செவ்வாய், 6 நவம்பர், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : தீபாவளி சுவீட்டு . . - ஏகாந்தன்


தீபாவளி சிறப்புச் சிறுகதை 


தீபாவளி சுவீட்டு . .
- ஏகாந்தன் -
-

பிள்ளையார் கோவில் பக்கத்தில் நின்றிருந்த அந்த பூவரசமரத்தினடியிலே,   ஒரு குட்டி மாநாடு அப்போதுதான் ஆரம்பித்திருந்தது. பூம்பூம் மாட்டுக்காரப் பையன்கள், பொண்டுகளின் செயற்குழுக் கூட்டம். நின்றிருந்தவர்களில் மூத்தவள்தான் வள்ளிக்கா. 

அப்படித்தான் மற்ற மூணுபேரும் அவளைக் கூப்பிட்டு வந்தார்கள். மாநிறமா, உயரமா, கொஞ்சம் லட்சணமா வளர்ந்திருந்த
அவளுக்குப் பதினைந்து வயசுதானிருக்கும்.  கருப்புக் கயிறு மாலை, மணிகள், குஞ்சலம், முதுகில் ஒரு ஜரிகை மினுமினுப்போடு சிகப்புத்துணி என அலங்கரிக்கப்பட்டிருந்த தன் மாட்டைக் கையில் பிடித்தவாறு ஒயிலாக நின்றுகொண்டு அவள்தான் பேசிக்கொண்டிருந்தாள். சிறிசும் பெரிசுமாக ஆளுக்கொரு பூம்பூம் மாடாகக் கையில் பிடித்துக்கொண்டு நின்றிருந்த பத்துப் பனிரெண்டு வயதொத்த இரண்டு சிறுவர்களும், அவர்களை விடக் கொஞ்சம் வயதில் சிறியவளாக, ஓவல் முகமும் குறுகுறு கண்ணுமாய் ஒரு சிறுமியும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.   

எதிர்க்கட்சியின் ரகசிய உளவாளிபோல, பூவரசமரத்தின் அடர்ந்த கிளையிலிருந்து தலையைச் சாய்த்து, கீழே பார்த்தவாறு இவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது ஒரு காகம்.

அந்த மதியத்தில் வெயில் வெளுத்தாலும், பூவரசு நிழலைப் பரப்பிக்கொண்டு குளுமையைத் தந்து நின்றிருந்தது, அவர்களுக்கு இதமாயிருந்தது.

’இன்னும் ரெண்டு நாளுதான். நமக்கும் திங்கிறதுக்கு சுவீட்டு கெடச்சிறும்!’ என்றாள் வள்ளிக்கா, முகமெல்லாம் பிரகாசமாய்.

‘சுவீட்டா!’ என்றனர் ஒரே குரலில். சேகரும், குமாரும்.

‘அப்படீன்னா லட்டுதானே?’ என்றாள் தங்கம், கண்கள் பளபளக்க.

‘வள்ளிக்கா! இந்தப் பொய்யிதான வேணாங்கறேன்..   அதுல்லாம் நம்பிளமாதிரி ஆளுங்களுக்கில்ல.. விட்டுரு..’  என்றான் சேகர் இடுங்கிய முகத்துடன்.

’நமக்குள்ளாம் ஒத்தரூபா, ரெண்டுரூபாக் காசுதான்.. டீதான், முறுக்குதான்..’ என்றான் குமார்.

’ரொம்பத்தான் இப்பிடி ஆசப்படக்கூடாது.. அந்த சாமிக்கே பொறுக்காது..’
என்றாள் தீர்க்கமாக, சின்னவளான தங்கம்.

‘அடே.. மூதிங்களா! மத்த நாளப்பத்தியா சொல்லுறேன்.. தீபாளி வருதுல்ல.  அதத்தான் சொன்னன். ஆனா, எங்க இப்படிக் கொடுப்பாக ..? கேள்விப்பட்டன்..  ஞாபந்தான் வரமாட்டங்குது!’ தலையைக் கோதிக்கொண்டே பரபரப்பைக் கிளப்பினாள் வள்ளிக்கா.

’தீபாளியா? ரெண்டு மூணு மாச மின்னத்தானே வந்துச்சு..  கோயில்ல
கூட்டம் தெணருச்சே, அதானே?’ என்றான் குமார்.

’யேய்.. முட்டாளு! அது வேற பண்டிகடா. இப்ப வர்றதுதான் தீபாளி.. பெரிய்ய பண்டிக..  புரிஞ்சுக்க..’ விளக்கினாள் வள்ளிக்கா.

’பெருசுன்னா.. அதுக்காக ?  நமக்கெல்லாமா கொடுப்பாக சுவீட்டு?’  தங்கம்
கேட்டாள்.  அவளால் இதை நம்பமுடியவில்லை.

’ஆங்..! நெனப்புல வந்துருச்சு.. அந்த அனுமார் கோவிலு இருக்குல்ல?
அங்கினதான்!  லட்டு மாதிரி சுவீட்டுல்லாம் பிரசாதமாக் கொடுப்பாகன்னு
நாலஞ்சுபேரு பேசிக்கிட்டாக..’ வள்ளிக்கா சொல்ல,

’அனுமாரு கோயிலா ? பெரிய கடத்தெருவெல்லாம் தாண்டிப்போனா ஒரு
முக்கு வருமே.. அங்கினகூட ஒரு சிக்னலு..?’ இழுத்தான் சேகர்.
’சிக்குனலா?’ முழித்தான் குமார்.

’அதான்டா.. பெரிய ரோட்டுப்பக்கமா கம்பத்துமேல செவப்பும், பச்சையுமா
மாறிமாறி லைட்டு எரியுமில்ல.. பாத்ததுல்லே?’

’ஓ..அதுவா?’

’அதான்.. அந்தக் கோயிலு வாசல்லபோய் ரெண்டுபேரும் நின்னுருங்க
சாயங்காலமா. பூச முடிஞ்சு சுவீட்டு கொடுப்பாகலாம்..  வாங்கியாந்துருங்க!’ என்று உற்சாகமூட்டினாள் வள்ளிக்கா.

அந்த சுவீட்டு வாயில் வந்து விழுந்துவிட்டதைப் போல் ஊறிய எச்சிலை
விழுங்கிக் கொண்டு, தன் அழகிய கண்களை மெல்ல மூடித் திறந்தாள் தங்கம்.

’சரிக்கா.. அப்ப நீ?  எங்ககூட வரமாட்டியா வள்ளிக்கா?’ என்றான் சேகர்.

’நானும் தங்கமும் அன்னிக்கி, இங்கின புள்ளயாரு கோயில் வாசல்ல
நிப்பம்..  எதுனாச்சும் கெடக்குதான்னு பாத்துகிட்டு.   நீங்க ரெண்டுபேரும்
அனுமாரு கோயில்ல பொறுமயா நின்னு,  எப்பிடியாவது வாங்கிடுங்க
சுவீட்டு..  வேற எதுனாச்சும் கொடுத்தாலும் வாங்கிக்கிடுங்க.. கெடக்கறத
எடுத்துக்கிட்டு வாங்கடா..  பங்குபோட்டுத் திம்பம்.  சரியா?’ என்றாள்
வள்ளியக்கா.

சிந்தனையோடு தலையாட்டினார்கள் சேகரும், குமாரும்.

’நாளக்கி மறுநா சாயங்காலம்.. மறந்துரக்கூடாது ?’ எச்சரித்த வள்ளிக்கா
மாட்டுடன் சாலையில் நடக்கலானாள்.

தன் மாட்டையும் இழுத்துக்கொண்டு வள்ளிக்காவைத் தொடர்ந்த தங்கம்,
மேலே அடர்ந்த கருமேகங்களைப் பார்த்துக்கொண்டே ஓரமாக நடந்தாள்.
கற்பனையில் இழைந்த அவள் மனம் ‘அந்த அனுமாரு மனசு வச்சா, சுவீட்டு கெடக்காமலா போயிரும்’ என்று சொல்லிக்கொண்டுவந்தது.


==================================================================================================

சிறப்பு தீபாவளிப் பாடல்கள்.







84 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, எல்லோருக்கும்!

    அனைவருக்கும் இனிய தீபஒளி நல் வாழ்த்துகள்! இனிதே அமையட்டும்! எல்லோரும் மகிழ்வாய் நலமுடன் வாழ்ந்திட பிரார்த்தனைகள், வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. ஆஹா இன்று ஏகாந்தன் அண்ணா கதை சிறப்புப் பாடல்கள் வேறு...களை கட்டுதே ஆனா கொஞ்சம் லேட்டாகும்......

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  5. நட்புகள், உறவுகள், வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. இல்லாதார் இதயத்திலும்
    திருநாளின் தீபங்கள்...

    அவர் குறையும் தீரவே
    அனுமன் அருள் புரிகவே!...

    பதிலளிநீக்கு
  7. பதிவுலக அன்பர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. கதை அருமை ஏகாந்தன் அண்ணா...மனதை என்னவோ செய்துச்சு...

    கதை ஒட்டிய சில விஷயங்களைப் பதிவு எழுதி வைத்திருக்கேன்...இன்று வெளியிட நினைத்து முடியவில்லை. படங்கள் இணைக்க முடியலை...

    அருமையான கதை அண்ணா....

    //எதிர்க்கட்சியின் ரகசிய உளவாளிபோல, பூவரசமரத்தின் அடர்ந்த கிளையிலிருந்து தலையைச் சாய்த்து, கீழே பார்த்தவாறு இவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது ஒரு காகம்.//

    ஹா ஹா ஹாஹா மிகவும் ரசித்தேன்...

    மீண்டும் வரேன் கருத்து போட...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @கீதா: ..கதை ஒட்டிய சில விஷயங்களைப் பதிவு எழுதி வைத்திருக்கேன்...இன்று வெளியிட நினைத்து முடியவில்லை.//

      என்ன அது! த்ரில்லும் சஸ்பென்ஸும் போட்டிபோடுதே..!

      நீக்கு
  9. காலை வணக்கம்.

    தீபாவளிக்கான சிறப்புக் கதை.... பாராட்டுகள்.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  10. எங்களுக்கு இரவு முழுதும் வேலை இருக்கு.
    1 மணி ஆகிடும் படுக்க.
    அனைவருக்கும் தீபாவளி களைகட்டி இருக்கும். இந்தக் குழந்தைகளுக்கும் இனிப்பிப் பண்டங்கள் அனுமன் அருளட்டும். தீபாவளியின் மறுபக்கம்.
    அனைவருக்கும் மனம் நிறை ஒளித்திரு நாள் வாழ்த்துகள். வாழ்த்துகள் ஏகாந்தன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா இரவு லேட்டாகிடுமா...அப்போ தீபாவளி களை கட்டுதுனு சொல்லுங்க வல்லிம்மா..ஆமாம் அங்கு இந்தியய்க் குடும்பங்கள் எல்லோரும் கூடும் தினம் விருந்து என்று போகுமே....

      கீதா

      நீக்கு
  11. அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

    கதை அருமை ஏகாந்தன் சார். யதார்த்தம்..

    தீபாவளிக்கு இங்கு எங்களுக்கு இன்று ஒருநாள் விடுமுறை. பட்டாசு எதுவும் வெடிக்காது..

    உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் பதிவுகள் வாசிக்க இயலாமல் இருந்தது. இப்போது சரியாகிவருகிறது...கல்லூரிப் பணியும் மிக்வும் டைட்டாகப் போகிறது. மாலை வீடு வந்ததும் அடுத்த நாள் பாடம் தயாரித்தல் என்று. கல்லூரியில் பாடம் நடத்தவும் நிறைய க்ளாஸஸ்....நேரம் ஓடுகிறது. இடையில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் தான் பதிவுகள் வாசிக்க இயலுகிறது. வீட்டுப் பணிகளும் இடையிடையே..

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆ !இப்போதான் கவனிக்கிறேன் துளசி அண்ணா இப்போ உடல்நலம் சரியாகிடுச்சா .டேக் கேர்.

      நீக்கு
  12. கதையில் வரும் குழந்தைகள் போல எந்தப் பண்டிகை பற்றியும் அறியாத கொண்டாட முடியாத குழந்தைகள் குடும்பங்கள் என்று தங்கள் தினப்படி வாழ்க்கையை ஓட்டவே மெனக்கிட்டுக் கொண்டிருக்கும் குடும்பங்கள் எத்தனையோ இருக்கின்றன...வாழ்வின் யதார்த்ததின் மறுபக்கம். மனம் கதையையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது..

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஆசைப்பட்ட சுவீட்டு கிடைத்திருக்கும் என்று நம்புவோம்

    பதிலளிநீக்கு
  14. இங்கு தெரு முனைகளில் இருக்கும் குப்பை டப்பாக்களில் குறவப் பெண்ணும் இன்னொரு ஆணும் ஒவ்வொரு குப்பையாக்க் கிளறி தங்களுக்கான பொருட்களை எடுப்பார்கள். அனேகமாக தினமும். நான் கடக்கும்போது ஏதேனும் கொடுங்கள் என்பதுபோல் பார்ப்பார்கள். மனதைச் சலனப்படுத்தும்.

    இருப்பவர்களுக்கு எல்லா நாளும் தீபாவளிதான். ஆனால் இல்லாதவர்கள்?

    அந்தப் பக்கத்தைப் படம் பிடித்த ஏகாந்தன் அவர்களைப் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருப்பவர்களுக்கு எல்லா நாளும் தீபாவளிதான். ஆனால் இல்லாதவர்கள்?//

      யெஸ் யெஸ் அதே நெல்லை...

      ஏகாந்தன் அண்ணா அருமையா எழுதியிருக்கார் இந்தப் பக்கத்தையும்...பாராட்டுகள் அண்ணா, வாழ்த்துகளும்

      கீதா

      நீக்கு
    2. @ நெல்லைத் தமிழன், இன்னமும் குப்பை பொறுக்கறாங்க, அதுவும் எச்சிலைக்கிளறும் குறவர்கள் இருக்காங்க என்பது ஆச்சரியமாத் தான் இருக்கு! அவங்களுக்குப் பல நலத்திட்டங்கள் வந்தன! :(

      நீக்கு
    3. கீசாமேடம்.. அடையாறு காந்தி நகரில் நான் தினமும் பார்க்கும் காட்சி இது. வீட்டின் குப்பைகளை (முந்தைய நாள் பாக்கி கூட்டு போன்றவற்றோடு) trash binல் போடும்போது பையை இடது கையில் பிடித்து பொதுவா மேல படாம தள்ளி வச்சுக்கிட்டே போவோம். அவங்க அந்த trash bin smellல உள்ள கைவிட்டு ஒவ்வொரு பையாக எடுத்து அதில் உபயோகமான போருள் இருக்கான்னு தேடுவால்க.

      நான் அவங்க கேட்டால் பணம் கொடுப்பேன், சில சமயம் கண்டுகொள்ளாத்துபோல் நகர்ந்துடுவேன். அதில் எத்தனை தடவை இறைவன் வந்தாரோ...

      நீக்கு
  15. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

    அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை ஆமாம் ல இப்படியான மக்களில் பகுத்துண்டு என்பது நிறையவே காணலாம். பங்கு போட்டுத் தின்னலாம்னு சொல்லுவது போல ஏழை எளிய மக்கள் வீட்டில் அவர்களிடம் இந்தப் பண்பை அதிகம் காணலாம்...இதைப் பற்றித்தான் நான் பதிவு ஒன்றும் எழுதியுள்ளேன்..

      கீதா

      நீக்கு
    2. நெல்லைத் தமிழன் ஏன் உங்களைக் காமாட்சியிலும்,சொல்லுகிறேனிலும் காணக்கிடைக்கவில்லை. மனதுஅதையே யோசித்துக்கொண்டு இருக்கிறது. உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துகளும்,ஆசிகளும். அன்புடன்

      நீக்கு
    3. இப்போதான் இந்தப் பின்னூட்டத்தைப் பார்க்கிறேன் காமாட்சி அம்மா. நேற்று பயண ஏற்பாடு மற்றும் ஒரு இனிப்பு தயார் செய்தேன். இன்று தீபாவளி பெங்களூரில். மாலையில் அங்கு வந்தேன்.

      நீக்கு
  16. அனைவருக்கும் இனிய தீபஒளி நல் வாழ்த்துகள்.

    கதைக்கு பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி மகள் மருமகனின் தலைதீபாவளி கொண்டாட்டம் கலகலக்குது போல!!! சூப்பர் எஞ்சாய்...

      கீதா

      நீக்கு
    2. கில்லர்ஜி... உங்கள் மகள் மருமகனுக்கு எங்கள் தலைதீபாவளி வாழ்த்துகள்.இப்போவாவது செஞ்ச ஸ்வீட்ஸ் படம் போடுங்க

      நீக்கு
    3. கில்லர்ஜி! உங்களது அருமை மகள், மருமகனுக்கு இனிய தலைதீபாவளி வாழ்த்துக்கள். இன்பம் பெருகட்டும் எப்போதும்.

      நீக்கு
  17. கதை நன்று இனிய தீபாவளி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  18. எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள், நட்புகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள். இறை அருளால் எங்கும் இன்பமும், அமைதியும் பெருகட்டும்.

    பதிலளிநீக்கு
  19. நம்பிக்கையில் திட்டம்போடும் வறிய குழந்தைகள். போங்கபோங்க இங்கெல்லாம் நிக்கக் கூடாதுன்னு துரத்தாது இருக்கணும். ஒருகாலத்திலே எச்சில் இலை வழக்கம் இருந்தது. நிறைய கிடைத்தது. அந்த வழக்கம் இப்போ இல்லை.நல்லது. அதிலே கூட ஒண்ணுமே இல்லாத காலம். அவர்கள் கூட முன்னுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். நல்ல பிரஸாதம் கிடைச்சு பசங்களாசை தீரணும். கதை . இப்படியும் நிதரிசனங்கள் இருக்கு. தீபாவளி வாழ்த்துகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  20. //பங்குபோட்டுத் திம்பம். சரியா?’ என்றாள்
    வள்ளியக்கா.//


    இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கனும்.
    இறை அருளால் அவர்களுக்கு ஸ்வீட் கிடைக்க வேண்டும், அவர்கள் அதை பங்கு போட்டு சாப்பிட்டு இருக்க வேண்டும் என்று மனது விரும்புகிறது.
    நல்ல கதை .பாடல்கள் நல்ல பாடல்கள்.
    அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  21. பாடல்களில் இரண்டுமே கேட்டிருக்கேன் ஸ்ரீராம். நல்ல பாடல்கள் நல்ல ராகங்கள் சட்டென்று பிடி கிட்ட மாட்டேங்குது...சொல்றேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  22. நட்புக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. பூவரசமரத்தடி மாநாடு பேச்சாளர்கள் உளவாளி காகம் என அனைவரும் மனதில் நிற்கிறார்கள் ..
    பூவரச மரமாவது ஏழை பணக்காரன் வேற்றுமையின்றி நிழலை இதமாய்த்தந்ததே அந்த குழந்தைகளுக்கு .
    படிச்சிட்டே வரும்போது மனம் கனத்தது .பசியோடிருக்கக்கூடாதுன்னு .காட்டு பறவைகளுக்கு கூட உணவை வாங்கி கொடுக்கும் நாட்டில் இருப்பதால் இது போன்ற காட்சிகள் என்னமோ பண்ணுது ..யாராவது ஒரு ஸாண்டா போலா ஒளிஞ்சிருந்து இந்த குழந்தைங்களுக்கு அதுங்க ஆசைப்பட்ட ஸ்வீட்ட்டை கொடுக்க மாட்டாரா என்று மனம் ஏங்குது .
    இல்லாமையிலும் பங்கிட்டு உண்ணும் குணம் உயர்ந்து நிற்கிறாள் வள்ளிக்கா
    ஹனுமான்ஜி மற்றும் எல்லா கடவுள்கிட்டயும்வேண்டிக்கிறேன் எலலா ஆதரவற்ற குழந்தைகளுக்கும் ஒரு நாளா வது அதுங்க ஆசைப்பட்டது கிடைக்கட்டும் தயவுசெஞ்சி மனசு வைக்கவும் ஆல் மைட்டி கடவுள்களே !!
    என்னமோ மனதை பண்ணிவிட்டது ஏகாந்தன் சார் உங்கள் கதை ...
    குழந்தைகள் ஆசைப்பட்ட மாதிரி அனுமார் கோயிலில் ஆளுக்கொரு லட்டு கிடைக்கிற மாதிரி முடிச்சிருந்தா நான் ரொம்பவே ஹாப்பியாகியிருப்பேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னதைப் படித்தவுடன் என் அனுபவம் ஞாபகத்துக்கு வந்தது. நானும் என் நண்பனும் கம்ப்யூட்டர் படிப்பு முடித்து டிரெயினாக வேலை பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது தி நகர் தெருவில் நாங்கள் இருவரும், "நம் எதிர் காலம் எப்படி இருக்கப் போகிறதோ, எப்போ நல்ல கம்பெனில வேலை கிடைக்கும்" என்று கொஞ்சம் கவலையோடு பேசிக்கொண்டிருந்தோம். அப்போ ஒரு பெரியவர், எங்கள் தோளைத் தட்டி, நீங்க நல்லா வருவீங்க, நல்ல எதிர்காலம் உங்களுக்கு உண்டு, கவலைப்படாதீர்கள் என்று சொல்லிவிட்டு அப்படியே நடந்து சென்றுவிட்டார். அது எவ்வளவு மனத் திருப்தியையும் சந்தோஷத்தையும் தந்தது என்பதை விவரிக்க முடியாது. பிறகு நாங்க நல்ல நிவைக்கு, நாங்கள் கற்பனை செய்திராத உயரத்துக்குச் சென்றோம்.

      அதுபோல அந்தக் குழந்தைகளுக்கும் யாரேனும் இனிப்பும் நம்பிக்கை விளைவிக்கும் வார்த்தைகள் கூறுவதாக முடித்திருக்கலாமோ (அது கிளிஃஷே வாக இருந்தாலும்) என்று நீங்கள் எழுதியதைப் படித்தபின் தோன்றியது ஏஞ்சலின். பசித்த வயிரைப் பார்த்தபிறகு எப்படி நிம்மதியாக உண்ண முடியும்?

      நீக்கு
    2. அதேதான் நெல்லைத்தமிழன் ..ஒரு ஆறுதலான வார்த்தை நம்பிக்கைதரும் ஒரு வார்த்தை உங்களுக்கு தன்னம்பிக்கையை ஆறுதலை தந்ததுபோல் அந்த குழந்தைகளை மகிழ்வித்திருக்கும் ..நான் சும்மாவே உணர்ச்சிவசப்படுவேன் நாலு கால் செல்லம் பார்த்தா கூட அதுக்கு பசியோனு மனசு பதைக்கும் அப்போ சின்ன பிள்ளைங்க அதுங்களோட சின்ன ஆசை ஸ்வீட் தானே .இது கூட பார்க்காம கிடைக்காம எத்தினி பேர் இருக்கிறாங்க :( இதெல்லாம் ரவுண்ட் கட்டி கண் முன் வந்து நின்னு கண்களை பனிக்க வைத்தது ..எதிர்பாராம ஆசைப்பட்ட ஒரு பொருள் கிடைச்சா அந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை .

      நீக்கு
    3. @ நெல்லைத் தமிழன், ஏஞ்சல்:

      நெல்லை, உங்கள் விஷயத்தில், இனிப்பு வார்த்தை, இதமான வார்த்தை அசரீரி போல உங்களைத் தேடிவந்தது. அது எப்போதும் எல்லோருக்கும் நிகழாதே.. என்ன செய்வது?

      ஏஞ்சல், நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா!

      நீக்கு
    4. ஒரு சிலரை பெரும்பணக்காரராவும் டிப்ஸா 500 /1000 வீசி சாப்பாட்டை அலட்சியம் செய்யும் உணவின் மதிப்பு தெரியாதவர் ஆகவும் சிலரை ஒரு வேலை உணவுகூட கிடைக்காதவராகவும் படைத்த கடவுளை நறுக்குன்னு நாலு கேள்வி கேட்டுட்டே:) நீங்க சொன்னதை ஒத்துக்கறேன்
      ஆனா இப்படி திடீர் சந்தோஷம் அதுவும் மனம் சலனத்தில் இருக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்த வார்த்தையால் விவரிக்க முடியாதது .எல்லாருக்கும் இப்படி அசரரீ கஷ்டமான நேரங்களில் அவர்களுக்கு தேவையான நேரத்தில் தேடிபோகணும் என்பதே எனது பிரார்த்தனை .
      இதை எழுதும்போது இன்னொன்னு சொல்லணும் நான் நவம்பர் துவங்கி மார்ச் வரை டவுன் பக்கம் போக மாட்டேன் .ஜெர்மனியில் நிலை வேறே ஆனா இங்கே லண்டனில் மூலைக்கு ஒரு ஹோம்லெஸ் மனிதர் குளிரில் படுத்திருப்பார் :( மனசெல்லாம் வலிக்கும்
      - டிக்ரீஸ் ..இதெல்லாம் பார்க்க பிடிக்காமயே நானா சிட்டி சென்டர் இந்த நாட்களில் போவதில்லை .ஆனா மகள் சொன்னா /அம்மா நீங்க வந்தா அவங்களுக்கு ஒரு கப் காபியோ டீயோ அல்லது சூப் சூடா வாங்கி தரலாமே ....அதுவும் உதவிதான் னு சொன்னா .கொஞ்சம் கன்னத்தில் அடிச்சாப்ல இருந்தது

      நீக்கு
    5. கண்டிப்பா கிடைச்சிருக்கும் ஏஞ்சல்! அதுதான் அக்கதையின் முடிவில் இருக்கும் நம்பிக்கை...நம் எல்லோரையும் அப்படி நினைக்க வைத்த ஒரு முடிவு ஏகாந்தன் அண்ணா கொடுத்தது என்று தோன்றியது....
      பொதுவாகவே... நாம் உணர்ச்சிவசப்படும் போது நம் மனசு கொஞ்சம் நெகட்டிவா திங்க் பண்ணுதோ??!!!!

      உங்கள் மகள் வாவ்! ஷரனுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் காட் ப்ளெஸ்!

      கீதா

      நீக்கு
  24. தாயினும் செல்வங்கள் பாட்டில் மொத்தமா ஜிவாஜி அங்கிள் முத்துராமன் அங்கிளை சேர்த்து போட்டதில் ஸ்ரீராமுக்கு பெரிய சந்தோஷமாயிருக்குமே :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆளைப் பார்க்காதீங்க ஏஞ்சல்... பாட்டைப்பாருங்க... இன்னொரு பாட்டு தேடினேன் கிடைக்கவே இல்லை. மனசுக்கேத்த மாப்பிள்ளையா என்ன படம் என்று நினைவில்லை. காட்சியில் ஜனகராஜ். "தீபாவளி தீபாவளிதான்..." என்று பாடுவார். அதைப் பகிரலாம் என்று தேடும்போது உங்கள் நினைவு வந்தது. "நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு தேடியும் கிடைக்கவில்லை... ஏஞ்சலிடம் சொன்னால் தேடித்தந்து விடுவார்" என்று நினைத்த்துக் கொண்டேன்.

      நீக்கு
    2. அஆவ்வ் !! எங்கியோ கேட்ட மாதிரி இருக்கு ஜனகராஜ் பாட்டு :) ஆனா முதல் வரி அதுவா ??

      பரவாயில்ல அடுத்த தீபாவளிக்கு கண்டுபுடிச்சிடலாம்:)
      இப்போதைக்கு நீங்க போட்ட பாட்டே கேக்கறேன் :)

      நீக்கு
    3. அது நான் புடிச்ச மாப்பிள்ளை படம் :)

      பாட்டு தனியா கிடைக்கலை ,,இந்த
      தீபாவளி தீபாவளிதான் மாப்பிளைக்கு தீபாவளிதான்
      படம் லிங்க் இருக்கு
      https://www.youtube.com/watch?v=ZOV6ZkU_kuA
      53 வது நிமிஷத்தில் பாட்டு வருது

      நீக்கு
    4. எப்பவும் ஆர்வமா தேடுவேன் ஆனா இன்னிக்கு அந்த குழந்தைக அதுங்க ஆசை பூம்பூம் மாடு எல்லாம் மனசில் என்னமோ செஞ்சதில் கொஞ்சம் நேரம் கழிச்சே தேடினேன்

      நீக்கு
    5. @ஏஞ்சல்:
      ..அந்த குழந்தைக அதுங்க ஆசை, பூம்பூம் மாடு எல்லாம் மனசில் என்னமோ செஞ்சதில் //

      சூப்பர் ஸென்ஸிட்டிவ்வாக இப்படி இருந்தால் இந்தக்காலத்தில் எப்படி!

      அதிரா இதுக்கு எதுவும் சொல்லாம இருக்கணும்! இன்னும் அல்வா சாப்பிட்டு முடியலையோ?

      நீக்கு
    6. ஹையோ காலையிலேயே நினைச்சேன் கருத்து போடனும்னு ஏஞ்சலுக்கு ரொம்பப் பிடிச்ச முத்துராமன் அங்கிள் அப்புறம் கீதாக்காவுக்குப் பிடித்த ஜிவாஜி பாட்டுனு...ஹா ஹா ஹா அதுவும் இன்னிகுஸ்பெஷலா வேற..ஹா ஹா ஹ

      கீதா

      நீக்கு
    7. //இன்னும் அல்வா சாப்பிட்டு முடியலையோ?//

      ஹையோ ஹையோ அந்த ஸ்டோரி தெரியாதா உங்களுக்கு :) அவங்க அல்வா கிண்ட கரண்டிவாணலியோட ஒட்டி அதை பிரிக்க போராடிக்கிட்டுருக்காங்க ஞானி மியாவ் :)

      நீக்கு
    8. //அப்புறம் கீதாக்காவுக்குப் பிடித்த ஜிவாஜி பாட்டுனு...ஹா ஹா ஹா அதுவும் இன்னிகுஸ்பெஷலா வேற..ஹா ஹா ஹ// grrrrrrrrrrrrrrrrrrrrr ஆனா ஒண்ணு! படம் நல்ல காமெடி, அதோடு நல்ல கருத்துள்ளதும் கூட! ஜிவாஜி, மு.ரா. நாகேஷ் மூவருமே காமெடியில் கலக்கி இருப்பாங்க. அயனாவரம் சயானியில் பார்த்த படம் இது. இதைக் குறித்துச் சொல்ல நிறைய இருந்தாலும் என்னோட கடைசி நாத்தனார் தியேட்டரில் பார்த்த முதல் படம்னு நினைவு. அதுவும் கதை சித்ராலயா குழுமத்தினரோடதுனு நினைவு. கோபுவோ அல்லது சிவி.ராஜேந்திரன்? அநேகமா கோபுவாத்தான் இருக்கும். இயக்கமும் நல்ல இயக்குநர். தாதா மிராசினு நினைக்கிறேன். இப்படி எல்லாம் நல்ல படங்களைக் கொடுத்த காலமும் உண்டுனு நினைக்கையில் இப்போப் படங்களை நினைச்சுப் பெருமூச்சுத் தான் வருது!

      நீக்கு
    9. விக்கி விக்கிப் பார்த்தால் தமிழில் ஒண்ணும் கிடைக்கலை. ஆங்கிலத்தில் விக்கினதிலே நான் சொன்ன விபரங்களை ஆமோதிச்சு இருக்காங்க. கூடுதலாக இசை எம்.எஸ்.வி. படத்தொகுப்பு பிரபலமான சங்கர்! கேட்பானேன். அதிலும் அந்தப் பெண் பார்க்கும் காட்சியில் மூணு பேரும் வந்திருக்கும் மாப்பிள்ளை குடும்பத்தைப் படுத்தி எடுக்கும் காட்சி! மறக்கவே முடியாது!

      நீக்கு
    10. இது இந்தியில் வந்த தீன் தேவ்யான் என்கிற படத்தின் தழுவல் என்று நினைவு கீதாக்கா.

      நீக்கு
  25. பட்டாசை சுட்டு சுட்டு போடட்டுமா !!சூப்பர் பாட்டு நதியாவுக்காகவே பார்த்த படம்

    பதிலளிநீக்கு
  26. மனதைத் தொட்ட கதை! ஏகாந்தன் அருமையாகச் சுருக்கமா எழுதி இருக்கார். எனினும் கடைசியில் அந்தக் குழந்தைகளுக்கு ஸ்வீட் கிடைச்சதுனு தெரிஞ்சா நல்லா இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  27. சிறுகதையை வெளியிட்ட ஸ்ரீராமுக்கு இனிய நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  28. @ துரை செல்வராஜு:

    //இல்லாதார் இதயத்திலும்
    திருநாளின் தீபங்கள்...
    அவர் குறையும் தீரவே
    அனுமன் அருள் புரிகவே!//

    அடடா! கவிதையில் ஒரு கருத்துரை. நன்றி துரை சார்.

    பதிலளிநீக்கு
  29. @ கீதா:
    //..வாழ்வின் யதார்த்ததின் மறுபக்கம்.மனம் கதையையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது...பாராட்டுகள் அண்ணா, வாழ்த்துகளும்//

    விரிவான பின்னூட்டம். நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  30. @ வெங்கட் நாகராஜ்: ..தீபாவளிக்கான சிறப்புக் கதை.... பாராட்டுகள். //

    வருகை, கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. @ ரேவதி நரசிம்ஹன்: ..இந்தக் குழந்தைகளுக்கும் இனிப்புப் பண்டங்கள் அனுமன் அருளட்டும். //

    ஆஹா! அப்படியே நடக்க அவனருள் கிடைக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  32. @ துளசிதரன்: ...கதை அருமை ஏகாந்தன் சார். யதார்த்தம்..//

    கடுமையான டைம் ஷெட்யூலுக்கு நடுவிலும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  33. @ நெல்லைத் தமிழன்:

    ..இருப்பவர்களுக்கு எல்லா நாளும் தீபாவளிதான். ஆனால் இல்லாதவர்கள்?//
    //...அந்தப் பக்கத்தைப் படம் பிடித்த..//
    //..பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்..//

    வாழ்த்துக்கு நன்றிகள்.
    சின்ன வயசில் ரெண்டு மார்க்கு கேள்விக்காக மனனம் செய்து, பிறகு மறந்துபோன குறளை கண்ணெதிரே இந்நன்னாளில் காட்டிக் குளிர்வித்திருக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  34. @ ஜி.எம்.பாலசுப்ரமணியம்: .. சுவீட்டு கிடைத்திருக்கும் என நம்புவோம்..//

    இவ்விடமும் அப்படியே! நன்றி.

    பதிலளிநீக்கு
  35. @ அசோகன் குப்புசாமி: ..கதை நன்று ..//

    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  36. @ காமாட்சி: ... நல்ல பிரஸாதம் கிடைச்சு பசங்களாசை தீரணும். கதை . இப்படியும் நிதரிசனங்கள் இருக்கு..//

    ஆசைதீர ஆண்டவன் அருளட்டும்! கருத்துக்கு நன்றிகள் அம்மா.

    பதிலளிநீக்கு
  37. @ கோமதி அரசு:

    ..அவர்கள் அதை பங்கு போட்டு சாப்பிட்டு இருக்க வேண்டும் என்று மனது விரும்புகிறது. ..நல்ல கதை .//

    வருகை, கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  38. @ ஏஞ்சல்:

    ..ஹனுமான்ஜி மற்றும் எல்லா கடவுள்கிட்டயும்வேண்டிக்கிறேன் எலலா ஆதரவற்ற குழந்தைகளுக்கும் ஒரு நாளா வது அதுங்க ஆசைப்பட்டது கிடைக்கட்டும் தயவுசெஞ்சி மனசு வைக்கவும் ஆல் மைட்டி கடவுள்களே !!
    என்னமோ மனதை பண்ணிவிட்டது .. கதை ...//

    உங்கள் கருத்தை இந்நேரம் அந்த ஆல்மைட்டிகள் படித்திருப்பார்கள்! குழந்தைகளுக்குக் கருணை புரிவார்கள்.. கவலைப்படாதீர்கள்!

    உணர்வுபூர்வமான கருத்துக்கு நன்றிகள் ஏஞ்சல்.

    பதிலளிநீக்கு
  39. @ கீதா சாம்பசிவம்:

    ..எனினும் கடைசியில் அந்தக் குழந்தைகளுக்கு ஸ்வீட் கிடைச்சதுனு தெரிஞ்சா நல்லா இருந்திருக்கும்..//

    எனக்கும் அப்படித்தான் தோணுது, என்ன செய்ய..!
    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  40. @ஸ்ரீராம்:

    தீபாவளிப்பாட்டுகள் இனிமை. அதிலும், பட்டாசை சுட்டுச் சுட்டு.. melodious!

    ஜமுனா ராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரியின் 'நான் சிரித்தால் தீபாவளி..!’ நினைவுக்கு வராததேனோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் அண்ணா எனக்கும் நான் சிரிச்சா தீபாவளி நு பாட்டு நினைவுக்கு வந்தது. ஆனால் அது யாரு பாடினது, எந்தப் படம்னு தெரியலை...காலைல ஸ்ரீராம் கிட்ட சொல்ல நினைச்சு....அப்புறம் பல கருத்துகள் சொல்ல நினைச்சு விட்டுப் போச்சு இன்று..

      பல தளங்கள் சுத்திட்டு .இப்ப வரும் போது தான் வந்த கருத்துகள் பார்த்ததும் ஆஹா நாம நினைச்சத இவங்களும் நினைச்சுருக்காங்களேனு நினைச்சுப் போடறேன்...

      கீதா

      நீக்கு
    2. @கீதா: ....//எந்தப் படம்னு தெரியலை.//

      அந்தப்பாடல் வெளிவந்தது மணிரத்னம், கமல் ஹாசனின் 1987 magnum opus- ஆன நாயகன் படத்தில்.

      நீக்கு
  41. அந்நிலைத்தட்டு மக்களின் மனதை அழகாக படம் பிடித்து காட்டியவிதம் அழகு இருப்பினும் மனம் கனத்தது.

    ஏகாந்தன் சாருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ Killergee: //..காட்டியவிதம் அழகு இருப்பினும் மனம் கனத்தது.//

      கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  42. நேற்று ஏ அண்ணனின் கதையில வந்து பின்னிப் பெடலெடுக்க முடியாமல் போச்சே.. மன்னிச்சுக்கொள்ளுங்கோ..பிளீஸ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ ஞானி ! அதிரா //.. பெடலெடுக்க முடியாமல் போச்சே.//

      அது சரி, இன்னிக்காவது படித்தீர்களா? இல்லை, இன்னும் தீபாவளிக் காரியங்களில்தான் பிஸியா என்பதே கேள்வி!

      நீக்கு
    2. சே..சே.. தப்பப் பார்த்தேன், ஏ அண்ணன் கொக்கத்தடியைக் கழுத்தில கொழுவி இழுத்திட்டார்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கதை படிச்சிட்டேன்.. கதை என்பதை விட அழகிய கட்டுரைபோல இருக்கு.. அழகாக பிரதிபலிச்சிருக்கிறீங்க வசனங்களை.

      நான் கந்த சஷ்டி முடியும்வரை கொஞ்சம் ஸ்லோவாகத்தான் இருப்பேன் ஏ அண்ணன்.

      நீக்கு
    3. @ ஞானி!அதிரா:

      ‘கட்டுரை’, ’வசனம்..’.

      ஆஹா! இதுவல்லவோ கருத்து! நல்லவேளை, ஸ்லோகம், பாட்டு என்றெல்லாம் வர்ணிக்கவில்லை.. கந்தன் காப்பாத்திட்டான்..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!