திங்கள், 24 ஜூன், 2019

"திங்க"க்கிழமை - வெண்டை மசாலா ட்ரை சப்ஜி - கீதா ரெங்கன் ரெஸிப்பி


இதுக்கு என்ன பெயர் வைக்கலாம்?  வெண்டை மசாலா ட்ரை சப்ஜி?


ஹாய் ஹாய் ஹாய்! வணக்கம்! வந்தனம்! எபி கிச்சனுக்குள் நுழைந்து பல மாதங்களாகி விட்டது! வாங்க டாம் அண்ட் ஜெர்ரி. இன்று எபி கிச்சனுக்குள் ஒன்லி லேடிஸ். ஜென்ட்ஸ் எல்லாம் இப்ப இங்க எட்டிப் பார்க்கக் கூடாதாக்கும். செஞ்சு முடிச்சப்புறம் தான்ஹிஹிஹிஹி.

பூஸார் நான் சென்னை கீதாவாக வந்தாச்சு! பாருங்க! வாங்க பார்ப்போம் நம்ம அக்காஸ் அம்மாஸ் வந்தாச்சான்னு. காமாட்சி அம்மா எவ்வளவு ஆர்வத்தோடு வந்து உக்காந்துருக்காங்க பாருங்க. வாங்க காமாட்சிம்மா..

ஆமாம் கீதா... வல்லிம்மா, அக்காஸ் காணலையே

ஃப்ளைட் லேன்ட் ஆனதும் வல்லிம்மா சொன்னாங்க வந்துட்டுருக்கேன்னு..அதோ பாருங்க எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் நு சொல்லிட்டே வராங்க பாருங்க பூஸாரே..

ஹா ஹா ஹா கீதா இங்க இன்றைக்கு உங்கட கை வண்ணமல்லோ அதான்……நலமோடுன்னு….ஹையோ நான் மேசைக்கடியில் ஒளிந்து கொள்கிறேன் யாரும் ஜொல்லிடாதீங்கோ…

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்க வாலைப் பிடிக்க உங்க செக் வந்துட்டே இருக்காங்க..எழுந்து வாங்க

ஹையோ கீதா அவஅவ வேலைக்குப் போறா லேட்டாதான் வருவா என்றல்லோ நாம் எழ்லியா வந்தோம்

ஹப்பாடா ஏஞ்சல் வாங்க வாங்க! பூஸாரின் வாலைப் பிடிச்சுக்கோங்க. ஹை! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நு சத்தம் கீதாக்கா வந்தாச்சு…..எதுக்கு இப்ப கர்ர்ர்ர்ர்? பின்ன..…இங்க எல்லாருக்கும் சீனியர்…… ஆச்சியின் க்ரேட் க்ரான்ட்மா இருக்கறப்ப இந்தச் சின்னக் குழந்தைய சீனியர்னு சொல்லிட்டீங்களேனு! இஃகி இஃகி!!

நன்றி கூகுளார்…

கர்ர்ர்ர்ர்ர்ர்…..ஆ இப்ப சத்தம் கூடப் போட முடியாது இந்த கீதாவும் என் செக்கும் என் வாலைப் பிடித்து மேசைக்கடியில வைச்சுட்டாங்கநான் நல்ல பிள்ளையாக்கும்….…சரி கீதா எங்க வாழ்க வளமுடன்?

வருவாங்க….அவங்க மகனுக்கு வாழைக்கா அப்பளம் செஞ்சு காய வைச்சுட்டு வரேன்னு…..ஆ அதிரா அங்க பாருங்க வணக்கம் சகோதரிகளேன்னு கமலாக்கா வந்தாச்சு பாருங்க….பின்னாடியே கோமதிக்காவும்…..உங்களுக்கு ஒரு மூட்டையோடு வராங்கநீங்க கேட்டிருந்த அப்பளமோ!!!!!

சரி அப்ப கீதா எல்லாரும் வந்தாச்சல்லோ இன்றைக்கு என்ன ரெசிப்பி..?

இருங்க ஷார்ட் அன்ட் ஸ்வீட் வரலை!! அவங்கதானே இன்று கினிபிக்!! அவங்க சாப்ட்டு டேஸ்ட் பார்த்துட்டு அப்புறம் தான் அம்மாஸ் அண்ட் அக்காஸுக்கு!

! அப்ப கீதா சீக்கிரம் இதை முடியுங்கோ இல்லைனா பானுக்கா ஆஆவ்வ்வ்வ்வ்னுஓடிப் போயி 20 நிமிஷம் தனியா பேசத் தொடங்கிடுவா!!

ஹா ஹா ஹா அதிரா இன்று நான் நீளமா சொன்னாலும் அக்காவுக்கு நோ ப்ராப்ளம் இங்க தோஸ்த் எல்லாரும் இருக்காங்களே அவங்களுக்கு டைம் பாஸ்…..

என்ன என் தலை உருளுது?

ஏஞ்சல், அதிரா கமான்…..பானுக்கா வந்தாச்சு டக் டக்குனு செஞ்சுருவோம் வாங்க…….. அதனாலேயே வெரி ஜிம்பிளான ரொம்ப சின்ன ரெசிப்பிதான்.

சரி இந்த ரெசிப்பிக்கு என்ன பெயர் வைக்கலாம்? நான் சும்மா வெண்டை/பிண்டி பொடி சப்ஜி அப்படினு. அம்மாஸ், அக்காஸ், ஏஞ்சல் அதிரா, எல்லாரும் டேஸ்ட் பார்த்துட்டு ஒரு பெயர் சூட்டும் விழாவும் நடத்திடலாம்….

அக்காஸ் அம்மாஸ் எல்லாம் கதைக்கத் தொடங்கிட்டாங்க… இதாங்க ரெசிப்பி….

வெண்டைக்காய் – ¼ கிலோ

கொத்தமல்லி விரைஒரு டேபிள் ஸ்பூன் (படத்துல அந்த தட்டுல இருக்குப் பாருங்க..அந்த ஸ்பூன்) (இதைப் பொடியாகவும் போடலாம்)

ஜீரகம் – ½ டேபிள் ஸ்பூன் (இதையும் பொடியாகவும் போடலாம்)

சிவப்பு மிளாகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன்

கொப்பரை – துருவியது ¼ கப் அல்லது தேங்காய் துருவியது ¼ கப் அதை கொஞ்சம் லைட்டாக வறுத்து ஈரம் கொஞ்சம் போனால் போதும்.

கறிவேப்பிலை 3, 4 குச்சி இலைகள் – (இது கொஞ்சம் ட்ரையாக இருந்ததால் பொடித்துக் கொண்டுவிட்டேன். அதைப் படம் எடுக்காமலும் விட்டுவிட்டேன்.

உப்பு – தேவையானது.

ஒரு எலுமிச்சம் பழம். (தேசிக்காய்) இதோ எல்லாம் நாங்கள் எடுத்து வைச்சாச்சு.

அதிரா அந்த வெண்டைக்காய் ¼ கிலோ இருக்குப் பாருங்க அதை நல்லா கழுவி டவல்ல போட்டு துடைச்சு உங்க செக் கிட்ட கொடுக்கறீங்களா... ஏஞ்சல் அதை இப்படிக் கட் செஞ்சுக்கோங்க ஓகேவா....


வெண்டைக் காயை படத்தில் இருப்பது போலக் குறுக்காக வெட்டிக் கொண்டு அப்புறம் நெடுக்காக அதைனை வெட்டி 4 துண்டுகளாக. இதோ ஏஞ்சல் கட் செஞ்சு வைச்சுருக்காங்க பாருங்க இப்படி. 

வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு (உங்கள் விருப்பம் எந்த எண்ணெய் பயன்படுத்துகின்றீர்களோ அது. நான் தேங்காய் எண்ணெய் பயன்படுத்திருக்கேன்.)

கடுகு போட்டு வெடித்ததும் வெண்டைக்காயைப் போட்டு. உப்பும் போட்டு பிரட்டிக் கொடுத்து வதக்கவும். அது வதங்கட்டும் அதற்குள்….


கொத்தமல்லிவிரை, ஜீரகம் (வறுக்கத் தேவையில்லை) பொடித்துக் கொண்டு, மற்ற பொடிகளும் சேர்த்து எல்லாவற்றையும் கொப்பரையுடன் அல்லது லைட்டாக நிறம் மாறாமல் வறுத்த தேங்காயுடன் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். தனியா பொடி, ஜீரகப் பொடியாகச் சேர்ப்பதானால் அந்தப் பொடியை மற்ற பொடிகளுடன் சேர்த்து கொப்பரையுடன் கலந்து வைத்துக் கொள்ளவும். தேங்காயுடன் பொடிகள் கலந்த படம் விட்டுப் போச்சு... கொப்பரை இல்லை எனவே தேங்காயைக் கொஞ்சம் வதக்கிக்கலாம் இப்படி..


வெண்டை வதங்கியதும் இப்பொடியைச் சேர்த்து பச்சை வாசனை போவது வரை நன்றாகப் பிரட்டிக் கொண்டுத்துடுங்க. பொடி கலந்த்தும் ஒரு 5-7 நிமிடம் போதும். முடிந்த்து. 5 நிமிடம் கழித்து எலுமிச்சையைப் பிழிந்து கலந்து விட்டுருங்க. அவ்வளவுதான்.

சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும். இதை சப்பாத்தியில் வைத்து சுருட்டி பயணத்திர்கு வைத்துக் கொள்ளலாம்.

வேரியேஷன் – கடுகு தாளித்து, வெங்காயம் கொஞ்சம் நீளமாக கட் செய்து கொஞ்சம் பிரட்டியதும் வெண்டையைப் போட்டு வதக்கி மற்றவை இதே போலத்தான்

வேரியேஷன் 2 – கடுகு தாளித்து வெங்காயம் வதக்கி அதோடு தக்காளியும் நீளமாகக் கட் செய்து போட்டு வதக்கி பின்னர் வெண்டையும் வதக்கி மற்றவை இதே போல….

நன்றி கூகுளார்…

பாருங்க ஏஞ்சல் பூஸார் வெண்டை கழுவி துடைச்சு கொடுத்துட்டு எங்க போய் படுத்து கொர்ர்ர்ர்ர்ர்ர் நு தூக்கம். எழுப்புவோமா அவங்களுக்கு டெஸ்ட் இந்த ரெசிப்பி ஒழுங்கா செய்யறாங்களானு பார்ப்போமா ஏஞ்சல்? நீங்க அவங்க செக் ஆச்சே செக் பண்ணிடுங்க ஓகேயா!!!!!!!!!!

Image result for cat cooking in the kitchen
நன்றி கூகுளார்…

ஆஆஆஆ நான் சற்று நேரம் தூங்கினதுக்கு இப்பூடியாஆஆஆஆஆ பாருங்கோ என் செக் கும், கீதாவும் என்னை கிச்சனுக்குள் தள்ளிவிட்டு…. சமைக்கணுமாம்…..நான்! ஆராவது கெல்ப் மீ ப்ளீஸ்…

எபி ஸ்ரீராம், கௌ அண்ணா மற்றும் எல்லா ஆசிரியர்களுக்கும் எங்கள் நன்றி. அடுத்த ரெசிப்பியுடன் உங்களைச் சந்திக்கும் வரை எபி கிச்சன் குழு, டாட்டா பைபை, ஸீ யு சொல்லி விடை பெறுகிறோம்.

88 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. கீதா வந்தாச்சு!!! ஸ்ரீராம் அண்ட் ஆல் எபி நட்புகள் அண்ணாஸ் அக்காஸ், தம்பிஸ் தங்கைஸ் அனைவருக்கும் வணக்கம்...இப்ப ஆஜர் வைச்சுட்டு கொஞ்சம் பதில் கொடுத்துவிட்டுப் பின்னர் கொஞ்சம் வேலை முடித்துவிட்டு வந்து பதில்...

      எல்லாரும் வந்திருக்கீங்கதானே!!! பேய் எல்லாம் நடமாடுது போல!! ஓட்ட வரேன் வரேன் எங்கிட்ட, பூசார்கிட்ட எல்லாம் எந்த பேயும் பேய்க்காட்ட முடியாதாக்கும்!!!!!!!!!!!!!

      என்னாச்சு எபிக்கு? என் கறி போல ட்ரையா இருக்குது?!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இனி வரவிருக்கும் நட்புறவுகள் அனைவருக்கும் காலை வணக்கம், மற்றும் நல்வரவு துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. வரவேற்ற துரைக்கும் இனி வரவிருக்கும் அனைவருக்கும், வந்திருக்கும் ஶ்ரீராமுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

      நீக்கு
    3. வாங்க கீதா அக்கா. நல்வரவும், வணக்கமும்

      நீக்கு
  3. ஓ... இப்படியும் ஒன்று இருக்கிறதா!...
    நல்லவேளை... தப்பித்தோம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணே எதுக்கு தப்பித்தோம்!! எதுக்குன்னு கேக்கறேன்.!!!!!!!!! ஹக்காங்க் நானு எம்பூட்டு இளசான வெண்டைல செஞ்சுருக்கேன்!!!!!!!!

      கீதா

      நீக்கு
  4. வெண்டைக்காய்க் கறி. இதை மசாலா அடைத்து மஹாராஷ்ட்ராவில் செய்வார்கள். வெண்டைக்காய் குஞ்சுலுவின் விரல் நீளம் தான் இருக்கணும். காம்போடு இரண்டாகப் பிளந்து மேலே சொன்ன பொடிகளை வெண்டைக்காயினுள் அடைத்துச் செய்வாங்க! குடமிளகாய், தக்காளி சேர்த்தால் ஸ்டஃப் செய்யாமல் பொடியைத் தூவி விட்டுச் செய்யலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குஞ்சுலுவின் விரல் நீளம்//- இப்படி அளவு சொன்னா நான் என்ன செய்யறது, ரெண்டு வயசுக் குழந்தை விரல் நீளம்னு சொல்லக்கூடாதா?

      நீக்கு
    2. அக்கா அவுங்களே இன்னும் கொழந்தையா இருக்குறப்போ
      குட்டிக் குஞ்சுலுவுக்கு எப்படி வயசு சொல்லுவாங்க!?....

      நீக்கு
    3. அப்போ ஒருவேளை, வெண்டைக்காய்க்குப் பதிலா, அளவில் சிறியதான சுண்டைக்காயைப் போடச் சொல்றாங்களோ கீசா மேடம்? துரை செல்வராஜு சார்...நீங்க என்ன நினைக்கறீங்க?

      நீக்கு
    4. சுண்டைக் காய்க்கும்
      வெண்டைக் காய்க்கும்
      ஏணி வெச்சாலும் எட்டாதே!..

      இப்படியெல்லாம் அலப்பறை ஆகும். ..ந்னு தெரிஞ்சிருந்தா..

      கீதா & பூஸார் நேரடியாவே
      சுண்டைக்காய் மசாலா ஃப்ரை வித் யோகர்ட் ..ந்னு போய் இருப்பாங்க!...

      நீக்கு
    5. சரி... சுண்டைக்காய்க்கு என்னா பேருங்கோ இங்கிலீஷ்..ல!..

      பேபி கார்ன், பேபி காரட்..ந்னு சொல்ற மாதிரி பேபி எக்பிளாண்ட்..ந்னு சொல்ல முடியாதே!...

      முட்டைச் செடியின் குட்டியா!?..

      ஏ.. சாமீ!.. ஆங்கிலம் தான் அறிவு..ந்னு பினாத்துறாங்களே!...

      நீக்கு
    6. துரை சார்..நீங்க கேட்டீங்களே..நாமும் சுண்டையின் ஆங்கிலப் பெயரைத் தெரிந்துகொள்ளலாம்னு 'வலைத் தமிழ்' பார்த்தேன்.

      அதில், 'ஆட்டா மா' (wheat flour) அவரக்காய், கராம்பு, கர்பூரவள்ளி, கசுக் கொட்டை (முந்திரிக்கு), பிலாப்பழம், புளுங்கல் அரிசி, உழுத்தம் பருப்பு, உறுளைக் கிழங்கு, வெண்டிக்காய் என்றெல்லாம் எழுதியிருக்காங்க. இவங்களுக்கே தமிழ் தெரியலை..இதுல மத்தவங்களுக்கு எங்க தெரியும் தமிழ்லாம்..

      நீக்கு
    7. what happened to my comment :) i suspect that //pei //

      nellaithamizhan its turkey berry ..solanum turvum is scientific nam for sundakkaa

      நீக்கு
    8. ஆஹா, வாங்க எஞ்சல், உடம்பு பரவாயில்லையா? பேய் உங்களோட கருத்தை ஒளிச்சு வைச்சுடுச்சா? அம்புட்டு தைரியமா, அந்தப் பேய்க்கு?

      நீக்கு
    9. feeling much better akkaa . haahaa yes ..how dare he does it to me :)

      நீக்கு
    10. உடம்பு தெம்பாகட்டும் லண்டன் பேயுடன் வரேன் :) இந்த பேய் அலறி ஓடற அளவுக்கு எங்கூரில் haunted பிளேசஸ் கோஸ்ட் எல்லாம் இருக்கு

      நீக்கு
    11. ஏஞ்சல் என்னாச்சுப்பா...இந்த ஒரு வாரத்துல என்னெல்லாமோ கதை இருக்கு போல..பூஸார் உடம்பு சரியில்லாம இருந்தாங்க அடுத்து நீங்க...அது சரி இப்ப அங்கும் ஏதாவது ஃபீவர் மேனியாவா?!!

      டேக் கேர் ஏஞ்சல்...ஏஞ்சலி இந்தப் பேய் எல்லாம் நம்ம கிட்ட பேய்க்காட்ட முடியாதே..ஓட்டிடுவோம். எபில ஏதோ வேப்பமரம் எல்லாம் வளர்க்க ஆரம்பிச்சுருக்காராம் ஸ்ரீராம்...முருங்கி மரம் கூட இருக்கே!! வேப்பிலை வைச்சு ஓட்டிடுவோம்!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    12. கீதாக்கா அதே அதே!! நான் 3, 4 வேரியேஷன் எழுதி அது விட்டுப் போச்சு. இன்றுதான் கவனித்தேன்...நீங்க சொல்லிருக்கறதுதான்...

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
    13. ஏஞ்சலுக்கு உடம்பு சரியில்லையா?
      பூக்களின் மகரந்தம் பறக்கும் அதனால் மூச்சு திணறல் அலர்ஜி வரும் என்பார்கள் அதுதான்காரணமா?
      நலம் பெற வாழ்த்துக்கள்.

      நீக்கு
  5. வெண்டை மசாலா சப்ஜி எளிதா இருக்கே... கொப்பரைக்குப் பதில் பாக்கெட் தேங்காய் துருவல் வாங்கிடலாம்.

    செய்துபார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். என்னாளும்
      நன்னாளாக இருக்க வாழ்த்துகள்.சென்னையில் நல்ல மழை பெய்ததாகச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
      எங்க ஊரில் பெய்ததோ தெரியலை.

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...

      சென்னையில் மழை என்றால் என்ன என்று மறந்து போயிருந்தவர்களுக்கு நினைவூட்டும் வண்ணம் மழை வந்துபோனது. போதுமானதல்ல!!!

      நீக்கு
    3. மறந்தவர்க்கு எதற்கு மழை!?.. முகிலே..
      அருமை பெருமை அறியாதவர்கள் வீணாக ஆக்கி விடுவார்கள்....

      ஆனாலும் தவித்து நிற்கிறார்கள்..
      மனதையும் வயிற்றையும் நனை...

      நீக்கு
    4. நெல்லை ரொம்ப எளிதான சம்ப்ஜி செஞ்சு பார்த்துட்டுச் சொல்லுங்க...

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    5. சென்னையில் மழை என்றால் என்ன என்று மறந்து போயிருந்தவர்களுக்கு நினைவூட்டும் வண்ணம் மழை வந்துபோனது. போதுமானதல்ல!!!//

      ஆமாம் ஸ்ரீராம் அண்ட் வல்லிம்மா...கீதா சென்னைக்குப் போனதால மக்கள் மறந்து போன மழைய பார்த்தாங்க!! நான் பங்களூர் வந்தாச்சு இங்கு மழை தூறல்!!!! ஹிஹிஹிஹி

      எல்லாரும் கேட்டுக்கோங்க...ரகசியம் அந்த மழை பெய்த போது நான் அடையாறில் நெல்லை வீட்டின் முன்புதான் இருந்தேன்...நெல்லை மழையை அதிசயத்தோடு பார்த்து ஆஹா அப்ப இந்த கீதா இங்க தான் எங்கேயோ இருக்கா போலன்னு சுத்தி சுத்தி பார்த்த நெல்லையையும் பார்த்தேன் அப்படின்ற ரகசியத்த சொல்லிடாதீங்க!! ஓகேயா...

      நான் முதல் மழையில் சந்தோஷமாக நனைந்தேனே!!!! ஹெ ஹெ ஹெ!!!!!! நல்ல காலம் ஹெல்மெட் போட்டுக் கொண்டிருந்தேன் என் ஹியரிங்க் எய்ட் தப்பித்தது!!

      கீதா

      நீக்கு
    6. கீதா ரங்கன் - ரொம்ப மழை பெய்யுது..இப்போ வெளில போகாதீங்க (காய்கறி வாங்க) என்று சொன்னா. பாலைவனத்துல இருந்தவனுக்கு மழை என்பது கொடுப்பினை அல்லவா? நான் ஜம்முனு நடந்துபோய், பழமுதிர்ச்சோலைல காய்கறி வாங்கிக்கொண்டுவந்தேன். மழை குறைவு, ரோட்டில் குப்பை ஏகப்பட்டது. ஓரங்களில் மழைத் தண்ணீர், விழுந்த இலைகள் என்று ஒரே சகதிமாதிரி இருந்தது.

      பெங்களூர்ல இருந்தபோதும் மழையை அனுபவித்தேன்.

      நீக்கு
  6. பெண்டி ஃப்ரை சூப்பர். கீதா பார்த்துக் கொண்டே இருந்தேன் சூப்பரா
    செய்துட்டீங்களே.

    விளக்கப் படங்களும் சூப்பர். தனியா தனியான்னு கேட்டுக் கேட்டூ
    அலுத்துப் போச்சு. நீங்கள் கொத்தமல்லி விரைன்னு சொல்வது இனிமை.

    செய்துடலாம். புழு பூச்சி இல்லாத வெண்டை இங்கே கிடைக்கிறது. அதை
    முழுசாக வதக்கி விடுவேன்.
    நோ மசாலா. அப்படியே சாப்பிட வேண்டியதுதான்.
    நன்றி கீதா மா. சாப்பிடக் கூப்பிடுங்கள் எல்லோரையும்.
    நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா எனக்கும் ஏனோ தெரியலை தனியா என்று சொல்வது அவ்வளவாகப் பிடிப்பதில்லை. எனவே நான் எப்போதுமே கொத்தமல்லி விரை என்றுதான் சொல்கிறேன். நம்மூர் பழக்கம் வல்லிம்மா...சென்னை வந்துதான் தனியா என்று கற்றது. சென்னைக்கு வந்த புதிதில் மாமியார் என்னிடம் சாமான் வாங்கி வரச் சொன்னால் முதலில் கேட்டது "தனியா வந்திருக்கா" என்று...நான் சுற்றுமுற்றும் தேடினேன் யாரு வந்திருக்காங்க அதுவும் தனியா வந்திருக்கான்னு? வேற மாமியார் சொல்றாங்களேனு. இப்படி நிறைய வார்த்தைகள் முதலில் குழப்பியது என்னை...வெண்டைக்காய்/வெள்ளரிக்காய் பச்சடி...நான் இனிப்பு என்று நினைத்தேன். எங்கள் பக்கத்தில் கிச்சடி என்றுதானே சொல்லுவாங்க. இனிப்புப் பச்சடி மட்டும்தான் பச்சடி ..

      கீதா

      நீக்கு
    2. //எங்கள் பக்கத்தில் கிச்சடி என்றுதானே சொல்லுவாங்க// - இப்போதான் நீங்க எங்க ஊர்... என் மனைவிதான் இதற்கெல்லாம் பச்சிடின்னு சொல்லி அதையே என் மண்டைல ஏத்திட்டா. எங்களுக்கு பச்சிடின்னா அது மாங்காய் பச்சிடி, சித்திரையில் செய்வது..

      நீக்கு
    3. நான் முதல் முதல் ராஜஸ்தான் போனப்போ கொத்துமல்லி விதைக்கு "தனியா" என்னும் ஹிந்தி பெயரைத் தெரிஞ்சு வைச்சுக்கலை! மத்ததெல்லாம் ஹிந்தியில் எழுதிக் கொடுத்துட்டேன். இதை எப்படிச் சொல்லுவதுனு தெரியாமல் யோசிச்சுக் குழம்பிப் போய்ப் பின்னர் ஏற்கெனவே கொண்டு போன கொஞ்சம் விதையைக் காட்டிப் பெயரைத் தெரிந்து கொண்டேன்.

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் பானு அக்கா.

      நீக்கு
    2. பானுக்கா மாலை வணக்கம் ...நான் வீடு எத்தி கேட்டோ!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. வெண்டை மசாலா ட்ரை சப்ஜி? மிக அருமை.
    எல்லோரும் சமையல் அறையில் பேசி சிரித்து சமையல் செய்யும் போது அலுப்பு என்பதே இருக்காதே!
    அதுவும் கூடமாட ஒத்தாசை என்றால் கேட்க வேண்டாம். கோடை காலத்திலும் சமையல் அறை குளர்ச்சியாக இருந்தது. அன்பு மழையில் நனைந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எல்லோரும் சமையல் அறையில் பேசி சிரித்து சமையல் செய்யும் போது // கோமதி அரசு மேடம்.... பெண்கள்லாம் பேசிச் சிரித்து சேர்ந்து சமையல் செய்தால், பதம்லாம் சரியா வருமா? ஆண்கள்தானே சாப்பிடறாங்கன்னு அல்ட்சியமா பண்ணிட மாட்டாங்களா? சந்தேகமாக இருக்கே....

      நீக்கு
    2. கோமதிக்கா ஆமாம் அக்கா ஜாலியா இருக்கும் இல்லையா. அதுவும் இப்படி நாம எல்லாரும் சேர்ந்து செஞ்சா....உதவிக்கு எல்லாம் கூட பரவால்ல கோமதிக்கா.. ஆனால் சும்மா கல கலனு இருந்தாலே போதும் எனக்கு....வீடு லைவ்லியாக இருந்தா ரொம்பப் பிடிக்கும். நல்லாருக்கும் இல்லையா அக்கா.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    3. நெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      அட! எப்படி இந்த சைக்காலஜி எல்லாம் தெரிஞ்சுக்கிட்டீங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!! அப்ப நீங்க நிறைய பெண்கள் வீட்டில் அடுக்களையில் சேர்ந்து சமைத்து சாப்பிட்டதில்லையோ!!!

      கீதா

      நீக்கு
    4. கீதா , எனக்கும் எல்லோரும் கல கல வென்று பேசி கொண்இருந்தால் பிடிக்கும் . நமக்கு வேலை பளு தெரியாது. பேச பேச விஷயங்கள் தீரவே தீராது மகிழ்ச்சியான பொழுதாக அமையும்.

      நீக்கு
  10. வெண்டைக்காய் இருக்கிறது. வீட்டில் திரித்து வைத்து இருக்கும் மல்லித்தூள், மிளகாய்த் தூள், சீரகத்தூள் இருக்கிறது எலுமிச்சையும் இருக்கிறது. நல்ல முற்றிய தேங்காய் இருக்கிறது அது கொப்பரை போல்தான் இருக்கிறது. செய்து விடுகிறேன்.
    நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க கோமதிக்கா நல்லாருக்கும்

      சாதத்துக்கும் தொட்டுக் கொள்ள நல்லாருக்கும்

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  11. 'லேடீஸ் ஃபிங்கர்' ஃப்ரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். பேயானதிலிருந்து அதுதான் எனக்குக் கொறிக்க. வெண்டைக்காய் எனக்குப் பிடிக்காது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானா பெங்களூரில் இருக்கும்போது பலருக்கு சுண்டுவிரல் காணாமல் போயிருந்தது? இப்போ புரிஞ்சுக்கிட்டேன்.

      சாப்பிடும்போது கீழே விழும்படி சாப்பிடக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்றது? பாருங்க..உங்க லேப்டாப் பக்கத்துல ரெண்டு மூணு சுண்டுவிரல் விழுந்துருக்கு

      நீக்கு
    2. பேயே, இது என்ன கொடுமை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! உங்க பேச்சு காய்! :(

      நீக்கு
    3. பயமாய் இருக்கே ! வெண்டை விரல் பிடிக்குமாம் பேய்க்கு

      நீக்கு
    4. நெல்லை சந்தோஷமாய் செய்யும் போது ருசி அதிகமாய் இருக்கும் .ஆண்களிடமிருந்து பாராட்டுக்கள் கிடைக்கும் என்று நினைத்தால் நீங்கள் இப்படி சொல்லலாமா?

      நீக்கு
    5. ஹா ஹா ஹா ஹா கொ அண்ணா லேடிஸ் ஃபிங்கர்தான் பிடிக்கும்!! ஹையோ சிரிச்சு முடியலை கௌ அண்ணா...செம ஜோக்!!!! அது சரி அதுக்காக இப்பூடியா பேய் ஆட்டம் போடுறது...

      இப்பூடி பிறந்த குழந்தைய பயப்படுத்தலாமா.பாருங்க உங்க கூட காய் போட்டுருச்சு!!

      இப்பத்தான் தெரியுது எபி ட்ரை யா இருக்குதேன்னு பார்த்தா பேய் நடமாட்டம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      சரி சரி வேப்பிலை எல்லாம் ரெடியா இருக்கு! யாருப்பா அங்க துரை அண்ணே விபூதி எடுத்துக்கிட்டு வாங்கப்பா! புலியூர் பூஸானந்தாவைக் கூப்பிடுங்க!!! கீதாக்கா கோமதிக்கா சஷ்டிக்கவசம் சொல்லுங்க!!!!!

      பாருங்க கொஞ்ச நேரத்துல பேயார் சொல்லுவார் எனக்கு வெண்கைக்காய்தான் பிடிக்கும் லேடீஸ் ஃபிங்கரா? அப்பூடினா என்னா? ச்சீ ச்சீ நீங்க எல்லாம் வெரி வெரி பேட் னு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    இன்று கீதாரெங்கனின் (அடாடா.. சகோதரி சேர்க்க மறந்து விட்டேன். பெயருக்கு முன்னதாக சேர்த்துக் கொள்ளவும்.ஹா. ஹா. ஹா. ) ஸ்பெஷல் தயாரிப்பா? வெண்டை சப்ஜி சூப்பராக இருக்கிறது. அவர் அனைவரையும் சமையலறைக்குள் அழைத்து வைத்த விதமே அழகின் முதல் அணிவகுப்பை சிறப்பாக்கி விட்டது. பின்பு செய்முறை, படங்கள் எல்லாம் பதிவிட்டு இன்றைய "திங்க"ளை மேலும் சிறப்பாக்கி விட்டார். பாராட்டுகளுடன் வாழ்த்துக்கள்.

    வெண்டை சப்ஜி மிகவும் நன்றாக உள்ளது சகோதரி கீதா ரெங்கன். இதுபோல் நான் செய்ததில்லை. வெறும் வதக்கல், இல்லை அது போரடித்தால் கொஞ்சம் துருவிய பச்சை தேங்காயுடன் சேர்த்து பொரியலாக பண்ணியிருக்கிறேன். இந்த செய்முறையில் இனி செய்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா அக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      அதென்ன சகோதரி? நான் உங்க சின்ன குட்டியூண்டு தங்கையாக்கும். என்னை கீதான்னே கூப்பிடலாம்...சகோதரினு போட்டு க்ரேட் க்ரான்மாக்கு போட்டுக் கொடுக்கக் கூடாதாக்கும்...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      மிக்க ந்ன்றி கமலா அக்கா...செஞ்சு பாருங்க..ஓகேயா

      கீதா

      நீக்கு
  13. ட்ரை என்பதை காய்ந்தது என்று நினைக்கலாமா ? அல்லது ருசி பார்க்க ட்ரை என்று நினைக்கலாமா ?

    அடுப்பாங்கறை அலப்பறைகளை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி கலந்து தான் செய்வோம்.. ந்னு அப்பவே சொல்லிட்டாங்களே..

      விஜிடபுளை பர்சேஸ் பண்ணுங்க..
      நல்லா வாஷ் பண்ணுங்க..
      பிங்கர் சைஸ் கட் பண்ணுங்க...
      சில்லிசாஸ் போட்டு குக் பண்ணுங்க..
      பிளேட்ல வெச்சி டேஸ்ட் பண்ணுங்க..

      வாழ்க தமிழ்!..
      வளர்க தமிழ்!...

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார்... 'கட்' பண்ணுங்க - திருத்தவும். Bake இதற்கு தமிழ் என்ன? நம் உணவுகளுக்கு மட்டும்தான் தமிழ் வார்த்தை இருக்குன்னு நினைக்கிறேன்.

      நீக்கு
    3. அனல் அடை.. என்று சொல்லலாமா!?...

      அடுமனை என்கிறார்கள்...

      நீக்கு
    4. புனல் வாதம், அனல் வாதம் - இதுலேர்ந்து வந்ததா? பேசாம அடுமனையில் சுடு என்று சொல்லிடலாமா?

      நீக்கு
    5. கில்லர்ஜி ஹா ஹா ஹா ஹா ஹா இரண்டையும் எடுத்துக் கொள்ளலாம்!!!! மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு...அலப்பறைகளை ரசித்தமைக்கு

      கீதா

      நீக்கு
    6. துரை அண்ணா ஹிஹிஹிஹிஹி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    7. துரை அண்ணா அண்ட் நெல்லை! பேக் செய்வதற்கு வெதுப்பு வெதுப்புதல் என்று சொல்லப்படுகிறது. பேக்கரி - வெதுப்பகம், அடுமனை என்று சொல்லப்படுகிறது. திருவான்மியூரில் ஒரு இலங்கைக் கடைகள் இரண்டு இருக்கிறது. அவர்கள் பலகையில் இப்படித்தான் எழுதி வைத்திருக்கிறார்கள்.

      கீதா

      நீக்கு
  14. இது கரேமதாக சாப்பிடமுடியாதோ? சப்பாத்தி போன்றவைகளுக்கு மட்டும்தானா?

    கீதா சாம்பசிவம் மேடம்...எப்போ விதவிதமான கறிவகைகள்,கூட்டுலாம் எழுதப்போறாங்களோ.... (வெங்காயம் போடாமல். அப்போதான் நான் தினமும் ஒவ்வொன்றையும் சமைத்துப் பார்க்க முடியும். அதிலும், வெண்டை, பீன்ஸ், பூசனி, சேனை, கத்தரி, தக்காளி, புடலை, வாழை, உருளை, கோஸ், செளசெள, போன்றவைகளை மட்டும் உபயோகப்படுத்தி)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சப்பாத்திக்கு மட்டுமல்ல, சாப்பாட்டுக்கும் தொட்டுக்கலாம். கூட்டுகள் ஏற்கெனவே சிலது எழுதி மரபு விக்கியில் இணைச்சேன். அங்கே போய்ப் பார்க்கணும். தக்காளி சமையல்னு தனித் தலைப்பிலேயே எழுதி இருப்பேன். சௌசௌ துவையல், கூட்டு, கறி, கதம்பமாகக் கலந்து, சப்பாத்திக்கு மட்டும் குருமாவுக்கு, காய்கறிக்கலவை சாதம்னு எல்லாத்திலேயும் ஒவ்வொரு விதமாகப் பயன்படுத்தி இருக்கேன். இப்போத் தான் எல்லாம் குறைஞ்சு போயாச்சு!

      நீக்கு
    2. சாப்பிடலாம் நெல்லை கீதாக்காவும் சொல்லிட்டாங்க பாருங்க்
      கீதா

      நீக்கு
  15. பயணத்திற்கு உதவும் என்றால்...

    அப்ப சரி... அப்ப சரி...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி ஆமாம் ரொம்பவே நல்லாருக்கும் கட்டுக் கொண்டுப் போய் சாப்பிட்டுப்ப் பார்த்துச் சொல்லுங்க

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  16. வாங்க கீதா. ஃப்ரீ ஆகி விட்டீர்களா? பிண்டி பாஜி! என் மகனுக்கு மிகவும் பிடித்த ஐட்டம். அதனால் விதம் விதமாக செய்து கொடுப்பேன். அதில் ஒரு விதம் நீங்கள் பகிர்ந்திருப்பது. கொப்பரைக்கு பதிலாக தேங்காய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா வந்தாச்சு....

      பிண்டி பாஜி ஆஹா அக்கா உங்க ரெசிப்பிஸும் இங்கு கொடுங்க...

      இது வந்து கிட்டத்தட்ட கர்நாடகா மஹாராஷ்ட்டிரா பார்டர் கிட்ட செய்யறது...ஒரு 30 வருஷம் முன்பு என் அம்மாவின் சித்தி பெண் எனக்கும் சித்திதான் அவங்க கிட்ட கற்றுக் கொண்டது. அவங்க கொஞ்சம் கஷ்டத்துல இருந்த போது கேட்டரிங்க் செஞ்சுட்டுருந்தாங்க அப்ப. இங்கு பங்களூரில். அவங்ககிட்ட நிறைய ரெசிப்பிஸ் தெரிந்து கொண்டேன். டக் டக்கென்று செய்வாங்க. செய்யும் போது ரொம்ப நீட்டா செய்வாங்க...என் அம்மாவின் அம்மா என் பாட்டியின் கடைசி தங்கையின் பெண் தான் இவர். இரு பாட்டிகளுமே செம நீட்டா செய்வாங்க. எண்ணை பண்டங்கள் செய்தால் சுவடே இல்லாமல் செய்வாங்க. அதுவும் நிறைய பேருக்குச் செய்வாங்க குடும்பம் பெரிது என்பதால். எண்னெய் பண்டங்கள் செய்து வடிதட்டில் போடும் போதே பொறுமையாக நன்றாக வடித்துவிட்டுப் போடுவாங்க வடிதட்டில் ஒரு சொட்டு எண்ணெய் இருக்காது. அதை நான் பார்த்துக் கற்றுக் கொண்டு இன்று வரை ஃபாலோ செய்ய முடிகிறது...கொஞ்சம் நேரம் எடுக்குமாக இருக்கலாம் ஆனால் காரியம் சுத்தமாக இருக்கும். டிஷ்ஷு பேப்பருக்கு அவசியமே இல்லாமல் இருக்கும்...

      உங்களது வெண்டை குறிப்புகளையும் போடுங்க பானுக்கா...

      மிக்க நன்றி பானுக்கா..

      கீதா

      நீக்கு
  17. வாவ்... வெண்டைக்காய் பிரியன் நான்...
    செஞ்சி பார்த்துடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குமார் அப்படினா கண்டிப்பா செஞ்சு பார்த்துடுங்க சொல்லுங்க! ரொம்ப நல்லாருக்கும்..

      மிக்க நன்றி குமார்

      கீதா

      நீக்கு
  18. அட சூப்பரா இருக்கு கீதாக்கா ...

    வழக்கம் போல இதுவும் புதுசு இப்படி தேங்காய் மட்டும் போட மாட்டோம் ...அடுத்த முறை இப்படி செய்து பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அனு....செஞ்சுப் பார்த்துடுங்க...சொல்லுங்க...

      மிக்க நன்றி அனு

      கீதா

      நீக்கு
  19. okra sabji looks yummy geetha ..will try this soon .its my daughters favourite.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல் எப்படி இருக்கீங்க. உடம்பு தேவலாமா...

      ஆமாம் ஏஞ்சல் ரொம்ப நல்லாருக்கும் என் சித்திக்கிட்ட கத்துக்கிட்டு செஞ்சதும் ரொம்ப பிடிச்சு போச்சு. அதுவும் வெண்டை எங்க வீட்டுல எல்லாருக்குமே ரொம்பப் பிடித்த ஒன்று. ஓ ஷரன் மோளுக்குப் பிடிக்குமா...அப்ப செஞ்சு கொடுத்துட்டு அவங்க என்ன சொல்றாங்கனு சொல்லுங்க.

      ஓ ஏஞ்சல் உங்க புடலங்காய் தோசை ஃபோட்டோவ இதோடு சேர்த்துப் போட நினைத்து விட்டுப் போச்சு. கூடிய சீக்கிரம் திங்க வுல போடுறேன்...

      மிக்க நன்றி ஏஞ்சல்...

      கீதா

      நீக்கு
  20. இப்போதெல்லாம் ஹிந்தி மொழியில் சொல்வதே ஃபேஷன்அப்போ பிண்டி மசாலா சப்ஜி என்று சொல்லலாமா காய்கறிகளையே சப்ஜி என்று சொல்கிறார்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர் ஜி எம் பி ஸார் நீங்க சொன்ன நாமகரணமும் சூட்டிடலாமே!!!!!

      மிக்க நன்றி சார்.

      கீதா

      நீக்கு
  21. எந்தக்காயை சமைத்தாலும் அதன் கூடவே இருக்கும் அதன் குணமும் மணமும்இருக்க வேண்டும் வெண்டைக்காய் வழவழப்பானது அதை ட்ரை யாக சமைத்து அதன் குணத்தையும் மணத்தையும் இழக்கச் செய்யலாமா எனக்கு ஏன் பொல்லாப்பு நான் இப்படி செய்யமாட்டேன் என்றாலும் செய்பவர்களைத்தடுக்க முடியுமா ஊக்கம் தராவிட்டாலும் பிழை சொல்லாமல் இருக்கலாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் இதன் நிறம், குணம், மணம் மாறாது சார். வெண்டையின் டேஸ்ட் அப்படியே இருக்கும். அந்த வழ வழப்பும் கூடவே இருக்கும். ஆனால் பொடிகள் கலந்து இருக்கும். நான் சும்மா ட்ரை என்று சொல்லிருக்கேன் அவ்வளவுதான். என் சித்தி சும்மா இது ஒரு புது வெண்டை சப்ஜி என்றுதான் சொன்னாங்க...

      மிக்க நன்றி ஜி எம் பி சார்.

      கீதா

      நீக்கு
  22. கடைசிப் பூனை ஆரு! பாகிஸ்தான் கேப்டனோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா தூங்கிக் கிடந்த பூனைய எழுப்பி கிச்சனுக்குள்ள தள்ளி விட்டு டெஸ்ட் வைக்கறா மாதிரி நான் சொன்னத சமைச்சுக் காட்டுநு சொன்னா அது கத்தாம... ஓ ஏகாந்தன் அண்ணா கிரிக்கெட்லருந்து எழ முடியாம இங்க வந்து எட்டிப் பார்த்தீங்களோ ஹா ஹா ஹா அப்படினா பாக் கேப்டன் அஹமெடையும் இப்படித்தான் தூக்கத்துலருந்து எழுப்பினு சொல்லறீங்களா அண்ணா...ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    2. @கீதா:
      இந்தியாவுக்கு எதிரான மேட்ச்சில் பாக். கேப்டன் பெரிசா கொட்டாவி விடப்போய், அது படமாகி, வைரலாகிப் பரவிவிட்டது. கடுப்பான பாக். ரசிகர்கள் அவரைக் கிழித்துத் தொங்கவிட்டுவிட்டார்கள். ஒருவேளை, அவர்தான் பூனை ரூபத்தில் திங்கட்கிழமையாகப் பார்த்துக் கிட்ச்சனுக்குள் நுழைந்துவிட்டாரோ என நினைத்தேன்!

      நீக்கு
  23. ஆஹா பிண்டி ஃப்ரை.... நானும் இந்த மாதிரி நீள வாக்கில் கட் செய்து செய்வதுண்டு. சப்பாத்தி கூட நல்ல காம்பினேஷன்.

    சுவையான குறிப்பினைப் பகிர்ந்த கீதாஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட்ஜி! சப்பாத்திக்கு பிண்டி ஃப்ரை நல்ல கோம்போ! வெண்டையில் நிறைய செய்யலாம் சப்பாத்திக்கு...நீளவாக்கில் கட் செய்தால் அது தனி சுவை இல்லையா...நீங்களும் அப்படிச் செய்வது சூப்பர் ஜி!!!

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  24. இன்றைக்கு இதுதான் எங்க வீட்டில் மனைவி பண்ணினா (மோர்க்குழம்பு, சாதம், இந்த வெண்டை ஃப்ரை). ரொம்ப நல்லா இருந்தது. என் பெண்ணும் நல்லா இருக்கு என்றாள்.

    அவளோட உறவினர் இதைப் பண்ணுவாராம், ஆனால் சீரகம் இல்லாமல் என்றாள். கொத்தமல்லி விரை வாசனை சீரகத்துனால மட்டுப்படுது.

    மோர்க்குழம்ப, புளிசேரி ஆகியவைகளுக்கு இந்த கரேமது (ஹா ஹா) ரொம்ப நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை இது மோர்க்குழம்பு புளிசேரி வகைகளுக்கு ரொம்பவே நல்லாருக்கும்.

      ஆமாம் இதில் கொஞ்சம் ஜீரகம் தான் டாமினேட் செய்யும். வேண்டுமென்றால் கொ வி யை அதிகமாகப் போட்டுக்கலாம் எல்லாம் நம்ம இஷ்டம்தானே நான் என் சித்தி சொல்லிக் கொடுத்ததை வைத்து...அவங்க சும்மா எல்லாப் பொடியும் ஒரு ஸ்பூன் ஸ்பூன் ந்னு சொன்னாங்க...நான் சில சமயம் பொடியாகவும், சில சமயம் இப்படி இங்கு சொன்னது போலவும் செய்வேன் நெல்லை.

      உங்க பெண்ணுக்குப் பிடித்தது நல்லாருக்குனு சொன்னதுக்கு மிக்க நன்றி

      உங்க ஹஸ்பன்ட் கிட்டயும் பொண்ணுகிட்டயும் என் நன்றியை அப்படியே கடத்துங்க!!!

      உங்களுக்கும் மிக்க நன்றி செய்து பார்த்து இங்கு சொன்னதற்கு...

      கோமதிக்காவும் செய்து நல்லாருக்குனு எனக்கு ஃபோட்டோவோடு வாட்சப்பில் சொல்லியிருந்தாங்க....

      கீதா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!