சனி, 11 ஆகஸ்ட், 2018

சாதிக் கொடுமையால் ஆதரவற்ற பெண்ணின் உடலை அடக்கம் செய்ய மறுத்த கிராம மக்கள்

ராஜஸ்தானில்



1) தனது தந்தை வாழ்வில் பல இன்னல்கள், அவமானங்களை சந்தித்தவர். மிசௌரியில் உள்ள அகடாமியில் நாங்கள் உள்ளே நுழைந்த அந்த நிமிடம் வாங்க சார் என்று அவரை மரியாதையாக அழைத்தனர். அந்த தருணத்தில் அனைத்தையும் அடைந்துவிட்டேன் என்று முழுப்பெருமிதம் கொண்டேன் என்கிறார்...  பேருந்தில் தனது தாயாருக்கு கிடைத்த அவமானத்தை மனதில் வைத்து வைராக்கியத்துடன் படித்து ஐபிஎஸ் அதிகாரியானார் கண்டக்டரின் மகள் ஷாலினி...









2)  சாதிக் கொடுமையால் ஆதரவற்ற பெண்ணின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் மறுத்த நிலையில், ஒடிசா மாநில எம்எல்ஏ ஒருவர் தனது மகன்களின் உதவியுடன், அந்தப் பெண்ணின் உடலைத் தோளில் சுமந்து அடக்கம் செய்து மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  









3)  ராஜஸ்தானில் வசிக்கும் யோகேஷ் நாகர் தந்தையின் சிரமத்தைக் குறைக்க கண்டுபிடித்ததுதான் ஓட்டுநர் இல்லாமல் ஓடும் டிராக்டர்.  இதற்காக நாட்டின் முன்னணி டிராக்டர் நிறுவனமான மஹிந்திரா  அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவான் குமார் கோயங்கா அவரை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்....  ராணுவத்துக்கு உதவும் வகையில் வாகனங்கள் தயாரிக்கும் யோசனையும் இருக்கிறதாம் இவருக்கு...








4) அரசியல்வாதிகள் குறுக்கிடாதவரை ஒற்றுமையாகவே இருப்போம்.  மத நல்லிணக்கம்..

'ஆவாஸ் - ஏ - ஹக்' அமைப்பின் தலைவர் சதாப் கான் கூறியதாவது: அனைத்து மதத்தினரிடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில், மனித நேயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, கன்வர் யாத்திரை பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.










5)  அடடே....  

....ஆக்சிஜன் மூலம் இயங்கும். மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் செல்லும். ஒருமுறை ஆக்சிஜன் நிரப்பினால் 30 கி.மீ., துாரம் வரை பயணம் செய்யலாம். இதன் தயாரிப்பு செலவு வெறும் ரூ. 68,500.    மேலும் தாங்கள் வடிவமைத்த காரை, மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில்,மேம்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.....

இங்கல்ல...  எகிப்தின் கெய்ரோவில்...   சீக்கிரம் இது மேம்பட்ட வடிவமாகி உலகம் முழுவதும் பரவட்டும்...




28 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. அன்பின் ஸ்ரீராம்..

      கீதா R அவர்களது கணினிப் பிரச்னை இன்னும் தீரவில்லையா?....

      நீக்கு
  2. அனைவருக்கும் (தலைநகரிலிருந்து) காலை வணக்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் . .கேஜ்ரிவாலையும், மோடியையும் விசாரித்தேன் என்று சொல்லுங்கள்!

      நீக்கு
  3. இன்றைய தொகுப்பில் சிலவற்றைப் படித்திருக்கிறேன்....

    ஷாலினியின் உறுதி பாராட்டத்தக்கது...

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வாழ்த்துகள். ஷாலினிக்குத் தனிப்பட்ட வாழ்த்துகள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. காலையில் குளூக்கோஸ் என செய்திகள்!! நன்றி!!

    பதிலளிநீக்கு
  6. ஒடிசா மாநில எம்எல்ஏ உட்பட அனைவருக்கும் பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  7. 1. நீங்கள் எத்தகைய பின்னணியிலிருந்து வருகிறீர்கள் என்பது முக்பியமில்லை. என்னவாக ஆகப்போகிறீர்கள் என்பதுதான் முக்கியம் - ஷாலினி - பாராட்டப்படவேண்ணியவர்
    .

    பதிலளிநீக்கு
  8. 2. சாதிக்கொடுமையால் அடக்கம் செய்ய மறுப்பா? என்ன அறிவீனம்! எம்.எல்.ஏ மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். சென்னையில் எஸ் வி சேகர் போன்றவர்களும் இத்தகைய சேவைகளைச் செய்துவருகிறார்கள். பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
  9. மனித நேயத்துடன் கன்வர் யாத்திரைக்கு உதவி செய்வது போற்றுதலுக்கு உரியது.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் காலை வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  11. செய்திகள் எல்லாம் அருமை.
    அனைவருக்கும், வாழ்த்துக்கள்.

    // சாதிக் கொடுமையால் ஆதரவற்ற பெண்ணின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் மறுத்த நிலையில், ஒடிசா மாநில எம்எல்ஏ ஒருவர் தனது மகன்களின் உதவியுடன், அந்தப் பெண்ணின் உடலைத் தோளில் சுமந்து அடக்கம் செய்து மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.//
    ஒடிசா மாநில எம் எல் ஏ குடும்பத்தினர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. அரிய மனிதர்கள். அரிய செய்திகள். நன்றி.

    பதிலளிநீக்கு
  13. பதில்கள்
    1. சனிக்கிழமை செய்திகள் அனைத்தும் மனதில் நம்பிக்கையைக் கொடுக்கின்றன.
      ஷாலினி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். இத்தகைய முனைப்பு இருந்தால் தான் நம் மக்கள் முன்னேற முடியும்.
      ட்ராக்டர் ஓட்ட வசதியாக ,தந்தைக்கு ஏற்பாடு செய்து தந்திருக்கும் மகனின் தொழில் நுட்பம்
      மிக மகழ்ச்சி கொடுக்கிறது.
      எல்லோரும் இது போல ஊக்கம் கொண்டால் நன்றாக இருக்கும்.
      மகத்தான சேவை செய்திருக்கும் எம்.எல்.ஏ ரமேஷ் வைப் பெற்ற ஒடிஷா மக்கள் பாக்கியம் செய்தவர்கள். இந்தப் புண்ணியம் அவருக்கு வளம் கொடுக்கும்.

      கன்வர் யாத்திரை சிறக்கட்டும் ஏற்பாடு செய்தவர்களுக்கு மனம் நிறை வாழ்த்துகள்.
      அனைத்து செய்திகளும் உற்சாகம் கொடுக்கின்றன. எகிப்திய இளைஞரின் ஆக்சிஜன் சாதனை ஊக்குவிக்கப் பட்டு உலகம் முழுவதும் பரவட்டும்.
      எபிக்கு பாசிடிவ் தொகுப்புக்கான நன்றி.

      நீக்கு
  14. ஒரிஸ்ஸா மாநில எம் எல் ஏ போல் இருப்பவர் மிக குறைவு அவரது சாதி என்னவோ

    பதிலளிநீக்கு
  15. 'சாதி சண்டை போச்சோ? உங்கள் சமயச்சண்டை போச்சோ' என்று பாரதி கேட்டு நூறு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது இன்னும் நாம் திருந்தவில்லை. ஒடிஸா மாநில எம்.எல்.ஏ.வை போற்றுகிறேன். ஷாலினிக்கு சிறப்பு பாராட்டு👍👍

    பதிலளிநீக்கு
  16. எம்எல்ஏ பாராட்டுக்குறியவர்.
    அவரது அதிகானத்தை பயன்படுத்தி கிராம மக்களின் மனதை கவரலாம்.

    பதிலளிநீக்கு
  17. பாசிட்டிவ் செய்திகள் மீண்டும் அதிகளவில் வர ஆரம்பிச்சிருக்கு..

    நம்ம ஊரிலயும் எம்.எல்.ஏக்கள் இருக்குதுங்குளே!!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    பாஸிடிவ் செய்திகள் அருமை. ஷாலினியின் தன்னம்பிக்கை பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

    மனித நேய சுபாவம் கொண்ட எம்.எல்.ஏ போற்றப்பட வேண்டியவர்.

    நல்லதொரு பயனுள்ள கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்தவர்களும், மத நல்லிணக்கத்தை பேணுபவர்களுமாக, இன்றைய செய்திகள் நன்றாக இருந்தது.
    அனைவருக்கும், பாராட்டுகள். அறிமுகப்படுத்திய தங்களுக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. ஷாலினி IPS உம் ஒரிசா எம்.எல்.ஏ. வும் பாராட்டிற்கும் அன்பிற்கும் உரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  20. பாராட்டுக்குரியவர்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. அனைத்து தகவல்களும் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!