செவ்வாய், 14 மே, 2019

கேட்டு வாங்கிப்போடும் கதை : நீர்மோர் - ஜீவி

 நீர்மோர்
ஜீவி 


போன   ஞாயிற்றுக் கிழமை.

'வசந்தா கேப்' அருகில் அவனைப் பார்த்ததும் துணுக்குற்று நின்று விட்டேன்.

என்னால் நம்பவே முடியவில்லை.  'கை ரேகை பார்க்கப்படும்' என்று சொல்கிற ஒரு சின்ன போர்டுக்கு அருகில், இரண்டு கல்லிடுக்கில் நட்ட குடையின் கீழே உட்கார்ந்திருப்பது, அச்சு அசல் கிருஷ்ணகாந்தே தான்!  மூக்கு, முழி, அந்தக் கன்னக் கதுப்புகள்  ஒரு பக்கம் சாய்த்துப் பார்வை, ஓ, இது கிருஷ்ண காந்தே தான்!

'இது எப்படி?...  கிருஷ்ணகாந்த் தான்... அப்போதே'...  என்னால் நம்பவே முடியவில்லை.   'எல்லாம் சரி.. ஆனால், கொஞ்சம் சின்ன வயசு மாதிரித் தெரிகிறதே'  என்று அப்பொழுது தான் அந்த வித்தியாசம் நெஞ்சில் உறைத்தது.

பின்னே என்ன?.. அந்த ஆக்ஸிடெண்ட் நடந்து கிட்டத்தட்ட இருபது வருஷத்துக்கு மேலே ஓடிப்போச்சு..  அப்போதே கிருஷ்ணகாந்துக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் இருபது வயசு இருக்கும்...  ஆகிப்போன இந்த இருபது வருஷத்தைக் கூட்டிப் பார்த்தால்,  இப்பொழுது நாற்பது வயசாவது இருக்க வேண்டும், இல்லையா?..  ஆனால், இவன் சின்னப் பையனாய், இருபது இருபத்திரண்டு வயசுத்  தோற்றத்தில் இருக்கிறானே!

சொல்லப் போனால், கிருஷ்ணகாந்தோடு நானும் போய்ச் சேர்ந்திருக்க வேண்டியது.  இருபது  வருஷம் ஆகிப் போயும், அந்த லாரி விபத்தை நினைத்துப் பார்க்கையில் இப்பொழுது கூட ஒரு நிமிடம் உடம்பில் ரோமங்கள் குத்திட்டு நின்று அடங்கின.   என்ன கோரமான விபத்து!..

நடு ரோடில் அது பாட்டுக்கச் சென்று கொண்டிருந்த லாரி, சடாரென்று திரும்பி, வீட்டுக்குள் பாயும் என்று யார் எதிர்பார்த்தார்கள்?..

மொத்தம் மூணு பேர்.  கிருஷ்ணகாந்தைச் சேர்த்து.

மனசில் ஏற்பட்ட வடுவாய் இன்னும் அழியாமல் நினைவிருக்கு.

அநியாயம் சார்!  எது எப்போது ஏற்படும் என்று யாருக்கு முன் கூட்டியே தெரிந்திருக்கிறது?.. ஒண்ணும் பிடிபடாத  இந்த வாழ்க்கைக்கு இத்தனை அடிதடியா?...

லேசாக இருட்டு கவிந்த சாயந்திர வேளை.  வீட்டு வாசலில்
நண்பர்கள் ஒன்று  சேர்ந்து விடலைத்தனமா அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.  எல்லாம் மல்லாரி ராவ் வீட்டு வாசலில் தான்!

மல்லாரி ராவ் மகன் ராம் பிரசாத்,  எதிர்வீட்டு கிருஷ்ணகாந்த், நாலு வீடு  தள்ளியிருந்த விஸ்வேஸ்வரன்;  மூணே மூணு பேர் தான்.

ஸ்கூல் பைனல் முடித்து விட்டு ஒரு தட்டச்சு நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் உதவியாளனாக இருந்தேன்.  வேலை முடிந்து வீட்டுக்கு  வந்து  கொண்டிருந்த நேரம்.

மல்லாரி ராவ் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளித்தான் நாங்கள் குடியிருந்தோம்.

நான் பாட்டுக்கு என்னுள் ஏதோ  யோசித்துக் கோண்டு, அந்த நண்பர்கள் ஜமாவை தாண்டும் பொழுது  தான் என் பெயர் சொல்லி கிருஷ்ணகாந்த் கூப்பிட்டது என்னில் உறைத்து திரும்பிப் பார்த்தேன்.  "என்னடா?.."

"ஏண்டா.. நாங்க தான் ஊரைச் சுற்றித்  திரியறோம்னா, ஒரு 
வார்த்தை நின்னு எங்களோடப் பேசிட்டுப் போகக் கூடாதா? பார்த்திண்டே போற அளவுக்கு எங்களைக் கட் பண்ணிட்டயா?"

"சாரிடா.. ஏதோ நினைப்பு.  உங்களைப்  பார்க்கலை.." என்று நிஜமாலும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

"அதை விடு..  கமல் படம்  ரிலீஸ் நாளைக்கு.  உனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்திடலாமா?.. சொல்லு.."

"நாளைக்கா? எனக்கு முடியாதேடா.. இன்ஸ்ட்டியூட்டைப் பாத்துக்கணும்.  ஓனர் வெளியூர் போறார்டா.."

விஸ்வேஸ்வரன் என் தோளில் கை போட்டுச் சிரித்தான்.

"உங்க இன்ஸ்ட்டியூட்டைக் காக்கா தூக்கிண்டு போயிடப்போறது...   யாருகிட்டேயாவது பொறுப்பை ஒப்படைச்சிட்டு இதான் சான்ஸ்ன்னு கிளம்புவியா?"

".............................."

"ரொம்ப யோசிக்காதே.. என்னைக் கேட்டா யோசிக்கறதே தப்பும்பேன்.  ஓக்கேவா?.. சொல்லு.." என்றான் ராம்பிரசாத்.

"இல்லைடா.. இன்னொரு நாளைக்குப்  பாக்கலாம்... வீட்டுக்குப்
போய்  கைகால் அலம்பிண்டு நா வர்ரேன்.." என்று அவர்களிடமிருந்து பிய்த்துக் கொண்டு  கிளம்பினேன்.. 

"டேய்... வரும் போது அப்படியே ஒரு செம்பிலே கொஞ்சம் நீர் மோர்  எடுத்திண்டு வாடா..." என்று கிருஷ்ணகாந்த உரக்கக் கேட்டது,  தெளிவாக எனக்குக் கேட்டது.   நண்பர்களிடையே, எங்கள் வீட்டு நீர் மோர்  மிகவும் பிரசித்தம்

என் வீட்டு வாசல்படி மிதித்து, "சரிடா.." என்று அவனுக்குச் சொல்லி நான் வாய் மூடவில்லை...'டமார்'ன்னு எதன் மேலோ ஏதோ மோதிய சப்தம், என்னையே..  அந்தத்தெருவையே நிலைகுலைய வைத்தது.

சப்தம் வந்த திசையில் அனிச்சையாய் திரும்பிப் பார்க்கையில் அங்கேயே என் கணகள் நிலைக்குத்தி  என்ன நடந்தது என்று மூளைக்குப் புரிபடாத ஒரு பரிதாபத்தில் திடுக்கிட்டு நின்று விட்டேன்.   சுதாரித்துக் கொண்டு பார்க்கையில்,  ராம்பிரசாத் வீட்டு வாசல் படி ஏறித் திண்ணையில் மோதிக்கொண்டு,  பிர்மாண்டமாய்   ஒரு லாரி நின்று கொண்டிருப்பது தான் தெரிந்தது.  மின்சாரம் போன இருட்டுக்கிடையே ஒன்றுமே புரியவில்லை.

மொத்த தெருவும்  ஓடி வந்தது.

மூலைக்கு ஒருவராக  லாரி மூன்று பேரையும் தூக்கி எறிந்து உயிரைக் குடித்திருந்தது.   யாரோ போலீஸுக்கும், ஆம்புலன்ஸுக்கும் போன் செய்தார்கள். 

என் நடையில் ஒரு நிமிடம் தொய்வு ஏற்பட்டிருந்தாலோ,  அல்லது அவர்களுடன்  பேசிக் கொண்டிருந்த பேச்சு சுவாரஸ்யத்தில் ஒரு நிமிடம் ---  ஒரே ஒரு நிமிடம் தான்--- நான் தாமத்திருந்தாலும்  என்ன நேர்ந்திருந்திருக்கும் என்கிற நினைப்பைவிட, அந்த நேரத்தில் அடடா, இப்படியா நேர்ந்திருக்க வேண்டும் என்று கைவேறு கால்வேறாகப் பிய்ந்திருந்த நண்பர்களைக் கண்டு பரிதாபம் தான் மிஞ்சியது.  

கண்களில் என் உத்திரவு கேட்காமலேயே தாரை தாரையாகக் கண்ணீர்!.. கொஞ்சம் நின்று நிதானித்து அந்தப் பரிதாபத்தைப் பார்க்கையில், அந்த நேரத்தில் அங்கு என்னை நிறுத்தி வைக்காமல் எந்த சக்தி என் பிடரியைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு வந்து என் வீட்டு வாசலில் நிறுத்தியது என்று பிரமிப்பாக இருந்தது.

ஒரு மாதம் என் நினைவில் நான் இல்லை. நீர்மோரைப் பார்க்கையில் எல்லாம் கிருஷணகாந்த் நினைவு வரும். "எனக்கு இனிமேல் மோர் வேண்டாம்" என்று வீட்டில் சொல்லி விட்டேன். கொஞ்ச காலத்திற்கு அதற்குப் பதிலாகக் காப்பி குடித்தேன். இப்பொழுது அதையும் விட்டுவிட்டேன்.

"என்ன சார்..என்ன யோசனை..  கைரேகை பாக்கிறீங்களா?" என்ற அழைப்பு கவனத்தைத் திருப்பியது. அவன் தான் கூப்பிட்டது. அந்த இருபது வயது இளைஞன், கிருஷ்ணகாந்த் போலவேதான் இருந்தான்.  இன்னும் நெருக்கத்தில், அவன் பக்கத்தில் வந்து பார்க்கையில் என்னாலேயே நம்ப முடியவில்லை. அதே அச்சு; அதே வார்ப்பு, இம்மி பிசகாமல். என்ன, இவன் இளைஞன் தோற்றம்; அவ்வளவுதான்.

அவனோடு பேசவேண்டுமென்று நெஞ்சில் உணர்வு பீரிட்டுக் கொண்டு வந்தது. அவனுக்கு மிக நெருக்கத்தில் போய் நின்று கொண்டேன்.

"இப்படி இந்தக் கோணிலே உக்காந்துக்கங்க, ஸார்.." அவன் சொல்லியபடி, இனம்புரியாத ஒரு சந்தோஷத்துடன் அமர்ந்து கொண்டேன்.

"கை நீட்டுங்க,ஸார்..   அந்தக்கை இல்லே..   அது பொம்பளைங்களுக்கு..   வலது கை காட்டுங்க.." என்று என்னைத் திருத்தி அவன் லேசா சிரித்தான்.

சுவாரஸ்யத்தோடு அவனிடம் கை நீட்டினேன். பெரிய வட்ட லென்ஸைத் துடைத்து எடுத்துக்கொண்டு, பரக்க நீட்டிய என் உள்ளங்கை ரேகைகளைப் படிக்கத் தொடங்கினான்.

"அப்பாடா, தப்பிச்சிங்க...இனி அவன் கூப்பிட்டுக்கற வரைக்கும் ஒண்ணும் கவலை இல்லை."

"என்னப்பா, என்ன சொல்றே?"

எனக்குப் பதில் சொல்லாமல், "ஸாருக்கு என்ன வயசு? தெரிஞ்சிக்கலாமா?" என்று கேட்டான்.

"இந்த ஐப்பசி வந்தால், நாப்பத்திரண்டு."

"ஆங்.. ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி வந்த கண்டம், பெத்தவங்க செஞ்ச புண்ணியத்தாலே போயிடுச்சு..இனிமே கவலை இல்லே.."

இம்மி இழையில் நான் தப்பித்த அந்த லாரி விபத்துதான், இவனைப் பார்த்ததிலிருந்தே என் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறதே!.. பதட்டத்துடன்,"அப்படியா?.." என்று மட்டும் கேட்க முடிந்தது என்னால்.

"சும்மாவா சொல்றேன்..தாய் பண்ணிய புண்ணியம்..குறி தப்பிடுச்சு.."

நெஞ்சில் சுவாசம் சீராக இழையோட, அம்மாவை நினைத்து கண்களில் நீர் மல்க, "அப்புறம்?...." என்று தொண்டைகுழறக் கேட்டேன்.

"மத்ததெல்லாம் அமோகம் ஸார்..  காசு பணம் சேரும்..  இப்பவே சேர்ந்திருக்கணுமே?..   குழந்தை குட்டிகளை நல்லா பாத்துப்பீங்க..  அதெல்லாமா முக்கியம்..  எல்லாரும் செய்யறது தான்.  வந்த ஆபத்து போச்சே..  அதைச் சொல்லுங்க..   இனிமே, நீங்க ராஜா தான்.." அவன் என் கையை விட்டு விட்டான். 

'பயப்படாதீங்க..இனிமேல் உங்களுக்குக் கவலை இல்லை' என்கிற ஒரு சேதியை என்னிடம் சொல்வதற்காகவே, அவன் என்னை அழைத்து என் கைபார்த்த மாதிரி உணர்வேற்பட்டது எனக்கு.

நெற்றியில் படிந்த வியர்வையைத் தோள்த்துண்டால் துடைத்துக் கொண்டேன். தேவன் வந்தது மாதிரி வந்து நல்ல சேதி சொன்ன அவனை இழுத்து அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

உலர்ந்த நா எச்சில் கூட்டி, வாஞ்சையுடன், "உன் பெயர் என்னப்பா?.." என்று கேட்டேன்.

"பேர்ல என்ன ஸார் இருக்கு..  எல்லாம் அந்த கிருஸ்ண பரமாத்மா பேரு தான்.  ரோகிணி நட்சத்திரத்திலே பொறந்ததாலே அவரு பேரையே வைச்சிட்டாங்க, பெரியவங்க" என்று சொல்லிச் சிரித்தான்.

என் சர்வநாடியும் நடுங்கியது. அவனைக் கைதூக்கித் தொழ வேண்டும் போலிருந்தது.   'கைரேகை பார்த்திருக்கிறானே? அதற்கு என்ன பணம் தர வேண்டும் என்று எப்படி கேட்பேன்?..  சாதாரண மனுஷனா இருந்தா கேட்கலாம்.. இவனோ, மனுஷ ரூபத்தில்...

சமாளித்துக் கொண்டு, அதையும் அல்ப மனுஷன்,  நான் கேட்டேன்.

"நான் என்ன ஸார், அந்த குசேலர்கிட்டே அவன் கேட்டமாதிரி அவலா கேக்கப்போறேன்?.. வெயில் சுட்டெரிக்குதில்லே?..தோ..அந்த ஓட்டல்லே கொஞ்சம் நீர் மோர் வாங்கித் தர்றீங்களா.."

பளாரென்று அந்த நினைவு மூளையில் வெட்டிவிட்டுப் போனது.. 'கிருஷ்ணகாந்த் கூட அந்த ஆக்ஸிடண்ட்டுக்கு முன்னாடி எங்கிட்டே நீர் மோர் தானே  கேட்டான்.. நான் கொண்டு வந்து தர்றத்துக்குள்ளே'...

 இருபது வருஷத்துக்கு முன்னாடி செஞ்ச தப்பை இப்போ செய்யக் கூடாது..  இவனை இங்கேயே விட்டு விட்டு, நான் மட்டும் ஓட்டலுக்குள் போய், இங்கே இவனுக்கு ஏதாவது..

'அடே, மனுஷா..  பரமாத்மாவுக்கு நீ பாதுகாப்பா?' என்று மனசு ஒரு பக்கம் ஏளனம் செய்தது.

எல்லா நினைப்புகளையும் விழுங்கிக்கொண்டு, "ஒண்ணு செய்யேன்.. நாம  ரெண்டு பேரும் ஓட்டலுக்குச் சேர்ந்து போய், சாப்பிடலாம்.. என்ன?" என்று அவன் என்கூட வரவேண்டும் என்று மனசார இறைஞ்சி அவனிடம் கேட்டேன். 

கிருஷ்ணநாமம்  கொண்ட அவன்,  எல்லாம் கிருஷ்ணார்ப்பணம் என்பது போல என்னை விநோதமாகப் பார்த்தான்.

102 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் அண்ட் எல்லோருக்கும்.

    என்னாச்சு இன்று எபி பதிவு கொஞ்சம் லேட்டு?

    ஜீ வி அண்ணாவின் கதையா ஆஹா வாசித்துவிட்டு வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பல்லாம் யாரும் சீக்கிரம் வரதில்லைனு ப்ளாகரே லேட்டா போட்டுச்சோ ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் கீதா.... தவறுதலாக மாலை ஆறுமணிக்கு ஷெடியூல் ஆகி இருந்தது!!!!!!!
      ​​

      நீக்கு
    3. எனக்கு ஒவ்வொரு ஜன்னலும் திறக்காமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. தமிழ் டைப்பிங்கில் தமிழ் வருவதற்குள் பொழுது விடிந்து விடுகிறது!!!!

      நீக்கு
    4. மாலை ஆறுமணிக்கு ஷெடியூல் ஆகி இருந்தது!!!!!!!//

      ஆஹா! இப்பல்லாம் என்ன தெரியுமா ஸ்ரீராம் காலை 6 மணினா எபில பதிவு, 5.30 நா வெங்கட்ஜி பதிவு என்று மனதில் பதிந்து போனதால் ஒரு நாள் தாமதமானாலும் என்ன ஆச்சு என்று மனம் கொஞ்சம் அலைபாயத் தொடங்கிவிடுகிறது....

      கீதா

      நீக்கு
    5. எனக்கு ஒவ்வொரு ஜன்னலும் திறக்காமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. தமிழ் டைப்பிங்கில் தமிழ் வருவதற்குள் பொழுது விடிந்து விடுகிறது!!!!//

      ஓ! நான் எனக்கு மட்டும்தான்னு நினைச்சேன். அதுவும் கமென்ட் போடும் போது அது பதிவதற்குள் என்னடா இது கமென்ட் போக மாட்டேங்குதேனு...பல தளங்களும் நிறைய நேரம் எடுக்கிறது.

      தமிழ் ஃபான்ட் மீண்டும் டவுன்லோட் ஒன்னு ஃப்ரெஷ்ஷா செஞ்சு பார்த்தீங்களா ஸ்ரீராம்? எனக்கு கொஞ்ச நாள் முன்னாடி அழகி அப்ப்டிச் செய்தப்ப மீண்டும் டவுன்லோட் செய்ததில் அது ஓகே யானது.

      இப்ப கணினியில் கீ போர்ட் பிரச்சனை இருக்கு ஸ்ரீராம். பல சமயங்களில் வார்த்தைகள் மாறிவிடுகிறது. இல்லை என்றால் தானாகவே தங்கிளிஷ் எடுத்துக் கொள்கிறது ...

      கீதா

      நீக்கு
    6. நான் கூகுள் டிரான்ஸ்லிட்டரேஷனில்தான் அடிக்கிறேன். அதை என்ன ரீ இன்ஸ்டால் செய்வது! அவ்வப்போது அது வேகமாக இருக்கும். அவ்வப்போது ஸ்லோ ஆகும்! போதாக்குறைக்கு என் கீபோர்ட் ஸ்பேஸ்பார் வேற ஏறி மிதித்தால்தான் வேலை செய்யும்!

      நீக்கு
    7. ஓஹோ! ஆமாம் ல நீங்க சொல்லிருக்கீங்க கூகுள் ட்ரான்ஸ்லிட்டரேஷன் நீங்க யூஸ் செய்வதுனு....

      கீ போர்ட் ஹா ஹா ஹா ஹா என் டூவீலர் போல இருக்கே!! (சென்னைல தான் இருக்கு)

      கீதா

      நீக்கு
    8. http://www.typetamil.in - பயன்படுத்திப் பாருங்கள்... (அதில் இரண்டாவது பெட்டியில்...)

      நீக்கு
    9. ஜீவி அண்ணாவின் கதையா ஆஹா வாசித்து விட்டு வருகிறேன் என்ற சகோதரி தி. கீதாவிற்கு உற்சாகத்திற்கு நன்றி.

      நீக்கு
  2. 'வசந்தா கேப்' அருகில் அவனைப் பார்த்ததும் துணுக்குற்று நின்று விட்டேன்.//

    ஆ! கதைக்குள் என்னவோ சமாச்சாரம் இருக்கிறதே என்று சொல்லிய வரி...

    //ஒண்ணும் பிடிபடாத இந்த வாழ்க்கைக்கு இத்தனை அடிதடியா?...//

    செம தத்துவ வரி...அதானே.

    கதையில் வரும் இந்த ஆக்சிடென்ட், பல வருடங்களுக்கு முன் சென்னை பில்லர் அருகே ப்ளாட்ஃபார்ம் ல் படுத்திருந்தவர் மீது ஏதோ ஒரு வண்டி (லாரி என்று நினைவு) வந்து ஏறியது நினைவுக்கு வந்தது. அப்புறம் இங்கு சென்ற வாரம் ஏலஹங்கா பகுதியில் ஒரு வீட்டில் டரக் ஏறியது..

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் லொக் லொக் காலை லொக் லொக் வணக்கம் லொக் லொக்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் பானு அக்கா...

      ஓ... இன்னும் உடல்நிலை சீராகவில்லையா? டேக் கேர்.

      நீக்கு
    2. பானுக்கா என்ன லொக் லொக்??!!! உடம்பு சரியில்லையா?!!! என்னாச்சு

      கீதா

      நீக்கு
  4. வந்திருக்கும் அனைவருக்கும் இனி வரப்போகும் நண்பர்கள், நண்பிகளுக்கும் இனிய வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... காலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள்.

      நீக்கு
  5. அருமையான கதை.... நடந்ததை, அனுபவத்தைப் படிப்பது போலவே இருந்தது.

    "அந்த ஒரு நிமிடம்" - அவனால் நேருக்கு நேர் தான் தப்பித்ததையும் நண்பர்களுக்கு நேர்ந்த விபத்தையும் பார்க்க நேர்ந்தது. ஆனால் பெரிய நிகழ்விலிருந்து விதிவசத்தால் தப்பித்ததை எத்தனை பேர் அறியாமல் இருக்கிறார்களோ.

    ஜீவி சார்... கதை ரொம்ப நல்லா வந்திருக்கு... ஒருவேளு நான் இந்தக் கதையை எழுதியிருந்தால் (அவ்வளவு திறமைலாம் இல்லீங்கோ)

    "சேர்ந்தே போய்ச் சாப்பிடலாம்"

    "நன்றி சார்..." எழுந்து என்னோடு நடக்க ஆரம்பித்தான்.

    தெருமுனையிலிருந்து கட்டிழந்து சீறிக்கொண்டு வந்த லாரியை நான் கவனிக்கவில்லை.....


    என்று முடித்திருப்பேன். ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா... ஹா.. ட்விஸ்ட் இல்லாமல் கதையே இல்லை என்னும் மனநிலை!! சிலசமயம் ட்விஸ்ட் இல்லாததே ட்விஸ்ட்!!! வழக்கமா சொல்லுவதுதான் இதுவும்!

      நீக்கு
    2. நன்றி சார்..." எழுந்து என்னோடு நடக்க ஆரம்பித்தான்.

      தெருமுனையிலிருந்து கட்டிழந்து சீறிக்கொண்டு வந்த லாரியை நான் கவனிக்கவில்லை.....//

      படீரென எதோ மோதி உடைந்த சப்தம் கேட்டு திரும்பி பார்த்தால் சில நிமிடம்முன் அந்த கைரேகை பார்க்குமிடத்தில் இருந்த சுவர் மற்றும் குடை லாரியில் நசுங்கி கிடந்தது .நல்லவேளை இம்முறை காப்பாற்றிவிட்டேன் ..
      இப்படியும் முடிக்கலாம் ..ஒன்லி பாசிட்டிவ் :))

      நீக்கு
    3. ஏஞ்சலின்.... அட... நான் என்ன லாரி அவர்களை மோதிவிட்டது என்றா எழுதியிருக்கிறேன்? இல்லை அவர் உட்கார்ந்திருந்த குடை நிழல் என்றா? சீறிக்கொண்டு வந்த லாரி இரண்டுவிதமாகவும் மோதியிருக்கலாம் என்று படிப்பவர்கள் அவரவர்களுக்குத் தோன்றிய விதத்தில் எடுத்துக்கொள்ளலாம். என்ன நடந்ததுன்னு முழுவதுமாகச் சொல்லணும்னு இல்லை. நன்றி....

      அதுசரி.... பிரிஞ்சு போகணும்னு கால்ல வெந்நீர் கொட்டிக்கொண்டதுபோல இருக்கும் ஸ்காட்டிஷ் பூனை, லண்டன் உறவுக்கு மாத்திரம் கை கொடுக்க முயலுதே... ஆச்சீ என்ற பெயரில்... இந்த சந்தர்ப்பவாதத்தை நீங்க எப்படி நினைக்கறீங்க?

      நீக்கு
    4. ஹாஹாஆ :) நானும் கதை எழுத கொஞ்சம் முயன்றேன் :) அவ்ளோத்தேன் :)
      என்னமோ தெரில சிலரின் எழுத்துக்கள் அப்படியே அந்த கதாபாத்திரங்கள் நாம் வாழ்க்கையில் பார்த்த உருவங்களை கண்முன் கொண்டாந்துடும் .இங்கே அந்த மூணு பேர் மாதிரி அப்புறம் நீர்மோர் நண்பன் மாதிரி சிலரை பார்த்திருக்கேன் முன்பு நம்ம ஊரில் திண்ணை கேட் குட்டை காம்பவுண்ட் சுவர் வீடுகள் அப்படியே கண்முன் பார்த்த உணர்வு .எனக்கு எந்த உயிரும் கஷ்டமேப்படக்கூடாது :))) buffet மாதிரி அவரவர்க்கு ஏற்ப எடுத்துக்கணும் :) உண்மைதான்

      நீக்கு
    5. ஆச்சி // இது பத்தி ஏற்கனவே சொல்லியிருக்கேன் .ஒரு ரகசியம் சொல்லட்டா ஸ்கொட்ஸ்க்கு அரச குடும்பத்தில் அவ்ளோ பிரியமில்லை :) பூஸ் மட்டும் அப்பப்போ ஜம்புறாங்க :) நானும் காத்திட்டிருக்கேன் ஸ்கொட்லான்ட் எப்போ தனியா போவாங்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவாங்கன்னு :) அந்த பொன்னான நாளுக்கு மீ வெயிட்டிங்

      நீக்கு
  6. //கிருஷ்ணநாமம் கொண்ட அவன், எல்லாம் கிருஷ்ணார்ப்பணம் என்பது போல என்னை விநோதமாகப் பார்த்தான்.//
    பெயரில் மட்டுமில்லாமல் அனைத்திலும் ஒன்றாக இருக்கும் நபரைப் பார்த்த அதிர்ச்சி கதாநாயகருக்கு மட்டுமில்லை; நமக்கும் இருக்கிறது. ஆனால் இப்படியான சம்பவங்கள் நடைபெறும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்பதும் உண்மை..

      நீக்கு
  7. நீர்மோர் தான் வாங்கிக் கொடுக்கச் செல்லும்போது இவனுக்கும் அதே கதி நேர்ந்துவிடுமோ என்னும் பரிதவிப்பு, பின்னர் இவன் சாக்ஷாத் அந்தப் பரமாத்மாவே தான் என்னும் நினைப்பு! என்றாலும் ஜாக்கிரதையாக அவனை ஓட்டலுக்கு அழைத்துச் செல்லத் துடிக்கும் துடிப்பு எல்லாம் கதாநாயகனின் மனநிலையை அப்பட்டமாக விவரிக்கிறது.நமக்குள்ளும் அந்த உணர்வுகள் விரவி விடுகிறது.சுருக்கமான நல்லதொரு படைப்பு!

    பதிலளிநீக்கு
  8. வாழ்க்கை நிலையற்றது; எது நடக்கவேண்டுமோ அது நடந்தே தீரும்.

    பதிலளிநீக்கு
  9. கடைசியில் வந்ததும் மனம் அப்படியே திக் திக்! அதே தான் ஆசிரியரும் சொல்லியிருப்பது. அன்று நடந்தது நடந்துவிடக் கூடாது என்று...இறுதியில் ஹப்பாடா என்று தோன்றியது ஜீவி அண்ணா பாசிட்டிவாக முடித்திருப்பது மனதிற்கு இதமாக இருந்தது.....

    ஆனால் கூடவே இந்தப் பாழாய்ப் போன மனம் கதை எழுதும் சிந்தனைக்குப் போய்விடுதே....அந்தப் பாசிட்டிவை வாசிக்கும் முன் இந்த மனம் கொஞ்சம் அப்பால் சென்று வந்தது அவர்கள் இருவரும் ரோட்டைக் க்ராஸ் செய்து ஹோட்டலுக்குப் போகும் சமயம்................ஆஆஆஆஆஅ வேண்டாம் வேண்டாம் வேண்டவே வேண்டாம்...டக்கென்று மனம் நிகழ்காலக் கதைக்குத் தாவிவிட்டது அந்தக் கடைசி வரிகளைப் பார்த்ததும் மனம் ஹப்பாடா என்று இருந்தது.

    மனம் என்ன மாதிரி பாருங்க இயல்பாக பாசிட்டிவாக எண்ணும் மனம் கதை என்று வரும் போது எப்படிச் சிந்திக்கிறது!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாக்டர் உங்கள் லிவெர் என்லார்ஜ் ஆகி யிருக்கிறது
      நோயாளி அப்போ இன்னும்கொஞ்சம் சரக்கு அடிக்க இடமிருக்குமல்லவா இதுவும்பாசிடிவ் திங்கிங் தான்
      படித்தது நினவுக்கு வந்தது

      நீக்கு
    2. //பாசிட்டிவாக முடித்திருப்பது மனதிற்கு இதமாக இருந்தது.....//

      கதைகளுக்கு இது தான் முடிவு என்று எதுவுமே இல்லை. தொடர்ந்து தொடர்கிற மாதிரி தான் வாழ்க்கையின் கதைகள் எல்லாமே இருக்கு!

      நீக்கு
  10. சூப்பர் கதை அண்ணா. ஏதோ நேரில் பார்ப்பது போல வர்ணனை. நாமே அதில் செல்வது போல வர்ணனை. ஃப்ளோ அருமை! கடைசியில் இந்தக் கிருஷ்ணனும் நீர்மோர்தான் கேட்பான் என்று யூகிக்க முடிந்தாலும், கதை சொன்ன விதம் மனதை அதில் லயிக்க வைத்தது. என்ன கடைசியில் கொஞ்சம் மனம் அப்பால போயி நெகட்டிவா ஒரு முடியை யோசித்து நல்ல காலம் அதை மனம் முடிப்பதற்குள் இங்கு தாவி வந்துவிட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போயி நெகட்டிவா ஒரு முடியை யோசித்து நல்ல காலம் //

      முடிவை என்று அடித்தது முடியை என்று வந்துவிட்டது மன்னிக்கவும்.

      கீதா

      நீக்கு
    2. அதெப்படி யூகித்தீர்கள்?.. மனக்குறளியா?..

      நீக்கு
  11. அருமை
    நண்பர் நெல்லைத் தமிழன் கூறுவது போல் முடித்திருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் நெல்லைத் தமிழரின் முடிவுக்கு கடைசியில் பதிலளித்திருக்கிறேன். வாசித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

      நீக்கு
  12. இந்தக் கிருஷ்ணனுக்கும் ஏதேனும் நேர்ந்துவிடுமோ தனியாக விட்டுச் சென்றால் என்று நினைப்பது அருமை அந்த ஆக்சிடென்டின் பாதிப்பு தவிப்பு.

    அதே போன்று அந்த ஆக்சிடென்ட் நிகழ்ந்த போது நாம் ஒரு நிமிடத்தில் தப்பித்தோம் என்று தோன்றாமல் அந்த ஆக்சிடென்டின் பாதிப்பை //என் நடையில் ஒரு நிமிடம் தொய்வு ஏற்பட்டிருந்தாலோ, அல்லது அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பேச்சு சுவாரஸ்யத்தில் ஒரு நிமிடம் --- ஒரே ஒரு நிமிடம் தான்--- நான் தாமத்திருந்தாலும் என்ன நேர்ந்திருந்திருக்கும் என்கிற நினைப்பைவிட, //

    என்று கதாநாயகனுக்குத் தோன்றியதாக எழுதியிருப்பது சூப்பர்.

    எந்த சக்தி பிடறியைப் பிடித்து தள்ளியது// அதன் பின் ஏற்படும் பிரமிப்பு!...இப்படியான சம்பவங்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. //எது எப்போது ஏற்படும் என்று யாருக்கு முங்கூட்டியே தெரிந்திருக்கிறது ? ஒண்ணும் பிடிபடாத இந்த வாழ்க்கைக்கு இத்தனை அடிதடியா ?//

    நிதர்சனமான உண்மை ஸார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி, என்ன உங்களை என்னோட பதிவில் பார்க்கவே இல்லை? வேலை மும்முரம்? அல்லது பதிவு வந்தது கவனத்தில் இல்லையா?

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆ ஆரம்பிச்சுட்டாய்யாஆஆஆ கீசாக்கா ஆரம்பிச்சுட்டாஆஆஆ....
      கில்லர்ஜி இப்போதைய கீசாக்கா போஸ்ட்டுக்குப் போயிடாதீங்கோ:).... அடிச்சுக் கூப்பிட்டாலும் போயிடாதீங்கோ:)...
      ஹா ஹா ஹா எங்கிட்டயேவா?:) ஒப்பாரிப் பாட்டைப் போட்டுவிட்டு ஊரை எல்லாம் அழைச்சுக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்:)... சே சே இதைவிட மீ காசிக்குப் போவதுதான் பெட்டர்:)..

      நீக்கு
    3. சில நிதர்சனங்களை உணர்வது தான் கண்டபடிக்கு ஆடாமல் நம் மன ஆரோக்கியத்தை நிச்சயப்படுத்துகிறது, இல்லையா?..

      நீக்கு
  14. //ஒன்றும் பிடிபடாத வாழ்க்கை// -- என் அப்பா என்னிடம் சொன்னது.... வாழ்க்கையில் என்ன அர்த்தம் இருக்குன்னே தெரியலை... சலிப்புதான்....

    ஒரு இரண்டு சதவிகித மக்கள்தான் வாழ்க்கைக்கா அர்த்தத்தோடு வாழ்கிறார்களோ? மற்றவர்களெல்லாம் சந்ததியை உருவாக்கினோம், சண்டையிட்டு பாபத்தை அதிகரித்துக்கொண்டோம், செத்து வீழ்ந்தோம் என்று வாழ்கிறார்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்றவர்களெல்லாம் சந்ததியை உருவாக்கினோம், சண்டையிட்டு பாபத்தை அதிகரித்துக்கொண்டோம், செத்து வீழ்ந்தோம் என்று வாழ்கிறார்களோ?//

      நெல்லை யெஸ் யெஸ் அதே தான்...இதை நானும் அப்படியே வழி மொழிகிறேன்..வாழ்க்கையை ரசித்து வாழ்வதில்லை ஆனால் அதை அப்படியும் பார்க்க முடியாது..பலருக்கும் வாழ்க்கை ஏதோ ஒரு விதத்தில் ஆட்டித்தான் வைக்கிறது. சந்தோஷம் என்பது மனதில்தான் என்றாலும் எந்த சிச்சுவேஷனிலும் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம் அது நம் கையில்தான் என்றாலும்...அதை மனது ஏற்றுக் கொண்டாலும் நிதர்சனத்தில் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல், அன்பு, அன்யோன்யம் இல்லை என்றால் (ஒரு சில கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு அதாவது எல்லை மீறாத கருத்து வேறுபாடுகள்... ஆனால் அதையும் பக்குவமாகக் கையாண்டு, கலந்து பேசி ஈகோ இல்லாமல் கடந்து போதல் இருந்துவிட்டால்..பிரச்சனையே இல்லை.) கண்டிப்பாக என்னதான் அட்ஜெஸ்ட் செய்து வாழ்கிறார்கள் என்று சொன்னாலும் அங்கு ஹார்மொனி இருப்பது மிகவும் கஷ்டம்...

      கீதா

      நீக்கு
    2. நான் அர்த்தத்தோடுதான் வாழ்க்கிறேன் நெ தமிழன் பிக்கோஸ் மீ ஞானி எல்லோ:)

      நீக்கு
    3. எல்லாரும் தினமும் 5 நிமிஷமாவது பூக்கள் ,பப்பீஸ் பூனாச் பெர்ட்ஸ் ஆடு மாடு மரம் இலை புல் இதுங்ககூட பேசுங்க வாழ்வின் அர்த்தம் நிறைவடையும் :)

      நீக்கு
    4. அப்புறம் மனிதரில் அறிமுகமில்லாதோருக்கு சின்ன உதவி செய்யுங்க குறிப்பா ரெயிலில் அசந்து தூங்குற பொண்ணுங்க தூக்கத்தை கலைக்க கூடாது :)) ----மாதிரி :)))

      நீக்கு
  15. கதையை வெளியிட்ட எங்கள் பிளாக்கிற்கு நன்றி. வாசித்து கருத்துச் சொல்லும் நண்பர்களுக்கும் நன்றி. பின்னால் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  16. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா வாங்க வாங்க...ரிலாக்ஸ்டாக இருக்கீங்களா அண்ணா குழந்தைகளுடன்!! குழந்தைகளுடன் இருப்பதே மகிழ்வான விஷயம் இல்லையா?!!

      கீதா

      நீக்கு
  17. /// ஒன்னும் பிடிபடாத வாழ்க்கைக்கு இத்தனை அடிதடி..///

    அதனால தானே தடியடி எல்லாம்!...

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. மூலைக்கு ஒருவராக லாரி மூன்று பேரையும் தூக்கி எறிந்து உயிரைக் குடித்திருந்தது. //

    கொஞ்ச நேரம் முன் சிரித்து பேசிக் கொண்டு இருந்த நண்பர்கள் இறந்து விட்டார்கள் என்றால் படிக்கவே கஷ்டமாய் இருக்கிறது.அதுவும் நீர் மோர் கேட்ட நண்பன் அதை குடிக்காமலே இறந்து விட்டால் கேட்கவே வேண்டாம் நீர் மோர் பார்க்கும் போதெல்லாம் நினைவில் வந்து மனதை சங்கடபடுத்தும்.

    //வெயில் சுட்டெரிக்குதலே?..தோ..அந்த ஓட்டல்லே கொஞ்சம் நீர் மோர் வாங்கித் தர்றீங்களா.."

    பளாரென்று அந்த நினைவு மூளையில் வெட்டிவிட்டுப் போனது.. 'கிருஷ்ணகாந்த் கூட அந்த ஆக்ஸிடண்ட்டுக்கு முன்னாடி எங்கிட்டே நீர் மோர் தானே கேட்டான்.. நான் கொண்டு வந்து தர்றத்துக்குள்ளே'...//

    மேனி சிலிர்த்து விட்டது. நண்பனின் தோற்றம், அதே பேர், அதே போல் மோர் கேட்பதை படித்து.


    //அடே,மனுஷா..பரமாத்மாவுக்கு நீ பாதுகாப்பா?' என்று மனசு ஒரு பக்கம் ஏளனம் செய்தது.//

    பரமாத்மாதான் அதில் சந்தேகம் இல்லை.


    கதை மிகவும் நன்றாக இருக்கிறது ஜீவி சார்.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை வாசித்து வரும் போது தாங்கள் உணர்ந்தவைகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, கோமதிம்மா.

      நீக்கு
  20. ஆஆஆஆஆவ்வ்வ்வ் என்ன ஒரு அருமையான கதை.... சும்மா படிச்சுப் பார்க்கலாமே என ஆரம்பிச்சேன்ன்... கTஹையை விட்டுக் கண்ணை எடுக்கவே முடிவதில்லை....

    இப்படி சில சமயங்களில் நம்பமுடியாத சில நம்பிக்கைகள் நடந்து நம்மைக் குழப்புவதும் உண்டுதான்.
    அழகாக எழுதியிருக்கிறீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசி டூர் எல்லாம் அரேஞ்ச் செய்து அப்பாவி ஆகிட்டீங்களா அதிரா!! ஹா ஹா ஹா ஹா

      நாங்க எப்ப பாய்வோம், எப்படிப் பாய்வோம், எந்த ரூபத்துல பாய்வோம்னு எனக்கே தெரியாது நு உங்க செக் ஓட சித்தப்பு கட்சியா பூஸார்?!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கீதா... பொறுத்தது போதும் பொங்கிஎழு என உள்மனம் சொல்லிச்சுதா போஸ் பண்ணி வெளியே வாறேன்ன்:)....
      காசி ரூர் அரேஞ் பண்ணி கொம்பனி நட்டமாகிட்டுது கீதா:) செவ்வாய்க்கிழமையில எதுக்கு ஜொந்தக் கதை ஜோகக்:) கதை எல்லாம் அதுதான் அப்பாஆஆஆஆஆஇ:) ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா:)

      நீக்கு
    3. அப்படீன்னா முன்னால “ஆஷாபோஸ்லே அதிரா”ன்னு போட்டதுல ஒரு பாட்டு பாடக்கூட சான்ஸ் வரலியா? அப்புறம் அதுக்கு முன்னால......

      நீக்கு
    4. நெல்லை ஆஷாபோஸ்லே...செஃப் அ விட்டுட்டீங்களே! செஃப் நு சும்மா கிச்சன்லருந்து புகைதான் வந்துச்சாம்.....சட்டில எதுவும் வரலையாம்.!!!!!!!

      கீதா

      நீக்கு
    5. கர்ர்ர்ர்ர்ர்ர் 4 நெ தமிழன் அண்ட் கீதா:).... அதெல்லலாம் பல கோடி மக்கள் முன்னிலையில எனக்கு கிடைச்ச பட்டங்களாக்கும் கர்ர்ர்ர்ர்:)...

      எனக்கு 3 வதா செல்லக்குட்டித் தம்பி பிறந்திருக்கு.... குயின் அம்மம்மா என்னைத்தான் பெயர் செலக்ட் பண்ண சொன்னவ நான் தான் அ வரிசையில வைக்கச் சொன்னனான் அதுதான் “ஆச்சி” என வச்சிருக்கினம்... கொஞ்ச நாளைக்கு தொட்டிலில் கிடத்துதல் துடக்கு கழிவு நகை போடுதல் என நான் கொஞ்சம் பிஸியாவேன் அதனால மன்னிச்சுக்கோங்கோ:)

      நீக்கு
    6. ஆஆஆஆஆஅ பெல் அடிக்கப் போகுதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      நீக்கு
    7. பூசார்!!!! என்னது உங்களுக்கு 3 வதா செல்லக் குட்டித் தம்பியா!! இதென்ன புதுக்கதையா கீது! நாங்க உங்களுக்கு க்ரேட் க்ரான்ட்சன் பிறந்திருக்குனு சந்தோஷப்பட்டோம்...ஏஞ்சல் வெயர் ஆர் யு? ப்ளீஸ் இதை உறுதி செய்யுங்க!! க்ரேட் க்ரான்ட்சன் தானே!!!! ஒரு கை கொடுங்கப்பா...

      கீதா!

      நீக்கு
    8. சரி சரி காசி ரூர் அரேஞ்ச் செஞ்சதுல நட்டப்படட்டிருக்கற அப்பாவி இப்ப கொள்ளுப்பாட்டியாகி சந்தோஷத்தில பூரிச்சு ஆமாம் ஆமாம் பிஸியாத்தான் இருப்பீங்க!! கொள்ளுப் பேரனுக்கு செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சுட்டு வாங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    9. ஆ! வாவ்! ஆச்சி! தமிழ்ப்பெயர்!! நீங்க குழந்தைய ஆச்சி வந்திருக்கேன் பாருங்கோ செல்லம்னு கொஞ்சினீங்களோ?! அவங்க டக்குனு அந்தப் பெயரை பிடிச்சுக்கிட்டாங்க போல!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    10. 'ஆர்ச்சி" என்ற பையனை, 'ஆச்சி' என்று பெண்ணாக மாற்றி விட்டீங்களே அதிரா.... இந்த தெக்கினிக்கு எப்படி உங்களுக்குத் தெரியும்?

      நீக்கு
    11. ஸ்ஸ்ஸ் கீதா இப்போ எதுக்கு என் செக் ஐ டிசுரேப்பு பண்ணுறீங்க கர்ர்ர்ர்ர்ர்:).. அவ வந்தால் என் வாலுக்கு பெரி பெரி டேஞ்சர் தெரியுமோ:)...

      நீக்கு
    12. அது நான் செல்லமா ஆச்சி என்றுதான் கூப்பிடுறேன் நெ தமிழன், என்னிடம் வந்தால் குட்டி திரும்பி தாயிடம் போக மாட்டேன் என அடம் புடிக்கிறான்ன்ன் பிக்கோஸ் ஆறாம் நெம்பராச்சே:)

      நீக்கு
    13. Hi guys don't get confused appavi is official nanny appointed by royals 😀😀😀😀 also she is the scottish aachi for archie

      நீக்கு
    14. //அது நான் செல்லமா ஆச்சி//

      ஆமா எப்போ செல்லம்மா ஆச்சியா மாறினீங்க ???
      சரி இனி நாங்களும் செல்லம்மா ஆச்சின்னு கூப்டுக்கறோம் உங்கள

      நீக்கு
    15. //ஸ்ஸ்ஸ் கீதா இப்போ எதுக்கு என் செக் ஐ டிசுரேப்பு பண்ணுறீங்க கர்ர்ர்ர்ர்ர்:).. அவ வந்தால் என் வாலுக்கு பெரி பெரி டேஞ்சர் தெரியுமோ:)...//
      ஹஆஹாஆ :) அது என்னமோ தெரில கொஞ்ச நாள் உங்கள சீண்டாததில் நான் வீக் ஆகிட்டேன் :) வாங்க வாங்க கிட்ட வாங்க மீசையை இழுக்கறேன் பூஸ் மீசையை
      ஒரு கேள்வியும் வந்திருச்சு நாளைக்கு கேட்கிறேன்ன்ன்ன்ன்

      நீக்கு
    16. ///ஏஞ்சல் வெயர் ஆர் யு? ப்ளீஸ் இதை உறுதி செய்யுங்க!! க்ரேட் க்ரான்ட்சன் தானே!!!! ஒரு கை கொடுங்கப்பா...

      கீதா!//

      YESSSSSSSSSS :) Geetha HE is HER GREAT GRANDSON :))))))))))))

      நீக்கு
    17. நெல்லை என்ன நீங்க பூஸார் டமில்ல டி ஆக்கும் அவங்க ஆர்ச்சிய ஆச்சினுதான் சொல்லுவாங்களாக்கும்!!

      பூஸார்.....// என்னிடம் வந்தால் குட்டி திரும்பி தாயிடம் போக மாட்டேன் என அடம் புடிக்கிறான்ன்ன் //

      ஹா ஹா ஹா அது!! பின்ன எல்லா பிள்ளைகளுக்கும் ஆச்சி (பாட்டி!!!!) யைத்தான் ரொம்பப் பிடிக்குமாக்கும்!!

      கீதா

      நீக்கு
    18. ஆஆஆஆ என் செக் எனக்கு மட்டும் செக் ஆ இருக்குமோது ஒழுங்கா டமில் பேசினா:) இப்போ வேர்க்குக்குப் போறாவாம் அதுதான் டமில் போயிந்தி போலும் கர்ர்ர்ர்ர்ர்ர்:) ஶ்ரீராம் வெளியே வாங்கோ என் செக் ஐ பாண்ட் பண்ணுங்கோ:) ஹையோ இது வேற பாண்ட்:)

      நீக்கு
    19. ////lasidharan V Thillaiakathu14 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 4:11
      நெல்லை என்ன நீங்க பூஸார் டமில்ல டி ஆக்கும் ///

      டாங்கூ கீதா டாங்கூ:).... இனிக் எனக்குக் கவலை இல்லை:)

      நீக்கு
    20. //ஹா ஹா ஹா அது!! பின்ன எல்லா பிள்ளைகளுக்கும் ஆச்சி (பாட்டி!!!!) யைத்தான் ரொம்பப் பிடிக்குமாக்கும்!!

      கீதா//
      இந்த கமெண்டை பார்த்துமா ஆச்சி டாங்கு டாங்கு னு சொல்றாங்க :)) ஒருவேளை ஆச்சியானதும் விஷன் போச்சோ ??

      நீக்கு
    21. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் குட்டித் தம்பியை ச்ச்சும்ம ஆச்டி எனக் கூப்பிடக்கூடா. ஆட்டிக்குட்டி, ஆச்சி டார்லிங் ஆச்டி சுவீட் ஹார்ட் இப்பூடித்தான் கூப்பிடோணும் அப்பாவி அதிராவைப்போல ஜொள்ளிட்டேன்ன்ன்:)

      நீக்கு
    22. Hi guys don't get confused appavi is official nanny appointed by royals �������� also she is the scottish aachi for archie//

      டநன்றி..நன்றி...ஏஞ்சல் பாத்தீங்களா இப்படி நீங்க வந்து official ஆக உறுதிப்படுத்தி.... ஆஹா ஆஹா....இல்லைனா பூசார் நழுவிருப்பார்..ஹாஹாஹா

      நீக்கு
    23. கீதா னு போட விட்டு போச்சு..மேலே கருத்தில்..மொபைல் வழி அடிப்பதால்
      கீதா

      நீக்கு
    24. //நம்பமுடியாத சில நம்பிக்கைகள் நடந்து நம்மைக் குழப்புவதும் உண்டுதான்..//

      நம்புவதின் அடிப்படையில் தானே நம்பிக்கைகள் பிறக்கின்றன?
      அவை குழப்ப வேறு செய்கிறது என்றால், நம்ப வேண்டிய அவசியமே இல்லையே, சகோதரி, அதிரா!

      நீக்கு
  21. கதை நன்றாக இருக்கிறது. எப்போதோ நடந்த விபத்து ஆனாலும் ஸந்தர்ப்பம் இப்போது திரும்பவும் நடந்துவிடப்போகிறதே என்ற பயத்தை படிக்கும்போது எனக்கும் உண்டாகிவிட்டது. நல்லபடி கதையை முடித்திருக்கிறீர்கள்.கிருஷ்ணகாந்த் கேட்ட நீர்மோரை இந்த கிருஷ்ணன் மனதார குடித்திருப்பான். கிருஷ்ணார்ப்பணம். அருமை எல்லா விதத்திலும். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, காமாட்சி அம்மா. 'கிருஷ்ணகாந்த் கேட்ட நீர்மோரை இந்தக் கிருஷ்ணன் மனதாரக் குடித்திருப்பான்'! எல்லாம் கிருஷ்ணார்ப்பணம்'-- என்பதை எவ்வளவு ஈஸியாக வெளிப்படுத்தி விட்டீர்கள்!

      கடைசியில் வைண்டப் பண்ணும் பொழுது உங்கள் வரிகளைக் குறிப்பிட தவறி விட்டது. சகோதரி மன்னிக்க வேண்டும்.

      நீக்கு
  22. உண்டாக்கி விட்டது. திருத்தி வாசிக்கவும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  23. கதை மிக அருமை!
    இதே மாதிரி ஒரு லாரி மோதி மரணம் என் வாழ்க்கையிலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிற்து. அந்த நிமிடம் ஏற்பட்ட தாக்கம் மறுபடியும் எப்போது அதை நினைத்தாலும் அது நடந்து 24 வருடங்கள் ஆன பின்பும் இன்னும் ஏற்படுகிறது. மனது கனமாகி விடுகிறது! அந்த உணர்வுகளை கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே எழுதி நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள் ஜிவி சார்!
    ஆனால் ஒன்று! கிருஷ்ணகாந்த் சாயலில் ஒரு இளம் வயது முகம் என்றெழுதி ஒரு வேளை இந்த மனிதன் கிருஷ்ண காந்திற்குப்பிறந்த மகனோ என்று ஒரு நிமிடம் நினைக்க வைத்து விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  24. அடிக்கும் வெயிலுக்கு இதமாக நீர் மோர் குடித்தமாதிரி இருந்தது என்று மட்டும்சொன்னால் போதுமா கையைப் பார்த்து நடந்தவிபத்தில் பிழைத்த கதையை மட்டும் சொல்லி நீர் மோருக்குத் தாவலாமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிழைத்தும் தாய் செய்த புண்ணியம்! யார் செய்த புண்ணியம் யாருக்கு வந்து சேருகிறது பாருங்கள்!

      'இனிமேல் கவலைப்பட ஒன்றுமில்லை' என்று அபய ஹஸ்தம் உயர்த்திருக்கிறாரே.. தொடர்ந்து கவனமாக வாசித்து வந்தால்--

      நீர்மோருக்கு மேவிய கதை தெரியுமே, ஐயா!


      பிழைத்த கதையை விட

      நீக்கு
  25. பதில்கள்
    1. நன்றி, கவிதைக்காரரே!

      உங்களது தோட்டம் என்னது, வனம்! பூவனத்திற்கு வாருங்களேன்!

      நீக்கு
  26. வாவ் !! கதை மிக மிக அருமை ..என்னமோ செய்தது மனதை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடி! இப்போத் தான் முழுமையாகப் படித்தீர்களா?.. நன்றி, Angel! எத்தனை திருநாமம் தான் நிந்தன் அடியார்க்கு, இறைவா!

      நீக்கு
  27. கிருஷ்ணகாந்த் சாயலில் ஒரு இளம் வயது முகம் என்றெழுதி ஒரு வேளை இந்த மனிதன் கிருஷ்ண காந்திற்குப்பிறந்த மகனோ என்று ஒரு நிமிடம் நினைக்க வைத்து விட்டீர்கள்! // அதே நினைத்தேன். ஆனால் இறந்த கிருஷ்ணகாந்துக்கு
    16 வயதுதானே. இது பிலீவ் இட் ஆர் நாட் மாதிரி ஒரு அதிர்ச்சி
    வைத்தியம்.
    மிக மிக எளிய நடையில் ஆயிரம் புரிதலுடன் ஒரு உயர்ந்த கதை.

    நன்றி ஜீவி சார்.நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. கதை என்று நம்ப முடியாமல் இயல்பான வாழ்க்கையில் நடைபெறும் ஒரு சம்பவமாக இருந்தது.

    நீர் மோர் கேட்ட நண்பர்கள் சடாரென உயிர் துறந்த சோகம் நெஞ்க்குள் நீறு பூத்த சாம்பலாக கனன்று கொண்டே வாழ்க்கை நகர்ந்தபடியிருக்க, அதிலொரு நண்பனைப் போலவே இருக்கும் கை ரேகை பார்ப்பவனை கண்டதாக சொல்லும் போது, நமக்கே ஒரு"தீ"எழுந்து வயிற்றில் சங்கடத்தை எழுப்ப கதை சொல்லும் மாந்தருக்கு எப்படியெல்லாம் இருக்குமென்று உணர முடிந்தது.கடைசியில் அந்த ஆத்மா மீண்டும் பிறந்து வந்து அதே பெயரில் ஒன்றுதான் தன்னுடையதும் எனக்கூறி. மறுபடியும் அதே நீர் மோரை கேட்கும் போது இதுவும் கிருஷ்ண லீலை என மெய்சிலிர்க்க வைத்தது. அனைத்தும் அவன் செயல்தான்.! முடிவை சுபமாக முடித்தமைக்கு பாராட்டுக்கள். கதை எழுதிய ஜீ.வி சகோதரருக்கு நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை வாசித்து அருமை என்றும் நன்றாக இருக்கிறது என்று சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

      ல கதைகளை வாசித்து விட்டால் வாசிப்புப் பழக்கம் நம்மை சும்மா இருக்க விடாது. கதையைப் பற்றிய நமது சொந்த சிந்தனைகள் அது பாட்டுக்க நேர்த்தியாக வலை பின்னும்.
      இப்படியிருக்குமோ, அப்படியிருக்குமோ, இப்படி முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே, அப்படி ஏன் முடித்தார் என்று வாசித்த அந்தக் கதை பற்றியே சிந்தனை சுழலும். இப்படியாக வாசிப்பவரை யோசிக்க வைக்கும் கதைகளை எழுதுவது தான் கதைகள் எழுதுவதற்கான பயன்பாடு.

      கதைகளை எழுதுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்; படைக்கப்படும் எழுத்து தான் வாசகரோடு பேச வேண்டுமே தவிர அந்தக் கதையை எழுதியவன் தான் எழுதியதற்கெல்லாம் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடாது என்பார் ஜெயகாந்தன். அப்படிப்பட்டவரே எழுதிய தொடர்கள் புத்தகமாகத் தொகுக்கப்பட்ட நேரத்து முன்னுரையாக அந்த படைப்புகளைப் பற்றி பேச நேரிட்டது காலத்தின் கட்டாயமாயிற்று. அதனால் எழுதியவன் தனது படைப்புகள் வெவ்வேறு அர்த்தங்களுக்குள் சிறைப்படும் பொழுது அதற்கான விடுதலையையும் அவனே கொடுக்க வேண்டிய கடப்பாடும் இயல்பாகவே கூடவே வந்து விடுகிறது.

      இந்தக் கதையில் குறுக்கிட்ட அந்த விபத்து நிஜமாக நடந்த ஒன்று என்பதை ஆரம்பத்திலேயே சொல்லி விட வேண்டும்.
      அந்த ஒரு நிமிட நேர அவகாசத்தில் ஏதோ சக்தி என்னை பிடறி பிடித்துத் தள்ளி தப்ப வைத்ததும் நிஜத்தில் நடந்த உண்மையே.

      'நீர்மோர்' சமாச்சாரம் மட்டும் கதைக்காக உள்ளே நுழைந்தது. தேனிலவு படம். ஜெமினியின் இடத்தில் காலத்தைப் பின்னுக்குத் தள்ள வேண்டி கமலை நுழைத்தேன்.

      பரிதவிப்பு, நினைப்பு, துடிப்பு என்று மூன்று தவிப்புகளிலும் கதையின் ஆத்மாவை தனது ஆரம்பப் பின்னூட்டத்திலேயே
      பிட்டு வைத்திருந்தார் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள். கதையின் ஜீவ ஓட்டத்தை வரிகளில் வடித்துத் தந்திருந்த அவரின் பின்னூட்டம் இது:

      "...நீர்மோர் தான் வாங்கிக் கொடுக்கச் செல்லும்போது இவனுக்கும் அதே கதி நேர்ந்துவிடுமோ என்னும் பரிதவிப்பு, பின்னர் இவன் சாக்ஷாத் அந்தப் பரமாத்மாவே தான் என்னும் நினைப்பு! என்றாலும் ஜாக்கிரதையாக அவனை ஓட்டலுக்கு அழைத்துச் செல்லத் துடிக்கும் துடிப்பு எல்லாம் கதாநாயகனின் மனநிலையை அப்பட்டமாக விவரிக்கிறது.நமக்குள்ளும் அந்த உணர்வுகள் விரவி விடுகிறது.சுருக்கமான நல்லதொரு படைப்பு!..."

      கிருஷ்ணகாந்த், விபத்தில் சிக்கிய கிருஷ்ணகாந்தின் மகனோ என்ற ஐயம் முதன் முதலாக சகோதரி மனோ சாமிநாதன் அவர்களுக்கு ஏற்பட்டது, இந்த கதை வாசிப்பை அடுத்த கட்டதிற்கு நகர்த்தியது.

      கிருஷ்ணகாந்திற்கு அப்பொழுது 16 வயது தானே என்று யதார்த்த யோசனையில் சகோதரி வல்லி சிம்ஹன் அவர்கள் ஆழ்ந்தாலும் கிருஷ்ணகாந்தை ஆராயவது பிடித்திருந்து ஆயிரம் புரிதல்களுடன் ஒரு உயர்ந்த கதை என்று பிலிவ் இட் ஆர் நாட் மாதிரி இது ஒரு அதிர்ச்சி என்று திகைக்கிறார்.

      'கடைசியில் அந்த ஆத்மா மீண்டும் பிறந்து வந்து அதே பெயரில் ஒன்றுதான் தன்னுடையதும் எனக்கூறி. மறுபடியும் அதே நீர் மோரை கேட்கும் போது இதுவும் கிருஷ்ண லீலை என மெய்சிலிர்க்க வைத்தது. அனைத்தும் அவன் செயல்தான்" -- என்று சகோதரி கமலா ஹரிஹரன் அவர்கள் விடை கணட பொழுது இந்தக் கதை எழுதியதின் ஜன்ம சாபல்யம் கிடைத்த மாதிரி நானும் சிலிர்த்துப் போனேன்.

      ஒப்பற்ற வாசிப்புத் திறன் விதவிதமாக இந்தக் கதையை நுணுகி நுணுகிப் பார்த்தவர்களிடம் புதையுண்டு கிடப்பது மனத்திற்கு ஆதுரமாக இருந்தது...

      அந்த விபத்தைத் தாண்டி கதையை எழுதி வரும் போது நான் என் வசத்தில் இல்லை என்பதைத் தெளிவாக உணர முடிந்தது. இந்தக் கதை தன்னைத் தானே சமைத்துக் கொண்டது என்பதே உணர்வாயிற்று. கற்பனையை அமுதமாக வர்ஷித்து இந்தக் கதையை நகரச் செய்தது பரமாத்வாகவே இருக்கலாம். ஏனெனில் கடைசிப் பகுதியை எழுதி வரும் பொழுது இன்னொரு செயலாய் கண்ணதாசனின் வரிகளில் மனம் புதைந்திருந்தது.

      என்னை அறிந்தாய்; எல்லா உயிரும்
      எனதென்றும் அறிந்து கொண்டாய்
      ...................................
      மன்னரும் நானே; மக்களும் நானே
      மரம் செடி கொடியும் நானே
      ...........................
      கண்ணனே காட்டினான்; கண்ணனே சாற்றினான்
      .............................
      நின் கைவன்மை எழுக...

      ---என்றெல்லாம் மனக்குரல் குதித்து ஆடி, மனத்திரையில் கர்ணன் திரைப்படத்தில் வரும் பரந்தாமனின் விஸ்வரூபமே மனத்தில் நின்றது.

      இப்பொழுது சொல்லுங்கள்.. கதையின் கிருஷ்ண காந்த் யாரென்று!...

      மனிதனில் கடவுளைத் தரிசிக்கும் அத்வைதத் தத்துவம் என் மனத்தை ஆட்கொண்ட ஒன்று என்பதும் இந்தக் கதை இப்படி நகர்ந்ததற்குக் காரணமாக இருக்கலாம்.

      மனிதனில் தெய்வத்தைப் பொருத்திப் பார்ப்பது
      தெய்வத்தில் மனிதனை ஆட்படுத்துவது

      -- என்ற நிலைகள் உன்னதமானவை. நீங்களும் அப்படியான பயிற்சிகளை மேற்கொண்டு தான் பாருங்களேன்.

      அன்புடன்,
      ஜீவி

      நீக்கு
  29. நீர்மோர் கேட்ட நண்பன் நொடியில் மரித்துப் போன அதிர்ச்சியிலும், சோகத்திலும் நீர்மோர் குடிக்க முடியாமல் போவது இயல்புதான். அந்த நண்பனின் சாயலில் இருக்கும் இன்னொருவன் அதே போல் நீர் மோர் கேட்கும் பொழுது ஏற்பதும் அதிர்ச்சியை உணர முடிகிறது. நிறைவான கதை.

    பதிலளிநீக்கு
  30. 'தெருமுனையிலிருந்து கட்டிழந்து சீறிக்கொண்டு வந்த லாரியை நான் கவனிக்கவில்லை.....' என்று கதையின் இறுதியிலும் ஒரு அதிர்ச்சியைக் கொடுப்பது என்பது (கைரேகை ஜோதிடம் பார்த்த) கிருஷ்ணகாந்தின் வாக்கிற்கு புறம்பாகப் போய்விடும். அதற்கு அதிராவின் உடனடி பதிலடி கதைக்காக கதை பண்ணும் செயற்கைச் சூழலை ஏற்படுத்தலாம். கதையின் ஆத்மாவை நகைப்புக்குரியதாகவும் ஆக்கி விடலாம்.

    பதிலளிநீக்கு
  31. கதையை ரசித்தேன். கதாசிரியருக்குப் பாராட்டுகள், பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை வாசித்து ரசித்தமைக்கு நன்றி,. ரசித்ததை பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறதே, அதான் முக்கியம். தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி, ஐயா.

      நீக்கு
  32. உடன் பழகிய நண்பன் கண்ணெதிரில் இறந்து போக இருபது வருடங்களுக்குப் பிறகு அதே சாயலில் கைரேகை ஜோதிடனை நண்பராக காணும் காட்சியும் அந்த நபர் நீர்மோர் கேட்கையில் நண்பரிடம் எழும் பரிதவிப்பும் கதையின் ஜீவநாடியாக பிரதிபலித்தது. அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  33. கருத்துக்கு நன்றி, சுரேஷ்! முந்தைய பிறவியில் இறந்து போகப்போகிறோம் என்று தெரியாத நிலையில் விரும்பிக் கேட்டதை அடுத்த பிறவியில் அதே நபரைப் பிடித்து கேட்ட விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளல் என்ற கோணத்தில் பார்த்தால் அமானுஷ்ய சப்ஜெக்டாகவும் மாறிப் போகலாம். ஆனால் அத்வைத கோட்பாட்டுடன் முடிக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் தான் இந்த மாதிரியான முடிவைத் தேர்ந்தெடுத்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!