சனி, 3 நவம்பர், 2018

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள்...





1) தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை அறிந்த மாற்றுத்திறனாளி ஒருவர், அதை ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவிக்க, 3 கி.மீ., துாரம் ஓடினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  






2)  ஆனால், ஆட்டோ டிரைவர்கள், மூதாட்டியை கொண்டு செல்ல முன்வரவில்லை.  அங்கிருந்த இளைஞர்கள் விக்கி, சிவா, சிவனேசன், அன்பு ஆகியோர், மூதாட்டியை டூ - வீலரில் துாக்கி சென்று, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  தீவிர சிகிச்சைக்கு பின், மூதாட்டி பிழைத்துக் கொண்டார். அவரை காப்பாற்றிய இளைஞர்களை, அப்பகுதி மக்கள் பாராட்டினர்.....

பாராட்டியது எந்த மக்கள்?  செல்பி, போட்டோ எடுத்துக்கொண்டு கரையில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள்!






3)  கல்வியறிவு பெறுவதற்கு வயது தடையல்ல...  

மாநில அரசு நடத்திய தேர்வை, 43 ஆயிரம் பேர் எழுதினர். அவர்களில், 42 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.  நான்காம் நிலை தேர்வில், கார்த்தியாயினியம்மா, 96,   என்ற பாட்டி, 98 சதவீத மதிப்பெண் பெற்று, சாதனை படைத்தார். ...






4)  விளையும் பயிர்...   11 வயதுச் சிறுவனின்  அறிவுக்கூர்மை.  முகமது ஹசன் அலி,  ஹைதராபாத்.



41 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  2. இன்றைய பதிவில் தொகுக்கப்பட்ட செய்திகள் அருமை....

    பிறகு வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெல்ல வாங்க... இன்று அவ்வளவு களைகட்டாது !

      நீக்கு
    2. காரணம் என்னவாக இருக்கும் ஶ்ரீராம்? பொதுவா மசாலா இல்லாச் செய்திகளுக்கு மகத்துவம் இல்லையோ?

      நீக்கு
    3. அதுவும் சரி. நல்ல விஷயங்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கும்போது வேறு ஏதாவது சொன்னால் நன்றாயிருக்காதோ என்கிற உணர்வும் காரணமாயிருக்கலாம்.

      நீக்கு
  3. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்...

    பாராட்டி பாராட்டி செல்பி எடுத்துக் கொள்வார்களோ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... அதையும் செல்பி எடுக்க மட்டுமே பாராட்டுவார்கள்.

      நீக்கு
    2. @ ஸ்ரீராம்...

      >>> மெல்ல வாங்க... இன்று அவ்வளவு களைகட்டாது !.. <<<

      வெள்ளிக்கிழமை என்பதால் ஆட்கள் குறைவு..
      இருந்தாலும் வேலை அதிகம்...

      ரொம்பவும் சங்கடப்படுத்துகிறார்கள் - ஸ்ரீராம்!...

      நீக்கு
  4. இன்றைய நல்ல உள்ளங்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, டிடி, நெல்லை எல்லோருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    2. கீதா ரங்கன்.. எனக்குச் சொல்ல விட்டிருந்தீங்கன்னா பெங்களூருக்கு வந்து சண்டை போட்டிருப்பேன் ��

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஹா நெல்லை தம்பீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீய்...அப்படியாவது வரீங்களானு பார்ப்போம்!!!!

      கீதா

      நீக்கு
    4. ஓ சாரி! டங்க் ஸ்லிப்பாகிப் போச்சு..தம்பீய்னு..ஹப்பா இன்னிக்கு அதிரா வரமாட்டாங்க..தப்பிச்சேன்!!! பங்களூர்னா நீங்க அண்ணே எனக்கு ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  6. இன்று தாமதம் எழுந்தது என்னவோ வழக்கம் போல்...வேலை கொஞ்சம் கூடுதல்....வரேன். பதிவுகளை மெதுவாக, விரிவாகப் படிப்பது வழக்கம். எனவே வரேன்...

    பூசார் எப்படியும் இன்று வரமாட்டாட் அதுவும் இந்த நேரத்தில் குதிக்க மாட்டார்னு தெரியும் ஹா ஹா ஹா

    இங்கிருக்கும் பெரிய மைத்துனரின் மகள் வருகிறாள் வீட்டிற்கு...ஸோ அவள் விருப்பம்....இன்றைய மெனு திருநெல்வேலி மோர்க்குழம்பு, சேனை ஃப்ரை, சப்பாத்தி, (ராவல்) பிண்டி சானா (சன்னா)...பயத்தம்பருப்பு, வெள்ளரி, வெந்த நிலக்கடலை தேங்காய் எல்லாம் போட்டு தாளித்து சாலட் (கோசுமல்லி)..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான்... சமையல் டேயா இன்று? கலக்குங்க... அதென்ன திருநெல்வேலி மோர்க்குழம்பு?

      நீக்கு
    2. ஸ்ரீராம் நெல்லை திங்க பதிவில் இந்த மோர்க்குழம்பு சொல்லியிருந்த நினைவு....கீதாக்காவும் கருத்தில் சொல்லியிருக்காங்கன்ற நினைவு...

      கீதா

      நீக்கு
    3. கீதா ரங்கன் - புளி மோர்க்குழம்பா, வெறும் டிரெடிஷனல் மோர்க்குழம்பா இல்லை நெல்லை சொதியா? சொதி எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை (நெல்லையப்பர் கோவில் முன்பு சரவணபவாவில் சாப்பிட்டேன்)

      நீக்கு
    4. சரிதான்... சமையல் டேயா இன்று?// ஹா ஹா ஹா ஹையோ ஸ்ரீராம் இப்படிக் கேட்டு ரகசியத்தை உடைச்சுப் போட்டீங்களே! அதிரடியின் கண்களில் பட்டுச்சுனா...பாருங்கோ நெல்லை என்னை மட்டும் நான் சமைப்பதில்லை...எப்போதாவதுதான் சமைக்கிறேன்னு சொல்லுறீங்களே கீதாவும் எப்போவாதான் சமைக்கிறா பாருங்கோனு சொல்லி ஆட்டம் போடுவாங்களே!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    5. நெல்லை ...நெல்லை சொதியல்ல....இங்கு தயிர் அவ்வளவாகப் புளிப்பதே இல்லை அதனால புளி விட்டுச் செய்யலாம்னு நினைச்சேன் ஆனா புளி இல்லாம வெண்டை தான் போட்டு, உ ப, வெந்தயம், மி வ வறுத்து தேங்காயோடு அரைத்து விட்டு கொதித்ததும், இறக்கி வைத்து கொஞ்சம் ஆறியதும் தயிர் கடைந்து விட்டு லைட்டா நுரைத்து வரும் போது எடுப்பது....

      கீதா

      நீக்கு
    6. புளி விட்டு தான் வெந்து, உ ப இல்லாம வெந்தயம் மற்றும் மி வ வறுத்து தேங்காயுடன் அரைத்து விட்டு எடுப்பது எரி கொள்ளி அல்லது தேங்காய் அரைச்ச குழம்புனு எங்க வீட்டுல சொல்லுவாங்க. இதுக்கு தயிர்/மோர் கிடையாது...

      உ ப சேர்த்து வறுத்து தே சேர்த்து அரைத்து கொஞ்சமா புளி சேர்த்தோ சேர்க்காமலோ (தயிரின் புளிப்பைப் பொருத்து) தயிர்/மோர் செர்த்து செய்வதை மோர்க்குழம்பு....இதை புகுந்த வீட்டில் திருநெல்வேலி மோர்க்குழம்புனு சொல்லி பெயர் வைச்சுட்டாங்க...ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  7. செல்ஃபி எடுத்தவர்கள் பாராட்டுவதற்கு தகுதியானவர்களா ? இழிபிறவிகள்.

    பதிலளிநீக்கு
  8. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  9. நல்ல விஷயங்கள் செய்ய வயது ஒரு தடை இல்லை என்பதை இன்றைய பாசிடிவ் செய்திகள் உணர்த்துகின்றன. வாழ்க நலம்!

    பதிலளிநீக்கு
  10. பொதுவாக தஞ்சை மாவட்டத்தில் -
    குறிப்பாக பட்டுக்கோட்டை பகுதி மக்கள் அன்பானவர்கள்...

    தலைமுறை மாறிய வேளையில் தர்மமும் மாறிப் போனதோ என்னவோ!...

    12 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டுக்கோட்டை பகுதி வாழ்ந்திருக்கிறேன்...

    இங்கும் வெட்டு குத்து கொலைகளுக்குக் குறைவில்லை என்றாலும்
    எல்லாவற்றையும் விட மனிதாபிமானம் மேலோங்கியிருந்தது...

    எல்லாம் பழங்கனவுகளாகிப் போயின...

    செல்பி மோகத்தால் அறிவழிந்தவர் கணக்கு எண்ணி மாளாது...

    சென்ற வாரத்தில் கூட - அமெரிக்காவில் மலைமுகடு ஒன்றில் நின்று செல்பி எடுத்த
    இந்தியத் தம்பதியினர் கீழே விழுந்து மரணத்தைத் தழுவியிருக்கின்றனர்..

    பதிலளிநீக்கு
  11. 96 வயதுடைய பாட்டி கண்ணாடியின்றித் தேர்வு எழுத -
    11 வயதுடைய பாலகனுக்குக் கண்ணாடி தேவைப்படுகின்றது...

    என்ன ஒரு விசித்திரம்!...

    பதிலளிநீக்கு
  12. பல உயிர்களைக் காப்பாற்றிய மாற்றுத் திறனாளி, ஓர் உயிரை மீட்ட இளைஞர்கள் என்று முதல் இரு செய்திகளுமே அருமை. வேடிக்கப் பார்க்கும் கூட்டத்தினிடையே, அதுவும் படம் பிடித்துக் கொண்டிருந்த கூட்டம்...இளைஞர்கள் துரிதமாகச் செயல்பட்டுக் காப்பாற்றியிருப்பது இளைஞர் சமுதாயம் நம்பிக்கை அளிக்கிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  14. கார்த்தியாயினி பாட்டி செம!!! பாட்டிக்கு வாழ்த்துகள். 96 வயது!! அந்த வயதில் படிப்பு மெமரி என்று சூப்பர் பாட்டி!

    முகமது ஹசன் அலி வாவ் போட வைக்கிறார். அவரது திறமை மேலும் வளர்ந்து இறுதி வரை நிலைக்கட்டும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  15. மிக அருமையான செய்திகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
    உதவும் எண்ணம், தன் உடல் குறையை மறந்து பல உயிர்களை காப்பாற்றிய மாமனிதர்
    கல்விக்கு வயது இல்லை என்று சாதித்து காட்டிய அம்மா. சிறு வயதிலும் அறிவு கூர்மை என்று அனைத்து செய்திகளும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  16. கார்த்தியாயினி பாட்டியைப் பற்றிப் படிச்சேன். மனதுக்குள் நமஸ்கரித்தேன். அதே சமயம் எனக்கு வெட்கமா இருந்தது. நாம் ஒன்றுக்கும் உதவாமல் இருக்கோமேனு. மற்றவை புதுசு. பல உயிர்களைக் காத்த மாற்றுத் திறனாளிக்கும், மூதாட்டியைப் பிச்சைக்காரி தானே என அலட்சியம் செய்யாமல் உயிரைக் காத்த இளைஞர்களுக்கும், இஞ்சினியர்களுக்குப் பாடம் போதிக்கும் சிறுவனுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. இன்னிக்குக் கோயிலுக்குப் போக ஏற்பாடுகள் செய்ததால் காலை சிறிதே நேரம் கணினி, வாட்சப் ஆகியவை பார்த்தேன். அப்புறமா இப்போத் தான் உட்கார்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  18. நல்ல மனம்வாழ்க நாடுபோற்ற வாழ்க

    பதிலளிநீக்கு
  19. மாலை வணக்கம்.

    அனைத்துமே அருமையான செய்திகள்.

    இரயில் தண்டவாள விரிசல் செய்தி மற்றும் மூதாட்டி எழுதிய தேர்வு செய்திகள் முன்னரே படித்தேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. பாட்டியின் தன்னம்பிக்கை ஒரு முன்னுதாரணம் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  21. கார்த்தியாயினி பாட்டி பத்தி டிவியில் பார்த்தேன்..

    நல் உள்ளங்கள் நலம் வாழட்டும்

    பதிலளிநீக்கு
  22. அரியோரைப் பற்றிய அரிய செய்திகள், வழக்கம்போல. அருமை. பாட்டி அனைவருடைய மனதிலும் நின்றுவிட்டார்.

    பதிலளிநீக்கு
  23. பாட்டிதான் கண்ணில் பட்டார். என்ன ஒரு முயற்சி. மன்ம் பூராவும் மகிழ்ச்சி. நமஸ்காரம் பாட்டி.
    அந்த மாற்றித்திறனாளியின் நல்ல உள்ளத்துக்கு, முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள். அவருக்கு உடல் நோவு தீர யாராவது உதவி இருந்தால் இன்னும் மகிழ்ச்சி.
    இந்தக் குட்டிப்பையனின் திறமை ஆச்சரியப் படுத்துகிறது. கண்ணில் தான் என்ன தீர்க்கம். முன் ஜன்ம வித்தோ. சுக முனிவர் போல தீக்ஷண்யம். நூறாண்டு வாழ்ந்து வளம் பெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  24. நல்ல செய்திகளின் தொகுப்பு. தலைப்பு விஷயம் மட்டும் நெருடல்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!