Creativity wildcard thinking லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Creativity wildcard thinking லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.6.10

படைப்பாற்றல் பயிற்சி புதிய கோணம்


முற்றிலும் புதிய கோணத்தில் சிந்திக்க முடியுமா நம்மால்?
கீழ்க்கண்ட விவரங்களை படியுங்கள்.
(ஊன்றிப் படியுங்கள். நாங்கள் இங்கே கொடுத்திருப்பவைகளை மட்டும்தான் நீங்கள் ஆதாரமாக வைத்துக் கொள்ளவேண்டும்.) 

(சொல்லாதவைகளை எதையும் கற்பனை செய்துகொண்டு வேறு திசையை நோக்கி இழுக்காதீர்கள் !)

* யார் சொன்னார்கள் - ஏன் எப்படி, எதற்கு என்ற விவரங்களை இப்போதைக்கு மறந்துவிடலாம். 
* அடுத்த வருடத்திலிருந்து, ஒரு வாரத்திற்கு எட்டு நாட்கள்.
* வாரத்தில் சேர்க்கப்படும் எட்டாவது கிழமைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
* அந்தக் கிழமை எந்த இரண்டு கிழமைகளுக்கு நடுவே வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஏன்?
* வாரம் எட்டு நாள் என்று செய்வதாலும், புதிய கிழமை ஒன்று அதிகமாகச் சேர்வதாலும், என்னென்ன மாற்றங்கள் உலகில் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்? 

(இது படைப்பாற்றல் பயிற்சி மட்டும் அல்ல, இதற்கு பதியப்படும் கருத்துகள் மூலமாக வேறு சில ஆராய்ச்சிகளும் நடத்தப்படப் போகின்றது, உங்கள் நன்மைக்காக)