Friday, July 6, 2018

வெள்ளி வீடியோ 180706 : கருநீலக் கண்கள் ரெண்டும் பவழம் பவழம் எரியும் விரகம் அதிலே தெரியும்     மரகதமணியின் பாடல் என்று சொல்வதைவிட, இதை எஸ் பி பி யின் பாடல்கள் என்றே குறிப்பிடுகிறேன்.  நல்ல இசைதான்.  ஆனால் எஸ் பி பி இல்லாமல் இந்தப் பாடல்கள் இல்லை.      1991 இல் வெளிவந்த படம்.  பாலச்சந்தர் படம்.  மம்மூட்டி ஹீரோவுக்கு பானுப்ரியா, கீதா, மதுபாலா என்று மூன்று ஹீரோயின்கள்.

     மம்மூட்டியை விரும்பும் கீதா தனது காதலை வெளிப்படுத்தி எழுதித் தந்திருக்கும் பாடலை மம்மூட்டி தான் விரும்பும் பானுப்ரியாவிடம் பாடிக்காட்ட, பானு அபிநயம் பிடித்து ஆடும்போது கீதா பார்த்து கடுப்பாகி விடுகிறார்!   வைரமுத்து பாடலாயிருக்க வேண்டும்.     இதில் வரும் எல்லாப் பாடல்களுமே நன்றாயிருக்கும்.


சாதி மல்லி பூச்சரமே  
சங்கத்தமிழ் பாச்சரமே  
ஆசையின்னா ஆசையடி  அவ்வளவு ஆசையடி 
என்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ  
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் 
கன்னித் தமிழ் தொண்டாற்று  அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தாலாட்டு  

எனது வாழ்வு எனது வீடு என்று வாழ்வது வாழ்க்கையா 
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா 
தேசம் வேறல்ல தாயும்  வேறல்ல ஒன்று தான் 
தாயைக்காப்பதும் நாட்டைக்காப்பதும் ஒன்று தான்  
கடுகு போல் உன்மனம் இருக்ககூடாது  
கடலைப்போல் விரிந்ததாய் இருக்கட்டும்  
உன்னைப்போல் எல்லோரும் இனி எண்ணோணும் இதில் இன்பத்தைத் தேடோணும்!  


உலகம் யாவும் உண்ணும்போது  நாமும் சாப்பிட எண்ணுவோம் 
உலகம் யாவும் சிரிக்கும்போது  நாமும் புன்னகை சிந்துவோம் 
யாதும் ஊரென யாரு சொன்னது கண்மணி 
பாடும் நம் தமிழ்ப் பட்டன் சொன்னது பொன்மணி  
படிக்கத்தான் பாடமா நெனச்சு பார்த்தோமா  
படிச்சத நெனச்சு நாம் நடக்க தான்  
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு   

     பொஸசிவ் பானுபிரியா அவ்வப்போது படபடவென பொரிந்து அப்புறம் அமைதியாவது வழக்கம்.  அதுபோல ஒரு சந்தர்ப்பத்தில் கோபப்பட்டபின் உடனடியாகக் குழையும் பானுப்ரியா...  இடைவெளியே இல்லாமல் உடனடியாகத் தொடங்கும் பாடல்...     இரண்டு சரணங்களிலும் அதாவது முதல் சரணத்தில் "பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே" என்று வரும் இடம், இரண்டாம் சரணத்தில் "ஏகாந்தம் இந்த ஆனந்தம்" என்று வரும் இடத்திலும் எஸ் பி பி குரல் குழைவது ரசனையோ ரசனை.மழையும் நீயே வெயிலும் நீயே 
நிலவும் நீயே நெருப்பும் நீயே 
அடடா... உனைத்தான்... இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா 


இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா?
சரசம் பயிலும் விழியில் வருமே 
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா 
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே 
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே அதுதானா காதல் கலை?
தோளோடு அள்ளிச் சேர்த்தாளே அதுதானா மோகநிலை?
அடடா இதுதான் சொர்க்கமா இது 
காமதேவனின் யாகசாலையா?

கலையெல்லாம் கற்றுக்கொள்ளும் பருவம் பருவம் 
கடல்நீர் அலைபோல் மனமும் அலையும் 
கருநீலக் கண்கள் ரெண்டும் பவழம் பவழம் 
எரியும் விரகம் அதிலே தெரியும் 
ஏகாந்தம் இந்த ஆனந்தம் இதன் எல்லை யாரறிவார்?
ஏதேதோ சுகம் போதாதோ அதன் ஏக்கம் யாரறிவார்?
முதலே முடிவாய் இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான் 
59 comments:

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும்…..
“உலகின் மிகச் சிறந்த வைரங்கள் மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களே!”
கீதா

துரை செல்வராஜூ said...

வாழ்க...

Thulasidharan V Thillaiakathu said...

அழகன் படம்!!!! ஆஹா இதில் பாடல்கள் செமையா இருக்கும்

கீதா

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் வழக்கம் போல நல்வரவு..

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் கீதா.. ஒரு நல்ல மெசேஜுடன் தொடங்கி இருக்கிறீர்கள்.

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் பாடல் வரிகள் புலமைப்பித்தன் என்று கூகுள் சொல்லுகிறது

கீதா

துரை செல்வராஜூ said...

பானு!...

அருமை...

அதுசரி....

பானுவுக்கு ஏன் ரானா மானா அமையாமப் போச்சு!..

அது சதி...

Geetha Sambasivam said...

இப்போத் தான் காஃபி ஆத்தினேன். இன்னிக்குக் கஞ்சி இல்லை. வறுக்கணும். ஆகவே சீக்கிரமா கணினியை மூடிட்டுப் போகணும். அதுக்குள்ளே ஒரு பார்வை பார்க்கலாம்னு வந்தேன்.

ஸ்ரீராம். said...

ஓ... நேற்றிரவு அவசரத்தில் எழுதப்பட்ட பதிவு! இரண்டு மூன்று முறை கூகுள் சேமிக்க மாட்டேன் என்று வேறு அடம்! நேற்று, இன்று நாளை ரொம்ப பிஸியான நாட்கள்! புலமைப்பித்தனோ! நன்றி கீதா.

Thulasidharan V Thillaiakathu said...

இதில் தத்தித்தோம் பாடலும்,(அழகான தர்மவதி ராகத்தில் அமைந்த பாடல்)

துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு அதுவும் நறாக இருக்கும் எல்லா பாடல்களுமே....

கீதா

ஸ்ரீராம். said...

// ரானா மானா//

என்ன வா இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் துரை ஸார்.

ஸ்ரீராம். said...

வாங்க கீதாக்கா... காலை வணக்கம்.

KILLERGEE Devakottai said...

ஸூப்பர் பாடல்கள் ரசனையுள்ளவர்களுக்கானதே... இப்பாடல்கள்.

ஸ்ரீராம். said...

//தத்தித்தோம் பாடலும்,(அழகான தர்மவதி ராகத்தில் , துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு அதுவும் //

ஆமாம் கீதா.. ஏதோ ஒரு பாடலைத்தவிர, எல்லாப்பாடல்களும் நன்றாக இருக்கும்.

Thulasidharan V Thillaiakathu said...

கேட்க நினைத்தேன் காபி இங்கு இன்னும் வரலையே கீதாக்கானு ...ஓ இன்று கஞ்சி இல்லையா....இனிதானா....

கீதா

ஸ்ரீராம். said...

// ஸூப்பர் பாடல்கள் ரசனையுள்ளவர்களுக்கானதே... இப்பாடல்கள். //

ஆமாம் கில்லர்ஜி.. நல்ல பாடல்கள். குழையும் எஸ் பி பி குரல்.

Geetha Sambasivam said...

மமூட்டியின் நடிப்பும் சரி, பானுப்ப்ரியாவின் உரிமை கலந்த கோபமும் சரி, அந்தப் படத்தில் ரசிக்க வைத்தவை. அதிலும் தொலைபேசியில் இருவரும் பேசிக் கொள்வது! அருமை! பானுப்ப்ரியா இயல்பாக நடிக்கும் நடிகைகளில் ஒருவர். உணர்ந்து நடிப்பார். மேல் பூச்சுக்களோ, புருவங்களை அநாவசியமாக நெரிப்பதோ உதடுகளைத் துடிக்க வைத்துக் கழுத்து நரம்பு புடைப்பதோ இருக்காது. சாதாரணமாக நாம் எல்லோரும் கோபப்படுகிற மாதிரி கோபத்தைக் காட்டுவார். காதலும் அப்படியே! கண்களிலேயே பாவங்களைக் கொண்டு வரும் அபூர்வமான நடிகைகளில் அவரும் ஒருவர்.

Thulasidharan V Thillaiakathu said...

ரானா, மானா ????????? மண்டை காயுதே...துரை அண்ணா...

கீதா

ஸ்ரீராம். said...

கீதாக்கா... ஆச்சர்யம். இந்தப் படம் பார்த்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. கேபியின் மாறுபட்ட படங்களில் ஒன்று. ஆமாம் ரசனைக்குரிய காட்சிகள் உண்டு படத்தில்.

ஸ்ரீராம். said...

// ரானா, மானா ????????? மண்டை காயுதே...துரை அண்ணா...//

ரசிகர் மன்றமாயிருக்குமோ கீதா?

Thulasidharan V Thillaiakathu said...

கீதாக்கா உங்கள் கருத்தை டிட்டோ செய்யறேன் நீங்க அழகா சொல்லிட்டீங்க. பானு நல்ல நடிகை....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம் ஸ்ரீராம் கீதாக்கா இந்தப் படம் கேபியின் கொஞ்சம் வித்தியாசமான படம். அஃப்கோர்ஸ் சில அவரது ப்ரத்யேகமான டச்கள் உண்டு...ஒரு ப்ரத்யேக கேரக்டரும் உண்டு. சிபை வியில் ஜனகராஜ் என்றால் இதில் சுரேஷ்? மாற்றுதிறனாளியாக வரும் நபர்?..

.பல காட்சி அமைப்புகள் ரொம்ப ரசிக்கும் படி இருக்கும்.

கீதா

Geetha Sambasivam said...

தொலைக்காட்சி உபயம் தான். இந்த மாதிரிப்படங்கள் எனில் பார்க்காமல் இருக்க முடியுமா? பானுப்ரியாவுக்காகவே இரு முறை பார்த்தேன். :) மமூட்டியின் நடிப்பும் பிடிக்கும். அலட்டிக்காமல் நடிப்பார். மோகன்லால், மமூட்டி இருவரில் மோகன்லால் நகைச்சுவைப் பாத்திரத்திலும் ஜொலிப்பார். மமூட்டிக்கு நகைச்சுவை அவ்வளவாப் பொருந்தாது.

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் ரானா மானா மன்றம் போலத் தெரியலையே....அது மேச் ஆக மாட்டேங்குதே....நானும் நினைத்துப் பார்த்தேன்...ம்ம்ம்ம்ம்ம்ம் ஓ கரீக்டுதான் ஸ்ரீராம்...நான் ரா மா என்று பார்த்தேன் ர ம என்று பார்க்கணும்...

ஹா ஹா ஹா ஹா சரி சரி இனி ஸ்ரீராம் துரை அண்ணாவுக்கக விசாலக் கிழமையில் பானுக்காவையும் சேர்த்துடுங்க....ர ம ஆரம்பிச்சுடுவோம்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மோகன்லால், மமூட்டி இருவரில் மோகன்லால் நகைச்சுவைப் பாத்திரத்திலும் ஜொலிப்பார். மமூட்டிக்கு நகைச்சுவை அவ்வளவாப் பொருந்தாது.//

யெஸு யெஸ்ஸூ கீதாக்கா அதே அதே அதே....லால் ரெண்டிலும் கலக்குவார். பொதுவாகவே மலையாளத்தில் இயல்பான நடிப்பா இருக்கும். மிகைப்படுத்தப்பட்டது பெரும்பாலும் இருக்காது....மலையாளத்தில் பெரும்பாலும் கதை பேஸ்ட் படமாகவே இருக்கும். படம் எடுக்கும் முன் ஸ்க்ரிப்ட் காட்சிகள் எல்லாம் பக்காவக ரெடி பண்ணிட்டுத்தான் படம் எடுப்பார்களாம்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஓகே இனி அப்பால.....வாரேன் பாட்டு பத்தி பேச

கீதா

ஸ்ரீராம். said...

எனக்கும் மம்மூட்டி, மோகன்லால் பிடிக்கும். பானுப்ரியாவும் பிடிக்கும். கரெக்ட். மம்மூட்டிக்கு நகைச்சுவை வராது என்றுதான் நானும் நினைப்பேன்!

ஸ்ரீராம். said...

கீதா.. அப்போலாம் பானுப்ரியா பிடிக்கும்தான். ஆனால் அவ்வளவா இல்லை!!!

வல்லிசிம்ஹன் said...

அருமையான பாடல்கள். அற்புதமான நடிப்பு. அதுவும்
பானுப்ரியா. நடனத்துக்கு நடனம். நடிப்புக்கு நடிப்பு. அத்தனை
பேரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுவார். நன்றி ஸ்ரீராம் .
இன்று வெள்ளி விருந்து மிக அருமை.

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
எனக்கு இசை கேட்கத்தான் பிடிக்கும் அலசும் அளவு
இசை ஞானம் இல்லை.
மம்முட்டி சீரியஸ். லாலெட்டன் சீரியஸ்+ நகைச்சுவை.

ரசிக்கவே மலையாளப் படங்கள் பார்க்க வேண்டும்.

ஸ்ரீராம். said...

வாங்க வல்லிம்மா... உங்களுக்கு மாலை, எங்களுக்கு காலை வணக்கம்! பானுப்ரியா திறமையான சண்டிகை. கேபியின் இயக்கத்தில் இன்னும் மிளிர்வார்.

வெங்கட் நாகராஜ் said...

காலை வணக்கம் 🙏

இனிய பாடல்கள்.... எனக்கும் இந்தப் பாடல்கள் பிடித்தவை.

KILLERGEE Devakottai said...

//ரானா மானா//
ராகமாலிகா ?

Thulasidharan V Thillaiakathu said...

இரண்டிலுமே எஸ் பி பி குரல் இழைகிறது..வரிகளுக்கேற்ற..ஃபீல் கொண்டுவருவ்துதான் எஸ்பிபியின் ஸ்பெஷாலிட்டி...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அந்த டெலிஃபோன் பாடலும் ரொம்ப நல்லாருக்கும் ஸ்ரீராம்....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அந்த டெலிஃபோன் பாடல் சங்கீதா ஸ்வரங்கள் அழகான கரகரப்ரியா ராகத்தில் பாடல்....நல்லா போட்டுருக்கார் அந்தப் பாடலும்....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ரொம்ப நாளைக்கப்புறம் இப்பத்தான் கேட்கிறேன் ஸ்ரீராம் நீங்க சொல்லியிருக்கும் பாடல்களும்....மற்ற பாடல்களும்...ஜாதி மல்லி பூச்சரம் மாண்ட் ராகம் போலத் தெரியுது....

கீதா

கோமதி அரசு said...

அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

இரு பாடல் பகிர்வும் அருமை.
இனிமையான பாடல்.
பகிர்வுக்கு நன்றி.

பானுபிரியா நல்ல நடிகை குரல் வேறு யாராவது கொடுத்தால் நன்றாக இருக்கும் அவர் பேசினால் காதுக்கு கொஞ்ச்சம் கஷ்டம்.

துரை செல்வராஜூ said...

// ராக மாலிகா!...//

கி.ஜீ..

இருக்கிறதெல்லாம்
போதாது...........ன்னு,
ராக மாலிகா வேறயா?...

அது யாரு அந்தப் பொண்ணு!...

ஸ்ரீராமுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்!..
விசயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்!..

Anuradha Premkumar said...

எனக்கும் ரொம்ப பிடிக்கும்...

நெ.த. said...

என்னவோ இன்றைய பாடல் என் ஆர்வத்தைத் தூண்டவில்லை.

G.M Balasubramaniam said...

பாடல் காணொளி தேடல்களுக்குப் பாராட்டுகள்

ஸ்ரீராம். said...

//சிபை வியில் ஜனகராஜ் என்றால் இதில் சுரேஷ்//

அவர் பெயர் சுரேஷா? தெரியாது கீதா.. ஆனால் எரிச்சலூட்டும் கேரக்டர்!

ஸ்ரீராம். said...

//இனி ஸ்ரீராம் துரை அண்ணாவுக்கக விசாலக் கிழமையில் பானுக்காவையும் சேர்த்துடுங்க..//

செஞ்சுட்டாப் போச்சு! என்ன துரை ஸார்?

ஸ்ரீராம். said...

மாலை வணக்கம் வெங்கட். நன்றி.

ஸ்ரீராம். said...

ராகமாலிகா நல்ல கெஸ் கில்லர்ஜி!

ஸ்ரீராம். said...

டெலிபோன் பாடல் சற்றே அலுத்துவிட்டது கீதா..!

ஸ்ரீராம். said...

வாங்க கோமதி அக்கா...

//அவர் பேசினால் காதுக்கு கொஞ்ச்சம் கஷ்டம்.//

ஹா... ஹா... ஹா... உண்மை அக்கா.

ஸ்ரீராம். said...

துரை ஸார்..

//அது யாரு அந்தப் பொண்ணு!... ஸ்ரீராமுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்!.. விசயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்!..//

ஸார்.. கீதா ஒரு ஒப்பந்தம் போட்டிருக்காங்க.. பார்க்கவில்லையா?!!

ஸ்ரீராம். said...

நன்றி அனுபிரேம்.

ஸ்ரீராம். said...

நன்றி ஜி எம் பி ஸார்.

ஸ்ரீராம். said...

நெல்லை... பாடல்கள் உங்களைக் கவராதது ஆச்சர்யம்.

Bhanumathy Venkateswaran said...

அழகன் படப்பாடல்கள் போடச் சொல்லி ஸ்ரீராமிடம் கோரிக்கை வைத்து நீண்ட நாட்களாகி விட்டதே, இன்னும் அவர் போடவே இல்லையே என்று நினைத்துக் கொண்டேன். போட்டு விட்டீர்கள், நன்றி. பாரதிதாசன் நூற்றாண்டில் வெளியான படம்.

மழையும் நீயே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

Bhanumathy Venkateswaran said...

சிவாஜி கணேசனே மெச்சிய நடிகை பானு ப்ரியா. "அந்தப் பெண் பானுப்ரியா நன்றாகத்தானே நடிக்கிறாள்? ஆனால் பெரிதாக வாய்ப்புகள் இல்லையே?" என்று ஒரு முறை கூறியிருந்தார். சிறப்பாக நடனம் ஆடுவார் என்று கலா மாஸ்டர், ரகு மாஸ்டர் போன்றவர்கள் பாராட்டியிருந்தார். ஆனால் போகப்போக கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கில் இறங்கி விட்டார். குரல்தான் கொஞ்சம் சங்கடம். அதுவும் உச்ச ஸ்தாயியில் வீச்சு வீச்சு என்று கத்தும் பொழுது..ஐயோடா என்றிருக்கும்.

ஸ்ரீராம். said...

ஓ... பானு அக்கா... நீங்கள் கேட்டிருந்தீர்களோ? நினைவில்லை! தத்தித்தோம் பாடல், சங்கீத ஸ்வரங்கள் போன்ற பாடல்களும் நன்றாகவே இருக்கும்.

சிறப்பாக நடனம் ஆடுவார் என்று தெரியும். சிவாஜி எந்த சந்தர்ப்பத்தில் இப்படிச் சொன்னார்? குரல் பற்றி கோமதி அக்காவும் சொல்லி இருந்தார்! :))

Asokan Kuppusamy said...

சாதி மல்லி பூச்சரமே மற்றும் மழை பாடல் மிகவும் நன்று தங்கள் தயவில் பழைய அருமையான பாடல்கள் கேட்க முடிகிறது பாராட்டுகள்

ஸ்ரீராம். said...

நன்றி அசோகன் குப்புசாமி ஸார்...

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான தொகுப்பு
சுவைக்கச் சிறந்த பாடல்
தொடருங்கள்

Thulasidharan V Thillaiakathu said...

அழகன் திரைப்படம் மம்முட்டிக்காகப் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. அதில் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். அதன் பின் இப்போதுதான் கேட்கிறேன். அந்த டெலிஃபோன் பேசிக் கொண்டே பாடும் பாடல் நன்றாக இருக்கும் காட்சியும்.

துளசிதரன்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!