் வீட்டிலா இல்லை எப்படி பார்க்கப்பட்டது அக்கா?

    உயநயனம் திருமலையில் என்று நீங்கள் சொல்லியிருந்தீங்க. நினைவிருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  46. பூப்படங்கள் அழகு. எருக்கம்பூவோடு கிராமத்தில் நிறையப் பழகியிருக்கிறேன்.அதன் முற்றிய மொட்டுக்களை லேசாக அழுத்தி அதிலிருந்து சின்னதாக ’டொப்’ என்ற சத்தம் வருவதை ரசித்திருக்கிறேன்! ஓ, அந்த பிங்க் நித்யகல்யாணியா! அதனை முழுமையாக தரிசித்தது சோமாலியாவில். மொகதிஷுவில் எங்கள் வீட்டு வாசலில் wild growth -ஆக நிறைய மண்டியிருக்கும். பிங்கும், வெள்ளையுமாகப் பூத்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  47. ஏஞ்சல் உங்களை புதன் புதிரிலும் கீதாக்கா வீட்டிலும் இப்பத்தான் பார்த்தேன்...வெல்கம் வெல்கம்....வாங்க தெரியும் நீங்க சர்ச் அக்டிவிட்டிஸ்ல பிஸினு...

    கீதா

    பதிலளிநீக்கு
  48. மண்ணில் ஏன் பிறந்தோம் என்கிற கேள்வியே வளர்ச்சிக்கு வித்திடும்.
    நித்தியகல்யாணி பூ முன்னேற்றத்தின் குறியீடு
    பிறந்த நோக்கம் தெரிந்த மலர் அழகாய் பேசி இருக்கிறது.

    அரவிந்தர் அன்னைக்கு எருக்கம் பூ வைத்து வணங்கினால் மன தைரியம் வரும் என்பார்கள், அதுதான் எருக்கம் பூ நல்ல
    தைரியமாய் பேசுது போல!

    கனவு யோசிக்க வைக்குது. இனி கெட்ட கனா வந்தால் பயபடாமல் இருக்க சொன்னது அருமை.


    பதிலளிநீக்கு
  49. ஐய்யனார் நன்றாக இருக்கிறார்.
    நிலவு காதலி வருகைக்கு மழையை நிறுத்தி விட்டு மழை இல்லை என்று புலம்பினால் என்ன செய்வது?
    எழுத்தாளர் சுஜாதா அவர்கள் பிறந்தாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  50. நித்தியகல்யாணி பூக்கு மருத்துவ குணம் இருக்கிறது.
    எருக்கம் பூவின் மொட்டை அழுத்தி டொப் என்ற சத்தத்தை ஏகந்தன் ரசித்தது போல் நானும் ரசித்து இருக்கிறேன்.
    கிராமத்தில் கோவிலுக்கு போய் விட்டு வரும் போது எருக்கம்பூ மொட்டை இப்படி அழுத்தி சத்தமிட விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  51. என் புதிர் பதில் ஒன்று மட்டும் தப்பு இல்லையா?
    கன்னத்தில் முத்தமிட்டால் என்று நினைக்கவில்லை, அண்ணன் தங்கச்சி என்று நினைத்தால் அன்பு தங்கச்சி பாசபறவைகள் என்று நினைவுக்கு வந்தது .
    மேகத்துக்கு தாகம் உண்டு என்று நீங்கள் நினைத்த பெயரை சொல்லிவிட்டேன்.

    நெருப்பூ என்று படம் உண்டு.

    பதிலளிநீக்கு
  52. அப்படியும் செய்வதுண்டா. பொதுவாக அந்தக் காலத்தில் உபநயனம் முடிந்ததும் யாசித்துச் சாப்பிடுவது என்பது இருந்ததால் தான் இப்போதும் உபநயனத்தில் பையனுக்கு முதலில் அம்மாவும் அப்புறம் நெருங்கிய உறவினர் மடியில் அரிசி போட்டு அதை அவனுக்குச் சமைத்துப் போடுவது உண்டு...நீங்கள் சொல்லியிருப்பது இப்பத்தான் கேள்விப்படறேன். அப்படிப் போகும் போது தெரிந்தவர்கள் வீட்டிலா இல்லை எப்படி பார்க்கப்பட்டது அக்கா?


    என் அண்ணா குழந்தையா இருந்தப்போப் பிழைத்து வருமா இந்தக் குழந்தை என்ற அளவுக்கு உடல் நலமில்லாமல் இருந்தாராம். என் அம்மாவழித் தாத்தா வீட்டில் முதல் பேரன். பெரியம்மாவுக்குக் குழந்தை இறந்தே பிறந்திருக்கிறது. ஆகவே குலதெய்வத்துக்குப் பிரார்த்திக்கச் சொல்லி என் அப்பா, அம்மா திருப்பதி வெங்கடாசலபதிக்கு வேண்டிக் கொண்டிருக்காங்க. பிச்சை எடுத்துப் பூணூல் போடுகிறோம் என. ஆகவே அதே மாதிரிச் செய்தார்கள். அப்போ மதுரை மேலாவணி மூல வீதி முழுக்கத் தெரிஞ்சவங்க, அறிந்தவங்க தானே! ஒண்ணும் பிரச்னை வரலை!

    பதிலளிநீக்கு
  53. மற்றபடி உபநயனம் முடிந்ததும் போடும் பிட்சை தனி! முதல் பிட்சை தாயிடம், பாட்டியிடம், மாமி போன்றோரிடம் வாங்கணும் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
  54. வணக்கம் சகோதரரே

    மலர்களின் பேச்சுக்கள் அருமை. உங்கள் கற்பனையில் ஒரு பூவின் முடிவும்,அதன் கொடியில் பூத்த மற்றொரு பூவின் பச்சாதாப பேச்சும், எருக்கம் மலர்களின் தைரியம் மிகுந்த பேச்சும் அருமையாக இருந்தது. நல்ல கற்பனை உரையாடல். படங்களும் கற்பனையும் அருமையாக இருந்தது.

    ஐயனார் கோவில் புகைப்படம் மிகவும் அழகாக உள்ளது. ஐயனார் மிகவும் கன கம்பீரமாக உள்ளார்.

    கெட்ட கனவுகள் உண்மையிலேயே பயமுறுத்ததான் செய்கின்றன.

    கவிதை மிக அருமை... நிலவு காதலி ஆங்காங்கே ஓடிககொண்டிருக்கும் மேகங்கள் இடையே வெட்கமுற்று ஓடி ஒழியாமல், வானத்துக்கு முழுதாக முகம் காட்ட வேண்டும்.

    புதிர் போட்டியில் 9 தாவது மட்டுந்தான் தவறாக கூறியிருக்கிறேன் போலும்.

    சுஜாதா பிறந்த நாள் இன்று என்பது தங்களால் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி. சிறந்த எழுத்தாளருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

    அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  55. பூக்களின் உரையாடல் ரசிக்கவும் யோசிக்கவும் வைத்தது...

    அந்த ஐய்யனார் சினிமாவிலும் வருவார்ன்னு நினைக்குறேன்..

    பதிலளிநீக்கு
  56. அதன் முற்றிய மொட்டுக்களை லேசாக அழுத்தி அதிலிருந்து சின்னதாக ’டொப்’ என்ற சத்தம் வருவதை ரசித்திருக்கிறேன்! //

    நான் இப்பவும் அப்படிச் செய்து ரசிப்பது வழக்கம்...எங்கள் வீட்டருகில் வாக்கிங்க் போகும் வழியில் என்று நிறைய இருக்கு...ஆனா என்ன இன்று எல்லாத்தையும் டொப் பண்ணிட்டா அடுத்த நாளைக்கு இருக்காது. அப்புறம் வெயிட் பண்ணனும்..ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  57. தமிழ்நாட்டைப்போலவே ஆப்பிரிக்காவின் சாலை ஓரங்களில் நிறைய மண்டுகிறது இந்த எருக்கு. கொத்துக்கொத்தான எருக்க மொட்டுக்களை, மலர்களைப் பார்த்தால் இப்படித் தோன்றுகிறது:

    எருக்கம்பூவில் தெரியுது ஒரு செருக்கு
    அத நெனச்சாலே மனசாகுது கிறுக்கு..

    பதிலளிநீக்கு
  58. படங்களும் கருத்துக்களும் அருமை...

    பதிலளிநீக்கு
  59. பூக்களும் அதன் மூலம் நீங்கள் சொன்ன செய்தியும் அருமை! குறிப்பாக எருக்கம் பூவின் பேச்சு அக்ஷர லட்சம் பெறும்.

    கனவுகள் குறித்து நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தை வைத்து ஒரு சிறு கதை யோசித்து வைத்திருக்கிறேன். எழுத வேண்டும். முன்னாலேயே சொல்லி விட்டேன், என்னுடைய கருது என்று கேஸ் போட்டு விடாதீர்கள்.

    நம்மூரில் புரசைவாக்கத்தில் ஒரு பிச்சைக்காரர் இறந்த பொழுது அவர் அமர்ந்திருந்த சாக்கின் அடியில் பல லட்சங்கள் இருந்ததாக செய்தி வந்திருந்தது. தான் ஒரு லட்சாதிபதி என்று தெரியாமலேயே பிச்சை எடுத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  60. பூக்களின் தற்கொலை அருமை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  61. grrrrrrrrrrrrrrr காலங்கார்த்தாலே நெட் படுத்தல்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!