வியாழன், 6 செப்டம்பர், 2018

வாலியைக் கலாய்த்த ராஜாஜி


ஹிந்திப் பாடல்கள் கேட்கும் சமயங்களில் சில சமயம் அரைகுறையாய்ப் புரியும் வரிகளை வைத்துக் கிடைக்கும் பொருளில் (பாடலின் பொருளோடு பெரிய சம்பந்தம் இருக்காது!) ஏதாவது எழுதி விடுவேன்.


அப்படி ஒரு சாந்தப்பத்தில் எழுதியது இது..   எதை வைத்து, அல்லது இந்தப் பாடலைக்கேட்டு இது எழுதினேன் என்று நினைவில்லை!

நனையும் விழிகளில் 
கலங்கலாய்த் தெரிகிறாய் 
துடிக்கும் இதயத்தோடு 
யாருடைய பாடலிலோ 
கரைந்து போகிறேன் 

எதிரில் இல்லை நீ 
ஆனால்
மனதில் மட்டும்  இருக்கும் 
உன்னைப் பற்றிய 
நினைவுகளை 
கானல் காட்சிகளாய்க் 
கொடுத்துக் கொண்டே 
இருக்கிறது என்னுடைய 
காதல் மனம்.

உன்னைப் பார்த்ததுமே 
அறைந்து மூடும் 
காரின் கதவாய் 
எகிறி அதிர்கிறது மனம்.

ஏன் 
ஒருவருடைய 
பிரிவின் பின்னர் மட்டுமே 
அவர் பற்றிய 
நினைவிலேயே 
இருக்கிறது மனம்?


சில பாதைகள் 
மென்மையான வளைவுகளோடு...

பயணங்களை 
பாதைகளா நிர்ணயிக்கின்றன?

கற் புயலைச் சமாளிக்காத 
கண்ணாடி மாளிகைகளாய் 
மனம்.


==============================================================================================================




அதே போல இன்னொரு ஹிந்திப்பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன்.  படம் பார்த்ததில்லை.  'ஆஹிர் கியூன்?' என்றொரு படத்தில் இடம் பெற்ற 
"துஷ்மன் ந கரே தோஸ்தி நே ஓ காம் கியா ஹை .. " பாடல்.







ராகேஷ் ரோஷன் இன்னொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் போன்ற விழாவில் அமர்ந்திருக்க, ஸ்மீதா பாட்டீல் மேடை போன்ற அமைப்பில் இந்தப் பாடலைப் பாடுவார்.  'எதிரி செய்யவில்லை இந்த காரியத்தை, நண்பன்தான் செய்தான்' என்பதான பொருளில் வரும் பாடல்.  சாஜன் போன்ற வார்த்தைகள் இடம் பெறாததால் காதலர்களா, கைவிட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் ராகேஷ் ரோஷன் ஜோடி சேர்வதைக் குறிக்கும் பாடலா, என்ன என்று சரியாகத் தெரியவில்லை (ரொம்ப முக்கியம்!) 









 வீடியோ எடுக்கும் ராஜேஷ் கன்னா வேறு க்ளோசப்பில் இவர் அழுவதை பார்த்து விட்டு பாக்கிப்பாடலை அவர் தொடர்கிறார்!  ஆனால் ஏன்?





=============================================================================================================


மதுரையிலிருந்து வந்த சகோதரர் என்னுடைய சிறு வேண்டுகோளை ஏற்று ஒருகிலோ மதுரை ஹேப்பிமேன் முந்திரி அல்வா வாங்கி வந்தார்.






இதன் விசேஷம் என்னவென்றால் முந்திரிப்பருப்புகளுக்கு நடுவில் கொஞ்சம் ஒட்டுப்பொருளாக அல்வாவும் இருக்கும் என்பதே!





அது மட்டுமல்லாமல் ஒரு கிலோ புளியோதரை பேஸ்ட்டும் வாங்கி வந்தார்.  





கீதா அக்கா சொல்லலாம், "நானெல்லாம் கடையிலேயே வாங்க மாட்டேன்...   நானே செஞ்சுக்குவேன்..." என்று.  




நாங்களும் வீட்டில் செய்வோம்னுதான்.  ஆனால் ஊறுகாய், புளியோதரை. இட்லி / தோசை மிளகாய்ப்பொடி போன்றவை வெவ்வேறு கைப்பக்குவங்களில் எப்படி இருக்கின்றன என்று பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம்!


=================================================================================================



தினகரனில் 2014 இல் வந்த ஒரு சுவாரஸ்யமான செய்தி...






பீஜிங்: சீனாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சுரங்க விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய தொழிலாளி ஒருவர் கடந்த மாதம் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசய சம்பவம் உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் ஏராளமான சுரங்கங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு சுரங்கத்திலும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1997ம் ஆண்டு இப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் ஏராளமான சுரங்கங்கள் சரிந்து அப்படியே மண்ணோடு மண்ணாக புதைந்தன.

இதில் சிக்கி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணிற்குள்ளேயே சமாதியாகினர். இவர்களை தேடிய அரசு ஒருகட்டத்தில் அனைவரும் இறந்து விட்டதாகவே கருதியது. இந்நிலையில் செங் வாய் (59) என்ற தொழிலாளி உயிருடன் இருப்பது சில தினங்களுக்கு முன்பு தெரியவந்துள்ளது. சுமார் 17 வருடங்களாக மூடப்பட்ட சுரங்கம் ஒன்றின் உள்ளே தனிமையில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்து வந்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவருடன் பணிபுரிந்த 78 பேர் இவரது கண்ணெதிரிலேயே மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

தனிமையில் தவித்த செங் வாய் அங்கேயே 78 பேருக்கும் முறைப்படியான இறுதி சடங்குகளை செய்து உடல்களை மண்ணில் புதைத்தார். சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கிக் கொண்டால் அவர்கள் பயன்படுத்துவதற்கான அரிசி, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இதனை செங் வாய் பயன்படுத்திக் கொண்டார். மேலும் அங்கு வரும் எலிகளை பிடித்து தின்றும், சுரங்கத்தில் வளரும் ஒருவகை பாசி செடிகளை சாப்பிட்டும் தனது உயிரை கையில் பிடித்து காலத்தை கடத்தி வந்தார்.

எப்படியும் மீட்பு படையினர் தன்னை மீட்டு விடுவர் என்று நம்பினார். இப்படியே சுமார் 17 ஆண்டுகள் கடந்தன. இதனால் தனிமையில் அவர் உடல் நலிந்தும், மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அவரை சில தினங்களுக்கு முன்பு சுரங்க ஆய்வாளர்கள் உயிருடன் மீட்டனர். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

17 ஆண்டுகளுக்கு பிறகு சுரங்க தொழிலாளி மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கின்னஸ் சாதனையாகவும் கருதப்படுகிறது. இதற்கு முன்பு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜியோ ஸ்மித் என்பவர் தனது நிலத்தடி உணவகத்திற்குள் 142 நாட்கள் தனிமையில் இருந்ததுதான் மிகப் பெரிய சாதனையாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


===============================================================================================


படித்தது : 

படம் வரையத் தெரிஞ்ச வாலி காமராஜ், ராஜாஜி ரெண்டு பேரோட படத்தையும் 'டச்' விட்டுப் போனதால கொஞ்சம் சுமாரா வரைஞ்சுகிட்டு, ரயில்வே ஸ்டேஷன் போய், உள்ளூர்ப் பிரமுகர் உதவியோட ரயில்ல தஞ்சாவூர் போய் கொண்டிருந்த ரெண்டு பேர் கிட்டயும் காட்டி ஆட்டோக்ராப் கேட்டாராம். 



காமராஜ் படத்தை வாங்கிப் பார்த்துட்டுப் பாராட்டிட்டு, 'கு.காமராஜ்' னு கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டு, இன்னொரு கைல இருந்த படத்தைக் காட்டி, 'அது யார் படம்' னு கேட்டாராம். இவர் சொல்லவும், 'ஓடு..ஓடு... ரயில் கொஞ்ச நேரம்தான் நிற்கும்' னு அனுப்பினாராம். 

பக்கத்து கம்பார்ட்மெண்ட்ல இருந்த ராஜாஜி கிட்ட கொண்டு படத்தைக் காட்டினாராம். வாங்கிப் பார்த்த ராஜாஜி S என்று இனிஷியலிட்டு வளைஞ்சு நெளிஞ்ச எழுத்துகள்ல கையெழுத்திட்டுக் கொடுத்தாராம். 



திகைத்துப் போன வாலியைப் பார்த்து ராஜாஜி 'என்ன முழிக்கறே'ன்னு கேட்டாராம். 'உங்க கையெழுத்து மாதிரியே இல்லையே... 'சி'.. ன்னு ஆரம்பிச்சு தமிழ்ல இல்ல கையெழுத்துப் போடுவீங்க... சொன்னாக் கூட யாரும் நம்ப மாட்டாங்களே'ன்னாராம். 

ராஜாஜி சொன்னாராம், 'படம் கூடத்தான் என்னை மாதிரி இல்லை'ன்னு!  


========================================================================================================


ஓகே...   அடுத்த வாரம் பார்ப்போமே.....!

91 கருத்துகள்:

  1. டிங்க் டிங்க் டிங்க் டிங்க் டிங்க் டிங்க் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா, வெங்கட்ஜி எப்பவாச்சும் காலைல முதல் ஆளா வணக்கம் வைக்கும் அனு, நெல்லை எல்லோருக்கம் இனிய காலை வணக்கமுங்கோ!!

    ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே!!! ஹா ஹா ஹா!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..... ஆஹா... கீதா ரெங்கன்... வாங்க... வாங்க... இனிய காலை வணக்கம்.

      நீக்கு
  2. அந்த ஆனை கீதாவாக்கும்...முதல்ல வர அவசரத்துல.பெயர் போடாம ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  3. எல்லோரது சில பதிவுகள் வாசித்தேன். கருத்து போட முடியலை. கொஞ்சம் கொஞ்சமா வந்து கருத்து போடறேன்…

    ஸ்ரீராம், இஃகி இஃகி நு சொல்லற பச்சைக் கொயந்தைய காணலையே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலையிலே இன்னிக்குக் கணினியைத் திறக்க முடியலை. அப்புறம் திறந்தப்போவும் கொஞ்ச நேரம் தான். மூடும்படி ஆயிடுச்சு. இப்போ உட்கார்ந்திருக்கேன். எத்தனை நேரம்னு சொல்ல முடியாது! குட்டிப்பயல் தூங்கறான். முழிச்சிண்டா எல்லாம் பறக்கும். :))))))

      நீக்கு
    2. தி/கீதா, உங்களை வரவேற்றுப் போட்ட கமென்டைக் காக்கா எங்கே கொண்டு போட்டது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :(

      நீக்கு
    3. //குட்டிப்பயல் தூங்கறான். //

      யார் கீதா அக்கா அந்தக் குட்டிப்பயல்?

      நீக்கு
  4. இனி அப்பாலதான் வர முடியும்.....

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  6. துரை அண்ணா என்னாச்சு மணிச் சத்தம் ஸ்ரீராமுக்கு கேக்கலை போல ஹா ஹா ஹா இதுக்குத்தான் மூச்சுக்காட்டாம பூனை மாதிரி வந்துட்டுப் போணும்...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ நான் பதில் சொல்லி இருக்கறது நீங்க கவனிக்கலையா கீதா?!!!

      நீக்கு
    2. ஸ்ரீராம் லேட்டாகத்தான் பார்த்தேன்...ஸாரிப்பா...டக்கென்று வேர்டில் அடித்து வைத்த கமென்ட்ஸை காப்பி செய்து போட்டுட்டு ஓட்டம்....அவ்வப்போதுதான் வர முடியும்னு நினைக்கிறேன். இனியும் நிறைய பதிவுகள் இருக்கே எல்லோரையும் இங்கே பார்த்தாலும் அவங்க வீட்டுக்கும் போய்ப் ப்பார்த்துவிட்டு வருவதுதானே சிறப்பு..!!!

      துளசி நிறைய கமென்ட்ஸ் அனுப்பியிருக்கார் எல்லாம் அந்தந்தப் பதிவுக்கு உரியதைத் தேடனும்...அதையும் போடனும்..ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. //ஸ்ரீராம் லேட்டாகத்தான் பார்த்தேன்...//

      OK.... OK...

      //ஸாரிப்பா...//

      nO pROBLEM!

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே.

    நேற்று என்னால் வர இயலவில்லை. கொஞ்சம் வேலை. அதனால் இன்று சீக்கிரமாக வருகை தரலாம் என வந்தேன். பதிவை படித்து பின் கருத்திடுகிறேன். நன்றி.

    ஆகா.. நம் சகோதரி கீதா ரெங்கன் அவர்களும் வந்து விட்டீர்களா? மகிழ்ச்சி.. வணக்கம் சகோதரி.. நலமா? உங்களைத்தான் காணவில்லையென்று அனைவரும் தேடிக் கொண்டிருந்தோம். வாங்க.. வாங்க..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​வாங்க கமலா சிஸ்டர்.... காலை வணக்கம்.

      நீக்கு
    2. கமலாக்கா வந்துட்டேன்..நலம்தானே! உங்கள் உடல் நலம் இப்ப ஓகேதானே...உங்க வீட்டுக்கும் இனிதான் வந்து எட்டிப் பார்க்கணும்...கொஞ்சம் மெதுவாகத்தான் வர முடியும் பணிச்சுமை + நிறைய வீடுகள் இருக்கே நவராத்திரி கொலுவுக்கு ரவுன்ட்ஸ் போவது போல் சுத்தணும் இடையில் ட்ராஃபிக் ஜாம் ஆகும் ..ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம், வாழ்க வளமுடன்.
    கீதாரெங்கன் வந்து விட்டீர்களா?
    மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  9. // எதை வைத்து, அல்லது இந்தப் பாடலைக்கேட்டு இது எழுதினேன் என்று நினைவில்லை!//

    எந்த பாடலை கேட்டு எப்போது எழுதியது என்று குறிப்பும் வைத்துக் கொண்டால் இந்தி படம் பார்த்தவர்கள், இந்தி புரிந்தவர்கள் உங்கள் கவிதையை படித்து உங்கள் கவிதை வரிகள் சரியா இல்லையா என்று சொல்லலாம் தானே?

    //ஸ்மீதா பாட்டீல் மேடை போன்ற அமைப்பில் இந்தப் பாடலைப் பாடுவார். 'எதிரி செய்யவில்லை இந்த காரியத்தை, நண்பன்தான் செய்தான்' என்பதான பொருளில் வரும் பாடல். சாஜன் போன்ற வார்த்தைகள் இடம் பெறாததால் காதலர்களா, கைவிட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் ராகேஷ் ரோஷன் ஜோடி சேர்வதைக் குறிக்கும் பாடலா, என்ன என்று சரியாகத் தெரியவில்லை (ரொம்ப முக்கியம்!) //

    இதையும் கேட்டுக் கொள்ளலாம் அவர்களிடம்.

    சந்தோஷமான விழாவில் இப்படி இவர்கள் சோகமாய் பாடுவதை யாருமே கண்டு கொள்வது இல்லையே ! என்று படம் பார்க்கும் போது நினைத்துக் கொள்வேன்.
    நிறைய படங்களில் இது போன்ற காட்சி வரும்.(எல்லா மொழி படங்களிலும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்தி புரிந்தவர்கள் உங்கள் கவிதையை படித்து உங்கள் கவிதை வரிகள் சரியா இல்லையா என்று சொல்லலாம் தானே?//

      பதிவிலேயே நான் சொல்லி இருப்பதுபோல நான் எழுதுவது அந்தப் பாடலின் மொழிபெயர்ப்பு அல்ல அக்கா. அரைகுறையாய் புரியும் அர்த்தங்களைக் கொண்டு என் மனதில் தோன்றும் உணர்வுக்கற்பனை! பாடலோடு அப்படியே அது ஒத்துப்போகாது!

      நீக்கு
    2. //இதையும் கேட்டுக் கொள்ளலாம் அவர்களிடம்.//

      முழுக்கதை தெரியா விட்டாலும் நமக்கு சினிமா இலக்கணம் தெரியுமே அக்கா... ஓரளவு ஊகிக்கக் கூடியதுதானே!

      நீக்கு
    3. நீங்கள் சொல்வது சரிதான் நாம் ஒரளவு ஊகித்து விடுவோம்.

      நீக்கு
  10. ஹேப்பிமேன் முந்திரி அல்வா வாங்கியது இல்லை வாங்கி பார்க்கவேண்டும்.
    வாஸனா புளியோதரை பேஸ்ட் நன்றாக இருக்கா?
    என் கணவரும் புளியோதரை பிரியர் வாங்கலாம் அதுதான் கேட்கிறேன்.
    அவசரத்திற்கு கை கொடுக்கும். எங்காவது வெளியில் போய் வந்தால் சமைக்க சோம்பலாக இருந்தால் சாதம் மட்டும் வைத்து விட்டு புளியோதரை பேஸ்ட் போட்டு கிளறி வைக்கலாம் தானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​​//வாஸனா புளியோதரை பேஸ்ட் நன்றாக இருக்கா?//

      உபயோகப்படுத்திப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன் அக்கா. இன்று டேஸ்ட் செய்வோம்!

      //ங்காவது வெளியில் போய் வந்தால் சமைக்க சோம்பலாக இருந்தால் சாதம் மட்டும் வைத்து விட்டு புளியோதரை பேஸ்ட் போட்டு கிளறி வைக்கலாம் தானே. //

      அதே... அதே....!

      நீக்கு
    2. புளியோதரை பேஸ்ட் நல்லா இருக்கு. கொஞ்சம் காலரா கலந்துக்கணும். கொஞ்சம் உப்பு போட்டுக்கணும்.

      நீக்கு
  11. //ராஜாஜி சொன்னாராம், 'படம் கூடத்தான் என்னை மாதிரி இல்லை'ன்னு! //

    படித்தது பிடித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///ராஜாஜி சொன்னாராம், 'படம் கூடத்தான் என்னை மாதிரி இல்லை'ன்னு! //
      படித்தது பிடித்தது. //

      எனக்கும்! நன்றி அக்கா! வாலியையே கலாய்த்துவிட்டார்!

      நீக்கு
  12. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், கீதா மற்றும் அனைவருக்கும். கவிதை, முந்திரி அல்வா, புளியோதரை மிக்ஸ் எல்லாம் சூப்பர்.

    துஷ்மன் ந கரே தோஸ்த் நெ வோ காம் கியா ஹை
    பாடலில் வரும் தோஸ்த் சுமிதாவின் கணவர். கணவன் ராகேஷ், ஸ்மிதாவின் தங்கை மேல் ஆசைப்பட்டு, ஸ்மிதாவை வீட்டைவிட்டுத் துரத்திவிடுவார்.
    பிறகு நல்ல எழுத்தாளராக ஆன பிறகு இருவரும் அகஸ்மாத்தாக ஒரு இடத்தில் சந்திக்கும் போது ஸ்மித வெறுப்புடன் பாடும் பாடல்.
    படத்தின் கடைசியில் ராஜேஷ் கன்னா ,ஸ்மிதாவை மணமுடிப்பார். நல்ல படம்.

    வாலி, காமராஜ், ராஜாஜி ஜோக் பிரமாதம். இது வரை கேள்விப்பட்டது இல்லை.
    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...

      ஓ ஆஹிர் க்யோன் படம் நீங்கள் பார்த்து விட்டீர்களா?

      //வாலி, காமராஜ், ராஜாஜி ஜோக் பிரமாதம். இது வரை கேள்விப்பட்டது இல்லை.//

      படித்ததை பகிர்வதில் இதுதான் சௌகர்யம், மகிழ்வு. நன்றி அம்மா.

      நீக்கு
    2. வல்லிமா எப்படி இருக்கீங்க...

      ஹை படத்தோட கதையும் சொல்லிட்டீங்க..

      கீதா

      நீக்கு
    3. இந்தப் படத்தோட கருவை வைச்சுத் தான் தமிழில் "வாலி" படம் வந்ததாய்ச் சொல்வாங்க. வாலியைத் த்ரில்லரா எடுத்திருப்பாங்க. இரண்டுமே பார்த்திருக்கேன். :)

      நீக்கு
    4. @ஶ்ரீராம், அது ஆஹிர் இல்லை! Aakhir kyon? आखीर क्यो

      நீக்கு
    5. கீதா அக்கா... தமிழ் வாலி கதை வேற இல்லையோ? அது வித்தியாசமான கதை. ஆகிர்... ஓகே?

      நீக்கு
  13. 17 ஆண்டுகள் சுரங்கத்தில் தவித்து மீட்கப்பட்டதை நினைக்கும்போது வியப்புதான் ஏற்படுகிறது ஐயா

    பதிலளிநீக்கு
  14. காலை வணக்கம்.

    ஆஹா கீதா ஜி வந்தாச்ச்.... இனிமே களை கட்டிடும் பதிவுலகம்.

    ஹிந்தி பாடல்கள் - மொழி தெரியவில்லை என்றாலும் இசையை ரசிக்கலாம்! நான் எல்லா மொழி பாடல்களும் கேட்பதுண்டு! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் வெங்கட். ஆமாம்..

      கீதா வருகை உண்மையிலேயே மனதிற்கு உற்சாகத்தைத் தருகிறது.

      நான் ஹிந்திப்பாடல்களின் பெரும் ரசிகன்!

      நீக்கு
    2. ஓ நன்றி வெங்கட்ஜி இதோ உங்க வீட்டுக்கும் வருவேன்!!! உங்க பதிவுகள், மற்றும் எல்லோரது பதிவுகலும் பல மொபைலில் வாசித்தேன்...இன்று ஒவ்வொன்றாகக் கருத்து இடுதல்....மிக்க நன்றி ஜி!!!

      கீதா

      நீக்கு
    3. ஸ்ரீராம் மிக்க நன்றி மிக்க நன்றி...!

      கீதா

      நீக்கு
  15. காலை வணக்கம். நீ...ண்...ட...இடைவெளிக்குப் பிறகு வருகை தந்திருக்கும் கீதா ரங்கனை வருக வருக என்று வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ பானுக்கா மிக்க நன்றி வந்தாச்!!!! உங்க வீட்டுக்கும் வரணும்..ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  16. ஹிந்தியில் எப்படியிருந்தால் என்ன? உங்கள் கவிதை பிரமாதம்.
    தற்சமயம் மதுரையில்தான் இருக்கிறோம். ஹாப்பி மேன் ஹல்வா எங்கே கிடைக்கும்? வாங்கலாமா என்று யோசனையாக இருக்கிறது. இருக்கும் இரண்டு பேரில் ஒருவர் இனிப்பு சாப்பிட முடியாது. ஏற்கனவே இருட்டு கடை அல்வா வேறு இருக்கிறது. பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிடமுடியாவிட்டால் என்ன. சென்னையைத் தாண்டித்தானே செல்வீர்கள். சொல்லும் இடத்தில் நாங்கள் வந்து வாங்கிக்கொள்கிறோம். ஸ்ரீராம் வேறு பல வருடங்களாக முந்திரி அல்வா என்று எழுதி எழுதி, அது எப்படி இருக்கும்னு ஆவலைத் தூண்டியிருக்கிறார். ஹாஹாஹா

      நீக்கு
    2. அதானே, நாங்க சாப்பிடுவோம்!

      நீக்கு
    3. இந்த அல்வா பத்தி நான் ஶ்ரீராம் சொல்லித் தான் தெரிஞ்சுண்டேன். மதுரையில் எங்கே கிடைக்கும்னு தேடணும். முன்னரே ஶ்ரீராம் சொன்ன நினைவு. ஆனால் மறந்து போச்சு. ஒரு கிலோ புளியோதரை பேஸ்ட் விக்கிற விலையை விட ஒரு கிலோ புளி விலை குறைச்சலா இருக்கும்னு நினைக்கிறேன். :)))) எனக்கெல்லாம் சரிப்பட்டு வராது. புளிக்காய்ச்சல் காய்ச்சி வைச்சுடுவேன். முடியாத நாளைக்கு அதிலே கலந்துக்கலாம். இல்லைனா மிளகு குழம்பு, கருகப்பிலைக்குழம்பு, பொடி வகைகள் இருக்கும்! எல்லாம் வீட்டுத் தயாரிப்புத் தான்! சிக்கனம், சுத்தம், சுகாதாரம், வயிற்றுக்குக் கேடு விளைவிக்காது! :))))))

      நீக்கு
    4. //உங்கள் கவிதை பிரமாதம்.தற்சமயம் மதுரையில்தான் இருக்கிறோம். ஹாப்பி மேன் ஹல்வா எங்கே கிடைக்கும்? ​//

      நன்றி பானு அக்கா. ஹேப்பிமேன் கடை ஆலால சுதர விநாயகர் கோவில் அருகே உள்ள கடை வரிசையில் இருக்கிறது.

      பிரேமாவிலாஸ் அல்வா டேஸ்ட் பண்ணினீங்களா? மதுரையில்? இரயில் நிலையம் எதிரில் இருக்கிறது.. மதுரை விஜயத்துக்கு முன்பு நான் தந்த தகவல்கள் உபயோகமாக இருந்தனவா?​

      நீக்கு
    5. //புளிக்காய்ச்சல் காய்ச்சி வைச்சுடுவேன். முடியாத நாளைக்கு அதிலே கலந்துக்கலாம்.//

      கீதா அக்கா... நான் அப்படிக் காய்ச்சி வச்சிருந்தாலும் கடையிலும் வாங்குவேனே...!

      நீக்கு
  17. வாலியை கலாய்த்த ராஜாஜி பற்றி ஏற்கனவே படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா பானு அக்கா? நான் பகிர்ந்தா? இல்லை, வேறெங்குமா? இது வாலியின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

      நீக்கு
  18. அன்பின் ஸ்ரீராம்...

    தங்களது கவிதையிலிருந்து...


    சில பாதைகள்
    மென்மையான வளைவுகளோடு...

    சில பாதைகள்
    கரடுமுரடு - கூரிய அம்பென....

    பயணங்கள் பாதைகளை
    நிர்ணயித்தாலும்
    சமயத்தில் பாதைகளும்
    பயணிக்கின்றன...

    கற்புயலை சமாளிக்காத
    கண்ணாடி மாளிகையாய்த் தான் மனம்..

    ஆனாலும்
    புயலில் வந்த கற்கள் தான்
    நொறுங்குகின்றன..

    அதன்பின் தான்
    அழகின் நினைவுகள்
    நெருங்குகின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா உங்கள் வரிகளும் செமையா இருக்கு

      கீதா

      நீக்கு
    2. எசப்பாட்டு சூப்பர் துரை ஸார்... பாதைகளே பயணிக்குமா? கன்வேயர் பெல்ட் சாலைகளா?!!

      நீக்கு
  19. காதல் மனம் இப்படித்தான் படுத்தும்...!

    என்னதான் கடையில் வாங்கினாலும் வீட்டில் செய்வது தான் சுவை... உடம்பிற்கும் நல்லது...

    17 வருடங்கள்...! யப்பா...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடையில் வாங்கினாலும் சுவை! ஒருமுறை சுவைப்பதில் ஆரோக்கியம்... ம்ம்ம்... அதெல்லாம் பார்ப்பதில்லை DD...!

      நீக்கு
  20. சுரங்கச்செய்தி வியப்பாக இருக்கிறது.
    வாலியின் ஓவியம் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  21. aankom meh aashoo ; dil thadapthaa hai; இந்த மாதிரி வரிகளை வைத்து எவ்வளவோ யோசித்தும் அந்த பழைய ஹிந்தி பாட்டை கண்டு பிடிக்க முடியலை.
    யாராவது கண்டு பிடித்து விட்டால் பகிர்ந்து கொள்ளவும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நாகேந்திர பாரதி...

      அசத்தறீங்களே...

      நானுமே யோசித்துப் பார்க்கிறேன்.

      ஊ...ஹூம்!

      நீக்கு
  22. ஸ்ரீராம் தலைப்பே அட்டகாசம் ஈர்க்கிறது...

    கவிதை செம செம ஸ்ரீராம். ஒரே கவிதையாக வாசித்தாலும் சரி ஒவ்வொன்றையும் தனித்தனியாக வாசித்தாலும் சரி செமையா இருக்கு. தனித்தனியாகவே ஒவ்வொன்றும் ரொம்பவே ரசித்தேன் ஸ்ரீராம்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா... தலைப்பு ஈர்த்திருக்கிறது போல.. வாசகர் எண்ணிக்கைக் கூடுகிறது!!! கவிதை பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  23. ஹிந்தி படம் நோ ஐடியா ஸ்ரீராம்...பாட்டு கேட்டுப் பார்க்கிறேன்..

    ஆஹா முந்திரி ஹல்வா ஹேப்பி மேன் முந்திரி அல்வா நல்லாருக்குமோ ஸ்ரீராம்?

    //கீதா அக்கா சொல்லலாம், "நானெல்லாம் கடையிலேயே வாங்க மாட்டேன்... நானே செஞ்சுக்குவேன்..." என்று. //

    ஹா ஹா ஹா மீ டூ அப்படித்தான் சொல்ல வந்தேன் ஆனால் படத்துக்கு அப்புறம் வந்த வரிகளும் எனக்குப் பொருந்தும்...நானும் பலரது பக்குவத்தைச் சுவைக்க விரும்புவேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றைக்கு அந்த சேவையை, குரோம்பேட்டில் வாங்கினேன். பிளெயின் கிடைக்கலை. தே.சேவை, தக்காளி சேவை, ஒவ்வொன்றும் 40 ரூ. பரவாயில்லாமல் இருந்தது.

      நீக்கு
    2. எந்த சேவை? இங்கே சேவை பத்தியும் வந்திருக்கா என்ன? ஙே!!!!!!!!!!!!!

      நீக்கு
    3. ஆமாம் நெல்லை ரூ40 200 கிராம் ஆதம்பாக்கத்திலிருந்து வரும் சேவை...எல்லாமே ரூ 40 தான் நெல்லை. கொழுக்கட்டை எல்லாமே...

      கீதா

      நீக்கு
    4. முன்பிருந்த சுவை இப்போது முந்திரி அல்வாவில் இல்லை என்பது என் ப்ரமையோ கீதா? எப்படியோ, காலி செய்து விட்டோம்!!​

      நீக்கு
  24. வாலியை ராஜாஜி கலாய்த்தது மிகவும் ரசித்தேன்!

    சுரங்கத் தொழிலாளிச் செய்தி வியக்க வைத்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ஜஸ்ட் ஒரு செகன்ட் எனக்கு அப்புறம் பொறந்துட்டாராம் அதுக்காக அக்கா அக்கானு என்னை ஊசி கேப்பில் அன்போடு விளிக்கும் அருமைத் தம்பி நெல்லையையும் பச்சிளம் குழந்தையையும் காணலையே இன்னும்...!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ரொம்ப வருஷத்துக்கு முன்னால 'கீதா ரங்கன்'னு ஒரு அக்கா இணையத்துல உண்டு. அவங்க மாதிரியே நீங்க எழுதியிருக்கீங்களே. அவங்க இணையத்துக்கு வந்து பல வருஷங்களாகிட்டதே. எங்க போனாங்கன்னும் தகவல் இல்லையே...

      நீக்கு
    2. தி/கீதா, நான் வந்துட்டேன்.உங்க மெசேஜை இப்போத் தான் பார்த்தேன். அலைபேசியை ஒளிச்சி வைச்சிருந்தேன் :))))) அப்புறமா இப்போத் தான் பார்த்தேன். நீங்க தான் எல்லாப் பதிவுகளுக்கும் போயிருக்கீங்க! இங்கே குடித்தனமே நடத்தி இருக்கீங்க! என்னோட பதிவுகளுக்கு வரலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    3. நெல்லை ஹிஹிஹி இது கீதாஸ் க்ளோனிங்க்!!!

      கீதா

      நீக்கு
    4. கீதாக்கா கொயந்தை இப்படிச் சொல்லலாமா இந்தக் கொயந்தையை....காலைல இங்க வந்து ஆஜர் வைச்சா அப்புறம் ஒவ்வொன்னா பார்த்து பதில் கொடுத்து...

      இரண்டு ஜிக்களுக்குப் போனேன்..அப்புறம் இப்பத்தான் வந்தேன் கா..இதோ இப்போவே உங்க வீட்டுக்கு வரேன்...அது சரி என்ன ஸ்பெஷன் எனக்கு இன்னிக்கு இப்ப?!!!

      கீதா

      நீக்கு
  26. என்மகன்சென்னையில் இருந்துவரும்போது அடையார் க்ராண்ட் ஸ்வீட்ஸிலிருந்து புளியோதரை (புளியோகரையா) மிக்ஸ் மற்றும் மிக்ஸ்சர் வாங்கி வருவான் அந்த மிக்ஸ்சர் எனக்கு மிகவும்பிடிக்கும்
    17 ஆண்டுகள் சுரங்கத்தில் வாழ்ந்த மனிதனின் தன்னம்பிக்கையைப்பாராட்டுவதா அத்தனைஆண்டுகளுக்குப்பின் அவரைக் கண்டுபிடித்து மீட்டவரைப் பாராட்டுவதா தெரியவில்லைஉங்கள் கவிதைகள் ரசிக்க வைக்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எம் பி ஸார்... அடையார் க்ராண்ட் ஸ்வீட்ஸ் புளியோதரை பேஸ்ட் நானும் சுவைத்திருக்கிறேன். பரவாயில்லை ரகம். கவிதையை ரசித்ததற்கு நன்றி ஸார்.

      நீக்கு
  27. வாசனா நல்ல பிராண்டா? ஏன் சென்னையில் புளியோதரை மிக்ஸ் வாங்கறதில்லை?

    ஹாப்பிமேன் - கடை விவரம் இருக்கும் பக்கத்தை ஸ்கேன் பண்ணலையே? அதை ஸ்கேன் பண்ணிப்போடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை... சென்னையில் புளியோதரை மிக்ஸ் வாங்குவதில்லை என்று யார் சொன்னது? அடையார் க்ராண்ட் ஸ்நாக்ஸ், மாம்பலம் ஜெயலட்சுமி மாமி, மாம்பலம் மாமி கடை, (வேறு வேறு நபர்கள்) சேகர் என்றொரு கேட்டரிங் செய்யும் மாமா... இப்படிப் பல சுவை பார்த்தவன் நான்!

      வாசனா என்பது ஈகிள் பிராண்ட்தான். சென்னையிலும் கிடைக்கலாம். வேண்டும் என்றால் சொல்லுங்கள். அடுத்த முறை அண்ணன் மதுரையிலிருந்து வரும்போது வாங்கி வரச் சொல்லுகிறேன்.

      நீக்கு
  28. வாங்கினதுதான் வாங்கினீங்க... வாட்சப்பில் கேட்டு, தேவையானவங்களுக்கும் சேர்த்து வாங்கியிருக்கலாமே. பணம் டிரான்ஸ்ஃபர் பண்ணியிருப்போமே. இப்போ படத்தைப் பார்த்து ஆவலை மீண்டும் தூண்டுவது நியாயமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே ஹேப்பிமேன் கடையில் ஒரு மிக்சரும் வாங்கினோம். அதிலும் முந்திரிமயம்!

      நீக்கு
  29. 17 ஆண்டுகள் சுரங்கத்தில் உயிருடன் இருந்தாலும் இழந்த வாழ்க்கை! மனநலம் பாதிக்கப்பட்டு சொந்த பந்தங்களை அடையாளம் தெரியாமல்! :((((

    ஶ்ரீராமின் கவிதை மொழிபெயர்ப்பு இல்லைனாலும் நல்லா இருக்கு. அதுக்கு துரையின் பின்னூட்டக் கவிதையும் அருமை!

    பதிலளிநீக்கு
  30. சிறு சிறு செய்திகளாக வந்த அனைத்து செய்திகளும் அருமை

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் சகோதரரே

    ஹிந்தி படங்கள் அவ்வளவாக பார்த்ததில்லை என்றாலும் ஹிந்தி பாட்டுக்கள் நன்றாக இருக்கும். அதுவும் பழைய பாட்டுக்கள்.
    அதன் விளைவால் எழுந்த தங்கள் கவிதை மிகவும் நன்றாக உள்ளது. வரிகளில் சோகத்தின் ஆழம் நிறையவே உள்ளன. மிகவும் ரசித்தேன்.

    17 ஆண்டுகள் உயிரோடு சுரங்கத் தொழிலாளி இருந்தது விதியின் வலிமையை பறைசாற்றியது.

    ஹேப்பிமேன் அல்வா இல்லையில்லை.. முந்திரி அல்வா நன்றாக இருந்ததா? அய்யங்கார் காபி பொடி வந்ததே.. அவங்க தயாரிப்பா?

    வாசனா புளியோதரை பேஸ்ட் டேஸ்டாக நல்ல வாசனையாக இருந்ததா? (இந்த புதனுக்கு இந்த மாதிரி கேள்விகள் ஒன்றும் பிடிபடாமல் போகும் . இன்று புதனாக இருக்கக்கூடாதா என மனம் நினைக்கிறது.)

    வாலிக்கு அவர் வரைந்த ஒவியம் அவரை பொருத்தமட்டில் உயர்வு. ராஜாஜி இப்படிச்சொல்வார் என அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். கையெழுத்தில் திருத்தம் காண முயன்று தோல்வியை தழுவியிருக்கிறது அவர் தலையெழுத்து. அறியாத தகவல். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      ஹிந்தமிழ் கவிதையை ரசித்தமைக்கு நன்றி.

      சுரங்கத்தொழிலாளி பாவம். சந்தோஷப்படுவதா, பரிதாபப் படுவதா என்று குழம்பவைக்கும் நிகழ்வு.

      முந்திரி அல்வா பழைய மாதிரி இல்லை எனினும், இப்பவும் ஓகே... தரமான முந்திரி பருப்புகளால் ஆனது!

      வாசனா (ஈகிள்) புளியோதரை ஓகே என்று சொல்லலாம். ஜஸ்ட் பாஸ் செய்திருக்கிறது.

      வாலி உண்மையில் நன்றாக வரைவாராம். அவர் புத்தகத்தில் சொல்லி இருக்கிறார்.

      நன்றி அக்கா.

      அதென்ன, நன்றியுடன் கமலா ஹரிஹரன்?!!!

      நீக்கு
  32. ஆகா இது ஒரு குழப்பமா? தாங்கள் தரும் அறியாத (நானறியாத) பல தகவல்களுக்கு நன்றி என வைத்துக் கொள்ளலாமே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா...

      அதற்கு நன்றியெல்லாம் தேவை இல்லை கமலா அக்கா.

      நீக்கு
  33. சுரங்க செய்தி வியப்பில் ஆழ்த்தியது

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!