வெள்ளி, 15 செப்டம்பர், 2017

வெள்ளி வீடியோ : "சுத்தச்சம்பா பச்சை நெல்லு..." + இளையராஜா பேட்டியின் தொடர்ச்சி



இங்கு தொடங்கிய இளையராஜா பேட்டியின் தொடர்ச்சி.  


இங்கு நான் பகிர்ந்திருக்கும் பாடல் என் தெரிவிலிருந்து இல்லாமல், இளையராஜா பேட்டியை வைத்து அதில் சொல்லப்பட்டிருக்கும் பாடலைப் பகிர்கிறேன்.   


=========================================================================




...... இப்படி  பல கட்டாயங்கள் மத்தியில்தான் நான் வேலை செய்கிறேன்.  நிர்ப்பந்தங்கள் வந்து என்னை அழுத்தும்போதெல்லாம் நான் 'அன்னக்கிளி' யை நினைத்துக் கொள்கிறேன்.  அதற்கு காரணம் இருக்கிறது.  


அன்னக்கிளியில் இடம்பெற்ற எந்தப் பாடலையும் நிர்ப்பந்தத்தின் பேரில் நான் உருவாக்கவில்லை.  என் மனம் போன போக்கில் கம்போஸ் செய்து அதில் எனக்குப் பிடித்தவைகளாகச் சிலவற்றை செலெக்ட் செய்து கொள்வேன்.   திரு. பஞ்சு அருணாசலம் அவர்களிடம் 'இதுமாதிரி ஒரு பாட்டு போட்டால் என்ன?' என்று கேட்பேன்.  நன்றாகஇருந்தால் உடனே படத்தில் அதற்குரிய ஒரு இடத்தை அமைத்துத் தந்து விடுவார்.  "அன்னக்கிளி உன்னைத் தேடுதே', 'மச்சானைப் பார்த்தீங்களா?'  ஆகிய இரு பாடல்களையும் அப்போது ஓகே செய்து வைத்திருந்தார்.  அந்தப் படத்தின் கதை எனக்கு ஏற்கெனவே தெரியும்.  தினமும் மாலை வேளைகளில் கடற்கரையில் என் மனம்போன படியெல்லாம் கத்திக் கொண்டிருந்தேன்.  காற்று வாங்க வரும் ஜனங்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்ததுண்டு.  "லூஸ்" என்று நினைத்திருப்பார்கள்.  நான் அதைப்பற்றி எல்லாம் கவலைப் பட்டதில்லை.  அன்னக்கிளிக்கு எப்படியெல்லாம் பாடல்களை உருவாக்கலாம் என்ற சிந்தனையில் என்னை நான் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தேன்.


ஒரு நாள் திடீரென்று ஒரு ஐடியா.  நெல் குத்துவதை வைத்து ஒரு பாட்டு போட்டால் என்ன?   கிராமப்புறங்களில் எல்லா வீடுகளிலும் சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சி.   இதற்கு டியூன் போடுவதில் எனக்கு கஷ்டம் எதுவுமில்லை.  காரணம்,  நான் கிராம வாழ்க்கையோடு ஒன்றியவன்.  அங்கெல்லாம் அவர்கள் பாடிய பாடலின் ஒரிஜின வரிகள் என்னுள் ஆழமாகப் பதிந்திருக்கின்றன.  வார்த்தைகள் எப்படி இருந்தாலும் நெல் குத்தும் ஓசையைத் தாளமாக வைத்து ஒரு பாடல் போடவேண்டும் என்று முடிவு செய்தேன்.  பஞ்சு அண்ணனிடம் பாடிக் காட்டினேன்.


"பச்ச நெல்லுங் கிச்ச நெல்லுங் குத்தத்தான் வேணும் 
பணியாரங் கிணியாரஞ் சுடத்தான் வேணும் 
ஓடப்பட்டி மாப்பிள்ளையைக் கேக்கத்தான் வேணும் 
ஓடி வார சிங்காரத்தைப் பாக்கத்தான் வேணும்" 

என்றபாடலைக் கேட்ட பஞ்சு,  உடனே அதைப் படத்தில் எந்த இடத்தில் சேர்ப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.  வரிகளைக் கொஞ்சம் மாற்றி "சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும்" என்று அந்தப் பாட்டை மாற்றி எழுதினார் பஞ்சு.


ஏதோ பெரிய கீர்த்தனையை கம்போஸ் செய்துவிட்ட மாதிரி பீற்றிக் கொள்கிறானே என்று நீங்கள் நினைக்கலாம்.  ஜீவனுள்ள இந்தப் பாடலையும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்.  அது உங்களைக் கண்டிப்பாக இழுக்கும்.  நெல்லு குத்தும் பாடலில் பெரிய இசை வடிவம் ஏதும் இல்லையே என்று சுட்டிக் காட்டுவீர்கள்.  தேவையில்லை.  மக்களின் பழக்க வழக்கங்களை உணர்ச்சிகளை சொல்லும்போது இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் ஆக வேண்டும் என்று நான் நினைப்பதில்லை.  காட்டில் வேலை செய்பவன் எப்படியெல்லாம் சுதந்திரமாகப் பாடுவானோ அப்படியே என்னைப் பாவித்துக்கொண்டு என் இஷ்டம் போல் கம்போஸ் செய்துதான் இது மாதிரியான நடைமுறை வாழ்க்கைப் பாடல்களை நான் உருவாக்குகிறேன்.


இந்த நெல்லு குத்தும் பாடல் எனக்கு இன்னும் பல வழிகளிலும் உதவி செய்திருக்கிறது.  அது சுவையான கதை.  பாட்டு ஆரம்பிக்கு முன்பு எல்லோரையும் நெல்லு குத்த அழைப்பது போல் சில வரிகள் வருமே, நினைவிருக்கிறதா?


"அடி ராக்காயி, மூக்காயி, குப்பாயி, சிகப்பி, கஸ்தூரி, மீனாட்சி தங்கப்பல்லு காரையா, தங்கமகளுக்கும் வாத்தியாரய்யாவுக்கும் தைமாசம் கல்யாணம் நெல்லுகுத்த வாங்கடியோ....."





எங்கள் கிராமத்துப் பக்கம் யாருக்காவது கல்யாணம் என்றால், "ஓரடி,  ஈரடி, ஒசத்தக் கல்லடி, மாணிக்க மத்தார் சீமைக்குச் சித்தா, பாப்பாரப் பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம்" என்று கிண்டலாகச் சொல்வதுண்டு.  இதற்கு ஏதும் டியூன் கிடையாது.  வெறும் வார்த்தைகள்தான்.  எக்ஸ்பிரஷன் மட்டுமே.  இதை அடிப்படையாக வைத்துதான் நெல்லு குத்த கூவியழைப்பது போல அமைத்தேன். 


பின்னால் இந்த வரிகளுக்கு - வெறும் எக்ஸ்பிரஷனாய் மட்டும் அமைந்த வரிகளுக்கு - டியூன் போட்டுப் பார்த்தால் என்ன என்று  தோன்றியது.  விளைவு மூன்று பிரபலத் திரைப்படப் பாடல்கள்.  நான் லேசாகக் கோடிட்டுக் காட்டினால் உங்களுக்கு நினைவு வரும் என்று நினைக்கிறேன்.                                                                                                         (தொடரும்)


================================================================================



கடைசி பாராவில் இளையராஜா சொல்லியிருக்கும் பாடல்கள் என்ன என்று யூகித்திருப்பீர்கள்....!






45 கருத்துகள்:

  1. அருமை
    இதோ காணொலியினைக காணச் செல்கின்றேன்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  2. மகத்துவமான ஒரு கலைஞனை உருவாக்கிய படம் அன்னக்கிளி
    நல்லபாடல் ஸ்ரீராம்ஜி பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. நல்ல பாடல். பேட்டியும் ரசிக்கும்படி இருந்தது. இளையராஜா சொல்லும் அந்த மூன்று பாடல்களில், வெத்தலை வெத்தலை கொழுந்து வெத்தலையோ-சிவகுமார் படப் பாடலும், 'தேனாம்பேட்டை சிக்னல் வந்தாச்சு இறங்கு' என்று இடையில் கண்டக்டரின் வரிகளோடு வரும் பாடலும் அடங்குமோ? சட்டென்று பாடலின் ஆரம்ப வரிகள் நினைவுக்கு வரவில்லை.

    நல்ல கலைஞன். இவரது முதல் பாடல் பதிவுக்கு கமல் வாழ்த்தவர முடியாமல் வேறு படப்பிடிப்பில் மாட்டிக்கொண்டபோது, தன் சார்பாக தன் அண்ணன் சாருஹாசனை அனுப்பியதையும், அவர் பாடல் பதிவில் அதகளம் பண்ணிக்கொண்டிருந்த அமரனை, இளையராஜா என்று எண்ணி அவரைப் பாராட்டியதும், இளையராஜா ஒரு இன்ஸ்ட்ருமென்ட் வாசிப்பவர் என்று எண்ணி அவரை ரெகெக்னைஸ் செய்யாததையும், அப்புறம் சில காலம் சென்றுதான் இளையராஜா என்பது இவர், தான் நினைத்தது கங்கை அமரன் என்று கண்டுகொண்டதையும் அவரது நூலில் எழுதியிருந்தார். Was surprised to know Kamal could also recognize talents in his early years. நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  4. Google chrome is unable to reach Engal Blog. Arriving through Firefox..

    தமிழ்த்திரையிசை எனும் பேருலகில் இளையராஜாவைப்போல் வேறொரு புயல் புறப்பட்டதில்லை இப்போது கேட்டாலும் அன்னக்கிளி அசத்துகிறது. (படத்தின் வெற்றிக்கு சுஜாதாவின் குருகுரு விழிகளும் ஒரு காரணமோ?) Raja is classy. Annakkili was a great launch-pad for a genius like him.

    நெல்லை சொன்னதுபோல் கமல் ஹாசன் தன் சிறுவயதிலேயே ஒரு prodigious talent -ஐ இனம் கண்டுகொண்டிருக்கிறார். அவரிடம் அந்த innate creativity இருந்தது; இருக்கிறது என்றும் நம்புகிறேன். ஆனால், காலப்போக்கில்.. அவரது தனிவாழ்வின் அலங்கோலங்களின் வாயிலாக அதனைக் கொஞ்சம் கொஞ்சமாக dissipate-ஆகும்படி செய்துவிட்டார் எனத் தோன்றுகிறது.

    இங்கே ராஜாவின் கதை ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நினைவுபடுத்திக்கொண்டு, கமலை மூடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. அன்னக்கிளி படப் பாடல்கள் அனைத்துமே அருமை! மிகப் பிரபலம் ஆனவை! ஒவ்வொரு பாடலுக்குப் பின்னும் ஓவ்வொரு கதை இருக்கலாம். இளையராஜாவின் இந்தப் பேட்டியை எல்லாம் படித்ததில்லை. இந்த அளவுக்கு ஆராய்ச்சிகளும் செய்ததில்லை. ஶ்ரீராம் நல்ல ஆராய்ச்சி செய்யறார்.

    பதிலளிநீக்கு
  6. ஹையோ வர முடியாத நிலைமையில் இருந்தேன்.. வோட் மட்டும் போட்டேன் ஆனா இந்தப் பாட்டு என்னை களமிறங்க வைத்துவிட்டது.... அலுக்கவே அலுக்காது மனதுக்கு புத்துணர்வூட்டும் பாடல்களில் இதுவும் ஒன்று...

    என்னதான் பத்துப் புதுப்பாடல் கேட்டாலும் இப்படி ஒரு பழைய பாடல் கேட்டாலே மனம் சந்தோசமாகிவிடும்... அதே நேரம் ஒருவித ஆனந்தக் கண்ணீரும் வரும்...

    பதிலளிநீக்கு
  7. @ நெல்லைத்தமிழன் அது என் கண்மணி என் காதலி பாட்டு :) என்ன பாட்டுக்கு பொருத்தமில்லம்மா திடீர்னு குத்து டான்ஸ் ஸ்டைல் ஆட்டம் வரும்
    என் பெரிய அண்ணா கசின் இந்த பாட்டை அடிக்கடி பாடுவார்

    பதிலளிநீக்கு
  8. //நான் லேசாகக் கோடிட்டுக் காட்டினால் உங்களுக்கு நினைவு வரும் என்று நினைக்கிறேன். (தொடரும்)//

    செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா ஹோய் :))

    பதிலளிநீக்கு
  9. ஒரு கொமெண்ட் போட்டதோடு கொமெண்ட் பொக்ஸ் ஓபின் ஆகல்ல...
    முன்பு பார்த்ததில்லை கடந்த 3,4 வருடத்துக்குள்தான் அன்னக்கிளி படம் பார்த்தேன்... 3,4 தடவைகள் பார்த்துவிட்டேன் இப்போ பாடல் கேட்டதும் திரும்பவும் பார்க்கோணும் போல வருது....

    பதிலளிநீக்கு
  10. அஞ்சு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அன்னக்கிளிபற்றிச் சொல்லுங்கோ....

    என் கண்மணி என் காதலி ஜேஉதாஸ் குரலில் வாவ்வ்வ்வ்வ் இன்று காலையும் பூஸ் ரேடியோவில் போனதே....
    கருவாட்டுக்கூடை முன்னாலே போ...
    .... சூப்பர் மார்கட்டூ இறங்கூ...... ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  11. மியாவ் அது நெல்லைத்தமிழனுக்கு முதல் வரி எடுத்து குடுத்தேன் :) எப்பவும் சொல்விங்களே அதே அதே கு ----- கு :) இது க்ரோ குரு இல்லை

    பதிலளிநீக்கு
  12. ஆங் இப்போ அன்னக்கிளி பத்தி வரேன் :) இசையும் ஜானகி குரலும் என்னமா இருக்கு சூப்பர் :) சொல்லிட்டேன் மியாவ் அன்னக்கிளி பத்தி

    பதிலளிநீக்கு
  13. அறியாத தகவல, இளையராஜா அவர்களின் இசையில் ஏதோ ஒரு ஈர்ப்புத்தன்மை இருக்கிறது அது மற்ற இசைமைப்பாளர்களிடமும் இருக்கலாம் ஆனால் எளிதில் மறந்துவிடக்கூடிய இசைக்கோர்வையாகத்தான் இருக்கும் இதில் ராஜா , ராஜாதான் .

    பதிலளிநீக்கு
  14. இசைக்குப் பாடலா பாடலுக்கு இசையா என்னும் சந்தேகம் வருகிறதேஅந்தப் பாடல் காணொளி திறக்கவில்லை

    பதிலளிநீக்கு
  15. அருமையான நெகிழ்ச்சியான நினைவலைகள் பகிர்வுக்கு மகிழ்ச்சி த.ம வாக்குடன்

    பதிலளிநீக்கு
  16. ஏஞ்சலின் நன்றி- இந்தப் பாடல்கள் என்னை 10-12 வகுப்பு ஹாஸ்டலுக்கு என் உணர்வைத் திருப்பிவிடும்.

    அதிரா- என் கண்மணி என் காதலி ஜேஉதாஸ் குரலில் வாவ்வ்வ்வ்வ் இன்று காலையும் பூஸ் ரேடியோ -- ஏன் ஆள் மாறாட்டத்துல ஈடுபடறீங்க? அது எஸ்பிபியும் சுசீலாவும். சமயத்துல மலேஷியா குரல் கேட்ட மயக்கம் ஏற்படும். இதுல யேசுதாஸ் எங்க வந்தார்?

    பதிலளிநீக்கு
  17. //- ஏன் ஆள் மாறாட்டத்துல ஈடுபடறீங்க? //

    haaahaaaaaaa :)))))))))))))
    ஹஆஹாஆஆஆ :) இதில் என்னை எப்பவும் அவசர குடுக்கைனு வேற சொல்வாங்க பூஸார் :)

    பதிலளிநீக்கு
  18. @நெல்லைத்தமிழன்

    எங்கண்ணாவுக்கு இந்த பாட்டு வான் நிலா நிலா அல்ல அப்புறம் ஒரே நாள் உன்னை நான்..
    இன்னும் நிறைய பிடிச்ச பாட்டுங்க இருக்கு :)ஸ்ரீராம் 80 கலெக்சன் SPB ஸ்பெஷல்விரைவில் போடுவார்னு எதிர்ப்பார்க்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  19. @நெல்லைத்தமிழன் ..

    ஹா ஹா ஹா.. அப்போ அது ஜேசுதாஸ் வொயிஸ் இல்லயோ?:) ஹையோ யாரோ எனக்கு சொல்லித்தந்து ஏமாத்திப் போட்டாங்கோ:).. ஏனெனில் ஜேசுதாஸின் குரல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. சே..சே..சே... இந்த அஞ்சுவுக்கு நியாயம் சொல்லப்ப்போய் என் மானம் போகுதே:) இனிமேலாவது கொஞ்சம் அ அ அ அ அ அடக்கி வாசொக்கோணும்..:) பார்ப்போம் என்னால முடியுதோ எண்டு:)

    பதிலளிநீக்கு
  20. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  21. வாங்க நெல்லைத்தமிழன்.

    நீங்கள் ஊகித்திருக்கும் பாடல்கள் தவறு. முதல் பாடல் பதிவுக்கு கமல் வரவிருந்த நிகழ்வு நன் இதுவரை படித்ததில்லை. நீங்கள் சொல்லியே அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
  22. வாங்க ஏகாந்தன் ஸார்..

    சமயங்களில் ஒரு பிரௌசர் அப்படித்தான் படுத்துகிறது. சில தளங்களுக்குச் செல்கையில், எங்கள் தளத்துக்கே வரும்போதும் எனக்கும் நிகழ்ந்ததுண்டு.

    //படத்தின் வெற்றிக்கு சுஜாதாவின் குருகுரு விழிகளும் ஒரு காரணமோ?//

    மறுபடியும் எனக்கு விவாதங்கள் விமர்சனங்கள் புத்தகத்தில் வரும் சுஜாதா - சுஜாதா பேட்டி நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
  23. விஜய்.. நான் தினமணிப் பக்கம் திறப்பதில்லை. என்றாவது அது படுத்தாமல் இருந்தால் சொல்லுங்கள். அந்தப் பக்கம் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  24. வாங்க கீதா அக்கா. ஆராய்ச்சி எல்லாம் இல்லை. நான் இளையராஜா(வுக்கும்) ரசிகன். அவரது பேட்டி ஒன்று எங்கள் பைண்டிங் புத்தகத்தில் இருந்தது வசதியாய்ப் போனது.

    பதிலளிநீக்கு
  25. வாங்க அதிரா... உண்மையில் இதே அன்னக்கிளியில் இதை விட இனிமையான பாடல்கள் அன்னக்கிளியே உன்னைத் தேடுதே, சொந்தமில்லை பந்தமில்லை போன்ற பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  26. வாங்க ஏஞ்சலின்.. நீங்கள் சொல்லியிருக்கும் பாடலும் இல்லை. இளையராஜா சொல்லியிருக்கும் வரிகளில் வரும் வார்த்தையே அதில் ஒரு பாடலை நினைவு படுத்தும்.

    பதிலளிநீக்கு
  27. அதிரா... என் கண்மணி பாடல் யேசுதாஸ் அல்ல என்று நெல்லையும் சொல்லி விட்டார்.

    பதிலளிநீக்கு
  28. வாங்க விமல். அந்த நேரத்தில் அவரது இசை ஒரு மாறுதலாக வந்தது. எம் எஸ் வி, கே வி எம் போன்றவர்கள் இளைத்தவர்களா என்ன!

    பதிலளிநீக்கு
  29. வாங்க ஜி எம் பி ஸார். வேறு யாரும் காணொளி பார்த்தார்களா என்று தெரியவில்லை. எனக்கு ஓபன் ஆகிறது. ஏன் உங்களுக்கு ஆகவில்லை என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  30. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  31. மீள் வருகைக்கு நன்றி நெல்லைத்தமிழன்.

    பதிலளிநீக்கு
  32. வாங்க ஏஞ்சலின்...

    //எங்கண்ணாவுக்கு இந்த பாட்டு வான் நிலா நிலா அல்ல அப்புறம் ஒரே நாள் உன்னை நான்..
    இன்னும் நிறைய பிடிச்ச பாட்டுங்க இருக்கு​//

    அது ஒரு பொற்காலம்!

    பதிலளிநீக்கு
  33. வாங்க அதிரா...

    //யாரோ எனக்கு சொல்லித்தந்து ஏமாத்திப் போட்டாங்கோ:)..​//

    ​யார் உங்களுக்கு தப்பு தப்பா சொல்லித்தருவது!!

    பதிலளிநீக்கு
  34. "அந்த நேரத்தில் அவரது இசை ஒரு மாறுதலாக வந்தது. எம் எஸ் வி, கே வி எம் போன்றவர்கள் இளைத்தவர்களா என்ன!" - ஶ்ரீராம்.. அந்த காலகட்டத்தில் இளையராஜா ரொம்ப பாபுலராக ஆரம்பித்தார். கேட்க painfullஆக இருந்தாலும், சிவாஜி படம் தவிர எம்.எஸ்.விக்கு படங்கள் இல்லாமல் போனது. இளையராஜா எந்தப் பாடல் போட்டாலும் பாப்புலரானது, புதியவர்கள், பாரதிராஜா, பாக்யராஜ், சுதாகர், ராதிகா போன்று ஏராளமானவர்கள் வந்தது, எம்எஸ்வி போன்றோர்களை பழைய தலைமுறையாக அடையாளப்படுத்தியது.

    பதிலளிநீக்கு
  35. அறியாத தகவல்... எனக்கு பிடிச்ச பாட்டு

    பதிலளிநீக்கு
  36. இளையராஜா ஒரு இசை ப்ரம்மா...பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம் ! பச்சரிசி மாவிடிச்சி- என்று தொடங்கும் பிரபலமான 'மதுர மரிக்கொழுந்து வாசம்?" என்னும் பாடலா?

    பதிலளிநீக்கு
  37. எம்.எஸ்வி.ராஜா,ரகுமான்,போன்றோர் சகாப்தங்கள். அவர்கள் பாடல் உருவக்கங்களில்தான் எவ்வளவு சுவாரசியங்கள்!ஒரு புதையலை தேடி எடுத்து கொடுத்திருக்கிறீர்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  38. இளையராஜா சொல்லியிருக்கும் அந்தக் கடைசிப் பத்தியின் பாடல்கள் என் நினைவுக்கு வருவது...."கொலை கொலையா முந்திரிக்கா, நிறைய நிறைய சுத்திவா, போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு, ஓரம் போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது", "வெத்தலை வெத்தலை வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ..." "செந்தூரப் பூவே...செந்தூரப் பூவே" "பூவரசம்பூ பூத்தாச்சு"

    ராஜா என்றுமே ராஜாதான்..நிறைய பாடல்களைச் சொல்லலாம்...நானும் என் கஸினும் அடிக்கடிச் சொல்லுவதுமொட்டை மொட்டைதான்! என்று!!!! செல்லமாக...!!!!! எம் எஸ் வியும் ரொம்பப் பிடிக்கும் ஆனால் இப்போது பதிவு ராஜா பற்றியல்லவா...அதனால் அவர் பற்றி மட்டும்...

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!