வெள்ளி, 9 நவம்பர், 2018

வெள்ளி வீடியோ 181026 : யாரை இதில் குற்றம் சொல்வது விதியின்வழி வாழ்க்கை செல்வது


ஒரு விடுகதை ஒரு தொடர்கதை.  1979 இல் வெளிவந்த படம்.  



எம் ஏ காஜா இயக்கத்தில், கங்கை அமரன் இசையில் வெளிவந்த இந்தப் படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் பிடிக்கும்.  ரொம்பவே பிடிக்கும் என்று முன்னரே சொல்லியிருந்தேன். 



இரண்டு பாடல்களில் ஒரு பாடலை முன்னர் பகிர்ந்து விட்டேன்.  இது இரண்டாவது பாடல்.



தடம் மாறும் மனைவி பற்றிச் சொல்லும் பாடல்.  கே ஜே யேசுதாஸ் குரலும், எஸ் ஜானகி குரலும் இனிமை.   வரிகளும்.



நாயகன் அவன் ஒரு புறம்  அவன் விழியில் மனைவி அழகு நாயகி அவள் மறுபுறம் அவள் வானில் இரண்டு நிலவு  நாயகன் அவன் ஒரு புறம்  அவன் விழியில் மனைவி அழகு . பூஜைக்கொரு புஷ்பம் வந்தது புனிதம் என்று பேரைக் கொண்டது தெய்வம் அதைச் சூடிக் கொண்டது மாலையென தோளில் கொண்டது பூவில் உள்ள தேனைக்கண்டு  ஒரு சோலை வண்டு அதை திருடிச்சென்றது தலைவன் ஒரு கோயிலில் - அவன் தேவியோ தெரு வாசலில் . . மானிடத்தில் மோகம் வந்தது சீதைக்கதில் சோகம் வந்தது யாரை இதில் குற்றம் சொல்வது விதியின்வழி வாழ்க்கை செல்வது போட்டு வைத்த கோடு தாண்டி - தன் வீடு தாண்டி அன்னப்பேடு சென்றது மணக்கும் வரை பூக்கடை மணம் மாறினால் அது சாக்கடை .



.

44 கருத்துகள்:

  1. இனியதாய் மலரட்டும் வெள்ளி! காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா, தொடர்ந்து வரும் எல்லோருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீராம் இது ஃபேமஸ் பாட்டா...ஹா ஹா ஹா எதுக்கு கேக்கறேன்னு தெரியுதா!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்... இது பேமஸ் பாட்டுதான். இது கங்கை அமரன் எழுதிய பாட்டா?

      நீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  4. பாட்டு அப்புறம் தான் கேட்க முடியும்...

    என்ன பாடல் என்று யோசிக்கிறேன்....அதாவது மெட்டை...படம் எல்லாம் இப்பத்தானே தெரிய வருது...மட்டுமல்ல இப்ப வாசித்தாலும் முழு தகவலும் மண்டையில் பதிய மறுக்கிறது....ஹூம் என்ன சொல்ல...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்புறமா கேட்டு என்ன ராகம்னு சொல்லுங்க... மோகனம்னு மட்டும் சொல்லிடாதீங்க!

      நீக்கு
    2. மோகனம்னு மட்டும் சொல்லிடாதீங்க!//

      ஹா அஹ ஹா ஹா ஏன் ஸ்ரீராம் ஏதேனும் போட்டியா...பெட் கட்டியிருக்கீங்களா...

      போன வாரத்தைப் போல இந்தப் பாட்டும் வலஜி/வலச்சி ராகத்தை பேஸ் செய்ததுதான் ஸ்ரீராம்...சென்ற வாரப்பாட்டும் வலஜி யை பேஸ் செய்ததுதான் என்றாலும் வேறு ஸ்டைல்...இதுல கர்நாட்டிக் ஸ்டைல்..

      அருமையான பாட்டு....நிறைய கேட்டிருக்கேன் ஸ்ரீராம்...பிடித்த பாடலும் கூட...சென்ற வாரம் எஸ் பி பிக்கு ஏற்ற பாடல்...அந்த வலஜி பேஸ்.....இது தாஸேட்டனுக்கு ஏற்ற பாடல் இவர் ஸ்டைல் வலஜி

      கீதா

      நீக்கு
  5. காலையில் இம்மாதிரி துரோகம் செய்தவங்களைப் பத்திப் படிக்க மனசு இன்னும் தயாராகவில்லை. நேற்றைய பதிவின் தாக்கம்! :))))) இருந்தாலும் பதிவுனு மனசைத் தேத்திக்க வேண்டியது தான்! :))))

    @ஸ்ரீராம், ஆண்டாள் பார்க்க வந்தீங்களோ? தெரியலை, போய்ப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதாக்கா.. என் கமெண்ட் வெளியிட்டிருக்கீங்களே...

      நீக்கு
    2. கீசா மேடம்... ஏன் "துரோகம்" என்ற பெரிய வார்த்தைகளை உபயோகப்படுத்தறீங்க? உச்ச நீதி மன்றமே ஆராய்ந்து இதுவரை நடத்ததுதான் தவறு என்று தீர்ப்புச் சொல்லியிருக்காங்க. தீர்ப்புக்கு மாறா கருத்து வச்சிக்காதீங்க. இக்கி இக்கி இக்கி....

      நீக்கு
  6. சுட்டிக்குப் போய் அந்தப் பாட்டையும் பார்த்து வைத்துக் கொண்டேன் பதிவு நினைவு இருக்குது...பாடல்தான்....

    அடிக்கடி கேட்க முடியாததால் இருக்கலாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. நீங்களே சொல்லி விட்டீர்கள்
    யரை குற்றம் சொல்வது?
    விதிவழி வாழ்க்கைதான்.
    பாடலை கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    79இல் இது போலப் படங்கள் வந்ததா. சம்சாரத்தில் மூழ்கிப் பல படங்கள் பார்க்க விட்டுப்
    போச்சு. ரசிக்க முடியவில்லையே ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... ஏன்மா பாடலை ரசிக்க முடியவில்லையா? காட்சியை மறந்து விடுங்கள். யேசுதாஸ் குரலை, டியூனை ரசியுங்கள்.

      நீக்கு
  10. அருமையான பாடல். ரசிக்கும்படியான படம்.

    பதிலளிநீக்கு
  11. பலமுறை ரசித்து கேட்டபாடல்...
    இயக்குனர் எம்.ஏ.காஜா நிறைய படங்களை விஜயனை வைத்து இயக்கியவர் இளவயதிலேயே காலமாகி விட்டார் என்று தகவல்... உண்மையா ?

    பதிலளிநீக்கு
  12. // வீடு தாண்டி அன்னப்பேடு சென்றது..//

    பறவைகளில்
    அன்னம், மயில், கிளி, புறா, சிட்டு - இவை எல்லாம் கற்பு நெறியில் வாழக்கூடியவை என்பார்கள்...

    சேவல் - மூன்று, நான்கு என இணை சேர்த்துக் கொள்ளும்.. ஆனால்,
    அடுத்த சேவலை தனது வட்டத்துக்குள் விடாது...

    சேவல் சீவல் ஆகும் வரை அடுத்த சேவலுக்கு அங்கே வேலையில்லை...

    காக்கைகள் பகலில் கூடுவதில்லை...

    விலங்குகளில் நெறியுடன் வாழ்வது - நரி..

    இணையைப் பிரிந்தால் வேறொன்றைத் தேடுவதில்லை...

    ஐந்தறிவு எனப்படும் ஜீவன்களுக்குள்
    இன்னும் கூட இருக்கலாம்...

    ஆனால்,
    ஆறறிவுகள் தான் ஓரறிவுக்கும் கீழாயின..

    போதாக்குறைக்கு
    வைக்கோல் போரில் தீ வைத்த மாதிரி
    கள்ள உறவு தவறில்லை என்று சொல்லியாயிற்று...

    வேலி தாண்டும் வெள்ளாடுகளுக்குக் கவலையில்லை -
    கழுத்துக்குக் கத்தி வரும் வரை!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவ ராசிகளைப் பற்றிய தகவல்கள் சூப்பர் அண்ணா....

      கீதா

      நீக்கு
    2. நல்ல பின்னூட்டம் துரை செல்வராஜு சார்... இன்னொன்று சொல்ல விட்டுவிட்டீர்கள்... மனிதர்களைத் தவிர மற்ற பிராணிகளுக்கு கூடுவதற்கென்று சமயம், காலம் உண்டு...

      நீக்கு
    3. // மனிதர்களைத் தவிர...///

      அன்பின் நெ.த..
      நல்லதொரு சேதி சொன்னீர்கள்...

      காலையில் அந்த குறிப்பு நினைவில் வரவில்லை...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. மணம் மாறினால் அது சாக்கடை...
    மனம் மாறினால் அது சாக்கடை...

    பதிலளிநீக்கு
  14. @ துரை செல்வராஜு: //..பறவைகளில்அன்னம், மயில், கிளி, புறா, சிட்டு - இவை எல்லாம் கற்பு நெறியில் வாழக்கூடியவை என்பார்கள்...//

    புறாக்களின் தாம்பத்திய நெறியை/உறவு ஒழுங்கினை பால்கனி/டெர்ரஸ் என்று நான் கவனித்துவருகிறேன். அவைகளில் எளிமையான நேர்மை தெரிகிறது. உறவினில் நிம்மதி இருக்கிறது. கிளி,சிட்டு,காகம், நரி பற்றிய மேலதிகத் தகவல்கள் நன்றாயிருக்கின்றன.

    ஐந்தில் அமைதி இருக்கிறது. ஆறு சேறாகிவிட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறவைகளைக் கூர்ந்து நோக்குவதும் இனிமை...

      // ஆறு சேறாகி..//

      நயமாக இருக்கின்றது...

      நீக்கு
  15. இந்தப் பாடல் நிறைய முறை கேட்டிருக்கிறேன்,ஆனால் பொருள் கவனித்ததில்லை. விடுகதை, தொடர்கதை என்று வந்ததும் ஸ்ரீப்ரியா,நடித்த 'அவள் அப்படித்தான்' படம் என்று நினைத்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  16. நல்ல தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிரீர்கள் துரை செல்வராஜ் சார். நன்றி!
    @ கில்லர்ஜி: எம்.ஏ.காஜா ஒரு முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். உயிரோடுதான் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. ஸ்ரீராம் ஜி இப்பாடலை நிறைய கேட்டதுண்டு அப்போது இலங்கை வானிலி உபயத்தினால். படம் எல்லாம் பார்த்ததில்லை.

    நல்ல பாடல்.

    என் உடல் நலம் பரவாயில்லை. இருமல் மட்டும் இன்னும் நிற்கவில்லை. வகுப்புகளும் தொடர்ந்து இருக்கின்றன. கல்லூரியில் மொபைல் பயன்படுத்தல் ஆசிரியர்களுக்கும் சில விதிமுறைகள் இருக்கின்றன.

    வீடு வந்தால் வகுப்புகள் ப்ரிப்பரேஷன், வீட்டுப் பணிகள் என்று நேரம் போய்விடுகிறது பதிவுகள் பார்ப்பதற்கும், எழுதுவதற்கும் இப்போது கொஞ்சம் சிரம்மாகத்தான் இருந்து வருகிறது பாலக்காட்டில் இருந்தது போல் இல்லை..

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  18. எனக்குப் பாடலும்காட்சியும் பிடிக்க வில்லை

    பதிலளிநீக்கு
  19. இனிய பாடல் கேட்டு ரசித்தேன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!