வியாழன், 16 ஆகஸ்ட், 2018

இப்பவும் தொடர்கதை படிப்பவரா நீங்கள்?





முன்பெல்லாம் தொடர்கதைகளை விரும்பிப் படிக்கிற காலம் ஒன்று இருந்தது. அடுத்த வாரம் எப்போது வரும் என்று காத்திருந்து படிக்கும் ஆர்வமும் துடிப்பும் இருந்தது.

செவ்வாய் ஒரு பத்திரிகையில் ஓரிரு தொடர்கதைகள், புதன் கிழமையில் இன்னொரு பத்திரிகையில் ஒரு தொடர்கதை, வெள்ளி, சனிக்கிழமைகளில் பிறிதும் சில பத்திரிகைகளில் சில தொடர்கதைகள்...

அதற்கும் முந்தைய காலத்தில் இவ்வளவு பத்திரிகைகளும் இருந்ததில்லை.

என்பதாலேயே தொடர்கதைகளும் கம்மியாகவே இருந்திருக்கும் என்பதால் தொடர்ந்து ஆவலுடன் வாசிக்கப்பட்டன.

சமீப காலங்களில் பத்திரிகை வாங்குபவர்கள் எண்ணிக்கைக் குறைந்துள்ளது என்று நினைக்கிறேன். ஓரிரு தொடர்கதைகளும் சில பத்திரிகைகளில் வருகின்றன. சினிமா விகடனில் ஒரு வரலாற்றுத்தொடர்...  கல்கியில் 'மயங்கும் வயது' என்றொரு தொடர்கதை....  மற்ற பத்திரிகைகள் விவரம் தெரியவில்லை.

என்னுடைய சந்தேகம், தொடர்கதைகளுக்கு முன்பிருந்த வரவேற்பு இப்போது இருக்கிறதா? பத்திரிகைகளே இப்போதெல்லாம் தொடர்கதைகளை வெளியிடத் தயங்குகின்றன என்று நினைக்கிறேன்.

கல்கியில் 'பொன்னியின் செல்வன்' மீள் மீள் மீள் வெளியீட்டைத் தொடர்ந்து இப்போது 'அலை ஓசை' ஆரம்பிக்கப் போகிறதாம்.

வாராவாரம் காத்திருந்து தொடர்ந்து படிக்கும் பொறுமை இன்றைய வாசகர்களிடம் இருக்கிறதா? ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி முழு புத்தகமாக வாசிக்கத்தான் தயாராய் இருப்பார்கள் வாசகர்கள் என்று நினைக்கிறேன்.  போதாதற்கு தொலைக்காட்சித் தொடர்கள்..  ஆண்டராய்ட் ஃபோன்கள்..

என்று முகநூலில் பகிர்ந்திருந்தேன்.

இதற்கு பதில் அளித்திருந்த சேட்டைக்காரர் வேணுகோபால் "நான் சொல்றது கொஞ்சம் ஓவரா இருக்குதோன்னு கூடத் தோணும். என்னைப் பொறுத்தவரையில், கடந்த 25/30 வருடங்களில் நாம் இழந்த பல சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கு முழுமுதற்காரணம் - கூட்டுக்குடும்பங்களின் தோல்வியென்று சொல்லுவேன். பண்டிகைகள் கொண்டாடுவதைச் சுருக்கினோம்; வீட்டு விசேஷங்களின் நேரத்தைச் சுருக்கினோம்; உறவினர்களோடு செலவழிக்கிற நேரத்தைச் சுருக்கினோம். அவரவர் வீடுகளில் வசிக்கிற ஏரியாவையே சுருக்கி விட்டோம். இதில் இடவசதி காரணமாகப் பல விஷயங்களை நாம் உதாசீனப்படுத்தி விட்டோம். அவற்றில் ஒன்றுதான் இந்த வாரப்பத்திரிகைகளும். நான் சிறுவனாக இருந்தபோது ஆனந்த விகடன், குமுதம், கல்கி, கலைமகள் வந்ததும் ஒரு மினி கலவரமே நடக்கும். காரணம், ஒவ்வொருவருக்கும் பிடித்தமான ஒவ்வொரு அம்சம் ஒவ்வொரு பத்திரிகையிலும் இருக்கும். எங்க அப்பா பரணீதரன் கட்டுரைகள் வாசிப்பார்; எங்கம்மா இந்துமதி, சிவசங்கரி, லட்சுமி போன்ற நாவலாசிரியைகளின் சிறுகதை/ தொடர்கதைகளுக்காக வாசிப்பார். நான் ஓவியர் ம.செ, மாருதி, ஜெ. ராமு போன்றவர்களின் சித்திரங்களுக்காக வாசிப்பேன். இப்படியே மதன் கார்ட்டூன், அட்டைப்பட ஜோக், முப்பத்தி ஆறாம் பக்க மூலை, சினிமா விமர்சனம் என்று ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொருவர் விசிறிகளாக இருந்தார்கள். ஆனால், இப்போது எப்படி நாங்கள் வெவ்வேறு பகுதிகளில் இருக்கிறோமோ அதேபோல பத்திரிகைகளும் இப்போது தனித்தனியாகி விட்டன. ஆன்மீகத்துக்கு என்றே சுமார் 40 வாரப்பத்திரிகைகள் வருகின்றனவாம். அரசியலைத் தனிமைப்படுத்தி ஒதுக்கி அதற்கு ஒரு வாரப்பத்திரிகை. சினிமாவுக்கு என்றே எத்தனை பத்திரிகைகள்? இப்போது ஒரு குடும்பத்தில் இருக்கிறவர் அத்தனை பேருக்கும் பிடித்தமான விஷயங்கள் வேண்டுமென்றால் குறைந்தது ஒரு 10 வாரப்பத்திரிகையாவது வாங்க வேண்டும். நாம் தான் சுருக்கத் தொடங்கி விட்டோமே? செலவைச் சுருக்குகிற சாக்கில் பத்திரிகை வாங்குவதை நிறுத்தி விட்டோம். அப்புறம் தரம்? அனேகமாக பக்தி பத்திரிகைகள் தவிர்த்துப் பார்த்தால் எல்லா வாரப்பத்திரிகைகளின் அட்டைகளிலும் நடிகைகள் தங்களது க்ளிவேஜ் காட்டுகிறார்கள். ஒரு காலத்தில் 7/8 பக்கங்களுக்கு இருந்த சிறுகதைகள் சுருங்கி ஒரு பக்கத்துக்குக் கதைகள் என்ற ஒரு வினோதமான வியாதி வந்திருக்கிறது. மதன் போல அரசியல் கார்ட்டூன் போட ஆளில்லை. சுஜாதா, ஜெயகாந்தன், சாண்டில்யன், புஷ்பா தங்கதுரை அளவுக்கு ஆர்வத்தைத் தூண்டக்கூடிய எழுத்தாளர்கள் இல்லை. மொத்தத்தில் ஈயச்சொம்பு ரசத்தையும், மண்சட்டிக் குழம்பையும், வெண்கலப்பானைச் சோற்றையும் இழந்ததுபோலவே இன்றைய பத்திரிகைகளும் குக்கர், ஓவன் போல அன்னியத்தனமாகி விட்டன. ரொம்ப அதிகமாக எழுதிட்டனோ என்று யோசிக்கும்போதுதான், அட, இன்னும் நிறைய விட்டு விட்டேன் என்பதும் உறைக்கிறது. ஆதலினால் இத்தோடு போதும்."  என்று சொல்லி இருக்கிறார்.

"இந்த கால வாரப் பத்திரிகைகள் கம்யூனிஸ பாணியிலேயே இருப்பதால் படிக்கவே தோன்றுவதில்லை."  என்றார் சாமிநாத பாரதி.

"தொடர்கதைக்கான எதிர்பார்ப்பு கதையின் போக்கு பொறுத்து அமையுமென்பது என் கருத்து. வாசிக்கும் ஆர்வம் உள்ளவங்களுக்கு காத்திருப்பு ஒரு பொருட்டல்ல" என்றார் ;காணாமல் போன கனவுகள்' ராஜி.

"முன்பு நான் உட்பட என்னை சுற்றி இருந்தவர்கள் தொடர்கதை வாசிப்பதில் காட்டிய ஆர்வத்தில் இப்பொழுது என்னை சுற்றி இருப்பவர்கள் ஒரு சதவிகிதம் கூட இல்லை.முன்பு வந்த வார மாதாந்திர பத்திரிகைகள் வாங்கி தொடர்கதைகளை கிழித்து பைண்டிங் பண்ணி பத்திரப்படுத்தி வைப்பேன்.சிறுகதைகளையும் அப்படியே.மங்கையர் மலர் மங்கை போன்றவற்றை பனிரெண்டு இதழ்களையும் கோணி தைக்கும் ஊசியால் ஒன்று சேர்த்து வருடங்களை எழுதி பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.ஊரில் உபயோகம் இல்லாத ஒரு அறையில் முழுக்க முழுக்க நான் சேமித்த புத்தகங்கள்.மாதாமாதம் புத்தகம் இருக்கும் அறைக்கு சென்று அனைத்தையும் வரிசைப்படுத்தி என் புத்தகங்களின் பெயர்கள் அடங்கிய லிஸ்டை பார்த்து எல்லாம் சரியாக உள்ளதா என்று கணக்கிட்டு இரவல் கொடுதவர்களிடம் ஞாபகமாக திருப்பி வாங்கி..இதை எல்லாம் ஆத்மார்த்தமாக செய்து வந்தேன்.அன்று பொக்கிஷமாக தெரிந்தது இன்று பொருட்டாக தெரிய வில்லை.
புத்தகம் இருந்த அறைக்குள் சென்றே வருடக்கணக்காகிறது.இன்று ஒரு பக்கத்தை படிப்பதற்குள் விழி பிதுங்குகிறது."  என்றார் பதிவர் சஹானா.


"இப்பவும் இணையத்தில் பல தொடர்கதைகள் போகுது. நான் ஆர்வமாகத்தான் படிக்கின்றேன். பெண்மை, சில்சே, முத்துலக்சுமிராகவன் நாவல்ஸ் ஷிறிகலா நாவல்ஸ், செந்தூரம் போன்ற தளங்களில் அருமையாக தொடர்கதைகளை புதிய எழுத்தாளர்கள் தொடர்கின்றார்கள்....  வாராந்திரிகள் வாங்கும் சூழல் இல்லை. முன்னர் அப்பாஇங்கே இருந்தப்போது வாராவாரம் இந்தியன் பொருட்கள் விற்க்யும் கடை செல்வார். எல்லா வார இதழ்களும் ஆர்டர் செய்து விடுவதனால் எடுத்து வைத்திருப்பார்கள். இப்போது நான் அப்படி செல்ல முடிவதில்;லை. ஹோட்டலுக்கு பொருட்கள் மொத்தமாக ஆர்டர் செய்வதில் பெரும்பாலானவை ஹோட்டலில் வந்து இறக்குவாங்க அதனால் எப்போதேனும் செல்லும் போது தான் இதழ்கள் க்டையில் கிடைக்கும்.   தொடர்கதைகளுக்காகவே நான் ஒரு காலத்தில் பாக்யா இதழை வாங்கி இருக்கின்றேன். 90 களில் மிக அருமையான தொடர்கதைகளை சஸ்பென்சோடு எழுதுவார்கள். குமுதம், ஆவிகடன், இதயம் கூட அப்படித்தான்" என்றார் நிஷாந்தி பிரபாகரன்.

"அடடா..... ஒன்றை மறந்து விட்டோம் Sriram Balasubramaniam.....இந்த தொலைக்காட்சி தொடர்கள் வந்த பின்பு தான், வாசிப்பு தன்மை குறைந்து விட்டது என்று சொல்ல வேண்டிய நிலை. அது மட்டுமன்றி முன்பு குமுதம் / ஆனந்த விகடன் / குங்குமம்...என்றால் அது மட்டுமே....ஆனால் இன்று அவர்கள் பதிபகமே துணையாக பல நாளிதழ்களை வெளியிடுவதால் பலவாறாக வாசிப்பு தன்மை பிரிந்து விடுகின்றது. 

சற்றே கவனியுங்கள் நீங்கள் அவள் விகடன் படிப்பதுண்டா?

இன்னும் அவன் விகடன் எப்போ வரும் என்று நான் காத்திருப்பதால்.... இப்போது எதையும் வாசிப்பதில்லை..😂😂😂😂

அது மட்டும் இல்லாமல் supplimentry வேறு செய்தித்தாள்களில்.....

மற்றையது நம் படிப்பு சார்ந்த பல தகவல்கள் கொண்ட பதிப்புக்களை பெற்று வாசிப்பதும் நேரமின்மை உண்டாக்குவதால்...... Updated ஆக இருக்க வேண்டிய கட்டாயம்....இருக்கும் சூழ்நிலை காரணமாக..?....

உங்கள் வீட்டில் எத்தனை பிள்ளைகள் நன்கு தமிழ் வாசிப்பார்கள்....... சற்றேனும்.... சிந்திப்பீர் ஆக....

ஆக மொத்தம் ........ஒரே confusion....."   என்றார் வாசகர் காதர் கலிலூர் ரஹ்மான்.



இப்போ தொடர்கதை எப்படின்னு கேக்கறாங்க...  அந்தக் காலம் மாதிரி வருமா தம்பி...?



=================================================================================================

"குறைந்தபட்சம் பொறுமையாகவாவது இருந்திருக்க வேண்டும்..."  

எனக்கும் இந்த உணர்வுகள் ஏற்பட்டன.  அப்போதைய பொழுதின் அலுப்பில் தெரிவதில்லை.  இழந்த பின் தெரிகிறது.  இல்லை என்றானபின் தெரிகிறது.

முதுமை - நமக்கும் வரும்.  






கண்ணில் மழை.  காலம் கடந்த ஞானோதயங்களால் பயன் என்ன?

==========================================================================================================


ஆற்றோடு சென்ற துக்கம் 






"நீரில் மூழ்கி நினைப்பொழிந்ததும் பசித்த வயிறு புசிக்கக் கேட்கிறது..  தப்பென்ன... அவன் கிடக்கான்...   நீ போய் எடுத்து வாம்மா.."


=====================================================================================================

2014 ஆகஸ்ட் நான்காம் தேதி ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததுதான் இதுவும்!  



"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு"
மண் வேறு மணல் வேறு. மண் கேணி நிலையாக இருக்கும். ஆனால் மணற்கேணி அடிக்கடி சரியும். அதன் பயனாகிய நீரை அடைய விரும்பினால் அடிக்கடித் தோண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அது போல ஒருவர் கற்கக் கற்க அறிவு பெருகும். பெற்ற அறிவை நிலை நிறுத்த வேண்டுமானால் திரும்பத் திரும்பக் கற்க வேண்டும்.
இதைச் சொன்னவர் முன்னாள் தலைமை நீதிபதி திரு மு மு இஸ்மாயில் அவர்கள்.
மற்றவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்? இதோ...

திரு மு.வரதராசனார் உரை
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

திரு மு.கருணாநிதி உரை
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

திரு சாலமன் பாப்பையா உரை
மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.

திரு.பரிமேலழகர் உரை
மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் – மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும், மாந்தற்கு அறிவு கற்றனைத்து ஊறும் – அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும். (ஈண்டுக் ‘கேணி’ என்றது, அதற்கண் நீரை. ‘அளவிற்றாக’ என்றது, அதன் அளவும் செல்ல என்றவாறு. சிறிது கற்ற துணையான் அமையாது, மேன்மேல் கற்றல் வேண்டும் என்பதாம். இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின், மேல் ‘உண்மை அறிவே மிகும்’ (குறள் .373) என்றதனோடு மலையாமை அறிக.)


திருக்குறள் தனபாலன் என்ன சொல்வார்?   

நீதிபதி திரு மு மு இஸ்மாயில் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து...

=========================================================================================================


"இந்த வாரம் இது போதும்.  நிறுத்திக்கோ ஸ்ரீராம்..  அடுத்த வாரம் பக்ரீத் அன்று மீதியைத் தொடர்ந்து கொள்..."

125 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  2. ஹை! மீ த ஃபர்ஸ்ட்!!! விழா எடுக்க வேண்டியதுதான்.😁😁

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். பத்துப் பதினைந்து நிமிடம் முன்னதாகவே வந்திருக்கிறீர்கள்!!

      நீக்கு
  3. இதெல்லாம் எப்போ முகநூலில் பகிர்ந்தீர்கள்? எனக்குத் தெரியவில்லை. மற்றவற்றிற்கும் இதற்கான பதில்களுக்கும் பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா அக்கா.. தொடர்கதை பற்றிய பதிவு இந்த வருடம் ஜூலை 30 ஆம் தேதி, சுகி சிவம் பற்றிய பதிவு 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12, "அழுது கொண்டிருந்த' கவிதை 2014 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி, ஆகிய நாட்களில் பகிர்ந்தேன்.

      நீக்கு
    2. ஶ்ரீராம், தொடர்கதை பற்றிய பதிவை நான் பார்க்கலை! என்னோட டைம்லைனுக்கு வரலை போல! மற்றவையும் பார்க்காதவையே! இப்போல்லாம் ரிஷபன் சாரோடது எதுவுமே வரதில்லை. அங்கே அவரோட டைம்லைனுக்குப் போய்த் தான் பார்க்கிறேன்.

      நீக்கு
    3. கீதா அக்கா... ரிஷபன் ஸார் பெயரைத்தொட்டு அதில் வரும் இரண்டு ஆப்ஷன்களில் Friend என்பதைத் தொட்டு அதில் வரும் க்ளோஸ் பிரென்ட் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அவர் பாஸ் செய்த வேகத்தில் அடித்து உங்களுக்கு நோட்டிபிகேஷனாய் வந்து விடும்.

      நீக்கு
    4. இது நான் அறிந்தது இல்லை. இனி செய்கிறேன்.

      நீக்கு
  4. இன்னிக்கு பானுமதி ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு? அட! நான் சீக்கிரமே இணையத்துக்கு வந்தாலும் இங்கே வரலை. மெதுவாப் போயிக்கலாம்னு இருந்துட்டேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓகே, அக்கா... அப்புறம் வந்து படியுங்கள்... இன்றுதான் முருங்கைக்காய்க்குழம்பு, வறுத்து அரைத்த மிளகு ரசம், பீன்ஸ், காரட், பட்டாணி போட்டு வெங்காயம் சேர்த்து பச்சைமிளகாய், இஞ்சி, தேங்காய் போட்ட கறி சமைச்சுட்டீங்களே...

      நீக்கு
    2. ஆஹா! அங்கே வந்து பார்த்துட்டீங்க என்பதை நானும் பார்த்தேன். :)

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  6. கண்ணாம்பாள் படம் போட்டு செய்திகள் அருமை.

    பதிலளிநீக்கு
  7. நான் ம.மலர், குமுதம் சினேகிதி இரணடும் வாங்குகிறேன்.ஒன்றில் இந்திரா சௌந்திரராஜனனும், மற்றதில் ப.பிரபாகரும் தொ.க.எழுதுகிறார்கள். படிக்கிறேன். ஆனால் சிறு வயதில் இருந்த வேட்கை இல்லை. காரணம் ஒன்று, வயத. இரண்டு, நிறைய கதைகளை படித்து விட்டதாலோ என்னவோ ஒரு கதையை படிக்க ஆரம்பிக்கும் பொழுதே எப்படி முடியும் என்று கணித்து விட முடிகிறத. மூன்றாவது, தொடர்கதைகளுக்கென்று ஒரு சலிப்பூட்டும் ஃபார்மெட் இருக்கிறது. நல்ல எழுத்தாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா... நான் கல்கி, துக்ளக், சினிமா விகடன் வாங்குகிறேன். அதில் வரும் தொடர்கதைகள் படிப்பதில்லை. சில தொடர் கட்டுரைகளை அவ்வப்போது படிப்பதுண்டு.

      நீக்கு
  8. வேணுகோபாலன் அவர்கள் நன்றாக சொல்லி இருக்கிறார்.
    பத்திரிக்கைகள் எல்லோருக்கும் பிடித்த மாதிரி முன்பு ஒன்று இரண்டு இருந்தது. குடும்பத்திற்கு ஒரு இரண்டு, வாங்கினால் போதும்.
    இப்போது யாரும் எந்த புத்தகத்திற்கும் நிரந்தர வாசகர் இல்லை என்ற நிலை.
    ரயில் பயணங்களுக்கு நிறைய புத்தகம் வாங்குவார்கள் , இப்போது அதுவும் இல்லை, படிக்க நிறைய வசதிகள் வந்து விட்டது.
    மி புத்தகம் அது இது என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா.. குமுதம், விகடன் பத்திரிகைகள் வந்து கொண்டிருந்த காலத்தில் திடீரென இதயம் பேசுகிறது என்று ஒரு புதுப் பத்திரிகையாம், குங்குமம் என்று ஒரு புதுப் பத்திரிகையும் என்றெல்லாம் சொன்னபோது கடையில் சென்று வாங்கும் ஆர்வம் வந்து உடனே சென்று வாங்கிய நினைவு இருக்கிறது.

      வலம்புரி ஜானை ஆசிரியராகக் கொண்டு 'தாய்' பத்திரிகை வந்தது. சற்றே தடிமனாக இருக்கும்.

      நீக்கு
  9. நான் இப்போது எந்த பத்திரிக்கையும் வாங்குவது இல்லை.
    சுகிசிவம் அவர்கள் எழுதியது ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க உதவும்.
    நீங்கள் எழுதியது யதார்த்தம்.
    நீதி அரசர் அவர்கள் எழுதியது அருமை.
    இந்த வாரம் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா வாரங்களிலும் அருமை தான்!..

      அனுஷ்கா, தமன்னா - இல்லாவிட்டாலும் அருமையோ அருமை!..

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார்... நீங்களும் தமன்னாவை வம்புக்கு இழுக்க ஆரம்பிச்சாச்சா?

      அது சரி... எப்போ அடுத்தபடி ஓவியர் மாருதியின் படத்தை (அவர் வரைந்த பெண்கள் முகம்) போட்டு இடுகை எழுதப்போறீங்க? தீபாவளிக்குத்தானா?

      நீக்கு
    3. ஆகா...

      கூடிய விரைவில் -
      மாருதி அவர்களின் கை வண்ணத்துடன்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    4. //நான் இப்போது எந்த பத்திரிக்கையும் வாங்குவது இல்லை.//

      நானும் நிறுத்தி விடலாமா என்றுதான் பார்க்கிறேன் கோமதி அக்கா.

      நீக்கு
    5. /எல்லா வாரங்களிலும் அருமை தான்!.. அனுஷ்கா, தமன்னா - இல்லாவிட்டாலும் அருமையோ அருமை!../

      அது துரை ஸார்.. மற்ற கவர்ச்சிகள் வொர்கவுட் ஆகாவிட்டால் அதாவது பதிவைக் காப்பாற்றட்டுமே என்றுதான்... ஹிஹிஹிஹி...

      நீக்கு
    6. // நீங்களும் தமன்னாவை வம்புக்கு இழுக்க ஆரம்பிச்சாச்சா? //

      தமன்னாவோட அழகு செய்யற வேலை அது நெல்லை.

      நீக்கு
  10. படங்களை தேர்ந்து எடுத்து தேடி போட்டது அருமை.

    பதிலளிநீக்கு
  11. சுகி சிவம் அவர்களின் கருத்து முன்பே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும் பொழுதும் யோசிக்க வைத்தது. ஆற்றோடு போகும் துக்கம் நிதர்சனம்.
    'தொட்டணைத்தூறும் மணற்கேணி.."குறளுக்கு எம்.எம். இஸ்மாயில் உரை சிறப்பு.
    மொத்தத்தில் நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  12. தொடர்கதைகளுக்காகவே வார இதழ்கள் வாங்கியது ஒரு காலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார். இப்போது தொடர்கதைகள் மேல் அவ்வளவு நாட்டமில்லை என்பதைத்தான் சொல்லவந்தேன்.

      நீக்கு
  13. காலை வணக்கம் ஸ்ரீராம்.

    வாரப் பத்திரிகைகளே இப்போது படிப்பதில்லை - அதனால் தொடர்கதை படிக்க வாய்ப்பிருப்பதில்லை. முன்பு அப்பா அலுவலகத்தில் இருக்கும் பத்திரிகை குழுமத்திலிருந்து புத்தகங்கள் எடுத்து வருவார் - அது வீட்டுக்கு வருவதற்கு வெளிவந்து ஒரு வாரத்திற்கு மேலாகும்! புத்தகங்கள் - வாரப் பத்திரிகைகள் வாங்கும் பழக்கமே வீட்டில் கிடையாது. தில்லி வந்த பிறகு சில காலம் வாங்கியதுண்டு. இப்போது அதுவும் கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்... ஆமாம், நாம் வாங்கும் புத்தகங்கள் தவிர சில புத்தகங்கள் பக்கத்துக்கு வீடுகளிலும், அப்பா அலுவலகத்திலிருந்தும் எடுத்து வந்து படித்ததுண்டு. நம்மை மதிக்க மாட்டார்கள். பெரியவர்கள் படிக்கும் முன் கிடைக்கும் இடைவெளியில் வேகமாகப் படித்துவிட வேண்டும்!

      நீக்கு
  14. நானும் காத்திருந்து, தொடர்கதை வாசிப்பாளனே முன்னொரு காலத்தில்...

    பதிலளிநீக்கு
  15. சுகி சிவம் அவர்கள் சொன்ன விஷயம் - ம்ம்ம்ம்.... நாம் எப்படி இருக்கப் போகிறோமோ என நினைக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் வெங்கட்.. கொடுக்கும் வகையிலும், வாங்கும் வகையிலும்.. இரண்டு நிலைகளிலுமே...

      நீக்கு
  16. எளவு.. இலையைப் போடடி! ஹாஹா... நிதர்சனம்.

    என்னுடைய வலைப்பூவில் ஆரம்ப காலத்தில் எழுதிய “பிரெட் பகோடா” பதிவு நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரெட் பக்கோடாவா? அது என்ன?

      நீக்கு
    2. ப்ரெடை முக்கோணத் துண்டங்களாக வெட்டிக் கொண்டு பஜ்ஜி மாவில் முக்கிப் போடுவது! இதை ஸ்டஃப் செய்தும் போடலாம். பனீர் ஸ்டஃப், உ.கி.ஸ்டஃப், பட்டாணி ஸ்டஃப், காலிஃப்ளவர் ஸ்டஃப் என விதவிதமான ஸ்டஃப் செய்தும் போடலாம். சீஸைக் கட் பண்ணி இரண்டு துண்டங்களுக்கு நடுவே வைச்சு அதை அப்படியே பஜ்ஜி மாவில் தோய்த்தும் போடலாம் சீஸ் ப்ரெட் பகோடா! வடக்கே தூள் பஜ்ஜியைத் தான் பஜியா என்பார்கள். இப்படிப் பொரிச்சு எடுப்பதெல்லாம் பகோடா தான்!

      நீக்கு
    3. பிரெட் பகோடா என்றால் என்ன என்று தெரியும் கீதா அக்கா.. அவர் அதை இந்தக் குறிப்பிட்ட கவிதைக்குப் பொருத்தமாய் ஏன் சொல்கிறார் என்பதுதான் என் கேள்வி!

      நீக்கு
    4. ஓஓ,ஓகே, இஃகி, இஃகி. நான் ஓர் அ.கு. :)

      நீக்கு
    5. நீங்கள்தான் கீதாக்கா நூறாவது பின்னூட்டத்துக்குச் சொந்தக்காரர்!

      நீக்கு
  17. ஆஹா இன்னிக்கு தமன்னா, அனுஷ் படம் எல்லாம் இல்லாம, கண்ணாம்பாள் படம்! :) நடத்துங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்.... அனாவசியச் சண்டை இல்லை பாருங்கள்! அதுதான்!

      நீக்கு
  18. போதாதற்கு தொலைக்காட்சித் தொடர்கள்.. ஆண்டராய்ட் ஃபோன்கள்..

    இது காலத்தின் கட்டாயம் அல்லவா...?
    வேகமாக ஓடும் காலத்தில் இது அத்தியாவசிய
    தேவையாகி விட்டதே....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அஜய் சுனில்கர்... காலத்தின் கட்டாயம்தான். ஆனால் நாம் இழப்பவை?

      நீக்கு
  19. காலம் கடந்த ஞானோதயம் - கமென்ட் ரசிக்கும்படி இல்லை. பெரியவங்க தன் அனுபவத்தைச் சொல்வது மற்றவங்களுக்குப் படிப்பினையாக இருக்குமே என்ற ஆதங்கத்தில்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காலம் கடந்த ஞானோதயம் - கமென்ட் ரசிக்கும்படி இல்லை//

      சம்பவம் நிகழ்வுறும்போது நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை அதை என்பதைத்தான் சொன்னேன் நெல்லை. அந்த நிலை இப்பவும் தொடர்ந்து கொண்டிருக்குமானால் அடுத்தவர்களுக்கு படிப்பினை தர நாம் தயாராக இருக்க மாட்டோம்! என் அம்மா தனது இறுதிக்கு காலங்களில் இருக்கும்போது பின்னர் அம்மா மேல் புத்தகங்கள் எல்லாம் எழுதிய அப்பா அப்போது சிலசமயங்களில் பொறுமை இழந்த கணங்கள் உண்டு.

      நீக்கு
  20. தொடர்கதைகளைப் பற்றி எழுதிய பகுதி நல்லா வந்திருக்கு. சேட்டைக்கார்ர் நன்றாக அலசியிருக்கார். நிறைய தொடர்கதைகளை 79-83 காலகட்டங்கள்ல ஆர்வமாக படிச்சிருக்கேன். அப்போ படிப்பதற்கு ஏற்ற தீனியாக நல்ல பத்திரிகைகள் இருந்தன. விகடன், குமுதம், சாவி, குங்குமம்,மணியன், துக்ளக், கல்கி, கல்கண்டு (அந்த ஆர்டர்ல). நல்ல பத்திரிகை ஆசிரியர்கள் ஒரு பத்திரிகைக்கு மிக அவசியம். சாவி, எஸ்.பாலசுப்ரமணியம், ஏ.எஸ்.பி (ராகி,சுந்தரேசன் போன்ற குமுதம் ஜாம்பவான்கள்), மணியன், மதன் போன்ற பலர். அவங்களும் நிறைய நல்ல எழுத்தாளர்களை உபயோகப்படுத்திக்கிட்டாங்க. கி.ராஜநாராயணன் போன்ற பலர். அதிலும் ஜூவில புதுப் புது எழுத்தாளர்கள். இதெல்லாம் தொடரை வாசிப்பதை ஊக்குவித்தது. இப்போதும் தொடர்களை (அஅனுபவத் தொடர்களை) மிகவும் ரசித்துப் படிப்பேன் (குங்குமத்தில் வந்த வரும் நல்ல தொடர்கள் நாஞ்சில் நாடன் போன்றவர்கள் எழுதியது, நக்கீரன் சினிமா அனுபவத் தொடர்கள், குமுதம் சோ, சாரு நிவேதிதா போன்று பல). ஆனால் அரிசிக்காக சில நெல்மணிகளைப் பொறுத்துக்கொண்ட காலம் போய், சில அரிசிகளுக்காக நிறைய தவிடுகளைக் கொண்டிருக்கும் பத்திரிகைகளை வாங்கவே இஷ்டம் வரலை. முக்கியமான தொடர்கள் புத்தகமாக வரும்போது வாங்குவேன். ஆனா தொலைக்காட்சி எப்போவும் கையில் வைத்துப் படிக்கும் புத்தகத்தின் அருகில்கூட வரமுடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @நெல்லை.. நானும் அந்தக் காலத்தில் படிக்காத தொடர்கள் இருந்திருக்காது. அப்போது எழுதிய அனைவருமே பரிச்சயமான, பிரபல எழுத்தாளர்கள். நான் சொல்லி இருப்பது பெரும்பாலும் கதை, நாவல்கள் பற்றிதான். கட்டுரைகள் வேறு ரகம்.

      நீக்கு
  21. இப்போதுள்ள பசங்களுக்கு கேணி என்றாலே தெரியுமான்னு தெரியலை. நான் வைகையிலும் (பரமக்குடி), தாமிரவருணியிலும் ஊற்று தோண்டியிருக்கேன். தோண்டத் தோண்டத்தான் நீர் ஊற்று பெருகும்.

    தி.தனபாலன் இதற்கும் ஒரு இடுகை வெளியிடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @நெல்லை - தனபாலன் கட்டுரை தயாராவதாகச் சொல்லி இருக்கிறார்.

      நீக்கு
  22. தொடர்கதை எழுத்தாளர்களில் நான் மயங்கிப் படித்தது பல. சிவசங்கரி, சுஜாதா, அனுராதா ரமணன், ராஜேஷ் குமார் போன்ற பலர் அதில் அடக்கம். சமீபத்தில் சோவின் குமுதம் தொடர், சாருவின் கட்டுரைகள் மனதைக் கவர்ந்தவை. குங்கும்ம் இன்னும் ஓரளவு தரத்துடன் இருக்கு என்பது (அரசியல் கட்டுரைகள் தவிர) என் அபிப்ராயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ராஜேஷ் குமார் அதிகம் படித்ததில்லை. ஏதோ ஒன்றிரண்டு படித்திருப்பேன். அதே போலதான் ப கோ பி யும். மறுபடியும் கதைகள் வேறு, கட்டுரைகள் வேறு. சுவாரஸ்யமான கட்டுரைகளை பெரும்பாலும் தவற விடுவது இல்லை இப்போதும்.

      நீக்கு
  23. தொடர்கதைகள் குறித்து சேட்டைக்காரர் சொல்லியிருப்பது சரியே.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  24. சுகிசிவம் அவர்கள் சொன்னதாக நீங்கள் முகநூலில் பகிர்ந்ததை, சற்றுமுன் தான் வாசித்தேன்... (ஜோதிஜி அவர்கள் பகிர்ந்து கொண்டு இருந்தார்...) அவர் சொன்னது உருக வைத்தது...

    இரு அதிகாரங்களை இணைத்து பதிவுகளை எழுதிக்கொண்டு இருக்கிறேன்... அதை எவ்வாறு இனணத்தேன் எனும் பதிவில், இந்த குறளை பயன்படுத்தி உள்ளேன்...

    இந்த குறளுக்கு பல உதாரணங்கள் சொல்லலாம்... சுருக்கமாக ஒன்றே ஒன்று :-

    குறளை மேலோட்டமாக புரிந்து கொள்பவர்களுக்கு, இந்த குறளே சிறந்த மருந்து...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தனபாலன். ஜோதி ஜி ஷேர் செய்திருப்பது ஏனோ எனக்கு நோட்டிபிகேஷன் வரவில்லை. இன்றுதான் ஷேர் செய்திருக்கிறாரா? இப்போது ப்ளஸ்ஸில் இந்தப் பதிவில் வந்திருக்கும் இன்னொரு கவிதையைப் பகிர்ந்திருந்தார் பார்த்தேன். ஆனால் பின்னூட்டம் இடமுடியவில்லை.

      ஏற்கெனவே இந்தக் குறளைச் சேர்த்து எழுதி வைத்து விட்டீர்களா?

      நீக்கு
    2. ஜோதிஜி பகிர்வை படித்ததும் அது உங்கள் அனுபவமோ என்று நினைத்தேன்..கடைசியில்தான் புரிந்தது அது சுகி சிவத்தினுடையது என்று...அவர் கட்டுக்கதைகளை அழகாக அளந்துவிடுவதில் மிக திறமை சாலியானவர்

      நீக்கு
    3. மற்ற சமயங்களில் எப்படியோ, சுகி சிவம் இங்கு சொல்லி இருப்பது அவர் தாய் மறைந்த சமயம் கல்கியில் சொல்லி இருந்தது.

      நீக்கு
  25. தொடருக்காகக் காத்துக் கிடந்தது எனில் 67/68 களில் கல்கியில் வெளியான பொன்னியின் செல்வனுக்குத்தான்...

    வினு எனும் பெயரில் ஓவியர் சித்திரங்களைத் தீட்டியிருப்பார்...

    அதன் பிறகு
    அர்த்தமுள்ள இந்து மதத்திற்குத்தான்...

    மற்றபடி சுஜாதாவின் தொடர்களில் மயங்கியதும் உண்டு...

    அகிலன், ஜகசிற்பியன், ஜயகாந்தன், சாவி, லக்ஷ்மி, ராஜம் கிருஷ்ணன், ராஜ நாராயணன் ஆகியோரின் நாவல்களை நூலகத்தில் எடுத்து வாசித்த நாட்கள் பசுமையானவை.

    இடையில்
    சிவசங்கரி, வாசந்தி, பாலகுமாரன் ..
    இவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்..

    ரமணி சந்திரன், குரும்பூர் குப்புசாமி ஆகியோரையும் மறக்க இயலாது...

    வசீகரித்த எழுத்துக்கள்
    சு.சமுத்திரம் அவர்களுடையவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு முன்னரே மணியம் கைவண்ணத்தில் பொன்னியின் செல்வன் வெளி வந்திருக்கிறது. என் அப்பா பள்ளி நூலகத்தில் இருந்து எடுத்து வந்து நான் படிச்சிருக்கேன். ரொம்பச் சின்ன வயசிலேயே இதெல்லாம் படிக்க ஆரம்பிச்சாச்சு. என்னை இந்த விஷயத்தில் ஊக்குவித்தவர் என் அம்மாவின் அப்பா (என் தாத்தா) மிகப் பெரிய, பழமையான பல புத்தகங்களை வைத்திருந்தார்.

      நீக்கு
    2. கல்கி பத்திரிகை நஷ்டத்திலிருந்து மீண்டு வந்த புதுசில் விற்பனையை அதிகரிக்க வேண்டி அறுபதுகளில் தான் பொன்னியின் செல்வனை மீண்டும் இரண்டாம் முறையாக வெளியிட்டார்கள். அதன் பின்னர் மூன்றாம் முறை வந்தப்போவும் எடுத்து வைச்சிருந்தேன். சிவகாமியின் சபதம், அலை ஓசை எல்லாமும் வந்தது! பார்த்திபன் கனவு மட்டும் மீண்டும் போடலை என நினைக்கிறேன். சிவகாமியின் சபதத்தின் தொடர்ச்சி தான் பார்த்திபன் கனவு என்றாலும் முதலில் வந்தது என்னமோ பார்த்திபன் கனவு தான் என்று அம்மாவும், அப்பாவும் சொல்வார்கள்.

      நீக்கு
    3. வாங்க துரை ஸார்..

      சு சமுத்திரம்,ஒன்றிரண்டுதான் படித்திருக்கிறேன். கிரா படித்ததே இல்லை. மற்றவை எல்லாம் ஸேம் பின்ச்தான்!

      நீக்கு
    4. //அதற்கு முன்னரே மணியம் கைவண்ணத்தில் பொன்னியின் செல்வன் வெளி வந்திருக்கிறது./

      ஆமாம் கீதா அக்கா... எங்கள் வீட்டிலும் அதுதான் பைண்ட் செய்து வைத்திருந்தார் அப்பா.

      நீக்கு
    5. //சிவகாமியின் சபதம், அலை ஓசை எல்லாமும் வந்தது! பார்த்திபன் கனவு மட்டும் மீண்டும் போடலை என நினைக்கிறேன்.//

      இதெல்லாம் எங்கள் வீட்டிலும் இருந்தது. இப்போது சிலவற்றை கரையான் அரித்து விட்டது. சிலவற்றை வாங்கிச் சென்றவர்கள் திரும்பித் தரவில்லை.

      நீக்கு
    6. 1972ல், நான் 3-4வது படித்துக்கொண்டிருந்தபோது, கல்கியில் சிவகாமியின் சபதம் வினு ஓவித்தில் வந்தது என்று ஞாபகம். படங்களுக்காக நான் பார்ப்பேன். அதில் ஓவியம் உள்ள பகுதி சில சமயம் அட்டைபோல் வந்தது என்றும் ஞாபகம். தவறா இருக்கலாம். அப்போதே அது இரண்டாவது முறை. கல்கி, இந்த 3 தொடர்கதைகளை வைத்தே 3-4 முறை ரிபீட் செய்துவிட்டது. மணியம், வினு?, .. பத்மவாசன்..

      நீக்கு
  26. எழவு வீட்டி கதை இப்படிதான். இப்பலாம் இறந்தவர் உடலை வச்சிக்கிட்டே எல்லா கதையும் பேசி ஆகுது.

    அம்மாக்கிட்ட மட்டுமில்ல எல்லா வயசானவங்கக்கிட்டயும் பொறுமையை கடைப்பிடிக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.

      சுகி சிவம் அனுபவம் அவர் அம்மாவுடன். அதனால்தான் அம்மா பற்றிச் சொல்லியிருக்கார். நன்றி ராஜி.

      நீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    நல்ல தொகுப்பு. தொடர்கதைகள் படிக்கும் ஆவல் குறைந்து விட்டதென கூறலாம். உண்மை.. இப்போது அந்தந்த நாட்களுக்காக காத்திருப்பது ஒரு கடினமான விஷயமாகி விட்டது.

    எடுத்தவுடன் போட்டிருந்த புத்தகங்களின் பட்டியல் பார்த்து வியப்பாகியது. எனக்கு இதையெல்லாம் சேர்ந்து பார்ப்பதே ஒரு அதிசயமாகி விட்டது. எங்கள் அம்மா அவர்கள் காலத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் குமுதம், ஆ. விகடன், கல்கி இத்யாதி பத்திரிக்கைகளிருந்து தொடர் கதைகள் வாரம் வாரம் காத்திருந்து படித்ததோடில்லாமல் முடிந்ததும், அதை சேகரித்து பைண்டிங் பண்ணி, அதையும் புது நாவலாக எண்ணி பன்முறை படித்து, நாங்களும் படித்து, பிறர் படிக்கவும் தந்து, அப்போது வந்த தாள்கள், (அதனாலேயே அது ரொம்ப நாட்கள் உழைத்தது. அது வேறு விஷயம். ) ஆததால் தானகவே அது தன் முடிவை தேடிக் கொள்ளும் வரை... அப்பப்பா என்ன ஒரு பொறுமை.. அது இப்போது கொஞ்சம் குறைந்து விட்டதாகவே தோன்றுகிறது.

    பதிவர்கள் சொன்னதனைத்தும் உண்மை. நல்ல ஒரு தெளிவான அலசல்கள். படித்து ரசித்தேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா சிஸ்டர்...

      அந்தப் படம் நெட்டிலிருந்து சுட்டது. நாங்கள் முன்பு விகடன், குமுதம், சாவி, இபே, துக்ளக், கல்கி என்று நிறைய வாங்கி கொண்டிருந்தோம். இப்போ இல்லை.

      வீட்டுக்கருகில் இருந்த நூலகத்தின் நூலகரை நட்பாக்கிக் கொண்டேன். அவர் என்னை நூலகத்தில் உட்காரவைத்து விட்டு பெரும்பாலும் சொந்த வேலையாகச் சென்று விடுவார். எழுபது சதவிகிதம் நூலகத்துக்கு நான்தான் பொறுப்பு. அங்கு புத்தகங்கள் படித்து விடுவேன்.

      நீக்கு
    2. /எழுபது சதவிகிதம் நூலகத்திற்கு நான்தான் பொறுப்பு. அங்கு புத்தகங்களை படித்து விடுவேன். /

      நூலகரை நட்பாக்கியதால் நூல்களின் நட்பும் தங்களுக்கு சுலபமாக கிடைத்துள்ளது. கொடுத்து வைத்தவர் நீங்கள். அவர் பெரும்பாலும் வெளி நடப்பு செய்தது வேறு தங்கள் அதிர்ஷ்டத்திற்கு துணையாக இருந்திருக்கிறது. யாருடைய தொந்தரவுமின்றி புத்தகங்களோடு லயித்துப் போவதற்கு உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
  28. எனக்கு எப்பவும் தொடர்கதைக்கு வெயிட் பண்ணி படித்ததாக நினைவிலில்லை, தொடர்கதை மொத்தமாக வெளியானபின்னர், அதை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடுவார்கள்.. அப்படித்தான்.. சில தொடர்கள் படித்தேன்.. பூலாந்தேவி..., சோபாவும் நானும்.. எனும் உண்மைச் சம்பவங்கள். இதனாலதான் நாடகங்கள் கூட பார்ப்பதில் ஆர்வம் இருப்பதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா... தொடர்கதைகளை தொடராக வரும்போது படித்தால்தானே அது நன்றாயிருக்கிறதா என்று பார்த்து புத்தகமாக வாங்க முடியும்?!!!

      நீக்கு
  29. அது என்னவோ தெரியலை எழுதுபவர்கள் எல்லாமெழுதிக் கொண்டுதானிருக்கிறர்கள் படிக்கிறவர் படித்துக்கொண்டுதானிருக்கிறார்கள் ரசனைகள் வேறு வேறு இப்பவும் படிக்க ஆசை ஒரு காலத்தில் பொட்டலம் கட்டியபேப்பரைக் கூடவிட்டு வைத்ததில்லை ஆனால் படித்தது எல்லாம்நினைவில் நிற்பதில்லை ஒரு வேளை மூளை தேர்வு செய்து கழித்து விடுகிறதோ பலரும் பல எழுத்தாளர்களை சிலாகிப்பதுபோல் எனக்குமுடிவதில்லை நன்கு இருப்பது நினைவுக்கு வரலாம் மேலும் படிப்பதல்லாமல் காட்சிகளாகவே வரும் நிகழ்ச்சிகள் ஒருவேளை டைவெர்ட் செய்கிறதோ இப்போதெல்லாம் கண்பார்வை அதிகம் படிக்கவிடுவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எம் பி ஸார்.. ஆமாம்.. பொட்டலம் கட்டிய பேப்பரைக் கூட விட்டு வைத்ததில்லை. ஆனால் எனக்கு அப்போது படித்த சில கதைகள் இன்னமும் நினைவில் இருக்கிறது. வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி ஸார்.

      நீக்கு
  30. அதுசரி.. அம்பேரிக்காவில சொன்னாங்க ஆபிரிக்காவில சொன்னாங்க அந்தாட்டிக்காவில சொன்னாய்ங்க எனச் சொல்லியிருக்கிறீங்களே:) எங்களுக்குத் தெரிஞ்ச கெள அண்ணன் என்ன சொன்னார்.. நெ.தமிழன் என்ன சொன்னர் கீசாக்கா என்ன சொன்னா என ஜொள்ளவே இல்லை:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எங்களுக்குத் தெரிஞ்ச கெள அண்ணன் என்ன சொன்னார்.. நெ.தமிழன் என்ன சொன்னர் கீசாக்கா என்ன சொன்னா என ஜொள்ளவே இல்லை:)//

      அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்க்க / படிக்கத்தானே இந்த இடம்? பாருங்க... எல்லோரும் சொல்லி இருக்காங்க... சொல்லிக்கொண்டிருக்காங்க...!

      நீக்கு
  31. இம்முறை படங்களில் கறுப்புவெள்ளையில் இருக்கும் ஆன்ரி.. மேனகா ஆன்ரியோ? அப்போ இன்று போஸ்ட் கெள அண்ணனுக்கு டெடிகேட் ஆ?:)).. ஹையோ எனக்கெதுக்கு உலக வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @அதிரா... கண்ணாம்பாவைத் தெரியாது என்றால் காக்கா வந்து மண்டையில் ஒன்று போடும்!!! ஹா.. ஹா.. ஹா.. மேலே பிடிக்கவில்லையா? கோமதி அக்கா முதல் எல்லோரும் பெயர் சொல்லி இருக்காங்களே...

      நீக்கு
  32. சுகிசிவம் அவர்களின் எழுத்து நெஞ்சை உருக்குகிறது, எவ்வளவு அழகான அருமையான தத்துவ வார்த்தைகள்..

    அவ தன்னிடம் இருந்த அன்பு பாசம் எல்லாம் அடுத்தவர்களுக்கு கொடுத்து விட்டு, கவலை கோபம் எரிச்சலை தன்னோடு தேக்கி வச்சிருந்தா, அது மூளை யோசிக்கும் இயக்கத்தை நிறுத்தியதும் வெளியே வந்திருக்கு...

    நாளைக்கு நம் நிலைமை எப்படியோ.. ஹையோ இண்டைக்கே எல்லோரோடும் சண்டைப்பிடிச்சு திட்டிக் கோபிக்கப் போகிறேன்:).. பிறகு கடசி காலத்தில “பொல்லாத கிழவி”:) எனும் பெயரெடுத்திடப் போறேன் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. சுகி சிவம் சில சமயங்களில் நல்லாய் பேசுவார். நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கார்.

      கவலை கோபம் எரிச்சல் அவரிடம் முன்னர் இருந்திருக்காது. அவர் உடல் அவர் மனம் இயங்கும் வேகத்துக்கு ஒத்துழைக்காததால் வந்ததாய் இருக்கலாம்.

      //பிறகு கடசி காலத்தில “பொல்லாத கிழவி”:) எனும் பெயரெடுத்திடப் போறேன் ஹா ஹா ஹா.//

      அந்த பயம் வந்து விட்டால் நாம் சரியாகி விடுவோம் என்று எனக்குத் தோன்றும்.

      நீக்கு
  33. //கண்ணில் மழை. காலம் கடந்த ஞானோதயங்களால் பயன் என்ன?//

    புரியுது, ஆனாலும் இதுதான் பழக்கப்பட்ட ஒன்றாகி விட்டது மனிதர்களுக்கு..

    அழுது கொண்டிருந்த அனைவரும்....

    கவிதை? அழகான கற்பனை.

    ஒரு துன்பம் வரும்போது அழுது புரள்கிறோம், சாகும் நிலைமைக்குக் கூடப் போகிறோம், ஆனால் அந்த நிலைமை தாண்டியதும் நோர்மலாகி விடுகிறோம், உள்ளே இருக்கும் ஆனா வெளியே சிரிக்கிறோம் கும்மாளமிடுகிறோம்... அந்நேரம் மனம் கேள்வி கேட்கிறது.. இன்று இருப்பதைப்போல அன்றே நீ இருந்திருக்கலாமே? எதுக்கு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினாய் ? என...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புரியுது, ஆனாலும் இதுதான் பழக்கப்பட்ட ஒன்றாகி விட்டது மனிதர்களுக்கு..//

      ஆம்...

      //கவிதை? அழகான கற்பனை.//

      ஏன்? அப்படி இல்லையா?!!!

      நீக்கு
    2. //அந்நேரம் மனம் கேள்வி கேட்கிறது.. இன்று இருப்பதைப்போல அன்றே நீ இருந்திருக்கலாமே? எதுக்கு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினாய் ? என...//

      சிக்கலான விஷயம்.

      நீக்கு
  34. //திருக்குறள் தனபாலன் என்ன சொல்வார்?///

    என்ன சொல்வாஅர்?:).

    கேணி என ஒரு படம் வந்திருக்குதெல்லோ.. பார்த்தீபன் அங்கிள் நடிச்சிருக்கிறார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கேணி என ஒரு படம் வந்திருக்குதெல்லோ.. பார்த்தீபன் அங்கிள் நடிச்சிருக்கிறார்..//

      அப்படியா? கேள்விப்பட்டதில்லையே...

      நீக்கு
  35. //"இந்த வாரம் இது போதும். நிறுத்திக்கோ ஸ்ரீராம்.. அடுத்த வாரம் பக்ரீத் அன்று மீதியைத் தொடர்ந்து கொள்..."///

    எதை நிறுத்தட்டாம்ம்? டவுட்டு டவுட்டா வருதே எனக்கு:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @அதிரா.. ஓ... அதுவா/ இந்த வார அறுவையை, அளப்பை நிறுத்திக்கோன்னு சொல்றாங்க!

      நீக்கு
  36. இப்போவும் அந்தக் காலத்து எழுத்தாளர்களின் எழுத்துக்களில் அவர்களின் நாவல் அல்லது குறுநாவல் அல்லது சிறுகதை அல்லது கவிதை அல்லது கட்டுரைகளில் காணப்படும் ஆழமோ, பொருட்செறிவோ, சமூகத்தைப் பற்றிய சிந்தனையோ இப்போதெல்லாம் காண முடிவதில்லை. சமூக முன்னேற்றமும் அப்போதைய எழுத்துக்களில் காண முடியும். மனித மனத்தைக் குறித்தும் அக்குவேறு ஆணி வேறாக அலசி இருப்பார்கள். சரித்திரக் கதை என்றால் அந்தச் சரித்திரம் நடந்த இடத்துக்குப்போய் ஆய்வுகள் செய்து சரியான தரவுகளோடு ஆதாரங்களோடு எழுதுவார்கள். இப்போதெல்லாம் யாருக்கும் நேரம் இருப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆழமோ, பொருட்செறிவோ, சமூகத்தைப் பற்றிய சிந்தனையோ இப்போதெல்லாம் காண முடிவதில்லை.//

      கீதாக்கா.. அப்படிச் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். நாம் படிப்பதில்லை. நாம் அப்போ படித்தோம் என்பதால் நமக்கு அதெல்லாம் பிடித்திருப்பது போல இப்போது வரும் படைப்புகளை பிடித்தவர்கள் இருக்கலாம். அவர்கள் யாராவது சொன்னால் நமக்கும் தெரியலாம்.

      நீக்கு
    2. பாலகுமாரன் உடையாருக்காக அந்தந்த இடங்களுக்குச் சென்று வந்து எழுதினார்.

      நீக்கு
  37. விகடனோ, கல்கியோ வந்தால் அப்போதெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு படித்தது உண்டு. நம் வீட்டில் வாங்கலைனா பக்கத்து வீடுகளில் யார் வாங்கறாங்கனு தெரிந்து கொண்டு அங்கே போய்ப் போய் நின்று கெஞ்சி பல்லைக் காட்டி அதற்காக அவங்க சொல்வதை எல்லாம் செய்து கொடுத்து! அங்கேயே தவம் இருந்து வாங்கி வந்து படிச்சிருக்கேன். சிலர் அவங்க வீட்டிலேயே படிச்சுட்டுக் கொடுக்கணும் என்பார்கள்! அதுக்கும் சரினு இருந்திருக்கேன்! இப்போல்லாம் புத்தகம் படிப்பது என்பது உண்டு. ஆனால் வாராந்தரிகள், மாதாந்தரிகள் மற்ற பக்தி வெளியீடுகள் படிப்பதில்லை. வாங்குவதும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நாங்களும் எக்சேஞ்ச் செய்து படித்ததுண்டு. அப்புறம் லைப்ரரி! அந்த அனுபவத்தை முன்னரேயும், இப்போ கமலா சிஸ்டர் பதிலிலும் சொல்லி இருக்கிறேன்.

      நீக்கு
  38. காலையிலேயே கண்ணாம்பாளைப் பார்த்தேன். சொல்ல நினைச்சு விட்டுப் போச்சு! யாருக்கு ஃபேவரிட்? நிச்சயம் ஶ்ரீராமுக்கு இல்லை. அது சரி, சினிமா நடிகைகளைப் போட்டே ஆகணும்னு ஏதாவது சபதமா? :))))

    பதிலளிநீக்கு
  39. சுகி சிவம் சொல்லி இருப்பதைப் பார்த்தால் நானும் அப்படித் தான் மாறி வருகிறேனோ என எனக்கும் சந்தேகம் வருது! :) அதற்கு முன்னர் முடிவு வந்துட்டால் நல்லது! :)))) நீதிபதி இஸ்மயில் அவர்களின் பேச்சை நேரிலேயே கேட்டிருக்கேன். பட்டிமன்றங்கள் கேட்டிருக்கேன். முன்னெல்லாம் அவங்களோட பட்டிமன்றம் என்றால் பரபரப்பாக வேலைகளை முடித்துக் கொண்டு உட்காருவேன். இப்போல்லாம்! :(

    //நல்லவேளையா இதெல்லாம் பார்க்கிறதே இல்லை. பட்டி மன்றங்கள் எல்லாம் குன்றக்குடி அடிகளார், சா. கணேசன், நீதிபதி இஸ்மயில், நீதிபதி மஹாராஜன் போன்றவர்களோடு செத்துச் சுண்ணாம்பாகிவிட்டது.// இது 2010 ஆம் ஆண்டு மின் தமிழ்க் குழுமத்தில் பட்டிமன்றங்கள் பற்றி என் கருத்தைச் சொன்னது! இன்றைக்கும் பொருந்தி வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சுகி சிவம் சொல்லி இருப்பதைப் பார்த்தால் நானும் அப்படித் தான் மாறி வருகிறேனோ என எனக்கும் சந்தேகம் வருது! :) அதற்கு முன்னர் முடிவு வந்துட்டால் நல்லது! :))))//

      @கீதா அக்கா.. முதல் வரி ஓகே... எல்லோருக்கும் அப்படித் தோன்றும். இரண்டாவது வரி தேவை இல்லாதது.


      // பட்டி மன்றங்கள் எல்லாம் குன்றக்குடி அடிகளார், சா. கணேசன், நீதிபதி இஸ்மயில், நீதிபதி மஹாராஜன் போன்றவர்களோடு செத்துச் சுண்ணாம்பாகிவிட்டது //

      நான் இப்போதைய பட்டிமன்றங்களில் ராஜா, பாரதி பாஸ்கர், சேஷாத்ரி, பேச்சுகளை ரசிப்பேன்.

      நீக்கு
  40. திருக்குறளின் கருத்து அவரவர் புரிதலுக்கு ஏற்ப மாறுபடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் கீதா அக்கா. புரிதல் மற்றும் அனுபவங்களுக்கு ஏற்ப.

      நீக்கு
  41. வணக்கம் சகோதரரே

    பாதி விமர்சனத்தோடு சென்று விட்டேன். மீதியை தொடர்வதற்குள், இத்தனை கருத்துக்கள் வந்து லைன் கட்டிவிட்டதே...

    திரு சுகி சிவம் அவர்களின் கூற்று நெகிச்சியை உண்டாக்கியது. அது முதுமைக்கு ஆளாகும் அனைவருக்குமே பொருந்தும்.மனதின் ஆழத்தில் உள்ளது என்றேனும் ஒரு நாள் மேலெழும்பதானே செய்யும். நமக்கும் உள்ளே கிளம்ப யத்தனிப்பது சமயத்தில் நமக்கே தெரிகிறது.

    தங்கள் கவிதை வரிகள் வெகு நிதர்சனம். அதற்கு தலைப்பு மிக மிக பொருத்தம். மிக ரசித்தேன் ஒவ்வொன்றுக்கும் கண்ணாம்பா படங்கள் மிகப் பொருத்தமாக தேர்ந்தெடுத்திருப்பது பதிவை மிகவும் அழகாக்கியது. கண்ணாம்பா அவர்களின் இயற்கை அழகும், கம்பீரம், பேச்சுத்திறமை, நடிப்பு அனைத்துமே எனக்கு மிகவும் பிடிக்கும்.

    குறளுக்கு ஒவ்வொருவரின் உரைகளும் அவரவர் பாணியில் இருந்தது. ஆனால் அர்த்தம் இயல்பாகவே ஒன்றாகி குறளை சிறப்பித்தது.

    இன்றைய கதம்பம் மனதிற்கு இதமாக வெகு நன்றாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா சிஸ்... கவிதையின் தலைப்பை ரசித்ததற்கு நன்றி. சொல்லப்போனால் அனைத்தையுமே ஒவொன்றாகப் பட்டியலிட்டு ரசித்திருப்பதற்கு நன்றி.

      நீக்கு
  42. பத்திரிக்கைகளில் தொடர்கள் படிப்பதுபற்றிய மாறியிருக்கும் சூழலை சேட்டைக்காரர் சரியாகவே அவதானித்திருக்கிறார். கலிலூர் ரஹ்மானின் ’உங்கள் வீட்டில் எத்தனை பிள்ளைகள் நன்கு தமிழ் வாசிப்பார்கள்’ என்கிற கேள்வியும் கவனிக்கப்படவேண்டியது.

    இஸ்மாயில் அவர்களை மீண்டும் நினைவுக்குக்கொண்டுவந்து நல்லது செய்தீர்கள். திருக்குறள் விளக்கங்களில் அவர் அடித்ததுதான் சிக்ஸர். மற்றவர்கள் சிங்கிள் ஓடப் பார்த்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் ஸார்.. எங்கள் வீட்டைப் பொறுத்தவரை அனைவரும் தமிழ் நன்றாகவே வாசிப்பார்கள்!

      நீக்கு
    2. //திருக்குறள் விளக்கங்களில் அவர் அடித்ததுதான் சிக்ஸர். மற்றவர்கள் சிங்கிள் ஓடப் பார்த்திருக்கிறார்கள்.//

      பின்னூட்டத்தில் கிரிக்கெட் பாஷையா!!!!!

      :))

      நீக்கு
  43. என்னை மாதிரி யாரும் சிறுவயதில் கதைகளை படித்திருப்பார்களா என்று தெரியாது ஆனால் இப்போது அது நேர்மாறாகிவிட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மதுரைத்தமிழன்... நானும் அப்போது படித்த அளவு இப்போது படிக்க இயலவில்லை. லைப்ரேரியைப் பார்த்துக் கொள்கிறேன் என்று அங்கிருக்கும் புத்தகங்களை படித்திருக்கிறேன்.

      நீக்கு
  44. சாவி எழுபதுகளில் தினமணிகதிர் வார இதழின் ஆசிரியரானபோது அதிரடி மாறுதல்கள், புரட்சிகள் செய்து பத்திரிக்கை உலகைக் கிடுகிடுக்கவைத்தார்.(25000 பிரதிகளே விற்ற தினமணிகதிரின் விற்பனையை, தான் ஆசிரியராகப் பொறுப்பேற்ற ஓரிரு வருடங்கள்ல், 2 லட்சத்துக்கும் மேல் எகிறவிட்ட சூப்பர்ஸ்டார் ஆசிரியர் சாவி!) ஸ்ரீவேணுகோபாலனை புஷ்பாதங்கதுரையாக்கி ‘சிவப்பு விளக்கு எரிகிறது’ எனத் தொடர் எழுதவைத்தவர்! பிறகு அவரை மீண்டும் ஸ்ரீவேணுகோபாலனாக அவதாரம் எடுக்கவைத்து ’திருவரங்கன் உலா’ எழுதவைத்தார். சுஜாதாவின் புதுமொழி, எழுத்துத்திறனை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு, அறிமுகப்படுத்தி சிறுகதை, தொடர் என தன் பத்திரிக்கையில் எழுதவைத்தார் சாவி. ’நில், கவனி, தாக்கு !’ தொடரை சுஜாதாவின் முழுப்பக்கப் படத்துடன் அறிமுகப்படுத்தியது தினமணிகதிர். சுஜாதா ஒரு பெண் எழுத்தாளர்தான் என வாசகர்பலர் நினைத்திருக்கையில், இளம் சுஜாதாவின் முகத்தைக் கருகரு மீசையுடன் போட்டு அதகளம் செய்தார் சாவி. கண்ணதாசனின் புகழ்பெற்ற ’அர்த்தமுள்ள இந்துமதம்’ தொடர் சாவியின் தினமணிகதிரில்தான் வந்தது. விந்தனின் ‘ஓ! மனிதா!’ என்கிற தொடரை (விலங்குகள் ஒவ்வொன்றாக வந்து மனிதனை விமரிசிப்பதாக வரும் Satirical work என ஞாபகம்!) படித்திருக்கிறேன்.

    கிட்டத்தட்ட அதே சமயத்தில் சாண்டில்யனின் சரித்திரத்தொடர்களுக்காக குமுதம் இதழ், வாசகர் பலரால் ஆவலோடு வாங்கப்பட்டது. (விலை 55 பைசா. வாங்கியவுடன் முகர்ந்துபார்க்கும் அளவுக்கு செண்ட் வாசனை!). சாண்டில்யனது ‘கடல் புறா’ தொடர் வந்துகொண்டிருந்ததென நினைக்கிறேன். கல்கண்டில் தமிழ்வாணனின் ‘சங்கர்லால் துப்பறிகிறார்’ தொடர் சென்றுகொண்டிருந்தது. என் நினைவு சரியாகச் சொன்னால், ராணி வார இதழில் கோ.வி.மணிசேகரனின் ‘நிலாச்சோறு’ என்கிற தொடர்கதை .

    அந்த வருடங்களில் (எழுபதுகளில்) சோ ராமசாமி, ஜெயகாந்தனை தன் அரசியல் பத்திரிக்கையான துக்ளக்கில் எழுத அழைத்தார்! ஆரம்பித்தது ஒரு தொடர்.ஜெயகாந்தனின் ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ தொடரை ஆர்வமாகப் படித்திருக்கிறேன்.

    இப்படி ஏதேதோ ஞாபகங்களை உங்களது தொடர்கதைபற்றிய பதிவு கிளப்பிவிட்டிருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் ஸார்.. சாவி பற்றி படித்திருக்கிறேன். பாலகுமாரன், சுப்ரமணிய ராஜு, சிவசங்கரி, மாலன் போன்றவர்களையும் புகழ் பெறச் செய்தது சாவிதான்.

      இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் பைண்ட் செய்யப்பட்டு வீட்டில் இருக்கிறது. சுஜாதாவை ஒரு பொதுக்கூட்டத்தில் வாசகர்கள் கேள்விக்கு பதில் சொல்லவும் வைத்தார்.

      நீக்கு
  45. நெல்லை! (குமுதம்) ஏ.எஸ்.பி. அல்ல. எஸ்.ஏ.பி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். பிழையாத்தான் எழுதியருக்கேன். மனசுல SAP (ERP) வந்து, ஏ.எஸ்.பினு தவறுதலா எழுதிட்டேன். சுட்டியதற்கு நன்றி

      நீக்கு
  46. /செவ்வ்வய் ஒரு பத்திரிகையில்/

    அது எதனாலோ தெரியவில்லை, செவ்வாய் கிழமைகளில் தமிழகத்தில் எந்த வாரப்பத்திரிகையும்
    வெளிவருவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார். செவ்வாய்க்கு கிழமைகளில் பத்திரிகை வந்ததில்லையா? ராணி வார இதழ் செவ்வாயில்தான் வந்ததோ? ஆனால் இப்போது துக்ளக் செவ்வாய்க்கிழமைதான் வெளிவருகிறது.

      நீக்கு
  47. சுகி சிவத்தின் படத்தை முன்னால் போட்டு பின்னால் அந்த ‘முதுமை நமக்கும் வரும்’ செய்தியைப்
    போட்டிருந்தால் ஒரு அனாவசிய ‘திடுக்’ தடுக்கப்பட்டிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Shriram Balasubramaniam என்று பெயரை மனசில் உள்வாங்கி கொண்டு தொடர்ந்து வாசித்தால் ‘திடுக்’ வராமலா இருக்கும்?

      நீக்கு
  48. அண்ணா, இந்தக் கால ஆ.வி,
    தமிழ் இந்து போன்ற பத்திரிகை நடையைத் தான் ‘கம்யூனிச பாணி’ என்று சொல்கிராறோ?

    பதிலளிநீக்கு
  49. இதயபூர்வமான திருமண நாள் வாழ்த்துகள் ஶ்ரீராம்

    பதிலளிநீக்கு
  50. தொடர்கதைகள் படிப்பதில்லை ஏதாவது சூழ்நிலையில் படிக்க முடியாத நிலை ஏற்படும்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!