ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

ஞாயிறு 180930 : மலரே... ஓ.. மலரே... நீ என் மலரல்ல... நானும் வண்டல்ல...

சென்ற வாரம் மொட்டு படம் போட்ட உடன் வல்லிம்மா "மொட்டு படம் மட்டும் போட்டிருக்கிறீர்கள், மலர்ந்த படத்தையும் போட்டு விடுங்கள் ஸ்ரீராம்.."  என்று சொல்லி இருந்தார்.
  எனவே அதே இடத்தில் அடுத்த நாள் மலர்ந்திருந்த இந்தப் பூவைப் படம் எடுத்தேன்.  நான் எடுக்கும் படங்களில் ஏதாவது ஒரு படத்தை அல்லது சில படங்களை கூகிள் கொஞ்சம் மெருகூட்டிக் கொடுக்கும்.  அந்த வகையின் இந்த மலரை சற்றே அழகூட்டிக் கொடுத்தது.  ஆனாலும் நான் எடுத்ததே அழகாய்தான் இருந்ததாக்கும்... "ஒரு புஷ்பம் மலர்ந்தது...   அதன் இஷ்டம் தெரிந்தது...." 



அந்த மலரைப் படம் எடுக்கும்போது அருகே இருந்த மலரொன்று "ஏன், என்னைப் பார்த்தால் மலர் போலத் தெரியவில்லையா?" என்று சற்றே சினத்துடன் கேட்டது.   குப்பை மேடுகளில் மலர்வதால் இந்த மலர்களை யாரும் கண்டு கொள்வதில்லை என்பதால் அவை நிம்மதியுடன் தங்கள் ஆயுளை முடிக்கின்றன.  "மலரே...  ஓ..  மலரே...   நீ என் மலரல்ல...  நானும் வண்டல்ல..."



தோட்டம் வைத்திருக்கும் எல்லோரும் செடி, கொடி, மரங்களைப் பற்றி அறிந்தவர்களாய்த்தான் இருக்கிறார்கள்.  இந்த மரம் ஆண் மரமாம்.  பூக்குமாம்...  காய்க்காதாம்...   நண்பர் சொன்னார்.  





அக்டோபர் இரண்டாம் தேதி வருகிறது..   சினிமா விகடனில் காந்தியைப் பற்றி நிறைய போட்டிருக்கிறார்கள்.நாம் மட்டும் விடுவானேன்..   காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உடனே கிளம்பி கடற்கரைக்குச் சென்றேன்.  எடுத்தேன் இந்தப் புகைப்படத்தை.  வெளியிட்டு விட்டேன்.  இது நேற்று எடுத்த புகைப்படம்..  "புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக..?  தோழா ப்ளாக்கர் நமக்காக...!



ஒரு நண்பரின் இல்ல விழாவுக்காக ஜி ஆர் டி யில் வாங்கப் பட்ட பரிசுப்பொருள்.  வெள்ளி.  நான் வாங்கிய அன்று வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 40.36 பைசா.   இது இரண்டும் சேர்த்து பதினான்கு கிராம் இருந்தது.  கண்ணாடி மேசையின் கீழ் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் வெள்ளித் தட்டுகள்.   "விளக்கேற்றி வைக்கிறேன்..  விடிய விடிய எரியட்டும்.."


தட்டுகள் படத்தில் விழாமல் முடிந்தவரை பார்த்து எடுக்கப்பட்ட புகைப்படம்.  புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள்.  கிஃப்ட் பேப்பர் சுற்றித் தந்து விடுகிறோம் என்று சொன்னார்கள்.  "விளக்கு வைப்போம்...  விளக்கு வைப்போம்..."



ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கஸ்டமர்களுக்கு ஒரு பொம்மை பிடித்து விட்டால்...?  அதனால் வரிசையாய் ஒரே பொம்மைகள்..  ராமானுஜரும் கொலுவில்..  "பார்த்துச் சிரிக்குது பொம்மை..."


சிறு மண்டபத்துக்குள் பெருமாள்.  பேப்பர் மெஷ் பொம்மையாம்.  மூவாயிரத்து ஐநூறு ரூபாயாம்.  முன்னதாகவே வந்து விட்ட பொம்மைக்கு கடையில் டுக்கப்பட்ட புகைப்படங்கள்.  "திருப்பதி மலை வாழும் வெங்கடேசா..."


இந்தப் படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தபோது வித்தியாசமான பிள்ளையார் என்று சொல்லி இருந்தேன்.  பானு அக்கா 'பிள்ளையார் படத்தையே காணோமே எப்படிச் சொல்வது' என்று கேட்டிருந்தார்.  'மொட்டைப்பிள்ளையார் கோவில்' என்று எங்கேயோ எதையோ காதில் வாங்கி கொண்டு இந்த மாடலில் பிள்ளையார் பொம்மை செய்து விட்டார்கள் போலும்...  "பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா நீ கருணை வச்சா நானும் ஹீரோப்பா..."


இந்தப் படத்தில் பள்ளி கொண்ட பெருமாள்(கள்) பிள்ளையார் மடியில் தலை வைத்துப் படுத்திருப்பது போல இல்லை?!!   ஆந்திரா வெங்கட்டாபுரம் பழமையான கோவிலில் சில கொள்ளைக்காரர்கள் மந்திரம் மூலம் புதையல் எடுக்க முயற்சிப்பது தெரியாமல் பெருமாள் விஷ்ராந்தியாகப் படுத்திருக்கிறார்.  அவர்கள் என்னடாவென்றால் போலீஸாருக்கு முன்னால் எலுமிச்சம் பழத்தைப் பறக்க வைத்து வித்தை காட்டுகிறார்கள்!    "மடி மீது தலைவைத்து வாங்கும்வரை தூங்கலாம்.."



இவர் எங்கள் காம்பௌண்ட் வீரர்.  வெளியில் போய்விட்டு வரும்போது வழியில் அமர்ந்திருக்கிறார்.  விஷமக்காரர்.   சட்டென நெஞ்சு வரை ஏறி நிற்பார்.  வால் ஆடிக்கொண்டு இருக்கும்.  அவரை ஆற்றுப்படுத்தி விட்டுதான் மேலே செல்ல முடியும்..  "நண்பனே...  எனது உயிர் நண்பனே..   நீண்ட நாள் உறவிது..   இன்றுபோல் என்றுமே தொடர்வது..."



நான் திட்டுவேன் என்பதால் கவனிக்காமல் அமர்ந்திருப்பது போல நடிக்கிறார்.  ஒரு குரல் கொடுத்தால் போதும்..   அல்லது நைஸாய் தாண்டிச் சென்றாலும் போதும் ஓடிவந்து விடுவார்...   "பழகும் வகையில் பழகிப் பார்த்தால் மிருகம் கூட நண்பனே..."



ஞாயிறு ஃபோட்டோ போடுவதால் பார்ப்பதை எல்லாம் ஃபோட்டோ எடுக்கத் தோன்றுகிறது. கடமை உணர்ச்சி.   இது மாமா பெண் காரில் இருந்த பொம்மை...   கார் செல்லும்போது அது தலையாட்டி தலையாட்டி 'என்னை ஃபோட்டோ எடேன்..' என்றது.   எடுத்து விட்டேன்!    "நீயும் பொம்மை..  நானும் பொம்மை..  நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை..."


அன்னையின் கண்களும் அன்னையின் புருவங்களுக்குக் கீழ் மூக்கின்முன் ஒரு பாபாவும்..    இவர் முகத்தைப் பாருங்கள்...  அப்புறம் கீழே உள்ள இன்னொரு பாபாவையும் பாருங்கள்.  இந்த பொம்மையின் மேலேதான் அவரும் பெரிய சைஸில் இருக்கிறார்.  "கண்களுக்கென்ன...   காவல் இல்லையோ..."



இந்த பாபாவிடம் கருணை சற்று குறைவதாக தோன்றியது எனக்கு!    அல்லது யாரோ பாபா வேடத்தில் இருப்பது போல..  இந்த பொம்மையைச் செய்தவர் குறை.    மனம் எங்கோ இருக்க, கைகள் வேலை செய்திருக்கும் போல...!  "கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் சிலையோடு போராடுது..."


சமீபத்தில் சென்றிருந்த ஒரு சஷ்டியப்த பூர்த்தி.  அதில் ஹோமத்துக்கு வளர்த்த அக்னியை படம் எடுத்தேன்.  படம் எடுத்தபின் பார்த்தால் அக்னியில் சில உருவங்கள் தெரிவது போல தோற்றம் காட்டும்,  அந்த சுவாரஸ்யத்துக்காக இந்தப் படங்கள்..   இந்தப் படத்தில் ஒரு முனிவர் உச்சியில் அமர்ந்திருப்பது போல எனக்குத் தோன்றியது.  "தீ...  தீ...  தித்திக்கும் தீ..."



இந்தப் படத்தில் ஏதோ பயங்கர உருவம் ஒன்று கண்ணில் படுவது போல...  "கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா?"



என்னதான் அலைபேசித் திரையில் கைவைத்து மலரை ஃபோகஸ் செய்தாலும் அது இலைக்குதான் முக்கியத்துவம் தருகிறது.  நான் அரசியல் பேசவில்லை.  ஆனாலும் மலரை ஓரளவு வெண்பஞ்சுக் குவியலாகக் காட்டுகிறதே... அது போதும் என்று விட்டுவிட்டேன்.    "பூவில் வண்டு கூடும்..  கண்டு கூடும்..  கண்கள் மூடும்..."



அழகிய ரோஜா மொட்டு.  பார்த்து நாளானதால் க்ளிக்கிவிட்டேன்.   ஒரு முன் அறிவிப்பு :  அடுத்து வரும் மலர் இந்த மொட்டில் மலர்ந்தது அல்ல!  "நேத்து பூக்காத ரோஜா மொட்டு...  பறிக்கக் கூடாது லேஸாத் தொட்டு..."


இந்த ரோஜாப்பூ மேலே படத்தில் காணப்படும் மொட்டில் மலர்ந்தது அல்ல என்று போர்ட் மாட்டி விடலாம்.  அந்த மொட்டுக்கு அருகில் இருந்த பூ..  "ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்..." என்று பாடலாம்..     ஆனால் முத்தம் எல்லாம் வேண்டாம்.   வாயைக் கொண்டு போனால் முள் குத்தி விடும்!


ரோஜா என்றாலே அழகுதான் இல்லை?  அதுதான் வேறொரு கோணத்திலிருந்து மறுபடியும் அதே ரோஜா..  "ராஜாவின் ரோஜா...   கன்னம் ரெண்டும் மின்னும் வைரம் காதல் சின்னங்கள்..."



மேலே பார்த்த பெரிய நந்தியாவட்டையின் இளைய சகோதரி..  இவளுக்கு ஒரு வருத்தம் உண்டு.  இவளை பற்றி பாட பாடலே இல்லையாம்.  "உன்னைப் பற்றி பாட தமிழில் வார்த்தை போதவில்லை" என்று சமாதானப் படுத்தி வைத்திருக்கிறேன்!  சிறுமலர்.  "சின்னஞ்சிறுமலர்...  பனியினில் நனைந்து..."  இப்போ திருப்திதானே வெண்மலரே?



காலைச் சூரியனோ மாலைச் சூரியனோ..  அழகுதான்.   நண்பர் அப்பாதுரை கூட வாட்ஸாப் க்ரூப்பில் அலுக்காமல் இவ்வகைப் படங்கள் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.  நமக்கும் பார்க்க அலுப்பதில்லை!  அதுமாதிரி இந்த காலைக் காட்சியை படம் எடுத்தேன்.  கண்கள் பார்க்கும் அழகை புகைப்படங்களால் முழுதாகக் காட்ட முடியாது.   நான் எடுத்த இந்தப் படத்தையும் கூகிளுக்கும் பிடித்துப்போய் ஸ்பெஷல் எஃபெக்ட் எல்லாம் கொடுத்து திருப்பித் தந்தது.  எனினும் நான் இங்கு நான் எடுத்த ஒரிஜினல் புகைப்படத்தையே தருகிறேன்!  "காலைத் தென்றல் பாடி வரும் ராகம்..  ஒரு ராகம்..."

112 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, எல்லோருக்கும்

    தில்லிலருந்து ஸ்வீட்டா வந்து இறங்கறேன்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் தில்லிக்கு போனீங்கனா இன்னும் இனிய ஞாயிறாகிடும்!!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  2. பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. துரை அண்ணா உங்க சர்க்கரை அளவுக்குத்தான் நீங்க ரகசியம் வைச்சுருக்கீங்களே!! அதனால தைரியமா தில்லில போய் ஸ்வீட் எடுத்து சாப்பிட்டு வாங்க...ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  3. தில்லில இன்று ஸ்வீட் மேளா...ஸ்ரீராம் நீங்க அங்க வரவே இல்லியே...ஞாயிறும் மீண்டும் வரணும்னு சொல்லிட்டு!! ஹா ஹா ஹா..

    யாருமே அங்கே இல்ல ஸ்வீட்டு எடு கொண்டாடுனு சொல்லி கொண்டாட!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இப்போதான் வர்றேன் கீதா.. இன்னும் டெல்லி போகலை. ஸ்வீட் எனக்கு மிச்சம் வைத்திருக்கிறீர்களா?

      நீக்கு
    2. இருக்கு நம்ம அக்காக்கள் அண்ணங்கள், தம்பிகள் நட்பூக்கள் எல்லாரும் அங்க வருவாங்களே!! அதனால வைச்சுட்டுத்தான் வந்துருக்கேன் நான் இன்னும் முழுசா சாப்பிடலையாக்கும் யாரும் இல்லாததால்!!!!!

      கீதா

      நீக்கு
  4. ஸ்ரீராம் படங்கள் எல்லாம் செம....செம....பைரவர் கண்ணில் பட்டுவிட்டாரே..இதோ வரேன் ஒவ்வொண்ணா பார்க்க

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்.....எண்ணைய் னு இருக்கு பாருங்க ரெண்டாவது படத்துக்கான கமென்டில்....என்னைனு வரணும் இல்லையா

      கீதா

      நீக்கு
    2. நன்றி அதையும், பார்த்தலை பார்த்தாலாகவும் கரெக்ட் செய்துவிட்டேன். நன்றி கீதா.

      நீக்கு
  5. அன்பின் ஸ்ரீராம், கீத்ஸ்/ கீத்ஸ் மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  6. தஞ்சாவூர் கதம்பம் மாதிரி
    எத்தனை எத்தனை சேதி!...

    கண்ணக் கட்டுதடா சாமீய்!...

    பதிலளிநீக்கு
  7. நான் அன்னைக்கே கேக்கணும்..ந்னு நெனச்சேன்...

    புள்ளையாருக்கு ஏன் இன்னும் காது குத்தலை!..

    தாய் மாமன் வர்றதுக்கு லேட்!...

    ஏன்!?..

    காவிரியில தண்ணியக் கண்டதும்
    கருட வாகனம் அங்கே எறங்கிடுச்சாம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளையாருக்கு காது குத்த சரியான ஆணி அம்புடலையாம்! அதான்!

      தாய் மாமன் குறும்புக்காரர் ஆச்சே!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா துரை அண்ணா உங்க கமென்ட் செம ரொம்ப ரசித்தேன் சிரித்து!!!

      கீதா

      நீக்கு
    3. ஹையோ துரை அண்ணன் உங்களுக்கு விசயமே தெரியாதோ?:) அவர் விரதமிருக்கிறாராம்.. எப்போ கலியாணம் முற்றாகுதோ அப்போதானாம் காது குத்துவாராம் ஹா ஹா ஹா எனக்கெதுக்கு பிள்ளையார் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)).. இந்திய அரசாங்கத்தின் புதிய தீர்ப்பு வந்தபின்பு பிள்ளையாருக்கு கவலை எதுக்கு ஹாஅ ஹா ஹா மீ எஸ்கேப்பூஊஊஊஉ:)..

      நீக்கு
    4. பிள்ளையாருக்கு கல்யாணம் ஆயிடுச்சே அதிரா... தெரியாதா? வல்லபை மணவாளர் அவர்!

      நீக்கு
  8. இந்தக் காவல் வீரர் பைரவரை நான் பார்த்திருக்கேனே!!! உங்கள் காம்பவுண்டில். ரொம்பவே ஃப்ரென்ட்லி!!! ஹையோ நான் வந்தப்ப என் கிட்ட வந்து முகர்ந்து பார்த்து - என் வீட்டு ராணிகளின் ஸ்மெல் தெரிந்திருக்குமே!! எனவே முகர்ந்து முகர்ந்து பார்த்து....தன் ஐடென்ட்டிட்டி மார்க்கை பதிக்க எண்ணினார். அது மாத்ரம் வேண்டாம் மோனே!! என்று சொல்லி அவரைக் கொஞ்சினேன்...

    ஐடென்டிட்டி மார்க் என்ன தெரியுமா? என் கால் எதோ தூண் அல்லது சுவர் என்று நினைப்பார்கள் போலும் இந்த பைரவர்கள்...நாட் வி கள்!!! உடனே தங்கள் காலைத் தூக்க முயற்சி செய்வார்கள்....மார்க் அடிக்க!!!ஹா ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளே வரும்போது இவனை யாரும் மிஸ் பண்ண முடியாது கீதா. மனிதர்கள் மீது பொதுவாக இவர்கள் அந்தச் செயலைச் செய்ய மாட்டார்களே... உங்கள் வாகனத்தின் மீது செய்ய முயன்றிருக்கலாம்!

      நீக்கு
  9. பப்பாளியில் ஆண் பெண் உண்டு ஸ்ரீராம்...

    அப்புறம் அந்த ரெண்டாவது பாபா பொம்மை....பார்க்க மனதிற்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது சரியாதக் கண்கள் தீட்டப்படவில்லை...

    அக்னியில் உச்சியில் முனிவர் ஒருவர் கைகளைப் பின்னில் விரித்து வைத்து குதிக்க முயல்வது போலத் தோன்றியது ஸ்ரீராம் எனக்கு...

    மிச்சம் உள்ளதுக்கு இனி மதியம் மேல்தான்.....அல்லது மாலையில்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பப்பாளியில் ஆண் பெண் உண்டு ஸ்ரீராம்...//

      ஆமாம் கீதா... அதைத்தான் சொல்லி இருக்கிறேன்!

      அக்னி உச்சியில் முனிவர்... அதேதான் அதேதான்..

      பாபா பொம்மை... ஆமாம் கண்களில் ஒரு ரௌடித்தனம் தெரிகிறது!

      நீக்கு
  10. மலரின் மொழி அருமை. நீங்க போட்டிருக்கும் பப்பாளி(?) மரம் ஆணோ, பெண்ணோ தெரியலை. ஆனால் பூவில் ஆண் பூ, பெண் பூ என உண்டு. பெண் பூக்கள் பூக்கும்போதே அடியில் காயின் சிறிய வடிவம் இருக்கும். பாகல், அவரை, கொத்தவரை, புடலை, பூஷணி, பறங்கி போன்றவற்றில். ஆனால் முதலில் ஆண் பூக்கள் தான் பூக்கும். வாழையில் முதலில் கண்ணாடி இலை விடும். அப்போப் புரிஞ்சுடும் தார் போடப் போகிறது என!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதாக்கா.. காலை வணக்கம். பூக்கள் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
  11. விளக்குகளைக் கிண்ணம்னு சொல்லும் உங்களுக்கு என்ன பாராட்டுச் சொல்வது என யோசிக்கிறேன். பிள்ளையார் அழகா இருக்கார். விலை தான் யோசிக்க வைக்குது! இப்போல்லாம் பொம்மைகள் விற்கும் விலையில் வாங்கவே தோணுவது இல்லை. ரோஜாக்கள் எப்போவும் அழகு தான். அம்பத்தூர் வீட்டில் படுக்கை அறை ஜன்னலுக்கு வெளியில் ஒரு கொடி ரோஜாச் செடியும் ஒரு செடி ரோஜாவும் இருந்தது. எல்லாம் நினைவுகள் மட்டுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா.. விளக்குகள்தான் அவை.. ஏனோ எனக்கு மறந்துபோய் கிண்ணப் பாடல் வரிகள் நினைவுக்கு வந்து விட்டன...

      நீக்கு
    2. வெள்ளி என்று மட்டும் யோசித்ததால் வந்த முதல் பாடல் வரிகளின் விளைவாக எழுந்தது இரண்டாவது பாடல் வரி.. இப்போது இரண்டையும் மாற்றி விட்டேன் கீதா அக்கா.

      நீக்கு
  12. கொஞ்ச நாட்களாக பாபா பக்தர்கள் அதிகமாகிட்டு வராங்க. இலங்கையில் தமிழர்கள் வசிக்கும்பகுதிக் கோயில் ஒன்றில் பாபா சந்நிதி ஏற்படுத்தப்பட்டதைக் குறித்து விவாதம் நடந்தது. பைரவர்களுக்குக் கொஞ்சம் போல் உணவு போட்டால் கூடப் போதும். விட மாட்டாங்க! தொடருவாங்க! சில சமயம் "திக், திக்" என இருக்கும். நாம் வளர்ப்பவங்க இல்லையே! சஷ்டிஅப்தபூர்த்தியில் அக்னியில் தெரிவது போலவே எங்க வீட்டில் மகா சங்கடசதுர்த்தி அன்று கணபதி ஹோமத்தில் சாக்ஷாத் நம்ம நண்பரே தெரிஞ்சார். எனக்கு மட்டுமோனு நினைச்சு இரண்டொருவரிடம் காட்டியதற்கு அவங்களும் அதையே சொன்னாங்க. இத்தனைக்கும் எனக்குத் தெரியறார் என்பதைச் சொல்லலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா அக்கா.. இப்போ சில கோவில்களில் பாபா சந்நிதி திறக்கப்பட்டு வருகிறது. சிறு பாபா கோவில்களும் நிறைய ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாம் வளர்க்கவில்லை என்றாலும் பழகியவனாயிருந்தால் பயமில்லை. உருவம்தான் பெரிசு அவனுக்கு. குழந்தை மனசு!

      நீக்கு
    2. ஒருமுறை மகா பெரியவர் ஒரு ஹோமத்துக்கு (?) வருவதாகச் சொல்லி காத்திருந்தவர்கள் ஏமாந்துபோய் வரவில்லையே என்றபோது படங்களில் அவர் அக்னியில் வந்து காட்சி அளித்ததைக் காட்டினார் என்று ஒரு வாட்ஸாப் கதை படித்தேன்.

      நீக்கு
    3. இலங்கையில் பாபா பக்தர்கள் அதிகம் கீதா..

      நீக்கு
    4. இங்கும்! என் பாஸே பயங்கர பக்தை!

      நீக்கு
  13. படங்கள் நிறைய. ஒரே நாளில் போட்டிருக்கீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. கொஞ்சம் அதிகம்தான் ஆகி விட்டது போல.. துரை செல்வராஜ் ஸாரும் சுட்டிக் காட்டி இருக்கிறார். ஸாரி... குறைத்துக்கொள்கிறேன்...

      நீக்கு
  14. காலை வணக்கம்.

    தலைநகரில் ஸ்வீட் மேளா - வந்த, வரப் போகும் அனைவருக்கும் நன்றி!

    படங்கள் அழகு. கூடவே உங்கள் கருத்துகளும்.....

    வட இந்தியாவில் விற்கப்படும் சிலைகள்/பொம்மைகள் பெரும்பாலும் அழகாக இருப்பதில்லை. ஃபினிஷிங் சரியாக இருக்காது. கொஞ்சம் மொழுக்கென்று இருக்கும். தென்னிந்திய பொம்மைகளைப் பார்த்து இங்கே இருப்பதைப் பார்த்தால் நிச்சயம் பிடிக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடஇந்தியாவில் செய்த பொம்மையாக இருந்தால் ஓகே... இங்கே செய்த பொம்மை அல்லவா இது! சென்னையில் வாங்கப்பட்ட பொம்மை. நன்றி வெங்கட். உங்கள் வலைப்பூ பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கும் வாழ்த்துகள்.

      நீக்கு
  15. படங்கள் அனைத்தும் அட்டகாசம்...!

    அதை விட...

    அப்போது மனதில் பிறந்த பாடல்கள் பரவசம்...!

    இனி படங்களை போட்டு மனதில் பிறக்கும் பாடல்களை கேளுங்கள் வாசகர்களிடம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை ரசித்ததற்கு நன்றி தனபாலன். வாசகர்களை பாடல் வைகல் கேட்பது கூட நன்றாய்தான் இருக்கும்!

      நீக்கு
  16. படங்கள் வெகு அழகு ஸ்ரீராம். மெரினாவில் நடக்கும் காந்தி தாத்தா வித்தியாசமான கோணத்தில் கவர்கிறார்.
    பப்பாளியில் மட்டுமல்ல, சீதா பழத்தில் கூட ஆண்,பெண் உண்டு. ஆண் பழத்தை ராமா ஃபல் என்பார்கள்.
    அடுத்த முறை யாருக்காவது வெள்ளி பரிசளிக்க வேண்டுமென்றால் சுக்ரா ஜுவெல்லரி செல்லுங்கள். நிறைய கலெக்ஷன்.மொட்டை பிள்ளையார் வெகு அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி, பானுமதி சுக்ரா ஜுவெல்லரியின் பிரான்ட் அம்பாசடரா?இஃகி, இஃகி!

      நீக்கு
    2. //மெரினாவில் நடக்கும் காந்தி தாத்தா வித்தியாசமான கோணத்தில் //

      பானு அக்கா... நேற்று ஆட்டோவில் தாண்டிச் செல்லும்போது சட்டென எடுக்கப்பட்டது! சுக்ரா ஜுவெல்லரியா? எங்கிருக்கிறது அது?

      நீக்கு
  17. பதில்கள்
    1. ராமானுஜரே தான், தேசிகர் இல்லை! கீழே ஏகாந்தனும் சொல்லி இருக்கார்.

      நீக்கு
    2. இரண்டு பேர் இந்த உங்களின் கேள்விக்கு பதில் சொல்லி விட்டார்கள் பானு அக்கா.

      நீக்கு
  18. ஏதோ அந்த தொழிலாளி சாய்பாபா உருவத்தை செய்து வயிறு பிழைக்கிறார்.
    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் திருத்தமாய்ச் செய்தால் இன்னும் லாபம் பார்க்கலாம் அவர்! நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  19. படங்களும் அதற்கேற்ற பாடல் வரிகளும் அருமை.
    முதல் பாடல் ஏ.எம் . ராஜா பாடல். கேட்டு பல வருடங்கள் ஆச்சு.
    திண்டுக்கல் தனபாலன் அவர்கள் யோசனையும் நன்றாக இருக்கிறது.
    இதேமாதிரி வெள்ளி விளக்குகள் என்னிடமும் இருக்கிறது. எளிதாக தேய்த்து கொள்ளலாம், அழுக்கு அடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பாடல் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியது கோமதி அக்கா. நீங்கள் சொல்வது இரண்டாவது பாடல். வீட்டு மாப்பிள்ளை படப்பாடல்!

      நீக்கு
    2. தலைப்பு பாடல் என்பதற்கு முதல் பாடல் என்று போட்டு விட்டேன் ஸ்ரீராம்.

      நீக்கு
  20. பன்னீர் ரோஜா அழகு.
    ஹோம தீயில் எனக்கு கொண்டை வைத்த பற்வை தெரியுது. அந்தபக்கம் பார்வையில் சின்ன பற்வை தெரியுது.
    இந்த பக்க பார்வையில் பெரிய கழுத்துடைய பற்வை தெரியுது.
    கீழ் படத்தில் இரண்டு உருவம் தெரியுது மாட்டின் தலையும் அதன் மேல் நீங்கள் சொல்வது போல் ஒரு உருவமும் தெரியுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொருவர் பார்வைக்கும் ஒவ்வொரு உருவம் தெரியும் போல கோமதி அக்கா... நாமே இன்னொருமுறை பார்த்தல் இன்னொரு மாதிரி உருவம் தெரியும் போல!

      நீக்கு
  21. பூக்களிலிலிருந்து பொம்மைகள்வரை நிறைய சுட்டிருக்கிறீர்கள்.பப்பாளி bloom..nice! படங்களுக்குப் பொருத்தமாகப் பாடல்வரிகளும்.

    காந்தியின் பக்கம் மனிதவாடையே அடிக்காத சமயத்தில்தான் போய் எடுக்கத்தோன்றியதா? அல்லது எப்போதுமே மெரினா காந்தி இப்படித்தானா?

    கொலுபொம்மைகள் கண்ணைப்பறிக்கும் கலர்களில். நவராத்திரி.. சிவராத்திரி...
    மொட்டைப்பிள்ளையார்..மேக்-அப் இல்லா நடிகை ! அது மஹாதேசிகனில்லை; ராமானுஜரேதான்.

    ஷிர்டி பாபா.அவர் ஒரு மெய்ஞானி. ஏதேதோ வடிவத்தில் படங்களாக, (இங்கே பொம்மைகளாக) பார்க்கிறேன். ம்.. பக்தி எனும் பெயரில் ஏன் அவரை இப்படிக் கஷ்டப்படுத்துகிறார்கள் என்று புரிவதில்லை.

    அக்னி. உற்றுப்பார்த்தால் அதில் நம் உருவமும் தெரியக்கூடும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பூக்களிலிலிருந்து பொம்மைகள்வரை நிறைய சுட்டிருக்கிறீர்கள்.//

      ஆமாம் ஏகாந்தன் ஸார்... ஞாயிறு பதிவிட வேண்டுமே என்கிற கடமை உணர்ச்சி!!!

      //காந்தியின் பக்கம் மனிதவாடையே அடிக்காத சமயத்தில்தான் போய் எடுக்கத்தோன்றியதா?//

      நான் படம் எடுத்தது நேற்று மஹியம் இரண்டு மணி. பட்டை வெய்யில்!

      நீக்கு
  22. //எனவே அதே இடத்தில் அடுத்த நாள் மலர்ந்திருந்த இந்தப் பூவைப் படம் எடுத்தேன்///

    ஆஆஆஆஆஆஆஅ சிரிராமின் கடமை உணர்வு பார்த்து மீ புல்லரிச்சுப் போயிட்டேன்ன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா அதிரடி, ஜாலியோ ஜாலி! சிரிராம், சிரிராம்! ஹிஹிஹிஹி!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா பின்ன என்ன கீசாக்கா:) அவர் இண்டைக்கு லவ் மூட்ல இருக்கிறார்ர்:)) அப்படியே விட்டிடலாமோ?:) அது நாட்டுக்கு நல்லதில்லையெல்லோ ஹா ஹா ஹாஅ:))

      நீக்கு
    3. //சிரிராமின் கடமை உணர்வு பார்த்து//

      பின்ன இல்லையா அதிரா? ஞாயிறுக்கு படங்கள் வேண்டுமே...

      நீக்கு
  23. //"ஒரு புஷ்பம் மலர்ந்தது... அதன் இஷ்டம் தெரிந்தது...." //

    ஒரு புசுப்பம் மல்ர்ந்தது.. ஒரு போஸ்டும் கிடைச்சதூஊஊஊ:)) இது நான் ஜொள்ளல்லே ஜி எம் பி ஐயாவின் மைண்ட் வொயிஸ்ஸ் ஆக்கும்:)) ஹா ஹா ஹா படிச்சதும் கிழிச்சு அந்த பூவுக்கு அடியில போட்டிடுங்கோ ஸ்ரீராம்ம்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞாயிறு போஸ்ட் நினைவில்லாமல் நேற்று மாலை கோகோ படம் பார்க்க ரெடியாகி விட்டேன். அப்புறம்தான் நினைவுக்கு வந்து தயார் செய்தேன்!

      நீக்கு
  24. //"மலரே... ஓ.. மலரே... நீ என் மலரல்ல... நானும் வண்டல்ல..."//

    ஓ மை கடவுளேஏஏஏஏஏஏஏ என்னால முடியல்ல வைரவா:).. இதை எல்லாம் படிக்கவோ அவசரமா ஓடி வந்தேன்ன்:)) என்ன ஆச்சு இண்டைக்கு ஸ்ரீராமுக்கு... ஒரே காதல் கவிதை மூட்ல நிக்கிறாரே ஹா ஹா ஹா:)).. கெள அண்ணன் இருந்தால்கூட கேட்டுப் பார்க்கலாம்ம்:).. அவர்தான் சண்டேயில சண்டைக்கு வரமாட்டார்ரே:)).. ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது போகட்டும்.. இந்தப் பாட்டு கேட்டிருக்கிறீர்களா அதிரா? ஏ எம் ராஜா இசையமைத்து பாடியிருப்பார்.

      நீக்கு
  25. //இந்த மரம் ஆண் மரமாம். பூக்குமாம்... காய்க்காதாம்... நண்பர் சொன்னார். //
    ஹையோ இது இப்போதானோ உங்களுக்கு தெரியும்.. எனக்கு சின்ன வயசிலயே தெரியும் ஏனெனில் வீட்டில இருந்துதே.. ஆனா மக்கள் என்ன செய்வார்கள் எனில் இப்படிப் பூத்தவுடன் இது ஆண்மரம் காய்க்காது பிறகெதுக்கு வீணா வச்சிருக்கோணும் என தறிச்சுப் போடுவினம்.. ஆனா அது பாவமில்லையோ?.. அதனால வீட்டில் தறிக்க மாட்டோம்ம்.. அதுவும் ஒரு அழகுதானே என விட்டிடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதனால வீட்டில் தறிக்க மாட்டோம்ம்.. அதுவும் ஒரு அழகுதானே என விட்டிடுவோம்.//

      முடிவு:
      நாங்க அப்பவே அவ்ளோ நல்லவிங்க:)) ஹா ஹா ஹா ஏன் லெஃப்ட்டால புகையுதூஊஊஊஊஊஊ:))..

      நீக்கு
    2. //பிறகெதுக்கு வீணா வச்சிருக்கோணும் என தறிச்சுப் போடுவினம்.. //

      ஆம் நீங்க நல்லவங்கதான். ஆனால் இந்த பப்பாளியில் பயன் உண்டு. அதன் இலைகளைப் பறித்து தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். ரத்த அணுக்கள் விருத்தியாகும்.

      நீக்கு
  26. /// "புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக..? தோழா ப்ளாக்கர் நமக்காக...!
    //

    ஹா ஹா ஹா ஹையோ ஆண்டவா இண்டைக்கு ஸ்ரீராமுக்கு எதுவும் ஆகுதோ இல்லையோ எனக்கேதும் ஆகிடப்போகுதே:)) ஹா ஹா ஹா ..

    அதுசரி புளொக் ஐ ப்ளாக் எண்டால்ல்.. பிளாக் ஐ என்னெண்டு சொல்லுவீங்க?:)[black?]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டைப் அடிக்கும்போது பொருத்தமாக எந்த வார்த்தை வருகிறதோ அதுதான்!

      நீக்கு
  27. //ஒரு நண்பரின் இல்ல விழாவுக்காக ஜி ஆர் டி யில் வாங்கப் பட்ட பரிசுப்பொருள். வெள்ளி. நான் வாங்கிய அன்று வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 40.36 பைசா. இது இரண்டும் சேர்த்து பதினான்கு கிராம் இருந்தது. // ஓ சூப்பர் இது சுத்த வெள்ளியோ? பார்க்க மிக அழகாய் இருக்கு.. இதுக்காகவே அடிக்கடி இதில ரீ குடிக்கலாம்.

    // "விளக்கேற்றி வைக்கிறேன்.. விடிய விடிய எரியட்டும்.."//

    கிடைக்கப்போகும் ரீ எல்லாம் நல்லதாகக் கிடைக்கட்டும்... ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிடைக்கப்போகும் டீ எல்லாம் நல்லதாக..

      ஹா.. ஹா... என் பாஸ் டீ போடுவதில் எக்ஸ்பர்ட் ஆக்கும்! காப்பிதான் பிடிக்கும் என்றாலும் அவ்வப்போது டீயும் குடிப்போம்!

      நீக்கு
  28. // "விளக்கு வைப்போம்... விளக்கு வைப்போம்..."//

    ஓ மன்னிச்சுக்கோங்க.. அது விளக்குகளோ.. முதல் படத்தில் அழகிய மூக்கு வைத்த கப் போல தெரிஞ்சுது... சூப்பர் அகல் விளக்குகள்.

    விளக்கு இருந்தும்
    திரி இல்லை எனில்
    தீபம் ஏது?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் ஒரு நொடி அந்தக் குழப்பம் வந்துதான் வேறு பாடல் வரிகள் போட்டிருந்தேன். கீதாக்கா கிண்டல் அடித்ததும் வரிகளை சரியாக மாற்றி விட்டேன்!

      நீக்கு
  29. // "பார்த்துச் சிரிக்குது பொம்மை..."//

    ஒரு பொம்மலாட்டம் நடக்குதூஊஊஊ ரொம்பப் புதுமையாக இருக்குதூஊஊஊஉ:))..

    ஸ்ரீராம் நம்ப மாட்டீங்க ஏனோ இன்று காலை திடீரென எனக்கு ஒரு ஆசை வந்துது, ஸ்ரீராம் போஸ்டில் படங்கள் போட்டு.. ஒவ்வொரு படத்துக்கும் .. படம் பார்த்தவுடன் உங்கள் மனதில் தோன்றும் பாடல் வரிகளை எழுதுங்கோ எனக் கேட்டால் நல்லா இருக்குமே என அந்த திருப்பரங்குன்றத்து முருகன் மேல் ஆணையாக ஏனோ ஒரு நினைப்பு வந்துது.. இங்கு வந்தால்ல்.. நீங்களே படத்துக்கு பாட்டுப் பாடியிருக்கிறீங்க.. அதுதான் எனக்கு டபிள் இன்ப அதிர்ச்சி.. அப்படியே ஷாஆஆஆஆஆஆஅக்ட் ஆகிட்டேன்ன்ன் நான்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா.

    எங்கள் நாட்டில் ஏனோ இப்படி கொலு வைக்கும் வழக்கம் இல்லை.. நான் பார்த்த வரையில் இல்லை, ஸ்கூலிலும் வைப்பதில்லை.. நாங்கள் கும்பம் வைத்து நவதானியங்கள் விதைப்போம்ம்.. ஒவ்வொரு நாளும் விதம் விதமா[நமக்குப் பிடிச்ச உணவைச் செய்து:))] கடவுளுக்கு குடுப்போம்ம்.. அதுதான் அவர்களுக்குப் பிடிக்குமென ஹா ஹா ஹா.. 10 ம் திகதிதானே ஆரம்பமாகுது?

    போன வருடம் கீசாக்கா என்னைக் குழப்பி விட்டிட்டா கர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சர்யம் உங்கள் ஆசை...! டெலிபதி! உங்கள் நாட்டில் வழக்கம் இல்லை என்றாலும் யாராவது ஒருவர் ஆரம்பித்தாள் மெல்ல அங்கும் பரவிவிடும்.

      நீக்கு
  30. // "பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா நீ கருணை வச்சா நானும் ஹீரோப்பா..."
    ///

    ஹா ஹா ஹா அப்பாவிப் பிள்ளையார் கொழுக்கட்டை சாப்பிடுவதில் பிசியாக இருந்தபோது ஆரு மொட்டை அடிச்சதூஊஊஊஊ:) திருப்பதிக்குப் போன இடத்தில இழுத்து வச்சு அடிச்சு விட்டிட்டினமோ.. ஹா ஹா ஹா..

    பிள்ளையாருக்கே ஒண்ணையும் காணம்:) இதில போய் உங்களுக்கு எப்பூடிக் கருணை காட்டுவார்ர்:)) ஹா ஹா ஹா..

    //"மடி மீது தலைவைத்து வாங்கும்வரை தூங்கலாம்.."//

    ஹா ஹா ஹா மக்களைக் கவர என்ன வித்தை எல்லாம் பண்ண வேண்டிக் கிடக்கூஊஉ.. இதை எல்லாம் பிள்ளையார் பொறுத்துக் கொள்றார்ர்.. ஆனா நாங்க ஏதும் தவறு செய்தால் மட்டும் கோபிக்கிறாரே கர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திருப்பதிக்குப் போன இடத்தில இழுத்து வச்சு அடிச்சு விட்டிட்டினமோ..//

      அடடா... இபப்டி கனெக்ட் செய்ய எனக்குத் தோன்றாமல் போனதே... எனினும் மொ. பி யாரை ரசித்ததற்கு நன்றி!

      நீக்கு
  31. // "நண்பனே... எனது உயிர் நண்பனே.. நீண்ட நாள் உறவிது.. இன்றுபோல் என்றுமே தொடர்வது..."///

    ஹா ஹா ஹா ஏற்கனவே இவரை போட்டுக் காட்டியிருக்கிறீங்கதானே?:)..

    உன் பார்வை என்மீது விழுகின்றதூஊஊஊஊஊ உன் எண்ணம் என்னென்று புரிகின்றது... - இது படம் பார்த்ததும் எனக்கு வந்த பாடல் வரி:) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஏற்கனவே இவரை போட்டுக் காட்டியிருக்கிறீங்கதானே?:)..//

      இவர் ரௌடி.. அப்படிதான் அழைப்போம் அதிரா இவரை. நீங்கள் சொல்வது அழகியையோ... இவரையும் நான் போட்டிருக்கலாம். சரியாய் நினைவில்லை.

      நீக்கு
  32. // "நீயும் பொம்மை.. நானும் பொம்மை.. நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை..."//

    ஹா ஹா ஹா என் காரிலும் ஒரு கோனரில் ஒரு பிங்கி:).. தலையாட்டி பொம்மை இப்படி வைத்திருக்கிறேன்ன்..

    //"கண்ணொரு பக்கம் ////நெஞ்சோறு/// பக்கம் சிலையோடு போராடுது..."//



    பழையபடி கூகிள் ஜதி செய்து விட்டதே ஸ்ரீராம்:)) ஹா ஹா ஹா.

    உண்மை எனக்கும் அந்தச் சிலை பிடிக்கவில்லை, ஏனெனில் பாபா முகம் எப்பவும் ஒரு கவர்ச்சியோடு கூடிய சாந்தம் இருக்கும்...

    அமைதிக்குப் பெயர்தான் சாந்தி.. அந்த பாபா சிலையினில் ஏதடி சாந்தி?:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ////நெஞ்சோறு/////

      ஆஹா... தப்பாகிவிட்டதா..." மாற்றி திருத்தி விட்டேன் அதிரா... நன்றி...

      நீக்கு
  33. //இந்தப் படத்தில் ஒரு முனிவர் உச்சியில் அமர்ந்திருப்பது போல எனக்குத் தோன்றியது. "தீ... தீ... தித்திக்கும் தீ..."//

    தீபம்ம்ம்ம்ம் பேசும்ம்ம்ம் அதைப் படம்பிடிக்கும் கைகளைப் பார்த்து:)).

    //"கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா?"//

    ஆவ்வ்வ் சூப்பரா படம் எடுத்திருக்கிறீங்க.. ஒரு சிங்கம் ஒன்று அவர்களின் மேல் பாஅய்வதைப்போலவே இருக்கு... அதுசரி அவ்ளோ உயரத்துக்கு சுவாலை எழும்புதே.. ஓவர் ஹீட்டா இருக்குமே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தீபம்ம்ம்ம்ம் பேசும்ம்ம்ம் அதைப் படம்பிடிக்கும் கைகளைப் பார்த்து:)).
      //

      ஹா... ஹா... ஹா... நல்லாயிருக்கு அதிரா. ஆனால் தீபம் என்று சொல்லாமல் அக்னி என்றோ, ஜோதி என்றோ சொல்லலாம்!

      //சூப்பரா படம் எடுத்திருக்கிறீங்க//

      நன்றி அதிரா.

      நீக்கு
  34. // "பூவில் வண்டு கூடும்.. கண்டு கூடும்.. கண்கள் மூடும்..."//

    மொட்டொன்று மலராகி ஸ்ரீராமைத் தேடுதூஊஊஊஉ.. அந்த இலைக்குள்ளேதான் மலரென்று ஆர் போய்ச் சொல்லுவதூஊஊ?:)).

    இது காடினியாஸ் தானே? எங்கள் வீட்டிலும் இருக்கு இங்கு.. ஒரு பூ வந்தால் குறைந்தது 2-3 கிழமைக்கு அப்படியே இருக்கும்..

    // "உன்னைப் பற்றி பாட தமிழில் வார்த்தை போதவில்லை" என்று சமாதானப் படுத்தி வைத்திருக்கிறேன்! சிறுமலர். "சின்னஞ்சிறுமலர்... பனியினில் நனைந்து..." இப்போ திருப்திதானே வெண்மலரே?//
    ஹா ஹா ஹா அருமை... மலருடன் பேசுவது ஸ்ரீராமா இல்லை.. ஸ்ரீராமுக்குள் இருக்கும் கவிஞரோ?:) ஹா ஹா ஹா..

    ஓ அது நந்தியாவட்டை மலரோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மலருடன் பேசுவது ஸ்ரீராமா இல்லை//

      மலர்தான் மௌனமாய் இருக்கிறது... அது "மலரே... மௌனமா?" என்கிற பாடலை எதிர்பார்க்கிறது!

      //ஓ அது நந்தியாவட்டை மலரோ?..//

      அப்படிதான் சொன்னார்கள்.

      நீக்கு
  35. //"காலைத் தென்றல் பாடி வரும் ராகம்.. ஒரு ராகம்..."//

    காலை மலர்ந்தது.. நல்ல காலம் பிறந்ததூஊஉ..

    இன்று அழகிய போஸ்ட்ட்.. நான் பத்துக்கு 9 மதிப்பெண்கள் தரப்போகிறேன்னாக்கும்:)).. என்னிடம் மேகப் படங்கள் சமரில ஓடி ஓடி எடுத்தது இருக்கே.. தொகுத்துப் போடோணும் விரைவில்.. எல்லோரும் வந்து அழகா பொறுமையா ரசிக்கோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்..

    அப்ப நான் போட்டு வரட்டோ?.. கடமை அழைக்கிறது:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... எனக்கு இன்று 'டி' தந்து விட்டீர்கள் நன்றி அதிரா. படங்கள் நிறைய என்று feel ஆகவில்லையா?

      உங்கள் பதிவுக்கு வராமலிருப்போமா? வருவோம் அவசியம்!

      நீக்கு
  36. பூக்களே சற்றே ஓய்வெடுங்கள் என்னும் பாட்டு நினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... ஜி எம் பி ஸார்... லேட்டஸ்ட் பாடல் ஒன்றைக் குறிப்பிட்டு ஆச்சர்யப்படுத்துகிறீர்களே...

      நீக்கு
  37. அருமையான தொகுப்பு..

    Violet + Maroon colour fontல் எழுதிய குறிப்புகள்/பாடல்கள் தனிச் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹாஆஆஆஆ. மனம் நிறைந்ததே. கண்ணில் கண்டதெல்லாம் சாட்சியானதே.
      அம்மாவின் மேல் பிள்ளைக்குத் தான் எத்தனை பாசம்.

      அத்தனை படங்களு மிக அழகு. தந்திருக்கும் பாடல்களோ அதைவிட அழகு.
      ரோஜா, நந்தியாவட்டை, ஹோம அக்னி, பழுப்புச் செல்லம் காதை விரிக்கும் அழகு, காலைக் கதிரவன்
      எல்லாம் சூப்பர். வெள்ளி அகல்கள் வெகு அழகு.
      ஜோடி சேர்ந்து வெளிச்சம் கொடுக்கின்றன.
      இதழ் மொட்டு விரிந்து போஸ் கொடுத்த மலருக்கு நன்றி.
      படங்கள் கொடுத்த உங்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும் ஸ்ரீராம்.

      நீக்கு
    2. ஔவையார் சிலை////+ ஒட்டக்கூத்தர் தானே. பாடலுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் வாங்கியவர்.

      காந்திஜியை நினைவு வைத்திருந்தது நிறைவு. சிவாசி பொறந்த நாள்னு ஒரே பிரமாதப் படுகிறதே.
      பிள்ளையார் மொழுக் நு அழகா இருக்கார்.
      இங்கிருப்பவர் இராமானுஜரே. ஸ்ரீ மஹா தேசிகன் கறுப்பு வர்ணத்தில் கைகூப்பி இருப்பார்.
      பெரியவர் ஆச்சார்யர். இவர் அவரது குழந்தை போல.

      நீக்கு
    3. வாங்க வல்லிம்மா. படங்களையும் வரிகளையும் ரசித்ததற்கு நன்றி அம்மா. சிவாஜி, காமராஜர் (லால்பகதூர் சாஸ்திரியுமோ?) ஆகிய மற்றவர்களை மறந்து விட்டேனே...

      நீக்கு
    4. இந்த ஊர் பாபா கண்ணால் பேசுவார். அத்தனை கருணை. எங்கே இன் ஒண்ணேகால் ரூபாய்னும் கேட்பார்.
      சாயிராம்.

      நீக்கு
    5. ஆமாம் அம்மா.. மயிலை பாபாவை தரிசிக்க நாங்கள் வருவோமே...

      நீக்கு
  38. ஜுவாலை உயர்ந்து எழுந்திருப்பதை நன்றாகக் கொண்டுவந்திருக்கிறீர்கள்.
    அக்னி இப்படி உயர்ந்து எழுவது ஹோமம் நன்றாக நடந்திருப்பதைக் காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹோம ஜ்வாலையை படம் எடுப்பது அடிக்கடி வழக்கமாகி விட்டது. அதில் ஏதாவது அமானுஷ்ய உருவம் தெரிகிறதா என்று பார்க்கும் ஆவல். நன்றி ஏகாந்தன் ஸார்.

      நீக்கு
  39. இப்போதான் பின்னூட்டம் இட நேரம் கிடைத்தது ஶ்ரீராம். நாளையும் பிசி (ச்ராத்தம், மறுநாள் மஹாளயம்)

    படங்களோடு கூடிய உங்கள் எழுத்து ரசிக்க வைக்கிறது.

    பாஸ் ஷீரடியா புட்டபர்த்தியா இல்லை இரண்டுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... நாளை, நாளை மறுநாள் முடித்து விடுகிறீர்களா.. நல்லது. எங்கள் வீட்டில் இன்னும் தள்ளி!

      பாஸ் ஷிர்டி பாபா பக்தை.

      நீக்கு
  40. அக்னி தன்னக் போஷிப்பவனின் விண்ணப்பத்தைக் கேட்கும் என்பதை உதாரணங்களோடு படித்திருக்கிறேன். எனக்கும் ஜ்வாலையில் உருவத்தைக் காணும் கற்பனை உண்டு.

    பதிலளிநீக்கு
  41. ஸ்ரீராம் இரண்டாவது அக்னி படத்தில் ஒரு பெண் நடனமாடுவது போல் இருக்கிறது...(பெண் என்பது இங்கு பார்பி டால் போன்ற ஒல்லி உருவப் பெண்!!!!)

    ஊமத்தம் பூ செம அழகு என்றால்அந்தப் பஞ்சுக் குவியல் நந்தியாவட்டை ஹையோ!! என்ன அழகு!!!...ஹையோ இப்படி ஒரே வாட்டியா படமும் கமென்டும் கொடுத்தா எல்லாத்தையும் பார்த்து ரசித்து கருத்து அடிக்கணுமே!! பஞ்சுக் குவியல் வார்த்தையை ரசித்தேன் ஸ்ரீராம்

    அடுத்து பொத்தி வைச்ச ரோஜா மொட்டு பார்த்துட்டு வரேன்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது வருகைக்கு நன்றி கீதா.. ரசித்ததற்கும் நன்றி.

      நீக்கு
  42. ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்!! என்ன அழகு ரோஜாக்கள்..ரோஜா என்றாலே அழகுதான்...அதன் நிறம் பாருங்க வாவ்!! அந்தக் குட்டி நந்தியாவட்டையும் செம க்யூட்! இரண்டு நந்தியாவட்டையும் மேஸ் விளையாடலாம் போல அத்தனை அடுக்கு இல்லையா ...

    காலைத்தென்றல் பாடி வரும் ராகத்தையும் ரசித்தேன்...அழகான உதயம் படம்.

    கமெண்டுகளோடு பொருத்தமா சினிமாப் பாடல்களையும் சேர்த்தது செமை...சில தெரியாதவை..அந்தப் பாடல்களுக்கு அப்படியே லிங்கும் கொடுத்திருக்கலாமோனு தோனித்து ஸ்ரீராம்...

    கொலு பொம்மைகளை இப்ப்டி பார்க்கும் போது அவை எல்லாம் பேசிக் கொண்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வதுண்டு!.

    ரெண்டாவது அக்னியில் பெண் ஆடுவது போல இருக்குனு சொன்னேன்ல அதுவும் பாவாடை விரிந்து ஆடுவது போல...வாட்சப்பில் கூட ஒரு பொம்மை உண்டே அப்படி!!!

    படங்கள் எல்லாமே
    வெள்ளி அகல் ரொம்ப அழகா இருக்கு ஆனா அது வெள்ளியா??!! படத்தில் பார்க்க எவர்சில்வர் போல இருக்கு...அடிக்க வராதீங்க ஸ்ரீராம் ஓடிப் போய்டறேன்...ஹா ஹா ஹா

    கீதா

    நேற்று இரவு இந்தக் கமென்டை போடும் போது நெட் என்னைப் போல் சாமி ஆடிவிட்டது!! ஸோ இப்பத்தான் போட முடிந்தது....

    பதிலளிநீக்கு
  43. அத்தனைப் படங்களும் அற்புதம் பாராட்டுகள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  44. மதுரை விளாச்சேரி, திண்டிவனம், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி அதியமான் கோட்டை ஆகிய இடங்களில் கலைஞர்கள் நவராத்திரி கொலு பொம்மைகளைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளனர். சென்ற ஆண்டைவிட புதுமைமிக்க கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!