திங்கள், 28 ஜனவரி, 2019

திங்கக்கிழமை : லன்ச் பாக்ஸ்


குடும்பத் தலைவிகளுக்கு ரெண்டு விஷயம் தினப்படி தலைவலி!  ஒன்று காலையில் பிள்ளைகளுக்கு லன்ச் பாக்ஸுக்கு என்ன வைப்பது என்பது.  இரண்டாவது இரவுக்கு என்ன டிஃபன் செய்வது என்பது...  இரண்டாவதை எப்படியாவது ஒப்பேற்றி விடலாம்.  ஆனால் இந்த முதலாவதை சமாளிப்பதற்குள் மூச்சு வாங்கி விடும் அம்மாக்களுக்கு!  அதாவது இந்தக் கால அம்மாக்களுக்கு!

அந்தக் கால அம்மாக்களுக்கு?

அப்போதெல்லாம் நாங்கள் மோர் சாதம்தான் எடுத்துப் போவோம்.  கவனிக்கவும், தயிர் சாதம் இல்லை, மோர் சாதம்!  பழைய சாதத்தை மொத்தமாகக் கலந்து பாதியை சாப்பிட்டு விட்டு, மீதியை டிபன்பாக்சில் எடுத்துச் செல்வோம்.  தொட்டுக்கொள்ள மாவடு அல்லது நார்த்தங்காய்.  சில சமயம் சின்ன வெங்காயம்.  பள்ளியில் வாய் நாறும் அபாயத்தைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டதில்லை.  நிறைய பையன்களிடம் பூண்டு நாற்றம் நாறும்.



ஒருமுறை "என்னம்மா..   எப்போது பார்த்தாலும் ஒரே மாதிரி மோர்சாதம்..." என்று கேட்டதும் அம்மா சூடான சாதத்தில் சின்ன வெங்காயத்தை நறுக்கிப்போட்டு, சாதம் வடித்த கஞ்சியையும் துளி மோரையும் விட்டு பிசைந்து தந்தார்கள்.  அன்று பார்த்து என் வழக்கமான டிபன்பாக்ஸுக்கு பதிலாக பிளாஸ்டிக்கோ வேறு எதுவோ ஒரு டிபன்பாக்ஸ் வேறு..   ஒரு மாதிரி வாசனையாக அன்று மதிய உணவை நான் ரொம்ப ரசித்தேன்.  அப்புறம் அடிக்கடி அந்த மாதிரி எடுத்துக் போயிருக்கிறேன்.

எப்போதாவது ஒருமுறை எலுமிச்சை சாதம் கிடைக்கும்.   வெகு அபூர்வமாய் புளியோதரை அல்லது தேங்காய் சாதம்!  வருடத்துக்கொரு முறை!

என் நண்பன் ஒருவனுக்கு வாய்ப்புண்.  அவன் பெயர் பாஸ்கர்.  (பெயர் மாற்றப்படவில்லை!) ஏழாவது படித்த நேரம் அது.  அவன் அப்பா ஒரு போலீஸ்காரர்.  அவரைப்பற்றி அவன் எங்களிடம் நல்லதாய் எதுவும் சொன்னதில்லை.  எப்போது பார்த்தாலும் அடிப்பார், உதைப்பார் என்றுதான் சொல்லி இருந்தான். இண்டர்வெல் நேரத்தில் 'வேலையை' முடித்து விட்டு இங்கு அங்கு அலைந்த நேரம் ஒரு மரத்தடியில் பாஸ்கருக்கு அவன் அப்பா ஒரு டிஃபன் பாக்சிலிருந்து ஏதோ எடுத்து எடுத்து ஸ்பூனால் வாயில் ஊட்டிக்கொண்டிருந்தார்.  அப்புறம் தெரிந்தது.  வாய்ப்புண் என்று வெண்ணெய் வாங்கி வந்து ஊட்டி விட்டாராம்.   அவரா கொடும்மைக்கார அப்பா?  பாஸ்கரை முறைத்தோம்!

ஒருமுறை லன்ச் பாக்ஸ் எடுத்துச் செல்ல மறந்து விட்டேன்.  மூன்றாவது படித்துக்கொண்டிருந்தேன்.  நான் லஞ்ச் பாக்ஸ் மறந்து விட்டேன் என்பதையே சாப்பிடும் மணி அடித்த சமயம்தான் கவனித்தேன்.  துக்கம் தொண்டையை அடைத்தது!  எல்லோரும் கைகழுவச் செல்லும் இடத்தில நானும் கைகழுவினேன்.  எல்லோரும் சாப்பிடும் இடத்தில் நானும் இருந்தேன்.  வெளியில் சுவரை ஒட்டி (பள்ளி வளாகத்துக்குள்தான்) சுவரைப்பார்த்து அமர்ந்து டிபன் பாக்ஸைத் திறந்து சாப்பிடுவது வழக்கம்.   சற்று தூரத்தில் இருக்கும் பெரிய மரத்தடியில் வட்டமாக அமர்ந்து சாப்பிடுவார்கள்.  சில மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் தினசரி மதிய உணவு கொண்டு வந்து தருவார்கள்.  



ஒரு பிளாஸ்டிக் கூடையில் டிபன் கேரியர், தட்டு, அல்லது சிறு வாழை இலை, தண்ணீர் எடுத்து வந்து மரத்தடியில் அமரவைத்து அவர்கள் மடியில் ஒரு துண்டுபோட்டு சாப்பிடவைத்து, வாயெல்லாம் துடைத்து விட்டு உள்ளே விட்டு விட்டு செல்வார்கள்!!   எனக்கு அதைப்பார்த்து எந்த ஏக்கமும் வந்ததில்லை தெரியுமோ!

அவர்களை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தேன்.  நண்பர்கள் யாராவது தங்கள் உணவைப் பகிர்வார்கள், ஒரு வாயாவது கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது என்று ஞாபகம்.  ஏதோ பெரிய துக்கத்தில், கஷ்டத்தில் மாட்டிக்கொண்டவன் போல உணர்தேன்.

அப்போது கண்ணில் பட்டார் நாங்கள் இருந்த அரசுக் குடியிருப்பில் மூன்றாவது வீட்டில் இருந்த பஞ்சு மாமா.  இவர் எதற்கு இங்கு வந்தார் என்று யோசிப்பதற்குள் பள்ளி ஆயா என்னைத் தேடிக்கொண்டு வந்து விட்டார்.



"கண்ணு...   சோத்து டப்பாவை வீட்ல வச்சுட்டு வந்துட்டியாமே...  இந்தா...   அம்மா கொடுத்தனுப்பிச்சிருக்காங்க பாரு..  சொல்லக் கூடாதா ராசா...   இப்படி எல்லாம் இருந்தா எங்கிட்ட சொல்லு..  நான் மதர் கிட்ட சொல்லி ஏதாச்சும் ஏற்பாடு பண்ணுவேன்..  புரிஞ்சுதா?" என்று சொல்லிச் செல்ல,  பஞ்சு மாமா என் தோளைத் தட்டி வீட்டுக் கிளம்பினார்.  பஞ்சு மாமா மூன்றாவது படிக்கும் என்னைவிட சற்றுதான் உயரமாயிருப்பார்.  வீட்டுக்கருகில் அதுவரை அவரை குள்ளமாமா என்று அழைத்துக் கொண்டிருந்த என் நண்பர்களுக்கு (நானும்தான்) நடுவில் அன்று முதல் நான் அவரை 'மாமா' என்று மட்டும் அழைக்க ஆரம்பித்ததன் பின்னணி என் நண்பர்களுக்குத் தெரிய நியாயமில்லை!


2016 இல் மதுரை வீட்டில் என் பள்ளிக்கால டிபன்பாக்ஸை பார்த்ததும் திறந்து பார்த்தபோது ஸ்கூல் வாசனை அடித்தது.  ஓரம் நெளிந்த அதே டிபன் பாக்ஸ்.  எட்டாவது வகுப்புக்குமேல் வந்த போதெல்லாம் டிபன் பாக்ஸ் எடுத்துச் செல்லவில்லை.  மதியம் வீட்டுக்கு வந்து விடுவேன்.  பள்ளிக்கருகிலேயே வீடு.  சற்று தூரத்தில் இருந்த காலங்களிலும் என் அண்ணனின் நண்பரின் சைக்கிளை நான் வாங்கி வைத்திருந்தேன்.  அது அவர் அப்பா கால சைக்கிள்.  பள்ளித் தலைமையாசிரியராயிருந்த அவர் வைத்திருந்த சற்றே உயரமான சைக்கிள் அது.  அதில் வந்து செல்வேன்!

எனக்கு அப்போது வகுப்பு ஆசிரியையாய் இருந்த ஜூலி டீச்சர் உறவினப் பையன் ஒருத்தன் என்னுடன் படித்தான்.  தாமஸ் என்று பெயர்.  நானெல்லாம் "மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம்" என்று ரோஜாப்பூ படம் போட்ட துணிப்பையில் புத்தகம் எடுத்துச் சென்ற காலங்களில் அவன் அலுமினியம் பெட்டியில் புத்தகங்கள் கொண்டு வருவான்.  அவன் டிபன் பாக்ஸ் இரண்டடுக்காய் சாம்பார் சாதம், பொரியல், தயிர் சாதம் என்று எடுத்து வரும் வசதி உடையதாய் இருக்கும்.  சில மாணவர்கள் இந்தாலியம் டிஃபன்பாக்ஸ் எடுத்து வருவார்கள்.

சாப்பிட்டு விட்டு அங்கேயே டிபன்பாக்ஸை கழுவி விட்டு அதே குழாயில் வாய் வைத்து தண்ணீர் குடித்திருக்கிறேன்.

மதுரையிலிருந்து எடுத்து வந்த அந்த என் டிபன் பாக்ஸை போட்டோ எடுக்கலாம் என்று தேடினேன்.  காணோம்.

படங்கள் எல்லாம் நன்றியுடன் இணையத்திலிருந்து எடுத்திருக்கிறேன்.

என் மகன்களுக்குக் கூட ஏதோ ஒரு தவிர்க்க முடியாத சமயத்தில் மட்டும் மதிய உணவு கொண்டுபோய் கொடுத்திருக்கிறார் பாஸ்.  மற்றபடி 95% டிபன் பாக்ஸ் காலையிலேயே கையில் கொடுத்து விட்டு விடுவார்.



இப்போதெல்லாம் அம்மாக்கள் ஃபிரைட் ரைஸ், இட்லி, சப்பாத்தி, நூடுல்ஸ், பாஸ்தா என்றெல்லாம் கொடுத்து அனுப்புகிறார்கள்.  சின்னச்சின்ன ஹாட் பாக்ஸ் எல்லாம் கூட எடுத்துச் செல்கிறார்கள்.

173 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்..
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட எங்களுக்கெல்லாம் கட்டுச் சோறு செஞ்சு தந்திருக்கீங்களா ஸ்ரீராம்!!!

      இதோ வரேன்....பார்க்க!!!

      கீதா

      நீக்கு
    2. இனிய மகிழ்வான காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    3. கட்டு சோறு நினைவுகள் கீதா!!

      நீக்கு
  2. பதில்கள்
    1. நன்றி கீதாக்கா.... வாங்க உங்கள் கருத்துகளுடனும், நினைவுகளுடனும் விரைவில்.....!

      நீக்கு
    2. நடுவிலே கொஞ்சம் எழுந்து போக நேர்ந்தது. :D அதான் உடனே பதில் போடலை. கஞ்சி அழைத்தது

      நீக்கு
  3. பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்... நலமே.. நாடுவதும் அதுவே....

      நீக்கு
  4. நல்ல நினைவலைகள். மதியம் வீட்டுக்குச் சாப்பிட வரச்சொல்லிடுவாங்க ஒண்ணாம் வகுப்புப் படிச்சப்போ. டப்பாவில் கொடுத்து விட்டால் சாப்பிட மாட்டார்கள் என்பதோடு டப்பா தொலைந்து விடும் என்றதொரு நல்ல அபிப்பிராயமும் கூட. தினம் மத்தியானம் செருப்பு இல்லாமல், அப்போல்லாம் செருப்பும் லக்சுரி தான். கொதிக்கும் வெயிலில் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பிய அனுபவங்கள் ஐந்தாம் வகுப்பு வரை உண்டு. அதன் பின்னர் தம்பிக்கு அம்மா தினமும் சாப்பாடு எடுத்துப் போவார். நான் அருகில் வடக்கு மாசி வீதிப் பள்ளி என்றாலும் கையில் மோர் சாதம், மாவடு அல்லது ரசம் சாதம் எடுத்துப் போவேன். பள்ளிக்கு ரசம் சாதம் எடுத்துச் சென்றது அநேகமாய் நானாகத் தான் இருக்கும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அண்ணன் டிபன் பாக்ஸ் தொலைத்திருக்கிறான். நான் தொலைத்ததில்லை கீதா அக்கா.

      ரசம் சாதம்லாம் சூடா சாப்பிட்டாதான் நல்லா இருக்கும் இல்லையோ.....

      நீக்கு
    2. அது தனிக்கதை. நமக்கெல்லாம் ரசம் எப்படி இருந்தாலும் பிடிக்கும்/பிடித்த நாட்கள் அவை. கொதிக்கக் கொதிக்க ரசத்தை அம்மா ஈயச்செம்பில் இருந்து ஊற்றுவார். சாதமும் பிசைய முடியாமல் சூடாக இருக்கும். காலங்கார்த்தாலே ஏழு மணிக்கு அதைச் சாப்பிட்டுவிட்டு அதையே எடுத்துச் செல்வேன். ராத்திரி வந்தும் அதே ரசம் சாதம் தான். ஹிஹி

      நீக்கு
    3. ரசமான ஆள்தான் நீங்க!

      ரசம் சாதம் சற்றே நீர்க்க இருந்தால்தான் சுவை. ஆனால் மதியத்துக்கு செல்லும்போது குழம்பு சாதத்தைவிட கெட்டியாகி விடுமே!

      நீக்கு
    4. அதை ஏன் கேட்கறீங்க? நீர்க்கத் தான் எடுத்துச் செல்வேன். ரசம் வெளியில் எல்லாம் வந்து வழியும்!அப்போல்லாம் இப்போமாதிரி நாசூக்கு, நொரநாட்டியம்கிடையாதே! ஆகவே அதெல்லாம் மண்டையில் ஏறியதே இல்லை. :D

      நீக்கு
    5. நீர்க்க எடுத்துச் செல்வீர்கள். எடுத்துச் செல்லும்போது நீர்க்கத்தான் இருக்கும். போகப்போக கெட்டியாகி விடுமே!

      நீக்கு
    6. //அப்போல்லாம் இப்போமாதிரி நாசூக்கு, நொரநாட்டியம்கிடையாதே!// நொரநாட்டியம்.. ஆஹா! இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்டு எத்தனை நாட்களாகி விட்டன! இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே..:)

      நீக்கு
  5. >>> பழைய சாதத்தை மொத்தமாகக் கலந்து பாதியை சாப்பிட்டு விட்டு, மீதியை டிபன்பாக்சில் எடுத்துச் செல்வோம். தொட்டுக்கொள்ள மாவடு அல்லது நார்த்தங்காய். சில சமயம் சின்ன வெங்காயம்... <<<

    என்ன இது.. அப்படியே ஜெராக்ஸ் போட்ட மாதிரி இருக்கிறது!...

    பதிலளிநீக்கு
  6. எட்டாம் வகுப்பிற்குப் பின்னர் தினம் தினம் டப்பா தான். சில நாட்களில் நானே சமைத்து எடுத்துச் செல்ல வேண்டி வரும். அப்போவும் ரசம் சாதம் தான். கத்திரிக்காய்க் கூட்டு எனில் டப்பாவில் பாதி அது தான் இருக்கும். எல்லாப் பெண்களின் சாப்பாடு டப்பாவிலும் இந்தக் காய் வைப்பதற்கென உள்ள கிண்ணம் மேலே தனியாக எடுக்கும்படி வரும். நமக்கெல்லாம் அந்த மாதிரி டப்பா கிடையாது. தூக்கு! அதில் மூடி பாதி இடத்தை அடைத்துக் கொண்டு உள்ளே அழுத்தும்படி அமைந்திருக்கும். :)))) மிச்சத்தில் தான்சாப்பாடு! சில நாட்கள் அம்மா வெண் பொங்கல் கொடுப்பா! மார்கழி மாதங்களில். அப்போ நினைவெல்லாம் வெண்பொங்கலாகவே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ... இங்கேயும் இதிலும் கத்தரிக்காயைக் கொண்டுவந்து விட்டீர்கள் கீதாக்கா... ஆமாம், ஒரு சின்ன உள்ளார்ந்த தட்டில் காய் வைத்து வருவார்கள்!

      நீக்கு
    2. அட, கத்திரிக்காய் இல்லாமல் நம்ம பொழுது போனதே இல்லையே! சொர்க்கமே வேண்டாம்னு சொல்லிட மாட்டோமா என்ன? கத்திரிக்காய் இருந்தால் போதுமே!

      நீக்கு
    3. உங்க வீட்டுக்குப் பக்கத்தில் வீடு ஏதும் காலியாயிருக்கா கீதாக்கா? பேசாம அங்க குடி வந்துடறேன்!

      நீக்கு
    4. நானே கீதா சாம்பசிவம் மேடத்திடம் கேட்க நினைத்துக்கொண்டிருப்பது. பேசாம திருவரங்கத்திலேயே செட்டிலாயிடலாம்னு. (எனக்கு எந்த ஊருக்கு போனாலும் அங்கேயே இருந்துடலாம்னு தோணும், கோயில்கள் அருகில் இருந்தால், சாப்பிட வசதி இருந்தால்). மனைவி, இந்தாளுக்கு எப்பயாச்சும் பெங்களூர் பிடித்துவிடாதா என்று காத்திருக்கிறார்.

      நீக்கு
    5. ஹாஹாஹா, ஶ்ரீராம், நெ.த. அதெல்லாம் சும்மாச் சொல்லுவீங்க! வரமாட்டீங்க! எனக்குத் தெரியாதா என்ன? நிஜம்மாவே வீடு காலியானச் சொல்லிடவா? அப்போ என்ன செய்யப் போறீங்க ரெண்டு பேரும்னு பார்க்க ஆவல்! :P :P :P :P :P

      நீக்கு
    6. எனக்குச் சொல்லுங்க கீதா சாம்பசிவம் மேடம். (அப்புறம்தான் என் மனைவிட்ட சொல்லிக் கேட்கணும்).

      நீக்கு
  7. >>> டப்பாவில் கொடுத்து விட்டால் சாப்பிட மாட்டார்கள் என்பதோடு டப்பா தொலைந்து விடும் என்றதொரு நல்ல அபிப்பிராயமும் கூட...<<<

    டப்பா தொலைந்து விடும் என்றதொரு நல்ல அபிப்பிராயம்!...

    அதுவல்ல.. உண்மையான காரணம்!...

    டப்பாவைத் தொலைத்து விடுவான்/ள்... - என்றதொரு அசைக்க முடியாத நல்ல நம்பிக்கை!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இஃகி,இஃகி, இஃகி, ஆமாம், அதுவும் பென்சில், குச்சி, (சென்னையில் பல்ப்பம் அல்லது பலப்பம் என்கிறார்கள்) எதுவுமே முழுசாக் கிடைக்காது. கொடுக்க மாட்டாங்க. மூன்று பாகமாக உடைத்துத் தான் தருவாங்க. பென்சிலை இரண்டாக நறுக்கி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் முழுப் பென்சில் பார்த்ததே வேலைக்குப் போக ஆரம்பிச்சதும் தான்! :) அலுவலகத்தில் தருவாங்க! :))))))

      நீக்கு
    2. நல்லவேளை, நான் எதையும் தொலைத்ததில்லை!

      நீக்கு
    3. நானும் தொலைத்தது இல்லை. தொலைத்தால் அடி பின்னிடுவார் அப்பா! ஆனால் எங்க பொண்ணு தினம் ஒரு பென்சில் தொலைப்பா! எப்படினு தெரியாது. பள்ளியில் ஆசிரியரிடம் சொன்னப்போ எந்தக் குழந்தையைச் சந்தேகப்பட முடியும்! நீங்க எதுக்கும் தினம் 2 பென்சில் கொடுத்துடுங்க என்பார்! :))))) என் தம்பி சுத்தம். அவன் ஸ்லேட்டோ, பென்சிலோ வெளியேவே எடுக்க மாட்டான். ஹிஹிஹி, எழுதினால் தானே எடுக்க? ஒண்ணாம் வகுப்பு சேர்ந்து அரைப்பரிக்ஷை வரை பிடிவாதமா "அ" கூடப்போட மாட்டேன்னு அடம்! நான் அதே பள்ளியில் 5 ஆம் வகுப்பில் இருந்தேன். வாத்தியார் அடிக்கடி கூப்பிட்டு அனுப்புவார். போய்ப் பார்த்தால் அவன் உட்காரும் பெஞ்சில் உள்ள குழந்தைகளைக் கீழே உட்காரச் சொல்லிட்டு அவன் ஜம்ம்னு தூங்கிக் கொண்டிருப்பான்! :))))) ஏண்டி, தொட்டில் குழந்தைகளை எல்லாம் ஸ்கூலுக்கு அனுப்பி உங்க அப்பா படுத்தறார் எங்களை! என வாத்தியார் கோவிப்பார். ஏற்கெனவே எனக்கு வயசு கூடக் கொடுத்து பிரச்னை! அது கடைசியில் எஸ் எஸ் எல் சி வரை தொடர்ந்து அப்பா பிடிவாதமா வயசு கூடப் போட்டுக் கொடுத்துட்டார். இல்லைனா அந்த வருஷம் எஸ் எஸ் எல்சி எழுத முடியாது! கூடப் போடலைனா படிப்பை இதோட நிறுத்திக்கோ! திரும்ப எல்லாம் பரிக்ஷைக்குப் பணம் கட்ட முடியாது என்று பிடிவாதம் வேறே! வேறே வழியில்லாமல் ஒத்துக்கொள்ள நேர்ந்தது. ஆனால் மற்ற மாணவிகள் என்னைக் கேலி செய்வாங்க! :))))) இதெல்லாம் எழுதப் போனால் ராமாயணத்தை விடப் பெரிசா ஆயிடும்! :)))

      நீக்கு
  8. இன்றையப் பதிவை வெச்சிக்கிட்டு ஒரு நூறு உண்மைச் சம்பவங்களை எழுதலாம்!...

    நேரம்?... அதுக்குத் தான் பிரச்னையாகி விட்டது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருந்த நினைவுகளை தட்டி எழுப்பிட்டேனா?!!

      நான் நான்காம் வகுப்பு படித்தபோது 'லன்ச் அவரி'ல் நடந்த ஷோபா என்கிற பெண்ணுடனான சண்டை ஒன்று உண்டு.....

      நீக்கு
    2. ஶ்ரீராம், சின்ன வகுப்பிலே படிச்சவரைக்கும் யாரோடும் சண்டை போட்டதா நினைவில் இல்லை. ஆனால் பத்தாம் வகுப்பு வந்ததும் தான் அத்தனை வருஷம் நெருங்கிப் பழகிய தோழிகளோடு விலகி இருக்க நேர்ந்தது. பின்னால் அவர்களைச் சந்தித்த போதெல்லாம் கூட திரும்பப் பேசத் தோன்றவில்லை! :(

      நீக்கு
    3. நான் போட்ட சண்டை கூட சிரிப்பான ஒன்று கீதாக்கா... இப்போ நினைத்தாலும் சிரிப்புதான் வரும். எங்களுக்காக எங்கள் இரண்டு வகுப்பு ஆசிரியைகளும் கூட சண்டை போட்டார்கள் அப்போது!

      நீக்கு
  9. எங்க குழந்தைகளுக்கு நான் விதம், விதமாய்ச் சமைத்துக் கொடுப்பேன். ஆரம்ப நாட்களில் அவங்களுக்குச் சாப்பிடத் தெரியாமல்/ அல்லது கவனிப்பு இல்லாமல் யாரானும் எடுத்துச் சாப்பிட்டுடுவாங்க. பள்ளிக்கு அழைக்கப் போகும்போது ஆசிரியர்/ஆசிரியை சொல்லுவாங்க! சரியாச் சாப்பிடறதில்லைனு. பின்னாட்களில் சரியாப் போச்சு என்றாலும் எங்க பெண் மட்டும் தயிர்சாதம்/நிஜம்மாவே பாலும், வெண்ணெயும் போட்டுப் பிசைந்த தயிர்சாதம், அவளுக்குப் பிடிச்ச எலுமிச்சை ஊறுகாயுடன் வைத்தால் கூட அப்படியே திரும்பக் கொண்டு வருவாள். என்னிக்கானும் தான் தயிர் சாதம். அநேகமாய் ரொட்டி, சப்ஜி, இட்லி, கலந்த சாதங்கள் என்றே கொடுப்பேன். கூடவே பிஸ்கட் போன்றவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா... நம்ம பசங்களுக்கு கொடுக்கும் உணவை சமயங்களில் அவர்கள் நண்பர்கள் லவட்டிக்கொள்வதுண்டு... அதுவும் ஒருமுறை ருசி பார்த்து விட்டால் தொடர்கதையாகி விடும். நமக்கு வருத்தம் ஒருபுறம்... சந்தோஷம் ஒருபுறம்... அவர்களும் குழந்தைகள்தானே... (நம்ம கைப்பக்குவத்தை ரசிக்கிறார்களே...)

      நீக்கு
    2. ஆடிப்பெருக்கு சமயங்களில் கொடுக்கும் கலந்த சாதம் குறைந்தது 3 பேருக்குக் காணும்படி கொடுத்து அனுப்புவேன். அதே போல் பொங்கல் அன்னிக்கும் அப்படித் தான். மகளின் தோழிகள் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கே வருவார்கள். எல்லோருக்கும் பொங்கலும் அந்த எரிச்ச குழம்பும் தட்டுக்களில் போட்டுக் கொடுப்பேன். அதெல்லாம் ஒரு காலம்! :)))

      நீக்கு
    3. சாப்பிட என்று மகன்களின் நண்பர்கள் வீட்டுக்கு வந்ததில்லை. இப்போது ஓரிருவர் பெரும்பாலும் சாப்பிடும் சமயங்களில் இங்கு இருப்பார்கள், மகனுடன் இணைந்து சாப்பிடுவார்கள்.

      நீக்கு
  10. நான் முதல்ல அந்தக்கால அம்மாவா இந்தக்கால அம்மாவான்னு டக்குனு ஒரு டவுட்டு...

    ஏன்னா மகனுக்கு லஞ்ச் பாக்ஸ் கட்டுவதில் எனக்கு தலைவலியே வந்ததில்லை!!!! நோ சாய்ஸ் அவனுக்கு. எல்லாமும் சாப்பிடுவான். நானும் இதுதான் வைத்தேன் என்றால் அதுதான்...அவன் சாப்பிடாட்டியும் பட்னினா பட்னிதான்னு...வருத்தப்பட்டதில்லை. என் வீட்டில் கற்ற நல்ல பாடங்களுள் அதுவும் ஒன்று. எனவே அதை அவனுக்கு பின்பற்றினேன்.

    பள்ளியில் கற்ற பாடத்துக்கு வரேன்...இதோ....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ... நீங்கள் எந்தக்காலத்திலும் அம்மாதான் கீதா ரெங்கன்!!! சமையல் விற்பன்னி!

      நீக்கு
    2. ஹா அஹ ஹா ஸ்ரீராம் அப்படி எல்லாம் இல்லை....நீங்கள் சாப்பிட்டுவிட்டுச் சொல்லனுமாக்கும்....

      கீதாக்கா எல்லாரும் இருக்கறப்ப மீ ஜூஜுபிதான் ஸ்ரீராம் ....இருந்தாலும் நன்றியும் சொல்லிக் கொள்கிறேன்..

      என் மகனின் சாப்பாடும் யாராவது எடுத்துக் கொண்டு விடுவார்கள் என்பதை விட கோயம்புத்தூரில் இருந்தப்ப அவன் படித்த பள்ளியில் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த பசங்க நிறைய இருந்தாங்க. அப்ப மகனிடம் யாராவது குழந்தை சாப்பாடு கொண்டு வராமல் இருந்தாலோ அல்லது பழைய சாதமாக இருந்தாலோ அக்குழந்தை இவனிடம் கேட்டால் கொடுத்துவிடுவானாம். இரண்டாம் வகுப்பு. இது எனக்கு நாங்கள் அங்கிருந்த 3 வருடங்களில் ஒரு வருடம் ஆன பிறகே தெரிந்தது. இவன் சொல்லவில்லை. தெரிந்த பிறகு அவர்களுக்கும் சேர்த்துக் கொடுத்துவிட ஆரம்பித்தேன்.

      மகனும் பென்சில், பேனா எல்லாம் காணாமல் போகும். தொலைத்துவிடுகிறான் என்று நினைத்தால் பின் தான் தெரிந்தது கொடுத்துவிடுவான் என்று. அதன் பின் அக்குழந்தைகளுக்கு பென்சில்கள், பேனாக்கள் ரப்பர்கள், அல்லது பென்சில் பாக்ஸ் என்று மகனிடம் கொடுத்து கொடுக்கச் சொல்வேன். பிறந்த நாள் பரிசும் பொதுவாக அப்படித்தான் இருக்கும். இல்லாத குழந்தைகளுக்கு மட்டுமே.

      நிறைய நினைவுகளை மீட்டிய பதிவு ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    3. ஓ... மகனின் அந்தச் செய்கைகள் அன்பால் ஆனவை. நல்ல குணங்கள் கீதா. கொடுக்க மாட்டேன் என்று சண்டை போடும் குழந்தைகளுக்கு இடையே இப்படி இருப்பது ஆஸாஹர்யம்தான், பாராட்டப்பட வேண்டிய குணம்.

      நீக்கு
  11. பையர் பள்ளியில் சேர்ந்த புதுசில் அப்போல்லாம் ப்ரி கேஜி எனப்படும் எல்கேஜிக்கு முந்தைய வகுப்பில் படிக்கையில் தினம் தினம் சாப்பாடு நான் எடுத்துச் செல்வேன். வீட்டிலிருந்து அரைகிமீட்டர் தூரத்தில் பள்ளி. அவர் காலையில் மெனு சொல்லிட்டுப் போவார். அதன்படி எடுத்துப் போகணும். அதோடு அப்போத் தாத்தா, பாட்டி, சித்தப்பா ஆகியோருடன் சேர்ந்து வேறே இருந்தோமா! அவங்கள்ளே யார் எடுத்துட்டு வரணும், திரும்ப மத்தியானம் வீட்டுக்கு அழைக்க யார் வரணும்னு எல்லாம் சொல்லிட்டுப் போவார். ஆள் யாரானும் மாத்திப் போனால் அன்னிக்கு அவங்க கதி அதோகதி தான்! இப்போக் கூடச் சொல்லிச் சிரிப்போம். அவர் குழந்தையிலேயே என்னைத் தவிர்த்து யாரும் தூளியை ஆட்டினால் தூளிக்குள்ளே இருந்தே குரல் கொடுத்துத் தன் ஆட்சேபணைகளைத் தெரிவிப்பார். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கு மதியம் சாப்பாடு கொண்டுபோகும் ப்ரமேயம் மொத்தமாக ஓரிருமுறை வந்திருக்கும். இத்தனைக்கும் நடை தூரத்தில்தான் பையன்கள் படித்த பள்ளி! இந்த இன்னார்தான் கொண்டு வரணும் தூளி ஆட்டணும் விஷயத்தில் இரண்டாவது இருக்கு பாருங்க... அதில் எனக்கும் அனுபவம் உண்டு... இரண்டாவது மகனோட...!

      நீக்கு
  12. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  13. எல்லார் கதையும் ஒரே கதைதான். அதே தயிர் சாதம். இல்லாவிட்டால் அதிசய ரசம்
    சாதம். புளிக்காய்ச்சல் இருக்கும் போது புளியோதரை உண்டு.
    தோழிகள் வித விதமாக எடுத்து வருவார்கள்.
    சிறிய வகுப்பில் மதியம் வீட்டுக்கு வந்துவிடுவோம்.
    அப்புறம் தான் டிஃபன் பாக்ஸ் எல்லாம்.
    அம்மாகிட்ட சண்டை போட்ட நினைவு. நீ ஏன் இட்லி ,தோசை கொடுக்க மாட்டேன் என்கிறாய் என்று.
    பாவம் அவர் என்ன செய்வார். ஒரு கஜனதா ஸ்டவ், ஒரு விறகடுப்பு,
    கரியடுப்பு என்று
    இருக்கும் போது அவசர சமையல் எட்டு மணிக்குள் எல்லாருக்கும் செய்ய வேண்டும் என்றால் முடிகிற காரியமா.

    எங்கள் பிள்ளைகள் பள்ளி செல்லும்போது எல்லா சௌகரியமும் இருந்தது.
    கதையே வேறு.

    ஸ்ரீராம் உங்கள் பதிவு அற்புதம்.அத்தனை நினைவுகளையும்
    எழுதின திறமைக்கு ஒரு சல்யூட்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... நம்மைப்பொறுத்தவரை ஒரு விஷயம் பொது! நம்மைத்தவிர மற்றவர்கள் விதம் விதமாக எடுத்து வந்திருக்கிறார்கள்! விறகடுப்பில் தோசை வார்க்கும் விறகு வாசனையும் கலந்து வரும். அல்லது புகை வாசனை! என் மகன்கள் பள்ளி செல்லும்போதும் வேறு கதைதான் வல்லிம்மா.

      நன்றி.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    "திங்க" கிழமை பதிவு மதிய உணவு பற்றிய பதிவாக வித்தியாசமான முறையில், அதுவும் "லன்ச் பாக்ஸ்" பதிவாக நன்றாக உள்ளது. ஆனாலும், அந்த காலத்தில் நாங்களெல்லாம், இதற்கு"டிபன் பாக்ஸ்"
    என்ற நாமகரணம் சூட்டிதான் அழைத்துள்ளோம். உள்ளே என்னவோ தாங்கள் கூறியபடி பெரும்பாலும் மோர் சாதந்தான்.

    பள்ளியில் அந்த ஒரே நேரத்தில் பாக்ஸ் திறந்ததும், வரும் கலவையான வாசனை எனக்கு பிடிக்காத காரணத்தால், (ஏழு வகுப்புக்கு பின் அறிவு வந்ததோ என்னவோ நாசித் திறன் நன்றாக வளர்ந்து விட்டதே.!) கொஞ்சம் தூரத்தில் வீடு இருந்தாலும், ஓட்டமும் நடையுமாக வந்து அரை மணி பொழுதில் லன்சை முடித்து விட்டு சென்றிருக்கிறேன்.

    என் குழந்தைகளுக்கும், அது போலவே மிக தூரமாக இருந்தாலும் அப்போதே ரெடி செய்த சாப்பாடைத்தான் கொண்டு தந்திருக்கிறேன்.(என் பழைய வாசனை நினைவுகளில் அவர்களின் கல்லூரி காலம் வரை) என் நடை பயணமும் அந்த மூன்று வேளைகள்தான். இன்னமும் நிறைய மலரும் நினைவுகளை சொல்லலாம். தற்போது அலுவலகம் செல்லும் வளர்ந்த குழந்தைகளுக்கு உணவு ரெடி செய்து லன்ச் பாக்ஸ் எடுத்து வைக்க வேண்டிய பணி இடையில் வருகிறது. பிறகு வருகிறேன். (அனேகமாக லன்சுக்கு அப்புறம்தான் என்று நினைக்கிறேன்.) சுவையான பகிர்வு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... நானும் உள்ளே டிபன்பாக்ஸ் என்றுதான் சொல்லி இருக்கிறேன் பாருங்கள். பெயர்தான் டிஃபன் பாக்ஸ். பெரும்பாலும் பழைய சோறுதான் இருக்கும் அதில்!

      பரவாயில்லை, பெரும்பாலும் வீட்டில் வைத்தே லன்ச் நீங்களும் சாப்பிட்டிருக்கிறீர்கள், உங்கள் குழந்தைகளும் அப்படியே என்பது...

      //லன்ச் சாப்பிட்ட பிறகு வருகிறேன்//

      ஹா.. ஹா... ஹா..

      நீக்கு
  15. இன்றைய பதிவு கடந்த காலத்தைக் கண்முன் கொண்டுவருகிறது.

    பதின்ம வயதில் உறவினர் வீட்டில் இருந்ததும் ஹாஸ்டல் வாழ்க்கையும் நினைவுக்கு வருது.

    ரசித்த பதிவு. பின்னூட்டங்களும் ரசனையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லைத்தமிழன்.

      படிக்கும் வயதில் என்னதான் உறவாக இருந்தாலும் அப்பா அம்மாவுடன் இல்லாதது குறையாகத்தான் இருக்கும் இல்லையா?

      நீக்கு
    2. நான் 8 மாதம் ஹாஸ்டல்ல இருந்தபிறகு (9ம் வகுப்பு) எங்க அப்பா அம்மா அவங்க இருந்த ஊர்ல இருந்து என்னப் பார்க்கவந்தாங்க. ஹாஸ்டல்ல நுழையற இடத்துல பெரிய ரூம் இருக்கும். அங்கதான் பார்க்கணும். அவங்களைப் பார்த்து ஓ என்று நான் அழுதேன் (ஏன்னு காரணம் தெரியலை).

      உறவுடன் இருந்தபோது, மதிய உணவுக்கு மோர் சாதம் (தயிர் சாதம்) + எலுமிச்சை ஊறுகாய். நான் என் உறவினர் வேலை பார்த்த காலேஜுக்கு அவர் ரூம் போய் சாப்பிடுவேன். அவர் பார்க்காதபோது ஜன்னல் வழியா சாதத்தைத் தூரப்போடுவேன். ஒரு நாளும் டிபன் கொண்டுபோனதில்லை.

      பதின்ம வயதில் வித விதமா சாப்பிடணும், நல்ல உடை உடுத்தணும், கைல காசு வச்சிருக்கணும்னு எண்ணம் இருக்கும். அது எதுவுமே எனக்கு நிறைவேறினதில்லை (என் பெற்றோருக்கோ உறவினருக்கோ காசுக்கு எப்போதும் குறைவில்லை என்றபோதும்).

      என்ன என்னவோ நினைவுகள். எதனையும் எழுதத்தான் முடியாது.

      ஆனா பாருங்க.... என் சின்ன வயதில் கிடைத்ததைவிட கொஞ்சம் பெட்டரா என் பசங்களுக்குப் பண்ணியிருக்கேன். ஆனா அவங்க 100% எதிர்பார்ப்பு என்று இருந்தால், நான் செய்தது 30% ஆக இருந்திருக்கும் ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. நான் படித்த காலத்தில் டிபனுக்கு ஏங்கி (அதாவது ஸ்கூலில் மதியம் கொண்டுபோகின்ற), பசங்களுக்கு எப்போதும் டிபன் அனுப்புவது என்று செய்த காலத்தில், அவங்களுக்கு ஸ்கூல் கேண்டீனில் சாப்பிடணும், பிட்சா சாப்பிடணும்னு ஆசை.

      நீக்கு
    4. அந்த விஷயத்தில் எங்க குழந்தைகள் கான்டீன் சாப்பாடை விரும்பியதே இல்லை. இப்போவும் நான் கட்டிக் கொடுத்தால் அதைத் தான் சாப்பிடுவார்கள். ஆனால் எனக்கு சிரமம் என்பதால் இப்போதெல்லாம் வேண்டாம்னு சொல்லிடறாங்க!

      நீக்கு
  16. நான் படித்த காலத்தில், உடன் படித்த மாணவன் தினமும் கொண்டு வந்தது சாம்பார் சாதம் வித் வேக வைத்த முட்டை (அ) உரித்த வாழைப்பழம்!இன்று வரை புரியாத விஷயங்களில் ஒன்று..
    Srinivasan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாம்பார் சாதத்துக்கு வேகவைத்த முட்டை ஓகே, அதென்ன உரித்த வாழைப்பழம்? ஆச்சரியம்தான். நன்றி நண்பர் ஸ்ரீநிவாசன்.

      நீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    இனிய நினைவுகள்.

    பதிலளிநீக்கு
  19. எனக்கும் பெரும்பாலான நாட்களில் மதிய உணவு மோர் சாதம் தான் - அலுமினிய தூக்கு ஒன்றில். தொட்டுக்கொண்டு சாப்பிட ஊறுகாய்.

    அந்த சுவை வேறு எதிலும் இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், என் நண்பர்கள் சிலரும் அலுமினியத் தூக்கு ஒன்று கொடு வருவார்கள். கைப்பிடியுடன் இருக்கும்!

      நீக்கு
    2. அதே அந்த தூக்குதான் ஸ்ரீராம் பள்ளிக்காலம் முழுவதும்....

      கீதா

      நீக்கு
  20. அலுமினிய பெட்டி ஒன்றில் தான் பாடப் புத்தகங்கள் எடுத்துச் சென்றோம்... பிறகு மஞ்சள் பை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா, நாங்களும் மஞ்சள் பை அல்லது டிவிஎஸ் பையில் புத்தகங்கள் எடுத்துப் போவோம். அந்த டிவிஎஸ் பை அநேகமாய் டிவிஎஸ்ஸில் வேலை பார்க்கும் எல்லோர் வீட்டிலும் இருக்கும். எங்க வீட்டில் யாரும் டிவிஎஸ்ஸில் வேலை பார்க்காட்டியும் தாத்தா வீட்டில் மாமாக்கள் இருந்ததால் வருஷா வருஷம் புதுப்பை அங்கிருந்து வரும்! :)))) எங்காவது ஊர்களுக்குப் போனால் கூட அதில் தான் துணிமணிகளை அடைத்துக் கொண்டு எடுத்துச் செல்வோம். சூட்கேஸா? அப்படின்னா? தெரியவே தெரியாது. கல்யாணம் ஆகிப் போறச்சே கூட பாத்திரங்களோடு கள்ளிப்பெட்டிகள், என்னோட துணிமணிகளுக்கு நாலு நாகப்பட்டினம் ஸ்டீல் ட்ரங்குகள், வெ.பா. வைக்க ஒரு ஸ்டீல் ட்ரங்க்! ஐந்து ட்ரங்க் பெட்டிகள். அதிலே சிலதை இப்போத் தான் 2012 ஆம் ஆண்டில் எடைக்குப் போட்டோம். நாகப்பட்டினம் ஸ்டீல் ட்ரங்க் பெரிது ஒன்று பச்சைப் பெயின்ட் அடித்து பெயின்ட் வாசனையுடன் எங்களோடு எல்லா ஊர்களுக்கும் பயணித்திருக்கிறது.

      நீக்கு
    2. கல்யாணம் ஆகி முதல் முதல் குடித்தனம் வைக்கக் கிராமத்தில் இருந்து சென்னை போக வேண்டும். நம்மவர் அப்போத் தான் புனேயில் இருந்து வேலையில் சேர்ந்து எட்டு வருடம் கழித்துச் சென்னை மாற்றலாகி வந்தார். அப்போ ஒரு கறுப்பு நிற சூட்கேஸ் கொண்டு வந்தார். அதை ஆச்சரியமாகப் பார்த்திருக்கேன். அதைத் திறக்கவும், பூட்டவும் சொல்லித் தந்தார். ஆனாலும் அதில் துணிகளை வைத்துக் கொண்டு போவது என்றால் கொஞ்சம் பயமாக இருக்கும். திறக்க வரலைனா? அப்புறமா என்னோட ஒண்ணு விட்ட நாத்தனார் கொடுத்த மொய்ப்பணத்தில் எனக்கே எனக்கு என்று ஒரு சூட்கேஸ் வெள்ளை நிறத்தில் வாங்கிக் கொடுத்தார். ஏதோ எவரெஸ்ட் உச்சிக்குப் போயிட்டாப்போல் ஓர் எண்ணம்!

      நீக்கு
    3. நான் ஆறாவது வரை அந்தப்பை! அப்புறம் 25 காசுக்கு ஒரு எலாஸ்டிக் பேண்ட் விற்பார்கள். அதை வைத்து டைட் செய்து காலை, மாலைக்கேற்ப குறைந்த அளவு புத்தகங்கள்.

      நீக்கு
    4. டிரங்குப் பேட்டி எல்லாம் பார்த்து பல வருஷங்கள் ஆகிறது கீதா அக்கா.

      நீக்கு
    5. ஆமாம், சூட்கேஸ் நினைவுகளும் தனி! எனக்கும் மெலிதாக தனியாக ஒரு சூட்கேஸ் வந்தபோது மகிழ்ந்து போனேன்.

      நீக்கு
    6. வணக்கம் சகோதரரே

      ஆமாம் டிரங்கு பெட்டியெல்லாம் பழைய கதைகள். அப்போதெல்லாம் திருமண சீராக கண்டிப்பாக டிரங்கு பெட்டி உண்டு. மாமியார் வீட்டுக்கு போன புதிதில் அதில்தான் என் துணிமணிகளை அடுக்கி வைத்துக் கொள்வேன்.பெரிய பீரோ ஒன்று பொதுவாக இருந்தும், அதில் ஒரு அடுக்கில் "நீ உபயோகித்து கொள்ளலாம்" என அனுமதி கிடைத்தும், கொஞ்ச நாட்கள் அம்மா கொடுத்த டிரங்கு என்னை விடவில்லை. (புகுந்த வீட்டு ஒட்டுதல்களுக்கு அந்த துணிகளும் மறுத்தது போலும்.) ஊருக்கெல்லாம் போகும் போது அம்மா வீட்டில் கொடுத்த ஒரு சூட்கேஸில் என் துணிகளை வைத்து கொண்டு போகும் போது மனது அவ்வளவு சந்தோஷம் கொள்ளும். காலப் போக்கில் அந்த டிரங்கு பெட்டி கொலு பெட்டியாயிற்று. இப்போதும் அதன் கடமையை செவ்வனே செய்கிறது.

      அந்த கால சினிமாக்களில் கதா நாயகியோ, வேறு எவராவதோ, பயணிக்கும் போது கையில் ஒரு மூட்டையுடன் பயணிப்பதாக காட்டுவார்கள். இப்போதெல்லாம் நம்முடன் நம் துணிகள் அடங்கிய பெட்டிகளும்,காலில் சக்கரத்தை பொருத்தியபடி நம்முடனே உருண்டோடி வருகின்றன.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  21. பழைய பள்ளி நினைவுகள் உணவு கொண்டு போனதை பற்றி பேசியது அருமை.
    என் அம்மா எப்போதும் வியக்க வைப்பார், எத்தனை குழந்தைகள் அத்தனை பேருக்கும் காலை உணவு, மதியத்திற்கு கையில் கொடுத்து விடுவதற்கு செய்து கொடுத்தது எல்லாம் நினைத்து.
    அத்தனைபேருக்கும் தலை பின்னி விட்டு உணவு தயார் செய்து என்று அதிகாலை எழுந்து விடுவார்.
    இட்லி, தயிர்சாதம், கூட்டாம்சாதம், புளிசாதம், எலுமிச்சை சாதம் , கோதுமை ரவை உப்புமா. (கோவையில் இருக்கும் போது கோதுமை ரவை உப்புமா மிகவும் பிரபலம் 70 ம் வருஷங்களில்) அரிசி உப்புமா எல்லாம் உண்டு.

    மாலை வீட்டுக்கு வந்தால் குழம்பு, காய் எல்லாம் வைத்து சாப்பிட வைப்பார்.
    இரவு சாப்பிடவில்லை என்றாலும் கவலை இல்லை மாலை அப்படி வயிறு முட்ட சாப்பிட வைத்து விடுவார்.

    மாலை வந்தவுடன் காப்பி , தின்பண்டம் எல்லாம் கிடையாது. மாலை கை, கால், முகம் கழுவி சாப்பிட்டவிட்டவுடன் விளையாடி விட்டு வந்த பின் பால், தின்பண்டங்கள்.

    மதியம் டிபன்பாக்ஸில் அமுக்கி அமுக்கி எவ்வளவு வைக்கமுடியோ வைத்து கொடுப்பார், 1, 2, 3, வகுப்புகளில் படிக்கும் போது மட்டும் அக்கா, அண்ணன், நான் மூன்றூ பேரும் சேர்ந்து சாப்பிட்டு இருக்கிறோம்.

    மற்ற வகுப்புகளில் படிக்கும் போது தோழிகளுடன் நாங்கள் எங்கள் உணவை சாப்பிடும் முன் அவர் அவர் டிபன்பாக்ஸ் மூடிகளில் கொஞ்சம் எடுத்து வைத்து விட்டு தான் சாப்பிடுவோம்.

    யாராவது டிபன் பாக்ஸ் மறந்து விட்டால் எல்லோரும் பகிர்ந்து கொடுக்கும் உணவே வயிறு நிறைந்து விடும்.

    அம்மா சோமவார விரதம் (கார்த்திகை) இருக்க சொல்லுவார்கள் யாரிடமும் எதுவும் வாங்கி சாப்பிட கூடாது, பள்ளி வாசலில் விற்கும், நெல்லிக்காய், இலந்தபழம், ஜஸ் போன்றவை வாங்கி தின்ன கூடாது, அப்பாவிடம் எனக்கு தெரியாமல் காசு வாங்கி போக கூடாது என்று சட்டம் போட்டு அனுப்பவார்.

    வாழை பழம் ஒன்று கொடுத்து அனுப்புவார் , அதை உணவு இடைவேளையில் சாப்பிடுவேன், அப்போது
    தோழிகள் வேண்டும் என்றே வெறுப்பேத்துவார்கள் கோமதி உனுக்கு பிடித்த உணவு கொண்டு வந்து இருக்கிறோம் என்று.
    அப்போது அவர்களுடன் செல்ல சண்டை போட்டது மனதில் வந்து போகிறது.

    பிள்ளைகளுக்கு வித விதமாய் கொடுத்து அனுப்புவேன். அவர்களுக்கு டிபன் பாக்ஸ் பார்த்தால் கல்லூரியில் மகனின் நண்பர்கள் உன் அம்மா சமையல் கலை படித்தவர்களா என்று.

    அப்புறம் வருகிறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களும் பள்ளி வாசலில் விற்பவைகளை வாங்கிச் சாப்பிட்டதில்லை. காசெல்லாம் அப்பா கொடுக்க மாட்டார். அம்மாவின் சித்தப்பா அந்தக் கால மஞ்சள் அரையணா எனக்கும் என் அண்ணாவுக்கும் கொடுப்பார்! ஆனால் அதைச் சேமிப்போம்.

      நீக்கு
    2. கோமதி அக்கா... நீங்கள் சொல்லி இருக்கும் உப்புமா உட்பட்ட விஷயங்கள் எல்லாம் எங்கள் வீட்டில் அப்பாவுக்கு மட்டும்தான்! உங்கள் நினைவுகள் அபாரம். கட்டுக்கோப்பான பழக்கங்கள். கீதா அக்கா... எங்கள் வள்ளி வளாகத்தில் விற்கும் மிட்டாய், ஐஸ்க்ரீம் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன்!

      நீக்கு
    3. எங்க வீட்டுலயும் பைசா தரமாட்டாங்க. கரெக்டா பஸ்ஸுக்கு பைசா போக வர 40 பைசா. அப்ப டிக்கெட் 20 பைசா. ஆனா கன்செஷன் எடுத்துட்டா அந்த பைசாவும் தர மாட்டாங்க. அப்புறம் 25 ஆனது. 50 என்று ஏறியது. ஆனா சில சமயம் பைசா இல்லைன்னு சொல்லிட்டா நடைதான் பள்ளிக்கு. 3 மைல்...நிறைய நடந்திருக்கோம்....

      நான் கல்லூரி படிக்கும் போது கரெக்டா 2 ரூபாய்தான் தருவாங்க. 2 ரூபாய் ஊரிலிருந்து நாகர்கோவில் செல்ல. ரிட்டர்ன். அப்ப டிக்கெட் விலை ரூ1. அதுவும் கன்செஷன் எடுத்திருந்தா தரவே மாட்டாங்க. அப்புறம் நாகர்கோவிலில்ருந்து கல்லூரி செல்ல கல்லூரி பேருந்து அதாவது ஸ்பெஷல் எல்லாம் இல்லை போக்குவரத்துக் கழக பேருந்துதான். அதில் கன்செஷன் கல்லூரியிலேயே எடுத்துவிடுவோம். கல்லூரிக்குள் வரை செல்லும் பேருந்துகள் சரியா 3, 4 உண்டு. திரும்ப வரவும் லாஸ்ட் பஸ் 5.15க்குக் கிளம்பும் அதை விட்டா கல்லூரியிலிருந்து மெயின் ரோட்டுக்கு நடந்து வரணும்.

      பைசா கண்ணுலயே காட்ட மாட்டாங்க. அதனால வாங்கிச் சாப்பிடவும் முடியாது. தோழிகளிடம் வாங்கிச் சாப்பிட மாட்டேன். அப்புறம் நாம் அவர்களுக்கு வாங்கிக் கொடுக்க முடியாதே!!!!

      கீதா

      நீக்கு
    4. என் அப்பா மாமா மதுரையில் சதர்ன் ரோட்வேஸில் இருந்ததால் அப்போல்லாம் டிவிஎஸ் பேருந்துகள் தான் மதுரையில் ஓடும். மாமாவே பாஸ் வாங்கிக் கொடுத்துடுவார். ஆகவே பைசா என்பதே யாரானும் விசேஷங்களில் வைச்சுக் கொடுத்தால் தான். பத்துப் பைசா கிடைத்தால் ஒரே சந்தோஷமாக இருக்கும். ரகசியமாக அதை எடுத்து எடுத்துப் பார்த்துப்பேன். ஆவணி அவிட்டம் சமயங்களில் குடி இருக்கும் மாமாக்கள் பூணூல் போட்டுக் கொண்டு வரச்சே ஆரத்தி எடுத்தால் பத்துப்பைசா போடுவாங்க. அதிசயமா யாரானும் நாலணா, எட்டணா போடுவாங்க! பூரிப்பாக இருக்கும்.

      நீக்கு
    5. அக்கா எனக்கு அப்படி விஷுக்கனிக்கு கைநீட்டம் கிடைக்கும் பாருங்க அதைத்தான் சேர்த்து வைச்சுப்பேன். அப்புறம் ஆரத்தி காசு...இப்படி.. உடனே பாட்டி கேட்டுருவாங்க எத்தனை கிடைச்சுதுனு. கணக்குப் பார்த்து அப்ப சரி இத்தனை நாள் பஸ்ஸுக்குப் பைசா கிடையாதுன்னு ஹா ஹா ஹா ஹா...

      ஆனால் கஷ்டப்பட்ட அந்த வயதில் கற்ற அந்தச் சிக்கனம் அனாவசிய செலவுகள் கூடாது என்பது இப்போது வரை கை கொடுக்கிறது. எப்படியோ மகனுக்கும் கடத்திவிட்டேன்...சிம்பிள் லைஃப் சந்தோஷம் தரும் என்று...

      கீதா

      நீக்கு
    6. கைநீட்டம்! நாங்கள் ஊர்க்காசு என்று சொல்வோம்!

      நீக்கு
  22. இந்த டிபன் பாக்ஸ் அனுபவம் எனக்கு வாய்க்கவே இல்ல. ஸ்கூலுக்கு பக்கத்துலயே வீடு பார்த்து குடிபோவது அப்பாவுக்கு வழக்கம்.
    என் பிள்ளைகள் எப்பயுமே பாக்ஸ் சாப்பாடுதான். ஸ்கூல்ல சேர்த்த ஒருசில வாரங்களில்தான் மதிய சாப்பாடு கொண்டு போய் இருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிஃபன் பாக்ஸ் கொண்டு செல்பவர்களுக்கு மதியம் சாப்பிட வீடு செல்லும் மாணவர்களை பார்க்கப் பொறாமையாக இருக்கும். அவர்களும் இவர்களை பார்த்து அதே மாதிரி சொல்வார்கள். இக்கரைக்கு....

      நீக்கு

  23. பழைய நிகழ்வுகளை நிறையவே கிளறிவிட்டீங்க....... இப்படிப்பட்ட பதிவுகளை உங்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன் குட் போஸ்ட் ஸ்ரீராம்... நான் இது பற்றி ஒரு பதிவு போடனும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மதுரை... அதற்கு ரெசிப்பி எதுவும் வராமல் என்ன போடுவது என்ற குழப்பம் வரணும்!!!!!

      நீக்கு
    2. ஸ்ரீராம்.... கேளுங்கள் தரப்படும்னு ரெசிப்பி வச்சிருக்கேன். சொன்னப்பறம்தான் எழுதணும். படங்கள் வச்சிருக்கேன்.

      நீக்கு
    3. அட, உங்க ஸ்லாட் எப்போதும் பிசி என்பதால் தான் நானும் எதுவும் அனுப்பறதில்லை! :)))) அனுப்பினால் எப்போ வருமோனு!

      நீக்கு
    4. நெல்லை... கீதாக்கா.... கேட்கவே வேண்டாம்... எப்போது வேண்டுமானாலும் அனுப்பலாம். கே வா போ கதையும் அப்படிதான்.

      நீக்கு
  24. வல்லி அக்கா இளமை கால (பள்ளி பருவம்) தொடர் பதிவுக்கு அழைத்த போதும் இவைகளை குறிப்பிட்டு இருக்கிறேன்.
    கோவையில் இருந்த காலங்கள் மகிழ்ச்சியான பிள்ளை பருவம் என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.

    நானும் கீதா போல் ரசம் சாதம் பள்ளிக்கு எடுத்து சென்று இருக்கிறேன்.

    ரசம் சாதம் நானும் பள்ளிக் கொண்டு போய் இருக்கிறேன். கோவையில் இருக்கும் போது எனக்கு அந்த குளிரில் தொண்டைவலி, காய்ச்சல் அடிக்கடி ஏற்படும். அப்போது அம்மா சாதத்தை குழைய வைத்து ரசம் நிறைய விட்டு பிசைந்து கத்திரிக்காய் கறி வைத்து கொடுத்து விடுவார். (அப்போது எல்லாம் வட்ட டிபன்பகாஸ் கிடையாது தூக்குசட்டி என்றும், கோவையில் தூக்குவாளி என்றும் சொல்லும் டிபன் பாக்ஸ் வித விதமாய் வீட்டில் இருக்கும் எவர்சில்வர் தான். வருடா வருடம் மாறும்.) தூக்குசட்டியில் கையில் கொண்டு போவதால் கொட்டது ரசம்.

    புளியில்லா குழம்பு என்று சொல்லும் பொரிச்ச குழம்பும் எண்ணெய் கத்திரிக்காய் பொரியலும் கொண்டு சென்று இருக்கிறேன்.
    10, 11 வது படிக்கும் போதுதான் வட்ட டிபன்பாக்ஸ், சப்பாத்தி, பூரி, இட்லி என்று கொண்டு போவது.
    12 திருமணம் ஆனபின் படித்தது. பள்ளி பக்கத்தில் வீடு. கணவருக்கு கல்லூரிக்கு கொடுத்து விட்ட சாப்பாடே எனக்கு எடுத்து வைத்து இருப்பேன் அதை சாப்பிடுவேன்.
    இரவு சுட சுட சமையல். அப்பளம், வத்தல் என்று சாப்பாடு.

    பள்ளியில் ஆசிரியர்கள் கோமதி உன் கணவருக்கு இன்று கொடுத்து விட்டாய் வித விதமாய் சாப்பாடு சொல்கிறாய் எங்களுக்கு கொண்டு வா என்றார்கள். அவர்களுக்கு ஒரு நாள் மதியம் வெண்பொங்கல், சாம்பார், சட்னி, சின்ன் சின்னதாய் உருட்டி வேக வைத்த கொழுக்கட்டை தேங்காய் மிளகாய்வற்றல் உப்பு வைத்து அரைத்த சட்னி போட்டு தாளித்த கொழுகட்டை, அவல் உப்புமா காய்கறி போட்டு. (திருவெண்காட்டில் கை குத்தல் அவல் கிடைக்கும்.) எல்லா ஆசிரியர்களும் மிகவும் பாராட்டி சாப்பிட்டது மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

    பழைய நினைவுகளை பகிர வைத்த ஸ்ரீராமுக்கு மிகவும் நன்றி. இன்று முழுவதும்
    என் நினைவுகள் எல்லாம் என் தோழிகள் என் இளமை காலம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்ம் இந்த வட்ட வடிவ டிஃபன் பெட்டியில் சாப்பாடு எடுத்துச் செல்ல வாய்த்ததே இல்லை. கல்யாணம் ஆன பின்னர் அலுவலகம் சென்றப்போவும் சின்னதா ஒரு சம்புடம்! இஃகி, இஃகி, அதில் தான் எடுத்துப் போவேன். 4 இட்லி, 3 தோசை வைக்கலாம். என்னிக்கானும் ஏதாவது கலந்த சாதம்! காலை ஒன்பது மணிக்குள் முழு சமையலும் முடிச்சுட்டு மாலைக்கு ரங்க்ஸ் சீக்கிரம் திரும்புவதால் அவருக்கு வேண்டியதைச் செய்து வைத்துவிட்டுப் பின்னர் ஒன்பதரைக்கு அம்பத்தூர் வரும் திருப்பதி வண்டியைப் பிடிக்கப் போகணும். :)))

      நீக்கு
    2. கோமதி அக்கா.. லேஸாக பொறாமைப்பட வைக்கிறீர்கள்.

      கல்லூரி படிக்கும்போதுதான் என்னுடன் திருமணமானவர்களுக்கு (ஆண்/பெண்) படித்தார்கள்.

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஹா அதே வட்ட வடிவ பாக்ஸ் எல்லாம் கண்ணில் பட்டதெ இல்லை. தூக்குச் சட்டிதான்....கல்லூரிக்குச்க் சென்ற போதுதான் டிபன் பாக்ஸ். அதிலும் இப்படி மோர் சாதம் தான். அதுவும் காலை 7.30க்கே கிளம்பபும் வீட்டிலிருந்து பஸ் இல்லை என்றால் நடைதான். நாகர்கோவில் வரை சென்று அங்கிருந்து வேறு பஸ் கல்லூரிக்கு. அதுவும் தூரம். பெரும்பாலும் நாகர்கோவில் வரை நடையாகத்தான் இருக்கும். அப்பல்லாம் எனவே பல சமயம் டிபன் பாக்ஸ் தவிர்ப்பேன். வீட்டில் திட்டு கிடைக்கும் தான். ஆனால் கல்லூரியில் கேலி செய்வார்கள். அதுவும் கல்லூரிக்கு பேக் எல்லாம் அபூர்வம். கையில் வெரும் நோட்ஸ் மட்டும் தானே! டிபன்பாக்ஸ் வழியும் மோர் சாதம் என்பதால். சில சமயம் மாமா வீட்டிலிருந்து லஞ்ச் மாமா பெண் எனக்கும் கொண்டு வந்துவிடுவாள். எல்லோரும் சேர்ந்துதான் பாட்டியின் வீட்டில் இருந்தோம் எனது 10ஆம் வகுப்பு வரை. அக்ரஹாரத் தெருவில் மேற்கில். 11ஆம் வகுப்பு சமயத்தில் பெரிய மாமா பாட்டி வீட்டிலும் நாங்கள் மற்றவர்கள் சின்ன மாமா தெருவின் கடைசியில் கிழக்கில் கட்டிய வீட்டிலும் இருந்தோம். ஒரே தெருதான். அங்கும் இங்கும் எக்சேஞ்சும் நடக்கும். சின்ன மாமா வீட்டில் அம்மா வழிப்பாட்டியுடன் என்பதால் மோர் சாதம் தான். அப்புறம் தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது....டிபன் எல்லாம் எட்டிப் பார்க்கத் தொடங்கியது. அப்போதிலிருந்து நான் பாட்டிக்குத் தெரியாமல் சில விஷமத்தனங்கள் வீட்டில் செய்ததுண்டு. புதிது புதிதாய் ஏதேனும் செய்யறேன்னு என் கஸின்சை திரட்டிக் கொண்டு (லஞ்சம் ஹிஹிஹிஹி) செய்து மாட்டிக் கொண்டதும் உண்டு. சில சமயம் என் பாட்டி எங்களுக்குத் தெரியாமல் சாப்பிட்டுப் பார்த்து விட்டு பக்கத்து வீட்டில் இருக்கும் மாமியிடம் திண்ணையில் உட்கார்ந்து "சீஷ்மி இந்தா நோக்கும் ஒரு சின்னத் துண்டு கொண்டு வந்துருக்கேன் என் பேத்தி திருட்டுத்தனமா பண்ணிருக்கா பாரு. நன்னா பண்ணிருக்கா...அவகிட்ட நான் சொல்லலை. அப்புறம் தலைக்கேறிடும்"
      என்று சொல்லியிருப்பதை அப்புறம் பாட்டி இறந்த பிறகு அந்த மாமி சொல்லித் தெரிந்தது...

      கீதா

      நீக்கு
    4. 12 திருமணம் ஆனபின் படித்தது. பள்ளி பக்கத்தில் வீடு. கணவருக்கு கல்லூரிக்கு கொடுத்து விட்ட சாப்பாடே எனக்கு எடுத்து வைத்து இருப்பேன் அதை சாப்பிடுவேன்.
      இரவு சுட சுட சமையல். அப்பளம், வத்தல் என்று சாப்பாடு.//

      ஆஹா கோமதிக்காஆஆஆஆஆ அட! 12 வகுப்பு திருமணத்துக்குப் பிறகா அத்தனை சீக்கிரம் கல்யாணம் நடந்துவிட்டதா?!!!! அப்பவே சுவையான சமையலுமா சூப்பர்!!!

      கீதா

      நீக்கு
    5. ஸ்ரீராம், விரத காலங்களில் மட்டும் தான் பள்ளி கடை வளாகத்தில் சாப்பிடுவது தடை. மற்ற நேரங்களில் வாங்கி சாப்பிடுவேன்.
      தோழிகளூடன். அப்பா காசு தருவார்கள்.
      காய்ச்சல் வந்தால் திட்டிக் கொண்டே டாக்டரிடம் அழைத்து செல்வார்கள்.

      நீக்கு
    6. அப்பாவுக்கு மாற்றல் ஆகும் உத்தியோகம் பாதி படிப்பில் மாற்றல் 12 வது படிக்கும் போது மதுரை மாற்றல் பள்ளிக்கூடத்தில் இடம் கிடைக்கவில்லை, அடுத்த ஆண்டு படித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். அத்ற்குள் கல்யாணம் பேசினார்கள் சார் படிக்க வேண்டும் திருமணத்திற்கு பின் என்றார்கள் படித்தேன். கல்யாணமான புதிசு வித விதமாய் செய்து நல்ல பேர் வாங்க ஆசை. டையிரியில் எழுதி வைத்த குறிப்புகள், அம்மா தபால் மூலம் அனுப்பி வைக்கும் சமையல் குறிப்பு, அத்தை ஒருமாதம் கூட இருந்து சொல்லிக் கொடுத்தது என்று சமைப்பேன், அவர்களுக்கு பிடித்து இருந்தது. மற்றவர்களும் பாராட்டினார்கள். அது போதும் என்று வாழ்ந்த சந்தோஷமான காலங்கள்.

      நீக்கு
    7. ஆமாம், எங்க வீடுகளிலும் எஸ் எஸ் எல் சி படிக்கையிலேயே திருமணம் செய்துடுவாங்க. ஆனால் எங்க தாத்தா (அம்மாவழி) எனக்குச் செய்யக்கூடாதுனு முட்டுக்கட்டை போட்டுத் தடுத்தார். அப்படியும் விடாமல் அப்பா முயற்சி எடுக்கத் தான் செய்தார்.

      நீக்கு
    8. கோமதி அக்கா... அதானே பார்த்தேன்... பள்ளி வாசலில் வாங்கித் திங்காவிட்டால் அப்புறம் என்ன ஸ்கூல் லைஃப்?!!

      நீக்கு
    9. //ஆமாம், எங்க வீடுகளிலும் எஸ் எஸ் எல் சி படிக்கையிலேயே திருமணம் செய்துடுவாங்க. ஆனால் எங்க தாத்தா (அம்மாவழி) எனக்குச் செய்யக்கூடாதுனு முட்டுக்கட்டை போட்டுத் தடுத்தார். //

      எங்கள் காலத்தில் குழந்தைத்திருமணம் கிடையாது கீதாக்கா...!!

      நீக்கு
    10. இஃகி, இஃகி, இப்போவும் சில/பல குடும்பங்களில் உண்டு. இதைக் குறித்து ஏற்கெனவே என்னோட ஒரு பதிவில் பலரின் கருத்துகளாகப் பார்த்திருக்கோம். :)

      நீக்கு
  25. அப்போதெல்லாம் நாங்கள் மோர் சாதம்தான் எடுத்துப் போவோம். கவனிக்கவும், தயிர் சாதம் இல்லை, மோர் சாதம்! பழைய சாதத்தை மொத்தமாகக் கலந்து பாதியை சாப்பிட்டு விட்டு, மீதியை டிபன்பாக்சில் எடுத்துச் செல்வோம். //

    ஹையோ ஸ்ரீராம் அதே அதே அதே!!!! அதுவும் மோர் சாதத்துடன் சில சமயம் கூட்டும் கலந்து வைச்சுருவாங்க....அலுமினியத் தூக்குதான். இதனால் நிறைய பாடங்கள் நான் கற்றதுண்டு ஸ்ரீராம்....

    பள்ளில என் தோழிகளில் ஒரே வெஜிட்டேரியன் நான் மட்டுமே. அது பெரிய கேங்க். எல்லோரும் மதியம் மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிடுவோம். அவங்க நான் வெஜ்ஜும் கொண்டு வருவாங்க. அதுல ஒரு பெண் என் சாப்பாட்டைப் பார்த்து மூக்கை பொத்துக் கொண்டு பழைய கஞ்சி எல்லாம் கொண்டு வந்து என்று சைவ சாப்பாட்டைக் குறை சொல்லுவாள். இத்தனைக்கும் என் சாப்பாடு வாடை வராது. ஆனால் அவர்கள் யாரும் மோர் தயிர் சாப்பிட மாட்டார்கள்.

    அவர்கள் கொண்டு வரும் மீன் வறுவல், கருவாட்டு வறுவல், குழம்பு, இது எதற்குமே நான் மூக்கைப் பொத்திக் கொண்டது கிடையாது. நான் அவர்களோடு சேர்ந்து சாப்பிடத் தயங்கியதில்லை ஆனால் அவர்கள் அனைவரும் முகம் சுளித்தல் கமென்ட் அடித்தல் என்று செய்ததால் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் வேண்டாம் என்று நான் தனியாகவே சாப்பிடத் தொடங்கினேன். அது போன்று எல்லா மதத்தவரும் உண்டு அவர்கள் மதம் பற்றியும் சில சமயம் பேசுவதுண்டு..இந்த சாப்பாட்டிலிருந்து தொடங்கும் அது....எனக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால் மற்றபடி நல்ல தோழிகள். என்னிடம் உதவியும் பெற்றுக் கொள்வார்கள் அவர்களும் எல்லாம் செய்வார்கள். எனக்கு நட்பு முக்கியம் அதானால் நான் சாப்பிடும் சமயம் தனியாக விலகி இருந்துவிடுவதுண்டு. ஆனால் அப்படித் தனியாகச் சாப்பிடுவது கஷ்டமாக இருந்ததால் 9 ஆம் வகுப்பு வந்ததும் சாப்பாடு கொண்டு போவதையே தவிர்த்தேன். அதன் பின் வகுப்பில் மற்றொரு தோழி ஃப்ளாரன்ஸ் மேரி. எனக்காகத் தனியாகப் பாத்திரம் வைத்து சமைத்துக் கொண்டு வருவாள். டிஃபன் மட்டுமே. தினமும் கொண்டு வந்து எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட வைத்தார். இப்போது அவள் எங்கிருக்கிறாளோ. என் நினைவில் என்றும் இருப்பவள்.

    எனவே என் மகனுக்கு பள்ளி சென்ற போது நான் சொன்னது இதுதான் பள்ளியில் யாரேனும் அசைவம் கொண்டு வந்தாலும் முகம் சுளிக்கக் கூடாது. கமென்ட் அடிக்கக் கூடாது. பேசக் கூடாத டாப்பிக்ஸ் சாப்பாடு குறைசொல்லுதல், மதம் ஜாதி, அரசியல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் கூட்டு கொண்டு போவேன். ஆனால் கத்திரிக்காய்க் கூட்டும், நெய்விட்டுப் பிசைந்த ரசம் சாதமும். அந்தக் காம்பினேஷன் எனக்கு ரொம்பப் பிடிக்கும். :)))) எங்க பள்ளியிலும் காரில் டிரைவரோடு மாணவியின் அம்மா அல்லது சில/பல சமயங்களில் வேலைக்கு உதவியாக இருக்கும் பெண்மணி பெரிய காரியரை எடுத்து வந்து சாப்பாடு பரிமாறுவார். ஆச்சரியமா இருக்கும் அதை எல்லாம் பார்க்க!

      நீக்கு
    2. ஆமாம் கீதாக்கா காரில் எல்லாம் வரும் சாப்பாடு. வீட்டு உதவியாளர்கள் என்றும் வரும்.....

      கீதா

      நீக்கு
    3. கீதா.. இந்த மாதிரி வட்டமாக நிறைய நண்பர்கள் அமர்ந்து சாப்பிடும் வாய்ப்பு எனக்கு வாய்த்ததில்லை. நீங்கள் சொல்லும் வெஜ்/நான்வெஜ் ஐட்டங்கள் சேர்ந்து சாப்பிடுவது பற்றி என் பாஸ் சொல்லி இருக்கிறார். என் பாஸ் மூக்கைப் பொத்திக் கொள்வாராம். அவர் சினேகிதி அதற்கு 'எங்களை இன்சல்ட் செய்யறே என்று சண்டை பிடிப்பாராம்.

      நீக்கு
    4. காரில் வரும் டிபன் கேரியர் எங்கள் பள்ளியிலும் இருந்தது. நான் கூட்டு, குழம்பு எல்லாம் எடுத்துப்போனதே இல்லை!

      நீக்கு
    5. ஸ்ரீராம் குழம்பு கூட்டு என்பதெல்லாம் மோஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஒர் சாதத்தில் (அதாவது சாதமே தண்ணியாக இருக்கும் என்பதற்குத்தான் நீளம்..ஹா ஹா ஹா பழைய சாதம் வேறு ) அதில் நீர்க்கச் செய்திருக்கும் பெரும்பாலும் வெ பூஷணி அவியல் கூட்டுனா பார்த்துக்கோங்க....இன்னும் தண்ணியாகிடும்..பாக்ஸிலிருந்து வழியும்!!!! .(அதுதான் குழம்பு அதுதான் கூட்டு வீட்டில் ஒன்றுதான் செய்வார்கள். மாமா வரும் போது மட்டும் தான் குழம்பு, பொரியல் அல்லது கூட்டு, ரசம் எல்லாம் இருக்கும்) பெரும்பாலும் ஊறுகாய் அதுவும் காய் இருக்காது சாறுதான் விட்டு கலக்கவும் மாட்டாங்க. ஸோ அதன் எண்ணை மோர் கலந்து அது கூட பாக்ஸிலிருந்து வழியும்....

      வட்டமாக உட்கார்ந்து அவங்கதான் சாப்பிடுவான...நான் தனியாகத்தான் ஸ்ரீராம். அவங்களுக்கு என் சாப்பாடு பிடிக்காததால்!!!!!!!!

      கீதா

      நீக்கு
  26. சில மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் தினசரி மதிய உணவு கொண்டு வந்து தருவார்கள். ஒரு பிளாஸ்டிக் கூடையில் டிபன் கேரியர், தட்டு, அல்லது சிறு வாழை இலை, தண்ணீர் எடுத்து வந்து மரத்தடியில் அமரவைத்து அவர்கள் மடியில் ஒரு துண்டுபோட்டு சாப்பிடவைத்து, வாயெல்லாம் துடைத்து விட்டு உள்ளே விட்டு விட்டு செல்வார்கள்!! எனக்கு அதைப்பார்த்து எந்த ஏக்கமும் வந்ததில்லை தெரியுமோ!//

    ஹையோ ஸ்ரீராம் அதே அதே....எங்க க்ளாஸ்லயும் சுட சுட சாப்பாடு எல்லாம் கொண்டு வருவாங்க அவங்க அம்மா...இப்படித்தான் இலை அல்லது தட்டு கொண்டு வந்து போட்டு எல்லாம்.

    ஹைஃபைவ் எனக்கும் ஏக்கம் எல்லாம் வந்ததே இல்லை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... நீங்களும் நானும் அக்கா தம்பி போல நிறைய விஷயங்களில் ஒற்றுமை கீதா!

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆஆ ஸ்ரீராம் என்ன இது நீங்களும் நெல்லையைப் போலத் தொடங்திட்டீங்க....அண்ணா தங்கை போலன்னு சொல்லோனும்...மீ சின்னவளாக்கும் ஹா ஹா ஹா ஹா!!!! (ஹையோ ஸ்ரீராம் உங்க வயசு தெரிஞ்சுருமோ? பூசார் வரதுக்குள்ள வாசிச்சுட்டு டெல் பண்ணிடுங்க!!!!)

      கீதா

      நீக்கு
  27. அருமையான நினைவு பெட்டகங்கள் ...

    நான் 90 ஸ்ல பள்ளி போன குழந்தை ..

    எனக்கு அம்மா தினமும் சாம்பார் சாதம், தயிர் சாதம், காய் எல்லாம் அடுக்கில் வச்சி காலையில் 8 மணிக்கே தயார் பண்ணி தருவாங்க ...அப்போ உணவில் அவ்வொலோ விருப்பம் இல்லைனாலும் வீணாக்க மாட்டேன் ...

    இப்போ பசங்களுக்கு விதம் விதமான உணவு தான் ..இன்றைக்கு கூட சப்பாத்தி பனீர் பட்டர் மசாலா பாக்ஸ் க்கு ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க கொடுத்து வச்ச பொண்ணு அனுராதா பிரேம்குமார்!!!!

      நீக்கு
  28. தலைப்பை பார்த்து விட்டு என்னது இது பெண்கள் பத்திரிகை போல எ.பி.யும் ஆரம்பித்து விட்டதே என்று நினைத்தேன். படித்த பிறகுதான் பலருடைய நினைவலைகளை எழுப்பி விட்டிருக்கும் பதிவு என்று தெரிந்தது. சுவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்ன பெண்கள் பத்திரிகை போல? ஆண்கள் லன்ச் சாப்பிட மாட்டார்களா என்ன!!!

      நீக்கு
    2. ஹையோ ஸ்ரீராம்........சிரிச்சு முடில....சிரிச்சு சிரிச்சு லொக்கு லொக்கூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஒ
      வயிறு புண்ணாகிடுச்சு!!

      கீதா

      நீக்கு
    3. பெண்கள் பத்திரிகைகள் சிறப்பிதழ்கள் அல்லது இலவச இணைப்புகளை வெளியிடும் பொழுது பண்டிகைக்கால உணவுகள், குளிர்கால உணவுகள், என்ற தலைப்பில் வெளியிடுவார்கள். இப்போது கூட குமுதம் சிநேகிதி சுவையான லன்ச் பாக்ஸ் ரெசிப்பிகள் என்று இலவச இணைப்பு வெளியிட்டதுள்ளது. அதைப் போல எ.பியும் ஆரம்பித்து விட்டதோ? என்று தோன்றியது.
      இது கூட புரியாமல் நீங்கள்தான் கேட்டீர்கள் என்றால், கீதா ரங்கனுக்கு என்ன அப்படி ஒரு சிரிப்பு??

      நீக்கு
    4. ஹிஹிஹி... இப்படித் தெளிவாச் சொன்னா புரியும்...!!

      நீக்கு
  29. எங்கள் வீட்டில் யாருக்குமே சாதம் கட்டிக்கொண்டு செல்வது பிடிக்காது. அதனால் பெரும்பாலும் வீட்டிற்கு வந்துதான் சாப்பிடுவோம். தவிர்க்க முடியாமல் எடுத்துக்கொண்டு செல்லும் நாட்களில் தயிர் சாதம், ஊறுகாய்தான்.

    எங்கள் பள்ளி வாட்டர் டேங்கில் தண்ணீர் வருவது அபூர்வம். அதுவும் அதில் வரும் தண்ணீர் எப்படிப்பட்டது என்பது பற்றி சந்தேகம் இருந்ததால் பள்ளிக்கருகில் இருக்கும் சில வீடுகளில் டிஃபன் பாக்ஸ் கழுவவும், குடிப்பதற்கும் தண்ணீர் தருவார்கள். அப்படி அங்கு செல்லும் பொழுது தொடர் கதைகளை பற்றி விவாதிப்போம். வெள்ளிக்கிழமையாக இருந்தால் விகடனில் வரும் தொடர் கதையில் இந்த வாரம் என்ன என்பதை சொல்லாதே, சொல்லாதே என்று தோழிகள் கெஞ்சுவார்கள்.

    ஒரு மணிக்கு ஸ்கூல் விடும், ஒண்ணே காலுக்கு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு, ஒன்றரைக்கு கிளம்பி ஒண்ணே முக்காலுக்கு முதல் பெல் அடிக்கும் முன் வந்து விடுவோம். எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு தோழி, அதற்குள் முகம், கழுவி, பவுடரெல்லாம் பூசிக்கொண்டு வருவாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் காலையில் கூடஎன் இளையவனிடம் . தண்ணீர் டேங்க் எப்படி இருக்கும் என்றெல்லாம் பார்க்காமல்தான் நாங்கள் அப்போது பள்ளியில் குழாயிலேயே தண்ணீர் கையில் வாயைவைத்து குடிப்போம்!

      நீக்கு
    2. ஆமா ஆமா.....அப்பல்லாம் யாரு ஸ்ரீராம் வீட்டுல கூட தண்ணி காய்ச்சி தரமாட்டாங்க. கிணத்துலருந்து அப்படியேதான்....பள்ளில பைப்பில் கையை கிண்ணம் போல வைச்சு தண்ணி குடிக்கறது.....அப்படியேதான்..

      ஆனா பாருங்க அப்ப வராத இருமல் சளி எல்லாம் இப்ப பாத்து பாத்து தண்ணி குடிக்கும் போது வருது....!!

      கீதா

      நீக்கு
  30. பள்ளிக்கு அருகில் உள்ள பிரேமா வீட்டுக்கு சென்று அவள் வீட்டு அரிநெல்லிக்காய் மரத்தை மொட்டை அடிப்போம் எல்லா தோழிகளும் சேர்ந்து. அவர்கள் அம்மா இங்கு வந்து சாப்பிட்டால் என்ன என்று கேட்டுக் கொண்டதால் இரண்டு மூன்று நாள் அவர்கள் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு அரட்டை அடித்து வந்ததை, அவர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டு விட்டு அம்மா கொடுத்ததை சாப்பிடாமல் போய் திட்டு வாங்கிய கதை எல்லாம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க ஒருமாணவியின் வீட்டு வாதாமரத்தின் காய்களைப் பறித்து உடைத்துத் தின்போம். அப்போது சாப்பிட்ட வாதுமைப் பருப்புக்கும் இப்போதைய பாதாம் பருப்புக்கும் சுவை மட்டுமின்றி எல்லாவற்றிலும் வித்தியாசமும் இருக்கு!

      நீக்கு
    2. மதியம் நாங்கள் சாப்பிட பிறகு சமர்த்தாக மரத்தடியிலோ, வகுப்பிலோ உற்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். இல்லாவிட்டால் மைதானத்தில் விளையாடுவோம்!

      நீக்கு
    3. ஸ்ரீராம் நாங்களும் பேச்சு அல்லது விளையாட்டுதான்...பெரிய க்ளாஸ் வந்தப்புறம் தான் புக்கும் கையுமா இருந்திருக்கோம்...

      நாங்களும் இந்த வாதாங்க்கொட்டைய பொறுக்கி வைச்சுட்டு அப்புறம் பங்கு போட்டு விட்டுக்கு எடுத்து வந்து உடைத்து சாப்பிடுவோம்..

      கீதா

      நீக்கு
    4. கீதா... நான் பள்ளியிலும் எந்தக்காலத்திலும் புத்தகமும் கையுமாக இருந்ததே இல்லை!!! ஹிஹிஹி....

      நீக்கு
  31. இங்க இருக்கிற பெரும்பாலான அம்மாக்களுக்கு அந்த பிரச்சனை கிடையாது. ஏன்னா பிள்ளைங்க வெறும் பிரட் தான் எடுத்துக்கொண்டு போவார்கள். ஏதாவது சாதத்தை கொடுக்கலாம்ன்னா, மற்ற பிள்ளைங்க எலாம் கேலி பண்ணுவார்கள் என்று சொல்லி விடுவார்கள் (கேலி பண்ணவில்லையென்றாலும் பிள்ளைகளுக்கு அப்படி சொல்வது ஒரு சாக்கு). மதியம் வீட்டிற்கு வந்த பிறகு சாப்பாட்டை கொடுத்து, அவர்களை சாப்பிடு சாப்பிடு என்று குத்த வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பர் சொக்கன் சுப்பிரமணியம். நீ...ண்ட நாட்களுக்குப்பின் வருகை!

      நீக்கு
    2. ஆமாம் நானும் இப்பத்தான் பார்க்கறேன். சொக்கன் சகோ ப்ளாக் மீண்டும் எழுதத் தொடங்கிட்டீங்களா? பார்க்கனும்....

      நலமா? உங்கள் மகன் மணிகண்டன் எப்படி இருக்கிறார்? வளர்ந்திருப்பாரே 2 1/2 வயது ஆகியிருக்கும் இல்லையா..

      கீதா

      நீக்கு

    3. ஹரே சொக்கா நம்பவேமுடியவில்லை.......நீங்கள்தானா இது.....வாங்கய்யா வாங்க இப்பதான் வழி தெரிஞ்சுதா??குடும்பத்தில் அனைவரும் நலமா?

      நீக்கு
    4. @Thulasidharan V Thillaiakathu
      நலமே
      மணிகண்டனுக்கு இப்ப மூன்றரை வயதாகிறது.
      நேற்றிலிருந்து தான் எழுத ஆரம்பித்திருக்கிறேன்

      @Avargal Unmaigal

      குடும்பத்தில் அனைவரும் நலம் நண்பரே
      ஒரு வழியாக இப்போது தான் வழி தெரிந்தது.

      நீக்கு
  32. சுவையான பதிவு. மோர் சாதம் தான். ஆனால் தாழ்வாய் உணர்ந்ததில்லை.
    4 ம் வகுப்பு படிக்கும் போது சாப்பிடாமல் பள்ளிக்கு போய் விட்ட எனக்கு என் அத்தை ரசம் சாதம் நெய் மணக்க.. கீரையுடன் கொண்டு வந்து ஊட்டியது இப்போதும் மனசில் பசுமையாய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரிஷபன் ஜி. மோர் சாதத்தை குறைவாக நினைத்ததில்லை நானும். லாபித்தது அதுதான் என்று சொல்லி இருந்தேன்!

      நீக்கு
    2. ஆமாம் ரிஷபன் அண்ணா.... மீ டூ...அப்போதும் நினைத்ததில்லை இப்போதும்...நினைப்பதில்லை. பார்க்கப் போனால் அதுதான் பல சமயங்களில் கை கொடுக்கும் கை! அமிர்தம்.

      கீதா

      நீக்கு
  33. காலேஜ் படிக்கும்போது ரெண்டாம் வருஷம்லாம், எங்க அம்மா, நல்லா டிபன் பாக்ஸ்ல தருவாங்க. எனக்கு எப்போடா லஞ்ச் டயம் வரும்னு இருக்கும் (தோசை, அதுமேல வெண்ணெய் ஆடை உள்ள கடுத்த தயிர், அதன் மேல் ஒரு தோசை, அதன் மேல் கொஞ்சம் தயிர் என்று நல்லா அடுக்கிக் கொண்டுபோவேன். இதுபோல விதம் விதமா).

    ஒரு தடவை என் ஃப்ரெண்ட், இடைல எனக்குத் தெரியாம சாப்பிட்டுட்டான். எனக்கு வந்ததே கோபம். ரொம்ப பயந்துபோயிட்டான்.

    என்ன இருந்தாலும் வித விதமா பள்ளில டிபன் கொண்டுபோகமுடியலை என்று வருத்தம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை... கல்லூரி நாட்களின் உணவை நீங்கள் சொல்லும்போதே வாயில் அருவி!

      நீக்கு
  34. ஸ்ரீராம்ஜி உங்கள் பதிவு அருமை. டக்கென்று எனது சிறு பிராயம், இளவயது வரையான எனது தமிழ்நாட்டு ராசிங்கபுர வாழ்க்கையை நினைவூட்டியது. எனக்கு மிகவும் பிடித்த வாழ்க்கை எனலாம்.

    ராசிங்கபுரம் என்பது மிக மிகச் சிறிய கிராமம். தேனீ அருகில். அங்கு பள்ளியில் ப்ரைமரி வரை கிராமத்தில்தான் படித்தேன். எனவே மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிடுவது வழக்கம்.

    அதன் பின் 6 ஆம் வகுப்பிலிருந்து போடிநாயக்கனூர் பள்ளியில். மிகப் பெரிய பள்ளி. ஆண்கள் பெண்கள் தனி தனி செக்ஷன். அது 10 கிமீ தூரம் என்பதால் பேருந்தில் பயணம். அப்போது அம்மா அப்பாவுடன் இருந்ததால் சாப்பாடு கட்டித் தந்துவிடுவார்கள். ஒரு பச்சைக்கலர் சிறிய அலுமினிய கேரிய இரண்டடுக்கு. ஒரு சாதம் துவையல் அல்லது சாம்பார், கறி என்று. வகுப்பில் நாங்கள் பாய்ஸ் உட்கார்ந்து சாப்பிடுவோம். லஞ்சிற்குப் பிறகு பெரும்பாலும் விளையாட்டுதான் அல்லது பேச்சு.

    ஆனால் 9 ஆம் வகுப்பிலிருந்து தனி வாழ்க்கை. அம்மா அப்பா கேரளத்துக்குச் சென்றுவிட்டதால் நான் தனியாகவே சமைத்து எடுத்துக் கொண்டு பள்ளிசென்றேன். அப்போது மீண்டும் பள்ளி மாற்றம். 9, 10, 11 (அப்போது 11 வரை. +2 வருவதற்கு முன். 11க்குப் பிறாகு பியுஸி கல்லூரியில்) இந்த மூன்று வருடமும் எங்கள் கிராமத்திலிருந்து 5 கிமீ தூரத்தில் இருந்த தில்லமரத்துப்பட்டி எனும் ஊரிலுள்ள சிறு பள்ளியில். 5 கி மீ நடந்தே செல்வோம். அப்போது அதே அலுமினிய கேரியர் வெயிட் இருக்காது. பச்சை அழிந்து வெள்ளையாக இருக்கும். நான் பெரும்பாலும் உப்புமாதான் செய்து எடுத்துச் செல்வேன். மண்னென்னை ஸ்டவ் ஒன்றுமட்டுமே. வீட்டிற்கு வந்துதான் சாதம் வைத்து சாப்பிடுவேன்.

    இந்த தில்லமரத்துபட்டி பள்ளியில் பள்ளி மிகச் சிறியது என்பதால் அங்கு பெண்கள் அமர்ந்து சாப்பிடுவார்கள். எனவே நாங்கள் பாய்ஸ் பக்கத்தில் இருக்கும் தோட்டத்திற்குச் சென்றுவிடுவோம். அங்கு இருக்கும் தொட்டிகளில் பம்ப் செட் போட்டு தண்ணீர் இருந்தால் நாங்கள் தோட்டத்திலேயே அமர்ந்து சாப்பிட்டுக் கை கழுவி விடுவோம்.

    தண்ணீர் இல்லை என்றால் அங்கிருக்கும் சதுர வடிவில் இருக்கும் பெரிய ஆழமான கிணற்றுக்குள் இறங்கி அப்படி இறங்க வைத்திருக்கும் படிகளில் உட்கார்ந்து சாப்பிடுவோம். படிகள் என்பது குளக்கரை படிகள் போன்றதல்ல. வித்தியாசமானதாக இருக்கும். ஆனால் கொஞ்சம் அகலமாக இருக்கும். கிணற்றுக்குள் ஏசி போட்டது போன்று சில்லென்று இருக்கும். கொஞ்சம் வெளிச்சம்தான் இருக்கும். அங்கு அமர்ந்து சாப்பிட்டு கை கழுவிவிட்டு வருவோம். அதன் பின்னர் வாழ்க்கை தனியேதான்....

    கல்லூரி மதுரை கல்லூரி என்பதால் ஹாஸ்டல் வாழ்க்கை.

    பல நினைவுகளை எழுப்பிய பதிவு. ஒரு பதிவே எழுதும் அளவிற்கான பதிவு இது ஸ்ரீராம்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளஸிஜி...

      ஒன்பதாம் வகுப்பிலிருந்தே நீங்களே சமைத்து எடுத்துப் போனீர்களா? என்ன ஆச்சர்யம்! படிப்பையும் கவனித்துக்கொண்டு...

      நீங்கள் சொல்லும் வர்ணனையிலிருந்து அந்தக் கிணற்றை கற்பனை செய்ய முடிகிறது.

      நன்றி ஜி. எல்லோரையும் கொசுவர்த்தி சுற்ற வைத்துவிட்டேன் போல!!!

      நீக்கு
  35. என் குழந்தைகள் மஸ்கட்டில் படித்த வரை பெரும்பாலும் ப்ரெட் வித் nutella அல்லது சீஸ் டோஸ்ட் போன்றவை தருவேன். அதன் பிறகு சப்பாத்தி, பூரி, குட்டியாக பட்டன் தோசை போன்றவை அனுப்புவேன்.

    சென்னை வந்த பிறகு என் மகனின் விருப்பம் தயிர் சாதம் மட்டுமே. வீட்டில் கீரை சாப்பிட மறுக்கும் அவன் டிஃபன் பாக்சில் வைத்து அனுப்பும் பொழுது முழுமையாக சாப்பிட்டு விடுவான். நானும் கொஞ்சம் அதிகமாகவே வைத்து அனுப்புவேன். ஒரு நாள் வீட்டில் கீரையை வழக்கம்போல் கொஞ்சமாக போட்டுக் கொண்டான்," ஸ்கூலுக்கு வைத்து அனுப்பும் பொழுது நிறைய சாப்பிடுகிறாய், வீட்டில் மட்டும் ஏன் கொஞ்சமாக போட்டு கொள்கிறாய்?" என்று கேட்டதற்கு, " ஸ்கூலில் நான் எங்கே சாப்பிடுகிறேன்? கீரை பிடித்த ஒரு பையன் இருக்கான், அவனிடம் கொடுத்து விடுவேன்" என்று ரகசியத்தை உடைத்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்டியாக பட்டன் தோசை?!! அட...

      ஹா... ஹா.... ஹா... உங்கள் மகன் ரொம்ப விவரம் பானு அக்கா!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா செம பானுக்கா உங்க மகனின் செயல் ரசிக்க வைத்தது!!!

      ஆமாம் ஸ்ரீராம் பட்டன் தோசை....குட்டி குட்டியாக நான் மகனுக்கும் அபப்டிச் செய்து கொடுத்ததுண்டு. ஒரே தோசைக்கல்லில் பல குட்டி குட்டி தோசைகள்...ஜஸ்ட் ஒரு ட்ராப்

      கீதா

      நீக்கு
  36. இப்போதெல்லாம் நினைவுகளையே பதிவாக்கும் எனக்கு இந்த சப்ஜெக்டில் எழுத முடியாது நான் தான்முதல் மூன்று வகுப்புகள் பள்ளியில் படித்ததே இல்லையே என் பேத்திக்கு அவள் கே ஜி க்லாஸில் படிக்கும்ப்[போது மதியம் சாதமெடுத்துச்செல்வோம் ஆனால் அவளுக்கு நாங்க்சள் வந்து ஊட்டிவிடுவதே மிகவும் லஜ்ஜையாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எம் பி ஸார்... ஆச்சர்யம்... நானும் மூன்றாம் வகுப்பிலிருந்துதான் படிக்க ஆரம்பித்தேன். அது ஒரு தனிக்கதை!

      நீக்கு
  37. ஆஆஆஆவ்வ்வ்வ் அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.... அது ஏன்ன்ன் ஏன்ன்ன்ன் யேன்ன்ன்ன்ன்ன்ன்:)... ஹா ஹா ஹா
    அழகிய இளமைக்கால நினைவுகள்....
    60 வருசத்துக்குப் பிறகும்:) எல்லாமே நினைவில இருக்கெ ஶ்ரீராமுக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ் மீக்கு பெல் அடிக்குதே.....:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, அதிரடி, உங்களுக்கு அறுபதுக்கும் மேல் ஆகி இருக்காதோ? அறுபது தான்னு சொல்றீங்க! :))))

      நீக்கு
    2. கீசாக்கா 3 நாள் லீவால எல்லாமே மறந்திட்டா கர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
    3. வாங்க அதிரா... தன்னைப்போல் பிறரை நினை என்று சொல்வார்கள். உங்களுக்கு அது மிகவும் பொருந்துகிறது!!!!

      நீக்கு
    4. என்னது..
      அதிரடிக்கு அறுபதுக்கும் மேலா?..

      அவங்க வூட்டு பூஸார விட சின்ன வயசாத்தான் இருக்கும்!...

      நீக்கு
    5. ஹா... ஹா... ஹா... துரை ஸார்....!!!

      நீக்கு
    6. தன்னைப் போல் பிறரை நினை// ஸ்ரீராம் ஹா ஹா ஹா ஹா ஹா..

      துரை அண்ணா செம...ஹையோ சிரிச்சுட்டேன்....

      கீதா

      நீக்கு
    7. நான் எப்பவும் அப்படித்தான்... எனக்கொரு நீதி அடுத்தவருக்கொரு நீதி என நினைக்க மாட்டேன்:)... ஆனாப் பாருங்கோ வயசில மட்டும் அதெப்படி அப்பூடி நினைக்க முடியும்:)... எங்கட டெய்சிக்கு மம்மியை விட 13 வயசு குறைவாக்கும்:).. அதாவது மீக்கு சுவீட் 16 எல்லோ:)...

      நீக்கு
  38. இங்கு பக் லஞ் கொடுக்கும் சிக்கல் இல்லை... மணி பே பண்ணிவிட்டால் ஓன்லைனில், ஸ்கூல் கண்டீனில் சுடச் சுட சாப்பிடுவார்கள்... அதுதான் விருப்பமும்.. வீட்டில் இருந்து எடுத்து போனால் ஆறி விடுகிறது...

    ஸ்கொட்லாந்தில் முதலாம் வகுப்பில் இருந்து 3ம் வகுப்பு வரை ஸ்கூல் லஞ் பிறீயாகக் கொடுக்கிறார்கள்... டெய்லி விதம் விதமான சாப்பாடு இவற்றோடு பழங்கள் யோகட் யூஸ் சூப் இப்படி செலக்சனும் உண்டு...

    ஆனா கொடுமை என்னவென்றால் பெரிய வகுப்புக்கும் சின்ன வகுப்புக்கும் ஒரே அளவே சேவ் பண்ணுவார்கள் அதனால டெய்லி பின் இல் உணவு நிரம்பி வழியும்... குட்டீஸ் சாப்பிடமாட்டார்கள்... போஸ் பண்ணக்கூடாது என்பது இவர்கள் கொள்கை/ முறை/ பழக்கம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இங்கு பக் லஞ் கொடுக்கும் சிக்கல் இல்லை... மணி பே பண்ணிவிட்டால் ஓன்லைனில், ஸ்கூல் கண்டீனில் சுடச் சுட சாப்பிடுவார்கள்...//இந்த பழக்கம் இப்போது இந்தியாவிலும் சில பள்ளிகளில் இருக்கிறது அதிரா. வீட்டில் சரியாக சாப்பிடாத குழந்தைகள் கூட அங்கு, உப்புமா சாப்பிட்டேன், வடை சாப்பிட்டேன் என்று சாப்பிடுகின்றன.

      நீக்கு
    2. அதிரா... அங்கு குழந்தைகள் எதையோ மிஸ் செய்கிறார்கள் என்று தோன்றவில்லை?

      நீக்கு
    3. பானுமதி அக்கா இப்போ பெரும்பாலும் ஸ்கூல்களில் கண்டீன் கொண்டுவரப்படுகிறது என நினைக்கிறேன்...

      மிஸ் செய்கிறார்களா? புரியவில்லை ஶ்ரீராம்? இங்கு வீட்டு உணவை விட அங்குதான் அதிகம் விரும்புகிறார்கள் ... இங்கு ஸ்கூல் கண்டீன் என்பது ரெஸ்ரோரண்ட் போலத்தான் இருக்கும்,.

      நீக்கு
  39. என் மகள் அசோக் நகர் கேந்த்ரீய வித்யாலயாவில் படித்த பொழுது, காலை பத்தரை மணிக்கு லன்ச் பிரேக் வரும். அதனால் பெரும்பாலும் சமைத்தவுடன் சூடாக, விசேஷ நாட்களுக்கான ஸ்பெஷல் ஐட்டங்களுடன் சாப்பாடு கொண்டு தருவேன். அவள் வகுப்பில் ஒரு பெண்ணுக்கு எங்கள் வீட்டு தயிர் சாதம் மிகவும் பிடிக்குமாம், அதனால் தயிர் சாதம் கொண்டு செல்லும் நாட்களில் இவளுடைய தயிர் சாதத்தை அவளிடம் கொடுத்து விடுவாள்.

    அவளுடைய பள்ளியிலும் சரி,கல்லூரியிலும் சரி, "உன்னுடைய அம்மா மட்டும் எப்படி இத்தனை மிருதுவாக சப்பாத்தி செய்கிறார்?" என்று என்னுடைய சப்பாத்திக்கு ஒரு ரசிகர் மன்றம் உண்டு. அவள் அண்ணா யுனிவர்சிட்டியில் எம்.எஸ்ஸி படித்த பொழுது, டயட் செய்ய ஆரம்பித்தாள். அப்போது இரண்டு மணிக்கு ஒரு முறை ஜூஸ், மோர், என்று விதம் விதமாக செய்து கொடுக்க வேண்டும். நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஃபிளேவரில் மோர் செய்து கொடுப்பேன். அதை மஸ்தி மோர் என்று அவள் வகுப்பு தோழிகள் அழைப்பார்களாம். ஒரு முறை நான் செய்திருந்த பாலக் பனீரை சாப்பிட்ட, சாப்பாட்டில் மிகவும் ஆர்வம் கொண்ட ஒரு பஞ்சாபி பெண்,"திஸ் இஸ் த பெஸ்ட் பாலக் ஐ ஏட் இந்த சௌத் இண்டியா" என்று பாராட்டினாளாம். ரொம்பவே நாக்கு செத்து போய் விட்டது போலிருக்கிறது பாவம்.

    இப்போது மகனுக்கும், மருமகளுக்கும் விதம் விதமாக லன்ச் தயாரித்து அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா... கொடுத்து வைத்தவர்கள் உங்கள் குழந்தைகள்!

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. பானுக்கா ஹை!!! எனக்கும் அப்படி ஒரு எண்ணம் உண்டு!! அந்த கடைசி வரி!!!!

      கீதா

      நீக்கு
  40. வணக்கம் சகோதரரே

    இத்தனை "திங்க"ளில் பிரகாசிக்கும் பதிவு இதுதான் என்று சொல்லலாம். பதிவையும், கருத்துக்களையும் (கருத்துக்கள் என்பதை விட அனைவரின் மனதிற்குள் பூவாக மலர்ந்த நினைவுகள் எனலாம்.) படிக்க,படிக்க மனது மகிழ்வாகி உள்ளுக்குள் இருக்கும் கஸ்டங்கள் காணமல் போகிறது. இத்தனை அழகான நடையில் இன்றைய பதிவை எழுதி மனதில் பதியவிட்ட தங்களுக்கு பாராட்டுக்கள்.

    தங்கள் பதிவிலும் "டிபன் பாக்ஸ்" இரண்டொரு முறை கூறியிருக்கிறீர்கள். அப்போது நமக்கெல்லாம் காஸ்ட்லி அயிட்டமாக இருந்ததை தன் மகனுக்கு ஊட்டி விட்ட அந்த முரட்டு அப்பாவின் கையிலிருப்பதும் "டிபன் பாக்ஸ்தான்"... பார்த்தேன். பார்த்தேன்..

    /ஒரு பிளாஸ்டிக் கூடையில் டிபன் கேரியர், தட்டு, அல்லது சிறு வாழை இலை, தண்ணீர் எடுத்து வந்து மரத்தடியில் அமரவைத்து அவர்கள் மடியில் ஒரு துண்டுபோட்டு சாப்பிடவைத்து, வாயெல்லாம் துடைத்து விட்டு உள்ளே விட்டு விட்டு செல்வார்கள்!! எனக்கு அதைப்பார்த்து எந்த ஏக்கமும் வந்ததில்லை தெரியுமோ!/

    ஹா ஹா ஹா ரசித்தேன். நீங்கள் சொன்ன அழகே எல்லோருக்கும் ஒரு இனம் புரியா ஏக்கத்தை இப்போதும் உண்டாக்குகிறது.

    என் குழந்தைகளின் கல்லூரி காலத்தில் அவர்களுக்கென்று கொடுத்து விடும் உணவுகள் கல்லூரி செல்லும் பயணத்திலேயே மற்ற மாணவர்களால், காலியாகி விடும். நிறைய கொடுத்து அனுப்பினாலும் இதே கதைதான். வீட்டுக்கு வந்து மகன்கள், மகளின் நண்பர்கள், நண்பிகள் உரிமையுடன் "அம்மா,நீங்கள் அன்று செய்த உணவு மிகவும் நன்றாக இருந்தது." என்று கேட்டு வாங்கி. சாப்பிட்ட காலங்களும் உண்டு. அதெல்லாம் அவர்கள் கல்லூரி காலம் வரை தொடர்ந்தது. இப்போது அவரவர் வாழ்க்கை வெவ்வேறு திசைகளில்.

    இதுவும் ஒரு பதிவாகி விடுமோ என்ற எண்ணம் மட்டும் வந்து தடுக்காவிடில்,
    இன்றைய தங்களின் பதிவு, இன்னமும் எங்களுக்குள் எழும் இதைப்போன்ற நினைவலைகளை எழுதிக்கொண்டே போகலாம் என ஆசை காட்டுகிறது. அருமை
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா அக்கா.... முன்னரும் "திங்கற" கிழமைகளில் ரெஸிப்பி இல்லாமல் இதுபோன்ற பதிவுகள் வந்தது உண்டு. தோசை புராணம், பரிமாறும் கலை இப்படி....

      //நீங்கள் சொன்ன அழகே எல்லோருக்கும் ஒரு இனம் புரியா ஏக்கத்தை இப்போதும் உண்டாக்குகிறது.//

      குறையொன்றும் இல்லை பாடல் தரும் உணர்வு போலவா!!!

      எல்லோரையும் இளமையாக்கி விட்டேன் போல....! எல்லோரும் கொசுவர்த்தியும் கையுமாக சுற்றி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது!

      நீக்கு
  41. //எல்லோரையும் இளமையாக்கி விட்டேன் போல....! எல்லோரும் கொசுவர்த்தியும் கையுமாக சுற்றி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது!//

    அது உண்மைதான் ஸ்ரீராம். எல்லோரும் மகிழ்ச்சியாக இன்று மலரும் நினைவுகளில் .

    பதிலளிநீக்கு
  42. ஸ்ரீராம் உங்க ல்ன்ச் பாக்ஸ் இத்தனை வருஷத்துக்கு அப்புறமும் மதுரைல இருந்த்ருக்கே...பார்த்து அதன் வாசனை என்று வேறு...ஆஹா அப்ப அதைத் தேடி எடுத்து ஒரு வியாழன் பதிவுல போடனுமாக்கும்!!! போட்டுருங்க...கதம்பம்!!!! அதுல வைச்சு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளிக்கு நான் சாப்பாடு கொண்டு சென்ற சின்னத் தூக்கும், எங்க பெண்ணுக்கு அம்மா வாங்கித் தந்த குட்டித்தூக்கும் இன்னமும் என்னிடம் இருக்கு! :) முடிஞ்சால்/நினைவிருந்தால் படம் எடுத்துப் போடறேன். :)

      நீக்கு
  43. எல்லோரையும் இளமையாக்கி விட்டேன் போல....! எல்லோரும் கொசுவர்த்தியும் கையுமாக சுற்றி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது!//

    அதே அதே.....என் சிறிய வயது ப்ளஸ் என் மகனின் சிறிய வயது...பள்ளியில் அவனுக்கிருந்த கற்றல் குறைபாட்டினால் நண்பர்கள் இருவரைத் தவிர வேறு யாருமில்லாமல் போனது....ஆனால்..அவன் கல்லூரி வந்த பின் வீடு முழுவதும் எப்போதும் நண்பர்கள்தான்....எப்போதும் ஜே ஜே என்று இருக்கும். வருவோரும் போவோருமாகவும் வீட்டிலேயே ஒரு குழு இருப்பதுமாக...பாண்டிச்சேரியில். அப்போது சாப்பாடு நம் வீட்டில்தான். இளம் வயதில்லையா ஸோ அவர்களுக்குப் பிடித்தவாறு ..கச்சி தாபேலி, வெஜிடபிள் ஃப்ராங்கி, நார்த் இண்டியன் அப்புறம் தென்னிந்திய வகைகள் என்று ஓடும்.....சென்னை வந்த பிறகும் நண்பர்கள் அவ்வப்போது வந்துவிடுவார்கள். அப்புறம் ஒவ்வொருவரும் வேலை என்று ஆன பிறகு வருவது குறைந்து இப்போது வெறிச்....

    கீதா

    பதிலளிநீக்கு
  44. பள்ளி கல்லூரி அலுவலகம் இவற்றில் மதிய உணவு டப்பா எடுத்துச் சென்று சாப்பிட்ட அனுபவம் எல்லோருக்கும் இருந்திருக்கும். எனக்கும் இருந்தது. நல்ல கட்டுரை.

    பதிலளிநீக்கு
  45. சுவாரஸ்யமான பகிர்வு. எனது பள்ளி, கல்லூரி லஞ்ச் பாக்ஸ் நினைவுகளைக் கிளப்பி விட்டன :). நேரம் இருக்கையில் விரிவாக இங்கு பகிருகிறேன்.

    பதிலளிநீக்கு
  46. பழைய நினைவுகள் நினைவுப்படுத்தி மோர் சாதம் சாப்பிட தூண்டி விட்டிர்கள் பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  47. அடடா !! இன்னிக்கு நான்தான் ஸ்கூலுக்கு லேட் :)
    ஹ்ம்ம் எல்லாருடைய கமெண்ட்ஸும் படிச்சிட்டு வந்தேன் .இந்த ரெண்டடுக்கு டிபன் பாக்ஸ் 4 ஆம் வகுப்பு வரை இருந்தது .எனக்கு பைனாப்பிள் ஷேப் வாட்டர் பாட்டில் :) அப்புறம் சென்னையில் ஸ்கூல் அருகில் 10 நிமிட நடை பல நாட்கள் வீட்டுக்கு போய் சாப்பிட்டேன் அப்புறம் ஸ்கூல் சட்டதிட்டங்களால் வீட்டிலிருந்து குட்டி தட்டை டிபன் பாக்சில் லன்ச் எடுத்திட்டு போவேன் .புளி சாதம் ,காரக்குழம்பு தயிர் தக்காளி சாதம் வகை இருக்கும் பெரும்பாலும் :) .பூரி சப்பாத்தி எல்லாம் கூட இருக்கும் ..சிலருக்கு அவங்க அம்மாங்க கொண்டு வந்து கொடுத்திட்டு போவாங்க ..அது ஒரே குடும்பத்தில் 6 பிள்ளைங்க இருந்த கடைக்குட்டிக்கு ஊட்டி விடும் சாக்கில் பெரியவங்களுக்கு வீட்டு மீல்ஸ் சுட சுட வரும் .என்னோட டிபன் பாக்ஸ் சென்னையில் இருக்கும்போது மணி கோர்த்த சிங்கப்பூர் ல ருந்து வரும் கேரி பாக்ஸ் இருக்கும் அதில் கொண்டு போவேன் . சரியா சொன்னிங்க ஸ்ரீராம் அந்த ஸ்கூல் தொட்டி தண்ணிய குடிச்சும் எங்க உடம்புக்கு ஒன்னும் வந்ததில்லை :)

    பதிலளிநீக்கு
  48. ஸ்கூல் உணவு விஷயத்தில் மகளுக்கு ஜெர்மன் கிண்டர்கார்டனில் பணம் கட்டிடுவோம் மாசாமாசம் அவங்க உணவை அங்கேயே தயாரித்து குழந்தைங்க சாப்பிடுவாங்க .
    இங்கே யூகேவில் ப்ரீ மீல்ஸ் இல்லை மகள் பிரைமரி படிக்கும் வரை அதாவது வீட்டில் நிரந்தர வருமானம் இல்லாதோருக்கு மட்டும் இலவச மீல்ஸ் ப்ரேக்பாஸ்ட் பால் பழம் உட்பட தருவாங்க .நாங்க மகளுக்கு ஸ்கூல் மீல்சுக்கு பணம் கட்டிடுவோம் லன்ச் மணி என்று .ஆனால் மகளுக்கு ஒத்துக்கலை அந்த உணவு :) இப்போ செகண்டரி வரை நானேதான் சான்ட்விச் சப்பாத்தி ,ரைஸ் நூடில்ஸ் எல்லாம் கட்டி அலுமினியம் பாயிலில் போட்டு அனுப்பறேன் :) நானா செய்த சப்பாத்தியை பஞ்சாபியர் பிள்ளைகளும் ரொம்ப விரும்புவாங்கன்னு சொல்வா மகள் ..அதென்னமோ நம்ம சவுத் இந்தியன்சுக்கு நல்லா மிருதுவான சப்பாத்தி நல்லா வருது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லோ அது யூகே இல்லை, இங்கிலாந்து எனச் சொல்லுங்கோ, யூ கே எனில் ஸ்கொட்லாந்தும் அடங்கும். இங்கு இப்போ ஒரு 5,6 வருடமாகத்தான் 3ம் வகுப்பு வரை இலவச உணவு முறை வந்திருக்கு.

      ஸ்கூல் மீலுக்கு காசு கொடுத்துக் கட்டுதில்லை:).. மினிமம் 2.50 பவுண்டுகள்... அதிலிருந்து எவ்வளவும் கூட வாங்கலாம்.. அதனால டெய்லி 4 பவுண்டுகளாவது செலவாகும் ஆனா வீட்டுச் சாப்பாடு விரும்புகிறார்கள் இல்லை.. எனக்கும் எதைக் கட்டிக் கொடுப்பது எனும் டென்ஷன் இல்லை:)

      நீக்கு
    2. ஆமா :) நீங்க தான் தனியா போக துடிக்கிறீங்களே .அப்போ இனிமே குயின் அம்மா சார்ல்ஸ் அண்ணன் பேரப்புள்ளைங்க ஜார்ஜ் (இந்த உறவுகள் எல்லாம் உங்க முறையில் சொன்னேன் :)))எல்லாம் உங்களுக்கு சொந்தமில்லை ஸ்கொட் cat

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!