வெள்ளி, 11 ஜனவரி, 2019

வெள்ளி வீடியோ : பிரிவான காதல் நெஞ்சின் சுகமான சோகங்கள்..


படம் காற்றுக்கென்ன வேலி.  கே என் சுப்பு இயக்கத்தில் மோகன், ராதா, கீதா நடித்த படம்.  கீதா இந்தப் படத்தில்தான் அறிமுகம் ஆனதால் அவருக்கு காற்றுக்கென்ன வேலி கீதா என்றே பெயர்.




இந்தப் படத்துக்கு இசை சிவாஜி ராஜா.  அவரைப் பற்றிய எந்த விவரங்களும் திரட்ட முடியவில்லை.  இணையத்தில் அவரைப் பற்றிய விவரமே இல்லை.  




மதுரை ரிசர்வ் லைனில் நள்ளிரவுப்படமாக சைக்கிளில் சென்று, மணலில் அமர்ந்து பார்த்த படம்.  படம் திராபை.

இந்தப் படம் தவிர வேறு சில படங்களுக்கும் அவர் இசை அமைத்திருந்ததாய் நினைவு.  இப்போது ஞாபகம் இல்லை.  தேடினால் இதே பெயரில் இருக்கும் ஒரு தெலுங்கு நடிகர் விவரம்தான் கிடைக்கிறது.

இந்தப் படத்தில் இன்னும் ஒரு நல்ல பாடலும் (கடல் மீதிலே தன் மீனைத் தேடினான்)  ஒரு சுமாரான பாடலும் (ரேகா...   ரேகா...) உண்டு.




இந்தப் பாடலிலும் முதல் சுகம் எஸ் பி பி யின் குரல்.  அப்புறம் அந்த ஆரம்ப இசை கொஞ்சம் ஸ்பெஷல்.  பெண்குரலின் (அது எஸ் ஜானகி அல்ல) ஹம்மிங்.

முதல் சரணம் தொடங்கும் முன் வரும் இசை கேட்கும்போது ஹிந்திப் பாடலான "கபீ கபீ.." பாடல் நினைவுக்கு வரும்.

இனிமையான பாடல்.   வைரமுத்துவின் வரிகளாக இருக்கலாம். 

சின்னச் சின்ன மேகம் என்னைத் தொட்டுப் போகும் 
நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம் 

பிரிவான காதல் நெஞ்சின் சுகமான சோகங்கள் 
மழைக்காலப் பூவின்மீது இருக்கின்ற கீதங்கள் 
கன்னி இளம்பூக்கள் கையெழுத்துக் கேட்கும் 
உள்ளுறங்கும் சோகம் கண்திறந்து பார்க்கும் 
ஞாபகங்கள் கண்ணில் இன்று முத்துக் குளிக்கும் 
நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம் 

அனல் மீது பூக்கும் அந்த கொடிக்கின்று வேரில்லை 
இதயத்தின் சுவரில் உந்தன் பெயரன்றி வேறில்லை 
மேடைகளின் ஓரம் ஜாடை செய்யும் பூவை 
பார்வைகளில் நூறு பந்தி வைக்கும் பாவை 
கோதைமகன் பேரைச் சொன்னால் ராகம் இனிக்கும் 
நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம் 


86 கருத்துகள்:

  1. இனிய வெள்ளி பாடல்தின காலை வணக்கம் மற்றும் இனியநாள் வணக்கம்! தொடரும் அனைவருக்கும்..
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய வெள்ளி, கூடாரை வெல்லும் நாள் வணக்கம் கீதா ரெங்கன்!

      நீக்கு
  2. ஹை நான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஒ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இசை சிவாஜி ராஜா?!! புதிய பெயர் நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே ஸ்ரீராம்...

      காற்றுக்கென்ன வேலி கீதா ...கீதா தெரியும் கா எ வே கீ என்பதும் இபப்த்தான் தெரியுது...

      பாட்டு அப்புறமாதான் கேட்க முடியும்...இன்று கூடாரை ஸோ அக்காரவடிசல்...

      அப்புறம் இன்று சப்பாத்தி பனீர் பீஸ் மசாலா...(மட்டர் பனீர்)

      கீதா

      நீக்கு
    2. நேற்று இரவு எங்கள் வீட்டில் செய்த மணத்தை நுகர்ந்து விட்டு இன்று காலை கீதா ரங்கன் செய்து விட்டார் என்று நினைக்கிறேன்.;)

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஹா பானுக்கா அதானா ஹொரமாவுலருந்துதான் அந்த வாசனை எட்ட்டிப் பார்த்ததா இங்கு!!!

      கீதா

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  4. வந்தாச்சு வந்தாச்சு நானும் வந்தாச்சு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான்தான் லேட் போல... அதிரா பக்கத்தில் லேட் ஆயிடுச்சு!

      நீக்கு
    2. ஹை வெங்கட்ஜியும் வந்தாச்சு!! துரை அண்ணா தாமதமாகுது இப்பல்லாம்

      காலை வணக்கத்துக்கு இங்க எல்லாரையும் இப்ப பாக்க முடியுது சந்தோஷமா இருக்கு...தேம்ஸ் காரங்க என்ன முந்திக்கிட்டு குரல் கொடுத்துக் கொண்டே குதிப்பாங்களோனு சம்சயத்தோடு வந்தேன்..ஹா ஹா ஹா.

      கீதா

      நீக்கு
    3. ///தேம்ஸ் காரங்க என்ன முந்திக்கிட்டு குரல் கொடுத்துக் கொண்டே குதிப்பாங்களோனு சம்சயத்தோடு வந்தேன்//
      ஹா ஹா ஹா அது அது உந்தப் பயம் எப்பவும் இருக்கட்டும்:)). எனக்கு நித்திரை வராட்டிலும் கொம்பியூட்டர் வந்தால்தான் ஜம்ப் ஆவேன்ன்.. ஃபோனில் எனில் கஸ்டம்:)..

      நீக்கு
    4. ஹா ஹா ஹா ஹா பயம் என்னனா நான் விழுந்து போட்டா....

      கீதா

      நீக்கு
    5. 2ஆஆஆஆ கீதா கொஞ்சம் அரக்குங்கோஓஒ

      https://i1.wp.com/copenhaverconstructioninc.com/wp-content/uploads/2017/07/super-funny-videos-funny-cat-jump-fail-2015-live-laugh-love-videos.jpg?resize=1381%2C839

      நீக்கு
  5. //இந்தப் படத்தில் இந்நோயும்// ? இன்னும் என்று வரணுமோ?

    பதிலளிநீக்கு
  6. சிவாஜி ராஜா என்று ஒரு இசை அமைப்பாளர் கேள்விப்பட்டதில்லை...

    காற்றுக்கு என்ன வேலி கீதா - எனக்கு தெரிந்து புதுப் புது அர்த்தங்கள் மட்டுமே நான் பார்த்த இவரது சினிமா.

    பாடல் கேட்ட மாதிரி இல்லை.

    பதிலளிநீக்கு
  7. கூடாரை வெல்லும்
    சீர் கோவிந்தன் பேர் பாடி
    குளிர்ந்தேலோர் எம்பாவாய்!...

    பதிலளிநீக்கு
  8. இந்தப் பாட்டெல்லாம் கேட்டதாக நினைவு இல்லை...

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  10. இந்த மாதிரி ஒரு திரைப்படம் வந்ததும் அதில் மோகன் , ராதா, கீதா என்பதையும் அறிந்து கொண்டேன். பாட்டெல்லாம் கேட்டதில்லை. பகிர்வுக்கு நன்றி. வந்திருக்கும், இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு கீதா அக்கா.. பாடல் கேட்டுப் பார்க்க மாட்டீர்கள் இல்லை?

      நீக்கு
  11. வரிவடிவில் படிக்கவும் அற்புதம் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல்வடிவில் கேட்கவில்லையா ரமணி ஸார்? எஸ் பி பி குரலும் அந்த ஆரம்ப இசையும் நன்றாகவே இருக்கும்!

      நீக்கு
  12. இன்று கூடாரவல்லி. கீதா ரங்கன், நெல்லை தமிழன், அக்காரவடிசல் பார்சல்.வல்லி அக்காவிடம் மாலை வாங்கி க்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுமா. இனிய கூடாரை வெல்லும் வணக்கம்.
      பிழைத்துக் கிடைந்து கண்ல கண்டு நாளை செய்ய வேண்டும்.

      அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
      கோவிந்தன் அனைவரையும் காப்பான்.
      ஸ்ரீராம் படம் கேள்விப்பட்டதில்லை. பாடல் நன்றாக இருக்கிறது.

      நீக்கு
    2. பானுக்கா பார்சல் அனுப்பிட்டா போச்சுக்கா...

      கீதா

      நீக்கு
    3. இப்போதான் இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்தேன்.

      நேற்று நான் மனைவி செய்துதந்ததைச் சாப்பிட்டேன். என் நல்ல நேரம், மைவி மிக்க்கொஞ்சம்தான் சாப்பிட்டார் பெண்ணுக்கு ஒரு ஸ்பூன்.

      ஆனாப் பாருங்க... சாப்பிடும்போது என் நினைவு தவிர வேற யார் நினைவும் வரலையே.

      நீக்கு
  13. அவர்கள் படத்தில் காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி என்று ஒரு நல்ல பாடல் உண்டு. அப்படி ஒரு படம் வந்தது என்பதும், அதுதான் கீதாவின் முதல் படம் என்பதும் எனக்கு செய்தி. பாடல் பிறகு கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அந்தப் பாடலிலிருந்து உருவப்பட்ட வரிதான் படத்தின் தலைப்பு.

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    பாடல் கேட்டு இருக்கிறேன். பிடித்த பாடல்தான். மீண்டும் கேட்டு ரசித்தேன். சினிமா பார்த்தது இல்லை.
    கீதாபற்றி விவரங்கள் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  15. இங்கு மோகனத்தைக் கேட்டுக் கொண்டே ஞானியின் ஆசிரமத்தில் விசிட் அடித்து, நமக்கோ ஞானி கேட்கும் பௌன்ட் அல்லாம் கொடுக்க இயலாது என்பதால் ஹா ஹா ஹா அங்கு சமையல் செய்தும் ஞானியாகலாமாமே!! ஸோ நமக்குத் தெரிஞ்ச டிப்பார்ட்மென்டில் சேர்ந்து ஞானியாகலாமான்னு யோசனை செஞ்சுக்கிட்டே...பாட்டை கேட்டு முடிச்சேன்.!!!!

    இந்தப் பாட்டு இப்பத்தான் கேட்கிறேன்...ஸ்டார்ட்டிங்க்ல அந்த ஹம்மிங்க் கு முன்னாடி வர பிட் கேட்டதுமே....எனக்கு டக்குனு ராமனின் மோகனம், ஜானகி மந்திரம் னு தோன்றியது...

    சினிமால மோகனம் நிறையவே யூஸ் பண்ணிருக்காங்கன்னு தோனுது. இன்னும் கேட்டுட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ... மோகன ராகமா? ​அதானே பார்த்தேன்.

      நீக்கு
    2. மோகனம் மட்டுமல்ல, கல்யாணியும் நிறைய யூஸ் பண்ணியிருக்கிறார்கள்.

      நீக்கு
    3. ஆமாம் பானுக்கா கல்யாணியும் யூஸ் பண்ணியிருக்காங்க...கீ போர்ட் சி மேஜர் ஸ்கேல் தானே யூஸ் பண்ணுறாங்க மெயினா...சங்கராபரணம்...

      கீதா

      நீக்கு
    4. //மெயினா...சங்கராபரணம்...
      //
      சைட்டா மயிலாபன ராகமும் கேய்க்குதே:)

      நீக்கு
  16. காற்றுக்கென்ன வேலி... கேள்விப்படாத படம்.. இப்படி ஒரு பாடல் இருக்கெல்லோ...

    கீதா எனக்கு அறிமுகமானது “கையளவு மனசு” தொடரில் தான், ஆனா இவவை ஒரு சினிமா நடிகையாக ஏனோ என் மனம் என்றுமே ஏற்கவில்லை.. நாடகத்துக்கு சூபராக நடிப்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா நானா??!!!! எனக்கு "கையளவு மனசு" கிடையாது பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் மனசாக்கும்!!! ஹிஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    2. ஹா... ஹா... கீதா! பெயர்க்குழப்பம்! காமெடிதான் போங்க!

      ஆனால் அதிரா.. இந்தப் படம் போராக்கும்!

      நீக்கு
    3. அதிரா நீங்கள் மலையாள படங்கள் பார்த்தால்தான் கீதாவின் திறமை புரியும்.

      நீக்கு
    4. அதே, அதே, எனக்கும் கையளவு மனசு கீதா தான் நினைவில் நிற்கிறார். படங்கள் நான் அதிகம் பார்க்கலை. கேளடி கண்மணியில் எஸ்பிபியின் இறந்து போன மனைவியாக கீதா ஒரு சில காட்சிகளில் வருவார். குழந்தையாக நடிச்சது நீனாவோ? பின்னர் சீரியல்களில் நடித்தார். அப்புறமாக் காணோம்.

      நீக்கு
    5. கீதாக்கா... உங்களுக்கு புதுப்புது அர்த்தங்கள் நினைவில்லையா?

      நீக்கு
    6. ம்ம்ம்ம்? புதுப்புது அர்த்தங்கள் சினிமா? அல்லது தொலைக்காட்சித் தொடர்! பேர் கேட்ட நினைவு. ஆனால் பார்த்தாப்போல் தெரியலை. (

      நீக்கு
    7. ஓஹோ, பாலச்சந்தர் படமா? விக்கி சொல்லுது. இல்லை நான் பார்க்கலை! 88 ஆம் ஆண்டில் இருந்தே நாங்க தமிழ்நாட்டில் இல்லை. ராஜஸ்தான், குஜராத்தில் எல்லாம் எப்போவானும் தமிழ்ப்படம் வரும்! தொலைக்காட்சியில் கூடப் பார்த்த நினைவு இல்லை.

      நீக்கு
    8. கீதாக்கா :) நீனா மணமாகி செட்டில்ட் இந்த ஆஸ்திரேலியா

      நீக்கு
    9. பானுக்கா நான் காலைல சொல்ல நினைச்சு விட்டுப் போச்சு...நடிகை கீதா நடிப்பை மலையாளப்படங்களில் பார்த்தால்தான் தெரியும்..அவர் நடிப்பு. யெஸ்

      கீதா

      நீக்கு
    10. நீங்க என்னதான் ஜொன்னாலும் என்னால கீதாவை ஒரு நடிகையாகப் பார்க்க முடியவே இல்லை.. ஏனோ அவவின் ஸ்டைல் உருவம் எல்லாம் ஒரு ஹீரோயின் போல எனக்கு தெரிவதில்லை.. அதனால இப்படமும் பார்க்கும் விருப்பமில்லை...

      கீதாவைத்தான் நான் மரீனா பீஜ்ஜில பார்த்திட்டனே:)).. பெல்ட்டும் கட்டியிருக்கிறீங்க அதில்...

      அஞ்சூ இப்போ ஆரு நீனாவைக் கேய்ட்டாக கர்ர்ர்ர்:) அதாரது:))

      நீக்கு
  17. //மதுரை ரிசர்வ் லைனில் நள்ளிரவுப்படமாக சைக்கிளில் சென்று, மணலில் அமர்ந்து பார்த்த படம். படம் திராபை.
    //

    என்னாது தியேட்டரில் போய் மண்மீதிருந்து பார்த்தீங்களோ? அப்படியும் இருந்ததோ? இல்லை ஏதும் தனியார் ரிவி களில் பணம் வாங்கி விட்டுப் படம் காட்டுவார்களே அப்படி ஏதுமோ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அதிரா அப்போ எல்லாம் மண் மீது அமர்ந்து பார்த்தது உண்டு. திரையரங்கிலும் கூட மணல் தான் மின்னால் இருக்கும் அதன் பின்னே பெஞ்ச் இருக்கும் இரண்டுக்கும் இடையே கயிறு கட்டியிருப்பாங்க...அதுக்கும் மேல என்றால் சேர்...சின்ன சின்ன ஊர்களில் எல்லாம் அப்படி இருக்கும். வள்ளியூரில் எங்கள் வீட்டில் தரைடிக்கெட்தான் எடுத்துப் பார்ப்போம்...படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால். கூட்டிச் செல்ல மாட்டார்கள். எனக்கு என்ன படம் என்று கூட நினைவில்லை. தரையில் விளையாடத்தானே செய்வோம்..பெண்கள் பலரும் காலை நீட்டி உட்கார்ந்திருப்பார்கள்...ஹா ஹா அப்புறம் வெத்தலை குதப்பல் எல்லாம் இருக்கும்...சிறு குழந்தைகள் அழும்...அங்கேயே பால் கொடுப்பார்கள்....சாப்பாடு எல்லாம் கூடக் கட்டிக் கொண்டு வந்து அங்கேயே சாப்பிட்டு என்று...

      கீதா

      நீக்கு
    2. அதுவா அதிரா? அரசுக் குடியிருப்புகளில் மாதா மாதம் ஒரு இலவசப்படம் போடுவார்கள். இலவசம் என்று பெயர்தான். வீட்டுக்கு வீடு கொஞ்சம் காசு மாதாமாதம் அசோஸியேஷனுக்கு என்று சொல்லி வாங்குவார்கள். எங்கள் குடியிருப்பு தவிர அருகிலிருக்கும் போலீஸ் குடியிருப்பு ரிஸர்வ் லைன் என்று பெயர். அங்கும் இலவச திறந்தவெளித் திரைப்படங்கள் உண்டு.

      பெரிய மைதானத்தில் நடுவில் பெரிய திரை கட்டி இருப்பார்கள். அந்தப்பக்கமிருந்தும், இந்தப் பக்கமிருந்தும் படம் பார்க்கலாம். ப்ரொஜெக்டர் வைத்து படம் போடுவார்கள். ஒவ்வொரு ரீலுக்கும் நடுவே இடைவேளை உண்டு. ரீல் மாற்றணுமே...

      அப்படிப் பார்த்த படங்களில் ஒன்று...

      இது பற்றி முன்னர் சினிமா நினைவுகள் பகுதியில் எழுதி இருக்கேன்.

      நீக்கு
    3. ஹையோ ஸ்ரீராம் நினைவு படுத்தினீங்க அந்த ரீல் மாற்றும் நேரம் செமை மஜாவா இருக்கும்....நாங்க எங்க ஊர்ல தேரடில பார்த்த நினைவுகள்...அதுவும் மண்ல...சில சமயம் அதே ரீல போட்டுருவாங்க உடனே பசங்க விசில் அடிச்சு கூ விளித்து என்று அதகளப்படும்....அது ஒரு காலம்...

      கீதா

      நீக்கு
    4. ஒவ்வொரு கதையும் சுவாரஷ்யமாக இருக்கு.. மறக்கமுடியாத நினைவுகள்தானே...

      நீக்கு
  18. இப்போதான் பாட்ட்டுக் கேட்கிறேன்.. முன்பு கேட்டிருக்கவிலை... கேட்கலாம் நன்றாக இருக்குது பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு பாட்டு கொஞ்சம் ஸ்லோவாக இருக்கிறது. கொஞ்சம் கூட்டப்பட்ட டெம்போவில் கேட்டிருக்கிறேன் இதை.

      நீக்கு
  19. ஸ்டார்ட்டிங்க் பிட்ல அந்த ஹம்மிங்க்கு முன்ன வருதும் பின்ன வரும் ஸ்வர இன்ட்ரோ சூப்பர்...எஸ்பிபி வாய்ஸ் அமைதியா இருந்தாலும் இடைல அவர் ஸ்டைல் அழகா வருது...இன்டெர்லூட் பிட் மோகனத்துலருந்து விலகல...அந்த இன்டெர்லூட் பிட் வேறு ஓரிரு மோகன ராகப் பாடலில் வருகிறது...இந்தப் பாட்டு நல்ல மெலடி..இப்ப கேட்டப்புறம் இந்தப் பாட்டுதான் இன்று மனதில் ஓடுது.

    கீதா

    பதிலளிநீக்கு
  20. படமும் பாடலும் புதுசா இருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சர்யமா இருக்கே ராஜி.. நீங்கள் கேட்டதில்லையா? ஜே மூவிஸ் சேனலில் கார்த்திக் நடித்த 'அழகான நாட்கள்' படம் போடுகிறார்கள். உங்கள் நினைவு வந்தது!

      நீக்கு
  21. ஶ்ரீராம், மோகன் கமா, ராதா கமா, கீதா என்று எழுத வேண்டாமா? நான் மோகன் ராதா என்று படித்து விட்டு அப்படி ஓரு நடிகர் உண்டா என்று குழம்பினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி ஹி ஹி... எல்லோருக்கும் புரியும் என்றுதான்.....!

      நீக்கு
    2. மோகன் ராதா என ஒரு நாடக/சீரியல் நடிகர் இருந்தாரோ??

      நீக்கு
    3. பனுக்கா இப்ப நான் மோகன் கமா அப்படியொரு நடிகரா?!!! அட! ராதா கமா அப்படினு நடிகையான்னு ஒரே குயப்பம்தான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ஹிஹிஹிஹிஹிஹி....நல்ல காலம் கீதா கமா அப்படினு வரல..ஹிஹிஹிஹி...

      இன்னிக்கு எல்லாரும் கீதானே எழுதியிருக்காங்களா அதுவும் கோமதிக்கா, கீதாவைப் பற்றிய தகவல் அறிந்தேன்னு...அத வாசிச்சதும் நான் கோமதிக்காவுக்கு "அக்கா நான் நலம் இன்று" அப்படினு சொல்ல நினைச்சு அப்புறம் தான் ஓ அது நடிகை கீதா ந்னு புரிந்து ...ஹா ஹா ஹா ஹா அப்புறம் அதிராவை கலாய்த்து என்று...

      எல்லாரும் கீதான்னு சொல்லி ... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா ஹா ஹா...

      கீதா

      நீக்கு
  22. எங்கள் பள்ளியில் ஒரு ஆசிரியர் நோட்ஸ் டிக்டேட் பண்ணும் பொழுது, கமா, கேள்விக்குறி, ஆச்சர்ய குறி, ஃபுல் ஸ்டாப் என்று எல்லாவற்றையும் சொல்லுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கல்லாம் வாத்தியார் சொல்லும்போதே கொடுக்கும் இடைவெளிகளை வைச்சுப் புரிஞ்சுப்போம். அதுவும் சுருக்கெழுத்துப் படிக்கையில் நாம் தான் கண்டு பிடிச்சுப் போடணும். :))))

      நீக்கு
    2. எங்கள் டமில் ரீச்சரும், இந்தக் கொமா, ஆச்ச்ச்ச்ச்ர்ர்ர்ர்ர்ர்யக்குறி அடைப்புக்குறி எல்லாம் ஒழுங்காப் போடாட்டில் ரெட் பென்னால வட்டம் போட்டு விட்டிடுவா.. அதனாலதான் இப்பவும் எனக்கு கொமா போட்டால்தான் நிம்மதியாக இருக்கும்:).

      அதனாலதானே மீக்கு டமில்ல டி ஆக்கும்:).. சரி சரி நேக்கு ரைமாச்சூஊஊஊ மீ ஃபிளையிங்:))

      நீக்கு
  23. பாடலை முதன்முதலில் கேட்கிறேன் ரசித்தேன் ஆனால் பாடல் மனதில் மீண்டும் ரீங்காரம் இடுமா தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  24. பாடல் ஆரம்ப இசை செம ..எப்பவும்போல் படமும் தெரில பாட்டும் கேட்டதில்லை :) ஆனா இப்போதான் கேட்கிறேன் நல்லா இருக்கு பாடல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா இல்லையெனச் சொல்லியிருந்தால் இப்போ டேம்ஸ்ல சே..சே தேம்ஸ்ல தள்ளியிருப்பேன்ன்:))

      நீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    வெள்ளி பாடல் நன்றாக இருந்தது.(எஸ்.பி. பி குரலில்) சிவாஜி ராஜாவின் இசையும் நன்றாக உள்ளது. இந்தப்படத்தின் பெயரில்
    வெளிவந்த "காற்றுக்கென்ன வேலி. கடலுக்கென்ன மூடி" என்ற பாடல்தான் கேட்டிருக்கிறேன். இந்த பாடல் என்னைப் பொறுத்த வரை புதுசு. இருந்தாலும் பாடலும், இசையும் நன்றாகவே உள்ளது. (சினிமாவை பொறுத்து வரை நானெல்லாம் கொஞ்சம் ஞான சூன்யம். டக்கென்று பாடலோ, படமோ மனதில் பதியாமல் ம(றை)றந்து விடும்.) இங்கு பதிலளிப்பவர்கள் அனைவருமே அனைத்து விஷயங்களிலும் (ஆன்மிகம்,பக்தி, அரசியல்,விளையாட்டு,கதை கவிதை என்ற கற்பனைவளங்கள், சினிமா) திறமையுடன் அலசி ஆராய்ந்து உரையாடுபவர்கள். எனக்கு அதிரா சகோதரி சொல்வது போல் ஷை,ஷையா இருக்கிறது. ஹா ஹா ஹா ஹா. ஆனாலும் (ஷையின் ஊடேயே) பதிவுகளை ரசித்து கருத்திட்டு விடுகிறேன். நேற்று வலை உலா வர இயலவில்லை. நேற்றைய பதிவும் படிக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  26. இந்தப் படம் பார்த்ததில்லை. ஆனால் பாடல்களை கேட்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  27. ஶ்ரீராம் தொல்லியல் துறைலதானே வேலை பார்க்கறீங்க.. இந்தப் பாட்டைக் கேட்டிருக்கேன். எந்த ஜென்மத்தில் என்பதுதான் சந்தேகமாயிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///எந்த ஜென்மத்தில் என்பதுதான் சந்தேகமாயிருக்கு///
      நான் ஜொன்னனே.. நெல்லைத்தமிழனுக்கு இப்போதான் புதுசாக் கல்யாணம் முடிச்ச நினைப்பு கர்ர்ர்ர்ர்ர்ர்:))
      ஹையோ மீ எஸ்கேப்பூஊஊஊஉ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))..

      நீக்கு
  28. பாடல் பரவாயில்லை ரகம்! ஆனால் படம் நன்றாக இருக்குமென்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!