Tuesday, May 8, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : காணி நிலம் - அனுராதா பிரேம்குமார்காணிநிலம்
அனுராதா பிரேம்குமார்
கேசவன் தன் நிலத்தில் நின்று சுத்தி பார்த்தான்….

எங்கும் பசுமை...எதிலும் பசுமை…

பார்க்க பார்க்க மனம் பூரா சந்தோசம்…

கடவுளே! ரொம்ப நன்றி...எங்களுக்கு இந்த நிலத்தையும் , தண்ணியையும், காத்தையும் கொடுத்தத்துக்கு ன்னு சொல்லி கிட்டே..


நிலத்தில் இறங்கி தண்ணி கட்ட ஆரம்பித்தான்...

அடுத்த வாரம் அறுப்புக்கு ஆளுங்களை வர சொன்னா சரியாய் இருக்கும்...அப்பதான் செல்லாயி அம்மன்னுக்கு பொங்க வைக்கவும் தோதாய் இருக்கும்…..

இப்ப இந்த நிலம் இல்லனா நாங்க என்ன ஆகிருப்போம் ன்னு யோசனை வரும் போது தானேவே அப்பாயி தான் கண்ணுக்குள்ள வருது…

என்ன மனுஷி...வாழ்ந்தா அப்படி தான் வாழனும்…

இந்த வாழ்க்கை போதும் ன்னு..

யாருக்கும் கடைசி காலத்தில் தொல்லை குடுக்க கூடாது ன்னு

அவங்க கடைசி படுக்கையும் தானே முடிவெடுத்து…


சாப்பிடாம இந்த வாழ்வு போதும்ன்னு உண்ணா நோம்பு மாதரி இருந்து…

அந்த நிலைமையிலும் சின்னவன் னா என்ன பார்த்து கை எடுத்து கும்புட்டுசே…


ஏன் கும்புட்டுசுன்னு தெரியாது ..ஆன

சின்னவன் ஆனா என்னை கூட மதிக்கணும் நினைச்ச அந்த பாங்கு..

அந்த மாதரி  தான் நாம வாழணும் ன்னு சொல்லி குடுத்துச்சு...வார்த்தையால் இல்ல செய்யலால்..


இன்னமும் அப்பாயி கூட இருந்தது எல்லாம் அப்படியே நினைவுக்கு வருது…

…..


அப்பாயி…

அப்பாயி...வண்டி வருது வா  இந்த வண்டி ல போலாம்...

இரு சாமி ...அடுத்த டவுன் பஸ் ல போலாம்...

ஏன் அப்பாயி.....

இதுல 25 காசு கூட சாமி...இரு...

வா சாமி…இத பாரு  டவுன் வண்டி வருது.. வெரசா ...ஏறுய்யா..


அப்பாயி ஒரே நெருக்கடியா இருக்கு...

ஆமா சாமி ...

ஏகாதசி அன்னக்கி ஸ்ரீரங்கத்தில் அப்படி தான் இருக்கு ஐயா...

நீ என் கையை கெட்டியா பிடிச்சுக்கோன்னு அப்பாயி ..என்னை ஒரு கையிலும்..சாப்பாடு பையை ஒரு கையிலும் எடுத்துகிச்சு....
...

அந்த ஆயிரம் கால் மண்டபத்தில் இரண்டு பேரும் உட்காந்து இருந்தோம் ...அப்போ

அப்பாயி சாமிய எப்ப பாக்குறது..

இப்ப இங்க படுத்துக்க சாமி....

காலையில் வெரசா சாமி பாக்கலாம்..

சரி அப்பாயி ...கதை சொல்லு அப்பாயி...

ம்ம்ம்...

நம்ம தாத்தாக்கள் எல்லாம் சிலோன் லேந்து சம்பாத்தியம் பண்ணிட்டு வந்தாங்க...

அப்போ எல்லாம் நம்ம ஊட்டு கிழவிங்க தான் காடு கரை எல்லாம் பாத்துக்கும்....

என்னா வேலை செய்யுங்க தெரியுமா….

வூட்ட பாத்துக்கறது ஆகட்டும் ..

காடு பாத்துக்கறது ஆகட்டும்…

வேலை ஆளுகளுக்கு வயிறு வாடாம சோறு போடுறது ஆகட்டும்…

அதுங்க காரியம் யாருக்கும் வராது...

தினம் கம்பஞ்சோறு தான்..இட்லி எல்லாம் தீபாவளிக்கு மட்டும் தான் போடுவாக..


அப்புறம் அங்க சம்பாத்தியம் போதும் ன்னு...

நம்ம தாத்தாக்களே காடு கரை பார்க்க ஆரம்பிச்சாங்க...

அப்போ நம்ம ஊட்டு தாத்தா தான் பெரியவரு அவருக்கு பின்னால  நாலு பேரு...

உழவு ஓட்டுறதுல முத ஏறு எப்படியோ அப்படி தான் பின் ஏறும்...

முத ஏறு ஓட்டுறது தான் கடினம் கூட..

நம்ம தாத்தா தானே பெரியவரு அது நாளா அவரு தான் எப்பவும் முத ஏறு ஓட்டுவாரு....

ரொம்ப லாவகமா ஓட்டுவாரு...அவர் மாதரி மத்தவகலால முடியாது..

நல்லா விவசாயம் நடந்தது ...எல்லாம் சிறப்பா போச்சு...

நம்ம தாத்தாக்கு மட்டும் என்னமோ நேரம் சரி இல்லை ..கொஞ்சம் அப்படி இப்படி  போகவும்….எல்லா சிறப்பும் குறைய ஆரம்பிச்சது..

அவருக்கு பின்னால நமக்கு மேக்காடு(வயக்காடு) மத்தவங்க குடுக்கல..

அப்போ ஊருல இருக்குற கிழவி எல்லாம் திண்ணையில உட்காந்து...இனி இவ அரிசி வாங்க மஞ்ச பை தான் தூக்கி போகணும்...மேக்காடு இல்லன்னு எல்லாம் பேசுசுங்க..

காடு ,கரை இல்லாதவங்க தான் மஞ்சப்பை எடுத்து போய் சந்தையில அரிசி வாங்கு வாங்க…

அப்படி காடு இருக்குறவக  சந்தையில போய் அரிசி வாங்குனா அது அசிங்கம்..

இவ்வோளோ நாள் பெரிய பண்ணையத்தில் விவசாயம் பண்ணிட்டு இப்போ நானும்  மஞ்சப்பை தூக்கிட்டு போய் அரிசி வாங்க போறேன்னு அவங்க எல்லாருக்கும் இளக்காரம்...

ம்ம்ம்

நான் மஞ்சப்பை தூக்கி போனாலும்...

என் மவனுங்க போக கூடாதுன்னு மனசுல வந்துச்சு…

அதுனால   இருந்த ஒரே சொத்தான தாலி கொடிய வித்து ...

காணி நிலம் வாங்குனேன்...

எல்லாம் அந்த  சாமியால தான் இல்லனா ஒத்த பொட்டச்சி யா நா எங்க வாங்கன்னு அப்பாயி சொல்ல சொல் நான் தூங்கிட்டேன்......


.....

இப்பவும் ஒவ்வொரு முறை இந்த வயலுக்குள்ள கால வைக்கும் போது அப்பாயின் நினைப்பு தான் மனசுல ஓடும்..

அப்பாயி அப்போ வைராக்கியமா வாங்கலைனா ஏது எங்களுக்கு இந்த காடுன்னு ...

நாங்க மஞ்சப்பை தூக்க கூடாது ங்கற அப்பாயின்  வைராக்கியத்தோட நினைப்பு தான் இந்த வயல்...

அந்த வைரக்கியத்துக்காக இருந்த கடைசி சொத்தான தாலி கொடி யையும் வித்து எங்களுக்கு வாழ்க்கை உண்டாக்கி இருக்கு...


எங்களுக்காக அப்பாயி வாங்குனது சொத்து இல்ல...மரியாதையை..
…..
வாழ்நாள் முழுக்க இந்த மரியாதையை காப்பாத்த வேண்டியது எங்க கடமை தானே...
இந்த காணிநிலம் தான் எங்களுக்கு சோறு போட்டது...

என் தம்பிகளுக்கு படிப்பையும் வாழ்க்கையும் கொடுத்தது...

என் கூட பொறந்தவளுக்கு பெருமையை கொடுத்தது…இது எல்லாம் அப்பாயின் வைராக்கியத்தின் விளைவுகள்….


இந்த  காணி நிலம் தான் எங்களுக்கு சாமி....அதை வாங்குன அப்பாயி தான் எங்க குலசாமி…


என்று எப்பவும் போல இந்த நினைவுகளுடனே  கேசவன் தன் வேலைகளை பார்த்துட்டு இருந்தான்...தன் காணி நிலத்தில்...

84 comments:

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, பானுக்கா எல்லோருக்கும்…

கீதா

துரை செல்வராஜூ said...

வாழ்க..

Thulasidharan V Thillaiakathu said...

ஹை இன்று அனுவின் கதையா...சூப்பர் சூப்பர்!!! வரேன்

கீதா

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்..

துரை செல்வராஜூ said...

அனுராதா பிரேம்குமார் அவர்களுக்கு நல்வரவு..

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.. தொடர்ந்து முந்துகிறீர்களே...!!! ஹா.. ஹா.. ஹா..

துரை செல்வராஜூ said...

// அப்பாயி தான் எங்க குலசாமி..//

ஆயிரம் பெறும் இந்த ஒரு வரி மட்டும்...

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

Thulasidharan V Thillaiakathu said...

அனு கதை நன்றாக இருக்கிறது. இந்தக் காணி நிலத்திற்கு எந்தக் கேடும் வந்துவிடாமல் அந்த அப்பாயி காப்பாற்ற வேண்டும்!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அப்பாயி தான் குலசாமி// பின்ன இந்த நிலம் இல்லை என்றால்.......அருமை அனு....

கீதா

துரை செல்வராஜூ said...

அப்பாயி... அப்பாயி எனும் வார்த்தைகள் எங்களது சிறு வயதினை நினைவுக்குக் கொண்டு வந்தன...

துரை செல்வராஜூ said...

அப்பாயி...

அப்பாவின் தாய்...
என்னைப் பொறுத்தவரை இன்னொரு தெய்வம்...

ஸ்ரீராம். said...

துரை ஸார்... உங்கள் நினைவுகளைக் கிளறி விட்டு விட்டதா அனுபிரேம் கதை?

துரை செல்வராஜூ said...

எனது அப்பாயி தான் எனக்கு வாழ்வின் பொருளை உணர்த்தியவர்கள்..

பொறுமையின் சிகரம்..
வைராக்கியத்தின் மறு உருவம்...

கடைசி நிமிடம் வரைக்கும்
உழைத்து வாழ்ந்தவர்கள்...

80 வயதுவரை நல்வாழ்வு வாழ்ந்து சிவகதி அடைந்தவர்கள்...

மனதைக் கலங்க அடித்துவிட்டீர்கள் அனு..

துரை செல்வராஜூ said...

// தொடர்ந்து முந்துகிறீர்களே...//

ஏதாவது பரிசு கொடுப்பதென்றால் சொல்லிவிட்டுக் கொடுக்கவும்...

ஸ்ரீராம். said...

// ஏதாவது பரிசு கொடுப்பதென்றால் சொல்லிவிட்டுக் கொடுக்கவும்...//


பாராட்டுதான் பரிசு! ஹிஹிஹிஹி...

ஸ்ரீராம். said...

ஏனோ எனக்கு என் அப்பாவின் உறவுகளுடன் அதிகம் தொடர்பில் இல்லை.

வல்லிசிம்ஹன் said...

வயக்காடும், அப்பாயி,பேரன்.
காணி நிலம் எப்பொழுதும் நிலைத்துப் பெருக வேண்டும்.
இந்தப் பசுமையும் உறவும் என் மனதில் இறங்கியது போல தமிழகமும் செழிக்கட்டும்.
அன்பு அனுராதா பிரேம்குமார்
என்றும் வாழ்க வளமுடன்.

Geetha Sambasivam said...

அருமையான கருத்து உள்ள கதை. அனுராதாவுக்குப் பாராட்டுகள்

கோமதி அரசு said...

அந்த கால மனிதர்கள், உழைக்க பயப்படாதவர்கள். சிக்கனத்தை கடைபிடித்து அடுத்த தலைமுறையினர் வாழ வழி வகுத்தவர்கள்.

அப்பாயி மனதில்உறைந்து விட்டார்.

வாழ்த்துக்கள் அனு.

கோமதி அரசு said...

செயலால் வாழ்ந்து காட்டிய அப்பாயி குலசாமிதான்.

KILLERGEE Devakottai said...

சிறு வயதில் நான் குடித்த கம்பங்கூழுதான் எனது இன்றைய தேதி வரையிலான உழைப்பு.

கதை மனதை நெகிழ்த்தி விட்டது சகோ.

திண்டுக்கல் தனபாலன் said...

கதை அருமை...

Thulasidharan V Thillaiakathu said...

தொடர்ந்து முந்துகிறீர்களே.//

ஹா ஹா ஹா ஹா ஹாஹா...காப்பி பேஸ்ட் பண்ணி ரெடியா இருப்போம்ல...இன்னிக்கு தளமும் ரெஃப்ரெஷ் பண்ணினதும் உடனே வந்துவிட்டது....

..முதலில் துரை அண்ணா இதைக் கோட் செய்திருப்பதைப் பார்த்து தேடினேன் தேடினேன் தேடினேன் மேலே போய்....யாரு கொடுத்திருக்காங்கனு.....அப்புறம் கண்ணில் பட்டுவிட்டது...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

// தொடர்ந்து முந்துகிறீர்களே...//

ஏதாவது பரிசு கொடுப்பதென்றால் சொல்லிவிட்டுக் கொடுக்கவும்...//

ஹா ஹா ஹா ஹா ஹா ...துரை அண்ணா அதானே!!! ஆனால் பாருங்க சொல்லாமல் கொடுக்கப்படும் பரிசு என்றால் நமது அன்புதான் இல்லையா.....அன்பினால் பெருகும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!!! இதற்கு நிகர் வேறு என்ன இல்லையா அண்ணா!!?

அடுத்தாப்புல ஸ்ரீராம் சொல்லியிருப்பதும் பார்த்துவிட்டேன்

//// ஏதாவது பரிசு கொடுப்பதென்றால் சொல்லிவிட்டுக் கொடுக்கவும்...//


பாராட்டுதான் பரிசு! ஹிஹிஹிஹி...//

நன்றி நன்றி ஸ்ரீராம் ..அது வேற ஒன்னுமில்லை இன்று துரை அண்ணாவும் நானும் மட்டுமே வாசலில் போல....அதான்....இல்லைனா மைக்ரோ செகன்ட்ஸ்ல 5 பேரோடது வந்திருக்கும்!!!ஹா ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நிலம் என்பது இப்போதெல்லாம் பயிரிட இல்லை....கட்டிடம் கட்ட என்று ஆகிவரும் நிலையில் கேசவன் நிலத்தைப் போற்றி பாதுகாக்க விழைவது மனதைத் தொட்டது அனு. அருமை அப்பாயி வாழ்க!!!

எனக்கு நிலம் பார்த்துக் கொள்வதில் சிறு வயதிலிருந்தே மிகுந்த ஆசையும், கொஞ்சம் அனுபவமும் உண்டு .நாங்கள் ஒன்றாக வளர்ந்த கஸின்ஸ் அனைவருகும் தெரியும் அதில் ஒருவருக்கு நிலம் தோட்டம் என்று வாணியம்பாடி அருகில் கிராமத்தில் இருக்கிறது. சென்ற வாரம் கூடக் கேட்டாள் அவள் "உனக்கு நிலம் பார்த்துக்க பயிரிட காய் போடறதுனா ரொம்பப் பிடிக்குமே...எங்க நிலத்தைப் பார்த்துக்கறியா அங்க வீடு இருக்கு எல்லா வசதியும் இருக்கு. அங்க போய் இருந்து பார்த்துக்கறியா" யதார்த்தத்தில் இப்போது முடியாதே!!!

கீதா

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

நெ.த. said...

நல்ல கதைக்களம். அப்பாயி பாத்திரம் அருமை. இதெல்லாம் கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்குத்தான் புரியும்.

//காடு இருக்குறவக சந்தையில போய் அரிசி வாங்குனா அது அசிங்கம்..// - எதையும் தானே உழைத்துத் தயார் செய்யணும் என்பதெல்லாம் முந்திய தலைமுறைக்கு முன்பே காணாமல்போக ஆரம்பித்துவிட்டது. காலையில் தயிர் விற்றுக்கொண்டு வரும் தேவமார் முதியவளும், வாழைக்காய், கீரை போன்றவைகளை விற்றுக்கொண்டு வருபவர்களும், ஒரு வாழைக்காய் 3 பைசா வீதம் 3 வாழைக்காய்கள் 10 பைசா கொடுத்து என் பெரியப்பா, மீதி 1 பைசா வாங்கியதும் நினைவில் நின்றாடுகிறது.

சிக்கனம், அதீத ஆசை இல்லாமை என்று எல்லாவற்றையும் சொல்லிப்போகும் எழுத்தாளருக்குப் பாராட்டுகள்.

நெ.த. said...

@கீதா ரங்கன் - "உனக்கு நிலம் பார்த்துக்க பயிரிட காய் போடறதுனா ரொம்பப் பிடிக்குமே...எங்க நிலத்தைப் பார்த்துக்கறியா அங்க வீடு இருக்கு எல்லா வசதியும் இருக்கு. அங்க போய் இருந்து பார்த்துக்கறியா" - எனக்கு மிகவும் ஆசை, மாயவரம் போன்ற இடத்தில் நிலம், நிலத்துடன் கூடிய வீடு (ஏசி போன்ற வசதிகளுடன்) ஓய்வுக்காலத்துக்கு வாங்கவேண்டும் என்று ஆசை. ஓரிரு கிலோமீட்டர் தொலைவுக்குள் ஆஸ்பத்திரி இருக்கவேண்டும் என்றெல்லாம் நினைத்தேன் (நிலத்தில் பாம்பு வரும் என்பதுதான் கொஞ்சம் யோசனையாக இருந்தது). அருகாமையில் 100 கி.மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள எல்லாக் கோவில்களையும் தரிசிக்கலாம் என்றெல்லாம் எண்ணம். ஆசைப்பட்டதெல்லாம் நடந்துவிடுமா?

G.M Balasubramaniam said...

வாழ்வின் மதிப்பீடுகள் மாறுகின்றன [/ஏனோ எனக்கு என் அப்பாவின் உறவுகளுடன் அதிகம் தொடர்பில் இல்லை./ ஏன் என்று யோசித்து இருக்கிறீர்களா ஸ்ரீ ஒரு வேளை என்பதிவு ”உறவுகள்” காரணம் சொல்லலாம்

athira said...

அருமையான சம்பாசனைகளை நினைவாக்கிய கதை. உண்மையிலேயே இப்போ இருக்கும், ஒருவர் தன் கடந்த காலத்தை நினைப்பதைப்போலவே இருக்கு.. போன கதையை விட இக்கதையில் நிறையவே முன்னேறிட்டீங்க அனு.. வாழ்க கதாசிரியர் அனு...

athira said...

///
நெ.த. said...
... ஓரிரு கிலோமீட்டர் தொலைவுக்குள் ஆஸ்பத்திரி இருக்கவேண்டும் என்றெல்லாம் நினைத்தேன் ///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்பவே முடிவெடுத்திட்டீங்களோ ஹொஸ்பிட்டலுக்கு அடிக்கடி போகோணும் என:)..

Asokan Kuppusamy said...

கதை அருமை பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை. பாராட்டுக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

சகோதரி அனு, கதை நன்றாக இருக்கிறது. நிலங்கள் கூறுபோடப்படும் நிலையில், கேசவன் அதைப் பராமரித்து தன் ஜீவனாக நினைத்து உழைப்பது மகிழ்வாக இருக்கிறது. அரசு ஏதேனும் டெவெலப்மென்ட் என்று கையகப்படுத்தாமல் இருக்க வேண்டும். அப்படித்தானே பல நிலங்கள் இப்போது கான்க்ரீட் காடுகளாய் வந்து கொண்டிருக்கின்றன. அந்த நிலத்திற்கு எந்தவித பாதிப்பு வராது அப்பாயி நிச்சயமாகத் தெய்வமாய் இருந்து காப்பாற்றுவார்.

நல்ல உழைப்பையும், அப்பாயியின் மீதான அன்பையும்,நிலத்தின் மீதான அன்பையும் சொல்லும் கதை

துளசிதரன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அருமையான கதை. கதாசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

நெ த உங்கள் நில ஆசை நல்லா இருக்கு. ஆனால் பாருங்கள் நீங்கள் முடிவெடுக்கும் முன் இருக்கும் நிலமும் கோவிந்தா கோவிந்தா!!! ஹா ஹா ஹா ஹா ஹா...

ஓரிரு கிலோமீட்டர் தொலைவுக்குள் ஆஸ்பத்திரி இருக்கவேண்டும் என்றெல்லாம் நினைத்தேன் (//

ஹா ஹா ஹா ஹா நெ த கவலையே வேண்டாம் நீங்க நிலம் வைச்சுருக்கும் இடத்தின் தொட்டடுத்து கிழக்கே தனியார் ஹாஸ்பிட்டல் கம் மெடிக்கல் காலேஜ், மேற்கே அதே தனியாரின் இஞ்சினியரிங்க் கல்லூரி, வடக்கே அதே தனியாரின் டென்டல் காலேஜ், தெற்கே அதே தனியாரின் ஒரு பாலிடெக்னிக்...நடுவில் நீங்க "இந்த நிலத்தையும் வாங்கிடுவாங்களோ" அப்படினு கவலையோடுமொட்டை மாடியில் நின்று சுத்தி பார்த்துட்டுருப்பீங்க.....ஹா ஹா ஹா ஹா இது ஒரு வகை

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இல்லையா....அடுத்து ஒன்னு நெல்லை....உங்க நிலத்துக்கும் ஆஸ்பத்திரிக்கும் இடையே ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தூரம் இருக்கும்...ஹிஹிஹி...அது சரி எதுக்கு நிலத்துக்குப் பக்கத்துல ஆஸ்பத்திரி? நல்ல காத்து நல்ல உணவு அப்புறம் எதுக்கு ஆஸ்பத்திரி!! ஒரு மலை இருந்தா நல்லதுனு சொல்லுங்க...இல்ல வாய்ககல் இருந்தா நலல்துனு....

பாம்புக்கெல்லாம் பயந்தா நிலம் ஆகாது!! ஹா ஹா ஹா அப்புறம் ரஜினி ஏதோ ஒரு படத்துல பாம்....பு பா .....ம்ம்.....பு நு சொல்லுறா மாதிரி நெல்லை சொல்லிட்டிருப்பார் ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அதிரா வாங்க வாங்க வாங்க!!! நெல்லை பாம்புனு சொல்லிருக்கார் பார்க்கலையா? ஹா ஹா ஹா நான் நெல்லையை ரஜினி சொல்லுவது போல நினைச்சு சிரிச்சுட்டுருக்கேன் இங்க....

கீதா

Anuradha Premkumar said...

ஆமா க்கா...

Anuradha Premkumar said...

நன்றி கீதாக்கா

Anuradha Premkumar said...

மிக்க நன்றி ஐயா...

எங்க அப்பாயியும் அப்படி தான்...

பொறுமை யானவர் ஆனால் வைராக்கியத்தின் உறைவிடம்...

காமாட்சி said...

ஒருகாணி நிலமும்,ஒருசாண் வீடும் எல்லோருக்கும் அவசியம் முன்பெல்லாம். புருஷனையும் உயர்வாகவே பேசுகிரார் அப்பாயி. தாலிக்கொடி நிலமாக மாறும் சூழ்நிலை இருந்ததே!ஸரியாக உபயோகித்ததில் பேரனும் உழைப்பாளியாக நினைவு கூறுகிரானே. அருமைதான்.
அப்பாயி மனதில் இருக்கிறார். நல்ல கதை. அன்புடன்

Anuradha Premkumar said...

நன்றி அம்மா..

Anuradha Premkumar said...

நன்றி அம்மா...உங்கள் பாராட்டுக்கு

Anuradha Premkumar said...

நன்றி அம்மா..

Anuradha Premkumar said...

ஆமா..அவங்க குலசாமி தான் என்றும்

Anuradha Premkumar said...

நன்றி சகோ

Anuradha Premkumar said...

நன்றி dd சார்

Anuradha Premkumar said...

உண்மை அக்கா...

எங்கள் வீட்டில் பால் வியாபாரம் ..அதனால் எனக்கு நில அறிமுகம் எல்லாம் திருமணத்திற்கு பின் தான்...

விவசாயம் பண்ண ஆசை இருந்தாலும்..நீங்கள் சொல்வது போல் நிதர்சனத்தில் முடிவது இல்லை

Thulasidharan V Thillaiakathu said...

காலையில் தயிர் விற்றுக்கொண்டு வரும் தேவமார் முதியவளும், வாழைக்காய், கீரை போன்றவைகளை விற்றுக்கொண்டு வருபவர்களும், ஒரு வாழைக்காய் 3 பைசா வீதம் 3 வாழைக்காய்கள் 10 பைசா கொடுத்து என் பெரியப்பா, மீதி 1 பைசா வாங்கியதும் நினைவில் நின்றாடுகிறது.//

ஆமாம் அப்பாயி சொல்லுவது போல் நிலம் இருக்கும் போது சந்தையில் போய் வாங்குவதா..அதானே....

நான் பாண்டிச்சேரியில் இருந்த போது இருந்த வீட்டில் நிலத்தில் சில கீரைகள், கறிவேப்பிலை, எலுமிச்சை என்று நிறைய...அது தவிர கேரளத்து சீத்தாப்பழம் அது வித்தியாசமாக இருக்கும் அப்பழத்தின் விதை போட்டு நான் வரும் முன் மரமாகியது ஆனால் காய்க்கவில்லை. ஒரு வேளை இப்போது காய்த்திருக்கும் பழுத்திருக்கும்...அந்த வீடு நான் வைத்த மரங்களெலலம் வளர்ந்து இப்போது இன்னும் பசுமையாக இருந்தது சென்ற முறை பார்த்த போது தெரிந்தது. நான் இருக்கும் வரை ஃப்ரெஷாக மணத்தக்காளி, சுண்டைக்காய்...வீட்டிலேயே.

அங்கு ஒரு பாட்டி அனைத்துவகை கீரைகளும் தன் தோட்டத்திலிருந்து கொண்டு வருவார்.

இங்கு சென்னையில் இப்போது காலையில் 7.30க்குள் பாட்டிகள் இடியாப்பம், புட்டு என்று கொண்டுவருகிறார்கள்!!!!!!!

கீதா

Anuradha Premkumar said...

நன்றி ஐயா

Anuradha Premkumar said...

நன்றி...

Anuradha Premkumar said...

நன்றி அதிரா...

எல்லாம் உங்கள் அனைவரின் வழிகாட்டு தலால் தான்...

Anuradha Premkumar said...

நன்றி ஐயா

Anuradha Premkumar said...

நன்றி சகோ..

Anuradha Premkumar said...

நன்றி சகோ...

Anuradha Premkumar said...

பாராட்டிற்கு நன்றி ஐயா

Anuradha Premkumar said...

நன்றி அம்மா...உங்கள் அழகான கருத்திற்கு

Anuradha Premkumar said...

நன்றி ஸ்ரீராம் சார்...

மீண்டும் என்னை எழுத தூண்டி...அதை இங்கு பதிவும் இட்டத்திற்கு...

மேலும் கதை கரு மட்டுமே மனத்தில்...

முதலில் சிறிதாக தான் எழுதினேன்...

பின் கீதாக்கா...மற்றும் ஜான்சி ப்ரோ இவர்களின் வழிகாட்டலில் தான் இந்த கதை ...

இத்தனை அழகோடும்..பொலிவோடும் திகழ்கிறது..

அவர்களுக்குக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..☺️☺️☺️☺️

Anuradha Premkumar said...
This comment has been removed by the author.
Anuradha Premkumar said...

phone வழி மறுமொழி கொடுத்தேன் ..அங்கு அனைத்து கருத்திற்கும் reply செய்யும் வழி இருந்ததால்..

இப்போ கணினியில் காணும் போது கோட் பண்ணது காணோம்..

Thulasidharan V Thillaiakathu said...

பின் கீதாக்கா...மற்றும் ஜான்சி ப்ரோ இவர்களின் வழிகாட்டலில் தான் இந்த கதை ...//

அனு ஹேய் என்னப்பா இது...கரு உங்களுடையது...நீங்க நல்லாதான் எழுதியிருந்தீங்க ஜஸ்ட் நிலம் பற்றிய கதைன்றதுனால ரொம்ப பிடிச்சதுனால...சின்ன சின்ன உணர்வுகள் வராப்ல இருந்தா நல்லாருக்கும்னு ஐடியா கொடுத்ததுக்கா இப்படி இங்க ...முழு ஆக்கமும் உங்களுடையதுதான்..ஸோ ஃபுல் க்ரெடிட் கோஸ் டு யு அனு.

எனிவே மிக்க நன்றி அனு....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

phone வழி மறுமொழி கொடுத்தேன் ..அங்கு அனைத்து கருத்திற்கும் reply செய்யும் வழி இருந்ததால்..

இப்போ கணினியில் காணும் போது கோட் பண்ணது காணோம்..//

அனு நானும் முதலில் தடுமாறியதுண்டு இப்படி. அப்புறம் கருத்திடும் போதும் அப்படியே...ஸ்ரீராம் தான் எனக்கும் சொல்லிக் கொடுத்தது எப்படி கமென்ட் கொடுத்தாலும் அதற்கு நேரே என்றாலும் அல்லது கீழாக வந்தாலும் சரி யாருக்குக் கமென்ட் கொடுக்கறீங்களோ அவங்க பெயரை கோட் செய்து கொடுத்துருங்க அப்ப யாருக்கு கொடுத்துருக்கீங்கனு தெரியும் நு ஸ்ரீராம் தான் எனக்கே சொன்னது அனு.

ஸோ நான் அதற்கு ஸ்ரீராமுக்குத்தான் நன்றி சொல்லணும்!!!

கீதா

ஏகாந்தன் Aekaanthan ! said...

கிராமத்துக்குக் கூட்டிப்போன கதை.

அம்மாயிகளும், அப்பாயிகளும் இன்னும் வேறுவிதமான பாட்டிகளும் நம் குடும்பங்களின் அங்கமாக இருக்கும்வரை, அவர்களது பேச்சுக்கு மதிப்பிருக்கும்வரை, இந்த சமூகத்திற்கு கலாச்சார சீரழிவு இல்லை. இதேபோல் தாத்தாக்களையும் இங்கே விட்டுவிடமுடியாது.

ஏகாந்தன் Aekaanthan ! said...

@கீதா: ..வடக்கே அதே தனியாரின் டென்டல் காலேஜ், தெற்கே அதே தனியாரின் ஒரு பாலிடெக்னிக்...நடுவில் நீங்க "இந்த நிலத்தையும் வாங்கிடுவாங்களோ" அப்படினு கவலையோடுமொட்டை மாடியில் நின்று சுத்தி பார்த்துட்டுருப்பீங்க...//

சுற்றிவர நிலம் சூழ்ந்த நெல்லையின் கிராமத்துவீட்டு வாழ்க்கைபற்றிய கீதாவின் குட்டிக்கதையும் திடுக்கென்று திகில் உட்டியது !

athira said...

//Thulasidharan V Thillaiakathu said...
அதிரா வாங்க வாங்க வாங்க!!!//

நான் இன்னும் உள்ளே வரேல்லை கீதா:) வேலிக்கு மேலாலதான் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்:)).. என்னாதூஊஊஊஊ பாஆஆஆஆஆஆஆஆம்பாஆஆஆஆ?:) என் செக்:) க்கு நான் ஒரு பாம்புக்குட்டி பரிசாக் குடுத்திருக்கிறேன் வளர்க்க சொல்லி:) பெயர் ஜின்ஞர்:).. அவ ஒழுங்கா முட்டை பால் குடுக்கிறா இல்லை கர்ர்ர்ர்ர்:)) பின்பு புளொக்கில சொல்றேனேஎ இது பற்றி:)). ஹா ஹா ஹா..

ஏகாந்தன் Aekaanthan ! said...

*ஊட்டியது

Geetha Sambasivam said...

//காலையில் தயிர் விற்றுக்கொண்டு வரும் தேவமார் முதியவளும், வாழைக்காய், கீரை போன்றவைகளை விற்றுக்கொண்டு வருபவர்களும், ஒரு வாழைக்காய் 3 பைசா வீதம் 3 வாழைக்காய்கள் 10 பைசா கொடுத்து என் பெரியப்பா, மீதி 1 பைசா வாங்கியதும் நினைவில் நின்றாடுகிறது.//

மதுரையில் யாதவ குலத்தோரே தயிர், பால், நெய், வெண்ணெய், மோர் போன்றவை விற்பார்கள். மோர் ஒரு மாதிரிச் சட்டி வாசம் வரும்! கீரை, தக்காளி, கருகப்பிலை, கொத்துமல்லி, பச்சை மிளகாய் போன்றவை எல்லாம் காசு கொடுத்தே வாங்கினது இல்லை. அரிசி போட்டுத் தான் வாங்குவோம். அதுக்கே நிறையக் கீரை கொடுப்பாங்க. ஒரு சுளகு நிறையக் கீரை இருக்கும். நான் கல்யாணம் ஆகிப் போய்க் கூட அம்மாதிரி வாங்கி இருக்கோம். இட்லி எல்லாம் 5 பைசாவுக்கு 2. ஒரு மாமா விற்பார்.

Geetha Sambasivam said...

அதிரடி வந்தாச்சா? அதான் ஒரே அமர்க்களமா? ;))))

துரை செல்வராஜூ said...

@ Geetha Sambasivam said...
>>> அதிரடி வந்தாச்சா? அதான் ஒரே அமர்க்களமா?.. <<<

அங்கே தஞ்சையம்பதிக்கு வந்து ஜல்...ஜல்... ந்னு அமர்க்களம்!...

அதிரடிக்கு பதினாறு வயசு தான் ஆகுது...
அதெப்படி நாப்பது அம்பது..ன்னு ஜொல்லலாம்..ன்னு..

இதெல்லாம் நியாயமா...ன்னு யாராவது கேளுங்களேன்!?...

Anuradha Premkumar said...

ஏகாந்தன் Aekaanthan ! said...
கிராமத்துக்குக் கூட்டிப்போன கதை.


நன்றி சார்..

athira said...

//Geetha Sambasivam said...
அதிரடி வந்தாச்சா? அதான் ஒரே அமர்க்களமா? ;))))//

கீசாக்கா இன்னும் நான் களத்தில குதிக்கவே இல்லை:) இதையே அமர்க்களம் என்றிட்டீங்க?:) அப்போ குதிச்சால்ல்???:), .. காணாமல் போன ஸ்ரீராம் .. காணாமலே போயிடுவார்:)) ஹா ஹா ஹா... ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)).. இனி ஆரிடமும் கிளவியே.. சே..சே கேள்வியே கேய்க்க மாட்டேன் ஜாமீஈஈஈஈ:)).

athira said...

//துரை செல்வராஜூ said...
@ Geetha Sambasivam said...
>>> அதிரடி வந்தாச்சா? அதான் ஒரே அமர்க்களமா?.. <<<

அங்கே தஞ்சையம்பதிக்கு வந்து ஜல்...ஜல்... ந்னு அமர்க்களம்!...

அதிரடிக்கு பதினாறு வயசு தான் ஆகுது...
அதெப்படி நாப்பது அம்பது..ன்னு ஜொல்லலாம்..ன்னு..

இதெல்லாம் நியாயமா...ன்னு யாராவது கேளுங்களேன்!?...//

அதானே.. ஒரு பப்புளிக்குப் பிளேசில வச்சு.. சுவீட் 16 ஐயும்[இது என்னைச் சொன்னேன்:)] சேர்த்து, 50 ஐத் தாண்டியோர் என, எப்பூடி ஜொள்ளலாம்ம்.. யாராவது தட்டிக் கேளுங்களேன் துரை அண்ணனை:)).. அரசியல் எண்டால் மட்டும் சப்போர்ட்டுக்கு வாறீங்க:) அதிராவுக்கு ஒரு பிரச்சனை எண்டால் காக்கா:) போயிடுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நேக்கு நீதி வேணும்ம்ம்ம்ம்ம்:))

Bhanumathy Venkateswaran said...

நன்றாக எழுதப் பட்டிருக்கும் கதை. அனந்தன் சார் சொல்வது போல இதைப் போன்ற பாட்டிகளும், இருக்கும் வரை நம் சமூகத்திற்கு கலாச்சார சீரழிவு இல்லை. பாராட்டுக்கள்.
உங்களுக்கு மிகவும் இயல்பாக எழுத வருகிறது. எழுதுவதை நிறுத்தி விடாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Bhanumathy Venkateswaran said...

Sorry for the typing error. Instead of 'Anandhan' read as Aekandhan sir.

ஸ்ரீராம். said...

// Sorry for the typing error. Instead of 'Anandhan' read as Aekandhan sir. //


அதானே? என்னடா,, ஆனந்தன் என்று யார் புதுசா நமக்குத் தெரியாம கமெண்ட் போட்டிருக்காங்கன்னு அதற்குள் பதிவைப் பார்க்க ஓடிட்டேன் நானு!

Kamala Hariharan said...

வணக்கம்

நல்ல அருமையான கிராமிய கதை. "காணி நிலம் வேண்டும்" என்ற பாரதியின் கருத்துப்படி, வேண்டுதலின்படி காணி நிலத்தினினால், வம்சத்திற்கும் நல்ல பலன். அப்பாயியின் உழைப்புக்கள், தியாகங்கள் என்றுமே வீண் போனதில் லை. நல்ல கதை. கதையை வடித்த சகோதரிக்கு மனமார்ந்த பாராட்டுகள். வாழ்த்துக்கள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மாயிகளும், அப்பாயிகளும் இன்னும் வேறுவிதமான பாட்டிகளும் நம் குடும்பங்களின் அங்கமாக இருக்கும்வரை, அவர்களது பேச்சுக்கு மதிப்பிருக்கும்வரை, இந்த சமூகத்திற்கு கலாச்சார சீரழிவு இல்லை. இதேபோல் தாத்தாக்களையும் இங்கே விட்டுவிடமுடியாது.//

மிக மிகச் சரியாகச் சொன்னீங்க ஏகாந்தன் அண்ணா...என் தாத்தாவும் பாட்டியும் இப்போதும் என் மனதில்...அவர்கள் சொல்லிக் கொடுத்த நல்ல விஷயங்கள்...மற்றொரு பாட்டியிடம் கற்றது என்று...நிறைய...

கீதா

ஸ்ரீராம். said...

// என் தாத்தாவும் பாட்டியும் இப்போதும் என் மனதில்...அவர்கள் சொல்லிக் கொடுத்த நல்ல விஷயங்கள்...மற்றொரு பாட்டியிடம் கற்றது என்று...நிறைய...//

பாட்டி எப்படி பேத்திக்கு சொல்லிக் கொடுக்கிறார் என்று இன்று வல்லிம்மா பதிவில் போய்ப்பாருங்க...

ஸ்ரீராம். said...

//நன்றி ஸ்ரீராம் சார்... மீண்டும் என்னை எழுத தூண்டி...அதை இங்கு பதிவும் இட்டத்திற்கு...//

நன்றி அனுராதா பிரேம்குமார் சகோ... நீங்கள் அடுத்த கதை அனுப்ப ரெடியாகலாம்....

Thulasidharan V Thillaiakathu said...

சுற்றிவர நிலம் சூழ்ந்த நெல்லையின் கிராமத்துவீட்டு வாழ்க்கைபற்றிய கீதாவின் குட்டிக்கதையும் திடுக்கென்று திகில் உட்டியது !//

ஹா ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா இதுதானே இப்ப யதார்த்தம்...பழைய மகாபலிபுரச் சாலையில் எப்போதோ என் உறவினர்கள் வாங்கிப் போட்ட நிலங்கள் அத்தனையும் களவாடப் பட்டிருக்கிறது. இப்போது அலைகிறார்கள். நிலம் வாங்கிய காசைவிட இதற்குச் செலவு அதிகம் என்று யோசிக்கவும் செய்கிறார்கள். பாவம்....அவர்களுக்குத் தெரியவில்லை தமிழ்நாட்டில் நிலம் வாங்கக் கூடாது என்று... களவாடியவர்கள் அத்தனையும் பெரீயீயீயீயீயீயீயீயீயீயீயீயிய ....ஆட்கள்..

கீதா

athira said...

//..நன்றி அனுராதா பிரேம்குமார் சகோ... நீங்கள் அடுத்த கதை அனுப்ப ரெடியாகலாம்....///

நான் தேம்ஸ்ல குதிக்கிறேஎன்ன்ன்ன்ன்ன்ன்ன் என்னை ஆரும் தடுக்காதீங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓ:))

Ramesh Ramar said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!