வியாழன், 4 அக்டோபர், 2018

ஆஞ்சநேயர் கோவிலில் புதிய வியாபாரம் - மீண்டும் ஒரு ஆஞ்சநேயர் கதை


ஆஞ்சநேயர் கோவிலும் அவசர ஆம்புலன்சும்.

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் சென்ற (புரட்டாசி முதல்) சனிக்கிழமையை விட இந்த வாரம் கூட்டம் அதிகமாய் இருந்தது.  டி. நகர் ரெங்கநாதன் தெருவில் நடக்கும் Feeling!

இரண்டு வாரங்களாய் கோவிலில் புது வியாபாரம்!  விநாயகர் சன்னதி அருகே நெய்விளக்கு வியாபாரம்.  "அவசியம் டோக்கன் வாங்கிச் செல்லுங்கள்" என்று முன்னால் நோட்டிஸ் வைத்திருந்தார்கள்.  இப்போது டிராஃபிக்கில் திரும்புவது போல அங்கே திரும்பும்போதே ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் அர்ச்சகர் "நெய்விளக்கு இங்கே வாங்கணும்...  நெய்விளக்கு இங்கே வாங்கணும்.." என்று ஓங்கி குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.  விநாயகர் அருகே ஒரு நெய்விளக்கு குண்டம்.

அந்தச் சுற்றில் ராமர் சன்னதியை நோக்கி நடக்கும் வழியில் தடுப்பு கட்டி உள்ளே சிலர் இருப்பார்கள்.  ஹோமம் செய்திருப்பார்கள், செய்துகொண்டிருப்பார்கள், அல்லது செய்யத் தயாராய் இருப்பார்கள்.  எதற்கு, என்ன ஏது என்று தெரியாது.  ஒவ்வொருமுறையும் அடுத்த முறை யாரையாவது விசாரிக்கவேண்டும் என்று நினைத்துக் கொள்வதோடு சரி!

ஒவ்வொரு வாரமும் ஆஞ்சியைத் தரிசித்து விட்டு வருவதை விட காலை டிஃபன் புதுப்புது (சைவக்) கடைகளில் சுவைப்பது வழக்கம்.  ஆர்வத்தைத் தூண்டும் தேடலாக இருக்கும்!  ஆனால் இந்த வாரம் மட்டுமல்ல அடுத்த வாரமும் அது முடியாது.  மாளயபட்சம்.  

எனவே பொங்கலை இந்த முறை சற்றே ஆர்வத்துடன் வாங்க வேண்டி வந்தது.  பொங்கல் வழங்குவர்களிலும் இருவகை இருக்கிறார்கள்.  ஒருவகை அரை தொன்னை பொங்கல் தருவார்கள்.  அடுத்த வகை ஒண்ணேகால் தொன்னை அளவு கொள்ளும் பொங்கலை ஒரு தொன்னையில் வழித்துக் கொடுப்பார்கள்.

எனக்கு முன்னால் சென்ற ஒரு குடும்பம் சட்டென அவர்கள் மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தையை இறக்கிவிட்டு நடக்க வைத்து எக்ஸ்டரா தொன்னை பொங்கலுக்கு முயன்றார்கள்.  தொன்னை வழங்குநர் ஆதார் இல்லாததால் ரிஜக்ட் செய்யும் அரசு அதிகாரி போல கொடுக்க மறுத்து விட்டார்.  'ஒண்ணு எக்ஸ்டரா கொடுங்க...  குழந்தையையும் கணக்கில் எடுங்க...  குழந்தை சாப்பிடும்' என்று சொல்லிப்பார்த்தார் குழந்தையின் தந்தையான இளைஞர்.  அவர் பதில் சொல்லாமல் அடுத்த பக்தருக்கு தொன்னைப் பொங்கல் வழங்குவதில் மும்முரமாக, குறையுடன் புலம்பிக்கொண்டே நகர்ந்து நடந்து வந்தது அந்தக் குடும்பம்.

எப்போதுமே காலை நேரங்களிலேயே செல்வதால் பொங்கல் பிரசாதம் மட்டுமே லபிக்கிறது.  புளியோதரை (என் நண்பர் இதை புளியாவிரை என்பார்!) கிடைப்பதில்லை.  ஒருமுறை பெரிய பெரிய பாத்திரங்களில் நிரப்பப்பட்ட புளியோதரை ஓரமாகக் காத்திருக்க, அங்கு பொங்கல் தீரவே இன்னும் ஐநூறு ஆயிரம் பக்தர்கள் வேண்டும் என்ற நிலையில் ஜொள் வடிய அந்தப் பாத்திரத்தைப் பார்த்தபடியே பொங்கல் வாங்கி வந்தோம்.  

மாலைவேளைகளில் புளியோதரை தருவதாகக் கேள்வி.  அடுத்த முறை மாலை வருவோம் என்கிற சங்கல்பம் ஒவ்வொரு வாரமும் செய்து கொள்கிறோம்.  புளியோதரை வாங்கியபிறகுதான் அதைப் பற்றிய குறைகளைப் பட்டியலிட முடியும்.  எந்த ஒரு பொருளும் கிடைக்கும் வரைதானே எல்லா ஆர்வமும்?  கிடைத்தபின் சுவை, சுவாரஸ்யம் குன்றிவிடும்!  அதிக எதிர்பார்ப்பே அமிர்தமே என்றாலும் நல்லாயில்லை என்று தோன்ற வைக்கும்!

அற்பமனிதன் நான்.  ஆஞ்சியை விட இதுபோன்ற விஷயங்களில்தான் மனம் செல்கிறது.  கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்கிறார்கள்.  ஏன், இதில் மட்டும் இல்லாதிருப்பாரா?

திரும்பி வரும் வழியில் உணவுச் சாலைகளை மனைவியைப் பார்க்காத திருநீலகண்டர் போல புறக்கணித்துக் கொண்டே வந்தோம்.  வழியில் ஒரு வீட்டில் மாருதி ஆம்புலன்ஸ் வெளியே நின்றிருக்க, அதில் ஒரு இளைஞர் புன்னகை தவழும் முகத்துடன் காலை ஜாக்கிரதையாகக் காப்பாற்றி வைத்து பாதி சாய்ந்த இருக்கையில் அமர்ந்திருந்தார்.   உறவுகள் சிலர் புன்னகை தவழும் முகத்துடன் அவர் அருகே பைகளை வைத்து ஆஸ்பத்திரி செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.  காலில் எலும்பு முறிவோ, தசைப்பிடிப்போ, சுளுக்கோ...!

பின்னர் நெருக்கமான போக்குவரத்தில் பின்னால் ஆம்புலன்ஸ் சைரன் சத்தம்.  மெல்ல ஆங்காங்கே வாகனங்கள் ஒதுங்கி வழிவிட்டபோது தாண்டிச் சென்றது அதே மாருதி ஆம்புலன்ஸ்.  அந்த இளைஞர் இருக்கை சாய்க்கப்பட்டு படுக்க வைக்கப் பட்டிருப்பார் போலும்,.  உறவினர் சிரிப்பைத் துறந்து சீரியஸாய் பார்த்தபடி இருக்க அந்த ஆம்புலன்ஸ் வழி ஏற்படுத்திக் கொண்டு எங்களையும் தாண்டிப் பறந்தது.



கடவுளைப் பார்த்துட்டு வாடான்னா கண்டதையும் பார்த்துட்டு வந்திருக்கான்...  கோவம்தான் வருது...!


======================================================================================================


இது முகநூலில் நான் முன்பு பகிர்ந்தது...  தி ஜ ர பேத்தியின் படிப்புச் செலவுக்கு அணிலளவு உதவி என் அப்பாவும் ஓரிரு மாமாக்களும் உதவி இருந்தார்கள்.  அவர் மகளும் பேத்தியும் எங்கள் இல்லம் வந்து சென்றதுண்டு.  




"அவரோட கடைசி காலத்துல மந்தவெளி குடிசை மாற்று வாரியத்துல அவருக்கு வீடு ஒதுக்கினாங்க. அங்க நாங்க போறப்ப எங்க எல்லாரையும் நிக்கவச்சு படம் எடுத்தாங்க. தாத்தா கைல ஒரு சிலேட்டைக் கொடுத்து அதைத் தூக்கிப் பிடிக்கச் சொன்னாங்க. அதுல அவருக்குன்னு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டோட விலாசம் சாக்பீஸ்ல எழுதியிருந்தது. இப்ப அந்த ஃபோட்டோவைப் பார்த்தாலும் கண்ணுலேருந்து ரத்தமா வரும். எப்பேர்ப்பட்ட மனுஷன்... கைல சிலேட்டைத் தூக்கிப் பிடிச்சுகிட்டு..." 


"இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட பத்திரிகையாளர்களில் இவரும் ஒருவர். அதற்காக சிறைவாசமும் அனுபவித்திருக்கிறார். ஆனால், இந்தியா சுதந்திரமடைந்ததும், தியாகிகளுக்கான 5 ஏக்கர் நிலத்தையோ, மாதாந்திர கவுரவ ஊதியத்தையோ பெற மறுத்து விட்டார். 'நாட்டு சுதந்திரத்துக்காகப் போராட வேண்டியது என் கடமை. அதற்கு எந்தப் பிரதிபலனும் வேண்டாம்' என்று சொல்லி விட்டார்."


இப்படிப் பட்டவருடைய வாரிசுகள்தான் இன்று அடுத்தவேளைச் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுகிறார்கள். 



தி.ஜ.ர.வின் நகைச்சுவை, வாசகர்களுக்குக் கிச்சுக்கிச்சு மூட்டும் ரகத்தில் அமைந்த எழுத்தல்ல, அவர்களைச் சிந்திக்க வைப்பது, பண்படுத்துவது, மகிழ்ச்சியூட்டுவது. நகைச்சுவையைப் பற்றி தி.ஜ.ர. என்ன நினைக்கிறார்? இதற்கு அவர் சொல்லும் பதில் யாராலும் இதுவரை சொல்லப்படாதது, தத்துவார்த்தமானது: ‘பரிபூரணமான மாசுமறுவற்ற நகைச்சுவை என்ற ஒன்று உண்டா? அபத்தம்தான் நகைச்சுவையின் மூலாதாரம். அபத்தம் சிரிப்பை மூட்டுகிறது. அதுவே இன்பம். ஆனால், அதே அபத்தம் உள்ளத்துக்குள்ளே ஒரு வெறுப்பையும் ஏக்கத்தையும் கிளப்புகிறது. அதுவே துன்பம். அந்த இன்பமும் துன்பமும் நகைச்சுவை நாணயத்தின் தலையும் பூவும் போன்றவை’ (‘கடவுளைக் கண்டவர்’ கட்டுரையில்).  

மாலன் பக்கத்திலிருந்து...




புகழ் வாழ்வு வாழ்ந்திருக்கார்...


=======================================================================================================

கடந்து சென்ற சிவாஜி கணேசன் பிறந்த நாளை ஒட்டி...







என் வேஷத்தில் அவர் வந்ததில்லை இல்லையா?
====================================================================================================

ஆனால் அஸ்தமனத்திலும் ஒரு அழகு இருக்கிறது..  இரவுகளின் இனிமை அஸ்தமனத்தில் தொடங்குகிறது!  







"முருகா...  ஷண்முகா...  எங்கே ஓடுகிறாய்?  இந்த ஒரு கவிதைதான் போட்டிருக்கான்..   பயப்படாதே..  நாங்கள் இருக்கிறோம்...  இறங்கி வா முருகா...

===================================================================================================



இந்த அளவிலே...
இந்த வியாழனைப் 
பூர்த்தி செய்து..  
அடுத்த வாரம் 
சந்திக்கலாம்..

ஆனந்தம்...   ஆனந்தம்...  ஆனந்தம்...  ஆனந்தம்...  ஆனந்தமே...

108 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  2. கயிலாயத்தில் -
    கனியினால் கலாட்டா ஆனது போல
    கவிதையினாலும் ஆகப் போகிறதோ...

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் துரை அண்ணா....ஹையோ கதை!! வாசிக்க உக்காந்தா நேரம் போறதே தெரியாதே...ம்ம்ம்ம் சரி மதியம் வந்து படிக்கறேன்....வேற வழி...உடனே பற பறனு கமென்ட் போடதோணூம் ஸோ....மீ ஓடிங்க்..இப்ப

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா...

      ஹி ஹி ஹி அது கதையல்ல... நிஜம்!

      நீக்கு
  4. கவிதை ஆஹா ஆஹா....செம செம...மீண்டும் வரேன் இதுக்கும்...முருகா!! பறந்துவிடாதே நில்லப்பா..நான் மதியம் வரேன் தரிசிக்க!! உன்னோடு கொஞ்சம் பேசனுமே...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காத்திருப்பான் கமலமுருகன்...!

      ஆஹா பாட்டு நினைவுக்கு வந்ததும் கமலா ஸிஸ்டர் நினைவும் வந்து விட்டதே... எங்கே அவர்களைக் கொஞ்ச நாட்களாய்க் காணோம்?

      நீக்கு
    2. நானும் நினைத்தேன் கமலா ஹரிஹரனை.

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஹா காத்திருப்பான் கமலமுருகன் ஆமாம் கமலக்கண்ணன் நு வரும் பாட்டு இல்லையா...அழகான பாடல்...

      ஸ்ரீராம் நானும் தேடினேன் கமலா அக்கா எங்கேனு...அதே போல கீதாக்காவையும் காணலையேனு...அன்று தலைவலினு போனாங்க....அப்புறம் பார்த்துட்டேன் கீதாக்கா வந்ததை.!!

      அப்புறம் ஏஞ்சலும் அப்பப்ப ஜூட் விட்டுடறாங்க...காணலை....

      கீதா

      நீக்கு
  5. புலர்ந்ததும் அழகு
    மலர்ந்ததும் அழகு..
    பறந்ததும் அழகு
    இருந்ததும் அழகு..

    கண்விழித் தெழுந்து
    கருத்துரை செய்தால்
    அழகே அழகு
    பேரழகு!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ என்னதான் சொல்ல வர்றீங்க துரை ஸார்... எல்லாமே அழகுதானே? ஆஹா...

      நீக்கு
    2. நான் என்ன சொல்றேன்...னு
      புரியலையா!..

      அழகு தான்!..

      நீக்கு
    3. //புரியலையா!..

      அழகு தான்!..//

      ஹா... ஹா... ஹா...

      அழகு.

      நீக்கு
    4. துரை அண்ணா அசத்திட்டீங்க! செமையா இருக்கு கவிதை!

      கீதா

      நீக்கு
  6. இன்னிக்குப் பொழுதுக்கு முருகன் மாட்டிண்டாரா? சரிதான்! அந்தக் காலை அழகு அருமை. இந்தக் கவிதை எப்போ முகநூலில் போட்டீங்க? படிச்ச நினைப்பே இல்லை. அதோட முகநூலிலே பழசை எப்படித் தோண்டி எடுக்கறீங்க? அதுவும் தெரியலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகன் கிட்ட நாமதான் மாட்டிண்டிருக்கோம்! முகநூல் தானாகவே மெமரிஸ் என்று தினமும் தருமே... பார்த்ததில்லையா அக்கா?

      நீக்கு
    2. Oh, Okay, உங்களோட இந்தப் பதிவுக்குப் பொருத்தமா மார்க் கொடுத்தாரா? இல்லைனா மார்க் கொடுத்ததை வைச்சு நீங்க ஒப்பேத்தறீங்களா? இஃகி, இஃகி, எனக்கும் தினம் ஐந்தாறு வரும். ஏதாவது ஒண்ணு, ரெண்டு ஷேர் பண்ணுவேன். :)

      நீக்கு
    3. இந்தப் பதிவுக்கு பொருத்தமா இன்று இல்லையே.. தினமும் அவர் கொடுப்பதைச் சேமித்து அவ்வப்போது உபயோகிக்கறேன்.

      நீக்கு
  7. கோவிலுக்குப் போனோமா, ஆஞ்சியைப் பார்த்தோமா, நலம் விசாரித்தோமா, வந்தோமானு இல்லாமல் எப்போப் பார்த்தாலும் புளியோதரை நினைப்போடு போனால் நிச்சயம் கிடைக்காதாக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் புளியோதரையை அந்த ஆஞ்சி ஒருதடவையாவது கண்ணில் காட்டி விட்டால்தான் என்ன எனும் ஆதங்கம்தான்!

      நீக்கு
    2. சீக்ரமேவ புளியோதர ப்ரஸாத பிராப்தி ரஸ்து!...

      நீக்கு
    3. கீதாக்கா..ஹா ஹா ஹா நானும் ஸ்ரீராமைக் கலாய்க்க நினைத்தேன் ஆனா பாருங்க மீயும் அப்படித்தான். அதனால அவரை கலாய்க்க முடியலை ஹிஹிஹிஹி

      ஸ்ரீராம் நான் இரு முறை ஆஞ்சு புளியோதரை சாப்பிட்டுருக்கேனே! ஹெ ஹெ ஹெ ஹெ!!! அங்கு வழங்கப்படும் எல்லா பிரசாதமும் சாப்பிட்டுருக்கேன் இப்ப புதுசா ஏதேனும் வந்திருக்கா தெரியலை. புயோ, மிபொ, வெபொ, சபொ, எசா, தசா...கறுப்பு க்டலை சுண்டள் கூடவே! இது தவிர வேறு ஏதேனும் இருக்கானு தெரியலை...

      நானும் கோயிலுக்குப் போனால் என்ன பிரசாதம்னு பார்க்கும் ஆர்வம் உண்டு...ரொம்பவே!!

      கீதா

      நீக்கு
    4. //சீக்ரமேவ புளியோதர ப்ரஸாத பிராப்தி ரஸ்து!...//

      அதாவது ஆஞ்சநேயர் கோவில் புளியோதரை!

      நீக்கு
    5. சில கோவில்களில் பிரசாதங்கள் விபூதி, குங்குமம் வாசனை அடிக்கும் அது எனக்குப் பிடிக்காது கீதா!

      நீக்கு
  8. அந்த ஆம்புலன்ஸ் பையர் கால் சீக்கிரம் குணமாகப் பிரார்த்தனைகள். இஃகி, இஃகி, ஜிவாஜி முருகன் வேஷத்தில் வந்திருக்கார் போல இருக்கே! அதான் நிஜ முருகன் கோவிச்சுண்டு ஓடறாரோ? :)))))) நேத்திக்கு, நேத்திக்கா? தெரியலை. ஒருத்தர் ஜிவாஜி நடிப்பை அலசோ அலசுனு அலசி இந்த மாதிரி நடிகர் இனிப் பிறக்க மாட்டார்னு சொல்லி இருந்தார். சிப்புச் சிப்பா வந்தது. :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவாஜி என்றதும் நினைவுக்கு வருகிறது... கீதா அக்கா... நீங்கள் கொடுத்த டாஸ்க்கை சமர்த்தா நான் முகநூலில் செய்து கொண்டிருக்கிறேன். வந்து பார்க்கவே இல்லை நீங்கள்! ஆமாம், அது ஒரு வாரமா, பத்து நாட்களா?

      நீக்கு
    2. பத்து நாட்கள்னு சொன்ன நினைவு. நான் ஆறு போட்டேன். இப்போ 4 நாட்களா இணையத்துக்கு வர முடியலை. அலைபேசி மூலம் முகநூலை அவ்வப்போது ஒரு பார்வை பார்ப்பதோடு சரி.

      நீக்கு
    3. சரிதான்.. நீங்களே 4 பாக்கியா?

      நீக்கு
  9. காலையில் பார்த்த முதல் முருகனும் கடைசி முருகன் படமும் மிக அழகு.

    ஆஞ்சநேயர் தரிசனம் நல்லா அமைந்ததான்னு சொல்லலை. எழுதியிருக்கற விஷயங்களைப் பார்த்தால் ஆஞ்சநேயர் கோவிலிலிருந்து பொடி நடையா உங்கள் வீட்டுக்குப் போயிருப்பீர்கள் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஞ்சநேயருக்கென்ன நெல்லை.. விஸ்வரூபமா அங்கே நின்று தரிசனம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். முன்னால் நிற்பவர் யாராலும் மறைக்க முடியாத உருவம்!

      நீக்கு
    2. ஆஞ்சி ,உங்களைக் கூப்பிட்டுக் கொடுப்பார் பாருங்கள்.
      புளியோதரை கொடுக்கச் சொல்லி தந்தி அனுப்பறேன் அவருக்கு.

      அச்சோ பாவம், அந்த இளைஞர் நல்ல படியாக் குணமாகணும்.
      மீண்டும் வரேன்.

      நீக்கு
    3. ஸ்ரீராம்... அப்படி ஆஞ்சநேயர் தரிசனம் கொடுத்தும், சென்றமுறை உங்கள் கண்கள் வேறு எங்கோ சென்றன என்று எழுதியிருந்த ஞாபகம். ஹாஹா

      நீக்கு
    4. ஸ்ரீராம் எனக்கு நங்கநல்லூர், நாமக்கல், சுசீந்திரம், பஞ்சவடி ஆஞ்சனேயர் கோயில் (பாண்டிச்சேரி அருகே) இங்கெல்லாம் பிடித்த விஷயமே ஆஞ்சுவை யாரும் மறைக்க முடியாது. மசூதித் தெரு ஆஞ்சு கூட வெளியில் நின்றாலே நன்றாகத் தெரிவார் என்றாலும் அர்ச்சகர் மாமாக்கள், பக்தர்கள் எல்லோரும் மறைப்பார்கள்.

      கீதா

      நீக்கு
    5. விடியல் நோக்கி அனைவரும் பறக்கிறோம். அருமையான படம்.

      சிவாஜியின் எல்லா படங்களையும் விட,
      தங்கப்பதக்கம், கட்டபொம்மன் அதீதமாகப் பிடிக்கும்.

      நீக்கு
    6. கண்கள் எங்கே சென்றன என்று நினைவில்லையே நெல்லை!

      ஆமாம் கீதா.. ஒரு பஞ்சமுக ஆஞ்சநேயர் கூட பார்த்தேன். எந்த ஊர்னு நினைவில்லை.

      நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  10. பல பிரச்சனைக்கு முதல் காரணமே 'எதிர்ப்பார்ப்பு' தானே முருகா...?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்க்கையே இல்லையே முருகா...!!

      நீக்கு
  11. காலை வணக்கம் ஸ்ரீராம்.

    புளியோதரை - பிரசாதமாக - ஆஹா ஆனந்தம்! ஒரு சில சமயங்களில் இன்னும் கொஞ்சம் தர மாட்டார்களா என்ற சுவையோடு பிரசாதம் இருப்பதுண்டு. ஒரு கோவிலில் ஒரு ஸ்பூன் அளவு பிரசாதம் கொடுத்தபோது சரியான கஞ்சனாக இருப்பார் போல என பிரசாதம் கொடுத்தவரை எண்ணியிருக்கிறேன்! ஹாஹா.... பிரசாதம் பிரதானமாக இருக்கிறது பலருக்கும்! கடவுள் நமக்குள்ளேயே இருக்கிறார் - நாம் சாப்பிடுவதும் அவருக்குத்தானே! :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்... இங்கு ஆரம்பத்தில் தட்டு நிறைய ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்களாம் (புளியோதரை இல்லாட்டா தயிர்சாதம்). பரமாச்சார்யார், பிரசாதம்னா மிகக் கொஞ்சம்தான் கொடுக்கணும், நீயே புரிஞ்சுப்பாய் என்றாராம். அப்புறம் ஒரு சில பக்தர்கள், தயிர்சாதம்னா தொட்டுக்க ஊறுகாயோ இல்லைனா புளியோதரைக்கு வடகம் கொடுத்தால் நல்லா இருக்கும் என்று சொன்னபோதுதான் மேனேஜ்மெண்டின் மனதில் பதிந்ததாம். அப்புறம் அளவு குறைந்து இந்த நிலைக்கு வந்திருக்கு போலிருக்கு. இதை சமீபத்தில் படித்தேன்.

      நீக்கு
    2. வெங்கட்ஜி அதானே!!!ஹையோ உங்க தத்துவக் கருத்தை மிக மிக ரசித்தேன்!!!! ரொம்பவே!

      கீதா

      நீக்கு
    3. // கடவுள் நமக்குள்ளும் இருக்கிறார்...//

      அடுத்த தடவை இதை பட்டரிடம் சொல்லி உம்மாச்சிதான் கேட்கிறார் என்று சொல்லி புளியோதரை கேட்டுப்பார்க்கணும்!

      நன்றி வெங்கட்.

      நீக்கு
    4. நெல்லை...

      //மகாபெரியவர் சொல்லி...//

      இந்த பிரசாத மேட்டரை நீங்களேதான் வேறெங்கோ சொல்லி இருந்தீர்கள் என்று நினைவு.

      நீக்கு
  12. ///இப்படிப் பட்டவருடைய வாரிசுகள்தான் இன்று அடுத்த வேளைச் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுகிறார்கள்///

    இதுதான் தமிழக மக்களின் புதிய தத்துவம்.

    கோடிக்கணக்கில் கொள்ளையடித்து சட்டப்படி சிறையில் இருக்கும் சசிகலா "தியாகத்தலைவியாம்" சுனாமி இனி இந்தோனிஷியாவுக்கு வரக்கூடாது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தேவகோட்டை ஜி. எங்க மகன் அங்க தான் இருக்கார்.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. வல்லிம்மா... உங்கள் மகன் இந்தோனேஷியாவில் இருக்கிறாரா?

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
    புளியோதரை எதிர்ப்பார்ப்பு, அனுமன் கோவிலில் பிள்ளையாருக்கு விளக்கு வியாபாரம் , ஹோமம் எதற்கு என்ற கேள்வி,
    எத்தனை எண்ணங்களை தாங்கி இருக்கிறது மனது?

    சற்று நேரம் நின்று எதற்காக ஒவ்வொரு சனிக்கிழமை அனுமன் தரிசனம் என்று அதை நினைத்து வழி பட்டு இருப்பீர்கள்.
    குழந்தைக்கு பிரசாதம் கொடுத்தால் என்ன? இன்னும் 500, 1000 பக்தர்களுக்கு பிரசாதம் இருக்கும் போது குழந்தைக்கு கொடுக்காமல் இருக்கிறார்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எத்தனை எண்ணங்களை தாங்கி இருக்கிறது மனது?//

      வாகனத்துடன் அதன் வேகத்துக்கு இணையாக ஓடிய மனது!

      //சற்று நேரம் நின்று எதற்காக ஒவ்வொரு சனிக்கிழமை //

      அது ஒரு கதை கோமதி அக்கா. எங்கள் ஆஸ்தான ஆட்டோக்காரர் அவருக்கு 7 வாரவேண்டுதல் என்று ஆஞ்சநேயர் கோவில் செல்வதாகவும் நீங்களும் வருகிறீர்களா என்று கேட்டார், சில மாதங்கள் முன்பு. அப்போதிலிருந்து தொடர்ந்து சென்று வருகிறோம். பாஸ் செல்வதால் நானும் உடன் செல்கிறேன்!

      நீக்கு
  14. 'நாட்டு சுதந்திரத்துக்காகப் போராட வேண்டியது என் கடமை. அதற்கு எந்தப் பிரதிபலனும் வேண்டாம்' என்று சொல்லி விட்டார்.//

    எப்பேர்பட்ட மனிதர்! வணக்கங்க்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரீடர்ஸ் டைஜஸ்ட் போல தமிழில் மஞ்சரியைக் கொண்டு வந்தவர் கோமதி அக்கா. அவர் பிடித்திருந்தது 4 ஆம் வகுப்பு வரைதானாம்.

      நீக்கு
  15. என்னாச்சு ஶ்ரீராம்? மலைக்குச் செல்ல மாலை போட்டுக்கொண்டிருக்கிறீர்களா? ஒரே உம்மாச்சி படங்களாக போட்டிருக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலைக்கா? மாலையா? நானா? பழக்கமே இல்லை பானு அக்கா.. முருகன் கமெண்ட் அடிக்க வந்திருக்கார்!

      நீக்கு
  16. ஆஞ்சநேயர் கோவிலில் ஆரம்பித்து ஆம்புலன்ஸில் முடித்திருக்கும் அனுபவங்கள் சிறப்பு.
    எனக்கு என்னவோ புளியோரையை விட பொங்கல்தான் பிடிக்கும். அடுத்த வாரம் வெர்சுவல் பொங்கலாவது போடுங்கள்.
    கவிதை அழகா? அதற்கான படம் அழகா?
    நகைச்சுவையைப் பற்றி தி.ஜ.ரா கூறியிருப்பது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொங்கல் படமா? அடுத்த முறை பொங்கல் வாங்கியதும் வெளியே வந்து போட்டோ எடுத்து விடுகிறேன்!

      நீக்கு
  17. ஆஞ்சநேயர் கோயிலில் தொடங்கி பல்சுவைத் தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  18. சிவாஜி பற்றி நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  19. இருங்க வரேன் ஆஞ்சு படிச்சாச்சு...அதுக்குள்ள கீதாக்காவோட தககளித் தொக்கு ஆறிப் போச்சு...மிஸ் பண்ணிட்டேன் இப்ப ஃப்ரிட்ஜுக்குள்ள இருக்கும் எடுத்து சாப்பிட்டுப் போட்டு வரேன்...!!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. ஸ்ரீராம் நங்கநல்லூர் ஆஞ்சுவை நானும் சமீபத்தில் போய் பார்த்துவிட்டு வந்தேன். கிண்டியில் கூட இருக்கிறார் தெரியுமோ ஆனால் நங்கநல்லூர் ஆஞ்சுவிற்கு ஜஸ்ட் ஆப்போசிட் உருவம். குட்டியாய் ஆனா என்ன அழகு தெரியுமோ!! ஹையோ பார்த்துக் கொண்டே இருக்கலாம். அத்தனை அழகு. கூட்டம் துளி கூடக் கிடையாது. அருமையா தரிசனம் செய்யலாம். மிக மிக மிக மிகச் சின்ன கோயில் மிகப் பழமையான கோயில். வியாசராயரால் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட ஆஞ்சு! என்று அங்கு சொல்லப்பட்டிருக்கு. இந்து அற நிலையத்துறையின் கீழ்தான் வருகிறது. ஆனா ஒன்னே ஒன்னு பிரசாதம் கிடைக்காது...ஹிஹிஹிஹி...மாலை 5 மணிக்குத் திறக்கறாங்க. காலை 6 மணிக்குத் திறக்கறாங்க. அழகு ஆஞ்சு! குட்டி அஞ்சு தூக்கி வைத்துக் கொண்டுவிடலாம்னு நினைக்க வைக்கும் அளவு ஆஞ்சு.!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே... நங்கநல்லூர் போயவந்தீங்களா கீதா? கிண்டி ஆஞ்சி நான் பார்த்ததில்லை. கேள்விப்பட்டிருக்கிறேன்.

      நீக்கு
  21. என்ன இது ஆரம்பமே கிளவி சே சே ஆஞ்சநேயர் என்றதுமே டங்கு ஸ்லிப்பாகுதே கர்ர்:) ஆரம்பமே கேள்வி கேட்க வச்சிட்டார் ஸ்ரீராம்.. தொன்னை என்றால் என்ன? ஒரு அளவுகோலா?..

    அது என்னமோ தெரியவில்லை, கோயிலுக்குள் போனாலே அந்த தீபம் மணி ஓசை சாப்பிராணி பார்த்ததும் ஒரு வித மெய்சிலிப்பு.. பக்தி தானா வந்திடுது.. அதனால அங்கு அவர்கள் என்ன சொன்னாலும் அப்போது அது சரி எனவே படுது... பணமெல்லாம் பார்க்கக்கூடாது எனும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுவதுபோல உணர்ந்திருக்கிறேன்ன்.. அதனால லெவ்ட்டு ரைட்டு என உண்டியலுக்குள்ளும்.. அர்ச்சனைக்கும்.. நன்கொடைக்கும் குடுத்திடவே மனம் தூண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொன்னை என்றால் இலையை அளவாக சிறிதாக நறுக்கி, ஓரங்களை மடித்து கிண்ணம் போன்ற அமைப்பில் உருவாக்குவது அதிரா.

      நீக்கு
    2. அதில் தான் முந்தி திருமணங்களில் பாயசம் தருவாங்க :)

      நீக்கு
    3. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88

      நீக்கு
  22. பாவம் அந்தப் பையன். அவருக்குக் கால் குணமாகிடட்டும்.

    திஜர வாழ்க்கை மனதைக் கலக்கிவிட்டது ஸ்ரீராம். பாவம் ஆனால் என்ன மேன்மையான மனிதர்!! அவரது பேத்திக்கு - நீங்கள் இங்கு சொல்லியிருப்பதுதான் - உதவி வேண்டி ஜெமோ தளத்தில் கூடப் பார்த்தேன். அது 2013....

    உங்கள் குடும்பத்தார், அப்பா எல்லோரும் அவருக்கு உதவியது குறித்து மனம் மகிழ்ந்தது, நெகிழ்ந்தது. நல்ல விஷயம்! நல்ல மனது. வாழ்த்துகள் பாராட்டுகள் ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாவம் அந்தப் பையன். அவருக்குக் கால் குணமாகிடட்டும்.//

      கீதா... உங்களுக்கு சொல்லி விட்டேன்!

      நீக்கு
  23. உணவு விசயத்தில் எங்கு சென்றாலும் நம் மக்கள் ஒரே மாதிரித்தான், ஆனா இங்கெல்லாம் தாராளமாகச் சமைப்பார்கள்.. பெட்டிகளில் போட்டு போட்டு எடுத்துப் போகலாம்.. பல நாட்கள் மிஞ்சியே இருக்கும்.. ஆனா இப்படி விசேட நாட்களில் முடிஞ்சு போயிடும்தான், அதுக்காக தர முடியாது என்றெல்லாம் சொல்லி நான் பார்த்ததில்லை, ஏனெனில் இங்கு பெரும்பாலும் செல்ஃப் சேவிங்தான், கியூவில நிண்டு நாமே எடுத்துப் போவது...

    இருக்கும் வரை எடுக்கலாம் முடிஞ்சிட்டால் பின்னே வருவோருக்கு கிடைக்காது அவ்ளோதான். ஆனா ஓரளவு சனம் வருமென தெரிஞ்சு அதன்படி சமைப்பார்கள் தாராளமாக என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஊரில் அப்படி வழக்கமா அதிரா? ஆனால் எல்லாக் கோவில்களிலும் பிரசாதம் சாப்பிட ஏதுவாக இருக்காது.

      நீக்கு
  24. சிவாஜி வேஷம் நடிப்பு குறித்து கேள்வி எழுப்பிவிட்டு முருகன் கேட்பது செம!!! சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்....

    அந்த முருகனும் அழகோ அழகு! பின்னே முருகன் என்றாலே அழகுதானே!

    ஆஞ்சுவைப் பற்றிய பதிவுக்கு முருகன் சொல்லும் கமென்ட் ஜூப்பர்!! ஹா ஹா ஹா ஹா ஆ மிகவும் ரசித்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுளை பார்க்கச் சொன்னா கமெண்ட்தானே கீதா? நன்றி.

      நீக்கு
  25. அஸ்தமன படம் அழகு! அந்தப் பறவைகளும்..கவிதையை மிகவும் ரசித்தேன் ஸ்ரீராம். ஹப்பா உங்களுக்கு செமையா எழுத வருது..

    அதுக்கு நீல எழுத்துகளில் இருக்கும் கருத்தும் அதே அதே...அஸ்தமனமும் அழகுதான் பின்னே இரவின் தனிமை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

    எல்லாம் அழகு ரசித்தேன் ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஸ்தமன அழகை ரசித்ததற்கும், கவிதையை பாராட்டியதற்கும் நன்றி கீதா.

      நீக்கு
  26. நீங்க அம்புலன்ஸ் என்றதும் எனக்கொரு பழைய ஞாபகம் வந்திட்டுது.

    எங்கும் ஒரு ரூல்ஸ் உண்டுதானே.. அதாவது அம்பியூலன்ஸ் லைட் போட்டபடி வந்தாலோ இல்லை குயிக்க்க் க்யிக்க் க்குயுக்க் என, சும்மா போவோருக்குக் ஹார்ட் அட்டாக் வரும்படி சவுண்ட்டுடன் வந்தாலோ.. வாகனம் ஓட்டுவோர்ர்... உடனே சைட் சிக்னலைப் போட்டு விட்டு காரை நிறுத்திட வேண்டும்... அப்போது ரோட் ரூல்ஸ் எதுவும் பார்க்கக்கூடாது லெவ்ட்டூ ரைட்டூ, டபிள் லைன், யெல்லோ லைன் என எங்காயினும் நிறுத்திடோணும்...

    அப்போ அம்புலன்ஸ்காரர்கள் பூந்து பூந்து வெட்டி எடுத்து ஓடுவார்கள்... இப்படி இருக்கும்போது, இங்கு பிரித்தானியாவில் வன்வே ரோட்டுக்கள் அதிகம், ஏனெனில் ஆதிகாலத்தில் குதிரையில்தானே அரசர்கள் அதிகம் பயணம் செய்வார்கள்.. அப்படி ரோட்டுக்கள் பலது சைட்டாலும் அகட்ட முடியாது மலைபோல அல்லது பெருஞ் சுவர்கள் இருக்கும் என்பதனால் ஒரு கார் மட்டுமே போக முடியும்.. அங்காங்கு சைட் பண்ணி கொஞ்சம் இடைவெளி குடுக்கலாம் முந்த... இப்படியான ரோட்டெல்லாம் வன்வே சிஸ்டமாக்கி விட்டிருக்கிறார்கள்.

    அப்போ ஒருநாள் இந்த வன்வே ரோட்டில் நான் பாட்டுப் போட்டுக் கேட்டபடி தனியே காரில் வந்து கொண்டிருந்தேன்... திடீரெனப் பார்க்கிறேன்ன் முன்னால போகும் காரெல்லாம் பொத்துப் பொத்தென சிக்னலைப் போட்டு சைட் பண்ணி நிற்கிறார்கள்... எனக்கு ஒரே குஷி.. ஏதோ எனக்காக ஒதுங்கிப் பாதை விடுவதைப்போல இருந்துது.. நான் அடிச்சுப் பிடிச்சு ஓடிக்கொண்டிருந்தேன்...

    முசுப்பாத்தி என்ன வென்றால், பின்னாலே ஒரு அம்புலன்ஸ் சயரின் போடாமல் வெறும் லைட்டை மட்டும் போட்டபடி வந்துகொண்டிருக்கு.. அது என் கண்ணுக்கு தெரியவில்லை, கண்ணாடியில் காட்டும்தானே, ஆனா நான் தான் பாட்டில் மூழ்கி இருந்தேனே... ஏன் முன் கார்கள் நிறுத்துகிறார்கள் எனக்கூட சிந்திக்கவில்லை ஹா ஹா ஹா..

    அப்போ பின்னாலே கிட்ட வந்துவிட்ட அம்புலன்ஸ் ட்ரைவருக்கு பொறுக்க முடியவில்லை.. உடனே போட்டார் பாருங்கோ சயரினை.. அது ஹார்ட் அட்டாக் வந்ததுபோல இருந்துது.. ஹையோ பனையால விழுந்தவர்போல திடுக்கிட்டு, சைட்டுக்கு வெட்டினேன் பாருங்கோ ஒரு வெட்டு:)) ஹா ஹா ஹா என்னால அதை மறக்கவே முடியாது.. அதன் பின்பு இப்போ வலு கவனம்.. அடிபட்டால்தானே அனுபவம் வருது:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா...

      எங்கள் ஊரில் என்ன செய்வார்கள் தெரியுமா? முதலில் இடம்விட்டு சாலையில் இடமிருக்காது. மெல்ல அப்படியே ஒதுங்கி வழி விடுவார்கள் சிலர். சில இரண்டு சக்கர வாகனக்காரர்கள் என்ன செய்வார்கள் என்றால் அந்த ஆம்புலன்ஸ் பின்னாலேயே வேகமாக விரைவார்கள். மற்றவர்கள் ஆம்புலன்சுக்கு வழி விடுவதால் அதன் பின்னால் சென்றால் இவர்களுக்கும் வழி கிடைக்கும் அல்லவா? கடுப்பு வரும்!

      நீக்கு
  27. //இந்தியா சுதந்திரமடைந்ததும், தியாகிகளுக்கான 5 ஏக்கர் நிலத்தையோ, மாதாந்திர கவுரவ ஊதியத்தையோ பெற மறுத்து விட்டார். 'நாட்டு சுதந்திரத்துக்காகப் போராட வேண்டியது என் கடமை. அதற்கு எந்தப் பிரதிபலனும் வேண்டாம்' என்று சொல்லி விட்டார்."//

    இது என் அறிவுப்படி தப்பென்றே சொல்லுவேன்.. “கடவுளையும் கும்பிடு, மருந்தையும் சாப்பிடு” என்பதைப்போல, நாட்டுப்பற்றும் இருக்கோணும் அதே நேரம் குடும்பத்தின் வருங்காலத்தையும் யோசிக்கத்தானே வேண்டும், குடும்பம் இல்லாத தனிநபர் எனில் ஓகே... இது யாரையும் கொள்ளை அடிச்சு எடுக்கவில்லையே அரசாங்கம்தானே குடுக்குது...

    இதுபோலத்தான் என்னிடம் ஒரு லொட்றிக் கதை இருக்கு பின்பு சொல்கிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதும் சரி அதிரா. தியாகம் கொள்கை என்ற பெயரில் இது மாதிரி செய்திருக்க வேண்டாம் என்பது எனக்கும் சரி என்றே படுகிறது.

      லாட்டரிக் கதை சீக்கிரம் பதிவிடுங்கள்!

      நீக்கு
  28. சிவாஜி அங்கிள் கேள்வியில்.. கடசி இரண்டு கேள்வியில் வரும் படங்கள் நான் பார்க்கவில்லை.. திருவிளையாடல், கர்ணன்கூட ..குட்டிக் குட்டிக் கட்டங்களாகவே பார்த்திருக்கிறேன்ன்.. முழுப்படமாகப் பார்த்ததில்லை...

    //என் வேஷத்தில் அவர் வந்ததில்லை இல்லையா?///

    ஆஆஆஆஆஆ முதன் முதலா கிட்னியை ஊஸ் பண்ணி ஸ்ரீராம் ஒரு கேள்வி கேட்டிட்டார்ர்:) அதானே முருகனாக நடிக்கவில்லையே அவர்.. வள்ளி தெய்வானைக்கு எங்கே போவதென நினைச்சோ.. ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவாஜி படங்களில் நிறைய படங்கள் நான் பார்த்ததில்லை அதிரா. ஆனால் இங்கு சொல்லி இருக்கும் படங்கள் பார்த்திருக்கிறேன்!

      நீக்கு
  29. ஹா ஹா ஹா அஸ்தமனமெனில் எதுக்கு அவ்ளோ பயம்? .. கவிதை அழகு. படம் நீங்கள் எடுத்ததில்லையே?..

    மிஸ்டர் அண்ட் மிஸிஸ்.சிவன் குடும்பமே எங்கள் புளொக்கிலதான் இருக்கினம்போல:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையத்திலிருந்து எடுத்த படம் அதிரா. நான் எடுத்த புகைப்படமல்ல.

      நீக்கு
  30. விறுவிறுப்பான பதிவு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  31. மாருதி ஆம்புலன்ஸில் வந்த பையன் உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.
    அஸ்தமன படம் கவிதை நன்றாக இருக்கிறது.
    சிவாஜி நடித்த படங்கள் எல்லாம் பார்த்து இருக்கிறேன்.
    முருகன் படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாருதி ஆம்புலன்சில் வந்த பையனும் குடும்பமும் அந்த ஆம்புலன்ஸ் டிரைவரும் செய்தது சரியல்ல என்பது என் கருத்து கோமதி அக்கா.

      நீக்கு
  32. மாளயபட்சம்//
    அப்படின்னா ?
    பொங்கல் இனிப்பா இல்லை வெண் பொங்கல் கிடைக்குமா ?
    கடவுள் உணவிலும் இருப்பார் :)
    ஆம்புலன்ஸ் இளைஞரை பார்த்தீங்க சரி மனதுக்குள்ளே வேண்டினீங்களா ? கடவுளே என்ன பிரச்சினையோ அவருக்கு தீர்த்து வையும்ன்னு .
    மந்தைவெளி சிலேட் சம்பவம் முகப்புத்தகத்தில் படித்த நினைவிருக்கு .
    எனக்கு முதல் மாறியதய் சிவாஜி அங்கிளைத்தான் பிடிக்கும் .

    அஸ்தமன படம் அட்டகாசமா இருக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மாளயபட்சம்//
      அப்படின்னா ? //

      இந்தக் கேள்வியை கீதா அக்காவுக்கு பாஸ் செய்கிறேன் ஏஞ்சல்...

      //பொங்கல் இனிப்பா இல்லை வெண் பொங்கல் கிடைக்குமா ?//

      இங்கு எப்போதும் வெண்பொங்கல்தான்.

      //மந்தைவெளி சிலேட் சம்பவம் முகப்புத்தகத்தில் படித்த நினைவிருக்கு .//

      ஆமாம், அங்கு பகிர்ந்திருந்தேன்.

      நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
  33. @ கீதா: //தககளித் தொக்கு ஆறிப் போச்சு...//

    நீங்கள் கதகளி பார்த்துவிட்டுவருகிறீர்கள் என்பதை நேரிடையாகவே சொல்லாம்..

    பதிலளிநீக்கு
  34. @ஏஞ்சல்: புரட்டாசி மாத பௌர்ணமி முதல் அமாவாசை வரை உள்ள காலம் மஹாளய பட்சம்(மாளய பட்சம்) எனப்படுகிரது. அந்த காலத்தில் இறந்து போன நம் முன்னோர்கள் அதாவது பிதுர்க்கள் தன் சந்ததியினரைப் பார்க்க பூமிக்கு இறங்கி வருவதாக நம்பிக்கை. எனவே அந்த பதினைந்து நாட்களும் தினமும் பிதுர்க்களுக்காக தர்ப்பணம் செய்பவர்கள் உண்டு. தின்மும் செய்யாவிட்டாலும், நம் முன்னோர்கள் இறந்த திதி அன்றோ, அஷ்டமி அன்றோ, மஹா பரணி நாளன்றோ, முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் நீத்தார் கடன் செய்ய வேண்டிய நாட்கள். ஆகவே இந்த பதினைந்து நாட்களும் வெளியிடங்களில் சாப்பிட மாட்டோம், வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய் போன்றவை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டோம்.
    ஊசிக்குறிப்பு: கீதா அக்காவிற்குத்தானே ஃபார்வர்ட் பண்ணியிருக்கிறார், இவள் ஏன் பதில் சொல்கிறாள்? என்று நினைக்க வேண்டாம். அவங்களுக்குப் பிறகு என்னைத்தான் அக்கா என்று எல்லோரும் அழைக்கிறீர்கள். அவங்க அக்கா, நான் சின்ன அக்கா. "அக்கா மாதிரி விளக்கம் கொடுத்தா அக்காவாய்டுவாயா நீ?" என்று யாரும் கேட்கமாட்டீர்கள் என்று ஒரு நம்பிக்கை. ஹி ஹி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ! அழகா விளக்கி சொன்னதுக்கு தேங்க்ஸ் பானுக்கா ,

      நீக்கு
  35. தெய்வ மகன் இரண்டாவது மகனை பிடிக்கவே பிடிக்காது. கோமாளி போல இருப்பார். அப்பா சிவாஜியைத்தான் பிடிக்கும்.
    கௌரவத்தில் ரஜினிகாந்த், கண்ணன் இருவரையுமே பிடிக்காது.
    படிக்காத மேதை, ராமன் எத்தனை ராமனடி இரண்டு படங்களுமே பார்த்ததில்லை
    அண்ணன் மட்டும் பாசமாக இருந்தால் போதுமா? தங்கையும் அதே அளவு பாசத்தை காட்ட வேண்டாமா? எனவே பாசமலருக்கு முதலிடம். தங்கைக்காக சிறு வயதில் பார்த்தது, சரியாக நினிவில் இல்லை.லட்சுமியும் நன்றாகத்தான் நடித்திருப்பார் என்ற நம்பிக்கையில் தங்கைக்காக படத்திற்கு இரண்டாம் இடம்.
    சம்பூர்ண ராமாயணம் பார்த்ததில்லை. சிவன், கர்ணன் இருவரில் சூர்ய புத்திரனுக்கு என் ஓட்டு.
    ஒரு முறை தான் நடித்த படங்களைப் பற்றி சுருக்கமாக கருத்து கூறிய சிவாஜி தங்கச் சுரங்கம் படத்தைப் பற்றி," நான் சி.ஐ.டி யாம், ஹா ஹா ஹா" என்று கூரியிருந்தார். அவரே அப்படி கூரி விட்ட பின், நாம் என்ன சொல்வது? வைர நெஞ்சம் ஏதொ ஆங்கிலப் படத்தின் மோசமான காப்பி. அந்த படம் பார்த்தால் ஸ்ரீதர் மீது நமக்கிருக்கும் மரியாதை போய் விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள்.. மன்னிக்கவும்.

      நீக்கு
    2. இரண்டு பின்னூட்டத்துக்கும் ஒரே பதில் பானு அக்கா...

      கலக்கிட்டீங்க...

      நீக்கு
  36. சென்னையில் சில இடங்களில் ஆஞ்சிக்கு தேங்காய்மாலை சார்த்தினால் எண்ணியது நடக்கும் என்கிறார்களே

    பதிலளிநீக்கு
  37. சீக்கிரமே ஒரு மாலைவேளையில் கோவிலுக்குச் சென்று புளியோதரையை சுவைக்க ஆஞ்சநேயர் அருள் பாலிக்கட்டும்!

    தி ஜ ர அவர்களைப் பற்றிய பகிர்வு நெகிழ்வு.

    ஞானப்பழம் வேண்டும் முருகரைக் காணும் போதெல்லாம் நான் பள்ளி நாடகத்தில் முருகராக நடித்தது நினைவுக்கு வரும்.

    விடியலை வேண்டும் வரிகள் நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!