வியாழன், 15 நவம்பர், 2018

மியாவ்



மியாவ் 

அதிகாலையில் ஒலித்தது காலிங் பெல்.  திறந்தால் மளிகைக்கடைப் பையன்.    பையன் பற்றிய விவரங்களைப் படிக்க விரும்பாதவர்கள் அடுத்த பாராவை ஸ்கிப் செய்து விடலாம்.  தொடரும் விஷயங்களுக்கும்  இந்தப் பாராவுக்கும்  எந்த விதத்திலும் சம்பந்தம் இருக்காது.  மூவாயிரம் வித்தியாசங்கள் இருக்கலாம்.





பையன் என்றால் நீங்கள் 10 அல்லது 12 வயதுச் சிறுவனை கற்பனைசெய்யக் கூடாது.  இவன் 25 வயது வாலிபன்.  பி எஸ் சி பட்டதாரி.  ஆனாலும் வெளி வேலைக்குப் போகாமல் அப்பாவுக்கு உதவியாக கடையைப் பார்த்துக் கொள்ளத் தொடங்கி விட்டவன்.  மூவாயிரம் முறை சொல்லியும் வெளி வேலைகளுக்குப் போக மறுத்து விட்டான்.



'எதுவும் கொண்டுவரச் சொல்லவில்லையே...   என்ன இது காலங்காலையில்' என்று நினைக்கும்போது கையில் வைத்திருந்த அட்டைப்பெட்டியை நீட்டினான்.  பாஸிடம் "ஆண்ட்டி...   திஸ் இஸ் ஃபார் யூ..."  


                                                
என்ன என்று பார்த்தால் அதனுள்ளிருந்து "மியாவ் என்று எட்டிப்பார்த்தது சின்னஞ்சிறு பூனைக்குட்டி ஒன்று.  கொஞ்சநாட்களுக்கு முன்னால் எங்களை விட்டுப் பிரிந்த பூனையின் அதே நிறம்.  ஆனால் அதற்கு அடர்ந்த முடி இருந்தது.  மெத்மெத்தென்று இருக்கும். நீண்ட வால் அடர்முடியுடன் இருக்கும்.  இதனிடம் அது மிஸ்ஸிங் என்றாலும் அழகாகவே இருந்தது.  மூவாயிரம் வித்தியாசங்கள் சொல்ல முடியாவிட்டாலும் மூன்று வித்தியாசங்களை விட அதிகம் சொல்லலாம்.


                                
இவர்கள் கடையின் அருகே சில பூனைகள் குட்டிப்பூனைத் தயாரிப்பை மேற்கொண்டிருந்தன.  அவ்வப்போது சில குட்டிகளை எடுத்து வந்து காட்டி இருக்கிறான்.  அவன்தான் பழைய பூனை இறந்து கிடந்ததை பார்த்துச் சொன்னவன்.  (இதை நீங்க மூவாயிரம் வாட்டி சொல்லிடீங்க என்று யாரோ சொல்வது போல கேட்கிறது!)

அரைமனதுடன் வேண்டாம் என்று சொல்லியும்  இங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டான்.  மிகவும் குட்டி.  தன்னுடைய தாயை அது தேடியது என்றே தோன்றியது.  கொஞ்ச நேரத்தில் பழகி விட்டாலும் விஷமம் தாங்க முடியவில்லை.  மடியிலும் தோளிலும்தான் தூங்குவேன் என்றது!  வீடு முழுக்க மூவாயிரம் நடை சுற்றி வந்தது.  முதலில் கொஞ்சம் பால் குடித்த குட்டி பின்னர் உணவைப் புறக்கணித்தது.    அதன் பின்னால் ஓடவே நேரம் சரியாய் இருந்தது.  மெல்ல மெல்ல ஒன்றியது.



இரண்டு மூன்று நாட்கள் செல்ல, மெல்லப் பழகி ஒட்டிக்கொண்டது குட்டி.  அன்று காலை எழுந்து நடைப்பயிற்சிக்குக் கிளம்பினேன்.  வெளியில் விட்டிருந்த அட்டைப் பெட்டியில் பூனைக் குட்டியைக் காணோம்.  மூவாயிரம் ரூபாயைத் தொலைத்தவன் மாதிரி பதறிப்போனேன்.



எங்கே காணோம்?   எங்கோ உலா சென்றிருக்கிறது போல என்றெண்ணியபடியே நடந்தேன்.  எதிரில் கண்ட காட்சி மூவாயிரம் ஊசி குத்தியது போல மயிர்க்கூச்செரிந்தது.  

எதிரே ஒருபெரிய மலைப்பாம்பு வளைந்து படுத்திருந்தது..   இந்த ஏரியாவில் ஏது மலைப்பாம்பு என்று மனதுக்குள் எண்ணம் ஓடும்போதே அதன் வாயில் என்ன இருக்கிறது என்பதை கண்கள் பார்க்க மனம் பதிவு செய்தது.  

எங்கள் வீட்டு புதிய பூனைக்குட்டி.  

மூன்று நாட்களாய் எங்களுடனே நடந்து மியாவ் என்று கத்திக் கொண்டு விளையாடும் குழந்தை.  மூவாயிரம் நாட்கள் பழகிய உணர்வைத் தந்த குட்டி.



மலைப்பாம்பு பற்றி மூவாயிரம் செய்தி படித்திருப்போம்.  எதுவும் நினைவுக்கு வரவில்லை!  எப்போதோ யூ டியூபில் பார்த்திருக்கும் வீடியோக்கள் நொடியில் நினைவுக்கு வர, சட்டென அதன் அருகில் சென்று பூனையைப் பிடித்து வெளியே இழுத்தேன்.  எளிதாக இருக்கும் என்று நினைத்திருந்த என் எண்ணத்துக்கு மாறாக கடினமாக இருந்தது.  வீட்டில் இருப்பவர்களை  அழைக்கவேண்டும் என்று மனதில் தோன்றியதே தவிர செயல்படுத்த முடியவில்லை.  நேரமும் இல்லை.

பாம்பின் வால்பகுதி சுழன்று என் அருகே வருவதை கவனித்தவன் துள்ளி அதனின்று விலகினேன்.  அதே வேகத்தில் மீண்டும் திரும்பிய பாம்பின் உடல் என் ஆடுகால் சதையிலிருந்து முதுகு வரை வளைத்தது.  விடுபட நினைத்த என் முயற்சிகள் பயனளிக்கவில்லை.  காலை நான்கரை மணி.  அருகில் யாரும் இல்லவும் இல்லை.  உடம்பினுள் ஏதோ நொறுங்குவது போலிருந்தது...  மூவாயிரம் ஆண்டுக்கு முன்னான என் பழைய ஜென்மங்கள் எல்லாம் நினைவுக்கு வருவது போல இருந்தது.

நினைவிழக்கையில் விழித்துக் கொண்டேன்.   கனவு!  அம்மாடி...    உடல் வியர்த்துப்போய் நடுங்கிக் கொண்டிருந்தது.   பயங்கரக் கனவு.   தொண்டை வறண்டிருந்தது.  அணைத்திருந்த ஏ ஸியை ஆன் செய்துவிட்டுப் படுத்தும் நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை.  ஒன்று இரண்டு எண்ணினால் தூக்கம் வருமாமே...   மூன்றாயிரம் வரை எண்ணியும் தூக்கம் வர மறுத்தது.

திடீரென செத்துப்போன பழைய பூனையின் நினைவு வந்திருக்குமோ என்று யோசித்தேன்.  ஏன் இந்தக் கனவு?  புரியவில்லை.  

எப்போது தூங்கினேன் என்று தெரியாது.  விடிகாலை மனைவியின் குரல் எழுப்பியது.

"ஏங்க...   இங்கே வந்து பாருங்க...   ப்ரவீண் என்ன கொண்டு வந்திருக்கான் பாருங்க..."

எழுந்து வெளியே வந்தேன்.  என் உடம்பில் மூவாயிரம் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.

அவன் கையிலொரு அட்டைப்பெட்டி இருந்தது.  அதனுள்ளிருந்து "மியாவ் என்று எட்டிப்பார்த்தது சின்னஞ்சிறு பூனைக்குட்டி ஒன்று.   கொஞ்சநாட்களுக்கு முன்னால் எங்களை விட்டுப் பிரிந்த பூனையின் அதே நிறம்.  



- ஸ்ரீராம் -


==============================================================================================

சிங்கிள் ஸ்பேஸில் மூவாயிரம் வார்த்தைகள் இருந்தால் அது எத்தனை பக்கங்களை விழுங்கும் தெரியுமா?    ஆறு பக்கங்களை!


===============================================================================================





=======================================================================================================



சிங்கிள் ஸ்பேஸில் ஒரு பக்கத்தில் சாதாரணமாக மூவாயிரம் எழுத்துகள் எழுதினால் அது 500 வார்த்தைகள் ஆகலாம்!


===================================================================================



மூவாயிரத்தை ரோமன் லெட்டரில் MMM என்று குறிக்கலாம்.

=============================================================================================




==================================================================================================




===================================================================================================


மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன் பழமையான சிவன் கோவில்.



====================================================================================================

இரண்டு கேள்விகள்....!

மையெழுதும் கண்ணால் பொய்யெழுதிப் போனவளின் பெயர் என்ன?

பஞ்சு மிட்டாய் என்ன விலை?

==================================================================================================

இது என்ன என்று அறிய ஆவல்.  ஆனால் டுபாக்கூர் என்று தெரிகிறது!




========================================================================================================








134 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, அம்மாஸ், அக்காஸ், அண்ணாஸ், தம்பிஸ் நட்பூஸ் எல்லோருக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் இனிய காலை வணக்கமும் வரவேற்பும்...

    பதிலளிநீக்கு
  3. மியாவ் செல்லம் ஹையொ அழகு அழகு....தூக்கிக் கொஞ்சனும் போல இருக்கு...

    இன்னிக்கும் வழக்கம் போல சூப்பர் பதிவு போல நிறைய விஷயம் இருக்கே...வரேன் இங்க என் செல்லத்தை வெளில கூட்டிட்டுப் போய்ட்டு வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. 3,000ம்முறை படிக்கணும். இப்போதைக்கு 2 தரம் தான். அப்புறமா வரேன்.

    பதிலளிநீக்கு
  5. மூவாயிரம் ஹா ஹா ஹா ஹா....இந்தச் சிரிப்பும் மூவாயிரம் தடவைனு .....சொன்னேன்னு வையுங்க...

    மூவாயிரம் வாட்டி சொல்லிட்டீங்கனு// என் குரல் கேட்டுச்சோ....ஹா ஹா ஹா

    ஹப்பா ஒரு இடத்துல மூவாயிரம் மூன்றாகியிருக்கு...இன்னும் பார்க்கறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. உங்க பதிவை 3000 தடவை படிக்கணுமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ....இப்ப கொஞ்சம் தாம் ஒரு தடவை கூட இன்னும் முடியலை....வரேன்...அப்புறமா 2099.5 தடவை வாசிக்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. நான் ஒரு தடவை வாசிச்சா அது 3000 தடவை வாசிச்சா மாதிரி...ஹா ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒரு அரிசி தட்டுல போட்டா மூவாயிரம் அரிசி போட்ட மாதிரின்னு உங்க வீட்டுக்கு லஞ்ச் சாப்மிட வரவங்ககிட்ட சொல்லிடாதீங்க கீதா ரங்கன்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா ஹா ஹையொ நெல்லை சிரிச்சு முடில....

      கீதா

      நீக்கு
    3. ஹூ....ம்... நான் ஒரு தடவை பதில் சொன்னால் மூவாயிரம் முறை பதில் சொன்னாப்போல என்று விட்டு விட்டுப் போக முடிகிறதா என்ன!

      நீக்கு
  8. இது மூவாயிரமாவது பதிவா? வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் நெல்லைத்தமிழன்... முதல் ஆளா கண்டுபிடிச்சுட்டீங்க!!

      நீக்கு
    2. அட! அப்படியா? நானும் நினைச்சேன். ஆனால் இவ்வளவு சீக்கிரமா இருக்காதுனு நினைச்சுட்டேன். வாழ்த்துகள். வாழ்த்துகள்.

      நீக்கு
    3. ஸ்ரீராம்... நானும் அவ்வப்போது, பார்வையாளர்கள் எண்ணிக்கையைப் பார்க்கிறேன்... எப்போ 1 1/2 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டப்போகிறது என்று. வெகு வேகமாக அந்த இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

      இதற்கு சில காரணங்கள் உண்டு. 1. சுவையான பதிவுகள் 2. படிப்பவர்களின் கருத்துக்கு உடனுக்குடன் மறுமொழி, அது இன்னும் சில கருத்துரைகளைக் கொண்டுவருவது போன்ற involving readers தெக்கினிக்கு 3. படிக்கும் வயதில், மாலையில் ஒரு இடத்தில் நண்பர்கள் கூடி அரட்டை அடிப்பதுபோன்று, எங்கள் பிளாக்குக்கு நண்பர்களின் வருகை.

      வாழ்த்துகள் எ.பி. ஆசிரியர்கள் அனைவருக்கும். அதிலும் குறிப்பாக ஸ்ரீராம், கேஜிஜி சார் இருவருக்கும்.

      நீக்கு
    4. நன்றி நெல்லைத்தமிழன்.. இதில் உங்களுக்கும் பங்கு உண்டு... நம் சக பதிவர்கள் அனைவருக்கும் பங்கு உண்டு.

      நீக்கு
  9. இனிய காலை வணக்கம்.
    அனைவருக்கும். நல்ல கதைக் கனவு. மலைப்பாம்பு வராமல் இருந்திருக்கலாம்.
    பூனைக்குட்டி அழகோ அழகு.

    அதென்ன மூவாயிரம் . பொருள் விளங்கா உருண்டையா.

    மையெழுதும் கண்ணால் பொய்யெழுதிப் போனாளா. யார் அது. அனு அக்காவா.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.
    ஸ்ரீராம், பதிவை படித்துக் கொண்டு வரும் போது
    மலைப்பாம்பு வந்தவுடன் கனவு என்று நினைத்தேன்.
    கனவு உண்மை இல்லையா?
    அதுவும் சும்மா கதை தானா?

    பூனைகுட்டியின் படங்களை பார்க்கும் போது மனது கஷ்டமாய் இருக்கிறது.


    மூவாயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    தினம் இந்த ஒரு வாரமும் பதிவுகள் போட்ட போது வந்த நினைப்பு, எப்படி "எங்கள் ப்ளாக்கில்" தினம் பதிவு!
    பின்னூட்டங்களுக்கு பதில் என்று வியந்து தான் போனேன்.

    சாதனைதான் 3000
    3000 பற்றிய் அனைத்தும் அருமை.
    கோவில் காணொளி பார்த்தேன்.
    சிதிலம் அடைந்து இருக்கு கோவில் .

    கவிதையும் நன்றாக இருக்கிறது.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி, ஒரு காலத்தில் அதாவது சுமார் இரு வருடங்கள் முன்னர் வரை கூட நான் தினம் தினம் பதிவு போட்டிருக்கேன். சில சமயங்கள் 2 பதிவுகள் கூடப் போட்டிருக்கேன். கருத்துச் சொல்லுவோர் முதல் பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் இடைவெளி கொடுங்கனு சொல்லி இருக்காங்க. இப்போல்லாம் வேண்டாம்னு தான் கொஞ்சம் இல்லை நிறையவே இடைவெளி கொடுக்கிறேன்.

      நீக்கு
    2. கீதா , உங்களைப் போலவும் பதிவுகள் போட முடியாது .
      நீங்கள் அதி வேகமாய் டைப் செய்பவர்.
      சில பதிவுகளை உடனே போட்டால்தான் பல்ன் அளிக்கும் என்று ஒரு நாளில் இரு பதிவுகள் கூட போடூவீர்கள்.

      நீக்கு
    3. கீதா , நீங்கள் பன்முக திறமையாளர் .

      நீக்கு
    4. வாங்க கோமதி அக்கா... மலைப்பாம்பு கனவு மாதிரிதான். சும்மா கற்பனை! கதை மாதிரின்னு வச்சுக்குங்களேன்! வாழ்த்துகளுக்கு நன்றி. அந்தப் புதிய பூனைக்குட்டி ஒரே நாள்தான் எங்கள் இல்லத்தில் இருந்தது. மிகவும் குட்டி.

      நீக்கு
    5. கீதா அக்காவின் பன்முகத்திறமை எங்களையும் வியக்க வைக்கும். ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வலைப்பக்கங்களை நீர்வடித்துக் கொண்டு நடத்தி வந்தார். இப்போதும் உற்சாகம் மாறாமல் எழுதிக் கொண்டிருக்கிறார். நாங்களும் அப்படி இருக்க வேண்டும் என்று அக்காவிடம் ஆசி கோருகிறேன்.

      நீக்கு
  11. ஓமச்செடியை பிடித்துக் கொண்டு இருக்கும் மியாவ் மனதை கவர்ந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அந்தப் படம் ரொம்பப் பிடித்திருந்தது கோமதி அக்கா.

      நீக்கு
  12. ஸ்ரீராம் பூனாச்சு பத்திய செய்தியில் இடையில் வீடியோ போட்டிருந்தீங்களா? காணலையே...இல்லை எனக்குத்தான் தெரியலையா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், காணொளி உட்படச் சில படங்கள் எனக்கும் வரலை. காலம்பரவே சொல்ல நினைச்சு, வேலை இருந்ததால் கணினியை மூடும்படி ஆச்சு!

      நீக்கு
    2. இல்லை கீதா / கீதாக்கா... சிவன் கோவில் பற்றி மட்டும்தான் காணொளி. அங்கு காணொளி எதுவும் தரவில்லை.

      நீக்கு
  13. ஸ்ரீராம்ஜி கடந்தவாரம் யதார்த்தமாக தங்களது பதிவுகளை கணக்கெடுத்தேன் மூவாயிரம் தொடப்போகிறதே என்று மனதுக்குள் பிரமித்தேன்...

    இன்று இரண்டாவது வார்த்தையை படித்ததும் மூவாயிரமாவது பதிவு என்பது சட்டென புலனாகியது.

    மனம் நிறைந்த வாழ்த்துகள் இதை பாராட்டி எழுதுவோம் என்று நினைத்துக் கொண்டே கருத்துரைகளை படித்தபோது பஹ்ரைன் தமிழர் முந்திச் சொல்லி விட்டாரே... என்ற வருத்தமும் மேலிட்டது.... பரவாயில்லை மூவாயிரம் பொற்காசுகளை அவருக்கே பரிசளியுங்கள்.

    மீண்டும் மனமார்ந்த வாழ்த்துகள் தொடரட்டும் உங்களது எழு(ச்சி)த்துப் பணி. - கில்லர்ஜி

    குறிப்பு-இருப்பினும் இப்பதிவு 2990 என்று கணக்கு வருகிறதே...

    படங்கள் எதுவுமே எனக்கு திறக்கவில்லை (உங்களது இணையம் பிரச்சனை போல) பிறகு வருவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி இது உங்களுக்கெ நியாயமா...எதுக்கெடுத்தாலும் தேவகோட்டை தேவகோட்டைனு சொல்லிக்கிடுவீங்க நெல்லைக்கு மட்டும் எதுக்கு பஹ்ரைன் அடைமொழி?!!!

      அவர் நெல்லை தமிழனாக்கும்!! சொல்லிப்புட்டேன்...!!!

      நெல்லை அண்ணன் சைடுக்கு பேச இங்கிட்டு ஒரு பாப்பா இருக்கு ஞாபகமிருக்கட்டும் ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. கீதா ரங்கன்.... மிக்க நன்றி. பாருங்க... நீங்க மட்டும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்திருந்தீங்கன்னா, 'அக்கா உடையான் அடைக்கு, சீச்சீ... அனைவருக்கும் அஞ்சான்' என்று பழமொழி வந்திருக்கும். நாம் எப்போதும் நெல்லைத் தமிழர்தான். ஹாஹா.

      ஆமாம், பக்கத்து இலைக்குப் பாயசம் கணக்கா, சந்தடி சாக்குல உங்களைப் 'பாப்பா' என்று சொல்லிக்கிட்டீங்களே. இது ரொம்ப அதிகமில்லையோ... அப்படிப் பார்த்தால் நான் இன்னும் பிறந்திருக்கவே மாட்டேனே...

      நீக்கு
    3. வாங்க கில்லர்ஜி... முன்னரே பார்த்து வைத்திருந்ததனால் புரிந்துகொண்டு விட்டீர்கள். கௌ அங்கிள் இது மூவாயிரமாவது பதிவு என்று குறிப்பிட வேண்டும் என்றார். வேண்டாம் என்று சொல்லியிருந்தேன். ஆனாலும் பதிவை வெளியிட்டபின்னர் ஒரு பின்யோசனையாக மூவாயிரம் என்னும் வார்த்தைகளை நிறம் மாற்றி, மூவாயிரம் செய்திகளை பெரிய எழுத்தில் மாற்றினேன். சும்மாவே விட்டிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

      நன்றி ஜி.

      நீக்கு
    4. நெல்லை, கீதா... உங்கள் சண்டைகளை நிறுத்துங்கள். குழந்தையான என் மனம் என்ன பாடுபடும் என்று கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தீர்களா?

      நீக்கு
  14. எனக்கு மூன்று படங்கள் வரவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த மூன்று படங்கள் அக்கா?

      நீக்கு
    2. மூன்று படங்கள் அலை பேசியில் பார்த்துவிட்டேன். டேபிள் ரோஜாவிற்கு வாசம் இருக்கா என்று பார்க்கும் பூனை குட்டி படம், படுத்திக் கொண்டு உங்களை போல் கனவு காணும் தோற்ற பூனை குட்டி படங்கள் இப்போது பார்த்து விட்டேன்.

      நீக்கு
  15. முதல் இரண்டு தனி படங்களை அடுத்துள்ள 4 படங்களும் + 3 படங்களும் வரவில்லை... அதே போல் "பழகிய உணர்வைத் தந்த குட்டி" அடுத்துள்ள படமும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது மறுபடி வேறு மாதிரி இணைத்துள்ளேன். இப்போது தெரிகிறதா என்று தயவு செய்து சொல்லவும்.

      நீக்கு
  16. மின்னலாய் வகிடெடுத்து... மேகமாய்த் தலைமுடித்து...
    பின்னலாய் ஜடைபோட்டு... என் மனச எடைபோட்டு...
    மீன் புடிக்க வந்தவளே... நான் புடிக்க போனேனே...
    மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே...

    (அனுஷ்க்கு) ஆசைக்கு ஆசை வச்சேன்...
    நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய்...
    ஓசையிடும் பூங்காற்றே... நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரிகளோடு விளக்கி விட்டீர்கள்... அனுஷ்கு எல்லாம் பாடவில்லை டிடி... அந்த வரிகள் பிடிக்கும் என்பதாலும், பாடலே பிடிக்கும் என்பதாலும் கேட்டேன். இரண்டாவது கேள்விக்கு பதில் வரவில்லையே.. ஜோ அக்காவைக் கேட்டால் தெரியும்!

      நீக்கு
    2. ஓ! பஞ்சு மிட்டாய் ஜோ அக்கா விஷயமா....அப்ப நான் சொன்ன விடை இல்லையா...ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  17. மூவாயிரம்.. மூவாயிரம்...ன்னதும்
    எனக்கும் யோசனை தட்டுனது...

    பொழுது விடிஞ்சி தட்டுறதுக்குள்ள - .....

    அன்பின் நல்வாழ்த்துகள்!...

    இன்னும் பல்லாயிரம் பதிவுகள் வரவேண்டும்!..

    செண்பகப் பாண்டியனின் தமிழ்த் திருச்சபையென
    பதிவுகள் தழைத்தோங்க வேண்டும்!...

    பதிலளிநீக்கு
  18. >>> மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே...<<<

    அது அந்த -
    ஜரோஜாதேவி இல்லையில்லை... முத்து - முத்தழகி தானே!...

    பதிலளிநீக்கு
  19. இன்னுமொரு மூவாயிரம் கோடி பதிவுகள் நீங்கள் எழுதி அதை நாங்கள் படிக்க விரும்பி வாழ்துகிறேன். யாரங்கே..! ஸ்ரீராமுக்கு மூவாயிரம் ரோஜாக்கள் கொண்ட பூச்செண்டை பரிசளியுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூவாயிரம் ரோஜாக்கள் கொண்ட பூச்செண்டு.. ஆர் கே செல்வமணி கிட்ட பர்மிஷன் வாங்கிட்டீங்களா!! ஹா.. ஹா.. ஹா... நன்றி... இதெல்லாம் உங்கள் எங்கள் கூட்டு முயற்சிதான் அக்கா. நன்றி.

      நீக்கு
  20. கதை ஸ்வரஸ்யம், நீங்கள் ஒரு சுஜாதா தாசன் என்பது தெரிகிறது.
    ஏஞ்சல் எண் 3000? ஏஞ்சல் விளக்குவாரா?

    பதிலளிநீக்கு
  21. அட! ஸ்ரீராம் 3000 வது பதிவா!! சூப்பர்! வாழ்த்துகள் பாராட்டுகள்!!!

    இந்த மர மண்டைக்கு அதெல்லாம் புரியறதே இல்லை பாருங்க....நெல்லை முதல்ல...அப்புறம் கில்லர்ஜி சொல்லிட்டாங்க...நல்ல காமென் சென்ஸ்...மீ க்கு அது சுத்தமா கிடையாது ஹா ஹா ஹா...

    சரி 3000 த்துக்கு 3000 ரூ போட்டு ஸ்வீட் எடுங்க....கொண்டாடுவோம்....!!! ஹா ஹா ஹா

    https://www.hlimg.com/images/stories/738X538/25-sweets-from-25-states-of-india_1432554226m.jpg

    இந்த சுட்டில இந்தியாவின் 25 மாநிலங்கள்ல இருந்தும் ஸ்வீட் இருக்கு எல்லாரும் எடுத்துக்கோங்க....எபி யின் 3000 பதிவுகளுக்கு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நெல்லை முதல்ல...அப்புறம் கில்லர்ஜி சொல்லிட்டாங்க.// @தி/கீதா, முதல்லேயே நான் நினைச்சுட்டுச் சொல்லாமல் விட்டுட்டேன். அதை நெ.த. சொல்லி நானும் கில்லர்ஜிக்கு முன்னாடியே ஆமோதிச்சுட்டேன்! ஆகவே ஸ்ரீராம் கொடுக்கப் போடும் ட்ரீட் எனக்கே எனக்கு! :))))))

      நீக்கு
    2. நன்றி கீதா... ஸ்வீட் எடுத்துக்கொண்டோம்!!!!

      நீக்கு
    3. கீதா ரங்கன் - வெறும் மைதாமாவை சுருட்டி ஜீரா பாகு போட்ட ஸ்வீட்டைக் கொடுத்துட்டு 25 மாநில இனிப்புகள்னு சொல்றீங்களே. யாரும் சுட்டில போய்ப் பார்க்க மாட்டாங்கன்னு நினைப்பா? நானும் என்னென்ன புது இனிப்பு இருக்கான்னு பார்க்க ஓபன் பண்ணினா..... ஒண்ணுமே இல்லை.

      நீக்கு
    4. சரி சரி கீதாக்கா நீங்கதான் குயந்தையாச்சே...முதல்ல குழந்தைக்குத்தானே கொடுப்பது வழக்கம்...(இல்லைனா வயசானவங்களுக்கு....ஆ ஆ ..வயசானவங்க்னா கொள்ளுப்பாட்டி அதிரடி!) ஸோ ஸ்வீட் உங்களுக்குத்தான் முதல்ல கீதாக்கா....!!!

      நெல்லை அதெல்லாம் ரகசியாம ஒளிச்சு வைச்சுருக்கு...உங்களுக்குத்தான் சர்க்கரை வேண்டாம்னு சொல்லிருக்கீங்களே ஹா ஹா ஹா ஹா....அதான் காட்டலை..

      .சரி சரி உங்களுக்காக இதோ...ஆனா சர்க்கரை ஸோ பார்த்து - நோட் த வேர்ட் பார்த்து - எடுத்துக்கணும் ஒகேயா...

      https://www.theclassicfeed.com/29-traditional-sweet-29-indian-states/

      இதுல போங்க எல்லா ஸீவீட்டும் இருக்கு...

      கீதா

      நீக்கு
  22. எபி ஆசிரியர்களுக்கு இன்னும் மேலும் மேலும் பல்லாயிரம் பதிவுகள் எழுதிட வாழ்த்துகள்....3000 என்ன 3000 கோடியும் படிக்க ரெடி!!!

    எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க (ஸ்ரீராம் உங்க வார்த்தைகள் தான்!!! அதுக்காக 3000 ஓவா பேட்டர்ன் கேக்கப்படாது ஹா ஹா ஹா)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //3000 கோடியும் படிக்க ரெடி!!!// - கீதா ரங்கன்... சந்தியாவந்தனம் என்பதன் அர்த்தத்தை சில வருடங்களுக்கு முன்னால் படித்தது நினைவுக்கு வந்தது. அதில் மதியம் ப்ரார்த்தனையாக, சூரியனைப் பார்த்து வேண்டிக்கொள்வது, 'உன்னை இன்னும் நூறாண்டுகள் நான் காணவேண்டும் (ஜீவேம சரத: சதம், நந்தாம சரத: சதம்......அஜீதாஸ்யாம சரத: சதம்) என்பது மாதிரியான ப்ரார்த்தனையின் உள் அர்த்தம், நான் நூறாண்டுகள் வாழவேண்டும் என்பது..... உங்கள் ஆசையும் அதுபோல்தானா? ஹா ஹா ஹா

      நீக்கு
    2. //எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க (ஸ்ரீராம் உங்க வார்த்தைகள் தான்!!!//

      ஆக்சுவலா அது ஒரு எஃப் எம் லோகோ கீதா...

      நீக்கு
    3. //ப்ரார்த்தனையின் உள் அர்த்தம், நான் நூறாண்டுகள் வாழவேண்டும் என்பது..//

      எனக்கொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது நெல்லை...

      சமீபத்தில் பாஸோட பிறந்த நாள் வந்தது. ஆச்சரியமா என்னை நமஸ்காரம் பண்ணினாங்க.. யாரங்கே சிரிக்கறது? சொன்னா நம்பணும்... சரி, சரி, விஷயத்துக்கு வரேன்... நமஸ்காரம் பண்ணினாங்களா... அட.. பார்றா.. மறுபடி மறுபடி சிரிப்பு... அப்போ நான் 'அவங்களுக்கு வாழ்த்துச் சொன்னேன் "தீர்க்க சுமங்கலியா இரும்மா!" ஹிஹிஹி...

      நீக்கு
    4. //"தீர்க்க சுமங்கலியா இரும்மா!" // - சிரித்துவிட்டேன்.... இருந்தாலும் ரொம்ப யோசிச்சுப் பார்த்தால் அதுவும் கஷ்டம்தான். அது ஏன் என்று நீங்களே கண்டுபிடித்துக்கொள்ளுங்கள் ஸ்ரீராம்...

      நீக்கு
    5. ஸ்ரீராம் அது எஃப் எம் ஆ....ஓ! எனக்கு அதெல்லாம் தெரியாதே...ஹா ஹா ஹா..உங்க மூலமா தெரிஞ்சதுதான்...!!!!

      நெல்லை நானும் ஸ்ரீராமின் அதை வாசித்ததும் சிரிச்சுட்டேன்...

      நெல்லை எனக்கு நூறாண்டு அப்படின்னு எல்லாம் இல்லை...மரணம் என்பதை ஏற்றுக் கொண்டுதானே ஆகணும்...

      ஆனால் எனக்கு வாழப் பிடிக்கும்.....ஆனால் கடினமான நோய்கள் இல்லாம..யாருக்கும் தொந்தரவு இல்லாமல்...வாழனும் னு தான் நினைப்பேன்....

      கீதா

      நீக்கு
  23. புதிய பூனாச்சு வந்ததை, நிகழ்வை அழகான கதை போலச் சொல்லிட்டீங்க ஸ்ரீராம்....ரொம்பவே ரசித்துப் பார்த்தேன்....

    இதைத்தான் இந்தப் பூனாச்சுவின் பின்னால ஒரு சோகம் உண்டுனு சொன்னீங்களா...மலைப்பாம்பு?!! அதுதான் கனவுதானே...

    ஓமச்செடியை பிடித்துக் கொண்டும் அந்த ஜன்னலில் பிடித்துக் கொண்டு நிற்கும் போஸும் செம செம அழகு....ஹையோ ரொம்ப ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம்...கண் அகல மறுக்கிறது....அதே பூனாச்சு போலவே இருக்கு....அழகு...தூக்கிக்கொஞ்சனும் போல இருக்கு...

    பூனாச்சு பற்றி உங்கள் வர்ணனை நெகிழ்ச்சி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிகழ்வுன்னு சொல்ல முடியாது கீதா... பூனைக்குட்டி வந்தது மட்டும் நிஜம். ஒரே நாளில் அதைத் திருப்பி அனுப்பி விட்டோம்.பாஸ் மடியை வீட்டுக் கீழே இரண்டு மறுத்து விட்டது.. நாங்கள் நடந்தால் மட்டும் கூடவே நடந்தது. எங்கள் அருகாமையிலேயே இருக்க வேண்டும் என்று நினைத்தது. இரவை நினைத்து கவலை வந்து விட்டது. நாங்கள் அதை வெளியே விட்டு விட்டு தூங்குவோம். அது என்ன ஆகும்? எனவே கொடுத்தவனிடமே திருப்பித் தந்து விட்டோம்! அன்னை ஓர் ஆலயம் ரஜினி போல தாயிடம் குட்டியைச் சேர்த்து விட்டோம்!

      நீக்கு
    2. ஆஹா! நிகழ்வு போலவே சொல்லியிருக்கீங்க...கற்பனை அபாரம் ஸ்ரீராம்....

      அம்மாவிடம் சேர்த்தது மகிழ்ச்சிதான்...ஆனால் இன்னும் ஒரு மாதத்தில் அது பிரிந்து விடும்...அம்மாவை விட்டு...சிறிது பிரிந்து வேறு ஸ்மெல் வந்துவிட்டாலும் அம்மா சிலசமயம் சேர்த்துக் கொள்ளாது...அவர்கள் இந்த வாசனை வைத்துத்தானே அறிகிறார்கள்....பரவால்ல எங்கேயோ நலமுடன் இருக்கட்டும் ஸ்ரீராம்....நல்லதே நடக்கும்!

      எதுவானாலும் பூனாச்சு மிக மிக ரசித்தேன்..

      கீதா

      நீக்கு
  24. டிக்கெட் ஜோக் ஹா ஹா ஹா....

    கவிதை செம...அதானே வக்கற்றுப் போன 3000 எண்ணங்கள்!!!!! ஹா ஹா ஹா...(ஆ ஆ ஆ ஆ ஸ்ரீராம் 3000 பதிவு எண்ணங்களை கருத்துகளைச் சொல்லலை ல்லலை...லலை....லையீயீயீயீயீயீய்..!!!!)

    ஆனா பாருங்க உங்க 3000 பதிவுகளும் திக்கெட்டும் பரவியிருக்கு!!!! எவ்வளவு மகிழ்வான விஷயம்!! இல்லையா ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ஏஞ்சல் நம்பர் 3000 லிங்க் பார்த்தேன் ஸ்ரீராம்....ஹோ அழகான பதிவு...ரொம்பவே பாசிட்டிவ் பதிவு....நிறைய கருத்துகள் விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது ஸ்ரீராம்....நிறைய நமக்குத் தெரிஞ்ச சில விஷயங்களையும் பொருத்திப் பார்த்து அது இன்னும் சில எண்ணங்களை விதைத்தது....ரொம்ப நல்ல சுட்டி...

    ..நல்லதொரு சுட்டிய கொடுத்ததுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்....

    அந்தச் சுட்டியை வாசித்ததும் மீக்கு ஒரே ஜந்தோஜம்....ரகசியம்....ஜொல்லமாட்டேனே.....ஹெ ஹெ ஹெ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல லிங்க் இல்லை? நானும் நினைத்தேன். ரசித்ததற்கு நன்றி கீதா.

      நீக்கு
    2. //அந்தச் சுட்டியை வாசித்ததும் மீக்கு ஒரே ஜந்தோஜம்....ரகசியம்....ஜொல்லமாட்டேனே...//

      புதிய பதிவுக்கு ஐடியாவா? அல்லது ஏதோ ஒரு கேள்விக்கு விடை கிடைத்து விட்டதா?

      நீக்கு
  26. சிதிலமடைந்த்ருக்கும் பழம் பெரும் கோயில் வீடியோ அழகா இருக்கு அந்த லிங்கம்...இப்படி எத்தனை கோயில்களோ...

    கீதாக்கா சமீபத்தில் அவங்க ஊர்ப்பக்கம்.. ஒரு பழம் பெருமை வாந்த சுயம்பு கோயில் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வருது இந்தக் காணொளியில் சில இடங்களை குறிப்பா அந்த ஒத்தையடிப் பாதை அந்தக் கோயில் தூரத்து கட்டிடம் பார்த்ததும் கிட்டத்தட்ட அப்படி ஒரு படம்கீதாக்காவும் போட்டிருந்தாங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... வீடியோ பார்க்கும்போது எனக்கும் தோன்றியது.

      நீக்கு
  27. கடவுள் உருட்டி விளையாடிய பந்துகள் .....வாவ் ஸ்ரீராம் இந்தக் கவிதையையும் ரொம்பவே ரசித்தேன்....எப்படி ஸ்ரீராம் இப்படி அழகா எழுத வருது உங்களுக்கு....செம கவிதை...அழகான கருத்து...சிந்தனை....ரொம்ப ரசித்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  28. நடுல நடுல 3000 நு சொல்லித் தந்த தகவல்கள்....அந்த ப்ளூ, பிங்க் சொந்தக்கார வரிகள்....ஜூப்பர் முடிலடா சாமி!!!!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  29. அந்த டுபாக்கூர் செய்தி......மம்மி இது போல ஆனால் உயிர் வாழ்ந்த ஒருவராக.. நீங்க உங்க பதிவுல சொல்லியிருந்த நினைவு...ஸ்ரீராம்

    ஒரு சுரங்கம் விபத்துல ஒருத்தர் மாட்டிக்கிட்டு பல வருஷங்கள் உயிர் வாழ்ந்து....அப்புறம் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டவர்னு....

    ஆனா 3000 வருட மம்மி உயிர் மீண்டது?!!!!! டுபாக்கூராத்தான் இருக்கணும்...செய்தி பார்க்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா... எனக்கும் ஞாபகம் இருக்கு... நிலவில் கிடந்த பெண் உடல்! அதுதானே?

      நீக்கு
  30. கேள்விகள் ல ஏதோ விஷயம் இருக்குனு....கூகுள் பண்ணினேன்...புரிஞ்சு போச்சு...பாட்டு..

    பாட்டுக்குப் பாட்டெடுத்து....அதில் வரும் வரிதான்
    மையெழுதும் கண்ணாலே
    பொய்யெழுதி போனாளே/

    வேறு ஒரு தளத்துல டைப்போ வந்திருக்கு போல அல்லது புரிந்தது அப்படியோ அல்லது வேண்டுமென்று எழுதியிருக்காங்களானு தெரியல...

    மையெழுதும் கண்ணாலே மொய் எழுதிப் போனாளேனு//.இருந்துச்சு.....அட பொய் எழுதி என்பதும் பொருந்துது மொய் என்பதும் பொருந்துதே..

    பஞ்சுமிட்டாய் நு ஒரு படம் இருப்பதும் தெரிஞ்சுச்சு....ஆனா விலை??!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு விடை கிடைத்தது... இன்னொண்ணு? அதான் இதுன்னு சொல்லக்கூடாது!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஸ்ரீராம் அதுதான் இதுன்னு சொல்லமாட்டேன் அது பழசாயிடுச்சு...ஹிஹிஹி

      ஸ்ரீராம் யோசித்துக் கொண்டிருக்கேன் பஞ்சு மிட்டாய் விலை என்ன? என்பதை...இந்த பஞ்சு....மிட்டாய் இதுலதான் ஏதோ விஷயம் இருக்கோன்னு தோணுது....

      கீதா

      நீக்கு
    3. ஸ்ரீராம் கண்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ பிடிச்சுட்டேன்....பிடிச்சுட்டேன்....சுட்டேன்...கூகுளில்...! ஹா ஹா ஹா

      பஞ்சு மிட்டாய் சேலை கட்டி - எட்டுப்பட்டி ராசா படம்...பஞ்சு மிட்டாய் கலர் சேலை...ஒரு வேளை அதன் விலை 3000 மோ?!!! ஹா ஹா ஹா

      பாட்டு கேட்டுருக்கேன் ஆனா விவரங்கள் தெரியாது....மலேசியா வாசுதேவன் - ஜானகி...பாட்டு முழுசும் கேக்க முடியலை இப்ப...

      இதுதான் விடையா? தெரியலை சொல்லிட்டேன்...

      ஆனா பாருங்க அந்தச் சேலை விலை எல்லாம் எனக்குத் தெரியாதாக்கும்....அதுல குஷ்பு கட்டின பஞ்சு மிட்டாய் கலர் சேலை அம்புட்டுத்தான்...

      விலை எல்லாம் சொல்லணும்னா கீதாக்கா, ஏஞ்சல், அதிரா, கோமதிக்கா, வல்லிம்மா இவங்க சொல்லுவாங்க....ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  31. மூவாயிரம் பதிவுகள் தந்த எங்கள் ஸ்ரீராம். ஆச்சரியப்படும்வகையில் லக்ஷங்களைக் கூட்டிக்கொண்டே போவார். மியாவ் கூடவே சுற்றுகிறது. மிக்க ஸந்தோஷமாக இருந்தது. வாழ்த்துகளும்,ஆசிகளும் ஸ்ரீராம். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசிகளுக்கும், வாழ்த்துகளுக்கும், ரசித்ததற்கும் நன்றி காமாட்சி அம்மா.

      நீக்கு
  32. 3000 அடிப்படையில் அருமையான செய்திகள். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  33. 🙀🙀🙀🙀🙀🙀🙀ஆஆஆஆஆ என்னாதூஊஊஊஊஊஊஉ பூநாச்சை மலைப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆம்பு விழுங்கிடுச்சாஆஆஆஅ... ஹையோ மசமசவெனப் பார்த்துக் கொண்டிருக்காமல் பயர்ர்ர்ர்ர்ர்ர் எஞ்சினுக்கு அடிங்கோவன் கர்ர்ர்ர்ர்ர் நேக்கு லெக்கும் ஆடல்ல காண்ட்ஸ்சும் ஓடல்ல:)....
    🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
    ......
    ....
    என்னாதூஊஊ கனவோ கர்ர்ர்ர்ர் இப்போதெல்லாம் ஶ்ரீராமுக்கு அடிக்கடி கனவு வருதே:)...

    அதுசரி மலைப்பாம்பின் வாயிலிருந்து பறிச்சு எடுத்தீங்களோ? இல்லையோ?:) தெளிவாச் சொன்னால்தானே கனவின் பலனைச் சொல்லலாம்:)....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலைப்பாம்பின் வாயிலிருந்து பறிச்சு எடுத்தானா என்று பார்ப்பதற்குள் கனவு "அவனுக்கு" கலைந்து விட்டது அதிரா!!!!

      நீக்கு
    2. பூசார் உங்க ஃப்ரென்ட் செய்தியாக்கும் .பூஸாரா இருந்து கொண்டு பூஸாரின் செய்திய ஒயிங்கா பார்க்கலை..ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.கனவு கலைஞ்சுருச்சுனு சொல்லிருக்காரே ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
  34. எனக்கும் 3000 எனப் பார்த்த உடனேயே நினைச்சேன் போஸ்ட்டாக இருக்கலாம் என, ஆனா மொபைல்ல முடியாமல் கொம்பியூட்டர் போய் செக் பண்ணிட்டு பேசலாம் என நினைச்சு கொமெண்ட்ஸ் படிச்சேனா வெங்கட் சொல்லிட்டார்.

    மூவாயிரத்துக்கு வாழ்த்துக்கள் ... எங்கள் புளொக்கின் மெயின் ஹீரோ ஶ்ரீராமுக்கும் சின்னவீட்டுக் ஹீரோ கெள் அண்ணனுக்கும்:)... மற்றும் சைட் ஹீரோக்கள் அனைவருக்கும். இன்னும் பல ஆயிரம் போஸ்ட்டுக்கள் போட்டுக் காவியம்போல வாழ வாழ்த்துகிறோம்...
    இப்படிக்கு தேம்ஸ்கரை மக்கள்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அதிரா... நீங்கள் எல்லாம் இல்லாமல் இது சாத்தியமில்லை. உங்களுக்கும் வாழ்த்துகள்.

      நீக்கு
    2. அதிரா நெல்லைதான் முதல்ல கண்டுபிடிச்சு சொல்லிருக்கார்....அடுத்த மிஸ்ரேக்கு நெல்லை பார்த்தா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லுவார்....சரி அவருக்கு பதிலா நான் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      கீதா

      நீக்கு
  35. நெல்லத் தமிழனை இப்போ ஆரும் தேடாதீங்கோ பிக்கோஸ் அவர் இப்போ திங்கள் லட்டில் படுபயங்கர பிசியாக இருக்கிறார்:)...

    முடிஞ்சா ஒரு கப் ஸ்ரோங் ரீயும் பூந்தி லட்டும் கொண்டுபோய்க் குடுங்கோ ரயேட்டாகிடப் போறார்ர்:)... ஹையோ மீக்கு ரைம் ஆச்டு மிகுதிக்கு லேட்டா வாரேன்ன்ன். போட்டு வாறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போயிட்டு அப்புறமா வாங்க அதிரா... நெல்லையும் அங்கே லட்டு விளக்கங்கள் கொடுத்துட்டு குட்டித்தூக்கம் போடப்போயிட்டார்!

      நீக்கு
    2. நெல்லை நம்ம ஏரியா கௌலாப் புட்டு செய்ய பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றிருக்கிறார்.

      நீக்கு
    3. கேஜிஜி சார்... என் ஹஸ்பண்ட் இன்று காலையில்தான் நான் செய்பவைகள், எங்கள் வீடுகளுக்கே உரித்தான டேஸ்ட் மிஸ்ஸிங், கடைல சாப்பிடற மாதிரி இருக்குன்னு பொண் சொன்னா என்று சொன்னா (வறுத்தெடுத்தா). இப்போ ரெண்டு வாரமா ஏகப்பட்ட இனிப்பகள் செஞ்சாச்சு, சாப்பிட்டாச்சு. காணக்குறைக்கு, ஸ்ரீரங்கத்தில் வாங்கினேன், பெங்களூரில் வாங்கினேன், நேற்றைய கல்யாணத்தில் இதுவரை பார்க்காத விஷயமாக பெரிய அகல பிளாஸ்டிக் டப்பாவில் (2 கிலோ அரிசி போடும்படியான டப்பா) பெரிய சைசில் இனிப்பு, காரம் என்று 10 வகைகள் கொடுத்தார்கள்.

      இப்போ பார்த்து, ஏதேனும் செஞ்சு பார்க்கறேன், தர்றேன்னு சொன்னா, அவள் முக்கண்ணையும் திறந்துடுவா. அதுனால கொஞ்சம் அடக்கி வாசிச்சுட்டு சில வாரங்கள் கழித்துச் செய்துபார்க்கிறேன் (ஜீனிக்குப் பதிலாக வெல்லப் பொடி போட்டு).

      நீக்கு
  36. கடசிப் படம் ஒரு ஆங்கிலப் படம்... உயிரை மயக்கம்பண்ணி உடம்பை பாதுகாப்பார்களே பிளேனில் வச்டு.. பெயர் மறந்து போச்சு ... பின்பு சொல்கிறேன் விசாரிச்சு கேட்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அதிரா... இது ஒரு வீடியோ. கம்பியூட்டர் உதவியோடு அந்த முகத்தை வரைந்து உருவாக்குகிறார்கள்.

      நீக்கு
  37. பதில்கள்
    1. என்ன ஜி எம் பி சார் இப்படிக் கேட்டுட்டீங்க....ஸ்ரீராம் எபி போஸ்டுகள் 3000 எட்டியதை வெளிப்படையா சொல்லாம தன்னடக்கத்தோடு ஒவ்வொன்றிலும் சொல்லி சில நல்ல தகவல்களும் கொடுத்திருக்காரே ஸார்.

      அதைப் பார்த்திருக்கலாமே..பூஸார் பற்றிய நெகிழ்ச்சியான பதிவு கதை போன்று...படங்கள் என்று....

      ..இல்லை என்றால் கருத்துகளில் முதலில் நெல்லை சொல்லிருக்கார் அதைப் பார்த்தாலே தெரியுமே சார்...

      சார் நல்லதா நாலு வார்த்தை விஷ் பண்ணுங்க....ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. ​நன்றி ஜி எம் பி ஸார்... (அட்வான்ஸாக சொல்லி வைப்போமே!)

      நீக்கு
    3. பொதுவாக நான் பின்னூடமெழுதும்போது பிறர் கருத்துகளைப் படிப்ப்தில்லை நானென்ன எழுத நினைக்கிறேனோ அவை இன்ஃப்லுயென்சாக இருக்கக் கூடாது என்று இப்போதுதான்பார்த்தேன் ஸ்ரீக்க்கு 3000 பதிவுகளுக்கு வாழ்த்துகள் 3000 பதிவுகள் நான் எழுதியதென்றால் என்றால் என் அலப்பறை எப்படிஇருக்குமோ உங்கள் கவிதைகளை நான் ரசிக்கிறேன் தெரியும

      நீக்கு
  38. இப்போத் தான் எல்லாப் படங்களும் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா அக்கா. படங்கள் என்னால் எடுக்கப்பட்டவை!

      நீக்கு
  39. பதிவு எண்.3000? சரியாக எண்ணப்பட்டிருக்கிறதா என்று யார் உறுதிப்படுத்துவது?

    ஒருவேளை இது 3000-மாவது சொப்பனமாக இருக்கலாமோ! ‘ஸ்வப்ன சுந்தரன்’ என உங்களுக்கு பெயர் சூட்டியாகிவிட்டது - வேறு வழியில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் ஸார்... நீங்களே உறுதிப்படுத்திக்கொள்ளலாம். "பழையது கேட்கின்" பகுதியில் எண்ணிக்கை காணப்படுகிறது.

      நீக்கு
  40. ஹப்பா இப்ப எல்லா பூனாச்சு படங்களும் பார்த்தாச்சு...க்யூட் க்யூட்!!! நல்லாருக்கு படங்கள் ஸ்ரீராம்...

    அதுவும் அந்த ஓமவல்லியை பிடித்துக் கொண்டு பாஸை பார்த்து திஸ் இஸ் ஃபார் யூ நு சொல்லுதோ!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  41. மூவாயிரம் என்பதன் அர்த்தம் அப்புறம் தான் புரிந்தது கருத்துகள் பார்த்து. வாழ்த்துகள் எங்கள் ப்ளாக் மற்றும் உங்களுக்கும் ஸ்ரீராம்ஜி. மேலும் மேலும் பதிவுகள் வெளியாகி மேலும் பல ஆயிரங்கள் சேர்த்திடவும் வாழ்த்துகள்!

    பூனைப் படங்களுடன் கதையும், உங்கள் கவிதைகளும் வழக்கம் போல் அருமை ஸ்ரீராம்ஜி.

    பழம்பெரும் சிவன் கோயில் காணொளி கண்டு குறித்தும் வைத்துக் கொண்டேன்.

    ஜோக்கும் ரசித்தேன். வேர்ட்ஸ் பற்றிய தகவல்கள் நன்று.

    ஏஞ்சல் 3000 நம் பதிவர் சகோதரி ஏஞ்சலும் 3000 பதிவுகளை எட்டிவிட்டாரோ என்று நினைத்தால் பின்னர்தான் தெரிந்தது அது சுட்டி என்று. இப்போது பார்க்க முடியவில்லை. பார்க்கிறேன்...

    மம்மி படம் ஏதாவது புதிது வந்துள்ளதா?

    உங்கள் இரு கேள்விகளுக்கும் விடை எனக்குத் தெரியவில்லையே.

    அனைத்தும் நன்றாக இருந்தது ஸ்ரீராம்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துளஸிஜி. மம்மி படம் .புதிதாக எதுவும் வரவில்லை. இரண்டு பதில்களில் ஒன்று வந்து விட்டது... இன்னொன்று...

      நீக்கு
  42. வகை வகையான மியாவ்கள் பாராட்டுகள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  43. "கொஞ்ச நாட்களுக்கு முன்னால்
    எங்களை விட்டுப் பிரிந்த
    பூனையின் அதே நிறம்." என்பதே
    உள்ளத்தில் ஏதோ பண்ணுகிறதே!

    3000 ஆயிரமாவது பதிவென்றால்
    இன்னும் சிறப்பாக அமைகிறது.
    கடின உழைப்பின் பெறுதியே இது!
    பாராட்டுகள்! தொடருங்கள்!
    தொடர்ந்து வருவோம்!

    பதிலளிநீக்கு
  44. நேற்று திரும்ப வருவேன் எனச் சொல்லிட்டுப் போயிட்டு வரமுடியாமல் போனது மனதுக்கு குறையாயிருக்கு... அதனாலதான் காலம் போனாலும் பறவாயில்லை என வந்தேன்...
    பூமிப் பந்துக் கவிதை சூப்பர்.
    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆனா ஆரம்பம் நினைவு வருகுதில்லையே....
    மை எழுதும்ம்ம்ம்ம்ம் கண்ணாலே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா... இரண்டு கேள்விகளில் முதல் கேள்விக்கு பதில் வந்து விட்டதே... படகோட்டி பாடலான "பாட்டுக்கு பாட்டெடுத்து.." பாடல்தான் அது.

      இரண்டாவது பஞ்சு மிட்டாய் எண்ணவில்லை?

      "பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்...

      நீ பாதித் தின்று போட்டதால் அது லட்ச ரூபாய்..."

      'காதலன்' படப்பாடல்!

      நீக்கு
    2. //இரண்டாவது பஞ்சு மிட்டாய் எண்ணவில்லை?
      ​//

      * பஞ்சு மிட்டாய் என்ன விலை?​

      நீக்கு
  45. 3000 வலைப்பதிவுகள்.. அதுவும் ஜனரஞ்சகமான வலைத்தளத்தில். அரிய பெரிய சாதனை. தங்கள் சிறப்பான பதிவுகள் மென்மேலும் சிறக்கவும் விரைவில் பதிவு எண்ணிக்கை இரண்டு மூன்று மடங்கை எட்டவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!