புதன், 7 ஆகஸ்ட், 2019

புதன் 190807 :: பரமசிவனை உலகின் முதல் லெஃப்டிஸ்ட் எனலாமா?


சென்ற வாரம் பல கருத்துரைகளை மனமுவந்து பதிந்த எல்லோருக்கும் நன்றி. 


புதன் கிழமைப் பதிவு என்பதை கிட்டத்தட்ட ஒரு KSS (Knowledge sharing session ) ஆக நடத்தவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.  அதற்கு சென்ற வாரப் பின்னூட்டங்களில், நண்பர் DD அதிக அளவில் நம் எல்லோருக்கும் உதவி செய்துள்ளார். 

பின்னூட்டங்கள் அளிப்பதில் பல புதிய வழிவகைகளை அவர் எல்லோருக்கும் புரிகின்ற வகையில் விளக்கியுள்ளார். 

அவருக்கு 'எங்கள்' சிறப்பு நன்றி.




கீதா சாம்பசிவம் :

பயணம் செய்ய உங்களுக்குப் பிடிக்குமா?


பிடிக்கும் எனில் எத்தகைய பயணங்கள்? கோயில் சுற்றுலா? பழங்காலத்து அகழாய்வுகள்? அல்லது கோவா, குலு, மனாலி போன்ற சுற்றுலா இடங்கள்?


#பயணம் (இறுதி நீங்கலாக) எல்லா வகையிலும் பிடிக்கும்.

& ரொம்ப ரொம்பப் பிடிக்கும். பகல் நேர இரயில் பயணங்கள் (ஏ சி கம்பார்ட்மெண்டில்தான் ) மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் நான் இரயில் பயணம் செய்து நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டன! 

ஒரு குழுவாக மகாபலிபுரம், தமிழக கோயில்கள் போன்ற இடங்களுக்கு காண்டிராக்ட் வண்டிகளில் சென்று வந்தது இனிமையான, சந்தோஷமான நாட்கள். 

பழங்காலத்து அகழாய்வுகளில் தொல் குடிகள் பற்றிய விபரங்களைப் படிக்க நேரும்போது உங்களுக்கு என்ன உணர்வு வரும்?

கீழடி அகழாய்வில் சமையல் பாத்திரங்களைப் பார்த்ததும், இதைச் சமைத்த பெண்மணி எப்படி இருந்திருப்பாளோ எனத் தோன்றியது எனக்கு! உங்களுக்கும் அப்படித் தோன்றுமா?


#வயநாடு உயர குகையில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆதி மனிதன் கருங்கல் சுவரில் செதுக்கி வைத்த கீறல் ஓவியங்கள் சிலிர்க்க வைத்தன. எட்டாத உயரத்தில் விலங்குகள் தாக்குதலை விலக்க மனிதர் வாழ்ந்த இந்த இடங்களை அடைய சுமார் 7000 படி ஏறிச் செல்ல வேண்டும். அவர்களின் உருவம் உடை உணவு எப்படி இருந்திருக்கும்? என்ற  கேள்வி  எழுந்த வண்ணம் இருக்கும்.



& யாராவது இதில் என்ன எழுதியிருக்கிறது என்று சரியாக கண்டுபிடித்து எழுதுங்கள் 



மன்னர்கள் கட்டிய கோயில்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? ஒரு சிலர் எளிய மக்களை அடிமைப்படுத்திக் கட்ட வைத்ததாகச் சொல்லப்படுவது குறித்த உங்கள் கருத்து?



 #போர்க்கைதிகளுக்கு வேலை தரவேண்டும் என அவர்களை கோயில் கட்டவும் செய்திருப்பார்கள் தான்.


அநேகமாக எல்லாக் கோயில்களும் நம் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் யோக முறையில் சுட்டிக்காட்டும்படியான பிரகாரங்களைக் கொண்டது. இங்கே கருவறை தான் முக்கியத்துவம் பெறும்.அதன் தாத்பரியம் புரிந்தே எல்லோரும் கோயிலுக்கு வருகிறார்களா? 


#முக்கியத்துவம் நம் மனவோட்டத்தைப் பொறுத்தது. புரியாமல் போனாலும் குற்றமில்லை. மன அமைதி மன மகிழ்ச்சி கிடைத்தால் போதுமே.

& எனக்கு அதெல்லாம் தெரியாது. கோயிலைக் கண்டால் கும்பிடுவேன். திறந்திருந்தால், நேரம் இருந்தால் உள்ளே சென்று சுற்றிப் பார்ப்பேன். அர்ச்சகர் இருந்து, கற்பூரம் காட்டினால், கற்பூரத்தட்டில் காசு போட்டு, கண்களில் ஒற்றிக்கொண்டு பிரகாரம் சுற்றி வெளியே வருவேன். 
    ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு ஆகமத்தைச் சார்ந்திருக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது? யார் ஏற்படுத்தினார்கள்? அதை இன்றைய நாட்களில் கண்டு அறிந்து சொல்வோர் சொல்லுவது உண்மையாக இருக்குமா?

#அந்தந்த ஆகம முறைக்கென விதிகள் இருப்பதால் அறிந்து சொல்வதை ஏற்கலாம்தான். அந்தத் தகவல்கள் தவறாயினும் பொருட்படுத்த வேண்டியதில்லை.

& பெயர் பெற்ற கோவில்களில் தல புராணம் - புத்தகம் அதன் அலுவலகத்தில் கிடைக்கும். அதை விலை கொடுத்து வாங்கி, பிறகு படிக்கலாம் என்று வைத்துக்கொள்வேன். சிலவற்றை மட்டும் பிறகு படித்ததுண்டு.  
                  குலதெய்வக் கோயில்கள் பலவற்றில் ஒரு குடும்பத்தின் முன்னோரே இறந்த பின்னர் தெய்வமாக வணங்கப்படுகிறார்.அத்தகைய கோயில்கள் தவிர்த்து இருக்கும் மற்றக் கோயில்கள் எல்லாமே வடநாட்டுத் தெய்வங்கள் என்று சொல்லப்படும் சிவன், விஷ்ணு, ராமன்,கிருஷ்ணன் ஆகியோருடன் சம்பந்தப்பட்டே இருக்கின்றனர். ஆனாலும் அவர்களை மட்டும் தனித்துத் தமிழ் தெய்வங்கள் என்று சொல்லுவது ஏன்? வட மாநிலங்களிலும் இத்தகைய தெய்வங்கள் உண்டு! உதாரணமாக நாம் வணங்கும் மாரியம்மன் அங்கே சீதளா தேவியாக வணங்கப்படுவாள். இங்கே முருகன் என்றால் அங்கே கார்த்திகேயன்! இப்படி இருக்கையில் தெய்வங்களுக்குள் பேதம் ஏன்?

   
#தெய்வங்களில் உயர்வு தாழ்வு, வடக்கு தெற்கு, தமிழ் இங்கிலீஷ் என்பதெல்லாம் நம் அறியாமை அல்லது மதி மயக்கத்தின் அடையாளம்.
               
& நான் அத்வைதி. எனக்கு எல்லாமே ஒன்றுதான். 

                   
பரசுராமரின் அம்மா ரேணுகா தேவி தான் உடலோடு மாரியம்மனாகவும், தலையோடு ரேணுகா தேவியாகவும் உருப்பெற்றாள் என்பதை எல்லாம் கட்டுக்கதை எனச் சொல்லுவதை நீங்கள் நம்புகிறீர்களா? 



#தெய்வம் தொடர்பான கட்டுக் கதைகள் ஏராளம்.

& ஹி ஹி எனக்கு அவ்வளவு டீப்பாக நாம ரூபங்கள் பற்றித் தெரியாது. தெரிந்துகொண்டும் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை! 

               
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தெய்வம் குலதெய்வமாக இருக்கப் பலருக்கும் சாஸ்தா குலதெய்வமாக ஆனது எவ்வாறு? சாஸ்தாவும் ஐயப்பனும் ஒன்றா?



#ஒரு குடும்பத்துக்கு குலதெய்வம் எவ்வாறு அமைகிறது என்பது ஆய்வு செய்து அறியக் கூடியதில்லை. அந்த முயற்சியால் பயனும் இல்லை.
ஐயப்பனின் ஒரு பெயர்தான் சாஸ்தா.




நெல்லைத்தமிழன் :

ஏன் 'விசிறி' என்ற பிரயோகம் ரசிகர்களுக்குக் கொடுக்கறாங்க?



$ Truncated 'fanatics' became *fan*
Later translated by Visu who is famous for translating peace into pattaani.
so,  fan became விசிறி !

# 'வீசி எறி' மருவி விசிறி ஆனதோ ?


Fanatic : வெறியர் 
Fan : விசிறியர் 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 


பார்வதி தேவிக்கு தன் உடலில் இடது பாகத்தை அளித்த பரமசிவனை உலகின் முதல் லெஃப்டிஸ்ட் எனலாமா?

# பரம சிவன் எது செய்தாலும் ரைட்தான்.

& நீங்க சொல்வதுதான் ரைட்டு! 

ஷாப்பிங் செய்யும் பொழுது எந்த கவுண்டரில் தேங்கி நிற்பீர்கள்?

# ஷாப்பிங் எனும் "நாகரிகம்" அரங்கேறும்போது நான் ரிடயர்டு.

* பில் கௌண்டரில்!

(அது யாருங்க புதுசா ஒரு ஸ்டார் பதிலர்! )


====================================================

P A C பற்றி தொடர்ந்து பார்ப்போம். 

இரண்டு பேர் உரையாட வருகிறார்கள். 

ஒருவர் : எங்கே சார் இந்தப்பக்கம்? 

மற்றவர் : அடேடே நீங்களா! நாந்தான் அந்தக் கேள்வி உங்களைக் கேட்கணும்! 

ஒ : நான் மார்க்கெட்டுக்கு வந்தேன். 

ம: நானும் மார்க்கெட்டுக்கு அடிக்கடி வருவேனே! என்ன இன்றைக்குக் கொஞ்சம் முன்னதாகவே வந்துவிட்டேன்! 

ஒ : ஓஹோ அதுதான் விஷயமா! நான் எப்பவுமே இந்த நேரத்தில்தான் இங்கே வருவேன். 

இந்த வகை உரையாடல்கள் வயது வந்த மனோநிலையில் ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்வது.

இதையே சற்று மாற்றிப் பார்ப்போம்.

ஒருவர் : எங்கே சார் இந்தப்பக்கம்? 

மற்றவர் : ஓ நீங்களா ! ஏன் இந்தப்பக்கம் நான் வரக்கூடாதா?

ஒ : தாராளமாக வாங்க சார்! உங்களை இந்தப்பக்கம் பார்த்ததில்லையே என்றுதான் கேட்டேன். 

ம : மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்கிவந்தால்தான் சமைத்துப் போடுவேன் என்று என் மனைவி சொன்னதால விழுந்தடிச்சு ஓடிவந்திருக்கேன் !

ஒ : ஹா ஹா ஹா அப்படியா ! சட்டுன்னு வாங்கிகிட்டுப் போய்ச் சேருங்க. இல்லேனா பசி மயக்கத்துல விழுந்துடப் போறீங்க!

ம : சிரித்துக்கொண்டே காய்கறி வாங்க செல்கிறார். 

இது வயதுவந்த அல்லது குழந்தை மனநிலை ஒன்றுக்கொன்று பேசிக்கொள்வது 

இன்னும் சற்று மாற்றம் பார்ப்போம் 

ஒருவர் : எங்கே சார் இந்தப்பக்கம்? 

ம : இதெல்லாம் என்ன கேள்வி? இந்த இடத்துக்கு நீங்க பட்டா எடுத்து வெச்சிருக்கீங்களா? உங்க இடத்துலையா நான் நிக்கறேன்? இது எல்லாம் கவர்ன்மெண்ட் இடம்தானே? நான் இங்கே வந்தால் உங்களுக்கு என்ன வலிக்குது? 

இது வயது வந்த மனோநிலையில் உள்ள ஒருவர் கேட்ட கேள்விக்கு பெற்றோர் + வயதுவந்தோர் (குழப்ப) நிலை உள்ள ஒருவர் ஆற்றும் எதிர்வினை. 
இந்த உரையாடல் மேற்கொண்டு சுமுகமாக தொடர்வதற்கு வாய்ப்பு இல்லை. 
முதலில் விவரம் அறிய கேள்வி கேட்டவர் காயப்பட்ட உணர்வுகளோடு விலக நேரிடும். 

சுருக்கமாக கீழே உள்ள படத்தைப் பாருங்கள். 


இவை யாவுமே சுமுகமான உரையாடல்கள். எது கேட்கிறதோ, அதற்கே பதில். 

ஒருவர் பேசுவது மற்றவரின் எந்த மனநிலையிடமோ, அதே மனநிலையிலிருந்து இவருக்கு பதில் கிடைத்தால், சுமுகமான உரையாடல். 

மூன்றாவது உதாரணத்தில், வயது வந்தோர் மனோ நிலையிலிருந்து கேட்கப்படும் கேள்விக்கு, மற்றவர் சற்றேறக்குறைய ஒரு குழந்தையைக் கண்டிக்கும் மனோபாவத்தில் எதிர்வினை வருகிறது. கேட்டது வயது வந்தோர் type கேள்வி - விவரம் அறிவதற்காக. 

ஆனால் பதில் சொல்பவர் விவரம் கூறாமல் கண்டிப்பு காட்டுகிறார். ஒரு குழந்தையை, why can't you behave yourself ?  என்று கேட்பது போன்ற எதிர்வினை! 

மீதி அடுத்த வாரம் ....

====================================================

103 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம்,
    கீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிமொழிகிறேன். வரவேற்கிறேன்.

      நீக்கு
    2. வரவேற்ற துரைக்கு நன்றி. வந்திருக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

      நீக்கு
    3. நெல்லைத் தமிழர் சுற்றுலாவில் இருக்கிறார். ரேவதியும் கனடா போயிட்டு இருக்காங்க! ஆகவே இரண்டு பேர் குறையுது!

      நீக்கு
    4. நானும் பயணத்தில்தான் இருக்கிறேன். என்றாலும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் எங்கள் ப்ளாகில் மட்டும் ஆஜராகி விடுகிறேன். மற்ற பதிவுகளை பார்க்க முடிவதில்லை.

      நீக்கு
    5. ஓ, நீங்களும் இன்னமும் பயணத்தை முடிக்கலையா? ஓகே, ஓகே! அப்போ 3 பேர்!

      நீக்கு
    6. எங்கிருந்தாலும் வாழ்க! நன்றி.

      நீக்கு
    7. நன்றி கீசா மேடம். இப்போதான் கல் கருடன் ஆடி ஸ்வாதி பூர்ண ஆஹுதி முடிந்து நல்ல தரிசனத்துக்குப் பிறகு ஒப்பிலியப்பன் போவிலுக்குப் போய்க்கொண்டிருக்கிறோம்.

      நீக்கு
    8. நாச்சியார் கோயில் எனில் அங்கிருந்து கருவிலி ரொம்பக் கிட்ட. அங்கிருந்து பரவாக்கரை ஒரு மைல் தான். அங்கிருந்து கோனேரிராஜபுரம் ஒரு மைல். அங்கே போய்ப் பெருமாளையும் செம்பியன் மாதேவி திருப்பணி செய்த சிவன் கோயிலையும் அங்கிருக்கும் பிரபலமான நடராஜரையும் போய்ப் பார்த்திருக்கலாம். அது என்னமோ நாச்சியார் கோயிலுக்கு எதிர்ப்பக்கமா ஒப்பிலியப்பன் கோயிலுக்குப் போறீங்க! :(

      நீக்கு
  2. ஆகா...

    ஆனாலும் அந்த KSS?....

    அஞ்சாதே.. குழந்தாய்!..
    அதற்கும் நமக்கும் வெகுதூரம்!..

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் காலை வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்த சிறந்த நாளாக இருக்கவும், ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. கோயில் இருக்கிறதா..
    அதுவும் திறந்திருக்கிறதா..
    குருக்களும் இருக்கிறாரா..
    கற்பூர தரிசனம் செய்வித்தாரா...

    எந்த ஒன்றையும் பிரதி உபகாரம்
    இன்றி ஏற்கக்கூடாது..

    எனவே இயன்ற தட்சணையை
    வழங்கினோமா!..

    விழுந்து வணங்கினோமா!..

    ஆகா!..

    மகிழ்ச்சியும் நிம்மதியும்
    கடைகளில் கிடைப்பதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில் கண்டேன்
      அங்கு தெய்வம் இல்லை;
      ஓடி வந்தேன் அங்கு
      து செ இருந்தார்!
      தெய்வமே! நன்றி!

      நீக்கு
    2. கலையே.. என் வாழ்க்கையின்
      திசை மாற்றினாய்..

      நீ இல்லையேல்
      நான் இல்லையே!...

      நீக்கு
    3. துரையே எங்கள் ப்ளாகினில்
      சுவை கூட்டினீர்!
      நீர் இல்லையேல்
      சுவை இல்லையே!

      நீக்கு
    4. உண்மைதான்..

      நீர் இல்லையேல்
      (வாழ்வின்) சுவையே இல்லை!...

      நீக்கு
    5. அய்யா !
      நீ(வி)ர் புலவர் அய்யா!

      நீக்கு
    6. நீர் விளையாட்டில்
      விளையாடிக் கொண்டேயிருக்கலாம்!...

      நீக்கு
    7. கௌ அண்ணா வார்த்தை விளையாடல் ஆஹா ரசித்தேன் அண்ணா...

      வருகிறேன் அப்புறம்...

      கீதா

      நீக்கு
    8. வாங்க, மீண்டும் மீண்டும்!

      நீக்கு
    9. துரை அண்ணா அண்ட் கௌ அண்ணா ரெண்டுபேரும் வார்த்தை விளையாட்டு கவிமயம்!

      கீதா

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா ஸ்ரீராம், துரை அண்ணா மற்றும் தொடரும் அனைவருக்கும்

    தலைப்பே சிரிக்க வைத்துவிட்டது!!

    இன்று காலை ரொம்பவே ஓட வேண்டும் போல அட்டெண்டென்ஸ் மட்டுமேனும் வைக்க...துரை அண்ணா பதிவு, வெங்கட்ஜி பதிவு இன்னும் வேறு யார் என்று பார்க்க வேண்டும்...ஓடி ஓடி கொஞ்சம் போட்டுவிட்டு அப்புறம் உச்சைக்கு சேஷம் வரான் கேட்டோ!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கோயில் கண்டேன்
    அங்கு தெய்வம் இல்லை;
    ஓடி வந்தேன் அங்கு
    து செ இருந்தார்!
    தெய்வமே! நன்றி!//

    ஹா ஹா ...

    இன்று எனக்கு எல்லாமே லேட்டு...ஹிஹிஹி...நானும் வந்தாச்சு கௌ அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. புதன் கிழமைப் பதிவு என்பதை கிட்டத்தட்ட ஒரு KSS (Knowledge sharing session ) ஆக நடத்தவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. //

    ஆடி பொளியா நடத்திடுவோம்! கௌ அண்ணா!! நான் எம் டி வெசல் என்றாலும் கருத்துக்கா பஞ்சம்?!!!!!! சத்தம் போட்டுருவோம்ல ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த புதனில் சில கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள் ஸ்வாரஸ்யம்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. சுவாரசியமான கேள்விகளும் சுவையான பதில்களும். அனைத்தும் ரசனை. KSS (Knowledge sharing session) மிக நல்ல முயற்சி. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. * பதிவர் காசு சோபனாவா? ஸ்ரீராமா? ம்ஹூம், இல்லை! இல்லாட்டிப் புதுசா யாரோ ஆ"சிரி"யர் ஆகப் போறதாச் சொன்னாங்களே காசு சோபனா அவங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒன்றும் சொல்லமாட்டேன். நீங்க கண்டுபிடிக்கணும்!

      நீக்கு
    2. * பதிவர் அநேகமா தி/கீதா, அல்லது நெ/த.இருவரில் ஒருவராக இருக்குமோ? கேஜிஜே இதுக்கெல்லாம் வர மாட்டார். கேஜிவி? ம்ஹூம் வாய்ப்பே இல்லை. அவர் ஃபேஸ்புக்கிலேயே பதிவுகள் எழுதறார். ஸ்ரீராமின் அண்ணாவும் இங்கு வந்து எழுதும் அளவுக்குப் பொறுமை உள்ளவர் இல்லை! பின்னே வேறே யாரு????????????????????????? பானுமதியோ? அவங்க தனியா ப்ளாக் வைச்சிருந்தாலும் இம்மாதிரியான விளையாட்டுக்களில் கலந்துக்கற ரகம் தான். ம்ம்ம்ம்ம்? தி/கீதா முதலில் வருகிறார். அடுத்து நெ.த., பின்னர் பானுமதி!

      நீக்கு
    3. ஹா ஹா ஹா கீதாக்கா மீ எபி ஆசிரியர் இல்லையே!!

      நெத, பானுக்காவும் இல்லை பானுக்காதான் அந்தக் கேள்வியே கேட்டிருக்காங்க.

      நெதவும் கேள்விகளில் இருக்கிறார்.

      வாசகர் யாரும் கிடையாது இது.

      என் சிற்றறிவுக்கு எட்டிய அளவில் ஸ்ரீராம் தான் இப்படியான பதில் கொடுப்பவர் என்று என் அனுமானம்... ஸ்ரீராம் தவிர வழக்கமாக வரும் மூன்று ஆசிரியர்கள் நம் எல்லோருக்குமே தெரியும். எப்படி பதில் அளிப்பார்கள் என்று. பிற ஆசிரியர்கள் பற்றி அறிமுகம் இல்லாததால் சொலல்த் தெரியவில்லை.

      எனவே ஸ்ரீராம்தான் நான் பதில் வைத்து சொல்லுகிறேன்..

      கீதா

      நீக்கு
    4. மற்றொன்று கடைசிக் கேள்வி தவிர பிற கேள்விகளுக்கு ஸ்டார் பதில்கள் இல்லை பாருங்க.

      ஸ்ரீராம் பற்றியும் நமக்குத் தெரியுமே. அவர் கண்டிப்பாக நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல மாட்டார்..."கீதாக்கா எங்கிருந்தாலும் ஓடி வந்து நீங்களே பதில் சொல்லிடுங்க" என்று பதில் சொல்லியிருப்பார்!!!! ஹா ஹா ஹா ஹா

      ஸ்ரீராம் என்றால், நெல்லையின் கேள்வி விசிறிக்கும் அவர் பாணியில் ரசிக்கும்படியான ஒரு பதிலைக் கொடுத்திருப்பார். ஸ்டார் அங்கு இல்லையே!! எனவே ஸ்டார் ஸ்ரீராம்? என்ற ஐயமும் எழுகிறது..

      ஸ்ப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ இந்த ஆராய்ச்சிக்கு எபி ஆசிரியர்கள் எனக்கு பரிசு கொடுக்க வேண்டும்!!!!!!!!!!!!!!!!!!!!ஹிஹிஹிஹி (விடை தப்பா இருந்தா என்ன ஆராய்ச்சி பண்ணிருக்கோமுல்ல!!!!! )

      கீதா

      நீக்கு
  11. //மன்னர்கள் கட்டிய கோயில்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? ஒரு சிலர் எளிய மக்களை அடிமைப்படுத்திக் கட்ட வைத்ததாகச் சொல்லப்படுவது குறித்த உங்கள் கருத்து?// இதுக்கு & மற்றும் $ பதிலே இல்லை. $ இப்போல்லாம் அதிகமாய் பதில் சொல்லுவதில்லை. அதனால் * இணைக்கப்பட்டிருக்காரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மௌனம்? அப்போ யார் அது? * ஶ்ரீராமே இந்த அடையாளத்தில் வராரா? ஆனால் அவர் ஒண்ணும் மௌனமாக இல்லை!

      நீக்கு
    2. கீதாக்கா இத்தனை நாள் ஸ்ரீராம் புதன் கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லையே....எப்போவோ முன்பு கொஞ்சம் சொல்லியிருக்கிறார்...

      அதனால் மௌனம் கலைந்தது என்று கௌ அண்ணா சொல்லியிருக்கிறார்...

      (ஹப்பா இந்த கீதா இன்னா ஆராய்ச்சி....!!!!)

      கீதா

      நீக்கு
    3. ஶ்ரீராம் தான் அது! ஜந்தேகமே இல்லை!

      நீக்கு
  12. கோவிலைப்பற்றி ஆராய்ந்தால் தீர்வுக்கு வருவது கடினமே...

    பதிலளிநீக்கு
  13. ஆஹா இம்முறை புதிதாக ஒரு * ஸ்டார் வந்திருக்கிறாரே!! யார் அந்த ஸ்டார்! சூப்பர் ஸ்டாரா?!!!!

    சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்"

    ஆனா இங்க சின்னக் குழந்தைகளான எங்களால் சொல்ல முடியலையே ஆருனு?!!

    ஆராக்கும்?!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. கேள்விகள் பதில்கள் பிஏசி எல்லாமே ஸ்வாரஸ்யமா இருக்கு....மீண்டும் ஒவ்வொன்றாகப் பார்க்க கருத்து சொல்ல வருகிறேன் மதியத்திற்கு மேல்

    கீதா

    பதிலளிநீக்கு
  15. கேள்விகள் பதில்கள் அருமை... சில பதில்களை கீதா அம்மாவே சொல்வார் என எதிர்ப்பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை டிடி. நான் கலந்துக்கலை! அதற்கான மனநிலை இப்போ இல்லை! :))))

      நீக்கு
    2. உங்களின் கேள்விக்கான பதில்கள், உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்... ஆனால், பொதுவில் பலரின் விளக்கத்தையும் அறிய எதிர்பார்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது அம்மா...

      உற்சாக மனநிலை இருக்கும் போது, தங்களது விளக்கங்கள் அறிய ஆவல்...


      நன்றி...

      நீக்கு
  16. //பில் கௌண்டரில்!// இந்த பதில் செல்லாது என குறிப்பிட வேண்டும் என்று நினைத்தேன்.😑

    பதிலளிநீக்கு
  17. இன்று கும்மிதான் நடக்குது :))

    பதிலளிநீக்கு
  18. //மூன்றாவது உதாரணத்தில், வயது வந்தோர் மனோ நிலையிலிருந்து கேட்கப்படும் கேள்விக்கு... //

    ஓரு துணைக் கேள்வி

    'வயது வந்தோர் மனநிலை' என்று ஸ்பெஷலாக இருக்கிறதா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவருக்குள்ளேயே parent attitude, adult attitude , child attitude மூன்றும் குடிகொண்டிருக்கும். ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு குணாதிசயம் அல்லது மனநிலை அவரிடம் மேலோங்கி இருக்கும். P A C அவருக்குள் குடிகொள்ளும் பருவங்களை முந்தைய பதிவுகளில் விளக்கியுள்ளேன். வயதுவந்தோர் மனநிலை என்று இந்தப் பதிவில் சொல்லப்பட்டிருப்பது, the recordings in the unconscious mind of an individual from what he has seen, heard,felt, read in the school and college days from all sources around him.

      நீக்கு
  19. இன்றைய வயது வந்தோர் பெரும்பாலும் மன அளவில் தங்களை வயதானவர்கள் மாதிரி காட்டிக் கொள்ளவே விரும்புவதில்லை.
    ஆடை விஷயங்களில் கேட்கவே வேண்டாம்.

    டீ ஷர்ட் என்பது இவர்களுக்காகத் தான் உருவெடுத்திருக்கிற மாதிரி.
    மிஞ்சி மிஞ்சிப் போனால் ஸ்லாக் ஷர்ட் போடுவார்களே அன்றி, அந்தக் காலத்து கஃப் பட்டன் வைத்த முழுக்கை சட்டை எல்லாம் போன இடமே தெரியவில்லை.
    வாக்கிங் என்பது ஒரு சாக்கு. அது அரை டிராயர் உலாவலுக்கு ஒரு சாக்கு. வீட்டுக்குள் இருந்தால் அரை டிராயர் ஒரு வழக்கமாகவே ஆகியிருக்கிறது.
    75 வயசு பெரியவர் ஒருவரை இந்த விஷயத்தில் பேட்டி கண்டேன்.

    "பையன் அமெரிக்காவிலே இருக்காறா, சார்?"

    "ஹி.. ஹி.. எப்படித் தெரிஞ்சது?"

    "உங்க அரைடிராயர் காட்டிக் கொடுத்து விட்டது.."

    "ஆக்சுவலி இதை நான் சரவணா ஸ்டோர்லே தான் வாங்கினேன்.. ரொம்ப கன்வீனியண்ட். காலை வீசிப் போட்டு நடக்க, உட்கார, எழுந்திருக்க எல்லாம் செளகரியமா இருக்கு.. வேஷ்டி மாதிரி அவுந்திடுமேன்னு பயமில்லே.. என்ன நான் சொல்றது?"

    "கரெக்ட்.." என்று அவரை ஆமோதித்ததில் அவருக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.. அடுத்த வினாடியே.. "நீங்களும் போட்டுப் பாருங்கோ.. 30 வயசு குறைஞ்சிட்ட மாதிரி இருக்கும்.." என்று பரிந்துரைக்கவும் செய்தார்.

    நானும் தரித்துப் பார்த்தேன். 100% கரெக்ட் தான்.

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  21. கேள்விகளும், பதில்களும் அருமை.
    சகோ துரைசெல்வராஜூம், கெளதமன் சாரும் விளையாடும் நீர் விளையாட்டு அருமை.

    பதிலளிநீக்கு
  22. பயணங்கள் என்பது எனக்கு மிக மிகப் பிடித்தமான ஒன்று.

    பயணங்களில் இருந்து நாம் நிறைய கற்கலாம். தகவல்கள் ப்ளஸ் நம்மை மேம்படுத்திக் கொள்ளவும் என்று. ஆதலால் பயணம் செய்வீர்! (வெங்கட்ஜி வழக்கமாகச் சொல்லுவதை நான் அப்படியே வழிமொழிவேன்.)

    கீதா

    பதிலளிநீக்கு
  23. கோயில் பற்றிய கேள்விகள் கீதாக்கா, துரை அண்ணா, நெல்லை இவர்க்ளின் டிப்பார்ட்மென்ட் அவங்கதான் இன்னும் பதில் சொல்லுவாங்க.!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எதுவும் சுயமாக அறிந்து கொண்டது இல்லை! சும்மாப் பெரியவங்க சொன்னதும், புத்தகங்களில் படித்துத் தெரிந்து கொள்வதும் தான்! சுய புத்தி என்பது இல்லை!

      நீக்கு
  24. #தெய்வங்களில் உயர்வு தாழ்வு, வடக்கு தெற்கு, தமிழ் இங்கிலீஷ் என்பதெல்லாம் நம் அறியாமை அல்லது மதி மயக்கத்தின் அடையாளம்.

    & நான் அத்வைதி. எனக்கு எல்லாமே ஒன்றுதான். //

    மிகவும் ரசித்த பதில்கள். என் மனக்கருத்தும் இதே என்பதால்

    கீதா

    பதிலளிநீக்கு
  25. விசிறி//

    ஃபேனிங்க் த ஃப்யூவெல் என்று சொல்லுவதுண்டில்லையா அது போல ஒருவரின் மீதான நம் ரசிப்புத் தன்மையினால் அவரது திறமை/அழகு/குணம்/புகழ் இவற்றை ஊதி ஊதி/விசிறி விசிறி அவரை இன்னும் உயரே உயரே வைப்பதினால் விசிறி என்று ஆகியிருக்குமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! இப்படியும் ஒரு விளக்கமா!

      நீக்கு
    2. எப்படி.... மர்லின் மன்றோவின் ஃபேமஸ் படம் அல்லது அதன் காப்பி ரம்பாவின் உள்ளே வெளியே படப் பாடல் நினைவுக்கு வருது இந்த பின்னூட்டம் பார்த்து

      நீக்கு
    3. அட! இப்படியும் ஒரு விளக்கமா!//

      கௌ அண்ணா என் புரிதல் அப்படி.

      அதுவும் இல்லாம இங்கிட்டு அல்லாரும் அனுஷை பத்தி பேசிக் கொண்டிருக்கும் போது நம்ம நெல்லை இருக்காரே அவரு அந்த சப்பாத்திமா மாதிரி இருக்கற தமன்னாக்காவை சும்மானாலும் அயகோ அயகு, கொடி இடையாள் இஞ்ஜி இடுப்பழகி அப்படினு எல்லாம் சொல்லி பொக்கி (பொக்கி - உயர்த்தி பொருள். கௌ அண்ணாவுக்கு மலையாளம் அறியில்லா அல்லே அதானு) வைச்சுருவாரே அதான் விசிறி விசிறி....ஹிஹிஹி

      கீதா

      கீதா

      நீக்கு
  26. அந்த ஸ்டார் ஸ்ரீராம் தானே??!!! ஸ்ரீராமேதான்....அவர்தான் இப்படியான பதில் தருவார்!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  27. கல்வெட்டு - என்றைக்குனாலும் படிக்க முயற்சித்து எழுதறேன்

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்விகளும், பதில்களும் மிக அருமை. அருமையாக யோசித்து கேள்வி கேட்டவர்களுக்கும் அதற்குரிய பதிலை மிகவும் அற்புதமாக ரசித்து சொன்னவர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள்.

    மாறுபடும் மன நிலைகளை பற்றிய விளக்கங்களும் மிக அருமை ஒவ்வொன்றையும் ரசித்தேன்.

    கடைசியில் ஸ்வாரஸ்யமாக பதிலளித்த ஒரு "ஸ்டார்" பதி(வரை)லரை அது யாராக இருக்கக்கூடும் என்ற ஆவலை"விசிறி"யாய் இருந்து வீசி விட்டீர்கள். நானும் ஸ்ரீராம் சகோதரராகத்தான் இருக்குமென ஊகித்தேன். சகோதரி கீதாரெங்கனின் கண்டு பிடிப்பு அதை ஊர்ஜிதபடுத்தி விட்டது என நம்புகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  29. தேவகோட்டையாரின் கருத்தினை வழிமொழிகின்றேன்

    பதிலளிநீக்கு
  30. பிஏசி உரையாடல்களில் முதல் சுமுகமான ஒன்று இரண்டாவது ஓகே. மூன்றாவது சுமூகம் என்று சொல்ல முடியாதே. அது உரையாட்லைத் தொடர்வோ நல்ல ரிலேஷன்ஷிப்பையோ வளர்க்காது இல்லையா.

    இந்த மூன்றிற்குமான விளக்கங்களும் இம்முறை புரியவில்லை கௌ அண்ணா. மீண்டும் ஆழ்ந்து வாசிக்க வேண்டும் போல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிக்கலான விஷயம்தான். ஆழ்ந்து படித்தால்தான் புரியும். மூன்றாவது உரையாடல் சுமுகம் இல்லை என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

      நீக்கு
  31. ஆதிகால மனித கல்வெட்டு எனக்கு இதை நினைவுபடுத்திவிட்டது!!!!!!!!!

    சிக்கின் மிக்கின் சைனா
    ஹின்ன்ன்ன்னிக்கி எய்னா
    சிக்கனிக்கி எய்னா
    ஹின்ந்ன்ன்னைங்கி சைனா..
    சிப்பசிப்பஞ்சிங்கி எய்னா..

    ஹ்ஹிஹிஹி...

    சரி சரி கௌ அண்ணா என்னை துரத்திவிடாதீங்க. இது பேயார் பாஷை அல்லா...இது என்னனு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம். இல்லைனா அப்புறம் சொல்கிறேன்.

    செம காமெடியான வீடியோ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேயாரைத் தான் எல்லோருமாச் சேர்ந்து விரட்டிட்டாங்களே! பாவம்!

      நீக்கு
    2. என்னை யாரும் விரட்டமுடியாத்!

      நீக்கு
    3. ஆஹா! பேயாரைப் பார்த்ததும் தான் சந்தோஷமா இருக்கு! நல்வரவு பேயாரே!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!