புதன், 12 செப்டம்பர், 2018

கேட்டார்கள், சொன்னோம்! புதன் 180912

              

கீதா சாம்பசிவம்: 

இன்னிக்கு புதன்கிழமைனே மறந்து போச்சு! இப்படிக்கிழமைகளை மறக்கும் அனுபவம் உங்களுக்கு உண்டா?

கிழமை என்னன்னே தெரியாம நீங்களும் இருந்த அனுபவம் உண்டா? எனக்குப் பல சமயங்களிலும் அன்றைய கிழமை போல் இல்லாமல் வேறே ஏதானும் கிழமைனு தோணும். உதாரணமாத் திங்கள் அன்றே செவ்வாய் என நினைப்பேன். புதன்கிழமையைப் பல சமயங்களிலும் ஞாயிறு மாதிரி நினைச்சது உண்டு. :))) தலையைப் பிச்சுக்க வைக்கிறேனோ? 

பணியில் தொடர்ந்த நாட்களில் தேதி கிழமை மறந்ததாக நினைவில்லை. சவால்கள் மிகுந்த அந்த நாட்களில் அடுத்த சம்பள நாளுக்கு இன்னும் எத்தனை நாள் என்ற கணக்கு மனதில் ஓடியவாறு இருந்ததுண்டு.

இப்போது சிலசமயம் தேதி மறந்து போகிறது . கிழமை மறப்பதில்லை.

ப: மொபைல் கையில் இருக்கையில் தேதி, கிழமை, மாதம், வருடம் எதுவும் மறக்க வாய்ப்பில்லை. 

மேலும், நான் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கலர் சட்டை என்று standardize பண்ணி வைத்துள்ளேன். போட்டிருக்கும் சட்டை நிறத்தை வைத்தே அன்று என்ன கிழமை என்பதைத் தெரிந்துகொண்டுவிடுவேன். 

உங்களுக்கு கிழமைகள் மட்டும் மறந்துபோகவில்லை. இதே கேள்வியை நீங்க ஜூன் ஆறாம் தேதி பதிவிலும் கேட்டிருக்கீங்க என்ற விவரமும் மறந்து போயிட்டீங்க! 

   
   
கடுகு சாரின் தற்செயல் நிகழ்வுகள் பதிவுகளைப் படிச்சீங்களா? அம்மாதிரித் தற்செயல் நிகழ்வுகள் உங்க வாழ்க்கையிலும் நடந்தது உண்டா? 

தற்செயல் நிகழ்வுகளுக்கு யாரும் தப்புவது இல்லை. ஒவ்வொருவருக்கும் அந்த அனுபவம் இருக்கும் எனினும் என் வாழ்வில் ரசனையான தற்செயல் இல்லாதது ஒரு ஏமாற்றம்.

ப: எனது வாழ்க்கையில் தற்செயல் நிகழ்வுகள் நிறைய நடந்துள்ளன. சமீபத்தில் நடந்த சில: 

ஏதேனும் பாடல் மனதில் திரும்பத் திரும்ப வந்து அலைமோதும். அந்த வாரம் அல்லது அடுத்த வாரம் வெள்ளிக்கிழமையில், ஸ்ரீராம் அந்தப் பாடலை வெள்ளி வீடியோவாக வெளியிட்டிருப்பார்! அல்லது டி வி சானல்களை மேயும்போழுது, அந்தப் பாடல் காட்சியே உடனே ஏதாவது இசை சானலில் வரும்! 

கடந்த ஏழெட்டு வருடங்களில், டி வி யில் நான் பார்த்த ஒரே சீரியல், "எங்கே பிராமணன்?" காலையில் நான் பார்க்கில் வாக்கிங் செல்லும்பொழுது சில கேள்விகள் எனக்குத் தோன்றும். உதாரணமாக, 'ஓம் நமச்சிவாய' என்று சொல்வதா அல்லது 'ஓம் நமசிவாய' என்று சொல்லவேண்டுமா என்று. அன்று இரவு அந்த சீரியலில் அந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்! 

பதிவுகளில் அனானியாகப் பின்னூட்டம் இடுபவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? நீங்கள் அனானியாகக் கருத்துச் சொல்லி இருக்கீங்களா?


அறிமுகமானவர் அல்லது நெருக்கமானவரின் நிலைக்கு எதிரான கருத்தைச் சொல்ல அநாமதேயம் வசதியானது.

ப: ஆரம்பக் காலத்தில் நான் கருத்துரைகள் இட ஆரம்பித்த பதிவுகள் எல்லாம் இட்லி வடை வலைப்பதிவில்தான். ஆளும் கட்சிக்கு எதிரான கருத்துகளையோ அல்லது பிரபலங்களை எதிர்த்து கமெண்ட் எழுதும்போதோ அனானியாக கருத்துகள் எழுதுவேன். (என் முதுகு பத்திரமாக இருக்கவேண்டும் அல்லவா! ) சில சமயங்களில், நகைச்சுவைக்காக வேற பெயரில் கமெண்ட் எழுதியுள்ளேன்! உதாரணமாக 'ஜவகர்லால் நேரு', 'மகாத்மா காந்தி', இது போன்ற  பெயர்களில், (பதிவு சம்பந்தம் இருந்தால்) கமெண்ட் எழுதியது உண்டு.  

கில்லர்ஜி: 

இரண்டு D.D.க்களின் புகைப்படங்களையும் இணைத்து குடும்பத்தில் பிரச்சனையை வளர்த்து விடுவது போல் தெரிகிறதே! 

ப: ஓஹோ! அப்படி ஒரு பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறதோ! சரி. அப்படி வந்தால், இவர்கள் இருவரும் போய் பிரச்சனையைத் தீர்த்து வைக்கட்டும்! 




நெல்லைத்தமிழன்: 

பெங்களூரில்தான் நடைப் பயிற்சி செய்பவர்கள் மிக அதிகம். ஜெ.பி நகர் பக்கத்துல மினி ஃபாரஸ்ட்ல நான் எப்போதும் நிறைய பேர் நடப்பதைப் பார்க்கிறேன். இதுபோல் பல பூங்காக்காளில் காலை வேளையில் நிறைய பேர் நடப்பார்கள். அதுக்கு கிளைமேட்டும் நல்லா இருக்கும். சென்னைல அதுபோல மிக அதிகமாகப் பார்க்கவில்லை என்றாலும், இங்கும் 4 மணிக்கு எழுந்து நடப்பவர்கள், ஜாகிங் செய்பவர்களை தினமும் பார்க்கிறேன். யோகா வகுப்புகளுக்கும் பலர் செல்கிறார்கள். (ஒருவேளை வீட்டிலேயே இருப்பதால் இதெல்லாம் கேஜிஜி சாருக்குத் தெரியலையோ? இல்லையே அவரும் நடப்பதாகத்தானே சொன்னார்..)

ப: அப்படிப்பார்த்தால், சென்னை மெரீனா வாக்கிங் போவோர்தான் அதிகம். நான் பார்த்தவரை, பெங்களூரு பார்க்குகளில், நடைபாதையில் சுற்றி வருபவர்களில் (வயதான) பெண்கள்தான் அதிக எண்ணிக்கை. பார்க் பெஞ்சுகளில் அல்லது குழந்தைகள் விளையாடுமிடத்து தடுப்புக் கட்டுமானங்களில், வயதான கிழவர்கள் எட்டு அல்லது பத்துப் பேர்கள் அமர்ந்து இந்தியில், இந்திய அரசியலை பெருத்த குரலில் விமரிசித்துச் சிரித்துக்கொண்டிருப்பார்கள்! 

மாடித்தோட்டம் போட்டீர்களா, என்ன என்ன ஈல்டு வந்தது, வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் விளைந்ததா, அந்த அனுபவம் என்ன? 

ப: சென்னையில் இருக்கும்பொழுது, மாடியில் இருப்பதால், மாடித்தோட்டம் ... இல்லை இல்லை மாடித்தொட்டி செடி வளர்ப்புகள் செய்வேன். ஏஞ்சல் சொல்லியது போல, கொத்தமல்லி, வெந்தயக்கீரை பயிர் செய்து, அறுவடை செய்தது உண்டு. ஒரு பையில், அண்ணன் கொடுத்த ஆடாதோடை செடி வைத்துள்ளேன். நல்ல ஈல்டு வந்த செடி என்று பார்த்தால், ஒரு முறை கடையில் வாங்கிய மணத்தக்காளி கீரையை, ஆய்ந்தபின், கிளைகளை தொட்டியில் நட்டு வைத்து, நீர் ஊற்றி வந்தேன். இலை, காய், கனி என்று நிறைய ஈல்டு வந்துகொண்டிருந்தது.  

ஏஞ்சல்: 

கிளம்பறேன் என்ற வார்த்தை எப்படி வந்தது ??

class c கலாசி ஆச்சு ,சாயங்காலம் சாயும்காலம் சாயந்திரம் ஆச்சு ஆனா இந்த கிளம்பறேன் எங்கிருந்து வந்தது என்று எக்ஸ்ப்ளெயின் ப்ளீச் ? :)

"கிழம் போய்வரேன்" கிளம்பறேன் ஆகி விட்டதோ ? எல்லா சொற்களுக்கும் வேர் கிடைக்குமா ? ஆய்வுக்குரிய வினா .

ப: குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் அல்லவா! அதனால், மரத்திலிருந்து கீழே இறங்கிவந்து, சேட்டைகள் புரிந்து, பழம் தின்று, யாராவது துரத்தினால் சட்டென்று ஓடிப்போய் மரத்தில் கிளைம்ப் (climb) செய்வது .... கிளைம்புவது என்பது மருவி கிளம்புவது என்றும், கிளைம்பறேன் என்பது மருவி கிளம்பறேன் என்றும் ஆகிவிட்டது. 

2, சமீபத்திய படங்களில் லிவிங் டுகெதரை ஆதரிக்கிறமாதிரி ஆனா திருமணத்தில் முடிகிறமாதிரி காட்டுகிறார்கள் என்று ஒரு சினிமா விமர்சனத்தில் படித்தேன் . 
லிவிங் டுகெதர் பற்றி தங்கள் ஆணித்தரமான கருத்து என்ன ?

லிவிங் டு கெதரில் பொறுப்பை தட்டிக் கழிப்பது எளிது என்பதால் என்மனம் அதை ஏற்காது.  

ப: 'லிவிங் டுகெதர்' என்பதெல்லாம் பணம் நிறைய இருந்து, பலதார பராக்கிரமர்கள் நடத்தும் கூத்து. சாதாரண மனிதர்களுக்கு சரிப்படாது. 

3,henpecked , cock pecked ,சிதம்பரம் ,மீனாட்சி ஆட்சி இதையெல்லாம் யார் துவக்கி வச்சிருப்பாங்க ??

வாழ்க்கைத்துணையின் அதீத ஆக்கிரமிப்புக்கு ஆளானவர்தான் இந்த வழக்குக்கு வழிவகுத்திருப்பர்.  

ப: அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆரம்பித்ததாக இருக்கும்!  

4, எங்கள் பிளாக் ஆசிரியர்களில் யாருக்கு மறதி அதிகம் ?
வரிசைப்படுத்தி சொல்லவும் ?

மறதியில் நான் நெ.1

ப: வரிசை மறந்து போயிடுச்சு! 

5,பார்க் சேர் ,மரக்கட்டை நாற்காலி சட்டங்களில் தங்கள் பெயரை பொறித்து விட்டு போறாங்களே :) என்ன காரணம் ?
நேற்றுகூட வாக்கிங் போன பார்க்கில் ஓடையை ஒட்டிய மரப்பாலத்தில் ஒருத்தர் சாவியால் பேர் எழுதறதை பார்த்ததும் இந்த கேள்வி உதித்தது :)

 தனக்குப் பின்னும் தன் பெயரை நிலைநிறுத்த முயலும் அற்ப ஆசை கண்டிக்கத் தக்க நிலையில் சில சமயம் பல இடங்களில் செயல் படுகிறது.

ப: ஒருமுறை பார்க்கில், பெரிய மரத்தில் இருந்த சில எழுத்துகளை (கன்னட எழுத்துகளாக இருந்ததால் என்ன என்று என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை) வயதான மனிதர் ஒருவர் அருகே சென்று அந்த எழுத்துக்களை கையால் தடவிப் பார்த்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். எதுவும் விசாரிக்கத் தோன்றவில்லை. 

6, வக்கீல் வேடத்துக்கு பொருத்தமானவர் அனுஷ்காவா இல்லை தமன்னாவா ???

வக்கீல் வேடத்துக்குப் பொருத்தமானவர் நீலு. 

ப: தெய்வத்திருமகள்தான். 

Image result for அனுஷ்கா ஷெட்டி தெய்வ திருமகள்
             
தமன்னா முகத்தில் எப்பவும் ஒரு (அசட்டுச்) சிரிப்பு (புன்னகை என்றா அதற்குப் பெயர்?) இருந்துகொண்டிருக்கும். அது வக்கீல் வேடத்துக்கு ஒத்துவராது. 

 
7, 24 மணி நேரம் போதலைன்னு நினைத்ததுண்டா ? எந்த தருணத்தில் ?

ஆபீஸ் பீக் பீரியடிலும் சுவாரசியமான விளையாட்டிலும் 24 மணி நேரம் போதாதது போல் தோன்றியதுண்டு.

ப: மாறாக இருபத்துநான்கு மணி நேரம் ரொம்ப அதிகமா இருக்கேன்னுதான் அடிக்கடி நினைப்பேன். 


8, காக்கா தூக்கி போச்சு னு சொல்றாங்களே :) அதை எந்த வயசு வரைக்கும் நம்பினீங்க ??

நாலு வயதுவரை காக்கா தூக்கிப் போனதை நம்பியிருக்கிறேன்.

ப: நான் எந்த வயதுவரை நம்பினேன் என்று ஞாபகம் இல்லை. ஆனால் என்னுடைய பேரனுக்கு மூன்று வயது ஆகும்பொழுது, நான் எதையோ எடுத்து மறைத்து வைத்து, "காக்கா தூக்கிக்கிட்டுப் போயிடுச்சு" என்று சொன்னேன். அவன் உடனே, "நீதானே அந்தக் காக்கா?" என்று கேட்டான். 
 
9, ஜால்றா அடிக்கிறாங்க அப்டிங்கறாங்களே :) உலகின் முதல் ஜால்றா யார் அடித்திருப்பார் ?

முதல் ஜால்ரா மகாராஷ்டிரத்து பக்த சிகாமணி ஒருவர்தான் அடித்திருக்க வேண்டும்.

ப: முதல் ஜால்ராவை செய்தவர்தான் அதை அடித்து, நல்லா சத்தம் வருதான்னு சோதனை செய்திருப்பார். 

10, சமீபத்தில் அதிகம் வெறுப்பேற்றிய ஒரு சம்பவம் ?

ஒரு ரவுடி காவல் துறை அதிகாரிகளை மிரட்டுவது மிக வேதனை அளிக்கும் நிகழ்ச்சி. 

ப: இங்கே, ஒரு தெருவில், யாரும் வாகனங்களில் போக இயலாதபடி, தெருவுக்குக் குறுக்கே செங்கல் ஜல்லி சிமென்ட் ப்ளாக் போட்டு வைத்துள்ளார் ஒருவர். அந்த இடம் அவருக்குச் சொந்தமாம்! ஒன்றும் கட்டவும் இல்லை, ஆனால் தெருவில் எந்த முன்னேற்ற சமாச்சாரத்திற்கும் ஒத்துழைப்பது இல்லை. தார் போடவில்லை. தண்ணீர் தேங்கி நிற்கிறது, சாக்கடைகள் அசுத்தத்தின் எல்லையில் இருக்கின்றன. அந்தப் பகுதியே துர்நாற்றம் வீசுகிறது. இப்படியும் மனிதர்கள் இருக்கின்றனரே என்று வெறுப்பாக உள்ளது. 
            
11, சில நேரங்களில் நம்மையறியாமலேயே ஒரே பாடலின் குறிப்பிட்ட வரிகளை மட்டும் ரிப்பீட்டடா ஹம் செய்வோம் இதற்க்கும் நடக்கபோகிற நடந்த சம்பவங்களுக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா ?
நட்பு ஒருவர் 3 நாளா செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற வரிகளை விடாம ஹம் 
செய்றார் ,தூக்கத்திலும் அதே வரிகள் வருதாம் என்ன காரணமாக இருக்கும் ??

தொடர்போ முக்கியத்துவமோ இல்லையெனினும் பாடல்வரிகள் மனதின் பின்புலத்தில் ஒலித்தவாறிருப்பது என்வரை சகஜம்தான்.

ப: // செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா// ஒருவேளை ஹோட்டலில் காசில்லாமல் சாப்பிட்டு, மாவாட்டியிருப்பாரோ? 

ரேவதி சிம்ஹன் : 

முகனூலில் சில பதிவுகள் சுய விளம்பரமாகி விடுகிறதே.
என் கணிப்பில் தப்பா. நானும் அதைப் பின் பற்றுகிறேனா
சொல்லுங்கள் பார்க்கலாம்.

முகநூல் மட்டும் இல்லை எல்லா தளங்களும் சுய மிகைப்பாடுதான். அது ரசிக்கத் தக்கதாக இருக்கும்போது மதிப்பு கூடுகிறது. ஒன்றை பகிரங்கப் படுத்தாதவரை நிம்மதி இராதென்பது சிருஷ்டிக்கான உந்துதல்.  

துளசிதரன்: 

கேரள வெள்ளத்திற்குக் காரணம் சபரிமலைக்குப் பெண்களும் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசு சொல்லிக் கொண்டு வந்ததுதான் காரணம் என்று சமூகவலைத்தளங்கள் எல்லாவற்றிலும் சுற்றியது உங்களுக்கும் தெரிந்திருக்கும். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

கேரள வெள்ளம் சபரிமலையில் பெண்கள் - முன்பே விவாதிக்கப் பட்டதாக நினைவு.


(எங்கள் ப்ளாக் ஆகஸ்ட் 22.)

அரசோ புரட்சியாளரோ, யாரோ முடிவு செய்வது தவறாகவே இருக்கட்டும்.. அதற்காக லட்சக்கணக்கான பேர்களை தண்டிக்கும் அளவுக்கு கடவுளை நம் போல் மதிப்பது மிகப்பெரிய தவறு என நினைக்கிறேன்.

இப்படிச் சொன்னால் கடவுளை எனக்குத் தெரியும் என்று பொருள் அல்ல. கடவுள் சிருஷ்டியை ஒரு விளையாட்டாகச் செய்கிறார். உலகு இயற்கை அறிவு மற்ற வசதி வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டு இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று வேடிக்கை பார்க்கிறார். நாம் நம் அழிவை நோக்கி சுறுசுறுப்பாக முன்னேறுகிறோம்..

வாட்ஸ் அப் : 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

ராமனையும், கிருஷ்ணனையும் உயரமான, கருத்த, வாட்டசாட்டமான ஆண்களாகத்தான் ராமாயணமும், பாகவதமும், மற்ற புராணங்களும் வர்ணிக்கின்றன. அப்படிபட்டவர்களை வெள்ளையாக மொழு மொழுவென்று ஷேவ் செய்யப்பட்ட முகத்தோடு திரைப்படங்களிலும், சீரியல்களிலும் சித்தரிப்பது நியாயமா? குறைந்த பட்சம் மீசையாவது வேண்டாமா?

ராமன் கிருஷ்ணன் மக்கள் மனதில் பதிந்துள்ள பிம்பத்துக்கேற்ப எந்த நடிகராலும் தோன்றவியலாது.

ராமாராவ் இருந்தாரே என்று சொல்லலாம்.  ஆனால் அது மக்கள் தெய்வ வடிவங்களை சினிமா நடிகரை முன்வைத்து அடையாளம் கண்ட ரிவர்ஸ் பிராசஸ். இனி அது எடுபடாது. 

பராசக்தி யை இப்போது பார்த்தால் அதன் வெற்றி ஒரு வியப்பாகத்
 தெரியும். 

ராமர் கிருஷ்ணரை விடுங்கள், அகிலனின் பாவை விளக்கு நாயகனாக சிவாஜி எடுபடவில்லையே.

பொன்னியின் செல்வன் படமானாலும் அதேகதிதான். 

ஒரு விதிவிலக்கு வெற்றி தில்லானா மோகனாம்பாள். அதில் கூட நாவலின் வீச்சு படத்தில் காணவில்லை.  பதிலாக நாகேஷ், மனோரமா, சிவாஜி சாமர்த்தியம்,  அதை நாவலோடு பொருத்திப் பார்க்காமல் ரசிக்க வைத்தது.


அப்படி புராணத்தின்படி ராமன், கிருஷ்ணனை காட்ட வேண்டுமென்றால் எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார்? பார்த்திபன்??😝

ப: பார்த்திபன் முகத்தை விட  Sidney Poitier சிறந்த தேர்வாக இருப்பார். ஆனால் அவருக்கு வயசு இப்போ தொண்ணூற்று ஒன்று!




மகாத்மா காந்தி நாத்தீகராக இருந்திருந்தால் அவருக்கு பின்னால் அத்தனை பேர் திரண்டிருப்பார்களா?  

                
நாத்திகராக தம்மை அறிவித்துக் கொண்ட சிலருக்கு அமோக மக்கள் ஆதரவு இருந்திருப்பது வரலாறு. அது விரும்பத் தக்கதா என்பது முற்றிலும் வேறு விஷயம். நீதிமானாக இருக்கும் நாத்திகரை மக்கள் நிராகரிக்க இயலாது.

ப: காந்தியின் பின்னால் சேர்ந்த கூட்டம், சுயராஜ்யம் என்னும் நல்ல, உயர்ந்த நோக்கத்திற்காக சேர்ந்த கூட்டமே. அவர் ஆத்திகர் என்பதால் (மட்டும்) அல்ல. 
                           

74 கருத்துகள்:

  1. நண்பர் டி.டி. குடும்பத்துல பிரச்சனை வரக்கூடாதேன்னு நினைத்து சொன்னேன். பாவம் இப்போ இந்தப்பொண்ணு வீட்டில் என்ன புகையப்போகுதோ ?

    காந்தியின் பின்னால் நின்னவர்கள் கூட்டம் அவர் ஆத்திகராக இருந்ததற்காக என்று சொல்ல இயலாது.

    காரணம்...

    பெரியார் பின்னால் நின்றவர்கள் கூட்டம் அவர் நாத்திகர் என்பதற்காக மட்டுமல்ல

    இரண்டு கூட்டங்களுமே ஏதோவொன்றை சுதந்திரத்தை, சுயகௌரவத்தை வடிகால் தேடிச் சேர்ந்த கூட்டம்.

    இன்று எந்த அடிப்படையின் காரணமாக தலைவனை தேடி ஓடுகின்றனர் என்பது விளங்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய கூட்டங்களின் ஒரே லாஜிக்: பைத்தியக்காரனைச் சுற்றிப் பத்து பேர்.

      நீக்கு
  2. ஆஹா இன்று புதன் நம்ம கௌ அண்ணா டே ஆச்சேனு மறந்தே போச்சு....5.30க்கு முன்னாடி வந்தும் இங்க வர முடியலை...கில்லர்ஜி என்னாச்சு இன்று இப்படி முதல்ல வந்துட்டீங்க ஹாஅ ஹா ஹா ஹா

    எல்லோருக்கும் இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம், கில்லர்ஜி துரை அண்ணா அக்காஸ், அண்ணன்ஸ், தம்பிஸ் (இதை விட்டா நெல்லை ரொம்பவே வருத்தப்படுவார் அவருக்கு நான் தம்பி என்று சொல்லுவது அவ்வளவு பிடிக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....) நட்பூஸ்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. மேலும், நான் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கலர் சட்டை என்று standardize பண்ணி வைத்துள்ளேன். போட்டிருக்கும் சட்டை நிறத்தை வைத்தே அன்று என்ன கிழமை என்பதைத் தெரிந்துகொண்டுவிடுவேன். //

    போட்டிருக்கும் சட்டை// ஹா ஹா அன்று என்ன கிழமைனு நினைவிருந்தால் தானே அந்தக் கலர் சட்டை போட முடியும்!!!! அது சரி ஒரு வேளை கலர் சட்டை மாறிவிட்டால் கிழமையும் மாறிடுமே ஹிஹிஹி..இது சட்டையிலிருந்து கிழமை கண்டுபிடிப்பா இல்லை கிழமையிலிருந்து சட்டைகலரா..ஹா ஹா ஹ...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஆகா....
    அடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.....

    வாழ்க நலம்... வளர்க நலம்...

    மற்றபடிக்கு,

    அன்பின் KGG, கீதா/ கீதா, ஜி மற்றும்
    மு.வ.சங்கத்தினர் அனைவருக்கும் நல்வரவு.....

    ( அதுதான் ஏற்கனவே வந்துட்டாங்களே!..)

    இருந்தாலும் ஒரு மரியாதை தான்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ( அதுதான் ஏற்கனவே வந்துட்டாங்களே!..)

      இருந்தாலும் ஒரு மரியாதை தான்!...//

      ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  5. இன்னிக்கு புதன்கிழமைனு நினைவிலே இருந்தது. சீக்கிரமும் வந்துட்டேன். ஆனாலும் இந்தப் பதிவுக்கு வரலை! அது ஏன்? இஃகி, இஃகி!

    பதிலளிநீக்கு
  6. பதில் சொல்றவங்க இப்போக் குறைஞ்சுட்டாங்களே! நீலவண்ணக் கண்ணர் இன்னும் பிசியா இருக்காரா? மற்ற ஆ"சிரி"யர்கள் எல்லாம் ஏன் பதில் சொல்லலை?

    பதிலளிநீக்கு
  7. கில்லர்ஜி!!!! ஹா ஹா ஹா செம பல்பு போல உங்க கேள்விக்கு!!!! ஹா ஹா ஹா

    அது சரி கில்லர்ஜி நீங்க என்னா சிரிப்பு அது!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி ரொம்ப சந்தோஷத்துல இருக்காரு. கேஜிஜி சார் ஏதோ ஞாபகத்துல கண்ணாம்பா, கருத்தாம்பான்னு ஏதோ படத்தைப் போடாமல் கில்லர்ஜி குறை சொல்லாத படத்தைப் போட்டிருக்கிறார்களே என்று...

      நீக்கு
    2. நிஜத்தைக் காணாமல் நிழலால் சந்தோஷம் வந்து விடுமா ?

      நீக்கு
  8. கேள்விகள் எல்லாம் நான் கேட்கிறாப்போல் அசட்டுத்தனமாக இல்லாமல் இன்னும் கொஞ்சம் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அறிவுஜீவித் தனமாக இருந்திருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி பதில் பகுதியே ஆசிரியர்களின் திறமையை மதிப்பிடத்தான். அவங்கதான் எந்தக் கேள்வியையும் சொல்ற பதில் மூலமா இன்டெரெஸ்டிங் ஆக்குவாங்க, பழைய அரசு பதில் போல

      நீக்கு
    2. ஒரு சமயத்தில் 'குறியீடு'நம்மை பாடாய் படுத்தியது. இப்போது அறிவு ஜீவியா?

      நீக்கு
  9. வரேன், மத்தியானமா! ஸ்ரீராமை இப்போல்லாம் ஆறு மணிக்குப் பார்க்க முடியறதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா நானும் சொல்ல வந்தேன் நீங்களே சொல்லிட்டீங்க..!!!! நானும் இனி மதியமாகத்தான்...

      கீதா

      நீக்கு
  10. மணத்தக்காளிக் கீரை கிளை நட்டால் வருதா ஆஹா..அப்படினா இனி செஞ்சுட வேண்டியய்துதான்...மிக்க நன்றி இந்தத் தகவலுக்கு...

    ஏஞ்சல் ஹப்பா ஜூப்பர்!!! ரூம் போட்டுச் ஜிந்திக்கராங்க....(பூஸார் காதில் புகை வந்து ஜெர்ரியைத் துரத்தாமல் இருக்கக் கடவது!!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மணத்தக்காளிக் கீரை கிளை நட்டால் வருதா ஆஹா..அப்படினா இனி செஞ்சுட வேண்டியய்துதான்...மிக்க நன்றி இந்தத் தகவலுக்கு...// கீதா ரங்கனுக்கு இந்த விஷயம் தெரியாதா? ஆச்சர்யமாக இருக்கிறது.

      நீக்கு
    2. கீதா இப்போ போன ஜூலை நாலு குச்சி நட்டு தொட்டி நிறைய வளர்த்தேன் மணத்தக்காளி .பருப்புக்கீரை ராஜ்கிரா தண்டுக்கீரை புளிச்சக்கீரை எல்லாமே இப்படி குச்சிமட்டும் நட்டு வளர்க்கலாம்

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  12. தற்செயல் நிகழ்வுகளுக்கு அளித்த பதில் போல் எனக்கும் அனுபவம் இருக்கிறது.
    நான் மனதில் நினைக்கும் கேள்விகளுக்கு எப்படியும் விடை கிடைத்து விடும் யார் மூலமாவது.

    தேவகோட்டை ஜி முன்பு ஒரு பதிவில் பிரிந்த குடும்பங்களை சேர்த்து வைத்த அனுபவத்தை எழுதி இருந்தார். திறமையாக செய்வார்.

    பதிலளிநீக்கு
  13. பாட்டு ஒண்ணு பாடு தம்பி
    பசியைக் கொஞ்சம் மறந்திருப்போம்.
    உண்மையில் இசை பசியை மறக்கச் செய்யுமா. இது கேள்வி......1

    என் முக நூல் கேள்விக்குப் பதில் சொன்னதுக்கு வளர நன்னி.

    மதன் கேள்வி பதில் நினைவிருக்கிறதா. 2

    அதில் எங்கோ வான்வெளியில் உலவும் சங்கீத அலைகள் நம் காதிலும் விழ வாய்ப்புண்டு
    என்று சொல்லி இருப்பாரே.. எனக்கு அதில் நம்பிக்கை வருகிறது.

    எழுந்திருக்கும் போதே ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் க் என்கிற கதைதான்.
    மிக நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா.... இசைக்கு பசியை மறக்கச் செய்யும் சக்தி இருந்தால் சாபாக்களில் இருக்கும் கான்டீன்கள் எல்லாம் நலையில் துண்டைப் போட்டுக்கொண்டு செல்லவேண்டியதுதான். ஆரபி அருமைன்னு சொல்லிக்கிட்டே காபி சாப்பிடறவங்களும், கானடா ஆஹான்னு சொல்லிக்கிட்டே அடை அவயலை அமுக்கறவங்களும்தான் அதிகம். மைலாப்பூர்ல இருந்துட்டு இப்படிக் கேட்டுட்டீங்களே

      நீக்கு
    2. மிகவும் ஸ்வாரஸ்யமான விஷயங்களில் லயிக்கும் பொழுது பசி,தாகம் மறந்து போகுமே. அப்படிப்பட்ட பாட்டை சொல்லியிருப்பாராயிருக்கும்.

      நீக்கு
    3. பசியை விட சில ராகங்களுக்கு நோயை குறைக்கும் சக்தி உண்டு என்று கேள்வி பட்டிருக்கிறேன். அதைப்பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனந்தபைரவி ராகம் பிரஷரைக்குறைக்குமாம். மேலும் உற்சாகமான மன நிலையை உண்டாக்குமாம். குறிஞ்சி, தேஷ் போன்ற ராகங்கள் நம் மனதை அமைதி படுத்துவதை உணர முடியும். இதைப்பற்றி என்னை விட கீதா ரங்கனால் இன்னும் விரிவாக கூற முடியும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    4. பா.வெ.மேடம்... பலர் பாடுவதைப் பார்த்து நமக்கு பிரஷர் ஜாஸ்தியாகிறதே. சிலர் பாடும்போது கையை மாவாட்டுவதுபோல் ஆட்டியும், சஞ்சய் போன்றவர்கள் (அவர்தானா மற்றவர்களான்னு தெரியலை), ஸ்வரம் பாடும்போது, கான்ஸ்டிபேஷன் வந்ததுபோல் முகத்தை வைத்துக்கொள்வார்களே... அதைப் பார்த்து நமக்கு பிரஷர் எகிறாதோ? அவர் என்ன ராகம் பாடினால் என்ன?

      நீக்கு
    5. பானுமதி, கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளின் இசை நிகழ்ச்சியைக் கேட்டிருப்பீங்கனு நினைக்கிறேன். அவர் ஒவ்வொரு ராகத்தின் பலன்கள், தீர்க்கும் நோய்கள் எனச் சொல்லி அந்தக் குறிப்பிட்ட ராகங்களில் உள்ள பாடல்களைப் பாடுவார். முன்னெல்லாம் பொதிகையில் அடிக்கடி அவர் நிகழ்ச்சி இருக்கும். இப்போப் பார்த்தே சில வருடங்கள் ஆகின்றன. திருமதி சௌம்யாவும், அவர் சிநேகிதர் ரவிகிரணும் கூட இந்த மாதிரித் தான் ஒரு ஆராய்ச்சி செய்கின்றனர். அதோடு பழம்பண்களைப் பற்றியும் ஆய்வு செய்கின்றனர்.

      நீக்கு
    6. அசோகன் என்பவர் ஒரு தளத்தில் கொடுத்திருந்த லிஸ்ட்டை இங்கு பகிர்கிறேன். அவர்தம் லிங்க் கீழே...

      https://plus.google.com/+asokanvvr


      சிறுநீரகப் பிரச்சனை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி

      கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய – அரிகாம் போதி

      மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட – ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா, நீலாம்பரி

      மனம் சார்ந்த பிரச்சனை தீர – அம்சத்வனி, பீம்பிளாஸ்

      இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – சந்திரக கௌன்ஸ்

      நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – பகாடி,ஜகன் மோகினி

      பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம்- அடாணா

      மனதை வசீகரிக்க, மயக்க – ஆனந்த பைரவி , உசேனி, கரகரப்பிரியா

      சோகத்தை சுகமாக்க – முகாரி , நாதநாமக்கிரியா

      பாம்புகளை அடக்குவதற்கு – அசாவேரி ராகம்

      வாயுத்தொல்லை தீர – ஜெயஜெயந்தி ராகம்

      வயிற்றுவலி தீர – நாஜீவதாரா

      நீக்கு
    7. நெ.த. ஹாஹாஹா! கச்சேரி கேட்கத்தான், பார்ப்பதற்கு இல்லை. ஓ.சி.பாஸ் கிடைத்தால் கூட முதல் வரிசையில் உட்காரக் கூடாது. சுஜாதா சொன்னது போல் தொலைகாட்சியில் பாடகரின் உள்நாக்கு வரை காட்டி விடுவதால், 'நோ'.ரேடியோ அல்லது,யூ.எஸ்.பி., அல்லது கண்ணை மூடிக் கொண்டு விடுங்கள்.

      நீக்கு
  14. அனைவருக்கும் காலை வணக்கம். அடேங்கப்பா அதற்குள் இத்தனை பேர் குழுமி விட்டார்களா?

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  16. தொகுப்பின் மூலமாக பல புதிய செய்திகளை அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  17. 'இறைவன் கொடுத்த வரம்' என்பதால் 'ஹை ஜாலி' ஹிஹி...

    பதிலளிநீக்கு
  18. //கீதா சாம்பசிவம்:

    இன்னிக்கு புதன்கிழமைனே மறந்து போச்சு! இப்படிக்கிழமைகளை மறக்கும் அனுபவம் உங்களுக்கு உண்டா?///

    ஆவ்வ்வ் ஹொலிடே வந்தாலே எனக்கு திகதி நாஅள் எல்லாமே மறந்திடும்.. வெள்ளிக்கிழமை விரதம் என நினைச்சு செக் பண்ணினால் அது சனிக்கிழமையாக இருக்கும்.. சந்தோசம் பொயிங்கும்.. இப்படி பல நாட்கள் நடந்திருக்குது:))

    பதிலளிநீக்கு
  19. ///உங்களுக்கு கிழமைகள் மட்டும் மறந்துபோகவில்லை. இதே கேள்வியை நீங்க ஜூன் ஆறாம் தேதி பதிவிலும் கேட்டிருக்கீங்க என்ற விவரமும் மறந்து போயிட்டீங்க! ///

    ஆவ்வ்வ்வ்வ்வ் ஹா ஹா ஹா ஹையோ கீசாக்கா .. பொல்லுக் குடுத்தே அடி வாங்குறா:)

    பதிலளிநீக்கு
  20. //கில்லர்ஜி:

    இரண்டு D.D.க்களின் புகைப்படங்களையும் இணைத்து குடும்பத்தில் பிரச்சனையை வளர்த்து விடுவது போல் தெரிகிறதே! //

    ஹா ஹா ஹா கில்லர்ஜியும் நோக்குறார்ர்.. அந்தக்காவும் நோக்குறா:)) ஹையோ நேற்று நான் ஒரு கதை எழுதியிருந்தேன் இன்று இப்பூடி ஒரு படம் போட்டிட்டீங்க கெள அண்ணன்... ஹா ஹா ஹா இது நாளைக்கு வீரகேசரியில ஹொட் நியூஸ் ஆக வரப்போகுதூஊஊஊஊஊ ஹா ஹா ஹா..:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப்புள்ள குடும்பத்தில குழப்பத்தை உண்டு பண்ணுவதில் அதிராவுக்கு இம்பூட்டு சந்தோஷம் ஆகாது.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா அதிரா செம காலையிலேயே கில்லரை கலாய்க்க ஆசை ஆனால் ரைம் இல்லை. அந்தச் சிரிப்பை சொல்லலியே ஞானி பூஸாரே!!

      கீதா

      நீக்கு
    3. ஹா ஹா ஹாகீதா ... கில்லர்ஜியின் சிரிப்பே சொல்லிட்டுதே அந்தக்காவிடம் சம்மதத்தை:) ஹையோ வழி விடுங்கோ மீ ரொம்ப நல்ல பொண்ணு:)

      நீக்கு
    4. நான் எங்கிட்டோ மேற்கே பார்த்து சிரித்தது குற்றமா ?

      நீக்கு
  21. ///
    "கிழம் போய்வரேன்" கிளம்பறேன் ஆகி விட்டதோ ? எல்லா சொற்களுக்கும் வேர் கிடைக்குமா ? ஆய்வுக்குரிய வினா .///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தமிழ் நாட்டில் குழந்தையும் கிளம்புறேன் எனத்தானே சொல்லுது...:). இது ஏதோ பேச்சு வழக்கில் இருந்துதான் வந்திருக்குது.

    எங்கட ஊரில் போயிற்று வாறேன்/போட்டு வருகிறோம்ம்... எனத்தான் சொல்வார்கள்.. இது போய்விட்டு வருகிறேன் என்பதன் மருவல்:).. “அப்போ நான் போட்டு வரட்டோ?” என பேச்சு வழக்கில் கேட்பதுண்டு.. சரி போட்டு வாங்கோ என்றதும் புறப்படுவார்கள்.. இல்லை இப்போதானே வந்தீங்க ஏன் அவசரப்படுறீங்க இருங்கோ பின்பு வெளிக்கிடலாம் என்றால் இருந்திடுவார்கள்..

    அதாவது.. நான் வெளிக்கிடப்போறேன் நேரமாச்சு எனவும் சொல்வதுண்டு.

    இப்போ வெளிநாட்டுக்கு வத காரணத்தால் நம் மக்களிடையே இப்பாசை கொஞ்சம் மாறி.. “நான் இறங்கப் போறேன்” என வந்திட்டுது.... ஹா ஹா ஹா அது ஏன் என ஆராய்ந்த இடத்தில், வெளி நாட்டுக்கு வந்த நம் மக்கள் பல மாடிக் கட்டிடங்களில் இருந்து கீழே இறங்குவதனால்..

    அப்போ அப்பாட்மெண்ட்களில் இருந்தால் இறங்கித்தானே வெளியே போகோணும்.. அதனால நான் இறங்கப் போகிறேன் எனப் பேசி அது ஒரு வழக்கமாச்ச்சு.. போன் பேசும்போதும்.. சரி நான் இறங்கப் போறேன் பின்பு பேசுறேன் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலர் 'பார்க்கலாம்' என்று கூறி விடை பெறுவார்கள். பாலக்காட்டுகாரர்கள் "காண்றோம் பின்ன" என்பார்கள்.

      நீக்கு
    2. யேஸ் பானுமதி அக்கா.. பார்க்கலாம் என்பதும் இருக்கு...
      பின்பு சந்திப்போம்.. இப்படி.

      ஆனா துக்க வீட்டுக்கு போனால் மட்டும்... போறேன் எனச் சொல்லிட்டு வரோணுமாம்...

      நீக்கு
  22. //லிவிங் டு கெதரில் பொறுப்பை தட்டிக் கழிப்பது எளிது என்பதால் என்மனம் அதை ஏற்காது. //

    இதுதான் என் கருத்தும்.. ஆனா இது பொறுப்பைத் தட்டிக் கழிப்பது என்பது ஏற்புடையதல்ல.. ஏனெனில் இங்கு வாழும் லிவிங்ருகெதர் வாழ்க்கையில் வெள்ளையர்களைப் பார்த்தால், திருமணம் முடித்து நம்மவர் எப்படி வாழுவோமோ அப்படியே கணவன், மனைவியை தன் செலவிலேயே பார்ப்பதும் உண்டு, வசதிக் குறைவெனில் மனைவியும் உழைச்சு இருவரும் பங்கு போடுவதும் உண்டு.. கணக்கு பார்ப்பதுபோல இல்லை, ஆனா வாழ்க்கை எப்பவும் முறியலாம் ஈசியாக விலத்தலாம்.. என்பதனால் எப்பவும் ஒரு பயம் இருக்க வாய்ப்பு அதிகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னொன்று, இதில் மம்மி டடி எனும் பதவி கிடைக்கும் ஆனா என் கணவர்., மனைவி எனச் சொல்ல முடியாது எப்பவும் மிஸ் தான், இவர் என் பார்ட்னர் எனத்தான் சொல்ல முடியும்...

      நீக்கு
  23. //4, எங்கள் பிளாக் ஆசிரியர்களில் யாருக்கு மறதி அதிகம் ?
    வரிசைப்படுத்தி சொல்லவும் ?///

    ஹா ஹா ஹா அஞ்சுவுக்கு இக்கேள்வி இப்போ ரெம்ம்ம்ம்ப முக்கியம்:) ஸ்ரீராம் ஓடிட்டார் பாருங்கோ:).

    ///
    10, சமீபத்தில் அதிகம் வெறுப்பேற்றிய ஒரு சம்பவம் ?///

    ஹையோ அந்த பாழாய்ப்போன பிக்கு பொஸ்ஸுதேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  24. கிளம்புகின்றேன் என்பதுதான் கிளம்பறேன் என்று மருவியுள்ளது. போ, செல், கிளம்பு என்பதெல்லாம் வேர் வினைச் சொற்கள்.

    கிளம்புகின்றேன் என்பதில் ஒரு நாகரீகம் இருக்கு (தமிழர் மரபு). போறேன் என்பது முற்றுச் சொல். அதாவது, இனி பார்க்கப் போவதில்லை என்ற மறைந்த செய்தி இருக்கு. அதனால் பெரும்பாலும் போய்ட்டு வரேன் என்று தான் சொல்வாங்க. அல்லது 'வரேன், வரட்டுமா, வருகிறேன்' என்றெல்லாம் சொல்வாங்க. அதுல, 'போயிட்டு' என்ற சொல் மறைந்திருக்கும்.

    சர்ச்சுகள்ல, 'சென்று வாருங்கள் பூசை முடிந்தது' என்றுதான் சொல்லி முடிப்பார்கள். பங்கேற்றவர்களும் 'ஆமென்' என்று சொல்லி கலைந்து செல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லைத்தமிழன் அம்மா எப்பவும் போறேன் என்ற சொல் வாயில் வரவே கூடாதுன்னு சொல்வாங்க .ஒரு சம்பவம் சர்ச் போயிட்டு வந்து சொல்றேன் .
      நான் கிளம்பறேன் என்றே எப்பவும் சொல்றது .

      நீக்கு
    2. நெல்லை எங்க பிறந்த வீட்டில இது ரொம்பவே ஸ்ட்ரிக்ட்லி ஃபாலோவ்ட்..ஆமா போய்ட்டு வரேன்னுதான் சொல்லணும். கிளம்பறேன் அலவ்ட். ஆனா போறேன்னு மட்டும் சொல்லக் கூடாது...

      ஏஞ்சல் உங்க சம்பவம் என்னவோ வெயிட்டிங்க். பைதபை உங்க ப்ளாக் நான் உள்ளே போக அனுமதி மறுக்கிறதே!!! ரொம்ப நாளா வரலைனு கோபமோ அதுக்கு ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. அல்லோ மிஸ்டர் அஞ்சூஊஉ போறேன் என்றாலும் கிளம்புறேன் என்றாலும் ஒண்ணுதான்ன்ன்ன்...

      போயிட்டு வாறேன் எனத்தான் சொல்லோணும்

      நீக்கு
    4. ஹலோ மியாவ் வேணாம் வந்து அடிப்பேன் :)
      ஹாஸ்பிடலில் காலுடைஞ்சி படுத்திருக்கிறவரை பார்த்து கிளம்பறேன்னு சொல்றது சரியா :)
      இல்லை (குணமாகாரத்துக்கு நாளாகும்போல )அதனால் இப்போ போயிட்டு திரும்பியுயம் வரேன்ன்ன் னு சொல்வீர்களா :)
      இதுக்குதான் நாங்க ஸீயூ லேட்டர் alligator னு ஜாலியா ஆங்கிலத்தில் சொல்லிடுவோம் :))

      நீக்கு
    5. நான் நெல்லைத்தமிழன் சொன்னா அதை மட்டுமே ஏத்துப்பேன் அவர் கிளம்பறேன் சரின்னு சொல்லிட்டார் :)

      நீக்கு
    6. கீதா பிளாக் டெம்பரரியா மூடி வஸ்ச்சிருக்கேன் :) போஸ்ட் புதுசு போடும்போதே திறப்பேன் .அது எப்போன்னு தெரில :))))))))))

      நீக்கு
    7. எங்க உறவினர் ஒரு அங்கிள் ஊருக்கு புறப்படும்போது அவர் மனைவிகிட்ட அன்னிக்கின்னு பார்த்து சரிம்மா போறேன் னு சொல்லிட்டார் அந்த ஆண்ட்டிக்கு ஒரே அப்செட்ட் அபசகுனம் போக வேணாம் அப்படின்னு சொல்லி இருக்காங்க ஆனாலும் அவர் கிளம்பிட்டார் ..மிட்நைட் ரயில் ஆக்சிடன்ட் வாணியம்பாடி இல்லின்னா தேன்கனிக்கோட்டை இல்லின்னா விழுப்புரம் எந்த இடம்னு தெரில ரயில் எல்லாம் கவிழனு நிறைய கஷுவலிட்டிஸ் ..ஆனா அங்கிள் தப்பித்தார் கடவுள் புண்ணியத்தால் அதோடா 10 பேரையாச்சும் காப்பாத்தி விட்டாராம் பிக்காஸ் அவர் டாக்டர் .

      நீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    கேள்வி பதில்கள் எப்போதும் போல் நன்றாக உள்ளது. இங்கு ஒருவருக்கொருவர் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த கே. ப காட்டுகிறது. மிகவும் ரசித்துப் படித்தேன். நிறைய விஷயங்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. கேள்விக் கணைகளை தொடுப்பவர்களுக்கும், பதிலுக்கு சாமர்த்தியமாக கணைகளை எதிர் கொண்டு முறியடிப்பவர்களுக்கும், பாராட்டுக்கள். நன்றிகள். அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  26. எனது கேள்விக்கு மிக அழகான பதிலைக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. அருமையான பதில்!!!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  27. கீதா: துளசியின் கேள்விக்கு பானுக்காவின் பதில் செம. அதேதான் எனக்கும். எதற்காக எல்லாவற்றிற்கும் இறைவனை பழி சொல்கின்றனரோ? இறைவனுக்கும் அதற்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை..

    துளசி: சகோதரி பானுமதி அவர்களின் பதில் வாசிக்கக் கொஞ்சம் கடினமாக இருந்தது. சிறிய எழுத்தாக இருந்ததாலோ என்னவோ. அப்புறம் நிதானமாக வாசித்ததும் மிகவும் சரி என்றும் ஆப்ட் என்றும் தோன்றியது. என் கருத்தும் அதேதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா & துளசிதரன்: கேரளா வெள்ளம் பற்றிய என் கேள்விக்கு எங்கள் பிளாக் ஆசிரியர்கள் அளித்த பதிலை நான் அளித்ததாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். எல்லாம் புகழும் எங்கள் ப்ளாகிற்கே. உங்கள் நன்றியை அவர்களுக்கு ஃபார்வர்ட் செய்கிறேன்.

      நீக்கு
  28. வார நாட்களில் தொடர் விடுமுறை கழிஞ்சபின் எனக்கு கிழமைகளில் குளறுபடி வரும்.

    கில்லர்ஜி அண்ணாவோட ஜோடி பொருத்தம் சூப்பர்

    பதிலளிநீக்கு
  29. எனது கேள்விகளுக்கு பதிலளித்த ஆசிரியர்களுக்கு நன்றி :)

    பதிலளிநீக்கு
  30. 1,கிசுகிசுக்கள் இப்போ நிறையவும் வேகமாக பரவ காரணம் என்ன ?
    2,பொய் தகவல்களை பரப்புபவர்களுக்கு அதிக பட்ச தண்டனை என்ன கொடுக்கலாம் ?
    3, பல பத்திரிகைகள் மற்றும் பிரபல சேனல்கள் மண வாழ்வில் வெற்றிபெற்ற சினிமா நடிக தம்பதியரை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுகிறார்கள் இத நம்பி இளம் பிள்ளைகள் காதலில் விழுகிறார்கள் .
    சினிமா நட்சத்திரங்களின் காதலுக்கு ஊடகங்களில் இப்படி ஒரு முக்கியத்துவம் தேவையா ?

    பதிலளிநீக்கு
  31. 4,உங்களுடைய மேஜிக் charm என்ன ? அதை யாரிடமிருந்து பெற்றீர்கள் ?
    5,அம்மா செய்த கொழுக்கட்டை உங்கள் வீட்டம்மா செய்த கொழுக்கட்டை எது பெஸ்ட் ????
    இதற்க்கு 5 காரணங்களை கூற வேண்டும் :)
    6, ரோட்டில் போகும்போது எதேச்சையாக வசனம் பெயர் அல்லது படம் இவை பார்த்துவிட்டு போயிருப்போம் அது பின்னாளில் உங்களில் தாக்கத்தை அல்லது பலனை கொடுத்திருக்கா ?? ஏற்கனவே கீதாக்காவுக்கு பதில் கொடுத்திருக்கிங்க தற்செயல் நிகழ்வுகள்ன்னு அதில் கேள்விக்கு விடைகள் கிடைச்ச மாதிரி ஆனாலும் வேறு பதில்களும் இருக்குமே அதை சொல்லுங்க ?
    7,நாம் எடுக்கும் முடிவுகளில் எது சிறந்தது அல்லது இதுதான் சிறந்தது என்று எப்படி தீர்மானிப்பது ?
    8,இது கூடவா தெரியாதுன்னு குழந்தை கேட்கும்போது வரும் ஆனந்தம் பெரியவங்க அதாவது மனைவி கேட்கும்போது வருவதில்லையே ஏன் ?
    9,அ ,ஆ ,இ ,ஈ தெரியும் அதென்ன அ நா ஆவன்னா ???
    10,முகத்துக்கு மேக்கப் அவசியமா ?

    பதிலளிநீக்கு
  32. நேற்று இங்கே வர இயலவில்லை. இப்போது தான் வரமுடிந்தது.

    கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  33. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அருமை

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!