சனி, 13 ஜூலை, 2019

பத்தாயிரம் ரூபாய் இங்கே... உரியவர் எங்கே?


1)    "..............அதேபோல், குடும்பத் தலைவர் இல்லாத குடும்பத்துக்கு, தேவையான மளிகைப் பொருட்களை வாங்கி தருகிறோம்.
கழிப்பறை வசதி இல்லாத ஒரு குடும்பத்துக்கு, சமூக வலைதளம் மூலமும், நண்பர்கள் உதவியுடனும், 45 ஆயிரம் ரூபாய் செலவில், கழிப்பறை கட்டிக் கொடுத்தோம்...."

சென்னையில், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிவதுடன், சமூக சேவையிலும் ஈடுபட்டு வரும், வேலுார் மாவட்டம், ரங்காபுரத்தைச் சேர்ந்த, எஸ்.தினேஷ்.



2)  நன்றி பாதூர் ரங்கன், பேஸ்புக்.




3)  அசாமில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. சோனிட்பூர் பகுதியில் தாய் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் ஆற்றை கடக்க முயன்றார். அப்போது பெருவெள்ளத்தில் சிக்கிய அவர்கள், நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதனை கண்ட உத்தம் டடி என்ற 11 வயது சிறுவன், வெள்ள நீரில் குதித்து நீந்தி சென்று தாயையும், ஒரு குழந்தையையும் மீட்டார்.........






4)  பயனில்லா விட்டாலும் நான் பாஸிட்டிவாகவே இருப்பேன்...!  ஏ.டி.எம்.,மில், கீழே கிடந்த பணத்தை, உரியவரிடம் ஒப்படைக்க, நேர்மையான முதியவர், 10 நாட்களாக போராடி வருகிறார்.






49 கருத்துகள்:

  1. பதினொரு வயது குழந்தை தாயை காப்பாற்றியது பெருமையான விசயம்.

    நாளை இந்த தாயை முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் காப்பாற்றட்டும்.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    பதிலளிநீக்கு
  3. அதிசய வரவான கில்லர்ஜிக்கும், வந்திருக்கும் ஸ்ரீராமுக்கும், துரைக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு, வணக்கம், பிரார்த்தனைகள் கீதா அக்கா.

      நீக்கு
  4. திலீபன் பற்றி முகநூலில் நானும் படித்தேன். மற்றவை புதிய செய்திகள். விமரிசனப் பகுதியை நிறுத்தி விட்டீர்களா? நன்றாக இருந்ததே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானாக நிறுத்தவில்லை! விமர்சகர் கிடைக்கவில்லை.

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  6. அனைத்து நல்ல செய்திகளும் மனித நேயத்தை சொல்கிறது.
    சிறுவனை பாராட்ட வேண்டும்.

    ஏ.டி.எம்.,மில், கீழே கிடந்த பணத்தை, உரியவரிடம் ஒப்படைக்க, நேர்மையான முதியவர், 10 நாட்களாக போராடி வருகிறார்.//

    உதவி செய்ய நினைத்தாலும் இப்படி எல்லாம் கஷ்டம் வருகிறது.
    உரியவர்கள் பணத்தை பெற்று பணத்தை எடுத்து கொடுத்தவருக்கு மன நிம்மதியை தர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. இந்த வார விமர்சன பதிவு யார் என்று பார்த்தேன், காணவில்லையே!

    பதிலளிநீக்கு
  8. இந்தவார பாசிடிவ் செய்திகள் அருமை. அதிலும் விலங்குகளுக்கு நீர் வைப்பவர்.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  10. அன்பு ஸ்ரீராம், கீதா மா, துரை செல்வராஜு, நெல்லைத்தமிழன், தேவகோட்டை ஜி அனைவருக்கும், கோமதி மாவுக்கும் இனிய காலை வணக்கம். முதல் செய்தியை முக நூலில் படித்தேன்.

    வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தாயையும் குழந்தைகளையும்
    காப்பாற்றிய சிறுவனுக்கு வீர விருது கிடைக்க வேண்டும். பாவம் சின்னக் குழந்தை எத்தனை
    தைரியமாக இறங்கி இருக்கிறான்,.
    கையில் பணத்தை வைத்து உரியவரிடத்தில் சேர்க்க சிரமப் படுபவரைப்
    பார்த்தால் பரிதாபம் தான்.

    காட்டுக்குச் சென்று விலங்குகளுக்கு நீர் வைக்கும் நல்ல ஆத்மாவுக்கு
    மனம் நிறை வாழ்த்துகள்.
    உத்தமமான செய்திகளுக்கு அப்புறம் விமரிசனத்தை தேடினேன்.
    காணவில்லையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... வணக்கம்.

      பாற்றுகளுக்கு நன்றி.

      விமர்சகர் யாரும் கிடைக்கவில்லை! அதுதான்!

      நீக்கு
  11. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    அனைத்து செய்திகளும் சிறப்பான செய்திகள். நல்லுள்ளம் கொண்ட இந்த நல்ல மனிதர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
    விரிவாக படித்து பின் வருகிறேன். இன்றைய விமர்சனத்தை நானும் காணவில்லையே எனத் தேடினேன். வாரவாரம் நன்றாக போய் கொண்டு இருந்ததே.. இன்று விமர்சனம் இடம் பெறாமல் இருப்பது கொஞ்சம் வெறிச்சென்று உள்ளது. அந்த அளவுக்கு இப்பகுதி எங்களை கவர்ந்து விட்டது. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      பாராட்டுகளுக்கு நன்றி.

      விமர்சனம் இந்த வாரம் இடம்பெற வைக்க முடியவில்லை!

      நீக்கு
  13. இன்றைய செய்திகளின் தொகுப்பு அருமை....

    நீரில் தத்தளித்தவர்களைக் காப்பாற்றிய சிறுவன் மிகுந்த பாராட்டுக்குரியவன்...

    உரியவரிடத்தில் பணத்தைச் சேர்ப்பதற்கு போராடும் பெரியவர் அலைக்கழிக்கப்படுவது அநியாயம்....

    இனியொருவர் இது மாதிரி செய்வதற்கு முன்வரமாட்டார்...

    அதுதானே கலி புருஷனுக்கு வேண்டும்...

    பதிலளிநீக்கு
  14. ஆகா ....
    விடுபட்டு விட்டதென
    விமர்சனம் அப்புறமாக
    வரும் என்று நினைத்தேன்...

    அல்லது
    வேறு தேதிக்கு மாற்றி விட்டீர்களா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறு தேதிக்கு மாற்றவில்லை. விமர்சிக்க ஆள் கிடைக்கும்வரை காத்திருக்கவும்!!

      நீக்கு
  15. அது இல்ல.. இது இல்ல..
    அரசாங்கம் சரியில்ல..
    அனுதினமும் புலம்புவோர் மத்தியில்
    வனத்து விலங்குகளும் வாய்
    வறண்டுபோய்க் கிடக்குமே
    தண்ணியில்லாக் காட்டில்
    சிந்தித்தானே ..
    செயல்பட்டானே ஒருவன்
    திலீபா !
    சாதாரணத் தமிழனல்ல நீ !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏகாந்தன் ஸார்... திலீபன் என்றால் எனக்கு உடனே ஜாவர் சீதாராமன் நினைவுக்கு வருகிறார்!

      நீக்கு
    2. உடல், பொருள், ஆனந்தி! எத்தனை தரம் படித்தாலும் அலுக்காது!

      நீக்கு
    3. ஜாவர் சீதாராமன் அப்போழுது குமுதத்தில் எழுதியதெல்லாம் ஹிட்! அதற்காக வரையப்பட்ட படங்கள்.. இப்போது குமுதத்தைப் பார்க்கவே சகிக்கவில்லை.

      நீக்கு
    4. உடல்,பொருள், ஆனந்திக்கு ராமு வரைந்திருப்பார். பணம், பெண், பாசத்துக்கு வர்ணம், மின்னல், மழை, மோகினி மாருதினு நினைக்கிறேன். இந்தக் கதைகளெல்லாம் அந்தக் கதாபாத்திரங்களின் ஓவியங்களோடு சேர்ந்தே நினைவில் வருகின்றனர்.

      நீக்கு
    5. ஆனால் அந்தக் காலகட்டத்திலேயே எங்களுக்கெல்லாம் குமுதம் படிக்கத் தடா! ரகசியமாகத் தான் படிச்சிருக்கேன். :)))))

      நீக்கு
  16. மனிதம் நம்மில் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறதென்று காட்டிய பாசிட்டிவ் செய்திகள் நான்கு! தொடர்ந்து சனிக்கிழமையானால் இன்றைக்கு என்ன நல்ல செய்தி என்று இங்கே வந்து பார்க்கவைக்கும் ஸ்ரீராமுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  17. ஐ.டி.இளைஞர்கள் என்றால் பார்டி, பப் போன்ற விஷயங்கள்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். தினேஷ் போன்ற இளைஞர்கள் பற்றிய செய்தி நம்பிக்கை அளிக்கிறது.
    தாயையும், குழந்தையையும் காப்பாற்றிய சிறுவனின் செயலை பாராட்டியே தீர வேண்டும். காட்டில் வசிக்கும் விலங்குகளின் தாகத்தை தீர்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறதே திலீபனுக்கு! வாழ்க!
    கண்டெடுத்த பணத்தை உரியவரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று நினைப்பவருக்கு எத்தனை சங்கடங்கள்?

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. ஐ.டி துறையில் இரவு கண் விழித்து வேலை பார்த்து விட்டு பகலெல்லாம் சமூக சேவையில் ஈடுபடும் இளைஞரை மனதாற வாழ்த்துவோம்.

    ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளப்பெருக்கில், தன் உயிரையும் பற்றி கவலை கொள்ளாது, ஒரு தாயையும், குழந்தையையும், காப்பாற்றி இருக்கும் சிறு வயது சிறுவரின் செயல் பாராட்டத்தக்கது.

    விலங்குகளின் தாகம் தீர்க்கும் நல்ல குணமுடையவரும், யாரோ தவற விட்ட பணத்தை அவரிடம் ஒப்படைக்கும் வரை நிம்மதியின்றி தவித்து வரும் பெரியவரின் செயலும் மனதில் நிற்கிறது. அவர்களது நல்ல மனங்கள் வாழ்க.!

    கூடிய விரைவில் சுவைபட வந்து கொண்டிருக்கும் விமர்சன பகுதி அன்றலர்ந்த மலராக மணம் வீசி பரவ வேண்டுமென பிராத்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. அனைவரும் போற்றத்தக்கவர்கள். குறிப்பாக அந்த 11 வயது சிறுவனின் செயல் பிரமிக்கவைத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  20. நாலு நல்லவர்களின் பாசிடிவ் செயல்கள் பாரட்டுக்குரியது நன்றி

    பதிலளிநீக்கு
  21. திலீபன் !!! சூப்பர்!!! நாமும் அவருக்குப் பாராட்டுகள் தெரிவிப்போம். பாருங்க செல்லங்கள் எப்படிக் குடிக்கிறாங்க !! அழகு. திலீபன் அவர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

    அஸ்ஸாம் மழை கொஞ்சமேனும் தெற்கு நோக்கி ஒரு டர்ன் அடித்துப் பெய்யக் கூடாதோ? அங்கு வெள்ளம் இங்கு வறட்சி...ம்ம்ம்..பாவம் அந்தத் தாய்...தாயையும் ஒரு குழந்தையையும் காப்பாற்றிய உத்தம்டடி என்ற அந்தக் குட்டிப் பையனுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்.

    ரங்காபுரத்தைச் சேர்ந்த தினேஷ் செய்யும் சேவை அருமை. அதுவும் தன் பணிக்கிடையில்...

    கீதா

    பதிலளிநீக்கு
  22. வங்கி அதிகாரி பணத்தைப் பெற்றுக் கொண்டு சான்று வழங்க ஏன் இப்படி ஒரு பொறுப்பின்மை. இதில் சட்டம் இல்லை அது இல்லை என்று சொல்கின்றனர்.

    ஏடிஎம்மில் காமேரா இருக்குமே அதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாமே. அதே வங்கிக் கார்டாகத்தான் இருக்க வேண்டும் என்றுமில்லை. வேறு வங்கிக் கார்டும் போட்டு பணம் எடுத்திருக்கலாம். எப்படி இருந்தாலும் அந்த வங்கி ஏடிஎம் மெஷினைச் சோதித்தால் அதில் மெமரி இருக்கும் தானே? பணத்தைத் தவறவிட்டவர் பாவ்ம என்றால் அதைக் கொடுக்க அலைந்து போராடும் திரு ராமச்சந்திரன் பாவம் பாராட்டுகள். என்ன ஒரு நம்பிக்கை மனிதர். பாராட்டுகள்.

    அனைத்துச் செய்திகளூம் அருமை ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  23. பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க இப்படிக் கஷ்டம் என்றால் யார் இனி செய்வார்கள் இதை..பல விஷயங்கள் மாற வேண்டும்...நல்ல முன்னுதாரணமாக இருந்திருக்க வெண்டிய ஒன்று..ம்ம்ம்

    கீதா

    பதிலளிநீக்கு
  24. அனைவரும் போற்றுதற்கு உரியலர்கள்.

    சிறுவனின் துணிவு ...வார்த்தைகள் இல்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!