திங்கள், 8 அக்டோபர், 2018

"திங்க"க்கிழமை 181008 : பறங்கி கொட்டை பால் கூட்டு - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி


பறங்கி கொட்டை பால் கூட்டு 


தேவையான பொருள்கள்:



பறங்கி கொட்டை     -   பாதி 
உப்பு                               -   ஒரு சிட்டிகை
சர்க்கரை                       -   இரண்டு கரண்டி 
பால்                               -   150 மில்லி.






தாளிக்க: 

எண்ணெய்            -  ஒரு டீ  ஸ்பூன் 
கடுகு                       -  1/4 டீ ஸ்பூன் 
சிவப்பு மிளகாய்   - 1 
உ.பருப்பு                - 1/4 டீ ஸ்பூன் 




செய்முறை:




பரங்கி கொட்டையின் தோலை சீவி விட்டு மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதில் குறைவாக தண்ணீர் விட்டு, சிட்டிகை உப்பு சேர்த்து வேக வைக்கவும். காய் வெந்ததும் கரண்டியால் லேசாக நசுக்கவும். ,கவனிக்க, லேசாக நசுக்கினால் போதும், மசிக்கக் கூடாது, கூட்டு ஒத்தாற்போல இருப்பதற்காக. 

பின்னர் சர்க்கரை சேர்த்து கிளறி அதற்குப்பிறகு பால் சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு, தாளிக்கவும்.  ஒருவேளை சற்று தளர இருப்பதாக தோன்றினால், கொஞ்சம் அரிசி மாவு கரைத்து ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கலாம்.



சுவையான பால் கூட்டு தயார். புளிக்குழம்பு, மாவு அரைத்து, உடனே வார்க்கும் புளிக்காத தோசை போன்றவற்றிர்கு நன்றாக இருக்கும்.

கிட்டத்தட்ட நவரத்ன குருமா போல இருப்பதால், சப்பாத்திக்கு கூட தொட்டுக் கொள்ளலாம். 


83 கருத்துகள்:

  1. இதை நாங்க இளம் பறங்கிக் கொட்டையில் செய்வோம். இளங்கொட்டை என்றே பெயர். ஆனால் வெல்லம், தேங்காய்ப் பால் தான்! :) பால், சர்க்கரையில் பண்ணினது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அதே கீதாக்கா...நான் தேங்காய்பாலிலும் செய்வதுண்டு.....

      பானுக்கா செய்திருப்பது போலும் செய்வதுண்டு....

      கீதா

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் துரை செல்வராஜு ஸார்.

      நேற்றிரவு போன கரண்ட் இன்னும் வரவில்லை. சுற்றிலும் மற்றவர்களுக்கு வந்துவிட்டது. நாங்கள் ஒரு ஐந்தாறு குடும்பங்கள் மட்டும் அவதி.

      நீக்கு
    2. இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் இல்லாமல் இருப்பது மிகவும் கஷ்டம்..

      சீக்கிரம் சரியாகட்டும்...

      நீக்கு
    3. நாளைக்கு இங்கே மின்சாரம் போயிடும்னு இப்போ செய்தி வந்திருக்கு. காலை ஒன்பதுக்குப் போனால் மாலை ஆறு மணிக்குத் தான் வரும்! :(

      நீக்கு
    4. இதோ, மணி பனிரண்டே முக்காம். இதுவரை மின்சாரம் வரவில்லை. புது கேபிள் மாற்றவேண்டும், எங்களிடம் இல்லை, நீங்கள் வாங்கித்தாருங்கள் என்றே ஜேஈ கேட்டார். அல்லது பணம் கொடுங்கள் என்றார். நான்காயிரத்து ஐநூறில் தொடங்கி, ஆயிரத்தி ஐநூறு வாங்கிக் கொண்டு இதோ புது கேபிள் மாற்றி விடுகிறேன் என்று போய் ஒரு மணிநேரம் ஆகிறது. இன்னும் வரவில்லை.

      நீக்கு
    5. ஸ்ரீராம் கரன்ட் வந்துச்சா இல்லியா....இப்ப மணி 3.35...கேபிள் வாந்தி மாற்றியாச்சா ஒரு மணி நேரத்துக்கும் மேல ஆயிருச்சே...

      கீதா

      நீக்கு
  3. இவ்வளவு மஞ்சளான பறங்கிக்காயில் "ஓலன்" செய்தால் நன்றாக இருக்கும். துவையல், சாம்பார், சப்பாத்திக்கூட்டு எல்லாம் பண்ணலாம். துருவி அல்வா கூடச் செய்யலாம். அடைக்கும் போடலாம். இளங்கொட்டை தான் பெரும்பாலும் அடைக்குப் போடுவோம். கிடைக்காதபோது இதைப் பயன்படுத்திக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா ஹைஃபைவ்...யெஸ்ஸு இது அனைத்தும் செய்வதுண்டு...அல்வா உட்பட...

      சப்பாத்திக்கு சப்ஜியும் கூட (வெங்காயம் எல்லாம் போட்டு க்ரேவி...)

      கீதா

      நீக்கு
    2. இளங்கொட்டை உள்ளே இவ்வளவு மஞ்சளா ஆகி இருக்காது. தோல் சீவாமல் அப்படியே நறுக்கிச் சமைப்போம். இந்தக் காயைப் பறங்கிக்காய் என்போம். முற்றித் தோலும் மஞ்சள் ஆனால் பறங்கிப் பழம் என்போம். மதுரைப்பக்கம் சர்க்கரைப் பூஷணி தான்! கல்யாணம் ஆன புதுசிலே இதைச் சொன்னால் அவங்களுக்குப் புரியலை! :)))) அப்புறமா இளங்கொட்டையைப் பார்த்துட்டு இது தான் பெரியதா ஆனதும் சர்க்கரைப் பூஷணி என்போம் என்றேன். இஃகி, இஃகி! வட்டார வழக்கு! :))))))

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை வணக்கம். அடடா இன்று என்னுடைய ரெசிபியா!!

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    திங்கள் கிழமை பிரசாதத்துக்கு இந்தக் கூட்டை செய்துடலாம் போல இருக்கே.
    பானுமா அழகான செய்முறையில் பால் கூட்டுப் பிரமாதமாக இருக்குப் பார்க்க.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  7. பறங்கி கூட்டு நன்றாக இருக்கிறது.
    தேங்காய் அரைத்து விட வேண்டாமா?
    கீழே இறக்கும் போது பால் விடுவோம் . சீனி போட்டது இல்லை.
    உங்கள் செய்முறையில் செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்காய் அரைத்து விட்டால் தேங்காய் பால் கூட்டாகி விடாதா? அடுத்த முறை முயர்சிக்கிறேன். நன்றி.

      நீக்கு
    2. தேங்காய் நாங்களும் அரைச்சு விடுவதில்லை. வெல்லம் போட்டுத் தேங்காய்ப் பால் தான்! அந்தத் துருவலை நெய்யில் வதக்கிச் சேர்ப்போம்.

      நீக்கு
    3. பொதுவா எங்க வீடுகளிலே பால் கொழுக்கட்டை, பால் கூட்டு எனில் வெல்லம், தேங்காய்ப் பால் சேர்த்துத் தான். வெல்லம், தேங்காய்ப் பால் விட்டுப் பாயசம் கூட அடிக்கடி செய்வோம். அதுவும் விஷுவன்று நிச்சயமா இந்தப் பாயசம் தான் அம்மா பண்ணுவா! ரொம்ப நீர்க்கப் பண்ணாமல் கரண்டியால் அள்ளும் பதத்துக்கு அந்தப் பாயசம் இருக்கணும். முழுக்க முழுக்கத் தேங்காய்ப் பாலிலேயே வேகும் அரிசி! இப்போ சென்ற புதன் அன்று மகாலயத்துக்குச் சாப்பிட வந்தவங்களுக்கு அந்தப் பாயசம் தான் பண்ணிப் போட்டேன். பழ அப்பம், உளுந்து வடை, எரிசேரி எனமுழுக்க முழுக்க தென் தமிழ்நாட்டுச் சமையல். அனைவருக்கும் புதுசா இருந்தது. விரும்பிச் சாப்பிட்டார்கள். எனக்கும், ரங்க்ஸுக்கும் எரிசேரி கிடைக்கலை. பரவாயில்லை, வீட்டிலே அடிக்கடி பண்ணிச் சாப்பிடறோமேனு மனசைத் தேத்திண்டோம்! :))))))))

      நீக்கு
  8. பகிர்வுக்கு நன்றி மேடம் வீட்டில் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. அடடா இன்று பறங்கிக்காய் பால்கூட்டா? வெல்லம் அல்லவா உபயோகப்படுத்துவார்கள். விரைவில் செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ////விரைவில் செய்து பார்க்கிறேன்.///
      இந்த வசனத்தை இனியும் எங்காவது பார்த்தனோ நான் நானா இருக்கவே மாய்ட்டேன்ன்ன்ன் தேம்ஸ்ல தள்ளுவேன்ன்ன்ன்:). சும்மா சும்மா உசுப்பேத்தீனம் யுவர் ஆனர்ர்ர்:).. பூஸோ கொக்கோ இனியும் பொறுக்க மாட்டேன்ன்ன்ன்ன்:)

      நீக்கு
    2. எனக்கு இது மிகவும் பிடித்தது. சமீப காலங்களில் சாப்பிட்டதே இல்லை. அதனால் செய்துபார்க்கப்போகிறேன். ஆனால் வெல்லம் போட்டு. மற்றவங்களுக்குப் பிடிக்குமான்னு தெரியலை, இருந்தாலும் செய்யப்போகிறேன்.

      ஆமாம்... செய்து பார்த்தபின்பு எ.பி குழுமத்தில் படம் போடப்போகிறேன் (மற்றவற்றிர்க்குப் போட்டதுபோல்).

      நீக்கு
    3. எங்கள் வீட்டில் சர்க்கரை போட்டுதான் செய்வார்கள். நீங்கள், கீதா அக்கா எல்லோரும் வெல்லம் எங்கிறீர்கள், அப்படியும் ஒரு முறை செய்து பார்த்து விட வேண்டியதுதான். நன்றி.

      நீக்கு
    4. ////ஆமாம்... செய்து பார்த்தபின்பு எ.பி குழுமத்தில் படம் போடப்போகிறேன் (மற்றவற்றிர்க்குப் போட்டதுபோல்).///
      விடுங்கோ என் கையை விடுங்கோ இதுக்கு மேலயும் இந்த உசிரு .. இந்த சுவீட்16 உடம்பில இருக்குமெண்டோ நினைக்கிறீங்க:)... மீ கைலாயம் போகிறேன்ன்ன்ன் சொர்க்கம் காண:)

      நீக்கு
    5. பானுக்கா நானும் பொதுவாக வெல்லம் தான் சேர்ப்பேன்...ஆனால் சர்க்கரையும் சேர்ப்பதுண்டு...

      நெல்லை வெல்லம் போட்டாலும்....நான் காரத்திற்கு பச்சை மிளகாயும் சேர்ப்பேன்...

      பானுக்கா நான் சில சமயம் தேங்காய் அரைத்துவிட்டும் செய்வேன்..டேஸ்ட் நன்றாக இருக்கும்..

      கீதா

      நீக்கு
    6. //மீ கைலாயம் போகிறேன்ன்ன்ன் சொர்க்கம் காண:)//கயிலாயம் போயிட்டு சொர்க்கம் பார்த்துட்டுத் திரும்பியவங்க நாங்க ரெண்டு பேர் இருக்கோம்! நானும் கோமதி அரசும்! அதனாலே ரொம்பவே அலட்டிக்காதீங்க! சொர்க்கம்னு சொன்னதும் பய்ந்துடுவோமா என்ன?

      நீக்கு
    7. கீசாக்கா ஜே கே ஐயா சொன்னார் நீங்க கைலாயம் போனதாக .. உண்மையோ? கோமதி அக்காவுமோ? எனக்கு கேட்கவே நடுங்குது... கைலாயம் போனால் திரும்ப மாட்டோம் என ஆரோ எனக்கு சின்னனில சொல்லித் தந்திட்டினம் கர்ர்ர்ர்ர்:).. கைலாயம் எனில் சொர்க்கம் என்றார்கள்....

      நீக்கு
  10. பரங்கிக்காய் பால்கூட்டு பரம்பரையாக எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. தாரமங்கலத்தில் எங்கள் தாத்தாவிற்குத் தோட்டம் இருந்தது. தினமும் காலையில் வேண்டிய காய்கறிகளைப் பறித்துவரும் வேலை அப்போது ஆறே வயதான எனக்குரியது. பரங்கிக்காயைத் தூக்கமுடியாமல் தூக்கிவருவேன். அந்த ஞாபகங்கள் மீண்டும் வருகின்றன...!

    -இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு
  11. இப்படி ஒரு உணவுவகையை இப்பதான் கேள்விப்படுறேன்.

    பதிலளிநீக்கு
  12. பறங்கி கொட்டை...

    காய்குள் இருக்கும் கொட்டை வைத்துனு நினைத்தேன்..

    இதை பறங்கிக்காய் தான் நாங்க சொல்லுவோம்..

    இதுவும் புதுசு தான் எனக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறங்கிக்கொட்டை இந்தக்காய்ப்பருவத்துக்கு முன்னாலேயே சின்னதாகப் பப்பாளிக்காய் அளவுக்கு இருக்கும். வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். உள்ளே விதைகளே வந்திருக்காது! தோலோடு அப்படியே நறுக்குவோம். இந்தப் பறங்கிக்காயையும் தோலோடு தான் நறுக்கி சாம்பார், கூட்டு, ஓலன், துவையல் பண்ணுவேன். தோல் நறுக்கினால் சுவை இருக்காது என்பது என் எண்ணம்.

      நீக்கு
    2. நானும் பறங்கிக்காய் என்று தான் கேள்வி பட்டு இருக்கிறேன் அனு,
      பரங்க்கிக்காய் கொட்டை என்று இப்போதுதான் கேட்கிறேன்.

      நீக்கு
    3. கீதா அக்கா சொல்வது போல இளங்கொட்டை என்று சொல்ல வேண்டுமோ? காம்போடு விற்பார்கள். வாங்கி செய்து பாருங்கள்.

      நீக்கு
    4. யெஸ்சு கீதாக்கா விதையே இருக்காது அப்படியே கட் செய்துவிடலாம். நாங்களும் இளசை அதாவது சிறியதை பறங்கிக் கொட்டை என்று சொல்லுவதுண்டு...

      வெங்கடேஷ் பட் திருப்பதி கதம்ப சாதம் செய்து காட்டும் போது தோலோடேயே போட்டார். நானும் என் வீட்டில் சமைத்தால் தோலோடு போட்டுவிடுவேன். சாம்பாரில் நன்றாகவே இருக்கும்.

      கீதா

      நீக்கு
    5. ஆமாம், காம்போடு விற்கின்றனர். சில சமயம் பறங்கிக்காயும் காம்போடு வருது!

      நீக்கு
    6. /////
      கீதா அக்கா சொல்வது போல இளங்கொட்டை என்று சொல்ல வேண்டுமோ?////
      ஆண்டவா இதுக்குமேல என்னால முடியாதூஊ என்னைக் கொண்டுபோய் தேம்ஸ்ல போடுங்கோ பிளீஸ்ஸ்:)..

      நீக்கு
  13. ஓ மை கடவுளே... எல்லோரும் சேர்ந்து என்னை ஏமாத்திப்போட்டீங்க... கர்ர்ர்ர்ர்ர்ர்:)... போனதடவை பறங்கி கொட்டை என்றதும் ஏதோ பருப்பு அதாவது சீட்ஸ்ஸ் என நினைச்சிருந்தேன்... இதென்ன இது பூசணிக்காயைப் பறங்கிக்கொட்டை என்கிறீங்க இது சரிப்பட்டு வராதூஊஉ:)

    இப்பவே போகிறேன் பிரித்தானியாக் காண்ட் கோர்ட்டுக்கூஊஊஊ... என்னை ஆரும் தடுக்காதீங்கோ:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா அதிரா போங்க போங்க யாரும் தடுக்கலையாக்கும்!! இங்கிலிஷ்காரருக்கு பேபி பம்ப்கின்னு சொன்னா புரிஞ்சுருமே ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ..

      கீதா

      நீக்கு
    2. என்னாதூஊ ஆருமே தடுக்கேல்லையோ கர்ர்ர்ர் இல்லையே என் கையைப் பிடிச்சு ஆரோ இழுத்தவையாக்கும் காத்தும் மழையுமாக்கிடக்குது போகாதே என:)...

      கீதா பறங்கி காய் அல்லது பூசணிக்காய் எதுவேணுமெண்டாலும் மீ மார்க்ஸ் தருவேன் ஆனா எப்பூடி பறங்கிக் கொட்டை / பூசணிக்கொட்டை எனலாம்... அது சீட்ஸ்:)... இதுக்கு முடிவு தெரியும் வரை ஒரு சொட்டுப் பச்சைத்தண்ணி குடிக்க மாட்டேன்ன்ன்ன் இது கீதாவீட்டு பார்த்றூம் மூலையில் வளரும் அந்த வெந்தயச் செடிமேல் ஜத்தியம்ம்ம்ம்ம்:)... ஸ்ச்ச்ச்ச்ச் ஸப்பா இதுக்கே மூச்டு வாங்குதே:)..

      நீக்கு
  14. ஓஒ இதே முறையில்தான் நாங்களும் செய்வோம் . அவிக்கும்போதுவெங்காயம் பச்ச மிளகாய் உள்ளி சேர்ப்போம்.. சீனி போடுவதில்லை... பால் விட்டு இறக்கி கொஞ்சம் தேசிக்காய்ப்புளி சேர்ப்போம்.

    வழமைபோல சிம்பிள் ரெசிப்பி அழகு பானுமதி அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐஸ்வர்யா மாதிரிதான் என் பொண்ணு என்று சொல்லிவிட்டு, ஆளைக் காட்டும்போது, 'ஆமாம் அதற்கென்ன, கண் இவள் மாதிரி, மூக்கும் வாயும் அவள் மாதிரி, முகம் இன்னொருவர் மாதிரி, கால்கள் ஆமாம் அந்த நடிகை மாதிரி, ஓ கைகளா, அது அந்த ந டி க ன் மாதிரி என்று மொத்தமாகவே ஒரு புது ஆளைக் காண்பிப்பதுபோல்,

      செய்முறைல எல்லாத்தையும் மாத்திட்டு, 'ஆமாம் நாங்க இதே முறையில்தான் செய்வோம்' என்று சொல்றீங்களே... இது அடுக்குமா அதிரா... பால் கூட்டில் பச்ச மிளகாய், உள்ளி, தேசிக்காய், வெங்காயம், சீனி கிடையாது, ஆனால் இதே முறை.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    2. ஹா ஹா ஹா! நெ.த. சான்ஸே இல்ல..

      நீக்கு
    3. கர்ர்ர்ர்ர்ர் பானுமதி அக்கா என்னா ஸ்பீட்டா ஓடி வந்திருக்கிறா அதிராவை ஆரோ அடிச்சுத் துவைக்கினம்:) என்பதைக் காண கர்ர்ர்ர்ர்ர்ர்:)....

      வாங்கோ அதிரா காலை வணக்கம் நல்லா இருக்கிறீங்களா எனக் கேய்க்க ஒருவருக்கும் மனசு வராதே:)... அதூஊஊஊ அதிரா போன்ற ஞானிகளிடம் மட்டுமே எதிர் பார்க்கலாமாக்கும்...:)

      நீக்கு
    4. நெல்லைத் தமிழன் வெளியே வாங்கோஓஓஓஓஒ பூசணிக்காயை .. பரங்கிக்கொட்டை எனச் சொல்வது சரியான டமிலாஆஆஆ? நேக்கு நீடி வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)).

      நீக்கு
    5. அப்ஜெக்சன் யுவர் ஆனர்! இது பூசணிக்காய் அல்ல, மஞ்சள் பூசணி!

      நீக்கு
    6. எனக்குத் தெரிந்து வெண் பூசனி (உள்ளே வெள்ளையாகவும் தோல் பச்சை அல்லது வெளிர் பச்சையிலும் இருக்கும், திருஷ்டிக்கு உபயோகப்படுத்தறேன்னு தெருல போற வரவங்க வழுக்கி விழச் செய்வார்கள் டமிலர்கள்), பரங்கிக்காய் (இதனை சர்க்கரைப் பூசனி என்றும் சொல்வார்கள்) இரண்டுதான் உண்டு.

      அதிரா - இந்த இரண்டுமே மிகுந்த மருத்துவகுணம் கொண்டது. பரங்கி, ஆண்டாக்சைடு என்பார்கள். வெண்பூசனி பலவித பிரச்சனைகளுக்கு மருந்து.

      'நீடி, டமிலா' - நிச்சயம் உங்களுக்கு 'டி' கொடுத்திருப்பாங்க தமிழ்ல.

      நீக்கு
    7. //அழகு பானுமதி அக்கா// போங்க அதிரா, என்னை ரொம்ப புகழுரீங்க, எனக்கு வெட்கமா இருக்கு. இருங்க, ஒரு செகண்ட், நீங்க ரெசிபியை சொன்னீர்களா? ஓகே! ஓகே!

      நீக்கு
    8. பானுக்கா பரங்கியிலேயே வெரைட்டிஸ் இருக்கு. எங்கள் ஊரில் நாங்கள் மஞ்சள் பூஷணி என்றுதான் சொல்லுவோம் இங்கு சென்னை வந்த பிறகுதான் பரங்கி என்பதைக் கற்றுக் கொண்டேன். ஆனால் இதிலும் நிறைய வெரைட்டில் இருக்கு. கலர் கூட வித்தியாசமாகவும்வ் வரும்...

      வெள்ளைப் பூஷணியை இளவன் என்றும் நீட்டமாக மத்தளம் போல் இருப்பதை தடியங்காய் என்றும் எங்கள் ஊரில் சொல்லுவதுண்டு. இதிலும் வெரைட்டிஸ் உண்டு. ஒரே குடும்பத்துக் காய்கள் கஸின்ஸ் ஆக இருப்பவை..

      கீதா

      நீக்கு
    9. நோஓஓஒ எல்லோரும் அதிராவை பேய்க்காட்டுறீங்க:) பூசணி விதை போட்டு மரமாகி செடியாகிக் கொடியாகிப் பூத்து வருவது காய்... அதைப்போய் பூசணிக்கொட்டை என்றால் இப்போ அந்த மரம் தேம்ஸ்ல குதிச்சிருக்கும்ம்ம்:).. இதுக்கு விளக்கம் கேட்டால்ல் அதன் மருத்துவக் குணம் பற்றிச் சொல்றாரே நெ.தமிழன்... இப்போ நான் எங்கே போய்க் குதிக்க?:)..

      பானுமதி அக்கா ... அது வரப்புயரபோல சொன்னேன்ன் .. உங்கள் குறிப்பு அழகெனில் அதைச் செய்த நீங்களும் அழகுதான்ன்ன்... அதைப் படிக்கும் அதிராவும் அலகு சே சே அழகுதேன்ன்ன்ன்:).. ஹா ஹா ஹா

      நீக்கு
    10. அதிரா... உங்க பாயிண்ட் கரெக்டுதான். சின்னக் குழந்தை கீசா மேடத்தை மன்னிச்சு விட்டுடுவோம். இனிமேல் எங்கேயும் 'பரங்கிக்கொட்டை' என்ற வார்த்தையையே உபயோகப்படுத்தக்கூடாது என்று சொல்லிடுவோம்.

      நீக்கு
    11. ஆஆஆஆ வெற்றி வெற்றி ஒருபடியா நெல்லைத் தமிழனை, தமிழைக் காட்டி ஓத்துக்கொள்ளப் பண்ணிட்டேன்ன்ன்... ஓம் இந்தப் பிரச்சனைக்கு மூல காரணகர்த்தா கீசாக்காதான்:)...

      இது நீடிக்குமாயின் இனிமேல் நானும்... கத்தரிக்காய் கொட்டைப் பொரிச்ச குழம்பு... உருளைக்கிழங்குக்கொட்டை பொரியல் இப்படி ரெசிப்பி செய்து ஶ்ரீராமுக்கு அனுப்புவேஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா:)... அப்போ என்னை ஆரும் திட்ட முடியாதே:)..

      நீக்கு
  15. இளங்கொட்டை என கூகிளில் தேடினால் இஃகி, இஃகி, நம்ம பதிவுகளே வருதே! இளங்கொட்டை யாரும் பார்த்ததில்லையோ? பானுமதி செய்திருப்பது பறங்கிக்காயில். இதுவே மஞ்சளாகி விட்டால் பறங்கிப்பழம்! அதை நாங்க வாங்கவே மாட்டோம்! :)))) இளங்கொட்டை போன வாரம் கூட வாங்கி வந்தார். சமாராதனைக்கும் அதுக்கப்புறமாத் துவையல், அடைனும் பண்ணினேன். ஒரு ஃபோட்டோ எடுத்து வைச்சிருக்கணும். இந்தப் பால்க்கூட்டு நாங்க தேங்காய் அரைச்சு விட்டு வெல்லம் போட்டும் பண்ணுவோம். வெல்லம் போட்டுத் தேங்காய்ப் பால் விட்டும் பண்ணுவோம். அதிகம் தேங்காய்ப் பால் தான்! தாளிதத்தில் அந்தத் தேங்காய்ப் பால் நீக்கிய சக்கையை நெய்யில் வறுத்துச் சேர்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் மாஞ்சு மாஞ்சு இளங்க்கொட்டை பத்தி எழுதிருக்கேன் அக்கா யாரும் பார்த்ததில்லையானு கெளவி கேக்கறீங்களே...ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  16. முன்னெல்லாம் பலாக்காய்ப் பொடினு வாசலில் வரும். அரிசி போட்டு வாங்குவோம். ஒரு கைப்பிடி அரிசிக்கு ஒரு சின்ன உழக்கில் கொடுப்பாங்க! அதில் தேங்காய், பருப்புப் போட்டுக் கறி பண்ணலாம். கேரளாவில் துவரன் என்பார்கள். இதே போல் "அதலக்காய்" என்ற ஒன்று உண்டு. சின்னப் பாகற்காய்க்குத் தங்கை! ஆனால் பாகற்காய் மாதிரி இருக்காது! வேலிப்பாகல் அளவுக்கு இருக்கும். இதுவும் உடலுக்கு ரொம்பவே நல்லது! இங்கே திருச்சி போனால் எப்போதேனும் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு சந்தையில் அதலக்காய் கிடைக்கிறது.
      உடம்பில் கோடு கோடாய் இருக்கும்.மிதி பாகை என்று சொல்வோம் குட்டி பாகைக்காயை அதுவும் கிடைக்கும் அதைவிட ஒல்லியாக இருக்கும் அதலக்காய்.

      நீக்கு
    2. மிதிபாகல் பிட்லையில் தான் என்னோட உயிரே இருக்கு! :)))) போன வாரம் பண்ணினேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மருந்துக்கு ஒரு பாகல்காய்! :)))) கிடைக்கலையே! அதலக்காய் ஒல்லியாக் கொஞ்சம் நீளமாவும் இருக்கும். வேலைப்பாகற்காயை விடச் சின்னது! மிதி பாகலை விடப் பெரிது!

      நீக்கு
  17. பால் கொழுக்கட்டை கூட இப்போதெல்லாம் பால், சர்க்கரை போட்டுப் பண்ணறாங்க!!!!!!!!!!!! எங்க வீட்டில் வெல்லம், தேங்காய்ப் பால் தான்! ஒரு தரம் ஆர்டர் பண்ணிட்டுக் கொண்டு வந்ததும் முழிச்சேன்! உள்ளே கொழுக்கட்டைகளும் இனிப்பு ஏறாமால் சப்பென்று இருந்தது! நொந்து போச்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்... அதைவிடக் கொடுமை, பால் கொழுக்கட்டைக்கு எனக்குத் தெரிந்து உருட்டி உருட்டி (சீடை மாதிரி அல்லது அம்மிணிக் கொழுக்கட்டை மாதிரி) கொழுக்கட்டை போடுவார்கள். ஆனால் சில கடைகளில், பெரிய அளவு மனோகரம் செய்வதுபோல் அச்சில் பிழிந்து அதனை கட் பண்ணிப் போட்டுவிடுகிறார்கள்.

      நீக்கு
    2. பால் கொழுக்கட்டை நாலே தேங்காய்ப்பால் வெல்லம்...கீதாக்கா நீங்க சொன்னாப்புல இப்பல்லாம் பால் விட்டு செய்கிறார்கள். யெஸ் அம்மினிக் கொழுக்கட்டைபபோல்தான்....நானும் சில சமயம் பாலில் செய்வதுண்டு ஆனால் பாலை அப்படியே விட மாட்டேன். பாலைக் குறுக்கி வெல்லமோ அல்லது சர்க்கரையோ சேர்த்து குறுக்கிச் செய்வேன். அதுவும் ஒரு டேஸ்டாக இருக்கும்

      கீதா

      நீக்கு
    3. எ.பி தி.பதிவுக்காக செய்யணும்னு 1 1/2 வருடத்துக்குமேல் நினைத்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் செய்யும் சந்தர்ப்பம் வரவில்லை.

      நீக்கு
  18. பறங்கிக்கொட்டையின் உள்ளேகூட நிறம் மாறி இருக்காது. அப்படியே நறுக்கி,சமைப்பதுதான் வழக்கம். நிறைய இனிப்பு வேண்டுவோர்கள்தான் கொட்டைப்பாக்களவு வெல்லம் போட்டேன் என்பார்கள். பிஞ்சுக்காயின் வாஸனையுடன் அலாதி ருசி,தேங்காய்ப்பால் சேர்த்துச் செய்வதுதான். சக்கரைபூசனிக்காய் என்று பறங்கிக்காயைச் சொல்வோரும் உண்டு.அதிகம் முற்றாத பறங்கிக்காயில் பானுமதி செய்திருக்கிரார்கள். இதுவும் நன்றாகவே இருக்கும். வீட்டுத் தோட்டத்தில் விளைந்த பறங்கிக்கொட்டைமாதிரி கிடைக்குமா? காவேரிக்கரை.கீதாவிற்கு எல்லாம் கிடைக்கின்றது என்று தோன்றியதெனக்கு. ஸரிதானே? அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமாட்சி அம்மா எப்படி இருக்கீங்க. பார்த்து ரொம்ப நாளாச்சு. உடல் நலம் எப்படி இருக்கிறது.?

      கீதா

      நீக்கு
    2. மிக்க நன்றிம்மா. எங்கேயும் வரமுடியறதில்லே. அஸௌகரியங்களைப் பற்றியே பேசாதே. நன்றாயிருக்கிறேன் என்றே சொன்னாயானால், அதுவே உனக்குத் தெம்பைத்தரும் என்ற சொல்லைக் கேட்க முடிகிறது. உண்மைதானே.நலமே கீதா. அன்புடன்

      நீக்கு
  19. //காவேரிக்கரை.கீதாவிற்கு எல்லாம் கிடைக்கின்றது என்று தோன்றியதெனக்கு. ஸரிதானே? //ரொம்ப சரி காமாட்சி அம்மா. நான் திருச்சிக்கு போகும் போதெல்லாம் அங்கிருந்து பரங்கி கொட்டை வாங்கி வருவேன். சென்னையிலும் கிடைக்காது, பங்களூரில் இது வரை கண்ணில் படவில்லை. பரங்கி கொட்டையில் பால் கூட்டு செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. செய்தேன், பகிர்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா சென்னையில் மார்க்கெட்டில் பரங்கிக் கொட்டை கிடைக்கும்....மற்ற இடங்களில் கிடைக்குதானு தெரியலை...

      கீதா

      நீக்கு
    2. ஆமாம், அம்மா, இங்கே அதிகம் நாட்டுக்காய்கள் தான்! அதிலும் வெண்டைக்காய், கத்திரிக்காய் சுவை சொல்ல முடியாது! அடுத்து வாழைக்காய்! நிறையக் கச்சல் வாழைக்காய் வாங்கி வந்து கறி, கூட்டு, எரிசேரி எனப் பண்ணுவேன். வறுவல் எனில் முத்தல். பொடிமாஸுக்கும் முத்தல் வாழைக்காய்!

      நீக்கு
  20. /வாங்கோ அதிரா காலை வணக்கம் நல்லா இருக்கிறீங்களா எனக் கேய்க்க ஒருவருக்கும் மனசு வராதே:)... அதூஊஊஊ அதிரா போன்ற ஞானிகளிடம் மட்டுமே எதிர்பார்க்கலாமாக்கும் / நான் கேட்கிறேன் பறங்கிப் அழம் அல்லதுகாய்சைக்காட்டி கொட்டை என்கிறார்களே பறங்கிக்காயில் ஓலன்செய்வதுபிடிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///நான் கேட்கிறேன் ///
      ஜி எம் பி ஐயா ஜி எம் பி ஐயாதான்ன்ன் .. மிக்க நன்றி...
      பார்த்தீங்களோ எல்லோரும்...

      நீக்கு
  21. பானுக்கா சிம்பிள் அண்ட் லவ்லி ரெசிப்பி! மிகவும் பிடிக்கும்...தேங்காய் எண்ணை ஊஸ் (ஆஹா பூஸாரைப் பார்த்துட்டா இப்படித்தான் கை தானாவே அடிக்குது!!!) செய்வேன். மணம் நன்றாக இருக்கும்.

    பால் விட்டுச் செய்வதென்றால் நான் பாலிலேயே வேக வைத்துவிடுவேன். தே பால் என்றால் மூன்றாம் பாலில் வேக வைத்துவிட்டுச் செய்வேன்..

    நல்ல ரெசிப்பி!

    கீதா

    பதிலளிநீக்கு
  22. கமலா அக்காவைக் காணவே இல்லையே? ஏன்? என்னாச்சு அக்காவுக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  23. ஆமாம், கமலாவுக்கு என்ன ஆச்சு? கோயில்களுக்குப் போகப் போவதாய்ச் சொன்னார்கள். ஒருவேளை பிரயாணத்தில் மும்முரமோ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!