வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

வெள்ளி வீடியோ : நாகேஷ் நாகேஷ்


இந்த வாரம் பாடல் இல்லாமல் எனக்குப் பிடித்த நகைச்சுவைக்காட்சி ஓரிரண்டைப் பகிர விரும்புகிறேன். 

பூஜைக்கு வந்த மலர் படத்தில் இடம்பெறும் நாகேஷின் நகைச்சுவைக்காட்சிகள். 

நாகேஷ் நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  எடுத்துச் சொல்ல நிறைய படங்கள், காட்சிகள் உண்டு.   நடிப்பு மட்டுமா, அந்தக் காலத்தில் அவர் போல நடனமாட யார் உண்டு?  (சந்திரபாபு வேறு ரகம்.)  

நகைச்சுவைக் காட்சி என்றில்லை, செண்டிமெண்ட் காட்சிகளிலும் கண்களை நிறைத்து விடுவார் நாகேஷ்.  சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, தாமரை நெஞ்சம் போன்ற பல படங்களை சொல்லலாம்.  அபூர்வ ராகங்கள் படத்தில் மருத்துவராக வருவார்.  அவருக்கு குடிக்கும் பழக்கம் உண்டு என்பதை மறைத்து வைத்திருப்பார்.  தில்லானா மோகனாம்பாள் வைத்தி, திருவிளையாடல் தருமி...

தங்கை படத்தில் "அங்கமுத்து தங்கமுத்து", வீட்டுக்கு வீடு படத்தில் "அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ" மாடி வீட்டு மாப்பிள்ளை படத்தில் டைட்டில் பாடல், பாமா விஜயம் படத்தில் "நினைத்தால் சிரிப்பு வரும்"..   இப்படி அவர் நடனத்தை ரசிக்கும் பாடல்களையும் சொல்லலாம்.

இந்தப் படத்தின் காமெடியைப் பொறுத்தவரை நாகேஷ் ஒரு ஞாபக மறதிக்காரராக வருவார்.  பக்கா ஞாபக மறதிக்காரர்.  அதனால் அவர் செய்யும் லூட்டிகள் எல்லாமே நன்றாய் இருக்கும் என்றாலும் அதில் மிக நன்றாய் இருக்கும் டாக்டரைப் பார்க்கும் காட்சியையும், மனோரமாவை அவர் வீட்டில் சந்திக்கும் காட்சியையும் மட்டும் பகிர்கிறேன்.






94 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா தொடரும் அனைவருக்கும்..
    வல்லிமாவுக்கு குட் ஈவினிங்க்!!!
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனியகாலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் கண்ணா கீதா ரங்கன்.
      அனைவருக்கும் நல்ல நாளாக அமையட்டும்.

      நீக்கு
    3. இனிய காலை வணக்கம் வல்லிம்மா... நன்றி.

      நீக்கு
    4. அனைவருக்கும் காலை வணக்கம், மாலை/இரவு வணக்கம்.

      நீக்கு
    5. சர்வர் சுந்தரம் எனக்கு மிகவும் பிடித்த படம். சென்னையில் மாமியார் வீட்டிற்கு வந்தப்ப ஒரே ஒரு முறை டிவியில் பார்த்ததுண்டு.

      எனக்கும் தருமி, தி மோ கேரக்டர் வைத்தி ரொம்பப் பிடிக்கும். நாகேஷின் நடிப்பே எனக்கு மிகவும் பிடிக்கும்...டிவியில் நகைச்சுவைக்காட்சிகள் என்று வரும் போது. மற்றபடி நீங்க சொல்லிருக்கற மற்ற படங்கள் எதுவும் பார்த்ததில்லை...

      வித்தியாசமான வெள்ளி. இப்படி இடையிடையே நல்ல நகைச்சுவைக் காட்சிகளையும் போடுங்க ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
    6. ஆமாம்... ஒரு வித்தியாசத்துக்குதான் இப்படி பதிவிட்டேன் கீதா.

      நீக்கு
  2. ஆஹா... இன்றைக்கு நாகேஷ் அவர்க்ளின் நகைச்சுவை காட்சிகளா? அவரது நடனம் எனக்கும் பிடிக்கும்.

    காணொளி இனிமேல் தான் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட். பிறகு கட்டாயம் பாருங்கள். மிகவும் ரசனையாக இருக்கும். மூக்கு கண்ணாடியை அவர் ஏற்றி விட்டுக்கொள்ளும் ஸ்டைலும், அவசரப் பேச்சும்....

      நீக்கு
  3. பிறவிக்கலைஞர்களில் நாகேஷும் ஒருவரே... காணொளி பிறகு...

    பதிலளிநீக்கு
  4. காணொளி இரண்டுமே மீண்டும் மீண்டும் சிரிக்க வைத்தன நல்ல செலக்ஷன் ஸ்ரீராம்.
    பாவமா இருக்கு நாகேஷைப் பார்த்தால்.

    பதிலளிநீக்கு
  5. நாகேஷ், இந்த வெள்ளிக்கிழமை என்னளவில் அதிர்ஷ்டக்கிழமை. மெதுவா மத்தியானமா ரசிச்சுட்டு வந்து சொல்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த வெள்ளிக்கிழமை என்னளவில் அதிர்ஷ்டக்கிழமை.//

      அடடே.....

      நீக்கு
    2. இப்போத் தான் இரண்டையும் பார்த்து ரசிச்சேன். என்ன இருந்தாலும் இம்மாதிரிக் காமெடிகள் இப்போல்லாம் எங்கே வருது? அதுவும் கவுண்டமணி, செந்தில் இரண்டு பேரும் காமெடிங்கற பேரிலே நிறம், உருவம் போன்றவற்றைக் குறிப்பிட்டுக் கன்னாபின்னாவெனத் திட்டிக்கிறதைப் பார்க்கையில் அழுகை தான் வரும்!

      நீக்கு
    3. நாகேஷ் காமெடியிலும் இது போல சில அபத்தங்கள் இருக்கும் கீதா அக்கா.. உதாரணமாக வசந்த மாளிகை!

      நீக்கு
  6. அதே சமயம் நான் ரொம்ப ரசிச்ச காமெடி, "மகளிர் மட்டும்" படத்தில் நாகேஷ் பிணமாக நடிப்பது! அதை அடிச்சுக்க யாரும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெதுவா வாங்க. மகளிர் மட்டும் ஓகேதான். நாகேஷ் நிறைய ரசிக்கத்தக்க காமெடிகள் செய்திருக்கார்.

      நீக்கு
    2. கீசா மேடம்... பத்துநாட்களுக்குள் எம்ஜியாரின் 'அன்பே வா' படம் தொலைக்காட்சியில் பார்த்தேன். நாகேஷ் நடிப்பு (அந்தப் படத்தை எத்தனையோ முறை பார்த்தபோதும்) அட்டஹாசம். அவர் பக்கத்துலயே நகைச்சுவை நடிப்புல நெருங்க முடியாது.

      நீக்கு
    3. அன்பே வா! காமெடியும் ரசிக்கலாம். சந்திரோதயம் படத்துக் காமெடியும் ரசிக்கலாம். அதிலும் "காசிக்குப் போகும் சந்நியாசி" பாடலில் நல்லாவே நடிச்சிருப்பார். எல்லாம் சென்னைத் தொலைக்காட்சி தயவில் ஆரம்ப காலகட்டங்களில் பார்த்த படங்கள். இல்லைனா எம்ஜார் படமெல்லாம் நான் எங்கே பார்க்கிறது? :))))

      நீக்கு
    4. அன்பே வா படத்தில் எம் ஜி ஆருடன் போனில் அவர் பேசும் முதல் காட்சியிலேயே தொடங்கி விடும் அட்டகாசம். "அந்த பர்ஸை இது கைல காட்டு ஸார்... என்பதும்... உங்ககிட்ட நிறைய பணம் இருக்கு... என்கிட்டே கொஞ்....ச்சம் கூட இல்லை" என்பதும் அடாவடி செய்திருப்பார்.

      நீக்கு
    5. சந்திரோதயம் படத்தில் மனோரமாவிடம் அடிவாங்கும் கேரக்டர்!

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. பூஜைக்கு வந்த மலர் படத்தில் இடம்பெறும் நாகேஷின் நகைச்சுவைக்காட்சிகள் மிகவும் நன்றாக் இருக்கும், மீண்டும் பார்த்து ரசித்தேன்.
    இந்த கதையில் சும்மா இடை இடையே வருபவர் போல் இருப்பார், கடைசியில் சுபமான முடிவுக்கு அவர் காரணமாய் ஆகி விடுவார்.

    பாட்டுக்கு பதிலாக இடை இடையே இப்படி நல்ல நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெறலாம்.
    நல்ல மாற்றம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா... வணக்கம். இந்த மறதிக்கு காட்சியைச் சொல்லிச்ச்சொல்லி ரொம்பநாட்களாய் என்ன படம் என்று தெரியாமல் தேடிக்கொண்டிருந்தேன். சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்தபோது தெரிந்தது. ஜாலியான நாகேஷ்.

      நீக்கு
  9. பாலையா அவர்களிடம் கதை சொல்லும் காட்சியை நினைத்தாலே சிரிப்பு வரும்... படம்: காதலிக்க நேரமில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க DD... ஆமாம். பாலையா, நாகேஷ் நல்ல காம்பினேஷன்!

      நீக்கு
  10. திரு.நாகேஷ் அவர்களை அருமையாக நினைவு கூர்ந்தது பதிவு....

    அற்புதமான கலைஞர் அவர்..
    வைத்தி சுந்தரம் செல்லப்பா- இன்னும் பற்பலர்..
    என்றும் நம்முடன் வாழ்பவர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடிப்பு ஜீனியஸ் நாகேஷ். மறக்க முடியாத பல கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

      நீக்கு
  11. நேற்று நாகேஷ் அவர்களின் நினைவு தினம் அல்லவா?!
    காலையில் இந்த நகைச்சுவை காட்சிகள் நாளையே இனிமை ஆக்கி விட்டன! இந்தப் படம் பார்த்தது இல்லை - இனி, தேடிப் பார்க்கிறேன்...
    நாகேஷ் ஸ்பூனரிசம் போன்று- உதாரணமாக மானேஜர் என்பதை டாமேஜர் - ஒரு படத்தில் பேசுவார்...சடார் சடார் என்று விழும் நகைச்சுவையை கவனமாக 'காட்ச்' செய்ய வேண்டும் :))
    அவரைப் பற்றி பல செய்திகளைப் படித்திருக்கிறேன்; அவர் திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கப் பெறாதவரோ என்ற எண்ணமும் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... நேற்று அவர் நினைவு தினமா? நினைவில்லை. சென்ற வாரம் இந்தக் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது இதைப் பகிரவேண்டும் என்று நினைத்தேன். முழுப்படக் காமெடியையும் பகிர நினைத்தேன். ரசிப்பார்களோ, பார்ப்பார்களோ மாட்டார்களோ என்று இரண்டு முக்கியத் துணுக்குகள் மட்டும் பகிர்ந்தேன். நன்றி மி கி மா.

      நீக்கு
  12. இரண்டு நகைச்சுவைக்காட்சிகளையும் ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம்...

    இரண்டாவது அந்த மறதி நகைச்சுவை.... தர்மத்தின் தலைவன் படத்துல இங்கருந்து சுட்டிருந்தாங்களோ?!!!!

    தர்மத்தின் தலைவன் படத்துல நம்ம ஏஞ்சல் அவங்க சித்தப்பாவுக்கு வல்லாரை ஸ்மூதி கொடுக்கலாமானு யோசிச்சுருப்பாங்களோ??!!!
    இப்பவும் இந்த ரெண்டாவது நகைச்சுவைக்காட்சிக்கு ஏஞ்சல் வந்து நாகேஷ்கு ஹெல்ப் பண்ணுங்கனு சொல்லத் தோனிச்சு ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறதிக் காட்சிகளை வைத்து நிறையவே படங்கள் வந்திருக்கின்றன கீதா. தர்மத்தின் தலைவன் இதைப் பார்த்து எடுத்திருக்கலாம்!

      நீக்கு
  13. காணொளியை பிறகு நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன். வெள்ளியில் புதிய வரவேற்கத்தகுந்த மாறுதல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... மெதுவா வந்துபாருங்க. ஏற்கெனவே பார்த்து ரசித்ததாய்த்தான் இருக்கும்.

      நீக்கு
  14. எல்லா நகைச்சுவை நடிகர்களுக்குமே அடைமொழி உண்டு. ஆனா, நாகேஷ் ஐயாக்கு மட்டும் அடைமொழி இல்லை. அடைமொழி இல்லாமயே நம் நினைவில் நின்றவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்பநாட்களில் தை நாகேஷ் என்று தான் அடைமொழியோடு டைட்டில் போட்டுக் கொண்டிருந்தார்கள்! அப்புறம் தை ஒதுங்கிக்கொண்டது!

      நீக்கு
    2. கிருஷ் ஸார் சொன்ன மாதிரி ஆரம்ப நாட்களில் இவருக்கு தாய் நாகேஷ் (தை நாகேஷ் அல்ல) என்று வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ராஜி சொல்லி இருப்பது வைகைப்புயல், நகைச்சுவைத்திலகம் போன்ற பட்டப்பெயர்கள் எதுவும் வைத்துக்கொண்டதில்லை நாகேஷ் என்று சொல்ல வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  15. வரவேற்கத் தகுந்த வெள்ளி.
    நாகேஷுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள். அந்தக் காலத்தில் எப்பேர்ப்பட்ட கலைஞர்களை தமிழ்த் திரை கொண்டிருந்தது. இப்பவும் இருக்கிறதுகளே (வடிவேலு ஒரு எக்ஸப்ஷன்)..சகிக்கமுடியாத அபத்தங்கள். என்ன செய்வது, இதுகள்தான் கோடிக்கணக்கில் அள்ளிக்கொண்டு போகின்றன. நாகேஷ், சந்திரபாபு போன்றோரின் கடும் உழைப்புக்கு, இயற்கைத் திறனுக்கு, இப்போதிருக்கும் அசடுகள் சம்பளம் வாங்கிச்செல்கின்றனவோ என்னவோ? விதியின் கணக்கு வழக்கு, செட்டில்மெண்ட் அலாதியானது ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் அவர்களின் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன்.

      நீக்கு
    2. அந்தந்த காலத்தில் வருவதைத்தான் ரசிக்க வேண்டி இருக்கிறது. நாகேஷ் போலவோ, சோ, சந்திரபாபு போலவோ இப்போது வராதுதான். அதுவும் நாகேஷும் சோ வும் இணைந்து கலக்கிய தேன்மழை காட்சிகள்.... நன்றி ஏகாந்தன் ஸார்.

      நீக்கு
    3. அட ஆமா சோவை விட்டுப்புட்டேனே...அவருடையது நாடகம் துக்ளக் வீடியோவா வந்துச்சே என் மச்சினர் அதெல்லாம் அப்ப வைச்சுருந்தார். பார்த்து ரசிச்சுருக்கேன் செமையா இருக்கும் வசனங்கள் எல்லாம்..

      அதே போல மௌலியோட ஃப்ளைட் நம்பர் 172 மறக்கவே முடியாத நகைச்சுவை. அதுவும் வீடியோ இருந்துச்சு என் மச்சினரிடம். குழந்தைகள் எல்லாம் மாமியார் வீட்டுல சேர்ந்தோம்னா இதெல்லாம் ஓடும்...

      கீதா

      நீக்கு
    4. சிறந்த நகைச்சுவைகள் என்று தனியாய், சின்னதாய் ஒரு லிஸ்ட் போடலாம்!

      நீக்கு
  16. ஆஹா கொமெடி கொமெடி.. இது நன்றாக இருக்கே.. இன்னும் போட்டிருக்கலாமோ என எண்ணத் தோணுது... சரி சரி போதும் எனும் மனமே பொன் செய்யும் மருந்து:)..

    நாகேஷ் அங்கிளின் கொமெடியில் நல்லது கெட்டது என எதுவுமே இல்லை.. அனைத்தையுமே ரசிக்கலாம்.

    நீங்கள் போட்டிருக்கும் ஞாபக மறதியும் சூப்பர்.. இனம் இனத்தோடுதான் சேருமாமே.. ஹையோ இதை நான் ஸ்ரீராமுக்குச் சொல்லவில்லை:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா... என்னுடைய மறதியை வெற்றி கொள்ள போராடி வருகிறேன்!!!

      நீக்கு
  17. இதில் எனக்கு அதிகம் பிடிச்ச இரண்டு விசயங்களில்.. ஒன்று அவர் புரொப்போஸ் பண்ணும் விதம் அழகு.. சிம்பிள் அண்ட் சுவீட்டாக பட்டெனப் போட்டுடைக்கிறார்..

    டயரிக்குப் பதிலாக நீ இருக்கிறாயா?:).

    ரெண்டாவது... மூவரும் சிரிக்கும்போது, இவர் அப்படியே குதிரை கனைப்பதுபோல வாயைப் பிடிக்கிறார் சிரிக்கவில்லை.. ஆனா சிரிக்கிறாராமாம்ம்ம்ம் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஆஆ அமுதசுரபி கவிஅமுதம் ஆனதோ!!! எப்போலருந்து?!!

      ஹையோ அப்படினா உங்க மனசுல கவிதை கொட்டுதோ?!! அதை எழுத நினைக்கையில் வார்த்தைகள் மூளையில் முட்டுதோ!! கவிகம்பபாரதியிடமிருந்து கவிஅமுதம் அமுதசுரபியாய் கொட்டப் போகுதோ!!!

      ஏஞ்சல்....வெயர் ஆர் யு?!!!!!! கிவ் மீ அ ஹேன்ட்!

      கீதா

      நீக்கு
    2. அது இங்கே தான் இப்போ இருக்கேன் கீதா .அந்த கவி அமுதத்தை பார்த்தத்திலருந்து ஒரு கண்ணு பார்வை மங்கிருச்சு .கைல அடையாளத்துக்கு அந்த கல் வச்ச வளையலை போட்டு வாங்க தொட்டு கண்டு உங்க கைய ஹோல்ட் பண்ணிக்கறேன்

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ ஏஞ்சல் போட்டு வரேன் எனக்கு கவி அமுதம் பார்த்ததும் தலை சுத்துது....கம்பபாரதியா கொட்ட போறங்களோனு

      கீதா

      நீக்கு
    4. ப்ரபோஸ் பண்ணும் விதம் அழகு ஓகே... இந்த மருந்து யாருக்கு என்றதும் டக்கென எனக்கு என்று குடிக்கப்போவார்... அந்த டாக்டரிடம் நல்லவேளை நான் அந்த டாக்டரிடம் போய் மாட்டப்பார்த்தேன் என்பார்... கலக்கல்தான்!

      நீக்கு
    5. ஹா ஹா ஹா கீதா.. கவிதை வெளிவந்துவிட்டதே.. உங்கட கண்ணில இன்னும் படவில்லை:)) கவிதை எழுதாமல் கவிஅமுதம் ஆவேனோ?:))..

      அஞ்சுவுக்கு கண்ணாடி வேணுமோ?:)) அது ஓவரா விண்டரில வோக் போனால் இப்பூடித்தான் ஆகுமாக்கும் கர்ர்:)) இல்லாட்டில் அந்த சிறுகிழங்கின் எபெக்ட்டாகத்தான் இருக்கும்:).

      நீக்கு
  18. ஸ்ரீராம் கர்ர்ர்ர்ர்ர்ர் :) நான் ஒத்துக்கவே மாட்டேன் இதை ..இன்னிக்கு புஷ்பா ஆன்டி இல்லேன்னா வேற ஆன்டி பாட்டு போடுவிங்க பூசாரை ஆத்து ல தள்ளலாம்னு ஐடியா வச்சிருந்தேன் :) சொல்லாம கொள்ளாம நகைச்சுவைக்கு மாத்திட்டங்க :) இனிமே பரோட்டா கட் உங்களுக்கு வீட்ல :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை ஸ்ரீராம பரோட்டா சூரினு நினைச்சுட்டீங்களா ஏஞ்சல்?!!! ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. புஷ்பா ஆண்ட்டி யாரு ஏஞ்சல்? தெரிந்தால் வரும் வாரங்களில் போடலாமே! பரோட்டா வேணாம்டா சாமி!

      நீக்கு
    3. பரோட்டாவில் ஒரு கதை இருக்கு கீதா... நேற்று பரோட்டா சாப்பிட்டு விட்டு ஒரே அவஸ்தை!

      நீக்கு
    4. ஆ ஆ ஸ்ரீராம்...என்ன ஆச்சு சரி அந்த அவஸ்தையை வியாழன்ல போடுங்க...கீதாக்கா சொல்லுவாங்க..."கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுக்குத்தான் நான் அந்த வழிக்கே போறதில்லைனு" அவங்களுக்கும் ஃபுட் அலெர்ஜி நிறைய இருக்கே. அதுவும் வெளில சாப்பிடறதுனா....

      பரோட்டாவை விட அதுக்குத் தொட்டுக்க கொடுக்கற அந்த குருமா அல்லது பாயா தான் உங்க வயித்த பதம் பார்த்திருக்கும்னு நினைக்கிறேன்...

      கீதா

      நீக்கு
    5. எனக்கும் புரியல்ல ஸ்ரீராம் 2ம் தடவை சொல்லிட்டார்.. பரோட்டா சாப்பிட்டது படுத்துது என.. அப்படி என்ன இருக்கோ...

      நீக்கு
    6. ஹலோ மியாவ் உங்களுக்கு எங்கூர் பரோட்டா பற்றி அவ்ளோ விவரம் புரியலை :) பாதி பரோட்டா சாப்பிட்டாலே நெஞ்சு அடைக்கும் ,.இவர் அநேகமா வெஜ் குருமா கூட சாப்பிட்டிருப்பார் டால்டா நெய் எல்லாம் போட்ட இனிய விஷம் :) .மைதா மாவே ஹெவிதானே :) நம்மளமாதிரி நெல்லைத்தமிழன் மாதிரி டீனேஜர்ஸ் சாப்பிட்டாலே கஷ்டம் கொடுக்கும் பாவமில்லியா ஸ்ரீராம் :)))))))) ஹையோ ஹையோ இப்போ நெல்லைத்தமிழன் முகம் ஜெகஜோதியா பிரகாசிக்கிறது தெரியுதே ஹாஹாஹா .

      நீக்கு
    7. பிற்பகல் நேரங்களில் சாப்பிட்டால் ஒன்றும் செய்வதில்லை. சமீப காலமாக இரவு நேரங்களில் எது சாப்பிட்டாலும் நள்ளிரவு எழுப்பி விட்டு நெஞ்செரிச்சல், வலி ஏற்படுத்துகிறது. தோசையுடன் மி.பொ சாப்பிட்டாலும் கஷ்டம். மருத்துவரிடம் மருந்து எழுதி வாங்கிக்கொண்டிருக்கிறேன். இன்னும் வாங்கவில்லை!

      நீக்கு
    8. பராத்தா/பராந்தா என்றாலே அது கோதுமை மாவில் மட்ட்ட்ட்டும் செய்வது தான்! இங்கே தமிழ்நாட்டில் மட்டும் மைதாமாவு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதில் செய்து சாப்பிட்டால் வயிறு வலிக்க மட்டுமா செய்யும்? கோதுமை மாவில் செய்து தரச் சொல்லிச் சாப்பிட்டுப் பாருங்க ஸ்ரீராம், என்னோட சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் படங்களோடு பராந்தா செய்முறை பார்க்கலாம்.

      நீக்கு
    9. http://geetha-sambasivam.blogspot.com/2013/06/blog-post_5.html

      நீக்கு
  19. ஹாஹாஆ :) பூஜைக்கு வந்த மலர் காமெடி செம ஹ்ஹாஹா .அந்த பெரிய பிரேம் கண்ணாடி போட்டு அட்டகாசமா இருக்கார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல் நீங்க உங்க சித்தப்பாவுக்கு வல்லாரை ஸ்மூதி கொடுக்கலையா?!!

      நாகேஷ் மறதி பார்த்ததும் உங்கனினைவு...உங்க வல்லாரை ஸ்மூதி நினைவும்...

      கீதா

      நீக்கு
    2. ஏஞ்சல், கீதா... அவருடைய மேனரிஸங்களையும் ரசித்திருப்பீர்கள். கண்ணாடியை ஏற்றிவிட்டுக்கொள்வது, டைரியை பாக்கெட்டிலிருந்து எடுக்கும் ஸ்டைல்...

      நீக்கு
    3. அஅதே அதே ஸ்ரீராம் நான் மொபைல்ல ப்ளாக் போயி வீடியோவை போட்டு காதுல வைச்சு கேட்டேன் ஸ்ரீராம். ஏன்னா எனக்கு கம்ப்யூட்டர்லயும் சரி மொபைல்லயும் சரி வீடியோ ப்ளே பண்ணி அப்படியே அந்த ஆடியோவை கேட்க முடியறதில்லை. என் இயலாமை. வாய்ஸ் க்ளாரிட்டி கிடைக்கறதில்லை எனக்கு. ஹெட் செட்டும் இல்லையா..அதனால....

      ஸோ முதல்ல ஆடியோ கேட்டேன். இப்பத்தான் வீடியோ பார்த்தேன் ஸ்ரீராம்... செம
      அதுவும் அந்த தோழி தனக்கு வாந்தி, மயக்கம்னு சொல்லும் போது நாகேஷின் எக்ஸ்ப்ரெஷன்ஸ் செம….என்ன எக்ஸ்பெர்ஷன்ஸ் கண்ல.
      டாக்டர் ரூமுக்குள்ள…
      என்ன உளற ஆரம்பிச்சுட்டீங்களா……………………இன்னும் உளறவே ஆரம்பிக்கலை…ஹா ஹா ஹா……டயலாக் டெலிவரி பட்னு..செம..கண்ணாடிய அப்பப்ப தொட்டு அட்ஜஸ்ட் செய்வது…
      சைக்கிள ஸ்டார்ட் செய்யறது…ஹையோ…

      அப்புறம் டைரிய எடுத்து பார்ப்பது…செம மேனரிஸம். டயலாக் டெலிவரி வாவ்!! இந்த டயரி எடுத்துப் பார்ப்பது கூட இந்த சூர்யா கஜனில செய்வார்……கஜனி ஃபுல் மூவி பார்த்ததில்லை. இப்படி பார்க்கும் சில சீன்ஸ்.

      கீதா

      நீக்கு
    4. இப்ப நான் கூட இந்த மறதிய வெல்ல போராட்டம் தான் ஸ்ரீராம். எழுதி வைத்தல்…..அப்புறம் மோட்டர் போட்டா கரெக்டா 12 நிமிஷத்துல ஆஃப் செய்யனும் சோ அதுக்கு மொபைல்ல அலார்ம் வைச்சுக்கறது….
      அப்புறம் வாஷிங்க் மெஷின் இங்க இப்பதான் வாங்கியது. செமி ஆட்டோமேட்டிக். அதுல பெட்ஷீட்ஸ் எல்லாம் தோய்க்கும் போது தண்ணி வேற ரொம்ப மெதுவாதான்வ் வருமா ஸோ அது ரொம்ப 5, 10னிமிஷம்னு மொபைல்ல அலார்ம் வைச்சுக்கறது….இல்லைனா மெஷின் ல தண்ணி ரொம்பி வேஸ்டா ஆகுமெ…அதனால இப்படி எல்லாம் கிச்சன் வேலைக்கும் அலார்ம்னு போய்ட்டுருக்கு……ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    5. சில சமயங்களில் பகீர் என நினைவுக்கு வரும் மறந்து விட்ட விஷயம்... காலம் கடந்து நினைவுக்கு வந்து பயனில்லாமல் போன விஷயங்களும் உண்டு கீதா.

      நீக்கு
    6. நாகேஷ் காமெடி எல்லாம் காட்சியுடன் பார்த்தால்தான் சுவாரஸ்யம். பாடல் காட்சிகள்தான் காட்சி இல்லாமல் கானம் ரசிக்கவேண்டும்!

      நீக்கு
  20. நாகேஷ் சந்திரபாபு இவங்கல்லாம் லெஜண்ட்ஸ் ...என் பொண்ணுக்கு கூட நாகேஷ் ரொம்ப பிடிக்கும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே ஏஞ்சல் அவங்கள மாதிரி இப்பலாம் நகைச்சுவை காமெடிக்கு ஆள் இல்ல. ஏகாந்தன் அண்ணா சொல்லிருக்காப்ல...எக்செப்ஷன் வடிவேலு...மத்தவங்கலாம் நோ நகைச்சுவை...

      கீதா

      நீக்கு
    2. குழந்தைகளும் நாகேஷை ரசிப்பது பெரிய விஷயம். நிறைவாய் பேர் பரோட்டா சூரி, கஞ்சா கருப்பு என்று அலையும்போது...!

      நீக்கு
    3. ஹா ஹா ஸ்ரீராம் என் மகளுக்கு ச /நீங்க சொன்ன அந்த காமெடியன் இப்போ இருக்கும் யாரையும் பிடிக்காது :)

      நீக்கு
  21. எந்த பாத்திரமானாலும்நடிப்பில் மன்னன் நாகேஷ்

    பதிலளிநீக்கு
  22. என் நினைவில் எப்பொழுதும் நிற்கும் நகைச்சுவை, சோ & நாகேஷ் "தேன்மழை"

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி அருமையான வெள்ளி. பாடல்களுக்கு பதிலாக வித்தியாசமான முயற்சியாக காமெடி சீன்கள். அதிலும் நாகேஷ் காமெடிகள்... மிகவும் நன்றாக உள்ளது. நாகேஷ் காமெடிகள் எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் பிடிக்கும். அந்த காலத்தில் எந்த ஒரு படத்திலும், (ஒரு சில படங்களை தவிர) காமெடி இல்லாமல் கதை எடுபடாது. கதையும். நகைச்சுவைக் கதையும் சற்று ஒன்று போலத்தான் வரும். நாகேஷ் நகைச்சுவையில் மட்டுமில்லாது குணச்சித்திர நடிப்பிலும் திறமையை காட்டுபவர். அவர் நடிப்பும் நன்றாக இருக்கும். இன்று அவரை நினைவுபடுத்தி வெள்ளியை சிறப்பாக்கியதற்கு நன்றிகள். மிகவும் ரசித்தேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... இந்த முஅயற்சி முன்னரும் நடந்துள்ளது. தேன்மழை திரைப்பட நாகேஷ் - சோ காட்சிகளை முன்னர் பகிர்ந்திருக்கிறேன். அப்போது போதிய வரவேற்பைப் பெறவில்லை!

      நீக்கு
  24. மறதி எனக்கு எவ்வளவு இருக்கு என்றால் ,பின்னூட்டம் இடவெண்டியது அதை பப்ளிஷ் செய்ய மறப்பது.
    மருந்து எடுக்க பெட்டியைத் திறப்பது எடுக்காமலே மூடுவது. நொடிகளில் வரும் மறதி.
    அலார்மிங்க்.
    பரவாயில்லை.சாப்பிட்ட மருந்தையே திருப்பி சாப்பிடாத வரை சரி.ஹாஹா.
    ஸ்ரீராம் ஏம்மா என்ன வயிற்றுவலி மா.
    இங்க குளிர் எல்லாவித தொல்லைகளையும் கொடுக்கிறது. குழந்தை கிருஷ்ணாவுக்கே வயிற்றுவலி.
    அஜீரணம்.
    எல்லோரும் பத்ரமாக இருங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... மருந்தை இரண்டு முறை சாப்பிடும் அளவு மறதியா? சிரிக்கிறேனே தவிர நானும் அந்த மாதிரி சந்தேகப்பட்டதுண்டு அம்மா.

      நீக்கு
  25. அருமையான நகைச்சுவைக் காட்சிகள் ஸ்ரீராம்ஜி.

    படமும் பார்த்த நினைவு இருக்கு. நாகேஷ், சந்திரபாபு, சோ, நகைச்சுவை மிக நன்றாக இருக்கும்.

    அதான் தெரியுமே என்று வரும் மன்னாரென் கம்பெனி நல்ல நகைச்சுவைக்காட்சி.

    திருவிளையாடல் தருமி, தில்லானாமோகனாம்பாள் வைத்தி, மாடி மாது போன்றவை அருமையான கேரக்டர்கள் நாகேஷிற்கு. நாகேஷ் எந்தக் கதாபாத்திரத்தையும் நன்றாக நடிக்கும் திறமை படைத்தவர்.

    பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!