ஞாயிறு, 3 மே, 2020

பனியும் .... பச்சையும் !


ஹையோ இம்புட்டு பேருங்க இங்கே இருக்காங்களா! 





ஆர்டர் செய்தது வருவதற்குள் வாட்ஸ் அப் பார்த்து ... 


போட்டோ பிடிச்சு ... 






பனிபடர்ந்த மலையின் மேலே .... 




பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா .... 



காவி உலர்த்தல் ... 

சில்லென்று பூத்த சிறு ... 


பச்சை மரங்களின் மேல் ....


பனிப்போர்வை ... 



பனிவிழும் கார் வனம்! 


ஆறு முகம் ! 


அங்கே எல்லாம் தார் பூச ஆள் இல்லை .... 




கண்ணுக்கு குளிர் தெரிகிறதா? 



=======================================

வி தி பொ 200503 

=======================================

59 கருத்துகள்:

  1. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜு ஸார்.. வாங்க..

      நீக்கு
    2. அன்பின் துரை, அன்பு ஸ்ரீராம் இனிய ஞாஉய்று காலை வணக்கம்.

      நீக்கு
    3. வாங்க வல்லிம்மா..்் இனிய காலை வணக்கம்..

      நீக்கு
  3. உயிரோடு இருந்தால் எல்லாவற்றையும் பார்க்கலாம். அந்த லிஸ்ட்டை சொல்கிறேன்:)
    குழந்தைகள் இரண்டும் ஸ்மார்ட்.
    எல்லோர் கையிலும் மொபைல் எப்பவும்.
    குடகு மலை, மஞ்சுலாவும் குன்றுகளாக இருக்கிறதே.
    மிக அழகான மேகங்கள், நாமே அங்கே விடுமுறைக்குச் சென்ற
    உணர்வு.
    படங்களுக்கும் ,காப்ஷன் களுக்கும் பொருத்தம்.
    அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா பார்க்கலாம் அம்மா.. பார்ப்போம்.

      நீக்கு
    2. காலைல இடுகை பார்க்கும் மூடும் சரியா வரலை (முதல் படம்). //உயிரோடு இருந்தால் எல்லாவற்றையும் பார்க்கலாம்.// - உங்க பின்னூட்டமும் திடுக்கிட வைத்தது.

      'மஞ்சுலாவும்' - அப்போ அப்போ பளிச்சிடறமாதிரி வல்லிம்மா..நீங்க உபயோகிக்கும் தமிழ் வார்த்தை என்னை மிகவும் கவர்கிறது.

      'மஞ்சுலாம் சோலை வண்டறை மாநீர் மங்கையார் வாள் கலிகன்றி' என்ற பெரிய திருமொழி பாசுரத்தை நினைவுபடுத்திவிட்டீர்கள்.

      நீக்கு
    3. அன்பு முரளிமா.
      தமிழ் இன்னும் என்னை மறக்கவில்லை என்று தெரிகிறது.
      படித்ததெல்லாம் எழுத்தில் வந்து விழ, இந்தப் படங்கள் தான் காரணம்,.
      நன்றி மா.

      நீக்கு
  4. //அங்கே எல்லாம் தார் பூச ஆள் இல்லை//

    அதானே... படங்கள் குளுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தெரிஞ்சிருந்தா கொஞ்சம் கொடுத்து விட்டுருக்கலாம்...

      இல்லே... ன்னா கூடப் போயிருக்கலாம்..

      நீக்கு
    2. ஹா ஹா ! பூச விட மாட்டாங்க!

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள். விரைவில் கொரோனா இல்லாத நாடாக இந்தியா மாற மக்கள் ஒத்துழைப்புக்கு ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... நல்வரவு, வணக்கம், பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  6. மேலே உள்ளவங்களை நான் அவ்வளவாய்க் கவனிக்கலை. மற்றப் படங்கள் அருமை. ஆமாம், வல்லி அங்கேயும் பனி படர்ந்தே மலைகள் காட்சி அளிக்கும். அதுவும் மேற்குத் தொடர்ச்சி மலைகளா! அழகு அள்ளிக்கொண்டு போகும். மேலும் அங்கெல்லாம் மலைக்கிராமங்களாக இருந்தால் கூட ஓர் நவோதயா பள்ளி இருக்கும். ஆகவே அனைவரும் ஹிந்தி பேசுவார்கள். அதனால் எல்லாம் கன்னடம் அழிவதாக அவர்கள் நினைப்பதில்லை. கன்னடம் கட்டாயம் கற்கவேண்டும். அவ்வளவே! நாங்க உடுப்பி, சிருங்கேரி மலைப்பாதையிலும், சிருங்கேரியிலிருந்து ஹொரநாடு அன்னபூரணியைத் தரிசிக்கச் சென்றபோதும் கர்நாடகாவின் உள் மலைக்கிராமங்களை நிறையப் பார்த்திருக்கோம். கார் ஓட்டுநர், ஆட்டோ ஓட்டுநர் என அனைவரும் குறைந்தது 4 மொழி பேசுவார்கள். கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிழைக்கத் தெரிந்தவர்கள்.

      நீக்கு
    2. கீசா மேடம்... என்னிடம் இரு ஆட்டோ ஓட்டுநர்கள், 'உடைந்த கன்னடத்திலேயே பேசுங்கள், இல்லைனா தமிழ்ல பேசுங்க, ஹிந்தி வேண்டாம்' என்று சொல்லியிருக்காங்க (போன வருஷத்துல). தமிழ்ல பேசுவதில் ஒரு பிரச்சனை என்னன்னா, கன்னடம் கத்துக்கவே முடியாமப் போயிடும். நான் முடிந்த அளவு உடைந்த கன்னடம் பேசி, இப்போதான் கத்துக்கிட்டிருக்கேன் என்றும் சொல்லிடுவேன். ஹா ஹா.

      நீக்கு
    3. மகன் பங்களூரில் இருந்த போது,
      அந்த ஆட்டோ ஓட்டுனர்கள். இந்தியில்
      நன்றாகப் பேசியது நினைவுக்கு வருகிறது. ஸ்ரீராம் சொன்னது போலப் பிழைக்கத் தெரிந்தவர்கள். நான் சொல்வது 20 ஆண்டுகளுக்கு முன்னால்.

      இப்பொழுது மாறி இருக்கலாம் முரளிமா.

      நீக்கு
    4. இல்லை வல்லிம்மா...இப்போவும் பெரும்பாலானவர்களுக்கு ஹிந்தி, கன்னடம், தமிழ் தெரியும். (சமீப காலங்களில் நாம் கூப்பிடும் இடத்திற்கெல்லாம் ஆட்டோ வருவதில்லை. ஆனா, என் அனுபவத்தில், இஸ்லாமியர்கள் ஓட்டும் ஆட்டோ, இந்த இடத்திற்கு வரமாட்டேன் என்று சொன்னதில்லை. ஹா ஹா). ஒருவேளை கன்னடம் என்ற மொழிப்பற்று இப்போல்லாம் வருதோன்னு தோணுது. ஆனா இஸ்லாமிய ஓட்டுநர்கள் ஹிந்தியில் பேசுவாங்க (உருது அவங்களுக்குத் தெரியும் என்பதால்) - எனக்கு ஹிந்தி நஹி மாலும். ஹா ஹா.

      எனக்கு ஆச்சர்யம் என்னன்னா, சென்னையில் நான் ஓலா ஆட்டோ, கார் உபயோகித்தபோது, சிலர் ஹிந்தியிலேயே பேசினதுதான். அவங்கள்ட, நீங்க தமிழ் தானே, ஏன் ஹிந்தியில் பேசினீங்கன்னு கேட்டதற்கு, உங்களப் பார்த்தா ஹிந்தி தெரியும்னு தோணிச்சு, ஹிந்தில பேசும்போது தனக்கு ஒரு மரியாதை கிடைக்கிறது என்று குறிப்பிட்டார். இது என்னடா இந்தச் சென்னைக்கு வந்த சோதனைன்னு எனக்குத் தோன்றியது.

      நீக்கு
    5. அடக் கடவுளே. சென்னையிலுமா.!!!!!!!

      நீக்கு
    6. என் கண்ணில் பட்டதில்லை. அந்த அந்த மாநிலத்தில் அந்த அந்த மொழியை பேசுவதை விடவா ஹிந்தி பேசுவதை உயர்வாக நினைத்து விடப் போகிறார்கள்?!!

      நீக்கு
  7. இனிய காலை வணக்கம்.

    படங்கள் நன்று.

    புதிர் - நேரத்தினைக் குறிக்கிறது இந்தப் புதிர். இரண்டுமே 2 மணி 18 நிமிடம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் - சூப்பர். காலைல எனக்குப் புரியலை.

      அறிஞர் கீசா மேடம் (கலாய்க்கலை. அவங்க சட்னு புரிஞ்சுப்பாங்க), இதற்கு ஏன் ?????? போட்டிருக்காங்க? 24 மணி நேரம் வைத்துக்கொண்டால் சட்னு புரிஞ்சிடுமே.. ஆச்சர்யமா இருக்கு

      நீக்கு
    2. அவங்க அந்த சுட்டியை கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    3. ?????????????????????????????????????????????????????????

      நீக்கு
  8. காண மகிழ்ச்சி தரும் படம் இடம்

    பதிலளிநீக்கு
  9. உள்ளே வந்த நேரம்
    சாப்பாட்டு நேரம் போல இருக்கே..ந்னு தான் திரும்பிப் போய்ட்டேன்...

    அது சரி...
    பார்சல் ஒன்னும் இல்லையா!?..

    பதிலளிநீக்கு
  10. அருமை...படங்களும் தலைப்பும்...குறிப்பாக அந்த ஆறுமுகம்...

    பதிலளிநீக்கு
  11. ஆர்டர் செஞ்சு வந்ததை படமாக்கலியே!

    அப்புறம் லிஸ்டில் வராதவங்க இன்னும் நிறைய பேர் இருக்காங்க

    பதிலளிநீக்கு
  12. பனி படலம் பல கதைகள் சொல்கின்றன.

    பதிலளிநீக்கு
  13. பனி படர்ந்த மலைகள் படம் அழகு.

    பதிலளிநீக்கு
  14. வெண்மேகம் பார்க்க அழகு. சட்டென்று கூடும், சட்டென்று விலகும் அதன் விளையாட்டு அருமையாக இருக்கும் மலைமுகடில்.

    பதிலளிநீக்கு
  15. ஒரு பின்னூட்டம் தான் வந்து பார்த்து விட்டார் என்பதைத் தெரிவிக்கும் அடையாளம் என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடிவதில்லை. அதே நேரத்தில் இதைத் தவிர்த்து வேறு ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். உண்மைதான்! ப்ளாக் ல லைக் ஆப்ஷன் வந்தது என்றால், ரொம்பப் பேருங்க லைக்கைக் கிளிக்கி விட்டு எஸ்கேப் ஆயிடுவாங்க! கமெண்ட் போட்டால்தான் வந்தது எல்லோருக்கும் தெரியும். அதற்கு ஆசிரியர்(கள்) பதில் கொடுத்தால்தான் communication முற்றுப்பெறும்.

      நீக்கு
    2. ஜீவி சார்... படித்ததற்கு பின்னூட்டம் அவசியமில்லை. ஆனால் இடுகையை மதித்து அதற்கான பின்னூட்டம் கொடுத்தால், அதற்கு மறுமொழி கிடைக்கும்போதுதான் அந்த cycle முழுமையடைகிறது என்று நினைக்கிறேன். நான் பெரும்பாலும், 'மறுமொழி' இல்லாத இடுகைகளில் பின்னூட்டம் இடுவதில்லை. மறுமொழி இல்லைனா, அங்கு 'நட்பு' இல்லை என்று நான் நினைக்கிறேன். (எனக்கு மறுமொழிக்கெல்லாம் நேரமில்லை. உனக்கு ஏராளமான நேரம் இருந்தால் பின்னூட்டம் போடு' என்று சொல்வதுபோல எனக்குத் தோன்றும்)

      இன்னொன்று, இங்க (அல்லது எந்தத் தளத்திலும்) பின்னூட்டங்கள், திசை மாறி, நிறைய விஷயங்களுக்குப் பயணிக்கும். இணைய வாட்சப் குழு போல, கருத்துப் பரிமாற்றம் இருக்கும். அப்படி இருப்பதால்தான், இருவர் சந்திக்கும்போது, அப்போதுதான் முதல் முறையாக பார்ப்பதுபோலத் தெரியாது. ரொம்ப வருடம் பழகியமாதிரித்தான் பேச்சு தொடர ஆரம்பிக்கும். நான் இதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். தன் படத்தை வெளிப்படுத்தாதவர்கள் சந்திக்கும்போதுதான் முதல் முறை பார்ப்பது போல இருந்தாலும், விஷய்ம், தொடர்ச்சியான பேச்சுப்போல ஆரம்பிக்கும்.

      நீக்கு
    3. முன்னால, ஒருத்தர் எனக்கு மெயில் எழுதியிருந்தார். பின்னூட்டம் போடணும்னு அவசியமில்லை, தமிழ் மணத்துல ஓட்டு மட்டும் போட்டிருங்க என்று. எனக்கு அந்த மெண்டாலிட்டி ரொம்ப சீப்பாகத் தெரிந்தது. ஹா ஹா

      நீக்கு
    4. முடிந்தவரை இங்கு எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் அளித்து விடுகிறோம். விடுதல் ரொம்ப ரேர்.

      நீக்கு
    5. ஸ்ரீராம் சொல்லியிருப்பது சரி. புதன், வியாழன், வெள்ளி, சனி & ஞாயிறு பதிவுகளில் பின்னூட்டங்களுக்கு acknowledge செய்யாமல் இருக்கமாட்டோம். திங்கள் / செவ்வாய் பதிவுகள் எங்கள் ஆசிரியர்களில் யாராவது எழுதியதாக இருப்பினும் அப்படியே.

      நீக்கு
  16. என் பின்னூட்டங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும், நெல்லை.
    அனுபவித்து வஞ்சனையில்லாமல் ஒரு பாராவிற்கு மேல் எழுதுவேன். நான் உணர்ந்ததை எழுதியே ஆக வேண்டும்.
    இப்பொழுதிய சூழலில் சில காரணங்களால் அது முடியாமல் இருக்கிறது.
    ஒரு வரி எழுதுவதில் எனக்கு சம்மதமில்லை. அதற்கு பின்னூட்டம் போலாமலே இருக்கலாம் என்று தோன்றும்.
    அதனால் தான் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமயங்களில் சில இடங்களில் வருகையைத் தெரிவிக்க ஒருவரி பின்னூட்டங்களும் அவசியமாகி விடுகிறது ஜீவி ஸார்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!