சனி, 7 ஜூலை, 2018

வாயில்லா ஜீவன்களுக்கான முதியோர் இல்லம்





1)  அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர் ஒருவர், தனது சொந்த செலவில் ஸ்மார்ட் போர்டு வாங்கி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கிறார். 






2) வாயில்லா ஜீவன்களுக்கான முதியோர் இல்லம் நடத்தும் சுரேஷ்குமார்.  





சென்னை, அயனாவரம் - கொன்னுார் பிரதான சாலையில் அமைந்துள்ள, 'தி மெட்ராஸ் பிஞ்ச்ராபோல்' டிரஸ்டில், மேலாளராக பணியாற்றி வரும், சுரேஷ்குமார்: 

"1906ல், 250 மாடுகளுடன் இந்த கோசாலை துவங்கப்பட்டது. இதை உருவாக்கியவர், குஷால்தாஸ். விலங்கு நல வாரியத்தின் அனுமதி பெற்ற, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கோசாலை இது.பசு வதை கூடாது; பசுக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு, 100 ஆண்டுகளை தாண்டி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

கிட்டத்தட்ட, 2,000க்கும் அதிகமான மாடுகளை, இங்கே பராமரித்து வருகிறோம். மாடுகளுக்கு காலையில் பசுந்தழை, வைக்கோல், தண்ணீர் கொடுப்போம். மதியம், கோதுமைத் தவிடு, எள்ளுப் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு கலந்த மாட்டுத் தீவனம், பச்சைப் புல் கொடுப்போம். 

காலையில் இரண்டு மணி நேரம், 'ஷெட்'டுக்குள்ளேயே மாடுகளை திறந்து விடுவோம்.நன்கொடையாளர்கள் பலர், தினமும் இங்கே வருவர். அவர்கள் குடும்பத்தினரின் பிறந்த நாள், திருமண நாள், இறந்து போன பெரியவர்களின் நினைவு நாள் போன்ற முக்கிய தினங்களில், பசுக்களுக்கு தேவையான வாழைப் பழங்கள், மாம்பழங்கள், காய்கறிகளை நன்கொடையாக தருவர்.மாடுகளைப் பராமரிக்க முடியாதவர்கள், இங்கே அழைத்து வந்து விட்டுச் செல்லலாம். 

பொருளாதார சூழல் காரணமாக பலர், அவற்றை அடிமாடுகளாக விற்பர். அவர்களுக்கு தேவையான பணத்தை நன்கொடையாளர்களிடம் இருந்து வாங்கி கொடுத்து, மாடுகளை பராமரித்து வருகிறோம்.தொலைதுாரத்தில் இருந்து மாடுகளை அழைத்து வர சிரமப்படுவோருக்கும், நன்கொடையாளர்களிடம் நிதி பெற்று, மாடுகளை இங்கே அழைத்து வர ஏற்பாடுகளை செய்து தருவோம். 

திருவள்ளூர், பெரியபாளையம், தென்காசி, செங்கோட்டை என, தமிழகத்தின் பல பகுதி களைச் சேர்ந்த மாடுகளும், இங்கே கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்து அறநிலையத் துறையின் சார்பாகவும், பல மாடுகள் இங்கே விடப்பட்டிருக்கின்றன. நேர்ந்து விடப்படும் மாடுகளை, கோவில்களில் சரியாகப் பராமரிக்க முடியாமல் இங்கு விடுவதும் உண்டு.

மாடுகளை பராமரிக்க, 120 தன்னார்வலர்கள் உள்ளனர். இங்குள்ள மாடுகளிலிருந்து கிடைக்கும் சாணத்தையும், கோமியத்தையும் விவசாயப் பயன்பாட்டுக்கு கொடுக்கிறோம். குறைந்தபட்சம், 500 ரூபாயிலிருந்து, அதிகபட்சம், 2,500 ரூபாய் வரை, சாணமாகவும், மட்க வைத்து எருவாகவும் கொடுக்கிறோம். இதேபோல, கோமியத்தை, 300 மில்லி, 10 ரூபாய், 1 லி., 30 ரூபாய்க்கு கொடுக்கிறோம். மாடித் தோட்டம் வைத்துள்ளோர், கோமியத்தை, பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்துகின்றனர்.சாணம், கோமியம் வாயிலாக வரும் தொகையை, மாடுகளின் தீவனத்துக்காகவும், பராமரிப்புக்காகவும் பயன்படுத்திக் கொள்கிறோம்.தொடர்புக்கு: 98410 92085. 


3)  பாராட்டப்பட வேண்டிய ஓசூர் நகராட்சி.  மாதம், ரூ.3 லட்சம் வருமானம் ஈட்டும் ஓசூர் நகராட்சி!







இயற்கை உரம் தயாரிப்பதுடன், 16 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து காய்கறி, பழங்களை பொதுமக்களிடமே விற்பனை செய்து அசத்தி வரும், ஓசூர் நகராட்சி ஆணையர், செந்தில் முருகன்: 

"கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரின் குப்பை கழிவுகள் முழுக்க, தாசியப்பள்ளி என்ற இடத்தில் தான், 40 ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டிருந்தன. மலை போல், வீணாகக் குவிந்து கிடக்கும் இந்த குப்பையை உரமாக மாற்றி, விவசாயிகளுக்கு கொடுக்கும், 'ஐடியா'வை, ஓசூர் நகராட்சி நிர்வாக ஆணையர், பிரகாஷ், ஐ.ஏ.எஸ்., கூறினார்.

அவரது வழிகாட்டுதலின்படி, கடந்த ஆண்டு, ஓசூரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று, மக்கும் மற்றும் மக்காத குப்பை என, குப்பைகழிவுகளை பிரித்து கொடுக்கும்படி கேட்டோம்; புதிய முயற்சியாக இருந்ததால், மக்களும் நல்ல வரவேற்பு கொடுத்தனர். 

இவ்வாறு பெறப்படும் குப்பையை பிரிப்பதற்கும், உரம் தயாரிப்பதற்கும், ஓசூர் நகராட்சியிலேயே, நுண் உர மையத்தை ஆரம்பித்தோம். 

தினமும் குப்பையை ஏற்றி வந்து, பிரிக்க ஆரம்பித்து விடுவர். அதில், மக்கும் குப்பையை மட்டும், 45 நாட்கள் உரமாகும் வரை மூடி வைத்து விடுவோம். 

மக்காத குப்பையான, பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி முறை செய்து, விற்று விடுகிறோம்.இத்திட்டம் வெற்றி பெற்றதால், இயற்கை விவசாயமும் செய்ய ஆரம்பித்து விட்டோம். 

தமிழகத்திலேயே விவசாயம் செய்யும் முதல் நகராட்சி, ஓசூர்நகராட்சி தான்.

நகராட்சிக்கு சொந்தமான, 16 ஏக்கர் நிலத்தை வீணாக்காமல், கேரட், தக்காளி, கத்திரி, அனைத்து விதமான கீரை வகைகள், பப்பாளி, பூசணி போன்றவற்றை விளைவித்துள்ளோம். 

மேலும், 57 வகையான நாட்டு மரக்கன்றுகளையும் வளர்க்கிறோம். டைட்டன் நிறுவனம், ஒன்பது லட்ச ரூபாய் செலவில், 8 ஏக்கரில், ஓசூர் நகராட்சிக்கு ஜம்பு நாவல், மா, கொய்யா, 'ஸ்பான்சர்' செய்துள்ளது.

அதோடு, இந்த, 16 ஏக்கரிலேயே, 200 கோழிகள், 20 பசு மாடுகள், குஜராத்தின் நான்கு கிர் மாடுகள், முயல், வாத்து, வான்கோழி, மத்திய பிரதேசத்தின் கருங்கால் கோழிகளும் வளர்க்கப்படுகின்றன. 

இங்கு வளரும் காய்கறி, பழம் மற்றும் கீரைகளை, மக்களே பறித்து, எடை போட்டு, பணம் கொடுத்து செல்லும்படி வசதி செய்யப்பட்டுள்ளது. இப்படி குப்பை வாயிலாக, இயற்கை உரம் தயாரிப்பு, காய்கறி, பழம், கால்நடைகள் விற்பனை மூலம், ஓசூர் நகராட்சிக்கு மாதம், மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. 

இந்தத் தொகையை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுத்தது போக, நகராட்சியின் வளர்ச்சிக்கு செயல்படுத்தப்படுகிறது. மக்களிடமும், விவசாயிகளிடமும் இயற்கை உரம் குறித்தும், இயற்கை விவசாயம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்; இதுவே, இத்திட்டத்தின் நோக்கம்!"


4)  முற்பகல் செய்யின்...  இது நல்லவைகளுக்கும் பொருந்தும்.  திருடனை தனி ஆளாக விரட்டிப்பிடித்த சூர்யாவுக்கு 18 வயவதற்காகக் காத்திருந்து அவருக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது காவல்துறை.  பாராட்டுகள்.





5)  ".......  வருடந்தோறும் நாற்பது குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து இதுபோல் ஸ்காலர்ஷிப் உதவி வழங்கி வருகிறது ஆனந்தம் ஃபவுண்டேஷன். இது 100 சதம் கல்லூரி ஃபீஸ், தங்கும் உதவி, உணவு உதவி அடங்கியது.




இந்த நிறுவனத்துக்காகத் தன்னார்வலர்கள் நிறைய உதவிகள் செய்து வருகிறார்கள். வலதுகை கொடுப்பது இடது கைக்குத் தெரியாது என்பது போல் இவர்கள் வழங்கிய உதவியால் நிறைய எம்பிபிஎஸ் மாணவர்களும், ஐ ஏ எஸ் மாணவர்களும் உருவாகி உள்ளனர் என்பது சிறப்புச் செய்தி. ஐபிஎம், இன்ஃபோசிஸ், கெவின்கேர் ஆகியவற்றில் இவர்கள் ப்ளேஸ்மெண்ட் ஆகிவருவதும் சந்தோஷத்திற்குரியது.........."......

48 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும்…..
    “வெறும் வளர்ச்சி எவரையும் மனிதனாக்குவதில்லை. நற் சிந்தனைகளே மனிதனை உருவாக்குகிறது.”
    அப்படியான மனிதர்களைப் பற்றி சொல்லும் நாள் இது எபியில்!
    கீதா

    பதிலளிநீக்கு
  2. தலைப்பே ஈர்க்கிறதே....என்ன என்று பார்க்கணும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். ஒரு நல்ல மெசேஜுடன் தொடங்கும் வழக்கம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. நாங்கள் நேற்று நினைத்தோம் தேனம்மை அவர்களின் பதிவில் ஆனந்தம் ஃபௌண்டேஷனைப் பார்த்ததும் நீங்கள் சொல்லுவீர்கள் என்று

    வந்துவிட்டது இங்கும்....அதில் தேனம்மை அவர்களின் உறவுக்காரரும் இணைந்து உதவி செய்திருக்கிறார்...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  7. ஒரு நல்ல மெசேஜுடன் தொடங்கும் வழக்கம் நன்றாக இருக்கிறது.//

    மிக்க நன்றி ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  8. சில செய்திகளைப் படித்திருந்தாலும் -
    இன்றைய பதிவு அருமையான தொகுப்பு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  9. பொருளாதார சூழல் காரணமாக பலர், அவற்றை அடிமாடுகளாக விற்பர். அவர்களுக்கு தேவையான பணத்தை நன்கொடையாளர்களிடம் இருந்து வாங்கி கொடுத்து, மாடுகளை பராமரித்து வருகிறோம்.தொலைதுாரத்தில் இருந்து மாடுகளை அழைத்து வர சிரமப்படுவோருக்கும், நன்கொடையாளர்களிடம் நிதி பெற்று, மாடுகளை இங்கே அழைத்து வர ஏற்பாடுகளை செய்து தருவோம். //

    வாவ் போட வைக்கிறது. என்ன ஒரு நற்பணி. ஒரு முறையேனும் சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. மேற்குமாம்பலத்தில் இருக்கும் கோசாலைக்குச் சென்றிருக்கிறேன்.

    மகனுக்கு இதைப் பற்றிய செய்தியை அனுப்பிவிட்டேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  10. திரு.சுரேஷ்குமார் அவர்களை வாழ்த்துவோம். மனிதநேயம் இன்னும் வாழத்தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  11. இங்குள்ள மாடுகளிலிருந்து கிடைக்கும் சாணத்தையும், கோமியத்தையும் விவசாயப் பயன்பாட்டுக்கு கொடுக்கிறோம். குறைந்தபட்சம், 500 ரூபாயிலிருந்து, அதிகபட்சம், 2,500 ரூபாய் வரை, சாணமாகவும், மட்க வைத்து எருவாகவும் கொடுக்கிறோம். இதேபோல, கோமியத்தை, 300 மில்லி, 10 ரூபாய், 1 லி., 30 ரூபாய்க்கு கொடுக்கிறோம். மாடித் தோட்டம் வைத்துள்ளோர், கோமியத்தை, பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்துகின்றனர்.//

    மிக மிக நல்ல பயன்பாடு....கோமியம் வேண்டும் என்று மரங்கள் செடிகள் பயிரிடும் சேவையைக் கையில் எடுத்துள்ள வா மணிகண்டன் கேட்டிருந்தார். அதைப் பெற்றுத் தர வேலூர் நண்பர் அன்பேசிவம் சொல்லிக் கொண்டிருந்தார் இதைப் பற்றியும் சொல்ல வேண்டும் அவர்களுக்கு...நல்ல செய்தி ஸ்ரீராம். இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. நன்றி கீதா... உடனடியாக ஒருவருக்கு இந்தச் செய்தி உதவுவதில் சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  13. ஓசூர் வியப்படைய வைக்கிறது. மற்ற மாநகராட்சிகளும் இதைப் பின்பற்றலாமே. சென்னையில் இன்னும் இந்தக் குப்பை பிரித்தல் மறு சுழற்சி தொடங்கப்பட்டதாகத் தெரியலை...ஓசூர் நகராட்சி ஆணையர், செந்தில் முருகனை பின்பற்றலாம்.

    தமிழகத்திலேயே விவசாயம் செய்யும் முதல் நகராட்சி, ஓசூர்நகராட்சி தான்.//

    சென்னை மா........நகராட்சி....இதற்கான நிலங்கள்? எந்த நிலையிலோ? ஹூம்....இப்படியான அதிகாரிகள் நினைத்தால் எத்தனையோ செய்யலாம்...

    ஓசூர் நகராட்சி ஆணையர் திரு செந்தில் முருகனுக்கும், நகராட்சிக்கும் பாராட்டுகள். நகராட்சி மா"நகராட்சியாக செயலில் மாறியிருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. மற்ற செய்திகளுக்கு அப்புறம் வரேன்....கண்ணழகி செல்லம் சமர்த்தா வெயிட்டிங்க்!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. கொஞ்சம் வேலை, கொஞ்சம் தலைவலி, பின்னர் வரேன், கோசாலைச் செய்தி நானும் முகநூலில் பகிர்ந்திருந்தேன். மனதுக்கு சந்தோஷமா இருந்தது.

    பதிலளிநீக்கு
  16. ஶ்ரீராமின் மகனுக்குத் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள், ஆசிகள். பெரியவரா, சின்னவரா? பிறந்த நாள் கொண்டாடுவது?

    பதிலளிநீக்கு
  17. ஶ்ரீலங்காவில் வானில் கிருஷ்ணர் தோன்றியதைக் கண்டு இருவர் படம் எடுத்துப் போட்டிருக்காங்க. ஒருவர் மயங்கி விழுந்துட்டாராம். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  18. பெரியவனுக்கு அக்கா. நன்றி.

    பதிலளிநீக்கு
  19. // ஶ்ரீலங்காவில் வானில் கிருஷ்ணர் தோன்றியதைக் கண்டு இருவர் படம் எடுத்துப் போட்டிருக்காங்க. ஒருவர் மயங்கி விழுந்துட்டாராம். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! //

    லிங்க் ப்ளீஸ்....

    பதிலளிநீக்கு
  20. நம்ம ரங்க்ஸ் ஐபாடில் காட்டினார். அங்கே Magster News லே வந்திருக்கு. ஒரு மீனவர் பார்த்துட்டுச் சொன்னாராம். எந்த தினசரியிலும் வந்ததாய்த் தெரியலை, முகநூலில் யாரானும் போட்டால் தெரியலாம்.

    பதிலளிநீக்கு
  21. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  22. ஶ்ரீராம் உங்கள் மூத்த மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும், ஆசிகளும்.

    பதிலளிநீக்கு
  23. இனிய காலை வணக்கம் பானு அக்கா.

    வாழ்த்துகளுக்கு நன்றி பானு அக்கா.

    பதிலளிநீக்கு
  24. வாயில்லா ஜீவன்களுக்காக சேவை செய்து வரும் சுரேஷ் குமார்
    அவர்களைப் பற்றி முக நூலிலும் படித்தேன்.
    ஸ்மார்ட் போர்ட் வாங்கிக் குழந்தைகளுக்கு நவீனக் கல்வி வழங்குபவருக்கும் வாழ்த்துகள்
    ஓசூர் நகராட்சிக்கும் ,சிறுவன் சூர்யாவை ஆதரிக்கப் போகும் காவல் துறைக்கும்
    பாராட்டுகள்.
    இந்தத் தினம் அனைவருக்கும் நல்ல தினமாக இருக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  25. தமிழ்நாட்டில் எத்தனை நகராட்சிகள், மாநகராட்சிகள் இருக்கின்றன? ஹோசூரின் செந்தில் முருகனைத் தொடர்புகொண்டு, யோசனை கேட்டு, ஏதும் உருப்படியாகச் செய்வார்களா, தங்கள் ஏரியாவில். சந்தேகம் தான். அவனைக் கேட்டு நாம என்ன செய்யறது? நமக்குத் தெரியாதா என்பார்கள். செய்யமாட்டார்கள் !

    நகராட்சி முயற்சிக்கு டாடாவின் டைட்டன் நிறுவனமும் 8 ஏக்கர் நிலத்திற்குத் தேவையான நாட்டு மரக்கன்றுகளைத் தந்திருக்கிறது. அபார முயற்சி.



    ஹோசூரின்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நமக்குத் தெரியாதா.. என்பார்கள்..செய்யமாட்டார்கள்..//
      By அன்பின் ஏகாந்தன்....

      நிதர்சனமான உண்மை....

      நீக்கு
  26. அனைவரும் பாராட்டுதலுக்பு உரியவர்கள். நல்ல செயல்பாடுள்ள நகராட்சி, மாநகராட்சியிடமிருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்கிறார்களா?

    பதிலளிநீக்கு
  27. காலை வணக்கம்.

    அனைத்தும் சிறப்பான தகவல்கள். சில முன்னரே படித்தவை.

    பதிலளிநீக்கு
  28. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    //ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தை சேர்ந்தவர் உலகராஜ்//
    வாழ்த்துக்கள்.


    //நகராட்சிக்கு சொந்தமான, 16 ஏக்கர் நிலத்தை வீணாக்காமல், கேரட், தக்காளி, கத்திரி, அனைத்து விதமான கீரை வகைகள், பப்பாளி, பூசணி போன்றவற்றை விளைவித்துள்ளோம்.//

    வாழ்த்த வேண்டும் எல்லா நகராட்சிகளும் இப்படி செய்யலாம்.

    இன்றைய செய்திகள் அனைத்து மிக நல்ல செய்திகள்.
    அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.


    பதிலளிநீக்கு
  29. அனைவரும் பாராட்டத் தக்கவர்கள்

    பதிலளிநீக்கு
  30. உலகராஜ் அவர்கள் தன் சொந்தச் செலவில் ஸ்மார்ட் போர்ட் மூலம் கற்றுக் கொடுத்தல் அதுவும் வாணியம்பாடி சென்று கற்றுக் கொண்டு வந்து கற்றுக் கொடுத்தல் பாராட்டிற்குரியது.

    இதில் சொல்ல ஒரு கருத்து உள்ளது ஆனால் இது பாசிட்டிவ் செய்தி. எனவே அக்கருத்தை இங்கு சொல்லவில்லை...

    சூர்யாவுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  31. பெரிய மனிதர்கள், பெரிய எண்ணங்கள், அரிய சேவைகள். வழக்கம்போல அருமை.

    பதிலளிநீக்கு
  32. ஹை ஸ்ரீராம் ராகுலுக்கு பிறந்த நாளா!! பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லிடுங்க! Many more happy returns of the day!

    பானுக்காவுக்கு எப்படித் தெரியும்....என்ன ரகசியம்!!!?? ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  33. தமிழ்நாட்டில் எத்தனை நகராட்சிகள், மாநகராட்சிகள் இருக்கின்றன? ஹோசூரின் செந்தில் முருகனைத் தொடர்புகொண்டு, யோசனை கேட்டு, ஏதும் உருப்படியாகச் செய்வார்களா, தங்கள் ஏரியாவில். சந்தேகம் தான். அவனைக் கேட்டு நாம என்ன செய்யறது? நமக்குத் தெரியாதா என்பார்கள். செய்யமாட்டார்கள் //

    ஏகாந்தன் அண்ணா டிட்டோ....அப்படி எல்லாம் செஞ்சுட்டாங்கனா இன்னிக்கு தமிழ்நாடு எங்கேயோ போயிருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  34. ஶ்ரீலங்காவில் வானில் கிருஷ்ணர் தோன்றியதைக் கண்டு இருவர் படம் எடுத்துப் போட்டிருக்காங்க. ஒருவர் மயங்கி விழுந்துட்டாராம். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//

    கொஞ்ச நாள் முன்ன திருப்பதில லார்ட் நாராயண் தோன்றியதாக படம் கூட வாட்சப்பில் வந்துச்சு....சரி இப்ப லார்ட் கிச்னர் வந்துருக்காரேனு பார்க்க கூகுள்ல தேடினா ....ஆஹா 5 லார்ட் வந்துருக்காங்கனு கணேஷ் சிவா என்று வானத்தில் பல தோன்றும் வீடியோக்கள் இருக்கு....

    கிருஷ்னர் வீடியோ பார்த்தேன் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. ஒரு வேளை கீதாக்கா சொன்னது வேறயோ என்னவோ....

    கீதா

    பதிலளிநீக்கு
  35. லார்ட் யமன் கூட அப்பியர் ஆகியிருக்கார்னு ஒரு வீடியோ காட்டுது....ஒரு வேளை யமன் வந்துட்டு...வானத்துலருது ஒரு லுக் விட்டு.யாரைத் தூக்கலாம்னு பார்த்துட்டு...உலகத்தைப் பார்த்து மயக்கமே வந்துருக்கும்...சரி அம்புட்டு பேரையும் தூக்கிடலாம்னு நினைச்சுருப்பாரோ....ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  36. https://www.youtube.com/watch?v=uLSZYubICbI

    விஷ்ணு திருப்பதியில் தோன்றிய வீடியோ......

    கீதா

    பதிலளிநீக்கு
  37. சொந்த செலவில் ஸ்மார்ட் போர்ட் வாங்கி படம் நடத்தும் ஆசிரியரும், குப்பைகளை சரியாக மேலாண்மை செய்து, மாநகராட்சிக்கு வருமானம் ஈட்டித்த தரும் ஓசூர் நகராட்சி ஆணையர் இருவருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்! தமிழகத்தின் எல்லா நகராட்சி, மற்றும் மாநகராட்சிகளும் இவரை முன்னோடியாய் கொண்டால் எத்தனை நன்றாக இருக்கும்!

    பதிலளிநீக்கு
  38. //பானுக்காவுக்கு எப்படித் தெரியும்....என்ன ரகசியம்!!!??//
    கிட்டே வாருங்கள் உங்களுக்கு மட்டும் ரகசியமாக சொல்கிறேன், யாரிடமும் சொல்லி விடாதீர்கள். கீதா அக்கா எனக்கு முன்னால் வாழ்த்து தெரிவித்திருந்தார். அம்புட்டுதான் மேட்டர்.

    பதிலளிநீக்கு
  39. // கிட்டே வாருங்கள் உங்களுக்கு மட்டும் ரகசியமாக சொல்கிறேன், யாரிடமும் சொல்லி விடாதீர்கள். கீதா அக்கா எனக்கு முன்னால் வாழ்த்து தெரிவித்திருந்தார். அம்புட்டுதான் மேட்டர்.//

    ஹா... ஹா.... ஹா.....!

    பதிலளிநீக்கு
  40. ஸ்ரீராம், உங்கள் மூத்த மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  41. நேர்மறை எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் பற்றிய செய்தித் தொகுப்பு உற்சாகம் ஊட்டும் விதத்தில் அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  42. @ sriram: உங்கள் பெரிய பையனுக்குப் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  43. அருமையான வழிகாட்டிகளின் பணிகளைப் பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  44. அனைத்துச் செய்திகளும் அருமை. ஆனந்தா ட்ரஸ்ட் சகோதரி தேனம்மை அவர்களின் பதிவிலும் பார்த்தோம்.

    ஓசூர் நகராட்சி முன்னோடி. ஸ்மார்ட் போர்ட் தானே வாங்கி நடத்தும் ஆசிரியரின் செயல் அருமை. இரண்டிற்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்

    சூர்யாவிற்கு வாழ்த்துகள். கோசாலை மிக அழகாக நடத்தப்படுகிறது நல்ல விஷயம். வாழ்த்துகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  45. நல்ல செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!