புதன், 23 ஜனவரி, 2019

புதன் 190123 : மாமியார் - மருமகள் சண்டை - அடிப்படைக் காரணம் என்ன?



ரேவதி நரசிம்ஹன் :

1) நாடி ஜோஸ்யத்தில் நம்பிக்கை உண்டா? 
2,நாடி ஜோஸ்யம் நிஜமா? 



# நாடி ஜோசியத்தில் நம்பிக்கை உண்டா என்ற கேள்விக்கு பதில் சொல்வது எளிது. நாடி ஜோசியம் நிஜமா என்ற கேள்விக்கு பதில் சொல்வது அவ்வளவு எளிது அல்ல.

எனக்கு நாடி ஜோசியத்தில் நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது. ஆனால் எனக்கு தெரிந்த ஒருவர் சொன்ன சம்பவங்கள் நாடு ஜோசியத்தை நம்பி தான் ஆக வேண்டும் என்கிற நிலையை உண்டாக்குகின்றன.

ஜோசியம் கேட்க வருபவர்களின் பின்னணியை உற்று செய்து ஆராய்ந்து அந்த உண்மைகளை ஒரு கவிதை வடிவில் எழுதி அதை படித்து பலன் சொல்கிறார்கள் என்று பலரும் சொல்கிறார்கள். ஒரு புது ஊரில் நான் போய்த் தங்கி இருக்கும்போது என்னையே  விசாரித்து என்னைப் பற்றிய அவ்வளவு உண்மைகளையும் தெரிந்து கொள்ள முடியுமா என்பது முதல் கேள்வி.

தாம்பரத்தில் ஏதோ ஒரு இடத்தில் வெறும் விரல்ரேகை மட்டும் கொடுத்து வேண்டிய தகவல்களை பெற்றதாகவும் அவை மிகவும் சரியாக இருப்பதாகவும் என் நெருங்கிய உறவினர் ஒருவர் சொல்லுகிறார்.

வி எஸ் என் எல்-இல் பணிபுரியும் ஒருவர் தம் பணி குறித்து நாடி ஜோசியத்தில் கடல் தந்தி விடுதூது பணிபுரிவான் என்று வந்ததாக ச் சொன்னார்.

இன்னொரு நண்பர் அவர் பிறந்த வீடு கிழக்கு நோக்கி இருந்தது என்பதையும் அவருக்கு பிறந்தவுடன் வைக்கப்பட்ட பெயர் அவர் தற்போது தாங்கியிருக்கும் பெயர் அல்ல என்பதையும் நாடி ஜோசியத்தில் மிகச்சரியாக சொல்லப்பட்டதாகவும், ஆனால் தனது ஆயுள் 67ல் முடியும் என்று தவறாக குறிப்பிடப்பட்டு இருந்தது என்றும் சொன்னார்.

நான் நேரடியாக நாடி ஜோசியம் இதுவரை பார்த்ததில்லை பார்ப்பதாகவும் இல்லை.

கடந்தகால விஷயங்கள் சரியாகவும் எதிர்காலத்தில் சொல்லப்படுவது அவ்வளவு சரி இல்லாததாகவும் இருக்கிறது என்று பலரும் சொல்கிறார்கள். கடந்தகால விஷயத்தை பார்த்துக்கொள்வதற்கு  ஜோசியம் எதற்கு?

எல்லாவற்றையும் வைத்து பார்க்கும்போது நாடி ஜோசியம் உண்மையா என்ற கேள்விக்கு என் பதில் -  "எனக்குத்    தெரியாது."

& நாடி ஜோசியம் - இதுவரை அனுபவம் இல்லை. ஒரு சிலருக்கு நாடி ஜோசியம் பலன் அளித்துள்ளது என்பதை மட்டும் கேள்விப்பட்டிருக்கிறேன். துண்டுச்சீட்டில் திருக்குறள் போல இரண்டு வரிகள் எழுதி(கிறுக்கி)த் தந்தால், அதைப் படிக்கும் பரிமேலழகர்கள் அவரவர்களுக்குத் தோன்றிய விதத்தில் விளக்கங்கள் அளிக்கலாம் என்பதும் ஒரு சௌகரியம்! 
           
இன்றைய தேதி பலன் : (என்) தனுசு இராசிக்கு, "நட்பு" இன்றைக்கு இதன்படி நடந்ததா என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்! 

Nādi Astrology (nāḍi jyotiṣa) is a form of Dharma astrology practiced in Tamil NaduKerala and adjacent regions in India. It is based on the belief that the past, present and the future lives of all humans were foreseen by Dharma sages in ancient time.[1][2][3] As all astrology predictions are to be forewarned of falsity, this form of astrology too should only be consulted with caution and concern. 

கீதா சாம்பசிவம் :

பல சமயங்களில் செய்யாத ஒரு காரியத்துக்கு/குற்றம்/தவறான காரியம் ஏதோ ஒண்ணு அதுக்கு நம்மை மாட்டிவிட்டுத் தப்பிப்பவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

# நாம் செய்யாத ஒன்றுக்கு நம்மை மாட்டி விடுவது   சாத்தியமா என்று தெரியவில்லை. "இதை இவர் கூட சொன்னார்"  என்று நம்மை சாட்சிக்காக சிலர் இழுக்கும்போது அதை மறுத்துப் பேச நமக்கு மனம் இல்லாமல் போய்விடுகிறது இந்த சங்கடங்களை சில சமயம் அனுபவித்திருக்கிறேன்.  ஆனால் அதனால் பெரிய கஷ்டம் எதுவும் வந்ததில்லை.

& செய்யாத குற்றத்திற்காக அடி வாங்கியவன் நான். ஆமாம்! பள்ளிக்கூட நாட்களில், "ஏன் வீட்டுக் கணக்கு செய்யவில்லை?" என்று கேட்டு, என்னை அடித்த ஆசிரியரை மறக்க முடியாது. 

நீங்கள் அது மாதிரி மாட்டிக்கொண்டு விழித்திருக்கிறீர்களா?
மாட்டிவிட்டவரிடம் கோபம் வருமா? வந்தது உண்டா? நகைச்சுவைக்காக எனில் சாதாரணமாய் எடுத்துக்கொள்வோம். ஆனால் தவறுகள் செய்துவிட்டு மாட்டிவிட்டால்? 

# செய்யாத ஒன்றுக்கு நாம் மாட்டி விடப்படும் போது கோபம் வரத்தான் வேண்டும்.

காதல் திருமணங்கள் வெற்றிகரமாக முடியுமா இல்லையா என்பதை எப்படிக் கண்டு பிடிப்பீர்கள்? எல்லோருமே காதலுக்கு உயிரைக் கொடுப்பதாகத் தான் சொல்கின்றனர். 

# காதலில் இரண்டு வகை ஒன்று பொருந்தாத காதல், மற்றது விரும்பத்தக்க உண்மையான அன்பினால் உண்டாகும் ஈர்ப்பு.
பொருத்தம் இல்லாத காதலில் மணமகன் அல்லது மணமகள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பது, நல்ல கல்வி உத்தியோகம் இல்லாமல்  இருப்பது. இந்த மாதிரி காதல் திருமணம் வெற்றி அடைய வேண்டும் என்றால் திருமணத்திற்குப் பின் இருவரும் அன்பாக இசைவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது குறித்து எதிர்ப்பு சொல்வதில் நியாயமில்லை. இதை முன்பாகவே எப்படி கண்டுபிடிக்க முடியும்? அது அசாத்தியம் என்றே  தோன்றுகிறது. எல்லாம் சரியாக இருந்தும் திருமணத்திற்குப் பின் சிக்கல்கள் ஏற்படும். ஆனால் அதற்கு முக்கிய காரணம் கணவன் அல்லது மனைவிக்கு  ஈகோ மிகவும் அதிகமாக இருப்பது தான். 'கல்யாணத்துக்கு முன் இப்படி இல்லை' என்பது அடிக்கடி சொல்லப்படும் ஒன்று.

முதியோர் இல்லம் பெருகி வருவது குறித்து உங்கள் கருத்து என்ன? 
அவரவராக விரும்பி எல்லாப் பெற்றோரும் முதியோர் இல்லத்தை நாடுவதில்லை என்றே நினைக்கிறேன். உங்கள் கருத்து?

# முதியோர் இல்லம் என்றில்லை எதுவானாலும் தேவை இருந்தால் சப்ளை அதிகரிக்கும். 

இல்லங்களில் முதியோர் கொண்டு தள்ளப் படுகிறார்கள் என்பதில் எந்த அளவு உண்மை இருக்கும் ? உலக நியதிப்படி வெளிநாட்டில் வேலை பார்க்கும் பிள்ளைகள் தம் பெற்றோரை சரியாக பார்த்துக்கொள்ள சில இல்லங்களை  நாட வேண்டி இருக்கும். சில பெற்றோர்கள் வெளிநாடுகளில் வசிக்க விரும்புவதே இல்லை. அதற்காக தன் வேலையை தியாகம் செய்து இந்தியாவில் வந்திருக்க பிள்ளைகளும் விரும்புவதில்லை. இது இயற்கை தானே.நான் வர மாட்டேன் என்று முரண்டு பிடித்து விட்டு தன் பிள்ளைகள் வேலையை விட்டுவிட்டு வந்து தம்மை கவனிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்பினால் அதுவும் சரியில்லைதான். முதியோர் இல்லங்களில் வசிக்கும் எல்லா பேரும் சந்தோஷமாக திருப்தியாக இல்லை என்கிற வாதத்தை ஏற்றுக் கொள்வதற்கில்லை. இது ஒரு necessary evil. அவ்வளவுதான்.

முதியோர் இல்லத்தையும் விரும்பி ஏற்கும் பெற்றோர்கள் இல்லாமல் இருப்பதில்லை.தம் மக்கள் நேர்மையாக சௌக்கியமாக இருக்கவேண்டும் என்று நினைப்பது பெற்றோர்களுக்கு இயல்புதானே.

இந்தக் குழந்தைகளைப் பெற்றோராகிய நாமே வளர்க்கிறோம். அவங்களுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்ததும் நாம் தான். ஆனாலும் அவங்களுக்குக் கல்யாணம் ஆனதும் அவங்க ஏதோ ஒரு தீவிலும் பெற்றோர் எங்கோ ஓர் தீவிலும் இருப்பது ஏன்? 

கல்யாணமானதும் குழந்தைகள் விலகி ஒரு தீவில் வசிக்கிறார்கள் என்பது என் வரையில் உண்மை இல்லை. ஆனால் பல வீடுகளில் அந்த மாதிரி ஒரு உணர்ச்சி இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். கல்யாணம் ஆகிவிட்டால் கணவன் அல்லது மனைவி தான் முதலிடம் பெற்றவர்கள் கூட அப்புறம்தான் என்கிற உண்மையை நாம் பார்க்க மறுப்பது தான் இதற்கு முக்கிய காரணம். பணக்கார மாமனார் மாமியார் தன் மாப்பிள்ளையை ஒரு கார் டிரைவர் போல் பார்க்காமல் இருப்பதும், ஒரு பெண்ணின் மாமனார் மாமியார் அவளை ஒரு சமையல்காரியாக பார்க்காமல் இருப்பதும் இந்த பிரச்சனை வளரவிடாமல் இருப்பதற்கு வழி செய்யும்.

ஒரு சிலருக்குப் பெண், மாப்பிள்ளை ஆனாலும் ஒத்துவரதில்லை. பெரும்பாலும் பெண்கள் பெற்றோரை ஆதரித்தாலும் அம்மா+பெண் இடையேயும் மோதல்கள் ஏற்படுவதைக் கண்டிருக்கேன்? ஏன்? நாம் வளர்த்த குழந்தைகள் தானே? எங்கே தப்பு நடந்தது? அல்லது நடக்கிறது? சகிப்புத் தன்மை யாருக்கு வேண்டும்?  உங்கள் கருத்தைப் பகிரவும். 

யாராக இருந்தாலும் இருவருக்கு இடையில் கருத்து வேற்றுமை என்பது சகஜம் தான். அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து வாழ்க்கையில் நிம்மதி அமைகிறது.விட்டுக் கொடுத்தல் என்று வந்துவிட்டால் என்னை பொறுத்தவரை இரண்டு தரப்பினரும் விட்டுக் கொடுக்க வேண்டிய தான் இருக்கும். ஒவ்வொருவரும் தான் விட்டுக் கொடுக்க வேண்டும் என்கிற மனப்பான்மையோடு இருந்தால் பிரச்சனை வருவதற்கு இடமில்லை.

பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பது நல்லதா? அல்லது இந்தக் காலத்துக்குப் பொருந்தாததா? உதாரணமாக இப்போதெல்லாம் கணுப்பிடி என்பது ஏன் வைக்கிறோம் என்பதே இளைஞர்கள், இளம்பெண்களுக்குத் தெரிவதில்லை. அவங்க பெற்றோரும் ஏதோ நம் அப்பா, அம்மா சொன்னாங்க செய்தோம். இது தான் வழக்கம் என்னும் போக்கையே கடைப்பிடிக்கிறாங்க. காரண, காரியங்களை எடுத்துச் சொல்லுவது சரியா தவறா?

# பாரம்பரியத்தை கடைபிடிப்பது என்பது பொதுவாக நல்லது என்றுதான் நினைக்கப்படுகிறது. அது அப்படித்தானா என்பது பாரம்பரியம் என்ன எதைப் பற்றியது என்பதைப் பொருத்து இருக்கும்.

கணுப்பிடி போன்ற சம்பிரதாயங்களை ஏன் செய்கிறோம் என்று எடுத்துச் சொல்வது சரிதான். ஆனால் அதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தால் அது குறித்து கவலை கொள்வதில் அர்த்தமில்லை. ஒரு நாள் மாடியில் சோறு வைத்துவிட்டு காக்கா குருவிகளை காப்பாற்றுகிறோம் என்று சொல்வதில் என்ன உண்மை இருக்கிறது ? நாம் சொல்லும் காரண காரியங்கள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பதைப் பொறுத்துதான் எதுவுமே சொல்ல முடியும்.

உறுப்பு தானம் பற்றி உங்கள் கருத்து என்ன? பெரும்பாலும் விபத்துகளில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளே தானமாகப் பெறப்படுவதாய்ச் சொல்கின்றனர். ஆனாலும் சமீபத்தில் நன்றாக இருந்த ஒரு வாலிபரின் உறுப்புகள் திட்டமிட்டு தானமாகப் பெறப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதெல்லாம் சரியா?

# உறுப்பு தானம் சரி .  உறுப்புகள் திருடப்படுவது சரி அல்ல.

பெண்ணைப் பெண்ணே தாக்குவது குறித்து உங்கள் கருத்து என்ன? உதாரணமாக மாமியார், மருமகள், மருமகள், மாமியார்! உலகப்பிரசித்தி பெற்ற பிரச்னை! ஏன்?

# நம் வீட்டில் பெண் குழந்தைகளை வளர்க்கும் போது நாளைக்கே மாமியார் வீட்டுக்கு போய் நீ படுவாய் பாரு என்று சொல்லி வளர்க்கும் பெற்றோர்கள் பலரையும் நான் பார்த்திருக்கிறேன்.

ஆக, ஆதி முதலே இந்த மனப்பான்மையை நாம் வளர்க்கிறோம். மாமியார் என்றால் எதோ ஒரு காட்டு விலங்கு என்ற எண்ணத்தோடு ஒரு வீட்டுக்குள் நுழைந்தால் பிறகு அங்கு இணக்கமான சூழ்நிலை எப்படி ஏற்படும் ?

இப்போதைய செய்தி ஒன்றில் சபரிமலைக்குள் ரகசியமாக அரசால் நுழைக்கப்பட்ட கனகதுர்கா என்னும் பெண்ணை அவர் மாமியார் ஆக்ரோஷமாகத் தாக்கி இருக்கார். என்னதான் அவர் செய்த்து தவறாகவே இருந்தாலும் தாக்கி இருக்கக் கூடாது என்பதே என் தனிப்பட்ட கருத்து. அதுவும் அவர் நரம்புகள் பாதிப்படையும் வண்ணம் தாக்கி இருக்கார். மாமியார் எனில் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இத்தகைய வன்முறைகள் இப்போதும் நடப்பதன் காரணம் என்ன? 

# ஐயப்பன் பேரில் உள்ள பக்தி காரணமாக ஒரு பெண் தன் மருமகளை நரம்புகள் பாதிக்கப்படும் அளவுக்குத்  தாக்குகிறார் என்றால் அது தெய்வ பக்தி யே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தப் பெண்ணும் என்ன காரணத்திற்காக சபரிமலை கோயிலுக்குள்  நுழைகிறாள் என்பதும் இங்கு யோசிக்க வேண்டிய விஷயம். தெய்வத்தின் மேல் உண்மையான பக்தி  இருக்குமானால் அவர்களில் எவருக்கும் ஒரு கோயிலின்  நியதிகளை மீறி அங்கு செல்லவேண்டும், எதோ ஒன்று செய்ய வேண்டும் என்று தோன்றக்கூடாது .  அது சட்ட ரீதியாக சரியா இல்லையா என்பது இதற்கு அப்பாற்பட்ட விஷயம்.

சட்டரீதியாக செய்யக்கூடியது எவ்வளவோ இருக்கிறது அவை அனைத்தையும்  வறட்டு பிடி வாதத்துக்காக யாரும் செய்ய முற்படுவதில்லை. பிரா அணியாது இருப்பது பெண் உரிமையை நிலைநிறுத்துகிறது என்று நினைப்பது போல் தான் இது.
                
மாமியாருக்கு மருமகளைப் பிடிக்காமல் போவதிலும் மருமகளுக்கு மாமியாரைப்பிடிக்காமல் போவதிலும் உள்ள அடிப்படைக் காரணம் என்ன?

& ஒரு பையன் மீது அம்மாவுக்கு உரிமை அதிகமா, அல்லது அந்தப் பையன் மீது அவனுடைய மனைவிக்கு உரிமை அதிகமா? இதை ஒரு பையனின் தாய், அந்தப்  பையன், அவன் மனைவி என்ற கோணத்தில், நம் வாசகர்கள், அவர்களின் கருத்துகளைப் பகிரலாம்! 
( 'நாராயண, நாராயண!') 


106 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய் காலை வணக்கம் எல்லோருக்கும்.....எழுவதற்கு லேட்டாகிப்போச்சு..

      அப்புறமா வரேன்...

      கீதா

      நீக்கு
    2. கௌ அண்ணா இனிய காலை வணக்கம்...

      கீதா

      நீக்கு
    3. எல்லோருக்கும் காலை வணக்கம். நியூஜிலாந்து / இந்தியா கிரிக்கெட் பார்ப்பதில் மும்முரமாக உள்ளேன். அதனால்தான் உடனுக்குடன் பதில் சொல்லவில்லை!

      நீக்கு
  2. செய்யாத குற்றத்திற்காக அடி - ஹாஹா....

    நாடு ஜோசியம் என ஒரு இடத்தில் வந்து இருக்கிறது. ஜோசியத்தை நாடு என சொல்லாமல் சொல்லிட்டீங்க போல. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாடு, அதை நாடு ... அதை நாடாவிட்டால் ஏது பாடு? !

      நீக்கு
  3. சுவாரஸ்யமான கேள்விகள்.பதில்களும் கூட .இதுவே நிறைய இல்லாமல் இரண்டு மூன்றோடு இருந்திருந்தால் பதில் கருத்துரை இட ஏதுவாக இருந்திருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைகள் உங்களைக் கவர்ந்த எந்த டாபிக் பற்றியும் இருக்கலாமே!

      நீக்கு
  4. கூரான வினாக்களும்
    சீரான விடைகளும்!...

    அருமை...

    பதிலளிநீக்கு
  5. நாராயண.. நாராயண..

    காலையிலேயே தேவகானம்...

    பதிலளிநீக்கு
  6. பாரம்பர்யத்தைக் கடை பிடிப்பதற்கான கேள்விக்கு பதில் மிக அருமை. நம் வழக்கங்களில் பல தற்காலத்துக்கு கன்வின்சிங் ஆக இல்லை. பெண்ணைப் பெண்ணே தாக்குவதற்கான பதிலும் அருமை.

    விக்கிபீடியா விளக்கம் தவிர்க்கலாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரம்பர்யத்தைக் கடை பிடிப்பதற்கான கேள்விக்கு பதில் மிக அருமை. நம் வழக்கங்களில் பல தற்காலத்துக்கு கன்வின்சிங் ஆக இல்லை. பெண்ணைப் பெண்ணே தாக்குவதற்கான பதிலும் அருமை.//

      நான் சொல்ல நினைத்தது.... கணினி உங்கள் பதிலிலேயே நின்றிருந்தது. அதைப் பார்த்ததும் சரி டிட்டோ செய்துடலாம்னு நினைச்சு டிட்டோ செய்துவிடுகிறேன்...

      கீதா

      நீக்கு
    2. நன்றி நெ த. விக்கி என்பது என்னுடைய மூன்றாவது பேரனின் செல்லப் பெயர். அதனால் ஒரு நாளைக்கு ஒருதடவையாவது விக்கி பக்கம் பார்ப்பேன்.

      நீக்கு
  7. திருமணம் ஆகும்வரை மட்டுமல்ல இறக்கும் வரை, மகன் மீதான தாயின் உரிமை மாறாதது. திருமணம் ஆன பிறகு மனைவிக்குத்தான் கணவன் மீது உரிமை அதிகம். - குழப்புதோ?

    அம்மாவிற்கு மகனின் மனைவிமீது உரிமை கிடையாது. அவள் மகளல்ல. மகளையோ மகனையோ கண்டபடி திட்டினாலும் (எந்த வயதிலும்), நீர் அடித்து நீர் விலகாத்து போல அது மறந்துவிடும். ஆனால் மருமகளிடம் அத்தனை உரிமை எடுத்துக்கொள்வது 90% பிரச்சனையில் முடியும்.

    அம்மா ஒன்றைச் செய்யக்கூடாது என்று சொல்லி, மனைவி அதைச் செய்யச்சொன்னால் (லாஜிக் இருக்கும் பட்சத்தில்), மனைவி சொல்லே மந்திரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்! ஊம். நடத்துங்க!

      நீக்கு
    2. மாமியார், மருமகள் பிரச்னையை எடுத்துக் கொண்டால் 2,3 பிள்ளைகள் அதாவது ஆண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மாமியார் பெரிய மருமகளிடம் மட்டுமே தன் அதிகாரத்தைக் காட்டுவார்/காட்ட முடியும். மருமகளும் புதிசு, மாமியாரும் புதிசு! ஆகவே எல்லா அதிகாரத்தையும் காட்டி இருப்பார். இதைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட அடுத்த பிள்ளைகள் தங்கள் மனைவியருக்குக் கொஞ்சம் கவனமாக இருக்கும்படி சொல்லி விடுவாங்களோ? ஏனெனில் பல வீடுகளிலும் இளைய மருமகளிடம் மாமியார் ஜம்பம் பலிக்காது! :))))

      நீக்கு
    3. உண்மைதான் கீசா மேடம். இதைத்தான் பல வீடுகளில் பார்த்திருக்கிறேன்.

      மூத்த பையனைத் திருமணம் செய்துகொள்வது ஆபத்துதான். ஹா ஹா ஹா

      நீக்கு
    4. கீதாக்கா கரீக்டு!!!! ரொம்பவே கரீக்டு....

      அக்கா அதிலும் ஒன்ரே ஒன்று... பெண் எந்த ஏரியா என்பதைப் பொருத்தும் உண்டு....மூன்றோ நான்கோ பிள்ளைகள் என்று வைத்துக் கொள்வோம்....இதில் மூன்று ஒரே ஏரியா அதாவது பிள்ளை வீட்டு ஏரியா என்று வையுங்கள்...கொஞ்சம் பலிப்பது கடினம்....அதுவும் மூத்தவராகவே இருந்தாலும்....ஆனால் வீட்டுக்கு வரும் இளைய மருமகள் வேறு ஏரியா அல்லது கொஞ்சம் அசடு/அப்பாவி என்று வையுங்கள்...அது பல விதங்களிலும் சொல்லிக் காட்டப்படுவதும் நடக்கிறது....

      எனக்குத் தெரிந்த மிக மிக நெருங்கிய குடும்பத்தில் மூத்த மருமகள் நன்றாகக் கோலோச்சி மாமியாரிடம் நடந்து கொள்ளும் விதத்தில் அழகாகப் பேசி...கொஞ்சம் சாமர்த்தியம் என்று சொல்லலாமா!!?? மற்ற மருமகள்களை மெதுவாக வெளியோ போக வைத்துவிட்டார்!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  8. பதில்கள் மிகவும் அறிவுப்பூர்வமாக இருந்தது ஜி.

    பதிலளிநீக்கு
  9. கௌதமன் சார் கடைசிக்கேள்விக்கு எல்லோரையும் பதில் சொல்லச் சொல்லிட்டுத் தப்பிச்சுட்டார். அநேகமான என் கேள்விகளுக்கு எ.பி.யின் அனுபவம் வாய்ந்த மூத்த ஆசிரியரால் மட்டுமே பதில் சொல்லப்பட்டுள்ளது. அவரின் கருத்துக்களை நானும் மதித்து ஏற்றுக்கொள்கிறேன். என்றாலும் மீண்டும் வந்து படித்து அதில் ஏதேனும் சந்தேகம், அல்லது மாற்றுக் கருத்து இருந்தால் பகிரணும். வரேன் அப்புறமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்ரானாம் பதில் படாஷ, அத்ரானாம் மற்றவரை கடீஷ என்று தண்டோபனிஷத் சொல்லுது. அதாவது பதில் தெரியாத கேள்விகளுக்கு மற்றவர்களை மாட்டிவிடு என்று ஸ்திரீமான் கிண்டலலங்காரச் சித்தர் சொன்ன விளக்கவுரையை பின்பற்றியுள்ளேன்.

      நீக்கு
  10. மறந்துட்டேனே, செய்யாத குற்றத்துக்கு அடிவாங்கியதும் தான் தான் என்பதையும் கௌதமன் சார் ஒத்துக்கொண்டிருக்கார். இஃகி, இஃகி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அடி வாங்கினதுல உங்களுக்கு இவ்வளவு புளகாங்கிதமா!

      நீக்கு
    2. ஹெஹெ, அதெல்லாம் நினைச்சுப் பார்த்துக் கற்பனை எல்லாம் கண்டுட்டு இல்ல சிரிப்போம்! :)

      நீக்கு
  11. இன்னொரு ஆசிரியர் வழக்கம் போல் சுற்றுப்பயணத்தில் இருக்காரோ?

    பதிலளிநீக்கு
  12. ரேவதி நரசிம்ஹன்
    அம்மா உங்கள் தளத்தில் கடந்த மூன்று பதிவுகளாக செல்வழியில் கருத்துரை இடமுடியவில்லையே... ஏன் ?

    ஆகவே நான் படித்து மட்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவகோட்டையாரே. எனக்கு இந்த விஷயம் எல்லாம் தெரிவதில்லையே.
      நீங்கள் படித்ததே சந்தோஷம்பா.
      செட்டிங்க்ஸ் மாற்ற வேண்டுமோ தெரியாது.
      ஒங்களது கூகிள் வழி வருமே. பரவாயில்லை மா.
      கவலை வேண்டாம்/

      நீக்கு
  13. நல்ல கேள்விகள்,சிறப்பான பதில்கள்.

    பதிலளிநீக்கு
  14. நாடி ஜோதிடம் மட்டுமல்ல ஜோதிடத்தின் எந்த பிரிவிலும் எதிர்காலத்தை துல்லியமாக சொல்ல முடியாது. அது நம்முடைய ஃப்ரீ வில்லுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சலுகை.
    கிரிக்கெட் மாட்சில் ஒரு விளையாட்டு வீரர் விளையாட வரும்போது அவரைப்பற்றி டேட்டா போடுவார்கள், அதை வைத்துக்கொண்டு இந்த மேட்சில் அவர் எப்படி விளையாடப் போகிறார் என்று ஒரளவிற்குதானே கணிக்க முடியும்?

    பதிலளிநீக்கு
  15. கேள்விகள் அனைத்தும் அருமை என்றால் பதிகல்களும் செம...ரொம்பவே ரசித்து வாசித்தேன். கிட்டத்தட்ட என் கருத்துகள் பல.

    எதிர்காலம் என்றில்லை அடுத்த நொடி கூட என்ன நடக்கும் என்பது தெரியாது. அது போல கடந்ததை கிளறுவதிலும் அறிவதிலும் அர்த்தம் இல்லை. அதிலிருந்து கிடைத்த அனுபவப் பாடங்களை மட்டும் மனதில் கொள்ளலாம். அதையும் விட முந்தைய ஜென்மம் இனி உள்ளது என்பதை விட இந்த நொடியில் வாழ்வது சிறந்தது நல்லது என்பது என் தனிப்பட்டக் கருத்து. நான் எந்த ஜோசியம் பக்கமும் செல்வதில்லை. இறைவனிடம் விட்டுவிடுவேன். இறைவனைத் துதித்து நன்றி சொல்லி பிரார்த்தனை என்பதில் அதீத நம்பிக்கை உண்டு. எனவே எல்லாம் அவன் செயல் என்பதாலோ என்னவோ ஜோஸ்யம் பக்கம் நாட்டமே இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்.. போன ஜென்மத்துல நான் சொன்ன அறிவுரையை நீங்க இன்னும் பின்பற்றறீங்கள்ளே. பாராட்டுகிறேன்

      நீக்கு
  16. உறுப்பு தானத்தை பற்றி என் கருத்தை நான் முன்பு எழுதியிருந்தேன். அதன் சுட்டி இணைத்தள்ளேன்
    https://thambattam.blogspot.com/2014/03/blog-post.html?m=1

    பதிலளிநீக்கு
  17. நேற்று ஒருவர் ஏதோ தப்பு செய்தார் என்பதற்காக அவரை அப்படியே ப்ரான்ட் செய்து எப்போதும் அவர் அப்படியே என்று நினைப்பதாலும் பல பிரச்சனைகள் எழுவதுண்டு. இது எல்லா உறவுகளுக்கும் பொருந்தும் மாமியார் மருமகள் கேஸிற்கும் பொருந்தும். ஏன் தவறு செய்தவர்கள் திருந்தமாட்டார்களா என்ன?

    நாம் பலரிடமும் நாம் நினைப்பது போலவே அவர்களும் இருக்க வேண்டும் என்றோ அல்லது அதீத பெர்ஃபெக்ஷன் எதிர்பார்ப்பதாலும் பிரச்சனைகள் எழும். இந்த நொடி போல் அடுத்த நொடி இல்லையே. ஸோ அந்தந்த சமயத்திற்கு ஏற்ப தீர்வுகள் யோசித்து சென்றுவிட்டால் பிரச்சனைகளைக் குறைக்கலாம்

    பல பெண்கள் கல்யாணம் ஆகி வரும் போதே மாமியார்னா இப்படித்தான் என்ற ப்ரீ டிட்டெர்மின்ட் நோஷனோடு என்டர் செய்கிறார்கள். அது மிகவும் தவறானது. அது போல மாமியார்கள் பலருக்கும் அந்த எண்ணம் உள்ளது. மருமகள் என்றாலே நம்மையும் மகனையும் பிரித்துவிடுவாள் என்று அதுவும் மிகவும் தவறான மனப்போக்கு.
    வேடிக்கை முரண் எல்லாம் இருவருமே பெண்கள் என்பதுதான். இந்த ப்ரீடிட்டெர்மின்ட் நோஷன் இல்லாமல் அவ்வப்போது எழும் கருத்து வேறுபாடுகளை மாமியாரும் மருமகளும் மட்டுமே ஒன் டு ஒன்னாக தீர்த்துக் கொண்டால் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மனைவி மாமியாரைப் பற்றி தன் கணவனிடம் குறைகள் சொல்லாமல் தானே தீர்த்துக் கொள்ள முயன்றால் நல்லது. அதே போல மாமியாரும் மருமகள் பற்றி மகனிடம் சொல்லாமல் இருக்க வேண்டும். இது எங்கள் வீட்டில் என் விஷயத்தில் வெற்றி பெற்ற ஒன்று. என் மாமியாரும் அப்படியே. நான் என் மாமியாரிடம் ஸாரி சொல்லவும் தயங்கியதில்லை. என் மீது தவறு இல்லை என்றாலும் கூடச் சொல்லிவிடுவேன். அவரிடமும் அவர் செயல்கள், வார்த்தைகள் எனக்குக் கஷ்டமாக இருந்தால் - பொதுவாகவே எனக்கு எருமைத் தோல். என் வீட்டில் எனக்கு அப்படித்தான் பெயரும். எதுவும் ரொம்ப என் தலைக்குள் செல்லாது - அதையும் மீறி எப்போதேனும் நிகழ்ந்தால் அவர்களிடம் தனியாகச் சொல்லிய தருணங்கள் உண்டு. அதன் பின் அவருக்கும் வயதாகி எனக்கும் அனுபவப் பக்குவம் தந்த பாடங்கள் என்று ரொம்பவே தோழமை. சென்னையில் இருந்த போது பார்த்துக் கொள்ள முடிந்தது. இப்போது பங்களூரில் இருப்பதால் முடியவில்லை என்ற வருத்தம் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே சொல்லியவை நார்மலான கொஞ்சம் யோசிக்கும், நினைத்துப்பார்க்கும் நல்ல சிந்தனைகள் உள்ள வரைமுறைக்கு உட்பட்ட மனித உறவுகள்....

      அல்லாமல் அதீதமாக எமோஷனலான மக்களுக்கு அல்ல. கீதாக்கா சொல்லியிருக்கும் இன்சிடென்ட் போலான மாமியார்களுக்கோ அல்லது மாமியாரை கொலை செய்யும் வரை போகும் மருமகள் அப்படியான உறவுகள் என்பது கஷ்டம்தான்.

      கீதா

      நீக்கு
    2. வேலைகள் முடிச்சுட்டு அப்புறமா வரேன்....பானுக்கா உங்க சுட்டி பார்க்கிறேன்...

      கீதா

      நீக்கு
    3. கீதா ரங்கன்.. நீங்க சொல்லறதைப் பார்த்தால் ஆண்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க. உலகப் பிரச்சனைக்கும் வீட்டுப் பிரச்சனைக்கும் பெண்கள்தான் காரணம்னு சொல்றீங்க.

      என்னைவிடப் பெரியவங்களான நீங்க சொல்றது 200% சரியாத்தான் இருக்கும்

      நீக்கு
    4. கௌ அண்ணா நானும் நாராயண நாராயண என்றுதான் சொல்லப் போரறேன்...ஹா ஹா ஹா ஹா பின்ன நெல்லை நான் சொல்லுவதை எப்படி கலகம் மூட்டுறார் பாருங்கோ... ஹிஹி சரி சரி நாரதர் கலகம் நன்மையில் முடியட்டும்.....

      நெல்லை ஹூக்கும் கேப் கிடைக்க்ம் போதெல்லாம் உங்களை விட நான் பெரியவனு சொல்லிக்கறீங்க சொல்லிக்கோங்க சொல்லிக்கோங்க... ஹா ஹா ஹா ஹா...சிரித்துவிட்டேன்...

      நெல்லை அண்ணே....நெல்லை தம்பி (உங்களுக்கும் இல்லை எனக்கும் இல்ல இது எப்பூடி!!!!) நான் அப்படிச் சொல்லவில்லையே! ஆண்களினாலும் பிரச்சனைகள் உண்டு. கண்டிப்பாக...மனைவிகள் சொல்லும் எல்லாவற்றையும் சுய சிந்தனை இல்லாமல், முதுகெலும்பு இல்லாமல் ..எல்லாவற்றிற்கும் ஆமாம் சாமி போடுபவர்கள் ஒரு ரகம் என்றால்....மற்றொரு ரகம் ஹைலி ஈகோயிஸ்டிக். தான் வைத்ததுதான் சட்டம் என்று மனைவியோ மற்றவர்களோ பேசுவதைக் காது கொடுத்துக் கூடக் கேட்காமல் பேசுபவர்கள். அதனாலும் பல பிரச்சனைகள் உண்டு.

      ஆனால் இங்கு மாமியார் மருமகள் பிரச்சனை என்றதால் அதற்கு மட்டும் சொன்னேன். இருவருமே பெண்கள். பெண்கள் சாதுரியம் மிக்கவர்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுவது. எனவே கணவனிடமிருந்து பிரச்சனை என்றாலும் சரி புகுந்த வீட்டில் பிரச்சனை என்றாலும் சரி பெண்கள் சாதுரியமாக கையாண்டால் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அது போன்று ஆண்கள் பேலன்ஸ்டாட இருந்தால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

      ஆனால் சில இடங்களில் பெண்கள் தங்கள் திறமையைக் கூடக் காட்ட முடியாமல் பல விதங்களிலும் அடக்கப்பட்டு சுயசிந்தனைகளைக் கூடச் சொல்ல முடியாமல் ஒரு சஜஷன் கூடச் சொல்ல முடியாமல், அவள் பிறந்த வீட்டினர் அவமதிக்கப்படும் நிலையும் உண்டுதான்.

      எனவே மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கண்ணதாசன் மாமா அவர்கள் எழுதியிருக்கலாம்..அவர் எதை வைத்து எழுதினாரோ? ஆண்களின் சார்பில் எழுதியிருக்கலாம்....ஆனால் நான் கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றும் சொல்லுவேன் பெண்களின் சார்பில்...

      கணவனோ மனைவியோ மனப்பக்குவத்துடன் புரிதலுடன் கலந்து பேசி முடிவெடுத்தல் இரு பக்கமும் பேலன்ஸ்டாட இருந்துவிட்டால் யாருக்கும் மனவருத்தம் இருக்காதுதான்...

      கீதா

      நீக்கு
    5. //ஆனால் சில இடங்களில் பெண்கள் தங்கள் திறமையைக் கூடக் காட்ட முடியாமல் பல விதங்களிலும் அடக்கப்பட்டு சுயசிந்தனைகளைக் கூடச் சொல்ல முடியாமல் ஒரு சஜஷன் கூடச் சொல்ல முடியாமல், அவள் பிறந்த வீட்டினர் அவமதிக்கப்படும் நிலையும் உண்டுதான். // ஜிங்க் சக்க, ஜிங்க் சக்க, ஜிங்க் சக்க! அதிலும் அந்த மருமகளில் வயதை ஒத்த நாத்தனார் இருந்துவிட்டால்! இஃகி, இஃகி, அந்த மருமகள் தன் குழந்தைங்களைக் கூடக் கவனிக்கக் கூடாது, உனக்கு என்ன தெரியும், எங்க பொண்ணுனா எல்லாம் தெரிஞ்சவ, அவளுக்குத் தெரியாததே இல்லை! என்று சொல்கிறவர்களைப்
      பார்த்திருக்கேன். :)))) பெரும்பாலும் பெண்களைப் பெண்களே மட்டம் தட்டுவது, கேவலப்படுத்துவது என நடக்கிறது. உயர்வாக நடத்தும் மாமியார்களைப் படுத்தும் பெண்களும், உயர்வாக மாமியாரை நடத்தும் மருமகள்களைப் பாடாய்ப்படுத்தி வைக்கும் மாமியார்களும் இருக்காங்க தான்! கடைசியில் அந்த மருமகள் மனம் வெறுத்துப் போய்க் கிட்டத்தட்டப் பித்துக்குளி மாதிரி ஆகிவிடுவார். மாமியார்கள் அடுத்தடுத்த பிள்ளைகள் இருப்பதால் மாறி மாறிப் போய் வருவார்கள், பாதிப்பு இருக்காது.

      நீக்கு
    6. என்னுடைய உறவினர், தன் வயதான காலத்தில் மூத்த மருமகளிடம் (மற்ற மருமகள்கள்ட அவர் இருந்ததில்லை, இருக்கவும் சாத்தியப்பட்டிருக்காது), 'நான் ரொம்பப் படுத்திவிட்டேன்' என்று சொன்னார். அதற்கு என்ன பதில் சொல்லமுடியும்? 'அதனாலென்னம்மா' என்றாராம் மருமகள்.

      நிறைய கதைக்களன் இருக்கு இரண்டு கீ... கிட்டயும்.

      நீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  19. கேள்விகள், அதற்கு பதில்கள் எல்லாம் அருமை.
    நாடி ஜோசியம் வைத்தீஸ்வரன் கோவிலில் மிகவும் பிரபலம்.

    எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்கள் அங்கு போய் பார்த்து வந்து இருக்கிறார்கள், அவர்களுக்கு அது நம்பிக்கை அளிக்கும் விஷயமாய் இருந்து இருக்கிறது.

    செய்யாத குற்றத்திற்கு அடி வாங்கியது சிரிக்க வைத்து விட்டீர்கள்.

    //முதியோர் இல்லங்களில் வசிக்கும் எல்லா பேரும் சந்தோஷமாக திருப்தியாக இல்லை என்கிற வாதத்தை ஏற்றுக் கொள்வதற்கில்லை.//

    சரியாக சொன்னீர்கள். இப்போது நான் பார்த்து வந்த முதியோர் இல்லத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர் முதியவர்கள்.
    தனியாக பேச்சு துணைக்கு ஆள் இல்லாமல் அவதிபட்டுக் கொண்டு இருக்கும் முதியவர்களுக்கு இந்த இடம் சொர்க்கம் எல்லோரும் கூடி பேசி , பாட்டுக்கள் பாடி யோகா செய்து என்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பணத்தை கொடுத்து மகிழ்ச்சி, நிம்மதியை தேடிக் கொள்கிறார்கள்.
    பேர குழந்தைகள் வந்தால் அவர்களுக்கு விளையாட, வெளியே மகிழ்ச்சியாக போய் வர என்று இருக்கிறார்கள்.
    குழந்தைகளுக்கு ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் என்றாலும் நம் அறையில் செய்து கொடுக்கலாம். வேண்டாம் என்றால் அங்கு போய் நிம்மதியாய் மகிழ்ச்சியாக சாப்பிடலாம். வயதானவர்களுக்கு பேச்சு துணை வேண்டும், நினைத்தால் மருத்துவரிடம் போக வேண்டும் , கோவில் போக வேண்டும் அனைத்து வசதியும் இருக்கிறது.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா உங்கள் கருத்தை வழிமொழிகிறேன். குழந்தைகள் வைத்துக் கொள்ள ரெடியாக இருந்தாலும் தனியாகத்தான் இருப்பேன் என்று சொல்லும் பெரியவர்களை என்ன சொல்ல முடியும்? குழந்தைகளை எப்படிக் குற்றம் சொல்ல இயலும்? இல்லையா ஸோ பெரியவர்கள் அங்கு சந்தோஷமாக இருக்கிறார்கள் எனும் போது தவறில்லை. பல பெரியவர்கள் தனியாக ஃப்ளாட்டில் இருப்பதை விட இப்படி இருப்பதை விரும்புகிறார்கள். அது முதியோர் இல்லம் என்பதை விட ஒரு காலனி எனலாம். ஸேஃப்டியும் கூட.

      ஆனால் இதற்கு கொஞ்சமேனும் பண வசதி வேண்டும். இல்லை என்றால் மிகுந்த சிரமம் தான் அக்கா.

      உள்ளூரிய்லேயே இருக்கும் குழந்தைகள் வைத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால்தான் மனம் வேதனைப்படும். இரு தரப்பிலும் காரணங்கள் இருக்கலாம்தான். இருந்தாலும் சேர்ந்து இல்லை என்றாலும் அருகில் வைத்துக் கொண்டு பாதுகாக்கலாம்.

      எங்கள் ஊர் பையன். ஊரில் தொட்டடுத்த வீடு. அவர் சென்னையில் சவேரா ஹோட்டலில் பணி செய்கிறார். மனைவி வேலைக்குச் செல்லவில்லை. ஆனால் வீட்டிலிருந்து என்னவெல்லாமோ முயற்சி செய்தும் சரியாகவில்லை எனவே அப்படியே...மாமியாருக்கு நினைவு தப்பி அதாவது அல்ஜிமீர் வந்த பிறகும் கூட குழந்தையை பார்த்துக் கொள்வது போல மிக மிக நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். அவர்களது இரு பெண் குழந்தைகளும் கூடவே பாட்டி பாட்டி என்று அத்தனை உதவி. அவர்களுக்கு இயற்கை உபாதைகளுக்கு உதவி கழுவி என்று அக்குழந்தைகளும் அபப்டி பாத்துக் கொண்டார்கள். பெரிய வருமானம் உள்ள குடும்பமும் இல்லை. மிகச் சாதாரணக் குடும்பம். மைலாப்பூரில்தான் இருக்கிறார்கள். அவர் மனைவிக்கும் கால் வீக்கம் இடுப்பு வலி என்று பல பிரச்சனைகள் உண்டுதான் ஆனாலும் பல வருடங்களாக மாமியாரைக் கவனித்துக் கொண்டு இதோ மூன்று தினம் முன் அந்த மாமி இறைவண்டி சேர்ந்தார். நாங்கள் அவர்களைத்தான் வாழ்த்தினோம். குழந்தைகளையும். அவர்களும் முகம் சுளிக்கானல் செய்தார்கள். நண்பரும் அவர் மனைவுயும் கூட.

      இப்படியும் நல்ல உள்ளங்கள் இருக்கின்றார்கள்..

      கீதா

      நீக்கு
    2. கீதா ரங்கன்.. அந்தக் குடும்பம் நல்லா இருக்கட்டும். அவங்க செஞ்சதிலேயே மிகப் பெரியது, வரும் தலைமுறையையும் அப்படி வளர்த்தது

      நீக்கு
    3. அக்கா முதியவர்களுக்கு பென்ஷன் பணம், ஏதேனும் கொஞ்சம் சேமிப்பு, அல்லது சொத்து ஏதோ ஒன்று இல்லாமல் குழந்தைகளை அண்டி வாழ வேண்டிய சூழல் உள்ள பெரியோர்களுக்கு குழந்தைகள் நல்ல மனம் படைத்து, நல்ல சூழலில் இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை. இல்லை என்றால் பல பிரச்சனைகள் வரும். அப்படித்தான் பல முதியவர்கள் வெளியேறுகிறார்கள் அலல்து வெளியேற்றப்படுகிறார்கள்.

      இந்த வெளியேற்றல் என்பது பணம் அடிப்படை அதாவது பெரியோர்களுக்குப் பணம் இல்லை என்று...ஆனால் வெளியில் சொல்லுவது கருத்து வேறுபாடு....அம்மா அப்பாவால் என் மனைவியின் மன நலம் பாதிக்கப்படுகிறது பட்டுவிட்டது என்று சொல்லி இத்தனைக்கும் அந்தப் பெரியவர்கள் அப்பாவிகளாக இருந்தாலும் இபப்டிச் சொல்லியும் நடக்கிறது.

      பெண்ணின் பெற்றோரும் பெண்ணிற்கு முழு ஆதரவு கொடுத்து அவள் சொல்லுவது செய்வது எல்லாம் அது தவறாகவே இருந்தாலும் ஒத்து ஊதி என் பொண்ணு அப்படியாக்கும் இப்படியாக்கும் என் பொண்ணை மாதிரி இந்த உலகத்துல ஸ்மார்ட் யாருமே கிடையாதாக்கும் கெடிக்காரி அவளை மாதிரி குடுமப்த்தை நடத்த அவ மாமியார் நாத்தனார்களுக்குக் கூடத் தெரியாது என்று சொல்லி தற்பெருமை அடித்துக் கொண்டு பெண்ணின் மனதைக் கெடுக்கும் டாமினேட்டிங்க் பெற்றோரும் இருக்கின்றனர்.

      அது போல பெண்களும் தங்கள் புகுந்த வீட்டு ஒவ்வொரு நிகழ்வையும், சின்ன சின்ன பிரச்சனைகளையும் ஒவ்வொரு நாளும் அம்மாவிடம் அதுவும் இப்போது மொபைல் வாட்சப் என்று வந்துவிட்டதால்....சொல்வதும் அதை அந்தப் பெற்றோர் சரியான விதத்ததில் எடுத்து பெண்ணை அழகாக கைட் செய்தால் சுமூகம் அல்லாமல் இன்னும் கூடுதலாக ஒத்து ஊதினால்....பிரச்சனை பூதாகாரம் ஆகும்....சீரியல் போல இருக்கோ?!!!!! ஹா ஹா ஹா ஹா....

      இப்படியானவர்களிடமிருந்து நான் பல காத தூரம் தள்ளி நிற்பேன். இவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தால் கூட இவர்களை அணுக நான் ரொம்பவே பயப்படுவேன்.

      அப்புறம் பணம் பெற்றுக் கொண்டும் துரத்துவதும் நடக்கிறது. இதில் பேசுவதற்கு நிறைய இருக்கு. இருந்தாலும் ஒரே ஒரு பாயின்ட் ஃப்ரம் மாமியார் சைட் சொல்லிட்டு முடிச்சுக்கறேன்...ஹா ஹா ஹா

      மொத்தத்தில் பணம், சொத்து, எல்லாவற்றிற்கும் அப்பால் மனதில் நேயம், புரிதல் இருந்துவிட்டால் பிரச்சனைகள் இல்லை...ஆனால் அதுதானே பிரச்சனையே!!!!!!!

      கீதா

      நீக்கு
    4. மாமியார்களும் ஒரு சில விஷயங்களில் அதுவும் இப்போதைய காலக்கட்டத்தில் ...வரும் பெண்களின் வீட்டுப் பழக்கவழக்கங்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம் தான். அவற்றை அவர்களால் அதாவது பெண்கள் தங்கள் வீட்டுப் பழக்க வழக்கங்களை தெரிந்து கொண்டிருந்தால் உடனே அவர்களால் மாற்ற இயலாதுதான். எனவே அதனை மாமியார்கள் கிண்டலடிக்காமல் அவர்கள் வீட்டுப் பழக்க வழத்தைச் சொல்லிக் கொடுக்கலாம். பெண் வீட்டு/அந்த ஏரியா வழக்கத்தை அவள் முன்னேயே கிண்டல் செய்தால் அவள் மனது முதலில் வேதனைப்படும் இன்னும் இந்த வீட்டு மனிதர்களுடன் பழக்கம் கூட ஏற்படும் முன் எனும் போது....அப்புறம் வருடங்கள் கடக்கும் போது மனப்பக்குவம் ஏற்பட்டால் புறம் தள்ளலாமாக இருக்கலாம்.

      ஒரு சின்ன உதாரணம் இதற்கு. திருநெல்வேலி பழக்க வழக்கமும், தஞ்சாவூர் சைட் பழக்க வழக்கமும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு. ஒரே ஜாதியாக ஒரே சப்கேஸ்டாக இருந்தாலும். கணு வைப்பது திருனெல்வேலிக்காரர்கள் குளிப்பதற்கு முன் வைப்பார்கள். அப்படித்தான் நான் அறிந்த வரையில். தஞ்சாவூர் சைட் காரர்கள் (எல்லோருமா என்று எனக்குத் தெரியாது ஆனால் ஒரு குறிப்பிட்ட சப்கேஸ்ட்) குளித்த பிறகு வைப்பார்கள். இதில் பெண் ஒரு வேளை திருநெல்வேலிக்காரியாக இருந்தால் அந்த மாமியார் அந்த வழக்கத்தை நக்கலாகச் சொல்லி அதுவும் எல்லோர் முன்னிலையிலும் சொல்லிக் காட்டுவது அப்பெண்ணிற்கு முதல் முள்ளாக இருக்கும். இப்படித்தான் கிச்சனிலும் எங்க வீட்டு சமையல் உங்க வீட்டு சமையல் என்ற வேறுபாடுகளை அட புதிதாக இருக்கிறதே நம் வீட்டவருக்குப் பிடிக்குமா பார்ப்போம் என்று ஒரு எக்சேஞ்ச் மேளா நடத்தினால் பிரச்சனைகள் இல்லை. ஆனால் அதையே இரு தரப்பிலும் கேலி செய்து, நக்கல் செய்து பேசும் போது கொஞ்சம் கொஞ்சமாகப் பிரச்சனைகள் தொடங்குகிறது....ஓபன் மைண்டோடு ஏற்றுக் கொண்டுவிட்டால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.....இதிலும் நிறைய எழுதலாம்...போரடித்துவிடும் ஸோ போதும் இதோடு....

      கீதா

      நீக்கு
    5. கீதா, முதியோர் இல்லம் எதற்கு நல்லது என்றேன் என்றால் , இப்போது மகன் வீட்டிலேயே இருந்தாலும் இரண்டு பேர் வேலைக்கு போய் விடுகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்பு முதியோர்களுக்கு தனிமை, , யாராவது ஒருவர் இருந்தால் மேலும் கஷ்டம்.
      வேலையை விட்டு விட்டு என்னயே பார் என்றும் சொல்லமுடியாது.

      நாங்கள் மாமியாரை , மாமானரை நன்கு பார்த்துக் கொண்டோம். பேரன், பேத்திகளும் பார்த்துக் கொண்டார்கள். எல்லோரும் வெளி நாட்டில் இல்லை இங்கு இருந்தோம் .

      வெளி நாட்டில் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, வசதியான முதியோர் இல்லங்கள் நல்லது என்றேன். ஓவ்வொருவருக்கு உடல்சார்ந்த பிரச்சனைகளால் சமைக்க முடியாமல் இருக்கிறார்கள் வீட்டை கவனிப்பது, வீட்டுக்கு வேண்டிய சாமான்கள் வாங்குவது, கரண்ட்பில் கட்டுவது, வீட்டுவரி கட்டுவது, தண்ணீர் வரும் போது பிடித்து வைப்பது என்று வீடு என்று இருந்தால் எத்தனை வேலை வயது முதிர்ந்த காலத்தில் இது எல்லாம் முடியவில்லை என்று உறவினர் நானா, நானி ஹோமில் வந்து இருக்கிறார் வீட்டை விற்று விட்டார் அங்கு வாங்கி கொண்டார். வீட்டை சுத்தம் செய்ய, கழிவரை சுத்தம் செய்ய அவர்களுக்கு தேவையானதை வாங்கி தர என்று ஆள் இருக்கிறது.

      உடல் நலம் கெட்ட போது ஆம்புலனஸ் வரவழைத்து ஒரு டாக்டைரையும், நர்ஸ் ஏற்பாடு செய்து ஆஸ்பத்திரியில் சேர்த்து உறவினர்கள் வரும் வரை இருந்து கவனித்துக் கொண்டார்கள்.

      குழந்தைகள் உள்ளூரில் இருந்து கொண்டு பார்க்க முடியாது என்று முதியோர் இல்லங்களில் சேர்ப்பது கொடுமை.

      நீக்கு
    6. திருநெல்வேலி, மதுரை, தஞ்சை, ஆற்காடு எல்லா ஜில்லாக்களிலும் எங்க வீடுகளில் கணுப்பிடி குளிக்காமலே வைப்போம். ஆனால் வைணவர்களில் வட மாவட்டத்துக்காரர்கள் எல்லாச் சமையலும் முடித்துக் குளித்துப் புதுசு கட்டிக்கொண்டு பின்னரே கணுப்பிடி வைப்பார்கள். அதே மற்றவர்கள் குளிக்காமலே வைப்பது வழக்கம். இதில் தென்மாவட்ட வைணவர்கள் அடக்கம்.

      நீக்கு
    7. நாங்கள் மாமியாரை , மாமானரை நன்கு பார்த்துக் கொண்டோம். பேரன், பேத்திகளும் பார்த்துக் கொண்டார்கள். எல்லோரும் வெளி நாட்டில் இல்லை இங்கு இருந்தோம் .//

      ஆமாம் கோமதிக்கா அது புரிந்தது எனக்கு..உங்கள் கருத்து புரிந்தது.....அதான் சொல்லியிருந்தேன்....வெளிநாட்டில் இருப்பவர்கள், இங்கிருப்பவர்களே கூட கொஞ்சம் பண வசதி கொண்டவர்கள் என்றால் ஓகே ஆனால் இல்லாதவர்களைப் பற்றித்தான் சொல்லியிருந்தேன் அக்கா. கோயம்புத்தூரில் கூட நானா நானி நன்றாக இருப்பதாகத்தான் சொல்கிறார்கள் உறவினர்கள் அவர்களது பெற்றோர் அங்குதான் இருக்காங்க. எனவே அப்படிப்பட்டவர்களுக்கு அது சரி என்றே நான் சொல்லுவேன்...நல்ல கவனிப்பும் இருக்கிறது அக்கா. நானே போய் பார்த்திருக்க்றேன்.

      ஆனால் இல்லாதவர்கள் பிரச்சனை அதிகம்...அதுதான் சொன்னேன் அக்கா.

      /குழந்தைகள் உள்ளூரில் இருந்து கொண்டு பார்க்க முடியாது என்று முதியோர் இல்லங்களில் சேர்ப்பது கொடுமை./

      ஆமாம் கோமதிக்கா. உங்கள் கருத்தைப் புரிந்து கொண்டேன் கோமதிக்கா...

      கீதா

      நீக்கு
    8. கீதாக்கா காட் யுவர் பாயின்ட்!!!!!!!

      கீதா

      நீக்கு
  20. நவீன வனபிரஸ்தம் தான் இப்போது உள்ள முதியோர் இல்லம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேல் மட்ட மு இ களில் (pay for stay) பிரச்னை இராது. மற்றவைகளில் ?

      நீக்கு
    2. யெஸ் யெஸ் கௌ அண்ணா மேல் தட்டில் பிரச்சனைகள் இராது பாவப்பட்டவர்களுக்குக் க்ண்டிப்பாகப் பிரச்சனைகள் உண்டு. அதைத்தான் கோமதிக்காவுக்கு பதிலில் சொல்லிருக்கேன்...

      கீதா

      நீக்கு
  21. வான பிரஸ்தம் சகல வசதி நிறைந்த வானபிரஸ்தம்.
    உறவினர் வந்தால் அங்கு இஷ்டபட்டால் சாப்பிடலாம், வேண்டாம் என்று சொல்லி விட்டு நாமே நம் வீட்டில் சமைத்து கொடுக்கலாம் அதுவும் முடியவில்லை என்றால் வெளியே போய் மகிழ்ச்சியாக அவர்களுக்கு பிடித்ததை வாங்கி தரலாம்.

    பதிலளிநீக்கு
  22. பையனின் மனைவியும், அம்மாவும் தனக்குமட்டுமே உரியவராக நினைத்துக் கொள்வதால் வரும் பிரச்சனை.

    பதிலளிநீக்கு
  23. பையனை பையனின் மனைவியும், அம்மாவும் தனக்குமட்டுமே உரியவராக நினைத்துக் கொள்வதால் வரும் பிரச்சனை.


    பதிலளிநீக்கு
  24. தாம்பரம் மட்டுமில்லை, எங்கேயுமே நாடி ஜோதிடத்துக்குக் கைவிரல் ரேகை மட்டுமே கேட்கின்றனர். தாம்பரத்தில் உள்ள நாடி ஜோதிடர் சொல்வதெல்லாம் பலிக்கிறதாகவும் என்னுடைய பெரும்பாலான உறவினர்கள் சொல்லிக் கேள்வி. மும்பையிலும் ஒருத்தர் (தமிழர் தான்) நன்றாக நாடி பார்த்துச் சொல்லுவதாகவும், அவர் சொல்வது எல்லாம் (எதிர்காலம் குறித்து) பலிக்கிறது என்று எங்கள் சம்பந்தி மாமி சொல்லுவார். நாங்க போனதில்லை. வைத்தீஸ்வரன் கோயிலில் சொல்லுவதை நம்ப முடியவில்லை. என் மைத்துனர் அங்கே பார்த்தார். அப்படி ஒண்ணும் பெரிசாச் சொல்லலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோதிடர்கள் பெரும்பாலும் fake.

      நீக்கு
    2. கீசா மேடம் - தாம்பரம் 100% உண்மைனா, நான் அடுத்த ஜென்மத்துல திருவாரூரில்தான் பிறப்பு. No marriage. கடைசி ஜென்மமாம்.

      ஆமாம் எப்படி அந்தப் பிறப்புக்கு சொத்து எழுதி வைக்கிறது? ஹாஹா

      நீக்கு
    3. கீதாக்கா என் நெருங்கிய உறவினர் கூட அவள் பெண்ணுக்கு ஏதோ நாடி ஜோதிடம் பார்த்தாள் பக்கம் பக்கமாக ஏதேதோ எழுதிக் கொடுத்தார்கள். அதுவும் முன் ஜென்மம் இந்த ஜென்மம, அடுத்த ஜென்மம் என்று ...இதுவரை ஒன்றும் பலிக்கவில்லை. எல்லாமே ஆப்போசிட்டாகப் பலித்துள்ளது!!!! நீ கோச்சுக்குவன்னு தெரியும் ஆனாலும் உங்கிட்ட சொல்லாம இருக்க முடியலடி..உனக்கு பிடிக்காதுதான் ஆனாலும் நீதான் என்னோடு வரணும் என்று அவளுடன் அவள் பெண்ணுக்காகப் பல பரிகார ஸ்தலங்கள் அழைத்துச் சென்றாள். பரிகாரம் சொன்னவர் செய்தது நல்ல பிஸினஸ் என்று எனக்குத் தெரிந்தது. ஏனென்றால் அவர் சொன்ன குறிப்பிட்ட கோயில்களுக்கு அதுவும் ஒரே நாளில் செல்ல வேண்டும் என்று சொல்லி அவர் பெயரை அந்தக் கோயிலில் சொன்னால் போதும் என்று.....அவர் இருப்பது கேரளத்தில். கோயில்கள் அனைத்தும் செட்டிநாட்டு கோயில்கள் திருப்பத்தூரைச் சுற்றியுள்ள அனைத்து பைரவர் கோயில்கள். ஆனால் அவள் எதற்காக அந்தப் பரிகாரம் செய்தாளோ அனைத்தும்.....ஒன்றும் சொல்வதற்கில்லை.....ஆனால் பரிகாரம் என்ற வகையில் பல கோயில்கள் தரிசனம் கிடைத்தது என்ற மகிழ்ச்சி.....

      கீதா

      நீக்கு
    4. கீதா ரங்கன்.... அவங்க 'பரிகாரம்' பண்ணச் சொன்னாங்களா இல்லை அந்த அந்த கோவில்களில் 'பலகாரம்' பண்ணச் சொன்னாங்களா?

      நீக்கு
    5. நெ.த. தாம்பரத்தில் சரியாகச் சொல்வதாகச் சொன்னார்கள். அம்புடுதேன். நான் அங்கெல்லாம் போனதில்லை. எங்கேனு தெரியவும் தெரியாது. ஆகவே நீங்க நம்பிப் போயிட்டு அப்புறமா என்னால் தான் அப்படினு சொல்லாதீங்க நெ.த.

      நீக்கு
    6. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா நெல்லை...ஹையோ சிரிச்சுட்டேன்.....பலகாரம்!!!! நமக்கு எந்தக் கோயில் போனாலும் இது கிடைக்குதான்னு பார்ப்பதுதானே வழக்கம்!!!!!!! ஆனா பாருங்க ஒரு கோயிலிலும் கிடைகக்லை....மீ க்கு ரொம்ப வருத்தம் அதில்...அன்று பைரவாஷ்டமியாம்..சென்றது நவம்பர் மாதத்தில்... அதனால் மாலைதான் ஆதிகாலபைரவர் கோயிலில் ஏதோ மணக்க மணக்க செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் லேட்டாகும் என்றார்கள்....பரிகாரம் முடிச்சுட்டுத் தங்கக் கூடாதுன்னு வேற கண்டிஷன் போட்டிருந்தார் அவர். எனவே மூட்டை கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டோம்...ஹா ஹா ஹா...ஒரே ஒரு கோயில்ல பிரசாதம் அதுவும் மிஸ்ட்!!!!

      கீதா

      நீக்கு
    7. கீசா மேடம்... எங்க அப்பாவோட, நான் தாம்பரம் நாடி ஜோதிட நிலையம்தான் 12 வருடங்களுக்கு முன்னால் போயிருந்தேன். அவங்கதான் என் அடுத்த பிறப்பைப் பற்றிச் சொன்னாங்க. ஹா ஹா.

      நீக்கு
  25. இடிப்பாரை இல்லாத ஏமரா kg gouthaman
    கெடுப்பா ரிலானுங் கெடும்

    !?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா தி த ... கடப்பாரை கொண்டு என்னைத் தாக்கப்போகின்றீர்களா!

      நீக்கு
    2. ஹா... ஹா... மன்னன் என்பதற்கு பதில் உங்களின் பெயர்...! சும்மா...!

      அக்கறையோடு புத்தி சொல்லும் அன்பானவர்களை துணையாகக் கொள்ளாத யாரையும், கெடுக்க மற்றவர்கள் தேவையில்லை... தானே கெட்டுப்போவார்கள்...!

      இதில் :-

      மன்னன் = பலசில சமயம் ஒரு பையனின் தாய்
      மன்னன் = சிலபல சமயம் அவன் மனைவி
      மன்னன் = பாவப்பட்ட ஞே அந்தப் பையன்...!

      நீக்கு
  26. ரசிக்கத்தக்க கேள்விகள்,அதற்கான பதில்கள். நாடி ஜோதிடம் என்பது என்னைப் பொறுத்தவரை முழுப்பொய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ... வியாபார நோக்கம் இல்லாத ஜோசியம் பலித்துள்ளது.

      நீக்கு
    2. இதைப் பற்றி நான் 2,3 பதிவுகள் எழுதினேன். https://sivamgss.blogspot.com/2016/12/blog-post_24.html
      https://sivamgss.blogspot.com/2017/01/2.html

      நீக்கு
    3. இதற்கு அதிகபட்சமாகப் பார்வையாளர்கள் ஆயிரத்தைத் தாண்டி இருந்தது. :)) ஆனால் எழுத ஆரம்பித்ததை முடிக்கவில்லை. :)

      நீக்கு
  27. சிலரது பின்னூட்டங்கள் எல்லோரையும் அனுசரித்துப் போவதுபோல எழுதப்படுகிறது கான்ஃபிலிக்ட் இல்லாத வாழ்க்கை இருக்கிறதா என்ன ஜோசியமே பொய் அதைச் சொல்பவரைப் பொறுத்தது இது பற்றி நான் அறிந்துசொன்ன சோசியங்கள் பலித்திருப்பதாக சொல்லப்பட்டதுமுண்டு

    பதிலளிநீக்கு
  28. கேஜிஜி சார்... நீங்க லக்கிதான். 1 1/2 மில்லியன் பக்கப் பார்வை உங்க இடுகை அன்னைக்கு தாண்டியிருக்கே. நான் வியாழன் அன்று ஸ்ரீராம் இடுகையில்தான் தாண்டும் என்று நினைத்தேன். பாராட்டுகள் உங்களுக்கு மற்றும் எ.பி க்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கெல்லாம் பக்கப்பார்வை மட்டுமில்லை (ஹிஹிஹி) நேர்ப்பார்வையிலே பார்த்தாலும் இடுகை 500 தாண்டினால் அதிகம். அநேகமாய் 250, 300க்குள் தான். ஆனால் All time History 5 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி விட்டதாகப் பொய் சொல்லும். இது வரைக்கும் ஐயப்பன் கதை எழுதின பதிவில் மட்டுமே 2000க்கும் மேல் பார்வையாளர்கள்.

      நீக்கு
    2. நெல்லை அப்பூடியா!! வாவ்!! கௌ அண்ணா அண்ட் எபி வாழ்த்துகள்!!!!

      கீதாக்கா உங்களுக்கே இப்பூடியா!!

      எங்க ஸ்டேட்டஸ் ரொம்பவே கீழ!!! அஃப்கோர்ஸ் நாங்களும் இப்ப ரொம்ப பதிவு போடுவதில்லை. நான் பதிவு போட்டால் 100 வந்தாலே பெரிய விஷயம்....ஹா ஹா ஹா ஹா.. நான் அதனால இப்ப போய்ப்பார்க்கவே இல்லை....

      கீதா

      நீக்கு
    3. //கீதாக்கா உங்களுக்கே இப்பூடியா!! // நானென்ன அப்படி நல்லா எழுதிடறேனா? பொதுவாக மொக்கைக்கே கூட்டம் வருது! அதாவது கருத்துச் சொல்ல! ஆனால் பார்வையாளர்கள் ஜாஸ்தி இருக்காது! மற்றப்பதிவுகளில் கருத்து நிறைய இருக்காது. ஆனால் பார்வையாளர்கள் அதிகம் இருப்பாங்க! இது ஏன்னு தெரியலை! :)))))

      நீக்கு
    4. நானென்ன அப்படி நல்லா எழுதிடறேனா?//

      அக்காவ் ஏன் இப்படிச் சொல்லறீங்க!! நிறைய தகவல்கள், கருத்துகள் உள்ள பதிவுகள் அப்புறம் சமையல் குறிப்புகள் (இதுக்கு இருக்குமே கூட்டம்!!! பார்வையாளர்கள்!!!) எல்லாம் போடறீங்க...சில சமயம் ஆராய்ச்சி போலவே!

      கீதாக்கா அப்ப உங்களையே பாராட்டிக்கோங்க!!! வரவங்க எல்லாம் நாங்கதானே ஹிஹிஹிஹி மொக்கைக்கு வந்து பதில் சொல்லுவது கும்மி அடிப்பது ஈசி வேலை!!!

      நீங்க கருத்துள்ள பதிவு போட்டீங்கனா அதுவும் தேடித் தேடி தகவல் திரட்டி போடறீங்க.... அதுக்கு பதில் இருக்கும் ஆனா கும்முவது கஷ்டமாச்சே!!! அதனால இருக்காதா இருக்கும் ஆனா பாருங்க அதை நிறையப்பேர் பார்க்கறாங்கனா அதுதானே சக்ஸஸ்!!!!! ஸோ அதுக்கே உங்களைப் பாராட்டனும் அக்கா!!!!

      கீதா

      நீக்கு
    5. நண்பர்களுக்கு நன்றி. உங்கள் ஆதரவால், 1500000 பக்கப்பார்வைகள் நேற்றிரவே கடந்துவிட்டோம்!

      நீக்கு
  29. செய்யாத தவறுக்கு நம்மை மாட்டி விடறவங்க ///
    இது மாதிரி நிறைய அனுபவம் இருக்கு ..எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா பழகுவேன் .நாம் யார்கிட்ட பழகிறோமோ அவங்களும் நம்பிக்கைக்குரியவராக இருக்கும் பட்சத்தில் பிரச்சினை வராது ..ஆனா யார்யார் எப்படின்னு நேரில் பாத்தா கூட கண்டுபிடிக்க முடியாதே இப்போல்லாம் ..அதுக்காக பிறரை குற்றம் சொல்றதைவிட பெட்டர் நாம் கவனமா இருக்கணும்னு ஒவ்வொருமுறையும் நினைச்சி தேத்திப்பேன்

    பதிலளிநீக்கு
  30. மாமியார் மருமகள் கேள்விக்கு நிறைய பின்னூட்டங்கள் வந்திருக்கே :)

    எனக்கு மாமியாருடன் இருக்க கொடுத்து வைக்கலை ..என் கணவர் 16 வயது இருக்கும்போதே அவர் அம்மா சாமிகிட்ட போய்ட்டாங்க . இங்கே கோமதி அக்கா கீதாக்கா வல்லிம்மாவைலாம் பார்க்கும்போது இப்படித்தான் இருந்திருப்பங்களோ என் அத்தைனு நினைச்சுப்பேன் ..
    இப்போ மாமியார் மருமகள் பிரச்சினை நிறைய அதிகரிக்க காரணம் இந்த தொல்லைக்காட்சி சீரியல்சோன்னு தோணறது .
    அம்மாஎல்லாரும் மாமியார் மருமகள் பிரச்சினை பற்றி பேசறாங்க ஆனா மாமனார் மருமகன் நட்பு உறவு பற்றி ஏன் பேச மாட்டேங்கிறாங்க ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தடி சாக்குல நைசா எங்களை ஏங்க மாட்டிவிடுறீங்க?

      நீக்கு
    2. // மாமியாருக்கு மருமகளைப் பிடிக்காமல் போவதிலும் மருமகளுக்கு மாமியாரைப்பிடிக்காமல் போவதிலும் உள்ள அடிப்படைக் காரணம் என்ன?// என்று கீ சா மேடம் கேட்ட கேள்விக்குதான் வாசகர்கள் பதில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்!

      நீக்கு
  31. ஸ்ரீராம் சாரிடம் இதைப்பற்றி பேசியிருந்தாலும், இங்கே அனைவரும் அறிந்து கொள்ள :-

    Page views பற்றிய சிறு குறிப்பு...

    1) analytics.google.com செல்ல வேண்டும்... (Login with same blogger mail I'd & password)

    2) Analytics Web Property ID-யை copy செய்து, நம் தளத்தில் paste செய்ய வேண்டும்... எங்கே...?

    3) Settings ---> others ---> Analytics Web Property ID- எனும் இடத்தில்...

    4) மேலும் analytics.google.com-ல் analytics script-யை நம் html-ல் சேர்க்க வேண்டும்...

    5) உண்மையான பக்கப் பார்வையை நாம் அறியலாம்...

    6) நிற்க...

    பதிலளிநீக்கு
  32. அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், கீதா அம்மா மேலே "பொய்" என்று சொன்ன கருத்துரை தான் உண்மை...

    புரிந்தும் புரியாமலும் (?) இதைப்பற்றி தொழிற்நுட்ப பதிவு எழுத வேண்டாம் என்று எப்போதோ முடிவு எடுத்து விட்டேன்... ஏன் என்று முந்தைய எனது கருத்துரை படி செய்து பாருங்கள்...

    அறிந்து தெரிந்து புரிந்து - சாமியே சரணம் வேல(லை)வா...!

    பதிலளிநீக்கு
  33. அன்பு கௌதமன் ஜி,
    என் கேள்விகளுக்குப் பதில் சொன்னதுக்கு நன்றி. நாடி எத்தனை பேரைப் பதம் பார்த்திருக்கிறது என்று இப்போது தெரிகிறது.
    எங்களுக்குக் காஞ்சீவரம் அகத்தியர் நாடி நன்றாகவே சொன்னார்கள்.
    பெண் சொல்லித்தான் தெரியும் .இவரது காலக் கணக்கையும் சரியாகச் சொல்லி இருக்கிறார்கள். நாந்தான் பார்க்காமல் விட்டேன்.

    இன்னும் அதிசயம் தான்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!