செவ்வாய், 25 செப்டம்பர், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : லாபம் - ரிஷபன்



லாபம்
ரிஷபன்



"பால் அரை லிட்டர்"

"பச்சையா ஆரஞ்சாக்கா"

"நான் எப்பவும் என்ன வாங்குவேன்னு தெரியாதாக்கும்"

"எல்லாரும் தெனமும் ஒண்ணு போலவே இருக்கோமாக்கும்"

"விட்டா வாயடிச்சுக்கிட்டிருப்பியே.. பச்சை தான்"

"யப்பா அழகு ராசா.. இங்கே நாங்களும் நிக்கிறோம்.."

"என்ன வேணும்க்கா"

"கத்தரிக்காய் காக்கிலோ.. முருங்கை ரெண்டு.. வெங்காயம் காலு.. பூண்டு"

"மல்லி ஒரு கட்டு"

"ஊர்லேர்ந்து வந்தாச்சாக்கா"

"அதென்ன.. அவிங்களையும் அக்கான்னு"

" ஒரு மரியாதை தான்"

"எப்பவும் எளமையாக் காட்டிக்குவார் நம்ம அண்ணன்"


நன்றி இணையம்.


"தேங்காயை எங்கே ஒளிச்சு வச்சிருக்க"

"கண்ணு முன்னாடி இருக்கு..   இப்பல்லாம் கவனம் எங்கியோ அக்காவுக்கு"

"ஓட்டாத ரொம்ப.. "

"என் கணக்கு எவ்ளோ"

"ம்ம்..  கத்தரி.. முருங்கை வெங்காயம் பூண்டு.. 74 ரூவா"

"வர வர உன் ரேட் ரொம்ப அதிகமாவுது"

"கருவேப்பிலை கொத்தமல்லி ஒரு கொத்து தா"

"அஞ்சு ரூபா"

"ஃப்ரீ லாம் போச்சா"

"மார்க்கட்லயே கிராக்கி"

நன்றி இணையம்.

இந்த அரை மணி நேரமும் அந்தக் கடையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.  35 வயசு இருக்கலாம் கடைக்காரருக்கு.  வருவதில் பெண்மணிகள் தான் அதிகம். நைட்டியில் மேலே டவல் போட்டுக் கொண்டு சிலர்.  ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் விசாரணைகள். 

கொண்டு வந்த காய்கறிகள் அந்த அரை மணியில் தீர்ந்து விடும். 

கூட்டமும். 

அந்த அரை மணியின் கலகலப்பு.. தனித்தனியே அவரவர் பாணியில் சொந்தம் கொண்டாடிக் கொண்டு.. நையாண்டி மிக்ஸிங்.. 

இதில் வழக்கமாய் ஒரு தாத்தா..  ஒன்றிரண்டு காய்களை லவட்டிக் கொண்டு போவதைக் கடைக்காரர் கண்டும் காணாமலும் விடுவது இன்னொரு கவிதை.

"சுவாரசியமா இருக்கு.. உங்க வியாபாரத்தை வேடிக்கை பார்ப்பது" என்றேன்.

எதுவும் சொல்லாமல் என்னைப் பார்த்துச் சிரித்தார். 

"மனுசங்க கூட பேசாம என்னங்க வாழ்க்கை.. பணம் சம்பாதிச்சுரலாம்.. மனசு.. எம்பொண்டாட்டி பிரசவத்துல சீரியசா கெடந்தப்போ இவங்கதான் ஓடி வந்தாங்க.. அந்த தாத்தா பணம் 10000 கொண்டு வந்தார் கேட்காமலே.. அந்த நைட்டி அக்கா.. ஆசுபத்திரிலேயே கூட நின்னுச்சு.. "

அவரையே வெறித்தேன்.

"லாப நஷ்டம் பார்க்கல..  இந்த யாபாரத்துல..  மனுசங்களைச் சம்பாதிச்சுட்டேன்.. அது போதும்"

கை கூப்பினார். 

நானும். 

65 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  2. பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக..

    ரிஷபன் ஜியின் புகைப்படம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் சொல்ல நினைத்தேன் - ஸ்ரீராம்..

      பதிவுலக வரலாறு தெரியாது..

      எபி க்கு வந்த பிறகு
      முதல்முறையாகப் பார்க்கிறேன்..

      அன்பின் திரு. ரிஷபன்
      அவர்களுக்கு வணக்கம்...

      நீக்கு
    2. நேரில் பார்த்த போது, நாலு வருடம் முன்னால்
      இன்னும் வயது குறைவாகத் தெரிந்தார். அதே புன்னகை.

      கதை அருமை. மனம் குழைய நடக்கும் வியாபாரம்.
      வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படி அன்பு. மனம் நிறைகிறது. மிக நன்றி ரிஷபன் ஜி. வாழ்த்துகள் ஸ்ரீராம்.

      நீக்கு
    3. காலை வணக்கம் எல்லோருக்கும் தாமதமான வணக்கம்

      ஹை ஸ்ரீராம் ஆமாம் ல ரிஷபன் அண்ணாவின் படம் வந்திருக்கு....அண்ணா வணக்கம். உங்களைத்தான் புதுக்கோட்டை பதிவர் சந்திப்பில் பார்த்திருக்கேன் (அப்படினு நினைக்கிறேன்...!!!) ஆனா அப்ப நீங்கதான் ரிஷபன் அண்ணா என்பது தெரியலை...நீங்களும் என்னைப் பார்த்தீங்க. ஒரு வேளை அறிமுகத்துக்காக இருக்குமோனு எனக்குத் தோன்றியது. அப்புறம் நினைத்துக் கொண்டேன் நான் ஒன்னும் பெரிசா எழுதற ஆள் எல்லாம் கிடையாதே.....சும்மா பார்த்திருப்பாரா இருக்கும்னு நினைத்துக் கொண்டேன். நீங்கதான் ரிஷபன் அண்ணானு எனக்கு அப்போ தெரிஞ்சுருந்தா பேசியிருந்திருப்பேன். அங்கு வந்தப்ப ஏற்கனவே அறிந்திருந்த ஒரு சிலருடன் மட்டுமே நேரடி அறிமுகம் செய்ய முடிந்தது.

      எபி வழியாகத்தான் உங்கள் அறிமுகம். எபி க்கு என் மனமார்ந்த நன்றிகள் பல!!

      கீதா

      நீக்கு
    4. ரிஷபன் புதுக்கோட்டை பதிவர் சந்திப்புக்கு வரவில்லை

      நீக்கு
    5. ஆ ஆ ஆ ஆ!!! பல்பு வாங்கிட்டேனா...ஹா ஹா ஹா ஹா...நான் அவரில்லைனு .... ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  3. அன்பின் திரு. ரிஷபன் அவர்களின் கதையை எதிர்பார்த்தேன்...

    அருமையான காய்கறி அங்காடி..

    கடை நிறைய காய்களின் பசுமை...
    கல்லாப்பெட்டி நிறைய அன்பின் பசுமை..

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  4. என்ன.. இது!..
    இன்னும் ஒருத்தரையும் காணோம்?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை, இன்னிக்குக் காஃபி ஆத்தறச்சேயே ஆறு மணிக்கும் மேல் ஆயிடுச்சு. அப்புறமா நேத்தைய எ.பியைப் படிச்சேனே, இது மறந்தே போச்சு! :)))) அதான் உடனே வரலை! :) பயந்துட்டீங்களோ? அதான் ஸ்ரீராம் வந்துட்டார் இல்லை?

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  6. ரிஷபன் சார் படம் போட அனுமதி கொடுத்துட்டாரா? அதே போல் ஸ்ரீராம் படமும் எ.பி.யில் வரணும். இல்லைனா அவரோட பாஸைப் பார்த்துத் தான் அடையாளம் தெரிஞ்சுக்கறாப்போல் ஆயிடும்.இஃகி, இஃகி, இஃகி.

    வழக்கம் போல் நச்! இதுவும் வியாபாரத்தில் ஒரு வகை. மனிதர்களைச் சம்பாதிப்பது சுலபம் அல்ல. காசு சம்பாதிக்கலாம். மனிதர்கள்? அரிதாகவே சிலரால் தான் இயலும்.

    பதிலளிநீக்கு
  7. கண்கள் துளிர்த்து விட்டது. நல்ல மனுசங்களை சம்பாதிப்பது பெரிய விஷயம்
    . வாழ்த்துக்கள் ரிஷபன் சார்.

    பதிலளிநீக்கு
  8. மனிதர்களைச் சம்பாதிப்பதுதான் இக்காலத்தில் பெரிய சாதனை
    அருமை

    பதிலளிநீக்கு
  9. அருமையான கதை ரிஷபன் அண்ணா...ஹையோ என்ன சொல்ல? மனம் நெகிழ்ந்து கண்களில் என்னை அறியாமல் நீர். வியாபாரம் என்பது பணம் மட்டுமல்ல...மனிதர்களைச் சம்பாதிப்பதும் தான்...அது ஒரு ஆர்ட் இல்லையா? மனிதர்களைப் பெறுவது என்பது ஒரு பெரிய விஷயம். அதுவும் இக்காலத்தில். ரொம்ப ரசித்தேன். ஒரு சிறு விஷயம் ஆனால் என்ன அழகான கதை...உங்களின் ஒவ்வொரு கதையை வாசிக்கும் போதும் எனக்குத் தோன்றும் எண்ணம்தான். ரத்தினச் சுருக்கமாக ச் சொல்லி அழகான கதை எழுத வேண்டும் என்று....ஹூம் அது கை வரமாட்டேங்குது ஹா ஹா ஹா. என் முயற்சி முழுமையாக இல்லை என்பதும் தெரிகிறது.

    மிக்க நன்றி அண்ணா அண்ட் எபி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெருசா எழுத வரல.. அந்த ரகசியத்தை யார்ட்டயும் சொல்லிராதீங்க

      நீக்கு
    2. //பெருசா எழுத வரல.. அந்த ரகசியத்தை யார்ட்டயும் சொல்லிராதீங்க//

      ஹா.. ஹா.. ஹா... அதுதான் ரிஷபன் ஜி... உங்கள் வார்த்தையிலேயே உங்களுக்கு பதில் சொல்லி விட்டார். ஆமாம், பெரிசா எழுதறதுன்னா என்ன?

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

      கீதா

      நீக்கு
    4. ரிஷபன் அண்ணா அண்ட் ஸ்ரீராம், இந்தக் கதையை ஒட்டிய கிட்டத்தட்ட இதே அர்த்தத்தில் நேற்று ஓர் சம்பவத்தைக் காண நேர்ந்தது. ஆனால் கடை அல்ல.. அதைக் கதையாக எழுதலாமா என்று யோசித்திருந்தேன். இப்போது அண்ணாவின் கதையைப் பார்த்ததும் முதலில் தயக்கம் இருந்தது. சேம் கருவாகிவிடுமே என்று. இருந்தாலும் அதை சிறிய கதையாக முயற்சி செய்கிறேன்...ஒரு ஹோம்வொர்க் என்று எடுத்துக் கொள்ளலாமோ?!!!!! ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  10. "நச்" கருத்து வாழ்வின் உண்மைகள்...

    பதிலளிநீக்கு
  11. ரிஷபன் அவர்களின் கதைகளை வாசித்துள்ளேன். இன்று எங்கள் தளத்தில் கண்டதில் மகிழ்ச்சி. கதாசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. சின்னச் சின்ன சம்பவங்கள், உரையாடல்கள், ஆனால் நம்மைப் பெரிய உண்மையைப் புரிந்துகொள்ள வைப்பது. ரிஷபன் சாரின் பாணி இது. ரசித்த கதை. ராஷபன் சாருக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  13. ஒரு ஆச்சரியம் திருச்சியில் திரு ரிஷபனைச் சந்தித்து இருக்கிறேன் சந்திப்பின்போது எடுத்த படம்போடுவதை விரும்பவில்லை அவர் கட்டுப்பாட்டைத் தளர்த்து விட்டார்போல காலம் மாறும்போது மாற்றமும் தெரிகிறது இதுவும் நல்லதற்குத்தானே லாப நஷ்டம் பார்க்காத வியாபாரிகள் கதைகளில் இருக்கலாம் இருந்தாலும்ரிஷபனின் எழுத்து எனக்குப் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  14. குமுதம் பரிசுக்கதையில் என் போட்டோ வந்து விட்டது.
    நானும் இப்போது தளர்த்திக் கொண்டு.

    அன்பு நன்றி

    பதிலளிநீக்கு
  15. //ஸ்ரீராம்.25 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:03
    பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக.. ரிஷபன் ஜியின் புகைப்படம்...//

    தலைகீழாக நின்று பார்த்தும் எனக்குத் தரப்படாத வாய்ப்பும் அனுமதியும்
    ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’க்கு அளிக்கப்பட்டுள்ளது. :)

    எதற்கும் ஓர் கொடுப்பிணை வேண்டும்.

    அது நம் ஸ்ரீராமுக்கு மட்டுமே உள்ளது என யாரும் நினைக்க வேண்டாம்.

    ஓர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ‘ரிஷபன்’ அவர்களின் போட்டோ இதோ இந்தப்பதிவுகளில் உள்ளன என்ற சின்ன ஞாபகம் எனக்குள் உள்ளது.

    http://gopu1949.blogspot.com/2011/07/1.html

    http://gopu1949.blogspot.com/2015/02/2-of-6.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவதில், புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, பார்த்துக்கொண்டு இருப்பவர்தான் ரிஷபன் சாரா? அதைக் குறிப்பிட மறந்துவிட்டீர்களே.....

      நீக்கு
    2. வைகோ ஸார்.. அந்த வகையிலும் எனக்கு உங்கள் மேல் பொறாமை உண்டு!

      நீக்கு
    3. //நெல்லைத் தமிழன் 25 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:31

      இரண்டாவதில், புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, பார்த்துக்கொண்டு இருப்பவர்தான் ரிஷபன் சாரா? அதைக் குறிப்பிட மறந்துவிட்டீர்களே.....//

      விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும், வெவ்வேறு இரண்டு புத்தகங்கள் வீதம் அன்பளிப்பாக, அவரவர்களின் இருக்கைக்கே சென்று அளித்தபோது, தனது கைகளில் நிறைய புத்தகங்களை அடுக்கிக்கொண்டு, சுமந்தபடி என்னுடனேயே கூடவே வந்து, ஆர்வம் + அர்ப்பணிப்புடன் எனக்கு உதவிக்கொண்டிருக்கும் நல்ல மனிதர் திரு. ரிஷபன் ஜி அவர்களே. அந்தப்பதிவினில் அவர் படத்தை நான் காட்டும்படி ஆகிவிட்டது. அவர் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்ல அவர் அப்போது விரும்பவில்லை. மற்றபடி நான் அதைக் குறிப்பிட மறக்கவே இல்லை, ஸ்வாமீ.

      03.07.2011 அன்று நான் அவர் பெயருடன் வெளியிட்டுவிட்ட என் முதல் படப் பதிவு கூட அவருக்கு விருப்பம் இல்லாதது என்பதை அவர் மூலம் பிறகு தாமதமாக மட்டுமே நான் புரிந்துகொண்டேன்.

      நீக்கு
    4. //ஸ்ரீராம். 25 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:54
      வைகோ ஸார்.. அந்த வகையிலும் எனக்கு உங்கள் மேல் பொறாமை உண்டு!//


      உண்மையான பிரபலங்கள், உண்மையிலேயே தங்களை வெளி உலகுக்குக் வெளிக்காட்டிக்கொள்ள விரும்புவது இல்லை.

      ‘நிறைகுடம் தளும்பாது’ என்பதற்கு இவர் ஒரு மிகச்சிறந்த உதாரண புருஷராகும்.

      தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வார / மாத இதழ்களிலும், இவரது படைப்புகள் ஆயிரத்திற்கும் மேலான எண்ணிக்கைகளில் வெளியாகி விட்டன. இருப்பினும் இவரின் புகைப்படம் பலருக்கும், இன்றுவரை தெரியாமல் இருப்பது மிகவும் வேடிக்கையாகவே உள்ளது.

      இதே நானாக இருந்தால் ................... ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      ’குறைகுடம் கூத்தாடும்’ என அனைவரும் ஒட்டுமொத்தமாக முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. :)

      அன்புடன் கோபு

      நீக்கு
    5. @கோபு சார் - //உண்மையான பிரபலங்கள், உண்மையிலேயே தங்களை வெளி உலகுக்குக் வெளிக்காட்டிக்கொள்ள விரும்புவது இல்லை// - ஒரே கல்லில் இரு மாங்காய்களை அடித்துவிட்டீர்களே. ரிஷபன் சாரை பாராட்டிமாதிரியும் அதே சமயம் ஸ்ரீராமையும் சேர்த்துப் பாராட்டியும் கருத்து எழுதிட்டீங்களே. இருவரும் தகுதியானவர்கள்தாம்.

      ஒண்ணும் தெரியாத நாங்களும் எங்கள் படத்தை வெளியிடுவதில்லையே. அப்போ என்ன சொல்றீங்க?

      நீக்கு
    6. என் எழுத்து ரீச் ஆனால் போதும் என்றிருந்தேன். காலம் என்னையும் மாற்றி விட்டது.

      நீக்கு
    7. //ஒண்ணும் தெரியாத நாங்களும் எங்கள் படத்தை வெளியிடுவதில்லையே. அப்போ என்ன சொல்றீங்க? - நெல்லைத் தமிழன்//

      ஸ்வாமீ...... தாங்களா ஒண்ணும் தெரியாதவர்?

      ’ஒண்ணும் தெரியாத பாப்பா ...... போட்டுக்கிச்சாம் தாப்பா’ன்னு
      ஒரு பழமொழி சொல்லுவா. அதுபோல இருக்குது தாங்கள் சொல்வதும்.

      எங்கள் ப்ளாக் திங்கள்-செவ்வாயை மட்டும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டால், பெரும்பாலான இடங்களை, திங்கள் பூராவும் தாங்களும், செவ்வாய் பூராவும் நம் ரிஷபன் சாருமாக பட்டா போட்டு ஆக்ரமித்துக் கொண்டிருப்பது எல்லோருக்குமே தெரியும். இதுபோல இரகசியப் பட்டா போட்டுக்கொடுத்துள்ள ‘எங்கள் ப்ளாக்’ சார்-பதிவு அலுவலக முக்கிய அதிகாரி ஸ்ரீராம் அவர்களும் இதற்கு உடந்தை என உலகம் பூராவும் தெரியும்.

      இருப்பினும் உங்கள் இருவரையும் விட்டால் அந்த சமையல் கட்டோ/சிறுகதைப் பூங்காவோ, பார்க்கவோ/படிக்கவோ, படு போராகிவிடுகிறது என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது, ஸ்வாமீ.

      நளபாக சக்ரவர்த்தியாகிய ‘நெல்லைத் தமிழன்’ அவர்கள், சிந்தனைச் சிற்பி-சிறுகதை மன்னன் திரு. ரிஷபன் அவர்கள், எங்கள் ப்ளாக் எங்காளு ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ அவர்கள் ஆகிய முக்கனிகள் மூவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள்.

      அன்புடன் கோபு

      நீக்கு
    8. வைகோ ஸார்.. நளபாகம் பற்றி மட்டும் சொல்கிறீர்கள். நெல்லை ஆன்மீக விஷயங்களிலும் பாசுரங்களிலும் கில்லாடி. ஆழ்ந்த சிந்தனையாளர்.

      நீக்கு
    9. //ரிஷபன் சாரை பாராட்டிமாதிரியும் அதே சமயம் ஸ்ரீராமையும் சேர்த்துப் பாராட்டியும் கருத்து எழுதிட்டீங்களே. இருவரும் தகுதியானவர்கள்தாம்.//

      நெல்லை.. யாரோடு யாரை...

      நானெல்லாம் பிரபலம் என்றால் உண்மையான பிரபலங்கள் என்ன ஆவது?

      என் மகனுக்கு ராகுல் என்று பெயர். அதனால் நான் புத்தனா?!!

      பிரபலமானவன் என்று சொல்லிக் கொள்ளவேண்டி முகம் காட்டாமல் இருக்க முயற்சிக்கிறேன்!!

      நீக்கு
    10. //ஸ்ரீராம். 25 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:34
      வைகோ ஸார்.. நளபாகம் பற்றி மட்டும் சொல்கிறீர்கள். நெல்லை ஆன்மீக விஷயங்களிலும் பாசுரங்களிலும் கில்லாடி. ஆழ்ந்த சிந்தனையாளர்.//


      அவர் அனைத்தும் அறிந்தவர். நல்லவர், வல்லவர், ஆல்-இன்-ஆல் அழகிரி, மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ் என்பதை அடியேனும், அவரின் மாறுபட்ட விரிவான பின்னூட்டங்கள் வாயிலாக ஓரளவுக்கு நன்கு உணர்ந்துள்ளேன்.

      அதனால் அவரிடம் எனக்கு எப்போதுமே அன்பு கலந்த பயமும் உண்டு.

      பதிவுலகைத்தாண்டி எங்களுக்குள் தினசரி பல்வேறு இதர தொடர்புகளும், நெருக்கமும் உண்டு.

      மொத்தத்தில் ஸ்வாமீ, என் மனம் கவர்ந்த இனிய நண்பர் ஆவார்.

      நீக்கு
    11. உங்களின் அன்புக்கு மிக்க நன்றி கோபு சார். நீங்கள் என்னைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது சரியானதுதான்.

      JACK OF ALL TRADES AND MASTER OF NONE - சரியாத்தான் எனக்குப் பொருந்துது. ஹாஹாஹா.

      உங்களைப் போன்ற அனுபவசாலிகளின் நட்பு என்பது வரமல்லவா?

      நீக்கு
    12. ஸ்வாமீ...... உங்களிடம் உள்ள உண்மை, நேர்மை, தெய்வபக்தி, மனசாட்சிக்கு பயந்து நடத்தல், பிறரிடம் நாகரீகமாகப் பழகுதல், நமது கலாச்சாரத்தை மதித்தல், சாஸ்திர சம்ப்ரதாயங்களையும் நித்ய கர்மானுஷ்டானங்களையும் முடிந்த அளவுக்கு அனுஷ்டித்தல், நுனிப்புல் மேயாமல் பிறர் பதிவுகளை முழுவதுமாகப் படித்து அவரவர்களுக்கு திருப்தியளிக்கும் விதமாக வித்யாசமாகவும், விரிவாகவும் கருத்து அளித்தல் போன்றவை எனக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டன. வாழ்க !

      நீக்கு
  16. மனித நேயம் மிக்க இந்தக் கதையைப் படித்தது
    நமக்கெல்லாம் இன்றைய ‘லா ப ம்’

    அடியேனின் எழுத்துலக மானஸீக குருநாதர் அவர்களுக்கு
    என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள கோபு

    பதிலளிநீக்கு
  17. இயல்பான சம்பவங்கள், எளிய உரைநடை, நச்சென்று மெசேஜ். சபாஷ்! இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம்தான் கவனிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    பல நுணுக்கமான வார்த்தைகளை எளிய அளவில் பயன்படுத்தி, ஒரு பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை புரிய வைத்த சிறிய கதை. கதை மிகவும் அருமையாக உள்ளது. இயல்பான நடையுடன் கூடிய கதையை மிகவும் ரசித்தேன்.

    கதைகளை சுருக்கிக் சொல்ல பயங்கர திறமை வேண்டும். அது ரிஷபன் சகோதரரிடம் நிறையவே இருக்கிறது. அதை கற்றுக் கொள்ள பயங்கர பொறுமை வேண்டும். அது என்னிடம் இல்லையே என்ற வருத்தம் மட்டும் நிறைய இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. //"மனுசங்க கூட பேசாம என்னங்க வாழ்க்கை//

    அழகான வாழ்க்கையின் தத்துவத்தை எளிமையாக நறுக்கென புரியவைத்த கதை .

    பதிலளிநீக்கு
  20. பரிவோடு பேச்சிருந்தால்தான் உறவு பலப்படும். ஆன்ட்டீ ஸாம்பார்கா ஸ்மெல் இதர்தக் ஆதாஹை. பக்கத்துப் போர்ஷன் மருமகள் சொன்னால், லேலோ தோடா என்று ஒரு கிண்ணத்தில் ஸாம்பார் விட்டுக் கொடுப்பது, என் வழக்கம்.புதுப்பெண்கள். நம்மைப்போலவே மற்றவர்களும் இருக்க வேண்டுமென்று நினைக்க முடியாது. நேசமான லாபம். கதை மிக்க அருமை. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமாட்சிம்மா... எப்படி நீங்க ஹிந்தி கத்துக்கிட்டீங்க? வடநாடு செல்வதற்கு முன்பு இங்கு படித்தீர்களா (அங்குபோய் பேச்சு வழக்கு பழகிட்டீங்களா) இல்லை அங்கு போய்த்தானா?

      நீக்கு
    2. ரிஷபன் சாருக்குப் பின்னால் நின்றுதான் நானும் சப்ஜிக்கடையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அதுக்குள்ளே கடை இப்படி காலியாயிடுச்சே என நினைத்துக்கொண்டிருக்கையில் இங்கு கதை ஒன்று வந்து விழுந்துவிட்டது!

      நீக்கு
  21. ஆஹா ரிஷபன் ஜி கதை. சற்றே தாமதமாக வந்து தான் வாசிக்க முடிந்தது.

    பாராட்டுகள் ரிஷபன் ஜி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!