வெள்ளி, 27 டிசம்பர், 2019

வெள்ளி வீடியோ : பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே பூவாலே பாலம் கட்டவா



=======================================================================
எம் ஜி ஆர் தான் நடிப்பதற்காக தெரிவு செய்து வைத்திருந்த தலைப்பு விடிவெள்ளி.  மு. கருணாநிதியுடன் இணைந்து எடுக்கப்பட இருந்த படம் கருணாநிதியின் கல்லக்குடி போராட்ட கைதால் தடைப்பட, சிவாஜி கணேசன் தனது சிறிய கம்பெனியான பிரபுராம் பிக்சர்ஸ் சார்பில் (பெரிய கம்பெனி சிவாஜி பிலிம்ஸ்)  தயாரித்து நடிக்க,  ஸ்ரீதர் இயக்கத்தில் 1960 இல் வெளிவந்த ஒரு த்ரில்லர் வகைப் படம்.


புதன், 25 டிசம்பர், 2019

புதன் 191225 :: அல்லாத்துக்கும் அலைபேசி சரிப்பட்டு வருமா?


எல்லோருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! 



வல்லி சிம்ஹன்: 

1. அலைபேசியில் ,அத்தனை தளங்களையும் மேய்வது கஷ்டமாக இல்லையா?  தளங்கள் மட்டும் இல்லை. மெயில்,யு டியூப்,சினிமாவே பார்க்கிறார்களாமே!

புதன், 18 டிசம்பர், 2019

புதன் 191218 :: ரி ட ஸ் ஹி


பானுமதி வெங்கடேஸ்வரன்.

ஹிஸ்டரி ரிபீட்ஸ் இட்செல்ஃப் என்பார்களே, அதன்படி நாடகம் மீண்டும் உன்னதம் அடையுமா?


புதன், 11 டிசம்பர், 2019

புதன் 191211 :: சினிமாவுக்குச் சென்று தூங்கும் குழுமத்தில் நீங்களும் உண்டா?




கீதா சாம்பசிவம் : 

                
(இந்தக் கேள்வியைக் கேட்கலாமா வேண்டாமா எனப் பலத்த சிந்தனை/ ஆனாலும் இது பொதுவாகக் கேட்பது தான். யாரையும் குறிப்பிட்டுச் சொல்லுவது இல்லை.)
               
பெண்கள் எப்படி உடை அணிந்தாலும் ஆண்களுக்கு அவர்களிடம் ஈர்ப்பு வருவதை ஒத்துக்கலாம். ஆனால் அந்த ஈர்ப்பு பலாத்காரம் செய்வது, கொல்வது வரை போவது சமீப காலங்களில் அதிகரித்து வருவது ஏன்?



வியாழன், 5 டிசம்பர், 2019

ஏடிஎம் திருடன்

ஏ டி எம் மில் பணம் எடுக்கச் சென்றான் அவன்.  ஏதோ கோளாறு. இரண்டு மூன்று முறை போட்டும் பணம் வரவில்லை.  அது ஏதோ பேப்பரைதான் உமிழ்ந்து கொண்டிருந்தது.

புதன், 27 நவம்பர், 2019

புதன் 191127 :: குடும்பத்தை நல்லபடி நடத்தத் தெரிந்தவர்கள் ஆண்களா? பெண்களா?


சென்ற வார புதன் பதிவில், பெருமளவில் பங்கேற்று, கருத்துகளைப் பதிந்த எல்லோருக்கும் எங்கள் நன்றி. கலந்துரையாடல், கருத்துரையாடல் எல்லாமே எங்களுக்குப் பிடிக்கும். தொடர்ந்து ஆதரவு கொடுக்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம். 

கேள்வி கேட்டவர்களுக்கு எங்கள் நன்றி. 


புதன், 20 நவம்பர், 2019

புதன் 191120 :: காயம்பட்ட மாயம் !

    

சென்ற வார புதன் பதிவின் கருத்துரைப் பகுதியில், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.  
             
' வெளியிட்ட பதிவிற்கு சம்பந்தமே இல்லாத கருத்துரைகள் தேவையில்லை' என்று கருத்து கூறியுள்ளார். 


புதன், 13 நவம்பர், 2019

புதன் 191113:: மறதியினால் அவதிப்பட்டதுண்டா?


கீதா சாம்பசிவம் : 

1) இந்திரா காந்தி, நேரு போன்றோர் அரசுப் பணத்தில் செலவு செய்ததெல்லாம் ஏற்றவர்கள் இப்போது மோதி சொந்தப் பணத்தில் உடைகள் வாங்கி அணிவதை விமரிசிப்பது ஏன்?

ஞாயிறு, 10 நவம்பர், 2019

பாக்கு தரித்து விளையாடும் பாலகர்க்கு நாக்கில்...


பாக்கு தரித்து விளையாடும்  பாலகர்க்கு நாக்கில்......
என்று காளமேகம் பாடிய ஊர்க்காரர் உள்ளே இருக்கிறார்

புதன், 6 நவம்பர், 2019

புதன் 191106:: ஆழ்துளைக் கிணறும், அரசும், மீடியாவும் !


கீதா சாம்பசிவம் :

ஆழ்துளைக்கிணற்றில் அடிக்கடி குழந்தைகள் விழுவதும், அதற்கு அரசையும் இஸ்ரோவையும் குற்றம் சொல்லுவது சரியா?


புதன், 23 அக்டோபர், 2019

புதன் 191023:: பேய்கள் இசைக்கு மயங்குமா ?




கீதா ரெங்கன் :

பெண்களின் மனது ஆழமானதா? மனதில் என்ன இருக்கு என்பதைக் கண்டுபிடிப்பது அத்தனை சிரமமா? அப்படி பார்த்தால் மனம் என்பதே ஆழமானதுதானே ?(மூளையின் ஒரு பகுதிதான் மனம். மூளையைப் பற்றி இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்க முடியாது அது ஒரு wonder. அதுமுடிவற்றதுனும் ஆழமானதுன்னும் மருத்துவ உலகம் சொல்லுது) ஏன் பெண்களின் மனம் மட்டும் அப்படிச் சொல்லப்படுகிறது?



புதன், 25 செப்டம்பர், 2019

புதன் 190925 :: காற்று, தண்ணி, நெருப்பு.... பயம் எதிலே?


இந்த வாரம் வந்துட்டேன். அடுத்த வாரம் + சில வாரங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியது இருக்கும் என்று நினைக்கிறேன். 


புதன், 18 செப்டம்பர், 2019

புதன் 190918 :: ஆர்ம்ஸ்ட்ராங்கை சந்தித்தால் என்ன கேள்வி கேட்பீர்கள் ?


சென்ற வாரப் பதிவில் கருத்துப் பதிந்தவர்களுக்கும், பாராட்டியவர்களுக்கும், கேள்வி கேட்டவர்களுக்கும் எங்கள் நன்றி. 


புதன், 11 செப்டம்பர், 2019

புதன் 190911:: அதி பொறுமைசாலி யார் ?


சென்ற வாரப் பதிவில், அதிகம் கும்மியடித்த அதிரா, ஏஞ்சல் இருவருக்கும் எங்கள் நன்றி! 

இனி இந்த வார பதில்கள்.

புதன், 4 செப்டம்பர், 2019

புதன் 190904 இப்போதிலிருந்து பத்து வருடங்கள் முன்னும், பின்னும் ...


சென்ற வாரம் வீட்டுச் சாப்பாட்டுக்கே எங்கள் வோட்டு என்று பதிந்து வீட்டுச் சாப்பாட்டை வெற்றி பெற செய்துவிட்டீர்கள். கருத்து எழுதியவர்கள் எல்லோருக்கும் எங்கள் நன்றி. 


புதன், 28 ஆகஸ்ட், 2019

புதன் 190828:: உணவுக்கு போடுங்க ஓ(ட்டு!)


சென்ற வாரத்தில் non fiction வகைப் புத்தகங்களில் கவர்ந்த புத்தகம் குறித்து எழுதிய எல்லோருக்கும் எங்கள் நன்றி!

புதன், 21 ஆகஸ்ட், 2019

புதன் 190821 :: கேள்வி, பதில், ஜோக், எங்கள் கேள்வி


சென்ற வாரப் பதிவில், கேள்வி கேட்ட கற்பனைப் பெயர்கள், ஊர் ஆகிய விவரங்களை இரசித்துப் பாராட்டிய பல்லாயிரக் கணக்கான (இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்!) வாசகர்களுக்கு கோடானு கோடி (இதுவும்) நன்றி! 

புதன், 14 ஆகஸ்ட், 2019

புதன் 190814 :: டிரம்பும் மோடியும் இடம் மாறினால் ?


சென்ற வாரக் கருத்துரைகளில் ஸ்டாரும் நீரும்தான் பெரிதும் பேசப்பட்டன. 
கருத்துரைத்தவர்கள் எல்லோருக்கும் எங்கள் நன்றி. 

இனி இந்த வாரக் கேள்விகளைக் காண்போம். 


வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

வெள்ளி வீடியோ : வைதேகி முன்னே ரகுவம்ச ராமன் விளையாட வந்தால் வேறென்ன வேண்டும்?

English: The girl has a heart of gold  என்று விளக்கம் சொல்லப்படும் படம்!    பாலமுருகன் கதை வசனத்தில், P. மாதவன் தயாரிப்பில் தேவராஜ் மோகன் இயக்கத்தில் 1973 இல் வெளிவந்த திரைப்படம். 

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

காசி வந்த பலன் எனக்கு, (அதில்) சோழி பலன் உனக்கு

இரவு ஒன்று முப்பது சுமாருக்கு வாரணாசி வந்து சேர்ந்தோம்.  எங்கள் எண்பது பேரின் பேக்கேஜ் அங்கேயே தமிழ்நாடு ஹோட்டலில் ஒரு அறையில் வைத்து விட்டு வந்திருந்தோம்.  

புதன், 7 ஆகஸ்ட், 2019

புதன் 190807 :: பரமசிவனை உலகின் முதல் லெஃப்டிஸ்ட் எனலாமா?


சென்ற வாரம் பல கருத்துரைகளை மனமுவந்து பதிந்த எல்லோருக்கும் நன்றி. 


புதன் கிழமைப் பதிவு என்பதை கிட்டத்தட்ட ஒரு KSS (Knowledge sharing session ) ஆக நடத்தவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.  அதற்கு சென்ற வாரப் பின்னூட்டங்களில், நண்பர் DD அதிக அளவில் நம் எல்லோருக்கும் உதவி செய்துள்ளார். 

பின்னூட்டங்கள் அளிப்பதில் பல புதிய வழிவகைகளை அவர் எல்லோருக்கும் புரிகின்ற வகையில் விளக்கியுள்ளார். 

அவருக்கு 'எங்கள்' சிறப்பு நன்றி.


செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

கேட்டு வாங்கிப்போடும் கதை : கேட்ட வரம் - பானுமதி வெங்கடேஸ்வரன்

கேட்ட வரம்
- பானுமதி வெங்கடேஸ்வரன் - 

உப்பரிகையில் நின்று கொண்டிருந்த தசரத சக்கரவர்த்தியின் கண்களில், கீழே நந்தவனத்தில் நடந்து கொண்டிருந்த ராமனும், சீதையும் பட்டார்கள். சீண்டலும்,சிணுங்கலும், சிரிப்புமாக நடந்து கொண்டிருந்த அவர்களை பார்க்க பார்க்க அவருக்கு மகிழ்ச்சி பொங்கியது. 

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

வெள்ளி வீடியோ : அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா

ஜெமினி கணேசன் நாள் கொண்டாடி விடுங்களேன் என்று ஜீவி ஸார் சொன்னதால் அவர் சொன்ன பாட்டை விட்டு விட்டு, நான் எனக்குப் பிடித்த ஜெமினி பாடல் ஒன்றை பகிர்கிறேன்.  அதாவது அவர் நடித்த காட்சி.   அந்த வகையில் இந்தப் பாடலும் நேயர்விருப்பமே!

புதன், 31 ஜூலை, 2019

புதன் 190731 : பிடித்த பண்டிகை எது?


சென்ற வாரக் கருத்துக் களஞ்சியத்தில், கட்டிடத்திற்கு அடிக்கப்படும் வர்ணம் பற்றியும், கால் வலி, சில்லென்ற தரையில் நடக்கும் பிரச்னை பற்றிய கருத்துகள் பெரும்பான்மை பெற்றிருந்தன. 

கருத்துகள் உரைத்த அனைவருக்கும் நன்றி. 

பதிவில் கேள்விகள் கேட்க எல்லோரும் மறந்துவிட்ட போதிலும், வாட்ஸ் அப் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அவைகளை பார்ப்போம். 


புதன், 24 ஜூலை, 2019

புதன் 190724 :: அரசாங்கக் கட்டிடங்கள் அடர் சிவப்பு வர்ணம் ஏன்?


சென்ற வாரத்தில் வெளியான ஐந்து படங்களில், மூன்றுக்கு மட்டும் சரியான விடைகளை 

வல்லிசிம்ஹன் (வைஜயந்திமாலா, லதாமங்கேஷ்கர் )
கோமதி அரசு    ''          ''
பானுமதி வெங்கடேஸ்வரன் (காஜல் அகர்வால்) 
கீதா ரெங்கன் '' 

ஆகியோர் எழுதியிருந்தார்கள். 

வெள்ளி, 19 ஜூலை, 2019

வெள்ளி வீடியோ : நூறுகோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே

விஜய் - சிம்ரன் நடிப்பில், எழில் இயக்கத்தில் எஸ் ஏ ராஜ்குமார் இசையில் 1999 ம் வருடம் வெளிவந்த திரைப்படம் 'துள்ளாத மனமும் துள்ளும்'.

புதன், 17 ஜூலை, 2019

190717:: சின்னச்சின்ன ஆசைகள்!


சென்ற வார பதிவில், பேயாரின் பதில்கள் மற்றும்  PAC analysis பற்றிய கருத்துகள் பெரும்பான்மையாக இடம் பெற்றிருந்தன. பேயார் பதில்களை ஒரு சிலர் தவிர மற்றவர்கள் இரசிக்கவில்லை என்று தோன்றுகிறது. மேலும் பேய்கள் பௌர்ணமி, கிரகணம் போன்ற நாட்களிலும், ஆடி மாதம் + அம்மன் திருவிழா காலங்களிலும் உலக சஞ்சாரம் செய்வதில்லை. சென்ற பதிவில் கீதா ரெங்கன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பேய் திரும்ப சஞ்சாரம் பண்ண வரும்போது பதில்கள் அளிக்கிறதா என்று பார்ப்போம். 


புதன், 10 ஜூலை, 2019

புதன் 190710 : வர வர, பேய்களின் கொட்டம் அதிகமாகிறதோ?


சென்ற வாரம் கருத்துகளைப் பகிர்ந்த எல்லோருக்கும் நன்றி. பேய் பதில்களும், PAC பகுப்பாய்வும், முக்கியமான இடங்களைப் பெற்றிருந்தன. 

புதன் கிழமைகளில் எல்லோருமே ரிலாக்சுடு மூடில், சந்தோஷமாக கருத்துப்பரிமாற்றங்கள் செய்வது சிறப்பான ஒன்று. நன்றி!


வியாழன், 4 ஜூலை, 2019

சரயு...

ஏப்ரல் பத்தாம் தேதி.  அயோத்தி வந்து விட்டது என்று சொன்னார்களே தவிர, தங்குமிடம் அவ்வளவு எளிதாக வரவில்லை.  என்ன காரணமோ...   குறுகலான தெருக்களோ, இரவு நேரம் தொந்தரவு இருக்கக்கூடாது என்கிற காரணமோ..   எங்கள் பஸ் ரிவர்ஸிலேயே மெ......து.....வா....ய் தெருத் தெருவாய் நகர்ந்து பொறுமையை சோதித்த வண்ணம் தங்குமிடம் அடைந்த பொழுது இரவு ஒரு மணி ஆனாலும்,  அறையை அடைந்த பொழுது ஒன்றே முக்கால்.  பஸ்ஸிலேயே நீண்ட நேரம் அமர்ந்து காத்திருந்தோம், எங்கள் அறையை அறிவதற்கு!  ராமனின் பொறுமை தேவைப்பட்டது!

புதன், 3 ஜூலை, 2019

புதன் 190703 : உரையாடல்கள் பெ, வ, கு மனோபாவங்கள்!



சென்ற வாரப் பதிவில் கல்யாண செலவுகள் அவசியமா இல்லையா என்பது குறித்து பலரும் கருத்துகளைக் கூறியிருந்தீர்கள். 

பலரும் யோசிக்க வேண்டிய விஷயம். 


புதன், 26 ஜூன், 2019

புதன் 190626 : பேய்க்கவிதைகள் !


சென்ற வாரப் பின்னூட்டங்களில் பேய்தான் பிரதானமாகக் காணப்பட்டது. ஆபத்து இல்லாத அஹிம்சை பேய்தான் போலிருக்கு. நன்றி பேயே! என்று சொல்லி, மறக்கலாம் என்று பார்த்தால், 

ஆ இது என்ன பேய் எல்லா நாட்களிலும் வந்து கருத்து சொல்லி இருக்கு! அது மட்டுமா ? சனிக்கிழமைப் பதிவில் நமக்கு ஒரு எச்சரிக்கை வேறு விடுத்திருக்கிறது! 


புதன், 19 ஜூன், 2019

புதன் 190619 :: பேயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?


சென்ற வாரத்தில் நேர மேலாண்மையில் ஒரு துளி பார்த்தோம். 



இந்த வாரம் நாம் காண இருப்பது RCA. அப்படி என்றால் என்ன?

பதிவின் பிற்பகுதியில் பார்ப்போம். 


புதன், 12 ஜூன், 2019

புதன் 190612 :: பேய்ப்படம் பாருங்க !


சென்ற வாரம் இலக்கு நிர்ணயிக்க எண்ணிக்கை அடிப்படை தேவை என்று பார்த்தோம். 

இந்த வாரம் என்ன சொல்லப்போகிறேன் என்றால் ..... இப்போ என்ன டைம்? 


செவ்வாய், 11 ஜூன், 2019

கேட்டுவாங்கிப் போடும் கதை : ஒலிவடிவம் - அனு பிரேம்

மீண்டும் ஒரு சிறு கதையுடன் வந்துள்ளேன்....

வாய்ப்புக்கும்....வாழ்த்தும் அன்பு உள்ளங்களுக்கும் மிகவும் நன்றி..


அன்புடன்
அனுபிரேம்.  

திங்கள், 10 ஜூன், 2019

"திங்க"க்கிழமை – செளசெள துவையல் உளுத்தம் பச்சிடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

எனக்கு ஒரு காலத்தில் கொத்தமல்லி துவையல் (நாங்க தொகையல் என்போம்), அதிலும் தண்ணீர் விடாம புளி உபயோகித்து இடித்துப் பண்ணுவது மட்டும்தான் பிடிக்கும். பிறகு கத்தரித் துவையல் பிடிக்க ஆரம்பித்தது. சிறுவயதில் இரயில் பயணங்களின்போது என் பெற்றோர் கொண்டுவரும் தயிர் சாதமும், தேங்காய் துவையலும் ரொம்பப் பிடிக்கும். இந்த செளசெள (மேரக்காய்? இது எந்த மொழில? அல்லது பெங்களூர் கத்தரிக்காய்னும் சொல்லுவோம்) துவையல் என் மனைவி செய்துதான் சாப்பிட்டிருக்கிறேன் (ஆரம்பத்தில் நான் சாப்பிடலை. பசங்கதான் சாப்பிடுவாங்க. நான் சமீப வருடங்களில்தான் போனாப் போகுதுன்னு சாப்பிட ஆரம்பித்திருக்கேன்).

புதன், 5 ஜூன், 2019

புதன் 190605 : இலக்கை நிர்ணயிக்க முக்கியமானது எது?


சென்ற வாரம் நான் கேள்வி கேட்க நினைத்து, பதிவை தொடர்ச்சியாக எழுதி, ஒருங்கிணைத்து, படம் எல்லாம் சேர்த்து, பதிவின் கடைசியில் வந்தபோது கேட்க நினைத்திருந்த கேள்வி மறந்துபோய்விட்டது. அதனால குழப்பமா ஒரு கேள்வி கேட்டு எஸ்கேப் ஆனேன். 

சென்ற வாரக் கருத்துரைகளில் அதிகம் இடம் பெற்ற ஒரு தலைப்பு சைக்கிள் ஓட்டும் அனுபவம்தான். பாராட்டிய எல்லோருக்கும் நன்றி. 


வியாழன், 30 மே, 2019

கேட்காமல் போட்டோ எடுக்கறது தப்பு தம்பி....


சாலைச் சந்திப்புகளில் இதுபோன்ற உருவங்கள், வடிவங்களை வைத்து நகரை அழகுபடுத்தியிருக்கின்றனர்.  நான் ப்ரயாக்ராஜில் ஒரு மாநகரப் பேருந்து கூடப் பார்க்கவில்லை.  இல்லை என்றே நினைத்துக் கொண்டேன்.  ஆனால் இருக்கிறது என்று வெங்கட் தளத்தில் படித்து / பார்த்து தெரிந்துகொண்டேன்.

புதன், 29 மே, 2019

புதன் 190529 :: சின்ன வயசில் சைக்கிள் ஓடியிருக்கீங்களா ?


சென்ற வாரக் கேள்விக்கு விடை அளித்த பல்லாயிரக்கணக்கான வாசகப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! 

கை எழுத்தைப் பார்த்து, குணாதிசயங்களை சொன்ன ஏகாந்தன் சாருக்கு சிறப்பு நன்றி. 


ஞாயிறு, 26 மே, 2019

ரொம்ப 'வெஜ்'ஜாய் இருப்பவர்களுக்கு...

இது மாதிரி பழங்குடி உடைகள் அணிய கட்டணமாக 200 ரூபாய் வாங்கிய மாதிரி நினைவு.  இதை அணிந்துகொண்டு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் (அதாவது அந்த ஏரியாவுக்குள்) சுற்றலாம்! 

வியாழன், 23 மே, 2019

பக்கியும் பக்தியும்... மதன் மஹால் மகாத்மியம் - மரவேரில் சித்தர்கள்


பக்கியும் பக்தியும்...

வண்டி மெதுவாக நிற்பது போல வரும்போது என்ன ஸ்டேஷன் வருகிறது என்று அவரிடம் கேட்டேன்.  மதன்மஹால் என்றார்.  மதன்மஹால் என்றதும் எனக்கு மைக்கேல் மதன காமராஜன் நினைவுக்கு வந்தது.

ஆமாம், ஏன் அதற்கு அப்படி ஒரு பெயர்?

புதன், 22 மே, 2019

புதன் 190522 பெண்களுக்கு மீசை இல்லையே! ஏன்?


சென்ற வாரம் நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அது என்ன கேள்வி என்று யாராவது (அந்தப் பதிவிற்கு சென்று பார்க்காமல்) நினைவுக்குக் கொண்டு வர முடியுமா? 


ஞாயிறு, 19 மே, 2019

ஞாயிறு 190519 நிறைந்த ஏரியில் மறைந்த தரை...


ஷில்லாங்குக்கு வடக்கே 15 கிமீ தொலைவில் இருக்கும் உமியம் ஏரி.  இது பரப்பனி ஏரி என்று அறியப்படுவதாகச் சொல்கிறார்கள்.  1960 களில் இது உருவாக்கப்பட்டதாம்.  மின்சாரத் தயாரிப்புக்காக முக்கிய காரணமாக இந்த ஏரி உருவாக்கப்பட்டது. பின்னர் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமாக மாறிப்போனது.  ஆனால் இதே காரணத்தினாலேயே (மக்கள் கூட்டம்) சமீப காலங்களில் இந்த ஏரியில் வண்டல் அதிகரித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.

புதன், 15 மே, 2019

புதன் 190515 : மதிப்பைக் கூட்டுங்கள்!


சென்ற வாரப் பின்னூட்டங்களில் அதிகம் பேசப்பட்டது, 'நல்ல சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு முக்கியமானவை எவையெவை' என்ற கேள்வியும், அதன் பதில்களும். 


அடுத்தபடியாக ஹோட்டல் உணவுகள் / MTR மாவு வகைகள் பற்றிய கருத்துப் பரிமாறல்கள். 

வியாழன், 9 மே, 2019

ஏன் சமையல் செய்யவில்லை என கேட்ட கணவனின் கதி...

சங்கமித்ராவில் ஏறிக்கொண்டதும் ஒரு வாசனை வந்தது.  நீண்ட நேரம் நிலைத்த அது செருப்புக்கடைக்குள் நுழைந்தது போல அல்லது கருவாட்டு வாசனை போலவும் அடித்துக்கொண்டிருந்தது.   அப்புறம் அது பழகி விட்டதா, இல்லை அகன்று விட்டதா என்று தெரியவில்லை!

புதன், 8 மே, 2019

புதன் 190508 :: சிரித்து வாழவேண்டும்

           
சென்ற வாரக் கேள்வியாகிய பொன்னியின் செல்வன் கதையில் உங்களைப் பிரதிபலிக்கும் பாத்திரம் எது என்ற கேள்விக்கு பதில் கூறியுள்ள எல்லோருக்கும் நன்றி. ரொம்பப் பேருங்க சொல்ல நினைத்து, சொல்வதற்குத் தயங்கி ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டீர்களோ என்றும் ஒரு சந்தேகம் இருக்கு. 

இந்த வாரம் நாங்க ஒன்றும் கேட்கவில்லை. 


திங்கள், 6 மே, 2019

திங்கக்கிழமை : இளநீர் பாயசம் - சாந்தி மாரியப்பன் ரெஸிப்பி

ஆரம்பித்திருக்கும் வெயில்காலத்திற்கேற்ற ஒரு அயிட்டத்தை அனுப்பியிருக்கிருக்கிறேன். திங்கற கிழமையில் மட்டுமல்ல.. எல்லாக் கிழமைகளிலும் சாப்பிடலாம்.

புதன், 1 மே, 2019

புதன் 190501 : பொன்னியின் செல்வனில் உங்களைக் கண்டதுண்டா?


குறள் : 
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.


கையால் தொழில் செய்து, உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.
எல்லோருக்கும் இனிய தொழிலாளர் தின வாழ்த்துகள்! 

எங்கள் சென்ற வாரக் கேள்வியாகிய,

உங்கள் வாழ்க்கையில் நீங்க கடந்து வந்த நாட்களில், ஏதோ ஒரு நாளை, திரும்ப கொண்டுவரலாம் என்றால், நீங்கள் திரும்பக் கொண்டு வர நினைக்கின்ற நாள் எது? ஏன்? 


வெள்ளி, 26 ஏப்ரல், 2019

புதன், 24 ஏப்ரல், 2019

புதன் 190424 :: பொன்னியின் திரை செல்வன் எடுபடுமா?


சென்ற வாரப் பதிவில் வழக்கம்போல் எங்களைக் கேள்விகள் கேட்க எல்லோரும் மறந்துட்டீங்க. 

ஆனாலும் வாட்ஸ் அப் இருப்பதால், எங்களுக்கு கேள்விகள் கிடைத்தன. 
கேள்விகள் கேட்ட இருவருக்கும் எங்கள் நன்றி! 

திங்கள், 15 ஏப்ரல், 2019

திங்கக்கிழமை : அடடா அல்வா - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி



நாங்க திருநெல்வேலி போயிருந்தபோது, நவதிருப்பதிலாம் சேவித்துவிட்டு இரவு நெல்லையப்பர் கோவிலை நோக்கி டாக்சியில் சென்றோம். நெல்லை டவுன் ஆர்ச்சைத் தாண்டும்போது என் பெண் போன் செய்தாள். அவள் ஆபீஸுக்கு எவ்வளவு ‘இருட்டுக்கடை அல்வா வாங்கணும், வேற மிக்சர்லாம் வேணுமா’ என்று கேட்டு அவள் சொன்னதைக் குறித்துக்கொண்டேன். நல்லவேளை, சரியான சமயம் போன் பண்ணினாளே என்று எனக்கு மகிழ்ச்சி. (இல்லைனா, எனக்குன்னு வாங்கினதுலேர்ந்துனா நான் அவள் ஆபீஸுக்குக் கொடுக்கணும்).

புதன், 10 ஏப்ரல், 2019

புதன் 190410 : அழகு என்பது என்ன? + தொடர்கதை நிறைவுப்பகுதி


நல்ல வேளை! சென்ற வாரம் நான் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. 
கேட்டிருந்தால் என் கதி என்னவாகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமா இருக்கு! 


திங்கள், 8 ஏப்ரல், 2019

"திங்கக்கிழமை : மோர் ரசம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி


மோர் ரசம்

மோர் ரசம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகத்தான் இருக்கும். இந்த வகை மோர் ரசம் என் மாமியாரிடம் கற்றுக் கொண்டது. என் பிறந்த வீட்டுக் குறிப்பு அதிலும் என் அப்பா வழிப் பாட்டி செய்வது வேறு வகை. அது மற்றொரு நாள் சொல்கிறேன். என் அம்மா வழிப்பாட்டி ஏனோ மோர் ரசம் செய்ததில்லை.

புதன், 3 ஏப்ரல், 2019

புதன் 190403 :: காட்டிலே வண்ணத்துப்பூச்சி! + தொடர்கதை - 5


சென்ற வாரக் கேள்விக்கு, திண்டுக்கல் தனபாலன் அவர்கள் எழுதிய 

நான்கு மாத்திரையையும் பொடியாக்கி நன்றாக கலந்து, அதில் பாதியை சாப்பிட வேண்டும்...

என்பதுதான் மிகவும் சரியான பதில். 

புதன், 27 மார்ச், 2019

புதன் 190327 :: உயிர் பிழைக்க வழி சொல்லுங்க!


சென்ற வார புதன் கேள்வி ஞாபகம் இருக்கா? 

சென்ற வாரக் கேள்விக்கும், அதற்கு முந்தைய வார பல்பு கேள்விக்கும் தொடர்பு உண்டு. 

ஞாயிறு, 24 மார்ச், 2019

ஞாயிறு : ஜெயின் காலனி கணேஷ் மந்திர்


கணேஷ் மந்திரிலிருந்து ஹோட்டலுக்கு வரும் வழியில் 
ஜெயின் காலனியில் குடியிருப்புடன் இணைந்த ஒரு கோவில் 

புதன், 20 மார்ச், 2019

புதன் 190320 : ஸ்டிக்கர் ஒட்டத் தெரியுமா?


சென்ற வார பல்பு கேள்விக்கு பதில் கூறிய திண்டுக்கல் தனபாலனுக்குப் பாராட்டுகள். 

தப்பி ஓடிய மீதி பேர் எல்லாம் இந்த வாரம் பதில் அளிக்க முயற்சி செய்யுங்க! 

முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்;
முயற்சியிலார் மகிழ்ச்சி அடையார் !

புதன், 13 மார்ச், 2019

புதன் 190313 : பல்பு


சென்ற வாரக் கேள்வி - நூறு ரூபாய் செலவழிப்பது பற்றி நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. மேலும், அந்தப் பதிவின் பின்னூட்டங்களிலேயே ஒவ்வொருவரின் கருத்துக்கும் மறுமொழி இட்டுவிட்டேன். அப்புறம் ...... ஓ ஓ பி திங்கிங் பற்றி நான் ஏதாவது சொல்லப்போய், அப்புறம் எனக்கு 'த'(ர்ம) அடி கொடுக்க நண்பர்கள் கியூவில் நிற்க ஆரம்பித்து விடுவார்கள்! எனக்கேன் வம்பு! 

புதன், 6 மார்ச், 2019

புதன் 190306 :: சி யில் ஆரம்பித்து பு வில் முடிந்த ....


சென்ற வாரத்தில் நான் கேட்ட கேள்வி சிம்பிள்தான். ஆனால் பதில் உரைப்பவர்களின் படைப்பாற்றலை சோதிக்க ஒரு சிறு முயற்சி அது. 

சி என்ற எழுத்துடன் ஆரம்பிக்கும் விலங்குகளின் பெயர்களை எழுதுங்கள். " என்பதுதான் நான் கேட்ட கேள்வி.


வியாழன், 28 பிப்ரவரி, 2019

மொபைல் பையில், பை வண்டியில், வண்டி?



புதுமணத்தம்பதிகள் முன்னே புடவை, வேஷ்டி சரசரக்க நடக்க, மற்றவர்கள் குழுக்குழுவாக தங்களுக்குள் உரையாடியபடியே தொடர்ந்தார்கள்.

புதன், 27 பிப்ரவரி, 2019

புதன் 190227: மனைவி அமைவதெல்லாம் ...


சென்ற வாரக் கேள்விகள் இரண்டு கேட்டிருந்தோம். முதல் கேள்விக்கு ஏற்கெனவே நாங்கள் பதில் கூறிவிட்டதால், இப்போ மறுபடியும் இங்கே நாங்க ஒன்றும் சொல்லப்போவதில்லை. 

புதன், 20 பிப்ரவரி, 2019

புதன் 190220 : லீவு பெற நில் !


ஏற்கெனவே சொன்னது போல, சென்ற வாரக் கேள்விக்கு, இதுதான் சரி / இது சரி இல்லை என்றெல்லாம் எதுவும் சொல்லப்போவதில்லை. 

மாம்பழச் சின்னத்தை அடைய .... சாரி ...உச்சாணிக்கொம்பில் இருக்கின்ற மாம்பழத்தை சேதப்படுத்தாமல், நம் கைக்குக் கொண்டுவர எவ்வளவு வழிகள் உள்ளன என்பதை நாம் யோசிக்கவேண்டும் என்னும் ஒரே குறிக்கோளுடன்தான் அந்தக் கேள்வி கேட்டிருந்தேன். 


திங்கள், 18 பிப்ரவரி, 2019

"திங்க"க்கிழமை : கீரை தேங்காய் சீரகக் கூட்டு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி


எனக்கு சமையலுக்கு காய் கட் பண்ணணும்னா மிகவும் பிடித்த, சுலபமான வேலை. காய்கறிகள் வாங்குவதும் எனக்குப் பிடித்த வேலை. ஆனா, கீரை ஆய்வது, வாழைப்பூ அரிவது இரண்டும் எனக்குப் பிடிக்காத வேலை. என் மனைவி, வாரத்துக்கு ஒரு முறையாவது கீரை சமையல்ல சேர்த்துக்கணும் என்று சொல்வா. அதனால நான் ப்ராம்ப்டா, வாரம் ஒரு முறை கீரை வாங்கி வந்துவிடுவேன். 

வியாழன், 14 பிப்ரவரி, 2019

மந்தையைப் போல் நடத்தப்படும் மக்கள்



மதியம் இரண்டரை மணிக்கு காலி செய்துகொண்டு கிளம்பி விடலாம் என்று சொல்லி இருந்தார்கள்.  அறைக்குச் சென்று ஓய்வெடுத்துக்கொண்டு நாங்கள் இரண்டு மணிக்கு வந்தபோது யாரும் கிளம்பும் அறிகுறியையே காணோம்.  ஆனால் எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள்.  மஃப்டியில் இருந்தார்கள்!  பேக்கிங் செய்த அறிகுறியே இல்லை.  யாரோ நான்கு பேர் அறைச் சாவியைத் தராமல் கொண்டுபோய்விட்டார்களாம்.  'ஐயாயிரம் ரூபாய் கீழே வை' என்று கேட்டுக்கொண்டிருந்தார் தங்குமிடத்தின் பொறுப்பாளர்!

புதன், 13 பிப்ரவரி, 2019

பதன் 190213: பேசுவது கிளியா ?


சென்ற வாரம், நான் கேட்டிருந்த கேள்வி, 

" இந்தக் கேள்வியை யாராவது என்னைக் கேட்கமாட்டார்களா ..... என்று நீங்கள் ஏங்குகின்ற கேள்வி, எந்தக் கேள்வி?" 


வியாழன், 7 பிப்ரவரி, 2019

சின்னத்தம்பி


திருப்பதி சாஸ்திரிகள் மந்திரங்கள் சொல்லிச்சொல்லி, தமிழிலும் சபையோர்க்கு விளக்கம் சொல்லி நிச்சயதார்த்தம் நடத்தினார்.  

புதன், 6 பிப்ரவரி, 2019

புதன் 190206: "போட்டுத் தாக்கு!"


சென்ற வாரம் நான் சொன்ன பதில், 

முன் காலத்தில் ஆண்கள் சம்பாதி - அவர்களின் மனைவி வாழ்க்கையை அனுபவி என்று இருந்தனர். இருவரும் வேலைக்குச் செல்லும் இந்தக் காலத்தில், கணவன், மனைவி இருவருமே சம்பாதி, அவர்களின் குழந்தைகள் வாழ்க்கையை அனுபவி. ஆக, சிலர் சம்பாதித்தால், வேறு சிலர் வாழ்க்கையை அனுபவிக்கலாம்! " 

இது ரொம்பப் பேர் கோபத்தை கிளறிவிட்டது போலிருக்கு. 


ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

ஞாயிறு : மேயாத மான்!


வடகிழக்கு இந்தியாவின் பெரிய குவாஹாத்தி மிருகக்காட்சி சாலையில்...  432 ஏக்கரில் - 175 -ஹெக்டேர் - அமைந்துள்ள மிருகக்காட்சி சாலை மட்டுமல்ல, தாவரவியல் பூங்காவும் கூட...!