வியாழன், 20 செப்டம்பர், 2018

தப்பைத் தப்புத் தப்பா செய்யணுமா? சரியாச் செய்யணுமா?


ஒரு கேள்வி வரும்போது  உடனே பதில் சொல்வது அல்லது முதலில் சரியாச் சொல்றது சரியா?  தப்பாச் சொல்றது சரியா?  

​படிக்கும் காலங்களில் அப்படிச் சொன்னால் அதற்கு மதிப்பெண் கிடைக்கலாம்.  அப்புறம் அனுபவங்களில் கொஞ்சம் வேறு மாதிரி அணுகுவது நல்லது என்பது என் தீர்மானம்!

பதிலை மெதுவாகச் சொல்வதிலும், வேண்டுமென்றே தவறாகச் சொல்வதிலும் சில அனுகூலங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்!

தப்பைத் தப்பாகச் செய்வதை விட சரியாகச் செய்யலாம்.  சரியை தப்பு என்று சொல்லலாம்.  தப்பை மறைக்கலாம்.

இது அவரவர் சூழல், பல, பலவீனங்களைப் பொறுத்தது...  (டிஃபென்ஸ்!)

எங்கள் இல்ல விழா ஒன்றில் விழா முடிந்ததும் கதாகாலட்சேபம் போல ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள்.  அவர் பேச ஆரம்பித்ததும் இடை இடையே கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.  அப்போது யதேச்சையாக பின்னால் அமர்ந்திருக்கும் என் தங்கையுடன் பேச நான் எழுந்து பின்னால் வந்ததும் சில உறவுகள் கொல்லென்று சிரித்து விட்டனர்.   கேள்வி கேட்பதால் பின்னால் வருகிறேன் என்று...  

நான் விளக்கம் எல்லாம் தரவில்லை என்றாலும், அப்படிப் பின்னால் திடீரென எழுந்து வந்தால்தான் நாம் அதிகம் கவனிக்கப்படுவோம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை!  இது மாதிரி சூழ்நிலைகளைச் சமாளிப்பதில் நான் பள்ளி நாட்களிலிருந்தே கொஞ்சம் கைதேர்ந்தவன்.!!!    ஹிஹிஹி.... 

அப்போது(ம்) எனக்கு விடை தெரிந்த சந்தர்ப்பங்கள் குறைவு.  ஆனால் ஒளியமாட்டேன்.  மிக ஆர்வமாக ஆசிரியர் முகத்தைப் பார்த்திருப்பேன்.  அவர் அழைத்தால் எழத் தயாராய் இருப்பது போல பாவனையில்!  ஒன்றிரண்டு சமயம் தோல்வி என்றாலும் பெரும்பாலும் சமாளித்திருக்கிறேன்!

இது எனக்கு அலுவலகத்திலும் கைகொடுத்திருக்கிறது.  திடீர் இருப்பு சரி பார்க்கும் சோதனை வரும் காலங்களில் சரியாக இருக்கும் இருப்பை வேண்டுமென்றே ஓரிரு முறை தவறாகச் சொல்லுவேன்.  அவர்கள் சரிபார்க்கும் வேளை அது சரியாக இருக்கவே அவர்களால் என்னை ஒன்றும் செய்ய / சொல்ல முடியாது போகும்.  

அதே போலதான் ஆடிட் சமயங்களிலும்..  என் தவறான பதில்கள் கண்டு ஆவலுடன் வருபவர்கள் ஏமாந்து போவார்கள்.  சில சமயம் தவறாகவே இருக்கும் இடங்களிலும் சரிபார்க்காதும் போயிருக்கிறார்கள்.  அதுதானே தக்கினிக்கி!

நான் சாதாரணமாக அதிகம் பேசுபவன் அல்ல.  ஆனால் சர்ப்ரைஸ் விசிட் அதிகாரிகள் வந்தால் அவர்களைப் பேசியே கொன்று விடுவேன்!  முற்றிலும் அவர்கள் எதிர்பார்க்காத திசையில் என் பேச்சு, என் கோரிக்கைகள், அவர்கள் பெருமைகள், என்னுடைய குறைகள், வேண்டுதல்கள் என்று நீண்டுகொண்டே போகும்!  இன்ஷா முருகா, ஒரே ஒருமுறை தவிர மற்ற சமயங்களில் வெற்றி கிடைத்திருக்கிறது...

அதிருஷ்டம் தந்த அனுபவங்கள்!

இதுதான் சரி என்று சொல்லவில்லை.  ஆனால் இது தவறு என்று சொல்லமுடியாது!  இல்லையா?!!


======================================================================================================


மெட்றாஸ் ராஜகோபாலன் ராதா சிறுவயதிலேயே அவரது அம்மா ஒரு துண்டு மீன் கூடுதலாகத் தரவில்லை என்று வீட்டை விட்டு ஓடிவந்தவராம்!    

எம் ஜி ஆரைச் சுட்டு விட்டு, அவரும் சுட்டுக்கொண்டு மருத்துவமனையில் சென்று இருவரும் அட்மிட் ஆனதும் அன்று அங்கு பணியில் இருந்த மருத்துவர் ஆப்ரஹாம் சுகுமார் அந்த அனுபவம் பற்றி எழுதி இருக்கிறார்.  புகழ் பெற்றவர்கள் என்பதால் தலைமை மருத்துவர் உட்பட சிலர் அழைக்காமலேயே மருத்துவம் பார்க்க வந்து விட்டதோடு, அவர்கள் பெயர் செய்தியில் இடம்பெற வேண்டும் என்றும் வற்புறுத்தினார்களாம். 

மருத்துவமனையில் எம் ஜி ஆறும், எம் ஆர் ராதாவும் அருகருகேதான் படுக்க வைக்கப் போட்டிருந்தார்கள் என்பதையும், அறிஞர் அண்ணா, கலைஞர், நடிகர் அசோகன் எம் ஜி ஆரைப் பார்க்க வந்து காத்துக்கொண்டு நின்றார்கள் என்றும் எழுதுகிறார்!



இது அவர் பற்றிய ஒரு சிறு தகவலை முகநூலில் பகிர்ந்து கொண்டது!





=======================================================================================================================

முள்ளும் மலரும் படத்தில் சிவாஜியைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் விரும்பினாராம்.  மகேந்திரன் ரஜினியைத் தெரிவு செய்தாராம். 

ரஜினிக்கு மாறுதலான படங்களாக அமைந்த லிஸ்ட்டில், புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், போன்றவை அடங்கும்.






=============================================================================================================

172 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அன்பினோர் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  2. எங்கேயோ கேட்ட குரல்...

    வித்தியாசமான படமாக இருந்ததால்
    அவ்வளவாக கல்லாப்பெட்டியை
    நிரப்பவில்லை...

    இப்படி எல்லாமா ஒருத்தி ஓடிப்போவாள்!.. என்று அப்போது பேசிக் கொண்டார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓடிப் போவாங்க துரை. இதைச் சின்ன வயசிலேயே பார்த்திருக்கேன். ஆனால் எங்கள் எதிரில் சம்பந்தப்பட்டவங்க அதைக் குறித்துப் பேசினதில்லை. அரசல் புரசலாக் காதில் விழுவது தான்.

      நீக்கு
    2. எங்கேயோ கேட்ட குரல் வெளியான நேரத்தில்தான் சகலகலாவல்லவன் வெளியானது என்று படித்த நினைவு (எஸ் எம் கட்டுரையில்) இரண்டுமே எஸ் பி எம் இயக்கிய படங்கள். மசாலா ஜெயித்தது. கதையுள்ள படம் தோற்றது!

      நீக்கு
  3. //முள்ளும் மலரும் படத்தில் சிவாஜியைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் விரும்பினாராம். மகேந்திரன் ரஜினியைத் தெரிவு செய்தாராம். //மகேந்திரன் வாழ்க! நல்லவேளையாப் படம் பிழைத்தது! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நல்லவேளையாப் படம் பிழைத்தது! :)))) //

      அப்படித்தான் அப்போதும் பேசிக்கொண்டார்கள்!!!

      நீக்கு
    2. யப்பா... சாமியோவ்!...

      கற்பனை செஞ்சி பார்த்தாலே
      பயங்கரமா இருக்கு!...

      படம் பொழைச்சதோ இல்லையோ..
      அக்கா மாதிரி நம்மை மாதிரி
      ஆளுங்க எல்லாம் தப்பிப் பொழச்சோம்!...

      சே.. நடுக்கம் இன்னும் விடலையே சாமி...

      இத்தனைக்கும் நான் சிவாஜி ரசிகனாக்கும்!..

      நீக்கு
    3. முள்ளும் மலரும் படத்தில் சிவாஜி நடித்திருந்தால்.... பாவம் தயாரிப்பாளர். ரசிகர்கள் தியேட்டர் பக்கமே எட்டிப்பார்த்திருக்க மாட்டாங்க.

      அது சரி துரை செல்வராஜு சார்... சிஙாஜியோட ஶ்ரீதேவி ஜோடியா நடிச்ச படம் பார்த்திருப்பீங்களே. திரைல பாதிக்குமேல் சிவாஜியின் பாதி உருவம், ஓர் ஓரமாக ஶ்ரீதேவி... ஓ... அப்போ நீங்க சிவாஜியை கவனிச்சிருக்க மாட்டீங்க. ஹாஹா.

      ஆமாம் வாழ்க்கை படத்தில் சிவாஜிக்கு அம்பிகாவை ஜோடி போட்டதன் காரணம் என்ன என்று இண்டஸ்டிரியில் பேசிக்கொண்டார்கள் தெரியுமா?

      நீக்கு
    4. >>> அப்போ நீங்க சிவாஜியை கவனிச்சிருக்க மாட்டீங்க. ஹாஹா.. <<<

      இல்லை.. இல்லை..
      என்றைக்கும் திரைத் தாரகைகளின் மாய அழகை மாந்திக் கிடந்ததே இல்லை...

      (ஓய்.. மனசு ஓரமா!...
      அடே.. மனசாட்சி சும்மா இருக்க மாட்டியா!..)

      >>> வாழ்க்கை படத்தில் சிவாஜிக்கு அம்பிகாவை ஜோடி போட்டதன் காரணம் ..<<<

      சும்மா இருக்குறதுக்கு சொல்லி வைக்கலாமே!...

      நீக்கு
    5. ரஜினி நடிப்பு வெகு அமைப்பாக இருந்த படம். இந்த காலங்களில் சிவாஜி நடித்தே இருக்கக் கூடாது. முதல் மரியாதை சிவாஜியை நினைத்துக் கொள்கிறேன்.
      வயதுக்கேற்ற வேடங்களில் நடித்திருந்தால் சோபித்திருக்கும். என்னாலயே சகிக்க முடியாமல் போன படங்கள் அவரது மிட்டில் ஏஜ் கோலங்கள் தான்.

      நெ.த அம்பிகா சிவாஜி படம் பற்றின தகவல் சொல்லாமலே விட்டால் எப்படி.

      நீக்கு
  4. அதில் தானே
    ரஜினிக்கு மகளாக மீனா நடித்தது!?...

    அதுக்கு அப்புறம் கூட டூயட்டு பாடுனது அராஜகம்!...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

    ( ஓய்... நீர் ரசித்தீரா இல்லையா?..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் இல்லையோ மீனா குழந்தை நக்ஷத்திரமாக அம்பிகாவின் பெண்ணாக நடித்தது? அது மீனாவின் முதல் படம் இல்லையா? ஆனால் அவர் டூயட் பாடிய படங்களைப் பார்த்ததில்லை. ஆங்காங்கே சில காட்சிகள்! அதில் ஒன்று தான் மீனாவும், ரோஜாவும் ஏதோ ஒருபடத்தில் ரஜினியின் மனைவியராக வருவாங்க. ஒருத்தரை ஒருத்தர் அக்கா எனக் கூப்பிட்டுக் கொள்வார்கள். நல்ல தமாஷாக இருந்தது. ரசிச்சுச் சிரிச்சிருக்கேன். இதை எல்லாம் காமெடி காட்சிகளில் சேர்க்கிறதே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    2. பாபு படத்தில் ஸ்ரீதேவி சிவாஜி வளர்க்கும் குழந்தை. கவரிமானிலும் சிவாஜியின் மகள். இன்னொரு படத்தில் ஜெய்சங்கருக்கு ஸ்ரீதேவி மகள். படம் பெயர் நினைவில்லை. ராதையின் நெஞ்சமே பாடல் வரும்! இருவரும் ஸ்ரீதேவியோடு ஜோடி போட்டு நடித்திருக்கிறார்கள்... அதுவும் அராஜகம்தானே!

      நீக்கு
    3. கீதா அக்கா.. எங்கேயோ கேட்ட குரல் படத்தில் ரஜினியின் மகளாக மீனாதான் வருவார்.

      நீக்கு
    4. அப்படியா, நினைவில் இல்லை ஸ்ரீராம். ராதா அந்தக் குழந்தையை வளர்ப்பார். அது மட்டும் நினைவில் இருக்கு! படம் பார்த்திருக்கேன் தொலைக்காட்சி தயவில்.

      நீக்கு
    5. ஸ்ரீராம்...

      பாரதவிலாஸ் படத்திலும் சிவாஜியின் மகளாக ஸ்ரீதேவி!...

      ஜிவாஜிக்கு ஜோடி பெரிய புன்னகை..

      நீக்கு
    6. நீங்க சொன்ன பாபு, கவரிமான், ஜெய்சங்கர் படம் எல்லாம் பார்க்கலை. ஆனாலும் ஜிவாஜியோடயும் ஜெய்சங்கரோடயும் டூயட் பாடினது அராஜகம் தான்! அதிலும் ஜிவாஜிக்குப் பேத்தி வயசு ஸ்ரீதேவிக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்த டூயட் பாடல் காட்சியை ஒரு முறை பொதிகையிலோ அல்லது வேறே எதிலோ பார்த்துட்டுக் கோபம் வந்துத் தொலைக்காட்சியை அணைச்சுட்டேன். :(

      நீக்கு
    7. ஹா... ஹா... ஹா... அதுல பாருங்க... பாட்டும் அவ்வளவு சுகமில்ல..!

      நீக்கு
    8. ஓ, பாரதவிலாஸ் படத்திலேயும் ஸ்ரீதேவியா? நினைவில் இல்லை! ஜிவாஜி அதில் ரொம்பவே மிகை நடிப்புனு மட்டும் நினைவில் இருக்கு. கே.ஆர்.விஜயா கேட்கவே வேண்டாம். ரொம்பவே குலுக்கல், ஆட்டம்!

      நீக்கு
    9. ஓ... ஆமாம்.. பாரதவிலாஸ் மறந்துட்டேன்.

      அது சரி.. இன்னொரு விஷயம் ரஜினி அறிமுகமான படத்தில் ஜோடி ஸ்ரீவித்யா. அவர் இவருக்கு அம்மாவாகவும், மாமியாராகவும் பின்னர் படங்களில் நடித்திருப்பார்!

      நீக்கு
    10. நேற்று எதிரொலி பார்த்தேன்... அதில் ஓவர் ஆக்டிங்கில் சிவாஜியை மிஞ்சி இருப்பார் கே ஆர் விஜயா. ஆனாலும் கோர்ட் காட்சிகளை ரசித்தேன்.

      நீக்கு
    11. சிவாஜி அதீத குண்டு என்பதால் ஶ்ரீதேவி பேத்தி வயசுன்னு சொல்றீங்களே.. இது அடுக்குமா? உங்க தலைவர் உலகநாயகன், ஶ்ரீவித்யால ஆரம்பிச்சு இப்போ 16 வயதுப் பெண் வரை டூயட் பாடுறாரே... அவரை மட்டும் ஏன் ஆதரிக்கிறீங்க?

      உங்களுக்குத் தெரியுமா ரஜினியின் அடுத்த படத்துக்கு மீனாவின் பெண்ணை ஜோடியாக்கலாமா இல்லை கமலஹாசன் படத்துக்கா என்று ஒரு யோசனை ஓடிக்கொண்டிருக்கிறதாம்

      நீக்கு
    12. நெ.த. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உல(க்)கை நாயகர் படங்கள் அத்தனை பார்த்ததில்லை. சில காமெடி காட்சிகள் பொதிகை தயவில் பார்த்திருக்கேன். தெனாலியில் பஸ்ஸில் போவது. மை.கே.ம.கா.ரா.வில் சில காட்சிகள், பஞ்ச தந்திரம்? அல்லது ஏதோ ஓர் படம் செத்துப் போன ரம்யா கிருஷ்ணனை வைச்சுக்கொண்டு திண்டாடுவது! போனால் போகுதுனு அதுக்கெல்லாம் மார்க் கொடுத்துடலாம்.

      நீக்கு
    13. ரஜினியோட ஆரம்பகாலப்படங்கள் ஒரு சில பார்த்திருக்கேன். ரஜினி, கமல் சேர்ந்து நடிச்சது எதுவும் பார்த்ததில்லை. கமலஹாசன் நடிச்சதிலே "சொல்லத்தான் நினைக்கிறேன்" ஆரம்பகாலப் படம் பார்த்தேன். அதிலே கமல் இருக்கார்னு நினைக்கிறேன். அதே போல் அரங்கேற்றத்திலும் கமல் இருக்கார்னு நினைக்கிறேன். மற்றபடி கமல் படங்கள் எதுவும் முழுசாகப் பார்த்ததே இல்லை. எங்க பையர் தான் கமலின் தீவிர ரசிகர்! :)))) அவரைக் கலாய்ப்பேன்! உனக்கு ரசனையே இல்லைனு சொல்லுவார்! :)))) இப்போ நினைச்சாலும் சிரிப்பு வருது!

      நீக்கு
    14. கீதாக்கா.. கமல் ரஜினி நடித்து நினைத்தாலே இனிக்கும் படம் பார்த்ததில்லையா? நீங்கள் சொல்லும் படங்களில் எல்லாம் கமல் வில்லன்!

      நீக்கு
    15. இல்லை ஶ்ரீராம், அதே போல் ரஜினி, ஶ்ரீதேவி நடிச்ச (ஶ்ரீதேவியோட கடைசித் தமிழ்ப்படம்னு சொல்றாங்க) படங்களும் அதிகம் பார்த்ததில்லை! :) சொல்லத்தான் நினைக்கிறேனில் ஜெயசித்ரா, ஜெயசுதா? யாரோடயோ நடிச்சிருப்பார் இல்லையோ? வில்லனா அதில்? அரங்கேற்றத்திலுமா? ம்ஹூம் நினைவில் இல்லை. எஸ்.வி.சுப்பையாவும் பிரமீளாவும், சிவகுமாரும் தான் நினைவில் இருக்காங்க!

      நீக்கு
    16. அதானே. அப்டிப் போடும். துரை ராஜு.

      நீக்கு
  5. புவனா ஒரு கேள்விக்குறி மகரிஷியின் கதை! அதை ரஜினிக்காகத் திரைப்படத்தில் மாற்றி இருந்தாலும் அதுவும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்றானது. மூலக் கதையின்படி சிவகுமார் கதாபாத்திரம் தான் கதாநாயகன், ஆனால் திரைப்படத்தில் அவரை வில்லனாய்க் காட்டி இருப்பார்கள். ரஜினி கதாநாயகன்! :))))) ஆனாலும் படத்தையும் ரசிக்கலாம். கதையைத் தனியாகப் படிச்சும் ரசிக்கலாம். முள்ளும் மலரும் உமாசந்திரனோடது. கல்கி வெள்ளிவிழாப் பரிசுப் போட்டியில் முதல் பரிசு வாங்கியது. ஆனால் இதை விட பிவிஆர் எழுதின மணக்கோலங்களும், ர.சு.நல்லபெருமாள் எழுதின கல்லுக்குள் ஈரமும் முதல் பரிசுக்கு உகந்தவையாக எனக்குத் தோன்றும். மணக்கோலங்கள் "ஜானா" மறக்க முடியாத கதாபாத்திரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புவனா ஒரு கேள்விக்குறி கதை நான் படித்ததில்லை. முள்ளும் மலரும் உமா சந்திரன் என்று தெரியும். அதுவும் கதையாகப் படித்ததில்லை. படமாகத்தான் இரண்டுமே பார்த்திருக்கேன்!

      நீக்கு
    2. முள்ளும் மலரும் கதை படித்திருக்கிறேன்...

      திரைக்காக கதை மாற்றப்பட்டது..

      நீக்கு
    3. ஆமாம், திரைக்கதையை மாற்றி அமைத்திருந்தாலும் படம் வெற்றி பெற்றது. முள்ளும் மலரும் அந்தக் காலத்தில் கல்கியில் வரும்போதே படிச்சிருக்கேன். அதில் மங்கா கடைசியில் தன் நாத்தனாருக்காக உயிர்த்தியாகம் செய்வாள். ஆனால் படத்தில் அப்படி வராது. என்றாலும் ரஜினிக்கு ஃபடாஃபட் ஜோடியாக அமைந்த மாதிரி மற்ற நடிகைகள் அமையலைனே சொல்லணும். இதுவும் ஆறு முதல் அறுபது வரை படமும் ரஜினி+ஃபடாஃபட் ஜோடி வெற்றிகரமாக அமைந்த படங்கள்.

      நீக்கு
    4. முள்ளும் மலரும் நான் ரசித்த (ரஜினி) படங்களில் ஒன்று அக்கா. கிளைமேக்ஸ் காட்சியும் நன்றாகவேஇருக்கும். இளையராஜாவும் தூள் கிளப்பி இருப்பார்.

      நீக்கு
    5. >>> ஆறு முதல் அறுபது வரை <<<

      !?...

      குழந்தை முதல் குமரி வரை.. ந்னு தலைப்பே மாறிப் போய்டும்...

      ஒய் திஸ் கொலவெறி!..

      ஆறிலிருந்து அறுபது வரை...

      ஆனாலும் டொக்கு விழுந்த கிழட்டு நடிகனுக்கும்
      அவன் மகள விட கொறஞ்ச வயசு பொண்ணைத் தானே சோடியா போடுறானுங்க!...

      அப்போ கூமுட்டைகள் ரசிக்கிறது கெழவனையா?... கொமரியையா!...
      கில்லர் ஜி பாணியில்!..)

      நீக்கு
    6. நடிகரைத்தான் ரசிப்பார்கள்னா அதுக்கு அவங்க வயசுக்கேத்த மாதிரி பெண்ணை ஜோடியாப் போடுவாங்களே. நாம ரசிப்பது கதாநாயகரையா?

      கமலை விட வயது குறைந்த ஶ்ரீவித்யா, கமலுக்கு அம்மாஙாக நடித்ததைவிடக் கொடுமை உண்டா? நல்லவேளை சிவாஜி பாதி திரை சைசுக்கு இருந்தார். இல்லைனா ஶ்ரீதேவி, அவரோட அம்மாவாக்கூட நடிக்கவேண்டியிருந்திருக்கும். விக்ரம் 60+ வயசு. காலக்கொடுமை அவருக்கு யார் ஜோடி பாருங்க...

      நீக்கு
    7. ஹிஹிஹி துரை, அது ஆறிலிருந்து அறுபது வரையா? நினைவில் நிற்கலை!

      நெ.த. ஶ்ரீவித்யாவை நானா கமலுக்கு ஜோடியா நடிச்சுட்டு அப்புறமா அம்மாவாகவும் நடிக்கச் சொன்னேன். இந்த உல(க்)கை
      நாயகர் பெண்களை நடத்தும் விதமே எனக்குப் பிடிக்காது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கு அந்த ஆளையோ அவர் நடிப்பையோ சுத்தமாப் பிடிக்காது! ரொம்பவே அறிவுஜீவினு வேறே நினைப்பு! :(((((

      நீக்கு
    8. கீசா மேடம்... தெரிஞ்சு தான் கமல் உங்க தலைவர்னு கலாய்ச்சேன்.

      கமல், மைக்கேல் மதன காமராஜனுக்கு அப்புறம் பல நல்ல படங்கள் கொடுத்திருக்கார். பொழுதுபோக்குப் படங்கள். மற்றபடி அவரது சீரியஸ் படங்கள் (குணா, ஹே ராம்....) இதெல்லாம் எனக்குப் புரியாது.

      நீக்கு
    9. நெல்லைத்தமிழன்... ஆனால் ஒன்று... கமலின் ஹே ராம் படம் எனக்குப் பிடித்திருந்தது.​

      நீக்கு
    10. க்ர்ர்ர்ர்ர், ஶ்ரீராம், அது "கல்லுக்குள் ஈரம்" நாவலின் அப்பட்டமான காப்பி! கமல் கவர்ச்சிக் காட்சிகளை வைத்து என்னதான் முயன்றாலும் கதைக்கரு அதுதான்! ஆனால் கெடுத்துட்டார் தனக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படத்தை எடுத்ததில்! :(

      நீக்கு
    11. //க்ர்ர்ர்ர்ர், ஶ்ரீராம், அது "கல்லுக்குள் ஈரம்" நாவலின் அப்பட்டமான காப்பி! //

      அப்படியா கீதா அக்கா? எனக்கு கல்லுக்குள் ஈரம் என்றால் பாரதிராஜா முகம்தான் வந்து பயமுறுத்துகிறது! ஆனாலும் ஹே ராம், பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் அன்பே சிவம் படங்களை ரசிப்பேன் - அவை ஆங்கிலத்திலிருந்து காபி என்றால் கூட!

      கமல் பாரதியார் சொன்னதைக் கடைப்பிடித்திருக்கிறார்.

      "சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
      செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!"

      நீக்கு
  6. முள்ளும் மலரும் படத்தில் மட்டும் ஜிவாஜி நடிச்சிருந்தால்! நினைக்கவே பயம்மா இருக்கு. நல்லவேளையா தயாரிப்பாளர் விருப்பத்துக்கு மகேந்திரன் ஒத்துக்கலை. ஜிவாஜி மட்டும் நடிச்சிருந்தால்! அந்த அண்ணன், தங்கை சென்டிமென்ட் காட்சிகளில் நினைக்கவே முடியலை! நல்லவேளையா படம் பார்க்கும்படி அமைந்தது. பிழைச்சோம்.

    பதிலளிநீக்கு
  7. சிவாஜியைப் பற்றி மட்டும் பேசுகிறீர்களே... எம் ஆர் ராதா - எம் ஜி ஆர் பற்றி இன்னும் படிக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்த அண்ணன், தங்கை சென்டிமென்ட் காட்சிகளில் நினைக்கவே முடியலை! //

      அப்படி நடித்திருந்தால் கைவீசம்மா கைவீசு, சான்ஜாடம்மா சாஞ்சாடு மாதிரி இந்தப் படத்தில் என்ன சொல்லி இருப்பார் சிவாஜி? பொருத்தமாகச் சொல்லுங்கள்!

      நீக்கு
    2. பதிவை முழுசும் அப்போவே படிச்சுட்டேன். எம்.ஆர்.ராதா நடிப்பு "சித்தி"படத்திலும் இன்னும் ஒரு படம், பெயர் நினைவில் இல்லை. நல்லா இருக்கும். அவருக்குக் காமெடியும் நன்றாக வரும். எம்ஜிஆர் பத்தி என்ன சொல்லுவது! இஃகி, இஃகி, இஃகி மனிதருக்கு எல்லாவகையிலும் தெய்வத்தின் துணை! அதிர்ஷ்டம்!

      நீக்கு
    3. //அப்படி நடித்திருந்தால் கைவீசம்மா கைவீசு, சான்ஜாடம்மா சாஞ்சாடு மாதிரி இந்தப் படத்தில் என்ன சொல்லி இருப்பார் சிவாஜி? பொருத்தமாகச் சொல்லுங்கள்!// வேணாம், வேணாம், கற்பனை பண்ணவே பயம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு. அதிலும் ஃபடாபட் ஜோடின்னா! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    4. அந்த லிங்க் போய்ப் பார்த்தீர்களா? அவர் (டாக்டர் ஆப்ரஹாம்) வேறு சில தலைப்புகளிலும் எழுதி இருக்கார்.

      நீக்கு
    5. //கற்பனை பண்ணவே பயம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு. //

      சிவாஜிக்கும் படாபட்தான் ஜோடியா நடிச்சிருப்பாரா என்ன? கே ஆர் விஜயா, பப்பிம்மா...

      நீக்கு
    6. >>> சிவாஜிக்கும் படாபட் தான் ஜோடியா நடிச்சிருப்பாரா என்ன?..<<<

      படாபட்டுக்கு அந்த பாக்கியம் கிடைக்கலே.. சீக்கிரமா அனுப்பி வெச்சிட்டானுங்க!..

      பெரிய புன்னகை..ன்னா K.R.விஜயா...

      அப்போ சின்ன புன்னகை யாரு?..

      அது யாருங்க குறுக்கால கேள்வி கேக்குறது!?...

      சின்ன புன்னகை யாரு.. ன்னு கேக்குறீங்களே...ரொம்பவும் கொயந்தை மனசுங்க உங்களுக்கு!..

      நீக்கு
    7. சில சி டி க்களில் பார்த்திருக்கிறேன், புன்னகை இளவரசி சினேகா என்று.

      நீக்கு
    8. ஶ்ரீராம்... எம் ஆர் ராதா பற்றி நிறையக் குறிப்பிடலாம். அவர் தைரியம், திறமை, கலாய்க்கும் போக்கு என்று... அவருள்றும் மனிதப் பண்பு இருந்தது. திராவிடக் கட்சி வளர்ச்சியில் பெரும் பங்கு அவருக்கு உண்டு, ஆனால் கட்சி அவரைக் கைவிட்டுவிட்டது

      நீக்கு
    9. ஆமாம், கௌதமன் சொல்வது போல் சிநேகாவைத் தான் புன்னகை இளவரசி என்பார்கள். அவர் உண்மைப் பெயர் சுஹாசினி. குமுதம் நடத்திய போட்டியில் தேர்வாகி அட்டைப்படத்தில் இடம்பெற்றுக் கதாநாயகியாக ஆனார் எனச் சொல்லப்பட்டாலும் அவர் அண்ணனோ, தம்பியோ சினிமா நாட்டிய இயக்குநர் கலாவின் சகோதரி கணவர்னு கேள்விப் பட்டிருக்கேன்.

      நீக்கு
    10. எம் ஆர் ராதா பற்றி நிறைய சொல்லலாம்தான். இன்று யதேச்சையாக பானு அக்காவும் எம் ஆர் ராதா - எம் ஜி ஆர் பற்றி தன்னுடைய இன்றைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

      நீக்கு
  8. வணக்கம் வைக்க மறந்து விட்டேன். எல்லோருக்கும் காலை வணக்கம்

    பதிலளிநீக்கு
  9. அலுவலக யுக்தி அருமை...

    கருத்துரைகளில் பல தகவல்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை யாக இருந்தது. தப்பு,....தப்பா, தப்பினால், தப்பு விழும். சரியான விசுக் குழப்பம்.
      சரியாகக் கையாண்டு சமாளிக்கும் சாமர்த்தியம் வியப்பாக இருக்கு ஸ்ரீராம்.

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    காலை வணக்கம் என்று கூட எழுத விடவில்லை தங்களின் மாறி மாறி வந்த சினிமா அலசல்கள். சுவாரஸ்யமாக படித்துக் கொண்டேயிருக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. ஹா.. ஹா.. ஹா.. கமெண்ட்ஸ் படித்துக் கொண்டே கமெண்ட் போட மறந்து விட்டீர்களா!

      நீக்கு
  11. காலை வணக்கம்.

    எங்கேயோ கேட்ட குரல் - எனக்கும் பிடித்த படம்.

    பதிலளிநீக்கு
  12. எம்.ஆர்.ராதாவுக்கு சரியாக குறி பார்க்கத் தெரியாத காரணத்தால்தான் இன்றைய தமிழ்நாடு அல்லோலப்பட்டுக் கிடக்கிறது.

    எதையும் பொதுநலத்தோடு தொலைநோக்கு பார்வை பார்த்தால் நான் சொன்னது தவறாகத் தெரியாது.

    சிவாஜி மகளாக பல படங்களில் நடித்த ஸ்ரீதேவி பின்னாளில் ஜோடியாக நடித்த படங்கள் விஸ்வரூபம், சந்திப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> சரியாக குறி பார்க்கத் தெரியாத காரணத்தால் தான்....<<<

      இதுக்குத் தான் கில்லர் ஜி வேணுங்கிறது...

      குறி எல்லாம் சரி தான்..
      டுப்பாக்கி ஓட்டை.. ன்னு பேசிக்கிட்டாங்க!..

      நீக்கு
    2. இல்லை கில்லர்ஜி.... எம் ஜி ஆர் காரணமாக தமிழகம் கொள்ளையர்களிடமிருந்து தப்பியது. தொலைநோக்கோட பார்க்கணும்னா தமிழர்கள் காமராஜ் சைடுலதான் எப்போதும் இருந்திருக்க வேண்டும்.

      அதுவும்தவிர சும்மா மக்கள் எல்லாம் அன்பு செலுத்த முடியுமா? ஆள் நல்லவராக இருந்திராவிட்டால்? மக்கள் ஆதரவு என்பதே பெரிய கொடுப்பினை அல்லவா?

      நீக்கு
    3. துரை சார்.. எம் ஆர் ராதா அப்போது சுதியில் இல்லை. இன்னொன்று, அவரே சொன்னது, துப்பாக்கியின் மருந்து கெட்டிதட்டிப் போயிடுச்சு என்று. எம் ஜி ஆர் ஸ்டன்ட் மேன் என்பதால் முதல் குண்டு வெடித்ததுமே குதித்து சோபா பின்னால் தாவிவிட்டாராம். இருந்தாலும் கடைசி வரை, சிவாஜிக்கும் எம்ஜியாருக்கும் அவர் "ராதாண்ணன்" தான். அவருக்கு, "கணேசா", "ராமசந்திரா"தான்

      நீக்கு
    4. >>> எம் ஜி ஆர் காரணமாக தமிழகம் கொள்ளையர்களிடமிருந்து தப்பியது... <<<

      உண்மைதான்.. ஆனாலும்

      குழம்பிப் போய் மதுவை அடைத்தார்.. திறந்தார்...
      கல்வித் தொந்திகள் உருவாகக் காரணமானார்...

      நமக்கெல்லாம் ஜாலியானது என்ன... ன்னா

      சைக்கிள்..ல லைசன்ஸ் இல்லாமப் போனாலும் டபுள்ஸ் போனாலும்
      லைட் பெல் இல்லாமப் போனாலும் புடிக்கப்படாது...

      அப்படியே புடிச்சாலும் காத்தைப் புடுங்கி விடக்கூடாது.. இதெல்லாம் தான்..

      ஆனா - அதுக்கப்புறம்
      சைக்கிளே இல்லாமப் போனவனுங்களப் புடிச்சிட்டாங்க!..

      கிக்கிக்...கிக்கிக்...கீ!...

      நீக்கு
    5. குறிபார்க்கத் தெரியாமல் எல்லாம் இல்லை கில்லர்ஜி. அருகிலேயே இருந்ததும், அந்தத் துப்பாக்கி நீண்ட நாட்களாக உபயோகப்பூப்படுத்தப்படாமல் இருந்ததும்தான் காரணம்.

      நீக்கு
    6. எம் ஆர் ராதா சுதியில் இல்லை என்பதால் தான்
      எம் ஜி ஆர் அவரை, கண்டிக்காமல் விட்டார் என்று நினைக்கிறேன்.
      ராதா வெகுச் சிறந்த நடிகர்.
      தேவர் படத்தில் கடையாக ஆஸ்திகராக நடித்தது, பார்க்கவே பாவமாக இருந்தது.

      நீக்கு
  13. முதலாவது, பல இடங்களில் புன்னகைக்க வைத்தது.

    இரண்டாவது, சுவாரஸ்யமான தகவல்கள்!

    பதிலளிநீக்கு
  14. வியாழன் கதம்பத்தில் உங்கள் அனுபவமும் நன்றாக இருந்தன ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  15. இன்றைய உங்கள் பதிவு பலரை உடனே பதில் சொல்ல வைத்து விட்டது!!
    யாராவது கேள்வி கேட்டல் உடனே பதிலின் சொல்லக் கூடாது, ஒரு இரண்டு நிமிடங்களாவது யோசிக்க எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார் எங்கள் பேராசிரியர் ஒருவர். இதை பாலகுமாரனும் வலியுறுத்துவார்.
    காதலன் படத்தில் கூட பிரபு தேவாவிடம் எஸ்.பி.பி.," கோபமோ, சந்தோஷமோ ஒரு ஐந்து நிமிடம் ஒத்திப்போடு" என்பது போல ஒரு வசனம் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இன்றைய உங்கள் பதிவு பலரை உடனே பதில் சொல்ல வைத்து விட்டது!!//

      ஹா... ஹா... ஹா.. சப்ஜெக்ட் அப்படி பானு அக்கா!

      நீக்கு
  16. //பதிலை மெதுவாகச் சொல்வதிலும், வேண்டுமென்றே தவறாகச் சொல்வதிலும் சில அனுகூலங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்!//
    இதைத்தானே பெண்களின் நால்வகை குணங்களில் ஒன்றான மடம் என்பார்கள்? ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டே தெரியாதது போல நடிப்பது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் எப்பவும் அப்படிச் செய்ய முடியாது. ரொம்பத் தேவையானபோதுதான் யூஸ் செய்து கொள்ளணும்!

      நீக்கு
  17. ரஜினிக்கு மறுவாழ்வு தந்த படங்கள் என்றால், 'ஆறிலிருந்து அறுபது வரை', மற்றும் 'தர்ம யுத்தம்' படங்கள்தான். எம்.ஜி.ஆரால் ரஜினிக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று கிளப்பிவிடப்பட்ட புரளியில், 'ரஜினி அவ்வளவுதான்' என்று எல்லோரும் முடிவு கட்டி விட்ட நிலையில் இந்த இரண்டு படங்களும் வெளியாகி,வெற்றி பெற அவருக்கு புனர் வாழ்வு கிடைத்தது. எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்வு அஸ்தமித்தது.

    எம்.ஜி.ஆர்.,மனோரமா,வடிவேலு போன்றவர்கள் ரஜினிக்கு எதிராக செயல்பட்ட பிறகு அவர்களின் திரையுலக வாழ்க்கை சரிவை சந்தித்ததற்கு ஜோதிட ரீதியாக காரணம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ!..

      இது வேறயா!?...

      டஜினி - அவ்வளவு தான்!.. - என்ற நிலையில் அவரை மேலெடுத்த படம் தீ...
      பாலாஜி அவர்களின் தயாரிப்பு...

      தொடர்ந்து வந்தவை - ஆறிலிருந்து அறுபது வரை, தர்ம யுத்தம் - முதலானவை...

      நீக்கு
    2. துரை சார்.... இந்த 'தீ' படம் வெளியான உடனேயே அணைந்த படமல்லவா? படு அறுவையாச்சே. இந்தப் படத்திலா இறந்தவனுடைய கண்ணிலிருந்து யார் கொன்றது என்று ஜூம் செய்து கண்டுபிடிப்பார்கள்?

      நீக்கு
    3. ரஜினியை அப்போது காப்பாற்றியது முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி என்பார்கள். அதோடு இல்லாமல் பாலசந்தரும் தன் மகனைப் போல் அவரைக் கட்டிக்காப்பாற்றி இருக்கார்.

      நீக்கு
    4. ரஜினியை எதிர்த்ததால் எம் ஜி ஆருக்கு திரையுலக வாழ்வு போனது என்பது சரியில்லை. அவர் அரசியலில் தீவிரமாக இருந்தார். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தையே ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி முடித்தார். வடிவேலு கூட ரஜினியை எதிர்க்கவில்லை. கேப்டனை எதிர்க்க, திமுகவுடன் கூட்டு சேர்ந்தார்.

      நீக்கு
    5. நெல்லை.. தீ உட்பட ரஜினியின் ஆரம்பகாலத் திரைப்படங்கள் பலவும் ஹிந்தியில் அமிதாப் நடித்து வெற்றி பெற்றவை. தீ தீவார் பட தமிழ் வெர்ஷன்.

      நீக்கு
    6. //ரஜினியை அப்போது காப்பாற்றியது முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி என்பார்கள்.//

      அது தெரியவில்லை கீதா அக்கா. கேபிக்கும் அந்த குணங்கள் இருந்திருக்குமா என்றும் தெரியவில்லை. ஆனால் குணமாகிக்கொண்டு வரும் வேளையிலேயே எஸ் பி பி நடத்திய ஒரு பாராட்டு விழாவில் இலேசாக இது குறித்து ரஜினி மனம் திறந்து பேசி இருந்தார்.

      நீக்கு
    7. உண்மையாகவா பானு மா. நீங்கள் ஜோதிடத்துக்கு என்று தனிப் பதிவு
      எழுதக் கூடாதா. என் போன்றொருக்கு உதவியாக இருக்கும் மா ப்ளீஸ்.

      நீக்கு
  18. //ரஜினிக்கு ஃபடாஃபட் ஜோடியாக அமைந்த மாதிரி மற்ற நடிகைகள் அமையலைனே சொல்லணும்.// கீதா அக்கா ராதிகாவை மறந்து விட்டீர்களே...?

    பதிலளிநீக்கு
  19. எம்.ஆர்.ராதா மிகச் சிறந்த நடிகர். அவருடைய டைமிங்க் அற்புதம்! வசனங்கள், அதை அவர் குரலை ஏற்றியும்,இறக்கியும் உச்சரிக்கும் பொழுது புது பரிமாணம் பெறும். சில காட்சிகளில் தனக்கு டைட் க்ளோசப் வைக்கச் சொல்வாராம், அப்பொழுது அவர் காட்டும் முக பாவங்களை இப்பொழுது பார்க்கும் பொழுது, இந்த காட்சி கைதட்டலை அள்ளியிருக்குமோ என்று நினைத்துக் கொள்வேன். வில்லத்தனத்தை ரசிக்கும்படி செய்தவர். வி.கே.ராமசாமி கல்கியில் எழுதிய தொடரில், " யாருடைய பாணியையும் பின்பற்றாத சிவாஜி கணேசன் ஒரே ஒரு நடிகரின் பாணியை கொஞ்சம் பின்பற்றியிருக்கிறார் அது எம்.ஆர்.ராதா" என்று எழுதியிருன்தார்.
    இந்தபடம்தான் அவருடைய சிறந்த படம் என்று கூறிவிட முடியாது. இருந்தாலும் ரத்தக்கண்ணீர், பாவ மன்னிப்பு, கற்பகம் போன்ற படங்கள் என்னைக் கவர்ந்தவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலே பாண்டியா - ஆளவந்தார் எப்படி!..

      நீக்கு
    2. ரஜினி, ராதிகா ஜோடியா நடிச்ச படங்கள் எதுவும் பார்த்த நினைவே இல்லை பானுமதி! ஆனால் ராதிகாவும் திறமையான நடிகை தான்!

      நீக்கு
    3. பானு அக்கா... வி கே ஆரின் சிவாஜி பற்றிய தகவல் எனக்கு புதிது.

      நீக்கு
    4. துரை ஸார்.. பலே பாண்டியா ஆளவந்தார் பலே ஜோர்!

      நீக்கு
    5. //ரஜினி, ராதிகா ஜோடியா நடிச்ச படங்கள் எதுவும் பார்த்த நினைவே இல்லை //

      ஊர்க்காவலன், நலலவனுக்கு நல்லவன்!

      நீக்கு
    6. ரஜினியோடு சுஹாசினி ஜோடியா நடிச்ச ஒரு படம். செம அறுவை! பார்த்துத் தொலைச்சேன்! இஃகி, இஃகி, ஆனால் ரஜினி அதில் செத்துப் போவார்னு நினைவு. மற்றபடி நீங்க சொன்ன பேரிலே எல்லாம் படங்கள்? ம்ஹூம்! தெரியாத்!

      நீக்கு
    7. //ஜினியோடு சுஹாசினி ஜோடியா நடிச்ச ஒரு படம். செம அறுவை!//

      ரஜினியோடு சுஹாசினி நடிச்ச படம் தர்மத்தின் தலைவன் ரெண்டு ரஜினி. ஒருத்தர்தான் செத்துப்போவார். இந்தப்படம் ஹிந்தி கஸ்மே வாதே படத்தின் தழுவல். அமிதாப் நடித்தது.

      நீக்கு
  20. //கற்பனை செஞ்சி பார்த்தாலே
    பயங்கரமா இருக்கு!...இத்தனைக்கும் நான் சிவாஜி ரசிகனாக்கும்!..//
    சிவாஜி செய்த மிகப்பெரிய தவறு இதுதான். நான் உட்பட சிவாஜி ரசிகர்கள் பலர் ஒரு சமயம் அவர் படங்களுக்கு போவதை தவிர்க்கும் படி நேர்ந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யப்பா!...

      நம்ம பக்கத்துக்கு ஒருத்தங்க கெடைச்சிட்டாங்க!...

      நீக்கு
    2. நான் எப்போவுமே இருக்கேனே! இதுக்குத் தான் ஆரம்பகால ஜிவாஜி படங்களையும் பார்த்திருக்கக் கூடாது என்கிறேன். :)))))

      நீக்கு
    3. //நான் உட்பட சிவாஜி ரசிகர்கள் பலர் //

      ​எனக்கு சிவாஜியை பிடிக்கும் என்றாலும் பாலும் பழமும் உட்பட நிறைய புகழ் பெற்ற படங்கள் நான் இதுவரை பார்த்ததில்லை! பின்னாட்களில் வந்த படங்கள் இன்னும் சுத்தம். ஆனாலும் அவற்றிலும் கீழ்வானம் சிவக்கும், நல்லதொரு குடும்பம், ரிஷிமூலம் போன்ற படங்கள் ஓகே..

      நீக்கு
  21. முள்ளும்,மலரும் படத்தின் வெற்றிக்குக் காரணம், திரைக்கதை, பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு, இளையராஜாவின் இசை, ஷோபா என்னும் அற்புதமான நடிகையின் நடிப்பு, ரஜினி அவருக்கு மருதானி இட்டுவிடும் காட்சியில் அவர் காட்டியிருக்கும் நுணுக்கமான பாவம்..! வாவ்! ஏன்தான் இப்படிபட்ட நல்ல நடிகைகள் பொருந்தா காதலில் மாட்டிக் கொள்கிரார்களோ..??!! இந்தப் படத்தின் இரண்டு கதா நாயகிகளுக்கும் சோக முடிவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பொண்ணுங்க சும்மா இருந்தாலும்
      இந்த ராகு காலங்கள் சும்மா இருப்பதில்லை!..

      நீக்கு
    2. //இந்த ராகு காலங்கள்/

      ஒரு ராகுகாலம் தெரியும்... இன்னொன்று?

      :)))

      நீக்கு
  22. ஆரம்பம் தப்பை தப்புத்தப்பா:) என்னமோ தப்பாவே சொல்றீங்க ஸ்ரீராம்.. எனக்குத்தான் எல்லாமே தப்பாவே புரியுது:) ஒண்ணுமே நேராப் புரிய மாட்டேங்குது:)).. இன்னும் இது பற்றிப் பேசினால் மொத்தமும் தப்பாகிடப்போகுது:)) ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தப்பைத் தப்பாச் சொல்லணுமா, சரியாச் சொல்லணுமா அதிரா? அதுதான் கேள்வி!!!!

      நீக்கு
    2. தப்பைச் சரியாச் சொன்னாலும் அது தப்புத்தான்ன்ன் ஹா ஹா ஹா:)

      நீக்கு
  23. முள்ளும் மலரிலும்.. எனக்கு மறக்க முடியாதது.. திரும்பத் திரும்ப எத்தனையோ முறை கேட்டது.. அந்த ஜீப்பில் போகும்போது வரும் பாட்டு.... எத்தனை தடவை கேட்டாலும் புதுசாக் கேட்பதுபோல ஒரு ஃபீலிங்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் அதிரா எனக்கு முள்ளும் மலரும் படத்தில் இந்தப் பாடலைவிட அடி பெண்ணே முதலில் பிடிக்கும்.

      முள்ளும் மலரும் தலைப்புக்கு என்ன அர்த்தம் சொல்லுங்கள்...

      நீக்கு
    2. முள்ளென நினைத்து கோபக்காரர்களை ஒதுக்கிடாதீங்க... அங்கும் பூப்போல மனம் இருக்கும் என அர்த்தம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹா ஹா ஹா இஸ்கி இஸ்கி:)..

      நீக்கு
    3. //முள்ளென நினைத்து கோபக்காரர்களை ஒதுக்கிடாதீங்க... அங்கும் பூப்போல மனம் இருக்கும் என //

      ஆஹா...

      நீக்கு
  24. எம் ஜி ஆர். எம் ஆர்.. ராதா.. கதை முன்பும் ஒரு தடவை பகிர்ந்திருக்கிறீங்களோ... இருப்பினும் சுவாரஷ்யமான தகவல்.. உங்கள் புளொக் படிச்சுத்தான் எம் ஜி ஆரை ஆரு சுட்டாக எனும் பொது அறிவை எல்லாம் தெரிந்து கொண்டேன்ன்.. இப்போ அல்ல முன்னமே:)) ஹ ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் புளொக் படிச்சுத்தான் எம் ஜி ஆரை ஆரு சுட்டாக எனும் பொது அறிவை எல்லாம் தெரிந்து கொண்டேன்ன்..//

      பிரபல கொலை வழக்குகள் பதிவிலோ?

      நீக்கு
    2. இல்ல வெள்ளிக்கிழமைப் போஸ்ட்டிலாக இருக்கோணும்...

      நீக்கு
    3. பயங்கர புதன் புதிரா இருக்கே!

      நீக்கு
  25. ஏ அண்ணனை எந்தப் பக்கத்திலும் காணோமே... ஏன் வாறார் இல்லை... அதிராவைப் பாருங்கோ எவ்ளோ நேர நெருக்கடியிலும் ஒழுங்கா கொமெண்ட் போடுறேன்:).. ஏன் அவரால மட்டும் முடியுதில்லை:)...
    ஹையோ சிக்ஸர் அடிப்பதைப்போல அடிக்கப் போறார் மீ ஓடிடுறேன்ன்ன்ன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹைஃபைவ் அதிரா! நானும் கேட்க நினைத்தேன் உங்கள் கேள்வியைப் பார்த்ததும் உங்களோடு சேர்ந்து தேடுறேன்..ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணாவைக் கொஞ்ச நாளா காணலையே...கொஞ்ச நாள் முன்னாடி மதுரையில் சுற்றினார் பொவென்டோ குடித்தார் பொஸ்தக ஆராய்ச்சி பண்ணினார்.....இப்ப எங்கு சுற்றுகிறாரோ?!!!! ஒரு வேளை வாங்கின பொஸ்தகத்துல மூழ்கிட்டாரோ என்னவோ?!!!!

      ஹலோ பூஸாரே நீங்களும் இடையில் காணாமப் போனீங்க. நானும்தேன்....

      கீதா

      நீக்கு
    2. ஏகாந்தன் ஸார் சந்தோஷமாக இருப்பார். நேற்று பாகிஸ்தானை இந்தியா ஜெயித்து விட்டதே! ஆனாலும் ஆளைக்காணோம்!

      நீக்கு
    3. அல்லோ கீத்ஸ் மீ ஜொள்டிட்டெல்லோ போனேன்ன்:) இல்லாட்டில் எல்லோரும் என்னைத் தேடி அலைஞ்சு உண்ணாவிரதமிருந்து எலிஞ்சிடப்போகினம் என:)...
      நினைப்புத்தான் புழைப்பைக் கெடுக்குமாமே... எனக்குச் சொன்னேன்ன்ன்:)

      நீக்கு
  26. இதுதான் சரி என்று சொல்லவில்லை. ஆனால் இது தவறு என்று சொல்லமுடியாது! இல்லையா?!!//

    ஹா ஹா ஹா ஹா இதுவும் ஒரு தக்கினிக்கி!!!!! கமலு பாணி டயலாக்கு...ஹா ஹா.. ஸ்ரீராம்...சரியே...இப்ப புதுசான கான்செப்ட்டே உலகில் எதுவுமே இது தப்பு இது சரி என்றில்லை. அந்தந்தச் சூழலுக்கு ஏற்றவாறு தான் பேச்சு செயல் முடிவு எல்லாமே என்பதால். இப்படித்தான் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அதுவும் நேரடியாகப் பேசாமல் குழப்பி அடித்துப் பேசி (கமலு??!!!) நம்மை அதைப் பற்றி யோசிக்க வைப்பதும் என்ன பேசுகிறார் ஒரு வேளை இதுதான் சரியோ என்று பேக்கு போல தலை ஆட்டுவதும் )நாந்தேன்)... ஹிஹிஹி....பட் நல்ல தக்கினிக்கி ஸ்ரீராம்...ஹா ஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா... ஆளைக் காணோமே என்று பார்த்தேன். கமல் வசனம்.. இது நம் பதிவுலகில் கொஞ்சம் பொருந்தும் இல்லை?!!

      நீக்கு
  27. வாசகர்கள் பலரும் திரைப்பட என்சைக்லோ பீடியாவாகக் காண்கிறேன் விவாதிக்கப்பட்ட ட பல படங்களை நானும் பார்த்திருக்கிறேன் ஆனால் அது பற்றிகருத்து சொல்லும் அளவு அவைநினவில் இல்லை சரி கேள் வி கேட்பவர்களைப்பற்றியும் பதில் சொல்பவர் பற்றியும் பதிவு அதுபற்றி கருத்துப் பரிமாற்றம் இல்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எம் பி ஸார்... இலையில் நான்கைந்து ஐட்டங்கள் இருந்தாலும் நமக்குத் பிடித்ததைத்தானே எடுத்துச் சாப்பிடுவோம்? இது எவர்க்ரீன்!

      நீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    /பதிலை மெதுவாகச் சொல்வதிலும், வேண்டுமென்றே தவறாகச் சொல்வதிலும் சில அனுகூலங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்!/

    ஆம் உண்மை.. கேட்கும் கேள்விகளுக்கு, தப்பு தப்பாக பதிலளித்து, தப்பான அபிப்பிராயங்களை சம்பாதித்து கொள்வதை விட, கேள்விக்குத் தெரிந்த சரியான பதில்கள்களையும் எக்குத்தப்பாக மற்றொரு கேள்வி புறப்படும் தப்பான நேரத்தில் கூறி "நே"ன்னுமாட்டிக்கிட்டு அவஸ்த்தை படுவதை விட, தாங்கள் மேற்ச் சொன்னது போல் அதற்குரிய பதிலை அப்புறம் சாவகாசமாக சொல்லியோ,( ஆனால் அங்கு கேள்வி கேட்டவர்கள் இருக்க வேண்டும். அவர்களுக்கு அந்த கேள்வி மறந்து விடாமல் இருக்க வேண்டும். இதெல்லாம் ஒரு தனிப் பிரச்சனைகள்.) இல்லை அந்த இடத்திலிருந்து அவசரமாக எஸ்கேப் ஆகியோ அனுகூலத்தை உண்டாக்கிக் கொள்ளலாம்.

    அலுவலகத்தில் தாங்கள் செயல்படும் பாங்கு சரியானதே.,! தங்களுக்கு அனுகூலமாக இருக்கும் பட்சத்தில்.. பயனுள்ள நல்ல சரியான அலசல்கள். மிகவும் ரசித்தேன்.

    எம். ஆர் ராதாவைப் பற்றிய செய்திகளும் புதிதானவை. படித்துக் கொண்டேன்.

    முள்ளும் மலரும் படம் எனக்கும் மிகவும் பிடிக்கும். இரண்டு மூன்று முறை பார்த்துள்ளேன்.(தொலைக் காட்சியில்) "செந்தாழம் பூவில்" பாட்டும் அடிக்கடி கேட்டுள்ளேன். இயற்கையோடு பொருந்திய பாடல். பகிர்வுகளுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. மீள்வருகைக்கு நன்றி. பதிவில் சிலநேரம் வேண்டுமென்றே சில கண்ணிகள் வைத்தால் நண்பர்கள் கவனிக்கிறார்களா என்று பார்க்கலாம். உதாரணத்துக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஒரு பதிவில் எண்ணிக்கையில் தவறு விட்டுப் பதிவிட்டிருந்தேன். யாருமே சொல்லவில்லை!

      நீக்கு
    2. தறசமய பதிவில் வைத்த கண்ணியில் எத்தனை நண்பர்கள் சிக்கவில்லை.. இல்லை சிக்கியுள்ளார்கள்? எந்த இடத்தில் கண்ணி உள்ளது? எங்கு எண்ணிக்கையில் தவறு நேர்ந்து விட்டது? புரியவில்லை.. ஆனாலும் தப்பாக கேள்விகள் மட்டும் கேட்கிறேனோ என ஐயம் மட்டும் வருகிறது. பதில் கிடைத்தால் நன்று. நன்றி.

      நீக்கு
    3. கண்ணி என்று தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் கமலா அக்கா. பின்னூட்டம் கொடுப்பதற்கு நண்பர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும். அது ஒரு கண்ணி! அவ்வளவுதான். நீங்கள் நினைக்கும் அளவு எல்லாம் இல்லை.

      நீக்கு
    4. புரிந்து கொண்டேன்.. நானும் எதுவும் தப்பாக நினைத்து கேட்கவில்லை. சும்மா ஜோக்குகாக வார்த்தைகளைப் போட்டு துருவிக் கேட்டேன். என் கேள்விகள் தங்கள் மனதை சங்கடப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். மிக்க நன்றி.

      நீக்கு
  29. எம்ஜிஆர், எம் ஆர் ஆர் செய்தி புதியது. பொதுவாகவே பிரபலங்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆனால், அங்கு பணி புரிபவர்கள் - மருத்துவர்கள், செவிலியர் கூட -செய்திகளில் இடம் பெற ஆசைப்படுவார்கள் என்பதைக் கேட்டும் இருக்கிறேன்.

    ஆ ஆ...முள்ளும் மலரும் படத்தில் ஜிவாஜியா?!!! கீதாக்கா வேர் ஆர் யு??!!!
    ரஜனிக்கு அமைந்த சில நல்ல படங்களில் இதுவும் ஒன்று. நான் முழுவதும் பார்த்ததில்லை. சில சீன்கள் மட்டுமே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா... கீதாக்கா ஆல்ரெடி வந்து பொங்கிட்டுப் போயிட்டாங்க பார்க்கலையா?

      நீக்கு
    2. கீதாவுக்கு கீதாக்கா பொங்கியது தெரியாமல் இருந்திருக்கும் அதிரா... அதைப் படித்த பிறகு அமைதி ஆயிட்டாங்க பாருங்க..!

      நீக்கு
  30. தப்பை அறியாமல் செய்றதில் தப்பில்லை ஆனா அந்த தப்புதான் சரின்னு அடம்பிடிப்பது தப்பு :)
    உங்கள் பார்வையில் எதெல்லாம் தப்பு சொல்லுங்க பார்க்கலாம் :) இங்கே கேள்விக்குறி போடாம நெக்ஸ்ட் புதனுக்கு அங்கே கேக்க போறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தப்புக்கு டெபனிஷனா? மாறிக்கொண்டே இருக்குமே... அடுத்த புதன் எங்கள் ஆசிரியர்கள் பதில் சொல்லட்டும்!

      நீக்கு
  31. நான் எப்பவுமே கு கு தான் :) அவசரமா தெரியும்னு சொல்லிடுவேன் இதுக்காக கல்லூரி நாட்களில் தனியா கூப்பிட்டு மிரட்டுவாங்க கூட படிக்கிறவங்க ..
    என்னை பொறுத்தவரை அமைதியா எனர்ஜியை வேஸ்ட் பண்ணாம உக்காந்து இருப்பதே மேல் .
    நம்மை கேட்டால் மட்டும் பதில் சொல்லலாம் .


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா பதிலும் தெரிஞ்சிருந்தா எவ்வளவு வேண்டுமானாலும் அவசரப்படலாம், சொல்லலாம். என்ன மாதிரி ஆட்கள்தான் இப்படி எல்லாம் வழி கண்டுபிடிக்கணும் ஏஞ்சல்!

      நீக்கு
  32. எங்கப்பா தீவிர எம் சி ஆர் ரசிகரா இருந்து அப்புறம் மாறியவர் :) அவர் எப்பவும் எம் ஆர் ராதா ,ஜாவர் சீதாராமன் அப்புறம் என்னென்னமோ பேரெல்லாம் சொல்வார் எல்லாம் ஒட்டு கேட்டதுதான் :) எங்களுக்கு அரசியல் பேசக்கூடாதுன்னு கடும் சட்டம் பள்ளிநாட்களில் .அறியாத விஷயங்களை அறிந்தேன் இங்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தனூண்டு பதிவிலும், இவ்வளவு பின்னூட்டங்களிலும்தான் இதை எல்லாம் அறிந்து கொண்டீர்களா? அட! ஒருவருக்காவது உதவியாய் இருந்திருக்கிறதே இது! நன்றி ஏஞ்சல்.​

      நீக்கு
    2. அது எங்களுக்கு தொலைக்காட்சி சீரியல் மட்டுமே அப்போ தெரியும் சினிமா கூட செலக்டடா பார்ப்போம் முதலில் பேரன்ட்ஸ் பார்த்துட்டு ஓகேன்னாதான் எங்களுக்கு அனுமதி அதுவும் டிவிடி வந்ததும் .பல செய்திகளை ரெக்கார்ட் நோட்டுக்குள்ள நக்கீரன் ஜூவியில் திருட்டுத்தனமா படிச்சது .எம் ஆர் ராதா சுட்டார் தன்னையும் சுட்டுக்கிட்டார் என்பது மட்டுமே தெரியும் இப்படி ஒரே ஹாஸ்பிடல் எல்லாம் தெரியாதது எனக்கு .நான்லாம் க .அ .பே .தொடங்கின பிள்ளைகள் :)
      அது சரி ஹேராம் நல்ல படமா ? நானா ஒரு பாட்டு கேட்டேன் ரீசண்டா என்ன ஒரு இனிய குரல் லதா மங்கேஷ்க்கரோடது
      ஆனா சோகம் இழையோடர போல ..படம் பார்க்க ஆசையா இருக்கு .

      நீக்கு
    3. ஹே ராம் பாருங்க... ஆனா கொஞ்சம் பொறுமை வேண்டும்!

      நீக்கு
    4. அதென்ன நீங்களே சொல்லிட்டு நீங்களே கேள்விக்குறி போடுகிறீர்கள்? இருங்கள்.. கீதா அக்கா வந்து சொல்வார்!

      நீக்கு
    5. கீதா அக்கா சரியா சொல்லிடுவாங்க :) ஆனா நீங்க சொல்லியே ஆகணும்

      நீக்கு
    6. ​கல்யாணத்துக்கு அப்புறம் பேசத் தொடங்கிய...?

      நீக்கு
    7. awwwwwwwwwwwwwwwwwwwwwww:)

      எப்படி சரியா சொன்னீங்க !!

      நீக்கு
    8. ஹிஹிஹி... எல்லாம் கீதா அக்கா டிரெயினிங்!

      நீக்கு
    9. ஆஹா !! சூப்பர் :) இனிமே இதைவிட கஷ்டமா சுருக்கி எழுதணும் :)

      நீக்கு
    10. ஏஞ்சல், ஸ்ரீராம், ஏன்னா மீயும் க.அ.பே. மனுஷி தான்! இஃகி, இஃகி, இஃகி, எங்க பிறந்த வீட்டில் கருத்து, பேச்சு, படிப்பு என எந்த சுதந்திரமும் கிடையாத்! :)))) வாய் விட்டுப் பாட முடியாது! :( ஸ்லோகம் சொன்னால் கூட மனசுக்குள் தான்!

      நீக்கு
    11. same pinch geethaakaa :) படிக்க மட்டும் விட்டாங்க நிறைய .
      அதுவும் எங்கம்மா எனக்கு சுடிதார் எடுத்தா அடிக்கிற கலர் தான் எடுப்பாங்க திருவிழால காணாம போனா கூட என்னை கண்டுபுடிக்கலாம் ..மீ ரொம்ப பாவம்

      நீக்கு
  33. //முள்ளும் மலரும் படத்தில் சிவாஜியைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் விரும்பினாராம். மகேந்திரன் ரஜினியைத் தெரிவு செய்தாராம். //

    ஹையோ சாமியே இதென்ன கொடுமை ?? யாரந்த தயாரிப்பாளர் ??
    எங்க சித்தப்பா ஆக்டிங் சூப்பரா இருக்கும் மு .மவில் அவர் ஸ்டைலனென்ன நடையென்ன அந்த attitude அந்த லாஸ்ட் ஸீன் தங்கச்சி போகும்போது நடிப்பென்ன ஹையோ சாமீ ஜிவாஜி அங்கிளை அங்கே நனைச்சும் பாக்க முடில :)
    ஆனா ரஜினியோட சில சந்தர்ப்பங்களில் சிவாஜி அவர்களும் ஒரு mentor போலிருந்து அவரை கண்ட்ரோல் செய்ய உதவியா இருந்தார்னு படிச்ச நினைவு .முதல்மரியாதை சிவாஜி அவர்களைத்தவிர யாராலும் அத்தனை இயல்பா வாழ்ந்திருக்க முடியாது அது போல தான் அன்பே சிவத்துக்கு கமல்ஹாசன் முள்ளும் மலருமுக்கு சித்தப்பா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Angel ரஜினி சித்தப்பானா, கமல் சின்ன சித்தப்பாவா,அப்போ சிவாஜி தாத்தா இல்லையோ. ஹஹாஹஹஹா.
      அந்த இளைய ரஜினி நடிப்பிலும் ,பார்க்கவும் அழகு. விகடனில்
      முள்ளும் மலரும், பொல்லாதவன் படங்களுக்கு அமர்க்களமாக
      விமர்சனம் வந்தது.
      கல்லூரிப் பெண்கள் அவரது பொல்லாதவன் டிஷர்ட் பார்த்து ஜொள்ளு விட்டதாகச் செய்தி.

      நீக்கு
    2. ஹாஹாஹா :) வல்லிம்மா அதே அதேதான் சிவாஜி சார் தாத்தாதான் :) அதிர்ச்சியில் ஜிவாஜி அங்கிள்னு எழுதிட்டேன் பிரபு அங்கிளின் அப்பா ஜிவாஜி சார் :)
      எங்க அம்மாவுக்கு ரஜினியின் படங்கள் ரொம்ப பிடிக்கும் :)
      என் பொண்ணே சொல்றா //i like that ஸ்டைலிஷ் தாத்தான்னு :)

      நீக்கு
    3. வல்லிம்மா உங்க பிளாக்கில் எனக்கு கமெண்ட் கொடுக்க முடியலை கூகிள் ப்ளஸ் இருந்தா மட்டும்தான் பின்னூட்டம் தர முடியுமா ?
      ஒரு ஐடி ஓபன் பண்ணிட்டு வரேன் :)

      நீக்கு
    4. //ஹையோ சாமியே இதென்ன கொடுமை ?? யாரந்த தயாரிப்பாளர் ??//

      என்ன செய்ய? பாச மலர், தங்கைக்காக, அண்ணன் ஒரு கோவில், என்று சகோதர பாச்சப் படங்களில் சிவாஜிதான் நிறைய நடித்திருக்கிறார். இன்னும் பழனி, படிக்காத மேதை... அதனால் அந்தத் தயாரிப்பாளருக்கு அபப்டிக் தோன்றி இருக்கலாம்!

      நீக்கு
    5. //கல்லூரிப் பெண்கள் அவரது பொல்லாதவன் டிஷர்ட் பார்த்து ஜொள்ளு விட்டதாகச் செய்தி.//

      ​இந்தச் செய்தி எனக்குப் புதுசு வல்லிம்மா.

      நீக்கு
  34. எம்.ஆர். ராதா பெயர்காரணம் இன்றுதான் தெரிஞ்சுக்கிட்டேன்

    கெட்டப்பய சார் இந்த காளி... எனக்கு பிடிச்ச வசனம். ரஜினியை கொண்டாட இந்த படமும் ஒரு காரணம், இந்த வசனத்தை அவர் சொல்லும் ஸ்டைலும், ஸ்லாங்கும்... செம...

    பதிலளிநீக்கு
  35. சிறுவயதில் இரத்தக்கண்ணீர் உட்பட எம்.ஆர்.ராதா நாடகங்கள் சிலவற்றைக் கண்டுள்ளேன். அவரைப் பற்றிய தகவல்கள் அனைத்துமே சுவாரஸ்யம் மிக்கவை. முள்ளும் மலரும் உமாசந்திரன் எழுதி கல்கியில் வெளிவந்த நாவல். மகேந்திரன் எப்படி எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப்படம் பெரும் வெற்றி பெற்றது.இந்த வெற்றி இயக்குனர் மகேந்திரனுக்குத் தான். சரியா தப்பா என்ற பாடல் கூண்டுக்கிளி படத்தில் வரும். https://www.youtube.com/watch?v=qPP_XaBbJz8 உங்கள் பதிவு இந்தப் பாடலை நினவுபடுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எடுத்த உடனே சரியாய்ப் போகவில்லை. போகப்போகத்தான் படம் பிக்கப் ஆனதாம். மகேந்திரன் சொல்லி இருந்தார். நன்றி நண்பர் முத்துசாமி.

      நீக்கு
  36. @ஸ்ரீராம், அதிரா, கீதா:

    கிரிக்கெட்டுக்கு நடுவிலே எபி-யின் சினிமழையில் நனைந்துகொண்டிருக்கிறேன். இடையிலே என் பெயரைக்கண்டதும் கிரிக்கெட் ஸ்கோர் மறந்துவிட்டது! நேற்று பாகிஸ்தானை உதைத்து தூள்கிளப்பிய இந்தியா நாளையும் ஜெயிக்குமா என்கிற சிந்தனை வேறு இடையிடையில்..

    ரஜினிகாந்தை புவனா ஒரு கேள்விக்குறியில் பார்த்து அசந்துபோனேன். சும்மா சொல்லக்கூடாது, மனுஷன் நன்றாக நடித்திருந்தார். என் பார்வையில், ரஜினி இதுவரை சரியான இயக்குனரால் இயக்கப்படவில்லை என்பதே (கேபி-யின் சில படங்களின் சில சீன்களில் அவர் திறமை வெளிப்பட்டிருப்பினும்). சூப்பர்ஸ்டார் என்கிற கமர்ஷியல் லேபிளையும் தாண்டி பார்க்கப்படவேண்டிய கலைஞர் ரஜினிகாந்த். அவரோ, ரசிகர்களுக்காக மசாலாவாகத் தந்துகொண்டிருக்கிறார் இன்னும்..ஹ்ம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் ஸார்.. இன்று ஊறுகாயாக வைத்த சினி செய்தி சென்னையின் திடீர் மழை போல பெருகி விட்டது. மெய்ன் டிஷ் ஊறுகாயாகி விட்டது! என்ன செய்ய!

      நீக்கு
  37. கீதா சீனியர் சொல்லியபடி எம் ஜி ஆர் கொஞ்சம் அதிர்ஷ்டக்காரர்..அவ்வளவுதான். ஆனால் எம்.ஆர்.ராதா ஒரு ஸ்பெஷல் டேலண்ட். சரியாக குறிபார்க்கத் தெரியாதவர் என்பார் கில்லர்ஜி..அது வேறு விஷயம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் எல்லா மாஸ் ஹீரோக்களுக்குமே அதிருஷ்டம்தான் காரணம் என்று சொல்ல முடியுமா ஏகாந்தன் ஸார்?

      நீக்கு
    2. நான் ரஜினிகாந்தை அதிர்ஷ்டக்காரர் என்று சொல்லவில்லை!

      அதே சமயம் சூப்பர் ஸ்டார் என்பது mass appeal, charisma சம்பந்தப்பட்ட விஷயம். இது அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்டதல்ல. இங்கே மேலிருந்து ஒரு mandate சம்பந்தப்பட்டவருக்கு இருக்கவேண்டும். தெளிவாகவே, மனித முயற்சி சம்பந்தப்பட்டதல்ல இது. ஆனாலும் அதிர்ஷ்டம் எனச் சொல்லிவிட்டு ஓடிவிடமுடியாது. லாஜிக் தாண்டிச் செல்வதால், கொஞ்சம் சிக்கலான விஷயம்..!

      நீக்கு
    3. எம்.ஜி.ஆருக்கு நிச்சயம் முகராசி, அதிர்ஷ்டம் எல்லாம் உண்டு. ஆனால் ஸ்ரீராமுக்கு அவரின் மறுபக்கம் அவ்வளவாத் தெரியலைனு நினைக்கிறேன். :))))) அதெல்லாம் இனிமே எதுக்கு?

      நீக்கு
  38. தப்பை தப்பில்லாமல் செய்வதும் திறமைதான்

    பதிலளிநீக்கு
  39. மெட்றாஸ் ராஜகோபாலன் ராதா சிறுவயதிலேயே அவரது அம்மா ஒரு துண்டு மீன் கூடுதலாகத் தரவில்லை என்று வீட்டை விட்டு ஓடிவந்தவராம்! //

    புது செய்தி .

    அவர் நடிக்கும் படங்க்ளில் அவர் அங்க் அசைவுகள், குரலின் ஏற்ற இறக்கங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து விடுவார்.

    //நான் சாதாரணமாக அதிகம் பேசுபவன் அல்ல. ஆனால் சர்ப்ரைஸ் விசிட் அதிகாரிகள் வந்தால் அவர்களைப் பேசியே கொன்று விடுவேன்! முற்றிலும் அவர்கள் எதிர்பார்க்காத திசையில் என் பேச்சு, என் கோரிக்கைகள், அவர்கள் பெருமைகள், என்னுடைய குறைகள், வேண்டுதல்கள் என்று நீண்டுகொண்டே போகும்! இன்ஷா முருகா, ஒரே ஒருமுறை தவிர மற்ற சமயங்களில் வெற்றி கிடைத்திருக்கிறது...//

    நல்லா இருக்கே!
    முள்ளும் மலரும் காலத்து சிவாஜி பொருந்தமாட்டார். ரஜினி தான் சரி.


    பதிலளிநீக்கு
  40. முகநூல் பகிர்வுகள் இரண்டும் நன்றாக இருக்கிறது.
    அனைவரின் பின்னூட்டங்களும் அருமை.
    நீங்கள் குறைவாக பேசி மற்றவர்களை நிறைய பேச வைத்து சாதனை செய்து இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  41. நேற்று உறவினர்கள் வீடு அதனால் வலைத்தளம் வர முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  42. தப்பை
    தப்புத் தப்பாகச் செய்தாலும்
    சரி சரி ஆகச் செய்தாலும்
    ஒன்று தானே!
    தப்புச் செய்யாமல் இருப்பதே
    நல்வழி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!