ஞாயிறு, 27 ஜனவரி, 2019

ஞாயிறு : திங்கள்கிழமைகளில் வரும் அமாவாசையில் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டால்



ப்ரம்மபுத்ரா நதியின் நடுவே மயில்தீவு என்று அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ள கோவில் உமானந்தா கோவில்.  உலகம் ஆக்கப்பட்ட சமயத்தில் இவ்விடத்தில் சாம்பலைத் தூவி சிவன் பார்வதிக்கு ஞானம் கற்றுத்தந்த இடம் என்றும் சொல்கிறார்கள்.  உள்ளே கேமிரா எடுத்துச் செல்லவோ படமெடுக்கவோ அனுமதிக்கவில்லை.  


எனவே சுற்று வட்டாரத்தை மட்டுமே சுற்றிச்சுற்றி படம் எடுக்க முடிந்தது.  சிவனை தெய்வமாக வழிபடுவதால் சைவர்கள் என்று அழைக்கப்படும் மரபில் வந்த புகழ் பெற்ற அஹோம் வம்சத்து சுபாட்பா என்று அழைக்கப்படும் கடாதார் சிங்கா என்கிற மன்னனால் கட்டப்பட்ட ஆலயம்.  1694 இல் ஆலயம் இந்த மன்னனது உத்தரவின் பேரில் கட்டப்பட்டுள்ளது.  ஆனால் 1897 இல் வந்த நிலநடுக்கத்தில் கோவில் பாதிக்கப்பட்டுவிட, பின்னர் ஒரு பணக்கார உள்ளூர் வணிகரால் கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது.



சிவராத்திரி சமயங்களில் இங்கு அபிஷேகம், அர்ச்சனை செய்ய ஆயிரக்கணக்கில் கூட்டம் அள்ளுமாம்.  கரையிலிருந்து ஒரு இருபது நிமிடப் பயணத்தில் இந்தத்தீவை அடையலாம்.  உலகின் மிகச் சிறிய ஆற்றுத்தீவு என்று சொல்லலாம்.  சிவன் இங்கு பயானந்தாவாக உறைவதாக ஐதீகம்.  



இந்த இடத்தை ஊர்வசி குண்டம் என்றும் சொல்வார்கள்.  ஊர்வசி காமதேவனுக்கு அமிர்தம் கொண்டுவந்த இடம் என்பதால் இந்தப்பெயர்.  காளிகாபுராணத்தின்படி சிவனது தவத்தைக் கலைக்க முயன்ற காமதேவனை கண்களால் பஸ்பமாக்கி சிவன் தூவிய இடங்களில் ஒன்று இந்த மலை என்றும் சொல்வார்கள்.  எனவே இதற்கு பஸ்மாகுலா என்றும் பெயர்.


"கண்ணைமூடிக்கிட்டு கதை விடறீங்க...   நானும் கண்ணை மூடிக்கிட்டு கேட்கறேன்... " 




கோவிலின் முக்கிய கடவுள் உமானந்தா.  திங்கள்கிழமைகளில் வரும் அமாவாசையில் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் ரொம்ப ரொம்ப விசேஷம் புண்ணியம், நல்ல பலன் கிட்டும் என்று நம்பப்படுகிறது.



சிவ சதுர்த்தசி இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.  ஜஹாங்கிர், அவுரங்கசீப் ஆகிய முஸ்லீம் மன்னர்களால் இவ்விடத்துக்கு பண உதவி, நில உதவி, ஆட்கள் உதவி கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.



இது போல சுற்றுலா ஸ்தலங்கள் அமைந்துவிட்டால் தங்கியிருக்கவும் உணவுக்கும் இடம் வேண்டுமே...   சுற்றிலும் நிறையவே இதற்கு வசதி இருக்கிறது என்று சுற்றிச் சுற்றி எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தெரிகிறது.



நேற்று குடியரசு தினமல்லவா...    பாரதக் கொடி பட்டொளி வீசிப்பறக்கிறது பாருங்கள்!


இந்தக்கோவில் பற்றிய ஓரிரு சிறிய காணொளிகள் இணையத்திலிருந்து எடுத்து இணைத்துள்ளேன்.





42 கருத்துகள்:

  1. படங்கள் ஸூப்பர்.
    சொல்லி வரும்போதே சொல்லி வருவது கதை விடுவது என்ற வசனம் ரசிக்க வைத்தது ஜி

    காணொளி காண்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... சாம்பல் தூவும் கதையை சொல்கிறான் போல அந்தப் பையன்!​

      நன்றி ஜி.

      நீக்கு
  2. மூன்று காணொளிகளும் கண்டு ரசித்தேன்.
    பல இடங்களில் மீண்டும், மீண்டும் ஒரே காட்சிகள் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜி. ஆமாம் ஒரே இடம்... பயணம்... அதே தண்ணீர், அதே கரை!!!

      நீக்கு
  3. போல் பம்! Bhol Bhum! என்று சொல்லிக்கொண்டே "பம்" கொட்டிக்கொண்டு சாரி சாரியாக விரதம் இருந்து இந்தக் கோயிலுக்கும் ஒடிஷாவில் புவனேஸ்வரில் உள்ள பழைமையான சிவன் கோயிலுக்கும் வடமாநில மக்கள் செல்வார்கள். வீதி முழுக்க விபூதி பட்டை பட்டையாக அணிந்தவண்ணம் ஜடாமுடியுடன் பல சாதுக்களையும் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் அங்கு சென்றிருக்கிறீகள் இன்றி தெரிகிறது கீதாக்கா...

      நீக்கு
  4. மூன்று காணொளிகளும் அற்புதம்.
    குவாஹாட்டி ,சிவன் கோவிலும் கதைகளும் மிகச் சிறப்பு.

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அருமை. வரலாற்றுத் தகவல்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  7. கோவில் வரலாறுக்கு நன்றி. , காணொளிகள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  8. படங்கள்+விளக்கங்கள் சிறப்பு. காணொளி இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. இன்று தான் இந்த தகவல்களை அறிந்தேன்...

    பதிலளிநீக்கு
  10. படங்களோடு விளக்கமும் அமைந்துள்ளது சிறப்பு. படங்கள் நல்லா இருக்கு. ஒரு படம் ரிபீட் ஆயிருக்கு.

    இடத்தைப் பற்றிய விளக்கம் வரும் வாரங்களிலும் தொடர்ந்தால் நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லைத்தமிழன். ஏதாவது ஒரு சிறு வித்தியாசம் இருக்கும்!

      நீக்கு
    2. ஆம்... படகு கொஞ்சம் நகர்ந்திருக்கு......

      நீக்கு
  11. விளக்கம் நீங்கள் கொடுத்ததா ஶ்ரீராம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, ஶ்ரீராம் விளக்கம் எல்லாம் கவிதை நடையில் இருக்கும். கௌதமன் எழுதி இருந்தால் ஹாஸ்யம் தலை தூக்கி இருக்கும். இது கேஜிஎஸ்ஸே கொடுத்திருக்கலாம். :))))

      நீக்கு
    2. உங்கள் அனுமானங்கள் சுவாரஸ்யமாய் இருக்கின்றன. (grrrrrrr)

      நீக்கு
    3. ஸ்ரீராம்தான் கொடுத்திருப்பார். ஆனா படம் என்ன என்பதைக் கேட்டு அவர் எழுதியிருப்பார். இதுமாதிரியே தொடருங்கள் ஸ்ரீராம்.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    படங்கள் எல்லாம் அருமை. பிரம்மபுத்திரா நதியும், மலைகளும், இயற்கை வண்ணச் சூழலுடன் கூடிய அந்த இடங்களும் கண்ணுக்கு, மனதிற்கு குளிர்ச்சியாக இருந்தது. உமானந்தா கோவிலைப்பற்றிய நிறைய விபரங்களும் தெரிந்து கொண்டேன்.

    காணொளிகளும் ரசித்துப் பார்த்தேன். அனைத்தும் அருமையாக உள்ளது. இம்மாதிரி இடங்களுக்கு போய் தரிசிக்கும் வாய்ப்பு எப்போதோ.! என்ற ஆவலை தூண்டியது தங்கள் பதிவு. மிகவும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.

      'இந்த இடங்களை தரிசிக்கும் வாய்ப்பு எப்பவோ' என்றுதான் நானும் நினைத்துக் கொள்கிறேன்!!!

      நீக்கு
  13. அழகான படங்கள்....

    படகு உலா செல்வது மகிழ்ச்சி தரும் ஒன்று.....

    பதிலளிநீக்கு
  14. இத்தலங்களை எல்லாம் தரிசிப்பது எந்நாளோ....

    படங்களும் விவரங்களும் மனதைக் கவர்கின்றன....

    இன்று கல்லூரிகள் இங்கு திறக்கப்பட்டன.. தலைக்கு மேலாக வேலை.... பிரச்னை ஏதும் இல்லை..

    ஆனாலும் வேறெதிலும் கவனம் செலுத்த முடியவில்லை...

    அதனால் தான் தாமதம்...

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை செல்வராஜூ ஸார்...

      கல்லூரிகள் திறந்து விட்டனவா? வேலை மும்முரம்.

      நீக்கு
  15. குவஹாட்டி கோவில் சித்தரிப்பு அந்தப்பக்கம் ஒரு விசிட் அடித்துவிட்டு வரலாம் எனத் தோன்றவைக்கிறது.

    அமிர்தமே ஒரு அமிர்தம். அதை ஊர்வசியே கொண்டுவந்து கொடுத்தால்... !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... ஊர்வசி என்றால் நம்ம நடிகை ஊர்வசி வேறு ஞாபகத்துக்கு வருகிறார் ஏகாந்தன் ஸார்.

      நீக்கு
  16. படங்கள் எல்லாம் அட்டகாசம் இம்முறை. நிறைய பிரம்மபுத்திரா நதியின் படங்கள் எனப்தாளோ?!! அந்த போட் இருக்கும் படம் செம...

    தகவல்கள் நல்லாருக்கு. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு கதை அதுவும் பல இன்டெர்ப்ரிட்டெஷன்ஸுடன்!!!

    //"கண்ணைமூடிக்கிட்டு கதை விடறீங்க... நானும் கண்ணை மூடிக்கிட்டு கேட்கறேன்... " //

    ஹா ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன் ரசித்தேன்!!!

    அது சரி ....//சிவன் இங்கு பயானந்தாவாக உறைவதாக ஐதீகம்.// பயானந்தா? கடவுளுக்கு பயமா? அப்புறம் கீழ உள்ள வரில....இங்கு முக்கியக் கடவுள் உமானந்தான்னு இருக்கு!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.... கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது. கேள்வி கேட்பது சுலபம்... சொல்லிட்டேன்... ஆமாம்...!

      நீக்கு
  17. காணொளிகள் பாத்தேன். பிரம்மபுத்திரா கடல் மாதிரி இருக்கு பார்க்க!!! போகனுன்னு தோனுது. பிரம்மபுத்திரா பார்க்கறதுக்காகவே..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலை சுற்றாமல் இருந்தால் சரி! படகுப்பயணம் செல்லலாம்!

      நீக்கு
  18. படங்கல் அருமை. பிரம்மபுத்திரா நதியை பார்க்கவே அம்புட்டு பிரமிப்பா இருக்கு.

    பதிலளிநீக்கு
  19. படங்களும் தகவல்களும் அருமை! அதுவும் அந்த முதல் புகைப்படம், அதன் அமைதி, ஒரு மோன தவம் செய்கிற மாதிரியான அமைதி மனதில் சூழ்கிறது!!

    பதிலளிநீக்கு
  20. படங்கள் அத்தனையும் மிக அழகு. கண்டிப்பாக எனக்கெல்லாம் போகும் வாய்ப்பு கிடைக்குமா என்பது அரிது. அதுவும் இந்த சிவன் கோவில் எல்லாம் எனக்குப் பார்க்கும் அதிர்ஷ்டமும் கிடைக்குமா என்று தெரியவில்லை.

    இம்முறை படங்களுடன் விவரங்களும் வந்ததால் கௌஹாத்தி என்று தெரிந்து கொள்ள முடிந்தது. ஸ்வாரஸ்யமான விவரங்கள்.

    நன்றி ஸ்ரீராம்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!