Saturday, July 14, 2018

ஒரு இட்லி பத்து பைசா

1) பத்து ரூபாய்க்கு சாப்பாடு தரும் மதுரை ராமுத் தாத்தா.

......மதுரை குருவிக்காரன் சாலையில் தெரு ஒரத்தில் ரோட்டுக்கடை போட்டு ஒரு இட்லி பத்து பைசாவிற்கு விற்று தனது தொழிலை ஆரம்பித்தார் அப்போது முதல் இப்போது பத்து ரூபாய்க்கு சாப்பாடு போடுவது வரை காசு இல்லாதவர்கள் இவரது கடையில் இலவசமாக சாப்பிட்டுவிட்டு போகலாம், மேலும் தினமும் பத்து இருபது சாப்பாட்டை பார்சாலாக கட்டி நடக்கமுடியாதர்களுக்கு கொண்டு போய் கொடுத்துவிட்டு வருவார் இப்போது வயதாகிவிட்டதால் கொடுத்தனுப்பிவிடுகிறார்.

2)  வெளிநாட்டில் வேலைக்குச் சென்று விட்டாலும் தன் ஊர் மக்களுக்காக தான் தொடங்கிய நூலகத்தை கைவிட்டுவிடாத ராஜா.


3)  பணியை நேசிப்பவர்.  

".......  இதையடுத்து, மருத்துவனை வளாகத்திலே கர்ப்பிணிகளுக்காக, தனியாக ஒரு ஏக்கரில் காய்கறி தோட்டத்தை அமைத்து, இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி, கத்திரிக்காய், வெண்டை, புடலை, தக்காளி, துவரை என முக்கிய சத்துகள் நிறைந்த காய்கறிகளையும் சாகுபடி செய்துள்ளனர்.தென்னை மரம் வைத்து, அதிலிருந்து தேங்காய், எண்ணெய் என அனைத்தையும் பயன் படுத்திக் கொள்கின்றனர். வாரத்தில் செவ்வாய்கிழமை தோறும், அப்பகுதியில் உள்ள கர்ப்பிணிகளை வரவழைத்து, உணவுகளை சமைத்து வழங்கி வருகின்றனர்....."4)  ட்வீட் செய்தவரை, உடனடி ஆக்ஷன் எடுத்தவர்களை, இரு தரப்பையுமே பாராட்டுவோமே..  26 சிறுமிகள் காப்பாற்றப்பட்டிருப்பது பெரிய விஷயம்.


விகடனிலிருந்து...

5)  அடுத்த செய்தியும் விகடனிலிருந்து எடுக்கப் பட்டதே...  "எங்களை பற்றி எந்த செய்தித் தாள்களும் செய்தி  வெளியிடுவதில்லை" என்று குறைப்படுகின்றனர் இந்த சாதனையாளர்கள்.  இவர்களுக்கு உதவிய அண்டை வீட்டுக்காரர்களைப் பாராட்டுவதா, காசு பலன் எதிர்பார்க்காமல் பயிற்றுவிக்கும் கோச்களை பாராட்டுவதா, இத்தனைக் கஷ்டங்களையும் தாண்டி சாதிக்கும் இவர்களை பாராட்டுவதா?

"நான் அப்போது அழுதது பசியினால்தான் என்று எத்தனை பேர்களுக்குத் தெரியும்?" என்று இந்தச் சிறுவன் கேட்டது எத்தனை காதுகளை எட்டியிருக்கும்?

37 comments:

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும்!

ஒன்றைச் செய்ய முடியும் என்று முழுதாய் நம்பும் போது உள் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை அந்தக் காரியத்தை முடிக்கும் வழிகளையும் காட்டுகிறது. இந்த நம்பிக்கைதான் மாபெரும் அந்த “சக்தி”யையும் நம்மையும் இணைக்கும் பாலம்.

சனிக்கிழமை வெளியாகும் பாஸிட்டிவ் செய்தி மாந்தரை நினைக்கும் போதும் இந்த வரிகள் எனக்கு நினைவுக்கு வருவதுண்டு.

கீதா

துரை செல்வராஜூ said...

வாழ்க..

Thulasidharan V Thillaiakathu said...

இன்றைய செய்திகள் பெரிய படங்களுடன் வந்திருக்கே...பார்த்துவிட்டு வரேன்


கீதா

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் , கீதா/கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

அந்த ஒன்றைச் செய்து முடிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் நேரும்போதுதான் மனிதன் அதைச் செய்கிறான். மரத்தில் தொங்கிய மனிதனைக் கல்லால் அடித்த பெரியவர் கதை போல!

நல்ல மெசேஜ்.

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

மேலும்,

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் துரை செல்வராஜூ ஸார்.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

துணிச்சல் மிக்க செயலாற்றுநர்களை அறியத்தந்துள்ளீர்கள். பாராட்டுகள்.

துரை செல்வராஜூ said...

பத்து ரூபாய்க்கு சாப்பாடு முதல்
விருது பெற்றபோதும் பசித்திருந்தது வரை மனம் நெகிழச் செய்தன....

இவர் தமக்கு என்ன செய்யப் போகின்றது சமுதாயம்?..

துரை செல்வராஜூ said...

ஸ்ரீராம்..
அன்பின் நன்றி...

Thulasidharan V Thillaiakathu said...

ராமு தாத்தா அசத்துகிறார். 10 ரூபாய்க்குச் சாப்பாடு!!! என்ன ஒரு நல்ல விஷயம் அதுவும் முடியாதவர்களுக்கும் கொடுத்துவிடுதல்...கோலி சோடா குழுவினரும் அவரை கௌரவித்தது நல்லதொரு விஷயம். சினிமாத்துறையினரும் இப்படியான நல்லவிஷயங்களைக் கண்டு அறிந்து கௌரவிக்கிறார்களே! வள்ளலார் திருப்புமுனை....என்றால் மனைவி செம சப்போர்ட்!!! தொடரட்டும் ராமு தாத்தாவின் பணி! வாழ்த்துகள் தாத்தாவிற்கு

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அந்த ஒன்றைச் செய்து முடிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் நேரும்போதுதான் மனிதன் அதைச் செய்கிறான்.//

ஆமாம் ஸ்ரீராம்.....நிர்பந்தங்களும் கூட வழிவகுக்கின்றன!! இந்தக் கோணமும் யெஸ்...புரிஞ்சுச்சு....அந்தச் செய்திக்கு இன்னும் வரலை பார்க்கிறேன்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அட! துரை அண்ணாவுக்கு பிறந்த நாளா!! அண்ணா உங்கள் ஆசிகள் வேண்டி.....

பிறந்தநாள் வாழ்த்துகள்! இறைவனின் அருள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்றென்றும் கிட்டிடட்டும்!

கீதா

Bhanumathy Venkateswaran said...

அனைவருக்கும் காலை வணக்கம்

Geetha Sambasivam said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், ஆசிகள் துரை அவர்களே!நீண்ட ஆயுளையும், மன மகிழ்ச்சியையும் என்றென்றும் குறைவில்லாமல் தர அந்த எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திக்கிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள், ஆசிகள்.

கோமதி அரசு said...

அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.
சகோ துரைசெல்வராஜூ அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
சாரும் வாழ்த்துக்களை சொல்ல சொன்னார்கள்.

Geetha Sambasivam said...

முதல் நான்கும் ஏற்கெனவே படிச்சேன். கர்ப்பிணிகளுக்குச் சமைத்துப் போடுவது சில மாதங்கள் முன்னரே படித்த நினைவு. கடைசிச் செய்திமுற்றிலும் புதிது. முதல் செய்தியில் உள்ள தாத்தா வாட்சப்பிலும் வந்தார், முகநூலிலும் வந்தார்.

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் பானு அக்கா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

எ. பி குடும்பத்து சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பான பணிவான வணக்கங்கள்.

அருமையான பாஸிடிவ் எண்ணங்கள் தினத்தன்று அனைவரின் நலம் விசாரித்து அனைத்தும் நலமேயாக பிரார்த்தனைகளுடன் தொடர்கிறேன்.
செய்திகளை மேலோட்டமாக படித்தேன். பின் விபரமாக படிக்கிறேன். அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் என்றிந்தேன். அவருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். என்றும் இன்று போல் நலமேயாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

துரை செல்வராஜூ said...

// கீதா...//

தங்கள் அன்புக்கு நன்றி..

அன்னை அபிராமவல்லி நல்லருள் பொழிவாளாக..

துரை செல்வராஜூ said...

// கீதா.S..//

தங்கள் அன்பின் வாழ்த்துரை கண்டு மனம் நெகிழ்ந்தது...

நெஞ்சார்ந்த நன்றிகள்..

துரை செல்வராஜூ said...

// கோமதி அரசு...//

சிவஸ்தலங்கள் அனைத்தையும் தரிசனம் செய்தவர்கள் - தாங்கள்..

மனம் நிறைந்த வாழ்த்துரை கண்டு மகிழ்ச்சி...

அன்பின் நன்றியுடன்...

துரை செல்வராஜூ said...

// கமலா ஹரிஹரன்... //

நெஞ்சார்ந்த வாழ்த்துரை கண்டு மகிழ்ச்சி....

அனைவரும் நலமுடன் வாழ என்றென்றும் பிரார்த்திக்கிறேன்...

அன்பின் நன்றியுடன்..

KILLERGEE Devakottai said...

ராமுத்தாத்தா வாழ்க நீடூழி.

திண்டுக்கல் தனபாலன் said...

செய்திகள் அனைத்தும் சிறப்பு...

கோமதி அரசு said...

வயிற்று பசிக்கு குறைந்தவிலை உணவு தருபவர், அறிவு பசிக்கு நூலகம் மூலம் உதவுபவர், நாளை பூமிக்கு வரௌம் குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பிறக்க உதவும் உள்ளம் என்று அருமையான செய்திகள். வாழ்க வளமுடன் அனைவரும்.

விளையாட்டுதுறை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளவேண்டிய பகிர்வு.
போட்டியில் கலந்து கொள்ள போகும் போது பயண சலுகைகள், தங்கும் இடம், சாப்பாட்டு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், பயிற்சிகள் எடுக்க உதவ வேண்டும். எவ்வளவோ திட்டங்க்களை வகுக்கும் அரசு இப்படி நாட்டுக்கு பெருமை சேர்க்கும் இவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

சாதிக்கும் வீரர்களுக்கு அவர்களுக்கு உதவிய அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

அன்னை அபிராமவல்லி நல்லருள் பொழிவாளாக..//

துரை அண்ணா நெகிழ்ந்துவிட்டேன். இன்று கவிநயாம்மாவின் பாடல் "அபிராமியே எமக்கு அருள்வாமியே" பாடலுக்குத்தான் துவஜாவந்தி ராகத்தில் மெட்டு போட்டு பாடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இனிதான் பதிந்து அவர்களுக்கு அனுப்ப வேண்டும். உங்கள் வாழ்த்திலும் அபிராமி நல்லருள் பொழிவாளாக என்று சொல்லியதும் மனம் பூரிப்புடன் நெகிழ்ந்தும்விட்டேன்...என்ன ஒரு கோஇன்ஸிடென்ஸ்!! மிக்க மிக்க நன்றி துரை அண்ணா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கமலாக்கா வந்தாச்சா? எப்படி இருக்கீங்க. நான் இன்னும் உங்கள் தளம் வரலை...குலதெய்வ வழிபாடு நல்லபடியாக முடிந்ததா? நலம்தானே

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வெளிநாடு சென்றாலும் நூலகத்தை விடாது நடத்தும் சிவகங்கைச் சீமைக்கருகே வில்லிப்பட்டி ராஜாவுக்கு வாழ்த்துகள்...

கர்ப்பிணிப்பெண்களுக்குத் தோட்டம் அமைத்து இயற்கை உணவு அளிக்கும் மருத்துவர் சவுந்தரராஜன் வியக்க வைக்கிறார். பாராட்டுகள். மிகச் சிறந்த உதாரணம்.

ஸ்ரீவத்ஸா இளைஞருக்கும், உடனடி ஆக்ஷன் எடுட்த்ஹ ரயில்வே அமைச்சர் மற்றும் போலீஸாருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள். இப்படியான செய்தி நான் அறிவது இரண்டாவதோ, மூன்றாவதோ. இதற்கு முன்பும் கூட ஒரு பெண் இப்படி செய்தி அனுப்பி ரயில்வே காப்பற்றியது பற்றி இங்கு இடம்பெற்ற நினைவு. மிக மிக் நல்ல விஷயம் ரயில்வே துறையும் அமைச்சகமும் இப்படிச் செயல்படுவது.

//"நான் அப்போது அழுதது பசியினால்தான் என்று எத்தனை பேர்களுக்குத் தெரியும்?" என்று இந்தச் சிறுவன் கேட்டது எத்தனை காதுகளை எட்டியிருக்கும்?//

மனதை மிகவும் நெகிழ்த்திவிட்டது. இந்தச் செய்தியும். அந்தக் குழந்தைகள் அனைவருக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள். விகடன் இக்குழந்தைகளைப் பற்றியும் வெளியிட்டு எல்லோருக்கும் அறியத்தந்தமைக்கு விகடனுக்கும் பாராட்டுகள்

கீதா

Vimalan Perali said...

வயிற்றுப்பசி,அறிவுப்பசி,,,,,இரண்டும் கூடவே விளையாட்டும்
மனிதனுக்கு மிக முக்கிய தேவைகள்/

Bhanumathy Venkateswaran said...

ராமு தாத்தா நெகிழ்ச்சியூட்டுகிறார். கடமையை கடனே என்று செய்யாமல், அக்கறையோடு பணியாற்றும் மருத்துவர், காட்ஜெட்ஸை சரியாக கையாண்டு 21 பெண்களை மீட்டெடுத்த இளைஞன் இருவரின் சேவையும் போற்றுதலுக்குரியது.

விளையாட்டு பயிற்சியாளரைப் பற்றி முழுமையாக படிக்கச் இயலவில்லை.

Bhanumathy Venkateswaran said...

Birthday wishes to Sri.Durai Selvaraj. Many more happy returns of the day. Have a healthy and blissful year ahead!

Thulasidharan V Thillaiakathu said...

முதலில் துரை செல்வராஜு ஐயா அவர்களுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

ராமு தாத்தாவும் அந்த மல்லர் கம்பம், ஏரியல் சில்க் எல்லாம் திறமையுடன் செய்யும் இளைஞர்களின் கதையும் மனதை நெகிழ்த்தியது. அந்த இளைஞர்களுக்கு இன்னும் அரசு உதவலாம். வாழ்த்துகள் பாராட்டுகள்.

ஸ்ரீவத்ஸவிற்கும் ரயில்வே துறை க்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்

மருத்துவர் தன் பணியை ஆத்மார்த்தத்துடன் செய்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

அனைத்துச் செய்திகளும் அருமை.

துளசிதரன்

நெ.த. said...

அனைவரும் பாராட்டுக்குரியவர்கள், அதிலும் வயிற்றுக்குச் சோறிடும் இராமுத்தாத்தா. இதைவிட பேறு, மனிதனாகப் பிறந்ததற்கு, வேறு என்ன கிட்டும்?

Asokan Kuppusamy said...

அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்

ராஜி said...

பத்து பைசா இட்லி தாத்தாவை இப்பதான் படிச்சேன்.

கர்ப்பிணிகளுக்கான காய்கறி தோட்டம் நல்ல முயற்சி...


Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

/கமலாக்கா வந்தாச்சா? எப்படி இருக்கீங்க. நான் இன்னும் உங்கள் தளம் வரலை...குலதெய்வ வழிபாடு நல்லபடியாக முடிந்ததா? நலம்தானே/

கீதா

நல்லபடியாக போயிட்டு வந்தாச்சு சகோதரி. குல தெய்வ வழிபாடெல்லாம் சிறப்பாக கிடைத்தது. விசாரித்தமைக்கு மிகவும் நன்றி. நீங்கள் எப்படி உள்ளீர்கள்? நலந்தானே..

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

காலை வணக்கம் 🙏.

அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!