வெள்ளி, 26 அக்டோபர், 2018

வெள்ளி வீடியோ 181026 : தேவன் கோவில் நாதம் உன் ஒலியோ திருச்சபை ஒலிக்கும் கீதம் உன் குரலோ


ஆடு புலி ஆட்டம்.  கமல் ரஜினி இணைந்து நடித்த படங்களில் ஒன்று.  கமல் ஹீரோ.  ரஜினி வில்லன்.  "இது ரஜினி ஸ்டைல்" என்பாராம் அடிக்கடி! 



1977 இல் வந்த படம்.  எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் விஜயபாஸ்கர் இசையில்.  



இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் எனக்குப் பிடிக்கும்.  ஒன்று இந்தப் பாடல்.  எஸ் பி பி குரலுக்காகவே இந்தப் பாடல் பிடிக்கும்.  



இந்தப் பாடலின் ஒரிஜினல் கன்னடம் என்று நினைக்கிறேன்.  கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் தனது சொந்தக் குரலில் இந்த டியூனில் ஒரு பாடல் பாடுவார்.  அதனால் நான் இசை ராஜன் நாகேந்திரா என்று எண்ணியிருந்தேன்.



ஸ்ரீப்ரியாவும் நடித்திருக்கிறாராம்.  ஆனால் காட்சியில் வருவது அவரல்ல.  சங்கீதா என்றொரு பெயர் போட்டிருக்கிறது.



பாடலைப் பாடும் பாலுவின் குரலில் வழியும் காதல் இனிமை.  பாடல் எழுதியவர் யார் என்று தெரியவில்லை.   என்னுடைய 'எஸ் பி பியின் பேவரைட் லிஸ்ட்'டில் பிரதான பாடல்களில் ஒன்று.





உறவோ புதுமை நினைவோ இனிமை 
கனிந்தது இளமை காதலில் புதுமை 

காற்றினில் ஆடும் கொடிமலர் போலே 
கண்களில் ஆடும் ஒளிமலர் கண்டேன் 
பார்த்ததும் நெஞ்சில் பரவசம் கொண்டேன் 
பாவையின் ஜாடையில் எனைநான் மறந்தேன் 

தேவன் கோவில் நாதம் உன் ஒலியோ 
திருச்சபை ஒலிக்கும் கீதம் உன் குரலோ 
மார்கழி மாதத்து மலர்கள் உன் உடலோ 
மாங்கனி உடலில் தவழ்வதென் உயிரோ 

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் 
எவ்விதம் நாம் இங்கு ஒன்றாய் இணைந்தோம் 
ஒருவரை ஒருவர் சந்திக்கும் நேரம் 
உறவுகள் ஆயிரம் பிறந்திடும் காலம் 



65 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  2. ஆடும் புலியாட்டம்..
    புலியும் ஆடும் ஆட்டம்..
    வேடிக்கை பார்க்கும் கூட்டம்..
    புலிவருதே எடு ஓட்டம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தின் பெயரில் நமக்கு கவலையில்லை. பாடலில் இசையில் எந்தக் குறையுமில்லை. பாடலைக் கேட்டுக்கொண்டே ஓடுவோம்!

      நீக்கு
  3. காலை வணக்கம் அன்பு ஸ்ரீராம், துரை செல்வராஜு.
    பாடல் வெகு இனிமை. கண்ணைமூடிக் காதைத் திறக்கலாம்.
    இந்த நடிகை பின்னாட்களில் வேறு பெயரில் நடித்தாரோ.
    முகம் புரிகிறது. பெயர் நினைவில்லை. பெரிய பொட்டும் பட்டுப் புடவையுமாகப் பார்த்த நினைவு வருகிறது. அடங்கிய மனைவியாக வருவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் வல்லிம்மா... காதில் இனிமையோ இனிமை. கண்கள் பார்த்தாலும் பெரிய பழுதில்லை! அந்த நடிகை பற்றி விவரம் தெரியவில்லை. நீங்கள் ரோஜா ரமணி என்று நினைக்கிறீர்களோ?

      நீக்கு
  4. நடிகை முகம் பழக்கமில்லாததாய்த் தெரியுது. ஆனால் பாடல் அடிக்கடி கேட்டிருக்கேன். படம் பார்த்தது இல்லை. ஸ்ரீபிரியா ரஜினிக்கு ஜோடியோ?

    பதிலளிநீக்கு
  5. 80,90 களில் சங்கீதா என்றொரு நடிகை நடித்து வந்தார். விஜயோடு கூட நடிச்சிருக்கார். பிளவு பட்ட குடும்பத்தைச் சேர்த்து வைக்கும் பேரன், பேத்திகள் காதல் பற்றிய கதை! அதில் விஜய் தியாகி! இஃகி, இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜயோடு ஜோடியாக சங்கவி என்ற நடிகை நடித்து வந்தார். ஆறிலிருந்து அறுபதுவரை படத்தில் ரஜினி ஜோடியாக நடித்த நடிகையின் பெயர் சங்கீதா.

      !!!!

      நீக்கு
    2. யெஸ் நானும் அந்த பொண்ணை பார்த்திருக்கேன் மார்வாடி ஸ்கூலில் படிச்சா ஸ்போர்ட்ஸ் மீட்டில் நந்தநம்ல பார்த்திருக்கேன் :)
      அது சின்ன பெண் அக்கா இது வேற சங்கீதா அது வேற சங்கீதா கீதாக்கா

      நீக்கு
  6. ரோஜாரமணி இல்லை. அவர் முகம் வேறே மாதிரி. அவர் மகன் கூட சில படங்களில் கதாநாயாகனாக நடிக்க வந்துட்டாரே! அந்தப் படம் வெளிவந்தப்போ ரோஜாரமணி நடிக்கவே இல்லைனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோஜாரமணியின் மகன் நடிக்க வந்துட்டாரா? எனக்குத் தெரியாது. யார் அவர்?

      நீக்கு
    2. அஞ்சலி படத்தில் அஞ்சலியின் அண்ணன், அப்புறம் உனக்கு பதினாறு எனக்கு 21 என்ற படம் என்று நினைக்கிறேன் கதாநாயகன். தெலுங்கில் அதிகம் நடிக்கிறார் போலும் ஸ்ரீராம்.

      நீக்கு
  7. சங்கீதா நிறைய படங்களில் நடித்து இருக்கிறார்.
    இந்த படம் பார்க்கவில்லை. "ஆறிலிருந்து அறுபது" என்ற ரஜினி படத்தில் ஒரு பாடலுக்கு வருவார்
    . தீபம் என்ற படத்தில் சிவாஜியின் தங்கையாக வந்தார்.பாடல் இப்போதுதான் முதான் முதலாக கேட்கிறேன்.பாடல் இனிமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா. இனிமையான பாடல் என்பதில் சந்தேகம் இல்லை. தீபம் படமும் நன் பார்க்கவில்லை!

      நீக்கு
  8. பாடல் கேட்ட ஞாபகம் வருகிறது.
    கௌதமி வீட்டுக்காரரின் சில்லுன்டி வேலைகள் அப்போதே ஆரம்பமாகி விட்டதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி...

      >>>> சில்லுன்டி வேலைகள்... <<<

      ஆகா!... நல்லதொரு சொல்லாடல்...

      அதுசரி.. இதைப் பத்தி டூடூ.. ஒன்னும் வரலையே!?.. ஏன்!?..

      நீக்கு
    2. /கௌதமி வீட்டுக்காரரின் //

      இன்னமுமா?!! வாணியும் சரிகாவும் கொசுக்கப் போறாங்க...! நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
    3. //கொசுக்கப் போறாங்க//

      அச்சச்சோ... 'கோச்சுக்கப் போறாங்க' என்று வரவேண்டும்!

      நீக்கு
    4. சிற்றுண்டி என்பது -
      ரவா கேசரி, இட்லி சாம்பார்,தஞ்சாவூர் டிகிரி காஃபி!..

      சரியா!..

      சில்லுண்டி என்பது -
      ஆறிப் போன போண்டா அல்லது வடை, அரை கிளாஸ் டீ!.. (அதுவும் டீத்தூள் கலப்படம்!..)

      சில்லுன்டி..ன்னு சொன்னா
      எதுக்கும் விதியில்லாம போன வாரத்து பட்டாணிக் கடலையோட
      சொத்தை, சோடை - இதுங்களைப் பொறுக்கி வாயில போட்டுக்கிறது!...

      நீக்கு
    5. //சில்லுன்டி //

      ன் ஆ? ண் ஆ?..

      இதுக்கான விரிவுரை/ விளக்கவுரை தான் மேலே இருப்பது!...

      நீக்கு
    6. அதுல பாருங்க...
      ஒரு சின்ன எழுத்துப் பிழைக்காக
      என்னவெல்லாம் தகிடுதத்தம் பண்ண வேண்டியிருக்கு!..

      இஃகி.. இஃகி.. இஃகி!...

      நீக்கு
    7. துரை அண்ணன்... கீசாக்காவின் கடன் காசைக் குடுத்திட்டீங்களோ?:).. சிரிப்புக்குச் சொன்னேன்ன்ன்ன்:)

      நீக்கு
    8. ண், ன் இதில் நானும் குழப்பத்தில்தான் எழுதினேன்...

      நீக்கு
    9. இதை சீண்டல் என்ற வகையில் பார்த்தால் ? "ண்" இதுவே சரி.

      குவைத் ஜியின் விளக்கத்திற்கு நன்றி.

      நீக்கு
    10. இந்த ன் /ண் ற ர குழப்பத்துக்கெல்லாம் அந்த தேம்ஸ் கரை பூனை தான் காரணம் :)

      நீக்கு
    11. ஓ!..
      அந்தப் பூனையோ!...

      நெனைச்சது சரிதான்!..

      நீக்கு
    12. இவ்வளவு பெரிய தொடரியில் பதிலிடுவது சற்றே சிரமம்! பொதுவாக இந்தக் கண்ணி ரசிக்க வைத்தது. துசெ ஸாரின் விவரணம் புன்னகைக்கவைக்கிறது!

      நீக்கு
    13. //இப்போ ழ/ ள தெளிவாகிட்டுதூஊஊ:)//

      ம்க்கும் உங்களுக்கு சரியாகி ஆனா எங்களுக்கு ??
      எதோ ஒரு படத்தில் ஒரு ஹீரோக்கு இங்கிலிஷ் சொல்லி கொடுத்த டீச்சர் கடைசீல இங்கிலீஷ மறந்து அழுகை சீன் வரும் அந்த நிலைமைதான் எங்களுக்கும்

      நீக்கு
  9. காணொளி இல்லாமல் பாடல் கேட்டேன். வெகு சுமார்தான் இசையும் பாடலும் என்பது என் அபிப்ராயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> காணொளி இல்லாமல் பாடல் கேட்டேன். வெகு சுமார்தான் இசையும் பாடலும் என்பது என் அபிப்ராயம்.. <<<

      நீங்க சொல்றது தான் சரி...

      ஆகா.. ஓகோ... ந்னு சொல்றதெல்லாம்
      காலையில கொழந்தைங்க சிரிச்சிக்கிட்டு இருக்கட்டுமே..ன்னு தான்!..

      நீக்கு
    2. ///காணொளி இல்லாமல் பாடல் கேட்டேன். வெகு சுமார்தான் ///
      நெ தமிழன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சொல்றதையே செய்யும் கிளிப்பிள்ளையாக எப்பவும் இருக்கக்குடா:).. இந்தத்தடவை வீடியோப் பார்த்துப் பாட்டைக் கேட்டுப் பார்க்கோணும் ஹா ஹா ஹா

      நீக்கு
    3. //ஆகா.. ஓகோ... ந்னு சொல்றதெல்லாம்
      காலையில கொழந்தைங்க சிரிச்சிக்கிட்டு இருக்கட்டுமே..ன்னு தான்!//

      என்னைப்பொறுத்தவரை இளமையின் இனிய பாடல் இது. நான் ரசிக்கும் பாடல்களில் ஒன்று.

      நீக்கு
  10. இதுக்குமுன் கேட்டதாக நினைவில்லை, பாடல் நன்றாகத்தான் இருக்கு...பிடிச்சிருக்கு...

    பதிலளிநீக்கு
  11. பதினாறு வயதினிலே படம் வந்த பிறகு வெளியான படம் ஆடு புலி ஆட்டம்.
    கமலஹாசனுக்கு பதினாறு வயதினேலே' படத்தில் புகழ் வந்து பதினாறு நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் இப்படி ஒரு படம் என்று கமுதமோ, விகடனோ விமர்சனத்தில் எழுதினார்கள். பாடல் சுமார் தான் என்று எனக்கு தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானு அக்கா, நான் படம் இன்றுவரை பார்க்கவில்லை. இந்தப் பாடல் பிடிக்கும். இன்னொரு பாடல் வானுக்கு தந்தை எவனோ, மண்ணுக்கு மூலம் எவனோ பாடலையும் கேட்பதுண்டு.

      நீக்கு
  12. அப்போது இரண்டு சங்கீதாக்கள் இருந்தார்கள். ஒருவர் சிவாஜி சங்கீதா எனறும் மற்றவர் எம்.ஜி.ஆர் சங்கீதா என்றும் அழைக்கப்பட்டனர். காரணம் தெரியாது. இந்த பாடல் காட்சியில் நடிகைதான் மோகமுள் திரைப்படத்தில் யமுனாவின் அம்மாவாக நடித்தார்.

    பதிலளிநீக்கு
  13. தீபம் படத்தில் சிவாஜியின் தங்கையாக நடித்தவர் சங்கீதா . ஆறிலிருந்து அறுபதுவரை படத்தில் ரஜினியின் காதலியாக வந்து பின்பு அவரை காய் விடுபவராக நடித்திருந்தார் .


    இவர் நடிகை கீதா அல்ல .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​கீதா என்று யார் சொன்னார்கள்?

      நம்ம கீதா ரெங்கனை இன்னும் காணோமே...!

      நீக்கு
  14. பாடல் இனிமையா இருக்கு டாப் spb குரல்தான் .
    சித்தப்பாவை தேடி வந்தேன் அங்கிள் தான் விக் மாதிரி தலையோட வரார் :)

    பதிலளிநீக்கு
  15. பாடல் வெகு சுமார் கேட்பதில் தவறு இல்லை ஆனால் தேடிப்போய் கேட்க முடியாதது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜி எம் பி ஸார்... பாடல்களைத் தேடிக் கேட்கும் பழக்கம் எனக்கு உண்டு. ​ சேமித்து வைத்துக்கொண்டு கேட்கும் பழக்கமும் உண்டு.

      நீக்கு
  16. //..நம்ம கீதா ரெங்கனை இன்னும் காணோமே.!//

    கீதா ரெங்கனுக்குப் பாட்டு புடிச்சுதா இல்லியா ? எப்படித்தான் கண்டுபிடிப்பது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, அது என்ன ராகத்தில் அமைந்தது என்றாவது சொல்வாரே!

      நீக்கு
  17. இனிய பாடல் கேட்டேன் ரசித்தேன் நன்று

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!