புதன், 8 மே, 2019

புதன் 190508 :: சிரித்து வாழவேண்டும்

           
சென்ற வாரக் கேள்வியாகிய பொன்னியின் செல்வன் கதையில் உங்களைப் பிரதிபலிக்கும் பாத்திரம் எது என்ற கேள்விக்கு பதில் கூறியுள்ள எல்லோருக்கும் நன்றி. ரொம்பப் பேருங்க சொல்ல நினைத்து, சொல்வதற்குத் தயங்கி ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டீர்களோ என்றும் ஒரு சந்தேகம் இருக்கு. 

இந்த வாரம் நாங்க ஒன்றும் கேட்கவில்லை. 




ஏஞ்சல் :

1, உண்மை பேசுவதாக நினைத்து பிறர் மனதை புண்படுத்துவது சரியா ?
அப்படி சமீபத்தில் நடந்த நிகழ்வு அல்லது சம்பவம் இருக்கா ?

# நடந்தது என்பதால் மட்டும் எதுவும் எல்லாருக்கும் சொல்லவேண்டிய முக்கிய விஷயம் ஆகிவிடாது. இதை அறிந்தால் "நான் உண்மையைத்தானே சொன்னேன்" என்று புலம்ப வேண்டி வராது.

& உண்மை பேசுவதாக 'நினைத்து'  --- ஹா ஹா ஹா! உண்மையாகவே உண்மை பேசுபவர்கள், உண்மை பேசுவதாக நினைத்துக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. பிறர் மனது புண்படும் என்றால், எதையுமே பேசாமல் இருந்துவிடுதல் நல்லது. 

 


2, கடவுள் இல்லை என்கிறார்களே அது எப்படி அவர்களுக்கு தெரியும் ? atheism கற்றுக்கொடுப்பது எதை ?

# கடவுள் உண்டு என்பதற்கும் இல்லை என்பதற்கும் ஆதாரம் என்று எதுவும் கிடையாது. இது நம்பிக்கை சார்ந்த விஷயம்.

& கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பது பிரச்னை அல்ல. கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறதா அல்லது இல்லையா என்பதுதான் பாயிண்ட். நாத்திகமோ அல்லது ஆத்திகமோ யாரும் மற்றவருக்குக் கற்றுக்கொடுக்க இயலாது.  
            
        
3, தீயன தீமை இல்லாமல் நல்லதை புரிந்துகொள்ள முடியுமா ?

# தாராளமாக முடியும். அப்போது  "நல்லது" என்ற லேபிள் இருக்காது. அவ்வளவுதான்.

& நம் பார்வையில் நல்லது / தீயது மற்றவர்கள் பார்வையில் அவ்வாறே இருக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது.           

4, நம் வாழ்க்கையில் எதையெல்லாம் நம்மால் கண்ட்ரோலில் வைக்க முடியும் ? கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று நீங்கள் நினைப்பது எவையெவை ?

# நம் கட்டுப்பாட்டுக்குள் ஆயிரம் கொண்டு வர முடியும். அதைப் பட்டியல் இடுவது சிரமம். 
அடுத்தவர் வாழ்க்கையை நாம் வழி நடத்திச் செல்ல இயலாது.

& நம் கட்டுப்பாட்டில் இருப்பது நாம் செலவழிக்கும் நேரம் மட்டுமே. வேறு எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இல்லை. மனைவி / கணவன் குழந்தைகள் உட்பட. நாம் செலவிடும் நேரத்தை, நமக்கும் மற்றவர்களுக்கும் உபயோககரமாக செலவிட முடிந்தால் அதுவே சந்தோஷம். 

5,உலகம் அழிந்தபின் நாமெல்லாம் மேலே போய்டுவோமே அங்கேயும் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமா ?
இது கண்டிப்பாக சிரி :) யஸ் கேள்விதான் ஒரே இடத்தில நாமெல்லாம் கூடவே அனுஷ் தமன்ஸ் இவங்களும் இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சி பார்த்தேன் :))))))))))))

# இறப்பின் பின் என்ன என்பது விளங்காத புதிர். பீதியளிக்கும் மர்மம்.
ரம்பை ஊர்வசிகள் வாழும் இடத்தில் தானா ஆனாக்களுக்கு மதிப்பேது !!

& அங்கே அனுஷ், தமன்ஸ் மட்டும் வந்து, அவர்களுடைய மேக்கப் மேன் வரவில்லை என்றால், வாழ்க்கை பயங்கரமாக ஆகிவிடுமே! நினைத்துப் பார்க்கவே நடுக்கமா இருக்கு! 

 

                
6, வாழ்க்கை என்பது கொஞ்ச காலம்தான் அதனால் இயன்றவரை சந்தோஷமா இருக்கணும் நாலுபேரையாவது சிரிக்க வைக்கணும் என்ற கொள்கை பற்றி உங்கள் கருத்து என்ன ?

# கொஞ்ச காலம்தான் வாழ்க்கை. இதில் அடுத்தவரை திருப்திப் படுத்துவது கடினம். அடுத்தவர் மனம் நோகடிக்காமலிருப்பது சுலபம்.

& நல்ல, உயர்ந்த ஜென் கொள்கை. மற்றவர்களின் சந்தோஷத்தில்தான் இருக்கிறது நம் சந்தோஷம்.          

7, இறந்தோருக்கு மறைந்தோருக்கு மரியாதை கொடுக்கணும்னு தானே நம் பெற்றோர் சொல்லி வளர்த்திருக்காங்க,ஆனா அப்படி மறைந்தவர்களின் இருண்ட பக்கங்களை தோண்டி எடுப்பது நியாயமா ?

# இறந்தவர்களின் தவறுகளை அலசிப் பயனில்லை எனினும் பொதுவாழ்வுப் பிரபலங்களுக்கு இது பொருந்தாது. காரணம், அவர்களைக்காட்டி ஆதரவு கோரும் சந்ததி அல்லது சீடர் கூட்டம்.

8, வரும் முன் காப்பது நல்லதா ? வந்த பின் காப்பது நல்லதா ? இதிலநோய் பற்றி மட்டும் கேட்கலை பொதுவா வாழ்வில் எதிர்கொள்ளும் பல விஷயங்களை அலசி யோசித்து கேட்கிறேன் . நீங்கள் வரும்முன் காப்போனா அல்லது வந்தபின் காப்பவரா ?

# வருவதை உணர்ந்தால் மட்டுமே வருமுன் காத்தல் சாத்தியம். எல்லாருமே வ.மு வ.பி இரண்டு தளங்களிலும் இயங்குபவர்கள்தாம். 

& வரு முன் காப்பு  நல்லதுதான் (எல் ஐ சி ஏஜெண்ட்களுக்கு!) வந்த பின் காப்பதற்கு எதுவும் இல்லை. எந்த நிகழ்வையும் எதிர்பார்த்து, அது வந்தால் அல்லது வரும்போது எதிர் வினை ஆற்றுதல் அல்லது ஏற்றுக்கொள்ளுதல் வீரம் + விவேகம்.                  

9, நான் அஞ்சாங்க்ளாஸில் படிக்கும்போதிருந்து லவ் ,4 வது படிக்கும்போதிலிருந்து லவ் ,அப்பா பர்சில் திருடினேன் கடையில் திருடினேன் , டீச்சரை சைட் அடிச்சேன் சிகரெட் திருட்டு தம்மடிச்சேன் என்று பப்லிக்கா காதல் மற்றும் சுய பிரதாப பெருமைகளை அள்ளிவீசுவோர் செய்வது சரியா ? இதுங்க பாட்டுக்கு இப்படி சொல்கிறார்கள் இதைப்பார்த்து சபலத்தில் வீழ்வது மனவலிமையற்ற சின்னஜிறுசுகள் அல்லவா ?
இதெல்லாம் பெருமைக்குரிய விஷயம்னு பொது வெளியில் சொல்லக்கூடியவைகளா ???

# தம் பெயர் கவனம் பெற வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக ஊடகத் தொடர்பு உடையவர்கள் இப்படி விளம்பரம் தேடலாம்.

& தப்புதான், தப்புதான். ஆனா பாருங்க .... நீங்க சொன்னதுல சிகரெட்டு திருட்டுதம் தவிர மீதி எல்லாவற்றையும் நான் செய்துள்ளேன்.              

10,இதை செய்யணும் செய்யணும்னு நினைத்து அதை செய்ய சந்தர்ப்பம் அமையாமற்போன விஷயம் ஏதேனும் உண்டா ?

 # நிறைய உண்டு. 

முக்கியமாக ஆசியர் பெருமக்களுக்கு நன்றிசொல்லி நமஸ்காரம் செய்ய ஆசை இருந்தும், அதிர்ஷ்டமில்லை.

& நிறைய பரிசோதனைகள் - வெவ்வேறு துறைகளில் செய்ய நினைத்ததுண்டு. இப்போதைக்கு என்னுடைய சமையல் அறை பரிசோதனைகள் மட்டும் கொஞ்சம் நிறைவேறி வருகின்றன. 

11, ஜஸ்ட் ஈட் (just eat) ஆன்லைனில் உணவு ஆர்டர் கொடுத்து செக்கவுட் வரும்போது ஒரு மசாலா தோசை விலை மட்டுமே நம்மூர் கணக்கில் நானூறு ரூபாயா என்று அலறி கேன்ஸல் செய்து அவசர அவசரமா அரிசி உப்புமா கிளறுவோர் பற்றி உங்கள் கருத்து ??
இந்த கேள்விக்கு மட்டும் நல்ல பதில் பாராட்டுக்களுடன் வேண்டும் :))))))))))))))))

# சிக்கனமா சௌகரியமா என்பது அந்தந்த சந்தர்ப்பத்தைப் பொறுத்தது.
விலைக்கேற்ற தரம்-வசதி இல்லாவிடத்து அதிருப்தி பலமுறை அனுபவித்திருக்கிறேன். 

& புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. இந்த & ஓசியில் கிடைத்தாலும் உப்புமா உண்ணமாட்டான். அதற்காக நானூறு ரூபாய் மசாலா தோசை சாப்பிடுவேனோ என்று நினைக்கவேண்டாம். எனக்கு நானே கரைத்து ஊற்றி செய்துகொள்ளும் MTR ரவா தோசை (Mix) தோசை போதும். தேவாமிர்தம். 

பாராட்டுகள் ! (நீங்கதானே கேட்டீங்க!) 

12,நல்ல சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு முக்கியமானவை எவையெவை ??
நான் நினைத்து வைத்திருப்பதை அடுத்த வாரம் சொல்வேன் :)

 # அன்பு பொறுமை விட்டுக் கொடுக்கும் சுபாவம், அடுத்தவர் தவறைப் பெரிது படுத்தாத பெருந்தன்மை.

& கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு, ஒருவர் மற்றவரின் நிறை / குறைகளோடு அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டு, ஒருவருக்கொருவர் ஆதரவாக, அன்பாக இருந்தால் அதுவே சந்தோஷமான திருமண வாழ்க்கை. 

13, கோவிந்தா கோவிந்தா என்பது எதை குறிப்பது ?
எப்ப எந்த சூழலில் சொல்லப்படுவது ? 


& ஒரு கோவிந்தா : 


இரண்டு கோவிந்தா இந்தக் காலத்தில் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு அர்த்தங்களோடு கூறப்படுகிறது. 


# நெல்லைத் தமிழரைக் கேட்டு அறிந்து கொள்ளலாம். நான் பதில் சொல்ல முற்பட்டால் என்மேல் சிலர் வைத்துள்ள மரியாதை கோவிந்தா...!!

வாட்ஸ் அப் கேள்விகள் : 


நெல்லைத்தமிழன் :

நல்ல குணமோ இல்லை கெட்ட குணமோ, தன் அப்பா இல்லைனா தன்னிடமிருந்து ஒரு குணம் தன் மகனுக்கோ இல்லை பேரன்/பேத்திக்கோ இருந்து வெளிப்படும்போது ஏன் மனம் மகிழ்கிறது?  அது *தங்களது வாரிசுதான்* என்ற எண்ணமா?

# தம் பாரம்பரியம் தொடர்கிறதெனும் சந்தோஷம்.

& நம் குணத்தை  நம் பேரப்பிள்ளைகளின் செயல்பாட்டில் அல்லது சொற்களில் வெளிப்பாடாகப் பார்ப்பது, நாம் இருக்கின்ற க்ரூப் போட்டோவில் நாம் யாரை அடிக்கடி பார்த்து ரசிக்கிறோமோ அதைப் போன்றதுதான். நீங்க இருக்கிற க்ரூப் போட்டோவில் நீங்க பார்ப்பது யார் முகத்தை? 

ஆபீசில் வேலை பார்ப்பவர்கள், அல்பப் பொருட்களைத் திருடிக் கொண்டுவருவார்களே - ஸ்டேப்ளர், பென்சில், பேனா, நோட்டு போன்று. அது எதனால்?

 # அகப்பட்டதைச் சுருட்டுவது நம் பாரம்பரியம்.
வெள்ளைக்காரர் காலத்திய ஆன்ட்டி எஸ்டாப்ளிஷ்மெண்டல் ஆட்டிட்யூடின் தொடர்ச்சி. பிடிபட மாட்டோமென்ற நம்பிக்கை இருப்பின் எல்லாரும் குற்றவாளிகளே என்பது மெஜாரிட்டி செண்டிமெண்ட்.

& அதெல்லாம் 'திருடுவது' என்று ஒரேயடியாக சொல்லிவிடமுடியாது. திருடுவது என்பதன் விளக்கம் : ஒருவருக்கு சொந்தமான பொருளை, அவருக்குத் தெரியாமல் அல்லது அவர் அனுமதி இன்றி நம் சொந்தமாக்கிக் கொள்வதுதான். அலுவலக பொருட்கள் யாருக்கு சொந்தம்? நாம் உபயோகிக்கும் பொருட்கள் நம் சொந்தம் தானே! எந்த தனி நபரின் சொந்தம் கிடையாதே ...... என்றெல்லாம் சொல்லிக்கொள்ளலாம் ........ என்றாலும் ....... 

 சாதாரண வார இதழ்களான விகடன் போன்றவைகளும், 'மத்திய அரசு பொருளாதாரத்தில் என்ன செய்யவேண்டும்' என்றெல்லாம் கட்டுரை எழுதுகிறார்களே... இதை முதலில் அந்தப் பத்திரிகையின் குழுவில் உள்ளவர்களே படிப்பார்களா? இதனால் யாருக்கு உபயோகம்?
                 
# அப்படியல்ல. " சில கற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு அச்சாணி யன்னதோர் சொல் " என்றவாறு மெய்ப்பொருள் காண இதுவும் பயன்படலாம்.

& நானும் அப்படி நினைப்பதுண்டு. அவை எல்லாம் வேஸ்ட் என்றுதான் எனக்கும் தோன்றும். வார இதழ்களில் படம் மட்டும் பார்ப்பவர்கள் அதிகம் பேர். படமும் பார்த்து, ஜோக்ஸ் மட்டும் படிப்பவர்கள் என்னை மாதிரி ஆட்கள். கதைகள், தொடர் வதைகள் படிப்பவர் ஏராளம். அரசியல் தலையங்கம் எல்லாம் படிப்பவர்கள் பெரும்பாலும் பல்லு போன கிழவர்கள்தான். அவர்கள் படித்து முடித்ததும் மூக்குக்கண்ணாடியை கழற்றி எங்காவது வைத்துவிட்டு, பிறகு மூ க வை எங்கே வைத்தோம் என்பதையே மறந்துவிடுவார்கள். அப்புறம் படித்தது மட்டும் எங்கே நினைவில் இருக்கும்! 

=============================================

நன்றி . மீண்டும் சந்திப்போம். 

=============================================

109 கருத்துகள்:

  1. மகிழ்வான காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம் எல்லோருக்கும்.

    ஏஞ்சலின் முதல் கேள்விக்கு பதில்கள் அருமை. & கருத்தே நான் நினைப்பதும். பிறர் மனம் புண்படக் கூடாது என்று தோன்றும் இல்லை என்றால் புண்படாமல் சொல்ல முடியும் என்றால் மட்டுமே..

    வருகிறேன் மீண்டும்...அருவில குளித்துவிட்டு!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. 2 வது கேள்விக்கான பதிலும் இரண்டு பதில்களுமே சூப்பர்.

    முதல் கேள்விக்கான வீடியோ அப்புறம் தான் பார்க்க முடியும்.

    தில்லில கருத்து போட்டு அது அங்கு பதிவதற்குள் இங்கு வந்து ஒரு கருத்து ஹிஹிஹி கருத்து பதிவதற்கு மிகவும் நேரம் எடுக்கிறது...அங்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம்! அருவிக் குளியலா ! ஆஹா ஓஹோ பேஷ், பேஷ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணே வெர்ச்சுவலாத்தான் ஹிஹிஹிஹி ஆனாலும் ஜார்கன்ட்ல ரஜ்ரப்பாப்ல அருவிய பார்த்ததே மகிழ்ச்சியா இருந்துச்சு...முடிஞ்சா நீங்களும் ஒரு எட்டு அருவில வெர்ச்சுவலா குளிச்சுட்டு வந்துருங்க...கூட்டம் வரதுக்குள்ள... ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. அட! புஸ் ஆயிடுச்சே!

      நீக்கு
  4. நம் பார்வையில் நல்லது / தீயது மற்றவர்கள் பார்வையில் அவ்வாறே இருக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது.//

    உண்மைதான் ஆனால் சில பொதுவானவையாக, யுனிவெர்ஸலாக செய்யக் கூடாது என்று காலம் காலமாக நம்மை நல்வழிப்படுத்த என்று சொல்லப்பட்டு வருகிறதே இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதையும் ஆராயாமல் ஏற்றுக்கொள்வதைவிட, நம் இயல்பு நம் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் அடிப்படையில் அனுசரிப்பது நல்லது.

      நீக்கு
    2. கௌ அண்ணா உங்க பதில் ரொம்பவே ஜிந்திக்க வைக்கிறதே!!!!

      கீதா

      நீக்கு
  5. 5 வது கேள்விக்கு முதல் பதில் செமையா சிரிக்க வைச்சுதுனா ரெண்டாவது பதில் ஹையோ குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்துவிட்டது!!! இரண்டு பதில்களுமே மிக மிக ரசித்தேன்...

    இப்படி அரம வையும், நெல்லையையும் பொங்கி எழ வைக்கலாமோ!!!!!! ஹா ஹா ஹா ஹா ஹா

    கௌ அண்ணா அனுஷ் மேக்கப் இல்லாமலேயே அழகாக்கும்!!! நெல்லை வரதுக்குள்ள நான் ஓடிப் போய் ஒளிஞ்சுகிட்டு இங்க பதில் போடறேன்...ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லையும் ஸ்ரீராமும் சேர்ந்து வந்தால், என் டெப்பாசிட் காலி!

      நீக்கு
    2. "நமக்கு ஒரு கண் போனாலும் எதிராளிக்கு ரெண்டு கண்ணும் போச்சேங்கற எஃபெக்ட். ஹாஹா... தமன்னா படத்துல மோசமா தெரியலை... ஏதோ பத்து வயசுதான் கூடத் தெரியறாங்க...

      நீக்கு
    3. நெனச்சேன் நெல்லை. ஆக, 'த' நேச்சுரல் பியூட்டிதான் போலிருக்கு. வாங்க ஸ்ரீராம் வருவதற்குள் நம்ம ஓடிடலாம்!

      நீக்கு
    4. கௌ அண்ணா ஹா ஹா ஹா ஹா....ஒரு ஆள் தான் வந்திருக்கார்...எஃபெக்ட் கம்மிதான் ஹிஹிஹி அதுவும் அவரே சேம் சைட் கோல்!!!!

      கீதா

      நீக்கு
    5. சத்தமா சொல்லாதீங்கோ. அ ர ம தலைவர் காதுக்குக் கேட்டுவிடப்போகிறது!

      நீக்கு
    6. இதுவரைக்கும் கேக்காமயா இருக்கும் கேட்டுருக்கும் ..பாய்ந்து வரலியே!! ..நெல்லையே சேம் சைட் கோல் போட்டதுனால பட்டாசு பிசுபிசுத்துப் போச்சுனு.... நெல்லை அவர் ஆள 10 வயசு கூட்டிச் சொன்னாப்புல நாங்க அனுஷை அப்படிச் சொல்லிருவோமாக்கும்!! ஆசை தோசை அப்பளம் வடை.. ஹிஹிஹி....

      கீதா

      நீக்கு
    7. ஸ்ரீராம் இன்னிக்கி மௌனவிரதம் போலிருக்கு!

      நீக்கு
    8. //நெல்லை அவர் ஆள 10 வயசு கூட்டிச் சொன்னாப்புல // - ஆமாம் கீதா ரங்கன். 16 + 10 = 26 வயசு. யாரது..அங்க மயக்கம் போட்டு விழறது... அதுக்கு நான் பொறுப்பில்லை.

      நீக்கு
    9. பொங்கி எழலாம்னு பார்த்தால்... நேரமானதில் யாரும் இல்லா இடத்தில்போன்க வேண்டாம்னு சும்மா போறேன்!

      நீக்கு
    10. அட! இது முழு போங்கு ஆட்டம்!

      நீக்கு
  6. 6 ற்கான பதில்களும் சூப்பர்.

    மிக உயர்ந்த கொள்கை ஜென் கொள்கை ஆனால் மத்தவங்களை நாம் என்னதான் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயன்றாலும் நக்கீரர் பாணில வாழறவங்களை திருப்திப்படுத்தவோ ஜந்தோஷப்படுத்தவோ முடியாதே! ஐடியலிஸ்டிக்காக இருப்பவர்களை திருப்திப்படுத்தவெ முடியாதே. திருப்தி இல்லைனா சந்தோஷமும் வராதே அண்ணே...ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்றவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ளுதல் வேறு, அறிமுகம் ஆகாதவர்களுக்கு அவர்கள் எதிர்பாராத சந்தோஷத்தை கொடுப்பது வேறு. ஆனால் அந்த சந்தோஷத்தை தொடர்ந்து அவர்களுக்கு கொடுக்கமுடியாது. அதே செய்கை, அதே சந்தோஷத்தை அவர்களுக்கு நிரந்தரமாகக் கொடுக்காது.

      நீக்கு
  7. வந்திருக்கும் தி/கீதா, மற்றும் கௌதமன் அவர்களுக்கும், வரவிருக்கும் துரைக்கும், இனி வரப்போகும் அனைவருக்கும் வணக்கம், வாழ்த்துகள், நல்வரவு.

    பதிலளிநீக்கு
  8. இன்றைக்கென்ன யாரையும் காணோம்? வந்திருக்கும், வழவிருக்கும் அனைவருக்கும் காலை வணக்கம்.

    கேள்வி பதிலை ரசித்ததைவிட, இந்த பதில் இவர் எழுதியிருக்கலாம் என்று guess செய்யத் தோன்றியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நதிமூலம், ரிஷிமூலம், பதில் மூலம் ஆராயக்கூடாது! அனுபவிக்கவேணும் அம்புட்டுதான் வாழ்க்கை!

      நீக்கு
    2. இன்றைக்கென்ன யாரையும் காணோம்?//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை!! காலைலேயே குதிச்சாச்சு அதுவும் அருவிக் குளியல் முடிச்சு ஃப்ரெஷ்ஷா வந்திருக்கேன் ...கண்ணுல படலையோ!! ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  9. உயர்ந்த மனிதன் காணொளினு தெரிஞ்சதுமே பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு! லட்சத்து நூறாம் முறை பார்க்கணுமானு நினைச்சேன். நல்லவேளையா அது பொய் சொல்வதற்கான உதாரணம்னு புரிஞ்சுது. பிழைச்சேன். ஜிவாஜியைப் பார்ப்பதில் இருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா ஹா ஹா ஹா நான் நினைச்சேன் !!

      ஆனா பாருங்க நான் இந்தப் படம் பார்த்ததில்லை. இப்ப இந்த சீன் பார்த்ததும் படம் பார்க்கணும்னு தோனிடுச்சு...சௌகார் நடிப்பு சிரிக்க வைக்கிறது!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    2. தி.கீதா உ.ம.படத்தில் சௌகார் நடிப்பு மிக நன்றாக இருக்கும். சில பணக்கார பெண்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்தக் கொள்வார்கள். ஆனால் ஒன்றும் தெரியாது. அப்படிப்பட்ட இன்னொசன்ட் கதாபாத்திரத்தை மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார். சிவகுமார் நடிப்புதான் சிரிப்பாக இருக்கும்.
      கீதா அக்காவே லட்சம் முறை பார்த்திருக்கிறார். பயப்படுகிறார் என்றால் நல்ல படம்தானே.

      நீக்கு
    3. நல்ல விமரிசனம். கரெக்ட்.

      நீக்கு
    4. பானு மா.உ ம ல பாரதியின் நடிப்பும் எனக்குப் பிடிக்கும். சௌகார்
      + ஜி.சகுந்தலா சீன்ஸ் நகைச்சுவை மிக நன்றாக இருக்கும்.

      நீக்கு
  10. இன்னிக்கு கௌதமனோட நாள். அவர் தான் வந்திருக்காரே! கேள்விகளும் பதில்களும் அட்டகாசம்.

    பதிலளிநீக்கு
  11. கோவிந்தாவுக்கான கௌதமன் அவர்கள் சுட்டி இருக்கும் விளக்கப் பத்தி அருமை! கோவிந்த பட்டாபிஷேஹம் குறித்து நான் எழுதிய பதிவின் சுட்டி இங்கே http://sivamgss.blogspot.com/2017/12/blog-post_30.html

    பதிலளிநீக்கு
  12. 12 ஆவது கேள்விக்கு இருவரின் பதிலுமே அனைவரும் கடைப்பிடிக்க, நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. இரண்டு பதில்களும் அற்புதம். இந்தக் காலத்துக்குத் தேவையான அறிவுரை.

    பதிலளிநீக்கு
  13. 12 ற்கான பதில் செம செம ரெண்டுமே!! யெஸ் யெஸ் அதே அதே தான். ஆனால் பலரது வாழ்விலும் அதுதான் மிஸ்ஸிங்க்

    கீதா

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. 4.நாம் செலவிடும் நேரத்தை, நமக்கும் மற்றவர்களுக்கும் உபயோககரமாக செலவிட முடிந்தால் அதுவே சந்தோஷம். //

    12.கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு, ஒருவர் மற்றவரின் நிறை / குறைகளோடு அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டு, ஒருவருக்கொருவர் ஆதரவாக, அன்பாக இருந்தால் அதுவே சந்தோஷமான திருமண வாழ்க்கை.

    ஏஞ்சலின் கேள்வியும் உங்களின் பதிலும் அருமை.

    பதிலளிநீக்கு
  16. புரிந்துகொண்ட விட்டுக்கொடுக்கும் திருமண வாழ்க்கை - இந்தியாவில், திருமணம் என்பது ஒரு தடவை நிகழும் நிகழ்வு. இங்க பெரும்பாலும் ஓரளவு புரிதல் உண்டு. சண்டை ச்ச்சரவு இருந்தாலும் எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணி வாழ்க்கை ஓடிடும். மேற்கத்தைய நாடுகள் மாதிரி அன்சர்டர்னிடி இருக்காது, எப்போ யார் பிச்சிக்கிட்டு போயிடுவாங்கன்னு.

    அங்க இந்த காரணத்தால வேலைகளை பகிர்ந்துக்கறாங்எ, தவறுகளை திருத்திக்கறாங்க. இங்க அப்படி இல்லையோன்னு நினைக்கறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் ஒரு கோணம். அந்தந்த நாடுகளின், மக்களின் கலாச்சார வழக்கம் பெரும் பங்கு ஆற்றும். மாற்றங்கள் எல்லா கலாச்சாரங்களிலும் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன.

      நீக்கு
    2. சண்டை ச்ச்சரவு இருந்தாலும் எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணி வாழ்க்கை ஓடிடும்//

      நெல்லை எப்படியோ என்பதில் நிறைய சொல்லலாம். அதன் பின் நிறைய இருக்கு. மனிதன் அடிப்படையில் விரும்புவது மகிழ்ச்சி. ஆனால் அது இந்த எப்படியோவில் பல சமயங்களில் காணாமல் போயிடும் அதுவும் ஒரு லெவலுக்கு மேல் சலிப்பு வந்துவிடும் நெல்லை. மன அழுத்தமும் வந்துவிடும். அதனால் பிரிந்தால் நல்லது என்று தோன்றிவிட்டால் பிரிந்துவிடுவது நல்லது. இல்லை பிரியக் கூடாது ஆனை பூனை என்று சொல்லிக் கொண்டு உடைந்த கண்ணாடியை ஒட்ட வைத்தால் அது உடைந்து உடைந்து கீறிப் பார்க்கும். அப்புறம் சில் சில்லாகிவிடும். ஆனால் அந்த முடிவு எடுக்க முடியாமல்தான் சிலர் தவிப்பது கடைசியில் மன அழுத்தம்.

      கீதா

      நீக்கு
    3. பிரிந்தால் நல்லது என்று தோன்றிவிட்டால்.....இதனுடன் கூடவே பிரிந்து தனியாக வாழ முடியும் என்ற தைரியமும் பொருளாதாரமும் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இக்காரணங்களாலும் பலர் பிரிய முடியாமல் அந்த எப்படியோவில் தொலைந்து போகின்றனர்.

      கீதா

      நீக்கு
    4. அங்க இந்த காரணத்தால வேலைகளை பகிர்ந்துக்கறாங்எ, தவறுகளை திருத்திக்கறாங்க. இங்க அப்படி இல்லையோன்னு நினைக்கறேன்.//

      அதே நெல்லை.....அங்கு எனக்கு அவ்வளவா சொல்லத் தெரியலை நெல்லை ஆனால் இங்கு கண்டிப்பாகத் தவறுகளைத் திருத்திக் கொள்வது என்பது அபூர்வம்...

      கீதா

      நீக்கு
    5. @ கீதா ரங்கன் - //அந்த முடிவு எடுக்க முடியாமல்தான் // - இங்க பொதுவா பசங்க பொறந்துட்டா, அவங்களுக்காக வாழ்க்கையை சகிச்சுக்கிட்டு வாழறது சகஜம். என்னதான் கருத்து வேறுபாடுகள் எழுந்தாலும், எல்லாம் காலத்தினால் சரிசெய்யப்பட்டுவிடும். தனியா வாழமுடியும்/பொருளாதாரம் - இதெல்லாம் கொஞ்சம் அதீதமான சிந்தனை. எதுவும் மாறும் என்ற நம்பிக்கையில்தான் வாழணும். அதிலும், பசங்க பொதுவா, எங்க நேர்மை/நியாயம் இருக்கோ அந்தப் பக்கத்தைக் கைவிடமாட்டாங்க.

      நீக்கு
  17. கேஜிஜி சார்... உங்க பரிசோதனைகள் எதுவும் தி பதிவுக்கு வரலையே.... வெற்றி கிடைக்கும் சதவிகிதம் மிகவும் குறைவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது "சந்தோஷ வரும் வரும்"ஆ இல்லை எங்களைப் பயமுறுத்துகிற "வரும் வரும்"ஆ? அதில் இனிப்பு வகை உண்டோ?

      நீக்கு
    2. கும், கும், இனிக்கும், இருக்கும்.

      நீக்கு
    3. வித விதமான டிசைனில் தோசை உண்டு.

      நீக்கு
    4. நெல்லை, கௌ அண்ணா கும் கும் நு கும்மி எடுத்துடுவாரோ ஹா ஹா ஹா ஹா...கும்மி எடுத்தா நல்லாருக்கும் நாமளும் சேர்ந்து கும்மி அடிச்சுரலாம்...

      கீதா

      நீக்கு
  18. "ஓசியில் கிடைத்தாலும் உப்புமா உண்ணமாட்டான்"-- நானும் ஹோட்டலுக்கு வந்து உப்புமா ஆர்டர் பண்ணறவங்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கேன்... இதைக்கூட வீட்டில் பண்ணத் தெரியாதா என்று.

    ஆனால் பெங்களூரில் காராபாத் அனேகமா எல்லோரும் ஆர்டர் பண்ணிச் சாப்பிடறாங்க.

    ஆமாம்...எம்டிஆர் ரவா மிக்ஸ் ரொம்ப நல்லாருக்கா? வாங்கி முயற்சிக்கலாமா? ரவா இட்லி எப்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டுமே சூப்பர். ரவா தோசை மிக்ஸில் நாம் மிளகு தட்டிப் போட்டு, கொஞ்சம் உப்பு சேர்த்தால் இன்னும் சூப்பராக இருக்கு. ஆனியன் பிடிக்கும் என்றால் அதையும் சேர்த்து, ஆனியன் ரவா செய்து சாப்பிடலாம். எல்லா வகையிலும் செய்து சாப்பிட்டுள்ளேன். ரவா இட்லி மிக்ஸ் மோர் சேர்த்தோ, அல்லது தண்ணீர் சேர்த்தோ இட்லி மாவு ரெடி செய்து, இட்லி செய்து சாப்பிட்டால் சூப்பர் டேஸ்ட் !

      நீக்கு
    2. எம்டிஆர் ரவா மிக்ஸ் இட்லி மிக்ஸ் நல்லா இருக்கும் நெல்லை ஆனா நாமளே வீட்டிலேயே அந்த மிக்ஸும் செய்யலாமே....ஈசிதானே

      கீதா

      நீக்கு
    3. நான் 89ல் தி நகரில் ஒரு வீட்டில், கிச்சனுக்கு வெளியே, தோசை பெரியதாக (ஹோட்டல் போல்) வார்க்கணும் என்பதற்காகவே 3 அடி விட்டமுள்ள கல், உயரமான கரி அடுப்பு வைத்திருந்தாங்க. எனக்கு தோசைக்கல் ரொம்பப் பெரியதாக இருக்கணும்னு ஆசை. அப்போதான் தமிழக ஹோட்டல்போல் பெரிய தோசை வார்க்கலாம். நான் ஸ்டிக்ல நான் கொஞ்சம் பெரிய கல் வாங்கி வைத்திருந்தேன். பெங்களூர்ல எல்லா ஹோட்டல்லயும் சிறிய தோசைதான்.

      நீக்கு
    4. உடுப்பி பாலஸ் ஹோட்டலில் பெரிய நீண்ட செவ்வக தோசைக்கல். ஆனால் கல்லில் மூன்று தோசைகள் முட்டை வடிவத்தில் வார்க்கிறார்கள் அல்பக் குஞ்சுகள்!

      நீக்கு
    5. வித்யார்த்தி பவன், விவி புரம் தெரு, ஜெயநகர் 4ம் பிளாக்கில் தாவண்கெரே Bபெண்ணே தோசை ஆகியவற்றில், ஒரே கல்லில், 10-20 தோசைகள் வார்க்கிறார்கள் (நம்ம ஊத்தாப்பம் சைஸ்ல ஆனா முறுகலாக). எனக்கு என்னவோ பெங்களூர் தோசை பிடிக்கலை. நம்ம ஊர் சாம்பாரை எடுத்துக்கொண்டு சென்றாலும் அவ்வளவாக நன்றாக இருக்காதுன்னு தோணுது (ஆனா பசங்க மற்றும் உறவினர்கள் அந்த தோசையை ஆஹா ஓஹோ என்கிறார்கள்).

      உங்க எக்ஸ்பரிமெண்ட்ல, ரவாதோசை மாவுல, உப்புக்குப் பதில் வெல்லம் போட்டு முயற்சித்திருக்கீங்களா?

      நீக்கு
    6. இதுவரை முயற்சித்ததில்லை. முயற்சித்துப் பார்க்கிறேன்.

      நீக்கு
    7. நெல்லை தவண்கெரெ ரொம்ப நல்லாருக்குமே...அதுவும் பென்னெ தோசை...

      அப்புறம் பெரிய தோசைக்கல் சதுரமாகவும் இரும்பில் கிடைக்கிறது ரத்னா ஸ்டோர்ஸில்.

      கீதா

      நீக்கு
    8. பென்னே தாவண்கரே தோசாவில் அரிசிப்பொரி ஊறவைத்து அரைக்கிறாங்க அதோட திருப்பி போடும்போது ஒரு துளி வெண்ணை .
      எண்ணானாலும் நம்ம ஊர் பாரம்பரிய தோசைக்கு ஈடு இணையில்லை

      நீக்கு
    9. //ஒரு துளி வெண்ணை// - ஏஞ்சலின்... அவங்க தோசை பண்ணும்போது பார்த்திருக்கிறேன். வஞ்சகமில்லாமல் வெண்ணையைப் போடுவாங்க. (நெய் தோசை கேட்டாலும் நெய் நிறைய போடுவாங்க). ஆனா அவங்க சட்னி, திதிக்கும் சாம்பார், சுமார் மசாலாதான் எனக்குப் பிடிப்பதில்லை.

      நம்ம தோசை பெரியதாக இருக்கும். நம்ம சாம்பார் சுவை, பழகிவிட்டதால், எனக்கு மிகவும் இஷ்டம்...

      நீக்கு
    10. யெஸ் யெஸ் வெண்ணெய் துளி இல்லை நிறையவே சேர்ப்பாங்க அதுதான் தாவண்கரே தோசாவின் ஸ்பெஷலிட்டி .
      மங்களூர் உடுப்பி பெங்களுர் இனிப்பு சேர்ப்பதில் கிரேட்டோ கிரேட் :) உ .கி மசாலா கூட sugary டேஸ்ட்டிலிருக்கும்

      நீக்கு
  19. உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜிகணேசன் அசத்திய காட்சிகளில் இதுவும் ஒன்று. பா....பார்வதி...அருமையான பாத்திரம். அவர் சமாளிக்கும் விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். உண்மை. நல்ல நடிப்பு. பலமுறை இரசித்த காட்சி. நன்றி!

      நீக்கு
  20. கடவுள் பற்றிய கேள்வி பதிலை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்விகளும் பதில்களும் . நமக்கு இப்படி கேட்கத் தெரியவில்லையே என்று தோன்றுகிறது. அபாரம். மிகவும் உபயோகமான பதில்கள். வயதானவர்கள், பல்லுபோன கிழவர்கள் அரசியல் தலையங்கம் படித்து விட்டு, மூக்குக் கண்ணாடியைக் கழற்றி வைத்து விட்டுப்,பிறகு எங்கு வைத்தோம் என்று தேடுவார்கள். நல்ல உதாரணம். சிரிக்க வைத்தது. அன்புடன்

      நீக்கு
    2. நன்றி காமாட்சி அம்மா !

      நீக்கு
  21. எனது கேள்விகளுக்கு பதிலளித்த ஆசிரியர்களுக்கு நன்-------- றி போடாததால் காரணம் இன்னும் 2 கேள்விகளுக்கான பதில்கள் pending
    சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் கௌதமன் சார் பூஸாரின் கிளவிகளையும் பார்க்கலை ஹஆஹாஆ :)
    :)

    அந்த ஜஸ்ட் ஈட் //நான் தான் விலை மட்டுமில்லை கூடாத பொருட்களை ஹோட்டலில் சேர்ப்பங்க அதுவும் காரணம் நான் டேக் அவே தவிர்க்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூஸார் கேள்விகள்? என் கண்ணில் படவில்லையே?

      நீக்கு
  22. Angel5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 1:59
    14,எச்சூஸ்மீ கௌதமன் சார் .இன்னொரு கேள்வியும் சேர்த்துக்கோங்க :)
    ஒருவரை அதிகபட்சம் கோபப்படுத்தவைப்பது கோபப்படுத்துவது எது ?
    a ,விளையாட்டு சீண்டல்கள் எல்லைமீறும்போது ?
    b ,ஒருவரின் மனநிலையை உணராமல் எதிரிடத்தில் உள்ளவர் பேசும் பேச்சு ?
    c ,உணவு, சூழல், மருந்துகள் ?
    d ,புரிதலின்மை ?

    15, யுக்தி /குயுக்தி எப்படி வேறுபடுகிறது ?
    முகப்புத்தகத்தில் ஒரு பழக்கமில்லா மியூச்சுவல் நட்பு புகைப்படத்தை இன்பாக்ஸ் செய்தார் .பின்பு உடனே அசோ இது வேறொருவருக்கு அனுப்ப வேண்டியது தெரியாமல் உங்களுக்கு அனுப்பிட்டேன் என்று சொன்னார் .இது யுக்தியா குயுக்தியா ?
    இப்படிப்பட்ட சில குள்ளநரி உக்தியுள்ள குயுக்தியுள்ள மனிதர்களை இனம் காணுவது எப்படி ?
    நான்தான் வந்தபின் காப்போனாச்சே :) அ :) அதான் கேட்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரமாவது பதில் அளிக்க முயற்சி செய்கிறோம்.

      நீக்கு
    2. //புகைப்படத்தை இன்பாக்ஸ் செய்தார் .பின்பு உடனே அசோ இது வேறொருவருக்கு அனுப்ப வேண்டியது// - இது "ஆண்" என்றால் உடனே கழட்டிவிடப்படவேண்டியவர். 'நட்பு' என்றால் அதில் புகைப்படம் அல்லது பெர்சனல் விஷயங்கள் வரக்கூடாது.

      நீக்கு
    3. //நட்பு// அதே அதே அஃதே :) மிக சரியா புரிந்துகொண்டிங்க நெல்லை தமிழன் ..

      நீக்கு
  23. காணாமல் போன:) அதிரா��‍♀️3 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 4:14
    ஆஆஆஆ பூஸோ கொக்கோ... மீக்கும் கொஸ்ஸன் வருதே:)

    நெம்பர் வன்1.-
    ஏன் பறவை விலங்குகளில் மட்டும் ஆண்தான் அழகு... உதாரணம்.. மான், மயில், சிங்கம், காகம்.

    நெம்பர் ரூ2.-
    சில மனிதர்கள், சக மனிதர்கள் துன்பப்பட்டால் பெரிதாக கவனிக்க மாட்டினம் ஆனால் ஒரு விலங்கோ பறவையோ எனில் துடிப்பார்கள், பணம்கூடச் செலவளிப்பார்கள்... இந்த மைண்ட் செட்டப் உள்ள மனிதர்பற்றி என்ன நினைக்கிறீங்க?

    பதிலளி
    பதில்கள்%/////

    பதிலளிநீக்கு
  24. ஆஹா மிஸ் பண்ணிட்டேன் போலிருக்கு. சாரி.

    பதிலளிநீக்கு
  25. இன்று என்ன நெ.த.வுக்கும், தி.கீதாவுக்கும் மட்டும் முழு குத்தகையுமா?

    பதிலளிநீக்கு
  26. //ஒரே இடத்தில நாமெல்லாம் கூடவே அனுஷ் தமன்ஸ் இவங்களும் இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சி பார்த்தேன் :))))))))))))// திருபாய் அம்பானியும், எங்கள் அத்தையும் ஒரே நாள் இறந்து போனார்கள். இருவரும் மீட் பண்ணியிருப்பார்களோ என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
  27. எதியிஸ்ட் பற்றிய கேள்விக்கான பதில் அருமை.

    பதிலளிநீக்கு
  28. proteges /mentors என்று சொல்வார்களே அது மாதிரி இங்கே உள்ள ஆசிரியர்கள் அப்புறம் கருத்துக்களை அழகாய் சொல்லி செல்லும் அனைத்து நட்புக்களிடம் இருந்தும் நிறைய கற்றுக்கொள்கிறேன் .எல்லாருக்கும் டேன்க்ஸ் :)

    பதிலளிநீக்கு
  29. தலையங்கங்களை நான் சிறிய வயதிலிருந்தே படித்து வருகிறேன் என்று தாழ்மையோடு கூறிக்கொள்கிறேன்.Exceptions are not example என்று கூறிவிடுவீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலையங்கங்களை படிப்பது எல்லோரும் செய்வதே. உங்கள் நினைவில் இன்றும் நிற்கின்ற தலையங்கம் - எந்தப் பத்திரிக்கை, எந்த வருடம், என்ன கருத்து என்பது எதையாவது நினைவு கூர்ந்து சொல்லுங்கள். அதுதான் காட்ச்.

      நீக்கு
    2. i remember the argument between Ram jethmalani and former pm Rajiv :) in indian express

      நீக்கு
  30. சகோதரி ஏஞ்சல் மற்றும் நெல்லைத்தமிழன் அவர்களின் கேள்விகள் அருமை என்றால் பதில்களும் அருமை. குறிப்பாக திருமணம் புரிதல் பற்றிய இரு பதில்களுமே மிக மிகச் சரியே! அருமையான பதில்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  31. சகோதரி ஏஞ்சல் மற்றும் நெல்லைத்தமிழன் அவர்களின் கேள்விகள் அருமை என்றால் பதில்களும் அருமை. குறிப்பாக திருமணம் புரிதல் பற்றிய இரு பதில்களுமே மிக மிகச் சரியே! அருமையான பதில்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  32. //ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு,// இது ஒரு மித். உடல் கூறு, சிந்திக்கும் விதம், வளர்ப்பு முறை என்று எல்லாவற்றிலும் வேறுபட்ட இரண்டு பேர் நன்றாக புரிந்து கொள்வது கடினம் என்று புரிந்து கொண்டால் போதாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா ஒருவரை ஒருவர் புரிந்து கொளல் என்பதில் அதுவும் அடக்கம் தானே. அதுதானே புரிந்து கொளல். அந்தப் புரிந்து கொளல் இருந்தால்தான் அன்புடன் ஆன அட்ஜஸ்ட்மென்ட் பாசிபிள்..மற்ற அட்ஜெஸ்ட்மென்ட்ஸ் நாளடைவில் நீர்த்துப் போகும் சலிப்பு வரும்.

      கீதா

      நீக்கு
  33. இந்த வாரம் # அவர்களின் பதில்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  34. கற்றலுக்கான ஊடகமே கேள்விகள் பதில்கள்.
    இப்பதிவினூடாகப் பலதைக் கற்க முடிகிறதே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!