புதன், 7 நவம்பர், 2018

புதன் 181107 நண்பருக்கு உண்டா சப்போர்ட்?


சென்ற வாரக் கேள்விக்கு, அலசி, ஆராய்ந்து, அழகாக பதில் எழுதிய 


நெல்லைத்தமிழன்
துரை செல்வராஜூ 
ஏஞ்சல் 
நிஷா  

ஆகியோருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். துரை செல்வராஜூ தன் பதில் மூலம் சிரிக்கவைத்துவிட்டார். 

ஏஞ்சல் :// "இதை ஆராய்ந்து பார்த்து எழுதியவர் யாராக இருக்கும் என்று யோசிப்பீர்களா?.....
ஹாஹா கண்டிப்பா கடலைப்போடும் ஜொள்ளுப்பார்ட்டி வேலை என்பதே என் கன்க்ளூஷன் // ("  ஐயோ .....  ஒரு ஆசிரியர் தலைதெறிக்க ஓடிகிட்டு இருக்கார்! ") 

நிஷா : // அழகான பெண்கள் எனும் வரையறைக்குள் எதை வைத்து கணிப்பிட்டீர்கள் எனும் எதிர் விவாதத்தினை ஆரம்பித்து வைத்து, அன்பில் அறிவில் தாய்மையில் தம் பிள்ளைக்கு பாதுகாப்பாக செல்லும் எல்லா பெண்களும் அழகானவர்களே என முடித்து வைப்பதோடு காரில் வருவோரை விட நடந்து வருவோர் இன்னும் அழகானவர்கள் எனவும் கூறி வைப்பேன். 

மற்றப்படி காலை நேரம் யார் எந்த காரில் எங்கே செல்கின்றார் என வெட்டியாக உட்கார்ந்து ஆராய்ச்சி செய்தவர்களுக்கு நோபமல் விருதுக்கா பரிந்துரைக்க முடியும்? // 

அந்த ஆசிரியர் இன்னும் வேகமாக ஓடுகிறார்! ..


கில்லர்ஜி :

வட்ட வடிவமாக வரும் புரோட்டாவை சதுரக்கல்லில் சுடுவதின் பின்னணி என்ன ? 

பரோட்டாவுக்கு முன்பாக சதுரக்கல் தோன்றிவிட்டது என்பதால் இருக்கலாம்.

புரோட்டாவைக் கண்டுபிடித்த விஞ்ஞானி 'மாத்தி யோசி' மன்னர் போலிருக்கு! 


அதிரா :

சந்திரன் ஏன் குளிருது? சூரியன் ஏன் சுடுது?   

 உஷ்ணமில்லாத ஒளியும் இருக்கும் என்று நமக்கு உணர்த்துவதற்காக சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்ததாகக் கொள்ளலாமா ?

நீங்க நினைக்கின்றது போல, சந்திரன் குளிர்ச்சி கிடையாது. அதனுடைய உச்சி வெயில் நேரத்தில், அதன் நிலப்பகுதி, 127 deg C வரை செல்லுமாம்! அங்கு பகல் நேரம் நம் கணக்கில் பதின்மூன்று நாட்கள். இரவு நேரம் மேலும்  பதின்மூன்று  நாட்கள். நடு இரவில், அதன் நிலப்பகுதியின் குளிர் நிலை, - (மைனஸ்) 173 Deg C. நிலவுக்கு ஆம்ஸ்ட்ராங் அங்கிளோடு அதிரா சென்றிருந்தால், பூமி ஏன் இவ்வளவு குளிருது என்று கேட்டிருப்பார்! பூமியின் சராசரி உஷ்ண நிலை பதினைந்து டிகிரி சென்டிகிரேட்! 

(சூரியனின் மேல் பரப்பு உஷ்ண நிலை : பதினைந்து மில்லியன் டிகிரி சென்டிகிரேடு! 15,000,000 Deg C) 



பெண்கள் மட்டுமேன் சாறி உடுக்கோணும் நம் கலாச்சாரத்தில:))? 

ஏன் என்றால் அதுதான் நம்ம கலாச்சாரம்.

அது ஒன்றுதான் - ஆண்கள் அணியாத உடை; பெண்கள் மட்டும் அணிந்து வருகிறார்கள். மீதி எல்லா உடைகளும் இந்தக் காலத்தில், ஆண், பெண் இருபாலரும் அணிகிறார்கள். 

கீதா சாம்பசிவம் :

 தோசை எல்லோருக்கும் பிடித்த உணவாக இருப்பது ஏன்? 

எல்லாருக்கும் பிடிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லையே!

இட்லி வார்க்கும் பொழுது ரகசியமாக - எந்த சத்தமும் இல்லாமல் செய்து, யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டுவிடலாம். 

ஆனால் - 
தோசை சுடும் பொழுது 
ஓசை எழும் சை.. சை ...
ஆசை வந்தது ஓசையாலோ?

உங்கள் மனைவி முதல் முதல் தோசை வார்த்துப் போட்டப்போ நீங்க ரசிச்சுச் சாப்பிட்டது உண்டா? அம்மா செய்வதை விட நல்லா இருக்குனு தோணி இருக்கா? (கொஞ்சம் வம்பு)


இல்லை. இல்லை. 
எங்க வீட்டு முதல் தோசை கருகிப் போனது. 

மனைவி செய்த முதல் தோசை 
கல்லை விட்டுப் பிரிய மனமின்றி 
சிக்கெனப் பிடித்துக்கொண்டது கல்லை.
நான் தோசைத் திருப்பியை உளியாக்கி 
கல்லிலிருந்து செதுக்கிச் சாப்பிட்டேன்,
உப்புமாவாக! 

இட்லிக்கு ஏன் இந்த மரியாதை கிடைக்கலை? எல்லோரும் ஏன் ஒரே வகையாக இட்லி செய்கிறார்கள்?



எல்லா இட்லியும் ஒரேமாதிரியா ? இல்லவே இல்லை.
ரப்பர் பந்து இட்லி நொளுக்கு இட்லி பார்த்ததில்லையா ?

இப்போல்லாம் சில்லி இட்லி, பொடி இட்லி, இட்லிஃப்ரைனு வந்திருக்கே, அது பத்தி என்ன சொல்றீங்க? உங்களுக்கு இம்மாதிரிப் பாரம்பரிய உணவுகளில் மாறுதல் செய்தால் பிடிக்குமா? 


இட்லியில் புதுமைகள் வேண்டாம் என்று நினைப்பவன் நான்.

நான் இட்லியில் பல புதுமைகள் செய்ததுண்டு.  ... படங்கள் 

சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கு அனுமதி கொடுத்தது பற்றி உங்கள் கருத்து!

காலம் காலமாக இருந்துவரும் மதநம்பிக்கைகள் தொடர்பான விஷயங்களில் அரசு தலையிடுவது சரியில்லை ஆணைகள் பிறப்பிப்பதும் சரியில்லை. நாம் சொல்லி யார் கேட்கிறார்கள் ?

என்னுடைய சிந்தனை இதில் வேறு விதம். பத்து முதல் ஐம்பது வயதுவரை உள்ள பெண்களுக்கு  அனுமதி மறுக்கப்பட்டதற்குக் காரணம் அந்தப் பெண்கள் அல்ல. விரதம் இருந்து மலைக்குச் செல்கின்ற ஆண்களின் விரதம் கெட்டுவிடுமே என்னும் பயம்தான் காரணம் என்று நான் நினைக்கிறேன். Out of sight, out of mind principle! 

சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் கள்ளக்காதல் செல்லும் என்றதும் ஆண், ஆணைத் திருமணம் செய்து கொள்வதும், பெண், பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதும் செல்லும் என்றது குறித்து உங்கள் கருத்து? இது சரியா? கலாசாரச் சீர்கேடா?


இது "திரு" மணம் அல்ல. 

சரியில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. 

கலாசாரம் மாறி வருவதில் உங்களுக்கு உடன்பாடா? மாற்றங்கள் அவசியம் என நினைக்கிறீர்களா? அப்படி எனில் ஏன்? 

கலாச்சாரம் மாறுவது என்பது ஒருவர் விருப்பத்தை பொறுத்தது அல்ல. காலப்போக்கில் சில வழக்கங்கள் ஒழியும். புது பழக்கங்கள் வரும்.  அது கலாச்சாரத்திற்கு ஒரு புதுமுகமாக விளங்கும்.

எதுக்குமே மூலம்னு ஒண்ணு உண்டு! அப்படி இப்போ இருப்பனவற்றையெல்லாம் ஆதியில் கண்டறிந்தவர்கள் யார்? அவங்களுக்கு அந்தக் குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய தெளிந்த அறிவு எப்படி வந்தது? உதாரணமாக நெருப்பில் சமைத்தல், நீரைப் பயன்படுத்துவதுனு மட்டும் இல்லை! தத்துவார்த்தமான உண்மைகளை முதன் முதல் கண்டறிந்தவர்களுக்கு ஆதி குரு யார்?  


 எல்லா விஷயத்திற்கும் ஆதிமூலம் எது எங்கே என்று அறிந்து கொள்வது எளிது அல்ல அது இயலவே இயலாது.

மேலும் இன்று நாம் ஒரு பொருளை எடுத்துக்கொண்டு அதில் மாற்றம் எப்படி வந்தது என்று பார்க்கிறோம் இந்த ஒரு பொருள் பல மாற்றங்களுக்கு பின் ஒரு பொருளாக வடிவெடுத்து இருக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 இந்த மாதிரியான மாற்றம் இயற்கையின் இயல்பு. ஆதி குரு எனும் ஒரு புள்ளி நம் தர்க்க ரீதியான எண்ணம்.  உண்மையில் அது சாத்தியம் இல்லை.

எல்லாக் கண்டுபிடிப்புகளும் எதிர்ச்சையாக அமைவதுதான். நெருப்பில் சமைத்தல் பற்றி எங்கேயோ அப்படி ஒரு கதை படித்த ஞாபகம். குடிசைத் தீயில் மாட்டிக்கொண்ட ஒரு வீட்டு விலங்கின் மாமிசப் பகுதியை ஒருவன் எதேச்சையாக தொட, விரல் சூட்டைப் பொறுக்கமுடியாமல், விரலைக் குளிர்விக்க விரலை வாயில் வைத்துக் கொண்டதாகவும், சூடான இறைச்சி சுவையை முதலில் கண்டவன் அவன்தான் என்றும் படித்த ஞாபகம்.

முதல் முதல்லே பிள்ளையாருக்கு யார் கொழுக்கட்டை பண்ணிக் கொடுத்திருப்பாங்க? இப்போ ஜிஎம்பி சார் ஸ்டைலில் ஒரு கேள்வி? அது ஏன் பிள்ளையாருக்கு மட்டும் கொழுக்கட்டை? மத்தவங்களுக்குக் கிடையாதா? எனக்குத் தெரிஞ்சு இங்கே கருடாழ்வாருக்குக் கொழுக்கட்டை செய்யறாங்க! அது மாதிரிப் பிள்ளையார் இல்லாமல் மத்த எந்த உம்மாச்சிங்களுக்காவது கொழுக்கட்டை உண்டா? அட, வரலக்ஷ்மி விரதத்துக்கு இருக்கேனு எல்லாம் சொல்லப் படாது! 

மத்தள வயிறனுக்கு 
மத்தகம் உள்ளதால், 
மோதகமும் படைக்கப்படுகின்றதோ? 
பரிபூரணன் என்பதால் 
பூரணம் உள்ள மோதகம் படைக்கப்படுகின்றதோ? 
பிள்ளையாருக்கு என்று செய்தாலும், வீட்டுப் 
பிள்ளைகள்தானே அதை உண்கிறார்கள்! 


 ஏஞ்சல் :

1, /நிலா நிலா ஓடிவா ..
நிலவுக்கு கால் இருக்கா ? ஆனா வட்ட நிலாவில் கால் தெரியலியே 
இந்த பாட்டில் சொன்னபடி நிலா எப்படி ஓடி வர முடியும் ?

விரைந்து வா என்பதன் மாற்றாக இன்னிசை நயம் கருதிச் சொன்னது அது. 


" கால்கள் இல்லாமல், வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா? "  என்றும் பாட்டு இருக்கின்றதே! 

2, ஒரு ரூபா காயின் ஆகட்டும் இல்லை இரண்டு ரூபா காயின் 50 பைசா காயின் எல்லாமே ஏன் வட்டமா இருக்கு ? 
சதுர காயின்ஸ் போட யாரும் முயற்சிக்கல்லியா ?


சதுரக் காயின்கள் கையைக் குத்தாதிருக்க அதிகச் செலவாகும். 

அறுபது / எழுபது (1960-70) கால ஒரு பைசா,  அஞ்சு பைசா , அதற்கு முன்பு இரண்டணா காசு எல்லாம் சதுர வடிவக் காசுகள்தான். 




3, இமெயில் இல்லேன்னா sms தவறான எண்ணுக்கு நபருக்கு அனுப்பி ஞே என விழித்ததுண்டா ??

 இல்லை.

தவறான நபருக்கு இமெயில் / மெசேஜ் அனுப்பியதுண்டு. ஆனால் ஞே என்றெல்லாம் விழித்தது இல்லை. பின்னாடியே "sorry wrong number " என்று மெசேஜ் அனுப்பிடுவேன்! 


4,நம் நாட்டிலும் திருமணங்களில் தம்பதிகள் மீது அரிசி அட்சதை போடறாங்க வெளிநாட்டிலும் அரிசி தூவும் வழக்கமுண்டு எப்படி இப்படி ஒரு ஒற்றுமை வெவ்வேறு நாட்டினருக்கு வந்தது ?

ஆதிக்குடி தமிழ்க்குடி என்பதற்கு ஆதாரம் ?

5, காதலுக்கு கண்ணில்லைங்கிறாங்களே அப்போ காதலுக்கு காது மூக்கு வாய் இருக்கா ??

கண்மூடித்தனமான காதல் ?

'கண்'ணதாசன் இதை ஒப்புக்கொள்ளவில்லை. அவருடைய பல பாடல்களில் கண்கள்தான் காதலுக்கு வாசல்! 

6,வானத்தில் இத்தனை ஆயிரம் ஸ்டார்ஸ் இருக்குன்னு சொல்றதை நம்பும் மக்கள் ஈரமான பெயிண்ட் தொட வேண்டாம் என்று சொன்னா மட்டும் தொட்டு பார்த்து ஈரமா காய்ஞ்சிடுச்சான்னு உறுதி செய்வதன் காரணம் ?? 
இன்னிக்கு ரெண்டு பேர் அப்படி செஞ்சதை பார்த்தேன் :)
 

எண்ண முடிந்தால் அதையும் செய்வோம்தான். 

7, பணம் மரத்தில் காய்கிறது என்பதற்கும் அதே மரத்தின் பேப்பரில் தான் கரன்சி தயாரிக்கிறார்கள் என்பதற்கும் சம்பந்தம் இருக்கு என்பதை என்றாவது யோசிச்சிருக்கீங்களா ??

 பணம் மரத்தில் காய்ப்பதாக வழக்கு ஏதும் கிடையாது. மரத்திலா காய்க்கிறது என்பது எதிர்மறை வினா.


8, நல்லது கெட்டது நல்லவங்க கெட்டவங்க சந்தோசம் துக்கம் ..இதில் இரண்டாவதா வருபவை கெட்டது ,துக்கம் இதெல்லாம் இல்லாம முதலா வரும் நல்லது சந்தோசம் இதை மட்டும் உணர அனுபவிக்க முடிவதில்லையே ஏன் ?? கெட்டது தீமை இல்லாம நல்லனவற்றை உணர முடியாதா ??

ஒப்பிட்டுப் பார்க்க ஒன்று இல்லாவிட்டால் நல்லது கெட்டது என்ற பாகுபாடு செய்ய முடியாது. எனவே ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.

வாழ்க்கைன்னா நல்லது கெட்டது இருக்கும்னு ஆரம்பிச்சு வைச்ச முதல் ஆள் யாரா இருக்கும் ?

கண்டு பிடித்த முதல் ஆள் நானில்லை என்று மட்டுமே பலரும் சொல்ல முடியும்.

9,எண்ணங்கள் எங்கிருந்து உதிக்குது ?தோணுது ஆரம்பிக்குது ??

புலன்கள் வழியே உள்வாங்கப்படும் உணர்வு எண்ணத்தில் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது.

 மனம் அதனின்றும் விருப்பு-வெறுப்பு முதலான பல உணர்வுகளை தோற்றுவிக்கிறது. 

'எண்ணங்கள்  ' கீதா சாம்பசிவம் மேடம் மனதில் உதிக்குது, குதிக்குது, கொண்டாடுது! 

ஜோக்குகள் ஒருபுறமிருக்க, 

பாதி இரவில் நான் விழித்துக்கொள்ள நேர்ந்தால், என்னுடைய எண்ணங்கள் எங்கே உதயமாகிறது என்று கேட்டு, என்னுள்ளேயே பயணம் செய்வேன். உடனடியாகத் தூங்கிவிடுவேன். 

10, மனம் மாறினார் மனம் மாறினாள் என்று சொல்வது சரியா ? நாம் தானே மாத்தறோம் ?

மன மாற்றம் அவரவர் முயற்சி/செயல் இன்றி ஏற்படாது.

நெல்லைத்தமிழன் :

பிள்ளையார் கொழுக்கட்டையைப் பார்த்துத்தான் உருளைக் கிழங்கு போண்டா தோன்றியிருக்குமா இல்லை உருளைக் கிழங்கு போண்டாவைப் பார்த்து பிள்ளையார் கொழுக்கட்டை தோன்றியிருக்குமா?  



நெ.த  நீங்களுமா !?

கொடியசைந்ததும் காற்று வந்ததா? 
காற்று வந்ததும் கொடியசைந்ததா? 

====================

வாட்ஸ் அப் 

பானுமதி வெங்கடேஸ்வரன்:


பட்டாசு வெடிக்கிறேன் பேர்வழி என்று கையை சுட்டுக்கொண்டதுண்டா?

சகோதரியின் தலை தீபாவளி அன்று, அத்திம்பேரை இம்ப்ரெஸ் செய்ய ஓலை வெடியைக் கையில் பிடித்து வெடித்துக் கையை சுட்டுக் கொண்டவர், புஸ்வாணம் என் பற்றவில்லை என்று குனிந்து பார்த்து முடியிழந்தவர், வெடிக்காத வெடி என்று கையில் எடுத்து நல்லவேளை அது புஸ் என்று எதிரே இருந்த சுவரில் அடித்ததனால் பிழைத்தவர் இப்படி நிறையப்பேர் எங்கள் குடும்பத்தில்.

உண்டு. சில சமயம் பலத்த சூட்டுக் காயங்களுடன். 

வெடி வெடிக்கும் அனுபவங்களில் நான் பெரிய பழுவேட்டரையர் ரேஞ்சுக்கு அனுபவப்பட்டவன்!

இப்போது வரும் திரைப்படங்களில் திருடர்களை கதாநாயகனாக காட்டுவது இருக்கட்டும், இறுதி வரை அவர்கள் திருந்துவது போல காண்பிக்காததோடு, சந்தோஷமாக இருப்பதாகவும், போலீஸ் முட்டாள் என்பது போலவும், அல்லது திருடர்களின் கூட்டாளி என்பது போலவும் சித்தரிப்பது சரிதானா?

நிச்சயம் சரியில்லை.  லாபம் ஒன்றே குறியாக நடத்தப்படும் வியாபாரம் சினிமா.  இதில் மேதமை, சமுதாயப் பொறுப்புணர்வு அதிசயமாகத் தான் தலை காட்டும். சினிமாவால் நன்மை உண்டாவது அரிது.  தீமை மிக எளிதில் விளையக் கூடியது.  கவர்ச்சி, ஆபாசம், எதையும் எல்லாவற்றையும் மலினப் படுத்துதல் அதன் இடுபொருட்கள்.

அழகு நடிகையரும் இனிய இசையும் கோரமான சண்டை க்காட்சிகளும், நம்பமுடியாத ஹீரோயிசமும் மூலதனம். எனவே இசையும் பெண்ணழகும் கூட வெறுத்துப் போகிறது.

எத்தனை வயது வரை பட்டாசு வெடிக்கும் ஆர்வம் இருந்தது?

சுமார் 55 வயது வரை.
கடைசி சில ஆண்டுகள் முதலில் பெரிய வெடிகள் மட்டும், பின் வாணம் மத்தாப்பு, பின்னர் எதுவுமில்லை.

என்னுடைய பையனுக்கு பட்டாசு வெடிக்கும் ஆர்வம் வரும்வரை, எனக்கு ஆர்வம் இருந்தது. 

========================

இந்த வாரக் கேள்வி: 

ஒரு நண்பரைக் காண, அவருடைய வீட்டுக்குச் செல்கிறீர்கள். 
அந்த நண்பர், வேறொரு நண்பருடன் (உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்)  உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். 
அவர்களுக்குள் ஏதோ ஒரு விஷயம் குறித்து விவாதம். இருவரும் தத்தம் பக்கம் சார்ந்து விவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு, அந்த அறிமுகம் இல்லாத மனிதரின் வாதம் நியாயம் என்று படுகிறது. உங்கள் நண்பரின் வாதம் சரியில்லை என்றும் தோன்றுகிறது. 

இப்போ நீங்க, 

அ) ஒன்றும் பேசாமல் அவர்களின் வாதங்களை கவனித்துக்கொண்டு இருப்பீர்களா?

ஆ) உங்கள் நண்பருக்கு சப்போர்ட் செய்வீர்களா?

இ) அறிமுகமில்லாத நபர் சொல்வதுதான் சரி என்று நண்பரிடம் சொல்வீர்களா? 

ஈ) வேறு ஏதாவது? 

==============================



இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அனுஷ் ! 





=====================================================

93 கருத்துகள்:

  1. அன்பின் Kgg , ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் அனுஷ்க்கு பிறந்த நாளா!...

    ஜொல்லவே இல்லையே!..

    அழகே.. அழகே
    அழகுடன் வாழ்க..
    ஆண்டுகள் நூறு
    புகழுடன் வாழ்க!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... இன்று அனுஷ் பிறந்த நாள்!

      //அன்பின் அனுஷ்க்கு //

      ஹா.... ஹா... ஹா...

      நீக்கு
    2. //அன்பின் அனுஷ்க்கு // ஆஹா இது என் கண்ணுல படாம போச்சே!!

      துரை அண்ணா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! சூப்பர் வாழ்த்து...

      என்ன அழகு இல்லியா.....

      கீதா

      நீக்கு
    3. இதென்ன துரை சார்... மண்டபத்துக் கவி மாதிரி எல்லோருக்கும் சீட்டுக் கவி பாடிடறீங்க? அப்போ உங்களுக்குப் பிடித்த, "அவங்களுக்கு" காவியமே இயற்றியிருப்பீங்ளே.... ஹாஹாஹா

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் கௌலாப்ஜாமூன் உரிமையாளர் கௌ அண்ணா, ஸ்ரீராம் துரை அண்ணா, தீபஒளி மயக்கத்தில் இருக்கும் எல்லோருக்கும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். உங்களுக்கு எங்கள் தீபாவளி வாழ்த்துகள்.

      நீக்கு
    2. ஓ நான் இப்ப பங்களூர்வாசி என்பதாலா!!!

      நன்றி ஸ்ரீராம்....

      கீதா

      நீக்கு
  4. // துரை செல்வராஜூ தன் பதில் மூலம்..//

    என்னது... நான் சிரிக்க வெச்சேனா!...

    பதிலளிநீக்கு
  5. ஆ!!! அனுஷ் கு பிறந்தநாளா? எங்கே ஸ்ரீராம்?!!! கேக் வெட்டவே இல்லை!!! ஒரு ஸ்வீட் கூடக் கிடையாதா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...அரம தூங்குது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ ர ம காரங்க எல்லோரும் தீபாவளிக்கு செய்த ஸ்வீட் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளவும்!

      நீக்கு
  6. இன்னிக்கு அனுஷ்க்கு பிறந்த நாள்..

    அப்போ மதியம் பாயசம் உண்டா?..

    ஆமா..
    இன்னைக்கு ஐப்பசி அமாவாசை ஆயிற்றே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா நானும் வெயிட்டிங்க்...என்ன ஸ்வீட் வரப் போகுது இல்லை சாபாடேவானு....எல்லாரும் அமாவாசை காரியங்களில் பிஸி போல....
      சத்தமே இல்லை...

      கீதா

      நீக்கு
  7. இப்போதைக்கு இது போதும்..
    அப்புறம் வர்றேன்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னாடி வந்தவங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு எஞ்சாய் பண்ணுங்க! விரைவில் போட்டிக்கு வந்துடறோம்!

      நீக்கு
    2. ஆ ஆ ஆ கீதாக்கா ரெடியாகிறீங்களா...அப்ப நான் இன்னும் உஷாரா இருக்கணும்...அதிரடி வேற எச்சரிக்கை செய்துட்டு போயிருக்காங்க..ம்ம்ம் ரன்னிங்க் ரேஸ் தொடங்க்ட்டும் விடமாட்டோம்ல...ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  8. அப்போ தமனாக்கா பிறந்தநாள் போடலைனா நெல்லை எசப்பாட்டு பாடிடுவார் ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்குதான் நீங்க தயிர்வடை செய்து நாம் எல்லோரும் இங்க கொண்டாடினோமே.. . அப்புறம் என்ன

      நீக்கு
  9. என்னோட கேள்விகளுக்குப் பதில் சொல்ல இரு ஆ"சிரி"யர்களுக்கும் நன்னியோ நன்னி. இன்னும் சில கேள்விகளுக்குச் சிவப்பு வண்ணத்தில் பதில் சொன்னவர் யாரோ? அவர் யாரோ? நீலவண்ணக்கண்ணர் இன்னமுமா பிசி?

    பதிலளிநீக்கு
  10. பதிலளிக்கும் முறையிலிருந்து யார் பதில் கொடுக்கிறார்கள் எனக் கண்டு பிடிக்க முடியுமா? முடியும்னு நினைக்கிறேன். என்னோட கேள்விகளுக்கு மட்டுமில்லாமல் மற்றக் கேள்விகளுக்கும் வெளிர் பச்சையில் பதில் சொல்லி இருப்பது கௌ அண்ணன் தானே! இஃகி, இஃகி, அண்ணானு கூப்பிடலாமா? :)))))) மற்றவர் யாரு? சதாபிஷேகக் கதாநாயகரா? இல்லைனா இன்னொரு ஆ"சிரி"யரா? காசு சோபனாவா? அவர் ஏன் இதிலெல்லாம் கலந்துக்கறதே இல்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இந்த "காசு சோபனா" என்பது யாரு, ஆசிரியர்களிலேயே ஒருவர் அர்த்த நாரீசுவர்ராக இருவேடம் தரிக்கிறாரா என்றொரு. "ச ம் ச ய ம்" (துளசி டீச்சர் வார்த்தை ஹாஹா)

      நீக்கு
  11. நிஜம்மாவே இன்னிக்கு அனுஷ்கா அக்காவோட பிறந்த நாளா? பாயசம் நேத்திக்கே வைச்சுட்டேன். தினம் தினம் பாயசம் சாப்பிட முடியாதுனு இன்னிக்குப் பண்ணப் போறதில்லை! :)))) அனுஷ்கா அக்காவோட பி.நா. கொண்டாடும் ரசிகர்கள் அனைவரும் எ.பி. வாசகர்கள் அனைவருக்கும் ச்ச்வீட்டு, கேக், எல்லாம் வாங்கிக் கொடுப்பாங்கனு நம்பறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அரசன் எந்த மதமோ அதுக்கு நிறைய குடிமக்கள் மாறுவதுபோல, எபி ஆசிரியரின் விருப்பமானவருக்கு நீங்களும் சிலை வைப்பது, கட்அவுட் பாலாபிஷேகம் என்று ஆரம்பித்துவிட்டீர்களா கீசா மேடம்.... ஹாஹா

      நீக்கு
    2. கீதாக்கா அங்க பதில் பார்த்தீங்கதானே தீபாவளி ஸ்விட்டே எல்லாரும் எடுத்துக்கோங்கனு சொல்லிப்போட்டார் ஸ்ரீராம்....

      விடக் கூடாது...கேக் தான் வெட்டலை ஒரு கேக் படமாவது போட்டிருக்கலாம்...வெர்ச்சுவல் கொண்டாட்டம்!! ஹா அஹ ஹா.(எல்லாகும் திங்க பதிவுல அப்படித்தானே போடுறோம்...)

      நெல்லை கீதாக்கா எங்கன ஆரம்பிச்சுருக்காங்க...அவங்க அ ர ம கிட்டதான் கேட்டுருக்காங்க...ஸ்வீட்டும் கேக்கும்....நீங்க தமனாக்கா பிறந்தநாளுக்குக் கொடுத்தாலும் தான் வாங்கிப்போம் நாங்க...ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  13. அனுஷ்காவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  14. நண்பரும் அவரோட நண்பரும் பேசிக் கொள்ளும் விஷயம் குறித்த ஆதாரபூர்வமான தகவல்கள் என்னிடம் இருந்தால் தவிரக் கலந்துக்க மாட்டேன். நண்பரோட நண்பர் சொல்வது சரி எனத் தோன்றினால் அதற்கான ஆதாரங்களைச் சொல்லி நண்பரிடமும் சொல்லிடுவேன். அவர் ஒத்துப்பாரா மாட்டாரா என்பது அடுத்த கேள்வி! :))))

    பதிலளிநீக்கு
  15. அதுவும் நெருக்கமான நண்பராக என்னை நன்கு புரிந்து கொண்டவராக இருந்தால் தான் கலந்துப்பேன் இல்லைனா கலந்துக்காமல் வேடிக்கை பார்ப்பேன். ஏன்னா பலருக்கும் தங்கள் வாக்குவாதங்களில் மற்றவர் தலையீடு அவ்வளவாப் பிடிக்காது. அது சரி, இம்மாதிரி யோசனைகளெல்லாம் யாருக்குத் தோணுது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இம்மாதிரி யோசனைகளெல்லாம் யாருக்குத் தோணுது? //

      கவுண்டமணி செந்தில் நகைச்சுவை ஞாபகம் வந்தது...

      // கல்வெட்டில்.....//

      நீக்கு
  16. //பாதி இரவில் நான் விழித்துக்கொள்ள நேர்ந்தால், என்னுடைய எண்ணங்கள் எங்கே உதயமாகிறது என்று கேட்டு, என்னுள்ளேயே பயணம் செய்வேன். உடனடியாகத் தூங்கிவிடுவேன். // நம்ம மறுபாதியும் அப்படித் தான்! நீங்கல்லாம் கொடுத்து வைச்சவங்கனு நினைக்கிறேன். அதாவது தூங்கற விஷயத்திலே! நான் அப்படி எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சால் அது எங்கேயோ போய் முடிஞ்சு நல்லா முழிப்பு வந்துடும். பல சமயங்களிலும் எழுந்து ஏதேனும் வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கேன். இப்போல்லாம் எல்லோரும் கோவிச்சுக்கறதாலே பேசாமப் படுத்திருக்கேன். ஆனால் மின்னலை விட அதிக வேகத்தில் எண்ணங்கள் ஓடும்! :))))) தூக்கம் சுத்தமாய்ப் பறந்து போயிடும் எண்ணங்களை விட வேகமாக!

    பதிலளிநீக்கு
  17. எனக்கொரு கேள்வி??

    இந்த வாரக்கேள்வி என ஒரே ஒரு கேள்வி தானே கேட்டிருக்கிங்க. போன வாரமும் ஒரு கேள்வி தான் கேட்டிங்க. ஆனால் இங்கே பல கேள்விகளும் பல பதில்களும் இருக்கிஒன்ரதே? இதையெல்லாம் எப்போது கேட்டீர்கள்?

    நான் இங்கே புதுசா வந்தவுகளாக்கும். ராகிங்க ராக்கிங்க என வெல்லாம் கிலம்பாதிங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஷா ஒவ்வொரு புதன்கிழமைப் பதிவிலும் கருத்துரைப்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, அடுத்த புதன் கிழமையில் பதில் அளிக்கின்றோம். சிலர் 9902281582 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும் கேள்விகள் அனுப்புவது உண்டு.

      நீக்கு
  18. நண்பரோ, நண்பரின் நண்பரோ யாராக இருந்தாலும் எந்த சூழலாக இருந்தாலும் அவர்கள் விவாதிக்கும் விடயம் குறித்து எனக்கு தெளிவாகவும், நான் கடைப்பிடிக்க கூடியதாகவும், நானே பயன் பெற்றதாகவும் இருந்தால் தகுந்த சான்றுகளோடு விவாதிப்பவர் கருத்தை ஆதரிப்பேன். நண்பராக இருக்கின்றார் என்பதற்காக பிழைகளையும், தவறுகளையும் ஆதரிக்க முடியாது.சரின்னால் சரி, தப்புன்னால் தப்பு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு. இதன நிஷா.. நண்பருக்கு கோபம் வந்தாலும் நிஷா மாறவே மாட்டேனாக்கும்.

    மதம், அரசியல் சம்பந்தமான விவாதங்கள் எனினும் நான் சார்ந்திருக்கும் கொள்கை ரிதியான கருத்கள் தவறென விவாதித்தால் விவாதிப்பவர் கருத்தில் நியாயம் இருந்தால் அதை ஆதரிப்பேன். நான் கொண்டதே சரி என வாதமெல்லாம்செய்ய மாட்டேன். ஞானம் வேறு, மெய் ஞானம் வேறு அல்லவா?

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் தீபாவளிக்கு மறு நாள் வாழ்த்துகள்
    .நாங்கள் இனிமேல் தான் வெடியே வெடிக்கப் போறோம்.

    கேள்வியும் பதில்களும் சின்சியராக வந்திருக்கின்றன.

    உங்க அனு அக்காவுக்குப் பிறந்தனாள் வாழ்த்துகள்.

    நண்பர்கள் விவாதத்தில் நான் குறுக்கிட மாட்டேன்.

    அவர்களே பேசித் தீர்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுவேன்.

    பதிலளிநீக்கு
  20. கேஜிஜி சார்... உங்கள் டெரிடரிக்கே வந்து உங்களை அனுஷ்கா மத்த்துக்கு மாற்ற முயல்பவரைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. (அவங்க டெரிடரியான வியாழனில் அதனைச் செய்யாமல்)

      நீக்கு
    2. நிச்சயம் நண்பரின் நண்பர் அகன்றபின் நண்பரின் வாதம் தவறு எனச் சொல்லுவேன்.

      பொதுவா அவங்க, இடையிலேயே பேச்சை நிறுத்தி நண்பர் அறிமுகம் செய்து வைப்பார். யாராவது ஒருவர், நீங்க என்ன சொல்றீங்க என்பார். என் மனதுக்குச் சரி என்று பட்டதை நண்பன் முகம் கோணாதவாறு சொல்லுவேன்.

      நீக்கு
  21. //இதை ஆராய்ந்து பார்த்து எழுதியவர் யாராக இருக்கும் என்று யோசிப்பீர்களா?.....
    ஹாஹா கண்டிப்பா கடலைப்போடும் ஜொள்ளுப்பார்ட்டி வேலை என்பதே என் கன்க்ளூஷன் //

    ---ஏஞ்சல்

    //மற்றப்படி காலை நேரம் யார் எந்த காரில் எங்கே செல்கின்றார் என வெட்டியாக உட்கார்ந்து ஆராய்ச்சி செய்தவர்களுக்கு நோபமல் விருதுக்கா பரிந்துரைக்க முடியும்? //

    ----நிஷா


    ஹா ஹா ஹா ஹா கேள்வி கேட்ட ஆசிரியரே தலை தெறிக்க ஓடுறார்னா ஹா ஹா ஹா..அதுக்கு சின்சியரா பதில் சொன்னவங்களும் தலை தெறிக்க ஓடுவாங்களோ!!!
    ஹா ஹா ஹா ஹா

    அப்ப பரிசு பதில் சொல்லாதவங்களுக்குத்தான் அதிரா ஓடி வாங்கோ..இங்கன பஞ்சாயத்து...தேம்ஸ் நதிக்கரை ரொம்ப குளிரு இங்க போட்டுடலாம்...ஓடி வாங்க

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மற்றப்படி காலை நேரம் யார் எந்த காரில் எங்கே செல்கின்றார் என வெட்டியாக உட்கார்ந்து ஆராய்ச்சி செய்தவர்களுக்கு நோபமல் விருதுக்கா பரிந்துரைக்க முடியும்? //

      ----நிஷா


      ஹா ஹா ஹா ஹா கேள்வி கேட்ட ஆசிரியரே தலை தெறிக்க ஓடுறார்னா ஹா ஹா ஹா..அதுக்கு சின்சியரா பதில் சொன்னவங்களும் தலை தெறிக்க ஓடுவாங்களோ!!!
      ஹா ஹா ஹா ஹா


      ஆமாம்ல நாங்களும் வெட்டியாகதான் இருந்தோமோ?

      நீக்கு
  22. இந்தக் கேள்வி என் நினைவலையைத் தூண்டிவிட்டது.

    1989ல், என் நெருங்கிய நண்பன் வீட்டிற்கு இரவு ஒன்பது மணிக்கு அவனுடன் சென்றிருந்தேன் (மைலாப்பூருக்கும் தி நகருக்கும் இடையில்). நண்பன் ஒரு பிராமணப் பெண்ணைக் காதலித்துவந்தான். அவனும்்அவன் அப்பாவும் அதைப்பற்றிய வாக்குவாத்த்தில் ஈடுபட்டார்கள். நண்பன், "ஐயன்..-அப்பாவைக் கூப்பிடும் முறை- அந்தப் பெண் வீட்டில் அவளை வெளியே விடமாட்டேன் என்று வீட்டில் வைத்திருக்கிறார்கள். நீன் ஆட்டோவில் போய் அவளை நம் வீட்டிற்கு கூட்டி வருகிறேன். நீங்க சப்போர்ட் பண்ணணும்"-அதாவது எங்களுக்குப் பாதுகாப்பு தரணும்- என்றான். அதற்கு அவர், "அதெல்லாம் சரியான வழியில்லை, நான் ஹெல்ப் பண்ண மாட்டேன். ஆனால் அவளாகவே வந்து, உங்க பையனை நான் திருமணம் செய்யணும்னு சொல்லி நம்ம வீட்டு வாசப்படியை மிதித்தால் அந்தக் கல்யாணத்தை நான் எல்லா எதிர்ப்புகளையும் முறியடித்து நடத்தி வைப்பேன்" என்றார். அவன், நீங்க எனக்கு உதவி செய்யமாட்டேன்னு சொல்றீங்க என்றெல்லாம் கோபத்தோடு விவாதித்தான். இவர் ஒண்ணு சொல்ல அவன் ஒண்ணு சொல்ல, கொஞ்சம் எனக்கு சங்கடமான சூழ்நிலை. நான்தான் அவனின் நெருங்கிய நண்பன், வேறு சமூகம். அவன் அப்பா, என் பக்கம் திரும்பி "நீங்க என்ன சொல்றீங்க, நான் சொல்றது தவறுன்னு கோப்ப்படறான். உங்க கருத்து சொல்லுங்க என்றார்"

    என்னைக் கேட்கலைனா, வெளியில் என் நண்பனிடம் சொல்லியிருப்பேன். கேட்டதால் அங்கேயே, நண்பன் சொல்வது, எதிர்பார்ப்பது தவறு. நீங்க அதற்குச் சொன்ன காரணங்கள் மிகவும் சரி... "நண்பா... அப்பா சொல்றதுதான் சரி.. இதுல இன்னமும் ஆர்கியூ பண்ணாதே" என்று சொல்லி, அவன் "நீயுமாடா..." என்று விவாத்த்தை முடித்துக்கொண்டான்.

    பதிலளிநீக்கு
  23. அழகி அனுஷ்காவுக்கும் இன்றுதான் பிறந்த நாளா? மற்றொருவர் கமலஹாசன்! இருவருக்கும் இந்த நாள் மீண்டும் மீண்டும் வருக என்று வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  24. கொழுக்கட்டையோ, உ.கி.போண்டாவோ கொடுத்தால் வாங்கி சாப்பிட்ட்டுவிட்டு போகாமல், இதிலிருந்து அதுவா? அதிலிருந்து இதுவா? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்பவர்களை என்ன செய்யலாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுடச்சுட உ.கி போண்டாவோ இல்லை தட்டு நிறை கொழுக்கட்டை செய்துகொடுத்து அவர் வாயை அடைக்கலாம்.

      செய்வீர்களா.. நீங்கள் செய்வீர்களா பானுமதி மேடம்..

      நீக்கு
  25. தோசைக்கு ஆசை வந்த பதில் சூப்பர்...//இட்லினா யாருக்கும் தெரியாம சாப்பிட்டுவிடலாம்// ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  26. இட்லியில் புதுமை செய்த கௌ அண்ணா (கண்டிப்பா பாட்டிலில் எல்லாம் இட்லி மாவு ஊத்தி செய்யறது கௌ அண்ணாவேதான்...) சத்தியமா சொல்றேன் உங்க தக்கினிக்கி செம சூப்பரோ சூப்பர்.

    ஏன்னு கேட்டீங்கனா நானும் ரொம்பவே புதுசா செய்து பார்க்க நினைப்பவள். செய்யவும் செய்வேன். இட்லியை கேக் போல செய்து அலங்கரித்து ....ஐசிங்க் நு நினைச்சுராதீங்க...எல்லாம் வெஜ்ஜிஸ் தான்...அப்புரம் நட்ஸ் போட்டு அலங்கரித்து, பிசா டைப் தோசை பிசா என்று பல வகை...ஸ்டஃப்ட் இட்லி ...இதிலேயே வெல்லம்போட்டு பயறு சுண்டல் செய்வாங்க இல்லியா அதையும் ஸ்டஃப் செய்து நல்லாவே வந்துச்சு...

    இப்ப பாட்டில் இட்லி மைக்ரோ ஒவன் செம...பதிவு பார்த்துட்டேன் அண்ணா. படமும்....ரொம்பவே உங்க தக்கினிக்கை ரசித்தேன்...மைக்ரோ வேவ் இல்லை இல்லைனா செஞ்சுருப்பேன் பாட்டில் உள்ள கொஞ்சம் எண்ணை போட்டு தடவிட்டா ஒட்டாது என்றும் நினைக்கிறேன்...காஞ்சிபுரம் இட்லி கூட இப்படிச் செய்யலாம்...

    பொதுவாவே எபி ஆசிரியர்கள் எல்லோருமே மாத்தி யோசி மன்னர்கள் தான்....கௌ அண்ணா சமையலில் மாத்தி யோசி தக்கினிக்கி செய்து கலக்கறார்...ரசிக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  27. கேள்வி மேலே என் கருத்தில் இருந்து ஒரு கேள்வி....

    மற்றொன்று இப்படி மாத்தி யோசிச்சுப் புதுசா செய்யறது மொனொடொனஸா வைக்காம நம்மைப் புத்துணர்வு மிக்கவரா வைக்கும்றது என் எண்ணம். இது சமையலில் மட்டுமல்ல எல்லா விஷயங்களிலும் என்பது என் எண்ணம் உங்களுக்கு?

    கீதா

    பதிலளிநீக்கு
  28. >>>
    இப்போ நீங்க,

    அ) ஒன்றும் பேசாமல் அவர்களின் வாதங்களை கவனித்துக்கொண்டு இருப்பீர்களா?
    ஆ) உங்கள் நண்பருக்கு சப்போர்ட் செய்வீர்களா?
    இ) அறிமுகமில்லாத நபர் சொல்வதுதான் சரி என்று நண்பரிடம் சொல்வீர்களா?
    ஈ) வேறு ஏதாவது?... <<<

    நண்பர்களுக்குள் விவாதம் வெறுப்பை வளர்த்து விடும்.. -
    என்று இளமையில் படித்த ஞாபகம்...

    அதனால்,
    இன்றுவரை பலருடன் பல விஷயங்களைப் பற்றி விவாதம் செய்திருந்தாலும்
    நான் சொல்வது நியாயம் என்பதை அறிந்திருந்தாலும்
    மெல்ல நழுவி விடுவேன் - யார் மனமும் புண்படவேண்டாம் என்று!...

    விஷய ஞானம் உடையவர்களிடம் விவாதிக்கும் போது
    நட்பைப் பெறுவதுடன் வேறுபல செய்திகளையும் அறிந்து கொள்ளமுடிகிறது...

    அடிப்படை புரிதல் இல்லாதவர்களிடம் விவாதம் என்றால் - எதிர்மறை தான் மிச்சம்...

    தாங்கள் சொல்லியிருக்கும்படியான சூழல் அமைந்து விட்டால் -

    முடிந்தவரை வேடிக்கை பார்க்க வேண்டியது...

    இல்லையில்லை... லாவணிக் கச்சேரிதான் என்று முடிவாகி விட்டால்
    மாடு புடிச்சிக் கட்டணும்... ந்னு சொல்லிட்டு அங்கிருந்து புறப்பட்டு விடுவது...

    அப்போது தான் பழைய முகத்துடன்
    புதிதாய் (!) ஒரு முகமும் பார்க்கக் கிடைக்கும்!...

    பதிலளிநீக்கு
  29. முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா...
    என்றொரு பழமொழி...

    பத்தாம் வகுப்பு படிக்குபோது எங்கள் ஆசிரியர் -

    முதலை தான் பற்றிய இரையை ஒருக்காலும் நழுவ விடாது...

    அதைப் போல மூர்க்கனும் தன் கொண்ட முரட்டுக் கொள்கைக்கு மேலாக வேறொன்றை ஒப்புக் கொள்ள மாட்டான்...

    அதிலேயே நின்று தர்க்கம் செய்வான்...
    அதனால் தான் முதலையுடன் அவனை வைத்தனர்...

    - என்று, இதற்கு விளக்கம் கூறினார்...

    நல்லவேளை - நமக்கு இப்படியெல்லாம் வாய்த்ததில்லை!..

    பதிலளிநீக்கு
  30. அ) ஒன்றும் பேசாமல் அவர்களின் வாதங்களை கவனித்துக்கொண்டு இருப்பீர்களா?

    ஆம்...

    ஆ) உங்கள் நண்பருக்கு சப்போர்ட் செய்வீர்களா?

    ம்ஹிம்...

    இ) அறிமுகமில்லாத நபர் சொல்வதுதான் சரி என்று நண்பரிடம் சொல்வீர்களா?

    எனது வலைத்தளம் ஆரம்பத்திலிருந்து கருத்துரை பெட்டி கீழே இருக்கும் குறளை, பலமுறை மாற்ற வேண்டும் என்று நினைப்பேன்... ஆனால் மாற்றியதில்லை... அதனால் இந்தக் கேள்விற்கு அதுவே பதில்...!

    ஈ) வேறு ஏதாவது?

    சாயங்காலம் நாங்கள் (3 நண்பர்கள்) அனுஷ் பிறந்தநாளை எங்கள் Blog ஆசிரியர்களோடு கொண்டாட திட்டமிடுவோம்...!

    பதிலளிநீக்கு
  31. வெடி வெடிக்கும் அனுபவங்களில் நான் பெரிய பழுவேட்டரையர் ரேஞ்சுக்கு அனுபவப்பட்டவன்!//

    அவ்வளவு விழுப்புண்களா?

    பதிலளிநீக்கு
  32. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  33. நான் நண்பரின் வீட்டுக்கு செல்லும் பொழுது எனக்கு தெரியாதவரோடு விவாதத்தை என் நண்பர் தொடர்கிறார் என்றால் அது பொதுவான ஒரு விஷயத்தைப் பற்றிதான் பேசிக்கொண்டிருப்பார்கள். மூன்றாவது நபருக்கு எதிரே பர்சனல் விஷயங்களை என் நண்பர்கள் விவாதிக்க மாட்டார்கள். எனவே சற்று நேரம் அவர்கள் விவாதத்தை கவனித்து விட்டு பங்கு கொள்வேன். நிச்சயம் எனக்கு சரி என்று படும் பக்கம்தான் பேசுவேன். பர்சனல் விஷயம் என்றால் பக்கத்தில் இருக்கும் எனக்கு சம்பந்தமே இல்லாத எகனாமிக் டைம்ஸோ, சுவிசேஷமோ எடுத்து படிக்க ஆரம்பித்து விடுவேன். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது செல்ஃபோன்.

    பதிலளிநீக்கு
  34. என்னுடைய பையனுக்கு பட்டாசு வெடிக்கும் ஆர்வம் வரும்வரை, எனக்கு ஆர்வம் இருந்தது. //

    எனக்கும் அப்படித்தான் குழந்தைகள் பிறக்கும் முன் எல்லோருடனும் போட்டி போட்டு வெடிகளை வெடித்து வந்த நான் குழந்தைகள் வெடிக்க ஆரம்பித்தவுடன் அவர்கள் வெடிக்கட்டும் என்று பார்வையாளர் ஆனேன். இடை இடையே குழந்தைகள் வற்புறுத்தலால் கொஞ்சம் வெடிப்பேன்.

    பதிலளிநீக்கு
  35. தீபாவளிக்கு ஒரேயொருநாள் வெடி வெடிப்பதை தடுக்கும் நீதிமன்றம்.

    அரசியல்வாதிகள் வரும்போதெல்லாம் மிகப்பெரிய அளவில் வெடிக்கப்படுவதை தடுக்க முடியவில்லையே... காரணம் என்ன ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கேள்விதான் ஆனா பாருங்க பட்டாசு தீபாவளிக்கு மட்டுமில்ல....கோயில் திருவிழா, சில கல்யாணங்கள், சாவு ஊர்வலம், விளையாட்டு அணியில் விரும்பும் அணி ஜெயித்துவிட்டால் இப்படி பல சமயங்கள்ல வெடிக்கறாங்க...நிறைய கேட்கலாம்..நீதி மன்றத்தை..

      கீதா

      நீக்கு
    2. கில்லர்ஜி.. சட்டம்லாம் பொது ஜனங்களுக்குத்தான். நீங்க வரம் கொடுத்தவங்க தலைலயே கைவைக்கப் பார்க்கறீங்ளே.

      அரசுயல்வாதிகள்லாம் ரொம்பப் பெரிய இடம். நாமெல்லாம் சாதாரணவங்க

      நீக்கு
  36. இவ்வளவு காலமாக பின்னூட்டங்களின் வழியாக பழக்கம் கொண்ட ஆசிரியருக்கு, கில்லர்ஜியின் பிறந்தநாள் தெரியவில்லை

    ஆனால் ???

    பழக்கமே இல்லாத அனுஷின் பிறந்தநாள் தெரிந்து இருக்கிறதே இது எப்படி ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ கில்லர்ஜி அனுஷின் பிறந்த நாள் பப்ளிக்கா இதழ்களில் வருமே....ஏதோ ஒரு வகையில் வந்துருமே....சரி சரி கோச்சுக்காதீங்க உங்க பிறந்த நாளையும் போஸ்டர் அடிச்சு ஒட்டிடுங்க அப்ப எல்லாருக்கும் தெரிஞ்சுசும்...ஹிஹிஹிஹி

      கில்லர்ஜி உங்க பிறந்தநாள் இனிதானே வரும்.....இப்ப நவம்பர் முதல் வாரம் தானே ஓடுது..போஸ்டர் போட்டுருவோம்....ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  37. ஒரு வேளை நண்பர் நான் அறிந்திராத அந்த நபரை எனக்கும் என்னை அவருக்கும் அறிமுகப்படுத்தி என் கருத்தை அந்த மூன்றாவது நபர் அல்லது நண்பர் கேட்டால்....விவாதத்தை பொருத்து இருக்கிறது. விவாதாம் விதண்டாவாதமாகவோ, அல்லது நல்ல கருத்து மிக்க விவாதமாகவோ இல்லை என்றால் நான் கருத்து சொல்ல மாட்டேன். நல்ல விவாதமாக இருந்தால் என் கருத்தை இருவரின் மனம் நோகாமலும் எடுத்துரைப்பேன்...என் தனிப்பட்டக் கருத்து என்றும் சொல்லி..பொதுவாகவே நான் விவாதங்கள் ஓர் எல்லையை மீறினால் தவிர்த்துவிடுவேன். அதுவும் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று விவாதம் இருந்தால் நான் சைலன்ட் அப்செர்வராகத்தான் இருப்பேன்...

    என் நண்பர் என்னுடைய நெருங்கிய நண்பர் என்றால் மட்டும், மற்ற நபர் சென்ற பிறகு அவர் செய்த வாதம் சரி நண்பரின் வாதம் தவறு என்பதை ஏன் என்று விளக்கங்களுடன் எடுத்துரைப்பேன். இதுவும் அவர்கள் விவாதித்த டாப்பிக் எனக்குத் தெரிந்த சப்ஜெக்ட்டாக இருந்தால். இல்லை என்றால் எதுவும் சொல்லமாட்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  38. ராமன் விளைவை கண்டுபிடித்ததன் மூலம் பௌதீகத்திற்கான நோபல் பரிசு பெற்று நம் நாட்டின் பெருமையை உலக அரங்கில் உயத்திய சர்.சி.வி.ராமன் அவர்களுக்கும் இன்றுதான் பிறந்த நாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர் பானுக்கா... நார்மலா கூகுள் ஓபன் பண்ணியதுமே அன்றைய ஸ்பெஷலை அது செர்ச் எஞ்சினின் மேலே காட்டும் சில சமயங்களில் வித்தியாசமான ஜிஃப் எல்லாம் செய்து காட்டும்....இன்னிக்கு எதுவுமே காட்டலை...நல்ல விஷயம் பகிர்ந்தீங்க

      கீதா

      நீக்கு
  39. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் சுவாரஸ்யமான கேள்வி பதில் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  40. பாரம்பரியம் கலாச்சாரம் என்று நினைக்கும் பெண்கள் சபரிமலைக்குப்போகமல் இருந்தால் போதுமே தங்கள் எண்ணங்களை பிறர் மேல் திணிக்க வேண்டாமேஅதிலும் கட்சிகட்டிக் கொண்டு

    பதிலளிநீக்கு
  41. மதிய நேர வணக்கம். இன்றைக்கு விடுமுறை இங்கே... தீபாவளி! இப்போது தான் வர முடிந்தது!

    கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  42. //ஆகியோருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.//

    அப்போ யாருக்குமே பரிசில்லையோ? ஆவ்வ்வ்வ்வ் ஜந்தோசம் பொயிங்குதே.. ஜந்தோசம் பொயிங்குதே.. புவஹா.. புவஹாஆஅ..புவஹா....:))..

    எங்கும் வர முடியல்ல.. விரைவில வரோணும்.. இன்றோடு 21 நாள் கேதார கெளரி விரதம் முடியுதெல்லோ.. அதனால சீனி அரியதரம் சுட்டு கெளரி அம்மாளாச்சிச்சு வச்சு.. காப்பும் கட்டிப்போட்டு.. என் சீனி அரியதர ரெசிப்பியோடு வாறேன்ன்ன்ன்.. ஹையோ ஏன் இப்போ எல்லோரும் ஓடுறீங்க?:)).. கந்த சஷ்டியும் முடிச்சபின்புதான் தெம்ம்பா ஜண்டைக்கு வருவேன்ன்.. அதுவரை கொஞ்சம் கொஸ்ஸன்ஸ்ஸ்ஸ்ஸ்...

    பதிலளிநீக்கு
  43. அஞ்சுவுக்கு தலைமயிர் நரைக்க ஆரம்பிச்சுடுச்சோ?
    கீசாக்காவுக்கு இட்லி, ஓசை, பொங்கல் தவிர இடியப்பம் புட்டு அவிக்கத் தெரியுமோ?
    நெல்லைத்தமிழன் கண்ணாடி போட்டா புத்தகம் வாசிப்பார்?
    ஸ்ரீராம் இயஃபோன் போட்டா பாட்டுக் கேய்ப்பார்?
    கீதா ஹீல்ஸ் போட்டுக் கொண்டோ வோக் போவா?
    துரை அண்ணன் சைவப் பாடல்கள் மட்டும்தான் பாடுவாரோ? இல்ல அசைவப் பாட்டுக்களும் கேய்ப்பாரோ?:)..

    ஹையோ மீ ட்றம்ப் அங்கிளுக்கு சீனி அரியதரம் சுட்டுக் கொண்டு போய்க் குடுத்திட்டு வாறேன்ன்.. அதுவரை என்னை ஆரும் தேடாதீங்கோ..:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அஞ்சுவுக்கு தலைமயிர் நரைக்க ஆரம்பிச்சுடுச்சோ?//


      ர்ர்ர்ர்ர்ர்ர்க :) அது உங்களுக்கு நரைச்சி 30 வருஷம் கழிச்சே எனக்கு நரைக்கும் :)

      நீக்கு
  44. //கீசாக்காவுக்கு இட்லி, ஓசை, பொங்கல் தவிர இடியப்பம் புட்டு அவிக்கத் தெரியுமோ?// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அநியாயமா இல்லையோ? இடியாப்பம், சேவை, புட்டு(ஆனால் குழாய்ப்புட்டு இல்லை; இங்கே நோ போணி) எல்லாமும் செய்முறை போட்டிருக்கேன். ஒழுங்காப் பார்க்கணும், படிக்கணும், படிச்சதை மனசில் நிறுத்திக்கணும்! மேலோட்டமாப் படிச்சா இப்பூடித் தான் ஒண்ணுமே புரியாது! :)))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் தீபாவளிப் பட்டாசு வெடிச்சிடுச்சூஊஊஊஊஊ ஹா ஹா ஹ்

      நீக்கு
  45. //.... இன்று அனுஷ் பிறந்த நாள்!//

    அப்பாடி! இப்பத்தான் நிம்மதி.இந்த சுதந்திரப்போராட்ட வீரரின் பிறந்தநாள் என்னவாக இருக்கும் எனத் தேடிக்கொண்டிருந்தேன். கிடைத்துவிட்டது!

    பதிலளிநீக்கு
  46. அனுஷ்காவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    .
    இப்படியெல்லாம் யோசிக்கிற மனிதர்கள் ,மாத்தி யோசிப்பவர்கள் .... இதெல்லாம் மனத்திற்கான பயிற்சி மனம் புத்துணர்வு பெறும்

    பதிலளிநீக்கு
  47. /ஹாஹா கண்டிப்பா கடலைப்போடும் ஜொள்ளுப்பார்ட்டி வேலை என்பதே என் கன்க்ளூஷன் // (" ஐயோ ..... ஒரு ஆசிரியர் தலைதெறிக்க ஓடிகிட்டு இருக்கார்! ") //

    யாரா இருக்கும் ?? :)))))))))

    பதிலளிநீக்கு
  48. /அ) ஒன்றும் பேசாமல் அவர்களின் வாதங்களை கவனித்துக்கொண்டு இருப்பீர்களா?//

    இல்லை excuse கேட்டுட்டு வெளியே சென்று சிறிது நேரம் கழிச்சி வருவேன் .அந்த கொஞ்சம் நேரத்தில் ஹீட்டி டிஸ்கஷனின் தன்மை குறைந்திருக்கவும் இருவரும் அமைதியாக தங்கள் பக்க நியாயங்களை யோசித்து செயல்படவும் ஒரு சான்ஸ் அது ..

    ஆ) உங்கள் நண்பருக்கு சப்போர்ட் செய்வீர்களா?
    இ) அறிமுகமில்லாத நபர் சொல்வதுதான் சரி என்று நண்பரிடம் சொல்வீர்களா?


    இருவரில் யார்பக்கம் நியாயமோ அந்தப்பக்கம் சார்பாக பேசுவேன் .
    அதுக்காக நண்பரை அறிமுகமில்லாத நபர் முன் மட்டம்தட்டவும் மாட்டேன் ,வேறொரு சந்தர்ப்பத்தில் நண்பரிடம் அறிமுகமில்லா நபர் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் அவர் தரப்பு வாதத்தின் உண்மைகளை கூறுவேன் .

    ஈ) வேறு ஏதாவது?

    1,ஆங் :) வெளில போயிட்டு வரும்போது மிக்ஸர் கொஞ்சம் பக்கோடா வாங்கிட்டு வந்து வச்சிடுவேன் :)
    சண்டை வாக்குவாதத்த்தை எப்படியாவது நிறுத்தணும் அதுவே நல்லது
    2, அனுஷ்காவா தமன்னாவான்னு வாக்குவாதம் இருக்கும் பட்சத்தில் நடுவில் பாவனாவை கொண்டாந்தா போச்சு :))))))))))))

    பதிலளிநீக்கு
  49. மேடம் மேரி கியூரி அவர்களுக்கும் இன்னிக்குதான் பிறந்த நாள்

    பதிலளிநீக்கு
  50. அனுஷ்காவுக்கு ஹாப்பி பெர்த்டே ..விரைவில் ஆசைப்பட்ட மணாளன் கிடைக்க வாழ்த்துகிறேன் அனுஷ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அனுஷ் அவர்களை வாழ்த்தும் வயதில்லை. நான் சின்னப் பையன். அதனால் வணங்குகிறேன் (அனுஷையும், அவங்களை வாழ்த்தும் .......ஆன்டியையும்). ஹாஹாஔஹா

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆவ்வ்வ்வ் நெ தமிழன் தமனா உங்களுக்கே:)... அஞ்சு ஆன்ரி என அழைச்சு என் காதில தேன் பாய வச்டமைக்காக:) புவஹா புவஹாஆஆஆஆ புவஹாஆஆ விரதக் களைப்பே இல்லை இப்போ எனக்கு:)

      நீக்கு
    3. கர்ர்ர்ர்ர்ர்ர் :) @ நெல்லை தமிழன்


      கௌதமன் சார் இந்த நெல்லைத்தமிழனும் அதிராவும் என்னை கேள்வி யோசிக்க விடாம பண்ராங்க :))

      நீக்கு
    4. நாங்க வெளிநாட்டு வாசிங்க இங்க 90 வயது ஆளையும் பெர்த்டேக்கு விஷ் தான் பண்ணுவோம் :) வணக்கம்லாம் இல்ல:)

      நீக்கு
  51. 1, பெருமைக்கு எருமை மேய்த்தல் ..அப்படின்னா என்ன ? எந்த சூழலில் இந்த phrase வந்திருக்கும் இதற்க்கு மூலம் யாராக இருக்க கூடும் ?

    2, விலங்குகளுக்கு இசை கேட்கும் ரசிக்குக்கும் ஆர்வம் உண்டா ?
    (இன்று மல்ட்டி தேவாரம் பாடலின் ராகத்தில் வரும் சத்தாய் நிஷ்களமாய் பாட்டை ரசித்து கேட்டது என்னை ஆச்சார்யப்படுத்தியது )
    3, வெளிநாட்டுக்காரங்க பெயர்களைப்போல் நம் மக்கள்கிட்ட வித்யாசமான பெயர்கள் இருக்கா ?
    சில பெயர்களை மொழிபெயர்த்து பார்த்தேன் சிப்பா வந்துச்சி :)

    1,டேவிட் கார்டினர் (David gardener )
    தெரசா மே (theresa may )
    ஷெரில் ப்ரவுன் cheryl brown
    katie black , ரோஸ் basket , deena wood


    4, நீங்க ரூல்ஸ் ராமானுஜமா அல்லது கேர்லெஸ் கேசவனா :
    இந்த இருவரில் யாராயிருப்பது நல்லது ?

    5, ஹேமமாலினி அனுஷ்க்கா ஷெட்டி இருவருக்குமுள்ள ஒற்றுமை என்ன ??
    இருவரும் பெண்கள் , நடிகைகள் என்ற பதில் தடை செய்யப்பட்டுள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மொழிபெயர்ப்பில் ஜேர்மன் மொழிப்பெயர்கள் இன்னும் சிரிப்பாக இருக்கும்.

      நீக்கு
    2. 6, உங்களுடைய நல்ல நட்பு ஒருவர் உங்ககிட்ட பொய் சொல்லிட்டா உங்க மனநிலை எப்படி இருக்கும் ?
      மீண்டும் அவரை சகஜமாக நடத்துவீர்களா ? பழகுவீர்களா ?
      7,இப்போல்லாம் யாரை பார்த்தாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் (டைரக்டர் , ப்ரோக்ராம் ஜட்ஜஸ் ) வயது குறைந்தவர் ஆக இருந்தாலும் தொபுக்கடீர் னு அவங்க காலில் குனிந்து /விழுந்து காலை தொட்டு கும்பிடறாங்களே ??
      என்ன காரணம் ?
      8, உடல் ஆரோக்கியதைப்போல் மன ஆரோக்கியமும் முக்கியமானது .ஆனால் நம் நாட்டில் மன ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருகின்றார்களா ? அதற்கு நம் நாட்டில் என்னென்ன வழிமுறைகள் facilities இருக்கு ?
      9,நீங்கள் யாருக்காவது மென்டரிங் செய்திருக்கிறீர்களா ? அப்படி mentor ஆக இருந்தபோது ஏதேனும் அனுபவங்கள் கிடைத்ததா ?
      10, உங்க வீட்டில் டிஸிஷன் டேக்கர் அண்ட் டிஸிஷன் மேக்கர் யார் ?

      நீக்கு

    3. நிஷா :) ஆமாம்பா அதுவும் செகண்ட் நேம் ,,lowe -சிங்கம் ,tiger -புலி ,Gottlieb -தேவ அன்பு ,Wolfgang -- ஓநாய் பாதை .ஓநாய் ஜர்னி
      Müller, occupation (miller) Schmidt, occupation (smith)
      Schneider, occupation (tailor) Fischer, occupation (fisherman)
      Weber, occupation (weaver)
      https://en.wikipedia.org/wiki/List_of_the_most_common_surnames_in_Germany

      நீக்கு
  52. இன்று கமலஹாசன் பிறந்தநாள் என்பதால் அவர் சம்பந்தமாக ஒரு கேள்வி. கமல் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது? எரிச்சலூட்டிய படம் எது?

    வாட்டசாட்டமாக இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் ஆண்பிள்ளைத்தனம் வந்துவிடும், அனுஷ்கா மட்டும் எப்படி தப்பிக்கிறார்?

    ரசாயனம், பௌதீகம், கணிதம், உயிரியல், அஸ்ட்ரானமி என்ற விஞ்ஞானத்தின் எந்த பிரிவு உங்களுக்கு பிடிக்கும்?

    பதிலளிநீக்கு
  53. காரணமே இல்லாமல் சில நாட்கள் மனது சந்தோஷத்தில் துள்ளுகிறது? சில சமயங்களில் இனம் புரியாத சோகத்தில் தோய்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் மனதுக்கு பின் வருவதை முன் உணரும் சக்தி இருப்பது தான் காரணம். பெரும்பாலும் துக்க செய்தி வரும்னின் அதற்கு சில மனி நேரம் முன் மனம் பதட்டமாக இருப்பதும் அதனால் தான்.

      நீக்கு
  54. சிலரைப் பார்த்தால் மனது தானாகவே மலர்ச்சியுற்று நட்பு பூண்டுவிடுகிறோம். சிலரைப் பார்த்த உடனேயே பிடிக்காமல் போய்விடுகிறதே... அதன் காரணம் என்னவாயிருக்கும்?

    அரசுப் பணியில் வேலைப் பாதுகாப்பு, வேலைப்பளு இல்லாமை, நிறைய விடுமுறைகள் என்று அள்ளிக் கொடுக்கும்போது பிச்சை எடுக்கும் பெரும்பாலானவர்களைப் பற்றி (கையூட்டு வாங்கும்) உங்கள் அபிப்ராயம் என்ன?

    அரசுப் பணியாளர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காத்தற்கு, ஆசிரியர்களின் தரம் காரணமா இல்லை அதீத லஞ்சப் பணத்தை எப்படிச் செலவழிப்பது என்று அறியாத காரணமா?

    மோர் சாதமோ அல்லது சாதாரண தோசை (எப்போவாவது) உயிர்வாழப் போதுமானதாக இருக்கும்போது மனது ஏன் வெவ்வேறு வகைச் சாப்பாட்டை விரும்புகிறது? ஒவ்வொரு மனிதனே தன்னளவில் மற்ற சக மனிதர்களைப் பற்றிக் கவலையில்லாமல் சுயநலத்தோடு இருக்கிறான் என்று பொருள் கொள்ளலாமா?

    ஜப்பான் தேசத்தவர் தங்கள் நாட்டுப் பொருட்களையே பெரும்பாலும் வாங்கும்போது இந்தியர்கள் அயல்நாட்டுப் பொருட்களை வாங்குவது, இந்தியத் தயாரிப்பாளர்களின் தரத்தில் கொண்ட அவநம்பிக்கையா இல்லை தேசபக்தி இல்லாத தன்மையா?

    இந்த அதீத ரசிகர்கள் (ஶ்ரீ, நெ போன்ற வெளிப்படையானவர்கள் அல்லர்), நிஜமாகவே தாங்கள் ரசிக்கும் நடிகைகள் தெரு முனையில் ஒரு விழாவுக்கு வந்தால் வேலை மெனக்கெட்டு கூட்டத்தோடு கூட்டமா போய்ப் பார்ப்பார்கள் என்று நினைக்கறீங்களா?

    வெளியில் சினிமா, நடிக நடிகையர் பிடிக்காது, இந்தக் கெட்ட வழக்கம் இல்லை, அது இல்லை என்பவர்கள் உண்மையானவர்களா அல்லது வெளி பிம்பம் ஏற்படுத்துகிறவர்களா என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!